Everything posted by கிருபன்
-
இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல்
இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல் 26 Jan, 2025 | 11:54 AM ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதi செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனியர்கள் காசாவின் வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆர்பெல் யெகுட் உயிருடன் இருக்கின்றார் அவர் விடுதலை செய்யபப்படுவார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆர்பெல் யாகுட் 2023 ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.கிபுட்ஸ் நிர் ஒஸ்ஸில் மேற்கொண்ட தாக்குதலின் போது ஹமாஸ் இவரை பணயக்கைதியாக பிடித்திருந்தது.இந்த தாக்குதலின் போது அவரது சகோதாரர் கொல்லப்பட்டார்.இந்த யுவதியின் ஆண்நண்பர் மற்றும் உறவினர்களும் கடத்தப்பட்டனர், அவர்களில் சிலர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். ஆர்பெல் யாகுட் ஒரு விண்வெளி ஆர்வலர். https://www.virakesari.lk/article/204919
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். https://www.hirunews.lk/tamil/394867/அவுஸ்திரேலிய-ஓபன்-டென்னிஸ்-தொடரின்-சாம்பியன்-பட்டத்தை-சுவீகரித்தார்-ஜானிக்-சினெர்
-
அரசாங்க ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி அநுர
அரசாங்க ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி அநுர பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரச சேவையை வலுப்படுத்துவது மற்றும் அரச சேவைக்கான செலவை நிர்வகிப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவையில் காணப்படும் அத்தியாவசியமான 30,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகளை இவ்வருட பாதீட்டுத் திட்டத்தில் முன்வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் நேர்முகப் பரீட்சைகள் தாமதமாகக்கூடிய வெற்றிடங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த அரச சேவை மூலம் மனிதவளத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், “City Branding” முறையை பயன்படுத்தி அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. https://www.hirunews.lk/tamil/394857/அரசாங்க-ஊழியர்களுக்கு-நியாயமான-அடிப்படைச்-சம்பள-அதிகரிப்பு-ஜனாதிபதி-அநுர
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு January 26, 2025 12:23 pm இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று யாழில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையயில் தெரிவித்திருந்தார். இந்நிலையிலையே குறித்த சந்திப்பு யாழ். நல்லூரில் உள்ள சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்குபற்றியிருந்தார். புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலை இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் நடாத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உத்ததேசித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தை சந்தித்து நேரில் கையளித்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழருடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக, அரசாங்கத்திடம் வினாவுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த பிரதிநிதிகளாலும், ஜனாதிபதியாலும் தமிழருடைய இனப்பிரச்சினை விடயமானது, புதிய அரசியலமைப்பினூடாவே கையாளப்படும் என்ற கருத்தை உத்தியோகபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தவகையில் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் மூன்று தமிழ் கட்சிகளுக்கும் வழங்கிய ஏகோபித்த ஆணையின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் சமஷ்டித் தீர்வை வலியுறுத்திய புதிய அரசியலமைப்புக்கான பொது யோசனையொன்றை முன்வைப்பதற்கும், அரசாங்கம் உத்தேசித்துள்ள ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை தமிழ்த் தரப்பாக ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நிராகரிப்பதற்குமான முயற்சியில் தங்களுடைய கட்சியின் ஒத்துழைப்பும் மிக அவசியமானதாகும். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தலைப்பட்சமாக தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதான பலத்தில் அரசாங்கம் உள்ள நிலையில், அரசியல் தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படவில்லையாயின், 19 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் தொடர்புடைய அறுதிப்பெரும்பான்மை நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். பாராளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை பாராளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது. இவற்றினடிப்படையில் நாளை (27) மாலை 4. மணிக்கு, கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். குறித்த கலந்துரையாடலில் தங்கள் கட்சியும் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். திட்டமிடப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் தொடர்பில் மாற்றங்கள் ஏதேனும் தேவைப்படின், மூன்று கட்சிகளுக்கும் பொருத்தமான வேறொரு திகதி மற்றும் நேரத்தினையும் கூட்டாக இணைந்து தீர்மானிக்க முடியும் என்பதையும் தங்களின் கவனத்துக்கு முன்வைக்கின்றோம் என்றுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=199315
-
ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு
ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு January 26, 2025 06:20 pm யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி இன்று (26) மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரள்வு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=199334
-
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார். இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக நோய்க்கு அமைவான கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும். நோயாளர்களை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. http://www.samakalam.com/ஜனாதிபதி-நிதியம்-தொடர்பி/
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்புகள் குறைக்கப்படும்போது கூட சாதரண குடிமகனான சுமந்திரனுக்கு சிங்கள்ப்படைகள் பாதுகாப்பு வழங்குவதிலிருந்து சுமந்திரன் சிங்கள கைக்கூலிமுகம் வெளிச்சமாகியுள்ளது https://www.thaarakam.com/news/adf981e3-ee2e-46e6-aef1-ef3bade7aeb7
-
என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா? - நிலாந்தன்.
என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா? நிலாந்தன். adminJanuary 26, 2025 தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை. விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துக்கள் சரியா பிழையா என்பதனை விமான நிலைய நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதேசமயம் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ முரண்பாடு பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் இங்கே இக்கட்டுரையின் குவிமையம். உட்கட்சிப் பூசல் நாடாளுமன்றம்வரை வந்துவிட்டது. ஏற்கனவே அது நீதிமன்றம்வரை சென்றுவிட்டது. இனி அதை ஐநா மனித உரிமைகள் உரிமைகள் சபைக்கும் எடுத்துச் செல்லலாமா? அல்லது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாமா? சிறீலங்காவின் இன அழிப்புச் சட்டங்களை நிறைவேற்றிய ஒரு நாடாளுமன்றத்தில் சிறீதரன் தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக முறைப்பாடு செய்கிறார். எந்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தரப்பு நீதி கேட்டுப் போராடுகின்றதோ, அதே நாடாளுமன்றத்தில் கட்சியின் உள்முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றது. தமிழ்த்தேசிய நோக்குநிலையில் இது ஒரு வீழ்ச்சி. இது முதலாவது சம்பவம். அடுத்த சம்பவம், சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது. கிளிநொச்சியில், கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் இயக்கத்தவர்கள் சிலர் கனகபுரம் துயிலும் இல்லத்தை தாமும் நிர்வகிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்குபவர் இரண்டு கண்களையும் இழந்தவர். அத்துயிலுமில்லம் கடந்த 15 ஆண்டுகளாக சிறீதரனுக்கு விசுவாசமானவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இரண்டு கண்களையும் இழந்த அந்த முன்னாள் இயக்கத்தவரும் உட்பட அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும் சிறீதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே அங்கு பலமான வாக்குவாதம் நடந்தது. முடிவில் பொலீசார் தலையிட்டு இரண்டு பகுதியையும் சமாதானப்படுத்தினார்கள். இதில் சம்பந்தப்படும் இரண்டு தரப்புகளுமே போரால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளிலுமே புனர் வாழ்வு பெற்ற போராளிகள் உண்டு. துயிலுமில்லங்களை ஒரு பொதுவான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பு கேட்கின்றது. இன்னொரு தரப்பு அதை ஏற்கனவே நிர்வாகித்தவர்களே தொடர்ந்தும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதில் யார் சொல்வது சரி என்று விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பொலீசார் தலையிட வேண்டிவந்தது. எந்தப் போலீஸ் கட்டமைப்பை இனஅழிப்பை முன்னெடுத்த சீறீலங்கா படைக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக தமிழ்த் தேசியவாதிகள் வர்ணிக்கின்றார்களோ, அதே போலிஸ் கட்டமைப்பு ஒரு துயிலுமில்ல விவகாரத்தில் தலையிட்டு இருதரப்பையும் சமரசப்படுத்த வேண்டிய நிலை. இது இரண்டாவது சம்பவம். துயிலுமில்லங்களின் விவகாரத்தில் மட்டுமல்ல,ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்களின் விடயத்திலும் ஒரு மோதல் ஏற்பட்டபொழுது அவர்கள் பொலீசாரிடம் சென்று முறையீடு செய்தார்கள். யாரிடம் எதற்காக முறையீடு செய்வது என்பது தொடர்பாக தெளிவான அரசியல் பார்வை இல்லாத ஒரு சூழல். மேற்கண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் மோதல் யாருக்கு இடையில் என்று பார்த்தால், தமிழ்த் தரப்புக்களுக்கிடையில்தான். யாரிடம் போய் முறையிடுகிறார்கள் என்று பார்த்தால்,யாருக்கு எதிராக நீதியைக் கேட்கின்றார்களோ அவர்களிடம்தான். தமிழ் அரசியல் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? தமிழ் அரசியல் என்று சொல்வதை விடவும் தமிழ்ச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என்று கேட்பதுதான் அதிகம் பொருத்தமானது. ஏனென்றால், கனடாவில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு அணிகள் மோதிக்கொண்ட காட்சி காணொளியில் வெளிவந்தது. அவர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள்? அதில் முடிவில் போலீசார் தலையிடுகிறார்கள். அது கனேடியப் பொலீஸ். ஆனால் அந்த விவகாரம் ஒரு கோவில் சம்பந்தப்பட்ட,கடவுள் சம்பந்தப்பட்ட விவகாரம். கடவுளின் சன்னிதானத்திலேயே ஒற்றுமையாக முடிவுகளை எடுக்கமுடியாத ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறி வருகிறார்கள். கனடாவில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பெரிய ஆலயங்களுக்கு ஏதோ ஒரு வழக்கு இருக்கின்றது. அண்மையில் சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு நினைவையிட்டு நடந்த ஒரு வைபவத்தில்,உரை நிகழ்த்திய வட மாகாண சபையின் ஆளுநர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்…”ஆலயங்கள் இப்பொழுது சமூக சேவைக்கு செலவழிப்பதை விடவும் வழக்குகளுக்கே அதிகமாகச் செலவழிக்கின்றன.” கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் கோவில் அறக்கட்டளைகளில் பிணக்குகளும் வழக்குகளும் உண்டு. கொழும்பில் வசிக்கும் ஒரு பேராசிரியர் சட்டம் பயிலும் தனது மகனிடம் சொன்னாராம், நீ கோவில் வழக்குகளை மட்டும் எடுத்தாலே போதும் வாழ்க்கை முழுவதும் உனக்கு உழைப்பு இருக்கும் என்று. அந்தளவுக்கு கோவில்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இந்துக் கோவில்கள் மட்டுமல்ல நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய திருச்சபைகளில் ஒன்று என்று வர்ணிக்கப்படுகின்ற தென்னிந்தியத் திருச்சபையும் நீதிமன்றத்தில் நிற்கின்றது. கட்சியும் நீதிமன்றத்தில், கோவில்களும் நீதிமன்றத்தில், திருச்சபைகளும் நீதிமன்றத்தில்,பழைய மாணவர் சங்கங்களும் நீதிமன்றத்தில், ஏன் தமிழ் மக்கள் தங்களுக்கு இடையிலான பிணக்கைத் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்?