Everything posted by கிருபன்
-
யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்!
யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும் , அதற்காக 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும் என சில பெண்களின் புகைப்படங்களில், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட புகைப்படங்களை விளம்பரமாக பிரசுரிக்கின்றனர். அவற்றை நம்பி சில அந்த விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை கேட்கும் போது, குறித்த தனியார் விடுதியில் பெண் உள்ளதாக கூறி பணத்தினை வைப்பிலிடுமாறு கூறி பணத்தினை பெற்றுக்கொள்கின்றனர். பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து அந்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய தயங்குவதால் , தொடர்ந்து குறித்த கும்பல் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை குறித்த கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பாவித்து மோசடிகளில் ஈடுபடுவதனால் , குறித்த தங்குமிடங்களில் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே காவற்துறையினர் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/221253/
-
யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்!
யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் காவற்துறை தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/221251/
-
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
விஜய்யை வைத்து ஸ்டாலின் நிகழ்த்தும் அரசியல் விளையாட்டு! -சாவித்திரி கண்ணன் கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்..! விஜய்க்கு ஏன் இவ்வளவு ‘அட்டென்சன்’ தர்றீங்க..! மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைம்பாங்க. அதைப் போல விஜய் சும்மா இருந்தாலும், மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கித் தள்ளுகிறார்கள்…! நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம்! அதில் இருந்து தற்போது மீண்டாரா விஜய் …? என்பதே தெரியவில்லை. அநியாயத்துக்கு அரண்டு கிடக்கிறார். மூன்றாவது நாள் ஒரு வீடியோ போட்டதோட சரி. அதுக்கு பிறகு பேச்சு, மூச்சே இல்லை. ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், பொழுதும் விஜய் தான் இங்கு பேசுபடு பொருளாக உள்ளார். இதற்கு உபயம் அதிகாரத்தில் இருப்பவர்களே..! அவங்க ஐ.டி விங்க் ஒரு பக்கம் ரெக்கை கட்டிப் பறக்குது. முக்கிய மெயின்ஸ்டீர்ம் மீடியாக்கள் கூட விஜய்யை வறுத்தெடுக்கின்றன. இது பத்தாது என்று எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அறுவுஜீவிகள் என அனுமார் வாள் நீளத்தை விட அதிகமான அளவில் கூட்டறிக்கை வெளியிட்டு விஜய்யை வெளுத்து வாங்குகிறார்கள்! போதாக்குறைக்கு போலீஸ்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் வேறு விலாவாரியாக பேட்டி தந்து விஜய் மீது தான் தவறுள்ளது என ‘எஸ்டாபிளீஸ்மெண்ட்’ செய்கிறார்கள். திமுக கூட்டணிக் கட்சிகளோ.., தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உறவை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக விஜய்யை விளாசித் தள்ளுகிறார்கள். இதுல திருமாவளவன் தான் ஸ்டாலினே வியக்கிறா மாதிரி பேசி அதிகமாக ஸ்கோர் பண்ணிட்டாருன்னு சொல்லலாம். ஒரு வகையில் ஸ்டாலினின் மனசாட்சியாக அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்தாரோ என்னவோ..? இதுல நான் முற்றிலும் எதிபாக்காதவர் ஐயா வீரமணி. அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர் விஜய்யைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு பெரிய எதிரியிடம் மோதுவதைப் போல உணர்ச்சிவசப்பட்டு பேசறார். பெரியாரைப் பற்றி சீமான் பேசிய போது கூட இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருப்பாரா? தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல நீதிபதியே நிதானமின்றி இவ்வளவு நீட்டி முழக்கி விஜய்யை தாக்குகிறார். அவர் வகிக்கும் மிக உயர்ந்த பொறுப்புக்கு முன் விஜய் ஒன்னுமே இல்லை. வழக்கில் விசாரணையை நடத்தி சொல்லும் தீர்ப்பின் வாசகத்தில் நீதியை நிலை நாட்டி நீதிபதி பிரகாசிக்க வேண்டுமேயன்றி, வரம்பு மீறி கருத்துக்கள், அபிப்ராயங்களை அள்ளி வீசுவது அவரது மாண்புக்கு அழகல்ல. விஜய்க்கு இளைய தலைமுறையின் மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருந்தாலும், இது வரைக்குமான விஜய் அரசியலை நான் அனுமானித்த வகையில் அவர் பொது வாழ்க்கைக்கான மனிதராக உருவாகலை. ஒரு தேர்தலுக்கு பிறகு, விஜய் அரசியலில் தொடர்வாரா? என்பதும் என்னை போன்றோருக்கு சந்தேகமாகவே உள்ளது. அவர் ஒரு நிழல் ஹீரோ மட்டும் தானேயன்றி, நிஜ ஹீரோவல்ல. உண்மையில் நிஜ ஹீரோவாக இருந்திருந்தால், நடந்த அசம்பாவித சூழலை நன்கு கையாண்டு தன்னை நிரூபித்து இருப்பார். என்னை பொருத்த வரை விஜய் விசயத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போவது ஆட்சியாளர்களுக்கு நல்லது. அவரை அதிகமாக பேசுபடு பொருளாக்கி, பெரிய ஆளாக சித்தரித்து வளர்த்து விடாதீர்கள்..! நீங்கள் செய்வதனைத்தும் அவருக்கு அனுதாப அலையை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. நிகழ்வு நடந்த அன்று இரவே ஒரு நபர் ஆணையத்தை அறிவித்து நீதிபதி அருணா ஜெகதீசனும் களத்தில் இறங்கிவிட்டார். அடுத்ததாக ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவையும் களத்தில் இறக்கி விட்டீர்கள். உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. உண்மைகள் வெளி வரும் வரை ஏன் பொறுமை காட்ட முடியவில்லை…? கரூரில் நிகழ்வு நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் அஸ்ரா கர்க் ஐ.ஜி எதையும் பேசவும் துணிவின்றி மிக பலவீனமாக இருக்கும் ஒருவரை தொடர்ந்து கேரக்டர் அசாசினேஷன் செய்கிறீர்கள். அந்தக் கட்சியின் முதல் நிலைத் தலைவர்களே தலைமறைவாகி அஞ்சி அரசியல் நடத்தும் அவல நிலையில் தொடர்ந்து கடுமையான ஏவுகணைகள் வீசப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது..? தொடர்ந்து ஒரு தரப்பை விரட்டி, விரட்டி அடித்தால், அவர்களுக்கும் வேறு வழியின்றி துணிவு பெற்று கடும் எதிர் அரசியல் செய்யும் நிலைக்கு தயாராகிவிடுவார்கள்! இது வேலியில் போகிற ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்ட கதையாகிவிடும். இப்படித்தான் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்ற ஒரு கடிதத்தை ஜெயலலிதா எழுதி பத்திரிக்கைகளுக்கு தந்தார். அதை மோப்பம் பிடித்து நடராஜன் அந்த கடிதத்தை வழியிலேயே கொண்டு சென்றவரிடமிருந்து கைப்பற்றி ரகசியமாக ஒளித்து வைத்தார். இதை உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட கலைஞர் காவல்துறையை அனுப்பி, அதை நடராஜன் வீட்டில் கைப்பற்றி ஊடகங்களில் வெளிப்படுத்தினார். விளைவு, எதிர்பாராத வகையில் மீண்டும் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டது. அதைப் போலத் தான் விஜய் விவகாரத்தில் பதற்றப்பட்டு தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ‘அலர்ட்’ செய்து, ‘ஓவர் ரியாக்ஷன்’ செய்ய வைக்கிறார், ஸ்டாலின். தான் எதுவும் பேசாமல் கமுக்கமாக இருந்து கொண்டு, இப்படி சுற்றிலும் உள்ளவர்களை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டைத் தான், தொடக்கம் முதல் முதலமைச்சர் ஸ்டாலின், தன் அதிகார ஹோதாவில் நிகழ்த்திக் கொண்டுள்ளார். நிகழ்வதை அதன் போக்கில் இயல்பாக அணுகாமல், வலிந்து விஜய்யை பலவீனப்படுத்தும் ‘நேரசனை செட்’ செய்து கொண்டே இருந்தால்.., அது இயற்கையின் விதிப்படி எதிர்வினையாற்றிவிடும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/22967/stalin-politics-about-vijay/
-
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
அரசியல் முதிர்ச்சியின் இலக்கணமாகும் முதல்வர் ஸ்டாலினும், திராவிட எதிர்ப்பாளர்களின் சதி லீலைகளும்! 6 Oct 2025, 8:08 AM ராஜன் குறை கரூரில் நிகழ்ந்த பெரும் துயரச் சம்பவத்தை, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மிகச் சிறப்பாக, பொறுப்புடன் கையாண்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன என்று அனைவருக்கும் இலக்கணம் வகுக்கும் விதமாக அவர் செயல்பாடு அமைந்துள்ளது. செய்தி அறிந்ததும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரை, அருகமை மாவட்ட அமைச்சரை நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை, சிகிச்சைகளை மேற்பார்வையிடச் சொன்னார். சுகாதாரத் துறை அமைச்சரையும் விரையச் சொன்னார். நிலைமையின் தீவிரம் தெரிந்ததும் தானே நள்ளிரவில் விரைந்து சென்றார். அஞ்சலி செலுத்தினார்; ஆறுதல் கூறினார். விபத்திற்குக் காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய், அவரைக் காண வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க முயலாமல், விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தபோது, முதல்வர் கரூர் செல்ல விமானம் ஏறினார். முதல்வர் ஒரு வார்த்தை கூட மக்கள் கூடக் காரணமான, விபத்திற்குப் பிறகு களத்தில் நிற்காத தமிழக வெற்றிக் கழகம், அதன் தலைவர் விஜய் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. உடனடியாக மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார். திராவிட இயக்க எதிரிகள் உடனே சதிக் கோட்பாடுகளைப் புனைந்தனர். சற்றுக் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க கலவரத்தைத் தூண்டியது என்றனர். காவல்துறை வேண்டுமென்றே கூட்டம் நடந்த இடத்தைக் கொடுத்தது, விபத்தைத் தடுக்கவில்லை என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர். ஆனால் முதல்வர் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு பிறரைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக எந்த தலைவரும் மக்கள் இப்படி பாதிக்கப்படுவதை விரும்ப மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களையும் மரியாதைப் படுத்தினார். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பதட்டம் உருவாகக் கூடாது என்ற வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பல விவரங்களை, காணொளிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விஜய் கடுமையாக விமர்சித்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து யதார்த்தமாக நடந்தவற்றை விளக்கினார். விஜய் தன்னைப் பற்றி பேசும் முன்பே கூட்ட த்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததை காணொலிகள் மூலம் விளக்கினார். கூட்ட த்தில் நெரிபட்ட தொண்டர்களே விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கவனத்தைக் கவர செருப்புகளை வீசியதை விளக்கினார். அவருக்கு எந்த பதட்டமும், குழப்பமும் இல்லை. உணர்ச்சி வசப்படவில்லை. மிகுந்த பொறுப்புடன் பேசினார். