Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ராசவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.
  3. வல்வை சகாறா, ரகுநாதன், முத்து ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. தமிழீழத் தாயகக் கனவுடன் சாவினை அணைத்துக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.
  5. விசுகு ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. புன்னகை லீனா மணிமேகலை அவனை எழுதிவிட முடியாமல் தோற்கிறேன் ஒரு நாக்கிலோ, ஒரு வார்த்தையிலோ ஒரு புகைப்பட சட்டத்திற்குள்ளோ அடங்கிவிட முடியாமல் பிதுங்குகிறது அவன் என்ற சலனம் எரிவதற்கு எதையும் விட்டுவிடாமல் அணைத்துவிடும் அவனிடமிருந்து எதையாவது ஒளிப்பதற்கு திணறுகிறது மொழி வலிக்கிறது ஆனால் வலிக்கவில்லை இடையில் வரும் வரிகளில் அவனை சேர்க்க முடியவில்லை தழும்பாக மறுக்கும் காயத்தில் வழிந்துக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன் ஊறிக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன் இடையில் எந்த கவிதையையும் நிகழ்த்த முடியவில்லை களிப்பின் எந்த எழுத்தில் அவன் தரிசனம் தருகிறான் என்பதை கூட்டி கழித்துப் பார்ப்பதில் இருக்கும் கிளர்ச்சி எழுதுவதில் தேறவில்லை விசித்திரமான மிதவையாக என்னை இழுத்துச் சென்றுக்கொண்டிருக்கும் அவன் இதுவரை காட்டியதெல்லாம் அறிந்திராத திணைகள் புழங்காத திசைகள் புனைவாக மறுக்கும் அவனை அழுத்தமாக முத்தமிடுகிறேன் அதன் ஈரம் ஆவியாகி மேகமாகி மழையாகி நதியாகி கடலாகி நிறைக்கிறது என் வெற்றிடங்களை புன்னகைக்கிறேன் அந்தக் கணம் நான் என்கிறான் மேலும் புன்னகைக்கிறேன் அப்படியாவது அவன் வடிவம் பெறட்டும் http://kapaadapuram.com/?p=133
  7. இன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமி ஐயாவுக்கும், கிறுக்கல் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. இப்போது களம் வேகமாக இயங்குவதுபோல் தெரிகின்றது. பக்கங்களைத் திறக்க ஒன்றிரண்டு செக்கன்களே எடுக்கின்றன. இன்னும் வெறுப்பில் உள்ளவர்களுக்கு வேகம் எப்படித் தெரிகின்றது?
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சுபேஸ், கு.சா. தாத்தா, புங்கை அண்ணா ஆகியோருக்கு நன்றி. இதே நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் நிழலியின் மகனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. திண்ணையை எல்லோருக்கும் திறந்துவிட்டிருக்கின்றார்கள். சிலர் கெஸ்ட்டாக வந்து கண்டதையும் கதைப்பதாகத் தெரிகின்றது.
  11. வீடென்பது… ஞாபகங்கள் தர்மினி மாங்கிளைகள் முறிய தென்னங்கன்றுகள் புகைய வீடும் எரிந்தடங்க வேலிக் கருக்குகள் கீறக்குருதிக்கால்களோடு ஊர் விட்டுத் தப்பிய நினைவு. . அலைச்சலின் களைப்போடு சில மாதங்கள் கடந்து ஊர் மீண்டதாய் நினைவு. . மண் குழைத்து நிலம் பூசி பனையோலைக் குடிலொன்று இணக்கி செத்தைப் பல்லிகள் சாரைப்பாம்புகள் இரையும்வண்டுகளோடு மழை இரவில் மரமொன்று பாறிச் சரிய அணிலரித்த குரும்பை நிலம் அதிர்த்த கூதலுக்குக் கணகணப்பாய் ஓலைப்பாயில் உறங்கி ,விடிந்தெழும்பி தாவாரத்தில் ஓடும் வெள்ளம் தாண்டக் கடுதாசிக் கப்பல் விட்டதாக நினைவு. . உறக்கமில்லா ராப்பொழுதாய் ஒரு நாள். மார்கழி மாசச் செக்கலில் வீடு எரிந்தடங்க மீண்டும்….. வீடிழந்த நினைவு . . கிடுகுகள் இழைத்து பனையோலைகள் மிதித்து சாம்பல்மேடு தவிர்த்து கிணறு,கடப்பு வடக்கு,கிழக்குத்திசை பார்த்து வாசல்செதுக்கிக் குடிலொன்றெழுப்பி ‘வீடெனில் …..இனிக் கல்லால் மட்டுமே’ குடியெழுப்பும் மனிசரை எரிக்கும் கோபத்தோடு அம்மா சொன்னதாக ஞாபகம். . அம்பலவி துளிர்த்து செவ்விளநீர் மரம் குலைகள் கனக்க நெல்லி முற்றி நிலம் பரவ வீடு வெளிச்சமான ஞாபகம். . குசினிக் கரை வாடாமல்லி நிறம் வெளுத்து உதிர முன்னர் ஆமி வரப்போகுதென்று கதைவர வளவுமூலையில் பங்கர் வெட்டிய நினைவு. . வடக்குத் தெற்காகப் பெரும்பச்சை அலையாக எழும்பி வான் முழக்கமிட்டு ஊருக்குள் ஆமி வந்தது. . கரி கொண்ட காணி! சாம்பற் பறக்கக் கிடந்ததைக் கடைசியாகப் பார்த்தது நினைவாயுண்டு. . ‘கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா? ‘ நட்புகள் விசாரணை. அங்கிருக்கும் ஊரில் எங்கிருக்கிறதென் வீடு? https://thoomai.wordpress.com/2015/07/05/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
