Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்குவதாகவும் ஊழியர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கு தொா்பில் தீர்ப்பு வழங்கிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களும் அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்ள்ளது. எனினும் அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதுடன் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/204557/
  2. புள்ளி போடும் புதிய முறையை ஆமோத்தித்த அனைவருக்கும் நன்றி. இன்றிரவு புள்ளிகளின் பட்டியல் மாற்றப்படும்!
  3. பூமியைத் தாங்கும் ஆமைகள் போல அவர்கள் எல்லோரையும் தாங்கிப் பிடிப்பார்கள்!
  4. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் இந்த முறை மூலம் புள்ளிகள் கொடுப்பது பாகுபாடான அனுகூலத்தை (unfair advantage) முதல் சுற்றுப் போட்டிகளில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும் இங்கிலாந்து இரண்டாவதாகவும், குழு C வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவதாகவும் கணித்தவர்களுக்குக் கொடுக்கின்றது என்பதாக ஒருவர் முறைப்பட்டிருந்தார். இங்கிலாந்து-தென்னாபிரிக்கா போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டது சரியில்லை என்பது முறைப்பட்டவரின் வாதம். எனவே குழு B மற்றும் குழு C போட்டியில் இருந்து, அவற்றில் வெல்லும் அணியின் குழுவுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்கலாம் என்று நினைக்கின்றேன். இதன் பிரகாரம் அவுஸ்திரேலியா விளையாடும் போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்திருந்து, அவுஸ்திரேலியா வென்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா தோற்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது. அதாவது, போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. இப்படி மாற்றும்போது பின்வரும் போட்டிகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புள்ளிகளை நீக்கவேண்டி ஏற்படும். 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோர் புள்ளிகளை இழப்பார்கள். 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகளை இழப்பார்கள். சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான் ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!
  5. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப்பினதும், நிக்கொலஸ் பூரனினதும் அதிவேகமான துடுப்பாட்டத்தால், 10.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.
  6. பிரித்தானிய நேரப்படி நாளை சனி (22 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (C2) USA எதிர் WI மூவர் மாத்திரமே போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் NZ வீரப் பையன்26 NZ சுவி IRL நிலாமதி NZ குமாரசாமி NZ தியா IND தமிழ் சிறி NZ புலவர் IND P.S.பிரபா WI நுணாவிலான் IND பிரபா USA PAK வாதவூரான் PAK ஏராளன் IND கிருபன் PAK ரசோதரன் NZ அஹஸ்தியன் PAK கந்தப்பு NZ வாத்தியார் WI எப்போதும் தமிழன் NZ நந்தன் IND நீர்வேலியான் WI கல்யாணி PAK கோஷான் சே NZ இப் போட்டியில் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா? 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, இந்தியா (A1) எதிர் பங்களாதேஷ் (D2) IND எதிர் BAN 17 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் SL P.S.பிரபா IND நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் IND ரசோதரன் IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் IND நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி SA கோஷான் சே IND இப் போட்டியில் இந்தியா வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?
  7. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கினதும் டேவிட் மில்லரினதும் அதிரடி ஆட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் போனதாலும், வேகமாக அடித்தாடிய ஹரி புரூக்கும் லியல் லிவிங்ஸ்ரனும் இறுதிவரை நின்று ஆடாததாலும் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @வாத்தியார் அண்ணாவுக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது. 45வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 101 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கந்தப்பு 91 6 நந்தன் 91 7 கோஷான் சே 91 8 நீர்வேலியான் 87 9 கிருபன் 86 10 எப்போதும் தமிழன் 86 11 P.S.பிரபா 85 12 குமாரசாமி 84 13 தமிழ் சிறி 84 14 வாத்தியார் 84 15 ஏராளன் 83 16 அஹஸ்தியன் 83 17 வாதவூரான் 82 18 நிலாமதி 81 19 தியா 80 20 வீரப் பையன்26 78 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 73
  8. ஓங்கல் நடைக்குப் போயிருந்ததால் போட்டியைப் பார்க்கவும் இல்லை. போன இடத்தில் சிக்னலும் இல்லை! இனித்தான் புள்ளிகளின் சிக்கல் சிடுக்குகளைப் பார்க்கவேண்டும்!
  9. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களையே எடுத்தது. பற் கமின்ஸ் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது hat trick ஐ T20 உலகக்கிண்ணப் போட்டியில் எடுத்து சாதனைப் பட்டியில் சேர்ந்துகொண்டார். பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, டேவிட் வார்னரின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களுடன், 11.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. முடிவு: அவுஸ்திரேலியா அணி DLS முறையில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்காவை வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது
  10. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா (B2) எதிர் பங்களாதேஷ் (D2) AUS எதிர் BAN 10 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பங்களாதேஷ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்காவை வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் AUS வீரப் பையன்26 SL சுவி ENG நிலாமதி AUS குமாரசாமி AUS தியா AUS தமிழ் சிறி AUS புலவர் SL P.S.பிரபா ENG நுணாவிலான் SL பிரபா USA ENG வாதவூரான் ENG ஏராளன் ENG கிருபன் AUS ரசோதரன் ENG அஹஸ்தியன் AUS கந்தப்பு ENG வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் ENG நீர்வேலியான் ENG கல்யாணி SA கோஷான் சே AUS இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்? 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA 10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இருவர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா ENG தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் SL ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் SA எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி ENG கோஷான் சே ENG இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?
