Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவருக்கு விடுதலை Vhg ஜனவரி 31, 2025 ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற மாவீரர் குடும்ப உறவுகள் கௌரவிப்பு நிகழ்வினை மேற்கொண்டிருந்த போது பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகாக்கூறி இவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு சிறைச்சாலை சுமார் இரண்டு மாதங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக குறித்த வழக்குக் கோவை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக வழக்கில் இருந்து நகுலேஸ் முற்றாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/01/blog-post_102.html
  2. அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் ! kugen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் -முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக நானும், ரவூப் ஹக்கீமும் இருந்தோம். எங்களுடைய குழுவின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக பேராசிரியர் ரஞ்சன் கூலின் நூல் வெளியிடப்பட்டது. பாராளுமன்றக்குழுவின் விசாரணை அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கத்தில் நாட்டில் ஒருவருட இடைவெளியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வலிமையான ஆட்சியாளர் ஒருவர் உருவாக்கப்படுவதற்கான சூழலை தோற்றுவிப்பதை நோக்காக கொண்டா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளோம். அதற்கு சில வருடங்கள் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத்மௌலானா அது தான் நடைபெற்றது என்று தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார். இந்த விடயங்களையே பேராசிரியர் ரஞ்சன் கூலும் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், இனக்குழுமமொன்றின் தலைவராக இருந்துகொண்டு, ரவூப் ஹக்கீம் தன்னுடைய நூல் பக்கச்சார்பற்ற வகையில் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விடயங்களை, வெளிப்படுத்தியிருக்கின்றார். நூல் முழுவதும் பக்கச்சார்பின்றி விடயங்களை தொகுத்துச் சென்றிருக்கின்றார். இதுமிகவும் கடினமானதொரு விடயமாக உள்ளது. இவ்வாறான நிலையில், சில வருடங்களுக்கு முன்னதாக பயங்கவரவாத எதிர்ப்புச்சட்ட வரைவு கொண்டுவரப்பட்டபோது நானும் தற்போதைய நீதி அமைச்சருமான ஹர்ஷண நாணயக்காரவும் இதே அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றியிருந்தோம். அப்போது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பதிலாக எந்தவொரு சட்டமும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. அந்தச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அதேநிலைப்பாட்டையே கூறியிருந்தார். அதற்குப்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது தேசிய மக்கள் சக்தி அதனை முற்றாக நிராகரித்திருந்தது. அந்த நிலைப்பாட்டை அத்தரப்பினர் பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்கள். குறித்த சட்டமூலம் சம்பந்தமான பாராளுமன்றக் குழுக் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு கூட தேசிய மக்கள் சக்தியினர் வருகை தந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அனைத்தும் தலைகீழாகியுள்ளது. எனது சந்தேகம் என்னவென்றால், 'அந்தரங்கமான ஆட்சிக்குழு'வொன்று உள்ளது. குறிப்பாக பாதுகாப்புத்துறையில் இந்தக்குழு இருந்துகொண்டு அரசாங்கம் உறுதியளித்த விடயத்தினையே நடைமுறைப்படுத்த விடாது தடுக்கின்றது என்பதாகும். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உறுதிமொழி அளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்க வேண்டும். அதற்கான பிரதியீடுகள் அவசியமில்லை. அவ்வாறு செய்யத்தவறுவார்களாக இருந்தால் 'அந்தரங்கமான ஆட்சிக்குழு'வின் முன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நகைச்சுவையாளர்களாக மாறுவீர்கள். அதேநேரம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் விடயத்தில் தாக்குதல்களை தடுப்பதற்கு தவறியவர்கள் உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வேறு விசாரணைகளின்போதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் அடையாளம் காண்பிக்கப்படவில்லை. அவ்வாறான நிலைமைகள் தொடர்வது எவ்வாறு என்ற கேள்விகள் உள்ளன. தாக்குதல்கள் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்புத்தரப்புக்களின் முன்னெச்சரிக்கைகள் காணப்படுகின்றன. விசேடமாக இந்திய புலனாய்வுத்தரப்பின் எச்சரிக்கைகள் பெயர்ப் பட்டியலுடன் காணப்படுகின்றது. அதில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சிலர் புலனாய்வுத்துறையுடனேயே தொடர்புடையவர்களாக உள்ளனர். அதுமட்டுமன்றி, தாக்குதல் தினமன்று கூட காலை அறுமணிக்கே முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அயல்நாட்டிலிருந்து அந்த தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதற்கான மூலங்கள் இன்னமும் இருக்கின்றன. அவை தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை. அவ்வாறான நிலையில் ஏன் இன்னமும் தாக்குதலை ஒழுங்கமைத்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை. சனல்-4 காணொளியில் பல விடயங்கள் உள்ளன. அதனைவிடவும் தேவையாள அளவில் தகவல்கள் உள்ளன. ஆகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்காத பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்றார். https://www.battinews.com/2025/01/blog-post_409.html
  3. யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார் கயேந்திரகுமார் எம்.பி! ஜனாதிபதி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட செயலருக்கு வழங்கியுள்ளார். இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயத்தானங்களை அபிவிருத்தி குழு கூட்ட நிகழ்சி நிரலில் சேர்ப்பதற்காக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. - யாழ். போதானா மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல். - யாழ். போதனா மருத்துவமனையில் அதிகளாவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது. பல விடுதிகளில் அவ்வப்போது நோயாளர்கள் கட்டில்கள் இல்லாத நிலையில் நிலங்களில் படுக்கின்ற நிலைமை சீர் செய்யப்படல். - யாழ் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சைப் பிரிவில் அடிப்படை வசிதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். மயிலட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். - மயிலிட்டியில் இயங்கிய காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் இயங்குகிறது. ஆனாலும் அங்கு ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும். - பண்ணையில் உள்ள மார்பாக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாபர் இல்லை. நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வருகின்றார். - பண்ணையிலுள்ள மார்பாக சிகிச்சை நிலையத்தில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியபடுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும். ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடங்களாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும். - யாழ் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படல் . - யாழ் மாவட்டத்தில் கடற்தொழில்படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை பின்வரும் பகுதிகளில் அமைத்தல். - பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம். இன்பர்சிட்ட கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை.சேந்தான்குளம், மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும். - இறக்கப்படும் நுழைவு வாண்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும். - கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்: - வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது. மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும். - இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும். - கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும். - யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணி வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு இருவது கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட செயலருக்கு அனுப்பியுள்ளார். (ப) https://newuthayan.com/article/யாழ்._வரும்_ஜனாதிபதியிடம்__20_விடயங்களை_முன்வைத்தார்_கயேந்திரகுமார்_எம்.பி!
  4. கோட்டை- காங்கேசன்துறை தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம்! கொழும்பு - கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை 4.35 மணியளவில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.40 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கோட்டை-_காங்கேசன்துறை_தபால்_ரயில்சேவைகள்_இன்றுமுதல்_ஆரம்பம்!
  5. சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது adminJanuary 31, 2025 சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர் என பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இருக்கின்ற மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மேம்படுத்தியுள்ளோம். சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பி வருகிறோம் என்பதனை அனைவரும் மறந்துவிட்டனர். நாட்டின் முதன்மை பிரச்சினையாக ஊழல் கூறப்பட்டாலும், வினைத்திறனற்ற பணியாற்றுகையே முதன்மையானது, ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர். அவர்கள் தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்வதில்லை என கவலையுடன் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210549/
  6. ஆம். முன் பதின்ம வயதுகளில் சாண்டில்யனில் ஆரம்பித்து, பின் பதின்ம வயதுகளில் ஜெயகாந்தனில் தொற்றி பின்னர் சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், என்று தொடர்ந்து ஜெயமோகனை அவரது, மண் சிறுகதைத் தொகுதி, ரப்பர், விஷ்ணுபுரம் நாவல்களில் கண்டடைந்தேன்.😀 இப்போது போகன் சங்கர், சுரேஷ் பிரதீப் என்று பலரின் எழுத்துக்களைப் படிக்கின்றேன்! ஈழப் படைப்பாளிகளின் நூல்களை தவறாமல் வாங்கிவிடுவேன். ஷோபா சக்தியைப் போலவும், முத்துலிங்கத்தைப் போலவும் சிறுகதைகளை தொடர்ச்சியாக எழுதுபவர்கள் பலர் இல்லை. சிறிதேவி “மஞ்சள் தாவணி போடவா” என்று சொல்வதை பாரதிராஜா அப்படி ஒரு ஃபிரேமில் எடுத்திருப்பார்! சிறிதேவியை எந்த வயதில் பார்த்தாலும் அவர் பதினாறு வயது இளைமையாகத்தான் இருப்பார்🥰! பின்னர் கனவுகளில் வந்த ஐஸ்வர்யா ராய், மனீஷா கொய்ராலா, ஏன் சமந்தா கூட வயது ஏற இளமை மங்கித்தான் தெரிந்தார்கள்!
