Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. அவரும் பார் bar(கள்) வைத்து நடாத்துகிறார் என்றால் வருமானம் வரும் தானே?
  2. மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் இளையோர் சுயேச்சையாக நின்றாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.திருட்டு கூட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.
  3. சூரிய ஆற்றலின் நன்மை தீமைகள் சூரியன் பூமிக்கு ஒரு மணி நேரம் அளிக்கும் ஆற்றல் ஒரு வருடத்திற்கான உலகளாவிய ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி, சூரியன் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் மூலமாகும், மேலும் இந்த ஆற்றலின் ஒரு பகுதியை நம்மால் சேகரிக்க முடியாவிட்டாலும், சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த சக்தியைப் பயன்படுத்துவது கிரகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இது விலை உயர்ந்தது அல்லது திறமையற்றது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், சூரிய ஆற்றல் இப்போது மிகவும் நன்மை பயக்கும் - சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, தனியார் பொருளாதாரத்திற்கும். நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? கிடைக்கக்கூடிய சோலார் பேனல் மானியங்கள் மற்றும் சந்தையில் பெருகிய முறையில் போட்டி விலைகள் காரணமாக, சூரிய ஆற்றல் அதிக குடும்பங்களுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் கடந்த ஆண்டுகளில் வெகுவாக மேம்படுத்தப்பட்டு, சூரிய மின்கல சேமிப்பு அமைப்புகளால் நிரப்பப்பட்டு, சூரிய சக்தியை தூய்மையான ஆற்றலின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாற்றுகிறது. இருப்பினும், நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் மூலத்தைப் பொருட்படுத்தாமல் எப்போதும் குறைபாடுகள் உள்ளன. சூரிய ஆற்றலின் முக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் முக்கியமாக பின்வரும் புள்ளிகளில் பிரதிபலிக்கின்றன: சூரிய ஆற்றலின் நன்மைகள் 1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் சோலார் பேனல்களின் அனைத்து நன்மைகளிலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஆற்றல் உண்மையிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். மற்ற சில ஆற்றல் ஆதாரங்களைப் போலல்லாமல், சூரிய சக்தியை நம்மால் இயக்க முடியாது. சூரியன் இருக்கும் வரை சூரிய சக்தியை அணுக முடியும், எனவே விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் இறக்கப் போகும் போது குறைந்தது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரிய ஒளி நமக்குக் கிடைக்கும். 2. மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கிறது உங்கள் சூரிய குடும்பம் உருவாக்கிய மின்சாரம் மூலம் உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை நீங்கள் பூர்த்தி செய்வதால், உங்கள் ஆற்றல் கட்டணம் குறையும். உங்கள் பில்லில் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது சூரியக் குடும்பத்தின் அளவு மற்றும் உங்கள் மின்சாரம் அல்லது வெப்பப் பயன்பாட்டைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, நீங்கள் வணிகரீதியான சோலார் பேனல்களைப் பயன்படுத்தும் வணிகமாக இருந்தால், இந்த சுவிட்ச் பெரிய பலன்களைப் பெறலாம், ஏனெனில் பெரிய சிஸ்டம் அளவு உங்கள் ஆற்றல் பில்களின் பெரிய பகுதிகளை உள்ளடக்கும். மேலும், நீங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பது மட்டுமின்றி, ஸ்மார்ட் ஏற்றுமதி உத்தரவாதம் (SEG) மூலம் மின்கட்டணத்திற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் உபரி ஆற்றலுக்கான கட்டணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதை விட அதிக மின்சாரத்தை நீங்கள் உற்பத்தி செய்தால் (உங்கள் சோலார் பேனல் அமைப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு). 3. பல்வேறு பயன்பாடுகள் சூரிய சக்தியை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் மின்சாரம் (ஒளிமின்னழுத்தம்) அல்லது வெப்பம் (சூரிய வெப்ப) உருவாக்க முடியும். சூரிய ஆற்றலை ஆற்றல் கிரிட் அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் தயாரிக்கவும், குறைந்த சுத்தமான நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் தண்ணீரை வடிகட்டவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இயக்கவும் பயன்படுத்தலாம். கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் சூரிய சக்தியை ஒருங்கிணைக்க முடியும். நீண்ட காலத்திற்கு முன்பு ஷார்ப் வெளிப்படையான சூரிய ஆற்றல் ஜன்னல்களை அறிமுகப்படுத்தியது. 