அல்லது அவ்வாறான பிணக்குகளைத் தீர்த்து வைக்கக்கூடிய மூத்த சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், வழிகாட்டிகள், முன்னோடிகள் தமிழ்மக்கள் மத்தியில் இல்லையா ? இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையுமே “மீம்ஸ்” ஆக்கிவிடும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. சமூகத்தில் யார் துருத்திக்கொண்டு தெரிகிறார்களோ,யார் சமூகப்பணி செய்கிறார்களோ, யார் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க இறந்த காலத்தைக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களை அடுத்த தலைமுறை மதிப்பது குறைந்து வருகிறது. மூத்த, முன்னோடிகளாய் இருக்கின்ற, அனுபவஸ்தர்களை மதிக்காத ஒரு சமூகம் எப்படி உருப்படும்? ஊடகங்களுக்குச் செய்திப் பசி. ஆனால் அந்த பசிக்கு தீனியாகக் கிடைத்திருப்பது தேசம். அந்த பசிக்கு இரையாகிக் கொண்டிருப்பது தேசத் திரட்சி. ஒருபகுதி ஊடகங்கள் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள உள் முரண்பாடுகளையும் அகமுரண்பாடுகளையும் விடுப்பாக்கி, தமது உழைப்பைப் பெருக்கப் பார்க்கின்றன. கேட்டால் “ஜனநாயகம், நடுநிலைமை, ஊடக தர்மம் ” என்றெல்லாம் கூறுகிறார்கள். எல்லா ஊடகங்களுக்கும் தர்மம் இருக்கிறதோ இல்லையோ அஜெண்டா இருக்கும். அது ஒரு உழைப்புக்கான அஜெண்டா. சிலசமயம் அந்த அஜெண்டாவுக்குப் பின் கட்சிகள் இருக்கலாம். கட்சிப் பிரமுகர்கள் இருக்கலாம். வேறு தரப்புகளும் இருக்கலாம். அஜெண்டா இல்லாத ஊடகங்கள் கிடையாது. குறைந்தபட்சம் “வியூவர்”களின் தொகையைக் கூட்டவேண்டும் என்ற அஜெண்டாவாவது இருக்கும். ஆனால் இந்த எந்த ஒரு அஜெண்டாவும் தேசத்தைத் திரட்டும் அரசியலுக்கு எதிரானது. தேசத்தை திரட்டவேண்டும் என்று உழைக்கும் ஊடகங்கள் அதை நோக்கித்தான் நேர்காணல்களை எடுக்கும்; கருத்துக்களை உருவாக்கும். யுடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளிக்குள் ஊடக தர்மம், தொழில்சார் திறன்கள் எல்லாமே அழிந்து போகின்றன. நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க ஆயர் டெஸ்மண்ட் டூடூ கூறுவதுபோல ஒடுக்கும் தரப்புக்கும் ஒடுக்கப்படும் தரப்புக்கும் இடையில் நடுநிலை காப்பது என்பது ஒடுக்குமுறைக்குச் சேவகம் செய்வதே. தேசத் திரட்சியைப் பாதுகாப்பதா?அல்லது டொலர்களுக்காகத் தேசத் திரட்சியைக் குலைப்பதா? இவ்வாறாக,தேசத் திரட்சிக்கு வழிகாட்டாத ஊடகங்களின் தொகை பெருகிக்கொண்டுவரும் ஒரு சமூகம், மூத்தவர்களை, அனுபவஸ்தர்களை, சமூகப் பெரியார்களை மதியாத ஒரு சமூகம், தனக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கெல்லாம் நீதிமன்றத்திற்குப் போகும் ஒரு சமூகம், தன் கட்சிக்காரருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்யும் ஒரு சமூகம், இனஅழிப்புக்கு எதிராக நீதியைப் பெறுவதற்காக ஒன்றுதிரண்டு போராட முடியுமா? ஒருபுறம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை. மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம்,சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படுகிறார்கள். அல்லது வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக நிற்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு வழிகாட்டுகிறார்கள். இது இப்படியே போனால் தமிழ்ச் சமூகம் ஒரு தேசமாக நிமிர முடியுமா? ஒரு காலம் முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு சமூகம், பண்பாட்டுச் செழிப்பு மிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட ஒரு சமூகம், இப்பொழுது ஏன் இப்படித் தூர்ந்து போகின்றது? தன்னுடைய பற்களை தானே கிண்டி மணக்கும் ஒரு சமூகமாக எப்படி மாறியது ? தாயகமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இந்தச் சீரழிவைத் தடுக்க முன்வர வேண்டும். இந்தச் சீரழிவுக்குக் காரணங்கள், போரும் புலப்பெயர்ச்சியும் தலைமைத்துவ வெற்றிடமும் வெளிச் சக்திகளுமே. சமூகத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து போர் புரிந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள். அல்லது புலம் பெயர்ந்து ஓய்வுபெற்று விட்டார்கள். ஒரு சமூகத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்கள்தான் அந்த சமூகத்தை ஒரு தேசமாகத் திரட்டலாம். அப்படிப்பட்டவர்களின் தொகை குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் தொழிலாக எடுத்துக் கொள்பவர்கள், எல்லாவற்றிலும் லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அதன் விளைவுதான் மேற்கண்ட சீரழிவுகள் அனைத்தும். இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அவர்களை ஒரு சமூகமாக, ஆக்கசக்தி மிக்க ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் தலைவர்களும் சமூக உருவாக்கிகளும் கருத்துருவாகிகளும் ஊடகவியலாளர்களும் அறிவுஜீவிகளும் கலைஞர்களும்தான். தொழில்நுட்பத்தின் கைதியாகிவிட்ட ஒரு இளைய தலைமுறையை இலட்சியவாதிகளாக மாற்றவல்ல தலைவர்களும் முன்னுதாரணங்களும் வேண்டும். கட்சிகளால்,அமைப்புகளால்,ஊடகங்களால், ஆலயங்களால், திருச்சபைகளால், புலனாய்வுத் துறைகளால்,சிதறடிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தைக் கூட்டிக்கட்டவல்ல, முன்னுதாரணம் மிக்க தியாகிகள் முன்வர வேண்டும். தமிழ்மக்கள் ஆஞ்சநேயரைப்போல தமது பலம் எதுவென்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடக்கும் பலம் மிக்க ஒரு சமூகம். அதை அவர்களுக்கு எடுத்துக்கூறவல்ல முன்னுதாரணம்மிக்க ஆளுமைகள் வேண்டும். தன் பலம் எதுவென்று அறியாமல், ஒருவர் மற்றவரை நம்பாமல்,ஏன் தன்னைத்தானே நம்பாமல்,சீரழியும் ஒரு சமூகத்திற்கு வழிகாட்டவல்ல தியாகிகள் முன்வர வேண்டும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள ஆளுமைகள் இந்த விடயத்தில் அவசரமாக ஒன்று திரள வேண்டும். முன்னுதாரணங்களை உருவாக்க வேண்டும். https://www.nillanthan.com/7091/
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அரசாங்கத்தின் நிறுவனமாக இயக்குவதற்கு நடவடிக்கை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அரசாங்கத்தின் நிறுவனமாக இயக்குவதற்கு நடவடிக்கை! adminJanuary 26, 2025 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210369/
-
யாழில் இந்திய குடியரசு தினம்
யாழில் இந்திய குடியரசு தினம் adminJanuary 26, 2025 இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றியதுடன் நிகழ்வுகளும் இடம்பெற்றன யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2025/210339/
-
வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை adminJanuary 26, 2025 யாழ் . விசேட நிருபர் – ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், இந்த இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம், இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் சிந்திக்கும் ஒருவர். இன்று புலம்பெயர்ந்திருந்தாலும் எமது மண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டு இந்த மண்ணின் முன்னேற்றத்துக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர்ந்து சென்ற சிலர் எமது ஊரை மறந்து இருக்கின்றார்கள். ஆனால் சுந்தரலிங்கம் அவர்களைப் போன்றவர்களால் எமது மண் பெருமை கொள்கின்றது. இப்போது இசை விழாக்கள் அல்லது பொதுவான நிகழ்வுகளுக்கு ஆட்கள் வருவது மிகக் குறைவு. இன்று இந்த மண்டபம் நிறைந்திருப்பதைப்போல எதிர்காலத்திலும் இருக்கவேண்டும். இன்றைய இளையோரின் சிந்தனை திசை திருப்பப்படுகின்றது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது தெரியாது, தவறான வழிக்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள். வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுக்கு இரண்டு இடங்கள் தேவை எனக் கேட்டார்கள். ஏன் இரண்டு இடம் தேவை என அவர்களிடம் நான் கேட்டேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவை எனச் சொன்னார்கள். பெண்களுக்கும் புனர்வாழ்வு நிலையம் தேவையா எனக் கேட்டேன். இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள் எனச் சொன்னார்கள். மிக மனவேதனையான விடயம். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இளங்கலைஞர் மன்றத்தின் காப்பாளரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம், இசைவாணர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/210330/
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி! adminJanuary 26, 2025 இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி யாழ் . மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் Y A B M யஹம்பத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தனர். அக்கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவிடம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. அங்கு சென்றே இந்திய துணைத்தூதுவர் தலைமையிலான இந்திய தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
தமிழ் நாட்டில் மீண்டும் தமிழ்த்தேசியவாதம்? எனும் குறிப்பு விடுதலைப் புலிகள் பத்திரிகையில் ஜூலை 1993 இல் வைகோவின் செயற்பாடுகளைப் பற்றி வந்தது. இதில் திமுகவின் அடிப்படையே தமிழ்த்தேசியவாதம் என்று உள்ளது. https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf விடுதலைப் புலிகள் வைகாசி 1990 இல் வந்த தமிழீழமும் தமிழ்நாடும் எனும் குறிப்பில் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைக் கோருகின்றார்கள். கட்சி பேதம் புலிகள் பார்த்ததில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் திராவிடப் பாரம்பரியக் கட்சிகளின் ஆதரவாளரை புலிகள் எதிர்க்கும் நிலையிலும், தலைவர் பிரபாகரனை அவமதிக்கும் வகையிலும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர். இதூதான் சீமான் ஈழத்தமிழரின் விரும்தோம்பலுக்குச் செய்த கைமாறு! குறிப்பைப் பார்ர்க: https://tamileelamarchive.com/article_pdf/article_7ed83f8af60bfe6140ba24f288442b96.pdf
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் படித்த Basic AI (இலவசமாகக் கிடையாது) இல் இருந்து: with the rate of technology evolution increasing, we are entering an era where you will want to acquire new skills every few years, and eventually every year, to remain relevant.
