Everything posted by nunavilan
-
உங்களுக்கு தெரியுமா?
மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம் ================================= பசுபிக் கடலின் அடியில், 7 மைல் ஆழத்தில், உலகில் மிகவும் ஆழமான பகுதி இது. மரியானா அகழி என்னும் இந்த பகுதியில் என்னவெல்லாம் வாழ்கின்றன என்பது குறித்து இப்போது அமெரிக்க கடலாய்வு நிறுவன விஞ்ஞானிகள் முதல் தடவையாக பார்க்க முயற்சித்திருக்கிறாகள். தொலைவில் இருந்து இயக்கக்கூடிய நீர்மூழ்கியின் மூலம் எடுக்கப்பட்ட இவை குறித்த வீடியோ நேரடியாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது. அந்த அழகான காட்சிகள் குறித்த காணொளி.
-
நகைச்சுவைக் காட்சிகள்
- அழகு நிலவே
- உங்களுக்கு தெரியுமா?
- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த தின வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்- கருத்து படங்கள்
- நகைச்சுவைக் காட்சிகள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை 15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள். ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள். சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன. இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள். இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார். முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார். சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர். போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது. இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஜெய்ஹிந்த்...! http://starramesh.blogspot.ca/2017/01/blog-post.html- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழகிய சூடான பூவே படம்:பைரவா இசை:சந்தோஸ் நாராயணன் பாடியவர்கள்:தர்சனா, விஜய்நரேன்- நகைச்சுவைக் காட்சிகள்
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
*Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...* *“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*. *நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...* *1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*. *2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.* *3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.* *4. அதிகாலையில் எழ பழகுங்கள்*. *வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.* *5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.* *அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.* *6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.* *எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.* *7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.* *8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.* *9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*. *10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.* *11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.* *12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.* *13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*. *14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.* *15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*. *16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.* *17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.* *18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.* *19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!* *"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"- அதிசயக்குதிரை
- குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017)
குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017) தமிழீழம் குமாரபுரம் திருகோணமலையின் கிழக்கே, மூதூர் கிளிவெட்டியின் அண்மைய தமிழ்க் கிராம்ம். மகாவலி கங்கையின் கரங்களால் நிதமும் குளிரூட்டப்படும் வரத்தைப்பெற்ற அழகிய பசுமை பூசிய கிராம்ம். எங்கும் அடர்ந்து செழித்த வேளாண் வயல்வெளிகள், பசுக்களும் ஏறுகளும் துள்ளி விளையாட எருமைகள் சகதி குளிர்க்க உழவன் உழவில் தலைநிமிர்ந்து தமிழன் வாழ்ந்த வளமிகு ஊராகும். செழிப்பான இக்கிராமம் கொடுமையான இனவழிப்பை எதிர்கொள்ள என்ன காரணங்கள் என பார்ப்போமானால் 1. இக்கிராமம் ஒரு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றமாக உருவாக இருப்பதை அறிந்த அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்கள் இரவோடிரவாக