  7. அப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி! சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்.. ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.
  8. ஷோபாசக்தியின் “ஸலாம் அலைக்” நாவலில் வந்த சாத்திரியோ இவர்?
  9. தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 2) January 29, 2025 — வி.சிவலிங்கம் — ‘அறகலய’ எழுச்சியும் அதன் விளைவுகளும் =============== தமிழ் சமூகத்தின் மத்தியில் படிப்படியாக பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இம் மக்கள் தமது தேவைகளுக்காக பரந்த முன்னேற்றகரமான சமூக இயக்கத்திற்காக வெகு காலம் காத்திருந்தனர். ‘அறகலய’ எழுச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட பல்லின மக்கள் மத்தியிலான ஜனநாயக உணர்வுகளும் தமக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரும் அதாவது பொருளாதார சமத்துவம், உரிமைகளின் அடிப்படையிலான ஆட்சிப் பொறிமுறை, குறும் தேசியவாதத்திற்கெதிரான தேசிய இன சகவாழ்வைக் கோரும் மாற்றங்களாக அவை மாற்றமடைந்தன. பொருளாதார அடிப்படையில் மிகவும் நலிவடைந்த பிரிவினரிடையே ஏற்பட்டிருந்த இவ் விழிப்புணர்ச்சி என்பது பெரும்பான்மைவாத அரசியலுக்குள் சிக்குண்டிருந்த தமிழ் – சிங்கள அரசியல் சக்திகளுக்கெதிரானதாகவும், இந்த சக்திகள் சுயாதீனத்தையும். சமத்துவத்தையும் கடந்த காலத்தில் கோரியது போலவே ஜனநாயக விழுமியங்களை இணைத்த கோரிக்கைகளாக தற்போது முன்வைக்கின்றனர். குறிப்பாக, 2024ம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் தமிழ் குறும் தேசியவாதம் மிகவும் உக்கிரமாக செயற்பட்ட போதிலும் மக்களில் ஒரு பிரிவினர் தேசிய சகவாழ்வு அரசியலை நோக்கிச் சென்றுள்ளனர். இங்குள்ள முக்கிய அம்சம் எதுவெனில் தமிழர் தரப்பிலுள்ள அரசியல் சக்திகளால் இம் மாற்றத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு மக்களிடமிருந்து மிகவும் அந்நியமாகியிருந்தனர். தமிழ் குறும் தேசியவாத சக்திகள் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து வெகு தூரம் விலகி வெறும் குறும் தேசியவாத கூச்சல்களையே அரசியலாக்கியிருந்தனர். இன்று இலங்கை அரசியலில் முன்னேற்றகரமான அரசியல் கோரிக்கைகளை வற்புறுத்திச் செல்லும் ஜே வி பி – தேசிய மக்கள் சக்தி இணைந்த பிரிவினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தமிழ் மக்களினதும், இதர தேசிய சிறுபான்மை இனங்களினதும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்டுமானங்களில் மாற்றத்தைக் கோரி வருவதும் குறிப்பாக 13வது திருத்த அமுலாக்கத்தை ஆதரிப்பதும் அதாவது சிங்கள அரசியல் தரப்பில் ஏற்பட்டு வரும் கணிசமான மாற்றங்கள் என்பது தற்போதைய முற்போக்கான அம்சங்களாகும். குறிப்பாக, 13வது திருத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஜே வி பி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே தயங்கித் தயங்கி எடுத்திருந்தன. இம் மாற்றங்கள் என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிய மாற்றங்களே என சிங்கள ஊடகங்கள் மத்தியில் இன்று விவாதிக்கப்படுகின்றன. பிரதான அரசியல் கட்சிகளிடையே இம் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழ் அரசியல் என்பது இம் மாற்றங்களை ஆய்வு அடிப்படையில் அணுகாமல் ஒற்றை ஆட்சிக் கட்டுமானத்திற்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு சாத்தியமில்லை எனவும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளே தேவை எனவும் விவாதங்களை தற்போது நகர்த்தும்போது சிங்கள அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இவர்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? பிரதான அரசியல் கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது தமிழ் அரசியல் ஒரு வகை இறுக்கமான போக்கை நோக்கி ஏன் செல்கிறது? தமிழ் அரசியலில் பிரிவினைவாத அரசியல் என்பது அதன் உட் பொறிமுறைகளில் ஆதிக்கம் செலுத்துவதால் இக் கட்சிகளால் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்த முடியாது. பதிலாக இப் பிரிவினரின் அரசியல் என்பது இவற்றிற்கு எதிராக செயற்படும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கே மறைமுகமாக உதவுவதை மிகவும் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. தேர்தல் முடிவுகளிலும், அதற்குப் பின்னதான நிகழ்வுகளிலும் தமிழ் சமூகத்திலுள்ள பின்தங்கிய பிரிவினரின் உறுதியான செயற்பாடுகள் அரசியலில் உள்ளார்ந்த மாற்றங்களையும். சமூக- பொருளாதார செயற்பாடுகளில் உள்ளீட்டு முன்னேற்றங்களையும் அவதானிக்க முடிகிறது. இந்த சக்திகளே நாட்டின் அடுத்த கட்ட நகர்வைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். தமிழ் பிரதேசங்களில் செயற்படும் இப் பின்தங்கிய பிரிவினரின் செயற்பாடுகள் தேசிய முற்போக்கு சக்திகளுடனான உறவுகளை மேலும் ஆழமாக்கும்போது அவை தேசிய அளவில் பொருளாதார சமத்துவத்தையும், கல்வி மற்றும் அதிகார பரவலாக்க பிரச்சனைகளில் போதுமான புரிதல்களையும் ஏற்படுத்தும். இம் மாற்றங்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சக்திகளின் அரசியல் கோட்பாடுகளுக்கு மாற்றான உரிமைகளின் அடிப்படையிலான ஆட்சித் தத்துவம், ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் பலப்படுத்தும் வகையிலான உள்ளக சுயநிர்ணய உரிமை, பொருளாதார வலுப்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயங்களை வழங்குதல், தேசிய ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத சக்திகளுக்கெதிரான போராட்டம் என அவை நீண்டு, குவிந்து செல்லும். தற்போதைய ஜனாதிபதியின் முதலாவது ஆரம்ப உரை புதிய மாற்றத்தின் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுத்துள்ளது. இதுவரை பதவியேற்ற ஜனாதிபதிகள் ஆட்சிக் கட்டுமானத்திலுள்ள பலவீனங்கள் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தோல்விகள் என்பவற்றை அடையாளப்படுத்தவில்லை. ஏனெனில் அப் பலவீனங்களே அவர்களின் அதிகார இருப்பிற்கு வாய்ப்புகளை வழங்கின. ஜனாதிபதி அநுரவின் உரையில் மிக நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த ஆட்சிப் பொறிமுறை நாட்டில் இன்று காணப்படும் பிரதேசவாத, இனக் குழும முரண்பாடுகளாக, மத விரோதங்களாக மாற்றம் பெறுவதற்கான காரணியாகவும் அதன் பெறுபேறாக, சமூகங்களிடையே பிளவுகள், பரஸ்பர அவநம்பிக்கைகள், சந்தேகங்கள் வளர்ந்து அவை முரண்பட்ட முகாம்களாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவரது இனவாதம் சம்பந்தமான கருத்துக்கள் மிகவும் கவனத்திற்குரியன. இனவாதம் என்பது அரசியல் கோட்பாட்டின் மூலைக் கல்லாக அமைந்தமையால் அதன் தவிர்க்க முடியாத நிலமைகள் மாற்று இனவாதத்திற்கான எதிர் முகாம்களைத் தோற்றுவித்தது. இனவாதம் என்பது ஒரு பிரிவினரால் உக்கிரப்படுத்தப்படும் போது அது இன்னொரு பிரிவினரின் தேசியவாதத்திற்கு உணவாக மாறுகிறது. இதுவே எமது நாட்டின் அரசியல் சமூக இயக்கத்தின் அனுபவமாக உள்ளது என்கிறார். மேற்குறித்த கருத்து நிலை என்பது கற்றறிந்த அறிஞர்களின் நூல்களில் வெளிவந்திருந்தால் அது ஒரு அறிவுரை எனக் கொள்ள முடியும். ஜனநாயகம் குறித்த அவரது கருத்தை அவதானிக்கும் போது நாட்டில் வாழும் சகல மாகாணங்களிலும் வாழும் சமூகங்கள் தம்மில் நம்பிக்கை வைத்து ஆதரவைத் தந்துள்ளதாகவும், அதே வேளை சமூகத்தின் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தியலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுவே பன்மைத்துவ ஜனநாயகத்தின் அடிப்படை என்கிறார். ஜனநாயகம் என்பது ஒரு தனிக் கட்சியின் அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையில் மக்களை ஐக்கியப்படுத்துவது அல்ல எனவும், ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது பல்வேறு அரசியல் கோட்பாடுகளும், குழுக்களும் சகவாழ்வு அடிப்படையில் செயற்படுவதேயாகும். வெவ்வேறு அரசியல், சமூக, பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் அரசியல் குழுக்கள் செயற்படும் போதே ஜனநாயகம் செழிப்பதற்கான விளை நிலமாக அது அமையும். ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனிக் கட்சி ஆட்சிக்குப் பதிலாக பன்மைத்துவ கட்சிகள் செயற்படுவதே நாம் நம்பும் ஜனநாயக கட்டுமானத்தின் அடிப்படை விழுமியங்கள் என வரையறுத்தார். நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தனது தேசத்தின் அரசுப் பொறிமுறையில் உள்ள சிக்கலான நிலமைகளை அடையாளம் காட்டியதும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசு குறிப்பாக. நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி இவற்றின் மோசமான பக்கங்களை அடையாளம் காட்டுவதாக இருந்தால் அவரே அதற்கான மாற்றங்களைக் கொடுக்கும் நிலையிலும் இருப்பதால்தான் இன்றைய மாற்றங்கள் என்பது வரலாற்றுத் திருப்புமுனை என்ற முடிவை நோக்கிச்சிந்திக்க வைக்கிறது. இந்த அடித்தளங்களுடன் செல்லும் புதிய தமிழ் அரசியல் சக்திகள் ஜே வி பி – தே ம சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினருடன் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான பரந்த புரிதலை கூட்டு அடிப்படையில் குறிப்பாக 13வது திருத்த அமுலாக்கத்தினை அல்லது புதிய அரசியல் யாப்பிற்கான அடிப்படை அம்சங்கள் குறித்த விவாதங்களை மேற்கொள்வதற்கான புறச் சூழலை ஏற்படுத்தும். இவ்வாறான இணைந்த நிலமைகள் புதிய அரசியல் உரையாடல் தளங்களை குறிப்பாக பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் குரல்கள் உரக்க ஒலிக்க உதவும். இம் மாற்றங்களே முற்போக்குத் தேசியவாதம், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக கீழ் மட்டங்களில் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்த உதவும். கீழ் மட்ட மக்களிடமிருந்து வரும் மாற்றத்திற்கான குரல்களை ஒடுக்க பல சவால்கள் ஏற்படும். குறிப்பாக கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தை அனுபவித்த சக்திகள் தீவிரவாதத்தை முன்னெடுத்து இன முறுகலை அதிகரித்து இம் முற்போக்கு முயற்சிகளை முறியடிக்க முயற்சிப்பார்கள். கடந்த 75 ஆண்டு காலமாக சமூகங்கள் மத்தியிலும், இனங்கள் மத்தியிலும் சமச்சீரற்ற நிர்வாக மற்றும் பல புற நிலமைகளைப் பயன்படுத்தி பயன் பெற்றவர்கள் தமது பொருளாதார ஆதிக்கத்தின் மூலம் நெருக்கடிகளைத் தோற்றுவிக்க முயற்சிப்பார்கள். இவ்வாறான நெருக்கடிகள் பல நாடுகளில் குறிப்பாக சிலி நாட்டில் முதலாளிகள், போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், ராணுவத்தினர் என சில பிரிவினர் ஒன்றிணைந்து பொருட்கள், சேவைகளின் விநியோகத்தை தடுத்து மக்கள் மத்தியில் அரச விரோத நிலமைகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்தார்கள். இதற்கான ஆரம்ப அறிகுறிகள் இங்கும் காணப்படுகின்றன. குறிப்பாக அரச அதிகாரிகள் உத்தரவுகளைப் புறக்கணிப்பது அல்லது காலம் கடத்துவது அல்லது வெவ்வேறு சாக்குப் போக்குகளை முன் வைப்பது போன்றன இன்றைய ஆரம்ப அடையாளங்களாக உள்ளன. அரச திணைக்களங்களின் இவ்வாறான ஜனநாயக விரோத செயல்களை மக்களால்தான் அடையாளம் காண முடியும். ஊழல், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கீழ் மட்ட மக்கள் விழிப்போடு செயற்பட்டு பகிரங்கமாக விமர்ச்சிக்க வேண்டும். இங்கு அரச அதிகாரிகளின் வினைத் திறனற்ற செயற்பாடு மட்டுமல்ல, அரசின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என்பது மூலவளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான கொள்கைகளை வகுக்கும்போது அத் தருணங்களில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உள்ளடக்கத்தினை எப்போதும் உறுதி செய்தல் அவசியமானது. உதாரணமாக, 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதாயின் அதிகார பரவலாக்கம் என்பது வினைத்திறன் மிக்கதாக அமைவதை உறுதி செய்வதும், அதில் அப் பிரதேசத்தின் சகல சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். பதிலாக புதிய அரசியல் யாப்பு வரைவதாயின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டு ஏற்பாடுகளை இப்போதிருந்தே சகல முற்போக்கு சக்திகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்கான கூட்டு ஏற்பாடுகளைத் தோற்றுவித்து புதிய அரசியல் யாப்பிற்கான விதந்துரைகளைத் தயாரிக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசியல் யாப்பு விவகாரங்களின்போது மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் மக்களின் பங்களிப்புத் தவிர்க்கப்பட்டு ஆதிக்க சக்திகளின் நலன்களே முதன்மை பெற்றது. அவ்வாறான நிலமைகளைத் தவிர்க்க வேண்டுமாயின் மிகவும் சக்தி வாய்ந்த சிவில் சமூகம் கட்டப்பட வேண்டும். இச் சமூகம் அரசியல் கோரிக்கைகள் மட்டுமல்ல, பொருளாதார ஏற்றத்தாழ்வினை அகற்றும் ஜனநாயக கட்டுமானங்களை வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் உட் கட்டுமானங்களின் உருவாக்கத்தின்போது பின்தங்கிய பிரிவினரின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால் தற்போது தமிழ் அரசியலில் எழுந்துள்ள அரசியல் கூட்டணிகளும், அரசியல் கருத்துகளும் மிகவும் கற்பனை மிக்கதாக அமைகின்றன. உதாரணமாக, அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினைக் கொண்டு வருவதாகவும், அதுவரை 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறான நிலையில் தற்போதைய விவாதம் மாகாண சபையை எவ்வாறு வினைத் திறன் மிக்கதாக மாற்றுவது? என்ற விவாதம் அவசியமானது. ஆனால் அவ்வாறான விவாதம் இதுவரை இல்லை. பதிலாக போட்டியிடுவதில் மும்முரம் காட்டப்படுகிறது. ஒரு சாரார் மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பதால் 13வது திருத்தம் தேவையில்லை என்கின்றனர். அடுத்து புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் வெளிவராத நிலையில் ஒற்றை ஆட்;சியின் கீழ் எந்தத் தீர்வும் சாத்தியமில்லை. இந்த அரசு ஒற்றை ஆட்சிக்குள் தீர்வைத் தருவதால் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு வரைபு விவகாரங்களில் தாம் பங்கு கொள்வதில்லை என இப்போதிருந்தே தமிழ் அரசியலைப் பிளவுபடுத்த அணி சேர்கின்றனர். ஓற்றை ஆட்சிக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை எனவும், சமஷ்டியே பொருத்தமான தீர்வு எனவும் கூறும் இவர்கள் அவ்வாறான தீர்வை எவ்வாறு சென்றடைவது? வெறுமனே தமிழர்களில் ஒரு பிரிவினரால் இம் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? நாட்டின் பெரும்பான்மை மக்களின் சம்மதமில்லாமல் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வர முடியுமா? பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தும் எவ்வித முயற்சிகளையும் எடுக்காமல் தமிழ் தரப்பிலிருந்து வெறுமனே இவ்வாறு பேசுவது என்பது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டும் அணுகுமுறையா? அல்லது தமிழ் அரசியலை முன்னேறவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியா? தேர்தல் வரும்போது மட்டும் ஒற்றுமை பற்றிப் பேசுவது? ஏனைய காலங்களில் போட்டி அரசியல் நடத்துவது போன்ற செயல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட 13வது திருத்த அமுலாக்கம், புதிய அரசியல் யாப்பு வரைபு தொடர்பாக தமிழ் அரசியல் பரப்பில் எழுந்துள்ள நிலமைகளை நாம் ஆராய்வது அவசியமானது. ஏனெனில் இன்றைய அரசு 13வது திருத்த அமுலாக்கம் தொடர்பாக கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடுகள், புதிய அரசியல் யாப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பலவிதமான எதிர்மறை விவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் பல இந்த ஆட்சியாளரின் குறிப்பாக, ஜே வி பி இனரின் கடந்தகால நிலைப்பாடுகளை முன்னிறுத்தியே விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இக் கட்டுரையின் பல்வேறு இடங்களில் ஜே வி பி – தே ம சக்தி ஆகியவற்றின் அரசியல் பண்பாட்டு மாற்றம் குறித்து விபரிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தே நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். 