Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 124 பேர் உயிரிழப்பு 29 டிசம்பர் 2024, 01:50 GMT Reuters புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 124 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Reuters இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. Reuters ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். "விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது. 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது. Reuters தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார். "இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. EPA/Yonhap சோய் சாங்-மோக் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார். மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது. EPA/Yonhap ஜேஜூ ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விபத்து நடந்ததற்காக மணிப்பு கேட்டனர் முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o?at_campaign=ws_whatsapp
  2. போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை! December 28, 2024 3:53 pm அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, வாஜ்பாயும் நானும் அதிகாரத்தில் இருக்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. நாங்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உலகளவில் எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குவதில் தொடர்ந்து ஒத்துழைப்பது பற்றி அக்டோபர் 2003 அறிக்கையின் குறிப்பில் உள்ளது. கடற்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளில் பிரபாகரன் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும், எனது பார்வையில் இது விடுதலைப் புலிகளின் குறைப்பாடாக கண்டறிந்தேன. எனவே, வாஜ்பாய்ஜியும் நானும் எங்கள் கடல் பகுதியில் அரசு அல்லாதவர்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். கடற்புலிகளின் செயற்பாடுகளை நடுநிலையாக்கி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினோம். 2003 ஆம் ஆண்டளவில், நிலைமை இலங்கைக்கு சாதகமாக மூலோபாய ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தையில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். எனவே, அமைதிப் பேச்சுவார்த்தையை அவர் புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த முக்கியமான கட்டத்தில், இலங்கை அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு விடுதலைப் புலிகளின் பதிலை வலியுறுத்தியும், பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே மீண்டும் தொடங்குவதற்கும் இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இந்தியா எமக்கு ஆதரவளித்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அப்பால் சென்று இரு நாடுகளுக்குமிடையில் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான அவசியம் குறித்தும் வாஜ்பாய்ஜியும் நானும் விவாதித்த ஒரு தலைப்பு. அரசாங்கத்தில், விவசாயம், மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை செயல்படுத்த முடிந்தது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், பொருளாதாரத்தின் மீது எங்கள் கவனம் திரும்பியது. முதன்முறையாக, இரு அரசாங்கங்களும் தங்கள் பொருளாதாரங்களை மேலும் தாராளமயமாக்குவதில் உறுதியாக இருந்தன. சேவைத் துறையை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அதற்கு அப்பால் ஒரு பணிக்குழுவை அமைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. அக்டோபர் 2003 இல் நாங்கள் எங்கள் அடுத்த இருதரப்பு சந்திப்பை நடத்தியபோது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக மாறியது. நாங்கள் 2004 ஆம் ஆண்டிற்குள் பேச்சுவார்த்தைகளை தொடங்கி விவாதங்களை முடிக்க முடிவு செய்தோம். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் பதவியில் இல்லை. நாங்கள் இருவரும் இந்திய-இலங்கை உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றோம். முதலில், இந்திய எண்ணெயை இலங்கை சந்தையில் நுழைய அனுமதித்து, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை சேமிப்பிற்காக பயன்படுத்தினோம், இரண்டாவதாக, நிலக்கரியை நிறுவ ஒப்புக்கொண்டோம்.” என்றார். https://oruvan.com/india-helped-us-until-the-end-of-the-war-ranils-speech-in-new-delhi/
  3. அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை. 28 Dec, 2024 | 07:36 PM கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த விமான விபத்திற்கு என நேரடியாக குறிப்பிட தவறியுள்ளார். உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவேளை புட்டின் இதனை தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் வான்வெளியில் இடம்பெற்ற இந்த மன்னிப்பு கோரிய புட்டின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202418
  4. போதைப்பொருள் வருவதைத் தடுக்க ஜனாதிபதியின் தீர்மானங்கள் December 28, 2024 05:01 pm ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார். அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197943
  5. தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றமில்லை December 28, 2024 06:48 pm தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார். எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197947 தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம் December 28, 2024 06:39 pm கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் அவர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கடந்த தேர்தலில் கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சை குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது. மேலும், வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனையவர்களுக்கும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197946