  11. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடியான 53 ஓட்டங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. 43வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 97 2 ரசோதரன் 97 3 சுவி 90 4 ஈழப்பிரியன் 89 5 கோஷான் சே 89 6 கந்தப்பு 87 7 நந்தன் 87 8 கிருபன் 84 9 எப்போதும் தமிழன் 84 10 நீர்வேலியான் 83 11 குமாரசாமி 82 12 தமிழ் சிறி 82 13 P.S.பிரபா 81 14 அஹஸ்தியன் 81 15 வாதவூரான் 80 16 வாத்தியார் 80 17 நிலாமதி 79 18 ஏராளன் 79 19 வீரப் பையன்26 78 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  12. ஈழப்பிரியன் ஐயாவின் பேத்தி விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு வரவேண்டும்
  13. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களுடன், 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த @வாத்தியார்க்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குத் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyani க்குப் புள்ளிகள் கிடையாது
  14. தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்! June 20, 2024 ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவா் கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய நோ்காணல்; கேள்வி – பிரதான ஜனாதிபதி வேட்பாளா்கள் மூவருமே அடுத்தடுத்து யாழ்ப்பாணம் வருகிறாா்கள். முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்கிறாா்கள். வாக்குறுதிகளை வழங்குகின்றாா்கள். இவற்றை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்? பதில் – இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மூன்று. முதலாவதாக, தென்னிலங்கையில் இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இம்முறை இருக்கிறது. அதனால், வடக்கு கிழக்கு மக்களுடைய வாக்குகளைப் பெற வேண்டிய தேவை இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கின்றது. இரண்டாவதாக, அவா்களுடைய வாக்குறுதிகள், தமிழ்க் கட்சிகளுடன் அவா்கள் உரையாடும் விடயங்களைப் பொறுத்தவரையில் 13 என்ற விடயத்தைத்தான் அவா்கள் பிரதானமாகப் பேசுகின்றாா்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இந்த 13 என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இதனை ஜனாதிபதி வேட்பாளா்கள் ஒரு பிரகடனமாக வெளிப்படுத்துவது என்பது ஒரு அபத்தமான அரசியல் கலாசாரம். அதேவேயைில், சமஷ்யை தோ்தல் விஞ்ஞானங்களில் வெளிப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் மாகாண சபைகளைக் கோருவது, அதற்கான தோ்தலை நடத்துமாறு கேட்பது, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவது எல்லாம் மோசமான அரசியல் அணுகுமுறையாகவே கருதப்பட வேண்டும். கேள்வி – யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுமே இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும், 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றாா்கள். இதனை தமிழ்த் தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்த முடியாதா? பதில் – இதில் முக்கியமான ஒரு புரிதல் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அவா்களைப் பொறுத்தவரையில் எத்தனையோ பேச்சுவாா்த்தைகள், எத்தனையோ உத்தரவாதங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் பல காலப்பகுதிகளில் சந்தித்திருக்கின்றாா்கள். அதனால், இந்தத் தீவுக்குள் இனநெருக்கடிக்கான தீா்வைக் காண்பது சாத்தியமற்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றாா்கள். இனப்பிரச்சினை என்பது ஒரு சா்வதேசப் பிரச்சினை என்பதுதான் அதன் அடிப்படை. நிச்சயமாக ஒரு பிராந்தியத் தளத்தில் நாட்டின் எல்லைக்கு வெளியேதான் இந்தப் பிரச்சினைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது. கடந்த காலங்களில் பதவிக்கு வந்தவா்கள் தமது உத்தரவாதங்களை கைவிட்டுச் சென்றமைதான் இதற்குக் காரணம். இனப்பிரச்சினை என ஒன்றுள்ளது என இவா்கள் இப்போதுதான் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றாா்கள். இவா்களுடைய இந்த அணுகுமுறை குறித்த புரிந்துணா்வு எமது மக்களிடம் இருக்கியது என்பதுதான் என்னுடைய அவதானிப்பு. கேள்வி – கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தோ்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை சிங்க இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலையைக் காணமுடியவில்லை என்ற கருத்து ஒன்றுள்ளது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்? பதில் – அதனை நோக்கி இந்தத் தோ்தல் களம் இதுவரையில் விரிவாக்கம் பெறவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போதும் அதற்கான ஒரு களம் தோற்றுவிக்கப்படும். உதாரணமாக, தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் தொடா்பில் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்களையிட்டு, தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் எதிா்ப்புக்காளல் அவா் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் ஒரு நிலை ஏற்படலாம். இது குறித்த சில செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. தோ்தல் களம் விரிவடையும்போது இவ்வாறான நிலையையை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு நிா்ப்பந்தம் இந்த ஜனாதிபதி வேட்பாளா்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீா்வை வழங்க முன்வருகின்ற எந்த வேட்பாளரும் தோற்கடிக்கப்படுகின்ற ஒரு நிலை தென்னிலங்கையில் இருந்திருக்கின்றது. அதனால், அது குறித்த ஒரு எச்சரிக்கை இந்த மூன்று வேட்பாளா்களிடமும் இருக்கும். ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலை இதுவரையில் உருவாகாத ஒரு நிலை இருக்கின்றது என்பது உண்மைதான். கேள்வி – தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து தமிழ் அரசியல் பரப்பில் இப்போது முதன்மைப்படுத்தப்படுகின்றது. இது ஒரு கோமாளிக்கூத்து என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன் தெரிவித்திருக்கிறாா். இது குறித்த உங்கள் பாா்வை என்ன? பதில் – இது முதிா்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியல் தளத்தில் இருப்பவா்கள் அதற்குரிய நாகரீகத்துடன் சொற்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும். அவ்வாறான நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை அவ்வாறான வாா்த்தைகளால் அளவீடு செய்வது என்பது அறிவியல் ரீதியாக இருக்கின்ற ஒரு சமூகத்துக்கு ஒவ்வாமையானதாக இருக்கலாம். அந்த உரை எதனைக் காட்டுகிறது என்றால், அரசியலின் முதிா்ச்சியற்ற தன்மை, அதனுடைய பலவீனம், அது சாா்ந்திருக்கக்கூடிய உணா்ச்சிகரமான எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் அந்த உரை. அதனைவிட அதன் உண்மைத்தன்மையை நோக்கி, அதன் நியாயத்தன்மையை நோக்கி விவாதங்களை முன்வைகக்கூடிய திறன் அந்தத் தரப்புக்களிடம் இல்லை என்கதைத்தான் அது காட்டுகிறது. இதனைவிட, ஈழத் தமிழா்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட ஆயுத, அரசியல் போராட்டத்துக்குள்ளால் பயணித்தவா்கள். தென்னிலங்கையின் அரசியலோடு சோ்ந்து 15 வருடகாலமாக அவா்கள் பயணம் செய்திருக்கின்றாா்கள். இந்தப் பயணத்தில் ஈழத் தமிழா்கள் எந்தப் பயனையும் அடையவில்லை என்பதனால், ஒரு புதிய – தந்திரோபாயமான வழிமுறையை அவா்கள் சிந்திப்தென்பதை அந்த வாா்த்தைக்குள் அடக்கிவிடலாமா என்பது முக்கியமான ஒரு அம்சம். கேள்வி – பொது வேட்பாளா் என்ற விடயத்தின் பின்னணியில் தமிழ் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு பிரதானமாக இருக்கின்றது. இந்த சிவில் சமூகங்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்? பதில் – கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் பயணம் செய்திருக்கின்றாா்கள். அவா்கள் நம்பிக்கையுடன் அந்த அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளைச் செவிசாய்த்திருக்கின்றாா்கள். போரை நடத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். இவ்வாறு அனைத்துத் தளங்களிலும் அந்தவகையான சாதகமான நிலையும் ஏற்படவில்லை என்ற எண்ணத்துடன்தான் சிவில் அமைப்புக்கள் கூட்டியைவாகச் செயற்படவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. https://www.ilakku.org/தமிழ்-பொது-வேட்பாளா்-ஒரு/
  15. சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு June 20, 2024 “தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு செல்லாக்காசு” என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடா்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிறீகாந்தா, “பொது வேட்பாளர் விடயத்தில் நாங்கள் ஓர் உறுதியான முடிவில் இருக்கிறோம். தமிழ்த் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பொது வேட்பாளர் நிச்சயமாக ஓர் அரசியல் கட்சி சார்ந்தவராக அல்லது அரசியல் கலப்பு உள்ளவராக இருக்கமாட்டார். இந்த விடயத்தில் நாங்கள் மிகஅவதானமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டாா். “பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்கள் தயார் என ஏற்கனவே அறிவித்திருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும், அனந்திக்கும் நிச்சயமாக இந்த வாய்ப்புக்கிட்டாது. பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கும் தராதரத்தின் அடிப்படையில் பலர் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயத்தில் சரியான நேரத்தில் – சரியான தீர்மானங்களை நாங்கள் மேற்கொள்வோம். சிவாஜிலிங்கத்துக்கும் அனந்திக்கும் இப்போது இந்த விடயம் தேவையற்றது” என்றும் rிறீகாந்தா தெரிவித்தாா். “சுமந்திரன் பொது வேட்பாளர் விடயத்தை முற்றுமுழுவதுமாக எதிர்க்கிறார். அதற்குக் காரணம் உண்டு. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு அவர் தலைமையிலான அணி முடிவெடுத்து விட்டது. அது எப்போதோ முடிந்தவிடயம். அதனை நான் உறுதியாகக் கூறுவேன். இந்த விடயத்தில் தலைவர் சம்பந்தன் இப்போது ஒரு செல்லாக்காசு. அவரால் எதையும் செய்யமுடியாது” என்றும் சிறீகாந்தா மேலும் தெரிவித்தாா். https://www.ilakku.org/sumanthran-has-decided-to-support-sajith-premadasa-srikanta/