13வது திருத்த அமுலாக்கம் குறித்து சிங்கள அரசியல் தரப்பில் மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் எதிரான கருத்து நிலை உண்டு என்பது மட்டுமல்ல அவ்வாறான சக்திகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 13வது திருத்தத்திற்கு எதிராகவே கருத்துகளை முன்வைத்தார். அவருக்கு கணிசமான தொகையினர் வாக்களித்தனர். அதே போலவே தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டவர்களும் 13வது திருத்தத்தில் எதுவுமில்லை எனக் கூறிய நிலையில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதே போலவே தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் வடக்கு மாகாண சபையின் முதல்வராக பதவி வகித்த விக்னேஸ்வரனும் 13வது திருத்தத்தில் எதுவுமில்லை என்பதை உறுதி செய்யும் பணியையே அதனால் கிடைத்த சகல சௌகரியங்களையும் அனுபவித்தபடி செயற்பட்டார். இதே போன்றே மாகாண சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை அற்ற கருத்துகளை விதைத்தபடியே அதற்கான தேர்தல்களில் போட்டியிடுவதும் சுகபோகங்களை அனுபவிக்கும் உள் நோக்கங்களை உடையது என்ற முடிவையே முன்னைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. தற்போதைய அரசின் செயற்பாடுகள் ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழலை நோக்கி நகர்வதாகவே தற்போது உணர முடிகிறது. உதாரணமாக, அடுத்த மூன்று வருட காலத்தில் புதிய அரசியல் யாப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதாகக் கூறும் அரசு இந்த இடைக்காலம் வரை மாகாண சபைகளைச் செயற்படுத்தும் விதத்தில் தேர்தல்களை நடத்தப் போவதாகவும் கூறுகிறது. இதே வேளை புதிய அரசியல் யாப்பில் 13வது திருத்தம் நீக்கப்படலாம் என்ற செய்தியையும் கசிய விடுகிறது. இச் செய்திகள் குறித்து நாம் ஆழமாக அவதானித்தால் அடுத்த 3 வருட காலத்தில் மாகாண சபை நிர்வாகம் ஒழிக்கப்படுமாயின் அதன் செயற்பாடுகளை இன்னொரு நிர்வாகம் பொறுப்பேற்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதனையும், புதிய அரசியல் யாப்பின் மூலம் அமையும் நிர்வாக கட்டுமானத்திற்கு அமைவாகவே அடுத்த 3 வருடகால மாகாண சபைகளின் நிர்வாகம் மாற்றமடைந்து செல்லலாம் என்பதாகவும் கருத முடிகிறது. அது மட்டுமல்ல, தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாக அமைதலின் அவசியம் குறித்தும், இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று என்ற கருத்து சிங்கள அரசியலில் பலமாக உள்ளது என்பதாலும், தமிழ் அரசியலில் 2009ம் ஆண்டின் பின்னர் 13வது திருத்தம் குறித்து காத்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் நாம் புதிய அடிப்படைகளில் பிரச்சனைகளை அணுகுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே அடுத்த 3 வருட காலங்கள் என்பது தற்போதைய மாகாண சபைகளின் நிர்வாக மாற்றங்கள் குறித்தும், புதிய அரசியல் யாப்பில் அவற்றின் வகிபாகம் குறித்த விவாதங்களாகவும் குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகள் புதிய அரசியல் யாப்பில் தொடர்ச்சியாக பேணப்படுமா? அல்லது மாற்றங்கள் உண்டா? என்ற மிக ஆழமான விவாதங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. 2025ம் ஆண்டு என்பது தேசிய அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் மிக சிக்கலான, தீர்க்கமான காலப் பகுதி என நாம் கருத முடியும். இங்குதான் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்கள் எழுப்பிய தமிழ் அரசியல் தலைமை அதற்கான தயார் நிலையில் உள்ளதா? அல்லது உள் முரண்பாடுகளால் உழுத்துப் போய் இயற்கை மரணத்தை எட்டுமா? என்ற கேள்விக்கான பதில் என்ன? என்ற நிலை ஏற்படுகிறது. இன்றைய அரசியல் மாற்றங்களின் பின்னணியில் அவதானிக்கையில் 13வது திருத்தத்தின் பின்னால் உள்ள அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற ஜனநாயக அடிப்படைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படும் விதத்திலும். அவை தேசிய ஜனநாயகக் கட்டுமானங்களை பலப்படுத்தவும், தேசிய இனங்களின் ஜனநாயக கோரிக்கைகளை வலுப்படுத்தும் விதத்திலும் குறிப்பாக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு அமைவாகவே புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் அமையும் என எதிர்பார்க்கலாம். இவை இனவாதத்திற்கு எதிரான அரசியல் பின்புலத்தின் தாக்கங்களின் பின்னணியில் அவதானிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பிரிவினைவாத அரசியல் முன்னெடுப்புகள் தமிழ் அரசியலிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்னும் சமஷ்டி அடிப்படையிலான அணுகுமுறையை நோக்கி தமிழ் அரசியல் செல்ல வேண்டும். ஆனால் தமிழ் அரசியலிலுள்ள சில பிற்போக்கு சக்திகள் 2024ம் ஆண்டு தமிழ் மக்களிலுள்ள பலமான பிரிவினர் தேசிய சகவாழ்வு அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செல்வதாக எடுத்துள்ள ஜனநாயகத் தேர்வை மறுதலிக்கும் வகையில் தடைகளை ஏற்படுத்த தயாராகி வருவதை மக்கள் அவதானிக்க வேண்டும். புதிய அரசியல் யாப்பில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாகிய 13வது திருத்தம் கைவிடப்படுமாயின் அந்த சர்வதேச ஒப்பந்தத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையலாம்? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இவ்வாறான ஒரு நிலை பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. நாம் பல்வேறு ஊகங்களுக்குச் செல்லாமல் இதே போன்ற நெருக்கடியான காலகட்டத்தின் வரலாற்றினை ஆராயலாம். உதாரணமாக, பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நட்புறவு ஒப்பந்தமாக மாற்ற முனைந்தது. மாகாணசபை நிர்வாகத்தினைப் புலிகளிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தது. அன்றைய வரதராஜப் பெருமாள் அரசைக் கலைக்கவும், வடக்கு. கிழக்கு இணப்பைக் குலைக்கவும் திட்டமிட்டு இயங்கியது. அன்றைய அரசியல் சூழலும், அரசியல் தலைமைகளும் வேறாக இருக்கலாம். ஆனால் அன்றும், இன்றும் பின்பற்றும் கொள்கைகள் ஒன்றாக உள்ளனவா? போன்ற பல வினாக்களுக்கான பதிலை வரலாறு விட்டுச் சென்ற பாடங்களை மீட்டுவது அவசியமாகியுள்ளது. (தொடரும்…) https://arangamnews.com/?p=11739
  10. எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும், வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!