  12. நாலைந்து நாளாகப் பிரச்சினை இல்லாமல் ஓடுகின்றதே என்று திருப்திப்படவேண்டியதுதான்
  13. ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா! அ.ஈழம் சேகுவேரா (முல்லைத்தீவு) கட்டபொம்மனும் கர்ண மகாராசனும் எல்லாமே எனக்கு என்னுடைய அப்பாதான். எனது எதிர்காலத்துக்கு இன்றும் சொல்லத்தெரிந்தது “அப்பா போல வரணும்.” நான் அறிந்த கணிதமும் இலக்கியமும் அப்பாதான். அப்பாவின் கடின உழைப்புக்கு அவரது தலைப்பாகைதான் சாட்சியம். அதில் உப்பு பூத்திருக்கும் அழகைக்காணும் போதெல்லாம் எனக்குள்தான் எத்துண பூரிப்பு. எத்துண மாற்றம். அம்மாவின் அடுக்களை பண்டத்தை விடவும் எனது நாசிக்கு அதிகம் பழக்கப்பட்டது அப்பாவின் வியர்வை நாற்றம்தான். முகம் ஒற்றிக்கொள்ளும் தோள் துப்பட்டாவை தலைப்பாகையாக உடுத்திக்கொள்ளும் போதுதான் இருக்கிறதே மிடுக்கு, ஏழு தலைமுறைக்கான நிமிர்வு எனக்கு. ஆனாலும் வாழைக்குணம் அப்பாவுக்கு. குலை போட்டும் குனிவாய் வாழைகள். அப்பாவும் குனிகிறார் நான் கனிவதற்காக. சிறு வயதில் அந்தக்குனிவில் சவாரி விட்டவன் நான். ஆனால் எனது முதுகில் யாரும் சவாரி விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தானே அப்பா இத்தனைக்கும் கஸ்டப்படுகின்றார். பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத என்னைத்தேடி அம்மா தெரு ஏறுவா. நான் வயல் இறங்குவேன். எனது கால் கழுவி வரப்பிருத்தி விடும் அப்பா எனது சட்டையில் அழுக்குச்சேராதிருக்க சேறு குளிக்கிறார் நெடுநாளும். அப்பா சேறு மிதித்திட்டு வரப்புகளோடு நடந்து வருவார். அதை படம்பிடித்துப் பெரிதாய்ச் சுவரில மாட்டிட் வேண்டுமென்று எனக்குள் நெடுநாளாய் நிரம்பவே ஆசை. நிறைவேறவே இல்ல. கடதாசியை எடுத்து வரைந்தும் திருப்தி காணாத நான் கண்ணாடி முன்னே அதிக நேரத்தை செலவழித்திருப்பேன் வேடமிட்டு அப்பாபோல மீசை வைச்சு அழித்து அழிச்சு நேர்த்தி வரும் வரைக்கும். ஆனால் அப்பாபோல சுருட்டிழுப்பு ஒத்திகை பார்த்து அவர் ஒத்தடம் கொடுத்த வடுக்கள் இப்பொழுதும் எனது நடத்தையை ஒழுங்காற்றிக்கொண்டிருக்கும் அப்பாவின் இன்னுமொரு முகம். அப்பாவுக்கு மூத்த பிள்ளை நான்தான் ஆனாலும் தலைப்பிள்ளை வயல்தான். அம்மாவை விடவும் அவருக்கு நல்ல துணை மயிலையும் சிவலையும். அப்பா அதிகம் நேசிப்பது அவைகளைத்தான். அவரது சொத்துச்சுகம் எல்லாமே அந்த திண்ணை வீடும் கொல்லைப்புறமும் தான். அப்பா கைகளை தலையணையாகக்கொண்டு (இ)ராஜ தூக்கம் போடும் அந்த மாமர நிழலுக்கு மட்டும்தான் அப்பாவின் கனவுகளின் கனதி புரியும். அந்த தென்னைகளுக்குத்தான் எத்தனை வயசு. அதன் கீழிருந்து அப்பா அண்ணாந்து விடும் பெரு மூச்சில்தான் அவற்றின் மூப்பை அளவிட முடியும். அப்பாவுக்கு ஆயுசு கெட்டி. பழஞ்சோற்றில் பசி போக்குவதும் மோரில தாகம் தணிக்கிறதும்தான் அவரது உடல் தெம்பு. ஆங்கே வீழ்ந்து கிடக்கும் மரங்களை குற்றிகளாக வீடு சேர்க்கும்போது நான் அப்பாவின் உடல் திரட்சிகளை கணக்கெடுத்தவாறல்லவா பின் தொடர்ந்திருக்கிறேன். எனக்கு “புதியதொரு உலகை” காட்டியது அப்பாதான். வயலில இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டா அவர் பின்னே எனது விடுப்பு கேள்விகள் போகும். நாட்டு நடப்புகள் அத்தினையும் அப்பாவுக்கு அத்துப்படி. ஆர்வமிகுதியால் விடுமுறை நாள்களில் கூட கட்டுச்சோற்றோடு வயலுக்கு ஓ(டி)டுவன். அப்பா வயலில நிற்கிற ஒவ்வொரு நிமிசமும் கூடக்கூட வயல் காட்சி மீது பிடிப்பும் அதிகரிச்சுக்கொண்டே போகும். பொழுது சாய்கிற நாழிகை மீதுதான் கோபம் அதிகமாக வரும். பலம் கொண்டவரை நிலத்தை உதைப்பன் வலிக்கு அப்பா மருந்திடுவார். (இ)ராத்திரி பூராவும் எனது சுகமான தூக்கம் அப்பாவின் நெஞ்சில். அவரது நெஞ்சு மயிர் பிடித்து பழகிப்போன இந்தக்கைகளுக்குள் எழுதுகருவியை திணித்தது என்னவோ அப்பாதான். ஆனாலும் அந்த மண்வெட்டி பிடித்த கைகளைப்பற்றி எழுதும்போதுதானே எந்த எழுதுகருவி பிடிக்கும் கைக்கும் பெருமை சேர்(க்)கிறது. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2766:-21-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23