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிச்சயம் பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்பதால் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும், நிர்மல் குமார் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரிய வழக்குகள், பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை ஆதலால் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களாக முன்வந்து வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை. நடிகர் விஜய் சென்னையில் கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து சில நிமிடங்கள் பேசி ஒரு காணொளி மட்டும் வெளியிட்டார். அதில் அவர் சமூக நாகரீகம் கருதி ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. தனக்குள்ள பொறுப்பை ஏற்கவில்லை. முதல்வரை விளித்து பழிவாங்க வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக சவால் விடுத்தார். இத்தனை உயிரிழப்பிற்கு அவர் நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பதால் அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூறினர். கைது செய்யாததற்காக முதல்வரைக் கண்டித்தனர். ஆனாலும் முதல்வர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆணையத்தின் அறிக்கை விஜய் பொறுப்பாளி என்று கூறினால் பிறகு வழக்குத் தொடர்ந்தால் போதும் என்ற நிலையில் அவரைக் கைது செய்து பிறகு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் இந்த துயர நிகழ்வு அரசியல் மயமாவது தேவையில்லை என்று அமைதி காத்தார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டாமல், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுப்பதே முக்கியம் என்று அறிவித்து தன் தலைமையின் மாண்பினை, அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்ட தன் பதவியின் கெளரவத்தை வெளிப்படுத்திக் காட்டினார். தமிழக வெற்றிக் கழகமும், நடிகர் விஜயும் இந்த சிக்கலை எளிதில் கடந்திருக்க முடியும். இந்த நிகழ்விற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு, காவல்துறை ஒத்துழைப்புடன் பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தால் அவர்கள் இப்படி முடங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் நோக்கமே எப்ப டியாவது அரசின் மீதும், ஆளும் கட்சி மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதாகவே இருந்ததால் அவர்களால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முடியவில்லை. நீதி மன்றத்திலும், பொது மன்றத்திலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து அம்பலப்பட்டு நிற்க நேர்ந்திருக்கிறது. தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், நேரலையில் தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பிய காட்சிகள் யாவும் விபத்து எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ளும் விதமாகத்தான் உள்ளன. ஆம்புலன்ஸ் சதி, மின்சார துண்டிப்பு சதி, தடியடி, செருப்பு வீச்சு சதி என அனைத்துக் கற்பிதங்களையும் காணொளிக் காட்சிகள் பொய்யாக்குகின்றன. விஜய் தாமதமாக வந்தது, தன் வாகனத்திற்குப் பின்னால் ஒரு மக்கள் திரளைத் திரட்டி தன்னை சந்திக்கக் காத்திருந்தவர்களுடன் கலக்க விட்டு நெரிசலை ஏற்படுத்தியது ஆகியவையே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணங்கள் என்பதைக் காணொளிகளைப் பார்த்து அறிய முடிகிறது. இதை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கடப்பதுதான் நேர்மை என்பதைவிட அதுவே சுலபமானதும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக அரசை, ஆளும் கட்சியை குறை கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைப்பது சிறுபிள்ளைத்தனம். பாரதீய ஜனதா கட்சியின் தொடரும் சதி லீலைகள் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி இப்போதுதான் வெளிப்பட்டது என்பதல்ல. தி.மு.க 2016 தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டமன்றப் பெரும்பான்மையை தவற விட்டது. அடுத்த ஆண்டே ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஸ்டாலின் கட்சித்தாவல்களை ஊக்குவித்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுதான் ஆட்சியமைப்பேன் எனத் தெளிவுடன் இருந்தார். ஜெயலலிதா நோயுற்றபோதே முதல்வர் பொறுப்பை வகித்து வந்த, அவர் மறைந்தவுடன் முறையாகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும் சரி, பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த சசிகலா அம்மையாரும் சரி, பாரதீய ஜனதா கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராகத்தான் இருந்தனர். அரை நூற்றாண்டு வரலாற்றில், தி.மு.க மாநில அடையாளத்தில், அதன் சுயாட்சியில் மையம் கொண்டும், அ.இ.அ.தி.மு.க அகில இந்திய அடையாளத்தை அதிகம் அனுசரித்தும், ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதாகவும் விளங்கி வந்துள்ளதை கவனமாக ஆராய்ந்து அறியலாம். இப்படியெல்லாம் இருந்தும் அ.இ.அ.தி.மு.க கட்சியைப் பிளக்க முனைந்தது பாஜக. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கும்படி நான்தான் கூறினேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் பாஜக-வின் முக்கிய ஆலோசகர் குருமூர்த்தி. ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜகவும் ஒத்துழைத்தது. சசிகலா பதவியேற்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் தினகரனும், சசிகலாவும் கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாத்து ஒ.பி.எஸ் கலகத்தை முறியடித்தனர். உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கிடந்த தீர்ப்பு அந்த நேரம் வெளியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறை சென்றார் சசிகலா. அடுத்த காட்சி ஆர்.கே.நகர் தேர்தல். அதில் டி.டி.வி.தினகரன் போட்டியிட, வெற்றிபெற்றால் அவர் முதல்வராகும் வாய்ப்பு தெரிந்தது. அதை பாஜக விரும்பவில்லை என்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. அப்படியும் அவர் வென்றுவிட அவர் ஆதரவாளர்களான 18 ச.ம.உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அவர்கள் தடாலடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸின் 11 ச.ம.உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமியுடன் இணைத்து, தினகரனை வெளியேற்றி புதிய ஏற்பாட்டைச் செய்தது பாஜக. இதையும் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாகக் கூறினார். பிரதமர் கூறித்தான் நான் இணைந்தேன் என்றார். இதில் முக்கியமானது என்னவென்றால் இத்தனை குழப்பத்திலும், ஒரு பிரிவு அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தான் ஆட்சியமைக்கலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயலவேயில்லை. அமைதி காத்தார். கலைஞர் மறைந்து அவர் தலைமைப் பொறுப்பேற்றதும், பாஜக-வை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதுதான் தன் அரசியல் என்று அறிவித்தார். இன்று வரை அந்தக் கொள்கையில் திடமாக இருக்கிறார். “ தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முழுங்கினால் யாரை எதிர்த்து போராடும் என்று கேட்ட ஆளுனருக்கு, அருமையான பதிலைக் கொடுத்துள்ளார். எதையெல்லாம் எதிர்த்து போராடும் என்ற பட்டியலில் கல்வியில் மூட நம்பிக்கைகளை புகுத்தி நூறாண்டுகள் பின்னே செல்ல சதி செய்யும் பாஜக-வை எதிர்த்து போராடும் என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளார். மதவாத, பிற்போக்குவாத அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவர் உருவாக்கிய கூட்டணி இரண்டு மக்களவை தேர்தல்களிலும், ஒரு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிக் கட்டிக்காத்த திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் தன்னுணர்வை தன் தலைமையில் பன்மடங்கு வளப்படுத்தி, திராவிட மாடல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒரு கருத்தியலை நிலைநிறுத்தியுள்ளார். எதிர்முனையில் அ.இ.அ.தி.மு.க-வை எவ்வளவு பிளந்தாலும் தாங்கள் அதன் இட த்தைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த பாஜக இப்போது நடிகர் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க விரும்புகிறது. கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து கண்ணீரின் ஈரம் காயும் முன்னரே, விஜய் தேசிய ஜன நாயக க் கூட்டணிக்கு வரவேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று பாஜக ஊடகப் புலிகள் முழங்கத் துவங்கிவிட்டனர். அது மட்டும் நடந்துவிட்டால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற கற்பனை அவர்களை பரவசப்படுத்துகிறது. உடனே தேசியத் தலைமையும் முன்னாள் நடிகர் ஹேமாமாலினி தலைமையில் அனுராக் தாகூர் என்ற டில்லி கலவர புகழ் அமைச்சரை உள்ளடக்கி உண்மையைப் புனைந்து கூற கரூருக்கு அனுப்பியது. அவர்கள் என்ன முயன்றும் பெரிதாக எதுவும் கதைகட்ட முடியவில்லை. ஆனாலும் பாஜக பேச்சாளர்கள், முன்னாள் நடிகை குஷ்பு போன்றவர்கள், தொடர்ந்து ஏதேனும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை, சதிக்கோட்பாடுகளைப் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒருபுறம் பிளவு வேலைகள், சூழ்ச்சிகள் எதையும் செய்யாமல் தன் கொள்கைப் பற்றின் அடிப்படையில் கூட்டணி அமைத்து, திறன் மிக்க நல்லாட்சியால் மக்கள் மதிப்பைப் பெற்று நேர்வழியில் அரசியல் செய்யும் முதல்வர் ஸ்டாலின். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தன் விருப்பம் போலச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்படும் ஆளுனர், தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்து முடக்கப்பார்க்கும் ஒன்றிய அரசு, எப்படியாவது புதிய தேசிய கல்விக்கொள்கையை திணிக்க நினைக்கும், மும்மொழிக் கொள்கையை புகுத்தத் துடிக்கும் அரசியல் மேலாதிக்க வெறி என்று இயங்கும் பாஜக. இத்தனை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமல் அ,இ.அ.தி.மு.க-வை வெட்டி, ஒட்டி, வளைத்து விளையாடியது போதாமல், இப்போது புதிதாக அந்த ஒட்டுவேலையில் நடிகர் விஜயை இணைக்கப் பார்க்கிறது பாஜக. இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி பலபடி வளைத்ததில் அவர்கள் கட்சியிலேயே பலவித குழப்பங்கள், குழுக்கள். அண்ணாமலை கட்சியை பெரிதாக வளர்த்துவிட்டார், பெரும் ஆளுமை மிக்க தலைவர் என்று வரலாறு காணாத பிம்பத்தை உருவாக்கியவர்கள், திடீரென அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கி விட்டார்கள். இப்போது ஸ்டியரிங்க் யார் கையில், பிரேக் யார் கையில் என்று தெரியாமல் வண்டி தடுமாறுகிறது. பாஜக நிலையும் சிக்கல்தான். அவர்கள் கொள்கையான இந்துத்துவம் பேசி ஒருபோதும் திராவிட கருத்தியலை வெல்ல முடியாது என்பதால், இதுபோல வளைத்தல், உடைத்தல், ஒட்டல் என திருகு வேலைகளைத்தான் செய்ய முடிகிறது. யார் டில்லிக்கு போகிறார்கள், யார் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே குடியிருக்க வேண்டியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க அணிகள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரன்; பாஜக அணிகள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என ஆறேழு பேர் தவிர இப்போது புதிதாக த.வெ.க விஜய் என பாஜக பொம்மலாட்டம் களை கட்டுகிறது. எதிரணியில் சுயமரியாதைப் பதாகையின் கீழ் அணிவகுத்து நிற்கிறது கொள்கைக் கூட்டணி. இப்படியொரு சமனற்ற தேர்தல் களம் சமீப காலங்களில் உருவானதே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் ஊடகங்கள் காட்சி மயக்கங்களை உருவாக்கத்தான் செய்யும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/chief-minister-stalin-and-his-political-maturity/#google_vignette
-
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
