Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இளவயதில் ஈடுபட்டிருந்த மாவை ஐயா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தும் உட்கட்சி மோதல்களைத் தடுக்கமுடியாத ஆளுமையற்றவராக இருந்தார். தனது இயலாமையால் கட்சி சீரழிவைச் சந்தித்ததையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார். அன்னாரின் இறப்பினால் துயருற்றிருக்கும் தமிழரசு கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
  2. அருச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிப்பு adminJanuary 29, 2025 written by admin January 29, 2025 இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா். அத்துடன் குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/210496/
  3. யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் நாளை மீண்டும் பதவியேற்பு January 29, 2025 5:36 pm யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளதாக பல்கலைக்கழக பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தனது பதவியிலிருந்து விலகுவதாகப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பேராசிரியர் ரகுராம் மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதவி விலகிய கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். https://oruvan.com/jaffna-university-professor-raghuram-to-take-oath-again-tomorrow/
  4. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டை – நாமல் குற்றச்சாட்டு January 29, 2025 2:23 pm தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளமை தெளிவாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வழக்கு அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மேலும் குறித்த எக்ஸ் பதிவில், “கிரிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கில் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் படித்தேன். இந்த விவகாரம் முதன்முதலில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது விசாரிக்கப்பட்டபோது, 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது, நீதி வெல்லும் என்று நம்புகிறேன். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை புனைவதன் மூலம், நாட்டை நிர்வகிப்பதில் அவர்கள் செய்த தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான சுமையைக் குறைக்கவும் முடியும் என்று நம்புவதாகத் தெரிகிறது. இருப்பினும், அவர்களின் குறைபாடுகள் விரைவில் அனைவரும் காணும் வகையில் வெளிப்படும். ராஜபக்சக்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் அரசாங்கம் தனது தோல்விகளை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. நீதி எல்லாவற்றிற்கும் மேலாக வெல்லும் என்று நான் உறுதியாகவும் உண்மையாகவும் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/namal-alleges-political-persecution-against-rajapaksa-family/
  5. யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர January 29, 2025 2:40 pm ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. https://oruvan.com/president-anuradhapura-to-visit-jaffna/
  6. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது January 29, 2025 4:15 pm நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது. https://oruvan.com/member-of-parliament-ramanathan-archuna-was-arrested-a-short-while-ago/
  7. போட்டியாளர்களைக் காணவில்லை.. @suvy ஐயா, @சுவைப்பிரியன் அண்ணா இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லைப் போலிருக்கு!
  8. பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறியதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய அனுர அரசாங்கம் என்ன செய்கிறது? முன்னையை அரசாங்கங்கள் செய்த அதே வேலையைதான் செய்கிறது. நான் ஒரு அரச உத்தியோகத்தர். என்னை விசாரிப்பதற்கு ஒரு முறை இருக்க வேண்டும். பாடசாலைக்குள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவ்வித அனுமதியும் இன்றி எப்படி வர முடியும்? முறைப்பாடு, வழக்கு எதுவும் இல்லை. குற்றவாளிகளைப்போல் எங்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த அரசாங்கம் வந்தாலும் எமது மக்களுக்கான (தமிழ் மக்களுக்கான) நெருக்கடிகள் தொடரும்.” கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலய ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஜனவரி 20ஆம் திகதி பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்காமல் வகுப்பறைக்குள் நுழைந்து விசாரணை நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இதுத் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார். விசாரணையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின்போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்துள்ளார். தனக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடோ, வழக்கோ இல்லாத நிலையில், கடந்த ஜனவரி 20ஆம் திகதி, வலயக் கல்வி அதிகாரிகளுக்கோ, பாடசாலை அதிபருக்கோ அறிவிக்காமல், தனது வகுப்பறைக்கு நேரடியாக வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் தவறை புரிய வைத்ததாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் வலியுறுத்துகிறார். . அங்கிருந்து வெளியேறி அதிபரைச் சந்திக்கச் சென்ற அதிகாரிகள், அதிபருடன் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடிவிட்டு மீண்டும் அவரது வகுப்பறைக்கு அருகில் வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். “கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் உங்களை கைது செய்ய வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறினேன். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் என்னுடைய அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும். என்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனச் சொன்னேன்.” பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 2025 ஜனவரி 21ஆம் திகதி தெரிவித்திருந்தார். “அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும். https://akkinikkunchu.com/?p=309992
  9. காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு Published By: Rajeeban 29 Jan, 2025 | 11:18 AM காசாவின் மக்களை எகிப்து ஜோர்தானில் மீள்குடியேற்றவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை எகிப்தும் ஜோர்தானும் நிராகரித்துள்ளன. எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களில் வசிக்கவேண்டும்,அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவேண்டும்,சர்வதேச சட்டங்களை மதிக்கவேண்டும் என்பதை ஆதரிக்கின்றது என அறிக்கையொன்றில் எகிப்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியேற்றுவதை எகிப்திய மக்கள் எதிர்க்கின்றனர். பாலஸ்தீனியர்கள் சிலரை சினாய் மீள்குடியேற்றுவது சுலபம் ஆனால் அவர்களை எகிப்திற்குள் உள்வாங்கவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம் என எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பட்டெல் சிசி சமீபத்தில் எகிப்தின் இராணுஅதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியேற்றுவதை எகிப்திய மக்கள் எதிர்ப்பார்கள் என கெய்ரோவின் அமெரிக்க பல்கலைகழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர் போல் சுலிவன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் எகிப்தின் ஜனாதிபதி எவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது டிரம்பின் இந்த யோசனையை எகிப்தினை ஸ்திரதன்மை இழக்க செய்யும்; பிராந்தியம்ஸ்திரதன்மையை இழக்கும் நிலையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ள ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சர் பாலஸ்தீன் பாலஸ்தீனிற்கானது ஜோர்தான் ஜோர்தானிற்கானது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்தானும் எகிப்தும் மேலும் அதிகளவில் காசா மக்களை உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்துகாசாவில் இனச்சுத்திகரிப்பு குறித்து அச்சம் வெளியாகியுள்ளது. காசாவை சுத்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்;ட் டிரம்ப் காசாவிலிருந்து மேலும் அதிகளவு மக்களை எகிப்தும் ஜோர்தானும் உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்தை பாலஸ்தீன ஜிகாத் அமைப்பு கண்டித்துள்ளது.இது யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டிரம்பின் கூற்று கண்டித்தக்கது என தெரிவித்துள்ள பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பு டிரம்பின் கருத்துக்கள் யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் கட்டமைப்பிற்குள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்குள் பொருந்தக்கூடியவை, எங்கள் மக்களை தங்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது குறித்து டிரம்ப் கருத்து தெரிவி;க்கின்றார் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் இந்த கூற்றை கருத்தில்கொள்வது அவசியம் கடந்த ஒன்றரை வருட யுத்தத்தின்போது இவ்வாறான கருத்து ஏற்கனவே வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள கத்தாரில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் அப்துல்லா அல் அரியன்,யுத்தத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்,பாலஸ்தீனிய நிலப்பரப்பை முடிந்தளவு இனச்சுத்திகரிப்பு செய்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார் https://www.virakesari.lk/article/205196
  10. அநுர அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கும் விவசாயிகள்! தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்கள். நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத் துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ள போதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. 'நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக' விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அத்துடன் விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் நெல்லுக்கான உத்தரவாத விலையில் சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் வெற்றிலை போடுவது அரசாங்கத்துக்கு தேவையற்றதொரு விடயமாகும். விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால் கோத்தாபய ராஜபக்சவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.[ஒ] https://newuthayan.com/article/அநுர_அரசுக்கு_எதிராக_முதலில்_போராட்டத்தில்_இறங்கும்_விவசாயிகள்!
