Everything posted by கிருபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதினெட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி விக்கெட்டுகளை சடசடவென்று இழந்து, 12 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களுடன் சுருண்டது. உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து 2014 இல் சிறிலங்காவுக்கு எதிராக இதே 39 ஓட்டங்களுடன் சுருண்ட சாதனையோடு உகண்டா சேர்ந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் அஹீல் ஹொசெயின் 5 விக்கெட்டுகளை 11 ஓட்டங்கள் மட்டும் கொடுத்துக் கைப்பற்றியிருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 134 ஓட்டங்களால் வெற்றியீட்டிது அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (09 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 18) முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா? 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 18 பேர் இந்திய அணி வெல்லும் எனவும் 05 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இந்தியா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி நிலாமதி குமாரசாமி தமிழ் சிறி P.S.பிரபா பிரபா USA வாதவூரான் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே பாகிஸ்தான் தியா புலவர் நுணாவிலான் ஏராளன் நந்தன் இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இப்படிப் பேரம் பேசித்தான் @விசுகு ஐயா அள்ளி வழங்குகின்றார் போலிருக்கு.. 🙃
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதினாறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து டேவிட் மில்லரின் நிதானமாக ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினேழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 165 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினேழு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 28 2 பிரபா USA 26 3 ரசோதரன் 26 4 நந்தன் 26 5 ஈழப்பிரியன் 24 6 சுவி 24 7 ஏராளன் 24 8 வாதவூரான் 22 9 குமாரசாமி 20 10 தியா 20 11 தமிழ் சிறி 20 12 புலவர் 20 13 நுணாவிலான் 20 14 கிருபன் 20 15 கந்தப்பு 20 16 வாத்தியார் 20 17 எப்போதும் தமிழன் 20 18 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 20 நிலாமதி 18 21 P.S.பிரபா 18 22 அஹஸ்தியன் 18 23 கல்யாணி 18
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
- விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்
விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன் தேசம்நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி? தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர். வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே. இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வதந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு. எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு. கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர். இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது. 2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர். உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார். ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வதந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம். இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள். https://www.thesamnet.co.uk/?p=105119- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இதுக்கு இலகுவான பதில். தலைவருக்குப் பிறகு தமிழரிடம் நேர்மையான தலைவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள். அதை இந்தப் பதினைந்து வருடங்களில் புரியாமல் இருப்பவர்களின் மண்டைகளைக் கழுவி இன்னும் தங்களின் சுயநல வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பதற்கு நிதி சேர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் தாம் ஏமாறவில்லை என்று நம்ப நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
காவலுக்குப் போய்நின்றால் தேசியம் வளர்ந்துவிடுமாக்கும்😂 அதுக்கு பணம் கொடுத்து நிறுவனங்களை அமர்த்தியுள்ளார்கள்! அந்தளவுக்கு பணம் கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்! தேசிய சேவை செய்ய இப்ப சம்பளம் கொடுத்தால்தான் உண்டு!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
10 ஓவர்களில் 34 அடித்துவிட்டார்கள்! வெல்வார்கள்! பயப்படாதீர்கள்😂- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நாம் ஒரு அமைப்பிலும் இருந்து நாமே தலைவர்கள் என்றும், இடையிடையே நாமே மீண்டும் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டிகின்றோம் என்றும் கோமாளித்தனம் செய்யவில்லையே😃 இவர்கள் பைல்களைக் கட்டி வைத்திருப்பது அதைக் காட்டி விசுகு ஐயா போன்றவர்களிடம் இருந்து மாதா சந்தா வாங்கத்தான் என்று தெரிகின்றது😁. அவர்கள் வேறு ஒருவரிடமும் கொடுக்கவும் மாட்டார்கள். அமைப்பைப் கலைத்துவிட்டு போகவும் மாட்டார்கள்.. பெரிதாகச் செய்ய பெரிய இரகசியத் திட்டம் எல்லாம் இருக்கு என்று சொல்லிச் சொல்லியே இன்னும் சந்தா கறப்பார்கள்! இங்கு சம்மர் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு கிழமையும் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடக்கும். ஆனால் சேர்ந்து செய்யமாட்டார்கள். போன கிழமை தமிழீழ அரசியல்துறை என்று தலைமைச் செயலகக்காரர்கள் நடத்தினார்கள். நாடு கடந்த அரசாங்கமும் போன வருடம் நடத்தியது. இந்த வருடமும் நடாத்துவார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் விளையாடுபவர்களைத் தவிர மக்கள் பெரிதாக வருவதில்லை. நிறையப் பணம் செலவு செய்துதான் இப்படியான போட்டிகள் நடாத்தமுடியும். அதை பாங்க்ரோல் செய்ய யாரிடம் போகின்றார்கள் என்று தெரியவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
பைல்களை வைத்து இந்த 15 வருடங்களில் எவ்வளவு தூரம் முன்நகர்ந்திருக்கின்றார்கள்? சிறிலங்கா அரசை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவிடம், ஐ.நா.விடமும் இல்லாத பைல்களா? சிதறு தேங்காய் போல சுக்குநூறாகப் பிரிந்து ஒன்றையும் உருப்படியாகச் செய்யாத கூட்டமாக மாறிவிட்டனர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் அரசியல் செய்பவர்கள். அதனால் பெரும்பான்மையான மக்கள் இவர்களைக் கண்டுகொள்ளப்போவதில்லை.- விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு!
விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்படம் ஒன்றைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. The image is widely credited with motivating the global environmental movement and leading to the creation of Earth Day, an annual event to promote activism and awareness of caring for the planet. Speaking of the moment, Anders said: "We came all this way to explore the Moon, and the most important thing that we discovered was the Earth." https://thinakkural.lk/article/303368- யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு.
மாணவி வஜினா மேலும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.🙌- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதின்நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 75 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினைந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைந்த வெற்றி இலக்கை விக்கெட்டுகளை இழந்த தட்டுத்தடுமாறி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினைந்து போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 24 2 ஈழப்பிரியன் 22 3 பிரபா USA 22 4 ரசோதரன் 22 5 நந்தன் 22 6 சுவி 20 7 ஏராளன் 20 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாதவூரான் 18 12 கிருபன் 18 13 வாத்தியார் 18 14 எப்போதும் தமிழன் 18 15 கல்யாணி 18 16 வீரப் பையன்26 16 17 நிலாமதி 16 18 புலவர் 16 19 நுணாவிலான் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14 முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
கண்டியுங்கள். ஆனால் அவர்கள் 15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது? எப்படியான அழுத்தங்களை, லொபியிங்கை யார்மீது பிரயோகிக்கின்றார்கள்? இவர்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளும் இல்லை, புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் இல்லை. வெறும் zoom மீற்றிங்கும், தேநீர், வடையோடு நேரடியாக சந்தித்து அறிக்கைவிடும் கோமாளிக்கூட்டம்- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன் தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும். 10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முட்டை நல்ல புஸ்டியான ஆகாரம் @கந்தப்பு. ஆசான் ஜெயமோகன் தினமும் காலையில் நாலு அவித்த முட்டையை நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்த்தூளோடு சாப்பிடுகின்றவராம்! உடம்புக்கு நல்லது! https://www.jeyamohan.in/198775/- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் தமிழில் வெளுத்துவாங்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை. மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் கண்டுகொள்ளாமல் விடுகின்றார்கள். இதனால்தான் ரணில் தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்தில் இருக்கின்றார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்களாதேஷ் வெல்லவேண்டும்! அப்பத்தான் அடுத்த ரவுண்ட்ஸிலும் புள்ளிகள் வரும்🤗- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை சனி (08 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 14) முதல் சுற்று குழு C : சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 19 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் நால்வர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பிரபா USA வாதவூரான் நந்தன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 15) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 19 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் நால்வர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பங்களாதேஷ் சுவி கிருபன் ரசோதரன் கோஷான் சே இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? 16) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA ஒரே ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் ஏனைய 22 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா சுவி புலவர் P.S.பிரபா நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் கந்தப்பு நந்தன் நீர்வேலியான் கோஷான் சே இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி கிருபன் அஹஸ்தியன் வாத்தியார் எப்போதும் தமிழன் கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?- புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி பிரபாகரன் சகோதரர் குற்றச்சாட்டு
புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி பிரபாகரன் சகோதரர் குற்றச்சாட்டு UPDATED : ஜூன் 07, 2024 01:45 AM கொழும்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக கூறி, புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடப்பதாக, பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் தனி நாடு கேட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், 2009ல் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இருப்பினும், பிரபாகரன் உள்ளிட்டோர் உயிருடன் இருப்பதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரர் மனோகரன், அதை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் முதன்முறையாக வாய் திறந்ததை அடுத்து, மனோகரனின் பேட்டியை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. அதில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் 2009ல் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்தனர். இந்த உண்மையை ஒப்புக்கொள்வது அவசியம். ஆனால், அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. பிரபாகரனின் சகோதரன் என்ற முறையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது என் கடமை. இளம்பெண் ஒருவர், தான் பிரபாகரனின் மகள் துவாரகா எனக்கூறி, இலங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பிரபாகரனும், அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்தது உண்மை. எனவே, இந்த விவகாரத்தில் மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://www.dinamalar.com/news/world-tamil-news/-prabhakaran-brother-accused-of-cheating-diaspora-tamils--/3642092- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடையமுடியாமல் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கனடா வெல்லும் எனக் கணித்த @kalyani க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த ஏனைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை! பதின்மூன்றாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 கல்யாணி 18 14 வீரப் பையன்26 16 15 நிலாமதி 16 16 புலவர் 16 17 நுணாவிலான் 16 18 வாதவூரான் 16 19 கிருபன் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லாரும் சைட் ட்ராக்கில போக கனடா அயர்லாந்தை வெல்லப்போகுது👽 அயர்லாந்து 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 50 ரன்ஸ்தான்!😱- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் என்னைப் போல விண்ணன் இல்லை! நானெண்டால் டக்கெண்டு “அடப்பேயா! என்ன விழல்க்கேள்வி கேட்கிறாய்! 10000 மைல் போற சாத்தான் மிஸைல்ஸை 500 மைலுக்குள்ள இருக்கிற உக்கிரேனுக்கு பாவிக்கிறதுக்கு ரஷ்யன் என்ன ஆட்டு மூளையே வச்சிருக்கிறான்! உக்கிரேனுக்கு அடிக்க சோவியத்கால டப்பாக் குண்டுகளுக்கு ரெக்கை கட்டி ஜிபிஎஸ் நவிகேசன் போட்டு அடிஅடியெண்டு அடிக்கிறான்! பத்தாதே?” எண்டு சொல்லியிருப்பன்👻 - விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.