  6. புலிகள் பாதுகாத்த எமது நிலங்களை வனஇலாகா அபகரித்துள்ளது : ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு December 28, 2024 கடந்த 2009இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும், குடியிருப்பு நிலங்களை தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில், வவுனியாவடக்கு பிரதேசசெயலகப் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் காணி விடுவிப்புத்தொடர்பில் பேசுபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் இடம்பெயர்வைச் சந்தித்து மீள்குடியேறியது அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் குறிப்பட்டளவு காலங்களுக்குள்ளும், சில பகுதிகளில் நீண்டகாலங்களுக்குப் பின்னரும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இந் நிலையில் மக்கள் இடப்பெயர்விற்கு முன்பதாக பயிர்செய்கையில் ஈடுபட்ட காணிகள் தற்போது பற்றைக்காடுகளாகக் காட்சியளிக்கின்றன. தற்போது இவ்வாறு பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கும் எமது மக்களுக்குரிய காணிகளுக்கு, எவ்வித முன்றிவிப்புக்களுமின்றி வனவளத் திணைக்களத்தினர் தற்போது எல்லைக்கல்லிடுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தந்த மாவட்டசெயலருக்கோ, பிரதேசசெயலருக்கோ, கிராம அலுவலருக்கோ, காணிகளுக்குரிய மக்களுக்கோ அறிவிக்காமலேயே இவ்வாறு எல்லைக்கல்லிடும்பணிகளில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபடுகின்றனர். பூர்வீகமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு திறம்பட வாழ்துவந்த எமது மக்களின் பயிர்ச்செய்கை நிலங்கள் இதில் அதிகமாக வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தின் அடாவடித்தனமான ஆக்கிரமிப்புத் தொடர்பில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாமென நினைக்கின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35000ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள். இவ்வாறு அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்திடமும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்துவோம். நாட்டிற்கு காட்டுவளம் தேவைதான். அதற்காக நாட்டுக்கான ஒட்டுமொத்த காடையும் வன்னிக்குள் இருந்து உருவாக்கவேண்டுமென நினைத்தால் அது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும். வன்னியில் மக்களிடம் இருந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். அவ்வாறு விடுவித்தாலே எமது மக்களால் தமது வாழ்வாதாரத்தைக்கொண்டு செல்லமுடியும். வன்னி மக்கள் சிறந்த உழைப்பாளர்கள். அவர்கள் உழைத்து வாழ்ந்த நிலங்களே இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் வனவளத் திணைக்களத்தின் இந்த அடாவடித்தனமான செயற்பாடுதொடர்பில் கவனமெடுக்கவேண்டும். ஜனாதிபதி, பிரதமர், வனவளத் திணைக்களத்தோடு தொடர்புடையவர்களுடனும் நாம் இணைந்து பேசி இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றார். https://www.ilakku.org/the-forest-department-has-usurped-our-lands-protected-by-tigers-ravikaran-mp-points-out/
  7. தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்! 28 Dec, 2024 | 03:26 PM தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை (28) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். பின்னர் அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து வேலணை மற்றும் மண்டைதீவுகளுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியசாலைகளின் நிலவரங்களை ஆராய்ந்தனர். https://www.virakesari.lk/article/202378
  8. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? December 28, 2024 02:55 pm தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதும் 18 உறுப்பினர்கள் கையொப்படமிட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது. மாவைசேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார். கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கபட வேண்டும் என்று எமது யாப்பிலும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் எஞ்சிய காலத்திற்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் பிரிவினை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கட்சித்தலைவர் பதவியை சிவஞானம் வகிப்பார் அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையபடுத்தி, மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கிறது. பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கிறது. எனவே முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தன் அவர்களை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம். அதனடிப்படையிலேதான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியினை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம். இதேவேளை கட்சி தொடர்பாக யாழில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் எதும் வழங்கப்படவில்லை எனவே அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு இல்லை என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=197937 தலைவர் தலைவராகவே இருப்பார் - கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம் 