Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. டைட்டானிக் - புதைந்த வரலாறு [size=3] [/size][size=3] [size=4]உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது.[/size] [size=4]1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.[/size] [size=4]பிரமாண்ட கப்பல்:[/size] [size=4]டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல். 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.[/size] [size=4]சம்பவத்தன்று...[/size] [size=4]1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.[/size] [size=4]வியாபாரமான டைட்டானிக்:[/size] [size=4]விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.[/size] [size=4]1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.[/size] [size=4]டைட்டானிக் 2:[/size] [size=4]டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.[/size][/size] http://excitingearth.blogspot.in/
  2. பாடல்:என்ன ஆச்சு இசை: விஜய் அன்ரனி பாடலசிரியர்: தாமரை பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஜானகி ஐயர் என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்.. என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்.. என் வானிலே வெண்ணிலா உன் முகம்.. வாராமலே பேசுதே என்னிடம்.. இது காதலா காதலா? என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்.. ராத்திரிகள் நேரம் ரதி தேவி மத கோலம் கனவாக தினம் தோறும் வர கண்டேனே.. சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம் தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே.. புதை மண்ணிலே காலை வைத்தேன்.. நக கண்ணிலே ஊசி தைதேன்.. படும் வேதனை சொல்லும் காதலாய்.. என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்.. வீடுவரை சென்றேன் படி ஏறவில்லை நின்றேன் என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே.. பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல், நகராத கெடிகாரம் அதை பார்த்தேனே.. நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்.. இதே போலவே வாழ வேண்டும்.. உடல் என்னிடம்.. உயிர் உன்னிடம்.. என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்.. என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்.. என் வானிலே வெண்ணிலா உன் முகம்.. வாராமலே பேசுதே என்னிடம்.. இது காதலா காதலா?
  3. பாடல்:வாயை மூடி சும்மா இருடா படம்:முக மூடி பாடியவர்:ஆலாப் ராஜ்
  4. பாடல்:ஜில்லென்று ஒரு கலவரம் படம்:லீலை நெஞ்சுக்குள் இந்த நிலவரம் பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம் காதல் ஒரு புறம் – கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் – என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் தூறலின் சாரலில் நான் நின்ற போது வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு கண்கள் தரும் வண்ணங்க்ளில் என்னுள் எழும் எண்ணங்களில் நான் உறைந்து போனேன் இன்று (ஜில்லென்று ஒரு…..) சாலையில் traffic இல் நான் வாடும் போது Fmஇல் பாடல்கள் தான் கேட்பதுண்டு-நான் உனைக் கண்டதும் என்னில் எழும் புதுப்பாடல்கள் ஓராயிரம் எனை மறந்து நின்றேன் இன்று… (ஜில்லென்று ஒரு…..) உன்னை நான் பார்த்த நொடியிலே என் கண்ணில் யுத்தம் வெடித்ததே உயிர் மூச்சில் அமைதி பூத்ததே ஏன் ஏன் ஏன் ஏன் என் கண்ணில் கோடி சூரியன் என் வானில் கோடை கார்முகில் என் நெஞ்சில் வீசும் தென்றலானாய்.. (ஜில்லென்று ஒரு…..
  5. [size=3] படம் : தாஜ் மஹால் பாடல் : ஈச்சி எலுமிச்சி இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : அருந்ததி, மனோஜ் [/size] [size=3] [/size] [size=3] மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… [/size] [size=3] மாயோ மாயோ மாயோ யோயோ மாயோ மாயோ மாயோ யோயோ மாயோ மாயோ மாயோ யோயோ மாயோ மாயோ மாயோ யோயோ [/size] [size=3] ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி [/size] [size=3] ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி [/size] [size=3] ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி — மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ மயமாயோ மயமாயோ யோ மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ மயமாயோ மயமாயோ யோ மாயோ ஓஓஓ… மாயோ ஓஓஓ… – ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே [/size] [size=3] சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே [/size] [size=3] பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே [/size] [size=3] மச்சக் கண்ணி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே [/size] [size=3] பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே [/size] [size=3] மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன் [/size] [size=3] நெஞ்சுக் குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன் —- ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி [/size] [size=3] ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி [/size] [size=3] மாயோ மாயோ மாயோ யோயோ மாயோ மாயோ மாயோ யோயோ —- தோழுவோடு சேராத பொளிகாள கூட கொடையப் பாத்து மெரழும் கொடகண்டு மெரழாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரழும் ம்ம்ம்… பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ… தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ… கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி — ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி [/size] [size=3] ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி [/size] [size=3] மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… மாயே…மாயே யோ… [/size]
  6. கோமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. [size=4]திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார். அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார். அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள்.[/size] [size=3][size=4]தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான். [/size][/size] [size=3][size=4]ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான். மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார். "வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன். மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார். பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.[/size][/size]
  8. ஆர்க்கிமிடிஸ் [size=2] [/size][size=3] நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள். ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார். ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது. தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார். அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது. ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது. ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார். ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது. கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார். ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்: நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்... என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார். நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும். (தகவலில் உதவி - ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) நன்றி
