Everything posted by nunavilan
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- அதிசயக்குதிரை
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'- மனதைக் கவர்ந்த கவிதைகள்
வைரமுத்துவின் சுனாமி கவிதை ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முதுமக்கள் தாழியா உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை? உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்? அடக்கம் செய்ய ஆளிராதென்றா புதை மணலுக்குள் புதைத்துவிட்டே போய்விட்டாய்? பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம் அவள் பிணத்தையே காணோம் மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு மரணம் தனியே வந்தால் அழகு மொத்தமாய் வரும் மரணத்தின் மீது சுத்தமாய் மரியாதையில்லை இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு இயற்கையின் சவாலை எதிர்கொண்டால் மனிதன் https://eluthu.com/kavignar-kavithai/1406.html- நகைச்சுவைக் காட்சிகள்
- உங்களுக்கு தெரியுமா?
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நகைச்சுவைக் காட்சிகள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
Vinoth Vaddakkachchi பசுப்பாலை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பச்சையாக பணத்துக்கு பக்குவமாக விற்று பைகளில் பண்படுத்தி பொடியாக வருவதை மீண்டும் நீர் கலந்து குடிக்கும் அறிவியல் எம்மிடத்தில் வெண்ணையை பிரித்து சீஸ் என்றும் மீதியை பால் பவுடர் எனவும் கழிவுகளை யோக்கட் போலவும் மிஞ்சியதை பால் பாணம் ஆகவும் எஞ்சியதை இனிப்பு என காட்டும் கண்காட்சி வியாபாரம் நம்பியே ஏமாருகின்றோம் நாட்டுப் பசும்பால் நன்றாக புளித்த தயிர் மத்தில் கடைந்த மோர் அள்ளி எடுத்த வெண்ணெய் பாணி கலந்த பால்கோவா எங்கே போச்சு எல்லாம் எங்கள் வருமான வீழ்ந்து போகும் எப்படி வளரும் பொருளாதாரம் பண்பாடு வாழ்வதால் வளமாகும் அதில் தானே எங்கள் வருமானம் வட்டக்கச்சி வினோத் நன்றி நம்மாழ்வார்- உங்களுக்கு தெரியுமா?
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
Vinoth Vaddakkachchi போருக்கு பின் நாங்கள் வளர்த்தது நாட்டில் குப்பை வீட்டில் தொல்லை உடம்பில் தொப்பை போர் முடிந்து நாங்கள் அள்ளியது ஆற்றில் மணல் வீதியில் உடல் காட்டில் மரம் வங்கியில் கடன் போரோடு நாங்கள் விட்டு வந்தது உதவும் மனசு பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைப்பது எப்போதும் இனத்தை காப்பது இயற்கையின் மேல் கொண்ட பற்று என்றும் ஓயாமல் உழைப்பது யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தது பிறருக்காக அழுதது எமக்காக எதையும் சேர்க்காதது பணத்தை தேடி ஓடாதது பெண்களை சீண்டாதது வறுமையிலும் மகிழ்வை இழக்காதது இளமையிலும் மதுவை நாடாதது போருக்கு பின் நாங்கள் நடிப்பது மதுக் கோப்பை ஏந்தி தேசியம் பேசுவது மங்கையர் வீதியில் நடமாட அஞ்சுவது ஏமாற்று உழைப்பிலே பணத்தை சேர்ப்பது ஒருவனுக்கு ஒருத்தி நிலையை இழந்தது போதையில் வாழ்க்கை அழிந்தே போனது தமிழன் என்று மார்தட்டிக் கொள்வது நாய்க்கு வைக்கும் பெயரை சேய்க்கு வைப்பது இவையா தலைவன் எமக்கு சொல்லிப் போனவை என்பது வட்டக்கச்சி வினோத்- உங்களுக்கு தெரியுமா?
- சிந்தனைக்கு சில படங்கள்...
