Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார். 'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பரான மத்துகம ஷான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்ததால், அந்த நாளைத் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தான் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டில் உரிமையாளரையும், அவருடைய மருமகனும் அளுத்கம பொலிஸில் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmgv328sh012oo29ntya4do2i
  2. கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை adminOctober 17, 2025 மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல. அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார். https://globaltamilnews.net/2025/221656/
  3. தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி! அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்_தேசியப்_பேரவை_அடியோடு_குலைகின்றது;_ஜனநாயகத்_தமிழ்த்_தேசியக்_கூட்டணியில்_கஜேந்திரகுமார்_எம்.பி._கடும்_அதிருப்தி!
  4. செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா தக்ஷி? October 16, 2025 குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய், துபாய்க்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு ஆவணமற்ற குற்றவாளி என்றும், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே இதற்காக ஜே.கே. பாய்க்கு ரூ. 10 மில்லியன் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலும் விசாரணை தேவை என்று சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து இஷாரா செவ்வந்தி மற்றும் ஜே.கே. பாயிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். விசாரணைகளில் இருந்து இதுவரை தெரியவந்துள்ளபடி, ஜே.கே. பாய் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துபாய்க்கு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக சட்டப்பூர்வமாக திரும்பியதாக எந்த தகவலும் இல்லை என்றும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஷாரா செவ்வந்தியை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஜே.கே. பாயின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பதை சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு, அவரைப் பிடிக்கும் ரகசிய நடவடிக்கை இலங்கை காவல்துறை அதிகாரிகளின் மிகக் குறைந்த குழுவை மட்டுமே உள்ளடக்கியது. அண்டை நாட்டின் பொது புலனாய்வுப் பிரிவும் இதற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாரா சேவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இன்டர்போலின் உதவியுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை மூத்த துணை காவல் ஆய்வாளர் அசங்க கரவிட்ட உள்ளிட்ட சிஐடி அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் 6 வாரங்களுக்குத் திட்டமிட்டனர். இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கைக்கான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு அனுப்பப்பட தேர்வு செய்யப்பட்டனர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு அதன்படி, இந்த இரண்டு அதிகாரிகளும் இஷாராவைக் கைது செய்யும் நடவடிக்கைக்காக 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்கள். கடந்த சில நாட்களாக ரோஹன் ஒலுகல உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி வந்தார். அவர் பல நாட்களாக தனது கடமை நிலையத்திற்கு கூட வரவில்லை. 11 ஆம் திகதி காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இலங்கை விமானத்தில் நேபாளம் சென்றபோது, அவரது உடல்நிலை சீராக இருந்தது. அவர்கள் நேபாளத்தில் தரையிறங்கியபோது, அவர்களை வரவேற்க நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களுடன் தூதரகத்திற்கு வந்த ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, முதலில் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர். இன்டர்போலின் நேபாள கிளையின் அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கையில் துபாயில் உள்ள மற்றொரு குழு ஏற்கனவே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இஷாராவை நேபாளத்திற்கு அழைத்து வந்து தங்குமிடம் அளித்த ஜே.கே. பாய் பற்றி அவர்தான் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் ஜே.கே. பாய் ஏற்கனவே நேபாளத்தில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு நேபாளத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையின் ஒரு குழு ஏற்கனவே தயாராக இருந்தது. ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா அந்தக் குழுவுடன் சென்று முதலில் ஜே.கே. பாய்யைக் கைது செய்தனர். அந்த நேரத்தில் அவர் காத்மாண்டு அருகே தங்கியிருந்தார். சோதனையின் போது, அவரது சரியான இடம் குறித்து எந்த அதிகாரிக்கும் தெரியாது. எனவே, ஜே.கே. பாயை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை துபாயில் இருந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிறகு விசாரணையின் போது, ஜே.கே. பாய் தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார், ஆனால் இந்த நாட்டிலிருந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்த பிறகு அவரது வாய் திறந்தது. அந்த அழைப்பு ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்தது. அந்த அதிகாரி வீடியோ அழைப்பு மூலம் ஜே.கே. பாயை அழைத்தார். “பாய், எங்களுக்கு உதவுங்கள். இஷாரா எங்கே என்று சொல்லுங்கள்,” என்று அவர் உரையாடலைத் தொடங்கினார். “இஷாரா யார், எனக்கு எதுவும் தெரியாது,” என்று ஜே.கே. பாய் கூறினார். ஜே.கே. பாய்க்கு சிங்களம் நன்றாகப் பேசத் தெரியாது. அவருக்கு சிங்களம் நன்றாகப் புரிந்தாலும், சில வார்த்தைகளில் மட்டுமே சிங்களத்தில் பேசத் தெரியும். “நீ உன் மனைவியையும் குழந்தைகளையும் நேசிக்கிறாய், இல்லையா? தற்போது சிஐடி அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளது. இந்த விஷயத்தில் நீ எங்களுக்கு உதவவில்லை என்றால், நாங்கள் அனைவரையும் கைது செய்வோம். நீ கஷ்டப்பட வேண்டியிருக்கும், பாய்.” ஜே.கே. பாய் காவல்துறைத் தலைவரின் வலையில் சிக்கினார். “ஐயா, அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவளை ஒரு முகவரிடம் ஒப்படைத்தேன்.” சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோசித்த பிறகுதான் பாய் வாய் திறந்தார். ஜே.கே. பாய் நேபாளத்தில் உள்ள ஒரு தரகரைப் பற்றி ஏதோ சொல்லவிருந்தார். ஜே.