Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: கனவே கனவே படம்: டேவிட் இசை: அனுருத்
  2. 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே? மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க? கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்... மனைவி: ???? 2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க. கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்” மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....” கணவன் :???? 3) டீச்சர்: உன்பேருஎன்ன..? - மாணவி : " சௌமியா" டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., டீச்சர் : ???? 4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?" டாக்டர்: ???? 5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம். பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..! மாப்பிள்ளை வீட்டார்:??? 6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும். மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம். ஆசிரியர் : ? 7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன? மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்! ஆசிரியர் : ??? வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்... சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான். வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்? மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன். வா‌த்‌‌தியா‌ர் : ????
  3. இரட்டிப்பு அந்தப் பூக்கள் இரண்டும் நறுமணத்தால் வேறுபட்டவை என்று யார் சொன்னது ?? அவை இரண்டும் நிறத்தால் ஒன்றுபட்டவை !! அந்தப் பூக்கள் இரண்டும்- மாலையில் வாடிவிடும் என்று யார் சொன்னது ?? அவை இரண்டும் மாலையாகி. இரு மனங்களை இணைத்துவைப்பவை !!! அந்தப் பூக்கள் இரண்டும்- பேச முடியாத ஊமைகள் என்று யார் சொன்னது !! ஒவ்வொரு மந்திரம் மந்திரமாக..ஆண்டவனிடத்தில் அடியேனுக்காக மொழிபெயர்ப்பவை !! அந்தப் பூக்கள் இரண்டும்-- ஆதவன் வருகை கண்டு -மலர்வதாக யார் சொன்னது ? என்னவளின் கூந்தலை..ஏழு உலகம் பார்ப்பதற்காய்.. அவள் விழியின் ஒளிபட்டுக் காலையிலே மலர்வது.. இன்று எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே !! ****************************************** **நன்றியுடன் வேலணையூர் லிங்கா ** https://www.facebook.com/
  4. மற்றுமொரு இனிமையான பாடல் சட்டம் ஒரு இருட்டறையில் இருந்து..
  5. பாடல்: உயிரே உயிரே படம்: சட்டம் ஒரு இருட்டறை(2012) http://youtu.be/FpCqWDnu1qw
  6. வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்? நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது. இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர். இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது. *** தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி? தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது. இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது. தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது. *** மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்? ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது. பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்? ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு. இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன. ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது. உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது. Read more: http://www.penmai.com/forums/general-discussions/48481-a-350.html#ixzz3BqU2hzcK
  7. நந்தனுக்கும் தமிழ் தங்கைக்கும் கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. இராமேசுவரத்தில் எல்லோரும் குளித்துக் கரையேறுகிறார்கள்! நாங்கள் குதித்துக் கரையேறுகிறோம்! * பிறந்த குழந்தையின் நெற்றியில் வைக்கிறாள்... பிடி மண்ணாய் கொண்டுவந்த தாய் மண்! * கடல் கடந்து பார்க்க வந்திருக்கின்றன சோறு வைத்த காக்கைகள்! * படகில் ஏறினோம் படகுகளை விற்று! * ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை வீடு புகுந்து இழுத்துப் போய் கொல்லத்தான் செய்தன ஆனாலும்! * இலங்கை வானொலியிலிருந்து நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்! நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம்! * முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியிலிருந்து கேட்கிறது... ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ கவிஞர் வாலி
  9. தம்புரா பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை நீங்கள் இங்கே காணலாம் -
  10. பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது. https://www.facebook.com/subha.b.murugan
  11. அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தன் மற்றும் கு.மா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்: கண்ணம்மா கண்ணம்மா படம்: ஜிகர்தண்டா
  13. பாடல்: காதல் வந்தாச்சோ படம்: பண்ணையாரும் பத்மினியும் http://youtu.be/e8XOPsnD6dw

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.