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
டிசே இளங்கோவின் முகநூலில் இருந்து.. இரவி (கனடா) இலங்கைக்குச் சென்றபோது காலமாகிவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியாது இருக்கின்றது. ஒரு காலத்தில் நான், இரவி, போல் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம். அந்தக்காலங்களில் நாம் அடிக்கடி கோப்பிக்கடைகளில் சந்திப்பதோடு, பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்தும் கொண்டிருந்தோம். இவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதால் எப்போதும் என்னில் தனிப்பட்ட கவனமெடுத்து என்னைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலங்களில் என் தனிப்பட்ட வாழ்வின் தளம்பல்கள் பற்றிப் பகிரும் நண்பர்களாக இவர்களே இருந்தார்கள். பின்னர், காலத்தின் நீட்சியில் சில காரணங்களால் எமக்குள் இடைவெளிகள் ஏற்பட்டபோது, அதையும் வாழ்வின் இயல்பென எடுத்து நகரவும் செய்திருந்தோம். இதையெழுதும் இந்தக் கணத்திலும் இரவி நம்மிடையே இல்லையென்பதை மனம் மறுதலிக்கவே செய்கிறது. கீழே வருவது இரவியின் பிறந்தநாள் ஒன்றின்போது எழுதியது. ------------------------------------------------------------------ இரவியை அவரது பெயரால் தனிததுச் சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியாது. செல்வத்தை 'காலம்' செல்வம் என்று அழைப்பது போல, இரவியை 'வைகறை' இரவியெனச் சொன்னால்தான் அவர் யாரென்று பலருக்கு விளங்கும். 'வைகறை' கனடாவிலிருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகை. எனக்கு 'வைகறை'யுடனும், இரவியுடனும் உறவு எப்படி மலர்ந்தென்பதே சற்றுச் சுவாரசியமானது. நமது சினிமாக் காதல்களில் முதலில் சண்டைபிடித்து பிறகு காதல் வருவதுபோல, எனக்கும் இலக்கியம்/அரசியல் சார்ந்து வந்த அநேக நட்புக்கள் முரணிலிருந்து தொடங்கி பிறகுதான் நட்பாக முகிழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் எனக்கும் 'வைகறை'யோடான உறவும் தொடங்கியது. எனது கதையொன்றை ('கதைசொல்லியும், Gang Fights'ம்?) 'வைகறை' தாமாகவே தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தபோதும், கதையின் தொடர்ச்சி இன்னொரு பக்கத்தில் தொடர்வதைச் சரியாகக் குறிப்பிடாததில் சற்றுக் கோபம் வந்து (பத்திரிகையில் இருந்த தொடர்பிலக்கத்திற்கு) அழைத்தேன். கவனயீனம் காரணமாக பிழையாகிவிட்டது என மன்னிப்பைக் கோரியபடிதான் இரவி முதன்முதலாகப் பேசியது ஞாபகம். பிறகு, வைகறையில் தொடர்ந்து எழுதும்படியும், காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும்படியும் அவர் அழைப்பு விடுத்ததும் கடந்த காலம். கனடாவில் பத்திரிகை நடாத்தி இலாபமீட்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் 'வைகறை' நின்றபோது இரவிக்கு நிறையக் கடன்கள் இருந்தது என்பது தெரியும். அதுவல்ல முக்கியம், வைகறை வந்துகொண்டிருந்த காலத்தில் அரசியல் காரணங்களால் வைகறை மிரட்டப்பட்டிருந்ததும், சிலர் தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததும், காரின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டதுமென பல்வேறு அழுத்தங்களினூடாகவே பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஒருமுறை இங்கிருக்கும் ஒரு தமிழ் வைத்தியர் மீது வேற்றின நோயாளியினால் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு செய்யப்பட்டபோது, மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பிரசுரிக்கத் தயங்கி பின்வாங்கியபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சம்பவத்தை 'வைகறை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தச் செயதி பிரசுரிக்கப்பட்ட காரணத்தாலேயே பல்வேறு இடங்களில் 'வைகறை' கடைகளிலிருந்து பலவந்தமாக தூக்கியெறியப்பட்டுமிட்டிருக்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் பிரதிகள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் இரவி தனிப்பட்ட பேச்சிலே எம்மோடு உரையாடியிருக்கின்றாரேயன்றி 'வைகறை'யில் பொதுப்படையாக இந்தச் சம்பவங்கள் எதையும் எழுதியதுமில்லை. உண்மையில், இந்த நிதானமே வைகறையை அதை நடத்தியவர்களின் அரசியல் பிடிக்காதபோதும், பல்வேறு மாற்றுக் கருத்துடையவர்களையும் வாசிக்க வைத்திருக்கின்றது. அதை நேரடியாக நானும் நண்பர்களும் பல்வேறிடங்களில் கேட்டிருக்கின்றோம்/ கேள்விப்பட்டுமிருக்கின்றோம். ஒரு பத்திரிகையை நடத்துவது மட்டுமில்லை, அதில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அறம் சார்ந்த விடயங்களிலும் 'வைகறை' மிகுந்த கவனம் காட்டியிருக்கின்றது. எத்தனையோ நல்ல கட்டுரைகளை பிரசுரிக்க விரும்பியும், எமது போராட்டம் சார்ந்து 'பாஸிசம்' போன்ற (அதன் அர்த்தத்தை எவ்வகையில் பாவிப்பதென்ற கிஞ்சித்தும் அக்கறையில்லாத பலரே நம் அரசியல் கருத்தாளர்கள் என்பது வேறுவிடயம்) சொற்கள் பாவிக்கப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரிக்காமலே தவிர்த்துமிருக்கின்றார். இயன்றளவு நமது கருத்துக்களை, நம்மோடு முரண்படுபவர்களையும் பொறுமையாக வாசிக்க வைக்கவேண்டுமென வைகறை நிறைய பாடுபட்டிருக்கின்றது. 'வைகறை'யின் இந்த நிதானமான அணுகுமுறையை நானிங்கே வந்த வேறெந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை. ஆகவேதான் பல்வேறுபட்ட அரசியல்/இலக்கிய கருத்துக்களையுடைய எல்லோராலும் தயக்கமின்றி வைகறையில் எழுத முடிந்திருக்கின்றது. எழுதப்பட்ட ஆசிரியத்துவம் (editorial) எல்லாம் மிகவும் கவனம் எடுத்தே எழுதப்பட்டிருக்கினறன. அவ்வாறிருந்தும் சிலவேளைகளில் ஆசிரியத்துவம் தவறாக விளங்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் இன்னும் கவனமாக நாம் அதை எழுதியிருக்கலாமென இரவி சொல்லிக் கவலைப்பட்டதும் எனக்கு நினைவிலுண்டு. வைகறை சார்ந்து இரண்டு தனிப்பட்ட என் அனுபவங்களை நான் சொல்லியாக வேண்டும். வைகறையில் கட்டுரைகள், பத்திகள் போல சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்குமென தனிப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருமுறையும் யாரேனும் கவிஞரொருவரின் நான்கைந்து கவிதைகளோடு அவர்களைப் பற்றிய அறிமுகம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு என் கவிதைகள் வெளிவநத்போது, அதற்குப் பொறுப்பாயிருந்தவர் - என் வலைப்பதிவிலிருந்து- வெட்டி ஒட்டியபோது சில கவிதைகள் மாறி வெட்டி ஒட்டப்பட்டு பிரசுரமாயிருந்தன. பத்திரிகையைக் கடையில் எடுத்தவுடனேயே இவ்வாறு வந்திருப்பதைக் கண்டு - வழமை போல இரவிக்கு தொலைபேசியில் அழைத்து- இப்படி கவனமில்லாது பிரசுரிப்பதென்றால் அதைவிடப் பிரசுரிக்காமலே இருந்தாலே நல்லது, அதுவே கவிதைக்கு தரும் மரியாதையாக இருக்குமென தாறுமாறாய்ப் பேசியதும் நினைவிலிருக்கிறது. அடுத்த வாரம் கவிதைகள் உரிய முறையில் -தவறுக்கு மன்னிப்புக் கேட்டு - பிரசுரமாயிருந்தன. அது போல பாலஸ்தீனம் பற்றிய என் கட்டுரையில் இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டும் தொனியிருப்பது அவ்வளவு சரியில்லை, இஸ்ரேலிய அரசு என மாற்றட்டுமா என - ஒரு வார்த்தையாயினும்- என்னிடம் அனுமதி கேட்டு மாற்றியிருந்த பத்திரிகைப் பண்பு அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. இவ்வாறான காரணங்களே இது எங்கள் 'வைகறை' என உணரச் செய்திருக்கின்றது போலும். ஒருகட்டத்தில் 'வைகறை' நின்றபோது, உடனே எதற்காகவது எதிர்வினை எழுதிப் பிரசுரிப்பதற்கு எங்களுக்கென ஒரு பத்திரிகை இல்லையேயென பல தடவைகள் கவலைப்பட்டதுண்டு. அதேபோல 'வைகறை' நின்றபின், வேறு சில பத்திரிகைகளிலிருந்து எழுத அழைப்பு வந்தபோதும், அவை சார்ந்த கருத்துநிலைக்காக மட்டுமின்றி, வைகறை போல எதையும் எழுதுவதற்கு பூரண சுதந்திரம் தரப்படுமா என்கின்ற தயக்கங்களினாலும் பிற பத்திரிகைகளில் எழுத அவ்வளவாய் விரும்பியதுமில்லை. இரவியைப் பற்றியெழுத வந்து இறுதியில் 'வைகறை'யைப் பற்றியே நிறைய எழுதவேண்டியதாகிவிட்டது. இரவி ஏதோ ஒரு இயக்கத்தில் சேரப்போய் பிறகு வேறு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பதும், நாமெல்லாம் நீங்கள் அப்படிச் சொன்னாலும், அந்த இயக்கத்திற்காய் உளவு பார்க்கத்தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீர்கள் என அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இரவி இயக்கத்திலிருந்த நண்பர்களோடு முல்லைத்தீவுக் காட்டிற்குள் புகையில்லாது சமைத்த கதை எங்களிடையே பிரசித்தமானது. சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் ஏற்கனவே முடிந்தவற்றை மீளக் கொண்டுவருதல் என்பது கடினமானது. எனினும் 'வைகறை' ஏதேனும் ஒருவடிவத்தில் மீள வந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். 'வைகறை'யில் எழுதியவன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு. *************
