Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அது கீ இல்லை! ஸீ! போட்டியில் வெல்லவேண்டுமென்றால் யதார்த்தம் புரியவேண்டும்! முகிலுக்குள் கால் பாவாமல் நடப்பவர்கள் கீழே தரையில் காலூன்ற விரும்பமாட்டார்கள்🤠
  2. மிச்சப் புள்ளிகள் வர முதலாம் படியில் நிற்பேன்!
  3. தர்மபுரி… பாமகவின் வெற்றி மாங்கனி நழுவியது எப்படி? AaraJun 06, 2024 20:14PM நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றுவிட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களில் தர்மபுரி தொகுதி கொடுத்த சர்ப்ரைஸை பாமகவினரும், திமுகவினரும் இன்னமும் மறக்கவில்லை. தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தால் தற்போதைய மோடியின் கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராகும் வாய்ப்பு செளமியா அன்புமணிக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், குறைந்த வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த விரக்தியில் இருக்கிறார்கள் பாமகவினர். தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக அ.மணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணும் தினமான ஜூன் 4 காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டன. தொகுதியில் 9,404 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகளில் திமுக 3,366, பாமக 2,922, அதிமுக 2,039, நாம் தமிழர் கட்சி 805, நோட்டாவுக்கு 105 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் போட்டுள்ளனர், மீதி வாக்குகளை சுயேச்சைகள் பெற்றனர். அடுத்து ஈவிஎம் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. முதல்வர் போன்… பதறிய திமுக நிர்வாகிகள்! முதல் ரவுண்டில் இருந்து எட்டு ரவுண்டுகள் வரை தர்மபுரியில் பாமக வேட்பாளரான சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணியை விட சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வரை அதிகம் பெற்றிருந்தார். இதனால் பாமகவினர், ‘போட்டியிட்ட பத்து தொகுதிகளில் இது ஒன்றையாவது நாம் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்று உற்சாகமான நம்பிக்கையில் இருந்தனர். பாமக நிர்வாகிகள் சௌமியாவுக்கு வாழ்த்து சொல்லவே தொடங்கிவிட்டனர். பாமக தலைவர் அன்புமணியும் அலைபேசி மூலமாக தர்மபுரி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதே நேரம் திமுக நிர்வாகிகளுக்கோ பெரும் டென்ஷன். தர்மபுரி நகரத்தில் அதியமான் ஹோட்டல் நான்காவது மாடி 411 ஆம் ரூமில் தங்கியிருந்த பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணியன், பழனியப்பன் ஆகியோருக்கு முதலமைச்சரின் தனிச் செயலாளர் தினேஷின் செல்போனில் இருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன. போனை எடுத்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் பேசிய முதலமைச்சர்… தர்மபுரி பற்றி டென்ஷனாக விசாரித்தார். அப்போது எம்.ஆர்.கே. ‘இன்னும் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி எண்ண வேண்டியிருக்கு தலைவரே… நிச்சயம் நமக்கு லீடிங் வந்துடும்…’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் திருப்தியடையாத முதலமைச்சர், ‘ஜெயிச்சுடுவோமா?’ என்றே நேரடியாக கேட்டிருக்கிறார். ‘நிச்சயம் ஜெயிடுச்சுவோம் தலைவரே…’ என்று சொல்லியிருக்கிறார் எம்.ஆர்.கே. அவர் சொன்னது போலவே… ஒன்பதாவது ரவுண்டில் இருந்தே சௌமியா அன்புமணியின் லீடிங் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. சௌமியாவின் லீடிங் குறைந்துகொண்டே வர ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் மணி லீடிங் எடுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் திமுக மாசெக்களுக்கும், பொறுப்பு அமைச்சருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியானது. வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகள், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள், அதிமுக வேட்பாளர் அசோகன் 2,93,629 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 65,381 வாக்குகளும், நோட்டாவுக்கு 9,198 வாக்குகளும் பதிவானது. மற்றும் 21 சுயேட்சை வேட்பாளர்கள் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகளை பிரித்தனர். 21 ஆயிரத்து 300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் மணி. பாமகவிடம் இருந்து பெரும்பாடு பட்டு வெற்றியை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பறித்ததில் திமுகவுக்கு ஆறுதல்தானே தவிர பெரிய கொண்டாட்டம் இல்லை. அதேநேரம் பாமகவினரோ வெறும் 21 ஆயிரம் ஓட்டில் வெற்றியைத் தவறவிட்டோமே என்று அழ ஆரம்பித்துவிட்டனர். வாக்கு எண்ணிக்கையன்று வேட்பாளர் என்ற முறையில் அங்கே சென்றிருந்த சௌமியா அன்புமணி முடிவு அறிவிக்கப்பட்டதும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அங்கேயே நன்றி சொல்லி பேட்டியும் அளித்தார். சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை! தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளது என்று பார்ப்போம். மேட்டூர் திமுக 67,824 பாமக 63,265 அதிமுக 56,044 பாலக்கோடு திமுக 71,344 பாமக 60,878 அதிமுக 53,607 அரூர் திமுக 85,850 அதிமுக 47,641 பாமக 46,175 மேற்குறிப்பிட்ட மேட்டூர், பாலக்கோடு, அரூர் மூன்று தொகுதிகளிலும் திமுக அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது. அதேபோல பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி, பென்னாகரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் பாமக முன்னிலை பெற்றுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி பாமக 82,434 திமுக 73,700 அதிமுக 42,653 தருமபுரி பாமக 79,527 திமுக 66,002 அதிமுக 48,093 பென்னாகரம் பாமக 76,166 திமுக 64,581 அதிமுக 43,552 திமுகவுக்கு ஆறுதல்… பாமகவுக்கு அதிர்ச்சி தந்த அரூர் ஆக இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அரூர் தொகுதிதான் வெற்றியை கடைசி நேரத்தில் முடிவு செய்திருக்கிறது. பென்னாகரம், தருமபுரி, மேட்டூர் மூன்று தொகுதியிலும் பாமக சிட்டிங் எம்எல்ஏகள், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் மூன்று சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இம்மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அரூர் தொகுதி தலித் மக்கள் நிறைந்தது. கம்யூனிஸ்டு கட்சியும், விசிகவும் அரூரில் அடர்த்தியாக உள்ளன. இந்த வகையில்தான் மற்ற தொகுதிகளில் எல்லாம் ஏற்பட்ட இழப்பை அரூரில் ஈடு செய்திருக்கிறது திமுக. “அரூர் பற்றி ஏற்கனவே கணக்கு போட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. அங்குள்ள கம்யூனிஸ்டு, விசிக நிர்வாகிகளிடம் பேசி அறுவடை வேலையை ஆரம்பத்திலேயே செய்திருக்கிறார்கள் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.வும், அரூரை உள்ளடக்கிய மாசெ பழனியப்பனும். அதனால்தான் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று அரூர் இன்னும் வரலை, வந்ததும் நமக்கு தூக்கிடும் என்று நம்பிக்கையாக சொல்லியிருந்தார் எம்.ஆர்.கே. கடைசியில் அரூர்தான் பாமகவுக்கு அதிர்ச்சியையும், திமுகவுக்கு ஆறுதலையும் கொடுத்திருக்கிறது” என்கிறார்கள் லோக்கல் திமுக நிர்வாகிகள். பாமக தரப்பிலோ, ‘பாமக மாணவரணி மாநிலச் செயலாளர் முரளி சங்கர் அரூர் தொகுதியைச் சேர்ந்தவர். 2016 இல் அரூர் தனித் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர், கணிசமான வாக்குகளைப் பெற்றவர். தலித் மக்களிடையே நல்ல தொடர்பும் அறிமுகமும் பெற்ற பாமக நிர்வாகி. பாமக மாணவரணி மாநிலச் செயலாளர் முரளி சங்கர் ஆனால் இவரை இந்த முறை விழுப்புரம் எம்பி வேட்பாளராக அறிவித்து அங்கே அனுப்பிவிட்டார்கள். அதனால் அரூரில் முரளிசங்கர் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. ஒருவேளை அவர் அரூரில் மட்டும் தீவிர கவனம் செலுத்தியிருந்தால் அரூரிலும் கூட பாமக சில லாபங்களைப் பெற்று மிகக் குறுகிய வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றிருக்கலாம்” என்கிறார்கள். பெண்கள் ஓட்டு தமிழகம் முழுவதும் பெண்களுக்கான கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திமுக பெண்கள் வாக்குகளை பெருமளவு ஈர்த்திருக்கிறது. ஆனால், தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியின் அணுகுமுறை கணிசமான பெண் வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது என்கிறார்கள் பாமகவினர். சௌமியா தேர்தல் பரப்புரையில் மிக எளிமையாக அனைவரோடும் பழகினார். குறிப்பாக வன்னியர் சமுதாய பெண்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாய பெண்களிடமும் அவரது அணுகுமுறை பெரிய பேசுபொருளானது. அவர் மட்டுமல்ல அவரது இரு மகள்களும் வீடு வீடாக சென்று திண்ணையில் அமர்ந்து, வாசல்படியில் அமர்ந்து கடைகளில் ஏறியிறங்கி தங்கள் அம்மாவுக்காக வாக்கு சேகரித்த விதம் சமூக தளங்களில் வைரலானது. தர்மபுரியில் அவர்கள் பார்க்காத ஊர்களே இல்லை என்ற அளவுக்கு சௌமியாவின் மகள்களுடைய ஒன் டு ஒன் பிரச்சாரம் அவருக்கு பெரும் சாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி கடந்த அன்புமணி நெட்வொர்க்! தேர்தலுக்கு முன்பு அதிமுக திமுக கிளை நிர்வாகிகள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரையில் அன்புமணியே பேசியுள்ளார். ‘நீங்க எந்த கட்சியில் வேண்டும் என்றாலும் இருங்க. ஆனாலும் சௌமியாவுக்கு ஓட்டுப் போடுங்க’ என்று பேசியதோடு… கழகங்களில் உள்ள வன்னியர் நிர்வாகிகளுக்கு கவனிப்பையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.வும் அதிமுக நிர்வாகிகளிடம், ‘உங்களுக்குரிய வன்னியர் சமுதாய வாக்குகளை நீங்க சிந்தாம சிதறாம வாங்கிடுங்க’ என்று பேசி சில ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அது முழுமையாக ஒர்க் அவுட் ஆனதாக தெரியவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில். இவ்வளவைத் தாண்டியும் அரூரின் சமுதாய நிலவரம்தான் திமுகவை இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய வைத்திருக்கிறது! https://minnambalam.com/political-news/how-did-pmk-victory-slip-away-in-dharmapuri/
  4. நாட்காட்டி மாதிரி தினமும் வரும்! மழை வந்து மட்சுகளைக் குழப்பாமல் இருந்தால் மேலே ஏற வாய்புக்கள் அதிகம்!
