Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு - ஜெகதீஸ்வரன் எம்.பி. 04 Jan, 2025 | 11:04 AM வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து வவுனியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும், பிரதி பொலிஸ்மா அதிபருடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியிருந்தோம். இதனையடுத்து, குறித்த காணியினை உடனடியாக விடுவிக்க வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் இக் காணி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/202932
  2. தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……! January 2, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக்கு தீர்வில்லாவிட்டாலும் சுமந்திரன் அணிக்கு தீர்வு. தமிழரசுகட்சியில்/தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் வருகை பலர் நினைப்பது போன்று ஒரு அரசியல் விபத்தோ, அரசியல் தற்செயல் நிகழ்வோ அல்ல. நன்கு திட்டமிட்ட நகர்வு. விடுதலைப்புலிகள் செயலிழக்கும் வரையும் ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரையும் கொக்கு காத்திருந்த கதை. 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக இரா.சம்பந்தன் புலிகளால் நியமிக்கப்பட்ட போதும் மானசீகமாக சம்பந்தன் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வு. இதுவே சம்பந்தனது மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் பின்கதவு அரசியலாக இருந்தது. இது “தமிழீழம் ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின் உள்ளீட்டை தமிழ்மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தகாலம் என்பதால் இதற்கான நியாயப்பாடு தமிழர் அரசியல் தராசில் ஒரு பக்க தராசுத் தட்டை கதிக்கச்செய்தது. மறு பக்கத்தில் புலிகள் தவிர்ந்த ஆயுத போராட்ட அமைப்புக்களின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் இதை மேலும் உறுதிப்படுத்தியது. இந்த அமைப்புக்களும்/கட்சிகளும் தமிழீழத்தை புலிகளின் துப்பாக்கி தங்களை குறி பார்த்ததால் ஆயுத போராட்டத்தில் தாங்களாகவே தோற்றும், தோற்கடிக்கப்பட்டும் இருந்த நிலையில் கொண்ட கொள்கையில் “அரசியல் கற்பு” இவர்களிடமும் இருக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு துடுப்பு விடுதலைப்புலிகளின் கைகளில் இருந்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் செய்த பிராயச்சித்தம் இவர்களையும் கூட்டமைப்பில் உள்வாங்கியது. உமா மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதால் சேர்க்கவில்லை போலும். (?). பின்னர் சேர்த்துக்கொண்ட போது விமர்சனங்கள் எழுந்தன. அதுவரை தலையாட்டும் அரசியல் செய்த கூட்டமைப்பு 2009 மே மாதத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. ஒரு புறம் கிளிநொச்சி சந்திப்புக்களில் ஒன்றும், கொழும்பு சந்திப்புக்களில் இன்னொன்றும் பேசி வந்த இரா.சம்பந்தருக்கும், எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான கொழும்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டது. சம்பந்தரின் நம்பிக்கையை திட்டமிட்ட படி சுமந்திரன் பெற்றார். சாத்தியமற்ற தமிழீழம், பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் சூழல்கள் பற்றிய கலந்துரையாடல்களில் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். விளைவு 2010 பாராளுமன்ற தேர்தலில் முள்ளிவாய்க்கால் வலியோடு தமிழ்மக்கள் பெற்றெடுத்த தேசிய பட்டியல் குழந்தையை தூக்கி சாய்மனைக்கதிரை கொழும்புவாசி சுமந்திரனுக்கு சம்பந்தர் கொடுத்தார். முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை தங்கள் திசைக்கு திருப்ப புலிகளின் கையில் இருந்த துடுப்பு சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் கைமாறியது. சம்பந்தரின் வயோதிபம் அவருக்கு நம்பிக்கையான ஒரு கையாளைத்தேடியது. அந்த இடத்தை சம்பந்தர் சுமந்திரனுக்கு கொடுத்தார். மறுபக்கத்தில் சம்பந்தரின் முதுமையை சுமந்திரன் பயன்படுத்தி, கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். சம காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு உள்ளிட்ட பங்காளிகள் கட்சிகளின் பலவீனங்களை சுமந்திரனால் இலகுவாக அடையாளம் கண்டு அரசியல் செய்ய முடிந்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்று முழுதாக சுமந்திரனில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. சம்பந்தர் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களுடனும் கொழும்பு அரசாங்க மாளிகையில் முடங்கிப்போனார். இது ஒரு வகையில் எஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தின் முதுமையை அ.அமிர்தலிங்கம் பயன்படுத்தியதற்கு ஒப்பானது. இந்த அரசியல் சூழ்நிலையில், சரியாக காலக்கணக்கை பார்த்து வந்த எம்.ஏ. சுமந்திரன் தருணம் பார்த்து இரா.சம்பந்தர் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார். இது பல விமர்சனங்களுக்கு வழிவிட்டபோதும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துதல் என்பதில் சாதகமானதாக நோக்கப்பட்டது. ஆனால் சுமந்திரனின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சங்களை நன்கு அறிந்திருந்தவர்கள், சம்பந்தரின் செயற்பாடற்ற பலவீனமான அரசியலை அறிந்திருந்தும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் சுமந்திரனின் அரசியல் தந்திரோபாய உட்கட்சி நகர்வுகளை அறியாதவர்களும், அவரது வாதத்திறமையையும், அரசியல் நியாயப்படுத்தல்களையும் , சர்வதேச உறவுகளையும், பாராளுமன்ற செயற்பாடுகளையும் மட்டும் அறிந்தவர்களும் சுமந்திரனுக்கு பின்னால் ஆதரவாக நின்றனர். 2010 இல் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல்வேறு காரணங்களுக்காக உடைவுகள் ஏற்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரனின் பங்காளிகள் தனித்து போட்டியிடல் என்ற தொழில்நுட்பம்/பொறிமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழரசுக்கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்தது. 2015, 2020 தேர்தல்களில் சுமந்திரன் மீதான மக்கள் நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து 2024 இல் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டார். இதற்கு என்னதான் காரணங்களை கூறினாலும் அந்த காரணங்களில் சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்குண்டு. அதை அவர் சுயவிமர்சனம் செய்ததாக தெரியவில்லை. தனது நிலைப்பாடே சரியென தனித்து ஓடும் சுமந்திரன் இதை செய்வார் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. பாராளுமன்ற அரசியலில் சம்பந்தரினதும், பங்காளிக்கட்சிகளினதும் பலவீனங்களை பயன்படுத்தி பாராளுமன்ற குழுவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுமந்திரன் அடுத்த நகர்வாக தமிழரசுகட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர களத்தில் இறங்கினார். மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவ பலவீனமும், வயோதிபமும் சம்பந்தர் காலம் போன்று மீண்டும் ஒரு வாய்ப்பை சுமந்திரனுக்கு வழங்கியது. கட்சிக்குள் தனக்கு சாதகமாக சி.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம், சாணக்கியன், துரைராசசிங்கம் போன்றவர்களை வளைத்துப் போட்ட சுமந்திரன் தலைமை பதவிக்கு போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. வெற்றி பெற்ற சி.சிறிதரன் பதவியேற்க முடியாதவாறு வழக்கு தாக்கலானது. இந்த இழுபறியில் மாவை சேனாதிராஜாவை பதவியில் இருந்து நீக்கி பதில் தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில் அதுவும் தனது சார்பான சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது சுமந்திரனுக்கு வெற்றியே. தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவியும் சுமந்திரனுக்கு உறுதியானது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் -தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாக முடிவுகளாக எடுக்கப்படுகின்ற நிலை தொடர்கிறது. அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுமாயின், ஏதோவொரு வகையில் அதற்கான காலம் கனியும் வரை முடிவுகளை எடுப்பதை சுமந்திரன் தனது அணியின் மூலம் சாதித்து வருவது வழக்கம். இதற்கான வாய்ப்பை சுமந்திரன் தேடிச் செல்லவில்லை. மாறாக அது காலடிக்கு வரும் வரையும் காத்திருந்து காரியம் செய்கிறார். அந்த வாய்ப்புக்களை அவரின் காலடியில் கொண்டு குவிப்பவர்களாக இரா.சம்பந்தருடன் மாவை.சேனாதிராஜா, சி.சிறிதரன், பா. அரியநேத்திரன், சி.வி.தவராசா….போன்றவர்கள் இருக்கிறார்கள். அவற்றை சுமந்திரன் அணி பயன்படுத்துகிறது. இதனால் கட்சியில் சுமந்திரனின் அடைவுகள் காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையல்ல. எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம். இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? ஒரு சந்தர்ப்பத்தில் “சுமந்திரனை திருத்த முடியாது” என்று சொன்ன கஜேந்திரகுமார், சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் வகிக்கப் போகின்ற முக்கியத்துவம் என்ன? இது பொன்னருக்கு பொல்லு கொடுத்த கதையாக அமையலாம்……(?). https://arangamnews.com/?p=11603