  14. சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமார் தியாகி சிவகுமாரன் தனது உடலையும் உயிரையும் தமிழ் மண்ணிற்குக் கொடையாக்கி 41 வருடங்களாகின்றன. அவன் தொடங்கி வைத்த ஆயுதப் போராட்டம் விருட்சமாக வளர்ந்து வந்த நிலையில் பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் உதவியுடன் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆயுதப் போராட்டம் தான் அழிக்கப்பட்டதே தவிர தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்படவில்லை. அது ஆழ வேரூன்றிய மரம். இன்று இதனையும் அழிப்பதற்கு அகரீதியாகவும் புறரீதியாகவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்நிலையில் தியாகி சிவகுமாரன் பற்றிய மீளாய்வு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சிவகுமாரனின் பங்களிப்பு பற்றிய மீளாய்வுக்கு தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வளர்ச்சி, அதில் சிவகுமாரன் பங்களித்த காலகட்டம் என்பன பற்றிப் புரிதல் அவசியம். தேசியப் போராட்ட வளர்ச்சி என்பதே ஒரு வகையான அஞ்சலோட்டம்தான். அந்த அஞ்சலோட்டத்தில் சிவகுமாரனும் ஒரு ஓட்ட வீரன். அஞ்சலோட்ட வீரர்களை அவர்களது தளங்களில் நின்று புரிந்து கொள்ளும்போதே அவர்களுடைய பங்களிப்பின் மேன்மையையும் புரிந்துகொள்ள முடியும். தமிழர் அரசியல் வரலாறு நீண்ட காலத்துக்குரியது. இலங்கையில் நவீன அரசியல் ஆரம்பிக்கப்பட்ட 1833 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களின் அரசியலும் ஆரம்பித்துவிட்டது எனலாம். அரசியல் ஆய்வின் இலகு கருதி தமிழர் அரசியல் வரலாற்றினை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். 1833 ஆம் ஆண்டு தொடக்கம் 1920 வரையான காலகட்டம் இக்காலகட்டத்தில் ஆட்சி அதிகாரம் முழுக்கமுழுக்க பிரித்தானியாவின் கைகளிலேயே இருந்தது. இலங்கையர்களுக்கு பிரதிநிதித்துவ உரிமை மட்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் பெரிதளவிற்கு சுயாதீனமுடையதாக இருக்கவில்லை. பெரும்பான்மையான பிரதிநிதிகள் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். 1910 ஆம் ஆண்டு குறூ-மக்கலம் சீர்திருத்தத்தை தொடர்ந்தே சில பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களிலும் இலங்கையர் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். அவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். இக்காலத்தில் தமிழ்மக்கள் பண்பாட்டுத் தளத்தில்தான் தமிழர்கள் என்ற அடையாளத்தைப் பேணினர். அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையே பேணினர். தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக விளங்கியவர்கள் இலங்கையின் அரசியல் தலைவர்களாகவும் விளங்கினர். சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தனர். சேர் முத்துக்குமார சுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் போன்றோர் இவர்களில் முக்கியமானவர்களாவர். சேர் முத்துக்குமார சுவாமியின் மைந்தனான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஒரு கலாச்சாரத் தலைவராக விளங்கினார். இவர்களில் சேர் பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சிறப்பான பாத்திரம் உண்டு. இவரே இலங்கையின் சமூகமாற்ற அரசியலின் தந்தையாகவும், தேசிய இயக்க அரசியலின் தந்தையாகவும் விளங்கினார். 1920 ஆம் ஆண்டு தொடக்கம் 1949 வரையான காலகட்டம் இந்தக் காலகட்டம், இக்காலத்தில் அறிமுகப்படுத்திய மானிங் அரசியல் சீர்திருத்தத்துடன் ஆரம்பமாகின்றது. சிங்களத் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட எழுத்து மூல உடன்பாட்டின்படி, கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு ஒதுக்காததினால் கோபமுற்ற சேர் பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறி 1920 ஆகஸ்டில் தமிழ் மக்களுக்கான சபையை உருவாக்கினார். அவ்வமைப்பின் தோற்றத்துடன் தமிழ் மக்களுக்கான இன அடையாள அரசியலும் ஆரம்பித்துவிட்டது எனலாம். இக்காலத்தில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஒத்துக்கொண்டு, அதற்குள் சம வாய்ப்புக்களைக் கோருகின்ற அரசியலாகவே தமிழர் அரசியல் இருந்தது. அருணாசலம் இதனைத் தொடக்கி வைத்தாலும் 1924 இவர் மரணமடைந்தமையினால் இந்தக் காலகட்டத்தை முன்னெடுக்க அவரால் முடியவில்லை. ஜி.