4. குறைந்த பராமரிப்பு செலவுகள் சூரிய ஆற்றல் அமைப்புகளுக்கு பொதுவாக அதிக பராமரிப்பு தேவையில்லை. நீங்கள் அவற்றை ஒப்பீட்டளவில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எனவே வருடத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்வது வேலையைச் செய்யும். சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் பிரத்யேக துப்புரவு நிறுவனங்களை நம்பலாம், அவை சுமார் £25-£35 வரை இந்தச் சேவையை வழங்குகின்றன. மிகவும் நம்பகமான சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் 20-25 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறார்கள். மேலும், நகரும் பாகங்கள் இல்லாததால், தேய்மானம் இல்லை. இன்வெர்ட்டர் பொதுவாக 5-10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டிய ஒரே பகுதியாகும், ஏனெனில் இது சூரிய சக்தியை மின்சாரம் மற்றும் வெப்பமாக மாற்றுவதற்கு (சோலார் பி.வி. வெர்சஸ் சோலார் தெர்மல்) தொடர்ந்து வேலை செய்கிறது. இன்வெர்ட்டரைத் தவிர, உங்கள் சூரிய சக்தி அமைப்பு அதிகபட்ச செயல்திறனில் இயங்குவதை உறுதிசெய்ய கேபிள்களுக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, சோலார் சிஸ்டத்தின் ஆரம்ப செலவை உள்ளடக்கிய பிறகு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு மிகக் குறைந்த செலவை எதிர்பார்க்கலாம். 5. தொழில்நுட்ப வளர்ச்சி சூரிய சக்தி துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது மற்றும் எதிர்காலத்தில் மேம்பாடுகள் தீவிரமடையும். குவாண்டம் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகள் சோலார் பேனல்களின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் சூரிய சக்தி அமைப்புகளின் மின் உள்ளீட்டை இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கலாம். சூரிய ஆற்றலின் தீமைகள் 1. செலவு ஒரு சோலார் சிஸ்டத்தை வாங்குவதற்கான ஆரம்ப செலவு மிகவும் அதிகமாக உள்ளது. சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர், பேட்டரிகள், வயரிங் மற்றும் நிறுவலுக்கு பணம் செலுத்துவது இதில் அடங்கும். ஆயினும்கூட, சூரிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, எனவே எதிர்காலத்தில் விலைகள் குறையும் என்று கருதுவது பாதுகாப்பானது. 2. வானிலை சார்ந்தது மேகமூட்டம் மற்றும் மழை நாட்களில் சூரிய சக்தியை இன்னும் சேகரிக்க முடியும் என்றாலும், சூரிய குடும்பத்தின் செயல்திறன் குறைகிறது. சோலார் பேனல்கள் சூரிய சக்தியை திறம்பட சேகரிக்க சூரிய ஒளியை சார்ந்துள்ளது. எனவே, சில மேகமூட்டமான, மழை நாட்கள் ஆற்றல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சூரிய சக்தியை சேகரிக்க முடியாது என்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம், இரவில் அல்லது குளிர்காலத்தில் வேலை செய்ய உங்கள் நீர் சூடாக்கும் தீர்வு தேவைப்பட்டால், வெப்ப இயக்கவியல் பேனல்கள் கருத்தில் கொள்ள ஒரு மாற்றாகும். 3. சூரிய ஆற்றல் சேமிப்பு விலை அதிகம் சூரிய சக்தியை இப்போதே பயன்படுத்த வேண்டும், அல்லது பெரிய பேட்டரிகளில் சேமிக்கலாம். ஆஃப்-தி-கிரிட் சோலார் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் இந்த பேட்டரிகள், பகலில் சார்ஜ் செய்யப்படலாம், இதனால் ஆற்றல் இரவில் பயன்படுத்தப்படுகிறது. நாள் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும், ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பகலில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதும், இரவில் கிரிட்டில் இருந்து ஆற்றலை எடுத்துக்கொள்வதும் சிறந்ததாகும் (உங்கள் கணினி கட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்). அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆற்றல் தேவை பொதுவாக பகலில் அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பெரும்பாலானவற்றைச் சந்திக்கலாம். 