கரூர் கூட்ட நெரிசலில் 41 மரணங்களுக்கு யார் பொறுப்பு? வழக்கறிஞர் எம். எல். இரவி கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி. த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும் திமுக அரசின் காவல் துறையே எப்படி விசாரிக்க முடியும்…? என்பது ஒரு புறமிருக்க, விஜய் தரப்பிலும் பல குறைபாடுகள் இருக்கிறது. அவரை ஆதரிக்கும் நோக்கிலும் நாம் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை. அதே சமயம் இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட பல விஷயங்களை வெளிக் கொணர வேண்டியுள்ளது. த.வெ.க கட்சி தலைவர் விஜய் செப்டம்பர்- 27, அன்று கரூர் மாவட்டத்தில், அரசியல் பரப்புரை கூட்டம் நடத்த காவல் துறை முந்தின நாள் இரவு வரை இழுத்தடித்து, 21 கட்டளைகளுடன், மதியம் 3 மணியிலிருந்து 10 மணி வரை கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தில் அனுமதித்தது. அதன் அடிப்படையில் விஜய் பகல் 12 மணிக்கு வருவதாக X தளத்தில் பதிவிட்டிருந்தாலும், காலதாமதமாக இரவு 7 மணிவாக்கில் அவர் உரையாற்ற வந்தார். பத்தாயிரம் பேர் வருவார் என்று சொல்லிய நிலையில், முப்பதாயிரம் பேர் கூடியது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டது. காலை 11 மணியிலிருந்து கூடிய கூட்டம் உணவு, குடிநீரின்றி தவித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நிலை..ஆகிய காரணங்களால் இந்த பெருந்துயரம் நடந்துள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து அறிய நாங்கள் ஒரு வழக்கறிஞர் குழுவாக நேரடியாக கரூர் களத்திற்கே சென்று மக்களிடம் பேசினோம். அங்கே மக்கள் பல வலுவான கேள்விகளை எழுப்பினர். மக்கள் எழுப்பிய சந்தேகங்கள் விஜய்யின் வீதிக் கூட்டங்கள் ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் நடந்துள்ள வகையில், அவரது கூட்டத்திற்கு கட்டுக்கடங்கா கூட்டம் வருவதை காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியதும், குறுகலான சாலை வழங்கப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தின் இடையில் வலிந்து ஆம்புலன்ஸ் வாகனம் செலுத்தப்பட்டு, அது கூட்ட நெரிசலில் புகுந்த வகையில் 9 குழந்தைகள் 13 ஆண்கள் 18 பெண்கள் என்று மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றனர். விஜய் கூட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் இரு சக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்ததில், அந்த வாகனங்களில் விழுந்தும், அந்த வாகனங்கள் மக்கள் மீது விழுந்தும் பலர் படுகாயமுற்றனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை அனுமதித்துள்ளது காவலர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. சம்பவ இடத்தில் 500 காவலர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டதாக சொல்வதை அங்குள்ள மக்கள் மறுக்கிறார்கள். மிகக் குறைவான காவலர்களே களத்தில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். காட்சிப் பதிவுகளும் இதையே சொல்கின்றன. சம்பவ இடத்தில் சில உயர்தர தனியார் மருத்துவமனைகள் இருக்கும் போது சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடுபவர்களை உடனே முதலுதவி தர அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், தூர இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனைவரையுமே தூக்கி செல்ல யார் கட்டளையிட்டார்கள்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைப்பே விசாரணை செய்ய முடியாது இதையொட்டி கரூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் அவர்கள் தன்னிச்சையாக, முதல் தகவல் அறிக்கை (FIR), பதிவு செய்துள்ளார். அவர் செய்த தவறை அவரே விசாரிப்பாரா? முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நிர்வாகத்தை முடுக்கி விட்டும், இரவு 10.30 மணி அளவில் அவசரமாக தலைமை செயலகம் சென்று இதை விசாரிக்க முன்னால் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை, தனி நபர் ஆணையமாக, நியமித்து உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களுடைய சடலங்கள் இரவோடு இரவாக உடற் கூறாய்வு செய்து அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நான் லஞ்சம், ஊழல், காவல்துறை அத்துமீறல்கள் போன்ற பல்வேறு அநீதிகளை எதிர்த்து கட்சி பாகுபாடின்றி நீதி மன்றத்தை நாடி வழக்கு தொடுத்துள்ளவன் என்ற நிலையில், இந்த கரூர் மரணங்கள் குறித்து, ஊடகங்கள், வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் நிலவி வருவதால், உண்மைத் தன்மையுடன் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை விசாரிப்பது சரியல்ல, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படும் விதமும் வெளிப்படையாக காணத் தக்கதாக வேண்டும்” (Justice must not only be done but must also be seen to be done) என்னும் தத்துவத்தின் அடிப்படையில், கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்ததும், அனுமதி வழங்கியதும் காவல்துறை. எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கிய பின் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறை. அவ்வாறு இருக்க இந்த மரணங்கள் ஏற்பட காவல் துறையின் குறைபாடுகளும் ஒரு காரணம். அனுமதி வாங்கிய இடம் நேரான ஒரு சாலை, இது போன்ற சூழலில் மக்கள் சிதறி ஓட வாய்ப்பில்லை (ஜாலின்வாலா பாக் நினைவுக்கு வருகிறது) என்பதாலும், காவல் துறையின் குறைபாடுகளை, அவர்களே விசாரிப்பது சரியல்ல. கரூர் நெரிசல் பலியை விசாரிக்கவுள்ள சிறப்பு விசாரணை குழு தலைவர் அஸ்ரா கர்க், ஐ.ஜி அவ்வாறு இருக்க காவல்துறையே வழக்கு பதிவு செய்து காவல்துறையே தன் மீதான விசாரணையை நடத்த முடியுமா, முடியாது. மேலும், த.வெ.க கட்சி விஜய், ஆளும் திமுக கட்சியை கடுமையாக சாடி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் சூழ்ச்சிகளால் தவறுகள் நடந்துள்ளதா?, என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் மூடபடாமல் கால்வாய் இருந்துள்ளது, அதில் விழுந்தும் நிறைய பேர் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை விசாரித்தால் நேர்மையும் உண்மையும் வெளிப்படுமா? என்கின்ற ஒரு கேள்விக் குறி மக்கள் மனதில் இருக்கிறது. ஆகவே தான், நான் தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சிபி ஐ விசாரணை தேவை என்று ( WP (MD) No 27563/2025) வழக்கு தொடர்ந்தேன்.. இதில் இரண்டு நிதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணையில், காவல்துறை இன்னும் விசாரணையை முடுக்கி விடவில்லை அதற்குள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் வேறு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டுமென்றால், எவ்வாறு சரியாக இருக்கும், அதனால் நாங்கள் இந்த வழக்கை ஏற்க வில்லை நிராகரிக்கிறோம் என்று டிஸ்மிஸ் செய்தனர். அவசர கதியில் அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை கோரியும் இது வரை இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான செலவு 5.6 கோடி ரூபாயாகும். ஆனால், பயனற்றுப் போனது. அது போல தற்போதைய அறிக்கையும் இந்த அரசால் கிடப்பில் போடப்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை. மேலும், அருணா ஜெகதீசன் ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் தடுப்பு சட்டம், தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க மீண்டும் அவருக்கே இன்னொரு பதவியா?, தனி நபர் ஆணையம், அதுவும் அவசர கதியாக இரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவருக்கான அலுவலகம் எங்கு உள்ளது?, தொலைபேசி எண்கள் என்ன? உதவியாளர்கள் தரப்பட்டார்களா? என்று எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவசரகதியாக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னாள் நீதிபதிகள் பலர் இருக்க, இவரை மட்டுமே அரசு மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுப்பது ஏன்? இதுபோக மதுரை கிளை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் காவல்துறை இன்னும் விசாரணை முடுக்கிவிடவில்லை என்று குறிப்பிடுகிறது. நீதிபதியின் வரம்பு மீறிய பேச்சு; அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்கள் வேறு ஒரு வழக்கை விசாரிக்கும் போது, த.வெ.க கட்சியை மிகவும் கடுமையாகச் சாடி, காவல் துறை விசாரணையை மெத்தனமாக, சரியாக நடத்தவில்லை. அதனால் சிறப்பு விசாரணை குழு அமைக்கபடுவதாக உத்திரவு பிறப்பிக்கிறார். அந்தக் விசாரணைக் குழுவின் உறுப்பினர் பெயர்களை அறிவித்து உடனடியாக விசாரணையை மாற்றவும் உத்தரவிடுகிறர். நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ள ஒரு சார்பான கருத்துக்கள் விசாரணையின் போக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஏற்படுகிறது. மேலும் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்களுடைய தாயார் ஒரு முன்னாள் திமுக எம்.எல்.ஏ என்றும் மேலும் அவரது மகள் திருமணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் வலை தளங்களிலும் செய்தி பரவி வருகிறது. இது மேலும் மக்களுக்கு உண்மை தன்மையும் நீதித் துறையின் மாண்பையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. இது போன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞரிடம், அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்று அதிலிருந்து தான் நீதிபதிகள் விசாரணை குழுவை தேர்தெடுப்பது வழக்கம். ஆனால், இங்கு நீதிபதி உடனடியாக பெயர்களை அறிவித்துள்ளது அவர் யாரோ எழுதிக் கொடுத்து அதை வாசிப்பது போல் உள்ளது. பெருந்திரளான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு அறிஞர்கள் த.வெ.க மீது குற்றம் சாட்டி கையெழுத்திட்ட கடிதம் வெளியிட்டுள்ளது மேலும் திமுக அரசின் மீது சந்தேகத்தை வலுவடைய செய்கிறது. இவ்வாறான சூழலில், தமிழக அரசின் நடவடிக்கையை பார்க்கையில் நேர்மையும், உண்மையுமான விசாரணை நடைபெறுமா? என்னும் சந்தேகம் வலுவடைகிறது. அதனால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்தாலே நீதி வழங்கப்படுவதை காண முடியும் என வலியுறுத்தி நான் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளேன். கட்டுரையாளர்; எம். எல். இரவி மூத்த வழக்கறிஞர் தலைவர், தேசிய மக்கள் சக்தி இயக்கம் https://aramonline.in/22944/karur-deaths-wnat-cpi-investigation/
-