ஜி பொன்னம்பலமே இக்காலகட்டத்தை முன்னெடுத்தார். அவரது ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை இதன் அடிப்படையிலேயே எழுச்சியடைந்தது. இக் கோரிக்கையின் சாராம்சம் சமவாய்ப்புக்களே! டொனமூர் யாப்பில் வழங்கப்பட்ட அரைவாசிப் பொறுப்பாட்சி இக்கட்டம் துரிதமாக வளர்வதற்குக் காரணமாகியது. 1949 தொடக்கம் 1968 வரையான காலகட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இது ஆரம்பமாகின்றது. 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகமானது. இவ்யாப்பு ஏற்கனவே 1833 கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் உருவாக்கி வளர்த்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பொறுப்பாட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. அது இயல்பாக சிங்கள தேசத்திடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தமையினால் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 29 ஆவது பிரிவும் போதிய பயனைத் தரவில்லை. சோல்பரி யாப்பு நடைமுறைக்கு வந்து ஒரு வருடத்திற்கு உள்ளேயே மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்த பிரஜாவுரிமைச் சட்டம் 29 வது பிரிவினை மீறிக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தான் ஒற்றையாட்சி அதிகாரக் கட்டடைப்புக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க முடியாது எனக் கருதிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். இச்சமஸ்டிக் கோரிக்கை வடக்குக்-கிழக்கினை தமிழர் தாயகமாக வரையறுத்து அதற்கு அதிகாரங்களைக் கோருவதாக அமைந்தது. தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் மூன்று பெரிய போக்குகள் தமிழ் அரசியலில் இடம்பெறத் தொடங்கின. ஒன்று ஜி.ஜி பொன்னம்பலத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் இன அரசியல் தமிழ்த் தேசிய அரசியலாக வளர்ச்சியடைந்தது. இரண்டாவது, கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் மையப்படுத்திய தமிழர் அரசியல் புவியியல் பிரதேசத்தை அடையாளப்படுத்தி வடக்குக்- கிழக்காகப் பரந்தது. மூன்றாவது, கோரிக்கைகள் மனுக்கள் அனுப்புதல், சட்டமன்றத்தில் பேசுதல் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழ் அரசியல், மக்கள் இணைத்த போராட்டமாக வளர்ச்சியடைந்தது. காலி முகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம் (1956), திருமலை யாத்திரை (1957), சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம் (1958) கச்சேரிகளுக்கு முன்னாலான சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) எனப் போராட்டங்கள் எழுச்சியடைந்தன. 'சுதந்திரன்' பத்திரிகை விடுதலைப் பிரச்சாரத்தைச் செய்யும் பத்திரிகையாக மாறியது. மறுபக்கத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி- செல்வா ஒப்பந்தம் (1965) என்பனவும் கைச்சாத்திடப்பட்டன. இவை எதுவும் பெரிய பயன்களைத் தரவில்லை. ஒரு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மற்றைய ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. 1968 க்குப் பின்னரான காலகட்டம் 1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைத்து அமைச்சுப் பதவியையும் பெற்றது. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சுகளுக்கு கறுப்புக் கொடி காட்டிய தமிழரசு வாலிப முன்னணியினர் போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்களுக்கு வரவேற்புத் தோரணங்களைக் கட்டினர். தேசியக்கொடியை விமர்சித்த தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டு சிங்கக் கொடியை ஏற்றினர். அதேவேளை டட்லி - செல்வா ஒப்பந்தம் செயலற்றுப் போனது. பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் சிபார்சு செய்யப்பட்ட பிராந்திய சபைகளை விட குறைவான அதிகாரம் கொண்ட மாவட்டச் சபைகளை தமிழரசுக் கட்சித் தலைமை ஏற்க முன்வந்தபோதும் டட்லி அரசாங்கம் அதனைச் செயற்படுத்தவில்லை. ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. கட்சியில் இருந்த பிரக்ஞைபூர்வ இளைஞர்கள் இரண்டு தீர்மானங்களுக்கு வந்தனர். ஒன்று சமஸ்டிக் கோரிக்கையும் சரிவராது, இனி தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுப்பது. இரண்டாவது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது. இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் தான் 1968ஆம் ஆண்டு ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் முதலாவது இளைஞர் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் வளர்ச்சியாக 1970 இல் தமிழ் மாணவர் பேரவையும், 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையும், 1974 இல் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பும், 1975 இல் தமிழீழ விடுதலை இயக்கமும் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப்புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவும் தோற்றம் பெற்றன. இந்த நான்காவது கட்டம் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம், சர்வதேச மட்டம் என மூன்று மட்டங்களை நோக்கிப் பயணித்தது. 1968 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரை அது இலங்கை மட்டத்திற்குள் நின்று செயற்பட்டது. 1983 ஆம் ஆண்டு இன அழிப்பைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் பிராந்திய மட்டத்திற்கு சென்றது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் மரணத்தோடு பிராந்திய மட்டத்தைத் தாண்டி சர்வதேச மட்டத்திற்கு சென்றது. 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே சர்வதேச அனுசரணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை சர்வதேசம் நோக்கிய பயணத்தின் உச்சம் எனலாம். இலங்கை மட்டத்தை தாண்டும்வரை இலங்கை அரசு மட்டும் எதிரியாக இருந்தது. பிராந்திய மட்டத்திற்கு சென்றபோது இலங்கை அரசு, பிராந்திய வல்லரசு, சர்வதேச வல்லரசுகள் என்பன எதிரிகளாக வந்தன. இவ் மூன்று தரப்பும் இணைந்து ஆயுதப் போராட்டத்தை கொடூரமாக 2009 இல் அழித்தன. இதுதான் தமிழ் அரசியலினுடைய 2009 வரையான வரலாறு. இங்கு ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமை ஒரு கூட்டு முயற்சி என்பதை நாம் மறக்கக் கூடாது. 2009 க்குப் பின்னர் ஆயுதப்போராட்ட அழிப்பிற்கு துணைபுரிந்த பிராந்திய வல்லரசும், சர்வதேச வல்லரசுகளும் தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கினையும், அடிப்படை அபிலாசைகளையும் கைவிடுமாறு வற்புறுத்துகின்றன. தமிழ் மக்களின் அரசியல் இலக்கினை 13 ஆவது திருத்தத்திற்குள் முடக்க முயற்சிக்கின்றன. அதற்கு நம்மவர்களையே கருவியாகப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் பிரக்ஞைபூர்வ செயற்பாட்டாளர்கள் புவிசார் அரசியல் தரும் வாய்ப்புக்களையும், சர்வதேச மட்டத்திற்குச் சென்ற தமிழ் அரசியலையையும் பயன்படுத்தி ஆயுதப் போராட்ட சக்திகள் விட்ட இடத்திலிருந்து முன்னேற முயற்சிக்கின்றனர். இந்த வரலாற்று ஓட்டத்தில் தான் தியாகி சிவகுமாரின் இடத்தினை நாம் மதிப்பிட வேண்டும். தியாகி சிவகுமாரன் தமிழ் அரசியல் வரலாற்றின் நான்காவது கட்டத்தின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர். ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்திலும், தமிழ் மாணவர் பேரவையிலும் அங்கம் வகித்திருக்கின்றார். தமிழ் மாணவர் பேரவையின் மத்திய குழுவிலும் அங்கத்துவம் வகித்திருக்கின்றார். தமிழ் மாணவர் பேரவை ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கின்றார். தியாகி சிவகுமாரன் மூன்றுவிடயங்களில் மிக உறுதியாக இருந்திருக்கின்றார். ஒன்று தமிழீழம் என்கின்ற தமிழ் நாட்டை அமைப்பது, இரண்டாவது ஆயுதப் போராட்டம் மூலமே அந்த இலக்கினை அடைந்து கொள்வது. மூன்றாவது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது. இந்த மூன்று இலக்குகளையும் நோக்கியே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கட்டம் என்பதால் அதற்கேயுரிய நடவடிக்கைகளை சிவகுமாரன் எதிர் நோக்கினார். பொஸிசாரினதும், உளவுப்பிரிவினரதும் கெடுபிடிகள், நிதி நெருக்கடிகள், தலைமறைவு வாழ்க்கையின் நெருக்கடிகள் எனலாம் அவருக்கு ஏற்பட்டன. அக்காலத்தில் பொலீசார் சிவகுமாரன் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு 10,000 ரூபா சன்மானம் வழங்கப்படும் எனப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தனர். 