28 Dec, 2024 | 03:26 PM தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், எப்போதும் எமது கட்சித் தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு எடுப்பது வழமை. இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது. இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம்பெற்றிருந்தது. தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன். என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான். வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை பதிவிட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. ஆகவே, அவரும் அந்த வழக்குகளில் பின்வாங்கினால் நானும் எனது வழக்குகளில் பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது. நாங்கள் கேட்டுக்கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறுதான். ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை வெளியிடுகிறார்கள். தலைவர் தலைவராகவே இருப்பார் என்றார். https://www.virakesari.lk/article/202381
  9. யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு Freelancer / 2024 டிசெம்பர் 28 , பி.ப. 01:32 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 03) ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் நேற்று (டிசம்பர் 27) இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/யோஷித-ராஜபக்ஷவுக்கு-CID-அழைப்பு/150-349398
  10. ஏப்ரல் 5ஆம் திகதி குட்டித் தேர்தல்.. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் அந்தக் காலப் பகுதியில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதால் ஏப்ரல் மாதமே பொருத்தமான காலப்பகுதி என்று கருதப்படுகின்றது. இதனடிப்படையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. https://newuthayan.com/article/ஏப்ரல்_5ஆம்_திகதி_குட்டித்_தேர்தல்..
  11. ‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்! டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருடாந்த 1% முதல் 1.5% வரை பணத்தாள்கள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வீணாக செலவிடப்படுகிறது. பணத்தைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மோசடி மற்றும் ஊழலை அதிகரிப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்பாட்டில் திறமையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளன. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் ‘GovPay’ மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 அரசு நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்கள் ஜனவரி முதல் இணைக்கப்படும். இந்த முன்முயற்சியானது அரசாங்கப் பணம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொதுச் சேவைகளின் செயல்திறன் மேம்படும். டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மனித உழைப்பைக் குறைக்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலை அகற்ற வழிவகுக்கும் என்பதுடன், பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கும்.” என்றார். https://newuthayan.com/article/‘GovPay’_அப்_அறிமுகம்_–_அரச_கொடுப்பனவுகள்_அனைத்தும்_டிஜிட்டல்மயம்!
  12. 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் adminDecember 28, 2024 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு கோரினார். ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை தயாரிக்கும் பணிகளை நிறைவுறுத்துமாறு பிரதிப் பிரதம செயலர் (நிதி) எஸ்.குகதாசன் அறிவுறுத்தினார். பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், அடுத்த ஆண்டுக்குரிய மிகப் பெரிய திட்டங்களை விரைந்து ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ஒப்பந்தகாரர்கள் தொடர்பான பட்டியலை கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும், கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களில் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கவேண்டியவர்கள் தொடர்பான விவரங்களையும் தயாரித்து வைத்திருக்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாதமும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், நிதி மற்றும் பௌதீக முன்னேற்ற அறிக்கைகள் மாதாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். வடக்கு மாகாண பிரதம செயலர் உள்ளிட்ட வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், பணிப்பாளர்கள், மாகாண திறைசேரி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2024/209698/
  13. இன்று நெற்கொழுதாசனின் கதையை வாசிக்க நேரம் கிடைத்தது. சாதியத்தின் கூறுகள் தலைமுறை தலைமுறையாக நுட்பமாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருப்பதை கதை சிறப்பாகச் சொல்கின்றது. கதையில் சம்பவங்கள் இயல்பாகக் கோர்க்கப்பட்டுள்ளன. அப்பாவின் வலிமையும், பணிவும், ஆசிரியர் பாகுபாடோடு நடத்தியதும் முன்னர் நடந்த வரலாற்றை எளிமையாகக் கூறுகின்றது. கூட வேலை செய்பவன் குத்திக்காட்டும் சொற்கள் எப்படி பூதாகரமாக மாறி வலியைத் தருகின்றன என்பதும், பணத்தின் தேவை மன அழுத்தத்தை அதிகரிக்க வைத்தாலும் எப்படி பொறுமையைக் காக்கச் செய்கின்றது என்பதும் சரியாக வந்திருக்கின்றது. ஒரு காலத்தில் இருந்த மோசமான சாதிய ஒடுக்குமுறை இப்போது இல்லையென்றாலும், முற்றாக நீங்கிவிடவில்லை. கரவான வழிகளில் புலம்பெயர் நாடுகளிலும் வந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் பல தலைமுறைகள் தாண்டித்தான் இந்த சாதியம் என்ற கான்ஸர் இல்லாமல்போகும்.