கே. பாய் அளித்த தகவலின் அடிப்படையில் நேபாள போலீசார் அந்த தரகரைக் கைது செய்தனர். விசாரணையின் போது, தரகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு செவ்வந்தி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். அது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஏனென்றால் அவர் வேறொரு தரகருக்கு வேலையை ஒதுக்கியிருந்தார். தரகரைத் தொடர்பு கொண்டபோது, இஷாரா நாட்டில் பயன்படுத்தும் ஒரு மொபைல் போன் எண்ணைத் தவிர, அவரது சரியான இருப்பிடம் குறித்து வேறு எதையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து, இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கை அவரது மொபைல் போன் எண் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மொபைல் போன் பக்தபூர் மாவட்டத்தில் இயங்கி வருவது தெரியவந்தது. இந்தப் பகுதி இலங்கையில் உள்ள நுவரா எலியாவைப் போன்றது. நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் நகரம், நேபாளத்தின் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு நேபாள போலீஸ் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவிலிருந்து பக்தபூருக்கு ஒலுகல மற்றும் கிஹான் சில்வாவை அழைத்துச் சென்றது. தொலைபேசி சிக்னல்கள் வெளியிடப்படும் இடம்தான் காவல் குழுவின் இலக்காக இருந்தது. சிக்னல்கள் சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருந்ததால், அது அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதானது அல்ல என்று காவல் குழு கண்டறிந்தது. அந்தப் பகுதி மக்கள் தொகை அதிகமாகவும், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருந்ததால், வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து இஷாராவைத் தேடுவது எளிதான காரியமல்ல. நேபாளத்தில் உள்ள சட்டப்பூர்வ சூழ்நிலையைப் பொறுத்தவரை, வீடு வீடாகவும், கட்டிடத்திலிருந்து கட்டிடமாகவும் செல்வது சிக்கலாக உள்ளது. மத்திய காவல்துறையின் அறிவிப்பின் பேரில் உள்ளூர் காவல்துறையினர் குழு ஏற்கனவே அங்கு வந்திருந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் வீடுகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்யச் சென்றால், இருட்டுவதற்குள் வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து முடிக்க முடியாது. நேபாள காவல்துறையினர் இரவில் செயல்படுவதில்லை. ஒரு சிறப்பு விஷயத்தின் காரணமாக இரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், மேலிடத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது சாத்தியமற்றது என்பதால், ரோஹன் ஒலுகல உள்ளிட்ட குழு, இஷாராவை அவரது இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று கைது செய்வது பொருத்தமானது என்று முடிவு செய்தது. ஜே.கே. பாய் இதற்கு பயன்படுத்தப்பட்டார். ஒரு திட்டத்தின்படி ஜே.கே. பாய் மூலம் இஷாராவின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் குழுவும் இதற்குப் பின்னால் இருந்தது. அந்த அழைப்பின் மூலம், இஷாராவை ஏமாற்றி, பக்தபூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தனது செலவுகளுக்குத் தேவையான பணத்தை பெற வருமாறு அழைப்பதே திட்டம். காவல்துறையின் திட்டத்தின்படி, ஜே.கே. பாய், செவ்வந்திக்கு போன் செய்து, அங்கு வர வேண்டிய நேரத்தையும் சொன்னார். அது மறுநாள் காலை. அன்று, நேபாள காவல்துறை ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தது. ஜே.கே. பாயும் ஏற்கனவே அவர்கள் காவலில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய, நேபாள காவல்துறை குழு, ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வாவுடன் ஆகியோர் ஜே.கே. பாய் முந்தைய நாள் செவ்வந்தியை வரச் சொன்ன இடத்திற்குச் சென்றது. நேபாள உள்ளூர் காவல்துறையினர் இஷாராவை அவள் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யும் நம்பிக்கையை கைவிடவில்லை. இரவு முழுவதும் அந்தப் பகுதியில் தங்கியிருந்த அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்து வந்தனர். அதன்படி, திங்கட்கிழமை காலை, அவள் வீட்டை விட்டு வெளியே வரவிருந்தபோது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் அவள் கைது செய்யப்பட்டாள். அந்த நேரத்தில், ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஏற்கனவே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் இருந்தனர். உள்ளூர் போலீசார் இஷாரா கைது செய்யப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவித்ததும், ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, நேபாள போலீஸ் குழுவுடன் சேர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று, முந்தைய நாள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகிலேயே செவ்வந்தி தங்கியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். வாரக்கணக்கில் நீடித்த சிறப்பு நடவடிக்கையின் விளைவாக இஷாராவைக் கைது செய்த பிறகு, ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா வெற்றியைக் கொண்டாடவும், அவளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு மற்றொரு நடவடிக்கை ஒதுக்கப்பட்டது. ஜே.கே. பாயால் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதன்படி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் நேபாளத்தின் மற்றொரு பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அந்தப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முதல் பார்வையில் அவர் இஷாராவைப் போலவே இருந்தார். இதேபோல். அதிகாரிகள் அவரை இஷாராவின் போலி என்று அழைத்தனர். அவர் பெயர் தக்ஷி. அவருடன் சுரேஷ் என்ற நபரும் இருந்தார். சுரேஷும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கொலை உட்பட பல குற்றங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தக்ஷியுடன் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு வந்திருந்தனர். ஜூலை 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்குச் சென்றதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தக்ஷி நேபாளத்திற்கு வந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவர் பாபி மற்றும் பாபா. பாபி நுகேகொடவைச் சேர்ந்தவர். பாபா கம்பஹாவைச் சேர்ந்தவர். பாபி மற்றும் பாபா பாதாள உலக குற்றவாளிகள். அவர்கள் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டவர்கள். 2019 ஆம் ஆண்டு நுகேகொடவின் ஜம்புகஸ்முல்லவில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க துபாய்க்கு தப்பிச் சென்றார். அவருடன் கைது செய்யப்பட்ட நபர் கெஹல்பத்தர பத்மேவின் சீடர். கம்பஹா பகுதியில் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இஷாராவை கைது செய்யச் சென்ற ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் நேற்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தனர். இந்தக் குழுவை அழைத்து வருவதற்காக நேற்று காலை இலங்கையில் இருந்து காத்மாண்டுவுக்குப் புறப்பட்ட விமானத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் மேலும் இரண்டு அதிகாரிகள் இருந்தனர். இந்த காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு கூடுதலாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் காவலர்களின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் விமானப் பாதுகாப்பு அதிகாரியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இந்த நடவடிக்கையில், இஷாராவை விட ஜே.கே. பாய் காவல்துறைக்கு மிகவும் முக்கியமானவர். அந்த பாதாள உலகக் குற்றவாளிகளில் பலரை நாட்டிலிருந்து நாடு கடத்தி வெளிநாட்டில் தங்குமிடம் வழங்க சர்வதேச மாஃபியா குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர் அவர்தான். ஜே.கே. பாயை விசாரிப்பதன் மூலம், இந்த வலையமைப்பு அம்பலப்படுத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது. https://pagetamil.com/2025/10/16/செவ்வந்தியை-விட-முக்கியம/
  5. சமாதானத்துக்கான நோபல் பரிசு sudumanal 2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார். இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது. யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார். பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர். அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர். சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர் இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர். அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு. கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya) நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார். மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார். இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது! ravindran.pa https://sudumanal.com/2025/10/11/சமாதானத்துக்கான-நோபல்-பர/