  9. பாடல்:ஹேய் ஹேய் கீச்சு கிளியே இசை:தேவா பாடியவர்:ஹரிஹரன் திரைப்படம்:முகவரி வரிகள்: வைரமுத்து ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய், இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய் ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய், இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய் கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில், இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில், அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில், உயிர்களின் சுவாசம் காற்று, அந்த காற்றின் சுவாசம் கானம், உலகே இசையே… ஏ… எந்திர வாழ்கையின் இடையே, நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே, எல்லாம் இசையே, …ஏ… காதல் வந்தால் அட அங்கும் இசைதான், கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான், தொட்டில் குழந்தை ஒன்று அழுதால், அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான், யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து, கண் விழிப்பதற்கும் இந்த இசை தான், இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம், இசையோடு போவோம்… இசையாவோம்… ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய், இசையாலே எனது புதிய நாளை, நீ இன்று திறந்தாய் இன்னிசை நின்று போனால் என் இதயம், நின்று போகும் இசையே… உயிரே… எந்தன் தாய்மொழி இசையே, என் இமைகள் துடிப்பதும் இசையே, எங்கும் இசையே, மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும், கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும், ஐம்புலன்கள் எந்தன் இருப்பு, செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு, நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு, ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு, இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்… இசையோடு போவேன்… இசையாவேன்… — ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய், இசையாலே எனது புதிய நாளை, நீ இன்று திறந்தாய் ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய், இசையாலே எனது புதிய நாளை, நீ இன்று திறந்தாய்
  10. பாடல்: உயிரின் சுவரில் நானே படம்:சிறிதர் இசை:ராகுல் ராஜ் பாடியவர்கள்:சைந்தவி & சுராஜ்
  11. போக்குவரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்:பூ போல தீ போல படம்:வசீகரா பாடியவர்:கரிகரன் இசை:எஸ்.ஏ.ராஜ்குமார் பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள் காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள் கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள் அடி பிரிய சகி , சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவரி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா பூவுக்குள்ளே பிறந்ததால் , வாசங்களால் பேசுகிறாய் வெண்ணிலவில் வளர்ந்ததால் , வெளிச்சம் கோடி வீசுகிறாய் மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன் இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன் அடி பிரிய சகி , சொல்லி விடவா அந்த நிலவை எடுத்து கவரி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை சோழியை போலவே தோழி நீ சிறிது சோதனை போடுகின்றாய் நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய் ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே அடி பிரிய சகி , சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவரி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
  13. [size=4]பாடல்: கொலைகாரா அனலாச்சு என் மூச்சு திரைப்படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: கார்த்திக் & கல்யாணி கொலைகாரா அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹா கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு கொலைகாரா அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹாய் பாலு சோறும் உண்காம பச்ச தண்ணி செல்லாம இத்து இத்து போனேனே எச்சி முத்தம் இல்லாம நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காண்காம காமன் செய்யும் நாட்டாம பஞ்சில்லாம தீயில்லாம பத்த வச்ச கள்ளி புத்திக்குள்ள கத்தி வீசி போவதென்ன தள்ளி பச்ச வாழத்தோப்புக்குள்ள பந்திவைக்க வாடி புள்ள பால் பழங்கள் கூடைகுள்ள பத்தியமும் தேவையில்ல கொலைகாரி...ஹேய் நாஞ்சில்நாட்டு கடலெல்லாம் உன்னை கண்டும் வலைவீசும் சங்கு முத்து எல்லாமே தங்க காலை விலை பேசும் ஓரக்கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன் வாசம் உன்னை மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம் பாதி கொலை செஞ்சிப்புட்டு தப்பி செல்லும் மூடா முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கம் இல்ல மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நேரம் இல்ல கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி கொலைகாரா அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு[/size]
  14. [size=4]இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது. [/size] [size=4]கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. [/size] [size=4]மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ [/size] [size=4]நீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. [/size] [size=4]இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. [/size] [size=4]பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. [/size] [size=4]உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். [/size] [size=4]இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. [/size] [size=4]சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. [/size] [size=4]ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. [/size] [size=4]எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.[/size] [size=4](மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)[/size]
  15. பாடல்:தைச்சுக்கோ தைச்சுக்கோ படம்:பொன்னியின் செல்வன் இசை:வித்தியாசாகர் பாடியவர்கள்:மாதங்கி & அனுராதா சிறிராம்
  16. பாடல்:ஒரு மேகம் [size=2]இல்லாமல்[/size] படம்:இஸ்டம் இசை:தமன் பாடியவர்கள்:திவ்யா & கார்த்திகேயன் பாடலாசிரியர்: விவேகா
  17. பாடல்:போக்கிரி ராஜா படம்:குசேலன்
  18. [size=5]காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் பொய், உன் கண்ணுக்குள் தான் காதலில்லை[/size] [size=5]உன் ஒவ்வோர் பார்வையும் சாவியில்லா பூட்டொன்றை எனக்குள் பூட்டி நகர்கிறது. எப்போது தான் பூட்டு தயாரிப்பதை நிறுத்தி சாவி தயாரிக்க சம்மதிப்பாயோ ? http://xavi.wordpres.../08/04/love-49/[/size]
  19. அர்ஜுனுக்கு காலம் காலம் கடந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கறுப்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  20. பாடல்:துளசி செடியை படம்:சேவல்
  21. பாடல்:நீ தானே படம்:சர்வம் இசை:யுவன்
  22. பாடல்:நதியிலே அலை ஒன்று படம்:டூ இசை:யுவன் பாடியவர்:யுவன்
  23. பாடல்:என் மேலே இன்று படம்:இஸ்டம் இசை:தமன் பாடியவர்:மெஹா
  24. பாடல்:மச்சக்காரி மச்சக்காரி படம்:சில்லென்று ஒரு காதல் பாடியவர்:சங்கர் மகாதேவன்,வசுந்தரா தாஸ் இசை:ஏ.ஆர்.ரகுமான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.