Everything posted by கிருபன்
-
உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 03:19 PM செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான இடம்பெற்றது என்பதற்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும். ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது. அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன. செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஏனென்றால் நீங்கள் அதற்கு முதல் இங்கு வந்தீர்கள் என்றால் அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்புகின்ற அத்தனை வாக்குறுதிகளையும் செம்டம்பர் மாதம் வரப்போகின்ற அந்த தீர்மானத்தை எந்தளவிற்கு பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பலவீனப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து இறுதியில் அந்த தீர்மானம் பலவீனப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களிற்கு அதிலிருந்து மீள முடியாத நிலையை ஏற்படுத்தும் என அவர்கள் தங்கள் மகஜரில் வலியுறுத்தியிருந்தனர். தெற்கில் இருக்கின்ற சுமார் 100 மனித உரிமை அமைப்புகளும் அவசரமாக நீங்கள் வராதீர்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அதைஎல்லாவற்றையும் மீறித்தான் அந்த ஆணையாளர் வருகின்றார், அந்த ஆணையாளர் வந்தபோது ,துரதிஸ்டவசமாக என்னால் இங்கே இருக்க முடியாத ஒரு காலம். 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம். பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் - நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார். மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம். இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம். உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது. நாங்கள் அந்த கடிதத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டும் என விரும்பியதால் நாங்கள் அந்த முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியையும் அடைந்தோம். அனைத்து தரப்புகளும் அந்த கடிதத்தி;ல் கையெழுத்திட்டவை மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இங்கேயிருக்கின்ற அமைப்புகளை சந்தித்த இடத்தில்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக சிங்கம் ஊடாக அது வழங்கப்பட்டது. அந்த கடிதத்தை நாங்கள் வழங்கியபோது செம்மணியையும் உள்வாங்கித்தான் அதனை கொடுத்திருந்தோம். தற்போது இருக்கின்ற சூழல் பொறுப்புக்கூறல் படிப்படியாக குறைந்து பேச்சுபொருளாக மாறிவிட்ட சூழல் போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான முயற்சிகள் பூஜ்ஜியத்திற்கு வருகின்ற இடத்திற்கு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து விட்டினம். அதனை இன்று ஒரு பேச்சுப்பொருளாக கூட இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளார்கள். கடந்த தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றது அரசாங்கத்தை விசாரணைமுன்னெடுக்க சொல்லி செய்யசொல்லி கேட்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதுவும் அந்த தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போரின்கடைசிக்கட்டத்தில் ,இடம்பெற்ற விடயங்களை விசாரணை செய்யவேண்டும் என்பதுதான் 2012 முதல் இந்த தீர்மானங்களின் குறிக்கோளாக உள்ளது. செம்மணி போர்நடைபெற்ற காலத்தில்தான் இடம்பெற்றது.ஆனால் இந்த தீர்மானம் விரும்புகின்ற அந்த காலப்பகுதிக்கு வெளியே. புதுதீர்மானம் செப்டம்பரில் வருகின்றது, செம்மணி எப்போதோ மறைக்கப்பட்ட ஒரு விடயம்,வெறுமனே 15 உடல்களை கண்டுபிடித்த இடத்தில் அதன் பின்னர் அரசாங்கம் விசாரணைக்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன்கதிர்காமர் இருந்தவேளை இது ஒரு பொய்,மனித புதைகுழிகள் இல்லை குற்றவாளியொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இடத்தில கோபத்தில எல்லா பழிகளையும் அரசாங்கத்தின் மீது போட விரும்பின நிலையில் தான் அந்த வாக்குமூலம் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லைஉண்மைதன்மையும் என தெரிவித்து முழுமையாக மூடினார்கள். அதனை கிடப்பில் போடுவதற்கு தான் அவர்களின் முழுமுயற்சியும் இருந்தது. சந்திரிகாவின் அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு பிறகு வந்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமும் இவை எவற்றையும் எடுத்துப்பார்க்க விரும்பவில்லை, இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த அரசாங்கத்தை பற்றி நாங்கள் சொல்லவேண்டியதில்லை. செம்மணி பொய் 600 உடல்களே கொல்லப்பட்டு புதைக்கப்படவில்லை என சொல்லப்பட்டு ஒரு முடிவாகயிருந்த நிலையில் தான், செம்மணியின் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. செம்மணி எங்களிற்கு இரண்டு சந்தர்ப்பங்களை தருகின்றது, ஒன்று ஜெனீவாவில் இருக்கின்ற சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது. இரண்டாவது விடயம் செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது. அதாவது நடந்தது இரண்டு தரப்புகளிற்கும் இடையிலான ஒரு போர் அல்ல,இதற்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது, தமிழ் மக்களிற்கு நடந்த அநியாயங்களை சரியாக பார்த்தால் அது இறுதியில் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்ற எல்லா விடயத்தையும் உள்வாங்கி யார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதுதான் எங்களிற்கு கூட தேவைப்படுகின்றது. அப்போதுதான் எங்களிற்கு உண்மையான நீதியும் நியாயமும் கிடைக்கும். இல்லாவிடில் ஒரு சரித்திரத்தை மாத்திரம் மூடிமறைத்துவிட்டு ஒரு பக்கத்தை மாத்திரம் படமெடுத்துவிட்டு நீங்கள் இதற்குரிய தீர்வை கொண்டுவாருங்கள் என கேட்பது நியாயத்தைகொண்டுவரப்போவதில்லை. செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது. ஆகவே இன்று எங்களிற்கு உள்ள தேவை என்னவென்றால் இந்த முழு விடயத்தையும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதே. செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஒரு ஆபத்தானது ஏனென்றால் இலங்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு உரிய சட்டத்தரணியாக செயற்படுகின்றது அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் வந்தாலும் அவர்கள்தான் போவார்கள், அதேவேளை அவர்கள் தான் குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.அரசதரப்பில் இருக்கின்ற பிழை செய்தவர்களிற்கு எதிராகவும் அவர்கள்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள். இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் ஒரு பொதுப்பிரச்சினை.அந்த பொதுப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம். அதற்கும் இனப்பிரச்சினை காலத்தில் இலங்கையில் நடந்த அநியாயத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறான சுயாதீன அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களிற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் இலங்கையில் இருக்ககூடிய இனப்பிரச்சினை இனங்களிற்கு இருக்ககூடிய பிரச்சினை,அந்த இனங்கள் என பார்க்கின்ற போது இலங்கை அரசு என்பது ஒரு இனத்தின் சொத்தாக மாறியுள்ளது. ஏனைய இனங்களிற்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை அரசின் கட்டமைப்பே மாறியிருக்கின்றது. என்ற கருத்தை சொல்லித்தான் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார் ஒரு உள்ளக விசாரணை இலங்கையிலே பொருத்தமே இல்லாதது என்று. இலங்கைக்கு உள்ளே அந்த இனப்பிரச்சினையின் தாக்கம் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையே நடுநிலைதன்மை இழக்க வைத்திருக்கின்றது என்பதும் அது ஒரு போதும் ஒரு உள்ளக விசாரணை ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த குற்றங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்காது. ஆகவே ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் , சர்வதேச விசாரணைதான் மிகப்பொருத்தம் ஆனால் ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் என சொன்னார். அதற்கு ஒரு விட்டுக்கொடுப்பாக நாங்கள் தமிழ் தரப்பு தெரிவித்தது இதூன் கலப்புபொறிமுறையின் முழு கட்டுப்பாடும் சர்வதேச தரப்பிடம் இருந்தால் தான் கலப்பு பொறிமுiயை நாங்கள் பரிசீலிப்போம் . இதுதான் எங்களின் நிலைப்பாடாகயிருந்தது. இன்றைக்கு திட்டமிட்ட வகையிலே சுயாதீன வழக்குரைஞர் அலுவலம் ஒன்று தேவை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய விடயத்திற்கு தீர்வாக அதனை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. https://www.virakesari.lk/article/220468
