Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. லெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் படைத்துறை சாதனைகளைப் புகழ்வதென்பதும், அதைப் பதிவு செய்வதென்பதும் எதோ வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக சிலரது அயராத உழைப்பின் பிரகாரம் அவ்வப்போது அது ஓரளவு பதிவு செய்யப்பட்டே வருகிறது. ஆனால் இவை வரலாற்று நோக்கிலோ, அதை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாக அடையாளம் கண்டோ, படைத்துறை விஞ்ஞான அடிப்படையிலோ அவை பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலும் உணர்வின் பாற்பட்ட பதிவுகளே அவை. 2009 இற்கு முன்பு கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனாலும் விதி விலக்காக ஒரு தனிமனித ஆளுமையாக தராக்கி சிவராம் மேற்படி பன்முகக் கண்ணோட்டத்தில் புலிகளின் சாதனைகளைப் பதிவு செய்தார். அதனால்தான் அவர் கொல்லவும் பட்டார். புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளை பேச்சுக்கு அழைத்து வலுவிழக்கச் செய்து அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்குலக - பிராந்திய அரசுகள் சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டத்தின் வழி உலகில் வேறு ஒரு போராட்ட இயக்கம் என்றால் குறிப்பான ஆறு மாதங்களிற்குள் அழித்தொழிக்கப்பட்டிருக்கும் அல்லது மண்டியிட்டிருக்கும். போர் நிறுத்த கண்காணிப்பு குழு செயலில் இருக்க ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறிய எதிரியானவன் - போதாததற்கு கருணா குழு போன்ற துணை இராணுவக் குழுக்களையும் களத்தில் இறக்கி புலிகளை ஒரு தடுப்பு சமரே செய்யும் புறச் சூழலில் பல மாதங்கள் வைத்திருந்ததை பலர் மறந்து விட்டார்கள். புரிந்துணர்வு உடன்படிக்கையை சாதகமாக்கி புலிகள் தரப்பிலிருந்து பலரை தம் பக்கம் இழுத்தது மட்டுமல்ல படைத்துறை, புலனாய்வு, தொழில்நுட்ப வளங்களையும் அதியுச்ச அளவில் சிங்களத்திற்கு வழங்கியது அனைத்துலக - பிராந்திய சதிக் கூட்டணி. புலிகள் என்றபடியால்தான் பல வருடங்கள் தாக்குப் பிடித்தார்கள். அதைச் சாத்தியப்படுத்தியது தலைவரின் அதியுச்ச இராணுவ தந்திரமும் ஒவ்வொரு போராளிகளினதும் ஓர்மமும். படைத்துறை ஆளணி வலிமையும், படைக்கல பெருக்கமும், தொழில்நுட்ப வளங்களுமே ஒரு யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என்பதே நவீன போரியலாளர்களின் தியரி. அதுவே அரசுகளின் யுக்திகளும் கூட. ஆனால் தலைவர் இறுதி யுத்தத்தில் இந்த சமன்பாட்டைக் கிட்டத்தட்ட கலைத்துப் போட்டார். கொத்தணிக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மூலம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு இதுதான் முதன்மைக் காரணம். மனித வலுவை மட்டும் கொண்டு ஆளணி, படைக்கல, தொழில்நுட்ப வளங்களுடன் திரண்டு நிற்கும் ஒரு அரச படையை அழித்தொழிப்பதென்பது இந்த உலக ஒழுங்கையே மாற்றிவிடும் அபாயம் உணரப்பட்ட பின்பே அரச பயங்கரவாத கூட்டணி இன அழிப்பினூடாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. பலர் நம்புவது போல் சிங்களம் என்றுமே போர்க்குற்ற / இன அழிப்பு விசாரணைக்கு முகம் கொடுக்கப் போவதில்லை. காரணம் உண்மையான குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலக ஒழுங்கை கட்டிக் காப்பவர்கள். தேசிய இனங்கள் அதை ஊடறுப்பதை என்றுமே அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் புலிகள் அதை அசைத்துப் பார்த்தார்கள். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை எதிரிகளே சொல்வார்கள். அதை ஒரு கோட்பாடாகவும் ஏற்றுக் கொள்வார்கள். தலைவரின் வழி நின்று ஒவ்வொரு போராளியும் செய்த சாதனை அது. அந்த வகையில் விக்டர் கவச எதிர்ப்பு படையணி போராடும் தேசிய இனங்களிற்கு நம்பிக்கையூட்டும் ஒரு போரியல் எடுத்துக் காட்டு. அதன் தனிப் பெரும் சிகரம் லெப் கேணல் அக்பர். தலைவரின் தண்ணீர் கோட்பாடு பேசப்படும் பொழுது அக்பரின் புகழ் வெளி உலகத்திற்கு தெரிய வரும். அக்பர் உட்பட அனைத்து விக்டர் கவச எதிர்ப்பு போராளிகளுக்கும் தமிழர் தேசம் இந்தத் தருணத்தில் தலை வணங்குகிறது.