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா? October 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில் கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர் பலியான சம்பவமே அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மரணமடைந்த முதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த சினிமா நடிகர் என்று வரலாறு படைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்காக மக்கள் மணிக்கணக்காக அல்ல, நாட்கணக்காக இரவுபகலாக காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கடந்தவாரம் விஜயின் கூட்டத்தில் இடம்பெற்றதைப் போன்ற எந்தவொரு அனர்த்தமும் ஏற்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்திய ஊடகங்கள் எம்.ஜி.ஆரின் கட்சி அமைப்புரீதியாக வலிமையாக இருந்ததும் கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவமுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்ததுமே அதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றன. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அவரது சினிமாச் செல்வாக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தொடங்கப்பட்ட கட்சி என்றும் அவருக்கு எந்த அரசியல் சிந்தனையோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் செய்துவந்த விமர்சனத்தை கரூர் சம்பவம் நிரூபித்திருக்கிறது என்றும் ஊடகங்கள் மாத்திரமல்ல, பல அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள். பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களை பாதுகாப்பான முறையில் ஒழுங்குபடுத்தக்கூடிய அனுபவமும் ஆற்றலும் விஜயின் கட்சியினரிடம் இல்லாததையும் தனது இரசிகர்களை கட்டுப்பாடான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதில் அவர் அக்கறை காண்பிக்காததையுமே மக்கள் பலியானதற்கு பிரதான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகாநாடுகளிலும் விஜயின் பிரசாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றுவந்தது மற்றைய கட்சிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக திரளும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் கூறிவந்தார்கள். கூட்டணி அமைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் விஜய் விடுத்த அழைப்பை எந்த அரசியல் கட்சியுமே பொருட்படுத்தவில்லை. அதனால், அவர் தனது பிரசாரக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை அணிதிரட்டி தனது செல்வாக்கை நிரூபிப்பதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார் என்று தெரிகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் வரை பிரசாரக் கூட்ட அரங்குகளுக்கு வருவதை தாமதிக்கும் ஒரு யுக்தியை அவர் கடைப்பிடித்தார் என்பது வெளிப்படையானது. அனர்த்தத்தில் முடிந்துபோன கரூர் கூட்டத்துக்கு முன்னதாக அவரின் சில பிரசாரக் கூட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் திரண்டதால் சனநெரிசல் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய ஆபத்தான நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உகந்த முன்னேற்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கரூரில் அனர்த்தம் நிகழ்ந்த மறுகணமே விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது தனிப்பட்ட விமானத்தில் சென்னைக்கு திருப்பி விட்டார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களைச் சந்தித்து அவரோ அல்லது அவரது கட்சி முக்கியஸ்தர்களோ ஆறுதல் கூறவில்லை என்பது மாத்திரமல்ல காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடவுமில்லை. நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு சமூக ஊடகத்தில் தனது அனுதாபத்தை தெரிவித்த விஜயின் செயல் அவர் இன்னமும் ஒரு சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசியல் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அமைச்சர்கள் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைகளுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அதேவேளை, விஜய் தனது பிரசாரங்களை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்த பிறகு 20 இலட்சம் ரூபா இழப்பீட்டு அறிவிப்பு விஜயிடமிருந்து வந்தது. கரூரில் அவரைப் பார்ப்பதற்காக பகல் பூராவும் உணவோ தண்ணீரோ இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நேர்ந்த அனர்த்ததுக்கு பின்னர் விஜய் நடந்து கொண்ட முறை அவரது அரசியல் தலைமைத்துவ ஆற்றல் எதிர்நோக்கிய முதல் பரீட்சையிலேயே அவர் தோல்வி கண்டுவிட்டார் என்பதை நிரூபித்திருக்கிறது. தன்னில் தவறு இருப்பதாக அவர் இன்னமும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. தன்னைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து கொண்டிருந்த வேளையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றை இடையில் நிறுத்திவிட்டு வீடு திரும்புபவர் போல அவர் நடந்துகொண்டது பாரதூரமான நிலைவரங்களை கையாளுவதிலும் முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதிலும் அவரின் அனுபவமின்மையை வெளிக்காட்டியது. விவேகமும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், தான் நடந்துகொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறாகவே விஜய் நிச்சயமாக நடந்து கொண்டிருப்பார். அனர்த்தம் நிகழ்ந்த இடத்தில் குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விஜய் முயற்சி செய்திருக்க வேண்டும். சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக பேசுவது சுலபம். அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அறிவுரை கூறிவருகிறார்கள். கரூரில் இடம்பெற்றதைப் போன்று பொது நிகழ்வுகளில் சனநெரிசல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கு விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்ராலின் கரூர் அனர்த்தம் குறித்து விசாரண செய்வதற்கு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட தனிநபர் ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த ஆணையம் கையளிக்கும் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் தனது கட்சி பிரசாரக் கூட்டங்களை நடத்தியபோது நிகழாத அசம்பாவிதங்கள் கரூரில் மாத்திரம் எவ்வாறு நேர்ந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் விஜய், சதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்பது போன்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். விஜயின் கட்சி தங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய கட்சிகளும் கரூர் அனர்த்தத்தை தங்களால் இயன்ற அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதிலும் அவரது அரசியல் எதிரிகள் அனர்த்தத்தை எவ்வாறு தங்களது அரசியல் அனுகூலத்துக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலுமே அவரின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியிருக்கின்றன. குழப்பகரமான அரசியல் நிலைப்பாடு: நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதில் விஜயின் அனுபவமின்மையும் பொறுப்புணர்வின்மையும் ஒருபுறமிருக்க, அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாட்களில் (2024 பெப்ரவரி) இருந்து தனது அரசியல் கொள்கையை பொறுத்தவரையிலும் கூட குழப்பகரமான கருத்துக்களையே கூறிவருகிறார். மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார். 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும் எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய், அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார். நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும் அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார். தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள். https://arangamnews.com/?p=12369
-
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா October 6, 2025 12:41 pm கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது. ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும். எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும். இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர். சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/
-
யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
வாட்ஸப்பில் இருந்து.. மேற்படி விடயங்கள் தொடர்பில் பல ஊகங்கள் விளக்கங்கள் வெளிவருகின்றன. மேற்படி உறுதி ஒப்புவ தொடர்பான சம்பவங்கள் பல ரணிலின் காலத்தில் இனம் காணப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் குழு ரணிலைச் சந்தித்து அந்த விசாரணைகளை நிறுத்தியதாகவும் அறியப்படுகின்றது. தற்போது AKD அரசு அவற்றை விசாரிக்க ஆரம்பித்ததாகவும் அதனை எதிர்த்தே நாளைய பணி பகிஷ்கரிப்பு எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் விடயமறிந்த சில வட்டாரங்கள் கைது செய்யப்பட்ட முறை தவறானதால் ( பெண் பொலிசார் பங்கு பெறவில்லை. நீதிமன்ற அனுமதியில்லாமல் சட்டத்தரணியின் அலுவலகம் சல்லடையிடப்பட்டமை என ...) பணி பகிஷ்கரிப்பு எனவும் தெரிவிக்கின்றனர். வேறு சிலர் பொலிசார் மேற்படி முறைப்பாட்டை பல காலத்தின் முன் கிடைத்தவுடன் AG க்கு அனுப்பி ஆலோசனை பெற்ற பின்பே கைது செய்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் பொது மக்கள் நீதி அனைவருக்கும் பொதுவானதே என வாதிடுகின்றனர். சம்பந்தப்பட்ட சட்டத்தரணி மிகவும் இளம் பெண் சட்டத்தரணி எனவும் சிரேஷ்ட நிலதாரியின் கீழ் வேலை புரிவதாகவும் தவறுதலாக POWER OF Attorney ஒன்றை கையாண்டதாகவும் ஊர்ஜித மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்! 06 OCT, 2025 | 12:29 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருவதால், மலையேற்ற வீரர்கள் உட்பட சுமார் 1,000 பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மலைச்சரிவுகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பனிப்புயலில் சிக்கியுள்ள இந்த ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227015
-
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு 06 Oct, 2025 | 11:24 AM பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினருக்கு ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டது. கெடு முடிந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 20 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளதுடன், இதுகுறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் 20 அம்சத் திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட இருக்கிறது. https://www.virakesari.lk/article/227008
-
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன் 06 Oct, 2025 | 10:34 AM நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர். அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது. இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும். எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன். இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம். இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும். எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம். அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம். அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார். https://www.virakesari.lk/article/226999
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் ! 06 Oct, 2025 | 10:41 AM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/227005
-
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் — கருணாகரன் —