4. நிறைய இடத்தைப் பயன்படுத்துகிறது நீங்கள் எவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அவ்வளவு சூரிய ஒளியை நீங்கள் சேகரிக்க விரும்புவதால், உங்களுக்கு அதிகமான சோலார் பேனல்கள் தேவைப்படும். சோலார் PV பேனல்களுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது மற்றும் சில கூரைகள் நீங்கள் வைத்திருக்க விரும்பும் சோலார் பேனல்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் அளவுக்கு பெரியதாக இல்லை. உங்கள் முற்றத்தில் சில பேனல்களை நிறுவுவது ஒரு மாற்றாகும், ஆனால் அவை சூரிய ஒளியை அணுக வேண்டும். நீங்கள் விரும்பிய அனைத்து பேனல்களுக்கும் இடம் இல்லை என்றால், உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை இன்னும் பூர்த்தி செய்ய சிலவற்றை நிறுவுவதைத் தேர்வுசெய்யலாம். 5. மாசுபாட்டுடன் தொடர்புடையது மற்ற ஆற்றல் ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது சூரிய ஆற்றல் அமைப்புகளுடன் தொடர்புடைய மாசுபாடு மிகவும் குறைவாக இருந்தாலும், சூரிய ஆற்றல் மாசுபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்துடன் சூரிய மண்டலங்களின் போக்குவரத்து மற்றும் நிறுவல் தொடர்புடையது. சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகளின் உற்பத்தி செயல்முறையின் போது சில நச்சு பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை சுற்றுச்சூழலை மறைமுகமாக பாதிக்கலாம். ஆயினும்கூட, சூரிய ஆற்றல் மற்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை விட மிகக் குறைவாகவே மாசுபடுத்துகிறது. https://tamil.hyliess.com/தொழில்-அறிவு/சூரிய-ஆற்றலின்-நன்மை-தீமைகள்
  4. திட்டமிட்டு செய்வது. பிறகு இயல்பாக வருகிறது என்று பத்திரிகையாளரை வைத்து சொல்ல வைப்பது. வாக்களித்த மக்களுக்கு ஜனநாயகம் என்றால் இப்படித்தான் என நினைத்தார்களோ என்னவோ??
  5. டெஸ்ட் வரிசையில் சிறிலங்கா அணி 3 ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
  6. அநுரவின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் - தமிழில் பேசிய கிழக்கு ஆளுநர்!
  7. //பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள் அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்// இந்த கருத்து இத்திரிக்குள் ஏன் வர வேண்டும்???
  8. ஜே வி பியினர் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களின் போது அவர்களோடு இருந்தவர் என்பதை எளிதில் மறைக்க பார்க்கிறீர்கள். தமிழ் மக்கள் மீது 75 வருடங்களாக சிங்கள தலைவர்கள் வெற்று வார்த்தைகளை இட்டதையும் மறப்பதற்கில்லை. அநுர நல்லது செய்தால் நல்லது. அதற்காக அவரின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பது எவ்வளவு நன்மை பயக்கும் என தெரியவில்லை.
  9. சரி சரி. உங்களின் செந்தோழனுக்கு தமிழில் பாட்டுக்கூடி வந்து விட்டது. கேட்டு மகிழுங்கள். தோழர் அநூரவை வாழ்த்தி பாடிய வாழ்த்துப்பாடல் வரிகள் & குரல் :- ஹனூஸ் https://www.facebook.com/watch?v=499515166283447 அவர் எழுத முதலே முந்திக்கொட்டைகளாக வருபவர்களை தான் சொன்னேன். நீங்கள் இப்போது வரை இல்லை என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.😁
  10. இந்தியாவில் ஏராளமான ஈரானிய, ஆபிரிக்க மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இங்கும் அந்நிலை வர வேண்டும்.
  11. இருக்கும் எனில் ஏன் ரஞ்சித் எழுதுவதற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறீர்கள். அநுர கட்சியில் இருக்கும் போதே மேற்படி சம்பவங்கள் நடந்தன. அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???
  12. உங்களுக்கு இறந்த காலம் , நிகழ்காலம் பற்றி தெரியும் என நினைக்கிறேன். ரஞ்சித் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எழுதுகிறார். மேலும் அநுரவும் அக்கட்சியில் ஜேவிபியின் அட்டூளியங்களை பார்த்த வண்ணம் இருந்தவர் தான். அவர் நல்லவரா என காலம் தான் சொல்லும். சந்திரிக்காவும் வந்தவுடன் முந்திரிக்கொட்டையாக எழுதியவர்களும் உள்ளார்கள். இறுதியில் அவர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிவர். ஆகவே அநுர என்ன செய்ய போகிறார் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். இனவாதிகளின் வரிசையில் முன்னுக்கு இருப்பவர் இவர் தான். அதிஸ்ட வசமாக அநுரவுடன் இவர் இல்லை என்பது ஒரு மன ஆறுதல்.