70 களில் 10,000 ரூபா என்பது மிகவும் பெறுமதி வாய்ந்தது. தற்போதுள்ளதைப் போல பொலீசாரின் வலைப்பின்னலும் வலுவாக இருந்தது. உளவுப் பிரிவில் பல பொலீசார் கடமையாற்றியிருந்தனர். சி.ஐ.டி இன்பெஸ்க்டர் பஸ்தியாம்பிள்ளை தமிழர்களை வேட்டையாடுவதில் முக்கியமான ஒருவராக விளங்கினார். இவர்களின் கண்காணிப்பிலிருந்து தப்புவது என்பது மிகக் கடினமாக இருந்தது. ஆயுதப் போராட்டம் பற்றியோ, தலைமறைவு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்க்கை பற்றியோ போதியளவு அனுபவமும் இருக்கவில்லை. உணர்ச்சி அரசியல் மட்டும் வழிநடத்திய காலம் அது. ஆனால் மக்களின் தார்மீக ஆதரவு மட்டும் வலுவாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற வகையில் மக்களுடன் வலுவான தொடர்பாடல் இருந்தது எனக் கூறமுடியாது. மக்கள் திரள் அமைப்புக்களும் போதியளவு எழுச்சி பெற்றதாக இருக்கவில்லை. ஒரு அமைப்பு வலுவாக வளர்ந்த பின் அதில் இணைத்து செயற்படுவது பெரிய சிரமமல்ல. ஆரம்ப கட்டத்தில் அதனை வளர்த்தெடுத்து நிலைநிறுத்துவதுதான் மிகவும் சிரமமானது. சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலைமைகளில், அந்தச் சிரமம் மேலும் அதிகமாக இருந்தது. எனினும் ஆரம்பகாலத்தில் இவர்கள் பட்ட சிரமங்கள்தான் பின்னர் வலிமையான ஆயுதப் போராட்ட இயக்கங்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்தன. உலகில் முதலாம் நிலையில் உள்ள ஒரு விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்வதற்கும் காரணமாகியது. இந்த வகையில் ஆயுதப் போராட்டத்தின் முதற் தியாகி சிவகுமாரனேயாவான். சிவகுமாரனின் இன்னோர் பங்களிப்பு சமூகமாற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தமையாகும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=f34aea6b-609e-4b82-8acc-8291a68ebfb8
  15. மீட்பு உமா(ஜேர்மனி) நெஞ்சுடைந்து வார்த்தைகள் தொலைந்து நின்றோம் கவிதைகளும் கனவுகளும் தம் அர்த்தத்தை இழக்க அழகாய் புலர்ந்த பொழுதுகளின் குரூர கணங்களில் நாம் மரணித்தோம். தெய்வமென்றும் மலரென்றும் பதுமையென்றும் பெருங்கதை பேசிய சம்பிரதாய வேலிகளிற்குள் எங்கள் உடல்களும் உணர்வுகளும் சிதைக்கப்பட்டன. ஒரு நான்கு வயதுக்குழந்தை ஒரு பள்ளிச்சிறுமி ஒரு தாய் ஒரு கன்னியாஸ்திரி ஓர் அறுபத்தைந்து வயது மாது இதில் நாங்கள் யாராகவிருந்தாலும்….. ஆதிக்கச்சுவடுகளைத் தொடர்ந்த கற்கையின் ஆண்மையின்குறி கடித்துத் துப்ப இரு முலைகளும் ஒரு யோனியும் கொண்ட சடங்களானோம். கையை விரித்து சுதந்திரமாய் காற்றைப் பிடித்து விளையாடி எமது இருப்பை உணர்தல் என்பதும் இருளில் சங்கமித்தல் பிடித்த ஆடைகளை அணிதல் கோபத்தை வெளிக்காட்டல் குற்றப்பத்திரிகையின் அங்கமாய் மரணத்தாலும் அத்துமீறல்களாலும் தண்டிக்கப்பட்டன. காலகாலமாய் குருதியும் நிணமும் தோய்ந்து சிதைந்த உடலமாய் நாற்றம் பிடித்த விசாலமான சுவர்களிற்குப் பின்னும் பாழடைந்த கிணறுகளுக்குள்ளும் மௌனித்திருந்த எம் ஆன்மாவை மீட்டு வருவோம் சுயத்துடன் பெண்ணிற்கான ஒரு வெளியைச் சிருஷ்டிப்பதற்காக. https://thoomai.wordpress.com/2015/05/27/மீட்பு/
  16. துளி -01 தமிழினி காலநதிக்கரையில் எஞ்சிக்கிடக்கிறது இத்துப்போனவொரு வாழ்க்கை. இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும் விசத்தேள்களாக நினைவுகள் குடைவதால் நெஞ்சினில் நீங்காத மரணவலி. "சாகத்தானே போனதுகள். சாகாமல் ஏன் வந்ததுகள்." குறுக்குக்கேள்விகளால் கூண்டுக்குள்ளேயே பிணமாகிக்கனக்கிறது போராடப்போன மனம். http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2683:-86-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
  17. இக் கணத்தின் யதார்த்தம் ஷஸிகா அமாலி முணசிங்க சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில் தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன் பேருந்தின் கர்ப்பத்துக்குள் மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன் வியர்வையில் தெப்பமாகி இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன் விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன் சரிகிறேன் எழுகிறேன் சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே நான் சிந்திக்கிறேன் ‘யார் நான் கவிஞரா மிக அழகிய இளம்பெண்ணா அவ்வாறும் இல்லையெனில் உயர் பதவியேதும் வகிப்பவளா காதலியா தாயா அன்பான மனைவியொருத்தியா இதில் எது பொய்யானது தீயாயெரியும் பேருந்தொன்றுக்குள் சிறைப்பட்டு களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி இக் கணத்தில் வேறெவர்?’ யதார்த்தம் என்பது என்ன பேருந்திலிருந்து இறங்கி வீட்டில் காலடி வைக்கும் கணம் குறித்துக் கனவு காண வேண்டுமா குளிர்ந்த நீரில் உடல் கழுவி தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா எனில் யதார்த்தம் எனப்படுவது இக் கணம்தான் பெரும் காரிருளில் மூழ்கி இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும் என்னை நானே சந்திக்கும் இக் கணம் ‘நான்’ வீழ்ந்துடைந்து அழிந்துபோகும் இக் கணம் கவிஞனான போதும் இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான் வைத்தியரோ வேறெவராயினுமொருவரோ பெண்ணோ ஆணோ தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும் விலங்கொன்றன்றி வேறெவர் இது இக் கணத்தின் யதார்த்தம் இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும் கதவைக் காணக் கூடிய கணம் பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு வெளிச்சம் என்னை நெருங்கட்டும் இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும். http://www.kalachuvadu.com/issue-183/page52.asp
  18. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5
  19. ஏன் இல்லை! http://www.yarl.com/forum3/index.php?/topic/1195-பெயர்-மாற்றங்கள்/?p=470568
  20. உங்கள் பெயரை "சுமி" என்று மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். ஸ்வீற்றாகவும் ஷோர்ட்டாகவும் இருக்கும்!
  21. பயங்கரவாதி கவனித்துக் கொண்டிருக்கிறான் யமுனா ராஜேந்திரன் இரவு எட்டுமணி ஒரு நிமிடம் கழித்து மதுவிடுதியில் அந்த வெடிகுண்டு வெடிக்கப்போகிறது இப்போது 16 நிமிடங்கள் கடந்துவிட்டது இன்னும் சிலருக்கு நுழைய நேரமிருக்கிறது சிலர் வெளியேறலாம் பயங்கரவாதி ஏற்கனவே அந்தப்பக்கம் அகன்றுவிட்டான் தூரம் எல்லாவிதமான சேதங்களிலிருந்தும் அவனைக் காத்துவிடும் சரி, அங்கே இடம் பெறும் காட்சிகள் மஞ்சள் மேலங்கியணிந்த பெண் அவள் உள்ளே நுழைகிறாள் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஆண் அவன் வெளியேறிவிட்டான் ஜீன்ஸ் அணிந்த பையன்கள் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பதினாறு நிமிடம் நான்கு நொடிகள் போயிற்று சின்னஞ்சிறு பையன் அதிர்ஷ்டசாலி அவன் ஸ்கூட்டரில் புறப்பட்டுவிட்டான் உயரமானவன் அவன் உள்ளே போகிறான் பதினோழு நிமிடம் நாற்பது நொடிகள் ஒரு சிறுமி தலையில் பச்சை நிற ரிப்பனுடன் விடுதி அருகில் நடந்து போகிறாள் பஸ் அவளை மறைத்துக்கொண்டுவிட்டது பதினெட்டு நிமிடம் கடந்துவிட்டது அந்தச் சிறுமியை காணோம் உள்ளே போகுமளவு அவள் முட்டாளா என்ன அல்லது அப்படி அவள் போகவில்லையா உடல்களை வெளியே கொண்டுவரும்போது நாம் பார்க்கலாம் பத்தொன்பது நிமிடங்கள் கடந்துவிட்டது யாரும் உள்ளே போகக் காணோம் அதற்கு மாறாக ஒரு குண்டு ஆண் வெளியேறுகிறான் அவன் தனது பாக்கெட்டை துழாவுவதுபோல் தெரிகிறது, அப்புறம் எட்டுக்கு ஒரு நிமிடத்துக்கு 10 நொடிகள் இருக்கும்போது பாழாய்ப்போன கையுறைகளைத் தேடி அவன் உள்ளே போகிறான் இப்போது எட்டு மணி ஒரு நிமிடம் நேரம், அது எப்படித்தான் இழுபடுகிறது நிச்சயம் – இப்போது ஆகிவிட்டது நேரம் இல்லை. சரியாக ஆகவில்லை ஆமாம். இப்போது ஆகிவிட்டது வெடிகுண்டு, அது வெடிக்கிறது http://yamunarajendran.com/?p=1637
  22. நானொரு பெண் ஸ்ரீபூர்ணா அப்படியே இருக்கட்டும் நானொரு பெண். நான் உறுதியாக இருக்கிறேன். அதென்னை ஆணவக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் எல்லாவற்றையும் எனக்கு பிடித்தபடி செய்கிறேன். அதென்னை பிடிவாதக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் மனதில் பட்டதை பேசுகிறென். அதென்னை கலகக்காரி ஆக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் யாரோடும் தேடிப் பழகி நட்பு பாராட்டுவதில்லை. அதென்னை முசுடாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் மற்றவர்களிடமிருந்து என்னை பூட்டி வைத்துக் கொள்கிறேன். அதென்னை முரடாக்குமென்றாள், அப்படியே இருக்கட்டும். நான் தோல் தெரியும்படி