-
பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால
பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால General20 July 2025 பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது. இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/410744/important-matters-related-to-pillaiyaan-to-be-brought-to-court-soon-minister-ananda-wijepala
-
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/அனைத்து_ஆசிரியர்களும்_பட்டதாரிகளாக_இருப்பது_கட்டாயம்!_பிரதமர்_அறிவிப்பு
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு adminJuly 20, 2025 சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதன் போது, எட்டு மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நடுவதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காக குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2025/218090/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
குறிப்பன் எனும் தெய்வம் தி. செல்வமனோகரன் January 9, 2025 | Ezhuna அறிமுகம் மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. இதன் ஊடாக நீத்தார் பெருமை, முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு போன்றன உருவாயின. தொழில்சார் வாழ்வில் தமக்குதவும் இயற்கையை இயற்கைப் பொருளை முன்னிறுத்திய வழிபாடுகளும் அவற்றின் வழி அதனைத் தெய்வநிலைப்படுத்தலும் தவிர்க்க முடியாத வாழ்வியல் அம்சங்களாயின. குறிப்பன் எனும் தெய்வமும் தொழில்சார் நிலையில் வைத்து நோக்கத்தக்க ஒன்றாகவே காணப்படுகிறது. குறிப்பன் : பெயர் பற்றிய உரையாடல்கள் தமிழ் மரபில் குறிப்பன் என்ற சொல்லின் வரலாறு குறித்த எந்தப் பதிவையும் அறியமுடியவில்லை. குறிப்பன் ஈழத்தில் குறிப்பாக பூநகரிப் பிராந்தியத்தில் நிகழ்கின்ற தனித்த சொல் வழக்காக, தெய்வமாகக் காணப்படுகிறது. (அ) சங்ககால அகநானூறில் “ஓம்பினார் கவர்ந்து கூழ் கெழு குறிம்பில்” (113), “கல்லுடைக் குறும்பின் வயவர்” (31) என்றும்; சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்றும் கூறப்பட்டுள்ளது. (ஆ) குடி என்பது குலம், கோத்திரம் குடும்பம் என்றும், குடியானவன் என்பது மண்ணின் மைந்தன், வேளாண்மை செய்பவன் என்றும் பொருள் சுட்டப்படும். இது குடியானவன், குடியாட்சி, குடியிறை என விரியும். குடும்பு எனும் சொல் குறித்த பிரதேசத்தை – கிராமத்தைக் குறிக்கும். அகரமுதலி குடும்பர் என்பதற்கு ஊர்த்தலைவர் என்பதோடு பள்ளரின் தலைவர் என்றும் பொருள் சுட்டுகிறது. ஆரம்பத்தில் அது ஒரு பதவிப் பெயராகவும் பின்பு சாதிப் பெயராகவும் சாதியின் தலைவரைச் சுட்டும் சொல்லாகவும் மாறியிருக்கலாம் (சரோஜினி குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப.34). இவற்றோடு இணைத்தும் தனித்தும் ஆராயத்தக்க சொல் ‘குறிப்பன்’ எனலாம். ஒன்றைச் சுட்டுவது ‘குறிப்பான்’. அது சுருங்கிக் குறிப்பன் என்றாகியிருக்கலாம். குறி எனும் சொல் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தமிழகராதி அடையாளம், எண்ணம், ஒருவகை சாத்திரம் சொல்லுதல், குணம், குறிப்பு, தோற்றம், நன்னடத்தை, நிமித்தம், பயில், புடைவை, மாடு, முறை எனப் பொருள் சுட்டுகிறது (கதிரைவேற்பிள்ளை, நா., 2003). குறிப்பு – அடையாளம், ஒருமை, கருத்து, பிறந்தநாள் எழுதி வைக்கும் ஓலை, விருப்பம் என்றும்; குறிப்பானவன் – கணிசவான், மதிக்கத்தக்கவன் எனவும்; குறியர் – குள்ளர், குறியானவன் – நிதார்த்தன் என்றும் பொருள் சுட்டப்படுகிறது. ‘குறிப்பன்’ என்பது கிராமிய மொழி வழக்காறாக இருக்கலாம். குறிப்பன் என்பது குறிப்பால் உணர்த்துபவன், அடையாளப்படுத்துபவன், குறித்துச் சொல்பவன் எனும் பொருளை உணர்த்தும் சொல்லாக அமைந்துள்ளது. குறிப்பன் வழிபாடு ஈழத்தில் கிளிநொச்சிப் பிராந்தியத்தில் பூநகரி பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமியத் தெய்வமாக குறிப்பன் அமைந்துள்ளது. தமிழ்ச்சூழலில் வேறெங்கும் இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை பரமன் கிராய் வில்லடி ஐயனார் கோயில் பூசாரியும், வெட்டுக்காடு பெரும்படை பூசாரியும் ஏற்படுத்தியிருந்தாலும் அதனை ஆய்வு நிலைப்படுத்த உதவியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் சிரஞ்சன். அவரின் துணையோடும் ஆய்வு ஆர்வலர்கள் கோ. விஜிகரன், சு. தாரங்கன் ஆகியோருடனும் இவ்வாய்வினை மேற்கொண்டோம். கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடு தொலைந்தால் துவரந்தடியை வெட்டிவைத்து வழிபடுவர் அல்லது கிடைக்கும் வைரமான தடியை வெட்டிவைத்து வழிபடுவர். அத்தெய்வம் கருணை கொண்டு தொலைந்த ஆடு, மாட்டைக் கூட்டி வரும் அல்லது அவை நிற்கும் இடத்தைக் குறிப்பால் உணர்த்தும் என்றும் நம்பப்படுகிறது. இதன்வழி அந்தத் தடியை (பொல்லை) குறிப்பன் எனும் தெய்வமாகக் கருதி பூசை செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர் அல்லது கால்நடையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் கையில் தடி, குறிப்பாக துவரந்தடி வைத்திருப்பதுண்டு. அதனைக் கொண்டே பட்டியை அல்லது மந்தையை வழிப்படுத்திச் செல்வதும், விலகிச் செல்லும் கால்நடையை வழிப்படுத்துவதும், துரத்தி அழைத்து வருவதும், பகை விலங்குகளை விரட்டுவதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடகப் பிரதேசத்திலிருந்து கால்நடைக்கான புல்வெளிகளைத் தேடித் தேடி தமிழகத்தையும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும் வந்தடைந்த பழங்குடிகளாக ‘குறுமன்ஸ்’ இனக்குழுவினர் கருதப்படுகின்றனர். இவர்கள் குறுமன் (தமிழ்நாடு), குருபர் (கர்நாடகா), குருபா (ஆந்திரா), குருமா (தெலுங்கானா) எனப் பலவாறு சுட்டப்படுகின்றனர். இவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட இனக்குழுவினராவார் (சந்திரசேகர், சி. 2021, அரண் ஆய்விதழ்). இயற்கை நெறிக்காலத்தில் – அதியமான் காலத்தில் குறும்பு எனும் கால்நடை அரண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை ‘ஸ்டுவர்ட்’ எனும் ஆய்வாளர் “இந்த இனக்குழுவினர் ‘குறி’ எனும் ஆடுகளை மேய்த்ததால் குறும்பர் எனப்பட்டனர்” எனச் சுட்டுகின்றமை இணைத்து நோக்கத்தக்கது. ஆடுகளின் மேய்ப்பை அல்லது கால்நடை வளர்ப்பவர்களின் தலைவன் – முன்னோர் வழிபாட்டின் வழி ‘குறிப்பன்’ எனும் தெய்வமாகியிருக்கலாம். இதனை இன்னும் வலுப்படுத்துவது குறும்பர் இனக்குழுவின் வாழ்க்கை முறை என்பதோடு கால்நடை வளர்ப்பு, மேட்டுநில விவசாயம் என்பன குறிப்பனை வழிபடும் மக்களிடமும் காணப்படுகிறது. நிலவுற்பத்திச் சமுதாயத்தின் வழி உருவான நிலவுடமை அல்லது நிலப்பிரபுத்துவம் விவசாய உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருநிலத்தை உடையவர் நிலக்கிழாராக, அதிகாரமுடையவராக, உழுவித்து உண்பவராக உயர்ந்தார். சிறு நிலமுடையவர் அல்லது நிலமற்ற விவசாயக் குடிகள் உழுது உண்போராக மாறினர். வர்க்க முரண் இதன் வழி உருவாயிற்று. அது சாதியாக, உயர்வு தாழ்வாக மாறிற்று. உழுவித்து உண்பவர் பெருங்குடி வேளாளராகவும் உழுது உண்பவர், கூலிகள் என்போர் சிறுகுடி வேளாளராகவும் மாறினர். அவர்கள் ஆரம்பத்தில் மள்ளர் என்றும் பின்பு பள்ளர் என்றும் சுட்டப்பட்டனர். இவர்கள் வேளாளரின் நிலங்களை உழுது விதைப்பவர்களாகவும் கால்நடைகளை மேய்ப்பவர்களாகவும் மாறினர். பூநகரியின் எல்லைக்கிராமங்களில் மேட்டுநில மேய்ச்சல் நிலங்கள் இருப்பதும்; கால்நடை வளர்ப்பும், வயல்களை விளைவிப்பதும் குறிப்பனை வழிபடும் மக்களின் தொழில்துறைகளாக இருப்பதும் குறும்பர் (குறுமன்ஸ்) இனக்குழுவினரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தினர் தம்மை தேவேந்திர குலம் என்று சுட்டுவர். அவர்களுள் பல்வேறு உட்பிரிவுகள் (குலங்கள்) காணப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இவர்கள் பள்ளன், தேவேந்திர குலத்தார், கடைஞன், களவாடி, குடும்பன், பண்ணாடி எனும் ஆறு பிரிவினராகச் சுட்டப்படுகின்றனர் (பரமேஸ்வரி, சி., 2000, தேவேந்திர குல வேளாளர் வரலாறும் சமூக