  13. அனுரவின் அதிரடி மாற்றங்களும்! வரப்போகும் மாவீரர் தினமும்!
  14. எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்; சிவகரன் Digital News Team மன்னார் நிருபர் “கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது” என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன் கிழமை(12) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது. ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் பிரிந்து நின்றால் எவ்வாறான விளைவுகளை அவர்கள் எதிர் நோக்கப் போகின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்குள்ளே உள்ள முரண்பாடுகள் எவ்வாறான விளைவுகளை தமிழ் மக்களினுடைய இருப்புக்கு எதிர் காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இணக்க அரசியலில் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி சின்னா பின்னமாக சிதைந்து காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியும், வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், மட்டக்களப்பில் பிள்ளையான் அவர்களும் முதன்மை இடங்களை பெறக் கூடிய அளவுக்கு மக்கள் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு ஆதரவளித்து இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்க விடயமாகவே காணப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் கடந்த 2010 இல் இருந்து 2015 வரையான 7 தேர்தல்களில் இல்லை. மக்கள் சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான இனக்க அரசியல் இவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைமைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பாடம் கற்பதாக தெரியவில்லை. இன்னும் தங்களுக்கிடையில் போட்டிகளையும் பிரச்சனைகளையும் அவர்கள் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர். இந்த நிலைமையில் நோக்குகின்ற போது மாற்று அணியும் ஒரு வலுவான அணியாக எதிர் கொள்ளவில்லை. ஏனெனில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருப்பார்கள் எனின் ஒன்றில் விக்ணேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு அல்லது கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து இருக்க வேண்டும். அவர்களுக்கும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கவில்லை. அபிவிருத்திக்கும், இனக்க அரசியலுக்குமே கூட்டமைப்பு காட்டிய அரசியல் பாதையிலே மக்கள் போயிருக்கின்ற நிலைமைகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படா விட்டால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ச்சியாக அரசாங்கம் மிக இலகுவான முறையில் மேற்கொள்வதற்கு வழி வகை ஏற்படும். ஆகவே எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவர்கள் அல்லது ஒரு சக்தி வாய்ந்தவர்கள், அறிவு விஞ்ஞான பூர்வமாக உரையாடக் கூடியவர், இராஜ தந்திர அணுகுமுறைகளை பின் பற்றக் கூடியவர்கள் பெருவாரியாக இல்லை. மிகச் சாதாரணமானவர்களையே மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்தானது அல்லது ஜனநாயகம் என்பது கும்பலின் ஆட்சி என்கின்ற லெனினுடைய கூற்றையும், அரசியல் என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் என்பதையும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியையும், சிறையில் இருப்பவர்களை போதைப் பொருள் வியாபாரிகளையும் மண் கடத்தல் காரர்களையும், சாதாரணமாணவர்களையும் பயனற்றவர்களையும் இந்த தேர்தலிலே பலர் நாடாளுமன்றம் சென்றுள்ள ஒரு அபத்தமான நிலை காணப்படுகிறது. மாற்று அணி என்பது அவர்கள் ஒரு வாக்கு திரட்சியை ஏற்படுத்தவில்லை. வெறுமனே ஒரு கூட்டமைப்புக்கு எதிரான கோஸமாக அவர்கள் பின் பற்றினார்களோ தவிர ஒரு எதிர்ப்பு நிலையை வாக்கு திரட்சியாக மாற்றி அந்த எதிர்ப்பு மனே நிலையை வாக்கு சக்தியாக தங்கள் மீதான ஒரு கவர்ச்சிக்கு ஏற்படுத்தவில்லை. அவர்களுடைய பேச்சை மக்கள் கேட்டார்களே தவிர ரசிக்கவில்லை. ரசிக்காத வரைக்கும் அது வாக்காக மாறக்கூடிய ஒரு நிலைமை காணப்படாது. ஆகவே அவர்களும் பின்னடைவைச் சந்திக்க கூடிய இந்த நிலைமையில் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு மாறாக இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உள்ளே பல்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன. சுமந்திரன் அவர்களும் சிறிதரன் அவர்களும் பகிரங்கமாகவே கட்சியினுடைய தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கின்ற போக்கு காணப்படுகிறது. இதற்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது.நாங்கள் கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது. மாவை சேனாதிராஜா அவர்களினுடைய தலைமைத்துவ பலவீனமே இவ்வாறான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைவராக 2014 ஆம் ஆண்டு வந்த காலத்திலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவராகவோ, ஒரு ஆளுமை செலுத்த கூடியவராகவும் இல்லாமல் சுமந்திரன் அவர்களில் தங்கி வாழ்ந்ததன் விளைவை மாவை சேனாதிராஜா அவர்கள் இன்றைக்கு எதிர் நோக்குகின்றனர். பலரை அவர் விடுவித்தும் பலரை காணா முகமாக இருந்து அறம் மாவை சேனாதிராஜா அவர்களையும் அடித்திருக்கின்றது. எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை அழித்து ஒழித்து இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளையும் அழித்ததினால் ‘உள் வினை உருத்தி வந்துட்டும்’ என்பது போல அறம் எவ்வாறு அளித்ததோ அதே நிலைமை மாவை சேனாதிராசா விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் வந்திருக்கின்றது. புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்கு அரசியலையும் மேற்கொண்ட சுமந்திரன் போன்றவர்களை கட்டுப்படுத்தாமலும், கட்சிக்குள் சர்வாதிகார நிலைமையை விட்டதும் சேனாதிராசா அவருடைய பங்கு.ஏனெனில் இந்த தான்தோன்றித் தனங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படவில்லை. ஆனால் சுமந்திரன் அவர்களும் சிறீதரன் அவர்களும் பின் கதவால் கட்சியை கைப்பற்ற முனைவது ஏற்புடையது அன்று. ஆனால் அ கைப்பற்றி விடுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஏனெனில் கட்சியினுடைய பொதுக்குழு என்பது 150 அங்கத்தவர்களை கொண்டது. மத்திய குழு என்பது 50 அங்கத்தவர்களை கொண்டது. இந்த பொதுக்குழுவின் ஒப்புதலின்றி கட்சியை கைப்பற்றி விட முடியுமா? என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அப்படியானால் அண்ணா திமுகவை சசிகலா அல்லது பன்னீர் செல்வம் அணி போன்றது போல் இவர்களும் பொதுக்குழு அங்கத்தவர்களை விலைக்கு வாங்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம். அவர்கள் அதிலும் வல்லவர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் கூட இந்த மத்திய குழு 50 அங்கத்தவர்களில் சம்பந்தன் அவர்களிடம் ஏன் போய் தேசியப் பட்டியல் ஆசனத்தை கேட்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் மத்திய குழுவின் தெரிவு பதவி வழி அங்கத்தவர்கள் 22 பேர்களும், மாவட்டத்துக்கான செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரூமாக மொத்தம் 40 ஆங்கத்தவர்கள். மேலும் 10 அங்கத்தவர்கள் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக நியமிக்கப்படுவது. இந்த 50 அங்கத்தவர்களுக்குள் சம்பந்தன் அவர்கள் இல்லை. ஆகையினால் எப்படி அவர் தமிழரசுக் கட்சியில் அதிகாரம் செலுத்த முடியும்? 2014 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தன் அவர்கள் சட்டப்படி தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கத்தவர் இல்லை. ஆனால் மத்திய குழுவின் அரசியல் குழுவுக்கு தலைவராக இருக்கின்றார். அது மாத்திரமன்றி தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் 6 துணைச் செயலாளர்கள் தான் இருந்து விட முடியும். ஆனால் இன்றைக்கு 15க்கும் மேற்பட்ட துணைச் செயலாளர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் அவர்கள் வகிக்கின்ற துணை பொதுச் செயலாளர் பதவி கூட சட்ட விரோதமானது. யாப்புக்கு முரணானது. சிவஞானம் அவர்கள் வகிக்கின்ற சிரேஸ்ட துணைத் தலைவர் பதவி கூட சட்ட விரோதமானது. அதிலேயே ஒரு சிரேஸ்ட உப தலைவரும் ஒரு துணை பொதுச் செயலாளருமே யாப்பில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் சேனாதிராசா அவர்களுக்கு இந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி கடிதம் அனுப்பி இருந்தேன். யாப்புக்கு மாறான தெரிவுகள் என்றோ ஒருநாள் பிரச்சினையைக் கொடுக்கும் என்று. அப்போது பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 2016 ஜனவரி மாதம் 