  14. முகநூலில் மு. தமிழ்ச்செல்வன்….. அவங்கள் இருவரும் அடிச்சது இப்பவும் நெஞ்சுக்கு மேல்தான் வலிக்கிறது. ஆனால் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களின் செயற்பாடுகள் நெஞ்சுக்குள் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது. ——— நவரத்தினம் கிரிதரன்.. ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது! ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகத் தேசம்.நெற் செய்தி வெளியிட்டுள்ளது. சூழலியாளர், ஊடகவிலயாளர், எழுத்தாளர், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் என்னும் பன்முக ஆளுமையாளரான மு.தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டது அதிர்ச்சி தருவது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மு.தமிழ்ச்செல்வனைத் தாக்கியவர்கள் சட்டத்தின் மும் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவார்கள் என எதிர்பார்ப்போம். தேசம்.நெற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: "கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன். தேசம்நெற்றுக்குத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்." ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் சூழலியற் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் ஊடகவியலாளர். அவ்வகையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது 'நஞ்சாகும் நிலம்' நூல் சூழல், சூழல் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இவ்வகையில் முக்கியமான நூல். கிளிநொச்சியிலிருந்து வெளிவந்த 'வெள்ளிநாதம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராகவிருந்தவர். அக்காலத்திலிருந்து சூழலியல் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகின்றார். தினகரன் பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது சூழற் பாதுகாப்பு பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பே 'நஞ்சாகும் நிலம்'. மேற்படி செய்தியில் மு.தமிழ்ச்செல்வன் கூறிய "என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்" என்னும் கூற்று துயரம் தருவது. ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலவற்றில் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம். நம் மக்கள் மாற வேண்டும். இந்நிலை தொடர்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. இவ்விடயத்தை எவ்வகையில் நம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கையாள்கின்றார்கள் என்பதைக் காலம் வெளிப்படுத்தும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசு இது போன்ற விடயங்களை எவ்விதம் கையாள்கின்றது என்பதையும் அவதானிப்போம். https://www.facebook.com/share/1GUJKfAXqa/?mibextid=wwXIfr
  15. இஞ்சை கனபேருக்கு மூளை மங்கிப்போட்டுது.. சின்ன வயசில நம்பினது என்னவெண்டு கூகிளில தேடிப்பார்த்து அடிக்கிற மாதிரிக் கிடக்கு! எல்லாரும் சாமியைக் கும்பிட்டதும், பேய் பிசாசுக்கும், முனிக்கும் பயந்ததும் இப்பவும் அதை உண்மைதான் எண்டு நினைக்கிறது ஒண்டும் புதினமில்லை! எனக்கு அண்ணன் பென்சில் குதிரைப்பீயில செய்யிறது எண்டு சொன்னதை கனகாலம் நம்பி, பென்சிலின் கூரைத் தொடுவதில்லை. மாறிக்கீறித் தொட்டாலும் கைகழுவவேண்டும் எண்டு அலாதிப்படுவன்! மற்றும்படி நானும் சின்னவயசில பெட்டையளின் பிரியத்துக்காக🥰 மயில் இறகை பொண்ட்ஸ் பவுடர் போட்டு அப்பியாசக் கொப்பிக்குள் வச்சனான்! குட்டிபோட்டுதா எண்டு நெருங்கிவந்து கேட்டவா இப்ப அவுஸில இருக்கிறா! பொன்வண்டை நெருப்புப்பெட்டிக்குள் வளத்தனான்! அது செத்துப் போச்சு!
