Everything posted by கிருபன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Leaderboard என்று புதிதாக ஒன்று மேலே தொங்குகின்றது. இது பச்சைப் புள்ளிகள் எடுத்தவர்களைக் காட்டுவது நல்லதுதான். கூடவே, அதிகம் பார்த்த தலைப்புக்கள், கருத்துக்கள் என்றும் சேர்த்தால் சூடான விடயங்களையும் அறியலாம் அல்லவா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தேவர்களும் சிறை செல்லலாம் தம்பா வறுமையை அள்ளிக் கொடுத்து செல்வத்தை வறுத்தெடுத்த கிராமம். பட்டினிக்கு நிவாரணமாக மடாலயங்களில் பால்ய பருவத்தை அடைவு தந்த தந்தை. பல வர்ண கனவுகளும் பல வர்ண உடைகளும் வெளிறி பழுத்து மஞ்சள் நிறமானது. பகலை இரவாக்கி இரவை பகலாக்கி விந்தை புரிந்த துறவி போரை சமாதானமாக்கி சமாதானத்தை போராக்கி காயான மனதை புகை போட்டு பழுக்க வைத்தார். பன்பருவத்து ஆத்மீகம் உடலோடு வளரமறுக்க 'கடவுளையும் நாட்டையும் உயிரிலும் மேலாய் வை' என நெற்றியில் அரச மரத்து கிளை நாட்டி 'எப்போதும் அசுரர்கள் வட திசையிலிருந்து வருவார்கள்.' என மந்திரித்து ஆலமரமாய் செழிக்க வைத்தார். வெளிறிய கனவும் வெளிறிய உடையும் அகிம்சையின் ஆசிர்வாதத்தால் பல வர்ணம் பூண்டது. நீலவானில் இடி இடித்தது உச்சி வெய்யிலில் இருள் இருந்தது. வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் காடெங்கும் சிவப்புக் கம்பளமாய் விரிந்தார்கள். பகைவர் அற்ற போர் உயிர் பறிக்கும் அகிம்சை விழியற்ற பார்வை மொழியற்ற பேச்சு. பணத்தையும் நிலத்தையும் அவர்கள் எண்ண பிணத்தையும் மானத்தையும் இவன் எண்ணினான். சரணடைந்த சகோதரிகளுக்கு வன்புணர்வை பரிசாகத் தந்து உயிரை பண்டமாற்றாக பெற்றவர்கள் பத்திரிகைகளில் தேவர்கள் ஆனார்கள். சகோதர சகோதரிகளின் மானம் காக்க தன் உடை தந்து 'பரிபூரண நிர்வாணம்' ஆனான் அவன். பட்டப் பகலில் வானில் பவுர்ணமி நிலவு சூரியனை மறைத்து தீயை உமிழ்ந்தது. http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=8db7e0b0-323b-48f1-aa8c-d9be87e325f9
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐம்பதாவது அகவையைக் கொண்டாடும் வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு ஐயாவுக்கும், குமாரசாமி ஐயாவுக்கும் (பிந்திவிட்டது) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சதுப்பு நாட்களில் மணலும் உருகி விடுகிறது கருணாகரன் மூன்று கனவுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன அவற்றின் கீழ் குருதியுறைந்த வெண்பாறையொன்று அதன் கீழ் சிதைகள் உருகும் நெருப்புப் படுக்கை அதன் கீழ் யாருமற்ற குழந்தைகளின் பாதச் சுவடுகள் நிறைந்த மணல் வெளி அதற்கும் கீழே பிரிவுற்ற காதலின் முத்தங்களாலான கம்பள விரிப்பு அதற்கும் கீழே கைவிடப்பட்ட முதியோர்களின் முனகலும் வலியும் நிரம்பிய நெகிழ் தகடு அதன் கீழ் கூடற்ற பறவைகளின் இசையாலான குழையல் அதற்குக் கீழ் தளும்பிக் கிடக்கும் இரத்தத் தடாகம் அதில் புத்திருந்தது ஒரு புத்தகம் அந்தப் புத்தகத்தில் நிறைந்திருந்தன மினுங்கித் தகிக்கும் எண்ணற்ற வாள்கள் அவற்றை யாரோ ஓடிச்சென்று எடுக்கும்போது அவை துப்பாக்கிகளாகிக் கொண்டிருந்தன திரும்பியபோது புன்னகைத்துக் கொண்டிருந்தார், தலைவர். http://www.nanilam.com/?p=10176