  6. பாதிக்கப்பட்டால் மேன் முறையீடு செய்யலாம் - வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக அதிகாரிகளுக்கு கூறிய வடக்கு ஆளுநர் வியாழன், 16 அக்டோபர் 2025 05:51 AM வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கருதுவும் எந்தவொரு ஆசிரியரும் முறையே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/51330
  7. நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் October 16, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது. இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது. மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. www.ilakku.orgநியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - மனித...ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு
  8. சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : மருந்தகமொன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கைது ! 16 Oct, 2025 | 10:24 AM பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஆவார். குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 01.30 மணியளவில் வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227853
  9. யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல் 16 October 2025 எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார். https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections
  10. முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை; முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி! வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது. வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது' என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். 'தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல், 2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல், 3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல், 4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல் ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/article/முறையான_அனுமதி_இல்லாமல்_நுண்நிதி_நிறுவனங்கள்_செயற்படுவதற்குத்_தடை;
  11. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள் adminOctober 15, 2025 வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ள்ளனர். போராட்டத்தின் போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்த வேளை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்ட காலத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. https://globaltamilnews.net/2025/221572/
  12. வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் adminOctober 15, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/221567/
  13. இடும்பன் பூசை தி. செல்வமனோகரன் அறிமுகம் இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது ஆற்றல்கள் மேலும் மேம்பட்டவை, கற்பனையாலும் எட்டமுடியாதவை, அதிலும் தன் தன் தெய்வத்தின் ஆற்றலே யாவற்றிலும் மேலானது என்ற கருத்துகள் மனிதகுல நாகரிக வளர்ச்சியோடு இணைந்து வலுவுற்று வளர்ந்தன. இதனால் அவ்வவ்விறைவனைப் பற்றி பல்வேறு ஐதிகக் கதைகள் தோன்றின. அவை கால, தேச, வர்த்தமானத்திற்கேற்ப மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இயற்கைப் பொருள்வழி இருந்த தெய்வம் விலங்கு, பறவை, மனிதவுருப் பெற்றது. வடிவம் அல்லது உருவம் முதன்னிலை பெறத் தொடங்கியது. விலங்கு – மனிதன், பறவை – மனிதன் என இணையுருவங்களுடன் மனித, ஆஜானுபாகுவான உருவங்களும்; அவற்றுக்கு நான்கு, தொடக்கம் பன்னிரெண்டு கைகள், ஒன்று தொடக்கம் ஆறு தலைகள் எனப் பல்வேறு ‘அதீத’ நிலைகளும் உருநிலைப்படுத்தப்பட்டன. அந்தத் தெய்வத்தை கேள்வியற்ற விசுவாசத்தோடு வழிபடும் அடியவர் பெறும் பேறுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்தப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன. அவை இதிகாசங்கள், புராணங்கள் எனச் செவ்விலக்கியங்களின் வழி மக்களின் மனதில் நிலைநிறுத்தப்பட்டன; சமயப்பிரசாரங்களின் பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள், சங்காரங்கள் என்பன விதந்துரைக்கப்பட்டன: கலை வடிவங்களாக்கப்பட்டு மக்கள் மத்தியில் மீள மீள நிகழ்த்தப்பட்டன. பொழுதுபோக்கு அம்சமாகவும், பிரசாரமாகவும், நம்பிக்கையாவும் இவை மக்கள் மனதில் நிலைத்துநிற்கச் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன. இந்தக் கதைகளானவை, கூத்தாக, கதையாக, பாடலாக பல்வேறு ரூபங்களில் பரவின. குறித்த ஒரு தெய்வத்தின் அல்லது நபரின் கதை பரவலாக்கமுறும் போது காலம், தேசம், பண்பாடு, தேவை அதன் அரசியல் என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமுறச் செய்யப்பட்டே வளர்க்கப்பட்டன. இதனால் காலவோட்டத்தில் அவை வேறுபட்ட தனிக்கதைகளுமாயின. அதேவேளை குறித்த பெயரில் வெவ்வேறு காலங்களில், இடங்களில் வெவ்வேறு கதைகள் தோன்றி உருப்பெற்று வளர்ந்தன என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தியப் பாரம்பரியத்தில் தோன்றி, புராணக்கதைகளின் வழி தமிழகத்தில் நிலைபெற்ற கதைகளில் ஒன்றாகவே இடும்பனின் கதை காணப்படுகிறது. இந்த இடும்பன் பூசை பற்றிய ஆய்வில் திரு கோ. விஜிகரன், திரு. சி. துக்ஷாந் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி ரஜீவா ஆகியோர் துணைநின்றனர். இடும்பன் இடும்பர் எனும் சொல்லுக்கு ஒருவகை இராட்சதர், ஒருவகைச் சாதியார், செருக்கர், துயர் செய்வோர் (இடும்பை – துன்பம், தீமை, நோய், வறுமை, அச்சம்; இடும்பு – அகந்தை, கொடுஞ்செயல், தீங்கு) எனப் பொருள் சுட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய உருவம் (ஆஜானுபாகுவான தோற்றம்), நீண்ட கை – கால்கள் உடையவர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கை அகட்டி நடப்பவர்கள், நன்றாக உண்பவர்கள் போன்றோரை இடும்பனுக்கு ஒப்பிடுவர். ‘ஆளப் பார் இடும்பன் மாதிரி’, ‘இடும்பன் எண்டு நினைப்பு’ போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சுட்டலாம். இடும்பன் பற்றிய கதைகள் இடும்பன் பற்றி பல்வேறு கதைகள் நின்று நிலவுகின்றன. ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்த இராட்சசனான இடும்பன் பின்பு முருகபக்தனாகத் திகழ்ந்ததாகப் பொதுவில் கூறப்பட்டாலும் இதன்னின்றும் வேறுபட்ட கதைகளும் உண்டு. இராமாயணம்: இராவணனால் கவரப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் இராமன் சுக்கிரீவனின் உதவி பெற்று இலங்கையில் சீதை இருப்பதை அனுமன் மூலம் அறிகிறான். இராமன் சீதையை மீட்க சுக்கிரீவனின் படையோடு கரையை அடைகின்றான். கடல் குறுக்கிடுகிறது. பாலம் அமைக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. அந்நிலையில் சுக்கிரீவனின் சேனை வீரர்களில் ஒரு அணியின் தலைவனாக இருந்து சேதுபந்தனத்தின்போது மலைகளைப் பிரித்துவந்த மாவீரர்களில் ஒருவனாக இடும்பன் காணப்படுகின்றான். மகாபாரதம் – இடும்பவனத்தில் இடும்பன் தன் தங்கையான இடும்பியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வனத்துக்கு வந்த பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி காதல் கொள்கின்றாள். அவ்விடம் வந்த இடும்பன் “மானுடர்களை உண்ணும்படி உன்னை அனுப்பினால் நீ இவன்மீது காதல் கொள்கிறாயா?” என இடும்பியை ஏசியபோது பீமன் அவனை இடைமறிக்கின்றான். “அற்ப மானுடனே நீயும் இவள்மீது