  16. மாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை December 27, 2024 12:09 pm அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். தனது வீட்டிற்கு வெளியே பலருக்கு முன்னால் அவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவியின் துயரமான பாலியல் வன்கொடுமை நீதிகோரி தனது வீட்டிற்கு முன் இன்று (27 ஆம் திகதி) காலை 10 மணிக்கு ஆறு முறை சவுக்கால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஒரு தமிழக ஆளும் கட்சியான திமுக நிர்வாகி என்றும், அதை ஆளும் கட்சி மறுத்ததாகவும் குற்றம் சாட்டினார். திமுக தலைவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படங்களைக் காட்டி, அவர் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகி என்றும் குற்றம் சாட்டினார். பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவின் முதன்மை உறுப்பினர் கூட இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வலியுறுத்தினார். ஆளும் கட்சியுடன் தொடர்புடையதால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார். “இது மிகவும் எளிமையானது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவுடன் தொடர்புடையவர் என்பதால், பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். முதல் தகவல் அறிக்கை (FIR) எழுதப்பட்ட விதம் குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார், மேலும் பாதிக்கப்பட்டவர் ஒரு குற்றம் செய்தது போல் அது வரைவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். “பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு திமுக (அரசு) வெட்கப்பட வேண்டும்” என்று தமிழக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி டிசம்பர் 23 அன்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். கல்லூரி வளாகத்தில் ஒரு ஆண் நண்பருடன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து 37 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். “விசாரணையின் போது, ஆதாரங்களின் அடிப்படையில், கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வியாபாரம் செய்கிறார்” என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவர் வேறு குற்றங்களில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். https://oruvan.com/bjp-tamil-nadu-president-k-annamalai-whips-himself-outside-his-residence/
  17. உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள் ; காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தெரிவிப்பு ! ShanaDecember 27, 2024 முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், முப்படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும். மேலும், வடக்கு மக்களுக்கு நாங்கள் தெரிவிப்பதாவது, உங்களுடைய சொந்த காணிக்குள் இராணுவ படைமுகாம் இருக்குமாயின் எமக்கு தகவல் தாருங்கள். இது தொடர்பிலான முழுமையான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் காணி அமைச்சரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, உரிய தரவுகள் இருக்குமாயின் எமக்கு காணி பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் கலந்துரையாடுவோம் என்றார். https://www.battinews.com/2024/12/blog-post_718.html
  18. கோட்டாவின் ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியன் கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சாணக்கியன் தெரிவித்ததாவது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவின் 19வது நினைவு தினத்தினை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதிகிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையினையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான் அவர்கள் கோட்டாபயவின் காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார். பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை சொல்லியிருந்தார். அது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சியொன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பிள்ளையான் அவர்களை விடுதலைசெய்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வாறு சிலரை இடமாற்றினார்கள் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டது. அன்று நீதி அமைச்சராகயிருந்த அலிசப்ரியின் வழிகாட்டலில்தான் நடைபெற்றது என்று சொல்லப்பட்டது. பிள்ளையான் விடுதலை செய்ததன் காரணமாக கோட்டபாய ஆட்சியில் எங்களுக்கு நீதிகிடைக்கும் என்று நம்பவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய்வதாகவும் அந்த விசாரணை பட்டியலில் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் பெயர் உள்வாங்கப்படவில்லை. இலங்கையின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையினை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். குற்றப்புலனாய்வுத்துறையானது பிள்ளையான் விடுதலைசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை முன்னெடுக்கவேண்டும். ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் உள்ளார்கள். அவர்களை மீண்டும் விசாரணைசெய்து ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலைக்கு மட்டுமல்லாமல் வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டும். https://thinakkural.lk/article/314172