  11. நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣 தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு! தலைவர் தன் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்துதான் தனக்குப் பிறகு புலிகள் அமைப்பை மொத்தமாகவும், சில்லறையாகவும் பிரித்து எடுங்கள் என்று இறுதிக் கட்டங்களில் சொன்னார். அதை நேரில் கேட்ட யாழ் உறவையே புலிகளின் அமைப்பில் இல்லை என்று நிறுவும் போக்கும் இந்த யாழ் களத்தில் பார்ர்ததுதான்! இந்த ஆதரவு கொடுக்கும் போராளிகள் யார்? பையன், ஓணாண்டி, நாதம்ஸ்?😂🤣 விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களான அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் கூட சீமானைப் புறக்கணித்துவிட்டார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை. சேர்க்கை: 1993 இல் விடுதலைப் புலிகள் பத்திரிகை (புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை) வைகோவை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் என்று கூறியது. ஆதாரம் இணைப்பில் உள்ளது: https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf
  12. தமிழ் நிலத்தின் தொன்மையும், ஸ்டாலினின் அரசியல் அறைகூவலும்! Jan 29, 2025 பாலசுப்ரமணியம் முத்துசாமி அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறை, தமிழ்நாட்டில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்பு கால நாகரீகம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தய ஒன்று என்னும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சிவகளை, மயிலாடும்பாறை, ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளின் வழியே கிடைத்த பொருட்கள், மூன்று முக்கியமான ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் காலம் அறிவியற்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Antiquity of the Tamil Land திலீப் குமார் சக்ரவர்த்தி இந்த ஆய்வு முடிவுகள் ஒரு புத்தகமாக அண்மையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மதிப்பு மிகு பேராசிரியர் (Professor Emeritus), திலீப் குமார் சக்ரவர்த்தி, ‘இந்தப் புத்தகம், ஒரு இந்தியனாகவும், தொல்லியல் ஆய்வாளனாகவும் என்னை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. இரும்பு உருக்கு தொழில்நுட்பம், கி.மு 3500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதை தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே முக்கியமான ஒன்றாகும்’, எனக் கூறியுள்ளார். இது அறிவியல்! இன்றுள்ள சான்றுகளின் படி! இந்த புத்தகத்தை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து தோன்றியது’, எனச் சொல்லியுள்ளார். ‘நமது பழங்கால இலக்கியங்களில் சொல்லப்பட்ட நம் பண்பாட்டின் தொன்மை இன்று நிரூபிக்கப்பட்ட வரலாறாக மாறியுள்ளது. இது நம் திராவிட மாதிரி அரசின் முயற்சிகளுக்கு கிடைத்த பலன்’, என டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனிமேலும் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க முடியாது. சொல்லப்போனால், இந்தியாவின் வரலாறு, இங்கிருந்துதான் தொடங்கப்பட வேண்டும்’, என்றொரு அரசியல் அறைகூவலை முன்வைத்திருக்கிறார். இது அரசியல் நிலைப்பாடு (Political Rhetoric)! சரி, ஸ்டாலின் இதில் ஏன் அரசியல் செய்கிறார்? அது சரிதானா? மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற சிந்து சமவெளி நாகரிக தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பதற்கு 50 ஆண்டுகள் முன்பேயே ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. ஆனால், சிந்து வெளி தொல்லியல் தளங்களின் பிரம்மாண்டம் காரணமாக அவை முன் சென்றன. விடுதலை பெற்ற பின்னர், தில்லியை மையமாகக் கொண்ட அரசியல் அமைப்பில் ஆதிச்சநல்லூர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. கீழடி என்னும் ஒரு இடத்தில் ஆய்வு செய்யவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், தமிழ்நாட்டின் தொல்லியல் துறை முன்னின்று கீழடி மற்றும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை செய்ய வேண்டி வந்தது. விடுதலைக்குப் பின்னர், கங்கைச் சமவெளியின் வரலாறே இந்திய வரலாறாக முக்கியத்துவம் பெற்றது. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர், மார்க்சிய வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களாலும், பிராந்திய மனச்சாய்வை (Regional Bias) முற்றிலுமாக ஒதுக்க முடியவில்லை. அதன் அரசியல் விளைவுகள் பாரதூரமானவை. இந்தியாவில் பள்ளிகளில் தெற்கின் வரலாறு ஒரு சிறு குறிப்பாகவே இருந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாமன்னர் அசோகர் தெரிந்த அளவுக்கு, இராஜராஜ சோழன் தெரிவதில்லை. மௌரிய வம்சமும் குப்த வம்சமும், முகலாயர்களும் தெரிந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் அகோம் வம்சம் தெரிவதில்லை. இந்திய வரலாற்றில் மிகப் பெரும் கப்பல் படையை உருவாக்கி, இலங்கை, மலேஷியா, பர்மா, சுமத்ரா போன்ற ஆசிய நாடுகளை போரில் வென்று மேலாதிக்கம் செய்தவர்கள் சோழர்கள். ஒப்பீட்டளவில் சிவாஜியிடம் இருந்தது ஒரு சிறு கடற்படையே. ஆனால், இந்திய கடற் படையின் சின்னத்தில் இடம் பெற்றிருப்பது மராத்திய மன்னர் சிவாஜியின் எட்டுமுகம் கொண்ட சின்னத்தின் வடிவம். இந்திய கடற்படையின் பயிற்சி நிலையம் மராத்திய மாநிலம் லோனாவ்லாவில் அமைந்துள்ளது. அதன் பெயர் ஐஎன்எஸ் சிவாஜி. இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகத்தின் பெயர் ஐஎன்எஸ் ஆங்க்ரே. இது மராத்திய கடற்படைத் தளபதி கனோஜி ஆங்க்ரேவின் பெயரால் அழைக்கப்படுகிறது. உண்மையான வரலாற்றின் பின்னணியில் சின்னங்களும், பெயர்களும் வைக்கப்பட வேண்டுமெனில், இந்தியக் கடற்படையின் சின்னத்தில் புலிக்கொடி இடம் பெற்றிருக்க வேண்டும். கடற்படையின் தலைமையகமே இராஜேந்திர சோழனின் பெயரால் அழைக்கப்பட வேண்டும். ஆனால், அது ஒரு போதும் நடவாது. அதன் காரணங்கள் எளிதானவை. இந்தியாவை ஆள்வது வட இந்திய அரசியல் சக்தியும், மேற்கு இந்திய பண சக்தியும். விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சட்டம் 1950 ல் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சட்டத்தின் முதல் பத்தியில்,, ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’, எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் உண்மையான அர்த்தம் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால், அரசியல் தளத்தில் முதல் நாற்பது ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்தது கங்கைச் சமவெளி அரசியல் அதிகாரமே. உத்திரபிரதேச, உத்திராகண்ட், பீஹார் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 125. இந்திய அரசு மக்களவைத் தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு. என்பதால் இந்த முக்கியத்துவம். அரசியல் அதிகாரத்தில், பிரதிநிதித்துவத்தில், கலாச்சாரத் தளத்தில் மத்திய வடமாநிலங்களைத் தாண்டி, இந்தியாவின் இதர பகுதிகளுக்கு சரியான பிரதிநிதித்துவம் ஒருபோதும் கிடைத்ததில்லை. 2004 தொடங்கி 2014 வரையிலான பத்தாண்டுகளில்தான் இந்தியாவின் அரசியல் தளத்தில் கூட்டாட்சி என்னும் தத்துவம் ஓரளவு நிறைவேறியது. தென் மாநிலங்களுக்குப் போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால், 2014 இந்துத்துவ அரசியல் அலையில் மீண்டும் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு விட்டது. 2014 ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தனது தொகுதியை கங்கைச் சமவெளிக்கு மாற்றிக் கொண்டார். அண்மைகாலத்தில் வலதுசாரி சாய்வுகளின் காரணமாக, சிந்து சமவெளி நாகரீகத்தை, சரஸ்வதி நாகரீகம் என மடைமாற்றும் நடவடிக்கைகள் பெருமளவில் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. வேத நாகரீகமே இந்திய நாகரீகம் என யோகி ஆதித்யநாத் போன்ற அரசியல்வாதிகள் ஆதாரங்கள் இல்லாமல் பேசி வருகிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான், தமிழ்நாட்டில் இரும்பு நாகரீகத்தின் காலம் கி.