Everything posted by nunavilan
-
கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
- உங்களுக்கு தெரியுமா?
பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு... சத்துகளும் சான்றுகளும் அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutrition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. `பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம். தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும். பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு. அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம். அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்... * உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. * காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். * இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். * ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும். முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும். * ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். * எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். * புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். * வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், "பழைய சோறு". பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! - நன்றி விகடன்- உங்களுக்கு தெரியுமா?
Scientists have developed a surgical glue that can seal wounds in 60 seconds.- உங்களுக்கு தெரியுமா?
நாட்டின் அனைத்து இரயில்களும் காற்றாலை மின்சாரத்தால் இயங்குகின்றன – நெதர்லாந்து நாட்டில் அடுத்த நிறுத்தம், தூய்மையானக் காற்று. துவக்கத்தில், 2018 ம் ஆண்டுக்குள் அனைத்து இரயில்களும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் என்று நெதர்லாந்து அரசு அறிவித்திருந்தது, ஆனால் அந்த இலக்கை ஏறக்குறைய ஒருவருடத்திற்கு முன்பாகவே அடைந்துவிட்டனர் அந்நாட்டு அரசாங்கத்தினர். 2017 ம் ஆண்டு சனவரி மாதம் முதல் அந்நாட்டின் அனைத்து இரயில்களும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை, குறிப்பாக காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கத் துவங்கிவிட்டன. காற்றாலை மின்சாரத்தில் முன்னோடியாக விளங்கும் தேசத்தில் தற்போது 2,200 காற்று விசையாழிகள் இருக்கின்றன. 2.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு அவற்றின் மின்னுற்பத்தி இருக்கிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 1.2 பில்லியன் கிலோவாட் மணி மின்சாரத்தை அந்நாட்டு இரயில்கள் பயன்படுத்துகின்றன, இது ஏறக்குறைய அந்நாட்டின் பெரிய நகரமான ஆம்ஸ்டர்டமில் இருக்கும் அனைத்து வீடுகளும் பயன்படுத்தக்கூடிய மின்சார அளவிற்கு இணையானது. எனிக்கோ (Eneco) என்னும் நிலையான மின்னாற்றலை வழங்கும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த இலக்கானது எட்டப்பட்டுள்ளது. “இந்த ஒப்பந்தம் மற்றும் கூட்டாண்மை தனித்தன்மையுடன் விளங்குவதற்கான காரணம் இத்துறையில் கரியமில வாயுவின் தடம் குறைந்துள்ளது என்பதே” என்கிறார் எனிக்கோ நிறுவனத்தின் கணக்குகள் துறை மேலாளர் திரு. மைக்கேல் கெர்கோஃப். காற்றின் வேகத்தில் செயல்பாடுகள்: காற்றாலை மின்சாரம் நெதர்லாந்தில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது, பிற நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்காட்லாந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் அந்நாட்டில் இருக்கும் காற்றாலை மின்சார வயல்கள் தங்களது நாட்டின் தேவையை விட 6% அதிக மின்னாற்றலை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2020-க்குள் 100% கார்பன் இல்லாத நாடாக ஸ்காட்லாந்து மாற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விலக்கை எட்ட அலைமின் ஆற்றலின் உற்பத்தியில் அந்நாடு தனது முதலீடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்காவும் காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அமெரிக்க காற்றாற்றல் அமைப்பு (AWEA) வழங்கும் தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 48,800 விசையாழிகள் செயல்பட்டு வருகின்றன, இவற்றின் மூலம் 73,992 மெகாவாட் மின்சாரத்தைக் கடந்த 2015ம் ஆண்டு உற்பத்தி செய்திருக்கிறது அமெரிக்கா. பிற நாடுகளைவிட அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் மின்சாரத் தேவை அதிகம் இருக்கிறது. தூய்மை ஆற்றல் புரட்சி நிகழும் காலகட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் 2050க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்கின்றன சில ஆய்வுகள். Futurism.com என்னும் ஆங்கில இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இது. கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க சொடுக்குங்கள்.- கருத்து படங்கள்
எங்களின் சிங்கங்கள்.........- மனதைக் கவர்ந்த கவிதைகள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அதிசயக்குதிரை
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
எது சுதந்திரம் எது சுதந்திரம்? போராடி போராடி உரிமையை பெறுவதா காசு கொடுத்து கல்வியை பெறுவதா மரத்தை வெட்டி நிழலை பெறுவதா நிலத்தை விற்று உணவை பெறுவதா எது சுதந்திரம்? தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா எது சுதந்திரம்? சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட....... உரிமையை பெற உரிமை இல்லை கல்வியை பெற கல்வி இல்லை நிழல் பெற மரமும் இல்லை உணவை பெற நிலமும் இல்லை வீரம் பேச தைரியம் இல்லை சமத்துவம் பேச தகுதி இல்லை ஆண்மிகம் பேச இறைத்தன்மை இல்லை பாரம்பரியம் பேச பழமை இல்லை நிம்மதி தேட சந்தோசம் இல்லை மனிதநேயம் தேட மனிதன் இல்லை பாசத்தை தேட உறவுகள் இல்லை - கடைசியில் சுதந்திரம் தேடும் சுதந்திரமும் இல்லை. https://eluthu.com/kavithai/360390.html- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம் படம்:யாரடி நீ மோகினி இசை:யுவன் சங்கர் ராஜா பாடியவர்: உதித் நாராயண்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் மற்றும் கு.மா அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- Imagine Dragons - Thunder
- உங்களுக்கு தெரியுமா?
- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உங்களுக்கு தெரியுமா?
- உங்களுக்கு தெரியுமா?
- கருத்து படங்கள்
கட்சி உடைஞ்ச புதுசா ஒன்ட திறப்பம்- உங்களுக்கு தெரியுமா?
தண்ணீரில் மூழ்காமல் இருக்க உதவும் காற்றுப்பை- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவன், கிருபனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழீழ பாடல்கள்