Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது! ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை!
  2. எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் adminDecember 24, 2024 யாழ் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் , தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால்தான் எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்வும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளாா். எலிக்காய்ச்சலினால் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் 121 பேர் பாதிக்கப்பட்டுடிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/209589/
  3. வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்களுக்கு விரைவில் இடமாற்றம் adminDecember 24, 2024 ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம், செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். எமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முறையிட்டனர். அதற்கு ஆளுநர், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். அவ்வாறு இதுவரை பணியாற்றாத ஆசிரியர்கள் இருப்பின் உரிய நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். வெளி மாவட்டங்களிலிருந்து யாழ். மாவட்டத்துக்கு ஆசிரியர் ஒருவர் இடமாற்றப்படும் போது அதே பாடத்துக்குரிய ஆசிரியர் வெளிமாவட்டத்துக்கு விடுவிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209570/
  4. நான் படம் இன்று திரையில் பார்த்தேன். ஒரு தலைவரை விட சித்தாந்தம் முக்கியம் என்று சொல்லும் இடம் பிடித்திருந்தது. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. விடுதலை-2 திரைப்பட விமர்சனம் BookDay21/12/2024 விடுதலை-2 திரைப்பட விமர்சனம் அங்குமிங்குமாக சில காட்சிகள் என்றில்லாமல் நேரடியாகவே இடதுசாரி அரசியலை பேசுகிறது விடுதலை.. கைது செய்து கைவிலங்கிட்டு ஒரு இரவு முழுவதும் காட்டில் நடந்து கொண்டே வாத்தியாரும் போலீஸ் டீமூம் பேசும் அரசியல் அடர்த்தியானது, முக்கியமானது.. தப்பிச் செல்லும் போது காவலர்களை பார்த்து ‘நான் நிறைய கேள்விகளை எழுப்பிருக்கேன். பதிலை நீங்க தேடுங்க’ என விஜய் சேதுபதி பேசுவதாக வரும் காட்சி இயக்குநர் பார்வையாளர்களை நோக்கி பேசுவதை குறிக்கிறது.. கீழ்தஞ்சை மாவட்டங்களின் சாணிப்பால், சவுக்கடி அவலம் வயலில் தாய்ப்பாலை பீச்சும் பெண் தொழிலாளிகள் துயரம் ஆண்டைகளின் குரூரம் என அரைநூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த கொடுமைகளும் ‘அடித்தால் திருப்பி அடி’ ‘டேய் னு கூப்பிட்டா என்னடான்னு கேளு’ எனும் செங்கொடியின் தீரமும் சமூக ‘விடுதலை’ (Viduthalai)யின் முக்கியத்தை உணர்த்துகிறது.. மக்களுக்காக நாம் ஆயுதம் தாங்கி போராடுவதோடு அவங்களை அரசியல் படுத்திட்டா மக்களே அவங்க போராட்டத்துல அவங்களுக்கான ஆயுதத்தை முடிவு பண்ணிருவாங்க.. ஆட்சில இருப்பவங்க ஒரு Narrative ஐ முடிவு பண்ணிட்டு அப்றம் அதை உண்மையாக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.. நீங்க பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கொன்னுட்டு சஸ்பென்ஸ், டிரான்ஃபர் விசாரணை கமிஷன் னு போய்ட்டே இருப்பீங்க, மக்களுக்கு அரசியல்வாதியான நாங்கதான்யா பதில் சொல்லணும்.. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. படத்தில் வெடிக்கும் துப்பாக்கி தோட்டாக்களோடு இணைந்து ஆங்காங்கே வெடிக்கிறது வெற்றி மாறனின் வசனங்களும்… ஆலைகளில் நிகழும் சுரண்டல் சங்கம் அமைக்காமல் தடுப்பது அரசு அதிகாரிகளின் தந்திரம் போலீஸ் கையாளும் உத்தி என ஒவ்வொன்றையும் தோலுரிக்கிற காட்சிகள்… அடையாள அரசியலின் தாக்கங்கள் ஆங்காங்கே வசனங்களில் தென்பட்டாலும் வர்க்க அரசியலை அழுத்தமாக முன்வைக்கிறது விடுதலை (Viduthalai Part 2).. ஜனநாயக போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதும் வர்க்கப் பார்வையை விரிவு செய்வதும் முக்கியம் என்கிறது.. திரைப்படத்தை காணும் போது, நீண்ட உரையாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமோ என்று கூட சிலருக்கு தோன்றலாம். ஆனால் அந்த உரையாடல்களால் தான் விடுதலையின் அரசியலை பேசவும் உணர்த்தவும் முடியும். அரசியல் உள்ளடக்கம் கொண்ட திரைப்படத்தை வெகுஜன சினிமாவாக அளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனும் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் சூரி, ராஜீவ் மேனன், இளையராஜா எனும் அனைத்து கலைஞர்களும் மிகுந்த பாராக்குரியவர்கள்.. https://bookday.in/viduthalai-2-movie-review-by-r-badri/#google_vignette
  5. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024 ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
  6. மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024 09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197695
  7. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024 08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197702
  8. “ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து” பு.கஜிந்தன் ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica) பிரித்தானியர் ஒருவரால் பின் விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நிய இனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும் போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன. சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழ்கின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றன. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரை கௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரை தேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல் பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்கு காவிச் செல்கின்றன. இவற்றோடு மனிதர்களில் மூளை மென்சவ்வு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி புழுக்களை இவை காவித் திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கு, உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது. ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொது அமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும். உப்பு நீர் கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அழுத்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது. இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயல்படவில்லை எனில் ஏற்கெனவே பாரிய பொருளாதார சீரழிவுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஆபிரிக்க-நத்தைகளால்-பேராபத்து/150-349129
  9. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்? Getty Images சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது. சுற்றியும் மூங்கில் மரங்கள் புதராய் வளர்ந்திருக்க, நடுவில் கிட்டத்தட்ட வட்டவடிவில் குட்டை. அங்கிருந்து சில அடிகள் வெளியே வந்தால் வெப்பம், உள்ளே சென்றால் மூங்கில் மற்றும் குட்டைநீரின் குளிர்ச்சி. இதமான அந்தக் குட்டையின் ஓர் ஓரத்தில் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் என இருந்த ஒரு பெரும் பாறையில், அதேபோல, பாதி உடல் நீரிலும், மீதி உடல் மேலேயுமாகப் படுத்திருந்தது அந்தப் பெண் புலி. சிறிதளவு ஓசைக்கே, எங்கள் வருகையுணர்ந்து கனநேரத்தில் அங்கிருந்து பாய்ந்து மறைந்தது. உடனே நாங்கள் அங்கிருந்து வேகமெடுத்தோம். பார்த்தது சில நொடிகளே என்றாலும், அதுவே காட்டில் புலியைப் பார்த்த எனது முதல் மற்றும் கடைசி அனுபவம். சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் புலி உயிரிழந்த செய்தி அறிந்ததும், அந்தப் பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது. அதேவேளையில், பெண் புலிகளின் வாழ்வியல் குறித்த சில கேள்விகள் தொடர்ச்சியாக எழுவதையும் காண முடிந்தது. உண்மையில், பெண் புலிகளின் வாழ்வியல் எப்படிப்பட்டது? இனப்பெருக்க காலத்தில் அவற்றின் செயல்பாடுகள் யாவை? அவை தம் குட்டிகளைப் பராமரிப்பதில் இருக்கும் தனித்துவம் என்ன? எல்லை வகுத்து தனிமையில் வாழும் புலிகள் புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்க காலம் தவிர பிற நேரங்களில் புலிகள் தனிமையிலேயே வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட புலியின் எல்லைப் பரப்பு, 10 சதுர கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 100 சதுர கி.மீ வரை இருக்கக்கூடும். வாழ்விடம், இரை உயிரினங்களின் எண்ணிக்கை, காட்டிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இது மாறுபடும். புலிகள் தங்கள் எல்லைகளை சிறுநீர் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி. அதோடு, அவ்வப்போது உருமுவதன் மூலம் தனது இருப்பை உணர்த்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவை கொண்டிருக்கின்றன புலிகள் இனப்பெருக்கம் செய்வது எப்படி? Getty Images மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் புலிகள் பெண் புலிகளைப் பொறுத்தவரை, இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கும் காலங்களில், சிறுநீரில் வெளிப்படும் மணம், ஆண் புலிகளுக்கு ஓர் அழைப்பாகச் செயல்படுகிறது. "அதன்மூலம், பெண் புலி இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருப்பதை உணரும் ஆண் புலி அதன் எல்லைக்குள் செல்லும். அங்கு இருவரும் சில நாட்களுக்கு இணைந்து வேட்டையாடுவது, இரையைச் சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது எனத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றன." ஒரு காதல் ஜோடியை போல சில நாட்களுக்கு இணைந்திருக்கும் ஆண், பெண் புலிகள், இனப்பெருக்க செயல்முறை முடிந்த பிறகு பிரிந்து விடுகின்றன. "அதற்குப் பிறகு குட்டிகளை ஈணுவது, அவற்றைப் பராமரிப்பது என்று அனைத்துமே பெண் புலியின் பொறுப்புதான்," என்று விளக்குகிறார் பீட்டர். குட்டிகளுக்காக தாய்ப்புலி செய்யும் தியாகம் ஒரு தாய்ப் புலி, தனது அன்றாடப் பணிகளான வேட்டை, எல்லைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் குட்டிகளைப் பராமரித்து, உணவூட்டி வளர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, தனது அன்றாட வேலைகளையும் குட்டிகளுக்கான நேரத்தையும் சமநிலையில் கொண்டு செல்ல, அவை தொடர்ந்து ஓய்வின்றிச் செயல்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில், சைபீரிய தாய்ப்புலிகளின் நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இதர அபாயங்களில் இருந்து பாதுகாக்க ஒரு தாய்ப்புலி, தனது அதிகபட்ச நேரத்தைக் குட்டிகளுடனேயே செலவிடுகின்றன. அதாவது தனது நேரத்தில் 80 சதவீதத்தை அவைதம் குட்டிகளுடன் கழிக்கின்றன. Getty