  3. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள் January 1, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினை என்பது அதனது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும். அது தோற்றம் பெற்ற காலந்தொடக்கம் தமிழரசுக் கட்சியானது ஒரு எதிர்ப்பரசியலை நடத்திவந்திருக்கிறதே தவிர புரட்சிகரமான எழுச்சி அரசியலை நடாத்தவில்லை. எதிர்ப்பரசியலுக்கும் புரட்சிகரமான எழுச்சி அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்பது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எதிர்ப்பரசியல் என்பது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கெதிராக எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். உதாரணமாக அரச கரும மொழியாக சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவுடன் அதற்கு எதிராக சத்தியாக்கிரகம் இருத்தல், பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தலா அதற்கெதிராக கல்வியமைச்சரின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டங்களைச் செய்தல், சிங்களக் குடியேற்றத் திட்டங்களா அதற்கெதிராக வெற்றுக் கோசம் இட்டு போராட்டங்களை நடாத்துதல் என்கின்ற அரசியல் நடவடிக்கைகளாகும். இந்த எதிர்ப்பரசியலுக்கு தேவையானதெல்லாம் மக்களை இனம், மொழி, மதம் என்ற அடையாளங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை அரசியல் மூலதனமாக்குவதுதான். இந்த அடையாளங்கள் மக்களை உடனடியாக ஒன்றுதிரட்டவும் அவர்களை உணர்ச்சியூட்டி கொதிநிலைக்குள்ளாக்கி செயல்நடவடிக்கைகளுக்குத் தூண்டுவதற்கும் மிகவும் துணையாகின்றது. பண்டைய பெருமைமிகு வீரக் கதைகளையும் உணர்ச்சியூட்டக் கூடிய பேச்சாற்றலும் எதிர்காலம் குறித்தான அதீத கற்பனைகளையும் உருவாக்கக் கூடிய கெட்டித்தனம் படைத்த எவரும் இவ்வகையான அரசியலை மேற்கொள்ளலாம். தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் எல்லாம் அன்றிலிருந்து இன்றுவரை இந்த பேச்சரசியலில் மக்களை ஒன்றுதிரட்டி பலிக்கடாவாக்கி எதிர்ப்பரசியலை நடாத்தியவைதான் என்பதை அதன் வரலாற்றையும் அரசியல் நடவடிக்கைகளையும் நோக்குகின்றபோது விளங்கிக் கொள்ளமுடியும். மற்றும்படி பொதுமக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த அறிவொளிவூட்டலை மேற்கொண்டு அதனூடாக பொது மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்ததில்லை. அவர்களுடைய அரசியல் கூட்டங்கள் தேர்தல்காலங்களில் இடம்பெறும் உணர்ச்சியரசியலேயாகும். இது பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்ற அரசியலாகும். இதன் தலைவர்களுக்கு அரசியல் தத்துவமும் அதன் நடைமுறைகளும் என்பது ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமை’ எனும் வாய்பாட்டைத் தவிர வேறெதுவும் இல்லை. இந்த இலட்சணத்தில் மக்களுக்கு அரசியல் தத்துவத்தினையும் அதன் நடைமுறையினையும் எவ்வாறு கொண்டு செல்லமுடியும். இந்தப் போக்கு தமிழரசுக்கட்சிக்கு உரியதொன்று மட்டுமல்ல தமிழ் காங்கிரஸ் உட்பட தமிழரசுக் கட்சியின் கர்ப்பப்பையிலிருந்து உருவான தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று பெயர் சுடப்பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானதாகும். புரட்சிகரமான எழுச்சி அரசியல் என்பது இனம், மொழி, மதம் என்ற அடையாளங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாது இனம், மொழி, மதம் எனும் அடையாளங்கள் ஆளும் அதிகாரவர்க்கத்தின் இருப்புக்கும் அதன் அதிகாரத்துக்கும் எவ்வாறு தவறாகத் துணைபோகின்றன என்பதைக் கண்டறிந்து, அந்தக் காரணத்துக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாகும். இது தத்துவார்த்த அறிவார்ந்த அரசியல் செயற்பாடாகும். இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் ஒரு இனத்தை இன்னொரு இனத்துக்கெதிராக செயற்படத் தூண்டுவன அல்ல. அவ்வாறு செயற்படத் தூண்டிய அதிகார வர்க்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி அந்த அதிகார வர்க்கத்தை மக்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களின் அதிகாரத்தை மக்கள் கைக்கு மாற்றுகின்ற அறிவார்ந்த அரசியல் செயற்பாடாகும். புரட்சிகரமான எழுச்சி அரசியல் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது இனம், மொழி, மதம் எனும் அந்தந்த இனக் குழுமங்களின் அடையாளங்களை அங்கீகரித்து அவற்றின் இருப்புக்கும் தொடர்ச்சிக்குமான உறுதியினை வழங்கி உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து அந்த மக்களின் விடிவுக்கான அரசியலை மேற்கொள்வதாகும். இந்த அரசியல் நடவடிக்கைக்கு பதவிகளும் அந்தப் பதவிகளால் வருகின்ற சுகபோகங்களும் முக்கியமானதல்ல, மக்கள் அரசியலை திறம்பட யார் முன்னெடுக்கிறார்களோ அவரை அந்தக் கட்சி தலைவராகத் தெரிவு செய்யும். இதற்கு வலுவான மாக்ஸ்சிச அரசியல் தத்துவார்த்த அறிவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் முக்கியமானதாகும். எதிர்ப்பரசியலில் இருந்து உருவான PLOT, EPRLF போன்ற இயக்கங்கள் புரட்சகரமான எழுச்சி அரசியலை ஆரம்பத்தில் தங்களது கொள்கைத் திட்டமாகக் கொண்டிருந்த போதிலும் குட்டிமுதலாளித்துவ குணாம்சங்கள் காரணமாக் எதிர்ப்பரசியலை கையாள்கின்ற முதிர்ச்சியின்மையினாலும் உட்கட்சிப் பிரச்சினைகளில் ஜனநாயகத்தன்மை இல்லாதததாலும் அவை அந்தப் பாதையிலிருந்து விலகி எதிர்ப்பரசியலுக்குள் மட்டுமே மூழ்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின. தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அத்திவாரம் எதிர்ப்பரசியலில் மட்டுமே இடப்பட்டதினால் அந்த எதிர்ப்பரசியலே அவர்களுக்கெதிரான ஆயுதமாகவும் மாறியிருப்பதை புலிகள் மற்ற இயக்கங்களுக்கு எதிராக மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். உணர்ச்சியூட்டப்பட்டு இராணுவ வெறித்தனத்துக்குள் இருப்பவர்கள் கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதிலளியாது ஆயுதங்களால் பதில் அளிப்பார்கள் என்பதற்கு புலிகளை விடச் சிறந்த உதாரணம் கிடையாது. இறுதியில் அந்தப் போக்கே அவர்களின் அழிவுக்கும் வழிவகுத்ததை ஆய்வறிவுப் புத்தியுள்ள எவரும் மறுதலிக்க மாட்டார்கள். முப்படைகளையும் வைத்திருந்த பல இராணுவ வெற்றிகளைப் பெற்ற ஓர் இயக்கம் அதன் தலைமை அழிக்கப்பட்டவுடன் வேரும் வேரடி மண்ணுடனும் இல்லாமல் போனதுக்கு புலிகளையே உதாரணம் காட்ட வேண்டியும் உள்ளது. மேற்கூறப்பெற்ற இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தலைமைத்துவப் பிரச்சினைகளையும் அதற்கு தமிழர்கள் ஆற்றுகின்ற எதிர்வினைகளையும் நோக்குதல் வேண்டும். தமிழரசுக் கட்சியின் அரசியல் மூலதனம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பன மட்டுமேயாகும். இவை பற்றிய உணர்வுகளை எப்போதும் ஒரு கொதிநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்ற வரைக்கும் தமிழரசுக் கட்சியின் இருப்புக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இந்தக் கொதிநிலையை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதுதான் தழிழரசுக் கட்சியின் பிரச்சினையாக எப்போதும் இருந்து வந்துள்ளது, அதுதான் இன்றும் இருக்கிறது. சிறிதரன் அணியினர் கொதிநிலையை தூண்டி விடும் காரணியாக அதிதீவிர புலி விசுவாசத்தை ஆராத்தியாக எடுக்கின்றார்கள். சுமந்திரன் அணியினர் இந்த விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். இதில் முரண்பாடு என்னவென்றால் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் சுமந்திரன் அணியினர் பலம்வாய்ந்தவர்களாகவும் பொதுச்சபையில் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். மாறாக சிறிதரன் அணியினர் மத்திய