  19. அஜர்பைஜான் விமானம் விழுந்து நொருங்கியமைக்கு ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதமேகாரணம் என்பதற்கான அறிகுறிகள் -அமெரிக்க அதிகாரி 27 Dec, 2024 | 12:03 PM ரஸ்யாவின் விமானஎதிர்ப்பு ஆயுதம் தாக்கியதன் காரணமாகவே அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது என்பது ஆரம்பகட்ட அறிகுறிகள் மூலம் தெரியவருவதாக அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். விமானத்தின் கறுப்புபெட்டியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகஅஜள் இதன் மூலம் விமானவிபத்திற்கான காரணம் தெரியவரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையிலேயே அமெரிக்க அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். அஜர்பைஜான எயர்லைன்ஸ் விமானத்தின் ஜே2 8243 விமானத்தை ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதம் தாக்கியமைக்கான அறிகுறிகள் உள்ளன என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். 38 பேரை பலிகொண்ட இந்த விமானவிபத்து குறித்து அமெரிக்கா முதல்தடவையாக தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எங்களது மதிப்பீடு உறுதியானால் இது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் அல்லது தாக்குதலாக அமையலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார், ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம்ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார். அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன https://www.virakesari.lk/article/202278
  20. இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர் Published By: Digital Desk 7 27 Dec, 2024 | 02:16 PM இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலையளிக்கிறது. நாங்கள் எதிர்காலம் தொடர்பில் திட்டமிடல்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறான திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை உண்டு பண்ணலாம். சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அத்தோடு,கிடைக்கவுள்ள பாரிய நிதி மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/202283
  21. கெஹெலியவின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம் - நீதிமன்றம் அறிவிப்பு 27 Dec, 2024 | 02:55 PM முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிகணக்குகள் ஏனைய சொத்துக்கள் உட்பட முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 18 வங்கி கணக்குகள் 5 ஆயுள்காப்புறுதிகள் ஆகியவற்றை செயல் இழக்கச்செய்துள்ளதுள்ளதுடன் கொழும்பு ஐந்தில் தொடர்மாடியொன்றையும் மேர்சிடெஸ் பென்ஸ் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளது என நீதிமன்ற விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகளும் சொத்துக்களும் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தவர்களிற்கு சொந்தமானவை. டிசம்பர் 23 ம் திகதி முதல் 2025 ஜனவரி 3ம் திகதி இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்கி வைத்திருக்கும் https://www.virakesari.lk/article/202293
  22. தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது பாடுபட்டுவந்திருந்த பொறியியலாளர் கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 15.12.2024 அன்று லண்டனில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 70. மகேஸ்வரன் தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பாடசாலையிலும் மற்றும் அப்போதிருந்த பரமேஸ்வரா கல்லூரியிலும் பயின்று பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றை படித்திருந்தார். க.பொ.த உயர்தர பரீட்சையில் மிகவும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியிருந்தார். இருந்தபோதிலும், குடும்ப சூழ்நிலை மற்றும் நாட்டில் அப்போது நிலவிய அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக தனது பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்கு 1974 ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு சென்றார். லண்டன் மிடில்செஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் ஹட்பீல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் துறையில் கலாநிதி படிப்பை பூர்திசெய்தார். யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே அவரின் தந்தை சதாசிவம் வழியில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு உட்பட பல்வேறு தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பிரித்தானியா வந்த பின்னர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்த போது பல்வேறு வழிகளிலும் பங்களிப்பு செய்து தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து செயற்பட்டார். தனது அரசியல் மற்றும் ராஜதந்திர செயற்பாடுகளின் பொருட்டு அவர் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும் அதற்கு