Images தனது தாயுடன் கொஞ்சி விளையாடும் சைபீரிய புலிக்குட்டி புலிக்குட்டிகளுக்கு, கழுதைப்புலி போன்ற உயிரினங்களால் ஆபத்துகள் இருக்கும். ஆகவே தேவைப்பட்டால், சில புலிகள் வாழ்விட எல்லையைக்கூட குறைத்துக் கொள்வதாகக் கூறுகிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு. "தாய்ப் புலிகள், குட்டிகளை ஈன்ற பிறகு மிகவும் பலவீனமாக இருக்கும். அந்தச் சூழலில், தன் பாதுகாப்பும் குட்டிகளின் பாதுகாப்புமே முதன்மைக் குறிக்கோளாக இருக்கும். ஆகவே, அது எல்லை முழுவதையுமே கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, தனது பரப்பைச் சுருக்கிக் கொள்ளும்," என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, ஒரு தாய்ப்புலி குட்டிகள் பிறந்த புதிதில், அளவில் பெரிதாக இருக்கும் கடமான், காட்டெருது போன்ற இரைகளை வேட்டையாடாது. மாறாக, சிறிய மற்றும் இடைப்பட்ட அளவில் உள்ள இரைகள் மீதே அதிக கவனம் செலுத்தும். "இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தான் பலவீனமாக இருப்பதால் பெரிய இரைகளை வேட்டையாடுவது சவாலாக இருக்கும், அந்த முயற்சி தனக்கே ஆபத்தாக முடியலாம். இரண்டாவது, குட்டிகளால் கடினமான உணவுகளை உட்கொள்ள முடியாது. இரை மிருதுவாக, எளிதில் செறிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆகையால், அதற்கேற்ப வெளிமான், புள்ளிமான் குட்டிகள், காட்டு முயல் ஆகியவற்றை வேட்டையாடும்," என்று முனைவர் குமரகுரு விவரித்தார். இத்தகைய காலகட்டங்களில் ஒரு தாய்ப்புலி தனது ஓய்வு நேரம், எல்லைப் பரப்பு ஆகியவற்றோடு, போதுமான இரை கிடைக்காத நேரங்களில் தன் உணவில் ஒரு பகுதியையும் குட்டிகளுக்காகத் தயங்காமல் தியாகம் செய்வதாக சைபீரிய புலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. அரிதாக குட்டிகளை வளர்க்கும் ஆண் புலி Getty Images ராந்தம்போர் புலிகள் காப்பகத்தில் காணப்படும் ஆண் புலி ஒருவேளை குட்டிகளை ஈன்ற ஒன்றிரண்டு மாதங்களிலேயே தாய் இறந்துவிட்டால், அந்தக் குட்டிகள் காட்டில் பிழைப்பது 90% சாத்தியமில்லை என்கிறார் குமரகுரு. அதேவேளையில், சில தருணங்களில் குட்டிகளின் தந்தையான ஆண் புலி அவற்றுக்கு உணவூட்டி பரமாரிப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பீட்டர். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் 30-40% சந்தர்ப்பங்களில்தான் நடப்பதாகக் கூறுகிறார் முனைவர் குமரகுரு. "ஒருவேளை தாய் இறந்த சில நாட்களிலேயே தந்தையின் கண்ணில் அவை தென்பட்டால், அவற்றுக்குத் தனது இரையில் ஒரு பகுதியைப் பகிர்ந்துவிட்டுச் செல்லும். அப்போது அந்தக் குட்டிகள், ஆண் புலியைப் பின்தொடர்ந்து செல்லும். ஆகவே அவற்றைப் பேணத் தொடங்கும்," என்று விவரிக்கிறார் குமரகுரு. கடந்த 2021இல் மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் புலி குட்டிகளை ஈன்ற ஏழு மாதங்களில் இறந்துவிடுகிறது. ஆனால், அந்தக் குட்டிகளின் தந்தை அவை இருக்கும் பகுதியிலேயே சுற்றி வருவதையும், குட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதையும் கண்காணித்த வனத்துறை, அது அவற்றுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். புலிக்குட்டிகளை வேட்டையாடப் பழக்குவது எப்படி? Getty Images புலிக்குட்டி 6 முதல் 9 மாதங்களை எட்டும்போது அதற்கான வேட்டைப் பயிற்சிகள் தொடங்கும். அந்தப் பயிற்சி ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாகவே தொடங்கும் என்று விளக்கினார் குமரகுரு. குட்டிகள் தாயின் மேற்பார்வையில், வெட்டுக்கிளி, முயல் குட்டிகள், ஓனான் போன்ற சிறிய வகை உயிரினங்களைப் பிடித்து வேட்டையாடி விளையாடும். அந்தப் பயிற்சிகளின்போது, "அம்மாவை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, குட்டிகள் அதிகபட்சமாக 200 மீட்டர் வரை சுற்றி விளையாடும். காட்டெருது, கடமான் போன்றவை சுற்றித் திரியும் பகுதிகளுக்கு நடுவில் ஓடிச் சென்று தன் மழலைக் குரலில் உருமுவது போன்ற வேடிக்கைகளும் நடக்கும்," என்று அவர் விவரித்தார். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் குழந்தைத்தனமான விளையாட்டாகத் தெரிந்தாலும், அவை குட்டிகளுக்கு வேட்டையின் மீதான நம்பிக்கையை வழங்குவதற்கான தாயின் முதல்கட்ட முயற்சியே என்றார் குமரகுரு. இதற்கு அடுத்தகட்டமாக ஒரு வயது முடிந்த பிறகு, "தாய்ப்புலி ஒரு மானை வேட்டையாடினால், இரையைச் சுற்றி வளைத்து அம்மாவுக்கு உதவும் பணியில் குட்டிகள் ஈடுபடும். அப்போது தன் இரையை ஒரே அடியில் வீழ்த்தாமல், கால்களை உடைத்துவிட்டு, குட்டிகளே அதை வீழ்த்தும் வரை காத்திருக்கும்." இதிலும் பழக்கப்பட்ட பிறகு இறுதியாக, சுமார் ஒன்றரை அல்லது இரண்டு வயதை எட்டும்போது, ஓர் இளம் புலி சுயமாக அதன் வேட்டையைத் தொடங்கும் என்று விளக்கினார் முனைவர் குமரகுரு. இதில் ஆண், பெண் புலிக்குட்டிகள் இடையே இருக்கும் ஒரு வேறுபாட்டை எடுத்துரைத்தார் பீட்டர். அவரது கூற்றுப்படி, ஆண் குட்டிகள் அளவில் பெரிதாக இருப்பதால், ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு தாயின் இரையில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ள்ளும். அதனால், விரைவில் வேட்டையாடிச் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் பெண் குட்டிகளுக்கு ஏற்படும். ஆகவே தேவை கருதி ஆண் குட்டிகளைவிட, பெண் குட்டிகள் முன்கூட்டியே வேட்டையாடுவதில் தேர்ந்துவிடுகின்றன. வேட்டைக்குப் பழக குட்டிகளைப் பட்டினி போட்ட 'ராஜமாதா' Getty Images புலிகள் குட்டிகளை வேட்டைக்குப் பழக்குவது எப்படி என்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில் வயதாகி உயிரிழந்த காலர்வாலி என்ற புலியை உதாரணமாகக் கூறலாம். தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றுள்ள இந்தப் புலியை ஆய்வாளர்கள் 'ராஜமாதா' என்று அழைக்கின்றனர். ராஜமாதா, தனது குட்டிகளை வேட்டையாடப் பழக்குவதற்குப் பயன்படுத்திய அணுகுமுறை குறித்த அவதானிப்புகள் கடந்த 2013ஆம் ஆண்டு சான்ச்சுவரி ஏசியா (Sanctuary Asia) இதழில் வெளியானது. அதன்படி, ராஜமாதாவுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று ஆண் உள்பட நான்கு குட்டிகள் பிறக்கின்றன. ஒருநாள் அந்தக் குட்டிகளை ராஜமாதா பிரிந்து செல்கிறாள். நாட்கள் உருண்டோடுகின்றன. அவள் குட்டிகளிடம் இருந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு கி.மீ தொலைவிலேயே இருக்கிறாள். ஆனால், குட்டிகளை அழைக்க குரல் கொடுக்கவோ, அவற்றை நெருங்கவோ இல்லை. அவள் தன்போக்கில் வேட்டையாடுவதும் ரோந்து செல்வதுமாக நாட்கள் செல்கின்றன. சுமார் 10 நாட்கள் பசியில் வாடிய குட்டிகளில் ஒரு ஆண் புலி இறுதியாக புள்ளி மான் குட்டி ஒன்றை வேட்டையாடுகிறது. பல நாட்கள் பட்டினியில் கிடந்தாலும், அவை சண்டையின்றி தமக்குள் அமைதியாக உணவைப் பகிர்ந்து உண்கின்றன. ஆனால், இப்போதும் தாய்ப்புலியான ராஜமாதா அவர்களை நெருங்கவில்லை. நாட்கள் செல்கின்றன. அடுத்த சில நாட்களில் அந்தக் குட்டிகள் மேலும் இரண்டு புள்ளிமான்களை வேட்டையாடின. Getty Images மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில், தனது ஒரு குட்டியுடன் சேர்ந்து சுமார் 400 கிலோ எடையுள்ள கடமானை வேட்டையாடிச் சாப்பிடும் 'ராஜமாதா' இறுதியாக 16வது நாளில், ராஜமாதா தனது குட்டிகளை அழைக்க குரல் கொடுத்துவிட்டு, பெஞ்ச் ஆற்றின் கரையோரத்தில், ஒரு பெரிய புள்ளி மான் இரையுடன் அவள் காத்திருந்தாள். குட்டிகள் வந்ததும், குடும்பத்துடன் சேர்ந்து அவள் தனது இரையை ருசித்துச் சாப்பிட்டாள். இந்த ஆய்வில் சில அம்சங்கள் கண்டறியப்பட்டன. ராஜமாதா, தனது குட்டிகளை பெஞ்ச் ஆற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விட்டுச் சென்றிருந்தாள். அவள் விட்டுச் சென்ற பகுதி இரை உயிரினங்கள் அபரிமிதமாக வாழும், அடர்த்தி நிறைந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட காடு. அதாவது, தனது குட்டிகளை வேட்டைக்குப் பழகுவதற்காக இரைகள் நிறைந்த, தண்ணீருக்குப் பஞ்சமில்லாத, மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றிருந்தாள். அதோடு, இவற்றின் தந்தையான டி-2 என்ற புலி இறந்த பிறகு, அதன் எல்லைகளைத் தன்வசப்படுத்திய டி-30 என்ற புலி அங்கு சுற்றி வந்ததால், அதன்மூலம் தனது குட்டிகளுக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்க, ஒரு பாதுகாப்பான தொலைவில் அவற்றுக்குப் பாதுகாப்பும் வழங்கி வந்திருக்கிறாள், ராஜமாதா என்று அழைக்கப்படும் அந்தத் தாய்ப்புலி. ஆண் குட்டிகளை தாய் அடித்து விரட்டுவது ஏன்? Getty Images மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் தன் குட்டியுடன் நடந்து செல்லும் தாய்ப்புலி இப்படியாக, ஈன்ற காலகட்டத்தில் பாதுகாப்பு கருதிப் பல தியாகங்களைச் செய்து வளர்த்து, வேட்டையாடப் பழக்கி, சுயமாக வாழப் பயிற்றுவித்த பிறகு, தமது குட்டிகள் தனித்து வாழும் வயதை எட்டும்போது, அவை தாயைப் பிரிகின்றன. இதில் "பெண் குட்டிகளைப் பொறுத்தவரை, சிலநேரங்களில் தனது எல்லைப் பரப்பிலேயே ஒரு பகுதியை தாய்ப்புலி வழங்கக்கூடும். அனால், ஆண் குட்டிகளைப் பொறுத்தவரை நெடுந்தூரம் வரை அவை விரட்டியடிக்கப்படும்" என்கிறார் காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர். "ஆண் புலிகள், தாயின் வாழ்விடத்திற்கு அருகிலேயே இருந்தால், ஒருவேளை அவை தமது உடன்பிறப்புகளுடனோ அல்லது சில நேரங்களில் தாயுடனேகூட இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன" என்று பீட்டர் கூறினார் ''இதனால் மரபணுக் குறைபாடு ஏற்படும், அது எதிர்காலச் சந்ததிகளின் பிறப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலேயே ஆண் புலிகள் விரட்டியடிக்கப்படுகின்றன'' என்கிறார் அவர். இவை மட்டுமின்றி, ஒருவேளை தனது குட்டிகளில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால், அவற்றைத் தானே சாப்பிட்டு விடுவதன் மூலம், பலவீனமான சந்ததிகள் பெருகுவதைத் தடுப்பதாகவும் முனைவர் குமரகுரு கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx26d17n4qyo?at_campaign=ws_whatsapp