அரசியல் எழுச்சியும், 40 – 52). இவை மேலும் ஏறத்தாழ நூற்றிமுப்பது பிரிவுகளை உடையன. இதில் குடும்பன் எனும் சொல் சிறுகுடி வேளாளரின் தலைவனைக் குறிப்பதாகவே சொல்லப்படுகிறது. குடும்பத்துக்குத் தலைவன் தகப்பன் என்பதன் வழி இச்சொல் உருவாகி இருக்கலாம் எனச் சில ஆய்வாளர் சுட்டுவர் (சரோஜினி, குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப. 34). குடும்பம் என்பது மருதநில மக்களின் வழி உருவான பண்பாட்டு அடையாளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, குறும்பர், குடும்பர் எனும் இரு இனங்களும் விவசாயக் குடிகள். கர்நாடக ‘குறி’ மேய்ப்பவர்கள் தமிழ்நாடு, கேரளா ஊடாகக் கடல்நீரேரி வழி பூநகரியில் குடியேறி இருக்கலாம் என்பதும், பெருங்கற்காலப் பண்பாட்டை உடைய தொல்நகரம் பூநகரி என்பதும் இங்கு கவனத்திற்குரியதாகும். ஆயினும் குறிப்பன் எனும் தெய்வம் ஈழத்துக்கே – பூநகரிக்கே உரிய தனித்த பண்பாட்டு வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் குறிப்பன் கோயில்கள் ஈழத்துப் புலத்தில் பூநகரியில் மட்டுமே குறிப்பன் கோயில்கள் காணப்படுகின்றன. பூநகரியில் குறிப்பனுக்கான தனித்த கோயில், பரமன்கிராய் வில்லடி கிழக்கில் வயலின் நடுவே காணப்படுகிறது. குறிப்பனுக்கான தனித்த வேறு கோயில்கள் இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தக் கோயிலின் உரிமையாளராகவும் பூசாரியாகவும் விளங்குபவர் திரு. இராமலிங்கம் குணரத்தினம் ஆவார். இதனை விட பரமன் கிராமம் வில்லடி மேற்கு ஐயனார், வண்ணக்கம் வெளி வீரபத்திரர், காவாக்குளம் நரசிம்ம வைரவர், தம்பிராய் ஊத்தக்குடியன் வைரவர், வில்லடி தெற்கு வைரவர், உப்பிளவான் வைரவர், செல்லையாத்தீவுக்கு அண்மையிலுள்ள ஐயனார், சங்குப்பிட்டி ஐயனார் முதலான கோயில்களில் பரிக்கலமாக – பரிவார தெய்வமாக குறிப்பன் காணப்படுகிறது. இக்கோயில்களில் காணப்பட்ட பொது அம்சங்கள் சிலவற்றை அவதானிக்க முடிந்தது. குறிப்பனின் தனிக்கோயிலாயினும், குறிப்பன் பரிவாரமாக அமர்ந்திருக்கும் கோயிலாயினும் அவை இயற்கையான வயல்வெளிச் சூழலில் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளன. இவை யாவும் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக வழிபடுகின்றோம் என்ற உரையாடலுக்கு மேல், இக்கோயில்கள் பற்றிய தெய்வம் பற்றிய கதையாடல் வேறு எதனையும் அறிய முடியவில்லை. குறிப்பனுக்கான தனித்த புராணக்கதைகளையோ, இலக்கிய, தொல்லியல் சான்றுகளையோ அறியமுடியவில்லை. சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் வழிபடு தெய்வமாகவே இது அறியப்படுகின்றது. குறிப்பனுக்கு உருவமில்லை. குறி வழிபாடே காணப்படுகிறது. கோயில் அமைப்பும் குறிப்பன் குறி வழிபாடும் வீரை, கூழா மரங்களின் கீழ் பிரம்பு (தடி) வைத்து வழிபடும் மரபே தொன்மை முறையாகக் காணப்பட்டுள்ளது. மரத்தாலான தடியானது மழை, வெயில், காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதடைவதனால் வெள்ளைக் கல் (சுண்ணாக்கல்) வைத்து குறிப்பனை வழிபடும் மரபு வளர்ச்சி பெற்றது. தற்போது சூலமும் அருகே வைக்கப்படுகின்றது. இன்றும் பெரும்பாலான கோயில்கள் மரத்தடிக் கோயில்களாகவே காணப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தடியில் சீமெந்துத் தளம் இடப்பட்டு தடியும், கல்லும் வைத்து திறந்த வெளி வழிபாடே நடத்தப்படுகின்றன. ஓரிரு கோயில்களில் பரிவாரமாக மூன்றுக்கு மூன்று அளவில் சீமெந்துக் கட்டடம் கட்டப்பட்டு கூரையிடப்பட்டுள்ளது. பரமன் கிராய் வில்லடி கிழக்கு குறிப்பன் கோயில் கருவறை, முன் மண்டபம் என்பன உடையதாகவும், அண்ணளவாக பதினைந்துக்கு பத்து அளவு கொண்டதாகவும் சீமெந்துக் கட்டடமும், ஓட்டுக்கூரையும் உடையதாகவும் உள்ளது. விசேட தினங்களில் தென்னை ஓலைகளில் சிறு முன் மண்டபம் ஒன்று இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பரிவார தெய்வமாக ஐயனார் வீற்றிருக்கின்றார். குறிப்பனை பரிவார தெய்வமாக உடைய பெரும்பாலான கோயில்கள் பெருங்குடி வேளாளருடையது என்பதும், ஐயனார் அவர்களின் தெய்வமாக பூநகரியில் கருதப்படுவதும், சிறுகுடி வேளாளரின் குறிப்பன் கோயிலில் ஐயனாருக்குத் தனி இடம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதியம் கருதாத, சமதையான, ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை செய்யும் செயற்பாடாக இதனைக் கருதலாம். வழிபாட்டு முறைகள் குறிப்பன் தெய்வத்திற்கு வாரமொருமுறை விளக்கு வைக்கும் முறைமை காணப்படுகின்றது. பரமன்கிராய் வில்லடி குறிப்பன் கோயில் தனக்கான தனித்துவமான முறைமைகளை பின்பற்றி வருவதை உரிமையாளரும், பூசாரியுமான இ. குணரத்தினம் உறுதிப்படுத்தினார். வைகாசி விசாகத்துக்கு பின்பு இங்கு பொங்கல் நிகழ்த்தப்படுகிறது. இதை விட கார்த்திகை தீபம், சித்திரை வருடப் பிறப்பு போன்ற சில விசேட தினங்களிலும் மடை வைக்கும் மரபு காணப்படுகின்றது. பழைய காலத்தில் தடியும் பின்பு வெள்ளைக்கல்லும் வைத்து கூழா மரத்தடியில் வழிபடப்பட்டது. இன்று கூழா மரமில்லை. 2017 இல் ஆலயம் இன்றைய நிலைக்குரியதாக்கப்பட்டு கருங்கல் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். அதில் குறிப்பன் தெய்வம் பூசாரி மீது வந்திறங்கி கலையாடிக் குறி சொல்லும். பூசைமுறை உள்ளிட்ட விடயங்களை அது கூறும் என்றும் அதன்படியே பூஜை நிகழ்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பூசைக் காலத்தில் பூசாரி மீது தெய்வமிறங்காத விடத்து, “மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறைநான்கின் அடிமுடியும் நீ, மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலமிரண்டேழு நீ, பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, யொருவ நீயே, பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே, பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ, புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ, எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்..? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!” எனும் ‘நடராஜர் பத்து’ பாடலைப் பாடி உருவேற்றுதல் முறை காணப்படுகின்றது. இது ஒரு வகையில் மேனிலையாக்கமாகின்றது. வெற்றிலை மடை வைத்த அடுத்த நாள் தண்டல் நடைபெறும். பொருள், காசு பெறல் என அத்தண்டல் அமையும். இதில் சாதியமற்ற நிலை காணப்படுகின்றது. மதியம் அன்னதானம் நடைபெறும். இரவே பொங்கல் நிகழ்வு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து அண்ணளவாக முப்பதடி தூரத்தில் உள்ள பாலை மரத்தின் கீழ் வைத்தே வளுந்து எடுக்கப்படும். வளுந்து எடுக்கும் போது பாலை மரத்தைச் சுற்றி ஐந்தடியளவில் விட்டு பனையோலையில் மறைப்புக் கட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து வளுந்து எடுக்கப்பட்டு பொங்கல் நிகழ்த்தப்படும். பின் மடை போடப்படும். மடையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் பொங்கலோடு வடை, மோதகம், முறுக்கு, பால்ரொட்டி போன்ற பலகாரங்கள் பலவும் படைக்கப்படும். பூசாரி மந்திரம் இன்றி பூசை நிகழ்த்துவார். பூஜை நிறைவில் தெய்வமாடிக் குறி சொல்லுவார். இக்கோயில்களில் பலியிடல் இடம்பெறுவதில்லை. வன்னி இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்தில் பூசாரிக்கு அணிகலன்கள் இருந்துள்ளது. ‘கவுண்’ போன்ற ஆடையை உடுத்து, கை கால்களில் அவற்றோடு ஒட்டிய வெள்ளிச் சதங்கைகள் அணிந்து, நெற்றியில் வெள்ளிப் பட்டமும், மார்பில் வெள்ளியாபரணமும் போட்டிருப்பார். இவ்வழக்கம் இன்று இவ்வாலயத்தில் அற்றுப் போய்விட்டது. பெருங்காடு பெரும்படைக் கோயில்களில் இன்றும் இதனை ஒத்த அணிகலன்கள் உண்டு. குறிப்பன் ஆலய மடை பரவலில் உள்ள விசேடம் ‘அபின்’ படைத்தல் ஆகும். அதனை பூசாரி மட்டுமே தன் பங்காகப் பெற முடியும். இது மட்டக்களப்புத் தேசத்தில் வைரவருக்கு அபின் ரொட்டி படைக்கும் மரபோடு ஒப்பிடத்தக்கதாகும். பொங்கல் பூசை முடிவடைந்து மறுநாள் காலையில் வழி வெட்டப்பட்டு பூசை நிறைவுறும். எட்டாம் நாள் (எட்டாம்மடை) காய்மடை, பூமடை என்பன படைக்கப்பட்டு பூசை நிகழ்த்தப்படுவதோடு பொங்கல் விழா நிறைவுபெறும். இப்போது பூசாரியாக உள்ள குணரத்தினத்தின் தந்தை இராமலிங்கமே முன்பு பூசாரியாக இருந்தவர். அவரின் இறப்பின் பின்பு கிராஞ்சி இளந்தாரி கோயில் பூசாரி செல்வரத்தினம் பூசாரியாக இருந்து வந்துள்ளார். அவர் ஆலய வழக்காறுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டதும், வெற்றிலை மடைக்கு வர முடியாமற் போனதும், அவரது மரணமும் குறிப்பன் வழிபாட்டின் வீரியத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகின்றது. எண்பதுகளின் பிற்பகுதி வரை பெண்கள் இந்த ஆலயத்திற்கு வருவதில்லை. இங்கு பொங்கல் விழா நிறைவுற்றதன் பின் அடுத்த நாள் பூநகரி மட்டுவிலில் உள்ள நாச்சிமார் கோயிலில் குடும்பமாகச் சென்று பொங்கலும் பலகாரமும் மடையிடும் வழக்கமே இருந்துள்ளது. இம்மரபை அக்கோயில் பூசாரி மாற்றியதும், நாச்சிமாருக்கு பொங்கிய பின் குறிப்பனுக்கு பொங்க வேண்டும் என்றதும் இரு பிராந்தியத்தவர்களிடமும் முரணை ஏற்படுத்தியது. அதனால் அன்றிலிருந்து குறிப்பன் ஆலயத்தவர் நாச்சிமாருக்கோ, அவர்கள் குறிப்பன் கோயிலுக்கோ வருவதில்லை. இது புதிய மரபொன்றை உருவாக்கியது. 