செயற்குழுவில் பலவீனமானவர்களாகவும் பொதுச்சபையில் பலமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால்த்தான் மத்திய செயற்குழுவில் சுமந்திரனின் அணியினரின் தீர்மானங்கள் வெற்றிபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதேபோல் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிதரன் வெற்றி பெற்றதும் சுமந்திரன் தோல்வியுற்றதும் இதன் காரணத்தினாலேயாகும். இந்த இரு அணிகளையும் வெற்றிகரமாக கையாளக்கூடிய ஆளுமையும் அறிவும் மிக்க தலைவராக மாவை சேனாதிராஜா அவர்கள் இல்லை. மாவை சேனாதிராஜா அவர்களின் நடத்தைகளை மிகச்சாதாரணமாக அவதானிக்கின்ற எந்தப் புத்தியுள்ள மனிதனும் இவர் நீண்டகாலப் போராட்ட அனுபவம் கொண்ட ஓர் இனத்தின் தலைவராக இருப்பதையிட்டு வெட்கப்படுவானே தவிர பெருமை கொண்டு அவர்தான் எங்கள் தலைவன் எனக் கூற முற்பட மாட்டான். அவ்வாறு கூறுபவன் எவனும் சித்த சுயாதீனமுள்ளவனாக இருக்க முடியாது. தேர்தலில் ஒரு நாளைக்கு ஒருவரை ஆதரித்த நிலையினையும் தாண்டி கட்சியின் தலைவராக தான் இருக்க வேண்டுமா இல்லையா என்பதைக் கூட முடிவு செய்ய முடியாத தலைவரை வைத்துக் கொண்டு இவர்தான் எங்கள் தலைவர். ‘அவர் தலைவராகவே இருப்பார் ஆனால் மத்திய செயற்குழுக் கூட்டங்களையும் பிற கூட்டங்களையும் உபதலைவர் நடாத்துவார்’ என ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் எனில் இவர்களுடைய மூளைக்குள் என்னதான் இருக்கிறது? இவ்வகைப்பட்டவர்களைத்தான் தமிழ் மக்கள் தலைவர்களாகக் கொண்டாட வேண்டுமா? மேலும் தமிழரசுக் கட்சி ஒன்றும் யாப்பு, நிர்வாக நடைமுறைகள், கட்டுப்பாடுகள் எவையும் இல்லாத ஒன்றில்லை. அவ்வாறான நிலையில் மத்திய செயற்குழுவின் முடிவுகளை மீறி மத்திய செயற்குழு உறுப்பினர்களே செயற்படுவதைப் பார்க்கின்றோம். அரியநேத்திரன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டதிலிருந்து அவருக்கான சிறிதரனுடைய ஆதரவு வரை இதனைப் பார்க்கமுடியும். சட்டம் என்பது எல்லாருக்கும் சமம் என்றால் அரியநேத்திரனை மத்திய குழுவிலிருந்து இடைநிறுத்தியது போன்று கட்சியின் தீர்மானத்தினை மீறி அவரை ஆதரித்தவர்கள் அனைவரின் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையினை இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? கட்சியின் ஜனநாயகம் என்பது கட்சியின் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவதாகும் அந்த முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட அந்த ஜனநாயகத்துக்கு கட்சி உறுப்பினர்கள் மதிப்பளிப்பது ஓர் அடிப்படை ஜனநாயகப் பண்பு நடத்தையாகும். அவ்வாறு அந்த முடிவுடன் உடன்படமுடியவில்லை என்றால் அக்கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கான முழுச்சுதந்திரம் ஒவ்வொருக்கும் இருக்கின்ற அரசியல் உரிமையுமாகும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது கட்சி ஏகமனதாக முடிவு எடுத்தது என அதன் ஊடகப் பேச்சாளர் அறிவிக்கின்றார். அடுத்த நாள் தலைவர் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என அறிவிக்கின்றார். அதே போன்று மத்திய செயற்குழுவிலிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை உட்கட்சிப் பிரச்சினைகளை ஊடகவியலாளர் மகாநாடுகளைக் கூட்டி அவரவர் அறிக்கைகளை விடுகின்றார்கள். உதாரணத்துக்கு கட்சியின் தலைமை குறித்து சிறிதரன் ஒரு புறம், சிறிநேசன் ஒரு புறம், சாணக்கியன் ஒரு புறம், சிவமோகன் ஒரு புறம் என ஆளுக்காள் அவரவர் கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதுதான் கட்சியின் ஜனநாயகம் என நினைக்கிறார்கள் போல்த் தெரிகிறது. இந்த அடிப்படை ஜனநாயக பண்பு கூட இல்லாதவர்களினால் தமிழ் மக்களை எவ்வாறு சரியான அரசியல் வழித்தடத்தில் வழிப்படுத்த முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஆனால் இந்தக் கேள்வி எதுவும் தழிழரசுக் கட்சியின் தொண்டர்களுக்கு எழுவதில்லை. அவர்களும் பொதுவெளியில் இரு அணிகளாகப் பிரிந்து நின்று ஆளையாள் குற்றம் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எண்ணையூற்றி எரியவைப்பவர்களாக புலம்பெயர் தமிழர்களும் சமூகஊடகங்களும் மிகக் காத்திரமாகச் செயற்படுகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் எதிர்ப்பரசியலால் உணர்வூட்டப்பட்டு அரசியலுக்கு நுழைந்த இவ்வரசியல் தலைவர்கள் அந்த எதிர்ப்பரசியல் போக்கைத்தான் தமது கட்சியின் முரண்பாட்டுக்கும் தீர்வாகக் கருதுகிறார்கள். இதைத்தவிர அவர்களால் வேறு எதைத்தான் தர முடியும் தொண்டர்களுக்கும் அதுதானே தேவையாக இருக்கின்றது. இந்தத் தொண்டர்கள் எல்லாம் Clean Sri Lanka என்பது போல் Clean Sri Lanka clean தமிழரசுக் கட்சி என்று இவர்கள் அனைவரையும் நிராகரித்து இன்றைய சூழலுக்கேற்ப தமிழ் மக்களுடைய அரசியலை அறிவார்ந்து முன்னெடுக்கவும் தமிழ்மக்களை அறிவார்ந்து சிந்திக்க வைக்கவுமான ஓர் அரசியலை உருவாக்க வேண்டும். அதற்காக வைத்தியர் அர்ச்சுனாவைப் போன்றவர்களை அல்ல என்பதிலும் தமிழ் மக்கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். https://arangamnews.com/?p=11599
  4. வரலாற்றின் எதிர்பார்ப்பு January 1, 2025 — கருணாகரன் — ‘‘இலங்கையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும்‘‘ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்திருக்கும் அநுரகுமார திசநாயக்கவின் (NPP) அரசாங்கம், என்ன செய்கிறது? நம்பிக்கை தரக்கூடிய முயற்சிகள் ஏதாவது நடக்கிறதா..?‘ என்று பலரும் கேட்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அந்த மாற்றம் ஆரம்பித்துள்ளதா? அதற்கான பணிகள் நடக்கிறதா? என்ற எதிர்பார்ப்புள்ளது. எவ்வளவுக்கு விரைவாக மாற்றங்கள் நடக்கிறதோ அந்தளவு மக்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு. ஆகவே அவர்கள், அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். புதிய (தேசிய மக்கள் முன்னணி) அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது – ஏற்படுத்தவுள்ளது என்ற எதிர்பார்ப்போடு இலங்கைக்கு வெளியே இருப்பவர்களும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், ‘அநுர குமார திசநாயக்க தரப்பின் வெற்றி, தென்னாசியப் பிராந்தியத்தில் புதிய அரசியற் பண்பாடொன்றுக்கான – இடது நிலை அரசியலுக்கான – அடித்தளமாக அமையக் கூடும். அதற்கான முன்மாதிரியை (Exemplary) உருவாக்கலாம்‘ என்பது மக்களுக்கான அரசியலை – மாற்று அரசியலை (Alternative politics) முன்னெடுக்க முயற்சிப்போருடைய எதிர்பார்ப்பாகும். மட்டுமல்ல, எதிர்த்தரப்பான மக்கள் விரோத அரசியலை (Anti-people politics) முன்னெடுக்கும் பேராதிக்க – பெருமுதாளித்துவ – காப்பரேட் அரசியலாளர்களுக்கு (Corporate politicians) இன்னொரு வகையான எதிர்பார்ப்புண்டு. காரணம், இது இலங்கையில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் அரசியல் நடடிவடிக்கை (Political action to create change) என்பதால், அதனுடைய சாத்தியம், அதைச் செயற்படுத்தும் முறைமை, அதற்கான ஆளுமை வெளிப்பாடு போன்றவற்றையெல்லாம் அவர்கள் அறிய விரும்புகின்றனர். குறிப்பாக இந்த அரசாங்கத்தினுடைய வெற்றி – தோல்விகளை அவர்கள் கவனிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. இப்படிப் பல தரப்பிலும் இலங்கைப் புதிய அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளைக் குறித்த அவதானிப்பும் எதிர்பார்ப்பும் தீவிரமடைந்திருக்கிறது. வழமைக்கு மாறான முறையைக் கொண்ட இடது நிலையாளர்களின் அரசியல் நடவடிக்கை இது என்பதால் ‘இலங்கை மாதிரி‘யை (Model of Sri Lanka) அறிவதற்கு எல்லோரும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் கிடைத்திராத பேராதரவு அநுர குமார திசநாயக்கவின் (NPP – JVP) அரசாங்கத்துக்கே கிடைத்திருக்கிறது. 