பின்னரும் அவர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, அவர் கொழும்பில் சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டிருந்தது. தனது அரசியல் மற்றும் ராஜதந்திர பணிகளின்பொருட்டு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பலருடனும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதுவராலயங்களுடனும் உயர்மட்ட தொடர்புகளை அவர் பேணி வந்திருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு அவர் பெரிதும் பாடுபட்டுவந்திருந்தார். இதன்பொருட்டு அவர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மருத்துவர்கள், கல்வியாளர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்திருந்தார். ஏழைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளையும் இந்த காலப்பகுதியில் அவர் செய்திருந்தார். முள்ளிவாய்க்கால் துரதிஷ்டம் ஏற்பட்டபோதிலும், தமிழ் மக்கள் தமது அரசியல் , ராஜதந்திர, ஜனநாயக செயற்பாடுகளின் மூலம் தமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் காணப்பட்ட பிளவுகளும் சண்டைகளும் அவரை மனதளவில் பெரிதும் பாதித்திருந்தன. அதனால், தமிழ் அமைப்புக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு அண்மைக்காலத்தில் பல நாடுகளுக்கும் விஜயம் செய்து பல்வேறு சந்திப்புக்களை அவர் மேற்கொண்டிருந்தார். அத்துடன், பல நாடுகளினதும் ராஜதந்திரிகளுடன் அவர் இறுதிவரை தொடர்புகளை பேணிவந்திருந்தார். கலாநிதி மகேஸ்வரனின் திடீர் மறைவு ஈழ தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு ஒரு பேரிழப்பாகும். அவர் தனது மனைவி (மருத்துவர்), இரண்டு மகள்கள் (மருத்துவர்கள்) மற்றும் மகன் (பொறியியலாளர்) ஆகியோரை விட்டுச்செல்கின்றார். அவரின் இறுதி நிகழ்வுகள் 27.12.2024 அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பிரித்தானியாவின் Harrow Leisure Centre ( Christchurch Ave, Harrow HA3 5BD) இல் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு Hendon Cemetery & Crematorium இல் (Holders Hill Rd, London NW7 1NB) தகனம் செய்யப்படும். http://www.samakalam.com/தமிழ்-தேசிய-விடுதலைப்போர/
  23. விமானத்தில் உயிாிழந்த இலங்கைப் பெண் adminDecember 27, 2024 டோஹாவில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமானத்தில் பயணித்த குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவரது மகனுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் இறந்தவாின் உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/209690/
  24. தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை December 26, 2024 11:42 am இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும். அதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும். தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும். ஆகவே, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட எட்டு ஆசனங்களை வடக்கு – கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் எச்சரித்துள்ளார். https://oruvan.com/sumanthirans-faction-is-conspiring-to-create-a-rift-within-the-tamil-nadu-party-cvk-sivagnanam-warns/
  25. தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும். தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை இந்தியா அதன் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செல்படுவதாக கூறுகிறது. ஆனால், அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான போக்கு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதுடன், பல நாடுகள் இந்தியாவின் தலையீட்டை நேரடியாக எதிர்த்துள்ளன. மாலைத்தீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸு, இந்திய படைகளை மாலைத்தீவிலிருந்து வெறியேறுமாறு கூறியதுடன், சீனாவுக்குச் சார்பான போக்கை பின்பற்ற ஆரம்பித்தார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் ஓரளவு சுமூகமாகியுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தை துருக்கிக்கே மேற்கொண்டிருந்தார். இது இதற்கு முன்பு மாலைத்தீவு ஜனாதிபதிகள் பின்பற்றிய இந்திய பயணத்துக்கு மாறாக அமைந்தது. நேபாளத்திலும் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகள் உருவாகியுள்ளன. நோபாளம் இந்து மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாக உள்ள போதிலும், அங்கு இந்தியாவின் செல்வாக்கை அவர்கள் விரும்பவில்லை. இதனால் நேபாளப் பிரதமராக தெரிவான ஷர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார். பங்காளதேஷிலும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிராக உள்ளது. குறிப்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி இந்தியாவுக்கு சார்பாக இருந்ததாக அவரது ஆட்சிக்காலத்தில் பல எதிர்ப்புகள் இருந்தன. அதனால் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ் அமெரிக்காவிற்கே தமது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நாடு. அதேபோன்று ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் செல்வாக்கை விரும்பாத நாடு. அநுரவுக்கு