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் - - வ.ந.கிரிதரன் - - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) - வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்பாராத இழப்புகளில் ஒன்று ரவி பொன்னுத்துரையின் இழப்பு. அவரது இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் , நண்பர்கள் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். ரவி பொன்னுத்துரை சிறந்த புகைப்படக் கலைஞர். அவரது முகநூற் பதிவுகளில் அவர் பகிர்ந்துகொள்ளும் இயற்கையின் வனப்பை வெளிப்பை, உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களே அதற்குச் சான்று. கனடாவில் 'நடு' இதழின்ஐம்பதாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நடந்தபோது, நிகழ்வுக் காட்சிகளைப் புகைப்படங்களாக்கிப் பகிர்ந்திருந்தார். எனக்கும் அனுப்பியிருந்தார். சூழலியாளர். சமூகப் பிரக்ஞை மிக்கவர். இத்தருணத்தில் வைகறையில் எனது படைப்புகள் வெளியிட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த அவரது முகநூற் பதிவொன்று.. அண்மையில் நான் இரண்டு வாரங்கள் Costa Rica பூர்விக குடிகளுடன் தங்கி வேலை செய்யவேண்டிய ஒரு தேவை இருந்தது. அங்கு மூத்த தலைவர் ஒருவருடன் பேசும் பொழுது அவர் கூறினார்: "நீண்ட காலனித்துவ வரலாறு எங்கள் சமூகத்தின் ஒழுக்கம், அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை நொருக்கி இருந்தது. எம் சமூகத்தின் பெருமைகளை (sense of community pride) நீர்மூலம் செய்து இருந்தது. அடுத்த அடுத்த தலைமுறைகள் சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தார்கள். தனது பெருமையை இழந்த சமூகம், ஒரு சமூகமாக திரள்வது சாத்தியம் இல்லாத விடயம். இழந்த பெருமையை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நாம் சிந்தித்தோம். அந்த பெருமையை மீட்டு எடுத்தோம். அது எமது சமூகத்துக்குள் செய்யவேண்டிய முக்கிய விடயமாக இருந்தது. அது இலகுவாக இருக்கவில்லை. நாம் பிரிந்து இருந்தோம். பிரிக்கபட்டு இருந்தோம். உதாரணமாக எமது பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையை நீண்ட போராட்டங்களின் மூலம் Costa Rica அரசு, மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் உருவாக்கி இருந்தோம். ஆனால் எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு நோயாளிகளும் வரவில்லை. அதை காரணம் காட்டி Costa Rica அரசும் தொடச்சியான வளங்களை, வசதிகளை செய்து தர மறுத்தது. நாங்கள் எங்கள் சமூகத்தில் இருந்து சில இளையவர்களை கியூபா அரசின் உதவியில் மருத்துவம் கற்பதற்காக அனுப்பினோம். அவர்களுக்கு சில நிபந்தனைகள் வைத்தோம். படித்து முடிந்தவுடன் எமது வைத்திய சாலையில் குறைந்தது 5 வருடம் வேலை செய்யவேண்டும் என்று. அதில் சிலர் எங்கள் நிபந்தனைகளின்படி மருத்துவ கல்வியை முடித்துவிட்டு எங்கள் பிரதேச வைத்தியசாலைக்கேய் வந்தார்கள். சிலர் இங்கு வரவில்லை. வந்தவர்களால் எமது மக்கள் மெது மெதுவாக எமது பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலையை நோக்கி வர தொடங்கினார்கள். இன்று இந்த வைத்தியசாலை மேற்கு - பாரம்பரிய வைத்திய முறைகளை உள் அடக்கிய தரமான வைத்தியசாலையாக - எமது மக்கள் நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு அணுக கூடிய வைத்திய சாலையாக வளர்த்துள்ளது. இப்படி தான் மெது மெதுவாக நாங்கள், எங்கள் பிரதேசத்தை கணிசமான அளவு முன்னகர்த்தி உள்ளோம். பொருளாதார வளங்களை எங்கள் பிரதேசங்களில் உருவாக்கி இருக்கிறோம். இது இன்னும் முழுமையானது இல்லை. ஆனால், மூத்தவர்களாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - எங்கள் அடுத்த தலைமுறைகள் பெருமையுடன் மேலும் முன்னேறும் என்று. எம் சமூகத்தின் பெருமையை நாம் மீட்டு எடுத்து இருக்கிறோம். எமது சமூக அரசியல் விடுதலைக்கு எம் சமூகத்தின் பெருமையை மீட்டு எடுப்பது முன் நிபந்தனையாக இருந்தது". https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8935-2025-01-25-17-48-49
-
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் January 25, 2025 02:14 pm முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில், அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வெங்ஸ் ஹெக்செத்திக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தீவிர வலதுசாரி கிறிஸ்தவரும், கடும் கோபம் கொள்ளும் நபருமான பீட்டர் ஹெக்செத்தை இந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தது தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாகியிருந்தது. பீட்டர் ஹெக்செத் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=199278
-
யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!
யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு January 25, 2025 05:35 pm யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று (25) யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை நடாத்துகிறது. இம்மாநாடானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது. மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் , தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிபதிகள், நீதவான்கள், சட்டத்துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199290
-
யோஷித ராஜபக்ஷ கைது
கைதான யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் January 25, 2025 06:09 pm கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார். https://tamil.adaderana.lk/news.php?nid=199294
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அது தேவையா! என்று ஒரு போட்டதன் அர்த்தம் புரியவில்லையா @புலவர் ஐயா!😆 யாழுக்கு 40 பேர் வந்தாலும் வியூஸ் குறைந்தாலும் தரம் குறையாமல் இருக்கவேண்டும். விடுப்பு ராணிகளும், இரவு ராணிகளும் வந்தால் நாம் இங்கிருக்கமுடியாது. நடையைக் கட்டவேண்டியதுதான்!
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை. பாலமுரளியும் (9) பாலமுருகனும் (10) சகோதரர்கள். சுவிஸ் நாட்டவருக்கு உச்சரிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காகவே முரளி மற்றும் முகுந்தன் என்று பெயரை சுருக்கிக்கொண்டார்கள். இருவரில் மூத்தவர் முரளி. சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார். ஒரு முறை அருகிலுள்ள தோட்டவேலை செய்யும் நிறுவனத்திடம் வேலைகேட்டிருக்கிறார், தன்னுடைய சம்பளம் பெற்றோர்களிற்கு உதவியாக இருக்கும் என்றெண்ணி!. இளையவன் முகுந்தன் தன்னைவிட தன்னுடைய அக்காவை தான் பெற்றோர்களிற்கு பிடிக்கும் என்ற தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தான். ஆனால் பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் உளமார நேசித்தார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. இந்த இரண்டு சிறுவர்களின் வாழ்வும் சிறுபராயத்துடனே ஒரு சோகமான இரவில் முடிவிற்கு வரப்போவதை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. 02.07.1989ஆம் திகதி கூர் நகரத்தில் ஒரு தீ விபத்தில் -பெரியவர்களாக முன்னரே- அவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த ஓர் இரவு அவர்களை வாழ்விலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. இவர்களுடன் இந்த நாட்டிற்கு பாதுகாப்புத் தேடி வந்த 18 வயதான சக்திவேல் தம்பிராஜா என்ற இளைஞனும், 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி என்பவரும் அன்றைய இரவு கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள். மிரட்டப்பட்ட ஊடகவியலாளர் முரளியினதும் முகுந்தனினதும் கொடூர கொலை மீதான கவனம் எங்களுக்கு தற்செயலாக கிடைத்த தகவல் தான். இந்த கொலைச் சம்பவம் 35 வருடங்களிற்கு முன்னர் நடந்தேறியது. எனவே தான் சுவிஸ் மக்களின் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை நினைவூட்டும் எந்த நினைவுச்சின்னமும் அவ்விடத்தில் இல்லை. வரலாற்று ஆசிரியர் Damir Skenderovic உடனான நேர்காணலில் போது அவர் இந்த வழக்கு பற்றி ஒரு சிறிய தகவலை தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் பற்றி நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஊடக செய்திகளின் ஆவணக் காப்பகத்தில் இதுபற்றி தேடிப் பார்த்தோம். குறைந்த எண்ணிக்கையிலான செய்திகளே கிடைத்தன. ஒரு சில பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இது ஒரு நியோ-நாசிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். உண்மையிலேயே இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம் எமக்குள் எழுந்தது. இது ஏன் ஒரு பேசுபொருளாகவில்லை? கொலைகாரர்களை ஏன் கைதுசெய்யவில்லை? எனவே இது பற்றி ஆழமான ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். நியோ-நாசிகளின் தாக்குதல்கள் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பெரும்பாலும் ஜேர்மன் நாட்டில் “சோளிங்கன்” என்ற இடத்தில் 1993ம் ஆண்டு இரண்டு முதியவர்களும், மூன்று சிறுவர்களும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தான். இந்த சம்பவத்தை நினைவு கூரும் வண்ணம் அங்கே ஒரு நினைவுத்தூபி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தத் தெருவுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் ஜனாதிபதி இந்த சம்பவத்தின் 30வது நினைவையொட்டி உரையாற்றியிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி புத்தகங்கள், பாடசாலை நூல்கள், பாடல்கள், காட்சிப் படங்கள் என்று நிறையவே இருக்கிறது. ஆனால் கூரில் நடந்த சம்பவம் பற்றி ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஆராய்ச்சியின் பின்னர் இது ஏதோ தற்செயலாக மறைக்கப்பட்ட ஒன்று இல்லை என்பதை உறுதியாக கூறமுடிகிறது இந்த ஆராய்ச்சியின் ஆரம்பம் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். அவர்களின் இருப்பை அப்பொழுது கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எனவே இதன் தொடக்கம், இப்பொழுது 78 வயதான Reto Padrutt என்ற பத்திரிகையாளரிடமிருந்து ஆரம்பித்தது. Padrutt இப்பொழுது சூரிச்சில் வசித்துவருகிறார். அவருடைய இருப்பிடம் பற்றி மேலதிகமாக எழுதுவது அவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கிறோம். அதுபற்றி எழுதவேண்டாம் என்பது அவரின் கோரிக்கையும் கூட. Padrutt 15.01.1992 அன்று சுவிஸ் தொலைக்காட்சியின் Rundschau என்ற நிகழ்ச்சிக்கு இந்த சம்பவம் பற்றிய ஒரு சிறிய ஆவணப்படத்தினை Andreas Hoessli என்பவருடன் சேர்ந்து இயக்கியிருந்தார். (காணொளி-1) அதுமட்டுமின்றி Padrutt நியோ-நாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் செலவிட்ட ஒருவர். அன்றைய காலகட்டத்தில் அவர் வசித்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கதவு பழுதடைந்திருந்ததால் யாரும் உள்ளே வரலாம் போகலாம் என்ற நிலை இருந்தது. அவருக்கு நியோ-நாசிகளிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பட்டிருந்தது. அதில் நுழைவாயில் எப்பொழுதுமே திறந்திருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், எந்நேரமும் அவரின் வீட்டிற்கு தீ வைக்க முடியும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Padrutt தன்னுடைய குடோனிலிருந்து தூசிதட்டி எடுத்துகொண்டுவந்த ஆவணங்களை மேசையின் மேல் பரப்பி வைத்திருந்தார். கூரில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய அவரின் குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் அவை. கூர் சம்பவத்திற்கும் நியோநாசிகளிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவை. இடைப்பட்ட இந்த காலத்தில் கூர் நகரசபைக்கு