  5. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (07 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL ஒரே ஒருவர் மாத்திரம் கனடா அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கனடா கல்யாணி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  6. பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 14
  7. வெண்முரசு நாவல் 17: இமைக்கணம் வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும் என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும் முகவுரை குறிக்கின்றது. நாவல் முழுவதும் தத்துவ விசாரணைகள் செறிவாக உள்ளன. சாதாரண இலக்கிய வாசகனுக்கு தத்துவம் செறிந்த நூலை வாசிப்பது இலகுவானதல்ல என்பதால் இதுவரை வாசித்த வெண்முரசு நாவல்களில் இமைக்கணம் நாவலைப் படிக்க அதிக நேரம் எடுத்தது. தத்துவ விசாரணைகள் அவற்றில் நாட்டமில்லாதவர்களுக்கு சலிப்பாக இருக்கும் என்பதால், இந்நாவலில் அவை கதை மாந்தர்கள் அவரரவர் வாழ்வில் எதிர்நோக்கும் இடர்கள், சஞ்சலங்கள், வினாக்கள் அவற்றிற்கான கிருஷ்ணனின் விளக்கங்கள் எனப் புனையப்பட்டுள்மை ஜெயமோகனின் நல்லதோர் உத்தி. எனினும் கண்களை அழுத்தும் நித்திராதேவியுடன் போரிட்டே படித்தேன்!. சிலபகுதிகளை மீளவும் படித்தும் புரிந்துகொள்ளமுயன்றேன். எனினும் ஒவ்வொருவரினதும் புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்பவே இமைக்கணம் நாவலில் வரும் தத்துவவிசாரணைகளைப் புரிந்துகொள்ளமுடியும். நாவலில் ஜெயமோகன் பகவத்கீதையை முற்றிலும் வேறு வகையில் கொண்டுவந்திருக்கின்றார். பாரதப்போரில் கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதிகொடுத்தமையால், பாண்டவர்கள் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்வேளை நைமிஷாரண்யம் என்னும் இமைக்கணக் காட்டில் சென்று குடில்கட்டி அமர்ந்திருக்கின்றார். இக்காட்டில் எல்லாமே கண் இமைக்கும் நேரத்திலேயே நடந்துவிடும். அதனால்தான் நைமிஷாரண்யம் இமைக்கணக் காடு என்று சொல்லப்படுகின்றது. நாவலில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் அல்லது மனவெளி எண்ணங்களில், சில இடங்களில் Christopher Nolan இன் Inception திரைப்படத்தில் வருவதுபோன்று கனவுக்குள் கனவுகளில் கிருஷ்ணனை கேள்விகளுடன் சந்திக்கின்றார்கள். சில தருணங்களில் கிருஷ்ணன் அவர்களில் சிலரை teleport செய்து வேறு இடங்களுக்கும், நிகழ்காலத்திற்கு முன்னேயும், பின்னேயும் அனுப்பவும் செய்கின்றார்! நாவலில் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விளக்கப்படுகின்றது. கதை மாந்தரின் கேள்விகளை அறச்சிக்கல் ஒன்றில் குழம்பியிருந்த யமன் அவர்களின் எண்ணங்களுக்குள் புகுந்து, அவற்றை தனக்குள் ஏற்றிக்கொண்டு அவர்களின் வடிவிலேயே இமைக்கணக் காட்டுக்குள் சென்று கிருஷ்ணனுடன் உரையாடி விடைகளைப் பெறுவதாக நாவலில் உள்ளது. எனினும் கதைமாந்தர்களும் யமன் நடாத்தும் உரையாடல்களை தமது ஆழ்கனவுகளில் அறிந்துகொள்கின்றனர். பன்னிரண்டு பகுதிகளாக உள்ள நாவலில் முதலாவது “காலம்”. “இருப்புக்குப் பொருள் அளிப்பது இறப்பே” என்பதை உணர்த்தும் பகுதி. தென்திசைத் தெய்வமான யமன் தனது தொழிலை இயற்றாமல் விட்டதால் பூமியில் இறப்பு இல்லாமல்போய்விட்டது. ஆரம்பத்தில் இன்மையற்ற வாழ்வில் திளைத்தாலும், நோயாலும் வலியாலும் அலறும் உயிர்கள் இறப்பை வேண்ட ஆரம்பித்தன. நாரதர் யமனை ஆழுலகத்தில் சந்தித்து உயிர்களை எடுக்கும் தொழிலை ஆரம்பிக்க வேண்ட, யமன் தனது அறச்சிக்கலுக்கு விடை காணவேண்டும் என்றார். கிருஷ்ணனைச் சந்தித்து பதிலை அடையலாம் என்று நாரதர் சொல்ல, அதன்படி யமன் கிருஷ்ணனிடம் மாற்றுருக்களில் செல்கின்றார். அப்படி என்ன அறச்சிக்கல் யமனுக்கு வந்தது என்று பார்த்தால், அது ஓர் கிளைக்கதையாக ராமன், லட்சுமணனின் இறுதிக்காலத்தைக் காட்டுகின்றது. ராமனாக அயோத்தியில் அவதரித்த விஷ்ணு திரும்பவும் விண்ணுலகம் போகாமல் மானுடவாழ்வில் இருக்கின்றார். அவரை “அழைத்து” வர பிரம்மா யமனைக் கேட்கின்றார். யமனும் ஒரு முனிவர் உருவில் அயோத்தி சென்று லட்சுமணனை காவல் இருத்தி ராமனுக்கு தனிமையில் அவர் யார் என்பதை குறிப்பால் சொல்லுரைக்க முயல்கின்றார். அந்தத் தருணத்தில் பலகாலம் தவமிருந்து பசியால் வாடிய துர்வாச முனிவர் ராமனின் கையால் ஒரு கவளம் உணவருந்த விழைந்து வருகின்றார். அவரைத் தடுக்கமுடியாத லட்சுமணன் முனிவர் உருவில் இருந்த யமனிடமும், ராமனிடம் வருகின்றான். ராமனுடன் தனித்து உரையாடியதைக் குழப்பியதற்கு தண்டனையாக லட்சுமணனை குடிநீக்கம் செய்யும் நிலையை யமன் உருவாக்குகின்றார். சரயு நதிக்கரையோரம் குடிலில் தனித்திருந்த லட்சுமணன் தமையனின் பிரிவு தாங்காமல் சரயுவில் மூழ்கி இறக்கின்றான். அதைக் கேட்டு ராமனும் ஓடிவந்து சரயுவில் குதித்து மூழ்கி விண்ணுலகு அடைகின்றார்! பாற்கடலில் ஆதிஷேஷன் எனும் நாகம் மீது விஷ்ணு பள்ளிகொள்ளுவதாக அறிந்திருக்கின்றோம். விஷ்ணு ராமனாக அவதாரம் எடுத்தார் என்பது தெரிந்திருந்தாலும், ஆதிஷேஷன்தான் லட்சுமணனாக அவதாரம் எடுத்தார் என்ற தொன்மக்கதையை முன்னர் அறிந்திருக்கவில்லை! இரண்டாம் பகுதி ‘இயல்’. கிருஷ்ணனைச் சந்தித்தேயாகவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் கர்ணனுக்குள் யமன் புகுந்து கேள்விகளை அறிந்து கர்ணனின் தோற்றத்தில் வந்து கிருஷ்ணனைச் சந்திக்கின்றார். ஷத்திரியனாக ஏற்றுக்கொள்ளப்படாமல் குதிரைச்சாணியில் உழலும் சூதர்களின் மகனாக வளர்ந்ததால் எப்போதும் இழிவை உணர்ந்து சிறுமைகொண்டவனாக கர்ணன் இருக்கின்றான். அவன் ஷத்திரியனாக, குந்தியின் மைந்தனாக, திரெளபதியின் துணைவனாக, ஏற்றுக்கொள்ளப்பட்டால் எவ்வாறு குருகுல சந்ததிகள் எதிர்காலத்தில் தங்களுக்குள் போர்புரிந்து அழிவார்கள் என்பதையும் அதன் துயரம் வரவிருக்கும் போரைவிட மிகவும் அதிகம் என்பதையும் கிருஷ்ணன் காட்டுகின்றார். “வெற்றிக்கென்றே செயலாற்றுகின்றனர் மானுடர். ஆனால் வெற்றி எனக்கொள்வது என்ன?” என்ற தத்துவ உசாவல் இப்பகுதியில் வருகின்றது. மூன்றாம் பகுதி ‘ஒருமை’. பீஷ்மரின் உருவில் வந்த யமன் கிருஷ்ணனிடம் போரில் ஈடுபடாமல் கானேகுதல் பற்றி கேள்விகளைக் கேட்கின்றார். “போருக்குத் தேவை பற்று. அதன் மறுபக்கமாகிய வெறுப்பு. பற்று முதிர்ந்து விழைவாகி, விழைவே ஆணவமாகி, ஆணவம் சினமாகி அனலெனப் பற்றிக்கொள்கையிலேயே களம்நின்று போரிடமுடியும்” எனச் சொல்லும் பீஷ்மர், பற்றில்லாத தான் எப்படிப் போரிடமுடியும் என வினவுகின்றார். கிருஷ்ணன் செயல் யோகத்தை உரைத்து பீஷ்மரை “செயலாற்றுக” என தெளிவுறச் செய்து அனுப்புகின்றார். “ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது” எனும் கூற்று இப்பகுதியில் வருகின்றது. நான்காவதாக ‘அறிவு’ என்னும் பகுதியில் அம்பைக்காக பீஷ்மரைக் கொல்ல அழியா வஞ்சத்துடன் இருக்கும் ஆணிலியான சிகண்டியின் உருவில் யமன் கிருஷ்ணனிடன் வருகின்றார். தன் பிறவியின் நோக்கம் என்ன? தான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் எதன்பொருட்டு எழுந்தன? என்ற ஐயங்களுக்கு கிருஷ்ணன் “ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை. மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளைப் பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும்” என செயல் ஞானத்தை போதிக்கின்றார். ஐந்தாவதான ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக யமன் வருகின்றார். கிருஷ்ணனின் மூன்று தூதுக்களும் போரை மூளச்செய்யவே எனக் கடும்சினத்தில் இருந்த விதுரர் பீமன் குலாந்தகன் என்றும் அர்ஜுனன் லட்சம்பேரைக் கொல்லும் வில்கொண்ட சவ்யசாசி என்றும் அவர்களை எவராலும் வெல்லவியலாது என்றும் அறிந்திருந்தார். வாழ்நாளெல்லாம் போரைத் தடுக்கவே முயன்ற விதுரர் ஒரு குருதிப்பெருக்கை உருவாக்கி எதை கிருஷ்ணன் அடைய முயல்கின்றார் எனக் கேட்க, கிருஷ்ணன் விதுரரில் உள்ளூற உறைந்துள்ள நஞ்சானது அவர் அஸ்தினபுரியின்மேல் கொண்டிருந்த விழைவு என்று புரியவைத்து, கொண்டவைகளில் இருந்து விடுபடுதலை உரைக்கின்றார். ஆறாவதான ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் மகாபாரத காவியத்தை உருவாக்கிய வியாசரின் உருவில் யமன் கிருஷ்ணனிடம் வருகின்றார். சொற்களைக்கொண்டு காவியங்களைப் புனைந்த வியாசர், வீடுபேறின்றி அலைக்கழிப்பும், துயரும் நிறைந்து நிற்கின்றார். அவருக்கு ஊழ்கம் (தியானம்) தேவையில்லை