75 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகாரத்திலிருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டுக்கும் வெளியே இருந்தொரு தரப்பு – மாற்றுத் தரப்பு இப்பொழுதுதான் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதுவும் இடதுசாரிய அரசியற் கோட்பாட்டோடு, ஆயுதப் புரட்சியை முன்னெடுத்துத் தோற்கடிக்கப்பட்ட தரப்பு, ஜனநாயக வழிமுறையான தேர்தலில் பெருவெற்றியைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இது மக்களிடையே ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் – விருப்பத்தின் வெளிப்பாடாகும் – வெற்றியாகும். எனவே மக்களும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால் மாற்றத்தைக் குறித்து – புதிய நடவடிக்கைகளைக் குறித்த எதிர்பார்ப்பு வலுத்திருக்கிறது. இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. இலங்கையில் ஏனைய எந்தப் பிரச்சினைக்கும் நிகராகவும் அடிப்படையாகவும் இனத்துவச் சிக்கல்கள் தீவிரமானவை. ஆகவே, தனியே பொருளாதார அடிப்படையிலான மாற்றம் மட்டும் நாட்டை நிறைவாக்கி விடாது. இனமுரண்பாடுகளுக்கான தீர்வையும் காணும்போதே நாட்டில் மெய்யான மாற்றம் நிகழும். நாடு பின்னடைந்திருப்பதற்கு இனத்துவ முரண்பாடும் அதன் விளைவான 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரும் பிரதான காரணம். இந்தப் போரில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானோர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மிகப் பெரிய மனித வள இழப்பாகும். இதற்குப்பால் போரிலே கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. மனித உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. மீளவே உருவாக்க முடியாத அளவுக்குப் பண்பாட்டு இழப்பு, இயற்கை வள இழப்பு எல்லாம் நிகழ்ந்திருக்கிறது. அதை விட சொத்துகள், வீடு, ஊர் போன்ற மக்களுடைய உருவாக்கங்கள் அனைத்தும் இழப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே பொருளாதார முன்னேற்றத்தோடு இனப் பிரச்சினைக்கான தீர்வையும் இணைத்தே ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இன ஒடுக்குமுறையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பேசும் தரப்பினர் மேற்கொண்டு வந்த (சமூக மற்றும் புவிசார்) பிராந்திய அரசியற் செல்வாக்கை உடைத்து தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெற்றுள்ளது. கூடவே சிங்கள மக்களிடத்திலுமான பேராதரவு. ஆக மொத்தத்தில் நாடு தழுவிய அளவில் முழுமையான செல்வாக்கைப் பெற்றுள்ள அரசாங்கம் என்ற வகையில் எதிர்பார்ப்புக் கேள்விகள் பல முனைகளிலிருந்தும் எழுகின்றன. ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு, அரசியமைப்புத் திருத்தம், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு, அதிகார துஸ்பிரயோகத்துக்கு முடிவு, நாட்டைச் சூறையாடியோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை, இனப்பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு, கிராமங்களின் வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றம், கல்வியில் மறுசீரமைப்பு என பல விடயங்களிலும் முன்னுதாரணமான மாற்றத்தை – முன்னேற்றத்தை – உண்டாக்குவதாகவே அநுரவின் அரசாங்கத்தின் பிரகடனமாகும். அதாவது இவற்றைச் செய்வதற்கான System change ஐ செய்வதாக. அப்படிச் System change ஐச் செய்வதாக இருந்தால் காலதாமதத்தைச் செய்யாமல் உடனடியாகவே அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது. உண்மையும் அதுதான். தாமதிக்கும்தோறும் தவணை முறையில் மரணம் என்பதைப்போல, System change க்கு எதிரான அல்லது மாற்றத்துக்கு எதிரான சக்திகள் (Forces against change) எழுச்சியடைந்து விடும் அபாயமுண்டு. இதுதான் முன்பும் நடந்தது. முன்னைய ஆட்சித் தரப்புகளிற் சில (1994 இல் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம், 2015 மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதற்கு முயற்சித்தன. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அரசியலமைப்பு மாற்றத்தையும். ஆனால், அதைச் செய்வதற்கு அவை எடுத்துக் கொண்ட காலதாமதம், உட் குழப்பங்கள், கரிசனைக்குறைவு போன்றவற்றின் காரணமாக தீர்வுகளுக்கு எதிரான சக்திகள் (Forces against solutions) அதைக் குழப்புவதற்கு வாய்ப்பாகியது. ஆகவே இந்த வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட வேண்டியது NPP அரசாங்கத்திற்கு அவசியமாகும். ஆனால், மக்களுடைய எதிர்பார்ப்புகளின் அளவுக்கு அரசாங்கத்தின் வேகம் போதாமலே உள்ளது. ‘மாற்றங்களை நிகழ்த்துவோம். மக்களுடைய நம்பிக்கையைப் பாதுகாப்போம்‘ என்று ஒவ்வொரு நாளும் அமைச்சர்களும் அரசுப் பிரதானிகளும் பேசிக் கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டுமிருக்கிறார்களே தவிர, எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை. பறவையின் வேகம், முயலின்வேகம், பாம்பின்வேகம், ஆமையின் வேகம், நத்தையின் வேகம் என்றெல்லாம் சொல்வார்களே, இங்கே நத்தையின் வேகத்திற்கூட நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை. பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்குச் சிறிய அளவிலான தொடக்கங்கள் ஏற்படவில்லையென்றால் ஏமாற்றமே ஏற்படும். அந்த ஏமாற்றமும் சலிப்பும் மெல்லத் தொடங்குவதைப்போலுள்ளது. நாளாந்த உணவுக்குப் பயன்படும் அரிசியின் விலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது அநுர அரசாங்கம். இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தோடு மூன்று சுற்றுப் பேச்சுகளை நடத்தி விட்டார். இருந்தும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. அந்தளவுக்கு மாஃபியாக்கள் பலமாக உள்ளனர். என்பதால் மாற்று ஏற்பாடாக இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது அரசாங்கம். இது விவசாயிகளுக்கு உடன்பாடில்லாத சங்கதி. இப்படியே ஒவ்வொன்றிலும் பல சிக்கல்கள் உள்ளன. என்னதானிருந்தாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தே தீர வேண்டும். தடைகளை உடைத்தே ஆக வேண்டும். இதற்கு வாய்ப்பாக முதலில் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டும்? என்பதை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது, சாத்தியங்களை உருவாக்குவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும். சாத்தியக் குறைவுகளிருந்தால், அவற்றை எப்படி நிர்வகிக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். இதெல்லாவற்றையும் முற்கூட்டியே சிந்தித்த படியாற்தானே System change ஐப் பற்றி NPP பேசியது? அப்படிப் பேசிய – நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்த – NPP யினால் ஏன் அவற்றை விரைவாக முன்னெடுக்க முடியவில்லை? ஏன் தாமதித்துக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. மாற்றங்களுக்கான நடவடிக்கை (Action for changes) என்பது நிச்சயமாக மாற்று அதிரடி நடவடிக்கையாகவே (Alternate action) அமையும். வழமையான நடவடிக்கைப் பொறிமுறைகளுக்கூடாக மாற்றங்களைச் செயற்படுத்தமுடியாது. ஆகவே மாற்று நடவடிக்கை என்பது ஏறக்குறைய அதிரடி நடவடிக்கையே. ஆனால், அப்படி அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் முடியாது. சட்டமும் விதிமுறைகளும் (Law and Regulations ) ஏற்கனவே உள்ள System மும் தடையாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது? இதுதான் இப்பொழுதுள்ள சிக்கலே. இதற்கு மாற்றுப் பொறிமுறை(Alternative mechanism) உருவாக்கப்பட வேண்டும். அதை விரைந்து செய்வதன் மூலமே NPP யின் பிரகடனங்களை நிறைவேற்ற முடியும். அதற்குத்தான் மக்களின் ஆணை தாராளமாக உண்டே. ஆகவே தாமதம் செய்யாமல் அரசாங்கம், மாற்றங்களுக்கான கட்டமைப்பு மாற்றங்களை(Structural changes) செய்ய வேண்டும். இதை NPP ஏற்கனவே முன்னுணர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், நீண்டகாலமாக கெட்டிதட்டிப்போயிருக்கும்அரசியல் மற்றும் நிர்வாக முறைகேடுகளை இலகுவாகச் சீர்ப்படுத்த முடியாது. அதுவும் ஜனநாயக வழியில். ஆனால், ஜனநாயகநெறிமுறைகளின்படியேதான்அதைச் செய்யவும் வேண்டும். அப்படியென்றால் அடிப்படை மாற்றங்களைச் செய்தால்தான்மக்கள் எதிர்பார்க்கின்ற – நாட்டுக்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த நெருக்கடியிலிருந்து – இந்தச் சிக்கலிலிருந்துவெளியேற முடியும். இதற்கான பயில்காலமாகவும் பயில்களமாகவும் NPP அதிகாரத்துக்கு வந்த பின்னரான இரண்டு மாதங்களும் ஆட்சிக்களமும் உண்டு. இந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேற் பார்க்க வேண்டிய காரியங்களை விரைவுபடுத்த வேண்டும். இது அநுர குமார திசநாயக்கவுக்கான பொறுப்பாகும். இதுதான் இலங்கையின் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இந்தச் சூழலிலும் அநுர குமார திசநாயக்கவின் மீதும் அவருடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு வலுவான நம்பிக்கை உண்டு. காரணம், அரசாங்கம் முன்னுதாரணமாகத் தனது செலவுகளைக் குறைத்திருக்கிறது. வரியை உயர்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையகப்படுத்தி வைத்திருந்த சொத்துகளை மீட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பாதுகாப்புக்கான