மு.3500 என தரவுகளின் அடிப்படையில், ஸ்டாலின் தன் அரசியல் அறைகூவலை முன் வைக்கிறார். இந்தி, இந்துத்துவா, வேத நாகரீகம் என தேசத்தையே ஒற்றைமயமாக்க இந்துத்துவ அரசியல் தரப்பு துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கனவிற்கு தடையாக இருக்கும் பெரும்பாலான பிராந்திய அரசியல் காட்சிகளை அது ஒட்டி உறவாடியும், தேர்தல் களத்தில் எதிர்கொண்டும் அழித்து விட்டது. தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனா, அகாலிதளம், ஜெகன் ரெட்டியின் கட்சி, பிஜு ஜனதா தளம் என பல உதாரணங்கள் கண் முன்னே உள்ளன. இந்த அபாயகரமான ஒற்றை மயமாக்கலுக்கு எதிராக வலுவான அரசியல், பண்பாட்டு நிலைகள் எழுவது முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அவசியமாகின்றன. இதைச் சாத்தியமாக்கும் நிலையில் உயிர்ப்புடன் இருப்பவை சில அரசியல் கட்சிகளே. அவற்றுள் முக்கியமானவை கேரள இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக. 2021 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், அரசியல், பண்பாட்டு தளங்களில் மிக முக்கியமான முன்னெடுப்புகளை ஸ்டாலின் செய்து வருகிறார். மாவட்டம் தோறும் புத்தக விழாக்கள், கல்லூரிகளில் இலக்கிய உரைகள், வருடம் முழுக்க நடந்த வள்ளலாரின் 200 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் போன்றவை மிக முக்கியமான முன்னெடுப்புகள். இவற்றுடன் திராவிட இயக்கங்களுக்கே உரிய மக்கள்நலக் கொள்கைத் தளத்தில், பள்ளிகளில் காலை உணவு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற புதிய திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல, தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆய்வுகளின் வழியே, இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்னும் அம்பை எய்திருக்கிறார். எதிர்தரப்பில், நரேந்திர மோதியின் மௌனமே, எய்யப்பட்ட அம்பின் தாக்கத்தைச் சொல்கிறது. இந்த அறைகூவலின் மூலம் தமிழ்நாட்டின் தொன்மைக்கு மட்டுமல்லாமல். இந்திய நாட்டின் பன்மைத்துவத்துக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த அறைகூவலின் வழியே சாதிக்கப் போவதென்ன எனப் பலரும் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருங்காலத்தை கணிப்பது கடினம். எனினும், வெற்றி தோல்வி என்னும் நிலைகளைத் தாண்டி, இந்தியாவின் பன்மைத்துவத்துக்கான குரல்கள் எழுவது மிகவும் முக்கியம். இதைத் தமிழ்நாடும் செய்யாவிட்டால், வேறு யாரும் செய்யப் போவதில்லை. விடுதலை பெற்ற காலத்தில், இந்தியை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட போது, தமிழ்நாடு மட்டும் எதிர்த்தது. இன்று அதன் முக்கியத்துவத்தை பல மாநிலங்களும் உணர்ந்திருக்கிறார்கள். இரும்பு நாகரிக ஆய்வுகளை முன்வைத்து ஸ்டாலின் எழுப்பியுள்ள அரசியல் அறைகூவலும் அப்படி முக்கியமான ஒன்றே! கட்டுரையாளார் குறிப்பு: பாலசுப்ரமணியம் முத்துசாமி பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர். https://minnambalam.com/political-news/antiquity-of-the-tamil-land-and-stalins-political-challenge/
  13. சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் - மாவையின் தம்பி ஆவேசம்! Vhg ஜனவரி 30, 2025 அண்ணன் மாவை சேனாதிராஜா மரணத்தால் மனஅழுத்ததிற்கு உள்ளாக்கிய தம்பி தங்கராசா வைத்தியசாலையில் கூறிய ஆவேசமான பேச்சு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணாவை கொன்ற சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் என வைத்தியசாலையில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வைத்தியசாலையில் மாவையை பார்வையிட சென்ற சுமந்திரன் தரப்பின் குலநாயகம் மாவையின் தங்கச்சியின் பேச்சில் திரும்பி ஓடியமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/01/blog-post_761.html மாவையரின் உயிரைக்குடித்த 19,அயோக்கியர்கள்.! Vhg ஜனவரி 30, 2025 அமரத்துவம் அடைந்த மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளனர். 1. பீற்றர் இளம் செழியன்-முல்லைத்தீவு 2. ⁠திருமதி சாந்தி சிறிஷ்கந்தராசா முல்லைத்தீவு. 3. ⁠தி. பரம்சோதி.மன்னார். 4. ⁠நா.சேனாதிராசா-வவுனியா. 5. ⁠சீ.வி.கே. சிவஞானம்- நல்லூர். 6. ⁠கேசவன் சயந்தன்-சாவகச்சேரி. 7. ⁠இ. சாணக்கியன்- மட்டக்களப்பு. 8. ⁠ப.சத்தியலிங்கம்-வவுனியா. 9. ⁠கி.துரைராசசிங்கம்-மட்டக்களப்பு. 10. ⁠தி.சரவணபவன்-மட்டக்களப்பு. 11. ⁠கி.சேயோன்-சந்திவெளி. 12. ⁠த.கலையரசன்-அம்பாறை. 13. ⁠மு.கண்ணதாசன்-அம்பாறை. 14. ⁠திருமதி ரஞ்சினி கனகராசா-மட்டக்களப்பு. 15. ⁠ச.இரத்தினவேல்-வெள்ளவத்தை. 16. ⁠எம். ஏ. சுமந்திரன்-யாழ்ப்பாணம். 17. ⁠ப.கமலேஷ்வரன்-முல்லைத்தீவு. 18. ⁠க.செல்வராசா. வன்னி. 19. ⁠சூ.சேவியர் குலநாயகம். தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார். சுமந்திரனின் வழிகாட்டலில் மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பதவி விலக நிர்பந்திக்க செய்தமை அவருடைய மன அழுத்தத்திற்கு காரணம், சொந்த கட்சியின் தலைமைக்கு இந்த நிலைமை அத்தோடு நேற்றுமுந்தினம் 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK சிவஞானமும், பதில் செயலாளர் சத்தியலிங்கமும் மாவையுடன் கடும்தொணியில் பேசியிருந்ததாகவும், சுமந்திரன் உங்களை கட்சியில் இருந்து நிச்சயம் நீக்கியே தீருவார் என்று காட்டமாக மாவையிடம் தெரிவித்ததாகவும் மாவிட்டபுர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயங்களால் கடும் மனஉளைச்சலில் இருந்த மாவை சேனாதிராச சுயநினைவு இழந்த நிலையில் வீட்டில் விழுந்து இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 29,01,2025, இரவு மரணித்தார். https://www.battinatham.com/2025/01/19_30.html
  14. மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி! (படங்கள் இணைப்பு) இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு மதத் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார். இந்நிலையில், இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகின்றது. https://www.hirunews.lk/tamil/395217/மாவை-சேனாதிராஜாவின்-பூதவுடலுக்கு-இலங்கை-தமிழரசுக்-கட்சியின்-உறுப்பினர்கள்-அஞ்சலி-படங்கள்-இணைப்பு
  15. அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா? January 30, 2025 11:50 am அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களிலிருந்து அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் குறிப்பிட்டார். "எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது. நான் 38 வருடங்களாக ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் உண்மையிலேயே மக்களுக்காக வந்தேன். எனவே இனி செய்ய வேண்டியது எதுவுமில்லை. அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் நான் அரசியலில் இருக்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன்" https://tamil.adaderana.lk/news.php?nid=199507