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் October 4, 2025 — கருணாகரன் — ‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன. 1. அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 2. அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால். 3. ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக. 4. அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வதேசத் தன்மையைக் கொண்டதாக தாமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக. இதையெல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் நிறைவேற்றாத காரணத்தினால், புதிய தரப்பொன்றின் மூலமாக அல்லது மாற்றுத் தரப்பின் மூலமாக இவற்றைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் மக்களுக்குரியவை. மக்களுக்குக் கிடைக்க வேண்டியவை. மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டியவை. இவற்றைச் செய்வது – நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. அரசின் பொறுப்பு. சரியாகச் சொன்னால், இவற்றை நிறைவேற்றுவதற்குத்தானே அரசும் ஆட்சியும். ஆனால், ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் (ஆளும் வர்க்கம்) தமக்கிருந்த அதிகாரத்தின் மூலம் நாட்டின் வளங்களையும் வாய்ப்புகளையும் தாமே அளவுக்கு அதிகமாக அனுபவித்தன; கொள்ளையிட்டன. மக்களின் பேரால் அதிகாரத்திலிருந்து கொண்டே மக்களுடையவற்றை எல்லாம் தாம் எடுத்துக் கொண்டு – அபகரித்துக் கொண்டு – மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டன. இதனால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் மாபெரும் இடைவெளியும் ஏற்ற இறக்கமும் ஏற்பட்டது. இதுதான் அவர்களைத் தூக்கித் தூர வீச வேண்டியதாகியது. இந்த நிலையில்தான் மக்களுடைய எதிர்பார்ப்புகளை (அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தே புதிய தரப்பானது ஆட்சிப் பொறுப்பை (அதிகாரத்தை) எடுக்கிறது அல்லது ஏற்கிறது. அப்படித்தான் தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரு ‘மாற்றுச்சக்தி‘ என்ற அடிப்படையில் NPP யை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ‘மாற்றங்களை – திருத்தங்களை- ச் செய்வோம்‘, ‘பிரச்சினைகளைத் தீர்ப்போம்‘, ‘நாட்டை முன்னேற்றுவோம்‘ என்று சொல்லியே, உத்தரவாதம் அளித்தே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது NPP யும். NPP ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்து விட்டது. மிஞ்சியிருப்பது நான்கு ஆண்டுகளே. இந்த நான்கு ஆண்டுகளுக்குள் NPP மக்களுக்கு உத்தரவாதப்படுத்தியவற்றை நிறைவேற்ற வேண்டும். அதைப்போல மக்கள் எதிர்பார்த்தவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். கவனிக்கவும்: ஒன்று, அரசாங்கம் தானாகவே பொறுப்பெடுத்தவையும் ஏற்றுக் கொண்டவையும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது. இரண்டாவது, மக்கள் எதிர்பார்க்கின்றவைகளும் அவர்கள் நம்பியிருப்பவையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டும் பொறுப்பு ஏற்றல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆனால், இவற்றை எழுந்தமானமாகச் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. ஏனென்றால், மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்பது பல வகையானவை. அவற்றை பொதுமைப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால், அது எதிர்விளைவுகளையும் உண்டாக்கும். இதுவே கடந்த காலத்திலும் நடந்தது. குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் மக்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும்வேறு. தமிழ் பேசும் மக்களிலும்கூட முஸ்லிம்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் ஒரு விதமானவை. மலையக மக்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் இன்னொரு வகைப்பட்டன. தமிழர்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் வேறானவை. இதேவேளை இன்னொரு நிலையில் தமிழ்மொழிச் சமூகங்கள் என்ற வகையில் அவர்கள் எதிர்கொள்கின்ற பொதுப் பிரச்சினைகளும் உண்டு. அது அந்தச் சமூகங்களின் மொழி, பாதுகாப்பு, அபிவிருத்தி, அரசியல் உரிமை (அதிகாரப் பகிர்வு) போன்றன. அப்படித்தான் அனைவரும் இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் பொதுப் பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாகப் பொருளாதாரப் பிரச்சினை அவற்றில் ஒன்று. ஆகவே ஒவ்வொன்றையும் அதனதன் தன்மை, அவற்றின் முக்கியத்துவம் என உணரப்பட்டு, அவற்றுக்கான தீர்வுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பொருத்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அதாவது ‘பொதுப்பிரச்சினைகள், பிரத்தியேகப் பிரச்சினைகள்‘ என வகைப்படுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், NPP யும் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. பதிலாக கடந்த ஆட்சியாளர்களைப் போலவே சிந்திக்கிறது; செயற்பட விளைகிறது. ‘அப்படி அல்ல‘ என்று யாரும் இதை மறுத்துரைத்தால், அவர்கள் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். வெளிப்பார்வையில் NPP பல அதிரடி மாற்றங்களை உருவாக்குகிறது. புதியனவற்றைச் செய்கிறது. பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது போலவே தோன்றும். ஆனால், நிஜமாக அப்படியல்ல. ஆழ்ந்து நோக்கினால் இந்த உண்மை தெரியவரும். சில நடவடிக்கைகளை NPP எடுத்துள்ளது என்பது உண்மை. அவை மேலோட்டமானவை. உதாரணமாக, ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். ரணிலின் மீதான குற்றச்சாட்டு, அரச பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காக விரயமாக்கினார் என்பதாகும். அந்தப் பணத்தின் அளவு (தொகை) மிகச் சொற்பம். ராஜித சேனாரத்ன தொடக்கம் மகிந்தானந்த அழுத்கம வரை நான்காம் ஐந்தாம் நிலையாளர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சித் தவறுகளுக்கு அனுசரணையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கடற்படை, பொலிஸ், பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் உயர் அதிகாரிகளில் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவை முக்கியமானவைதான். ஆனால், நாட்டைக் கொள்ளையிட்ட பலர், பல கோடிகளைச் சாப்பிட்டு விட்டு இன்னும் பாதுகாப்பாகவே உள்ளனர். குறிப்பாக ராஜபக்ஸக்கள். அவர்களில் கை வைப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது. இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டவர்களும் பலிக்கடா நிலையில் உள்ளோர். உண்மையான பெருச்சாளிகள் வெளியேதான் உள்ளனர். பாதாள உலகக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான – இல்லாதொழிப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பாதாள உலகக் குழுக்களே கடந்த ஆட்சியாளர்களின் கவசமாகவும் போதைப்பொருள் மாஃபியாக்களாகவும் இருந்தன. ஆகவே அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே கடந்த கால ஆட்சியாளர்களின் (குற்றவாளிகளின்) வேர்களை அறுப்பதற்கான முதல் நடவடிக்கையாகும். இதைப் பாராட்ட வேண்டும். ஆனால், அரசியற் கொலைகளோடும் போர்க்குற்றங்களோடும் தொடர்புபட்டவர்களின் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை. மீளிணக்க நடவடிக்கைகள் உறங்கு நிலையிலேயே உள்ளன. அரசியற் கைதிகளின் விடுதலை பற்றிய பேச்சே இல்லை. மிக இலகுவாகச் செய்யக் கூடிய – அவசரமாகச் செய்ய வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கூட நடத்துவதற்கு அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது. அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப்பற்றி அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. இன்னொரு புதிய சட்டம் வந்ததற்குப் பிறகுதான் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்வதற்கு சந்திரசேகரனும் NPP யும் வெட்கப்பட வேண்டும். இதுதான் மாற்றம் பற்றிய NPP யின் சித்தாந்தமும் நடைமுறையுமா? பொருளாதாரக் கொள்கையளிலும் NPP ஒன்றும் புதிய சிந்தனையைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அதே பழைய பாதையில் வண்டியை ஓட்டுவதே NPP யின் இலக்கு. ஏன் அதனால் புதிதாகச்சிந்திக்க முடியாமல் உள்ளது? அறிவுக் குழப்பமா? உள அச்சமா? இயலாமையா? அப்படியென்றால் முறைமை மாற்றம் (System Change) என்று ஏன் மக்களுக்குச் சொல்லப்பட்டது; படம் காட்டப்பட்டது? இதே அளவுக்கு தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் (தேசிய இனங்களின்) அரசியல் உரிமை – அதிகாரப் பகிர்வு தொடக்கம் அவர்களுடைய பிரதேசங்களின் அபிவிருத்தி வரையில் தனிக் கவனத்துக்குரிய கொதிநிலைப் பிரச்சினைகள் பல உண்டு. இது தனியே வடக்குக் கிழக்குக்குரிய பிரச்சினை மட்டுமல்ல, மலையகத்துக்குமான பிரச்சினையுமாகும். இவற்றைப் பற்றி அரசாங்கம் (NPP) இதுவரையில் சிந்தித்ததாக எந்தச் சிறு அடையாளமும் இல்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற முந்திய ஆட்சியாளர்களின் பழைய, மூட நம்பிக்கையோடுதான் NPP யும் உள்ளது. அதாவது அனைத்துக்குமான நோய் நிவாரணி பொருளாதாரப் பிரச்சினையே. அதைத் தீர்த்து விட்டால், அனைத்தும் குணமடைந்துவிடும்; தீர்ந்து விடும் என்று. இந்த முட்டாள்தனத்தின் விளைவாகத்தான் பொருளாதார நெருக்கடியே உருவானது. அது ஏதோ ஊழல் செய்ததால் மட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. ஆனால், அப்படித்தான் NPP யும் சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் நம்புவதாகத் தெரிகிறது. இதுதான் சரியென அவர்கள் மேலும் முட்டாள்தனமாக நம்பினால், நாடு இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும். படிப்பினைகளைச் சரியாக எடுத்துக் கொள்ளாத தனி மனிதர்களும் சரி, குடும்பமும் சரி, நாடும் சரி, முன்னேற்றத்தை எட்டவும் முடியாது. தவறுளைத் திருத்திக் கொள்ளவும் முடியாது. பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி கூட பலவீனமாகவும் தவறாகவுமே உள்ளது. எளிய உதாரணம், வடக்குக் கிழக்குக்கான விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் காட்டும் பாரபட்சமும் தவிர்ப்பு முறைகளும் இதற்கு வலுவான சான்று. காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தியைப் புறம் தள்ளி விட்டு யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அமர்க்களமாக உருவாக்க முயற்சிக்கிறது. அப்படித்தான் வடக்கிற்கான விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இழுத்தடிப்பதுமாகும். இவை இரண்டுக்குமான நிதி அனுசரணை இந்திய அரசு வழங்குகிறது. இருந்தும் இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்குத்தான் NPP யின் ஆட்சித் தவறுகள் பெருகிக் கொண்டுள்ளன. மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல. NPP யைக் கைவிட்டால், அதல்லது அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களோ ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது, சு. க போன்ற பழைய – மோசமான தரப்புகள்தானே அதிகாரத்தைக் கைப்பற்றும். அது சரியானதா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனைய தரப்புகளை விட NPP பரவாயில்லைத்தான். ஆனால், இப்படி ஒரு நியாயத்தை முன்வைத்து NPP யின் தவறுகளையும் ஆட்சித் திறனின்மையையும் அதனுடைய இரகசிய இனவாத – இன ஒதுக்கல் நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அனுமதிக்கவும் முடியாது. அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதி, துரோகமாகும். இன்னொரு வகையில் சொன்னால், இன்னொரு தவறான தரப்பை நியாயப்படுத்தி நம்மை நாமே தண்டனைக்குள்ளாகுவதாகும். https://arangamnews.com/?p=12362
-