  11. சாவகச்சேரியில் மீண்டும் மருத்துவ பெருநெருக்கடி சாவகச்சேரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்பான மருத்துவர் இடமாற்றலாகிச் சென்றுள்ளார். பதில் மருத்துவர் பொறுப்பேற்காத நிலையில் இடமாற்றத்தின் அடிப்படையில் அவரை விடுவிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த மருத்துவர் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று மாற்றலாகிச் சென்றுள்ளார். அத்துடன், ஏற்கனவே சில மருத்துவர்களுக்கும் அங்கு பற்றாக்குறை நிலவிய நிலையில் தற்போது சாவகச்சேரி மருத்துவமனையில் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சாவகச்சேரி மருத்துவமனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட விரும்பத்தகாத குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே மருத்துவர்கள் அங்கு பணியில் ஈடுபடுவதற்கு முன்வருவதில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து சாவகச்சேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டிய மூன்று மருத்துவர்கள் இன்னமும் தங்களின் கடமைகளை அங்கு பொறுப்பேற்கவில்லை. ஆதலால், மருத்துவமனையின் கிளினிக் பிரிவிலும், வெளிநோயாளர் பிரிவிலும் கடந்த சில தினங்களாக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சாவகச்சேரியில்_மீண்டும்_மருத்துவ_பெருநெருக்கடி
  12. யாழ். பல்கலை விவகாரத்தில் அறிக்கை கோரியது அமைச்சு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் துறைசார் அமைச்சால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சால் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அமைச்சு உரிய வகையில் தலையீடு செய்யும். அனைத்து பல்கலைக்கழக கட்டமைப்பிலும் கல்வி நடவடிக்கை தடையின்றித் தொடரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, தடையாக உள்ள காரணிகளுக்கு தீர்வு வழங்கப்படும். அதேபோல வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்னர் அமைச்சுடன் பேச்சு நடத்த வேண்டும். அதில் தீர்வு இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கலாம். அதுதான் பொருத்தமாகவும் இருக்கும் - என்றார். https://newuthayan.com/article/யாழ்._பல்கலை_விவகாரத்தில்_அறிக்கை_கோரியது_அமைச்சு
  13. ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்! adminJanuary 29, 2025 ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கல் மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும். குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை. எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும். சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும். அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொணடு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும். இதன் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும கூட, அரசியலமைப்பு விடத்தில் ஒன்று பட வேணடிய தேவை உள்ளது. இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை. அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேணடும். ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின் கட்சிகள் தமிழ் தேசியம் என்ற பெயரை வைத்திருப்பதிலும், தேசியம் பேசுவதிலும் எந்த பயனும் இல்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன். அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை. 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும். இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210456/
  14. தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1) January 28, 2025 — வி.சிவலிங்கம் — சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் ’13வது திருத்தத்தினை தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பி கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இக் கட்டுரை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னதான நிகழ்வுகளின் பின்னணியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டிருந்தது. குறிப்பாக, 13வது திருத்தம் தொடர்பாக வழமையாக இந்திய தரப்பினர் அதனை நடைமுறைப்படுத்துவதை வற்புறுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை வழக்கிற்கு மாறாக தற்போதைய அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருப்பதும் அது தொடர்பாக அரசியல்வாதிகள் வெவ்வேறு விளக்கங்களை வழங்குவதுமாக நிலமைகள் மாற்றமடைந்துள்ளன. இவரது கட்டுரையின் சாராம்சம் இந்திய தரப்பில் காணப்படும் அணுகுமுறை மாற்றங்களையும், தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள பலவீன நிலமைகளின் பின்னணியில் காத்திரமான மாற்றங்களை மேற்கொள்ளும் தகுதி தமிழ் தலைமைகள் மத்தியில் உள்ளதா? என்ற கேள்விகளையும் எழுப்பி ‘தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கிணங்க நிதானமாகச் சிந்தித்து செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால் இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து உண்டு’ என்ற எச்சரிக்கையுடன் முடித்திருந்தார். இதன் அடிப்படைச் சாராம்சங்களைப் படித்த வேளையில் இரு அம்சங்கள் தெளிவாகப் புலப்பட்டன. அதாவது மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் உள்ளதா? என்பதும், அவ்வாறு இல்லையெனில் தமிழ் மக்கள் மத்தியில் அதற்கான புதிய சக்திகள் தோற்றம் பெறும் வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வியும் எழுகிறது. தற்போதைய அரசியல் அடிப்படை மாற்றங்களை அவதானிக்கும் போது இவ்வாறான இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பான சந்தேகங்கள் கடந்த காலத்தில் பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் இணைந்து இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினைப் பலவீனப்படுத்திய வேளையில் அதற்குப் பதிலாக புதிய இலங்கை- இந்திய நட்புறவு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்திருந்தார். அவ்வாறான ஒரு அரசியல் சூழல் இன்றும் உருவாகிறதா? என்ற கேள்விக்கான பதிலைத் தேடுவதாகவே இக் கட்டுரை எழுந்தது. அறகலய ======= இலங்கையின் இன்றைய அரசியல் அடிப்படை மாற்றங்களுக்கான உந்து சக்தி என்பது 2022ம் ஆண்டு மே மாதவாக்கில் இலங்கையில் ஏற்பட்ட ‘அறகலய’ என்ற எழுச்சிகளே காரணமாக அமைந்தன என்பதும், அப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும் சக்தியை எந்த அரசியல் கட்சிகளோ, சக்திகளோ அவ் வேளையில் வழங்கத் தயாராக இருக்கவில்லை என்பதும், இருப்பினும் காலப் போக்கில் அப் போராட்டங்களின் மைய இயக்குவிசை என்பது ஜனநாயக மறுப்பு, ஊழல், குழு ஆட்சி, இனவாதத்தை உக்கிரப்படுத்தி சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மேற்கொள்ளும் சட்ட விரோத ஆட்சி, குழு மற்றும் குடும்ப மற்றும் இராணுவ ஆதிக்க வழிமுறை போன்றவற்றின் ஒட்டு மொத்த தோல்வியின் விளைவு என்பதை ஜே வி பி /தே ம சக்தி (JVP/NPP) என்பன இணைந்து புரிந்து கொண்டதன் விளைவாக 2024ம் ஆண்டு தேர்தலின் முடிவுகளை அவர்கள் அறுவடை செய்தனர். இத் தேர்தல் முடிவுகள் என்பது தேசிய மக்கள் சக்தியின் மீதான நம்பிக்கை என்பதை விட மாற்று அரசியல் தெரிவாக வேறெதுவும் இல்லாத நிலையிலும், இப் பிரிவினரே நாடு தழுவிய