காதல் கொண்டுள்ளாயோ? அவ்வாறெனில் என்னோடு போர் புரிந்து வென்றபின் அவளைத் திருமணம் செய்” எனக் கூறினான். யுத்தம் நிகழ்ந்தது. இடும்பன் இறந்தான். பீமன் இடும்பியுடன் வாழ்ந்து கடோத்கஜன் எனும் மகனைப் பெற்றான். பழனி தல புராணம்: அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சக்தி கிரி, சிவ கிரி என்னும் இரண்டையும் சக்தி – சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைப் பொதியமலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக்கருதி பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்துவிட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரபன்மன் குலத்தோர்க்கு வில்வித்தை முதலிய வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரன், முருகனால் சூரன் முதலானவர்கள் அழிக்கப்பட்டபோது, தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வன சஞ்சாரம் சென்றான். திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அகத்தியர் “திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்சவனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துப் பொதிகை மலைக்குக் கொண்டு வருவாயானால் பெறற்கரிய பெரும்பேறடைவாய்” எனக்கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தினார். அவன் அகத்தியர் கூறிய வழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உச்சரித்துத் தவம் செய்தான். அப்பொழுது பிரமதண்டம் புய தண்டாகவும் அட்ட திக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்ததைக் கண்டு, பாம்புகளை உறிக்கயிறாக பிரமதண்டுடன் பிணைத்து இரு சிகரங்களையும் இருபக்கத்திலும் பிணைத்து, தோளிற் சுமந்து காவடி எடுப்பதுபோல் நடந்துசென்று பழனியை அடைந்தபோது, முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத் தோன்ற, அந்த இடத்தில் இறக்கி வைத்து இளைப்பாறினான். காவடியைப் பின்பு தூக்க முயன்றபோது முடியாது போகவே சுற்றிப் பார்த்தான். சிவகிரியின் ஒரு சாரலிலுள்ள குரா மரநிழலிலே தண்டாயுதபாணியைக் கண்டு, அவன் யாரென அறியாது வழியை விடும்படி வற்புறுத்தினான். முருகன் தன் திருவிளையாடலைத் தொடக்கி “உன்னிடம் வலிமை இருந்தால் கொண்டு செல்” எனக் கூறினார். ஆத்திரமடைந்த இடும்பன் குரா மரத்தடியில் நின்ற தண்டாயுதபாணி மேல் பாய்ந்தபோது அவர் விலக, அவ்விடத்திலேயே வீழ்ந்திறந்தான். பிரமதண்டும் நாகங்களும் அஞ்சி அகன்று அகத்தியரிடம் செய்திசொல்லின. இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகன் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் எழுந்து முருகனை வணங்கி அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்க, முருகனும் அவ்வாறே அருளினார். இடும்பன் கதையுடன் தொடர்புடைய காவடி இன்று பல வடிவங்களில் எடுக்கப்படுகிறது. இடும்பன், தான் இரு மலைகளையும் எடுத்து வந்ததுபோல், தமது பாபச் சுமையை நீக்கக் காவடி எடுத்துவரும் அடியார்களுக்கு அருளும்படியும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகன் கோயில்களில் இடும்பனைப் பரிவார மூர்த்தியாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வாலயங்களில் முருக மஹோற்சவம் முடிந்தபின் இடும்ப பூசை நடைபெறுவது வழக்கில் காணப்படுகிறது. தமிழகத்து சற்குருநாதர் கோயிலில், தான் இழந்த சக்திகளைப் பெற்ற பிரம்மா மகிழ்ந்து பிரம்ம தீர்த்தத்தை நிறுவியதாகவும் அங்கு சென்ற சிவபக்தனான இடும்பன், தன் பாவங்கள் யாவற்றையும் போக்க இக்குளத்தில் நீராடி வழிபட்டதாகவும் சிவன் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. பழனி தல புராணம், அதனோடு ஒட்டிய ஐதிகக் கதைகள் மாத்திரமே முருகன் அடியாராக இடும்பனைக் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். பொதுவில் இடும்பன் இராட்சதனாகவும், அதேவேளை ஞான நாட்டமுடைய சிறந்த பக்திமானாகவும், காவல்தெய்வமாகவும், அச்சத்தோடு மக்கள் வழிபடும் தெய்வமாகவும் அமைந்துள்ளது. இடும்பன் கோயில்கள் தமிழகத்தில் தஞ்சாவூர் காடுவெட்டி விடுதி, கீழ் மேட்டுப்பட்டி, இடும்பாவனம் என்பவற்றிலும் திருக்கன்றாப்பூர், குன்றக்குடி, திருப்பூரருகே இடுவம்பாளையம், பழனி போன்ற பல இடங்களில் இடும்பனுக்குத் தனிக்கோயில்களுண்டு. பிற கோயில்களில் பரிவார மூர்த்தியாகவும் முதன்மை கொடுக்கப்படுகின்றது. ஈழத்துப்புலத்தில் கொழும்பு வாழ் நகரத்தாரின் (செட்டிமாரின்) மூன்று கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்களிலும், யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, உரும்பிராய் போன்ற இடங்களிலும் இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் பரிவார தெய்வமாக இடும்பன் தனிக்கோயில் பெற்றுக் காணப்படுகின்றான். திருகோணமலையில் இடும்பன்மலை என்று ஓர் இடம் உண்டு. பண்டத்தரிப்பில் காலையடி எனும் இடம் உண்டு. ஆகம முறையிலமைந்த கோபுரத்துடன் கூடிய முருகனாலயமே காணப்படினும், இன்றும் அது இடும்பன் ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றது. மூலஸ்தானத்தில் மூலமூர்த்திக்கு அருகில் முன்பு இடும்பனாக வழிபடப்பட்ட வேல், இன்றும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது (தகவல்: ஆலய முன்னைய தலைவர், திருநாவுக்கரசு, வயது. 83). கொழும்பு வாழ் நகரத்தார் சமூகம் கதிர்காமக்கந்தன் மீது அளவற்ற பக்தி உள்ளவர்கள் என்றும், நேர்த்திக்கடன் செலுத்தக் காவடி முதலானவற்றைக் கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகவே (கரப்பாதை) செல்வதாகவும், அப்போது வழித்துணையாக இடும்பனை அழைத்துச் செல்வதாகவும், அதன் நன்றிக்கடனாகவே தமது கொழும்பு முருகன் கோயில்களில் இடும்பனைப் பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்படி நகரத்தார் கோயில்களில் மட்டுமே உருவவழிபாடு காணப்படுகிறது. ஏனைய கோயில்களில் பெரும்பாலும் வேல், சூலம், கல் என்பன வைத்தே வழிபடப்படுகின்றன. உரும்பிராய் அம்மன் கோயிலில் பரிவாரமாக உள்ள இடும்பன் முச்சூலம் மூன்றின் இணைந்த வடிவத்தினராகக் காணப்படுகின்றார். மையத்தில் இருக்கும் திரிசூலத்தில் இருந்து எதிர்த்திசைகளை நோக்கியதாக ஏனைய இரு திரிசூலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இடும்பன் தெய்வமாகக் கருதப்படுதாது முருகன் அடியாராகக் கருதப்பட்டுவரும் வழக்கம் மேனிலையாக்கக் கோயில்களில் காணப்படுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்து மடாலயங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மஹோற்சவ கால பதினேழாந் திருவிழா இடும்பவாகனத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இடும்பன் பூசை நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஈழத்துப்புலத்தில் பொதுவாக தனிக்கோயில்களிலும் இடும்பனைப் பரிவாரமாகக் கொண்ட கோயில்களிலும், கிராமிய முறை, ஆகம முறை எனும் இருதளங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. தனிக்கோயில்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதாரின் நாட்டார் வழக்கிலான பூசைமுறையே நடைபெறும். மேனிலையாக்கம் செய்யப்பட்ட முருகன் கோயிலாக மாற்றம்பெற்ற மற்றும் பரிவாரமாக இடும்பன் இருக்கும் ஆகம முறை சார்ந்த கோயில்களில் ஆகம முறைப்படியான பூசைகளே நடைபெற்று வருகின்றன. ஆடிவேல் உற்சவங்கள் நடைபெற்று முடிந்ததன்பின் இடும்பனுக்கு சைவ, அசைவப் படையல் வைத்து வழிபடும்முறை ஆகம முறைப்படி அமைந்த கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதேபோல கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் (வடமராட்சி) போன்ற இடங்களில் கதிர்காம யாத்திரை செய்து தமது நேர்த்திக்கடனை முடித்து வந்தவர்கள் மட்ச – மாமிசம் காய்ச்சக்கூடிய நாளொன்றில் வீட்டில் இடும்பன் பூசை