1990 இல் குறிப்பன் கனவில் உணர்த்தியதன் படி ஆலயத்திற்கு கடா ஆடு ஒன்று நேர்ந்து விடப்படும். அதன் பின் பெண்கள், ஆலயத்துக்கு வருபவர் ஆகியோர் பொங்கல் விழாவில் ஈடுபடுவர். அதேவேளை நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒரு வருடத்துள் இறந்து விடுவதாக இ. குணரத்தினம் பூசாரி குறிப்பிடுகின்றார். குறிப்பன் கோயில் பூசாரிக்கே குறிப்பன், ஐயனார் கலைகள் வருகின்றன. அதேவேளை ‘கந்தசாமி பெஞ்சாதி’ என்கின்ற பெண்மணியே நாச்சிமார் கலையாடியாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. பூசாரி கட்டுச் சொல்லுதலும், செய்வினை எடுத்தல் முதலானவையும் நடைபெற்று வருகின்றன. பூசாரி கலையாடும் போது கையில் தேவையின் பொருட்டு பொல்லு (முன்பு தடி இப்போது இரும்பு) ஏந்தி நின்று கலையாடுவார். இது குறிப்பன் தெய்வத்தின் அடையாளமாகும். அதேவேளை இதே சிறுகுடி வேளாளரின் இன்னொரு குல தெய்வமான அண்ணமாரின் குறியீடாகவும் பிரம்பு எனும் பொருளே விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு என்பன ஒத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அண்ணமார் தெய்வம், பொல்லுக்கிழவன், சிவகுடும்பன் என அழைக்கப்படுவதும் (சண்முகலிங்கன், 2014, இலங்கை – இந்திய மானிடவியல்: 27), பூநகரியில் அண்ணமார் உள்ள இடத்தில் குறிப்பன் இல்லாதிருப்பதும் குறிப்பன் உள்ளவிடத்தில் அண்ணமார் இல்லாதிருப்பதும் சுட்டத்தக்கது. இது சாதிய உட்பிரிவு சார்ந்த விடயமாகவும் இருக்கலாம். நெல் விதைப்பில் இருந்து வெட்டுக் காலம் வரையும் நேர்த்தி வைக்கப்பட்டு நெல்லில் ஒரு பங்கு வழங்குதலோ, அல்லது புது நெல்லில் பொங்குதலோ குறிப்பன் வழிபாட்டில் இன்றும் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். மேலும் கால்நடைகள் நோயுற்றாலோ, தொலைந்தாலோ, பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்திக்குமாறு வேண்டி நேர்த்தி வைத்துப் பொங்குதல், காணிக்கை செலுத்துதல் போன்ற பல முறைகளும் காணப்படுகின்றன. குறிப்பன் பரிவாரமாக இருக்கும் ஆலயங்களில், பொங்கல் காலங்களில் அவ்வாலய முறைப்படி வளுந்து எடுக்கப்படும் போது குறிப்பனுக்குரிய வளுந்து எடுக்கும் உரிமை இச்சிறுகுடி வேளாளருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளமை குடிமை முறையின் உரிமை சார் பண்பாக நோக்குதற்குரியதாகும். முடிவுரை குறிப்பன் வழிபாடு இன்றுவரை காணப்பட்டு வரினும், அது குறித்த சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு குறித்த பூநகரிப் பிராந்தியத்தில் மட்டும் குறுகிப் போயுள்ளதாயினும், அது இத்தொல்நகரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக உள்ளது என்பது நோக்கற்பாலது. கால்நடையோடு தொடர்புடைய இவ்வழிபாடு விவசாய உழுதுண்ணும் சமூகத்தின் தொழில்சார் வழிபாட்டு முறைமையாக இருக்கலாம். வேளாண்குடி சமூகத்தவர் யாவரும் வணங்கும் தெய்வமாக, நம்பிக்கைக்குரிய வழிபாடாக இது காணப்படுகின்றது. பெருங்குடி வேளாளர் தமது வழிபாட்டு நிலத்தில் குறிப்பனுக்கு தனியிடம் வழங்கியதோடு அதற்கான வளந்துரிமையை சிறுகுடி வேளாளருக்கே வழங்கி உள்ளமை இதனை உறுதிப்படுத்துகின்றது. இத்தெய்வம் கால்நடை மேய்ப்பாளரின் தடியை, ஆட்டைக் குறிப்பால் உணர்த்துகின்ற (மலையக ரோதை முனி போல) தொழிற் கருவி சார்ந்த வழிபாட்டை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழினும் இன்று உயர் குடியினர் தத்தம் ஆலயங்களில் தாமே வளந்தெடுத்துப் பொங்கும்முறை காணப்படுகின்றது. சில ஆலயங்களில் வளந்துப் பொருட்களையோ, காசையோ பெற்றுத் தாமே பொங்கிப் படைத்துவிட்டு சிறுகுடி வேளாளரிடம் வழங்கும் முறைமை காணப்படுகின்றது. சாதிய ஒடுக்குமுறை மற்றும் சாதிய நீக்கத்தின் வழி இன்று குறிப்பன் செல்வாக்கிழந்து வரும் தெய்வமாகவே உள்ளது. அது நிலப் பண்பாட்டோடு இணைந்த பொருளாதார வாழ்வின் அடையாளம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இன்றும் மேனிலையாக்கத்துக்கு பெரிதும் உள்ளாகாத நிலவியலோடு இணைந்த இயற்கைசார் தெய்வ வழிபாடாக இது திகழ்கின்றது. https://www.ezhunaonline.com/the-deity-of-kurippan/
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல் புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! அ. குமரேசன் “ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த உலகத்தில் நிரம்பியிருக்கிறார்கள்.” நாவல், சிறுகதை, திரைக்கதை எழுத்தாளரான ரே பிராட்பரி (Ray Bradbury) (1920 – 2012) என்ற இவ்வாறு நொந்து போனவராகப் பேசினார். கட்டற்ற சுதந்திரத்திற்கு அடையாளமாகக் கைகாட்டப்படும் அமெரிக்காவின் அதிகார வர்க்க அத்துமீறல்களும் தணிக்கைக் கடுமைகளும் அவரை இப்படிப் பேச வைத்தன. அந்த நிலைமைகளை வைத்தே அவர் எழுதி 1953ஆம் ஆண்டில் வெளியான நாவல்தான் ‘பாரன்ஹீட் 451’. அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவிலும் அந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது, பள்ளிகளின் நூலகங்களில் அந்தப் புத்தகங்களை வாங்கி வைக்கக்கூடாது என்று அரசாங்கங்கள் ஆணையிட்டன. அமெரிக்காவில் 1967இல் ஆட்சி நிர்வாக அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனக் கூறி முதல் முறையும், பின்னர் 2006இல் மோசமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனக் கூறி இரண்டாவது முறையும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தடை நடவடிக்கைகள், தணிக்கை முறை பற்றிய விரிவான விவாதங்களுக்கு இட்டுச் சென்றன. அதற்கு எதிரான கருத்துகள் மேலோங்கின. தடை விலக்கப்பட்டது. நாவலின் கதையே புத்தகங்களுக்கு எதிரான தடை பற்றியதுதான். ஆனால் அந்தத் தடை வெறுமனே புத்தகத்தை விற்கவோ வாங்கவோ கூடாது என்பதோடு நிற்கவில்லை. புத்தகங்களைக் கைப்பற்றி எரித்துச் சாம்பலாக்குகிற அளவுக்குப் போனது. அதற்கென்றே ஒரு ‘தீயெரிப்புப் படை’ அமைக்கப்படுகிறது! ‘பாரன்ஹீட் 451’ என்பது காகிதம் எரிவதற்கான வெப்பநிலையாகும். ஆகவே அந்தத் தலைப்பு புத்தகங்கள் எரிக்கப்படுவதன், அதன் மூலம் புத்தகத் தணிக்கையின், ஒடுக்குமுறையின் குறியீடானது. மேலும், கருத்துரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் மனக் கொந்தளிப்பின் குறியீடாகவும் அந்தத் தலைப்பு அமைந்தது. தடையின் கதை உண்மையான நிகழ்கால அரசியலைத் தாக்குவதற்குக் கற்பனையான எதிர்கால சமூகத்தை நடமாட விடுகிற புனைவு உத்தியைத்தான் இந்த நாவலில் ரே பிராட்பரி (Ray Bradbury) கையாண்டிருக்கிறார். ஓர் எதிர்காலச் சமூகத்தில் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புப்படை இருக்கிறது – ஆனால் அதன் ஒரு முக்கிய வேலை, எங்காவது யாராவது புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என்று கண்டுபிடித்து அவற்றை எரிப்பதுதான். ஆம் உண்மையில் அது “தீயெரிப்புப்படை”! அதன் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள் அல்ல, தீயெரிப்பு வம்பர்கள்தான். அந்தப் படையில் கய் மோன்டாக் ஓர் எரிப்பாளன். கேள்வி கேட்காமல் தனது வேலையைச் செய்துவரும் அவனுக்கு, தனது மனைவி மில்ட்ரெட் எதையுமே கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்குகளில் மட்டும் ஆர்வமாக இருப்பது பற்றிய கவலை இருக்கிறது. க்ளாரிஸ் மெக்லெல்லன் என்ற ஒரு மாறுபட்ட இளம் பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் புத்தகங்களை நேசிக்கிறவள். அதனால் வளர்ந்த அறிவுக் கூர்மையும் அன்பின் இணக்கமும் நிறைந்தவள். உலகத்தைப் பற்றிய விரிந்த பார்வை கொண்ட அவளுடன் பேசப் பேச அவனுக்குத் தனது