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நீ பாதி நான் பாதி - பெருந்தேவி உன்னருகே படுத்திருக்கும் கணவனின் தொப்பை முக்கால் குன்றைக்க விழ்த்திருக்கிறது அவன் குறட்டையில் பூமியோடு பக்கத்துக் கிரகமும் நடுங்குகிறது நீ விழித்திருக்கிறாய் மணி இரவு ஒன்று, உன் கணவனுக்கு கட்டிலில் அமர்ந்தாலே மூச்சிரைக்கிறது இப்போதெல்லாம் நீ தினந்தோறும் சாமிக்கு விளக்கேற்றுகிறாய் இரவுணவுக்குப் பின் கைகழுவியவுடன் உன் கணவனுக்குக் கண் செருகாதிருக்க சில அபூர்வமான மதியங்களில் அவன் உன் இடுப்பின் டயர் மடிப்புகளை எண்ணுகிறான் வேடிக்கையாம் உன் கன்னம் தோல்பை கணக்காகத் தடித்திருக்கிறது உன் முலைக் காம்புகளுக்கு காந்தம் வைக்க வேண்டும் உன் யோனி நாயர் கடை வடையின் துளை நாளுக்கு நாள் வளர்கிறதென்கிறான் துர்நாற்றத்தை அப்போது கேட்கிறாய் இப்போதெல்லாம் அவன் குறை கூறுகிறான்: சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து அழுமூஞ்சியாகிவிட்டாய் வாட்ஸ் அப்பில் எப்போதும் அரட்டை. ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துவர எத்தனை நேரம் சிடுசிடுக்கிறான் கள்ளிச் செடி அவன் ஏவல்களை உன் கால்களும் கைகளும் குறியும் பிறவும் மறுப்பதில்லை அவன் பேசுகிறபோது உன் கற்பனையின் Mimicry Meme வேகக் குதிரைகள் இல்லறத் தேரை சொகுசாகவே இழுத்துச் செல்கின்றன நீ அதில் ராணி. http://www.kalachuvadu.com/issue-197/page47.asp
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழர்களின் விடுதலைக்காக போராடி மரணமடைந்த போராளிகளுக்கும், போரினால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் வீர வணக்கங்களுடன் கண்ணீர் அஞ்சலிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போலசோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போலசெலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போலஎன்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போலஎன்னுடைய தேசத்தில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போலஎன்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன்நன்றி - ஆனந்த விகடன்ஓவியம் ஹப்சிகான் http://deebam.blogspot.co.uk/2016/04/blog-post.html
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவன், புலவர் மற்றும் அண்மையில் தமது பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியது.. எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பாங்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இங்கு பலர் நல்லவனை மட்டும்தான் உள்ளே வைத்துள்ளார்கள் போலுள்ளது. ஊத்தையர்களுக்கு களத்தில் இடம் இல்லையென்பது தெரிகிறது. http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=1532&view=findpost&p=31034
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியது. ....... சூழலுக்கு இயைபாக்கமடைந்து வாழக் கற்றுக்கொள்வனதான் பிழைத்துக்கொள்ளும், வெறும் வலிமை மட்டும் போதாது! மாறிவந்த சூழலுக்கு இயைபாக்கமடையாமல் இருந்ததால்தான் புலிகளுக்கு அழிவு வந்தது. அதே நேரத்தில் உலகச் சூழலை நன்கு புரிந்த சிறிலங்கா அரசு அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை மாற்றியதால்தான் வென்றது என்பதும் வரலாறு. எனவே மாற்றங்களை விரும்பாது தொடர்ந்தும் பழைய சூழல் வரும் என்று மாறாது இருப்பவை தகாதனவாகவே காணாமல் போய்விடும். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வேறு அரசியல் சக்திகளை வளரவிடாமல் தடுத்ததனால்தான் தற்போது தமிழர்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியில் தற்போதைய நிலையை உடனடியாக மாற்றக்கூடியவர்கள் எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சாம்பல் பறவை குட்டி ரேவதி ஒரு சாம்பல் பறவையைப்போல் அம்மரத்தின் கீழ் அதன் நிழல் அமர்ந்திருந்தது வீதியின் நீண்ட மெளனத்தையே வாரிச் சுருட்டிக்கொள்வதைப்போல் பெருக்கிக்கொண்டே வந்தாள் துப்புரவுப்பெண் இங்குதான் அவன் என்னைக் காத்திருக்கச் சொன்னான் என் காதலையும் அந்தப் பெண் மெளனத்தைச் சுமந்துகொண்டு என்னைத் திரும்பிப் பார்த்தவாறே எப்பொழுதோ சென்றுவிட்டாள் கண்ணீராய் வழியத் தொடங்கிவிட்டது இருள். பூப்பெய்தத் தயாரான உடலின் பரவசத்துடனும் மிரட்சியுடனும் காத்திருக்கிறேன் இதோ... தூரத்தில் மழையை இறக்கப்போகும் கனமேகம்போல் வந்துகொண்டிருக்கிறான் இன்பம் தாளாமல் என் உடலில் செந்நட்சத்திரங்கள் துளிர்க்கத் தொடங்கிவிட்டன மரமோ ஒரு சாம்பல்பறவையைப்போல் அமர்ந்திருக்கிறது எச்சலனமுன்றி http://keetru.com/literature/poems/kuttyrevathi_10.php
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! -- பத்து வருடங்களுக்கு முன்னைய பதிவு ஒன்றிலிருந்து. சினிமா தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் பலர் சினிமா மோகம் கொண்டபடியால்தான், கொள்கைகள் எதுவுமற்ற நடிகர்கள் அரசியலில் முன்னுக்கு வரமுடிந்தது. புலத்தில் வாழும் தமிழரும், தாயகத் தமிழரும் இந்த மாயைக்குள் கொஞ்ஞ்சமாக விழுந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் எங்கே போவார்கள் என்பதை தமிழ்நாட்டைப் பார்த்தும் புரியாத முட்டாள்களாக நாங்கள் இருக்கிவேண்டுமென்றால் கம்முனு இருந்திட்டுப் போகின்றோம். http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137324
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேனுங்கோ! முன்னைய தத்துவம் ஒன்று ..... மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் ஒருவரால் விடைகூற முடியுமென்றால் அவர் ஒரு ஞானி. விடையற்ற கேள்விகள் பல உள்ளன. கேள்விகள், தேடல்கள் இல்லாமல் இருந்தால் ஆறறிவு வைத்து என்ன பிரயோசனம். விலங்கைப் போல, பறவையைப் போல, உணவு தேடுவதிலும், வம்சத்தை விருத்தி செய்வதிலும், வம்சத்தைப் பாதுகாப்பதிலும் மட்டும் அக்கறை கொண்டால் மனிதனாக இருப்பதில் அர்த்தமில்லை. மகாத்மா, அமைதியும் மனச்சாந்தியும் உள்ள வாழ்வை அடைய வேண்டுமென்றால் காவியுடையை அணிந்து சாமியாரகப் போகவேண்டியதுதான். போராட்டமும் சஞ்சலமும் இல்லாத வாழ்வு கற்பனையில்தான் கிடைக்கும். வாழ்க்கை என்பது நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் அடைய நினைக்கும் நிலைக்குச் செல்வதற்கான போராட்டமே. போராட்டத்தில் வெற்றி பெறாமலேயே அநேகமாக எல்லோருடைய வாழ்வும் அஸ்தமிக்கிறது. http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=4437&view=findpost&p=76106
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! ... யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்). அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை. தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம். மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது. தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம். http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137312
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! ..... பலம் என்பது, மற்றாக்களை அவர்களுடைய கருத்தை முழுமையா வைக்கவிடாம தடுக்கிறதுதான். ஏதாவது முட்டையில மயிர் பிடுங்கி, மயிரைப் பற்றி மட்டும் கதைச்சு அதில வெல்றதுதான். வெல்லாட்டி நித்திரை வராதெல்லே. கருத்துப் பதிந்த திரி: http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137425