Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்? ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்..... பின்னர்.. சீடர்களில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்! துறவி ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார் கள்! நீ சொல்ல வேண்டியதை அவர் களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே! ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது *அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது!* எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்! ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்து வார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்! துறவி தொடர்ந்து கூறுகிறார்..... இதைவிடவும் *அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!* துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........ அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள். *அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்....
  2. கு.மா அண்ணா, புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிந்தி வாழ்த்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும். என்ன மனிசனைய்யா என்ற ஒரு அசரீதி கேட்டது.😂
  3. பா.ஜா.காவை (முதலாவது காணொளி) வைச்சு செய்கிறார் முக்தார். முக்தார் தீவிர திமுக ஆள் போல பேசுகிறார்.
  4. சவுக்கின் பேட்டி நன்றாக இருந்ததே. முக்தார் சவுக்கை உண்டு இல்லை என்றாக்கி விட்டார்.🙂
  5. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. தமிழுக்கு திருவள்ளுவரைவிட கலைஞர் உயர்ந்தவரா?
  7. பாடல்: Private Party படம்: டொன் பாடியவர்கள்: அனிருத், ஜொனிரா காந்தி இசை: அனிருத் வரிகள்: சிவகார்த்திகேயன்
  8. வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர். இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு: 1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன்.
  9. Our world's on fire... again. This was the NASA Earth Observatory's image of the day on July 15, showing the heatwaves scorching Europe, North Africa, the Middle East, and Asia. Temperatures reached over 40 degrees Celsius (104 degrees Fahrenheit) in places, and many long-standing records were broken. The map shows the surface air temperature on July 13, and was made by combining satellite observations and global modelling. : NASA Earth Observatory images by Joshua Stevens
  10. மாறுவேடப் போட்டியில் திருடன் வேடம் போட்ட மாணவன் சந்தேகமேயில்லை நிச்சயம் முதற் பரிசு பெற்றிருப்பான்!
  11. பட்டினத்தார் சொன்னது உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா? இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா? பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள். நான்... நான்... நான்... நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் வீடு கட்டினேன். நான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன். நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும். உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்.
  12. Jack Harlow - First Class Mm I been a (G), throw up the (L) Sex in the (A-M), uh-huh (O-R-O-U-S, yeah) And I can put you in (first class, up in the sky) I can put you in (first class, up in the, up-up in the) I been a (G), throw up the (L) Sex in the (A-M), uh-huh (O-R-O-U-S, yeah) And I can put you in (first class, up in the sky), mm, mm I can put you in (first class, up in the, up-up in the) I can see the whole city from this balcony Back in 2019, I was outside freely But now they got it out for me I don't care what frat that you was in You can't alpha me, keep dreamin' Pineapple juice, I give her sweet, sweet, sweet (semen) I know what they like, so I just keep cheesin' Hard drive full of heat seekin' Tryna come the same day as Jack? Rethink it You don't need Givenchy, you need Jesus Why do y'all sleep on me? I need reasons Uh, I got plaques in the mail, peak season Shout out to my UPS workers makin' sure I receive 'em You can do it too, believe it I been a (G), throw up the (L) Sex in the (A-M), uh-huh (O-R-O-U-S, yeah) And I can put you in (first class, up in the sky), mm, mm I can put you in (first class, up in the, up-up in the) Huh, yes, I am They say, "You a superstar now, " damn, I guess I am You might be the man, well, that's unless I am Okay, I'll confess I am Go ahead and get undressed, I am Okay cool, you on Sunset? (I am) I'm 'bout to slide, okay, I'm outside, okay This lifestyle don't got many downsides 'Cept for the lack of time I get 'round my Family, makin' sure they never downsize I got visions of my mom sayin', "Wait, this house mine?" Can't lie, I'm on Angus Cloud nine I got 'em on the bandwagon now, 'bout time I ain't even got no downtime Every time I speak, she say, "Yeah, that sounds fine" I been a (G), throw up the (L) Sex in the (A-M), uh-huh (O-R-O-U-S, yeah) And I can put you in (first class, up in the sky) I can put you in (first class, up in the, up-up in the) I been a (G), throw up the (L) Sex in the (A-M), uh-huh (O-R-O-U-S, yeah) And I can put you in (first class, up in the sky), mm, mm I can put you in (first class) Source: LyricFind
  13. ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்: உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்? ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது? கிறிஸ்டியானோ ரொனால்டோ: என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள். நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான். பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.
  14. பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.