செய்வர். இவ்வாறு கோயில் சார்ந்து நடைபெறும் இடும்பன் பூசைகளைத் தவிர வாழ்வியல் சார்ந்தும் இடும்பன் பூசைகள் நடைபெறுகின்றன. அவை மகிழ்வுசார் சந்தர்ப்பத்திலும், துக்கம்சார் சந்தர்ப்பத்திலும் நடைபெறுகின்றன. குடிபுகுதல் (வீடு குடி பூரல்), கிணறு வெட்டி ஊற்றுக்காணல், குறித்த நேர்த்தியை நிறைவு செய்ததன் பின்னர், எடுத்த காரியம் சிறப்புற நடைபெற்றதன் பின்னர் என மகிழ்வுசார் பூசை நடைபெறும். இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய (31) நிகழ்வு நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். இடும்பன் பூசை மேலே குறிப்பிட்டதுபோல இடும்பன் பூசை என்பது இருவிதமாக நடைபெறுகின்றது. கோயில் சார்ந்தது. கோயில் சாராது, வாழ்வியலுடன் இணைந்தது. இடும்பன் தனிக்கோயிற் கொண்டு இருக்கும் இடங்களில் தினம் விளக்கு வைத்தல், வாராந்தப் பூசை, வெள்ளியில் விளக்கு வைத்தல் மற்றும் விஷேட தின பூசை என்பன இடம்பெறுகின்றன. இங்கு நடைபெறும் விசேட தினப் பூசைகளில் சோறு, மட்சம், மாமிசம், மரக்கறி என்பன அவித்துப் படைக்கப்படும். பூசாரி தெய்வமாடி குறி சொல்லுதலும், பில்லி – சூனியம் – வசியம் முதலியன நீங்குதலும், கயிறு கட்டி திருநீறு இடுதலும் வழக்கமாக உள்ளது. அதேவேளை நேர்த்தி வைத்த மக்கள் தாமாகவே படையலை வைத்து வழிபடலும், அவற்றை மக்களுக்கு அள்ளி வழங்குதலும் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள அல்வாய்ப் பிரதேசத்தில் இடும்பன் கோயில் காணப்பட்டதாகவும், அங்கு சோறு, மட்சம், மாமிசம் படையலிட்டபின் அவற்றை ஒன்றாக்கிக் குழைத்து திரணைகளாக்கி (பந்து போல உருண்டையாக்கி) யாவர்க்கும் வழங்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் தகவல் உண்டு (தகவல் – இ. இராஜேஷ்கண்ணன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இக்கோயில் யுத்த காலப்பகுதியில் ஏதோ சில காரணங்களால் அகற்றப்பட்டுவிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் ஆடிவேலின் பின் இடும்பனுக்குப் படையலிட்டு அடியவர்க்கு வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு ஆகமம்சார்ந்த பூசைமுறையே காணப்படினும் இத்தினத்தில் மட்டும் அசைவம் என்று சொல்லப்படும் மட்ச, மாமிசப் படையல் இடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்வியல்சார் சடங்காக இடும்பன் பூசை மகிழ்வு சார் சடங்கு/ பூசை 1. கிணற்றில் ஊற்றுக் காணல் வீட்டுவளவில் அல்லது தோட்டங்களில் கிணறு வெட்டுவர். கிணற்றை வெட்டும்போது அத்தொழிலைச் செய்பவர் காவல் தெய்வமான இடும்பனிடம் “எந்தச் சிக்கலுமின்றி கிணறு வெட்டி முடித்து நன்னீர் ஊற்று சிறப்பாகச் சுரக்க வேண்டும்” என வேண்டிக் காரியத்தைத் தொடங்குவார். கிணறு வெட்டும்போது ஊற்றுநீரைக் கண்டவுடன் அந்த நீரை காவோலையால் (காய்ந்த பனையோலையால்) மூடிவிடுவர். அடுத்த நன்னாள் பார்த்து, உரிய நேரத்தில் இடும்பன் பூசை செய்வர். கோழி ஒன்றின் கழுத்தறுத்து எறிவதோடு இரத்தத்தைக் கிணற்றில் தெளிப்பர். காவோலை எடுக்கப்பட்டுவிடும். பலியிடப்பட்ட கோழியை உண்ணும் வழக்கம் இல்லை. வேறு இறைச்சி, மட்சம் உள்ளிட்டவை சமைத்து கிணறு வெட்டிய தொழிலாளிகளுக்கும் தமது உறவுகளுக்கும் கொடுத்துண்பர். 2. வீடு குடிபுகுதல் (வீடு குடி பூரல்) புதிதாகக் கட்டப்பட்ட வீடு குடிபுகும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டின் மரவேலைகளைச் செய்த தச்சுத் தொழிலாளர்களால் வீட்டின் முகடு பிரித்து தச்சன் காளி விரட்டல் சடங்கு நிகழ்த்தப்படும். அதுபோல குடி புகுதல் நிகழ்வு நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு அவ்வீட்டைக் கட்டிய தொழிலாளர்களுக்கும் வேண்டிய உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணம், மூளாய், பொன்னாலைப் பிரதேசங்களில் அத்தினத்தில் கோழி கழுத்தறுத்துப் பலியிடப்படுதலும் தலையை வீட்டுக் கூரையின் மேலால் எறிதலுமாகிய வழக்கம் காணப்படுகிறது (தகவல் – மயூரரூபன், எழுத்தாளர், வடமராட்சி). இதேவேளை யாழ்ப்பாணம், நுணாவில், மட்டுவில் கிராமங்களின் சில பகுதிகளில் இடும்பன் பூசை நடைபெறும் நாளில் சமைக்கப்படும் சைவ, அசைவ உணவுகள் யாவற்றிலும் சிறிது அள்ளி, வடலிப் பனையோலையால் பின்னப்பட்ட தட்டுவத்தில் இட்டு, குசினி அடுப்படியில் வைத்த பின்பே உணவு பரிமாறப்படுகிறது. அன்றிரவு ஆளரவம் அடங்கியபின் அத்தட்டுவத்தை சந்தி முடக்குகளில் அல்லது சுடலைக்கண்மையில் வைத்துவிட்டு வரும் வழக்கம் காணப்படுகிறது (தகவல் – செல்வி. ரஜீவா, நுணாவில், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்). பண்டத்தரிப்புப் போன்ற பிரதேசங்களில் பந்தமும் கொண்டு சென்று இவற்றைச் சந்தியில், ஆட்கள் புழங்காத இடத்தில் வைத்துவிட்டு தமது வீட்டடியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, பின்பு கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லும் வழக்கமுள்ளதாகக் கொத்தனார் வேலை செய்யும் தர்மலிங்கம் குகன் (வயது, 37) பேபிச்சந்திரன் விஜயகுமார் (வயது, 48) போன்றோர் தெரிவித்தனர். கோயில் திருவிழா, கந்தசஷ்டி போன்ற காலங்களில் விரதம் முடிவுற்றதன் பின்பும் கோயில்களுக்கான பாதயாத்திரைகள், நேர்த்திக்கடன்கள் முடிவுற்றதன் பின்பும் அசைவ உணவு சமைக்கப்பட்டு உறவினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும். துக்கம்சார் சடங்கு/ பூசை இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு, அவ்விறப்பு நிகழ்வு நடைபெற்றபோதும், பின்னான நாட்களிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் துணைநின்ற அனைவருக்கும், இரத்த உரித்துடைய உறவுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. செட்டிமாரிடமும், பாண்டியன் தாழ்வு போன்ற பிரதேசங்களிலும் இந்த வழக்காறு இருப்பதாக திரு. ச. முருகேசபிள்ளை (வயது, 60) குறிப்பிடுகின்றார். இங்கு இடும்பன் பூசை என்பது இடுப்பன் சாமிக்கான பூசையல்ல; அசைவ உணவு சமைத்து குறித்த காரியத்தில் கை கொடுத்த, துணைநின்ற, வழித்துணையாய் அமைந்த மனிதருக்கு அன்புடன் பரிமாறும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. இடும்பன் பூசைக்கான படையல் இடும்பன் பூசை கோயில்களில் நடைபெற்றாலும் சரி, வீட்டில் நடைபெற்றாலும் சரி இடும்பனுக்கான படையல் தனித்துவமானது. கோயில்களில் பெரிய கிடாரங்களில் சோறு சமைக்கப்படும். ஆடு, கோழி, இறைச்சிகளும் கடலுணவுகளான நண்டு, இறால், கணவாய், மீன் என்பவற்றோடு பலவகையான, கிடைக்கக்கூடிய மரக்கறிகளும் சமைக்கப்பட்டு பனையோலைப்பாயில் படையல் வைக்கப்படும். சோறு மலைபோல் குவிக்கப்பட்டு கறிவகைகள் இடப்பட்டு, படையல் படைக்கப்படும். சில கோயில்களில் கள், சாராயம் போன்றவற்றைப் படைக்கும் வழக்கமுண்டு. வீடுகளில் நடைபெறும் இவ்வாறான பூசைகளில் சோறு, மரக்கறி, இறைச்சி வகைகளோடு புட்டு, கணவாய், இறால், மீன், பொரியல் – கறி உள்ளிட்ட பலவகையான உணவாக்கங்கள் அவரவர் வசதிக்கேற்ப ஆக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்பூசையில் பங்குபற்றுபவர்களுக்கு வேண்டிய மதுபான வகைகளும் வழங்கப்படும். இவை இன்று அநாகரிகச் செயற்பாடுகளாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றன. சில அவதானிப்புகள் இடும்பன் பற்றிய கதைகள் பலவிதமாக உள்ளன. பாரத, இராமாயண இடும்பன் இராட்சதன், காவற்காரன்; முருகனடியாராகச் சித்தரிக்கப்படும் இடும்பன் சிறந்த பக்தனாக, மலைகளைத் தூக்கவல்ல பேராற்றலானாக, வீரனாகக் காட்டப்படுகின்றார். காலந்தோறும் வந்த பல்வேறு கதைகளின் கூட்டு வெளிப்பாடாகவே இடும்பன் கதை அமைகிறது. இராட்சதன், வீரன், காவல் தெய்வம் என்பதனால்தான் என்னவோ அசைவ உணவும் மலைபோன்ற உணவுக்குவியலுமான படையல் வழங்கப்படுகிறது போலும். நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் முருக வழிபாட்டோடு இடும்பன் வழிபாடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நல்லூரில் கந்தசஷ்டி காலத்தில் நவவீரர் பவனி இடம்பெறுதல்போல, கொழும்பு ஆடிவேல் விழாவில் முருகனின் திருத்தேர் முன்பு பிரம்புடன் இடும்பன் ஆடிப்பாடி வருகின்ற நிகழ்வு இடம்பெறும். பிரம்புடன் வருதல் என்பது இடும்பனுக்கு கொடுக்கப்படும் முதன்மை அதிகாரத்தின் குறியீடு எனலாம். அதேவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடும்பன், வழிபடு தெய்வமாகவன்றி சுவாமியைக் காவும் வாகனமாகவே உள்ளான். கால்களை மடக்கி கனத்தினைத் தாங்கும் இராட்சதனாக – ஒரு வீரனாக – பக்தனாக – விசுவாசியாக – தொழிலாளர் வர்க்கத்தினனாகவே சித்திரிக்கப்படுகின்றான். கலையியல் மரபில் இடும்பனுக்குத் தனிப்பங்குண்டு. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடிக் கூத்துகளில் ஒன்றாக ‘இடும்பன் போர்’ விளங்குகின்றது. அதுபோல நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவத்தில் பதினேழாம் நாள் நடைபெறும் இடும்பன் வாகனத் திருவிழாவில் பூதநிருத்தம் எனும் நடனம் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூதநிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது கந்தசுவாமி பவனி இடம்பெறும். ஈழத்துப்புலத்தில் கதிர்காம யாத்திரை என்பது நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதன்முதல் யாத்திரை போய் சிறப்பாக அதனை முடித்து வீடு திரும்பியவர் வீட்டில் இடும்பன் பூசை செய்தபிறகே அவர் மீள வீட்டுக்கு வெளியில் செல்லலாம் எனும் நடைமுறை வல்வெட்டியில் இருப்பதாக திருமதி கேசலிங்கம் தவமலர் (வயது, 78) குறிப்பிடுகின்றார். பல பிராந்தியங்களில் யாத்திரை செய்யும் தோறும் இப்பூசை இடம்பெற்று வந்துள்ளது. ஆயினும் இன்று யாத்திரை மரபும் இடும்பன் பூசையும் வழக்கிழந்து வருகின்றது. வெட்டுக்கிணறு வெட்டும் வழக்கம் இன்று அருகி குழாய்க்கிணறு முறையே பெருகிக் காணப்படுகின்றது. அதுபோல கோழி பலியிடல் அருகி அதன்வழி இடும்பன் பூசையும் வழக்கிழந்து பொங்கல் படையலே எஞ்சி நிற்கின்றது. வீடு குடி புகுதல் நிகழ்வின் பின்னான மட்சம், மாமிசம் காய்ச்சுதல் நிகழ்வாக இடும்பன் பூசை நடைபெறுவது அருகி வருகின்றது. படையலுக்குப் பயன்படும் பனையோலையாலான தட்டுவம், பாய் என்பனவும் வழக்கிழந்து விட்டன. தற்காலத்தில் வாழையிலையும் உலோக, பிளாஸ்ரிக் தட்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன. எல்லா மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த இடும்பன் பூசை இன்று கைவிடப்பட்டு செட்டிமார், சிறுகுடி வேளாளர் போன்றோராலேயே சிறிதளவேனும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இடும்பனுக்கான படையல் என்பது, குறித்த பிராந்திய மக்களின் பண்பாட்டோடு இணைந்து உணவு முறை, குடிவகைசார்ந்த வெளிப்பாடாகவும் கொடுத்துண்கின்ற பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அமைகிறது. இன்று இடும்பன் பூசை எனும் சொல்லாட்சி அசைவ உணவை உண்ணுதல் என்பதனைக் குறிக்கும் சொல்லாக, கிண்டலாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது. காளியோடு இணைந்திருக்கும் இடும்பன் வழிபடு தலங்கள் புதிய தளக்கோலங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளன. காளி, பிள்ளைகளைப் பிடித்துண்ணுபவளாகவும், அவளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாக நகரத்தார் இடும்பனை வழிபட்டதாகவும், பயன்பெற்றதாகவும், தமிழகத்தில் ஓர் ஐதிகக்கதை உண்டு. மகாபாரதத்தில் இடும்பன் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களை உண்பவனாகவே சித்திரிக்கப்படல் முரண் நகையாகும். ஈழத்தில் காளியோடு இணைந்த இடும்பன் வழிபடுதலங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்பன நிகழ்த்துகைகளாக உள்ளன. இது இடும்பன் வழிபாடு, நாகரிகமற்ற ஒன்று எனக் கருத வாய்ப்பளிக்கின்றது. இடும்பன் பூசை என்பது ஒரு வழிபாடு என்பதைவிட, குறித்த காரியத்தில் துணை நின்ற யாவர்க்கும் அவர் விரும்பும் உணவை, குடி வகையை விருந்தாக அளித்து நன்றி செலுத்தும் நிகழ்வு என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் நுணுகியுரைக்கின் மகிழ்விலும் துக்கத்திலும் கூட இருந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதாகவும் வீடு, கிணறு உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் நிகழும் நிகழ்வாகவுமே இடும்பன் பூசை அமைந்துள்ளது. நிறைவுரை ஈழத்தில் நின்று நிலவுகின்ற நாட்டார், ஆகமமரபு வழி தனித்தனியேயும், இரு மரபும் இணைந்தநிலையிலும் வழிபடு தெய்வமாக இடும்பன் காணப்படுகின்றான். இடும்பன் பற்றிய கதைகள் பல இடும்பன்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அவனை இராட்சதனாக, மாமிச உண்ணியாக சித்திரிப்பதில் ஒன்றுபடுகின்றன. இடும்பன் தனிக்கோயில் கொண்டவனாக, பரிவாரத் தெய்வமாக காணப்படுகின்ற அதேவேளை, இன்று அவனது கோயில்கள் பல காணாமல் போயின அல்லது மேனிலையாக்கம் பெற்றன. ஆஜானுபாகுவான உருவமுடைய சிலை – விக்கிரக வழிபாடு காணப்படும் அதேவேளை வேல், கல், சூல வழிபாடும் உள்ளன. உரும்பிராயில் மட்டும், மூன்று திரிசூலங்கள் இணைந்து, இருபக்கமும் மேலும் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காண முடிகிறது. சனங்களின் உணவியல் பண்பாட்டோடு கலை மரபோடும் இணைந்த இத்தெய்வம் அரூபநிலையிலும் வழிபடப்படுகிறது. இடும்பன் பூசை ஒரு தெய்வ வழிபாடாக மட்டுமன்றி உழைப்பாளர்களை – குறித்த தொழில்களைச் செய்யும் மக்களை, அவர்களின் பணியைக் கௌரவித்து, மரியாதை செய்வதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆயினும் நாகரிகம் என்ற போர்வையில் இன்று இப்பண்பாடும் பூசையும் மிகவிரைவாக வழக்கிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/idumban-pooja/
  14. கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 15 Oct 2025, 11:35 AM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்: கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார். கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார் கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை. விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை. மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார். கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர். அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது. நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். https://minnambalam.com/karur-vijay-stampede-tragedy-how-did-41-people-die-why-did-the-ambulance-arrive-cm-stalin-explains-in-the-assembly/#google_vignette