இந்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுப்புக்களை பார்வையிடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அன்று சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று விசாரணையை விரிவுபடுத்தினோம். இறுதியாக கொல்லப்பட்ட சிறுவர்களின் அக்காவையும் பெற்றோரையும் St.Gallen இல் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களை கண்டுபிடிப்பதற்கு சிக்கலாக அமைந்தது, அரசதரப்பின் மெத்தனப்போக்கு!. Kandiah என்ற பெயரை ஆவணங்களில் Kandian என்று பிழையாக அச்சிட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயரை எழுத்துப் பிழைகளுடன் எழுதியிருந்தார்கள். இந்த விசாரணை எப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். Yves Bachmann (Fotos) மரண இரவு 01.07.1989 ஒரு மழைக்கால சனிக்கிழமை. St.Gallen மாநிலத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் வசந்திக்கும், சிவா கந்தையாவிற்கும் வழமைபோல வேலை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் அனைவரும் செய்த உணவத்தின் துப்பரவு பணியே அவர்கள் இருவரும் செய்தார்கள். இருவரின் பிள்ளைகளான இரண்டு ஆண்களும், ஆறு வயதான மேனாவிற்கும், வீட்டில் தனியாக இருப்பது சலிப்பாக இருந்தது. எனவே ஒரு குடும்ப விழாவிற்கு கூர் நகரத்திற்கு போவதற்கு பெற்றோர்கள் அனுமதித்தார்கள். இதற்குள் மூன்று பிள்ளைகளிற்குள்ளும் சண்டை வந்துவிடவே, மூவருக்கும் கொண்டாட்டத்திற்கு போவதற்கு தடைவிதித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் எரிச்சலைடைந்தவர்களாக வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதுவே அவர்கள் தங்களின் இரண்டு மகன்களையும் பார்த்த இறுதித் தருணம். அன்றிரவே பெற்றோர்களின் அனுமதியின்றி மூன்று பிள்ளைகளும் தங்களின் மாமாவுடன் கூர் நோக்கிய பயணத்தை தொடங்கியிருந்தார்கள். அன்று இரவு கொண்டாட்ட இடத்திலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தார்கள். நாளை மூவரையும் வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார். அந்த இரவு கொண்டாட்டம் நிறைந்த ஒரு அமைதியான இரவாக இருக்கவேண்டியது. வேறு வேறு மாநிலங்களிலிருந்து வந்த 15 தமிழர்கள் அந்த நான்கரை அறைகொண்ட மேல்மாடி வீட்டிற்குள் இருந்தார்கள். இலங்கையில் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். வீட்டின் ஏனைய பகுதிகள் யாருமற்று இருந்தது. இரவுச் சாப்பாடு இரவு ஒன்பதரை மணிக்கு பரிமாறப்பட்டது. மூன்று சிறுவர்களின் தாத்தாவின் நினைவாக காலியான நாற்காலியில் ஒரு கோப்பையில் படையல் வைத்தார்கள். மதுவோ, சிகிரெட்டோ யாரும் பாவிக்கவில்லை. இரவு பன்னிரெண்டே கால் மணிக்கு முழித்திருந்த கடைசியானவரும் தூங்கப் போய்விட்டார். இரண்டு மணிநேரத்தின் பின்னர், 2:14 மணிக்கு, கூர் காவல்துறைக்கு தொலைபேசியில் Alexanderstrasse 38 இல் அமைந்துள்ள வீட்டில் தீப்பிடித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. திசைதெரியாத அளவிற்கு புகை அறைகளை நிரப்பியது. அதுவரை அந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த விளக்குகள் அணைந்துபோயின. மாடிப்படியில் தீப்பிடித்ததால் யாராலும் கீழே இறங்கி வர முடியவில்லை. யன்னல் வழியாக 5 மீட்டர் கீழே குதிக்கமுடிந்தவர்கள் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார்கள். பெரும்பாலானவர்கள் இதன் போது காயமுற்றார்கள். சுயநினைவுற்றிருந்த மேனாவை யாரோ ஒருவர் யன்னலுக்கே வெளியே வீசினார். கீழேயிருந்த இன்னொருவர் அவரை ஏந்திக்கொண்டார். இரு ஆண்கள் இறுதிவரை கீழே குதிக்க மறுத்துவிட்டார்கள். 18 வயதான சக்திவேல் தம்பிராஜா மற்றும் 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி. அவர்களின் உடல் அடையாளம் காணமுடியதளவிற்கு தீயில் கருகிப்போனது. சிறுவர்கள் முரளியும் முகுந்தனும் தூக்கத்தில் இருக்கும் போதே மூச்சுத்திணறி இறந்துபோயிருக்க வேண்டும். Yves Bachmann (Fotos) வாழ்த்திய அயலவர்கள் Margarethe Sauter இரண்டு சிறுவர்களின் எரிந்துபோன உடல்களின் மிச்சத்தினை காவலர்கள் வெளியில் கொண்டு வரும் போது நேரில் பார்த்தவர். எரியூட்டப்பட்ட வீட்டின் முன் தான் அவரின் வீடும் உள்ளது. Alexanderstrasse 38 இல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தடயமும் இப்பொழுது அங்கே இல்லை. ஆப்பிள் மரங்கள் சூழ ஒரு அடுக்குமாடி கட்டிடம் அதே இடத்தில் எழுந்துநிற்கிறது. Margareth Sauter இன் வீட்டிற்கு முன்னால் காத்திருந்த வேளையில் அவர் சைக்கிளில் வந்தார். அவரிடம் இங்கே நடந்தது பற்றி தெரியுமா என்று கேட்டோம். அப்பொழுது இருபது வயதின் ஆரம்பத்திலிருந்த Margarethe படப்பிடிப்பாளராக Bündner Tagblatt என்ற பத்திரிகையில் பணியிலிருந்தார். அலறல் சத்தம் தூக்கத்திலிருந்த அவரை எழுப்பியது. யன்னலை திறந்து பார்த்தவர் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எடுத்து தகவல் சொல்லிவிட்டு, தன்னுடைய போர்வையை எடுத்துக்கொண்டு கீழே ஓடினார். சிறிய தீக் காயங்களுடன் தப்பி வந்த ஒருவர் மீது போர்த்திவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்த ஒருவரிடமும் முதலாவது மாடிக்கு எட்டும் அளவிற்கு ஏணி இருக்கவில்லை. சில நிமிடங்களின் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட்டன. அதன் பின்னர் தான் புகைப்படக் கருவியை எடுத்து தன்னுடைய கடமையை செய்தார். சம்பவத்தை ஆவணமாக்கினார். யாருமற்ற கீழ்த்தளத்தில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வெளிநாட்டவர்கள் மீது சமூகத்தில் வெறுப்புணர்வு நிலவியது. இந்த சம்பவத்திற்கு மூன்று வாரங்கள் முன்னர் காவல்துறைக்கு “சுத்தமான சுவிஸ் நோக்கி” என்ற வாசகத்துடன் ATO (Anti Tamil Organisation) என்ற அமைப்பின் துண்டுப்பிரசுரம் கிடைத்திருந்தது. இந்த காரணங்களை வைத்தே Margareth Sauter இது ஒரு கொலை என்று அக்கணமே முடிவுசெய்துவிட்டார். நாம் முன்னர் சந்தித்த பத்திரிகையாளர் Reto Padrutt இடம் அந்த துண்டுப்பிரசுரத்தின் நகல் ஒன்று இருந்தது. இதை யார் அச்சிட்டு பொதுவெளிக்கு கொண்டுவந்தார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கூர் நகரத்தில் நாஜி ஸ்வஸ்திகா குறியீடு ஒரு வீட்டில் பதியப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார். அந்த வீடு நாஜிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கவேண்டும். கூர் நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களில் ஒரு அதிர்ச்சியளிக்கும் கடிதம் கிடைத்தது. அந்த தீ வைத்ததற்கு உரிமைகொண்டாடி, நகரசபை உறுப்பினரான Luzi Bärtsch என்பவருக்கு முகவரியிட்டு ஒரு அநாமதேய கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில்: தீ வைக்கப்பட்டதா? ஆம்! மூன்றாவதும் இறுதியுமான எச்சரிக்கை. அகதிகளை எங்களுடைய கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் ஒருவர்கூட மிச்சமிருக்காதபடி அனைத்து முகாம்களிற்கும் தீ வைக்கப்படும். -“Rütlischwur ஒப்பந்தம் 1291” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. தமிழ் நாணயக் குற்றி போர் மற்றும் உள்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் சுவிஸ் நாட்டிற்கு நியாமான காரணத்துடன் தமிழர்கள் வந்திருந்தபோதும், சுவிஸ் நாட்டவர்களிற்கு அவர்களின் வருகை அச்சத்தையும் அதேநேரம் வெறுப்பையும் உண்டுபண்ணியது. அவர்களின் புலம்பெயர் உண்மைத்தன்மையை ஏற்க மறுத்தனர். தமிழர்கள் ஒருபோதும் இந் நாட்டின் குடிமக்கள் ஆகமாட்டார்கள் என்ற கருத்து பாராளுமன்றம் வரை நிலவியது. தமிழர்கள் மீதான பாகுபாட்டினை Thun நகரத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. ஏனைய அகதிகளிற்கு வழங்கப்பட்ட சுவிஸ் பிராங் உதவித்தொகை போன்று தமிழர்களிற்கு வழங்கப்படவில்லை. தமிழர்களிற்கென்று “தமிழ் நாணய குற்றி” ஒன்றை வழங்கினார்கள். இது ஒரு விளையாட்டுப்பொருள் போன்ற நாணய வடிவம் கொண்டது. இதனை தமிழர்கள் உள்ளூர் கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். (காணொளி-2) 1995ஆம் ஆண்டு இனவாதத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் வரை தேசிய கட்சிகள் வெளிப்படையாகவே தமிழர்களிற்கு எதிரான இனவெறியினை அவர்களின் கட்சி நிகழ்ச்சி நிரலிலேயே ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு அறமற்று செயற்பட்டன. Blick பத்திரிகை தமிழர்களை “லெதர் ஜாக்கெட் ஆண்கள்” என்று வகைப்படுத்தி, சுவிஸ் நாட்டில் போதைப்பொருள் ‘ஹெராயின் தமிழர்களின்’ கட்டுப்பாட்டில் என்று எழுதியது. ஆனாலும் புள்ளிவிபரங்கள் இதற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தின. தமிழர்களின் குற்றச்செயலும் சுவிஸ் நாட்டவர்களின் குற்றச்செயலும் ஒரே அளவில் இருந்தது. Tagesanzeiger பத்திரிகை தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று தவறான கருத்தை எழுதித்தள்ளியது. Margarethe Sauter ற்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருந்த பிரச்சாரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் தமிழர்களை வேண்டா விருந்தாளிகளாக சுவிஸ் மாக்கள் ஒரு பொதுப்பார்வையில் பார்த்தார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தீ வைக்கப்பட்ட அந்த இரவில் இதனை நேரிலும் கண்டார். அயலவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நீர், போர்வை என்று தந்து உதவினார்கள். ஏனையவர்கள் அவர்களின் வீட்டு வேலியை தாண்டி வர மறுத்துவிட்டார்கள். “இவர்களிற்கு இப்படி நடப்பது சரி தான். இவர்கள் இங்கே வந்திருக்கக்கூடாது” என்று முரளியினதும் முகுந்தனினதும் எரிந்த உடல்களை தீ அணைப்புத்துறை வெளியில் கொண்டுவரும் போது காதுபட பேசிக்கொண்டார்கள். Margarethe Sauter எடுத்த புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் Bündner Tagblatt என்ற உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை தன்னுடன் சுமந்துகொண்டிருப்பது அவருக்கு மனபாரமாக இருந்ததால் புகைப்படங்களின் நகலை சிலவடங்களிற்கு முன்னர் துண்டுதுண்டாக வெட்டி எறிந்திருக்கிறார். இன்று வரை அவருக்கு புரியாத புதிராக ஒரு விடயம் இருக்கிறது. எத்தனையோ விபத்துக்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அடுத்த நாள் வழக்கறிஞர்கள் இவரிடம் அந்த புகைப்படங்களை விசாரணைக்காக எடுத்துச்சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை தான் புகைப்படம் எடுத்தது தெரிந்தும் இதுவரை தன்னிடம் இருந்து எந்த புகைப்படமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எல்லா புகைப்படங்களுமே ஆதாரங்கள். அதற்காக அவர்கள் ஒரு முறைகூட தன்னை தொடர்புகொள்ளவில்லை என்று முடித்தார். அக்கா தீயிடப்பட்ட அந்த இரவில் மழைபெய்யத்தொடங்கியதும் மேனாவிற்கு நினைவு வந்தது. ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் வந்து அவரின் சகோதரர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள் என்று விசாரித்தார். “முரளி ஒரு பச்சை-நீல காற்சட்டையும், முகுந்தன் சிகப்பு நிற காற்சட்டையும்” என்றார். இப்பொழுது மேனா 41 வயது பெண். St Gallen மாநிலத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு அம்மா. திருமணத்தின் பின்னர் அவரின் பெயர் மேனா கந்தையா அல்ல, மேனா நிரோசன். அவர் ஏன் எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை என்றும், என்னுடைய பெற்றோர்களுடன் கூட நான் இந்தச் சம்பவம் பற்றி பேசுவதிலை என்றும் சொன்னார். இறுதியாக அவர் எங்களை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார். St.Gallen இல் உள்ள ஒரு கஃபேயில் சந்தித்தோம். மேனா மனிதவளத் துறையில் பணிபுரிகிறார். பணியிடத்திலிருந்து நேரடியாக எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார். அந்தச் சம்பவம் பற்றி பேசாமல் மௌனமாகவே இதுவரை காலமும் கடந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய சகோதரர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிவித்திருக்காத போதும், காலப்போக்கில் அவரே அதனை புரிந்துகொண்டார். அந்த சம்பவத்தின் பின்னர் நேரடியாக மருத்துவமனையிலிருந்து மூவரும் St.Gallen இல் உள்ள அவர்களின் வீட்டிற்கே சென்றுவிட்டார்கள். வீட்டிற்குள் வந்ததும் பெற்றோர்கள் வீட்டில் தொங்கிய எல்லா கடவுள் படங்களையும் கிழித்தெறிந்தார்கள். மேனா பெற்றோர்களுடனே அவர்களின் அறையில் தூங்கி எழுந்தார். பயம். இது இன்றுவரை அவரை பின்தொடர்கிறது. தான் ஒரு தங்கக் கூண்டிற்குள் வளர்ந்தவர் என்றார். இவரையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தினால் பெற்றோர்கள் இவரை மிகவும் கவனமாக வளர்த்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் மேனா பெற்றோர்களை விட்டு பிரிய விரும்பவில்லை. அவரின் கணவர் அவர்களுடன் சேர்ந்து இங்கேயே இருக்கிறார். இருவருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவன் முரளி போல் மெலிந்தும் கருப்பாகவும், இளையவன் முகுந்தன் போல பருத்த உடலுடன் இருப்பது தன்னுடைய சகோதரர்கள் தன்னுடனே இருப்பது போன்ற ஆறுதலை தனக்கு தருகிறது என்றார். இடைப்பட்ட இந்தக் காலத்தில் இதுபற்றி அவர் பெரிதாக யாருடனும் பேசியதில்லை. ஆனால் ஆழ்மனதில் வடு அப்படியே தான் புதைந்திருக்கிறது. 6 வருடங்களிற்கு முன்னர் ஜேர்மன் வேகவிதியில் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்திருக்கிறார். அந்தக் கணமே அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டார். அதிஷ்டவசமாக விபரிதம் எதுவும் நடக்கவில்லை. வேக வீதியின் நடுவில் நின்ற காரை கணவர் ஓரத்தில் நிறுத்தினர். எங்களிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றியும் நாங்கள் கண்டுபிடித்தவை பற்றியும் அவரிடம் கூறினோம். சிறிது மௌனமாக இருந்துவிட்டு இது தனக்கு வேதனையளிக்கிறது என்றார். கேள்விகள் எதுவும் கேட்காமலே தொடர்ந்து “இதுவரை சுவிஸ் நாட்டை ஒரு இனவெறி பிடித்த நாடாக தான் உணரவில்லை. ஒருமுறை கூட தன்னை யாரும் பாகுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் இப்பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை என்னவென்று சொல்வது” என்றார். இறுதியாக இதுவரை அது ஒரு விபத்து என்று நம்பியிருந்ததாகவும், இந்த நாட்டில் தானும் தன்னுடைய குடும்பமும் சம அந்தஸ்து பெற்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்றும் தெரிவித்தார். Yves Bachmann (Fotos) நாஜிக்கள் ஏற்கனவே கூறியது போல் இந்த தீ வைத்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. 80களின் ஆரம்பமும் 90களின் தொடக்கமும் பாசிச சக்திகளிற்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலகட்டத்தை வரலாற்றாசிரியர்கள் பாசிசவாதிகளின் “வசந்தகாலம்” என்கின்றனர். 1930களில் துளிர்விட்டிருந்த பாசிசம் பின்னர் படிப்படியாக இனவாதிகளின் கட்டுக்குள் வெவ்வேறு பெயர்களில் வந்தது. இங்கிலாந்திலிருந்து இங்கே வந்த இந்த இனவாதம் இளைய தலைமுறையினரின் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவரையாவது நியோ நாஜிகளின் அடையாளமான மொட்டைத் தலையுடனும், லெதர் ஜாக்கெட்ருடனும் காணக்கூடியதாக இருந்தது. சுவிஸ் பொதுச்சமூகத்திற்கு இவர்கள் புதிதாக இருந்தார்கள். குறும்புக்கார இளைஞர்களாக பார்த்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உட்கார வைக்கப்பட்டார்கள். சுவிஸ் ஜனாதிபதிக்கு ஈடான புகழினை சில நாஜிகள் அடையமுடிந்தது. குறிப்பிட்டு கூறுவதென்றால் Marcel Strebel என்பவரை கூறலாம். “Zischtigslub” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் அங்கே வேலை செய்த ஒருகறுப்பு நிறப் பெண்ணை “கறுப்புப் பரத்தை” என்று பேசி, அந்த பெண்ணின் மீது துப்பியும் இருக்கிறார். இதெல்லாம் நடந்த பின்னரும் அவரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரவேற்று நிகழ்ச்சியினை நடத்தியிருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் பற்றி அந்தக் காலத்தில் பத்திரிகையாளராக இருந்த Jürg Frischknecht உடன் பேச முயற்சித்தோம். இனவாதிகள் பற்றி இவரை தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரதிஷ்டவசமாக அவர் சிலவருடங்களிற்கு முன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே எங்களிற்காக காத்திருந்தது. ஆனால் அவர் எழுதிய இனவாதிகள் பற்றிய “Die neuen Fröntler und Rassisten” என்ற புத்தகத்தை அனைவருக்கும் விட்டுச்சென்றுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூர் நகரில் நடந்த சம்பவம் பற்றி இப்படி எழுதியுள்ளார்: முரளியும் முகுந்தனும் இறந்துபோன அதே ஆண்டு, பிரிபெர்க் நகரில் Mustafa Yildirim என்ற 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு இனவாத மாணவனால் கொல்லப்பட்டார். Regensdorf நகரில் முன்னாள் சுவிஸ் பாக்ஸிங் சம்பியனான Walter E. தமிழரான சாந்தகுமார் சிவகுரு என்பவரை முகத்தில் ஒரே ஒரு குத்தின் மூலம் கொன்றார். சாந்தகுமார் வேலை செய்த உணவகத்தின் முதலாளி அவரை நினைவுகூரும் போது “ஒவ்வொரு முறையும் சாந்தகுமார் சமையல் கூடத்திற்குள் வரும் பொழுதும் சூரிய ஒளி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அவன் முகம்” என்றார். 1988 தொடக்கம் 1993 வரை இனவாதிகளால் சுவிசில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளை விடவும், ஏன் ஜெர்மனை விடவும் அதிகம். கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக அவர்களின் பெயர்கள் எந்த தெருவுக்கும் வைக்கப்படவில்லை. எந்த ஜனாதிபதியும், வரலாற்றாசிரியரும் இவர்களை நினைவுகூர்ந்து பேசவில்லை. Frischknecht தனது புத்தகத்தில் இன்னொன்றையும் பதிவுசெய்திருந்தார். இனவாதிகள் முக்கியமாக தமிழர்களை தங்களுடைய எதிரிகளாக பார்த்தார்கள். உதாரணமாக ‘சுக்’ (Zug) நகரில் நடந்த தமிழர்கள் மீதான வேட்டை. 25 ஆண்களும் பெண்களும் 20.05 .1989 அன்று நகரின் முக்கிய பகுதியில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களின் நோக்கம் -இரும்பு கம்பிகளாலும் சைக்கிள் சங்கிலியாலும்- தமிழர்களை தாக்குவதாகும். வேலைவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்களை தாக்கினார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். அந்த ஆண்டு மட்டும் சுவிசில் எத்தனை அகதிகள் தங்குமுகாம் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தோம். மொத்தம் 13 ஆகும். கூர் நகரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் நான்கு முறை. எனவே தான் Alexanderstrasse இல் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது. தடயம் கூர் சம்பவத்தின் விசாரணை ஆவணங்களை பார்வையிடுவதற்காக அரச அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆண்டு நடந்த நான்கு தீ வைப்பு சம்பவங்களையும் ஆராய்ந்தோம். 29.11.1988 ‘க்ளோஸ்ட்டர்’ இல் நடந்தது ஆறு நபர்கள் தங்கியிருந்த முகாமிற்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறையினருக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில் “நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று கூறியிருக்கிறார்கள். “அடுத்தது உங்களுடைய வீடாக கூட இருக்கலாம்” என்று அகதிகளிற்கு உதவியவர்களின் வீடுகளிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. 02.07.1989 முரளி, முகுந்தன் மற்றும் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் 02.08.1989 கூரில் Loestrasse என்ற இடத்தில 100 பேர் வசித்து வந்த முகாமிற்கு இரவு தீ வைக்கபட்டது. விழித்திருந்த ஒருவர் தீ பிடித்ததை கண்டு அணைத்துள்ளார். 