  10. யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன? December 22, 2024 — கருணாகரன் — இலங்கையில் நான்கு தேசிய வைத்தியசாலைகளும் பதின்மூன்று போதனா மருத்துவமனைகளும் உண்டு. இதை விட மாவட்ட மருத்துவமனைகள், பிரதேச மருத்துவமனைகள், கண்மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், புற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், கிராமிய வைத்தியசாலைகள் எனப் பல உள்ளன. ஆனால், யாழ்ப்பாண மருத்துவமனையில்தான் அதிகரித்த உயிரிழப்புகளும் மருத்துவக் கொலைகளும், மருத்துவத் தவறுகளும் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் பரப்புரையில் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளில் இருப்போர் தொடக்கம் பொழுதுபோக்காக எழுதுவோரும் ஈடுபடுகிறார்கள். இவற்றோடு இப்பொழுது மருத்துவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அருச்சுனாவும் ஒரு தொகையான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிடும்போது அது உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்று ஹன்ஸ்ஸாட்டிலிருந்தே நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் நோக்கப்பட்டு பாராளுமன்றப் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சமூக ஊடகங்களிலும் அருச்சுனாவினாலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மீதும் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரப்புரையில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1. போதனா மருத்துவமனையில் நடந்த / நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குறைபாடுகள், குற்றங்கள் மற்றும் ஊழல் எனப்படுபவை. மெய்யாகவே அங்கே பெருந்தவறுகளும் ஊழலும் தொடர்ச்சியாக நடக்கிறது என்றால் அதை ஆதரங்களோடு பட்டியற்படுத்த வேண்டும். ஆனால் அப்படி யாரும் முன்வைப்பதைக் காணமுடியவில்லை வைஷாலினி என்ற ஒரு குழந்தையின் (நோயாளியின்) கை துண்டிக்கப்பட்டது மட்டுமே மிகப் பெரிய குற்றச்சாட்டாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு, அது உரிய நிபுணர் குழுவின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தலில் தவறு இருந்தாலோ பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றாலோ குறித்த நோயாளரான வைஷாலினியின் பெற்றோர் – அல்லது அவர்கள் சார்பாக பொது அமைப்பினரோ யாரோ வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதன் மூலம் உரிய நிவாரணத்தைக் கோரலாம். குற்றவாளிகள் அல்லது தவறிழைத்தோர் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவர். இழப்பீட்டையும் கோரலாம். இதுதான் இந்த மாதிரியான பிரச்சினைக்கான அரசாங்க வழிமுறையாகும். ஆனால், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைஷாலினிக்கு ஆரம்ப நிலை மருத்துவம் தனியார் மருத்துவமனையொன்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது பலிதமாகவில்லை என்ற நிலையிலேயே போதனா மருத்துவமனைக்கு வைஷாலினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சையின்போது கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் போதனா மருத்துவமனையின் சிகிச்சையின்போது நடந்ததா அல்லது தனியார் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது உருவாகியதா என்பதை நிபுணர் குழுவின் அறிக்கையே சொல்லும். அதுவரை நாம் இது குறித்துப் பேச முடியாது. ஆனால், வைஷாலியின் விடயம் மிகப் பாரதூரமானது. அது நியாயமான முறையில் அணுகப்பட வேண்டியது. இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைக்காகச் செல்கின்ற (சேர்க்கப்படுகின்ற) பலர், ஒரு கட்டத்தில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு போதனா மருத்துவமனைக்கு அல்லது மாவட்ட மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அப்படி வருவோரில் பலரும் உரிய சிகிச்சையைப் பெற்று சுகமடைந்து வெளியேறிச் செல்கிறார்கள். சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த உயிரிழப்புகள் தொடர்பான பதிவும் புள்ளி விவரமும் குறித்த மருத்துவமனைகளின் கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது. இது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடப்பதல்ல. இலங்கை முழுவதிலும் அவதானிக்கப்படுகின்ற நிலையாகும். ஆகவே அப்படி வருகின்ற நோயாளர்களின் தொடக்க நிலைச் சிகிச்சை உண்டாக்கும் பாதிப்பை குறித்த அரச மருத்துவமனையே ஏற்க வேண்டியுள்ளது. இதற்கான தனியார் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைகளை முறித்துக் கொண்டு வருகின்ற நோயாளிகளை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரச மருத்துவமனைகள் சொல்ல முடியாது. ஆனால் அதைத் தனியார் மருத்துவமனைகள் சொல்லலாம். அவை சொல்லித் தப்பிக் கொள்கின்றன. இது ஒரு சுருக்கக் குறிப்புத்தான். இதைப்பற்றி விரிவாகப் பேசினால் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் புள்ளிவிவரங்களும் வெளியாகும். ஆகவே இந்தப் பிரச்சினையை இந்த யதார்த்தத்தோடு – உண்மையின் அடிப்படையிற்தான் புரிந்து கொள்ள வேண்டும். தவிர, போதனா மருத்துவமனையில் ஊழல் நடக்கிறது என்றால், எந்தெந்த இடத்தில் ஊழல் நடந்துள்ளது? யாரெல்லாம் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என அவற்றைக் குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியம். அதுவும் இதுவரையில் யாராலும் முன்வைக்கப்பட்டதாக இல்லை. ஆகவே பொத்தாம் பொதுவாக தமது கணக்குக்கு ‘தர்ம அடி அடிப்பது‘ என்று சொல்வார்களே, அதைப்போல ஒவ்வொருவரும் தமக்குப் பட்டதை எழுதித் தள்ளுகிறார்கள். அப்படி எழுதப்படும் எந்தச் சொல்லுக்கும் மதிப்பில்லை. ஏனென்றால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறாகவே கருதப்படும். உண்மையும் அதுதான். எனவே நடந்து கொண்டிருப்பது அவதூறு என்ற முடிவுக்கே நாம் வர முடியும். இப்படி அவதூறு செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம். 2. தனிப்பட்ட முறையில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதான நிர்வாகக் குறைபாடுகள் என்ற குற்றச்சாட்டுகள். அதாவது நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குற்றங்கள், குறைபாடுகள் தொடர்பாகப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்தோரைப் பாதுகாக்கின்றார் என்பது. அத்துடன் ஊழலுடன் சத்தியமூர்த்தி நேரடியாகச் சம்மந்தப்படுகிறார் என்பதாகச் சொல்லப்படுவது. அத்துடன் போதனா மருத்துவமனையில் தொண்டு அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கான பணி நியமனங்கள் மற்றும் ஊதியம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியமை என்ற குற்றச்சாட்டு. இந்தப் பிரச்சினையைக் கையில் தூக்கிக் கொண்டே அருச்சுனா பணிப்பாளரின் பணிமனைக்குச் சென்றிருக்கிறார். உண்மையில் இதனுடைய தாற்பரியம் என்ன என்று அருச்சுனாவுக்குத் தெரியும். அவரும் ஒரு காலகட்டத்தில் மருத்துவ நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியவர். அத்துடன் வடக்கினதும் இலங்கையினதும் அரசியல் – நிர்வாகச் சூழலை விளங்கியவர். அப்படி விளக்கத்தைக் கொண்டுள்ள அருச்சுனா, இந்தத் தொழிலாளர் விவகாரத்தைத் தனியே பணிப்பாளர் தீர்த்து வைக்க வேண்டும். அல்லது பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கேட்பது நகைப்பிற்குரியது. நிரந்தரப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை எந்தவொரு அரச நிறுவனத்தின் எந்த அதிகாரியும் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. அதற்கான அனுமதியைக் கோரி, அது கிடைத்த பின், அதற்குரிய நேர்முகத்தேர்வு என உரிய ஒழுங்குகளின் அடிப்படையிலேயே அதைச் செய்ய முடியும். அப்படித்தான் இதற்கு முன்னரும் பல நிறுவனங்களிலும் நடந்துள்ளது. ஆகவே அதற்கான குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் அருச்சுனா முன்வைத்தார் என்பது கேள்வியே. இது தனிப்பட்ட ரீதியில் ஒரே துறைக்குள் பணியாற்றிய இருவருக்கிடையிலான பிணக்காகவே பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையிலேயே அருச்சுனாவின் பாராளுமன்ற உரை நீக்கப்பட்டதும் போதனா மருத்துவமனைக்குள் தேவையில்லாமல் செல்லக் கூடாது என நீதிமன்றம் அருச்சுனாவைக் கட்டுப்படுத்தியதும் அமைகிறது. சொல்லப்படும் ஊழல் விவகாரத்தைப் பேசுவதாக இருந்தாலும் அதையும் பட்டியற்படுத்துவது அவசியமாகும். அவை என்ன அடிப்படையில் தவறு எனத் தெரியப்படுத்துவது முக்கியமானது. இங்கே சில கேள்விகள் எழுகின்றன. 1. இப்படிப் பரப்புரை செய்யப்படும் அளவுக்கு உண்மையில் போதனா மருத்துவமனையில் தொடர்ந்தும் தவறுகள் நடக்கிறதா? அதிலும் மருத்துவக் கொலைகள் என்பது மிகப் பாரதூரமானது. சிகிச்சையின்போது பல காரணங்களால் உயிரிழப்புகள் நேர்கின்றன. அது வேறு. மருத்துவக் கொலை என்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகும். அப்படி ஏதும் நடந்திருந்தால் அதைச் சீரியஸாக எடுக்காமல் விடும் தரப்புகளும் தவறுக்கு உடந்தையாகின்றன. ஆகவே இதைக்குறித்து உரிய தரப்புகள் சீரியஸாகவே சிந்திக்க வேண்டும். 2. தவறுகள் தொடர்ந்து நடக்கிறது என்றால், அந்தத் தவறுகளை உரியவர்கள் ஏன் பட்டியற்படுத்துவதில்லை? ஏன் அவற்றை உரிய இடங்களுக்கு (ஆளுநர், சுகாதார அமைப்பு உட்பட்ட நிர்வாக அடுக்குகளுக்கு) உரிய முறையில் தெரியப்படுத்துவதில்லை? 3. அப்படித் தெரியப்படுத்தியிருந்தால் அவற்றின் விவரம் என்ன? அதாவது அதற்குப் பின் என்ன நடந்தது? உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? பொருத்தமான நடவடிக்கையை உரிய தரப்பினர் மேற்கொள்ளவில்லை என்றால் அந்தத் தரப்புகளும் தவறிழைத்ததாக அல்லவா கருத வேண்டும்? அவையும் தவறுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. 4. சொல்லப்படும் அளவுக்கு யாழ்ப்பாணப் போதனா மருத்துமனையில் தவறுகளும் மருத்துவக் கொலைகளும் நடப்பதாக இருந்தால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் உள்ள மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரும் மௌனம் காப்பது ஏன்? அவர்களும் இந்தத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிறார்களா? தவறுகளோடு போதனா மருத்துமனையைப் பாதுகாக்கிறார்களா? அப்படிக் குறிப்பிடுமளவுக்கு அங்கே தவறுகளும் குற்றங்களும் மருத்துவக் கொலைகளும் நடக்கவில்லை என்றால், சமூக வெளியில் வாரியிறைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தத் தரப்புகள் மறுத்துரைக்காமலும் கேள்வி கேட்காமலும் மௌனமாக இருப்பது ஏன்? இவர்களும் தவறான சமூகப் போக்கை ஊக்கப்படுத்துகிறார்களா? 5. சமூக வெளியில் (வலைத்தளங்களிலும் YouTupe களிலும்) முன்வைக்கப்பட்டுச் சமூகத்தைக் கொந்தளிப்பாக்குவதற்கு முயற்சிக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசியற் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை என்ன? அவர்கள் கேளாச் செவியர்களாகவும் காணக் கண்ணர்களாகவும் இருப்பது ஏன்? சமூகத்தையும் மருத்துவமனையையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா? 6. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் இரண்டு மூன்று தொலைக்காட்சிகளும் உள்ளன. இவற்றை விட குறிப்பிடத்தக்க இணையத் தளங்களும் உள்ளன. இந்த ஊடகங்கள் மேற்படி சமூக வலைத்தளங்களின் / அருச்சுனாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவனம் கொள்ளாதிருப்பது ஏன்? டான் தொலைக்காட்சி மட்டும் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியுடன் ஒரு நேர்காணலைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. அதைத் தவிர்த்தால் பெரிய அளவில் இந்த விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனையவை அவ்வப்போது நிலவரச் செய்திகளை மட்டும் அளிக்கின்றனவே தவிர, உரிய கள ஆய்வைச் செய்வதைக்காணவில்லை. ஏற்கனவே ஒரு தடவை உதயன் பத்திரிகையில் பணிப்பாளரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டதொரு நேர்காணல் வந்திருந்தது. 