அடிப்படையில் கட்சிக் கட்டுமானங்களை வைத்திருந்த நிலையிலும் மக்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த அரசியல், சமூக, பொருளாதார விரக்தி நிலமைகளை வாக்குகளாக மாற்ற முடிந்துள்ளது. அது மட்டுமல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரே சக்திகள் என அவர்களை மக்கள் ஏற்கெனவே அறிந்துள்ள போதிலும் இடதுசாரிக் கொள்கைகள் தொடர்பாக வலதுசாரிக் கட்சிகள் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பிரமைகள் குறிப்பாக மத நம்பிக்கைகள், சொத்துகளை வைத்திருப்போருக்கிருந்த அச்சங்கள் போன்றன அவர்களை அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான தடைகளாக இருந்தன. ஆனால் 2020 களில் தோற்றம் பெற்ற தேசிய மக்கள் சக்தி அமைப்பும், அதில் செயற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மத்திய தர வர்க்க சிந்தனையாளர்களின் இணைப்பும் ஜே வி பி இன் கவனத்தில் பட்டதன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் 2022 இல் தோற்றம் பெற்ற ‘அறகலய’ நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் JVP/NPP இணைப்பினை புதிய வெளிச்சத்தில் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக அடையாளம் காட்டின. இந்த விளக்கங்களை முன்வைப்பதற்கான காரணம் எதுவெனில் தற்போதைய அரசியலை நாம் பழைய அரசியல் அடிப்படைகளை முன்வைத்து விபரிக்க முடியாது என்பதை விளக்கவேயாகும். குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் திறந்த பொருளாதாரத்தின் விளைவுகளும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை நாட்டின் ஜனநாயக கட்டுமானத்தைப் பலவீனப்படுத்தியதன் விளைவே என்பதையும் சாமான்ய மக்களும் உணரும் நிலை இம் மாற்றத்தின் தாக்கங்களால் ஏற்பட்டது. உதாரணமாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, பணவீக்கம், பண நோட்டுகளை அளவிற்கு அதிகமாக அச்சடித்து புழக்கத்திற்கு விட்டமையால் ஏற்பட்ட பொருட்களின் விலையேற்றம், வர்த்தகர்களால் ஏற்படுத்தப்பட்ட பதுக்கல்களும், செயற்கைத் தட்டுப்பாடுகளும், அரசு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்கத் தவறியதன் காரணமாகவும், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரிச் சலுகைகளை அறிவித்து பணக்காரர்களின் சேமிப்பை அல்லது வருமானத்தை அதிகரித்தமை, அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்குமிடையேயான ஊழல் நிறைந்த உறவு, இனவாதத்தை உக்கிரப்படுத்தி தேசிய இனங்களிடையே பகை நிலமைகளைத் தோற்றுவித்தமை எனப் பல்வேறு செயல்கள் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் உட்கூறுகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக சிங்கள பௌத்த மக்களின் பாதுகாப்பை உச்சரித்தவாறே, அதே சமூகப் பிரிவினருக்குள் உள்ள பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் அதிகாரத்தில் குறியாக மேற்கொண்ட செயல்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன. அத்துடன் நாட்டைப் பெருமளவில் வெளிநாட்டுக் கடனுக்குள் தள்ளிய ஆட்சியாளர்கள் அக் கடன்களின் மூலம் பாரிய கமிஷன்களைப் பெற்று அவற்றை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததினால் டொலருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவை யாவும் தற்போது ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக சாதாரண மக்களுக்கு அறிவூட்டியுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு காலத்தில் மத்தியதர வர்க்கத்தின் அல்லது அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களிலிருந்து மத்தியதர வர்க்கத்தினரால் மட்டுமே படிக்க அல்லது புரிந்து கொள்ள அல்லது அப் பிரிவினரின் நலன்களை மேம்படுத்த உதவிய நிலமைகளிலிருந்து மாறி சாமான்யனின் கைகளுக்குள் செய்திகள் சென்றுள்ளதன் விளைவாக அடிப்படை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அதாவது உண்மைகளின் தாற்பரியங்களை அறிந்து கொள்ளவும், சிந்திக்கவும், மாற்று யோசனைகளைப் பிரயோகிக்கவும் சாத்தியமானது. புதிய நிலைமைகளில் இருந்து மாற்றத்தை புரிதல் =============== இந்த நிலைமைகளின் பின்னணியில்தான் நாம் இன்றைய மாற்றங்களை அணுகுதல் வேண்டும். பழைய நிலைமைகளிலிருந்து நாம் இவற்றை அணுக முடியாது. ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் வேறொரு அரசியல் சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருப்போம். ஆனால் தற்போதைய அரசியல்வாதிகள் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை குறிப்பாக தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்களை, விழிப்புணர்வினை அடையாளம் காணத் தவறியுள்ளனர். இன்னமும் பழைய பாணியில் இனவாதம், இனங்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்து வாக்குகளைக் கொள்ளையிடுதல் போன்ற செயல்களால் மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் செயற்படுகின்றனர். உதாரணமாக, 2024ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் பாரிய அரசியல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இம் மாற்றத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாத சில சக்திகள் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படவில்லை எனவும், அவ் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை எனவும், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் ஏற்கெனவே அரச சார்பு சக்திகளுக்கு வாக்களித்த அதே மக்களே எனவும் எதுவித புள்ளி விபர ஆதாரங்களும் இல்லாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் நிலமைகள் அவ்வாறிருக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் எவ்வாறு சிங்கள மக்களின் வாக்குகளைக் கொள்ளை அடித்து அதிகாரத்தை ஜனநாயக விரோத நிலைக்குத் தள்ளி அதனால் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்தின் பின்னணிகளைப் புரிந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களோ, அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதத்தை முன்வைத்து தமிழ் மக்களில் பெரும்பகுதி மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்தது போலவே தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினரும் சரியான தருணத்தில் விழித்துக் கொண்டார்கள். இந்த வரலாற்றின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம் எதுவெனில் சிங்கள மக்கள் இன்று இனவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தவும், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கவும் புதிய பாதையைத் தெரிந்தெடுத்தார்களோ அதே போலவே தமிழ் மக்களும் ஜனநாயகம், தேசிய ஒருமைப்பாடு, இனவாதத்திற்கு எதிராக அணி திரள்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குதல், சகவாழ்வின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல் போன்ற அம்சங்களில் ஒன்றிணைந்து செயற்படும் புதிய அரசியலை நோக்கி நகர்ந்துள்ளனர். இதுவரை குறிப்பிட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தின் பின்னணியிலேயே இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 13வது திருத்தத்தின் எதிர்காலம் குறித்த பார்வை அமைதல் அவசியமானது. தமிழ் அரசியலின் கடந்தகால அணுகுமுறை என்பது