07.08.1989 அதே Loestrasseஇல் மீண்டும் தீ வைக்கப்பட்டது. சுற்றியிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டது. மேலே கூறிய சம்பவங்களில் தீ வைக்கப்பட்ட முறை நான்கு சம்பவத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. இரவு நேரம், தீ வேகமாக பருவுவதற்காக கையாண்ட யுக்தி, நித்திரையில் இருப்பவர்கள் தப்பித்து போக முடியாத படி வாசலில் தீ வைத்தது என்று எல்லா சம்பவத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமைகளை அன்று காவல்துறை கவனத்திற் கொள்ள முயற்சி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றிருக்கிறது. சம்பவத்தில் உயிர்பிழைத்த பத்து தமிழர்கள், காவல்துறைக்கு தீ பிடித்ததை அறிவித்த இருவர், வீட்டு மின்சார வேலைக்கு பொறுப்பான ஒருவர், வீட்டின் அடித்தளத்தில் கார் திருத்தும் நிறுவனர் மற்றும் ஒரு சந்தேகப்படும்படியான நபர் என்று அவர்களின் விசாரணையை முடித்துக்கொண்டார்கள். சுருக்கமாக சொல்வதானால், காவல்துறை விசாரணைக்காக தொடர்பு கொண்ட நபர்களை விட, இந்த செய்திக்காக நாங்கள் தொடர்புகொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகம். விசாரணைக்குழுவின் போக்கு இந்த சம்பவம் விபத்தா அல்லது அகதிகளே தீ வைத்தார்களா என்ற கோணத்தில் இருந்தது. இரண்டிற்குமான ஒரு ஆதாரம்கூட இருக்கவில்லை. காவல்துறையினரின் விசாரணைக் கேள்விகள் சில தமிழர்களிற்குள் குழு மோதல்கள் சம்பந்தமாகவும், லிபிய அல்லது சிரியா நாட்டு அகதிகளுடன் தமிழர்களுக்கு முரண் இருக்கிறதா என்ற திசையில் இருந்தது. துண்டுப் பிரசுரங்கள், மொட்டைக் கடிதங்கள், ஏற்கனவே நடைபெற்ற தீ வைப்பு சம்பவங்கள் என்று ஆதாரங்கள் போதிய அளவு இருந்தும் எந்த கேள்வியும் “இனவாதிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம்” என்ற கோணத்தில் கேட்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த விசாரணையில் அரச தரப்பு இனவாத கோணத்தில் விசாரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்தற்கான ஆர்வமே அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை. அல்லது எங்களுடைய கண்களிற்கு புலப்படாமல் ஏதாவதை தவறவிட்டுவிட்டோமா? ஓய்வுபெற்ற காவலதிகாரி ஓய்வுபெற்ற காவலதிகாரியான Hannes Tarnutzer (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வருடங்களிற்கு முன்னர் இந்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர். Landquart இல் அமைந்துள்ள ஒரு கஃபேயில் அவரை சந்தித்தோம். விசாரணை சம்மந்தமான ஆவணங்களை அவரிடம் காட்டினோம். முழுமையான விசாரணை ஆவணங்களை அவரும் இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கின்றார். 35 வருடங்கள் சென்றிருந்தாலும் அவர் இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரின் பணிக்காலத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்தில் இந்த கூர் சம்பவத்தில் மட்டுமே உயிர்கள் பலியாகியிருந்தன. எரிந்த உடல்களின் நாற்றம் இப்பொழுதும் அவருக்கு நினைவிலிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற வசதிகள் அப்பொழுது இருந்திருந்தால் கண்டிப்பாக கொலைகாரர்களை பிடித்திருக்கமுடியும் என்றார். எங்களிடமிருந்த அரச ஆவண கோப்புகளை கொடுத்ததும் “இவ்வளவு தானா” என்று வியந்தார். ஒரு திருட்டு சம்பவத்திற்கே 15 கிலோ ஆவணக் கோப்புகள் சேர்ந்த சம்பவம் ஒன்று தனக்கு தெரியும் என்றார். இது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கோப்புகள். சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் சம்பவ இடத்தின் அருகிலிருப்பவர் தன்னுடைய காரில் இருந்து யாரோ பெட்ரோல் திருடிவிட்டார்கள் என்ற தகவலை ஆவணத்தில் வாசித்தார். திருடியவர்கள் ஒரு துணியை வைத்து மீண்டும் அடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் டேங்கின் மூடி கண்டுபிடிக்கப்படவில்லை. கைரேகை ஏன் எடுக்கப்படவில்லை என்று Tarnutzer கேட்டார். துண்டுப்பிரசுரம், மொட்டைக் கடதாசி, கைரேகை என்று எதுபற்றியும் விசாரிக்கப்படவில்லை என்று வியந்து போனார். அயலவர்களிடம்கூட விசாரணை நடைபெறவில்லை என்பது அவருக்கு இன்னும் வியப்பை கொடுத்தது. சம்பவம் நடைபெற்ற மாநிலத்தில் இப்படியான சம்பவங்களை விசாரணை செய்வதற்கு வல்லுநர்கள் பற்றாக்குறை இருந்ததனால், சூரிச் மாநிலத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். சூரிச் தடயவியலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் நுழைவாயில் காவல்துறையினர் வரும் போது திறந்திருந்ததாகவும், ஆனால் உள்ளே இருந்தவர்கள் தங்கள் கதவினை பூட்டியதாகவும் உறுதியாக சொன்னதை கவனித்தார். ஆனால் அவர்களும் விசாரணை கோணத்தை வேறுதிசையிலையே கொண்டு சென்றார்கள். மாடிப்படியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மெழுகு டப்பா மீதே அவர்களின் விசாரணை தொடர்ந்தது. அந்த டப்பாவை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அதனுள் இருந்த மெழுகு தான் தீப்பிடிக்க காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு அந்த வல்லுநர்கள் வந்திருந்தார்கள். இது கூர் காவல்துறையினரின் முடிவுடன் முரண்பட்டிருந்தது. கூர் காவல்துறையினர் மின்சாரத்தினால் தான் தீப்பிடித்திருந்தது என்ற முடிவில் இருந்தார்கள். ஆனால் சூரிச் வல்லுநர்கள் அதற்கு சந்தர்ப்பம் இல்லை, ஏனென்றால் தீ பிடித்த நேரத்தில் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன என்றும், மின்சார பெட்டி வேறொரு மாடியிலும், தீ வேறொரு மாடியிலும் பற்றிக்கொண்டதால் இரண்டிற்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை என்றும் மறுத்தனர். உயிர்களை பலிவாங்கும் நோக்கில் தீ வைக்கப்பட்டிருக்கிறது என்பது தனக்கு இதை வாசிக்கும்போது தெளிவாக தெரிகிறது என்றார் Tarnutzer. என்னமோ ஒரு மெழுவர்த்தி எரிந்துவிட்டது போல் உதாசீனமான விசாரணை நடந்திருக்கிறது. அவர் இன்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார். மெழுகு டப்பாவில் மெழுகு தான் இருந்ததா அல்லது பெட்ரோல் போன்ற வேறேதாவது இருந்ததா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரித்திருக்க வேண்டும். எல்லா தாள்களையும் மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்துவிட்டு “கொப்பர்தாமி” என்று ஜேர்மன் மொழியில் மெதுவாக திட்டினார். இரண்டு முக்கியமான விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். 10.10.1989 அன்று சூரிச் தடயவியலாளர்கள் அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐந்து நாட்கள் முன்னர் 05.10.1989 அன்று அதாவது தீ வைக்கப்பட்டு மூன்று மதங்களின் பின்னர், இந்த சம்பவத்தை விசாரித்த விசேட குழு விசாரணை முடிவை கோரியிருந்தது. அதாவது சூரிச் தடயவியலாளர்களின் அறிக்கை வர முன்னரே இந்த விசாரணையை முடித்துக்கொள்ள கூர் காவல்துறை விரும்பியிருக்கிறது. தரமற்ற காவல் மற்றும் வழக்கு விசாரணை Alexanderstrasse இல் நடந்த சம்பவத்தின் விசாரணை மிக தரமற்ற ஒன்று என்பது தெளிவாகிறது. மாநில நீதிமன்றம் இதில் நடந்துகொண்ட விதம் கூட கேள்விக்குரியதாக இருக்கிறது. அரச தரப்பு இந்த விசாரணையை போதுமற்ற சாட்சியங்கள் இல்லாததனால் முடிவுக்கு கொண்டுவருகிறது என்று எழுதியிருக்கிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரும், பாதிக்கப்பட்ட குடும்பமும் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. விசித்திரமாக இம்முறை அதற்காக வேறொரு காரணத்தை நீதிமன்றம் முன்வைத்தது. தீ யாரோ ஒருவரால் வைக்கப்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும், இறுதிவரை துண்டுப்பிரசுரங்கள் யாரால் விநியோகிக்கபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெற்றிருந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு!. ஆனால் ஏன் இந்த கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை. சுவிஸ் நாட்டு சட்டத்தை பொறுத்தவரையில் ஒரு விசாரணையின் இறுதி எல்லைவரை சென்று கிடைக்கக்கூடிய அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படவில்லை. இந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதிகளை பேட்டியெடுக்க விரும்பினோம். ஒருவர் இறந்துவிட்டார். ஏனைய உயிருடன் இருபவர்களிற்கு இந்த சம்பவம் நினைவிலில்லை. இது பற்றி மாநில அரசின் விளக்கத்தை கேட்டு எழுதினோம். இந்த சம்பவம் முழுமையாக விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதென்பதால் அது பற்றி அவர்கள் விளக்கம் தரமுடியாது என்றார்கள். இங்கே ஒன்றை தெளிவிவுபடுத்த வேண்டும். பொதுவாக மாநில காவலதிகாரிகள் இப்படி அக்கறையின்மை காட்டுவதில்லை. இந்த மாநிலத்தில் நடந்த வேறு சம்பவங்களில் திறம்பட விசாரித்து சிறப்பாக செயல்பட்டவர்கள் தான். உதாரணமாக க்ளோஸ்ட்டரில் நடந்த தீ சம்பவத்தை கூறலாம். வெறுமனே பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்த போதும், கவனத்துடனும் அக்கைறையுடனும் விசாரணையை மேற்கொண்டிருந்தார்கள். இந்த க்ளோஸ்ட்டர் சம்பவத்தில் கார் டயர் தடயம் தொடங்கி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வரை தீவிரமான விசாரணை மேற்கொண்டார்கள். மொட்டைக் கடதாசிகள் எந்த வகையான தட்டச்சுஇயந்திரத்தில் எழுதப்பட்டது என கண்டறிந்தார்கள். இந்த சம்பவத்தின் விசாரணை முற்றுப் பெறாவிட்டாலும், முழுமையான விசாரணையை நடத்தி போதிய அளவு முயற்சி செய்திருப்பது தெளிவாகிறது. ஆனால் கூர் சம்பவத்தில் மட்டும் ஏன் இந்த முரண்? இத்தனைக்கும் க்ளோஸ்ட்டர் சம்பவத்தை விசாரித்த அதே நீதிபதிகள் தான் கூர் சம்பவத்திலும் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். நான்கு தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுடைய ஆராய்ச்சியில் தெளிவாக தெரிகிறது. இதில் சம்மந்தப்பட்ட அரசு தரப்பு சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதுடன் சட்டப்படியும் விசாரிக்காமல் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். ஏன் இந்த மெத்தனப் போக்கை கடைப்பிடித்தார்கள் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பு கூட சரியான முறையில் செயல்படவில்லை. இது தற்செயலாக நடந்த ஒன்றா அல்லது கவனக்குறைவால் நடந்த ஒன்றா என்று தெரியவில்லை. Frischknecht தன்னுடைய புத்தகத்தில் அன்றைய நிலவரத்தை இப்படி சித்தரித்திருந்தார், “இனவாதத்தை மென்மையான கோணத்தில் பார்ப்பது காவல்துறையினரிடம் மட்டுமல்ல, சட்டத்துறையிலும் காணப்படுகின்றது”. துக்கம் ஓய்வு பெற்ற காவலதிகாரி Tarnutzer எங்களை அடிக்கடி தொடர்புகொண்டு அந்த சிறுவர்களின் குடும்பம் பற்றியும், எங்களுடைய ஆராய்ச்சி பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இறுதியாக அந்த சிறுவர்களின் ஆசிரியராக இருந்த Helena Graf என்பவரின் உதவியுடன் அவர்களின் பெற்றோரை கண்டுபிடித்தோம். இவர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், சிறுவர்களின் கல்லறைக்காக நிதி சேகரித்துக் கொடுத்தவர், பெண்கள் தினத்தில் சிறுவர்களின் அம்மா ஓய்வெடுக்கவேண்டும் என்றெண்ணி அவருக்காக அவரின் துப்பரவு பணியை அன்றைய நாள் பொறுப்பெடுத்து செய்து வருபவர். Helena அந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். குடும்ப