  16. அரிசியின் அரசியல் எம்.எஸ்.எம்.ஐயூப் தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சாதாரணமாக எந்த ரகத்திலாயினும் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 200 ரூபாவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் அத் தேர்தலுக்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவ்விலை 300 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்தது. சந்தையில் அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாரிய மற்றும் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாலை உரிமையாளர்கள் போதிய அளவு அரிசியை சந்தைக்கு வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதற்கு முன்னர் 220 ரூபாவாக இருந்த நாட்டரிசியின் கட்டுப்பாட்டு விலையை 230 ரூபாவாக உயர்த்தவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அவ்வாறு போதிய அளவு அரிசியை சந்தைக்கு விடுவிக்கவில்லை. இதன் காரணமாக அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. எனினும் விலை ஏற்றத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது. அனுர குமார பதவிக்கு வந்து ஒரு வாரத்தில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் இந்த தட்டுப்பாட்டுக்கு தற்போதைய அரசாங்கம் காரணம் அல்ல தான். ஆயினும் அரசாங்கமே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதன் பிரகாரம் 70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் இறக்குமதிக்கான அனுமதி காலம் ஜனவரி 10 ஆம் திகதி முடிவடைந்த போது 168,000 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. பற்றாக்குறையைப் பற்றிய போதிய தகவல்கள் இல்லாமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒரு கிலோ கிராம் சுமார் 150 ரூபாவுக்கு சற்று குறைந்த விலைக்கே அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு அரசாங்கம் 65 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கிறது. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் ஒரு மாதத்துக்குள் அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் வரியாக சம்பாதித்துள்ளது. தனியார் துறைக்கு 90 சதவீதமான அரிசியை இறக்குமதி செய்ய இடமளித்ததற்கான காரணமும் வரி வருமானமாக இருக்கலாம். ஏனெனில் அரிசி இறக்குமதிக்காக ஒரு அரச நிறுவனம் மற்றொரு அரச நிறுவனத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் அரச வருமானம் அதிகரிக்க போவதில்லை. இவ்வாறு வரி விதிக்காமல் குறைந்த விலையில் அரிசி விநியோகம் செய்யாது அரசாங்கம் தட்டுப்பாட்டை பாவித்து இலாபத்தை தேடுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், குறைந்த விலைக்கு இறக்குமதி அரிசி விற்பனை செய்தால் மக்கள் அதனையே நாடுவார்கள் என்றும் அதன் மூலம் தேசிய அரிசியின் விலையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தேசிய விவசாயி பாதிக்கப்படுவார் என்று அரசாங்கம் வாதிடுகிறது. இலங்கை மக்களின் வருடாந்த அரிசி பாவனை 24 இலட்சம் மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த வருடம் நாட்டில் 45 இலட்சம் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் சில தலைவர்களும் ஆரம்பத்தில் அவ்வாறே கூறினர். புதிய நிலைமகளை கவனிக்கும் போது அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், கையிருப்பு, விநியோகம் மற்றும் ஏற்படப் போகும் தட்டுப்பாடு அல்லது மிகை போன்ற விடயங்கள் தொடர்பாக முறையான தரவுகள் அரச நிறுவனங்களிடம் இல்லை என்பது தெரிகிறது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது ஜனாதிபதி அனுர குமாரவும் தரவுகள் இல்லாமை அரிசி பிரச்சனையை தீர்ப்பதில் பெரும் தடையாக இருப்பதாக கூறினார். கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரச நிதிக் குழுக் கூட்டம் (Committee on Public Finance - CoPF) கூடிய போதும் இந்த தரவுகள் பற்றிய பிரச்சினை எழுந்தது. கூட்டத்தை அடுத்து கருத்து தெரிவித்த அக்குழுவின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நாட்டில் மதிப்பீட்டைப் பார்க்கிலும் பத்து இலட்சம் தொன் அரிசி குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் பெருமளவில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து ஒரு பகுதியை அடுத்த அறுவடை காலம் வரை பதுக்கி வைத்திருக்கிறார்கள், அந்த அறுவடை காலத்தில் அந்த நெல்லின் அரிசியை சந்தைப்படுத்தி அரிசி விலையை குறைத்து அதை காட்டி அவர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்கிறார்கள், அதன் பின்னர் அந்த நெல்லின் அரிசியை மீண்டும் பதுக்கி அரிசி விலையை ஏற்றுகிறார்கள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தொன்று இருக்கிறது. இது சரியாக இருக்கலாம். அரசாங்கம் இதை முறியடிப்பதாக இருந்தால் அரசாங்கத்தின் கையிருப்பில் நெல் அல்லது அரிசி இருக்க வேண்டும். அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்கி செயற்கையாக விலையை ஏற்றும் போது அரச நெல் சந்தைப்படுத்தும் சபையின் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைப்படுத்தி அச்செயற்கை விலை ஏற்றத்தை முறியடிக்க வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். ஆயினும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் நெல்லை கொள்வனவு செய்யாமல் நெல் மற்றும் அரிசி சந்தைகளை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளனர். அதற்காக அவர்கள் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சன்மானம் பெற்றிருக்கலாம். இப்போது பெரும் போக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நெல் உற்பத்தியில் 65 முதல் 70 சதவீதம் வரையிலான அரிசி உற்பத்தி பெரும்போகத்திலேயே இடம்பெறுகிறது. எனவே, அரசாங்கம் இப்போதே அரிசி உற்பத்தி களஞ்சியப்படுத்தல், கையிருப்பு விநியோகம் போன்றவற்றின் தரவுகளை தயாரித்து இவ்வருட இறுதியில் ஏற்படக் கூடிய தட்டுப்பாட்டை எதிர்நோக்க தயாராக வேண்டும். இவ்வாறு அந்த தகவல்களை முறையாக கையாளப் போவதாகவே அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், நீண்ட காலமாக நாடெங்கிலும் கைவிடப்பட்டு இருந்த 200க்கு மேற்பட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் இராணுவத்தினரால் சுத்தப்படுத்தபட்டுள்ளன. ஆனால் நெல் சந்தைப்படுத்தும் சபையின் அரிசி கொள்வனவு இன்னும் ஆரம்பமாகவில்லை. நெல்லுக்கான உத்தரவாத விலை ஒன்றை நியமிக்குமாறு சில விவசாயிகள் கோரிய போதிலும் அரசாங்கம் அதையும் செய்யவில்லை. உற்பத்தி செலவுக்கு அதன் மூன்றில் ஒன்றை சேர்த்தே உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அது சுமார் 130 ரூபாவாகும் என்றும் கமநல துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியிருந்தார். அது போதுமானதல்ல என்று விவசாய சங்கங்கள் அதை நிராகரித்தன. இதற்கிடையே தனியார் ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ கிராம் நெல்லை 80, 90 ரூபாய் போன்ற குறைந்த விலைக்கே தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். என்றும் அரசாங்கம் உடனடியாக உத்தரவாத விலையை அறிவிக்க வேண்டும் என்றும் சில பகுதிகளில் விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், உத்தேச உத்தரவாத விலையான 130 ரூபாவுக்கு அதிகமாக தனியார் வர்த்தகர்கள் தற்போது நெல் கொள்வனவு செய்வதாகவும் எனவே உத்தரவாத விலையை உடனடியாக அறிவித்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பிரதி அமைச்சர் கூறுகிறார். அதாவது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யாதா? இதற்கிடையே அரிசி ஆலை உரிமையாளர்கள் கிலோ கிராம் 170 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்வதாகவும் அதற்கு குறைவாக அரசாங்கத்துக்கு நெல்லை விற்க முடியாது என்றும் மற்றொரு விவசாய சங்கம் கூறியிருந்தது. ஐந்து கிலோ கிராம் நெல்லில் மூன்று கிலோ கிராம் அரிசியை பெற முடியும் என்று விவசாய அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது. அதன் படி 170 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்தால் அரிசியின் விலை 285 ரூபாவாகும் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்துச் செலவுகளுடன் அரிசி விலை 300 ரூபாவை தாண்டுவதை தடுக்க முடியாது. 130 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டால் கட்டுப்பாட்டு விலையான 230 ரூபாவுக்கு அரிசி சந்தைக்கு வர முடியும். மற்றொரு பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் நெல்லுக்கு 130 ரூபாய் உத்தரவாத விலையை நியமித்து கொள்வனவு செய்தால் அரிசி ஆலை உரிமையாளர்கள் அதை விட சற்று அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்வர். உத்தரவாத விலைக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கூற முடியாது. எனவே, அரசாங்கத்தின் நெல் களஞ்சியப்படுத்தும் திட்டம் தோல்வி அடையலாம். மீண்டும் அரிசி சந்தை ஆலை உரிமையாளர்களின் கையில் சென்றடையலாம். அரசாங்கம் நீர்ப்பாசனங்களை பராமரிக்கிறது, மானிய விலையில் உரம் வழங்குகிறது, வெள்ளம் அல்லது வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டால் நஷ்ட ஈடு வழங்குகிறது, விவசாயக் கடன் வழங்குகிறது. ஆனால், விவசாயிகள் இலாபத்தை கருதி தனியார் துறையினருக்கு நெல்லை விற்க விரும்புகின்றனர். அதனால் பின்னர் அவர்களே சுரண்டப்படுகிறார்கள். அரிசி பாவனையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு இடியாப்ப சிக்கலாகும். 29.01.2025 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரிசியின்-அரசியல்/91-351115