அச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சமூகப் பிரிவினர் அம் மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக இருந்த பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற மக்களின் தேவைகளைப் பின்தள்ளி வெறும் தேசியவாத அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து தமது அரசியல் அதிகார இருப்பைப் பாதுகாத்தனர். அதே போலவே அரசாங்கத்துடன் இணக்க அரசியலை நடத்தி அரச உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவென நடத்திய அணுகுமுறைகளும் தமிழ் சமூகத்திலுள்ள உயர்மட்ட பிரிவினர்களின் தேவைகளையே பூர்த்தி செய்தனர். இதன் காரணமாகவே 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் குறும் தேசியவாத சக்திகளும், இணக்க அரசியல் செய்தவர்களும் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்ல, புதிய அரசியல் அணுகுமுறைகளுக்கான ஆரம்ப அடிப்படைகளும் கீழ் மட்டத்திலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. இம் மாற்றங்கள் தமிழ் அரசியலில் புதிய அரசியல் வழிமுறைக்கான பாதைகளைத் தோற்றுவித்துள்ளன. அதாவது கடந்த 75 ஆண்டுகால அரசியல் அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத வகையில் புதிய அரசியல் அடிப்படைகளைத் தோற்றுவிப்பது, அடுத்தது மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தவிர்க்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறைகளைத் தோற்றுவிப்பது என்பனவாகும். எனவே எதிர்கால தமிழ் அரசியல் என்பது மேற்குறித்த இரண்டு அம்சங்களையும் சமாந்தரமாகவும், தேசிய அளவிலான ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தல், இனவாத அரசியலுக்கான அடிப்படைகளை இல்லாதொழித்தல், ஊழலற்ற, சம வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் வகையிலான நிர்வாகக் கட்டுமானங்களைப் பரிபாலித்தல் என இன்னோரன்ன செயற்பாடுகளை நோக்கி நாடு திருப்பப்படுகிறது. மாற்றங்கள் குறித்த சந்தேகம் ================ இம் மாற்றங்கள் குறித்து பலருக்குச் சந்தேகங்கள் எழ வாய்ப்பு உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. நாட்டில் சட்டப்படியான ஊழலற்ற ஆட்சி, தேசிய இனங்களது அடையாளங்களை வளர்த்தல், பாதுகாத்தல் என்பவற்றுடன் நாட்டின் பல்லினத் தன்மையை வளர்க்கும் விதத்திலான புதிய தேசிய கட்டுமானத்தை உருவாக்குதல் என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பிற்கான விவாதங்களை நகர்த்தல் ஆரம்பமாகின்றன. இவ்வாறான மாற்றங்களுக்கான தயார்ப்படுத்தல்களின் போது கடந்தகால சிந்தனைகளிலிருந்து விடுபட முடியாது சிக்கித் தவிக்கும் அரசியல் சக்திகள் இந்த அரசின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருப்பது எதுவும் புதிய சங்கதிகள் அல்ல. உதாரணமாக தமிழர் தரப்பில் 13வது திருத்தம் புதிய அரசியல் யாப்பில் இல்லாதொழிந்தால் என்ன செய்வது? என்பது குறித்து தெளிவான பார்வை இல்லாத நிலையில் இந்திய அரசின் பொறுப்புகளை அடிக்கடி வலியுறுத்தி தமது பொறுப்புகள் என்ன? என்பதை மறைத்துச் செல்லும் விவாதங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் 13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுகளைத் தரவில்லை என்ற விவாதங்களை தொடர்ச்சியாக முன்வைத்துள்ள போதிலும், இவ்வாறான விவாதங்கள் இனவாத அடிப்படையிலானது என தமிழர் தரப்பில் இன்னமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றினைப் பின்னோக்கி ஆராய்ந்தால் குறிப்பாக பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மீள நோக்கினால் தமிழர் தரப்பின் மத்தியிலும் 13வது திருத்தத்திற்கு எதிரான சதிகள் அன்றும் மிக அதிகமாக இருந்திருப்பதை நாம் காணலாம். இவை குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியல் என்பது தனது பொருளாதாரத் தேவைகளை எந்த அடிப்படையில் அணுகுவது? அரசியல் அடிப்படைகளை எவ்வாறு அணுகுவது? என்பது குறித்த சில கருத்துக்களை இனி நாம் பார்க்கலாம். இன்றைய தமிழ் அரசியல் மாற்றம் என்பது பாரம்பரிய தேசியவாத சக்திகளினதும், அதற்குச் சேவகம் செய்த இதர பிரிவினரும் தமிழ் பிரதேசங்களில் வாழும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் அபிலாஷைகளைக் கைவிட்டதன் விளைவாக எழுந்த புதிய நிலமைகளே காரணம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். குறிப்பாக, தமிழ் தேசியவாதம் என்பது அச் சமூகத்திலுள்ள உயர் பிரிவினரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அவர்களால் ஒட்டு மொத்த சமூகத்தின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்க முடியவில்லை. குறிப்பாக அச் சமூகத்தின் கீழ்மட்ட பிரிவினரை அவை சென்றடையவில்லை. அதன் கோட்பாட்டு அடிப்படைகளில் காணப்பட்ட இறுக்கமான நிலைமைகளும், புதிய மாற்றங்களை உள்வாங்க முடியாத உள்ளார்ந்த நிலமைகளும் அத் தலைமைகளால் தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியவில்லை. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் அன்றாட வாழ்வுப் பிரச்சனைகள் அதாவது பொருளாதார வலுவாக்கம், கல்வி, சுகாதாரம், சமூக முன்னேற்றம் போன்றன இம் மக்களுக்குக் கிடைக்காத ஒன்றாக வெகு தூரத்தில் அமைந்திருந்தன. அத்துடன் இக் குறும் தேசியவாத சக்திகள் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் பிரதான அம்சங்கள் குறித்து எவ்வித பார்வையும் கொண்டிராதது மட்டுமல்ல, அம் மக்களுடனான உறவுகளையும் படிப்படியாக இழந்திருந்தனர். தமிழ் அரசியலில் பிரிவினை என்பது மிகவும் மறைமுகமாக செயற்படுவதால் தேசிய அளவிலான பொருளாதார கட்டுமானங்களில் இணைய முடிவதில்லை. அவ்வாறு இணைந்தால் பிரிவினைக்கான அடிப்படைகள் பலவீனமடைந்துவிடும் என்ற அச்சம் உள்ளுரக் காணப்படுகிறது. முதலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி நிர்வாக கட்டுமானங்களை கட்டுப்படுத்தினால் தம்மால் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தின் விளைவானதாகும். ஆனால் பொருளாதாரக் கட்டுமானமே அரசியல் கட்டுமானத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்ற அடிப்படை சமூக விஞ்ஞான விதியை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவிய திறந்த பொருளாதார அமுலாக்கத்திற்கு மிகவும் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சிப் பொறிமுறை அவசியமாகியது. இதன் காரணமாகவே தமிழர் தரப்பில் தெளிவான பொருளாதாரக் கொள்கையும் இல்லாமல் போயிற்று. 75 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பொருளாதாரக் கொள்கைகளும் இல்லாமல் வெறுமனே தமிழ் குறும் தேசியவாதத்தை மட்டும் நம்பிய தமிழ் அரசியல் தனது பிளவுபட்டுள்ள சமூகத்தைத் தொடர்ந்து வைத்திருந்தது. அத்துடன் படிப்படியாகவே தமிழ் பேசும் சமூகத்தின் முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தமது பொருளாதார நலன் கருதி தேசிய பொருளாதார கட்டுமானத்தின் பங்குதாரர்களாக மாறிச் சென்ற அதே வேளை வடக்கு, கிழக்கில் வாழும் பாரம்பரிய தமிழ் மக்களில் ஒரு பிரிவினரும் படிப்படியாக தேசிய பொருளாதாரக் கட்டுமானத்தின் பங்காளிகளாக மாறினர். எனவே தமிழ் அரசியல் தனது அழிவுக்கான பாதையைத் தானே தேடிக் கொண்டதன் விளைவுகளே எமது அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணிகளாகும். (தொடரும்…….) https://arangamnews.com/?p=11734