நிகழ்வுகளில் பங்குபற்றுவார். மிரட்டல் கடிதங்கள் இவருக்கும் வந்தது. ஒரு ஞாயிறு மதியம் ஓய்வுபெற்ற Helenaவை St.Gallen புகையிரதநிலையத்தில் சந்தித்தோம். அவருடைய காரில் எங்களை கந்தையா குடும்பத்தினரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வசந்தியும் அவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டார்கள். மேனா வேலைக்குச்சென்றிருந்தார். பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். எங்களிற்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு முரளி மற்றும் முருகன் பற்றி வசந்தி பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இருந்த சிகப்பு நிற சைக்கிள், நேரத்துக்கு வீட்டிற்கு வராத பிள்ளைகளை தேடி விளையாட்டு திடலிற்கு போன சம்பவம் என்று அவர் சொல்லிக்கொண்டே போனார். சிலநேரங்களில் அழுதார். சிலநேரங்களில் சிரித்தார். அவரின் கணவர் அருகில் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த சம்பவம் நடைபெற்று ஒரு தடவை கூட காவல்துறையினர் தங்களை கூப்பிட்டு விசாரிக்கவில்லை என்றார் வசந்தி. மாரடைப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், மனஅழுத்தம் என்று மருந்துகளுடன் நாட்களை கழித்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் வசந்தியும் கணவரும் எப்பொழுதுமே வேலைசெய்து கொண்டே இருந்தார்கள். சிலவேளைகளில் இரண்டு வேலைகளை செய்தார்கள். ஒரு பிள்ளையின் இழப்பை தவிர துக்கமான ஒன்று பெற்றோர்களிற்கு இருக்கமுடியாது. அது ஒரு கொலையென்றால் துக்கத்துடன் சேர்ந்து இன்னும் மேலதிகமான உணர்வுகள் தோன்றும். ஆனால் கந்தையா குடும்பத்திற்கு பழிவாங்கும் எண்ணம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவர்களிற்கு இருப்பதெல்லாம் தங்களிற்கோ அல்லது தங்களின் மகளிற்கோ, பேரப்பிள்ளைகளிற்கோ எதுவும் நடந்துவிடும் என்ற அச்ச உணர்வு மட்டுமே. நமக்கெல்லாம் பாதுகாப்பான சுவிஸ் நாடு, அவர்களிற்கு ஆபத்தான நாடாக இருக்கிறது. முரளியும் முகுந்தனும் கொலைசெய்யப் பட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். இனி கொலைகாரர்களை கண்டு பிடித்தாலும் தங்களுடைய பிள்ளைகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் குறைந்த பட்சம் அவர்களை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கான விடை என்றாலும் கிடைக்கும் என்கிறார்கள். கொலைகாரர்கள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு வசந்தி “தமிழர்களும் மனிதர்கள்தான், ஏதாவது பிரச்சனையென்றால் எங்களுடன் பேசுங்கள். எங்களை கொலை செய்யாதீர்கள்” என்று சொல்வேன் என்றார். Helena வசந்தியின் கையை பிடித்து ஆறுதல்படுத்தினர். Helena இறுதிவரை இந்த விசாரணை தொடர்வதற்கான முயற்சியை செய்துகொண்டே இருந்தார். ஒரு நண்பியாக மட்டுமல்லாமல், இந்நாட்டு மக்கள் சார்பாகவும் அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்க விரும்பினார். நாங்கள் விடைபெறுவதற்கு முன்னர் வசந்தி எங்களிற்கு இரண்டு விடயங்களை காட்ட விரும்பினார். கையை மடித்துவிட்டு “இங்கே பாருங்கள்” என்று முரளி மற்றும் முகுந்தன் என்று தன்னுடைய கையில் பச்சைகுத்தியிருப்பதை காட்டினார். “என்னுடைய இதயப் பக்கமா குத்தியிருக்கிறேன்” என்றார். தொடர்ச்சியாக பலவருடங்களாக கல்லறைக்கு சென்றுவந்திருக்கிறார். சிலநாட்களில் இரண்டுமுறையும் சென்றிருக்கிறார். ஆனால் இருபது வருடங்களின் பின்னர் அந்த கல்லறை விலக்கப்பட்டுவிட்டது. வசந்திக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தான் இனி எங்கே எப்படி துக்கத்தை அனுஷ்டிப்பது என்று தெரிந்திருக்கவில்லை? எனவேதான் தன்னுடைய கையில் அவர்களின் பெயர்களை பச்சைகுத்தியிருக்கிறார். சாம்பிராணி வாசம் வீசுகின்ற மேல் மாடிக்கு எங்களை அழைத்துச்சென்றார். சிறிய சிலைகள், கடவுள் படங்கள் என்று அறை நிரம்பியிருந்தது. முரளி மற்றும் முகுந்தன் இருவரின் புகைப்படமும் அங்கே இருந்தது. இந்த St.Gallen மாநிலத்தில் இந்த சிறிய அறை மட்டும் தான் அவர்களின் நினைவிடமாக இருக்கிறது. ஒடுக்கல் சென்ற ஆண்டு இந்த சம்பவத்தில் ஒரு திருப்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றின. சோஷலிச கட்சியின் கிராமசபை உறுப்பினரான Jean-Pierre Menge இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து கொல்லப்பட்ட நால்வருக்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை மாநில அரசு மறுத்துவிட்டது. அதை ஒரு இனவாத கொலைச் சம்பவமாக அவர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டாலும், 35 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவுச்சின்னம் வைப்பது ஏனைய இனவாத சம்பவங்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துவிடும் என்று அஞ்சினர். அனைவருக்கும் நினைவுச்சின்னம் வைக்கவேண்டிய கோரிக்கைகள் வலுத்துவிடும் என்ற காரணத்தை கூறி மறுத்துவிட்டார்கள். இதை வரலாற்றாசிரியர் Damir Skenderovic இடம் கூறினோம். அவர் நம்பமறுத்தவராக தலையாட்டினார். சுவிசில் இனவாதம் இல்லையென்பதை வெளியுலகிற்கு காட்ட விரும்பியே இப்படியானவற்றை நிராகரிக்கிறார்கள் என்றார். Damir Skenderovic பிரிபேர்க் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக பணிபுரிகிறார். சுவிஸ் நாட்டில் இனவாதத்தை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரே ஒரு வரலாற்றாசிரியர் இவர் மட்டுமே. சுற்றியுள்ள அண்டை நாடுகளில் இந் நிலை இல்லை என்கிறார். ஏனைய நாடுகளில் அரசாங்கமும் விழிப்புணர்வளித்து வருகிறது. உதாரணமாக ஸ்வீடன், ஜேர்மன் போன்ற நாடுகளில் காவல்துறையினருக்கு இனவாதத்தை கையாளும் விதம் பற்றிய படிப்பு வழங்கப்படுகிறது. ஏனைய நாடுகளை விட இங்கே இனவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றபோதும், எதுவுமே நடக்காதது போல காட்டிக் கொள்கிறார்கள். இப்படியான விடயங்களில் மறதி என்பது வசதியான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது. இனவாதம் ஐரோப்பா முழுவதும் தற்பொழுது தலைதூக்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதனை எதிர்த்து போரிடுவதற்கு அரசு முன்வர வேண்டும். கூர் சம்பவம் பற்றிய எங்களுடைய முடிவுகளை அவரிடம் தெரிவித்த போது, அவர் மாநில அரசின் தோல்வி என்றார். இதற்கு ஒரு குழு அமைத்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த ஏதாவது புதிய சாட்சியோ, ஏன் கொலைகாரர்களே முன்வந்தால் கூட, இனி இந்த சம்பவத்தில் யாரையும் தண்டிக்க முடியாது. சுவிஸ் நாட்டு சட்டத்தின் படி கொலைக்கான தண்டனை 30 வருடங்களின் பின்னர் காலாவதியாகிவிடும். அப்படியென்றால் இந்த ஆராய்ச்சி எதற்கு? செய்தி எதற்கு? என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிடப் போகிறது? இந்தச் செய்திகூட ஒரு நினைவுச் சின்னமாக இருக்கலாம். இதன் பின்னராவது சிலரிற்கு அந்த சிறுவர்களின் பெயர் நினைவில் வந்து போகட்டும். “”முரளி & முகுந்தன்”” கபிலன் (சுவிஸ்) 23.01.2025 மூலம் : https://www.tagesanzeiger.ch/brandanschlag-chur-1989-starben-vier-menschen-aus-sri-lanka-211092696091 காணொளி-1: https://www.srf.ch/play/tv/rundschau/video/brand-in-chur?urn=urn:srf:video:2879bfcd-a6f5-4874-85a8-ebbfb709f27b காணொளி-2: https://www.srf.ch/play/tv/drs-aktuell/video/asylanten-batzen-thun?urn=urn:srf:video:b406228c-659b-445a-86e9-a7e23b5ee83d https://sudumanal.com/2025/01/23/முரளி-மற்றும்-முகுந்தனை/
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் பிரபாகரன் மணிக்கணக்கில் சந்திப்பு நடக்கவில்லை; பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லைஎன வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. https://akkinikkunchu.com/?p=309460
-
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு January 25, 2025 11:56 am மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும். இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை செயலிழப்பு ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். பேசுவதில் தடை ஏற்படும், உயர் இரத்த அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் என கூறப்படுகிறது. இது பெரியவர்களையே அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புனேயில் இந் நோயினால் 47 ஆண்கள் 26 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அனைவருக்கும் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவொரு தொற்றுநோய் அல்ல. என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. https://oruvan.com/gillion-baer-syndrome-causing-muscle-paralysis-73-affected-in-pune/
-
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் கைது
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் கைது 25 Jan, 2025 | 05:19 PM கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/204870
-
இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 25 Jan, 2025 | 05:20 PM (நமது நிருபர்) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் செயன்முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தொடர்புடைய தரப்பினருக்கு இடையிலான கருத்து பரிமாற்றம் மற்றும் இது குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை அடையாளம் காணுதல் என்பனவும் இதன்போது இடம்பெற்றன. ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தலைமை ஆலோசகரும் இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவருமான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் அதன் பணிப்பாளர் சஞ்சய கருணாசேன ஆகியோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததுடன், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டம் குறித்து நீண்ட விளக்கமும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நோக்குக்கு அமைவாக செயல்படுத்தப்படும் டிஜிட்டல் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை நெறிப்படுத்துவதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாக அமைந்தது. https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add