  17. மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 08:49 கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது. R https://www.tamilmirror.lk/மலையகம்/மதுபானத்தை-திருடிக்-குடிக்கும்-குரங்குகள்/76-351156
  18. பீற்றர் இளஞ்செழியன் விசாரணைக்கு அழைப்பு சண்முகம் தவசீலன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் பீற்றர் இளஞ்செழியனின் இல்லத்துக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவு அதிகாரிகள் அழைப்பு கடிதத்தை வழங்கி சென்றுள்ளனர் குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 2025.02.01 ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு அழைக்கப்படுகிறீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பீற்றர்-இளஞ்செழியன்-விசாரணைக்கு-அழைப்பு/175-351160
  19. அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் BatticaloaJanuary 30, 2025 அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இப்பாரிய விபத்து” குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால உதவியாளர்களின் பணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். https://eelanadu.lk/அமெரிக்காவில்-பயணிகள்-வி/
  20. யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்! BatticaloaJanuary 30, 2025 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24, 25ஆம் திகதிகள் ஜனவரி மாதம் மாணவர்கள் மீதான பழிவாங்குதல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக உண்ணாவிரதப் போராட்டம் மாணவர்களினால் சனநாயக வழியில் நடைபெற்றது. எனினும் அந்த போராட்டத்தினை திசைதிருப்பும் வகையிலும், திரிபுபடுத்தும் வகையிலும் அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் Drugs பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனும் பொய்யான செய்தி ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மாணவர்களின் கருத்தாகச் சித்தரித்து ஊடக சந்திப்புக்களில் பரப்பப்பட்டு வருகின்றது. எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின் மாண்பு என்பவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயல்களையும் முற்றாக மறுக்கின்றோம். கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தமது முழுமையான எதிர்ப்பினையும் கண்டனங்களையும் இச்செயல்களிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம்பொருளாளர் பொறுப்புக்களிலிருந்து கூட்டாக விலகி நாங்களும் எமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வித அடிப்படை ஆதரங்களுமற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொய்யான செய்திகளைப் பரப்பும் நபர்களின் மீது உடனடி மற்றும் விரைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://eelanadu.lk/யாழ்-பல்கலைக்கழகத்தின்-2/
  21. விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்ட இலங்கை சுங்கம்! அண்மையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை சுங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சுங்கத்தினரால் சோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எந்தவொரு சரக்கு கொள்கலனுக்கு இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் போன்றவை நாட்டிற்குள் நுழைய வாய்ப்பில்லை எனவும், இந்த கொள்கலன்களை விடுவிப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு எதுவும் இல்லை என்றும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொருட்களை விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் பின்பற்றும் வழிமுறை, சோதனை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதத்திற்கு வழிவகுத்த காரணிகள் என்பன தொடர்பிலும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/விடுவிக்கப்பட்ட_கொள்கலன்கள்_தொடர்பில்_தெளிவுபடுத்தல்_அறிக்கையை_வெளியிட்ட_இலங்கை_சுங்கம்!
  22. யாழ்.போதனாவின் மகப்பேற்று விடுதி புதிய கட்டடத்தில்! adminJanuary 30, 2025 யாழ் போதனா வைத்தியசாலை – மகப்பேற்று விடுதி (இலக்கம் 18) புதிய இடத்தில் செயல்படுகிறது என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை 18ம் இலக்க மகப்பேற்று விடுதி வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக கட்டடத்துக்கு அண்மையில் செயல்பட்டுவந்தது. கடந்த திங்கட்கிழமை முதல், மருத்துவக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. எனவே மகப்பேற்று விடுதிகளில் தங்கி இருக்கும் கர்ப்பிணி தாய்மார்களை பார்வையிட வருவோர் நுழைவாயில் 6 மூலம் வருகை தரலாம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/210511/
  23. பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது! adminJanuary 30, 2025 யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை (29.01.25) குறித்த வீட்டினை சுற்றி வளைத்து மேல் வீட்டில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களையும் , அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய நபரையும் கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் காவல் நிலையத்தில் காவற்துறையினர் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று , தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் , யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வடக்கில் சிறுமிகளை விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் , கிளிநொச்சி பரந்தன் பகுதி மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/210509/
  24. இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! adminJanuary 30, 2025 அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் குறிப்பிட்டுள்ளார். வடக்குக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் தலைமையிலான உயர்ஸ்தானிகராலய குழு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன், சட்டவிரோத புலம்பெயர்வுக் கட்டுப்பாட்டுக்கான தொடர்பு அதிகாரி ப்ரெட் சீஃல்ட்ட் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன், பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முத்துகிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல் கற்கைத் துறையின் நிகழ்சித்திட்டத் தலைவர் பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நியூசிலாந்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், விவசாயம் மற்றும் கடற்றொழில், விளையாட்டு மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படக்கூடிய கூட்டுச் செயற்றிட்டங்கள் பற்றி இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நியூசிலாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான இணைப்பு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் முன்மொழிவொன்றைக் கோரிய இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், இது தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். https://globaltamilnews.net/2025/210515/
  25. மாவைக்கு கொடி போர்த்தி அஞ்சலி! adminJanuary 30, 2025 மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/210520/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.