  2. முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி. அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது. இயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர். அதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 2ம் லெப். மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். நன்றி: விழுதாகி வேருமாகி.
  3. தலைவருக்கு அருகில் முகம் கொடுக்கும் வீரர் யார்?
  4. கந்தளாய் முதல் சிறிமா புரம்வரை..லெப்.கேர்ணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்! போராட்ட காலத்தில்..நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள்! மு.வே.யோ எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்து கோலோச்சிய மாபெரும் வீரச் சக்கரவர்த்திதான் லெப்.கேர்ணல் புலேந்திரன்..புலிகளின் பலத்தின் ஒரு பகுதிதான் புலேந்திரன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.எண்பதுகளில், திருகோணமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் பெரும்பாலானோர்,எழுபதுகளில் அறுபதுகளில் மாத்தறை,காலி அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இருந்து வந்த, சிங்கள ரௌடிக் கூட்டமும், அவர்களின் குடும்பங்களும்தான். திருகோணமலையில் நாலாம் கட்டையில் இருந்து ஸ்ரீமாபுரம் ,அனுராதபுரச் சந்திவரை திடீர் திடீர்,என்று தமிழர்கள் வாழ்ந்த பூமிகளை மேற்படி சிங்களக்காடையர் கூட்டம்தான் ஆக்கிரமித்தார்கள் என்பது மட்டுமன்றி,சிறு சிறு,மலைகளும் குன்று களுமாக இருந்த அப் பகுதிகளில் காடுவெட்டி,களிமண் சுவர் அமைத்த கொட்டில்கள் போட்டு , குடும்பம் குடும்பமாக எமது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியது அந்த சொறிக் கூட்டம்.மறுபக்கம்,கந்தளாய்க் குளம் பகுதிகளைச் சுற்றி பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இவர்களால் விரட்டியடிக்கப் பட்டார்கள்.கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை தமிழர் பூமியாக இருந்த எமது பாரம்பரிய மண், ,முஸ்லிம்களாலும்,சிங்களவர்களாலும்,கொலனிகள்’ என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப் பட்டது. எண்பதுகளின் நடுப்பகுதியில் புலேந்திரன் என்னும் ஓர் புலிப்புயல் இப் பகுதிகளில் கைத் துப்பாக்கியோடு நடைபயின்றது.புலேந்திரன் இந்த காடையர் கூட்டத்தைக் கண்டால் உள்ளம் கொதித்தான்..எமது மக்களை அழிக்க வந்த நாசகாரிகள் அவர்கள் என்று நினைத்தான்..பலாத்காரமாக எமது மக்களின் நிலங்களைப் பறித்து,அவர்களை விரட்டியடித்து வாழும் அவர்களின் குடியிருப்புகள் மீது புலேந்திரனின் துப்பாக்கிகள்,வெடிக்கத் தொடங்கியபோது, வெறிநாய்க் கூட்டம் பயத்தினால் ஓடத் தொடங்கியது.. ஆயினும்..அப்படி ஓடியவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிகளை,பாதுகாப்புக்காக, சிங்கள அரசு இலவசமாக வழங்கியதுடன் நிற்காமல்,அவர்கள் அப் பிரதேசங்களில் தொடர்ந்து பயமின்றி வாழ சில இராணுவ முகாம்களையும் அமைத்ததுடன்,அவர்களுக்கு இலவச உணவு,பராமரிப்பு தொகை போன்றவற்றையும் வழங்கி, நில அபகரிப்புக்கு துணை போனது! ஆயினும், அப்பகுதிகளில் இருந்த சிறிய சிங்கள முகாம்கள் மீது அவ்வப்போது லெப்.கேர்ணல் புலேந்திரனின் படையினர் பாய்ந்து சென்று நள்ளிரவில் தாக்கி அழித்தனர்.பாலம் போட்ட ஆறு என்னும் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்ற சிங்கள இராணுவத்தினர்,புலிகளிடம்,புலேந்திரனிடம், அடிவாங்காமல்,இறப்புகளை சந்திக்காமல் திரும்பிச் சென்ற வரலாறே அப்போது இல்லை எனலாம்! அதுமட்டுமன்றி, ஊர்காவல் படை என்னும் பெயரில் வேட்டைத் துப்பாக்கிகளோடு வலம் வந்த சிங்கள காடையர்கள்மீதும் புலேந்திரனின் துப்பாக்கி குண்டுகள் அடிக்கடி பாயத் தொடங்கியது! அதுமட்டுமன்றி, திருகோணமலை நகரப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சிங்கள ஏகாதிபத்திய இனவாதிகள் மீது புலிக் குண்டுகள் புயல் எனப் பாய்ந்து சென்று தாக்கின.’