எனவும் கொடும்பழியிலிருந்தும், ஆறா வஞ்சத்திலிருந்தும், ஆற்றொணாத் துயரிலிருந்துமே பெருங்காவியங்கள் எழுகின்றன என்றுணர்த்தப்பட்டு சொல் திரளும் ஊழ்கம் சொல்லப்படுகிறது. “கற்பவன் தன்னைத்தானே நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து உயர்த்திக்கொள்ளவேண்டும்” என்ற கூற்று இப்பகுதியில் வருகின்றது. ஏழாவது ‘மறைமெய்’ எனும் பகுதி. அனைத்தையும் கற்றறிந்து அறச்செல்வனான யுதிஷ்டிரர் (தருமன்) வடிவில் யமன் கிருஷ்ணனிடம் வருகின்றார். பாரதவர்ஷத்தின் எதிர்காலத்தை மாற்றும் பல இலட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கும் போரினைத் தூண்டிய விசையின் ஊற்று என்ன என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கு கிருஷ்ணன் மறைஞானத்தை உரைக்கின்றார். இப்புவியில் வெல்லும் அறம், தோற்கும் அறம் என இரண்டே உள்ளன என்பதையும் வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது என்பதையும் யுதிஷ்டிரர் ஐயங்களைத் துறந்து உணர்ந்துகொள்கின்றார் . எட்டாவதான ‘சுடர்வு’ என்னும் பகுதியில் யமன் யமி எனும் பெண்ணாக மாறி திரெளபதியின் உடலுக்குள் புகுந்து அவளது உள்மன ஆழங்களை அறிந்து கிருஷ்ணனிடம் திரெளபதியாகப் போகின்றார். அவள் முற்பிறவியில் தீராத காமம்கொண்டவளாக இருந்தமையால் அவளது கணவரான முனிவரால் “காமம் நுகர்ந்து தீர்வதல்ல, எரிந்து தீர்வது” எனக் கூறப்பட்டு, அவள் ஐந்து கணவர்களைப் பெறுவாள் எனவும், காமத்தின்பொருட்டே குலத்தை அழியச் செய்வாள் எனவும் சபிக்கப்பட்டாள். இன்னொரு கதையின்படி விண்ணளந்தோனாகிய விஷ்ணு இராவணனைக் கொல்லவே ராமனாக மண்நிகழ்ந்தார். அவர் ஒருமுறை கானுலா சென்றபோது எரிவடிவில் தோன்றிய அக்னி அவரின் மனையாளாகிய சீதையை இராவணன் கவர்ந்து செல்வான் என்பதால் அவளை தன்னிடம் அளிக்குமாறும், தான் வேறு ஒரு சீதையை கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி ராமன் சீதையை எரிக்குள் அனுப்ப, அவள் ஊனுருகி எலும்புருவாகி கரியானாள். அனலுக்குள் இருந்து ஒளிகொண்ட “அனல்சீதை” வெளிவந்தாள். அவளையே இராவணன் கவர்ந்து இலங்கைக்குக் கொண்டு சென்றான். “அனல்சீதை” என்பதால் அவளை இராவணனால் நெருங்கமுடியவில்லை. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு அவளை அயோத்தியின் பட்டத்தரசியாக்குவதற்கு முதல்நாள் துணிவெளுப்போன் சீதையின் பத்தினித்தன்மையை சிறுசொல்லால் இழித்துரைப்பதைக் கேட்ட ராமன், சீதையை எரிபுகச் செய்கின்றார். “அனல்சீதை” எரியினுள் புகுந்துகொள்ள பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தீயினுள் புகுந்த உண்மையான சீதை வெளிவருகின்றாள். பத்தினித்தன்மை நிரூபணமாகின்றது. எனினும் தீயினுள் புகுந்த மாயச்சீதை சுடரில் தோன்றி தான் காதலையும் காமத்தையும் அறியவில்லை என ராமனுக்குச் சொல்ல, ராமன் வேள்வி மூலம் அக்னியை வரவழைத்து தீர்வைக்கேட்க, அனலோன் அவளைச் சிவனை நோக்கி தவமியற்றச் சொன்னார். அதன்படி தவமியற்றிய “அனல்சீதை” கொழுநன் வேண்டும் என்று ஐந்து முறை கேட்டதால் ஐந்தும் அருளினேன் என்று சிவன் வரம்கொடுத்து மறைந்தார். அந்த அனல்சீதையும் திரெளபதியின் முன்னோர் பிறவி என்கின்றது கதை! திரெளபதி அனைத்துயிரையும் விரும்பும் அன்னைத்தெய்வம் எனவும், கிருஷ்ணன் எப்போதும் அவள் அருகில் இருப்பவன் என்றும், அவளுக்கான மெய்மையை அவளே அடையவும் வழிகாட்டப்படுகின்றாள். ஒன்பதாவது ‘சொல்’ எனும் பகுதியில் தௌம்யர், கர்க்கர் இன்னும் பல வேதியர்கள் கிருஷ்ணனின் இமைக்கணக் காட்டுக் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் கிருஷ்ணனிடம் அவரது முழுமை என்ன, ஏன் அவர் பேரழிவை நிகழ்த்துகின்றார், வேதியரான அவர்கள் நடத்தும் வேள்விகளின் பயன் என்ன எனப் பல சந்தேகங்களைக் கேட்டபோது, தானே பிரம்மம்; தனது தோற்றங்களுக்கு முடிவேயில்லை எனவும் செயல்பயனைத் துறந்து அளிக்கப்படும் அனைத்தும் அவிகொடையே எனவும் இந்தப் பூமியில் எல்லா உயிர்களும் வேள்விகளைச் செய்கின்றன எனவும், இப்புடவி வேள்விகளாலேயே நிலைநிறுத்தப்படுகின்றது எனவும் கிருஷ்ணன் விளக்குகின்றார். பத்தாவது ‘பொருள்’ எனும் பகுதியில் காசியில் இருந்து பன்னிரு முனிவர்களுடன் நைமிஷாரண்யக் காட்டுக்கு வந்த உதங்கர் மேலேறி யமன் கிருஷ்ணனைச் சந்தித்து வேதமுடிபு பற்றி ஏழு வினாக்களைக் கேட்கின்றார். வேதமுடிபு மானுடத்திற்கு அளிப்பது என்ன? என்ற கேள்வியும் அதில் அடங்கும். இக்கேள்விகளுக்கு கிருஷ்ணன் தகுந்த வேதாந்த விளக்கங்களைக் கொடுத்து முனிவர்களின் ஐயங்களைப் போக்குகின்றார். வேதமுடிபு பற்றி பருவடிவான வினாக்களே எழுகின்றன எனவும், ஆனால் அது நுண்வடிவான கேள்விக்கே விடையென்றும் சொல்கின்றார். பிரம்மம் என்பது வெறுமொரு வியப்பொலி என்றும், வேதமுடிபு அந்த வியப்பை நினைவுறுத்தி தக்கவைப்பது என்றும் சொல்கின்றார். எல்லைகடந்துசென்று எல்லையின்மையை அறிந்தமைதலே வேதமுடிபு எனவும் சொல்கின்றார். பதினோராவது ‘முழுமை’ எனும் பகுதியில் கேட்கப்படாத கேள்விகளுக்கு பதில்களை வைத்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் தேடிய சுகர் எனும் முனிவரின், வியாசரின் ஒரு மகன், வடிவில் யமன் கிருஷ்ணனைச் சந்திக்கின்றார். இங்குள்ள அனைத்தையும் துறந்துசெல்பவர்கள் எய்துவது முழுமை. எல்லா அறங்களையும் விட்டுவிட்டு அருவும் உருவுமாகி எல்லைகளைக் கடந்த அதில் அடைக்கலம் கொள்வதே முழுமை என்று முழுமையின் இயல்புகளை யமனுக்கு உரைக்கின்றார். அத்தோடு பல்வேறு வடிவில் வந்தது யமன் என்றும் வெளிப்படுத்தப்படுகின்றது. யமன் தன்னுள் எழுந்த இறுதி வினாவை சொல்லாக்குவதற்குள் இளைய யாதவர் அதை அறிந்தார். அவர் விழிகளிலிருந்து அவ்விடையை யமன் அறிந்தார். அந்த வினாவும், விடையும் என்ன என்று வெளிப்படுத்தப்படவில்லை! நாவலின் இறுதிப்பகுதி ‘இறைப்பாடல்’. ‘இயல்’ தொடங்கி ‘முழுமை’ வரையுமான பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, நைமிஷாரண்யக் காட்டை அடைந்த அர்ஜூனனுக்கு பகவத் கீதையாக கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது. வரவிருக்கும் குருஷேத்திரப் போரில் நடப்பவற்றை காலத்தைக் கடந்து அர்ஜுனன் அறிகின்றான். உளச்சோர்வு அடைகின்றான். உரைகளில் சில: “செயலாற்றவே பணிக்கப்பட்டிருக்கிறாய். அதன் பயன்களின்மேல் உனக்கு ஆணையில்லை. செயல்களின் பயனைக் கருதக்கூடாது. செயலாற்றாமலும் இருக்கலாகாது. யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு செயலாற்றுக, நடுநிலையே யோகமெனப்படும்.” “உனக்கான செயலைச் செய்க! ஏனென்றால் செயலின்மையைவிடவும் செயல் மேன்மை உடையது. செயலின்மை கொண்டாயென்றால் உடலைப் பேணவே இயலாதவனாவாய்.” “எப்போதெல்லாம் அறம் அழிந்துபோய் மறம் எழுகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன். நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகம்தோறும் நிகழ்கிறேன்.” “அளிக்கப்படுவது பிரம்மம், அவியாக்கப்படுவது பிரம்மம், எரிக்கப்படுவது பிரம்மம், அடையப்படுவதும் பிரம்மம். ஆழ்நிலையில் அமைதலும் பிரம்மமே.” “அழிவற்ற முதற்பொருளே பிரம்மம். அதன் இயல்பறிதல் ஆத்மஞானம். உயிரெனத் தோன்றுவது இயற்கை. அது பெருகுவதே செயல். அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பொருள்மெய்மை. முதலுருவனைப் பற்றியது தேவமெய்மை. உடலென என்னை அறிதல் வேள்விமெய்மை. இறுதியில் தன் உடலை முற்றிலும் துறந்து எனது நினைவுடன் கடப்போன் எனதியல்பை எய்துவான்.” “உலகை அழிக்க பெருகியெழுந்த காலம் நான். இதோ அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறேன். எவர் என் எதிரில் இருக்கிறார்களோ அவர்கள் நீ போரிடாமலிருந்தாலும் எஞ்சப்போவதில்லை. ஆகவே நீ எழுந்து நில். போரிட்டுப் புகழ்சூடு. பகைவரை வென்று வளமான நாட்டைப் பெறுக! இவர்கள் முன்னரே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். நீ புறநிமித்தம் மட்டுமே. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற வீரர்களையும் கொல். அஞ்சாமல் போர் செய். போர்க்களத்தில் பகைவரை வென்று எழு.” “ஆற்றவேண்டிய கடமைகளை என்பொருட்டுச் செய்பவன், என்னையே அடையவேண்டுமென குறிக்கோள் கொண்டவன், என்னிடம் தன்னைப் படைப்பவன், பற்றற்றவன், எவ்வுயிரிடமும் பகையிலாதவன் என்னை அடைகிறான்.” அர்ஜுனனின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்களையும் கொடுத்து, தனது பேருருவையும் கிருஷ்ணன் காட்டி, அவனின் உளச்சோர்வைப் போக்கி அவனை போருக்கு முழுமையான விருப்புடனும் ஊக்கத்துடனும் ஈடுபடச் செய்யும் மனநிலையை கிருஷ்ணன் உருவாக்குவதோடு நாவல் நிறைவுபெறுகின்றது. வெண்முரசு வரிசையில் பகவத் கீதையின் யோக தத்துவ விசாரணைகளைத் தொகுத்துச் சொல்லும் இமைக்கணம் மிகவும் முக்கியமான நாவல். இந்தியத் தத்துவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நாவல்.