  15. மூளையில் இரத்தக்கசிவு… மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை-நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன? Vhg ஜனவரி 28, 2025 இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டரின் உதவியுடன் செயற்கைச்சுவாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அவருக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படும், அவரது உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் நிகழ்ந்தால் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவை சேனாதிராசாவின் நிலைமை கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதையும் மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. மருத்துவர்களால் சரி செய்ய முடியாதளவில் அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் இந்த அசாதாரண நிலைமையிலிருந்து மீண்டு வருகிறதா என்பதற்காக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். என்ன நடந்தது? இன்று அதிகாலை 4 மணியளவில் மாவை சேனாதிராசா வீட்டு குளியலறைக்கு செல்லும் போது கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் இருந்தே அவரில் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதல் வலுத்தது, கட்சிக்குள் தான் ஒதுக்கப்பட்ட விவகாரங்களினால் அவர் அதிக மனஅழுத்தத்தில் இருந்ததையும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சி மோதல் விவகாரங்கள் மற்றும் அவரை ஒதுக்கும் நடவடிக்கைகள் உச்சகட்டமடையும் சந்தர்ப்பங்களில் அவர் அதிக இரத்தஅழுத்தத்திற்கு உட்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முன்னதாக, அவர் சில மாதங்களின் முன்னரும் சிறியளவிலான மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதும் கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. தற்போது, கட்சித் தலைமை பதவியிலிருந்தும் அவர் ஒதுக்கப்பட்ட பின்னர் அதிக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி தொடர்ந்து பேசியும் வந்துள்ளார். தனது நீண்ட போராட்ட, அரசியல் வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை தான் சந்தித்ததேயில்லையென்றும் குறைபட்டு வந்துள்ளார். அவரது உடல் நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள மகளும், பிரித்தானியாவிலுள்ள மகனும் விடுமுறையில் இலங்கை வந்து, தந்தையுடன் ஒன்றாக சில நாட்கள் இருந்துள்ளனர். மூன்று பிள்ளைகளும் அருகிலிருந்த சமயத்தில், கட்சி முரண்களும் அடங்கியிருந்த பின்னணியில், மாவை சேனாதிராசா மகிழ்ச்சியாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றனர். சில நாட்களின் முன்னர், கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச்செயலாளரும் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்று, கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் என பட்டியல்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கவுள்ள விடயத்தை விவாதித்ததாகவும், ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கக்கூடாது என மாவை சேனாதிராசா கடுமையாக தர்க்கப்பட்டதாகவும், எனினும், ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மனச்சஞ்சலத்தில் இருந்ததாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டதாகவும், இன்று அதிகாலையளவில் அது மோசமடைந்ததாகவும் தெரிய வருகிறது. மாவை சேனாதிராசா முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரது வாகனச்சாரதியாக இருந்தவரின் பெயரைச் சொல்லி அழைத்து, குறிப்பிட்ட கோப்புக்களை வாகனத்தில் ஏற்றுமாறும், கட்சி வழக்கு நாளை வருவதால் உடனடியாக யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென அதிகாலை 1 மணியளவில் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தன்னை நாடாளுமன்ற உறுப்பினராகவே கருதியுள்ளார். இதனை தொடர்ந்தே, அதிகாலையில் தவறி விழுந்துள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மூளை நரம்புகள் வெடித்ததை தொடர்ந்து அவர் விழுந்தாரா அல்லது விழுந்த பின் மாரடைப்பு ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், தற்போதைய நிலைமையில், அவரது உயிருக்கு ஆபத்தானளவில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, சுயநினைவிழந்த நிலையில், செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. வைத்தியசாலைக்குள் எதிர்ப்பு மாவை சேனாதிராசாவின் நிலைமையறிந்து கட்சிப் பிரமுகர்கள் பலர் வைத்தியசாலைக்கு சென்று அவரை பார்வையிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோரும் மாவையை நேரில் சென்று பார்வையிட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் நேரில் சென்று பார்வையிட்டார். நிர்வாகச் செயலாளர் குலநாயகம், மாவைக்கு எதிரான அணியில் தன்னை அடையாளப்படுத்தியவர். அவர் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவருடன் மாவையின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் முரண்பட்டனர். பதவியாசை பிடித்தவர் என நேரடியாக திட்டியதகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மிக இளம் வயது தொடக்கம் பங்காளனாக பயணித்த மாவை சேனாதிராசா, கட்சிக்குள் அண்மையில் நுழைந்தவர்களால் மனவேதனையுடன் ஒதுக்கப்படும் நிலைமைக்குள்ளானதே அவரது உடல்நிலை வீழ்ச்சிக்கு காரணமென சொல்லப்படுகிறது. https://www.battinatham.com/2025/01/blog-post_540.html
  16. சீமானின் வாழ்த்துக்குறிப்பில் இப்படி உள்ளது.. மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்ற மந்திரத்தைச் சொல்லித் தந்த நம் தந்தை பெரியாரின் கைத்தடிதான் காலத்தின் கட்டாயம் கருதி உங்கள் கையில் ஆயுதமாக இருக்கின்றது. விடுதலைப் பேரொளி பக் 249 PDF இல் பக்கம் 250 https://tamileelamarchive.com/article_pdf/article_0e4825e62299e1a661df212f640ca364.pdf
  17. 2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அனுமதித்ததால், தலைவர் இல்லாத 2010 களில் தலைவரையும், புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தழுவி கட்சி அரசியல் செய்வதை தலைவர் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? 2004 மார்ச் வரை கருணா அம்மானும்தான் தலைவரின் வலதுகரமாக விளங்கிய பெரும் போர்த்தளபதி. ஆனால் அவரின் செயற்பாடுகள் எப்படி புலிகள் இயக்கத்தை அழித்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது புலிகளின் சித்தாந்தத்தை சீமான் அழிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களை புலிகளின்மீது வெறுப்பைக் கக்கவும் வைத்துள்ளார். இந்த நிலையை உருவாக்கியதற்கு புலம்பெயர் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே முழுப்பொறுப்பு. தாயகத்தில் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதபோதும், புலம்பெயர் நாடுகளில் புலிகளின் சொத்துக்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு புலிகளின் பிரதிநிதிகளாக அனைத்துலகச் செயலகத்தினர் இருந்துவருகின்றனர். சீமானை கனடாவுக்கு அழைத்து, அவர் பேசிய பேச்சால் கனடிய அரசு அவரை வெளியேற்றியபோதே சுதாகரித்து இருந்திருக்கவேண்டும். சீமான் கட்சி தொடங்கி புலிகளின் தொடர்ச்சி என்று காண்பிக்க ஆரம்பித்தபோதே தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் புலிகளின் சொத்தை பங்குபிரிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.!
  18. சிவமோகனை இடைநிறுத்தியமைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது! – கைவிரித்தது நீதிமன்றம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தம்மை இடைநிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவமோகனை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தி, அந்நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கோரும் முடிவைக் கட்சியின் மத்திய குழு அண்மையில் எடுத்திருந்தது. அதற்கு எதிராக கடந்த 22 ஆம் திகதி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் சிவமோகன் சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தமக்கு எதிராக கட்சிக்குள் எடுக்கப்பட்டிருந்த இடைநிறுத்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கும்படி சிவமோகன் கோரியிருந்தார். சட்டத்தரணி குருபரனினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அவர் முன்னிலையாகி நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். ஒரு தரப்பாக சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை செவிமடுத்த நீதிபதி எஸ்.சதீஸ்கரன் உத்தரவு வழங்குவதை ஒத்திவைத்திருந்தார். உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. அதில் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்திருக்கின்றார். வழக்கின் – முகப்படியே – முகாந்திரத்திலேயே – அத்தகைய வழக்குக்கான காரணம் ஏதும் இல்லை என்ற முடிவையும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றார். எனினும் எதிராளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://akkinikkunchu.com/?p=309902
  19. 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் பட்ஜெட்டில் வடக்கிற்கு பல விசேட திட்டங்கள் ஜனாதிபதியினால் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கென விசேட வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் யாழில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் விஜயத்தில் முதல் அம்சமாக 31ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு நடக்கவுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த குழுவின் தலைவரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சகல பிரதேச அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதுடன், பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்காக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டங்கள் இரண்டு நடத்தப்படவுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை மற்றும் மிருசுவிலில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியில் வடக்கு மக்கள் விசேட வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். ஒரே இலங்கைக்குள் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்ற எதிர்பார்ப்புகளை இந்த வெற்றியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளனர். இதன்படி ஜனாதிபதி இந்த மக்களை சந்திக்கவுள்ளார். இதேவேளை பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அனைவருக்குமானதை போன்று வடக்கிற்கென விசேடமான வேலைத்திட்டங்கள் பலவற்றுக்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கு மக்கள் தமது அரசியல் பயணத்திற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கு தனது கௌவரத்தை வழங்குவதற்காகவே ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்துடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார். https://akkinikkunchu.com/?p=309925
  20. தோற்றவர்களின் ஜெய பேரிகை! சுமந்திரன் - சத்தியலிங்கம் Vhg ஜனவரி 27, 2025 -மட்டுநேசன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தலையைச் சுற்றும் விதமாக உள்ளன. தற்போதைய பதில் தலைவர் அல்லது எஞ்சிய காலத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுமந்திரனின் கூற்றுக்களை ஜனாதிபதித் தேர்தலின் பின் ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலாவது அரியநேத்திரன் தொடர்பானது. இவர் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்றார். இவரை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று எள்ளிநகையாடினார் சுமந்திரன். தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதே யாழ். - கிளிநொச்சி மாவட்டத்தில் சுமந்திரன் பெற்ற வாக்குகளோ 15,039. தமிழ்த் தேசியத்தின் பக்கமே நிற்கிறோம் என்று காட்டத்தான் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அரியநேத்திரனுக்கு சுமந்திரனை விட ஏழே முக்கால் மடங்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்ற கசப்பான உண்மை 4,033 வாக்குகளை மட்டுமே பெற்று தேசியப் பட்டியல் என்ற பின் கதவால் பாராளுமன்றம் சென்ற பதில் செயலாளர் ப. சத்தியலிங்கத்துக்கும் புரியவில்லை. இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரில் நான்கு பேர் (ச. குகதாசன், சிறீதரன், கோடீஸ்வரன், ஸ்ரீநேசன்) அரியநேத்திரனை ஆதரித்தவர்கள் என்ற உண்மையும் 116,688 பேர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்தனர் என்ற யதார்த்தமும் புரியாமலா ப. சத்தியலிங்கம் இருக்கிறார்? அப்படியானால் தமிழரசுக் கட்சிக்குத் தேவை ஒரு கணக்கு வாத்தியார். அரியநேத்திரன் கடந்த பொதுத் தேர்தலில் எப்படியோ தமிழரசுக் கட்சிக்குத்தானே வாக்குச் சேகரித்தார்? அவரது முயற்சியும் துணைபோனதால்தானே மட்டக்களப்பில் மூன்று ஆவணங்களைக் கைப்பற்ற முடிந்தது? சிறீதரனைத் தவிர, ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் தமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் சுமந்திரனுக்கு ஒரு வாக்குப் போடவேண்டும் என்று கூற வேண்டும் என எழுதப்படாத நிபந்தனையின் பின்னர்தானே களமிறக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் எவ்வளவு வாக்குகள் பெற்றார் சுமந்திரன். உண்மை இப்படி இருக்க அரியநேத்திரன் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு? இப்போது கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், எதிராகப் போட்டியிட்டவர்கள் தொடர்பாக உள்ளூராட்சி தேர்தலின்போது கவனமெடுக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன். யார் யாரைக் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் அதீத கவனமெடுக்கிறார். ஒவ்வொரு நோயாளிகளும் எப்படி நடக்க வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தும் டாக்டர் ப. சத்தியலிங்கம் வல்லாரை சாப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது நினைவாற்றலுக்கு நல்லது. ஏற்கனவே நடக்கவிருந்து பிற்போடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சை அணி களமிறக்கப்பட்டது. அவர்கள் தாமும் தமிழரசுக் கட்சியினரே என்றார்கள். தமது வழிகாட்டி சுமந்திரன் எனவும் தெரிவித்தார்கள். இவர்களின் கூற்றுக்களை சுமந்திரன் மறுதலித்ததாக நினைவில்லை. ஆனால், இந்த விடயம் கட்சியின் செயலர் பொறுப்பை வகிக்கும் சத்தியலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது உண்மை. இந்த சுயேச்சைக் குழுவும் சமத்துவக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதே நோக்கம். இதற்காக சுமந்திரனின் தீவிர பக்தரான சுப்பிரமணியம் பிரபா அக்கட்சிக்குள் அனுப்பப்பட்டார். சந்திரகுமார், சுமந்திரன் கூட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பலமாகியது. ஆகவே, செயலருக்கு இப்போது வல்லாரை தேவைதான். சத்தியலிங்கம் செயலர் பதவியை ஏற்பதற்கு முன் நடந்த விடயம் ஒன்றையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறோம். யாழ். மாநகர சபை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, “மேயர் யார் என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியவில்லை. எனவே, தேர்தலின் பின்னர் முடிவெடுப்போம்”, எனத் தீர்மானித்தனர். ஆனால், அங்கிருந்து வெளியேறிய சுமந்திரன் ஊடகவியலாளர்களிடம் ஆர்னோல்ட்தான் மேயர் என அறிவித்தார். குறைந்தபட்சம் தலைவரிடமோ, செயலரிடமோகூடத் தனிப்பட்ட