  15. குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு October 15, 2025 கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார் அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது. ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள். இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை இம் முரண்பாடுகளின் விளைவாக அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியைக் கூட இராஜினாமா செய்திருந்தார் ஏன்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் அமைதியாகவிருந்த கல்கமுவ சாந்தபோதி எனும் தேரரும் தொல்லியல் திணைக்களமும் அநுர அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர் குருந்தூர்மலை மலை மற்றும் அதனைச் சூழவுள்ள அந்த 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றார்கள். அதன் முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறம்தள்ளி விவசாய நிலங்களை அழித்து அறிவித்தல் பலகைகளை இன்று தொல்லியல் திணைக்களம் வைத்திருக்கின்றது உள்ளூரில் அரிசி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய மிக வளமான விவசாய நிலங்களை அழித்து ஆக்கிரமிக்கும் நிலையைத் தொடரவிட்டு சம நேரத்தில் மறுபுறம் மக்களின் தேவைக்கு அரிசியை இறக்குமதி செய்கின்றார்கள். 2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 5.5 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டிய சீரழிந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் இவ்வாறு இனவாதம் தொடர்ந்தால் என்ன செய்யப் போகிறது அநுர அரசு. ஆனால் பொதுப்பரப்பில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி ஆட்கள் வெறும் வாயில் நிறுவ முயற்சிக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் இனவாதம் இவ்வாறு தலைதூக்குகிறது. https://www.ilakku.org/kurundurmalai-issue-tamil-farmers-lands-destroyed-and-declared-as-archaeological-site/
  16. கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு… October 15, 2025 யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை. இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார். அதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/order-to-immediately-remove-kopai-police-station/
  17. இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்: முழு விபரம் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் சுமார் மூன்று வாரங்கள் தங்கி, சாலை வழியாக நேபாளத்திற்குச் சென்று, தப்பிக்க கிட்டத்தட்ட ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) மற்றும் ஐ.ஜி.பி.யின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் சிறப்பு காவல் குழுவால் செவ்வந்தி, கண்டுபிடிக்கப்பட்டு நேபாளத்தில் காவலில் எடுக்கப்பட்டார். 2025 பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவா குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.கே. பாய் என்ற கூட்டாளியின் உதவியுடன் செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கி, நேபாளத்தை அடைய பல்வேறு வழிகள் வழியாக பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்தார். நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் மறைந்திருந்தபோது, திங்கட்கிழமை செவ்வந்தி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு பெண், கெஹல்பத்தர பத்மேவின் மூன்று நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு தமிழ் நபர் உட்பட நான்கு பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மேவின் குற்றவியல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக செவ்வந்தி தேடப்பட்டு வந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கா, துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் புத்தளம், பலாவியாவில் சிறப்புப் பணிப் படையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஒரு பெண் துப்பாக்கியை சட்டப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து உதவியதாக சிசிடிவி காட்சிகள் பின்னர் வெளிப்படுத்தின, பின்னர் அவர் மினுவங்கொடயைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டார். எல்லைகளைத் தாண்டிச் செல்லவும், கைது செய்வதைத் தவிர்க்கவும் செவ்வந்தி மற்றொரு பெண்ணின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதற்கிடையில், இலங்கை அதிகாரிகள் இன்டர்போல் மூலம் அவரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக ஏஎஸ்பி வூட்லர் கூறினார். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2021 மற்றும் 2024 க்கு இடையில், அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ. 3.9 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார். இதற்கிடையில், "பஸ் லலித்" என்று பரவலாக அறியப்படும் லலித் கன்னங்கர, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவலை, ஹோமாகம மற்றும் கடுவெல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் அவர். ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுக்கவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த முன்னாள் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்த பஸ் லலித் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இஷாரா-செவ்வந்தி-எப்படி-தப்பினார்-முழு-விபரம்/175-366312
  18. யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்! யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி நடைபெற்றது. அக் கலந்துரையிடலில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். https://newuthayan.com/article/யாழ்._மத்திய_பேருந்து_நிலையக்_கடைகள்_மூலம்_இ.போ.ச_ரூ.9.45_இலட்சம்_வருமானம்!
  19. பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை! கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்கை பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களின் நிதி மதிப்பு குறித்த மதிப்பீட்டை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள்/சொத்துக்கள், 37 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் அறுபத்தேழு மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கு பொலிஸார் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/பாதாள-குழு-முக்கியஸ்தர்க/
  20. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! adminOctober 15, 2025 வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை. இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221521/
  21. நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் October 14, 2025 3:45 pm கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி உள்ளிட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த யாழ்ப்பாணத்தை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை இலங்கை பொலிஸின் சிறப்பு குழு கைது செய்துள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் முக்கிய சந்தேக நபரும் மேலும் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்வதற்காக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நீண்ட இரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை (CID), சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன், களத்தில் கிடைத்த தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது. சந்தேக நபரான இஷார செவ்வந்தி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல்வேறு கொலைகளைத் திட்டமிட்ட ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மேவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷார செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட பொலிஸ் குழு நேபாளம் சென்றிருந்தது. உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன், இஷார செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர். நேபாளத்தில், இஷார செவ்வந்தியுடன் மற்றொரு தமிழ் ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் தவிர, சந்தேக நபர் மற்றும் தங்குமிடம் வழங்கிய சந்தேக நபர் உட்பட மேலும் நான்கு பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் நான்கு ஆண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இஷார செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷார செவ்வந்தியை ஒத்த தோற்றமுடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை பயன்படுத்தி இஷார செவ்வந்தி நேபாளத்தில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் இஷார செவ்வந்தி நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மித்தெனி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்த அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். கெஹல்பத்தர பத்மேவி ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர் உதவிகள் அனைத்தையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த இஷார செவ்வந்தி அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் செற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கும் கெஹல்பத்தர பத்மே உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில். வெளிநாடுகளில் உள்ள இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜயபால, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ரவி செனவிரத் ஆகியோரின் சிறப்பு பங்களிப்பும் கிடைத்திருந்தன. கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கை மூலம் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/jaffna-tamils-who-gave-shelter-to-ishara-sewwandi-in-nepa/
  22. செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள் இளங்கோ அண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. நான் நேத்ராவின் நனவிடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு 96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி, அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார். இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர். இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம். இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது. பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது. இற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம்' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன. அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர். கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது. இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார். இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார். இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார். கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும். கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார். அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும். அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு. இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது. இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். *** ('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும். இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது) -நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005- https://www.elankodse.com/post/செம்மணி?fbclid=IwdGRleANbZCtleHRuA2FlbQIxMQABHqD8R1qc8XcySqXQ3BbP5I0JfN3oEdFRgig2klNF_H6m2pD6F82a_zgMlZ8f_aem_C-KH0QyGDMcXrTF6CnuFNg
  23. விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். விஜய் அரசியலின் குழப்பம் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும் இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது. தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின் பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல் பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள் பெரும்பாலும் பிற்போக்கு குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது) இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும். பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள் நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம். விஜய் அரசியலின் சாதியக் கோணம் காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது. எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல் இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள். முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம். https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/
  24. மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் October 14, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாணசபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை நாம் பிறகு தீர்மானிப்போம். இதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் கிளப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார். அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும் அமைச்சருமான பிமால் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நாளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும் எல்லைநிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்த செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாணசபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார். முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் எந்த தகவலும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும் நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே. தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அதற்கான காலஅவகாசம் கடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது. அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு புதிய மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்த தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம் புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டு வந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மடடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார். உண்மையிலேயே மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு இருந்தால், சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும். மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில் தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து உடனடியாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நிச்சயமாக நடத்தியிருக்கும். தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை எந்த அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றையா அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்த தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால், இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாணசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கெனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்த கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்ட காலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும். முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க் கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன. தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாணசபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்கு கிடைத்ததாக அறிய வரவில்லை. https://arangamnews.com/?p=12377
  25. ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர். https://jaffnazone.com/news/51285

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.