  8. அமெரிக்கா அணி போல வெல்வதற்கு இவருக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கு!
  9. பதினோராவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி இலக்கை எட்ட முயன்று 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்து சமநிலையை அடைந்ததால் வெற்றி சுப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது. சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களையும் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்களையும் எடுத்தன. முடிவு: ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டி உலகக் கிண்ணப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் @goshan_cheக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் வெல்லும் எனக் கணித்த மற்றைய 21 பேருக்கும் புள்ளிகள் இல்லை!
  10. எனக்கு வீட்டில், வேலையில் திரும்பும் இடமெல்லாம் இருக்கும் ரிவி எல்லாம் இப்ப கிரிக்கெட்தான் போகின்றது😃
  11. பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐
  12. ஒன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி குறைந்த வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: உகண்டா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது உகண்டா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பபுவா நியூகினி அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஓமான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் என கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
  13. தமிழக அரசியல் அறிவை யூடியூப்பர்களிடம் இருந்து கற்றவர்கள் யாரென்று புள்ளி நிலைகளில் கீழே நிற்பவர்களைப் பார்த்தால் தெரிகின்றது!
  14. நாம் தமிழரை விட குறைவாய் அதிமுக… அப்செட் எடப்பாடி… அதிரடி மாற்றங்கள்! Jun 05, 2024 22:35PM IST ஷேர் செய்ய : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் அதிமுக 33, தேமுதிக 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் நேற்று ( ஜூன் 4) வெளியான நிலையில், அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிட்ட தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர், தேனி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மேலும், மதுரை, தென் சென்னை, தேனி, ராமநாதபுரம், வேலூர், நெல்லை, நீலகிரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் பெற்று நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதிமுக டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இந்த தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “தேர்தல் முடிவுகளால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அப்செட்டாக இருக்கிறார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை விட சில தொகுதிகளில் அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்டதில் கடுமையான கோபத்தில் இருக்கிறார். தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறார். பல இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க திட்டமிட்டிருக்கிறார் ” என்கிறார்கள் https://minnambalam.com/political-news/lok-sabha-election-results-edappadi-strict-action-against-district-secretaries/
  15. “ராஜினாமா செய்யப் போறேன்” : அண்ணாமலை பரபரப்பு! christopherJun 06, 2024 07:32AM மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜூன் 5-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது அவர், ‘தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘சற்று ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகவே சொல்கிறேன் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும், 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும்’ என்றெல்லாம் தெரிவித்தார். அதிமுகவையும் மிக கடுமையாக சாடினார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வளவு நம்பிக்கையாக கருத்துக்களை அண்ணாமலை வெளியிட்ட போதும்… நேற்று ஜூன் 5 காலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனிடம், ‘தேர்தல் முடிவுகளுக்காக என்னோட மாநில தலைவர் பதவியை நான் ராஜினாமா பண்றதா முடிவு செஞ்சிருக்கேன்’ என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. இதைக் கேட்ட கேசவ விநாயகன், ‘அப்படி ஒரு முடிவு எடுக்காதீங்க’ என்று அண்ணாமலையை சமாதானப்படுத்தி உள்ளார். அண்ணாமலையோ, ‘என்னுடைய சுபாவத்துக்கு இந்த பதவியை ஏற்று நடத்த முடியவில்லை. உத்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய மகராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதைப் பின்பற்றி நானும் தமிழக தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதை கேசவவிநாயகன் ஏற்கவில்லை. இந்த தகவல் அறிந்து மேலும் சில பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையை தொடர்பு கொண்டு, ‘பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருக்கோம். இந்த நிலையில் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம். தேர்தல் தோல்வி என்பது அரசியலில் சகஜம்’ என்று அண்ணாமலையிடம் பேசியிருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இது தொடர்பாக அண்ணாமலையிடம் பேசி வருவதாக பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தேசிய தலைமைக்கு புகார்களை அனுப்பும் பணி ஜூன் 4 மாலையில் இருந்தே தொடங்கப்பட்டு விட்டது. “தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருப்பார்கள். அது டெல்லியில் இப்போதைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 20 எம்பிக்கள் வரை கிடைக்க இருந்ததை தடுத்தது அண்ணாமலையின் செயல்பாடுகள் தான். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதாக சில விஷயங்களை செய்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் பாஜக கூட்டணிக்கும் கிடைக்கவேண்டிய எம்பிக்கள் எண்ணிக்கையை காவு கொடுத்து விட்டார். அதிமுக தலைவர்களோடு அண்ணாமலை மோதல் போக்கை பின்பற்றாமல் இருந்திருந்தால்… அதிமுக கூட்டணியை விட்டு போயிருக்காது. எனவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்ட இழப்புக்கு அண்ணாமலை தான் பொறுப்பு” என்று அவர் மீது புகார்கள் தெரிவித்து தேசிய தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை அறிந்து தான் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “என்னை இங்கே அனுப்பியது கட்சியை வளர்க்கத் தான். இந்த மைதானத்தில் இப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துதான் என்னை இங்கே அனுப்பினார்கள். மற்றவர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வளர வேண்டும் என்றால் அதற்கு வேறு ஆளை பார்த்துக் கொள்வார்கள்” என்று சற்று பூடகமாகவே பேசி இருக்கிறார் அண்ணாமலை. https://minnambalam.com/political-news/i-am-going-to-resign-annamalai/