முறையில்கூடச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏனெனில், வெளியே வந்த தலைவரிடமும் செயலரிடமும் ஊடகவியலாளர்கள் ஆர்னோல்ட்தான் மேயர் என சுமந்திரன் சொல்கிறாரே எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனப் பதிலளித்தனர். இதனால், குழப்பமடைந்த ஊடகவியலாளர்கள் பின்னர் வந்த சுமந்திரனிடம் தலைவர், செயலரின் கூற்றைச் சுட்டிக்காட்டினர். அதற்கு அலட்சியமாக, “அவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஆனால், ஆர்னோல்ட்தான் மேயர்”, எனப் பதிலளித்தார் சுமந்திரன். எனவே, கட்சியின் முடிவுக்கு மாறாகச் சுமந்திரன் செயற்பட்டமை தொடர்பாக இவரைத் தேசியப் பட்டியலுக்குச் சிபாரிசு செய்த துரைராஜசிங்கம் மற்றும் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு கட்சிக்குள் இடமில்லை என்றால் மகிந்தவின் கட்சியில் போட்டியிட்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவன் தான் எனக் காட்ட முயன்ற சாணக்கியன் எப்படிக் கட்சியின்சார்பில் போட்டியிடலாம்? பாராளுமன்றத்துக்கான ஒரு மரபு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக யார் முதலில் பிரவேசிக்கிறார்களோ அந்த மூப்பின் அடிப்படையிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும். இன்றுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களில் கோடீஸ்வரனே மூத்தவர் (சிறீதரனையும்விட) சிறீதரனுக்கு அடுத்ததாக ஸ்ரீநேசன் உள்ளார். இந்த யதார்த்தம் புரியாமல் சாணக்கியனுக்கு முன்னுரிமை வழங்கும்படி செயலர் சத்தியலிங்கம் பாராளுமன்ற செயலரை வேண்டிக்கொண்டதாகச் செய்திகள் கசிந்தன. இக்கோளாறு பின்னர், சிறீதரன் எழுதிய கடிதத்தால் சரி செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தன்னைப் பாராளுமன்ற உறுப்பினராக்க சாணக்கியன் உதவியிருக்கலாம். அவர் சுமந்திரன் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை என்பது பரகசியம்தான். அதற்காக பாராளுமன்ற செயலருக்கு வேண்டுகோள் விடுக்குமளவுக்குத் திரு. சத்தியலிங்கம் போய் மூக்குடைபட்டிருக்கத் தேவையில்லை. மேலும், தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ள முயன்ற சிறீதரனின் பயணத்தைத் தடுத்து நிறுத்த முயன்ற சம்பவம் கவனத்துக்குரியது. இது தொடர்பாக ஊடகமொன்று கட்சியின் ஊடகப் பேச்சாளராக தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சுமந்திரனிடம் கேட்டது. இதற்கான சரியான பதிலாக “சிறீதரனின் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை மீறப்பட்டமை கண்டனத்துக்குரியது. இச்சம்பவம் தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்பதே அமைந்திருக்க வேண்டும். இதனைச் சொல்லாதவருக்கு ஏன் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவி? என்பதுக்கு தலைவரும் செயலரும் பதிலளிக்க வேண்டும். இதனைவிட, சிறீதரனுக்கு ஆங்கிலமோ, சிங்களமோ தெரியாது. கூடவே சென்ற ரவூப் ஹக்கீமின் முயற்சியால்தான் அவரது பயணத்தைத் தொடர முடிந்தது என்று அர்த்தம் தொனிக்கக்கூடியதாக கிண்டலாகக் கூறியதாக உணரமுடிந்தது. அத்துடன், தனது காலில் விழாதமைக்கான கோபத்தை மறைமுகமாக அவர் உணர்த்தியதைக் காண முடிந்தது. முன்பெல்லாம் தானேதான் இவருக்கு நேர்ந்த நெருக்கடிகளை தீர்த்து வைத்ததாக ஜம்பமும் அடித்துக் கொண்டார். தற்போது சுமந்திரன் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியைத் தொடர எப்படி அனுமதிப்பது என்று மத்திய குழுவினரிடம் பொதுச் சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்க இயலாமல் போயிற்று. தற்போதும் 28 உறுப்பினர்களைத் துரத்துவதற்காக விளக்கம் கேட்டு உடும்புப்பிடியாக நிற்கிறார் செயலர். இதனைவிட, அம்பாறை, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் பலரை நீக்க பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாம் பாராளுமன்றத்தில் சாணக்கியனுக்கு முன்வரிசை இடம் கேட்டு மூக்குடைபட்டதன் விளைவு. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றில் முடிந்து மீண்டும் தலைவர் தேர்தல் நடைபெற்றால் தன்னை எம். பியாக்கிய சுமந்திரனுக்கு எதிராக முன்னர் வாக்களித்தவர்களை ஒரு கைபார்க்காமல் விடமாட்டார் என்பது திண்ணம். சஜித்தோ, ரணிலோ, மகிந்தவோ, அநுரகுமாரவோ ஒரு நிலைப்பாட்டை தலைவர் என்ற ரீதியில் எடுத்தால் உறுப்பினர்கள் அந்த வழியில்தானே செல்வர். மாகாண சபையில். இனப் படுகொலை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அப்போதைய முதலமைச்சர். இதனைத் தொடர்ந்து சுமந்திரனின் ஏற்பாட்டில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தற்போதைய தலைவரே ஆளுநரிடம் கையளித்தார். ஆனால், பெருந்தலைவர் சம்பந்தன் எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தன்னிடம் கையளித்த மகஜரை திரு. சீ. வீ. கேயிடம் மீளக் கையளித்தார் ஆளுநர். அப்போது அவர், “முதலமைச்சருக்கான நியமனம்” என வேடிக்கையாகச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. முதலில் தனது கையில் திணித்துவிட்டார்கள் அதனால்தான் ஆளுநரிடம் கையளித்தேன் என்றார் சீ. வீ. கே. இந்தக் கட்சியிலேயே இது போன்ற முன்னுதாரணங்கள் உண்டு. கட்சித் தலைவர் மாவை அரியத்தை ஆதரித்து கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பணிமனைக்கும் சென்று அரியத்தை ஆசிர்வதித்தார். அப்படியிருக்க கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பானேன்? கட்சி சுமந்திரனின் வருகைக்குப் பின்னரே தமிழ்த் தேசிய இலக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பது பொதுவாக இலட்சியப்பற்றுள்ள அனைவருக்கும் தெரியும். சர்வதேச விசாரணை தேவை என்றார் கிளிநொச்சியில் வாழ்ந்த சிறீதரன். அந்தச் செய்தி வந்த வலம்புரி நாளிதழிலேயே “உள்ளக விசாரணையே போதும்”, என்று கொழும்பில் வாழ்ந்த சுமந்திரன் கூறியதாக செய்தி வெளியாகிற்று. யாழ். நூலக எரிப்பு மற்றும் பிந்துனுவெவ தடுப்பு முகாம், கொக்கட்டிச்சோலை, திருமலை - குமாரபுரம், மயிலந்தனை போன்ற படுகொலைச் சம்பவங்களின் பின்னரும் வரலாற்றைப் புரியாது இவ்வாறு கூறுகிறார் என்றால் இம்முடிவை கட்சி எடுத்ததா? கட்சி எடுக்காத தீர்மானத்தை சுயமாக அறிவித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் யாழ். கிளிநொச்சியில் சுமந்திரனைவிட இரட்டிப்பாக சிறீதரனுக்கு வாக்களித்தனர் மக்கள். (சிறீதரன் 32, 833 சுமந்திரன் 15,039) தலைவர், செயலாளர், ஊடகப் பேச்சாளர், பொருளாளர், தேசியப் பட்டியல் உறுப்பினர் என அனைத்தையும் வடக்கே குவித்ததன் மூலம் வட, கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் குரல்களை நசுக்கியுள்ளனர். போதாதற்கு அரசியல் தீர்வு தொடர்பாக ஆராயும் குழுவில் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் இருவரே கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர்த்தது ஏற்கக்கூடியதல்ல. வடக்கில் 93,038 பேரே (யாழ். 63,327, வன்னி 29,711) தமிழரசுக்கு வாக்களித்தனர். இதனைவிட, 71,737 பேர் கிழக்கில் (அதாவது 164,775 பேர்) வாக்களித்தனர். (மட்டக்களப்பு 93,975, அம்பாறை 33,632, திருமலை 34,168) கிழக்கில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான சாணக்கியன் இறுதி யுத்ததத்தின் பின்னர் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகப் போட்டியிட்டவர் என்பதை மறந்து கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று பட்டியல் போட்டுக் கடிதம் அனுப்பும் செயலாளருக்கு வல்லாரையை சிபாரிசு செய்கிறோம். சிறீதரன் எதையாவது கூறினால் அதனை வழிமொழிய எவரும் இருக்கக்கூடாது என்ற கவனத்துடனேயே தெரிவு நடத்தப்பட்டதால் தேசியம் என்பது மறக்கப்பட்ட விடயமே. இளையவர்களில் இணைத்துக் கொள்வதில் காட்டாத ஆர்வம் இருப்பவர்களை வெளியே அனுப்புவதிலேயே உள்ளது. கஜேந்திரகுமார் மேற்கொள்ளும் முயற்சியை ஏக்கிய ராஜ்ஜிய சுமந்திரன் குழு போட்டுடைக்கவே முயற்சிக்கும். தலைவர் சீ. வீ. கே. கடந்த காலங்களில் தன்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயற்படாமலிருந்தால் வரவேற்கத்தக்கது. எங்குமே யுத்தத்தில் வென்றவர்களே ஜெயபேரிகை (வெற்றி முழக்கம்) முழங்குவார்கள். தமிழரசுக் கட்சியிலோ தோற்றவர்களே முழங்குகின்றார்கள். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியினரிடம் ஒப்படைக்கும்வரை ஓயமாட்டோம் எனச் சபதமெடுத்துள்ளார்கள் போலுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் துணிச்சல் தற்போதைய தலைவர் சீ. வீ. கே. அவர்களுக்கு வரவேண்டுமென சந்திரசேகரப் பிள்ளையாரிடம் வேண்டுவோம். https://www.battinatham.com/2025/01/blog-post_281.html