புடவையும், ஷார்ட்ஸும் அணிகிறேன், அதென்னை வெட்கமற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் பகட்டான தொண்டுப் பணிகளில் ஈடுபடுவதில்லை. அதென்னை வெறுப்பு நிறைந்தவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். தன்-பால் உறவில் எதுவும் தவறாகவோ இயற்கைக்கு மாற்றாகவோ இருப்பதாக எனக்குத் -தோன்றவில்லை அதென்னை லெஸ்பியனாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் மிக நேசிக்கும் சில பெண்களுண்டு. அதென்னை இருபால் ஈர்ப்பு கொண்டவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதென்னை கட்டுப்பாடற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் உடலுறவை ஒரு தேவையாக பார்க்கிறேன். அதென்னை வேசியாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் எந்தக் காதலையும் எப்போதைக்குமானதென பார்ப்பதில்லை. அதென்னை நம்பிக்கையற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் திருமணத்தை அத்தியாவசியத் தேவையாக பார்க்கவில்லை. அதென்னை சோர்வடைந்த மனமுடையவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் குழந்தைகள் மற்றவர்களுடையதாக இருக்கும் வரையே ரசிக்கிறேன். அதென்னை தாயாக தகுதியற்றவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். நான் உறுதியான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறேன். அதென்னை கொடூரமானவளாக்குமென்றால், அப்படியே இருக்கட்டும். ஆம்! நான் மனதளவு உடலையும் நேசிக்கும், புத்தகங்களளவு உடைகளையும் நேசிக்கும், ஆளுமையளவு பால் விருப்பங்களையும் நேசிக்கும். ஒரு பெண் ஆம்! நானொரு பெண், அப்படியே இருக்கட்டும். http://www.eanil.com/?p=555
  23. இந்தப் பெட்டியில் தமிழில் நேரடியாக எழுதும் வசதி எப்போதோ கடாசப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் மேசைக் கணணி, மடிக்கணணியில் தமிழில் எழுதவேண்டுமென்றால் eKalapppai ஐ பாவிப்பது நல்லது. ஆனால் Windows 8.1 இல் shift key stick ஆவதால் ண், ள் எழுத்துக்கள் எழுதுவதில் பிரச்சினை உள்ளன. மற்றைய OSகளில் இந்தப் பிரச்சினை இல்லை. https://code.google.com/p/ekalappai/downloads/list இல் போய் தரவிறக்கலாம் (Version 3.0.1). ஐபாட் வைத்திருந்தால் நேரடியாகவே தமிழில் எழுத வழிகள் உள்ளன. Settings இல் போய் tamil keyboard ஐத் தெரிவு செய்தால் (Tamil99 அல்லது Anjal - தமிங்கிலம்) இலகுவாக எழுதலாம். Android Tablets இலும் நேரடியாக எழுதமுடியும் என்று நினைக்கின்றேன். ஆனால் எப்படி என்று பாவிப்பவர்கள்தான் சொல்லவேண்டும். இவை சரிவராவிட்டால், கூகிள் தமிழ் எழுதிகளில் வேறு இடத்தில் எழுதி வந்து ஒட்டலாம். உதாரணமாக சுரதா அண்ணாவின் தளம் இப்போதும் தமிழில் மாற்ற உதவுகின்றது. http://www.suratha.com/unicode.htm
  24. பரிநிர்வாணம் சித்தாந்தன் கனவை உடுத்தபடி இரவிலசையும் நதி தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின் நான் வெளியேறிவிடுகிறேன். துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும் தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும் தூங்காமையின் அதிரூபமானஅசைவுகள் உறையும் சாஸ்திரவெளியில் புணர்ச்சியின் உச்சத்தை உணராதவளின் வலியுடன் திரும்புகிறாள் நூறாவதுமுறையும் கைவிடப்பட்டவள். காமத்தின் மெல்லிசை மணக்கும் காற்றில் கைகளாய் அசையும் இலைகளைமென்றபடி வியர்வைப் பொருக்குலர்ந்த ஆடைகளை மோகித்திருப்பவன் இப்போதும் மறுதலிக்கிறான் புணர்ச்சியின் முனகல்களில்லாத அத்தனை பொழுதுகளையும் காமத்துக்கும் வசீகரத்துக்குமிடையில் நீளும் கோடுகளில் புத்தனின் ஞானஉணர்ச்சியும் யசோதரையின் காமஅணுக்கமும் முயங்கும் கணத்திலொரு பிலாக்கணம் தீ பற்றி எரிவதைக் கண்டவர்கள் தங்களின் நிர்வாணங்களை இல்லாத ஆடைகளால் மூடுகிறார்கள் கூடுங் கூட்டத்தில் காமம் மறைத்த சம்பாசணைகள் யாவும் எரிநட்சத்திரங்களானதை பின்னொருநாள் கண்டபோது யசோதரையின் நிர்வாணத்தில் புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார். oOo http://tarunam.blogspot.co.uk/2014/08/kavithaikal.html
  25. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நந்தனுக்கும் மற்றையவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.