  16. மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி - மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றம் Rizwan Segu MohideenJune 6, 2024 காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ் பகுதியில் உளவு வழிகாட்டலுடன் படை நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மத்திய காசாவில் தற்போது மருத்துவ வசதிகளை வழங்கி வரும் ஒரே மருத்துவமனையாக உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி இருப்பதாகவும், பலரும் தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கையால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் பெற்றவர்களாவர். ரபா மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் எச்சரித்திருந்தபோதும் இஸ்ரேலிய டாங்கிகள் அந்த நகரின் மத்திய பகுதியை அடைந்துள்ளன. இதனால் அண்மைக்காலத்தில் அந்த நகரில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நிலையில் புரைஜ் அகதி முகாமில் பாடசாலை வளாகம் ஒன்று உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இங்கும் இஸ்ரேல் இராணுவம் கடந்த டிசம்பர் தொடக்கம் நடத்தும் இரண்டாவது படை நடவடிக்கையாக இது உள்ளது. முன்னதாக புரைஜ் அகதி முகாமை தளமாகக் கொண்ட ஹமாஸ் படைப்பிரிவை ஒழிப்பதாகக் கூறியே இஸ்ரேல் அங்கு தாக்குதலை நடத்தி இருந்தது. இந்நிலையில் அந்த முகாமுக்கு இஸ்ரேல் மீண்டும் திரும்பி இருப்பதன் மூலம் அங்கு பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர் என்பது தெரிகிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘இரவு முழுவதும் குண்டு சத்தம் நிற்கவில்லை’ என்று டெயிர் அல் பலாவில் இருந்து இடம்பெயர்ந்த 30 வயதான ஆயா என்பவர் தெரிவித்தார். புரைஜுக்கு டாங்கிகளை அனுப்பிய இஸ்ரேல் இராணுவம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான அல் மகாசி மற்றும் அல் நுஸைரத் அதேபோன்று டெயிர் அல் பலா நகரங்களில் வான் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பற்றி பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்பாளர்கள் நகரங்கள் அல்லது அகதி முகாம் ஒன்றை அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். தமது வீடுகள் அல்லது கூடாரங்களில் பாதுகாப்பாக இருக்கும் பொதுமக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? அரபு மற்றும் உலகத்தால் போரை நிறுத்த முடியாதது ஏன்’ என்று ஆயா ரோய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் ‘சாட்’ செயலி வழியாக தெரிவித்தார். மத்திய காசாவின் டெயிர் அல் பலா நகரில் உள்ள வீடுகள் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. மகாசி முகாமில் உள்ள டார்விஷ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் 243 ஆவது நாளாக நேற்று நீடித்த இஸ்ரேலின் தாக்குதல்களில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் பல வாரங்கள் படை நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலியப் படை கடந்த வெள்ளிக்கிழமையே அங்கிருந்து வாபஸ் பெற்றது. இந்தப் படை நடவடிக்கையின்போது அந்த நகர் முற்றாக சின்னாபின்னமாக்கப்பட்டது. படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட மீட்புப் பணிகளில் அங்கு 360 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு பெரும்பாலானவை பெண்கள் மற்றும் சிறுவர்களுடையது என்று காசா சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,500ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் மூன்று கட்ட போர் நிறுத்த திட்டம் ஒன்றை வெளியிட்டபோதும் இஸ்ரேல் அல்லது ஹமாஸ் தரப்பினர் இதுவரை அதற்கு உறுதியான ஒப்புதலை அளிக்கவில்லை. நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பில் தெளிவாக குறிப்பிடாத இஸ்ரேலுடனான உடன்படிக்கை ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான் குறிப்பிட்டுள்ளார். ‘முடிவு அல்லது காலக்கெடு இல்லாது பேச்சுவார்த்தை கதவை திறப்பது பற்றி இஸ்ரேல் கூறுகிறது. இது கைதிகளை விடுவிக்கும் வரையான ஒரு கட்டம் பற்றியே இஸ்ரேல் விரும்புவதை உறுதி செய்வதாக உள்ளது. அதன் பின்னர் எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் போரை மீண்டும் ஆரம்பிக்கும்’ என்று ஹம்தான் கூறினார். மறுபுறம் பைடனின் போர் நிறுத்த திட்டம் தொடர்பில் இஸ்ரேலிய அரசும் விலகி இருப்பதோடு ஹமாஸை ஒழிக்கும் வரை போரை தொடர்வது பற்றியே கூறி வருகிறது. எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கையை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி இருக்கும் பைடன், புதிய பேச்சுவார்த்தை முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவரான பில் பர்ன்ஸை கட்டாருக்கு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்ன்ஸ் மத்தியஸ்தர்களுடன் இணைந்து தொடர்ந்து செயற்படவிருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. பைடனின் மத்திய கிழக்குக்கான ஆலோசகர் பிரெட் மக்கர்க்கும் கட்டாருக்கு விரைந்திருப்பதாக அக்சோஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ‘போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் பொறிமுறை தொடர்பில் பேசுவதற்கு எகிப்து பாதுகாப்பு தூதுக் குழு ஒன்று கட்டார் சென்று கட்டார் மற்றும் அமெரிக்க சகாக்களுடன் பேசவுள்ளது’ என்று எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் கெஹரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இரு தரப்பில் இருந்தும் நம்பிக்கை தரும் அறிவிப்புகளை இன்னும் பார்க்கவில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்த கட்டார், ஆனால் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் இரு தரப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்தது. https://www.thinakaran.lk/2024/06/06/breaking-news/64426/மத்திய-காசாவில்-இஸ்ரேலின/
  17. EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் June 5, 2024 — கருணாகரன் — சாகஸப்பயணம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் விட உச்சப் பரபரப்பில் (கிறுகிறுப்பில்) ஈடுபட்டிருப்பது தமிழ்த்தரப்பேயாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும்படி தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்து விட்டது. இதற்கான தலைமையில் துண்டுப் பிரசுரங்களை அதனுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் அணி விநியோகிக்கத் தொடங்கி விட்டது. இதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற முன்மொழிவைச் செய்த EPRLF, பசி தூக்கமெல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டுத் தானெடுத்த தடியை எப்படியாவது நட்டு விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விடயம் அதற்கொரு மானப்பிரச்சினையாகவும் வாழ்வா சாவா என்ற சவாலான கட்டத்தையும் எட்டியுள்ளது. இதற்காக அது சில தமிழ்அரசியற் பத்தியாளர்களோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ‘டான்’ ஊடகக்குழுமத்தோடும் இணைந்து செயற்படுகிறது. ‘டான்’ குழுமமும் சில அரசியற் பத்தியாளர்களும் அவர்களோடிணைந்த ‘சிவில்’ பிரமுகர்கள் சிலரும் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். அவ்வப்போது எதையாவது சொல்லி, மக்களின் கவனத்தைத் தங்களின் பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். ஆனால், இதற்கு அரசியற் கட்சிகளின் ஆதரவு தேவை. என்பதால் இரு தரப்பும் இணைந்து இந்தச் சாகஸப் பயணத்தை ஆரம்பித்துள்ளன. வரலாற்றின் நகைப்பு அவசியம் கருதி, இந்த இரண்டு தரப்புகளைப் பற்றியும் சில விடயங்களைச் சொல்வது இங்கே அவசியமாகும். மேற்படி பத்தியாளர்களும் சிவில் பிரமுகர்கள் சிலரும் இணைந்து ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பை 2015 இல் உருவாக்கினார்கள். அதைத் தங்களால் தனியே இயக்க முடியாதென்று அரசியற் தரப்பினராகிய விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் சிவநேசன் போன்றோருடன் நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களையும் இணைத்தனர். பேரவையை உருவாக்கியதற்கான காரணம், “தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டது. சில மாதங்கள் வலுஉற்சாகமாகச் செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை, எழுக தமிழ் என்றொரு எழுச்சியையும் அதையொட்டியொரு பிரகடனத்தையும் வெளியிட்டது. அதையடுத்து நல்லாட்சிக் காலத்தில் அரசியற் தீர்வொன்றுக்கான முன்மொழிவையும் தயாரித்தது. அதோடு பேரவையின் பணிகள் யாவும் இனிதே நிறைவடைந்தன. பேரவையின் தேசியப் பணியினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன எனத் தமிழ் மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினர்(?). அதற்கப்பால் பேரவையினால் சிறுதுரும்பைக் கூடத் தமிழ்ப்பரப்பில் நகர்த்த முடியவில்லை. ஏனெனில் அதொரு செயற்றிறன் கொண்டோரின் அமைப்பல்ல. பதிலாக வாரவிடுமுறை நாட்களிலும் மாலைத் தேநீர்ப்பொழுதிலும் கூடிப் பேசுவோரின் கற்பனைக் குழுவாகவே இருந்தது. இதைப்பற்றிய விமர்சனங்களைப் பேரவையின் உருவாக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களே சலிப்போடும் கோபத்தோடும் பின்னாளில் வெளிப்படுத்தினார்கள். அங்கே (பேரவையில்) தோற்றுப்போனவர்கள் இங்கே (பொதுவேட்பாளர் விடயத்துக்காக) புது வேட்டியுடன் களமிறங்கியுள்ளனர். (இந்த அணியில் இதுவரையில் பெண்கள் எவரும் காணப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது) ஊன்றிக் கவனியுங்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, அன்றைய பேரவையில் சவாரி செய்தவர்களே பெரும்பாலும் பொதுவேட்பாளர் விடயத்திலும் பெரும் புரட்சியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். பேரவையின் செயற்பாட்டில் நம்பிக்கையீனமிருந்தாலும் அதற்கொரு ஆதரவுத்தளம் இருப்பதாகக் கருதிக் கொண்டு ரெலோ, புளொட் போன்றவை தயக்கத்தோடு அதில் பாதிப்பங்கேற்பைச் செய்ய முற்பட்டன. அப்படியான ஒரு நிலையே இப்போதும் ரெலோவுக்கும் புளொட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தரப்பினருக்கு பொதுவேட்பாளர் விடயத்தில் உடன்பாடில்லை. ஆனாலும் வெளியே அதற்கொரு ஆதரவுண்டு எனக் கருதித் தலையாட்டியுள்ளனர். சிலிர்ப்பு அரசியல் (Thrill Politics) ஜனாதிபதித் தேர்தல்களின்போது பின்கதவு வழியாக டீல்களைச் செய்வதே தமிழ்த்தேசியத் தரப்பின் வழமையாகும். 