  21. இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள் - தேசிய மக்கள் சக்தி பா.உ. செ. திலகநாதன் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளை எமது அரசாங்கம் விடுவித்து இருந்தது. கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து இருந்தது. எனவே அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்து உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314954
  22. சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா Published By: Digital Desk 3 28 Jan, 2025 | 01:26 PM அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டீப்சீக் (DeepSeek) தொழில்நுட்ப நிறுவனம் ஒரு விழிதெழுவதற்கான அழைப்பு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார். டீப்சீக் என்பது சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்போட் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானது. டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை கதிகலங்க வைத்துள்ளது. செயற்கை தொழில் நுட்பத்தில் டீப்சீக் மிகவும் அற்புதமான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில் ஒன்று என சிலிக்கான் வேலி துணிகர முதலீட்டாளர் மார்க் ஆண்ட்ரீசென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செயற்கை தொழில்நுட்பத்திற்கு முன்னணி மாதிரியாகவுள்ள அமெரிக்காவின் ChatGPT க்கு இணையாக குறைந்த செலவில் டீப்சீக் செயற்கை தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டீப்சீக் செயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவில் செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவழித்த பில்லியன்களை விட மிகக் குறைவு ஆகும். இது குறித்து என ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளரிடம் டொனால்ட் ட்ரம் கருத்து தெரிவிக்கையில், சீனாவின் செயற்கை தொழில்நுட்ப துறையின் அண்மைய முன்னேற்றங்கள் அமெரிக்காவிற்கு "சாதகமாக" இருக்கலாம். "நீங்கள் அதை மலிவாக செய்ய முடிந்தால், நீங்கள் அதை [குறைவாக] செய்தால் [மற்றும்] அதே பலனைப் பெற முடியும். அது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்," இந்த முன்னேற்றம் குறித்து தனக்கு கவலை இல்லை, இந்த துறையில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்கும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205118
  23. பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை ; கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன் ; ஜனாதிபதி தெரிவிப்பு 28 Jan, 2025 | 12:04 PM நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். இந்த வருடம் சர்வதேச சுங்க தினம் "சுபீட்சமான தேசத்தை உருவாக்க வினைத்திறனான சுங்கத் திணைக்களம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு 17 ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புடன் சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலாக நிறுவப்பட்ட இந்த சர்வதேச அமைப்பில் 1967 ஆம் ஆண்டு இலங்கை உறுப்பினராக இணைந்தது. 1994 ஆம் ஆண்டில், சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் உலக சுங்க அமைப்பு என பெயரிடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் அமர்வை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் சர்வதேச சுங்க தினமாக பெயரிடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுங்க நிறுவனங்கள் சர்வதேச சுங்க தினத்தைக் கொண்டாடுகின்றன. யுகத்திற்கு ஏற்ற நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். காலத்தின் சவால்களுக்கு ஏற்ப சட்டம் அல்லது நிறுவனங்கள் மாற வேண்டும் என்றும் எந்தவொரு சட்டமோ அல்லது நிறுவனமோ எக்காலமும் நிலையாக இருக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டு சுங்கத்திற்கு வழங்கப்பட்ட பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீராக்க சுங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த இலக்குகளை நாங்கள் பாராட்டுறோம். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை, வருவாய் இலக்குகளை அடைவதன் மூலம் மட்டும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வருமான விகிதத்தை அதிகரிக்க வேண்டும். பொருளாதார சரிவு காரணமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை சுருங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் அளவீடுகளின்படி நாம் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருளாதார தேகம் மீண்டுவிட்டதாகத் தோன்றினாலும், முழு பொருளாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும். ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, சுங்கத் திணைக்களம் 2550 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டுவதற்கு கூட்டாகச் செயல்பட வேண்டும். சுங்கத்திற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் புதிய சம்பள அளவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அது குறித்து நிதியமைச்சு, திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்க எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. அரச சேவையை மேலும் திறம்படச் செயற்படுத்த, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. வலுவான நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முன்னைய அரசியல் தரப்பு மற்றும் அரச சேவை பொறிமுறைக்கு இடையே முரண்பாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த அரசியல் தரப்பில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியவில்லை. சரியான நேரத்தில் நல்லதொரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க தவறியதால் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நாம் பல விடயங்களை கையகப்படுத்தும் முன்பாக வெளியாட்கள் அவற்றை கைப்பற்றிக் கொண்டனர். இதன் விளைவாக, இலங்கையின் இயற்கையான அமைவிடத்தைப் பயன்படுத்துவதற்கான சில வாய்ப்புகளை ஒரு நாடு என்ற வகையில் இழந்திருக்கிறோம். எதிர்காலத்தில் இலங்கை துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும். அதற்கான கூட்டு முயற்சியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது. இந்த வருடத்தில் சுங்க திணைக்களத்திற்கு 2550 பில்லியன் ரூபா வருமான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, சிறப்பாக பணியாற்றிய 20 சுங்க அதிகாரிகளை பாராட்டும் விதமாக உலக சுங்க அமைப்பின் சான்றிதழ்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு தகைமை விருதுகளும் வழங்கப்பட்டன. அதனையடுத்து சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சுங்க நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் உட்பட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/205113
  24. ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வலசைப் பறவைகள் 28 Jan, 2025 | 01:49 PM மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் மக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/205124
  25. விடுவிக்கப்படவிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு! காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதியினர் நாளை மறுதினமும், மற்றுமொரு தொகுதியினர் எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/395003/விடுவிக்கப்படவிருந்த-இஸ்ரேலிய-பணயக்-கைதிகளில்-8-பேர்-உயிரிழப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.