150 வருடங்களுக்கு முன்பு திருமலை நகரம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய சகாறா, ரகுனாதன் ஆகியோருக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
அசைவ முத்தமா… உன் செவ்விதழ்கள் செந்தேன் சுரக்க… என் செவ்வாயில் முத்தத்தால் ஒரு பூகம்பம்… கனவில் நீ அள்ளி தரும் அசைவ முத்தமா… By… அவள் விழிகளில் இதயத்தைத் தொலைத்தவன்… N.AJNESSH http://ajnesshn.blogspot.com/2017/01/blog-post_52.html- அதிசயக்குதிரை
- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார். பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூலலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார். ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகடத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார். தாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். பதிவு வேர்கள் இன்று (Dec 14) மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்கள் மறைவு நாள். (1938-2006) தனது வாழ்நாளை தமிழினத்தின் விடிவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த பெருந்தகை. தலைவரின் பெருமதிப்பு பெற்ற எமது தேசத்தின் குரல் ஓய்ந்து போகாது இருந்திருந்தால், தோல்வி என்பதை தமிழினம் காணாதிருந்திருக்கும். தமிழினம் உள்ளவரை உங்கள் அருமையும் பெருமையும் பேசப்படும். இந்நாளில் கண்ணீருடன் வணக்கம் செலுத்தி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் !- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கடவுளின் மறதி காய்ந்த பூமியில் கயிற்று கட்டிலிட்டு !!!!! தனக்கு இருக்கும் பெருங்கவலைகளுக்கு மத்தியில் கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற அருங்க்குழப்பதில் சற்றே கண்ணயர்ந்து கனா கண்டான் .......... வானம் பார்த்து வறண்ட பூமியில் விவசாயம் நம்பி வறுமையில் வாடும் வீணாய் போன விவசாயி !!!!! படுத்த பத்தே நிமிடத்தில் கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி... கசங்கி போன அவன் முகத்தில் சிலேன்று சாரலாய் பட்டது நீர்த்துளி!!!!! கனவில் கூட காண முடியாத கடவுள் தான் கடைசியில் மனமிறங்கி மாரிதனை பொழிந்து விட்டதென எண்ணி வராத நித்திரையை விருட்டென்று கலைத்து விட்டு.... வேகமாய் எழுந்தவனுக்கு தெரியுமா......... தன முகத்தில் பட்டு பரவசமாக்கியது மழைத்துளி அல்ல........ கொடுத்த கடனை வட்டியோடு கேட்டு சேட்டு துப்பிய உமிழ்துளி என்று!!!!!! மழைநீரை காணாத மரங்கள் எத்தனையோ மண்ணில் வேர் விட்டு வாழ வழி இருக்க ஏன் இந்த பாவப்பட்ட விவசாயிக்கும் அந்த வழியை காட்ட மறந்து போனான் கல்லாய் போன கடவுளடா...... http://tamilsangamam.blogspot.com/2011/06/blog-post.html- சிந்தனைக்கு சில படங்கள்...
தனது உயிரைக்கொடுத்து நண்பனை காப்பாற்றிய பிருந்தனின் பூங்கா இன்று..........................- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
Vinoth Vaddakkachchi ஊடகம்.... உண்மையை கண்டறிந்து ஊருக்கு சொல்லுவதா ஒருவருக்கு வால்பிடித்து அவர் புகழ் உளறுவதா தேசத்தின் நலன்காண செய்திகள் போடுவதா வஞ்சகர் பதவிபிடிக்க பக்கவாத்தியம் வாசிப்பதா மக்களின் நலம் காண அச்சுக்களை கோருங்கள் துன்பத்தை துரத்த சொற்களை சேருங்கள் நடிப்பவன் தலைவன் என்னும் கூச்சலை நிறுத்துங்கள் சிந்தனை சிறப்பென்றால் தலைவனாய் போற்றுங்கள் மெய்பொருள் கண்டு பொய்களை நீக்குங்கள் பாமரன் விளங்க சொற்களை ஆக்குங்கள் உரிமையின் குரலாய் எப்போதும் இருங்கள் கடலின் நீராய் உலகெல்லாம் சொல்லுங்கள் காற்றைப்போல உண்மையை தேடுங்கள் எப்போதும் நேர்மையாய் பேசுங்கள் எது வந்த போதும் நிலைத்தே நில்லுங்கள் உங்களின் செய்தியே மக்களின் அறிவு அதைக் கண்டுதானே நாளைய உயர்வு எதிர் காலம் என்பது உங்களின் பதிவு நன்மையை உரைப்பதே மனதின் நிறைவு வட்டக்கச்சி வினோத்- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்