வாழ்க்கையைப் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் புதிய பார்வை ஏற்படத் தொடங்குகிறது. ஒரு நாள், தீயெரிப்புப் படையினர் வைத்த தீயில் வயது முதிர்ந்த ஒரு பெண் அவரது புத்தகங்களுடன் சேர்ந்து எரிக்கப்படுவதை கய் பார்க்கிறான். அது அவனை ஆழமாகப் பாதிக்கிறது. தான் இதுவரையில் எரித்த புத்தகங்களைப் பற்றி யோசிக்கிறான். சில புத்தகங்களை மீட்டு வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கிறான். க்ளாரிஸ் திடீரென காணமாமல் போகிறாள். இது கய்யைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவள் ஒரு கார்விபத்தில் இறந்துவிட்டதாக மில்ட்ரெட் கூறுகிறாள். குறிப்பிட்ட பாதையில் க்ளாரிஸ் சென்றிருப்பாள் என்று கய் ஊகிக்கிறான். ஆனால் அதற்கான திட்டவட்டமான ஆதாரம் கிடைக்கவில்லை. அவன் தன்னிடமுள்ள புத்தகங்களைப் பற்றி மில்ட்ரெட்டிடம் சொல்ல முயல்கிறான், ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. ஏமாற்றமடையும் கய் ஒரு புத்தகத்தை அவளுடைய நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அவர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார்கள். ஆத்திரப்படும் மில்ட்ரெட் கய்யைக் காட்டிக் கொடுக்கிறாள். அவனும் தீயெரிப்புப் படையைச் சேர்ந்தவன்தான் என்றாலும், புத்தகங்களுடன் இருக்கும் அவனுடைய வீட்டைக் கொளுத்துவதற்குப் படைக் குழுவினர் வருகின்றனர். அங்கே நடக்கும் மோதலில் அவன் தனது மேலதிகாரியான குழுத் தலைவனைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். ஊரைவிட்டுத் தப்பி ஓடுகிறான். நகரத்திற்கு வெளியே, அடுத்த சந்ததிகளுக்காகப் புத்தகங்களை மனப்பாடம் செய்து தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற, ஒதுங்கி வாழ்கிற ஒரு குழுவை அவர் சந்திக்கிறான். ஒரு போர் மூள்கிறது. அதில் நகரம் அழிக்கப்படுகிறது. கய்யும் அந்த குழுவினரும் தொலைவிலிருந்து அதைப் பார்க்கிறார்கள். அழிவின் இடிபாடுகளிலிருந்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவையும் மானுட மாண்பையும் அவர்கள் சுமந்து செல்கிறார்கள். க்ளாரிஸ்சுக்கு என்ன ஆனது என்று நாவல் தெரிவிக்கவில்லை. படையாட்களால் அவள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வாசகர்கள் கருதுவதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. போராளிகளின் துணை மக்களின் அறிவு வளம் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்குத் தடையாகிவிடும் என்று கருதும் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரைச் சாடும் இந்த நாவல், சிந்தனைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை பற்றிய கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்களின் இலக்கியத் துணையாக அடையாளம் பெற்றிருக்கிறது. ரே பிராட்பரி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகீகன் நகரில் பிறந்த ரே டக்ளஸ் பிராட்பரி (Ray Bradbury) ‘தி மார்ஷ்யன் குரோனிக்கிள்ஸ்’, ‘சம்திங் விக்கெட் திஸ் வே கம்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளை அளித்திருக்கிறார். அவற்றிலும் அரசியல், சமூக விமர்சனங்கள் இருக்கின்றன என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி மறைந்த அவருடைய ஆனால் அவரது எழுத்துகள் இன்னும் உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்க்கின்றன என்று திறனாய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 1940களில் குறிப்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டார்கள். சோவியத் யூனியன் கொள்கைகளின் செல்வாக்கு பரவுவதற்கு எதிரான திட்டமிட்ட அவதூறுகள் கிளப்பப்பட்டன. அரசியல், சமுதாய நிலைமைகளை விமர்சித்தவர்கள் சோவியத் கையாட்கள் என்று தாக்கப்பட்டார்கள். “இரண்டாவது சிவப்பு பீதி” என்று சித்தரிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட எண்ணங்கள்தான் இந்த நாவலை எழுதத் தூண்டின என்றார் ரே பிராட்பரி (Ray Bradbury). ஜெர்மனியில் ஹிட்லர் புத்தகங்களைக் குவியல் குவியல்களாக எரித்த அட்டூழியங்களும், அமெரிக்காவிலும் அதே போன்ற வெறியாட்டங்கள் வர வாய்ப்பிருக்கிறது என்ற தனது அச்சமும் ‘பாரன்ஹீட் 451’ கதைக்கு மூலமாகின என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புத்தகங்களுக்கு எதிரான, சொற்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரப்போக்கு இன்றைய மெய்யான எதிரி என்றார். சொற்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் அப்படிப்பட்ட மெய்யான எதிரிகளை எங்கேயும் பார்க்க முடியும் – இங்கேயும்தான் – இல்லையா? எழுதியவர் : அ. குமரேசன் https://bookday.in/ray-bradbury-fahrenheit-451-novel-based-article-written-by-a-kumaresan/
-
ரப்பர் – நாவல் வாசிப்பனுபவம்
ரப்பர் – நாவல் வாசிப்பனுபவம் இராதா கிருஷ்ணன் July 9, 2025 ரப்பர் நாவல் குமரி மாவட்டம் உருவான காலகட்டத்தின் கதை என்று சொல்லலாம் . அப்போது நிகழ்ந்த சமூக மாற்றங்கள், மக்களின் எழுச்சி வீழ்ச்சிகளை இரு குடும்ப வரலாறுகளை, அதன் தற்போதைய நிலைகளை சொல்வதன் வழியாக பேசும் நாவல் இது. முக்கியமாக இக்காலகட்டத்தில் நிகழ்ந்த நாயர் சாதியின் வீழ்ச்சியையும் , நாடார் சாதியின் எழுச்சியையும் இரு குடும்ப வரலாறுகள் வழியாக அறிய இயலும் . நாவலில் எனக்கு மிக பிடித்த அம்சம் என்பது கதை மாந்தர்களின் மனநிலைகளை மிக நெருங்கி நம்மால் அறிய முடிவதுதான், அவர்களது மன போராட்டங்கள், உள நிலைகளை நம்மால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. பிரதான கதாபாத்திரமான பிரான்சிஸ் முதற்கொண்டு உதவியாளன் பாத்திரமாக வரும் குஞ்சி வரை அவர்கள் மனநிலையை நம்மால் துல்லியமாக அறிய முடிகிறது. இந்த நாவலின் பெரிய பலம் இது என்று எண்ணுகிறேன் . இரண்டாவது முக்கிய அம்சம் ஒரு பாத்திரம் உச்சத்தில் இருப்பதையும் அப்போது அவரிடம் வெளிப்படும் குணத்தையும் பிறகு வீழ்ந்த பிறகு அந்த பாத்திரத்தில் வெளிப்படும் குணத்தையும் காண முடிவது. காலம் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்பதை காண முடிவது. மேலும் இதற்கு மாறாக உணவிற்காக சண்டையிட்டு கொல்லும் நிலையில் இருந்து வாழ்வை தொடங்கி மிக பெரிய அளவில் வளர்ந்து சொத்து சேர்த்து பின் இறக்கும் தருவாயில் தனது பிள்ளைகள் அந்த சொத்துகளை அழிக்கும் நிலையை மரணப்படுக்கையில் இருந்து காணும் சூழலை காண முடிவது என வாழ்வின் பல்வேறு வண்ணங்களை இந்த நாவலில் காண முடிகிறது . நாவலில் நாயர், நாடார் சமூக வரலாறுகள்,மனிதர்கள் தாண்டி இன்னொரு சமூக பிரதிநிதியும் வருகிறார்,அவர் கண்டன்கானி எனும் மலை பழங்குடி மனிதர். இயற்கையை அழித்து சொத்து சேர்க்காதவர், அதனாலேயே நிம்மதியான வாழ்கையை வந்தவர் . இவரது பேரன் லாரன்ஸ்தான் நாவலின் பிரதான பாத்திரமான பிரான்சிஸ்க்கு ஆகாயத்து பறவைகள் விதைப்பத்தும் இல்லை , அறுவடை செய்வதும் இல்லை எனும் மந்திரத்தை அளிக்கிறான் . பிரான்சிஸ் சொத்துகளை இழக்கும் நிலையில் வீழ்ச்சியின் நிலையின் இருப்பவன் , இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவன் , அவனுக்கு இந்த பாடல் பெரும் நிம்மதியை அளிக்கிறது ! லாரன்சிடம் இயற்கையை அழிக்க கூடாது என்ற போதம் இருக்கிறது . அவன் அப்படி என்ன காணியின் பேரன் என்பது முக்கியமான காரணம் , அவன் ரப்பர் மரங்களை வெறுக்கிறான் , காரணம் அதன் சூழல் கேடுகள் ,அது இயற்கையை , இயற்கையின் சீர்மையை கெடுக்கிறது என எண்ணுகிறான் , பதிலாக வாழையை மிக நேசிக்கிறான் ,வாழையை பற்றி அதன் குணங்களாக அவன் எண்ணும் இடம் நாவலின் அழகான பகுதிகளில் ஒன்று . நாவலில் குளம் கோரி( வேலப்பன் ) என்ற ஒரு பாத்திரம் வருகிறது , மிரள வைக்கிறது . சூழல்களால் மிக கீழ்மையான செயல்களுக்கு ,கீழ்மையான மனநிலைகளுக்கு சென்ற ஒருவனின். மனதிற்குள் இருக்கும் மேன்மையும், துக்கத்தையும் அறிய முடியும் இடம் இந்த நாவலின் சிறப்பான இடங்களில் ஒன்று . நாவலில் நான் அதிர்ச்சி அடைந்த இடம் குமரி மாவட்டம் உருவான அசல் காரணம் என அறிய முடிகிற இடம் ! எபன் என்ற ஒரு பாத்திரம் உண்டு , திரேஸ் என்பவளின் காதலன் அவன் , குமரி மாவட்ட பிரிவினை போராட்டத்தில் ஈடுபட்டு பொலிசாரால் கொல்ல பட்டு இறந்து விடுவான் . அவன் போராட்ட நாயகர்களை பற்றி ஆவேசமாக உணர்ச்சிகரமாக எல்லாம் காதலியிடம் சொல்வான் . ஆனால் பின்னணியில் இந்த போராட்டத்தை ரப்பர் தொழில் முதலாளிகள் தங்கள் சுயநலனுக்காக