28ஆம் திகதி இன்னும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தேன். ஊடகங்களில் கூட வந்திருந்தது. வழிப்போக்கர்களிடம் கட்சி பறிபோகின்ற நிலைமை ஏற்படும். சுமந்திரன் அவர்களால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் ஆபத்து ஏற்படும். இந்த நிலைமைகளை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. தான் தோன்றித் தனமாகச் செயற்படும் சுமந்திரனை கட்டுப்படுத்தாததன் விளைவு இன்றைக்கு மாவை சேனாதிராசாவை களைக்க வேண்டும் என்ற நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டார்கள். இது அரசியல் இது ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல. ஆனால் சுமந்திரன் அவர்கள் போக்கு சில வேளைகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனெனில் சம்பந்தன் அவர்களும் துரைராஜசிங்கம் அவர்களும் அவர்களுடைய அணியைச் சேர்ந்தவர்கள். பொதுச்செயலாளரின் ஒப்புதலின்றி இந்த கட்சியில் ஏனைய எந்த விடையங்களையும் முன்னெடுக்க முடியாது. ஆகவே இந்தக் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு பொதுச்செயலாளராக இருக்கிற துரைராஜசிங்கத்தை பயன்படுத்தி கட்சியை இலாபகரமாக கைப்பற்றக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம். யார் கைப்பற்றுகிறார்கள்? யார் தலைவராக இருக்கிறார்கள்? என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமல்ல. தமிழ் தேசியத்தை சிதைத்து கூட்டமைப்பை உடைத்து சின்னா பின்னமாக்குகின்ற இந்த வேலையை இவர்கள் செய்யப் போகிறார்கள்.ஏனெனில் இவர்கள் வழிப்போக்கர்கள். இவர்கள் தமிழ் தேசியத்தின் அடி நாதம் தெரியாதவர்கள். பின் கதவால் கட்சிக்கு வந்தவர்கள். கட்சியினுடைய ஒரு முறைமைகளுக்கூடாக வந்தவர்கள் அல்ல. இந்த இனத்தையும் அழித்து , இவர்களுடைய தலைமைத்துவத்தை மக்களோ அல்லது வாக்காளர்கள் அல்லது தொண்டர்கள், அங்கத்தவர்களும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்ற நிலைமை தெரியவில்லை. ஏனெனில் இன்றைய தமிழரசுக் கட்சி என்பது ஒரு முழுமையான சட்ட முரண்களுக்குள் காணப்படுகின்றது. அந்த சட்ட முரண்களில் இருந்து எவ்வாறு தண்னை விடுவித்துக் கொள்ளப் போகிறது? என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு வருகின்ற சில நாட்களிலேயே விடை கிடைக்கும் என நம்புகின்றேன். எது எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒன்றித்து ஐக்கியத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். இவ்வாறான காட்டிக் கொடுப்புக்கள் , உட்கட்சிப் பிரச்சனைகள் யாவற்றையும் துறந்து மறந்து ஐக்கியத் தோடு செயலாற்ற முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/61901
  15. டக்ளஸ் யாழ் பல்கலைகழகத்தில் படித்தவர் என நினைக்கிறேன்.
  16. இலங்கை குறித்து மூடிஸ் வௌியிட்ட அறிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு மூடிஸ் இதனை குறிப்பிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது, இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=193568
  17. அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார். “தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் ஏனையோரினாலும், இந்;த கருத்து, வடமாகாண மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என்று விமர்சிக்கப்பட்டது. எனினும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கள் இனவாதத் தூண்டுதலானது என்ற கருத்தை மறுத்தார். “தோழர் அநுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல” என சுமந்திரன் கூறினார். “உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார். எனவே, இந்த விடயத்தில் எங்களுக்கு வேறுபட்ட உணர்வுகள் இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, திஸாநாயக்கவின் கருத்துக்களை விமர்சித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,வடக்கு தமிழ் மக்களிடமும் தெற்கிலும் உள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திஸாநாயக்கவிடம் அழைப்பு விடுத்திருந்தார். https://malainaadu.lk/Anurakumaras-manifestation-is-not-a-threat-:-Sumandran-protects
  18. கைது செய்வதில் தடுமாறும் தடுமாறும் அனுர

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.