7. 2000 பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒரு அத்தியாவசிய சேவை மையமே யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையாகும். ஏறக்குறைய 400 மருத்துவர்களும் 600 வரையான மருத்துவத் தாதிகளும் பல பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். 1300 நோயாளர் படுக்கைகள் உண்டு. கண், இருதயம், சிறுநீரகம், குழந்தைகள் பிரிவு, நரம்பியல், அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவுப்பகுதி என 100 க்கு மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன. தினமும் 2500 க்கு மேற்பட்ட கிளினிக் நோயாளர்கள் வருகை தருகின்றனர். 1000 க்கு மேலான வெளிநோயாளர் சிகிச்சை பெறுகின்றனர். அப்படியிருந்தும் தற்போது (கடந்த சில ஆண்டுகளில் அல்லது சில மாதங்களில்) அளவுக்கு அதிகமான மருத்துவக் கொலைகளும் தவறுகளும் குற்றங்களும் மெய்யாகவே (பொதுவெளியில் குறிப்பிடுவதைப்போல) நடப்பதாயின் அதற்கான பொறுப்பை இந்த மருத்துவ அணியினரும் ஏற்க வேண்டும். அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். இவை அனைத்துக்கும் நிர்வாகப் பணிப்பாளர் என்ற ரீதியில் மருத்துவர் சத்தியமூர்த்திக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தாலும் இவர்களுக்கும் கணிசமான பொறுப்புண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது. இதேவேளை பலரும் குறிப்பிடுவதைப்போல மருத்துவக் கொலைகளோ, குற்றங்களோ, தவறுகளோ அங்கே நடக்கவில்லை என்றால், அதை மறுத்துரைப்பதற்கான வழிகளில் மருத்துவ அணியினர் அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால், மருத்துவமனை என்பது மக்களின் – குறிப்பாக நோயாளரின் – நம்பிக்கைக்குரிய – நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய ஒரு மையமாகும். நோயாளரின் உளநிலை பொதுவாகவே சமனிலைக் குறைவுடனேயே இருப்பதுண்டு. தமது நோய் குணமாகுமா? அதற்கான போதிய சிகிச்சை நடக்கிறதா? அதற்குரிய வளங்கள் உள்ளனவா? என்ற கேள்விகள் நோயாளரின் உளநிலையில் பொதுவாகவே கொந்தளிப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆகவே, அப்படியான சூழலில் மருத்துவமனையைப் பற்றி (மருத்துவ சேவையைப் பற்றி) பீதியூட்டும் செய்திகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டால், அதற்கு அனுமதியளித்தால் அவை உண்மையென்றே மக்களால் (நோயாளர்களால்) நம்பப்படும். அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். அவர்கள் மிகப் பெரிய அவல நிலையைச் சந்தித்துள்ளதாக உணர்வார்கள். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களாவர். அவர்களே கூடுதலாக அரச மருத்துமனைகளை நாடுகின்றவர்கள். அரச மருத்துவமனைகளே அவர்களுக்கு கதியாகும். இந்த நிலையில் உண்மையை வெளிப்படுத்தி, மக்களுக்கு (நோயாளருக்கு) நம்பிக்கையை அளிக்கும் பொறுப்புடன் நடக்க வேண்டியது மருத்துவ அணியினரின் கடமையாகும். அதுவே மக்களை (நோயாளரை) தெம்பூட்டும். 8. பொறுப்பான தரப்புகளின் நடவடிக்கை. குறிப்பாக ஆளுநர், சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் உரிய குற்றச்சாட்டுகளைக் கவனத்திற் கொண்டு முறையான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும். உண்மைகளுக்கு அப்பாலான பொய்களைக் கட்டமைப்போரையும் அவதூறு செய்வோரையும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் தவறினால் அது சமூகத்திற்குப் பாராதூரமான பாதிப்பையே ஏற்படுத்தும். மட்டுமல்ல, இந்தப் பரப்புரையாளரின் சதிக்கு உடன்படுவதாகவும் அமையும். மீளவும் இங்கே வலியுறுத்தப்படுவது இது நோயாளரின் உளநிலையுடன் சம்மந்தப்பட்ட பாரதுரமான விடயமாகும். இந்தக் கட்டுரை கூட நோயாளரின் பாதுகாப்பு, அவர்களுடைய உளநிலை மற்றும் பொது நிலைமையைக் குறித்தே விடயங்களைப் பேச முற்படுகிறது. ஒரு சொல்லும் போதனா மருத்துவமனை நிர்வாகத்தையோ மருத்துவ அணியினரையோ வலிந்து பாதுகாப்பதற்கு முற்படவில்லை. அதேவேளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பழிசுமத்தல்களையும் கண்டிக்கிறது. எனவே நோயாளர்களை உளச்சோர்வடைய வைக்கும் தீய முயற்சிக்கு இடமளிக்காமல் உரிய தரப்புகள் அனைத்தும் உடனடியாக முறையான விசாரணைகளை (நடவடிக்கைகளை) மேற்கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். வடமாகாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் அரச மருத்துமனைகளையே பெரும்பாலானோர் நாடும் சூழலே பொதுவாக உண்டு. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையே வடக்கின் ஆதார (மைய) மருத்துவமனையாக உள்ளது. அது எந்தச் சூழலிலும் நம்பகத்தன்மையை இழக்க முடியாது. அப்படி நம்பகத் தன்மையை இழக்குமாக இருந்தால் அதனால் பயனடைவது தனியார் மருத்துவத்துறையாகவே இருக்கும். அது இந்தச் சமூகத்துக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். இந்த நிலையில் நோக்கினால் யாழ்ப்பாணம் போதனா மருத்து மனை தொடர்பாகக் குறிப்பிடப்படும் விடயங்களைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தினால், அது தனியார் மருத்துவத்துறையை வளர்ப்பதற்கே மறைமுகமாக உதவும். நாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான மருத்துவமனைகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மட்டும்தான் மிக மோசமான நிலை காணப்படுகிறதா? ஏனைய இடங்களில் தவறுகளே நடக்கவில்லையா? என்பதையும் அரசும் மக்களும் ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டும். வடக்கில் மன்னார், சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் அருச்சுனா வெளிப்படுத்திய பிரச்சினைகளைப் பற்றியும் விசாரிக்க வேண்டும். இங்கெல்லாம் பிரச்சினைகளின் உண்மைத் தன்மை என்ன? அவற்றை எப்படித் தீர்த்து வைப்பது என்பதற்கு அப்பால், அவற்றை வைத்தே தன்னுடைய அரசியல் அதிரடிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் உத்தியையே அருச்சுனா செய்கிறார். இதற்கு வாய்ப்பாக இன்றைய தகவல் உலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது தன்னைத் தானே ஹீரோவாக்கிக் கொள்ளும் ஒரு உத்தியாகும். நிஜமான கதாநாயகர்களைக் கண்ட வரலாற்றுக்கு இத்தகைய நகைச்சுவையாளர்கள் சிரிப்பையே வரவழைக்கும். எனவே இவற்றைத் தீர விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்கு மேற்குறிப்பிட்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியற் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் நேர்மையான முறையில் அர்ப்பணிப்பாகச் சேவை செய்வோர் உளச்சோர்வடையக்கூடிய நிலையே ஏற்படும். மட்டுமல்ல, தவறான அபிப்பிராயம் சமூகத்தில் மேலோங்கியிருந்தால் அது மருத்துவமனையில் நோயாளருக்கும் மருத்துவத்துறையினருக்கும் எப்போதும் முரண்களையே உருவாக்கும். நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் இடைவெளி இருக்குமானால் அது சிகிச்சையையே பாதிக்கும். குறிப்பாக நோயாளியின் உள, உடல் ஆரோக்கியத்தை. தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலுமிருக்கும் குறைபாடுகளையும் சீர்திருத்தம் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. அப்படியானால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை விடயத்திலும் அது கவனம் செலுத்த வேண்டும். https://arangamnews.com/?p=11558
  11. செல்ஃபி எடுக்க சென்று ரயிலில் மோதி தாயும் மகளும் பலி December 22, 2024 07:25 pm அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்த போதும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197693
  12. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரான தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விவகாரம் நடராஜ ஜனகன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு விடயங்கள் மேல்நிலை பெற்று காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் கீழ் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் மூலதன வருகைக்காக மாற்றங்களுக்கு தயாராகும் நிலை என அனைத்து தளங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் பயணிக்க தேசிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. இன்றைய உலகமயமாக்கல் போக்கு பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை தவிர்த்து தனித்த பயணத்தை தொடர முடியாது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெளிவாகவே தெரிகின்றது. எனவே எதிரணி அரசியல் சக்திகளின் பொருளாதார கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் அனைத்தையும் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலைமையில் கீழ் தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் எதிரணியினருக்கு பொருளாதார கொள்கை ரீதியான போராட்ட செயற்பாடுகளுக்கு இடமில்லாமல் போயுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றைப் பார்க்கின்ற போது குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை நிலைப்பாட்டை பார்க்கின்ற போது இந்திய விரோத நிலைப்பாடு மிகப் பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜயவீரவின் ஐந்து பிரதான கொள்கை முன்னெடுப்பில் இந்திய விஸ்தரிப்பு என்ற விடயம் பிரதான ஒன்றாக அமைந்திருந்தது. எனவே இன்றைய தேசிய மக்கள் சக்தியினர் இவை யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இந்தியாவுடனான இணக்க நிலைக்கு தம்மை தயார்படுத்தி வருவது ஒரு ஆரோக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய மாற்றம் அவர்களின் அங்கத்தவர்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கியிருக்கும் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து நிற்கும் முன்னிலை சோசலிச கட்சியினர் தொடர்ந்தும் இந்திய விரோத முன்னெடுப்புகளை காத்திரமாக முன் எடுத்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் விமல் வீரவன்ச அணியினரும் இந்த இந்திய விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா தனது எதிர்பார்ப்பை அனுரகுமார திசாநாயக்காவுடனான சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இம்முறை 13 வது அரசியலமைப்பு தொடர்பாக குறிப்பிட்டு இந்தியா கூறாமல் இருந்துள்ளது என்ற விமர்சனங்களும் மேல் வந்திருக்கிறது. மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் மூன்று வருடம் கழிந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.