ஆதரித்தனர் என்பதும் , நாயர் – நாடார் மோதல் இதில் உள்ளிருப்பதும் , இவைதான் அசலான காரணம் என்பதும் இந்த நாவல் வழியாக அறிய முடிகிறது. காதலி திரெஸ் இதனை அறிந்து காதலனது தியாகம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று நினைக்கும் இடம் எனக்கு படு அதிர்ச்சி கொடுத்தது , ஏனெனில் இங்கு தற்போது நிகழும் சமூக பிரச்னைகள் சார்ந்து கவனிப்பேன் , சில சமயம் அதை பற்றி எழுதுவேன் , இந்த எபன் கதை தெரிந்த பிறகு ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெளியே தெரியாத அசல் காரணம் வேறு இருக்கலாம் ,அதை அறியாது வெளி காரணங்களை பார்த்து வாதிடுவது எல்லாம் அபத்தான செயல்களாக தோன்றுகிறது ! இந்த நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு பெண் பாத்திரம் திரேஸ், அவளது வாழ்வும் இளமை தொடங்கி பேச படுகிறது , பெரிய அழகியாக தொடங்கி , காதலித்து ,பிறகு வசதியான வீட்டில் வாழ்ந்து , கடைசியில் மகனிடம் அடிவாங்கி அமரும் பாத்திரம் ! இன்னொரு கதாபாத்திரம் தங்கம் , இளம் பெண் , அவள் தற்கொலை செய்து கொள்வாள் , வீழ்ச்சி அடைந்த வீடுகளில் முதன்மையாக பாதிக்க படுவது பெண்கள்தான் , சூழல்கள் அவர்களை பிய்த்து தின்று விடும் . எனக்கு இந்த நாவலை படித்த போது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாளா,அல்லது கொல்ல பட்டாளா என்ற சந்தேகம் வந்தது , ஏனெனில் அவள் தான் கற்பமானதில் இருந்து தப்ப வேண்டும் என்றுதான் எண்ணி இருந்தாள், பிறகு நாவலில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக சொல்ல படுகிறது . இன்னொரு இடத்தில் அவள் கொலை செய்ய பட்டதாக ஒருவர் சொல்வதும் வருகிறது . எனக்கு இந்த நாவலில் பிடிக்காத பாத்திரம் லிவி. இவனை அவனது அம்மா திரேசின் வாரிசு என்று சொல்லலாம் ,எல்லாம் விதங்களிலும் ! …….. நாவலில் எல்லா குணங்களும் அதன் குரூர நிலையில் வருகிறது என்று சொல்லலாம் , உணவிற்காக மரணம் நிகழும் அளவிற்கு சண்டையிடும் சூழலும் வருகிறது . விவசாயத்திற்காக குன்றுகள் நடுவே இருக்கும் இடம் நின்று எரியும் காட்சி , அதை ஒட்டிய மனநிலை தீவிரமாக வெளிப்படுகிறது . சொந்த அம்மாவையே இன்னொரு தொடர்பு வைத்ததற்காக மகன் அடித்து வெளுக்கும் காட்சி வருகிறது . தனது சொந்த தங்கை தற்கொலை செய்து இறந்ததை, அவளை ஒருவன் வைத்திருந்ததை தானே பிறரிடம் கிண்டலடித்து சொல்லும் காட்சி வருகிறது ! பல தவறுகள் செய்தாலும் என் அளவில் இந்த நாவலின் உயர் பாத்திரம் பொன்னுமணி பெருவட்டர்தான், பசிக்கு திருடியவனை விடுவித்து தன்னோடு வைத்து கொள்கிறார் . சொத்துகள் சேர்த்தாலும் அதன் மீது பற்று இல்லாதவராக இருக்கிறார் , முக்கியமாக பிரான்சிசின் மனதை புரிந்து அவனை ஆதரிப்பவராக இருக்கிறார் . நாவலின் பிரதான பாத்திரம் பிரான்சிஸ். வாசிக்கும் போது அவன் வழியாக என்னை யோசித்தேன், அப்படி யோசிக்கும் போது அடையும் தெளிவுகள்தான் நல்ல நாவல்கள் வாசிப்பதன் நற்பலன்கள் என்று தோன்றுகிறது. இந்த நாவல் சிறியது, ஆனால் சிறந்த பல தருணங்கள் கொண்ட நல்ல அழகான நாவல் இது . இந்த நாவலை இதற்கு முன்பு மூன்று நான்கு முறை வாசிக்க முயன்று இருக்கிறேன் . இந்த அளவு முன்பு இழுத்தது இல்லை. இப்போது ஒரு வாசிப்பில் ஈர்ப்புடன் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு நூலுக்கும் அதை வாசிக்கும் தருணம் அமையும் போதுதான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லப்படுவது உண்மை என்று தோன்றுகிறது ! https://mayir.in/essays/radhakrishnan/3833/
-
காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்
காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ் சிறுவர்களை - குறிவைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான சம்பவங்களை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக அனுபவித்ததாக பிபிசி ரேடியோ 4 இடம் கூறினார். இதேபோன்ற காயங்களுக்கு சிகிச்சை தேவை. “ஒரு நாளில் அவை அனைத்தும் வயிற்று துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை அனைத்தும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை கை அல்லது காலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும்,” என்று அவர் கூறினார். “இது கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு விளையாடுவது போல் உள்ளது, அவர்கள் இன்று தலையில் சுட முடிவு செய்கிறார்கள், நாளை கழுத்தில் சுடுவார்கள், மறுநாள் விதைப்பைகளில் சுடுவார்கள்.” பேராசிரியர் மேனார்டின் கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்து ஐடிஎஃப் பிபிசிக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. IDF soldiers deliberately wounding children in Gaza ‘like a game’, says British doctor Thu, July 17, 2025 at 3:35 PM GMT+1 Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza - REUTERS *This article contains an image of a malnourished infant which some readers may find distressing Severe malnutrition is spreading in Gaza and aid distributions supposed to stop famine have instead become a “death trap”, a top British surgeon has said. Professor Nick Maynard, a Oxford-based gastrointestinal surgeon currently in Gaza, added that snipers were deliberately targeting “certain body parts on different days, such as the head, legs or genitals” near US-Israeli run aid distribution points. Prof Maynard said “unprecedented levels” of severe malnutrition were directly contributing to preventable deaths among patients receiving surgery. “The malnutrition I’m seeing here is indescribably bad. It’s much, much worse now than a year ago”. Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza - REUTERS He added that colleagues he worked with a year ago were barely recognisable, having lost 20-30 kg due to severe food shortages. Critically, he said injured patients were dying because malnutrition was preventing them from healing properly. “The repairs that we carry out fall to pieces, patients get terrible infections, and they die. I have never had so many patients die because they can’t get enough food to recover,” he said. Prof Maynard said the Nasser hospital, in Khan Younis, southern Gaza, where he is currently based, had almost completely run out of intravenous liquid fluids, used to treat severely malnourished children. He added that four infants recently died from malnutrition in the neonatal ward. “I saw a seven-month-old who looked like a newborn. The expression ‘skin and bones’ doesn’t do it justice,” he said. A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation - AP Prof Maynard added that snipers appear to be targeting body parts including genitals and legs near the controversial US-Israeli Gaza Humanitarian Foundation’s (GHF) food aid collection points in southern and central Gaza “The medical teams here have also been seeing a clear pattern of people being shot in certain body parts on different days, such as the head, legs or genitals, which seems to indicate deliberate targeting,” said Prof Maynard. “These are mainly from the militarised distribution points, where starving civilians are going to try and get food but then report getting targeted by Israeli soldiers or quadcopters.” Local medics have also reported a pattern of snipers targeting Palestinians in the backside, according to the BBC. GHF, the Israeli-backed American organisation, limits food distribution to four fixed sites in southern and central Gaza, all guarded by private American security contractors and Israeli soldiers, in a move designed to wrest distribution away from aid groups led by the UN. Israel and the US have been criticised over near-daily shootings near the distribution sites, which have killed 