டில்லி சிவப்பு கம்பள வரவேற்பு விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில்தான் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அது இந்நாட்டின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், இதனை சமாளித்து சீனாவின் செல்வாக்கை இலங்கையில் தவிர்க்கும் வண்ணம் தமது இராஜதந்திர நகர்வுகளை புதுடில்லி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்திய தீப கற்பத்தில் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களது கருத்து. அதேபோன்று இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகள் எடுக்கப்பட்டால் அது இலங்கைக்கு இருள் சூழ்ந்த யுகத்தை உருவாக்கும் என்பதும் யதாரத்தம். இதனை உணர்ந்தவர்களாகதான் கடந்தகால இலங்கையின் ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் மாத்திரம் ஓரளவு இந்தியாவின் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், 2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி இருதரப்பு உறவை வலுப்படுத்தினார். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கொள்கைகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றே அவர் ஆட்சிக்குவர முன்னர் பரவலாக எதிர்வுக்கூறப்பட்டது. ஆனால், அவர் ஆட்சிக்கு வர முன்னரே புதுடில்லி அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்திருந்ததுடன், ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதுடில்லிக்கு அழைத்து மகத்தான கௌரவத்தை வழங்கி அவரை தமது பாதைக்கு நகர்த்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை சீனாவின் பரந்தப்பட்ட முதலீடுகளால் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா அதன் செல்வாக்கை இழந்துவரும் சூழலில் இலங்கையுடனான இராஜதந்திர உறவை மிகவும் வலுப்படுத்திக்கொள்ளும் தேவை இந்தியாவுக்கு உள்ளது. அதன் காரணமாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை விரைவாக வலுப்படுத்தும் தேவை இந்தியாவுக்கு எழுந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி அநுரவின் சில கருத்துகள் சாதகமாக இருப்பதாக இந்தியா கருதுவதுடன், அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் ஸ்திரமான ஆட்சியொன்று இலங்கையில் நிலவும் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு. அதன் காரணமாகவே புதுடில்லியுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணிய ரணில் விக்ரமசிங்க போன்றவர்களைவிட அநுரவுக்கு மிகப்பெரிய வரவேற்பை டில்லி வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி அநுர, இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, சீனாவின் அதிகமான முதலீடுகளை ஈர்த்து இருநாடுகளுடனும் சமதளத்தில் இராஜதந்திர உறவை கட்டியெழுப்ப விரும்புகிறார். அதன் காரணமாகவே இந்திய பயணத்தை தொடர்ந்து அவர் பீஜிங் செல்கிறார். இது சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை என இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டில்லி, பீஜிங்கை எவ்வாறு கையாள போகிறார் அநுர? சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுமுறைக்கு தேவையற்ற தடைகளை ஏற்படுத்த கூடாதென்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருப்பதுடன், இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் பலமாக்கிக்கொள்ளும் வகையில் செயல்படுகளை முன்னெடுத்துள்ளது. வழமையாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வரும் போது டில்லியிலிருந்து செய்தியொன்று வெளியாகும். ஆனால், கடந்தவாரம் சீன கப்பலொன்று கொழும்புக்கு வந்தது. அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவே நேரில் சென்று வரவேற்றார். ஆனால், டில்லியில் இருந்து வெளியாகும் வழமையான கவலை செய்தி வெளியாகவில்லை. இது இந்தியாவின் இராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனா ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தில் (BRI) தெற்காசியாவில் சிறிய நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை முறியடித்து தெற்காசியாவில் பலமான நாடாக உருவெடுப்பதற்கான திட்டங்களை புதுடில்லி வகுத்துள்ளது. அதனை அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என இந்தியா கூறுகிறது. அதன் ஒருகட்டமாக இந்திய பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு வரும் உறுதிமொழியை வழங்கியுள்ளார். அவரது விஜயம் இலங்கையுடனான உறவை மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கு நகர்த்தும் என இந்திய நம்புகிறது. புதுடில்லி – கொழும்புக்கான உறவு அநுரவின் ஆட்சியில் எப்படி இருக்க போகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய போட்டிகளை எவ்வாறு அநுர சமாளிக்க போகிறார்?. சோஷலிச கொள்கையின் வழித்தோன்றலாக தேசிய மக்கள் சக்தியும் அதனை தலைமை தாங்கும் அநுரவும் இந்தியா மற்றும் சீனாவை எவ்வாறு கையாள போகிறார் என்பதை சர்வதேசம் உற்று நோக்க ஆரம்பித்துள்ளது. கட்டுரை – சுப்ரமணியம் நிஷாந்தன் https://oruvan.com/is-india-weakening-in-the-south-asian-region-why-did-new-delhi-target-anurag/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.