2005 க்குப் பின்னிருந்து இதுதான் நடந்தும் வந்திருக்கிறது. இதற்கான பேரவாய்ப்பு இப்போது EPRLF க்கு இல்லை. ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளைப் போல EPRLF க்குப் பாராளுமன்றத்திலும் இடமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு உருவாக்கப்பட்ட கூட்டணியில் EPRLF நிறுத்திய விக்னேஸ்வரனும் EPRLF ஐக் காய் வெட்டிச் சென்று விட்டார். (அதற்கு முன்பே EPRLF ஐப் பயன்படுத்தி விட்டுச் சென்றவர்கள் சிவஞானம் சிறிதரன், சிவமோகன் என ஒரு அணியுண்டு). ஆகவே பலவீனப்பட்டுத் தனித்து நிற்கும் EPRLF க்கு ஒரு அரசியல் அடையாளம் தேவை. அதோடு EPRLF ஐத் தவிர்த்துப் பேரங்களில் ஈடுபடும் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும். அவற்றின் பேர வாய்ப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்று EPRLF சிந்திக்கிறது. அதற்காக அது எடுத்ததே இந்தப் Political Stunt. தன்னையொரு தீர்மானிக்கும் சக்தியாக (Decisive power) அது காட்ட முற்படுகிறது. ஆனால், துயரமென்னவென்றால் இந்த விளையாட்டின் மூலமாக அது விபரீத முடிவுக்கு தன்னைப் பலிகொடுக்கப் போகிறது. ஏனெனில், பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாடானது, தமிழ் மக்களுக்கு இன்னொரு தற்கொலைச் செயலாகும். EPRLF க்கும் அப்படித்தான். சிலவேளை பொதுவேட்பாளருக்கு கணிசமான அளவில் வாக்குகள் கிடைத்தாலும் அதனால் நற்பயனேதும் தமிழ் மக்களுக்குக் கிட்டாது. ஏனென்றால் கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டத்திலும் சரி தேர்தல் அரசியலிலும் சரி இதைப்போல தற்காலிக எழுச்சிகள், வெற்றிகள் கிடைத்ததுண்டு. அவை ஒன்றும் தமிழ் மக்களுடைய துயரைப் போக்கவும் இல்லை. அரசியற் தீர்வைத் தரவும் இல்லை. நிரந்தர வெற்றியை ஈட்டவும் இல்லை. அதில் அரசியற் கட்சிகளும் தலைமைகளும் மட்டுமே சுகம் கண்டன. மற்றும்படி சோடாக் காஸைப்போல அவ்வப்போது ஒரு சிலிர்ப்பைத் தருவதோடு அடங்கி விடுவனவாகவே இருந்தன. இதனால்தான் இந்த அரசியலைச் ‘சுய இன்ப அரசியல்’ எனக் கூற வேண்டியுள்ளது. சிலருடைய சுய திருப்திக்கானது மட்டுமே தவிர, சமூகப் பயனுக்கானதல்ல. தற்கொலை அரசியல் பொதுவேட்பாளர் தீர்மானம் ஏன் EPRLF க்கும் தமிழ் மக்களுக்கும் தற்கொலையில் முடியும் என்றால், அடிப்படையில் இதொரு தற்கொலை அரசியல் தெரிவாகும். காலமாற்றம், நிலை மாற்றம் எதையும் கணக்கிற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற செயற்பாடு. அதாவது பிழையாகக் கணக்கைச் செய்தால் பிழையாகத்தானே விடை கிடைக்கும். ஏற்கனவே தமிழ்த்தரப்புகள் கடந்த 70 ஆண்டுகளாகவே மேற்கொண்டுவரும் தோல்வி அரசியலின் தொடர்ச்சி இது. ஆகவே நீண்ட கால அடிப்படையில் தமிழர்களுக்கு மேலும் நெருக்கடிகளே நீளும். அரசியற் தற்கொலைகளில் திளைப்பதுவே தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விதியாகி விட்டது. இதில் சிறப்புத் தேர்ச்சியடைந்து இப்பொழுது தற்கொலை அரசியலில் கால் வைத்துள்ளது. இது புத்தாக்க அரசியலுக்கு எதிரானது; மாறானது. பொதுவேட்பாளருக்கான ஆதரவு? 1. பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான ஆதரவை இந்தியா வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சொன்னதாகத் தகவல்களில்லை. இதுவரையில் கிடைக்கப்பெற்ற தூதரக வட்டாரத் தகவல்களின்படி எதற்காக இந்த விசப்பரீட்சையில் தமிழ்த்தரப்பு ஈடுபடுகிறது? என்ற கேள்வியுடனேயே இந்தியா இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து EPRLF க்குள் உள்விவாதங்கள் கூட நடந்தன. இழுபறிகளுக்குப் பின்னரே திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாட்டை ஏனையோர் தயக்கத்தோடு ஏற்றனர். 2. சர்வதேச மட்டத்திலும் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான ஆதரவு திருப்தியளிக்கக்கூடிய அளவில் இல்லை. இடைநிலைமட்டத்திலான சில வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவும் தனிப்பட்ட தூண்டல்களுமே இதுவரையிற் கிடைத்துள்ளன. அதுவும் சிவில் பிரமுகர்களுக்கே. 3. இலங்கையில் இனிமேல் துருவப்படுத்தப்படும் அரசியல் (Polarized politics) வெற்றியளிக்காது. துருவ அரசியல் (Polar politics) ருசியாக, போதையாக இருக்குமே தவிர, அதனால் நாட்டுக்கோ தமிழ்ச்சமூகத்துக்கோ சத்து ஊறாது. அதனால் எந்தப் பயனும் கிடையாது. ஏனென்றால், எதிர்ப்பு அரசியலின் யுகம் முடிந்து விட்டது (The era of protest politics is over). ஆனால், போராட்ட அரசியல், புரட்சிகர அரசியல் (Struggle – Revolutionary Politics) முடியவில்லை. அது நிலைமாறு காலத் தன்மையோடு படிப்பினைகளின் அடிப்படையில் தொடரும் – தொடரப்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலின் காலம் முடிந்து விட்டது என்றால், “அடுத்தது சரணடைவு அரசியலா?” என்று யாரும் அவசரப்பட்டுக் குறுக்கே பாய்ந்து கேட்கக் கூடும். அப்படியல்ல. மக்கள் போராட்டங்களின் வழியான எதிர்ப்பு அரசியல் (The protest politics) வேறு. கட்சிகள் செய்யும் பிரகடன அரசியல் (Declaratory politics) வேறு. மேலும் சற்று விளக்கமாகச் சொன்னால், தேவைப்படும் அளவுக்கான எதிர் அரசியலை (Counter politics) கைக் கொள்ளலாம். அதுவே நியாயத்தன்மையையும் வெற்றியையும் கொடுக்கும். “அந்த அளவு என்ன?” என்று அடுத்த கேள்வியை அதே அவசரத்தோடு சிலர் எழுப்பக்கூடும். கறிக்கு உப்புத் தேவை. ஆனால், உப்பிலேயே கறி வைக்க முடியாது என்று அவர்களுக்குச் சொல்வதைத் தவிர வேறெதையும் சொல்வதற்கில்லை. இந்தத் தந்திரோபாய மாற்றம் ஏன் தேவைப்படுகிறது என்றால், இனவாதப் பொறிக்குள் தொடர்ந்தும் தள்ளவே, அதைத் தமது வெற்றிக்கான ஒரு இலகுவான முதலீடாக்குவதற்கே சிங்களப் பேரினவாதிகளும் அரசும் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்த வகையில்தான் இப்பொழுது தமிழ்ப்பிரதேசங்களில் தொல்பொருட் திணைக்களம் பௌத்த அடையாளங்களை நிறுவ முற்படுகிறது. விஹாரைகள் கட்டப்படுகின்றன. இப்படியே அவர்கள் புதிது புதிதாக இனவாத அடிப்படையைத்தூண்டி, எதிர்ப்பு அரசியல் என்ற நெருப்புக் குழிக்குள் நம்மைத் தள்ளி விடவே முயற்சிக்கின்றனர். இது சிங்களத்தரப்புக்கு வழமையான, வாய்ப்பான, சுலபமான ஒரு பொறிமுறையாக உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளோரும் இந்தத் தந்திரோபாயத்தையே கொள்கிறார்கள். இதற்குள் சிக்காமல், நாம் மாற்று வழியில் பதிற்பொறியை முன்வைப்பதுவே புதிய அரசியலாகும். அதையே காலம் வற்புறுத்துகிறது. அவர்கள் நம்முடைய கழுத்துக்குச் சுருக்குத் தடத்தை மாட்டுவதற்கு முற்பட்டால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்வது, அந்தச் சுருக்கை அவர்களுக்கே மாட்டிவிடுவது. அதாவது எதிர்ப்பொறியை நாம் வேறு விதமாக உருவாக்குவது. ஆனால், தமிழ்ச் சூழல் இன்னும் காலத்தின் கோரிக்கையைக் கணக்கிற் கொள்ளவில்லை. புதிய தந்திரோபாயங்களைக் குறித்துச் சிந்திப்பதைக் காணோம். காலமாற்றத்தைப் புரிந்து கொள்ளத் தவறி, தம்மைப் புதிய தளத்துக்கு நகர்த்திக் கொள்ள மறுத்து, கடந்தகாலத்தில் உறைந்ததாகவே (Nostalgist) உள்ளது. வழமையைப்போல தேர்தல்களில் வெற்றியைச் சில வேளை பெறக் கூடும். அதுவும் நீண்ட காலத்துக்கல்ல. மற்றும்படி நாட்டுக்கோ தமிழ் மக்கள் உட்பட இலங்கைச் சமூகங்களுக்கோ எந்த நன்மையும் விளையாது. பதிலாகப் பாதிப்புகளே அதிகமாக ஏற்படும். EPRLF வின் சவால்! ஏற்கனவே தொடர்ச்சியாகப் பின்னடைவுகளைச் சந்தித்து நிற்கும் EPRLF, தன்னை விசப் பரீட்சையில் பலியிடாமல் நிதானமாகச் செயற்பட்டு முன் செல்ல வேண்டும். EPRLF இன் இயல்புப்படி அது ஒருபோதுமே இவ்வாறான ஒரு அசட்டுத்தனமான – தவறான தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. பத்மநாபாவின் வழி வந்த EPRLF இன் தன்மையே வேறு. அது பன்முக அடிப்படையில் சிந்திக்கும் பண்பைக் கொண்டது. அதிதீவிர (Extreme) நிலைப்பாட்டைக் கொள்வதில்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் விடயங்களையும் செயல்களின் விளைவுகளையும் மதிப்பிடுவது. மாற்றுக் கருத்தாளர்களையும் விமர்சனங்களை முன்வைப்போரையும் எதிரிகளாகப் பார்ப்பதோ விலக்கி வைப்பதோ இல்லை. பதிலாக அவர்களை நேச சக்திகளாக அரவணைத்துக் கொள்வது. அரசியலை மக்களுக்கானதாக – மக்களின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டும் என்று கருதிச் செயற்படுவது. விடுதலை அரசியலுக்கான பண்புடன் ஜனநாயக அடிப்படைகளைப் பேண முயற்சிப்பது. ஒருபோதும் எதையும் கறுப்பு – வெள்ளையாகச் சிந்திப்பதில்லை. அப்படி எதையும் எடுத்துக் கொள்வதுமில்லை. அது வரலாற்றில் எதிர்கொண்ட சவால்கள் அதனுடைய இந்தத் தன்மைகளாலேயே! கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் இன்றைய EPRLF இவற்றிலிருந்து மீறி – மாறி – விட்டது. இப்பொழுது அது, அறிவுபூர்வமாக எதையும் சிந்திப்பதை விடுத்து உணர்ச்சித் தளத்தில் அதிதீவிர நிலைப்பாட்டில் சிக்கியுள்ளது. அது தொடர்ந்து சந்திக்கும் தோல்வியும் அதனுடைய அடையாளமே இழந்து போவதும் இதனால்தான். இதைப்பற்றி EPRLF முக்கியஸ்தர்களுடன் பேசியபோது, “அது இயக்கக் காலம். விடுதலைப் போராட்ட அரசியல் – புரட்சிகர அரசியற்சூழலாகும். அதைப் பற்றி இனியும் சிந்திக்க முடியாது. இது கட்சி அரசியற் காலம். இங்கே தேர்தல் அரசியலே நடக்கிறது. அதற்கு ஏற்றமாதிரியே நாம் செயற்பட வேண்டும்” என்றனர். “அப்படியென்றால், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி என்ற பெயர் எதற்கு?” என்று கேட்டேன். “தமிழரசுக் கட்சி (Feredal Party) என்ற பெயரில் இயங்கியதைப்போல, பேரளவில்தான் புரட்சியா?” என்றபோது, ஆளையாள் பார்த்துத் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். பிரச்சினை என்னவென்றால், அது தன்னுடைய கடந்த காலத் தவறுகள், ஏற்பட்டிருக்கும் அரசியற் பின்னடைவுகள் அனைத்தையும் சீர்ப்படுத்திக் கொள்வதற்கு (புனிதப்படுத்திக் கொள்வதற்கு) இந்த அதிதீவிர நிலைப்பாடும் தூய தமிழ்த்தேசியமும் அவசியம் எனக் கருதுகிறது. இதனால்தான் அது சிறிதரன், சிவமோகன், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் எனத் தீவிர நிலைப்பாடுடையோரை – புலிகளின் அரசியலுக்கு நெருக்கமாகக் காட்டியோரைத் தன்னுடன் அணைத்துக் கொண்டது. இவர்களின் மூலமாகத் தனக்கொரு புதிய முகத்தை – புதிய தோற்றத்தை உண்டாக்கி விடலாம் எனக் கருதியது. ஆனால், நடந்ததோ வேறு. EPRLF வின் வழியாக அரசியற் படியேறியவர்கள் தொடர்ந்தும் தம்மை EPRLF வின் ஆட்களாக வைத்துக் கொள்ளாமல், தாவிப் பாய்ந்து விட்டனர். ஆகவே தன்னுடைய முயற்சிகளில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் சந்தித்த EPRLF க்கு அடுத்த கட்டம் என்ன என்ற தீராத குழப்பம். அதைச் சரிப்படுத்திக் கொள்ள அது முயற்சிக்கும்போது கிடைத்ததே இந்தப் பொது வேட்பாளர் என்ற கருவூலம். இன்றைய EPRLF அப்படித்தான் சிந்திக்கும். ஏனென்றால், இது 2002 இல் விடுதலைப்புலிகளுடன் சமரசம் செய்து கொண்ட, அவர்களுக்குக் கட்டுப்பட்ட EPRLF. ஆனால், புலிகளைப்போலக் களச் செயற்பாட்டைக் கொண்டதல்ல. அர்ப்பணிப்பு அரசியலை மேற்கொள்ளத் துணிந்ததல்ல. ஏன் தன்னுடைய அடையாளமாக இருந்த பன்மைத்துவச் செயற்பாட்டுப் பாரம்பரியத்தைக் கூடக் கொண்டதுமல்ல. ஆக இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும் இன்றைய EPRLF, தானொரு புதிய சக்தி எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறது. குறிப்பாகத் தமிழரசுக் கட்சியை விடத் தான் ஒரு முக்கியமான தரப்பு – சக்தி என. ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய EPRLF, ரெலோ, புளொட் ஆகியவற்றை இணைத்துப் புதிய கூட்டாகியுள்ளது (DTNA) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கிய EPRLF, அதற்குள் தானே முதன்மைப் பாத்திரத்தை – தீர்மானிக்கும் தகுதியை – எடுத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. அடுத்த தேர்தலில் தன்னுடைய வெற்றியையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கான வியூகங்கள் இவை. ஒரு அரசியற் கட்சி, அதுவும் தேர்தலை மையப்படுத்திச் சிந்திக்கும் கட்சி என்ற வகையில் EPRLF வின் சிந்தனையையும் இத்தகைய அணுகுமுறைகளையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், விடுதலை இயக்கப்பாராம்பரியத்திலிருந்து (விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்திலிருந்து) வந்த EPRLF, மக்கள் அரசியலை, மக்கள் நலனை விட்டு, முற்றாகத் தள்ளி நிற்பதே கேள்விக்குரியது. மட்டுமல்ல, விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பதை விட்டு விட்டு உணர்ச்சிகரமாக அது தன்னுடைய அரசியலை மேற்கொள்ள முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் விரோதச் சக்தியாகியதை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள தமிழ்த்தேசிய அரசியற் தலைவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆயுதப்போராட்ட அரசியல்,தேர்தல் வழியான அரசியல் இரண்டிலும் நீண்ட அனுபவம் உண்டு. சரிகளையும் தவறுகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர். விடயங்களை ஆழமாகப் பார்க்கக்கூடியவரும் கூட. அரசியல் உரையாடல்களில், விடயங்களை ஆழமாகவும் நறுக்கெனவும் பேச வல்லர். இந்திய மத்திய அரசுத்தரப்பு, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் உள்ள பல்வேறு தரப்புத் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதானிகள் எனப் பல தரப்போடும் அரசியல் ரீதியான ஊடாட்ட உறவும் அறிமுகமும் உண்டு. இப்படியான சிறப்புத் தகுதிகள் எல்லாம் இருந்தாலும் அவரிடமுள்ள பிரச்சினை, அவர் தான் உள்ளுர நம்புகின்ற அரசியலை விட, தான் தொடர முயற்சிக்கின்ற அரசியலுக்குமிடையில் தத்தளிப்பதேயாகும். நிச்சயமாக அவருக்குத் தெரியும், தமிழர்களுடைய அரசியல் வழிமுறை தற்போது தொடரும் எதிர்ப்பு அரசியலில் இல்லை என. அதை விட்டால் தன்னை (EPRLF ஐ) மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று கருதுகிறார். அச்சமடைகிறார். இது தேவையற்ற அச்சம். காலாவதியான ஒன்றையிட்டுக் கவலைப்படுவதற்கு என்ன உண்டு. உண்மையில் நிகழ்காலத்துக்கான – எதிர்காலத்துக்கான அரசியலைச் செய்யவில்லை என்றே அச்சமடைய வேண்டும். கவலைப்பட வேண்டும். அடுத்தது, அவரிடமிருக்கும் உணர்ச்சி வசப்பட்ட நிலை. எதையும் சந்தேகத்தோடு நோக்க முற்படுவது. எதிர்நிலையாக எண்ணுவது. எங்கும் கருத்தாதிக்கம் செய்ய முயற்சிப்பது. இது அவருடன் நெருக்கமாகப் பழகுவோர் அனைவருக்கும் தெரியும். பரஸ்பரத்தன்மைக்கும் இணக்கத்துக்கும் பல தரப்புகளுடனான கூட்டுப் பயணத்திற்கும் இது பயன்தராது. தலைமைத்துவம் என்பது பிறரைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஈர்ப்பு விசைக் குணவியல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அண்மைய உதாரணங்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தியா கூட்டணியின் தலைவருமான ராகுல் காந்தி. எல்லாவற்றுக்கும் அப்பால் கடந்த காலப் புதைகுழியிலிருந்து நிகழ்காலப் பரப்பிற்கு தமிழ் அரசியலைச் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீட்டுக் கொண்டு வர வேண்டும். சமகால அரசியல் என்பது சமகாலத்துக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர, தற்போது மேற்கொள்ளப்படும் கடந்த கால அரசியல் அல்ல. அப்படியாக இருந்தால் அது தற்போது (சமகாலத்தில்) மேற்கொள்ளப்படும் கடந்த கால அரசியலேயாகும். அதை ஆவிகளின் அரசியல் என்றே கூற முடியும். அப்படித்தான் உலகமும் கருதும். இன்று நாம் நம்மை ஒரு முழுமையான ஜனநாயக அரசியற் தரப்பினர் என்று நிரூபிக்க வேண்டும். அதேவேளை நவீனத்துவவாதிகளாகவும். நவீனத்துக்குரிய அடிப்படைகளான ஜனநாயகம் (Democrasy) , பன்மைத்துவம் (Plarasim) நவீனத்துவம் (Modernity) போன்றவற்றைக் கொண்டிருப்போராகவும். அதுவே உலக அங்கீகாரத்துக்குரியது. அவற்றை உள்ளடக்கியதாகவே தமிழ் அரசியலை முன்னெடுக்க வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளம் உண்டு. 00 https://arangamnews.com/?p=10843