875 Palestinians seeking food since May, according to the UN human rights office. British surgeon Prof Nick Maynard said he has “never had so many patients die because they can’t get enough food to recover” - Medical Aid for Palestinians (MAP) Israeli and international news organisations have talked to IDF reservists and a contractor working for GHF who confirmed that civilians were being fired on. Prof Maynard called the distribution sites “death traps”, saying he has mostly operated on young teenage boys who were trying to retrieve food for their families. “A twelve-year-old boy I was operating on died from his injuries on the operating table – he had been shot through the chest,” said Prof Maynard. “The enforced malnutrition and attacks on civilians we are witnessing will kill many more thousands of people if not stopped,” he said, adding that “getting adequate food and aid into Gaza is essential.” “The fact the world is letting Israel get away with this is deeply upsetting, something must be done to stop this collective punishment of the population of Gaza.” Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza - REUTERS Gaza’s more than 2 million Palestinians are living through a catastrophic humanitarian crisis, and the territory is teetering on the edge of famine, according to food security experts. Unrwa, the UN Relief Works Agency for Palestinian Refugees, recently reported one in 10 children brought to its clinics were malnourished, adding that the condition surged amid severe shortages of nutrition supplies. Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF), the medical NGO, said their teams are witnessing the highest levels of acute malnutrition ever recorded in two facilities in Gaza. Numbers of malnutrition in the Gaza City clinic, north of the enclave, almost quadrupled in less than two months, with cases soaring from more than 290 cases in May to over 980 cases at the beginning of July, said MSF. “This is the first time we have witnessed such a severe scale of malnutrition cases in Gaza,” said Mohammed Abu Mughaisib, MSF deputy medical coordinator in Gaza. “The starvation of people in Gaza is intentional, it can end tomorrow if the Israeli authorities allow food in at scale.” https://ca.news.yahoo.com/idf-soldiers-deliberately-wounding-children-162950060.html?guccounter=1
-
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு July 19, 2025 5:00 am சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது. பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது. 1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது. விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://oruvan.com/40-tenants-ordered-to-vacate-buildings-housing-tamil-shops-in-switzerland/
-
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் ! 19 JUL, 2025 | 11:25 AM உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பதுடன் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். https://www.virakesari.lk/article/220371
-
அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்
அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும் 19 July 2025 அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிறுவனம் கோரியபடி பணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து சட்ட ஆலோசனையை நாடியது. சில செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதலுக்கான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாகவும், இதற்கான மொத்தத் தொகை ரூ.300 முதல் 500 மில்லியன் வரை இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. https://hirunews.lk/tm/410642/sri-lanka-to-pay-rs-500-million-for-halting-adanis-projects
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை General19 July 2025 பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/410648/signature-drive-demanding-repeal-of-the-prevention-of-terrorism-act
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் இது அமுலுக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும். மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmd9oa0qu01cgqp4kd8tck58h
-
இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம்
இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம் சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது. எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். R https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-பாடசாலை-மாணவிகளிடையே-அதிகரிக்கும்-கர்ப்பம்/175-361345
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்! 19 Jul 2025, 9:51 AM கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவையொட்டி அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/kalaingar-eldest-son-m-k-muthu-passes-away/ மது போதையில் வாழ்க்கையைத் தொலைத்த மு.க.முத்து! -இர்ஷாத் அகமது மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்; 2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியானது. அப்போது நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தேன். மு.க.முத்து நடித்த திரைப்படங்களில் ஒரு படம் கூட நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால், அவர் நடித்த படங்களில் வரும் ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ ஆகிய இனிமையான பாடல்கள் என்றென்றும் என் மனதைக் கவர்ந்தவை. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அரசியலிலும் திரைப்படத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவருக்குப் போட்டியாக கலைஞரால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டவர் மு.க.முத்து என்ற பொதுவான ஒரு கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், மு.க.முத்து நடித்த படங்கள் அனைத்திலும் அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே எம்ஜிஆரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். திமுக தலைவரின் மகன், முதலமைச்சரின் மகன், திரைப்பட நடிகர், பாடகர், பணபலம், செல்வாக்கு என இத்தனை சிறப்புகள் இருந்தும் தனது இளம் வயதில் ‘சேர்வாரோடு சேர்க்கை’ காரணமாக மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, அவரால் ஒரு சாதாரண மனிதனைப் போல கூட சமுதாயத்தில் ஒரு ‘அந்தஸ்துடன்’ வாழ முடியவில்லை. மு.க.முத்து குறித்த செய்திகளால் எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது பள்ளி வாழ்க்கை, சினிமாத் துறையில் மறக்க முடியாத அனுபவங்கள் என அவரது வாழ்க்கையின் இன்னொரு அழகிய பக்கம் குறித்து செய்தி வெளியிட முடிவு செய்து திருவாரூர் சென்றேன். பஸ்சில் சென்று திருவாரூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னை அப்போதைய திருவாரூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்று, அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். (கல்யாணசுந்தரத்தை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்களது நட்பு கடந்த ஆண்டு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் வரை தொடர்ந்தது). மு.க.முத்து அப்போது திருவாரூரை அடுத்த குளிக்கரை என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு மிகச் சிறிய குடிசையில் வசித்து வந்தார். நாங்கள் சென்றபோது மு.க.முத்து வீட்டில் இல்லை. குடிசை வீட்டிற்குள், அழுக்கடைந்த. கிழிந்த ஆடை அணிந்த ஒரு பெண், பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப் பெண்ணுடன் தான் மு.க.முத்து தற்போது ‘குடித்தனம்’ நடத்தி வருவதாக அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர். “மு.