Everything posted by nunavilan
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
வருகை திரும்பத் திரும்ப நான் இந்தப் பூமிக்கு வந்திருக்கிறேன் வானத்தில் இருந்தாலும் எரிநட்சத்திரமாய் வீழ்ந்தாவது இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் மனிதனாய் விலங்காய் பறவையாய் கொடியாய் பூண்டாய் கிருமியாய் ஆணாய் பெண்ணாய் அற்றவனாய் தமிழ் தேசத்தனாய் மகா வம்சத்தனாய் வடுகனாய் சீனனாய் திரும்பத் திரும்ப வந்திருக்கிறேன் பாலை நிலங்களில் அலையும் மூர் தேசத்தனாய் சிலுவைப் போர்களில் மரித்தவனாய் பிரமிடுகளில் பிணங்களைத் தொழுதவனாய் ரோமர்களின் நிலத்தில் சிங்கங்ககளோடு பொருதியவனாய் கிரேக்க உடற் பயிற்சிக் கூடங்களில் சிறுவர்களைப் புனர்ந்தவனாய் வர்ஜீனிய செம்மண நிலங்களில் அடிமையாய் சிறு முலை கனத்து எஜமானர்களின் குழவிக்கு பால் ஊட்டியவளாய் நீண்ட தோல் கால் உறைகளோடு கண் சாய்ந்த செங்கிகிஸ்கானின் பின்னால் புழுதிப் புயலாய் வந்தவனாய் பெரிய கோயிலில் உளிதட்டியவனாய் கூரை விதானங்களில் கழுத்து வலிக்க கடைசி விருந்து வரைந்தவனாய் ராஜேந்திரனின் அணுக்கியரில் ஒருவனாய் பழையனூர் நீலியை வஞ்சித்த வேதியனாய் கை உயர்த்தி வாழ்க ஹிட்லர சொல்லியவனாய் ஹிரோஷிமாவில் கதிர் தாக்கித் துடித்தவனாய் காசியில் நிணம் சாப்பிடும் அகோரியாய் மயிற்பீலி சமணனாய் முண்டன பௌத்தனாய் முதிர்தாடி முல்லாவாய் ஒரே இரவில் வேறு தேதசத்தவர் ஆகிவிட்ட காபிர்களைத் தேடித் தேடிக் கொன்றவனாய் குஜராத்தில் தூக்கிய வாளுடனும் குறியுடனும் பழி வாங்க அலைந்தவனாய்.. பிறையர்கள் துரத்த தீ புகுந்து கற்பு காத்த ரஜபுத்ரியாய் சோனா கஞ்சில் முதிரா யோனிகளின் இதழ்களைப் பிரிப்பவனாய் திரும்பத் திரும்ப நான் இங்கு வந்திருக்கிறேன் என்னைத் தெரியவில்லையா? http://ezhuththuppizhai.blogspot.ca/
-
உங்களுக்கு தெரியுமா?
இப்படியும் பாம்புகள்! எமது ஊரில் உள்ள தண்ணீர்ப் பாம்பு போல ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல் பாம்பு. இந்த பாம்பு விசத்தன்மை இல்லாதது. இது தண்ணீரில் அநாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது. அதாவது, அசைவின்றி அப்படியே கிடக்கும். உணவு உண்ணாது. எதுவும் செய்யாது, மூச்சு விடுவதைத் தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளைக் கையாளுகிறது. சிந்தனைத் திறன் உள்ள மனிதன் போல, தேர்ந்த நடிகன் போல என்று கூட சொல்லலாம். நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் சில சந்தர்ப்பங்களில் தன் உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப் பார்க்கும். சிலசமயம் வேகமாய் சீறும். வேறு பல சமயங்களில் பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்கவில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை அஸ்திரத்தை எடுத்து வீசும்...! என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்...! மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா? அந்தப் புல்வெளிப் பாம்பு செத்தது போல நடிக்குமாம்; என்ன நம்புகிaர்களா? உண்மைதான். அப்படியே உடம்பைத் திருப்பி போட்டு வாயைப் பிளந்து, நாக்கை வெளியில் நீட்டி, உண்மையாகவே செத்துவிட்டது போல நம்மையும் மிஞ்சி நடிக்கும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே கிடக்குமாம். எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பிக் கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது? வாழை மரங்கள் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை. தாவரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன. எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமக்கு அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம். வெப்பம் மிகுந்த ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப் பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும். வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது. வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 இலட்சம் தொன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. http://www.thinakaran.lk/2010/08/12/_art.asp?fn=f1008123
-
அதிசயக்குதிரை
அட கொக்க மக்க
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடிவுக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் தந்தானானே தாரேனானா தானா ஏய் தந்தானானே தாரேனானா தானா…. ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர் அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை யாருக்கு இங்கே இது தெரியும் கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும் இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர் அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர் ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும் பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும் கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அன்னையின் கருவில் படம்: ஹரிதாஸ் பாடியவர்: சங்கர் மகாதேவன் இசை:எஸ்.விஜய் அன்ரனி- உங்களுக்கு தெரியுமா?
சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள் 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bலொஅடெட் நித் ஐர்) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hஅர்டெனிங்) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு. 4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Dஒன்’ட் ளோசென் Yஒஉர் Bஎல்ட்). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. 5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்! 6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். ஆனால், 1989௯0 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார். நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது! 7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும். மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு. எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக! http://thachankurichymail.blogspot.in/2013/06/blog-post_13.html- உங்களுக்கு தெரியுமா?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மல்லிகைவாசம், பிரியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கிருபன், கோமகனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- அதிசயக்குதிரை
அந்தளவுக்கு சின்ன நாடா இருந்துகொண்டு இஸ்ரேலால் எப்படி அந்தளவுக்கு பலமான படையாக இருக்க முடிகிறது என்று நிறையப் பேருக்கு குழப்பம்... நீங்களே சொல்லுங்கோ... இவங்க எல்லாம் சண்டை பிடிக்கப் போனா யாராவது சண்டை பிடிப்பானா? உடன சரணடைஞ்சிருவாங்கள்..............................- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
The World's Smallest Woman is from India Jyoti Amge recently turned 18 and became and the World's SmallestWoman. He height is only 62.5 centimetres. The primary cause for her short height is an illness called Achondroplasia which stops bones from growing with normal human rate and is the primary cause of dwarfism.- சிந்தனைக்கு சில படங்கள்...
They have two spines which join at the pelvis This man has the World's widest human mouth! The lips and cheeks of Francisco Domingo Joaquim (Angola), were measured, at full stretch, to be 17cm (6.69 in) wide.- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா படம்: தலைவா பாடியவர் : விஜய்- மனதைக் கவர்ந்த கவிதைகள்
https://www.facebook.com/photo.php?fbid=497678633634582&set=a.372742019461578.83246.372163186186128&type=1&theater- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னை உன்னை படம்: அம்பிகாபதி பாடல் வரிகள் : வைரமுத்து இசை : A R ரஹ்மான்- சிந்தனைக்கு சில படங்கள்...
California's Salton Sea is eerily beautiful, as shown by this 1999chromogenic print by Terry Falke. But all is not well at this huge artificial lake: tens of thousands of birds and over 2 million dead fish were found in the area over the 12 months before Falke made his picture. The Salton Sea was created when levees on the Colorado river broke during a flood in 1905. This accident was turned to the good when, in the 1950s, the resulting lake was stocked with fish. The fish in turn attracted millions of migrating birds, and the "sea" became a valuable natural habitat, despite its artificial origins. Now higher temperatures and changing irrigation patterns mean the lake is evaporating rapidly. Its remaining water is becoming increasingly saline, making it inhospitable to birds and fish; pollution borne by the Mexicali New river is also affecting the environment. The sea's unusual history has made it difficult to determine what actions, if any, should be taken to save it. (Image: Terry Falke/National Academy of Sciences)- மனதைக் கவர்ந்த கவிதைகள்
நிரம்பும் பாத்திரம் இறுக மூடிய பின்னும் சொட்டும் துளிகள் நிரம்பி வழிகிறது ஒன்றை மறந்து பிறிதொன்றை கேட்டபடி இருக்கும் மகனின் ஆசைகளும் நாளை பார்க்கலாம் அடுத்த வாரம் கட்டாயம் வரும் மாதமென பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்... http://naperiyasamy.blogspot.in/2013/07/blog-post.html#comment-form- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மெல்ல பூக்குதே படம்:புத்தகம் இசை: ஜேம்ஸ் வசந்தன்- கருத்து படங்கள்
- கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல்
கறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம் _ ரவிக்குமார் ( 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை இது. கறுப்பு ஜூலையின் நினைவாக இங்கே வெளியிடுகிறேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளின் வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மக்களின் போராட்டங்கள் சரியாக நமக்குப் புரியும் ) இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்கைளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால் மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிரைத்த அந்த ஓலக்குரல்கள் நமது காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள். கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாக்காளர் பட்டியலை வைத்து தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள் இதையும் கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம். உள்ளூர் களேபரத்தில் நாம் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம். சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர் விட்ட நேரத்திலும் கூட தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களான’ நாம் ஈழப்பிரச்சனையில் எளிதில் சிக்கிக் கொள்வோமா என்ன? ‘‘சார்க்’’ மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை. ‘‘உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்படித்து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்’’ என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ‘‘நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?’’ என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே நாணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள். கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது. ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை. கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது. சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. ‘‘இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.’’ தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன். முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது. அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார். ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன்: நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன் சித்தம் குழம்பியவனாகவும் ஒதுபோதும் இருந்ததில்லை உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன் அன்றாட வாழ்க்கையிலும் நான் ஒரு யதார்த்தவாதி எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால் உடனடியாக மறந்து விடுகிறேன் மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன் காருக்குள் நாலுபேர் பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில் ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள் எந்த வேறுபாடும் இல்லை. குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில் ஒரு சில கேள்விகள் செய்வதைப் பிழையறச் செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம் பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள் ஆனால், திடீரென்று யாரோ ஒருவன் கதவுகளைத் திறந்தான். அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான் குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என அவன் எண்ணியிருக்கக் கூடும் துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான் சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர் கலைந்து போனார்கள் ஒருசிலர் காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள் என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள் சமாதான விரும்பிகளாக மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர் அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர் கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார் சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார் எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார் கதவை மூடினார் தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன் எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில் மாநகராட்சி அதனை அகற்றக்கூடும் தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி’’ ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை. வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாக கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிக்கோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பை கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ‘‘இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களோ, கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்’’ என லண்டனிலிருந்து வெளியான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை (Genocide) எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது நூலொன்றில் (Forms of Collective Violence) விளக்கியிருக்கிறார். ‘‘மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் ªச்வாக்குக்குள் கொண்டு வருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை’’ - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார். இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர். ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது. இதைத் தமிழகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம்’ என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம். கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்குப் பிரத்யேகமாக விருந்து கூட கொடுக்கலாம். மாநாடு நடக்கும் இடத்திலிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாவம் அவர்கள் தமிழர்கள். 24.07.2008 ஜுனியர் விகடன் - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.