  16. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்பிப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் அனைவரின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடக்கில் உயர்பாதுகாப்பு பகுதியில் காணி விடுவிப்புக்கு குறித்த நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளன. மேலும், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கப்படுவது குறித்து மேலும் கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/ஐநா-மனித-உரிமைகள்-பேரவைய/
  17. இப்படித்தான் புள்ளிகள் வழங்கப்படும்! முதல் சுற்றில் குழுநிலைப் போட்டிகளில் B, C இல் சரியான வரிசையைக் கணித்தவர்களுக்கு போனஸ் புள்ளிகள் கிடைக்கின்றன. சரியான வரிசையைக் கணிக்காதவர்களுக்கு அணிகள் வென்றால் புள்ளிகள் கிடைக்கும். எனவே முடிந்தளவு பலன்ஸ் செய்ய புள்ளிகள் கொடுத்துள்ளேன்.
  18. ஒரு சதம் என்றாலும் உழைத்துக் கூலி வாங்கவேண்டும் என்ற கொள்கைதான்!
  19. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (20 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (C2) ENG எதிர் WI 10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். @வாத்தியார்மாத்திரம் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்துள்ளார். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ENG வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா ENG தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் WI எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி NZ கோஷான் சே ENG இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்? 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND 16 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தால் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 03 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா IND நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் IND கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் IND நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே IND இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?
  20. யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார். லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன். இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின் மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை, Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார். தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல. கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது, https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw
  21. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அண்ட்ரியஸ் கவுஸின் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களுடன் வெற்றியை அண்மித்தாலும், ஹார்மிற் சிங்கின் விக்கெட் போனபின்னர் இறுதி இரண்டு ஓவர்களில் தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் அடித்தாட முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. 41வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 93 2 ரசோதரன் 93 3 சுவி 86 4 ஈழப்பிரியன் 85 5 நந்தன் 85 6 கோஷான் சே 85 7 கந்தப்பு 83 8 கிருபன் 80 9 எப்போதும் தமிழன் 80 10 நீர்வேலியான் 79 11 குமாரசாமி 78 12 தமிழ் சிறி 78 13 வாத்தியார் 78 14 P.S.பிரபா 77 15 ஏராளன் 77 16 அஹஸ்தியன் 77 17 வாதவூரான் 76 18 நிலாமதி 75 19 வீரப் பையன்26 74 20 தியா 74 21 புலவர் 72 22 கல்யாணி 71 23 நுணாவிலான் 70 @suvy ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதுதான் இன்றைய விஷேசம்
  22. @வாத்தியார், நாளைக்கு மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்👻
  23. கொஞ்சம் சிக்கலான பிரச்சினைதான்.. பாகுபாடு இல்லாமல் தீர்வைக் கொடுக்கமுடியாது! நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து அரசாங்கத்திற்கு வரிகட்டி, வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு உதவிப்பணம் போகவும், அவர்கள் சுற்றுலாவுக்குப் போகவும் உதவுவது மாதிரி சிலருக்கு புள்ளிகள் கொடுக்கவுள்ளேன்😎
  24. சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (19 ஜூன்) முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் தென்னாபிரிக்கா (D1) USA எதிர் SA 12 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் தவறான கணிப்பின் மூலம் இந்தியா (A2) இப்போட்டியில் உள்ளதாகக் கணித்தவர்களுக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி SA நிலாமதி SA குமாரசாமி SA தியா IND தமிழ் சிறி SA புலவர் IND P.S.பிரபா SA நுணாவிலான் IND பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் IND கிருபன் PAK ரசோதரன் SA அஹஸ்தியன் PAK கந்தப்பு SA வாத்தியார் SA எப்போதும் தமிழன் SA நந்தன் IND நீர்வேலியான் PAK கல்யாணி PAK கோஷான் சே SA நாளைய போட்டியில் 12 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.