  18. கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுகள் மற்றும் 40 திணைக்களங்களில் மாற்றம்! -ஆளுநரால் புதிய வர்த்தமானி வெளியீடு ! kugenJune 6, 2024 கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாற்றியமைத்துள்ளதுடன், அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார். ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் 8,031 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2695 வேலைத்திட்டங்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடத்தில் வலுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, புதிய கட்டமைப்பினை உருவாக்குவதற்காக இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே இவ்வாறான ஒரு அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.battinews.com/2024/06/05-40.html
  19. போரில் தந்தையை இழந்த மாணவி சாதனை! (செல்வன்) அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் மணிவண்ணன் துஷாகா 3 ஏ பெறுபேறுகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 124 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரிலே தன்னுடைய தந்தையை இழந்த மாணவி தாயின் அரவணைப்பில் வாழ்ந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் அரச உத்தியோகத்தராக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலே பணியாற்றி வருகின்ற தாயாருடைய அரவணைப்பில் வாழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலே சாதனையை நிகழ்த்தியுள்ளார் மகள் மருத்துவராக வரவேண்டும் என்ற கணவனின் கனவை தனது மகள் நிறைவேற்றியுள்ளதாகவும் இதனால் தான் பெருமை கொள்வதாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார் ஒரு பெண் தலைமைத்துவ குடும்பமாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கற்பிக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திலே தான் உழைத்து வந்ததாகவும் அவ்வாறு தன்னுடைய மகள் இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கின்றமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தாய் தெரிவித்துள்ளார். (ப) காணொலி: https://fb.watch/swwBMCkvvh/ https://newuthayan.com/article/போரில் தந்தையை_இழந்த_மாணவி சாதனை!
  20. கீரிமலை அரச தலைவர் மாளிகையில் இரகசிய நில அளவை யாழ்ப்பாணம் நில அளவைப் பணிமனையிரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லையாம்! (புதியவன்) கீரிமலை அரச தலைவர் மாளிகையில் அறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக நில அளவைப்பணிகள் இடம்பெற்றுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஜே/233 கிராம அலுவலர் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான நிலம் மற்றும் சைவ அடையாளங்களை அபகரித்து மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இரகசியமாக அரச தலைவர் மாளிகை அமைக்கப்பட்டது. இந்த அரச தலைவர் மாளிகையானது கோட்டபாய ராஜபக்ஷவின் காலத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடந்த ஆண்டு தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படுவதாக 50 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் எழுதப்பட்டது. தனியார் காணிகளைச் சுவீகரிக்க யாழ்ப்பாணம் நில அளவைப் பணிமனை 5 தடவைகள் முயன்றபோதும் நில உரிமையாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் அம்முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டன. இதனால் தமது அளவீட்டுப் பணிகளை சீராகச் செய்ய முடியவில்லை என யாழ்ப்பாணம் நில அளவைப் பணிமனையால் தலைமை நில அளவைப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து கொழும்பு தலைமைப் பணிமனையில் இருந்து கடந்த மாதம் 16 ஆம் திகதி வருகை தந்த அலுவலர்கள் கடற்படையினரின் உதவியுடன் இரகசியமாக உள்நுழைந்து அந்தப் பிரதேசத்தை முழுமையாக அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்து விட்டு அந்தப் பிரதேசத்துக்குரிய கிராம அலுவலர்களிடமும் கையொப்பங்களைப் பெற்றுச்சென்றுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் நில அளவைப் பணிமனையினரிடம் வினவியபோது இவ் அளவை தொடர்பில் தங்களிடம் எந்தவொரு தகவலோ, அளவீட்டு வரைபடமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/கீரிமலை_அரச_தலைவர்_மாளிகையில்_இரகசிய_நில_அளவை;
  21. ”பொது வேட்பாளருக்கு தகுதியானவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம்” அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேடிவந்த வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். இலங்கை வரலாற்றில் சிங்கள தலைவர் ஒருவர் சமஸ்டியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டபோது, வாக்களிக்க வேண்டாம் என தூண்டிய இப்பொழுது உள்ளகட்சிகள்தான் அப்பொழுதும் இருந்துள்ளன. மக்களிற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் தகுதியோடு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 22 பேரும் எவ்வாறு பாராளுமன்றம் வந்தார்கள், சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு என்ன நடந்தது என்பதை அறிவோம். 48 வீதம் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டவர் பெற்றிருந்தார். அது இலங்கை வரலாற்றில் நடக்காத விடயம். குற்றவாளிகள்தான் தக்களுடைய ஊத்தைகளையும், குற்றங்களையும் மறைப்பதற்கு புதிதாக கண்டுபிடித்தது போல தனி வேட்பாளரை பிரேரிக்கின்றார்கள். அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் அதற்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம். அவ்வாறு மக்கள் மத்தியில் தகுதியானவர்கள் எல்லோரும் ஒதுங்கி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை போட வேண்டும் என்ற கருத்துக்கு நான் மாறாக உள்ளேன். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேசும்போது என்னைப் போன்றோரின் ஆலோசனைகளை பெறுவதில்லை. இவ்வாறான முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசும்போது அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை பெற வே்ணடும். அவ்வாறு பெறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் சுத்தமாகவே உள்ளது. 2005ம் ஆண்டு முதல் தடவையாக சமஸ்டியை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவருக்கு மாறாக செயற்பட்டு அல்லது மக்களை தூண்டிவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். விடுதலைப்புலிகளை மறைமுகமாக தோற்கடிக்கும் நோக்கத்தோடு, யார் விடுதலைப்புலிகளை அழிப்பேன் என்று யாழ்ப்பாணத்தில் ஆரூடமிட்டாரோ அவரை ஆதரித்தீர்கள். கடந்த கால வரலாற்றை பார்க்கின்ற போது நீங்கள் பதவிக்காகவும், பலவித நன்மைகளிற்காகவும் உங்களிற்காக உழைத்தீர்களேயன்றி, மக்களிற்காக உழைக்கவில்லை. மக்களிற்கு 2005ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை தடுத்த நீங்கள் யாரும் அரசியலில் இருக்க தகுதியற்றவர்கள். அந்த தேர்தலில் சிங்கள மக்கள் 48 வீதம் வாக்களித்திருந்தார்கள். எமது மக்களை 2 வீதமாவது வாக்களிக்க விட்டிருந்தால் இன்று சமஸ்டி ஆட்சி இருந்திருக்கும். இவர்களில் யாரேனும் ஒருவர் தனது தகுதியை வைத்து தனது வரலாற்றை வெளியிடட்டும் பார்ப்போம். என்னைப்பொறுத்தவரையில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். 3 லட்சம் மக்களை காப்பாற்றுங்கள் என்று நான் கூறியபோது நீங்கள் வெளிநாடுகளில் இருந்தீர்கள். நான் மீண்டும் மீண்டு அந்த மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரச்சொன்ன போது நீங்கள் போகவில்லை. அவ்வாறு கடந்த நாட்களில் மக்களை கொண்டு சென்று நடுக்கடலில் தள்ளிவிட்டு, இன்று கரம் நீண்டுகின்றீர்கள். உங்களால் அரசியல் செய்ய முடியாது ஒதுங்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/பொது-வேட்பாளருக்கு-தகுத/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.