இது காலதாமதத்தை ஏற்படுத்தும் நிலையாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையின் மிகப் பிரதான பிரச்சினையாக தமிழ் தேசிய பிரச்சினை காணப்படுகிறது. கடந்த 76 ஆண்டு காலமாக நீடித்த நிலையில் இப்பிரச்சனை காணப்படுகிறது. இலங்கை பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு சென்றதும் குறிப்பாக போர் நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட கடன் பொருளாதார இழப்பு என அனைத்தும் இதைச் சுற்றியேகாணப்படுகிறது. எனவே இந்த பிரதான பிரச்சனை தொடர்ந்து பின் தள்ளும் நிலையே தொடர்கிறது. 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வட்டமேசை மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என்ற உறுதி மொழியை பிரசாரத்தின் போது வழங்கியிருந்தார். இதன் காரணமாக தெற்கிலே தமிழர்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கியிருந்தனர்.ஜே .ஆர். பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாத மாவட்ட சபைகளை தமிழ் மக்களுக்கு தீர்வாக முன்வைத்தார். இந்த குறை பிரசவத்தின் காரணமாகவே மிகப்பெரிய அனர்த்தங்கள் தமிழர் தேசத்தில் உருவாகும் நிலை தோற்றம் பெற்றது. சமாதான தேவதையாக 1994 ல் 62.4 விகித வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க ஆறு வருடங்கள் கழிந்த நிலையிலேயே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தீர்வைக் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. இது தொடர்பாக முக்கிய சந்திப்பு ஒன்றில் மங்கள சமரவீரா கருத்து கூறுகையில்; 1994ல் மக்கள் ஆதரவு பலமாக இருந்த காலப்பகுதியில் புதிய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி தீர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என கூறியிருந்தார். எனவே தற்போது கூட இனவாதம், மதவாதம் என்பன மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குறிப்பாக இந்த சக்திகளுக்கு தலைமை தாங்கி வந்த மகிந்த ராஜபக்ஷ அணி ஆடை களைந்த நிலையில் அம்மணமாக நிற்கும் இன்றைய சூழ்நிலையில் தீர்வு முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். தென்னிலங்கை மக்களும் இதற்கு ஆதரவாகவே உள்ளனர். ஏதோ காரணங்களுக்காக தேசிய மக்கள் சக்தி இதனை பின்தள்ளி வருவது கவலை தரும் நிலையாகும். தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை தொடர்பான சர்ச்சை சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் தரப்பில் ஆறு பேர் இந்த சிக்கலுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் இந்த சிக்கலுக்குள் சிக்கியிருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்பு 42 விகிதம் என்ற நிலையும் எதிரணிக்கு 58 விகிதம் என்ற நிலையும் காணப்பட்டிருந்த நிலையில் எதிரணிகளின் பலவீன நிலை காரணமாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. எதிரணியின் பலவீன நிலை காரணமாக தொழிற்சங்க மட்டத்தில் சிவில் அமைப்புகள் மட்டத்தில் பெரிய அளவிலான பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இலங்கையில் ஆளும் தரப்பின் பலத்தை விட எதிரணியின் பலவினமே அரசாங்கத்துக்கு அதிக பலத்தை வழங்கி வருகிறது. தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தென்னிலங்கை எதிரணி தளத்தை விட தமிழர் தேசத்தின் அரசியல் அணிகளின் நிலை அதிக பலவீன நிலையில் காணப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் தமிழர் தேசம் ஐக்கியமான அணுகுமுறைக்குள் பயணிக்க வேண்டும் என்பது சூழ்நிலை நிர்ப்பந்தமாக காணப்படுகிறது. ஆனால் தமிழர் தேசிய அரசியல் இயக்கங்கள் அந்த நிலைக்கு இன்னும் வராத நிலையே காணப்படுகிறது . தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் ரெலோவுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பட்டிருந்தது.அந்த நிலைமைக்கு பின்னர் ஐக்கியமான செயற்பாட்டு மேல் வருகை கரைந்து போன நிலையே காணப்படுகிறது. வடபகுதியில் 27 ஆயிரம் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு தமது வாக்குகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேற்படி வேட்பாளர் சிக்கல்கள் மேல் சிக்கல்களை உருவாக்கியிருப்பதுடன் தற்போது நீதிமன்றம் வரை விடையங்கள் நகர்ந்து வருகின்றது. புதிய சூழ்நிலைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பிரதான நகர்வுகள் தொடர்பில் தமிழர் தேசத்தின் அரசியல் இயக்கங்களுக்கிடையே ஒரு புரிதல் நிலைமை இன்று வரை தோற்றம் பெறாதிருப்பது கவலை தரும் நிலையாகும். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலில் கூட பெரும் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. https://thinakkural.lk/article/314015
  13. இந்தியாவுக்கான இலங்கை இராஜதந்திரி மீள அழைப்பு 22 Dec, 2024 | 12:16 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர உயர் பதவிகளுக்கு கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் மற்றும் உறவு ரீதியான நியமனங்களை இரத்து செய்வதற்குமான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இதன் பிரகாரம் சுமார் 16 இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டுக்கு மீள வரவழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா ஆகியோர் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள நிஷான் மாணிக் முத்துகிருஷ்ணா, அங்குள்ள மூன்றாவது செயலாளர், தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்திலுள்ள மெல்கி சந்திமா பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கான்பரா உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள தினுகா கார்மெலின் பெர்னாண்டோ, பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் சஹஸ்ர பண்டார, மாஸ்கோ தூதரகத்திலுள்ள பந்துல டி சொய்சா, டில்லி உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டிலுள்ள மூன்றாவது செயலாளர் பிரியங்கிகா திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அங்காராவில் இரண்டாவது செயலாளர் யாஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரக ஆலோசகர் அஷ்வினி ஹபாங்கம, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள ஜனக ரணதுங்க உள்ளிட்ட அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201850
  14. மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அருண் ஹேமச்சந்திர Published By: Digital Desk 2 22 Dec, 2024 | 03:16 PM (துரைநாயகம் சஞ்சீவன்) மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார். ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமனவுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சட்ட விரோத குடிவரவாளர்களாக வருகை தந்துள்ள மியன்மார் - ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். அந்த வகையில் அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளை செய்து வருகிறோம். குறித்த அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டனர். உடனடியாக அங்கே நடமாடும் மருத்துவ முகாமினை மேற்கொண்டிருந்தோம். பின்னர் சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டார்கள். சட்டத்தின் பிரகாரம், மாலுமிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏனைய 103 பேரும் தற்போது ஜமாலியா பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார துறையினர், நிர்வாகத்துறையினர், பாதுகாப்புத் தரப்பினர், வெளிவிவகார அமைச்சு உட்பட பல துறை சார்ந்தவர்கள் ஒன்றாக இயங்கி வருகிறார்கள். ஆனால் சிலர் இந்த விடயத்தை தங்கள் சுய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஒரு பாரிய விடயத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த வேளையிலே ஒருசில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். நாட்டைப் பொறுத்தவரையிலும் திருகோணமலையை பொறுத்தவரையிலும் இது புதிய அனுபவம் இந்த விடயத்தை அணுகுவதற்கான ஒட்டுமொத்த அம்சங்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அத்துடன் மிகவும் சிறப்பாக அனைத்து விதத்திலும் அணுகி வருகின்றது. ஆனாலும் தமது அரசியல் இலாபத்தினை கருத்தில் கொண்டு ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் பிழைப்பு வாதத்தை மேற்கொள்ள விரும்புவார்களாக இருந்தால் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அத்துடன் நீங்கள் ஏதாவது உதவிகள் செய்ய விரும்பினால் மாவட்ட செயலாளர் ஊடாகவோ அல்லது பிரதேச செயலாளர் ஊடாகவோ செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201876
  15. 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி! இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 'வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்' என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது. குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல தொழில் முனைவோர் அதிக அளவில் வருடா வருடம் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கில் உள்ள தனிநபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குத் தொடர்ந்தும் ஒரு தளத்தை வழங்கி வருவதாக யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது. https://www.hirunews.lk/tamil/391505/2025-ஆம்-ஆண்டுக்கான-யாழ்ப்பாண-சர்வதேச-வர்த்தக-கண்காட்சி
  16. அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் adminDecember 22, 2024 கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர். அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது. அதன் போது , அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் , குறிப்பாக மின்சாரம் , படகு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் எமது அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால் , அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இப்பகுதியை அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார். https://globaltamilnews.net/2024/209504/
  17. பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி போராட்டம் adminDecember 22, 2024 யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது , கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/209509/