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி October 5, 2025 10:14 am தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எவ்வாறாயினும், ஆப்கான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தலிபான் வெளியுறவு அமைச்சரை இந்தியா வரவேற்கிறது. இதனிடையே, தலிபான் வெளியுறவு அமைச்சர் மீதான பயணத் தடையை நீக்குமாறு இந்தியா ஐ.நா.விடம் கோரியதா என்ற கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதிலளிக்கவில்லை. தலிபான் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டதா என்று கேள்வியெழுப்பிய போது, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு போருக்காக இந்தியா ட்ரோன்களை அனுப்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, இஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார். காசா நோக்கிச் செல்லும் கடற்படையில் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கேட்டபோது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த பதிலை மீண்டும் கூறினார். https://oruvan.com/taliban-foreign-minister-arrives-in-india-un-issued-travel-permit/
-
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை October 5, 2025 10:36 am காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன, மேலும் காசா அமைதித் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய குழு எகிப்துக்குச் சென்றுள்ளது. இதற்கிடையில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இருப்பினும், பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட போதிலும், ஹமாஸ் நிராயுதபாணியாக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 20 அம்ச ஒப்பந்தம், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 20 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக நம்பப்படும்வர்களின் உடல்களையும், நூற்றுக்கணக்கான காசாவாசிகளையும் பிணைக் கைதிகளாக விடுவிப்பதற்கும் முன்மொழிகிறமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/israeli-prime-minister-confident-that-hostages-will-be-released-soon/
-
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு 05 Oct, 2025 | 09:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கையின் நிலை குறித்து ஆராயும் விதமாக, அக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற பின்னணியில் அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகளிடம் அரசாங்கம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜெனிவா விவகாரத்தில் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர நகர்வை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. குறிப்பாக இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட இலங்கையின் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர். புதிய தீர்மானத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு போன்ற விடயங்களில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது. சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டு, தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரவின் தூதுக்குழு நோர்வேயிடம் முக்கிய வாக்குறுதிகளையும் உத்தரவாதங்களையும் அளித்துள்ளது. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்தச் சட்டத்தை கூடிய விரைவில் இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. காணாமலாக்கப்பட்டோர் குழுவின் 29 ஆவது அமர்வில் தெளிவுபடுத்தியிருந்தார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டுச் சட்டம், உள்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு, இந்தச் செயலை முற்றிலுமாக தடைசெய்துள்ளதாக குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் தேவை என வலியுறுத்தியதுடன், நீண்ட கால ஆதரவு, நியாயமான நிதி இழப்பீடு, தொழில் கல்வி மற்றும் சமூகப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் புதிய இழப்பீட்டு அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உறுதியளித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு வரும் 8 ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முடிவுகள் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226916
-
ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல்
ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல் 05 Oct, 2025 | 11:28 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு வரலாற்று உதாரணங்களைக் கொண்டு பலத்த கண்டனம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு ,ருக்கவில்லை. ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது. எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார். கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது. இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்தில் நான்காவது மாடி ஜன்னலிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ,லங்கையில் தற்போது செய்வது என்ன? ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன. மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ,தனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும். குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். https://www.virakesari.lk/article/226927
-
காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன்
காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன் Pix by Nimalsiri Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தது. அவ்வாறு காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் தீவப்பகுதிக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கடந்த 26ஆம் திகதி இரவு அப்பகுதி மக்களும் கத்தோலிக்க மதகுருமாரூம் தீவின் வாயிலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது, அவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதில் பெண்களும் மத குருமார்களும் தாக்கப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக அங்குள்ள மக்கள் கடந்த திங்கட்கிழமை பொது முடக்கத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். மன்னாரில்,குறிப்பாக கனிமவள அகழ்வுக்கு எதிரான போராட்டத்தில் யாருமே கேள்விகளை எழுப்புவதில்லை. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அபிப்பிராயம் எல்லாத் தரப்புக்களிடமும் உண்டு. ஆனால் காற்றாலை விடயத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்ற ஒரு விமர்சனம் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியிலேயே உண்டு. மன்னார் தீவில் காற்றாலைகள் நிறுவப்பட்டதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதாக,கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும், காற்றாடிகள் சுற்றும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் முறைப்பாடு செய்கின்றார்கள். இது போன்ற முறைப்பாடுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடந்த வாரம் அப்பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் மீள உறுதிப்படுத்தியது. நாட்டின் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதனால் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அரசாங்கம் நிறுவி வருகின்றது. இந்த அடிப்படையில் ஏற்கனவே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட பயனாளி லாபமடைகிறார். அதனால் வரும் வருமானம் அவருடைய வீட்டுத் தேவைகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை முழுமையாக இல்லாமல் செய்கின்றது. தவிர,மாதாமாதம் மேலதிகமாக லாபமும் கிடைக்கும். அந்த லாப நோக்கமானது அவர்களை அறியாமலேயே பசுமை மின்சக்தித் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றது. உலகம் முழுவதும் பசுமை மின்சக்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மனித நாகரீகம் என்பதே இயற்கையை சுரண்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது. எனவே இயற்கை சுரண்டாமல் அபிவிருத்தி இல்லை. இந்த விடயத்தில் இயற்கையின் சமநிலை கெடாமல் எப்படி அபிவிருத்தி செய்வது என்று சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் சூழல் நேயத் திட்டங்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் காற்றாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு வருகின்றன. அண்மையில் ஸ்பெயின் நாடானது நாட்டின் ஒருநாள் மொத்த மின் பாவனையை முழுக்கமுழுக்க பசுமை மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து சாதனை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. மேலும்,ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை உள்வாங்கி புதிதுபுதிதாக மாற்று ஏற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக காற்றாலை விசிறிகளில் பட்டு வலசைப் பறவைகள் இறப்பது தொடர்பான விமர்சனத்தை உள்வாங்கி செட்டைகள் இல்லாத காற்றாடிகள் எப்பொழுதோ உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி இந்த விடயத்தில் முன்னோடியாகக் காணப்படுகிறது. அதுபோலவே அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி காற்றாலைகளின் செட்டைகளில் ஒன்றைக் கறுப்பாக்கினால் அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை 70%தால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காற்றாலை மின் சக்தியின் சூழல்நேயப் பண்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு ஐரோப்பா முன்னேற்றகரமான புதிய காற்றாடிகளைக் கண்டுபிடித்து வருகிறது. இப்படிப்பட்டதோர் உலக மற்றும் உள்நாட்டுச் சூழலில்,மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகளை எதிர்க்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் கேள்வி கேட்கின்றார்கள். இங்கே முக்கியமாக இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மன்னார் மக்கள் மன்னாரின் தீவுப்பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள். யாரும் சூரிய மின்கலங்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் காற்றாலை தொடர்பான மன்னார்த் தீவு மக்களின் கவலைகளை சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள்,அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்கள் கேட்கவேண்டும். இதில் மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா என்று சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் 19.08.2025 அன்று நியமித்த சிறப்புக் குழு கடந்த மாதம் முதலாந் திகதியன்று (01.09.2025) அங்குள்ள சிவில் சமூகத்தோடு(MCC) உரையாடியதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் மக்களுடைய பயங்களைப் போக்க முடியவில்லை. காற்றாலைகள் ஏன் வேண்டாம் என்பதற்கு மன்னார் தீவுப்பகுதி மக்கள் கூறும் காரணங்கள் எவையாகவும் இருக்கலாம். ஆனால் காற்றாலைகள் ஏன் வேண்டும் என்பதற்குக் கூறப்படும் பிரதான காரணத்திலிருந்து சிந்தித்தால் அந்த மக்களின் பயத்தைப் போக்க வேண்டியது அவசியம். சூழல்நேய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சூழலுக்கு அந்த அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நேசமானதாக அமையும். அந்த மக்களின் விருப்பமின்றி அதை அங்கே பலவந்தமாக நிறுவ முடியாது. அப்படி நிறுவினால் சூழல்நேய அபிவிருத்தி என்ற அடிப்படைச் சிந்தனை கேள்விக்குள்ளாகிவிடும். எனவே ஒரு பகுதி மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பயங்களை,கவலைகளைப் போக்க வேண்டிய, மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு.அதுதொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைக்கு உண்டு. மன்னாரில் காற்றாலைகளை முதலில் நிறுவ முற்பட்டது அதானி குழுமம் ஆகும். ஆனால் அது தொடர்பான லாப நட்டப் பேரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதானி குழுமம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறி விட்டது. இப்பொழுது உள்நாட்டு நிறுவனம் ஒன்று காற்றாலைகளை நிறுவி வருகிறது. இங்கு அரசியல் முரண் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதானி குழுமம் மன்னாரில் காற்றாலைகளை நிறுவ முற்பட்டபொழுது அதனை ஜேவிபியும் உட்பட அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்த்தார்கள். காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. அது அதானி குழுமத்தின் முதலீடுகளை எதிர்த்தது. இதுதொடர்பாக ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு கத்தோலிக்கம் மதகுருவோடு உரையாடினார். ”நீங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக போராடுகிறீர்கள் என்று சொன்னால்,ஜேவிபியின் முன்னைய நிலைப்பாடுகளில் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். ஜேவிபியின் முன்னைய நிலைப்பாட்டின்படி மலையகத் தமிழர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் கண்டார்கள். அப்படியென்றால் அரகலயப் போராட்டமும் மலைகத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றதா?” என்று அவர் கேட்டார். அந்தக் கத்தோலிக்க மதகுரு அதை மறுத்தார்.”இல்லை நாங்கள் எல்லாவிதமான விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானவர்கள்”என்று சொன்னார். அப்படியென்றால் சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்துக்கு அருகிலும் வந்துவிட்டது.அந்தச் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பாகவும் நீங்கள் பேசுவீர்களா?என்று அந்தத் தமிழ்ச் செயற்பாட்டாளர் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் முதலீட்டை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதி என்று எதிர்த்த அரகலய போராட்டங்களின் குழந்தைதான் இப்போதுள்ள என்பிபி அரசாங்கம்.ஆனால் அது காற்றாலை வேண்டாம் என்று கேட்டுப் போராடிய மன்னார் மக்களின்மீது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அதற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் அரகலய போராட்டத் தலைவர்களும் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம் என்பிபி வேறு தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டக்கூடும். காற்றாலைகளின் விடயத்தில் தமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அளவுக்கு எதிர்ப்புக் காட்ட வில்லை என்ற ஒரு குறை மன்னார் மாவட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்பு இருந்தது.அப்பகுதி அரசியல் தலைமைத்துவம் இது தொடர்பில் மக்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது.அதனால் அங்கு ஏற்கனவே பலமாக உள்ள மதத் தலைமைத்துவதின் வழிகாட்டலே தீர்மானகரமானதாகக் காணப்படுகின்றது. எனினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,பொது வேட்பாளரை முன்னிறுத்திய அணி மன்னாரில் நகரப் பகுதியில் நடத்திய பெரிய ஒருவர் அங்கே மன்னார் மக்களின் கவலைகளைப் பிரதிபலித்தார். காற்றாலை,கடலட்டை இரண்டும் ராஜதந்திரப் பொருட்களாகி விட்டன என்று கூறிய அவர், காற்றாலை,கடலட்டை,கனிமவள அகழ்வு போன்றவை தமிழ் மக்களின் நில உரிமை,கடல் உரிமை போன்ற கூட்டு உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை என்றும்,எனவே அதில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இப்பொழுது அரசாங்க மக்கள் மீதும் மதகுருக்கள் மீதும் பலப் பிரயோகத்தைச் செய்த பின் விவகாரம் உணர்ச்சிகரமானதாகி விட்டது. தமிழ்த்தேசியக் கட்சிகளும் உட்பட பெரும்பாலான கட்சிகள் மன்னார் மக்களின் பக்கம் நிற்கின்றன. இப்பொழுது போராட்டம் பரந்தளவில் மக்கள் மயப்பட்டுவிட்டது. அரசாங்கத்தின் பலப்பிரயோகம் அதைப் பலப்படுத்தி விட்டது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக வந்த ஓர் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கும்? தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜனாதிபதி கதைத்த கவர்ச்சியான,அலங்காரமான சொற்களைக் கொண்ட உரைகள் யாவும், மன்னார் மக்கள் மீது போலீசார் பலத்தைப் பிரயோகித்தபோது பொருள் இழந்து போய்விட்டன. https://www.nillanthan.com/7814/
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
வடமராட்சி கிழக்கு கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களின் பிறந்த பூமி. அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தள்ளித் திரிகின்றனர். முதலமைச்சர் கனவில் இருப்பவருக்கு தெரிவித்தால் உடனடியாக செயற்பட்டு புதிய பஸ்களைப் பெற்றுத் தருவார்😁
-
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்! -ச.அருணாசலம் நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப் காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா? அமைதி நாயகன் வேடம் டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்; அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன? # தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல் இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம். # மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம். # அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Peace) ஏற்படுத்தி அக் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காசா பகுதியை கொண்டு வருவதாம். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைவராம்! டோனி பிளேர் போன்ற உலகத் தலைவர்கள் இதில் உறுப்பினர்களாம்! # இத்தகைய ஆட்சிமுறை , புதிதாக ஏற்படுத்தவுள்ள சீரமைக்கப்பட்ட பாலத்தீன குழு முதிர்ச்சி பெறும் வரை – கால வரையிரை இன்றி தொடருமாம்! # ஹமாஸ் அமைப்பிற்கு இனி மேல் காசாவை நிர்வகிப்பதில் எந்த பங்கும் அளிக்கப்பட மாட்டாதாம். அவர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களது அமைப்புகளை கலைத்து விட்டால், அவர்களுக்கு உயிர்பிச்சை தருவார்களாம். # காசா பகுதியை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு முதலாளிகளின் கீழ் காசா மக்கள் உழைத்து பிழைக்கலாமாம். # பாதுகாப்பிற்காக சர்வதேச உறுதிப்படுத்தும் படைகள் (International Stabilisation Force) உருவாக்கப்படுமாம். இந்த படை காசாவின் எல்லைகளையும் உள்ளூர் காவல் கடமைகளையும் நிறைவேற்றுமாம். இந்த படைகள் வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தற்போது விலகாதாம். # அடுத்து அமைதியை நிரந்தரமாக்க சக வாழ்வையும் ஒற்றுமை உணர்வையும் தூண்ட உரையாடல்களை(dialogue) இரு பிரிவு மக்களிடையே இத்திட்டம் ஊக்குவிக்குமாம். காசா பகுதி இன்றிருக்கும் பின்னடைவிலிருந்து மீளும் பொழுது அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களிடையே அரசியல் பேச்சு வார்த்தைகள்- பாலத்தீனர்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அரசை ஏற்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தைகள் – நடத்தப்படும். பாலத்தீனீய அதிகார அமைப்பு அத்தகைய பேச்சு வார்த்தைகளை நடத்துமளவிற்கு சீரமைக்கப்பட்டு பக்குவமும் அடைந்திருக்க வேண்டுமாம்….என்று இத் திட்டம் நீட்டி முழக்குகிறது! சொல்லமறந்த அல்லது தவிர்த்துவிட்ட அம்சங்கள்என்னென்ன? # இந்த அமைதி திட்டம் ஐ நா சபை யின் முயற்சியிலோ, அதன் கண்காணிப்பிலோ நடைமுறைக்கு வரும் திட்டமல்ல. இத்திட்டத்தில் ஐ நா விற்கு எந்த பங்கும் இல்லை! இத்திட்டம் இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கு எந்தவித தண்டனையையும் அளிக்கவில்லை. # இஸ்ரேல் இதுவரை பறித்த உயிர்களுக்கும், அழித்த சிறார் மற்றும் மகளிர்களுக்கும், சிதைத்த கட்டிடங்களுக்கும் அமைப்பு முறைகளுக்கும் இழப்பீடோ, நிவாரணமோ, இஸ்ரேல் கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை. # இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய இஸ்ரேலின் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தாமல் உதவிகள் வழங்குவதைக் கூட இத்திட்டத்தை ஏற்றால் தான் வழங்குவோம் என்று கூறுகிறது இந்த அமைதி திட்டம். # அடுத்து, இத் திட்டம் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திலோ காசா மக்கள் இத் திட்டத்தில் பங்கு கொள்ள எந்த வகையான ஜனநாயக வழி முறைகளையும்வழங்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு அவர்களதுதலைவிதியை நிர்ணயிப்பதில் எந்தவித பங்கையும்அளிக்கவில்லை இந்த திட்டம். ஆயுதங்களை கீழே போடும் பாலத்தீனர்களுக்கு எந்தவிதபாதுகாப்பையும் வழங்க மறுக்கும் இத்திட்டம் , இஸ்ரேலியகுடியமர்த்தல்களுக்கும் தடை விதிக்கவில்லை, பாலத்தீனர்களின் நிலங்கள் உடமைகள்பறிக்கப்படுவதையும் தடுக்கவில்லை. இத்தகைய திட்டம் உண்மையில் அமைதிக்கான திட்டமா அல்லது உலகத்தினரின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியா? ஒருபுறம் எப்படியும் சமாதான நாயகன் என்ற பட்டத்தை பெற்றுவிட துடிக்கும் தலைக்கனமிக்க கோமாளி டிரம்ப், மறுபுறமோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் 65,00 மக்களை கொன்று குவித்தாலும் பிணைக் கைதிகளை போரின் மூலம் மீட்கவோ, ஹமாஸ் அமைப்பை ராணுவரீதியாக முறியடிக்கவோ முடியாத நெத்தன்யாகு ஆகிய இரு நபர்களும் தங்களின் கொடூரங்களை தொடரவும் அதற்கான பழியை ஹமாஸ் மீது போடவும் துணிந்தே இத்தகைய நகைப்பிற்கிடமான திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த அடிமை சாசனத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்காது என்ற துணிச்சலில் தான் எத்தன் நெத்தன்யாகு டிரம்ப்பின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளான் . இதை ஹமாஸ் நிராகரித்தால் நெத்தன்யாகு , நான் அமைதிக்கு முயற்சி செய்தேன். ஆனால், ஹமாஸ் ஒத்துக் கொள்ளவில்லை என பழியை ஹமாஸ் அமைப்பின் மீது போட்டுவிட்டு தனது இனப்படுகொலையை தொடர்ந்து நடத்துவான். அதே நேரத்தில் தன் மீதான இஸ்ரேலிய மக்களின் கோபத்தை மடைமாற்றி தப்பித்து கொள்ளவே இந்த அமைதி திட்டம். நேதன்யாகுவிற்கு எதிராக அமைதியை விரும்பும் யூத மக்கள் இத்தகைய மோசடி திட்டத்தை, இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று அறிக்கை விட்டுள்ளார். இந்திய அரசின் நீண்ட நாள் கொள்கையும் , சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரால் ஐநா சபையில் அறிவிக்கப்பட்ட இரண்டு அரசு தீர்வுகளும் ( Two State Solution to Palestine) என்னவாயிற்று? அக் கொள்கையை அடைய இத்திட்டம் வழிவிடவில்லையே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பதிலில்லை. நெத்தன்யாகு இஸ்ரேலிய மக்களை ஏமாற்றுவது போலவே, மோடி இந்திய மக்களை ஏமாற்றுகிறார். அமைதி திட்டத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் இந்தியாவின் நெடுநாளைய கொள்கையானபாலத்தீன சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இஸ்ரேல்ஆக்கிரமித்துள்ள பாலத்தீன பகுதிகளில் இருந்துவெளியேறுதலை வற்புறுத்துதல், பாலத்தீன அரசிற்குஅங்கீகாரம் அளித்தல் , பாலத்தீன அரசு , இஸ்ரேல் அரசு எனஇரண்டு சுதந்திரமான அரசுகளே பாலத்தீனபிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்றகொள்கைநிலையை மறந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்பை