தமிழ் மக்களை குடியேற்றி சிங்கள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தமை 2. ஈழப்போரில் ஏற்பட்ட சிங்கள இராணுவ இழப்பு: இச்சண்டை உண்மையில் முஸ்லீம் கிராமத்திற்கு அண்மையில் தான் இடம்பெற்றது. இச்சண்டை இடம்பெற்ற களத்திற்கும் குமாரபுரத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும் இவ்வினவழிப்பானது திட்டமிடப்பட்ட பழிவாங்கலாகவே தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது. நடக்கப் போகும் துயரமறியாத எங்கள் உறவுகள், உழைத்து களைத்த சோர்வும், பாடசாலை மாணவர்கள் பின்னேர வகுப்புகளை முடித்தும், சிறுவர்கள் விளையாடி வியர்வை குளிர்த்தும், பறவைகள் கூடு தேட, கறவைகள் வீடு சேர, கதிரவன் மேற்கில் மறைய சிங்கள பௌத்த காடையர்கள் தங்கள் பழிவாங்கலை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத்தொடங்கினர் கோடரி, கத்தி மற்றும் இந்த்திர துப்பாக்கி என அனைத்து ஆயுதங்களும் அப்பாவி தமிழ் மக்களின் இரத்தம் குடித்தது. மதுபோதையில் வந்த புத்தனின் வாரிசுகள் நிறைமாத கர்ப்பிணித் தாயை வண்புணர்ந்து கொலை செய்து புத்த தர்மம் காத்தனர் பன்னிரண்டு வயதுடைய என் தங்கை தனலட்சுமியை கூட பௌத்த காவாலிகள் விட்டு வைக்க வில்லை. தங்கள் ஆண்மைக்கு என் தங்கையை இரையாக்கி துப்பாக்கி குண்டுக்கு பலியிட்டனர். எத்தனை கொடூரம் அத்தனையும் விழிகளில் இரத்தம் வரும் துன்பம், இரவின் இரக்க குணம் இருள இருள மீதி மக்கள் மறைவிடத்தில் மறைந்து தம்மை பாதுகாத்தனர். இலங்கை சிங்கள பௌத்த இராணுவத்தின் காவலில் படுகொலை செய்துவிட்டு பாதுகாப்பாக சென்றனர் காடைச் சிங்கள சிப்பாய்கள். இப்படுகொலையின் போது பெண்களும் சிறுவர்களுமாக இருபத்து நான்கு பேர் படுகொலை செய்யப்பட இருபத்தாறு பேர் படுகாயமடைந்தனர். இம்மக்களுக்கு நீதி கிடைக்காமைக்கான காரணம் என்ன? சிங்கள பௌத்த அரசிடம் தமிழருக்கு நீதி கிடைப்பதென்பது பகற்கனவாகி அறுபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் அதற்கான தூண்டுதலைச் செய்யாமல் அப்படி காலத்தை கடத்தியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சி தலைவரும் ஆகும். இதற்கு பல சான்றுகளுண்டு 1. எதிர்க் கட்சி தலைவர் சாணக்கியர் அவர்கள் அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் இரண்டுமுறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர் 2. இக்கிராம்ம் ஐயா தங்கத்துரை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 3. மூதூர் மக்களிடத்தில் சாணக்கியருக்கு தகுந்த வரவேற்பின்மை. போன்ற காரணங்களால் சாணக்கியர் இப்படுகொலைக்கான தனது குரலை உயர்த்தவில்லை அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு மூதூர், திருகோணமலை மற்றும் அனுராதபுரமென மாற்றப்பட்டு கடைசியில் இருபது வருடத்திற்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர். 1996 இல் மூதூர் நீதிவான் நீதிமன்றில் தொடங்கப்பட்ட வழக்கு அனுராதபுரத்தில் ஜூரிகளால் தமிழ் மக்களின் நீதி மறுக்கப்பட்டது இறுதியாக நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணை நயவஞ்சகத்துடன் நிறைவேறியது. தகுந்த சாட்சியங்கள் இருந்தும் மறுக்கப்பட்ட நீதியை தமிழ் மக்கள் ஏற்கவேண்டிய காலமாகிப்போனது. எதிர்க்கட்சி தமிழ் அரசியற் கட்சிகள், ஆனால் தமிழருக்காக குரல்கொடுக்காத பச்ணோந்திகள். இவர்களால் தமிழருக்கு விடியுமென எழுக தமிழை புறக்கணித்த சாணக்கிய விசுவாசிகளுக்கு இன்னமும் சாணக்கிய சாயம் வெளுக்கவில்லை போலும். குமாரபுர மக்களின் நீதிக்காக அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களைத்தவிர எந்த ஒரு அரசியல்சார் நடவடிக்கைகளையும் அரசியியல்வாதிகள் எடுக்க தவறியது மிகவும் மன வேதனையான விடயமாகும் எனவே இப்படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற மக்களாகிய நாம் ஒன்றாகி குரல்கொடுப்போம், உறவுகளை இழந்துவாடும் சொந்தகளுக்கு ஆறுதலாக இருந்து, புனித ஆன்மாக்களின் சாந்திக்காக பிராத்திப்போம் http://www.tamilsvoice.com/archives/23718- உங்களுக்கு தெரியுமா?
உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சில வேலைகளை சுலபமாக்க இதோ சில எளிய வழிகள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன்னை ஒன்று நான் கேட்கவா படம்:18 வயது பாடியவர்கள்: சுதா ரகுநாதன், சிறிராம் பார்த்தசாரதி இசை:டினேஸ், சாள்ஸ் பொஸ்கோ வரிகள்:நா. முத்துகுமார்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:விர்ரு விர்ரு படம்:றெக்க பாடியவர்கள்:ரித்தின் ராஜ் இசை:டி.இமான் வரிகள்:யுகபாரதிImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அழகு நிலவே