கிரிமாத்தையா’ போன்ற எண்ணிறைந்த தமிழ் இன விரோதிகள்,புலேந்திரனின் புலிப் பாய்ச்சலைக் கண்டு நடு ,நடுங்கி மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு ஓடிவிட்டனர்.அடி..வெடி..உதவுவதுபோல்,அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதை, திருகோணமலைச் சிங்கள இனத் துவேசிகளுக்கு தன் வீரத்தால்,நிருபித்துக் காட்டிய ஒப்பற்ற மாவீரன்தான் லெப் கேர்ணல் புலேந்திரன்.. ஆகும்.புலேந்திரன் கைத் துப்பாக்கியோடு ஓர் சிங்களக் கிராமத்துக்குள் வருகிறான் என்று செய்தி போனதுமே, காடுகளில் ஓடி ஒழிந்தது இன அழிப்புக் கூட்டம்..! அது புலிகளின் பொற் காலம்! அதை நிறுவிய பெரு வேங்கை, மாபெரும் வீரத் தளபதிதான் லெப். கேர்ணல் புலேந்திரன்..! தமிழன் திருகோணமலை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் ஒன்று, சுதந்திர தினத்துக்கு பின்னர் உண்டென்றால், அது லெப் கேர்ணல் புலேந்திரனின் காலத்தில்தான் என்று எதுவித தயக்கமும் இன்றி நான் சொல்வதில் வெட்கப் படமாட்டேன்! ஆனால்,1987 அக்டோபரில், போர்நிறுத்த காலத்தில், இந்தியப் பெருங் கடலில் வைத்து புலெந்திரனையும் ,லெப்.கேர்ணல் குமரப்பா,போன்ற பதின் மூவரையும் , போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ,ஸ்ரீலங்கா அரசு கைது செய்து கொண்டு சென்றபோது,அச் சம்பவத்தில் வேறு வழியின்றி பலாலி இராணுவ முகாமில் சயனைட் உண்டு வீரச் சாவடைந்தவர்களுள் புலேந்திரனும் ஒருவர். சிங்கள இனத்தின்,சிங்கள அரசின் பரம விரோதியாக கருதப் பட்ட லெப்.கேர்ணல் புலேந்திரனை கொழும்பில் கொண்டு சென்று, நாலாம் மாடியில்,சிங்களப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க முனைந்தது, புலேந்திரன் மீதுள்ள அப்பட்டமான ஓர் பழி வாங்கும் நடவடிக்கை ஆகும்.அதைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அமைதிப் படைக்கும் புலேந்திரனின் சாவில் நிச்சயம் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.திருகோணமலையை ஆட்சி புரிந்த ஓர் வீரப் பெருமலை சரிந்து விட்டது… என்று கேள்விப் பட்ட சிங்கள இனவாதிகள், திருகோணமலை மாவட்டம் எங்கும் பட்டாசு கொழுத்தி அந்த நாளைக் கொண்டாடினர் என்ற ஒரு செய்தி மட்டும் போதும், அந்த பெரு வீரனின் வீரத்தை உலகுக்கு-தமிழ் இனத்துக்கு பறை சாற்ற! என் நினைவில் இருந்து எப்போதும் அழியாத நினைவுக் காவியம்தான் புலேந்திரன்!எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்து கோலோச்சிய மாபெரும் வீரச் சக்கரவர்த்திதான் லெப்.கேர்ணல் புலேந்திரன்..புலிகளின் பலத்தின் ஒரு பகுதிதான் புலேந்திரன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.எண்பதுகளில், திருகோணமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் பெரும்பாலானோர்,எழுபதுகளில் அறுபதுகளில் மாத்தறை,காலி அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இருந்து வந்த, சிங்கள ரௌடிக் கூட்டமும், அவர்களின் குடும்பங்களும்தான். திருகோணமலையில் நாலாம் கட்டையில் இருந்து ஸ்ரீமாபுரம் ,அனுராதபுரச் சந்திவரை திடீர் திடீர்,என்று தமிழர்கள் வாழ்ந்த பூமிகளை மேற்படி சிங்களக்காடையர் கூட்டம்தான் ஆக்கிரமித்தார்கள் என்பது மட்டுமன்றி,சிறு சிறு,மலைகளும் குன்று களுமாக இருந்த அப் பகுதிகளில் காடுவெட்டி,களிமண் சுவர் அமைத்த கொட்டில்கள் போட்டு , குடும்பம் குடும்பமாக எமது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியது அந்த சொறிக் கூட்டம்.மறுபக்கம்,கந்தளாய்க் குளம் பகுதிகளைச் சுற்றி பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இவர்களால் விரட்டியடிக்கப் பட்டார்கள்.கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை தமிழர் பூமியாக இருந்த எமது பாரம்பரிய மண், ,முஸ்லிம்களாலும்,சிங்களவர்களாலும்,கொலனிகள்’ என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப் பட்டது. எண்பதுகளின் நடுப்பகுதியில் புலேந்திரன் என்னும் ஓர் புலிப்புயல் இப் பகுதிகளில் கைத் துப்பாக்கியோடு நடைபயின்றது.புலேந்திரன் இந்த காடையர் கூட்டத்தைக் கண்டால் உள்ளம் கொதித்தான்..எமது மக்களை அழிக்க வந்த நாசகாரிகள் அவர்கள் என்று நினைத்தான்..பலாத்காரமாக எமது மக்களின் நிலங்களைப் பறித்து,அவர்களை விரட்டியடித்து வாழும் அவர்களின் குடியிருப்புகள் மீது புலேந்திரனின் துப்பாக்கிகள்,வெடிக்கத் தொடங்கியபோது, வெறிநாய்க் கூட்டம் பயத்தினால் ஓடத் தொடங்கியது.. ஆயினும்..அப்படி ஓடியவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிகளை,பாதுகாப்புக்காக, சிங்கள அரசு இலவசமாக வழங்கியதுடன் நிற்காமல்,அவர்கள் அப் பிரதேசங்களில் தொடர்ந்து பயமின்றி வாழ சில இராணுவ முகாம்களையும் அமைத்ததுடன்,அவர்களுக்கு இலவச உணவு,பராமரிப்பு தொகை போன்றவற்றையும் வழங்கி, நில அபகரிப்புக்கு துணை போனது! ஆயினும், அப்பகுதிகளில் இருந்த சிறிய சிங்கள முகாம்கள் மீது அவ்வப்போது லெப்.கேர்ணல் புலேந்திரனின் படையினர் பாய்ந்து சென்று நள்ளிரவில் தாக்கி அழித்தனர்.பாலம் போட்ட ஆறு என்னும் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்ற சிங்கள இராணுவத்தினர்,புலிகளிடம்,புலேந்திரனிடம், அடிவாங்காமல்,இறப்புகளை சந்திக்காமல் திரும்பிச் சென்ற வரலாறே அப்போது இல்லை எனலாம்! அதுமட்டுமன்றி, ஊர்காவல் படை என்னும் பெயரில் வேட்டைத் துப்பாக்கிகளோடு வலம் வந்த சிங்கள காடையர்கள்மீதும் புலேந்திரனின் துப்பாக்கி குண்டுகள் அடிக்கடி பாயத் தொடங்கியது! அதுமட்டுமன்றி, திருகோணமலை நகரப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சிங்கள ஏகாதிபத்திய இனவாதிகள் மீது புலிக் குண்டுகள் புயல் எனப் பாய்ந்து சென்று தாக்கின.’கிரிமாத்தையா’ போன்ற எண்ணிறைந்த தமிழ் இன விரோதிகள்,புலேந்திரனின் புலிப் பாய்ச்சலைக் கண்டு நடு ,நடுங்கி மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு ஓடிவிட்டனர்.அடி..வெடி..உதவுவதுபோல்,அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதை, திருகோணமலைச் சிங்கள இனத் துவேசிகளுக்கு தன் வீரத்தால்,நிருபித்துக் காட்டிய ஒப்பற்ற மாவீரன்தான் லெப் கேர்ணல் புலேந்திரன்..ஆகும் .புலேந்திரன் கைத் துப்பாக்கியோடு ஓர் சிங்களக் கிராமத்துக்குள் வருகிறான் என்று செய்தி போனதுமே, காடுகளில் ஓடி ஒழிந்தது இன அழிப்புக் கூட்டம்..! அது புலிகளின் பொற் காலம்! அதை நிறுவிய பெரு வேங்கை, மாபெரும் வீரத் தளபதிதான் லெப். கேர்ணல் புலேந்திரன்..! தமிழன் திருகோணமலை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் ஒன்று, சுதந்திர தினத்துக்கு பின்னர் உண்டென்றால், அது லெப் கேர்ணல் புலேந்திரனின் காலத்தில்தான் என்று எதுவித தயக்கமும் இன்றி நான் சொல்வதில் வெட்கப் படமாட்டேன்! ஆனால்,1987 அக்டோபரில், போர்நிறுத்த காலத்தில்,இந்தியப் பெருங் கடலில் வைத்து புலெந்திரனையும் ,லெப்.கேர்ணல் குமரப்பா,போன்ற பதின் மூவரையும் , போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ,ஸ்ரீலங்கா அரசு கைது செய்து கொண்டு சென்றபோது,அச் சம்பவத்தில் வேறு வழியின்றி பலாலி இராணுவ முகாமில் சயனைட் உண்டு வீரச் சாவடைந்தவர்களுள் புலேந்திரனும் ஒருவர். சிங்கள இனத்தின்,சிங்கள அரசின் பரம விரோதியாக கருதப் பட்ட லெப்.கேர்ணல் புலேந்திரனை கொழும்பில் கொண்டு சென்று, நாலாம் மாடியில்,சிங்களப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க முனைந்தது,. புலேந்திரன் மீதுள்ள அப்பட்டமான ஓர் பழி வாங்கும் நடவடிக்கை ஆகும்.அதைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அமைதிப் படைக்கும் புலேந்திரனின் சாவில் நிச்சயம் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.திருகோணமலையை ஆட்சி புரிந்த ஓர் வீரப் பெருமலை சரிந்து விட்டது… என்று கேள்விப் பட்ட சிங்கள இனவாதிகள், திருகோணமலை மாவட்டம் எங்கும் பட்டாசு கொழுத்தி அந்த நாளைக் கொண்டாடினர் என்ற ஒரு செய்தி மட்டும் போதும், அந்த பெரு வீரனின் வீரத்தை உலகுக்கு-தமிழ் இனத்துக்கு பறை சாற்ற! என் நினைவில் இருந்து எப்போதும் அழியாத நினைவுக் காவியம்தான் புலேந்திரன்!
  5. விக்கல் தும்மல் கொட்டாவி உடல் சொல்லும் நற்செய்திகள் நம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் கொண்டுவரும்போது என்ன நடக்கும்? நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவிவிட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை... *மயிர்க்கூச்செரிதல்* விலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும். இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும். மனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம். மயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். *கொட்டாவி* மிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இதுதான். *விக்கல்* ஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும்? `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா?’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான் துரதிர்ஷ்டம். *திடீர் விழிப்பு* அடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும். *விரல்களில் தோல் சுருக்கம்!* தண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது. *தும்மல்* பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது. *சோம்பல் முறித்தல்!* இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும். உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது! *விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் *`இயற்கை’* என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்! https://eluthu.com/kavithai/322692.html
  6. பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர வேறெதையும் செய்வில்லை ஒட்டிய வயிறுடன் நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும் முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை இனியொரு பாலகரின் கண்களை எப்படிப் பார்ப்பது? ஏதுமறியாப் பாலகர்கள் இம்மண்ணில் பிறந்திருந்தைதவிர வேறெதையும் செய்திருக்கவில்லை தனித்துப் பிடிபட்ட சிறுவனிடம் ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள்மட்டுமே இருந்தன குற்றங்களால் நிரம்பியிருந்த வானத்தில் ஒரு பறவையும் இல்லை பதுங்குகுழியில் பிறந்த குழந்தை பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில் எஞ்சியது ஒன்றுமில்லை இப்பூமியில் மீண்டும் புற்கள் முளைக்குமா? நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள் அப் பாலகன் இறுதிக் குரலெடுக்கையில் உடைந்த நிலவைத்தவிர எந்தச் சாட்சியுமில்லை 20.02.2013 தீபச்செல்வன் (எனது குழந்தை பயங்கரவாதி தொகுப்பு)
  7. விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. மாவீரர் அவர் மலையினில் எரிகின்ற தீபம்பாடியவர் - செங்கதிர்பாடலாசிரியர் - மாமனிதர் கவிஞர் நாவண்ணன்இசையமைப்பாளர் - சிறிகுகன்ஒலிப்பதிவு - மேஜர் ஜீவா புலிகளின்குரல் வெளியீடு
  9. கு.சா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. சபேசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. Eruption - One Way Ticket (1979)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.