செலவு தொடக்கம் அவர்களுக்கு வழமையான முறையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆடம்பர வசதிகள் அனைத்தையும் குறைவாக்கியுள்ளது. ஜனாதிபதிபதியின் பதவியேற்பு, நாடாளுமன்றில் கொள்கைப் பிரகடன உரைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றை எல்லாம் சாதாரணமாகவே – எளிமையாகவே – நடத்தி முடித்திருக்கிறார் அநுர. குறிப்பாக கொள்கை விளக்க உரைக்கு வரும்போது பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் விலக்கி விட்டார். அப்படித்தான் இந்தியாவுக்கு ஜனாதிபதி மேற்கொண்ட பயணத்தின்போதும் விசேட ஏற்பாடுகளைப் புறக்கணித்து விட்டுச் சாதாரணமாகவே சென்று திரும்பியுள்ளார். அவ்வாறே முன்னாள் ஜனாதிபதிகளுக்கிருந்த அதி உச்ச வசதிகளிலும் வெட்டு விழுந்திருக்கிறது. இதெல்லாம் அநுர குமார திசநாயக்கவின் மீதான மதிப்பையும் நம்பிக்கையையும் மக்களிடத்திலே உயர்த்தியுள்ளன. ஆக எளிமையான அரசாங்கம் என்ற ஒரு புதிய தோற்றமும் பண்புருவாக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படுகிறது. ஆனால், இவை மட்டும் மாற்றங்களுக்குப் போதாது. நாட்டுக்கு வருவாயைத் தேடும் வழிகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும். அவற்றை விருத்தி செய்ய வேண்டும். ஊழல் பெருச்சாளிகளாக நாட்டைச் சூறையாடியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பை பொருத்தமான முறையில் பன்மைத்துவத்தின் அடிப்படையில், பல்லினத்தன்மைக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண வேண்டும். வடக்குக் கிழக்கிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டும். அங்கே மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. இதில் உடனடியாகச் செய்ய வேண்டியவற்றை இனங்கண்டு செய்வது அவசியமாகும். அதன் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். மக்களுக்குப் புதிய உற்சாகத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். அப்படி நம்பிக்கை அளிக்கப்படுமாக இருந்தால் நாட்டை விட்டுத் தினமும் ஆயிரக்கணக்கில் புலம்பெயரும் நிலையைக் கட்டுப்படுத்தலாம். நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதென்பது ஒரு மிகப் பெரிய வளம் வெளியே செல்கிறது என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். புலம்பெயர்ந்து செல்வோர், பெரும்பாலும் இளைஞர்களும் உழைக்கும் திறனாளர்களும் பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களாகவுமே இருக்கின்றனர். இது மிகப் பெரிய மனித வள இழப்பாகவே உள்ளது. ஆகவே அரசாங்கம் இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்றுப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை மக்கள் உணரும்போதுதான் இந்த வெளியேற்றம் தணியும். இவற்றுக்கு ஏற்ப முதலில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டார் அநுர குமார. பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியாவுடன் பல கூட்டுத்திட்டங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் தமக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என NPP அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவும் ஏறக்குறைய மகிழ்ச்சியையும் நிறைவையும் வெளியிட்டுள்ளது. இதனுடைய விளைவாக உடனடியாகவே கிழக்கு மாகாணத்தில் 23 திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போரினாலும் சமூக முரண்பாடுகளாலும் பின்னடைந்திருக்கும் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகும். ஆனால், அதை இன முரண்பாடுகள் எழாத வகையில் பாரபட்சங்களுக்கு இடமளிக்காமல் நிறைவேற்ற வேண்டும். இது தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்ற மாகாணம். இங்கே அபிவிருத்தித் திட்டங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்வது சிறப்பானதே. அடுத்த கட்டமாக நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம். அடுத்த பயணமாக சீனாவுக்குப் பயணித்திருக்கிறார் ஜனாதிபதி. சீனப்பயணத்தின்போதும் நிறைவளிக்கக் கூடிய ஏற்பாடுகளோடும் திட்டங்களோடும் அவர் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் நிறையத் திட்டங்களையும் முதலீடுகளையும் இலங்கையில் மேற்கொள்ளக் கூடும். ஏற்கனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்த வாய்ப்புண்டு. இந்தியாவையும் சீனாவையும் கையாள்வது இலங்கைக்கு எப்போதும் சவலான விடயமே. அதே நேரம் இரண்டையும் மிக லாவகமாக இதுவரையான தலைவர்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் நோக்க வேண்டும். அநுரவும் அதைத் தளர்வின்றித் தொடர்கிறார் என்றே தெரிகிறது. அப்படித் தொடர்ந்தால் பயன். முக்கியமாகப் பிராந்திய நெருக்கடிகளுக்குள் சிக்காதிருக்கலாம். அதேவேளை இலங்கைக்குப் பல வழிகளில் நீண்டகாலத் தீமைகளும் உண்டு. குறிப்பாக சுயசார்ப்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது சவாலானதாகி விடும். இதை எப்படிச் சமாளித்து, தன்னுடைய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்போகிறது தேசிய மக்கள் சக்தி? அநுரவின் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களும் நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன என்று பாராட்டுத் தெரிவித்துள்ளன அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள். அப்படியென்றால், ‘‘இது எப்படி மாற்றத்துக்கான அரசாங்கமாக இருக்கும்? மக்களுக்கான ஆட்சியை இதனால் எப்படி வழங்க முடியும்? இடதுசாரியப் பொருளாதார நோக்கைக் கொண்ட ஆட்சியொன்றுக்கு வெளியுலகம் எவ்வாறான வரவேற்பை அளிக்கும்? எனவே இது மாற்றம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கும் ஆட்சியாகவே இருக்கும்‘‘ என்கின்றன சில தரப்புகள். இப்படி ஒரு வெளி ஆதரவு வட்டமும் எதிர்ப்பு வட்டமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக மேற்குலகினதும் இந்தியாவினதும் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எதிர்க்கட்சிகளுக்கும் மக்களில் ஒரு சாராருக்கும் இருந்தது. ஏனென்றால் இறுக்கமான சில நிலைப்பாடுகளைப் பின்பற்றி வந்த ஜே.வி.பி மைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளியுறவில் வெற்றியடையுமா? சர்வதேச சமூகம் தேசிய மக்கள் சக்தியை எப்படி வரவேற்கும் என்றெல்லாம் கேள்விகளிருந்தன. ஆனால் ஒரு துடிப்பு மிக்க திறமையான விளையாட்டு வீரனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் பிறரைக் கவர்வதைப்போல அநுர குமார திசநாயக்கவின் நடவடிக்கைகள் பல தரப்பையும் கவர்ந்துள்ளன. அவர் முயற்சிக்கின்ற அளவுக்கு அவரைச் சுற்றியுள்ள தரப்புகளிடையே மாற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் கிடைக்கின்றதா என்பதே தொடர்ந்து கொண்டிருக்கும் கேள்வியாகும். அவர்கள் அரசாங்கத்தை பின்னுக்கு இழுக்கும் விதமாக கட்சி அதிகாரத்தை (கட்சிக் கொள்கைகளை) அரசாங்கத்தின் கொள்கைகளாக முழுதாகத் திணிக்க முற்பட்டால் பிரச்சினை உருவாகும். கட்சி, அரசாங்கமா என்பதை அவர்கள் தீர்மானிப்பது அவசியமானது. நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் ஏற்கனவே கடன் பொறியிற் சிக்கியிருக்கும் நிலையிலிருந்து மீள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று சர்வதேச நாணய நிதியத்துடனான (Agreement with the International Monetary Fund) உடன்படிக்கையாகும். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின்போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர வேண்டிய நிலை அநுர குமார திசநாயக்க அரசாங்கத்துக்கும் உண்டு. அதைப் புறக்கணிக்க முடியாது. அப்படியென்றால் IMF வின் நிபந்தனைகள், பரிந்துரைகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுமக்க வேண்டும். இது System change ஐ மட்டுப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். வேறு வழியின்றி, IMF உடனான முதற் சுற்றுப் பேச்சுகளை முடித்திருக்கிறது புதிய அரசாங்கம். இப்படித்தான் ஒவ்வொரு புள்ளியிலும் சிக்கல்களும் பிரச்சினைகளும் உள்ளன. ஆனால், சில முடிவுகளில் அரசாங்கம் தீர்க்கமாக உள்ளது. குறிப்பாக இன வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு உறுதியும் நிதானமுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு கூரலென்பது, இறந்த தமது உறவினரை அவர்களுடைய பெற்றோரும் உறவுகளும் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்துவதே தவிர, விடுதலைப் புலிகளை நினைவு கொள்வதோ அல்லது அவர்களை மீளெழுச்சி கொள்வதற்கு இடமளிப்பதோ அல்ல என. மட்டுமல்ல, இதை இனவாதமாக மாற்ற முயற்சித்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்தது. இந்த மாதிரித் துணிகரமான நடவடிக்கைகள், படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பது தொடக்கம் வேறு சிலவற்றிலும் அவசியமாகும். அதைப்போல முக்கியமானது, இந்திய வம்சாவழி மக்களாகிய மலையக மக்களின் சம்பளப்பிரச்சினை. நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை, தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் மூன்று ஆட்சிகள் கடந்துள்ளன. இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. இடையில் பொருட்களின் விலை பல மடங்கு கூடி விட்டது. அப்படியென்றால், நியாயத்தின்படி இப்பொழுது 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மலையகத் தோட்டங்களுக்கு வெளியே நாளொன்றுக்கு 2000 க்கு மேலேதான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகவே இதிலும் ஒரு நிர்ணயமான தீர்மானத்தை அநுர குமார அரசாங்கம் எடுக்க வேண்டும். அரசியலமைப்பை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான வரைபை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் பொருளாதார நெருக்கடியைக் குறைப்பது அவசியம். அன்றாடப் பொருட்களின் விலையேற்றம் என்பது மக்களின் வயிற்றுப் பிரச்சினையாகும். ஆகவே அதற்கு முதலில் தீர்வைக் காண வேண்டும். இதுவரையிலும் ஆட்சியிலிருந்தவை கொழும்புத் தலைமைகள் அல்லது கண்டித் தலைமைகளே. இவை மேற்தட்டு ‘வளவுக்காரர்கள்‘ என்ற வர்க்கத்தைச் சேர்ந்தவை. இப்பொழுதுதான் கொழும்புக்கும் கண்டிக்கும் வெளியே, கிராம மட்டத்திலிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அப்படியென்றால் கிராம மக்களின் பிரச்சினையை நன்றாக விளங்கியவர்களே வந்திருக்கிறார்கள். கிராம மக்களின் பிரச்சினையில் முக்கியமானது வயிற்றுப் பிரச்சினை – வாழ்வாதாரப் பிரச்சினையாகும். சாதாரண மக்கள் தமது உழைப்புக்கான ஊதியம், ஊதியத்துக்கு ஏற்ற செலவு. இதைச் சமன் செய்யக் கூடிய பொருளாதார ஏற்பாடு வேணும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இது இல்லையென்றால் பிறகேன் இந்த ஆட்சி என்றே கிராம மக்கள் சிந்திப்பார்கள். எனவே இங்கே தீர்வு என்பது பலவகையானது என்ற புரிதல் அவசியமாகும். ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் இனப்பிரச்சினையையும் அதன் விளைவான போரையும் முடிவுக்கு – தீர்வுக்கு – கொண்டு வருவதைப் பற்றியே கூடுதலாகச் சிந்தித்தன. இதிற் கூட இதை அவை நேர்மையான முறையிற் சிந்தித்தனவா என்ற கேள்வி உண்டு. ஆனால், 2009 க்குப் பிறகான சூழல் வேறுபட்டது. அது இனப்பிரச்சினைக்கான தீர்வோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமாக இருந்தது. குறிப்பாக போரிலே அழிவடைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களையும் அங்குள்ள சமூகத்தினரையும். இப்பொழுது அது இன்னும் விரிவடைந்து தேசத்தை மறுவாக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைக்குள்ளாகியிருந்தது. இப்பொழுது அது மேலும் விரிவடைந்து முழு நாட்டையும் முழுதாக மாற்றத்துக்குள்ளாக்க வேண்டும் என்ற நிலை. இதை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு அரசியற் துணிவு அவசியமாகும். தேர்தலில் வெற்றியடைவதும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் சுலபம். அதை சரியாக நிர்வகித்து, மக்களுக்கான ஆட்சியாக மடைமாற்றம் செய்வது கடினம். அதிலும் ஊழலும் அரசியற் கீழ்மைகளும் இனவாதமும் வளர்ந்து திரட்சியடைந்திருக்கும் ஒரு நாட்டில் அதையெல்லாம் உடனடியாக மாற்றுவது சவாலானது. ஆனால், மக்கள் ஆதரவு என்ற பலத்தோடிருக்கும் தரப்பு, அந்த ஆதரவின் பலத்தில், அது அளித்துள்ள துணிவில் நடவடிக்கைகளை எடுத்தால், எதிர்பார்க்கப்படும் இலக்கினை எட்ட முடியும். இதற்கான வரலாற்று வாய்ப்பொன்று JVP க்கு NPP க்கு கிடைத்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எட்ட முடியாத வாய்ப்பை, தேர்தல் மூலம் பெற்றுள்ளது. அதை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி, வரலாற்றை உருவாக்க வேண்டும். அநுர குமார திசநாயக்க வரலாற்று நாயகர் என்றால், அவர் தடைகளைத் தாண்டவும் உடைக்கவும் வேண்டும். அரசியல் என்பது ஓயாத தடைதாண்டலும் ஓயாத முன்னேற்ற நடவடிக்கையும்தான். அதைச் செய்யாத தரப்புகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே செல்லும். அதைச் செய்யும் தரப்புகள் வரலாற்றின் மேற்படியில் ஏறிச் செல்லும். https://arangamnews.com/?p=11595
  5. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் January 3, 2025 3:37 pm தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/we-will-support-the-new-constitution-if-it-fulfills-the-political-aspirations-of-the-tamil-people/
  6. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/392602/முன்னாள்-இராஜாங்க-அமைச்சர்-வியாழேந்திரனின்-சாரதியாக-பணியாற்றியவர்-விளக்கமறியலில்
  7. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து இன்று எடுக்கப்பட்ட தீர்மானம் January 3, 2025 09:56 pm மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க விடுத்துள்ளார். மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற்றாலை மின்சார திட்டம், மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர் முயன்ற போது கிராம மட்ட பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது, காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது . எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே அதை நிறுத்துவது சிறந்தது. மேலும் எதிர் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, சகல திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மட்ட பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற மனித மற்றும் திண்மக்கழிவுகள் பாப்பாமோட்டை இல் உள்ள நிலையத்தில் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில்,குறித்த நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக நீண்ட காலமாக மன்னார் நகர சபையினால் உரிய முறையில் கழிவு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் தற்போது மனித கழிவுகள் அகற்றப்பட்டு குறித்த நிலையத்தில் சேகரிக்க நீதி மன்றத்தினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் திண்ம கழிவுகளை அகழ்வு செய்கின்ற போதும் அதை கொட்டுவதற்கு உரிய இடம் இல்லை என மன்னார் நகர சபையின் செயலாளரினால் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=198258
  8. சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல் 02 Jan, 2025 | 01:01 PM சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார். பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சின் ரபெல் போர்விமானங்களும் அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா விமானங்களும் ஐஎஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது 7 குண்டுகளை வீசின என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். 2014 - 2015 முதல் சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவரும் சர்வதேச கூட்டணியில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202757
  9. நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம் 02 Jan, 2025 | 01:19 PM நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர் ஆப்கானிலும் பணிபுரிந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் - தின் - ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர். இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தார்.சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜபார் 2004 இல் இணைந்துகொண்டார் எனினும் ஒருமாதத்தின் பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டார் என அந்த அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி. https://www.virakesari.lk/article/202774
  10. கிளிநொச்சி புளியம்பொக்கணையில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு! adminJanuary 2, 2025 கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02.01.25) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது. https://globaltamilnews.net/2025/209873/