காட்டும் வண்ணம் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளார் மோடி. டிரம்ப் அறிவித்துள்ள இத்திட்டத்திற்கு அரபு நாடுகளான சௌதி அரேபியா, யு ஏ இ, கத்தார், எகிப்து, ஜோர்டான் துருக்கி போன்ற நாடுகள் ‘ஆரம்ப கட்ட’ ஆதரவை தெரிவித்துள்ளன. பல் பிடுங்கப்பட்ட, சோரம் போன , பொம்மை அரசான பாலத்தீனிய அதிகார அமைப்பும் (Palestine Authority) இத்திட்டத்தை வரவேற்றுள்ளது என்றாலும், ஹமாஸ் அமைப்பு தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்ட நெத்தன்யாகு தனது இனப் படுகொலையை இந்தப் போர் நிறுத்த்தின் மூலமாக நிறுத்துவான் என்பது பகல் கனவு. உலகெங்கிலுமுள்ள மக்களின் கோபத்திற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் பல – பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்றவை- பாலத்தீன அரசை இப்பொழுது அங்கீகரித்து உள்ளன. அமைதி திட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக , காசா பகுதியை செல்வங் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ரிவர்ரியாக மாற்றவே இத்திட்டம் முன் வைக்கப்படுகிறது எனலாம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் முயல்கிறார். ஐநா சபை தீர்மானங்களை, ஐ நா வின் வழிகாட்டுதல்களை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மதித்தது உண்டா? இத்தகைய தான்தோன்றிதனத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா ? ஹமாஸ் தலைவர்களும், பாலஸ்தீன மக்களும் நீதி என்பதை யாரிடமும் யாசகமாகப் பெற முடியாது, அது போராடி பெரும் வெற்றியின் விளைவாக கிட்டும் கனியே ஒழிய தோற்றவனுக்கு வழங்கப்படும் பிச்சையல்ல. ஹமாஸ் இயக்கம் பாலத்தீன மக்களின் நாடி நரம்பு என்பதை உலகம் புரிந்து கொள்ளும்நாள் விரைவில் வரும். இஸ்ரேலையும் உள்ளடக்கிய பரந்த பாலத்தீனத்தில் இன்றும் யூத இன மக்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாமல் பாலத்தீனர்கள் வாழ்வதை மறந்து விட்டு, பாலத்தீனம் முழுமையுமே யூத இனத்திற்கு கடவுள் அளித்த புண்ணிய பூமி என்று கதையளக்கும். யூதமதவெறித் தனத்தை (ஜியோனிசத்தை) கைவிட்டு யூதர்களுக்கான தேசமாக இஸ்ரேல் அரசும் , பாலத்தீனர்களுக்கான பாலத்தீன அரசும் ஏற்படுத்தி சுதந்திரமாக இயங்க (Two States) இஸ்ரேல் ஒத்துக் கொள்ள வேண்டும். அல்லது பரந்த பாலத்தீனத்தில் அனைத்து மக்களுக்கும்( யூதர்கள்,பாலத்தீன இஸ்லாமியர்கள், ட்ரூஸ் கிறித்தவர்கள், ஜொராஸ்ட்ரிய மத்த்தினர்) இயைந்து வாழும் ஒற்றை மத சார்பற்ற அரசை ஏற்படுத்த (One Secular State) இஸ்ரேல் முன்வரவேண்டும். இழப்பதற்கு ஏதுமற்ற பாலத்தீன மக்கள் தங்களது அடையாளத்திற்காக தங்களது கண்ணியத்திற்காக களத்தில் நிற்பார்கள் என்பது உறுதி! கட்டுரையாளர்; ச.அருணாசலம் https://aramonline.in/22927/trump-peace-plan-for-gaza/
-
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலுக்கான களப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து, கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் (ஐபிஎல்) இரா.ஐயனார் கூறுகையில், “நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை தேர்தலையொட்டி 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படும். அந்தவகையில் 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் தலா 117 பெண்கள், 117 ஆண்கள் நிறுத்தப்பட உள்ளனர். குறிப்பாக இந்தமுறை அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண்களுக்கே வாய்ப்பளிக்கப்பட உள்ளது. அதேபோல் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் முன்னெடுக்காத வகையில் முதல்முறையாக 5 இடங்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம். இதற்கு முன்பு தமிழக அரசியல் வரலாற்றில் கும்பகோணம் அல்லது மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டுமே பிராமணர்களுக்கு இதர கட்சிகளில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால் 2026 தேர்தலில் முதல்முறையாக பிராமணர்களுக்கு அதிகப்படியான இடங்களை நாம் தமிழர் கட்சி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 5 பேரில் நான்கு பேர் பெண்களாவர். இந்த வேட்பாளர்கள் சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இவர்கள் உட்பட சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நிறைவடைந் துள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/1378591-brahmins-will-have-a-chance-to-contest-5-seats-in-the-2026-elections-in-naam-tamilar-katchi.html
-
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் - இந்தியப் பிரதமர் மோடி Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 10:54 AM காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேரை ஹமாஸ் பணயக் கைதிகளாக காசா முனைக்கு கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் அறிவித்து காசா முனையில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஹமாஸிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் மீட்டுள்ளது. பணயக் கைதிகள் அனைவரையும் மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இந்த சூழலில், காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்இ 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இந்தத் திட்டத்திற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்ப்பின் சமரச திட்டத்தை ஏற்க ஹமாஸ் இயக்கத்தினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. தற்போது, இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ (x) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமைத்துவத்தை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறிகள், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/226860
-
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் !
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்கனவே தேடல் வரலாறுகள் நீக்கப்பட்ட புதிய தொலைபேசிகளில், 13 வயதுடையவர்களைப் போல உருவகிக்கும் 7 புதிய டிக் டொக் கணக்குகளை இங்கிலாந்தில் உருவாக்கியது. டிக்டொக் கணக்கை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயதெல்லை 13 ஆகும். டிக்டொக் இன் ஆதரவுப் பக்கத்தின்படி, 'கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறை' (Restricted Mode) என்பது "பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள்" உட்பட "அனைவருக்கும் வசதியாக இருக்காது" என்று கருதப்படும் உள்ளடக்கத்தை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும், 13 வயதுடையவர்கள் என்று குறிப்பிட்டும், கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்தியும் உலாவிய பயனாளர்களுக்கு, டிக்டொக் இன் தேடல் பரிந்துரைகள் "அதிக பாலியல் தன்மையுடன்" இருந்ததாக குளோபல் விட்னஸ் தெரிவித்துள்ளது. குளோபல் விட்னஸ் உருவாக்கிய சோதனை கணக்குகளில் மூன்றிற்கு, பயனர் முதல் முறையாக தேடல் பட்டியை கிளிக் செய்தபோதே பாலியல் ரீதியான தேடல் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மேலும், கணக்கைத் தொடங்கிய பிறகு சில கிளிக்குகளில் அனைத்து ஏழு சோதனை பயனர்களுக்கும் ஆபாச உள்ளடக்கத்தை டிக்டொக் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்ததாக அறிக்கை கூறுகிறது. "டிக்டொக் ஆபாச உள்ளடக்கத்தை சிறுவர்களுக்குக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல எங்கள் வாதம். டிக்டொக் -இன் தேடல் வழிமுறைகள் இளையவர்களை ஆபாச உள்ளடக்கத்தை நோக்கி செயலூக்கத்துடன் தள்ளுகின்றன" என்று குளோபல் விட்னஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. டிக்டொக் -இன் சமூக வழிகாட்டுதல்கள் நிர்வாணம், பாலியல் செயல்பாடு மற்றும் பாலியல் சேவைகள் கொண்ட உள்ளடக்கத்தையும், இளையவர்களை உள்ளடக்கிய பாலியல் ரீதியான ஆலோசனைகள் அல்லது கணிசமான உடல் வெளிப்பாடு கொண்ட உள்ளடக்கத்தையும் தடை செய்கின்றன. இந்த அறிக்கை குறித்து, டிக்டொக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, "இந்த கூற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக அவற்றை விசாரணை செய்யவும், எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், எங்கள் தேடல் பரிந்துரை அம்சத்தில் மேம்பாடுகளை ஆரம்பிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், டிக்டொக் இளம் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அம்சங்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். டிக்டொக், வயது கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்தி உலகளவில் மாதந்தோறும் சுமார் 6 மில்லியன் வயது குறைந்த கணக்குகளை அகற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/226861
-
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட 04 Oct, 2025 | 04:11 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு இதுதொடர்பில் ஆலாேசனை வழங்கிய அரசாங்கமும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அதனை செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்து. ஆனால் இந்த நடவடிக்கையில் தலையிட்டிருந்த நாணய நிதியம் தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கிறது. அதாவது 2028ஆகும்போது நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நாங்கள் 2028இல் பாரியதொரு தொகை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அதேநேரம் கடன் மறுசீரமைப்பு குறைகிறது. 2028இல் எங்களுக்கு கடன் மீள செலுத்த முடியாமல் போனால், எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. கடன் குறைப்பும் வட்டியும் கணக்கிடப்படுவது, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருட சராசரிக்கு அமைவாகும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க (டைம் பாம்) நேரம்பார்த்து வெடிக்கும் குண்டுகளை புதைத்து விட்டுச்சென்றுள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.சில குண்டுகள் 2025 இறுப்பகுதியில் வெடிக்கும் வகையிலும் இன்னும் சில குண்டுகள் 2028இல் வெடிக்கும் வகையிலே புதைத்துள்ளார். இந்த டைம் பாம்களை எடுத்துக்கொண்டு விழுங்க வேண்டாம் என இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதுமாத்திரமல்ல, எங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகினாலும், வாக்குறுதியளித்த கடன் உரிமையாளர்களுக்கு கட்டாயமாக கடன் தவணைகளை செலுத்த வேண்டும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதனால் கடன் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் எங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகிறது. அதற்காக மக்களின் சொத்துக்கள் வளங்களை விற்பனை செய்தாவது பணம் தேட வேண்டிவரும். அதனால் அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில், சர்வதேச நாணய நிதியம், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷ்வினர் இணைந்து பொறி ஒன்றை வைத்திருந்தனர். அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அழகான முறையில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/226840
-
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்! 04 Oct, 2025 | 09:59 AM அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226851