  18. இராணுவத்தினர் காணியை விடுவிக்காவிட்டால் காணி உறுதியுடன் உள்ளே வருவோம் adminDecember 22, 2024 யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் கூறியுள்ளார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வடபிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் ஈடுபட்டும், மகஜர்களை கொடுத்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நாங்கள் மீண்டும் இதனை வலியுறுத்த வேண்டும் என நாம் எதிர்பார்த்துள்ளோம். முப்படையினரின் அபகரிப்புக்கு அடுத்தபடியாக மதத்தின் பெயராலும் கா ணி அபகரிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான 150 பரப்பு காணியை ஆக்கிரமித்து, மொரட்டுவ பல்கலைக்கழக கட்டடக்கலை நிபுணர் ஒருவர் பௌத்த தூபி ஒன்றை நிறுவியுள்ளார். பாதிக்கப்பட்ட நாம் போராட்டங்களை நடத்தினோம் ஆனால் முப்படை பாதுகாப்புடன் அங்கு பூசைகள் நடக்கிறது. மிக விரைவாக எங்களுடைய காணிகள் எங்களுக்கு வேண்டும். நாட்டினுடைய பொருளாதாரத்தில் விவசாயம், கடற்றொழில் ஊடாக மிகப்பெ ரும் பங்காற்றிய வலி,வடக்கு மண்ணை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால், மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள். காணிகளை மீட்பதற்காக எந்த நிலைக்கும் கீழிறங்க நாங்கள் தயாராக உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் காணி உறுதிகளுடன் காணிகளுக்குள் நுழைவோம் எம்மோடு அனைத்து தரப்பினரும் வரவேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209516/
  19. பியர் உற்பத்திக்காக வடக்கில் இருந்து கொண்டு செல்லப்படும் நெல் adminDecember 22, 2024 பியர் உற்பத்திக்காக வடக்கில் இருந்து பெருமளவான நெல்லை கொள்வனவு செய்து செல்வதாக வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே அரிசி ஆலை உரிமையாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாதமைக்கு காரணம், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் நிர்ணய விலையில் விற்பனை செய்யாமல், அவற்றின் ‘லேபல்கள்’ மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வடக்கு மாகாண விவசாயிகளின் நெல்லை வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பியர் உற்பத்திக்கும் கொள்வனவு செய்கின்றார்கள். அத்துடன் இங்கிருந்து அவர்கள் நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு சென்று திருப்பி எங்களுக்கு அதிக விலைக்கு வழங்குகின்றனர். எங்களுக்கு வங்கிகள் ஊடாக அதிகளவான கடன் வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைக்கின்றது. இங்கு போதியளவு களஞ்சிய வசதிகள் இருக்கும் நிலையில், வங்கிகள் கடன் எல்லையை அதிகரித்து வழங்கினால் எம்மால் விவசாயிகளிடமிருந்து அதிகளவு நெல்லைக் கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். மேலும், நெல் அறுவடைக்கு முன்னராகவே நெல்லுக்கான மற்றும் அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்வதன் ஊடாக இவ்வாறான நெருக்கடி நிலைமையைத் தவிர்க்க முடியும் . இதேவேளை இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் ஏற்கனவே ஆலைகளின் இருப்பிலுள்ள அரிசிகள் தற்போதைய நிலைமைக்குப் போதுமானளவில் இருப்பதாகவும் விலை அதிகரிப்பு இனி இருக்காது. அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அரிசியின் விலை 200 ரூபாவை விட நிச்சயம் குறைவடையும் என தெரிவித்தனர். https://globaltamilnews.net/2024/209519/
  20. யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் : adminDecember 22, 2024 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். நோய் தொற்றுக்கான காரணம் எலிக்காய்ச்சல் என கூறப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும். யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது. லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளான எலிகள். நாய்கள், கால்நடைகளான ஆடுகள்,மாடுகள் , பன்றிகள் போன்றவரின் எச்சங்கள் , கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து , கிணறுகள் , நன்னீர் தேக்கங்கள் , குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கலந்து விடுவதனால் , அந்த நீரினை பயன்படுத்துபவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். அந்த நீரை பருகுவதால் மாத்திரமின்றி , கால்கள் , கைகளில் காயங்கள் உள்ளவர்கள் அந்த நீரினால் கை கால்களை கழுவும் போது , அவர்களையும் நோய் தாக்க கூடும். அது மாத்திரமின்றி கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக கூட நோய் தொற்று ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உண்டு. நோய் அறிகுறிகள் அதிக காய்ச்சல், நடுக்கம் மற்றும் தலைவலி ஆகியவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றிற்கு வழிவகுத்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தும். அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் நோயினை பூரணமாக குணமாக்க முடியும். எனவே காய்ச்சல் தொடர்பில் அசமந்தமாக இருக்காது வைத்தியர்களை நாடி சிகிசிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாதிப்பு அதிகமான இடங்கள். யாழ்ப்பாணத்தில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலையே நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலையுமே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறித்த நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படின் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் இந்நோய் பரவக் கூடிய ஆபத்து இலக்கினரான விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் உதவியுடன் கிராம மட்ட விவசாய குழுக்கள் மூலம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அத்துடன் கடல்நீர் ஏரிகளில் , குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் துப்பரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இத் தடுப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை உட்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. அதேவேளை எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகவும் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட மருந்துகள் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், இந்நோய் தீவிரமாக பரவி வரும் பிரதேசங்களிலுள்ள வைத்திசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. கொழும்பில் இருந்து வந்த விசேட குழு. மத்திய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் குழு இந் நோய் பரம்பலை ஆய்வு செய்வதற்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தது. அக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் , பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுடன் சில பிரதேசங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டிருந்தனர். நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். சுகாதார முறைகளை பேணுதல் மூலம் நோய்த் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும். குறிப்பாக தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்நீரினை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அதாவது, சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல், குளம் குட்டைகள், வெள்ளத்தால் மூழ்கிய கிணறுகள் என்பவற்றில் குளிப்பதையோ , நீந்துவதையோ தவிர்த்துக்கொள்ளல். அந்த நீரை அருந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூட பயன்படுத்த வேண்டாம். கால்களில் செருப்பு அல்லது சப்பாத்து இல்லாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் , சேற்று நிலங்களில் இறங்க வேண்டாம். விவசாயிகள் கூட வயல் நிலங்களில் இறங்கும் போது , சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும். சரியான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நல்ல நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மாத்திரமே எம்மையும் எம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும். https://globaltamilnews.net/2024/209529/
  21. தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருந்த ஒரு கட்சி எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தது? அந்த முடிவுகளின் விளைவாக தமிழ்மக்களுக்கு கிடைத்தவை எவை? கிடைக்காதவை எவை? இந்தக் கேள்விக்கு ஒரு குறியீட்டுப் பதிலைச் சொல்லலாம். தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தால் கட்சியின் நிலையை, கட்சியால் வழி நடத்தப்பட்ட அரசியலின் நிலையை அது குறியீடாக வெளிப்படுத்தும். அந்த சிலையைச் சுற்றியிருக்கும் வளாகம் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான காலம் அதைச் சுற்றி பற்றைகள் புல்,பூண்டுகள் மண்டிக் கிடக்கும். அந்த சிலைக்கு ஏறிப்போகும் உலோகப் படிக்கட்டு துருப்பிடித்துக் கிடக்கிறது. அந்த வளாகத்தின் வாசலில் உள்ள கேற், அதன்பூட்டு எல்லாமே துருப்பிடித்துள்ளன. அவ்வப்போது அந்தச் சிலைக்கு மரியாதை செலுத்தச் செல்லும் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அதைக் குறித்த எந்த விவஸ்த்தையுமின்றி அந்தப் பற்றைகளின் பின்னணியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வளாகத்தைச் சுத்தமாக அழகாகப் பேண வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? கட்சியின் ஸ்தாபகரின் சிலை, அவரை தந்தை என்று அழைக்கிறோம். ஆனால் அந்த சிலையை ஒரு நினைவிடமாக அதற்குரிய மதிப்போடு பேண ஏன் கட்சியால் முடியவில்லை? இது ஒரு குறியீடு. கட்சியின் தற்போதைய நிலையைக் காட்ட இது உதவும். தமிழரசு கட்சி தூர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நிற்கின்றது. கட்சியின் தலைவர் யார் என்பதில் தடுமாற்றம். கடந்த 18ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டம் கட்சி எந்தளவுக்குச் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதனைக் காட்டியது. கட்சிக்குள் ஒன்றை மற்றது பிடித்துத்தின்னும் பகைக் குழுக்கள் தோன்றி விட்டன.இந்த குழுக்களுக்கு இடையிலான பகையானது கட்சியின் வெளி எதிரிகளுடன் உள்ள பகையைவிடவும் மூர்க்கமானதாகவும் பழிவாங்கும் உணர்ச்சி மிக்கதாகவும் காணப்படுகின்றது. கடந்த ஆண்டு தமிழரசுக் கட்சியின் 75 ஆண்டுகளில் மிகத் தோல்விகரமான ஆண்டுகளில் ஒன்று. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்திய ஆண்டு. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சுவரொட்டியில் ஒன்றாகத் தோன்றிய கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளூரில் பிரச்சாரம் செய்யும்பொழுது ஒருவர் மற்றவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள். ஒருவர் மற்றவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். உட்பகை கட்சியை படிப்படியாகத் தின்று கொண்டிருக்கிறது. கட்சி ஒரு கட்டுக்கோப்பான உருகிப்பிணைந்த கட்டமைப்பாக இல்லை. அங்கே கூட்டுணர்வு இல்லை. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குத்தான் அதிக ஆசனங்கள் கிடைத்தன. அதனைக் கட்சி ஒரு பெருமையாகக் கருதுகின்றது. ஆனால் துயரம் என்னவென்றால்,கட்சிக்கு கிடைத்த அதேயளவு ஆசனங்கள் அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்கின்றன என்பதுதான். அரசாங்கத்தின் துணை வெளிவிவகார அமைச்சரும் திருகோணமலைத் தமிழருமாகிய அருண் ஹெமச்சந்திர அண்மையில் ஒர் ஊடக நேர்காணலில் கேட்கிறார் “தமிழ் தரப்பு என்பது இப்பொழுது யார்” என்ற பொருள்பட. ஏனென்றால் அரசாங்கத்திடம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் மொத்தம் எட்டுப் பேர்.இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் மொத்தம்10 பேர்தான். அர்ஜுனா எந்தப் பக்கம் நிற்பார் என்று தீர்மானமாகக் கூறமுடியாது. எனவே மொத்தத் தமிழ் தேசிய பிரதிநிதித்துவம் பத்தாகச் சுருங்கியுள்ளது. அதனால்தான் அருண் ஹேமச்சந்திர கேட்கிறார்,எது தமிழ் தரப்பு என்று. அதாவது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்ற பொருளில். தமிழரசியலுக்கு குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்கும் ஒரு கட்சி என்று பெருமை பாராட்டிக்கொள்ளும் ஒரு கட்சியானது இதற்குப் பதில்சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 ஆசனங்களை கொண்டிருந்தது. அது இப்பொழுது பத்தாகச் சுருங்கிவிட்டது. இது தோல்வி. ஆனால் கட்சிக்காரர்கள் கடந்த தேர்தலில் கிடைத்த அற்ப வெற்றியைக் கொண்டாடுவதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய ஆசனங்கள் குறைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக தமிழ்மக்கள் மேலும் மெலிந்திருக்கிறார்கள். கடந்த மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் முழு நாட்டிலிருந்தும் வெளியேறியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை விட அதிகம். இதில் எத்தனை பேர் தமிழர்கள்?அவர்கள் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அது தமிழ்த் தேசியவாத அரசியலின் தோல்விகளில் ஒன்று. வாக்காளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தன்னைத் தலைமை தாங்கும் சக்தியாகக் கருதும் தமிழரசுக் கட்சி இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை;தேசத்தைத் திரட்டும் அரசியலை ஏன் முன்னெடுக்கவில்லை? மாறாக,கட்சிக்காரர்களே ஒருவர் மற்றவருக்கு எதிராக கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது? மூத்த உறுப்பினராகிய சிவஞானத்தை, இளம் நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ஜுனா “நீங்கள் யார்?” என்று கேட்கும் ஒரு நிலைமை தமிழரசியலில் ஏன் தோன்றியது? இந்த தோல்விகள் அனைத்துக்கும் முழுப்பொறுப்பு முதலாவதாக சம்பந்தர். இரண்டாவதாக சுமந்திரன். மூன்றாவதாக மாவை. நாலாவதாக,இவர்கள் அனைவருடைய செயல்களையும் ஆதரித்த அல்லது தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டு எதிர்க்காமலிருந்த எல்லா மூத்த உறுப்பினர்களும் பொறுப்பு. சிறீதரனும் பொறுப்பு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சித் தொண்டர்கள் சிறீதரனின் கையில் கொடுத்த பொறுப்பை அவர் சரியாகக் கையாளவில்லை. அவர் எதற்கோ தயங்குகிறார். இதுதான் 75 ஆவது ஆண்டு முடிவில் கட்சியின் நிலை. கட்சிக்குள் உறுதியான தலைமைத்துவம் இல்லை. கட்சி இரண்டாகி நிற்கிறது. வாக்காளர்களின் இன உணர்வுக்கு நெருக்கமாக ஒரு பகுதி. கொழும்பை நோக்கிச் சாயும் இன்னொரு பகுதி. தமிழரசு கட்சிக்குள் காலாகாலமாக இந்த இரண்டு போக்குகளும் இருந்தன. ஒரு போக்கு வாக்காளர்களுக்கு நெருக்கமாக இருப்பது. இன்னொன்று கொழும்பை நோக்கிச் சாய்வது. இந்த இரண்டு போக்குகளினதும் கலவைதான் தமிழரசுக் கட்சி. யாழ்.பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் தலைவராக இருந்த கலாநிதி ராமகிருஷ்ணன் சொல்வாராம் “ஒரு பனங்காட்டானைத் தலைவனாகத் தெரிந்தால் அவர் வாக்காளர்களின் சொற் கேட்பார்” என்று. அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பனங்காட்டான் என்று கருதியது யாழ்ப்பாணத்தவர்களை மட்டுமல்ல. தன் வாக்காளர்கள் மத்தியில் வீடு வாசல், சொத்துக்களைக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதியைத்தான். கொழும்புமையத் தமிழ்த் தலைமைகளுக்கு எதிராகவே அவர் அவ்வாறு கூறுவாராம். இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை இட்டுநிரப்பி கட்சியின் தலைமைப் பீடத்தை நிர்வாகித்து வந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையிலான மோதல் கட்சியை உருக்குலைத்து விட்டது. இது ரெண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலின் விளைவு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் சுமந்திரன் கட்சிக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டார். அந்த தோல்வியை அவர் நாகரீகமாக ஏற்றுக்கொண்டது போல வெளியில் காட்டிக்கொண்டார். ஆனால் அவர் அந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ளவில்லை என்பதைத்தான் பின்வந்த நடவடிக்கைகள் நிரூபித்தன. ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்தார்கள்; ஆண்டின் முடிவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். கட்சிக்குள் தலைமைப் போட்டியை அவர் கையாண்ட விதத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்ல என்பதை அந்தத் தீர்ப்புக் காட்டியதா? ஆனால் இரண்டு தோல்விகளையும் அவர் ஜீரணித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.அவற்றிலிருந்து அவர் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த 18ஆம் திகதி வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதைத்தான் உணர்த்துகின்றது. அதாவது கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில் நிற்கப்போகிறது என்று தெரிகிறது. மருத்துவர் சிவமோகனும் புதிதாக ஒரு வழக்கைப் போட்டிருக்கிறார். எனவே கடந்த 75 ஆண்டுகளையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி ஒரு வெற்றி பெறாத கட்சிதான். அது கட்சியாகவும் தோற்றுவிட்டது. தமிழ் மக்களையும் தோற்கடித்துவிட்டது. சம்பந்தர் இறக்கும்பொழுது தோல்வியுற்ற தலைவராகவே இறந்தார். யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அவருடைய பூதவுடலுக்கு கிடைத்த இறுதி மரியாதை அதற்குச் சான்று. ஆனால் அதிலிருந்தும்கூட கட்சியின் மூத்த தலைவர்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 15 ஆண்டுகாலம் என்பது தமிழரசுக் கட்சி மட்டுமல்ல பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்ளாத ஒரு காலம்தான். அவர்கள் தங்கள் கட்சிகளையும் தோற்கடித்திருக்கிறார்கள்; தமிழ் மக்களையும் தோற்கடித்து விட்டார்கள். தேசத்தைத் திரட்டாவிட்டால் கட்சிகளையும் திரட்டமுடியாது என்பதனை நடந்துமுடிந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. இப்படிப்பட்டதோர் தோல்விகரமான அரசியல் பின்னணியில், தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு என்பது அது தன் இறுதி இலட்சியமாகிய சமஸ்டியை வெல்லத்தவறிய மற்றொரு ஆண்டுதான். அதாவது,சமஸ்ரியை அடையாத 75ஆவது ஆண்டு. கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒராண்டு. தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் மேலும் சுருங்கிப்போயிருக்கும் ஒராண்டு. நிச்சயமாக அது கொண்டாடப்படத்தக்க பவள விழா ஆண்டு அல்ல. https://www.nillanthan.com/7026/
  22. கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது December 19, 2024 ஷோபாசக்தி 18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான புதுப்பித்துக்கொள்ளும் மொழியும் லாகவமும் மெல்லிய குரலில் வெளிப்பட… அவரிடம் நடந்தது இந்த உரையாடல். வெகு நாளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள்! தமிழ்நாட்டுக்கு வருகை தருவது எப்போதும் மகிழ்ச்சி தான். தமிழில் நான் நடித்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அதுவும் போக 27 வருஷங்கள் நான் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் இப்போது வெளியாகிறது. அம்மாவை வெகு நாளுக்குப் பிறகு சந்திக்கப் போகும் சந்தோஷமும் கூடி வருகிறது. வேறென்ன? கொஞ்சம் நிறைவான பயணம்தான் இது. சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். சிவப்புக் கம்பள வரவேற்பை ஹாலிவுட்டில் பெற்றுவிட்டீர்கள். இதெல்லாம் எதிர்பார்த்ததுதானா? சினிமா பிடிக்குமென்பதால் சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. `சுவரில்லாத சித்திரங்கள்’ வந்த போது எனக்கு 12 வயதிருக்கும். இந்தியாவுக்கு வந்து பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமிருந்தது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது யாவரும் அறிந்ததுதான். கலைஞர் திரை எழுத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தேன். கல்யாண வீடுகளிலும் கோயில் திருவிழாவிலும் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே இருந்த ‘மனோகரா’, ‘பராசக்தி’ வசனங்களை மறப்பதற்கில்லை. பத்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன். நாட்டில் ஏற்பட்ட சூழலில் புலம் பெயர்ந்துவிட்டேன். அப்புறம் எல்லாவற்றுக்கும் பெரிய இடைவெளி. புதிய நாடு, புதிய கலாசாரம். திடீரென 47-வது வயதில் ‘தீபன்’ படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போய் திரைப்படங்களில், நாடகங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சினிமாவைவிட நாடகத்தின் டிக்கெட் விலை அதிகம். நாங்கள் 30 நாள்கள் தொடர்ந்து நாடகம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறோம். பாண்டிச்சேரியின் குமரன் வளவன் அங்கே வந்து நல்ல நாடகங்களைப் போடுகிறார். புரிசை சம்பந்தன்கூட இங்கே வந்து கூத்து கட்டுகிறார். அதை பிரான்ஸ் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். எப்படிப் புலம்பெயர் வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள்? 31 வருஷங்களாக பிரான்ஸில் இருக்கிறேன். பிரான்ஸுக்குப் போக வேண்டும் என்பது இலக்கு அல்ல. ஏதாவது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த ஒரே தீர்வு. இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்த காலம், அங்கேயிருந்து வெளியாக வேண்டும். இப்போது பிரான்ஸிலும் இனவாதம் கூடிவிட்டது. இவ்வளவு படித்தவர்கள் இருந்தும் அமெரிக்காவில் ட்ரம்ப்தான் மீண்டும் வந்திருக்கிறார். ஐரோப்பா முழுக்க வலதுசாரிகள் வலுக்கொண்டு இருக்கிறார்கள். பிரான்ஸிலும் அதிதீவிர வலதுசாரிகள்தான் இப்போது பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் அதைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பிரான்ஸின் பெரும்பான்மையான மக்கள் வலதுசாரிகளைத் தான் ஆதரிக்கிறார்கள். `வெளிநாட்டவர்களை விரட்டுவோம்’ என்றுதான் தேர்தலில் நிற்கிறார்கள். ட்ரம்பும் அமெரிக்காவில் வெளிநாட்டவரை விரட்டுவோம், மதில் கட்டு, சுவர் எழுப்பு என ஆரம்பித்து விட்டார். இந்தச் சூழலில்தான் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் படித்துவிட்டு தொழிலுக்குப் போனவர்கள் கிடையாது. இந்த நாடுகள் விரும்பிக் கூப்பிட்டுப் போனவர்களும் கிடையாது. நாங்களாக போய் மூடிய கதவுகளை முட்டித் திறந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வேறு வழியில்லை… அடுத்த தலைமுறையும் அவர்களின் இனவாதத்தைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எங்கள் அளவுக்கு அவர்கள் கஷ்டப்பட வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு அவர்களே தங்களை பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி பிரெஞ்சுக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமே! அவர்களுக்கு எல்லோரும் கறுப்பர்கள்தானே! இடதுசாரிகளும் சோஷலிஸ்ட்களும் செல்வாக்காக இருந்த காலம் ஒன்றிருந்தது. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவிட்டன. இங்கே தொடர்ந்து பிரச்னை இல்லாமல் நாள்களைக் கடத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போனதை எப்படி உணர்ந்தீர்கள்? யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மக்களால் கைவிடப்பட்டு இருக்கின்றன. நான் பிறந்த அல்லைப்பிட்டியில் 10 சதவிகித மக்களே இருக்கிறார்கள். நாய்கள்தான் அதிகம் திரிகின்றன. ஊரைப் பார்த்ததும் பெரிய வெறுமை வந்து தாக்கியது. அந்த ஊரில் யுத்தத்திற்கு முன்னால் இன்பமான நாள்களைப் பார்த்த கடைசித் தலைமுறை நான்தான். இரவுக் காட்சியை அடுத்த ஊரில் பார்த்துவிட்டு நடந்து வந்த பின்னிரவு நேரங்கள் அதிகம். விடிய விடிய நடந்த திருவிழாவோடு பார்த்த யாழ்ப்பாணம்தான் மனதில் நிறைந்திருக்கிறது. யுத்தத்தின் வெறுமை மக்கள் முகத்திலும் ஆன்மாவிலும் உறைந்திருக்கிறது. எல்லா நம்பிக்கைகளும் விழுமியங்களும் உடைந்து சிதறிய மக்களைப் பார்த்தேன். சர்வ நிச்சயமாக இது 32 வருஷத்திற்கு முன்னால் நான் பார்த்த ஊரில்லை.” புது அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் நம்பிக்கை என்ன? இலங்கை சுதந்திரமடைந்த பிறகு ஆட்சி செய்தவர்கள் பிரபுத்துவப் பின்புலத்தில் வந்தவர்கள். அவர்களது உறவினர்களாலும் குடும்பத்தாலும் மட்டுமே இலங்கை ஆளப்பட்டு வந்தது. முற்றுமுழுதான ஊழல் ஆட்சி, முழுவதுமாக பௌத்த பிக்குகளின் கட்டளைக்கு அடிபணிந்த ஆட்சி என்றுதான் இரண்டு கட்சிகளும் இருந்தன. இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். அவர்கள் ஜே.வி.பி எழுச்சியின் போது சிங்கள மக்களையும் கொன்றார்கள். இதுதான் இதுவரையிலான இலங்கை வரலாறு. அநுர அவ்வாறான பின்புலத்தைக் கொண்டவர் அல்ல. எளிய விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவத் தோழர்களும் சேர்ந்து எழுப்பிய கட்சி அவருடையது. 50 வருஷத்திற்கு மேலாக இருக்கிற கட்சி. இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது நல்லது என்றே கருதுகிறேன். இலங்கையில் சிங்களர்கள் தவிர்த்து இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரும் வாழ்கிறார்கள். இந்த இன அடையாளங்களை அழித்து ஒழித்து எல்லா இனங்களையும் ஒரே தேசிய இனத்திற்குள் கரைக்க ஒரு முயற்சி நடக்குமோ என்ற சந்தேகமும் இந்த அரசின் மீது இருக்கிறது. எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சிறுபான்மையினர் நசுக்கப்பட்டதுதான் வரலாறு. இனி சிறுபான்மையினரின் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், சமத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றுக்கான நல்ல அணுகுமுறையைச் செயல்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாக இருக்கிறது. இவர்களை நம்பித்தான் தமிழ் மக்களும் எப்போதும் நடக்காத அளவுக்கு யாழ்ப்பாணத்திலேயே ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக மற்றவர்களை நம்பி ஒன்றும் நடக்கவில்லை. பொருளாதாரச் சரிவு தாண்டி ஒரு நல்ல ஆட்சி தர மாட்டார்களா என எல்லோருமே ஏங்குகிறார்கள். இதுவரை இவர்கள் இனவாதம் பேசவில்லை. எதையும் செய்யும் கட்டுக்கடங்காத அதிகாரம் இருக்கிறது. செய்வார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்! புலிகள் இல்லாமல்போவார்கள் என்பதைக் கற்பனை செய்தாவது பார்த்தீர்களா? கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாகவே இருக்கிறது. இந்திரா காந்தி இலங்கைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் எனவும், இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கூப்பிட்டு ஆயுதப் பயிற்சியும் பணமும் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை வருமென்றும், அதே மாதிரி இந்திய ராணுவம் திரும்பப் போய்விடும் என்றும் நம்பவே இல்லை. பிரேமதாசாவிற்கும் புலிகளுக்கும் ஒப்பந்தம் வரும் என்று நம்பவே இல்லை. விடுதலைப்புலிகள் முற்றும் முழுதாக அழிந்து போவார்கள் என யாரும், யாரும் நம்பவே இல்லை. ராஜபக்‌ஷேக்கள் நாட்டை விட்டு ஓடுவார்கள் என நம்பவே இல்லை. கோத்தபய இருந்த வீட்டைச் சூறையாடுவார்கள் என நம்பவே இல்லை. அநுர இப்படி பெரும்பான்மையில் வருவார் என நம்பவே இல்லை. நம்ப முடியாத பல விஷயங்கள் 40 வருடத்தில் நடந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். நான் ஈழத்திலிருந்து வெளிவந்து 32 வருஷங்களாகிவிட்டன. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது இன்றைய தலைமுறை இளைஞர்கள்தான். இத்தனை வருட யுத்தத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இழப்பு, வன்மம், பிரச்னைகள் இருக்கின்றன. இதிலிருந்து மீள வேண்டும். சினிமா, நாடகம், பயணங்கள் என உருமாறி இருக்கிறீர்கள். எழுத்து குறைந்துவிட்டதா? நான் மேற்கொள்ளும் எல்லாக் கலைகளுக்கும் நடுவில் ஒரு தொடர்பு இருக்கிறது. எனக்குக் கலையே அடிப்படை. சினிமாவில் ஒரு பாத்திரத்தின் அமைப்பைத் தரும்போது ஓர் எழுத்தாளராக என்னால் அதை மெருகேற்ற முடியும். நாடகங்களிலும் அதற்கான நியாயத்தைச் செய்கிறேன். பெரிய வேறுபாடு இல்லை. அடிப்படையில் எழுத்தாளனாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். இத்தனை வருட வாழ்வில் பெற்ற சாரம்தான் என்ன? யுத்தத்திலும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. குரேஷிய பிரதமர், ‘பத்து நாள் யுத்தம் புரிவதைவிட பத்து வருஷம் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது’ என்றார். அதுதான் சத்தியமான உண்மை. இன்றைக்கு உலகம் முழுக்க யுத்தங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை ஒருபோதும் மக்களுக்கு நியாயத்தைத் தேடித் தராது என நிச்சயமாக நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தொடங்கப்பட்ட ஆயுதப்போராக இருந்தாலும் ஆயுதம் என்பது அழிவைத் தரக்கூடியதே. இதுவே கற்ற பாடம். காந்தியார் சொன்னது போல ‘கொள்கையில் எதிர்த்து நிற்போம்; ஆனால் யாரையும் வெறுக்க வேண்டாம்’ என்பதுதான் இறுதியில் எனக்கும் தோன்றுகிறது. https://www.shobasakthi.com/shobasakthi/2024/12/19/கற்பனையே-செய்யமுடியாத-வி/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2WXU10w--1b1aIiUMzeg__BcxV7r2aY8u6nQcPJ__N4YtWZS1T15wvZsY_aem_wWON2rYSeJEg68HhNKwykg
  23. நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀 நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும். - விடுதலை 2 : விமர்சனம்! Dec 21, 2024 10:26AM IST பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா? நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது. இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா? தகவல்களின் அடிப்படையில்..! தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது. அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது. இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர். செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள். முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர். பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார். அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி. தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. அபார உழைப்பு! ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன். அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது. பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன. மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை. இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம். மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை. இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம். இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று. ‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர். ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார். ’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது. சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன. அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன. இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம். முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். ’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும். அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது. ‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது. என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது. நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது. ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை. ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..! https://minnambalam.com/cinema/vetri-maran-vijay-sethupathi-viduthalai-2-movie-review/
  24. கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன் December 21, 2024 0 கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=304156
  25. புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... December 21, 2024 01:24 pm புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே. சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை. முதல் தடவையாக இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசு பதவி ஏற்றி இருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்ப்பட்டு வருகிறார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமையை முன் வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன் வைக்க வேண்டும் பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயல்பட முடியாது. எனவே, அனைவரையும் ஒன்று படுமாறு அழைப்பு விடுவதாகவும் இதன் போது குறிப்பிட்டார். இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2013 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தமிழ்நாடு கோரிக்கை முன்வைத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது. அதேபோல தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது. எனவே, அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197636

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.