  11. இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய தலைவர்! தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! adminJanuary 2, 2025 மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ருவன் குலதுங்க டிசம்பர் 31, 2024 அன்று தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நாட்டிற்குள் உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பு, CNI பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. குலதுங்க 2019 இல் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியாக தனது பங்கை ஏற்றார். இராணுவத்தில் இருந்தபோது, 2009 மே மாதம் இறுதி வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். போர்க்களத்தில் அவரது துணிச்சலானது ரண சூரா பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டது. அவர் ஜூலை 5, 2019 அன்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் அவர் பதவியில் இருந்து விலகும் வரை CNI ஆக பணியாற்றினார். https://globaltamilnews.net/2025/209876/
  12. எல்லையில் பாக்- தலிபான் மோதல் -முழுமையான யுத்தம் குறித்து அச்சம் Published By: Rajeeban இ01 Jan, 2025 | 02:20 PM https://www.telegraph.co.uk/ பாக்கிஸ்தானிய படையினரை இலக்குவைத்து ஆப்கானின் தலிபான்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது. பாக்ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானின் பலநிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் பாக்கிஸ்தான் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்த்து எல்லைக்கு தனது ஆயுதமேந்திய உறுப்பினர்களை அனுப்பிவைத்துள்ளது. ஆப்கானின் தலிபானிற்கு நெருக்கமான தெஹ்கீரீக் ஈ தலிபான் என்ற அமைப்பின் தளங்கள் மீது பாக்கிஸ்தான் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்தே எல்லையில் பதற்ற நிலை மூண்டுள்ளது. பாக்கிஸ்தானின் இந்த தாக்குதல்களால் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து தலிபானிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை பாக்கிஸ்தான் இரகசியமாக தலிபானிற்கு ஆதரவளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாக்கிஸ்தான் படைவீரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் தலிபானிற்கு நெருக்கமான டிடிபி அமைப்பிற்கு எதிராக பாக்கிஸ்தான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தெஹ்கீரீக் ஈ தலிபான் அமைப்பிற்கு எதிரான தனது தாக்குதல்களின் போது தலிபான் தலையிடாது விலகியிருக்கும் என பாக்கிஸ்தான் இராணுவம் கருதியது. ஆனால் இதற்கு மாறாக அமெரிக்க படையினர் ஆப்கானிலிருந்து வெளியேறும்போது அவர்கள் கைவிட்டுச்சென்ற ஆயுதங்களை தலிபான் அமைப்பினர் தெஹ்கிரீக் ஈ தலிபான் அமைப்பினருக்கு வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து 2021 பின்னர் ( காபுலை தலிபான் கைப்பற்றிய பின்னர்) தெஹ்கிரீக் ஈ தலிபான் அமைப்பு பாக்கிஸ்தானிற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தானுடனான மோதல்கள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள தயார் தலிபான் அதிகாரிகள் டெலிகிராபிற்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கள் இறைமையில் தலையிட முடியாது. முஜாஹதீன்கள் வெற்றிகரமாக பாக்கிஸ்தானின் பல நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்,குறிப்பிடத்தக்க சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர் என தலிபானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பல இடங்களை நாங்கள் ஆட்டிலறியால் இலக்குவைத்தோம்,பாக்கிஸ்தான் படையினரின் சோதனைச்சாவடிகளையும் சாதனங்களையும் இலக்குவைத்தோம் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி எங்கள் இறைமையை மீற முடியாது என்பது பாக்கிஸ்தானிற்கு தெரியவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பல படைப்பிரிவுகளை எல்லைக்கு அனுப்பியுள்ளோம் நாங்கள் எதற்கும் தயாராகயுள்ளோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலிபான் பாக்கிஸ்தானின் பதில் தாக்குதலை எதிர்பார்க்கின்றது பாதுகாப்பு அமைச்சு கடும் எச்சரிக்கை நிலையில் உள்ளது எல்லையில் மேலதிக துருப்பினரைஅனுப்பியுள்ளோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களிடம் அணுகுண்டிருந்தாலும் அது பற்றி எங்களிற்கு கவலையில்லை,எங்களிற்கு நம்பிக்கையுள்ளது ஆண்டவன் எங்கள் பக்கத்தில் இருக்கின்றார் என தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் எல்லையை கடந்து பாக்கிஸ்தான் மீது தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதற்கு ஆப்கானிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாக்கிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள தலிபான் ஆப்கானை தளமாக பயன்படுத்தி வேறு ஒரு நாட்டின் மீது எந்த அமைப்பும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202701
  13. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும் ; செல்வம் 01 Jan, 2025 | 03:29 PM நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும். இதனை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில், செயற்பாடுகள் அமைய வேண்டும். எனவே இந்த புதிய ஆண்டில் எமது கிராம மக்கள் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது என்று கூறக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். இந்த வருடத்தில் பின்தங்கிய கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டும். அதற்கான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பிரிந்து செயல்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.நாங்கள் ஒற்றுமையாக செயல் படவில்லை என்றால் நம் மண்ணையும் மக்களையும் உதாசீனம் செய்யும் கட்சிகளாகவே நாம் இருப்போம். எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தேசியக்கட்சிகள் இல்லாது போகின்ற துர்பாக்கிய நிலை காணப்படும். எனவே எதிர் வருகின்ற தேர்தல்களில் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வில்லை என்றால் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அனுரவின் அழை வடக்கு கிழக்கிலும் ஏற்படும். இதனால் பாதிப்புகள் எமக்கு ஏற்படுத்தும் என்பது உண்மை. மக்களின் எதிர்பார்ப்பு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல் படுங்கள் என்பதே.அந்த ஒற்றுமை இல்லை என்றால் நாங்கள் காணாமல் போய் விடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/202705
  14. தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு 01 Jan, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) “பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தாா். கடந்த சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னா் நேற்று முதல் தடவையாக ஊடகவியலாளா்களைச் சந்தித்து, கட்சியின் புதுவருடத்துக்கான உத்தேச செயற்பாடுகளை அவா் விளக்கினாா். இதன்போது சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததாவது, “இரண்டு தோ்தல்கள் புதிய வருடத்தில் நடைபெறவிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களும், மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் புதிய வருடத்தில் நடைபெறும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னா் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால், தோ்தல் நடைபெறவில்லை. அந்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படுமாயின், புதிய வேட்பாளா்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தத் தோ்தலப் பொறுத்தவரையில் வேட்பாளா் நியமனத்தில் 25 வீதமானவை பெண்களுக்கும், 25 வீதம் இளைஞா்களுக்கும் வழங்க வேண்டும். ஆனால், இதற்குத் தேவையானவா்கள் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், பொருத்தமானவா்கள் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவேண்டும். தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் கட்சியின் தொகுதிக் கிளைகள் மூலமாகவோ அல்லது மூலக் கிளை மூலமாகவோ இணைந்துகொள்ள முடியும். அவ்வாறான நிலையில் கட்சி ஒரு நல்ல முடிவை எடுக்கும். பொருத்தமானவா்களைத் தெரிவு செய்யும். வடக்கு - கிழக்கு பகுதிகளில் கட்டமைப்புக்களைக் கொண்டியங்குவதும், தமிழ்ப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ருப்பதுமான ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். அத்துடன் உள்ளூராட்சி மன்ற நிா்வாகத்தில் அனுபவம் உள்ள பலரும் எம்முடன் இருக்கின்றாா்கள். பொதுத் தோ்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டெழுவதற்கான ஒரு சந்தா்ப்பமாக இந்த உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய முதலாவது கடமையாக இருக்கின்றது. அதனால் இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். இவா்களில் பொருத்தமானவா்களை வேட்பாளா்களாக்க போட்டியிடுவதற்கு நாம் வாய்ப்பளிப்போம். பாதுகாப்பும் காணி விடுவிப்பும் இப்போது தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில் அது குறைக்கப்படுவதாக அரசாங்கத்தின் சாா்பில் சொல்லப்படுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இங்கு இல்லையென்றால் எதற்காக எங்களுடைய பகுதிகளில் எங்களுடைய நிலத்தை இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன ஆக்கிரமித்திருக்கின்றன? இதனால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை அந்த மாவட்டத்தின் சுமாா் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால், எமது மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் கட்சி ரீதியாக முன்வைக்கிறேன். கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிரச்சினைகளை நாம் தீா்த்துவைத்து கட்டுக்கோப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கிறோம். அண்மைக்காலத் தெரிவுகளுக்குப் பின்னா் பல விமா்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதனையிட்டு நான் அக்கறைப்படுவதில்லை. இப்போது பவளவிழாவைக் கொண்டாட இருக்கிறோம். மட்டக்களப்பில் பிரதான நிகழ்வு இடம்பெறும். மாவட்ட ரீதியாகவும் நிகழ்வுகள் இடம்பெறும். இதன்போது, இளைஞா்கள் யுவதிகள் எமது கட்சியில் இணைந்து கட்சியைப் பலப்படுத்த உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்றும் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தாா். https://www.virakesari.lk/article/202697
  15. புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்! பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமான மவ்பிம இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சக்திவாய்ந்த அரசியல்வாதி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலா வாரியத்திற்குள் தவறான நடத்தைகளில் ஈடுபட்ட பல தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவை நாட்டின் செல்வத்தை சுரண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றன. இந்த வழக்குகளில் போர் விமான பரிவர்த்தனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய பத்திர பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் அடங்கும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஒரு முக்கிய அரசியல்வாதியின் மனைவி மீது நடத்தப்பட்ட விசாரணைகள் நடைமுறை குறைபாடுகள் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இந்த விசாரணைகள் முறையாக முடிவடைந்தவுடன், அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்டம் உடனடியாகவும் முறையாகவும் செயல்படுத்தப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.samakalam.com/புத்தாண்டில்-அதிரடி-நடவட/
  16. கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் பலி! ADDED : ஜன 01, 2025 06:30 PM வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தால் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசாரும் தாக்குதல் நடத்தினர். தற்சமயம் அந்த சாலையில் யாரும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், புலனாய்வுக்குழுவினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர். https://www.dinamalar.com/news/world-tamil-news/vehicle-plows-into-crowd-at-new-years-eve-party-in-us-killing-10-/3819833
  17. அப்படியானவற்றை ரிப்போர்ட் செய்யலாம்.. For TikTok on your web browser: Go to the video and hover over the More options button at the top. Click Report and select a reason. Select the appropriate scenario from the provided list. If prompted to select a subtopic, select the appropriate one for your report. Click Submit. From the TikTok App Click on their profile Click on the arrow in the upper right corner You’ll see the option to “Report.” Click on it, then select “Report Account.” Select a reason or click on “Other.” Click on “Submit” to report the user.
  18. கிளி இல்லாத ஊரில் காகம்தான் கிளி என்று சொல்ல வாறீங்களோ? 🤣
  19. ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்? Kumaresan MDec 31, 2024 14:44PM தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக கிடைத்துள்ளது. 18 படங்கள் மட்டுமே திருப்திகரமான வசூலை கொடுத்துள்ளன. வேட்டையன், தி கோட், அமரன், மகராஜா, அரண்மனை4 ,மெய்யழகன் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி, கருடன், ரோமியோ, அந்தகன் போன்ற படங்களும் வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். 400 கோடி மதிப்புள்ள சிறிய பட்ஜெட் படங்கள் 186 வெளி வந்துள்ளன. இவற்றில் லப்பர் பந்து, பேச்சி போன்ற படங்களும் நல்ல வசூலை பெற்றன. இந்த படங்கள் மக்கள் மத்தியில் தரமான படமாகவும் பார்க்கப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கே. ராஜன் கூறியிருப்பதாவது, ‘இந்த ஆண்டு திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. இது வெறும் 7 சதவிகிதம்தான் என்பது வருந்தத்தக்கது. 223 படங்கள் தோல்வியடைந்திருப்பதால் 1000 கோடிக்கு தமிழ் சினிமா இழப்பை சந்தித்துள்ளது. தரமான முறையில் கதையம்சம் கொண்ட படங்கள் வெளி வந்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்ல திருப்பம் ஏற்படும்“ இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://minnambalam.com/cinema/1000-croe-loss-in-tamil-industries-this-year/
  20. தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து December 31, 2024 “தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.” – என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். https://www.ilakku.org/tamils-cannot-move-forward-without-the-tamil-arasu-party-gajendra-kumar-mps-opinion/
  21. விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம் December 31, 2024 விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ‘இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும்? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/military-personnel-on-duty-at-temples-removed/
  22. பெண்களின் கருப்பைகள் ஆண்களுக்கு சொந்தமில்லை! குழந்தை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களின் சுதந்திரமாக இருக்கவேண்டும். தலிபான்கள் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாகவே பார்க்கின்றார்கள். பெண்களின் கல்வியை, மருத்துவம் உட்பட, முற்றாக அழித்து ஒரு காட்டுமிராண்டி சமூகத்தைக் கட்டமைக்கின்றார்கள்.
  23. @வாலி, பெண்ணழகிகளைப் பார்க்க 24 நிமிடத்தில் இருந்து பாருங்கள்🥰
  24. பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ளது தலிபான் அரசு. அதன்படி புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மேலும், தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இதுவரை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு தலிபான் அரசு தரப்பில் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், “பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதைப் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும். அதனால் நாட்டில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக் கூடாது. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையில் தடை செய்யவோ வேண்டும். இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண் பிள்ளைகளுக்கான கல்வி, வேலை, பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பெண்கள்-புழங்கும்-இடங்களில்-ஜன்னல்-வைக்க-தலிபான்-தடை/50-349542

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.