க.முத்து எங்கே?,” என நண்பர் கல்யாணசுந்தரம் கேட்டதற்கு, அவர் வெளியே சென்றிருப்பதாக அப்பெண் பதிலளித்தார். எனவே, நாங்கள் இருவரும் அவரது வருகைக்காக அவ்வீட்டின் வெளியே ரோட்டில் காத்திருந்தோம். சுமார் ஒருமணி நேர காத்திருத்தலுக்குப் பின், “ஸார், அவர் வர்றார்,” என்றார் கல்யாணசுந்தரம். அவர் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருவரும் எனது பார்வையில் படவில்லை. ‘எங்கே வர்றார்?’ என நான் கேட்டேன். “ஸார், தொப்பி அணிந்து ஒருத்தர் வர்றார் பாருங்க. அவர்தான் மு.க.முத்து,” என்றார் கல்யாணசுந்தரம். இப்போது அவர் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் எனதருகே நெருங்கியபோது திடீரென சாராய நெடி மூக்கைத் துளைத்து, குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல குமட்டியது. அவரது அலங்கோல நிலையைக் கண்ட எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது. அதற்கு காரணம், அவர் ஒருகாலத்தில் திரைப்பட நடிகர் என்பதால் திரைப்பட ஸ்டில்களில் பார்த்த அவரது அழகிய உருவத்தை என் மனதில் நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால். அவரோ பல நாட்களாக குளிக்காத, அழுக்கடைந்த, கசங்கிய ஆடைகள் அணிந்திருந்ததுடன், தலையில் அழுக்கடைந்த ஒரு தொப்பியும் அணிந்திருந்தார். அதனால் அவரை என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவரா இவர்? என என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு, அவரை வழிமறித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை பேட்டி காண வந்திருப்பதாக கூறினேன். அவ்வளவு போதையிலும் அவர் ரொம்ப நிதானமாகவே இருந்தார். நாங்கள் சொன்ன தகவலை புன்முறுவலுடன் கேட்டுவிட்டு, எங்களை அக் குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கே உட்கார பாய் கூட இல்லை. அதனால் வெறுந் தரையில் தான் உட்கார்ந்தோம். குடிசையில் ஒரே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறிகூட இல்லை. அக் குடிசையில் எங்களுக்கு மின்விசிறி வசதிகூட இல்லாமல் அசௌகரியமாக இருப்பதற்காகவும், எங்களுக்கு குடிக்க டீ கூட தரமுடியாத தன்னுடைய நிலையையும் வருத்தத்துடன் கூறி, அதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்டார் மு.க.முத்து. என்னுடைய பெயரை கேட்ட மு.க.முத்து, மனதில் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை, தனக்கு நாகூர் ஆண்டவரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி, ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலைப் பாடினார். பின்னர், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற பாடலின் ஒருசில வரிகளையும், சிவாஜி படத்தில் வரும் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார். அதன் பின்னர், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க’ என்ற பாடலை பாடிக் காட்டினார். ஏதோ பல ஆண்டுகள் பழக்கமானவர் போல எங்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி எங்களது முதல் சந்திப்பிலேயே கலகலவெனப் பேசினார். இன்று நினைத்தாலும் அக்காட்சி எனது கண் முன்னே தோன்றுகிறது. “சென்னையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மெயின்கார்ட் கேட் அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாங்க. ஆனால் அங்கேயும் நான் ஒழுங்கா படிக்கல. ஃபெயிலாகிட்டேன்,” என்றார் மு.க.முத்து. “எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நானும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். அவரும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். ஆனா அவர் வாழ்க்கையில் போராடி ஜெயிச்சு முதலமைச்சரா ஆகிவிட்டார். நான் தான் வாழ்க்கையிலும் தோற்றுவிட்டேன்,” என சிரித்தவாறே கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனதில் உள்ள வலியை என்னால் உணர முடிந்தது. “என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வரணும்னு எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனால் நான் தான் அவரது பேச்சைக் கேட்டு நடக்காம, அவருக்கு ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்திவிட்டேன்,” எனக்கூறி வருத்தப்பட்டார் மு.க.முத்து. சினிமாத் துறையில் நுழைந்தது குறித்து கேட்டதற்கு, ‘அதற்கும் எங்கப்பா தான் காரணம்,’ என்றார், மு.க.முத்து. “எனக்கு சினிமாவில் நடிக்க கொஞ்சஞ் கூட விருப்பம் இல்லை. ஆனால், எங்க அப்பா தான் என்னை பெரியப்பா (எம்ஜிஆர்) மாதிரி ஆக்கணும்னு ஆசைப்பட்டு என்னை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வெச்சார். ஆனா, எங்க பெரியப்பாவுக்கு என்மேல எப்பவுமே ரொம்ப பிரியம். எங்க அப்பாமீது அவருக்கு கோபம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம நான் நடிச்ச ‘பிள்ளையோ பிள்ளை’ பட சூட்டிங்கிற்கு வந்திருந்ததோடு, படப்பிடிப்பை கிளாப் அடிச்சு தொடங்கி வச்சார் பெரியப்பா. நான் திரைத் துறையில் வெற்றி பெற்று பெரிய ஆளா வரணும்னு மனசார வாழ்த்தினார்,” என்றார் மு.க.முத்து. எம்ஜிஆரை பெரியப்பா என்றே குறிப்பிட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரை புகழ்ந்து பேசினார். “சிவாஜி சித்தப்பாவின் படங்களைவிட எனக்கு பெரியப்பா (எம்ஜிஆர்) நடிச்ச படங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அவர் நடிச்ச படங்களை பலமுறை ஸ்கூலுக்கு ‘கட்’அடிச்சிட்டு தியேட்டருக்குப் போய் பார்த்து ரசிச்சிருக்கேன். எங்க பெரியப்பாவுக்கும் என் மேல ரொம்ப பிரியம். அவரை நான் எப்போ சந்திச்சாலும், என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று ரொம்ப அன்பாக பேசுவார். ‘அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்’னு எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்வார்,” என்றார் மு.க.முத்து. “எங்க பெரியப்பா (எம்ஜிஆர்) இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா, இந்த அளவுக்கு என்னோட நிலைமை மோசமா ஆகியிருக்காது. அரசியல் என்ற சனியன் தான் எங்க அப்பாவையும், பெரியப்பாவையும் பிரிச்சிருச்சு,” எனக் கூறிவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியானார் மு.க.முத்து. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார். ‘லட்சுமி, மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய மூவருமே ரொம்ப சீனியர் நடிகைகள். ஆனா, அதையெல்லாம் கொஞ்சங்கூட பொருட்படுத்தாம என்னோட படத்தில எனக்கு ஜோடியா நடிச்சாங்க. உண்மையிலேயே, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்றார் மு.க.முத்து. அதே போல, நடிகர் ரவிச்சந்திரன் தான் தனக்கு முதன் முதலில் ‘தண்ணியடிக்க’ கத்துக் கொடுத்ததாக கூறினார் மு.க.முத்து. “நடிகர் ரவிச்சந்திரன் எங்க உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். எனக்கு முதன் முதலில் தண்ணியடிக்க கத்துக் கொடுத்ததே அவர் தான். அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சது தான் அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது,” என்றார் மு.க.முத்து. கலைஞர் உள்பட தனது நெருங்கிய உறவினர்கள் யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறி வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினார். அவரது நிலையைக் கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. என்னிடம் அப்போது சட்டைப் பையில் ரூ 300 இருந்தது. அதனால் அதில் ரூ100 கொடுக்கலாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என மனதில் ஒரு தயக்கம் இருந்தது. இந் நிலையில், பேட்டி முடிந்து நானும் நண்பர் கல்யாணசுந்தரமும் எழுந்து கிளம்ப தயாரானோம். அப்போது சற்றும் எதிர்பாரா வகையில், “ஏதாவது பணம் இருந்தா கொடுங்க, ஸார்,” எனக் கேட்டார் மு.க.முத்து. இதை நாங்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு எனது சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதில் ரூ200ஐ அவரிடம் கொடுத்தேன். ரூ100 கொடுத்தால் நாகரீகமாக இருக்காது எனக் கருதி ரூ200 கொடுத்தேன். ஆனால் அவர் மீதி 100 ரூபாயையும் தருமாறு கேட்டார். அதற்கு நான், “ பணம் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பணம் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிச்சது. ஆனா நீங்க அதை தண்ணியடிக்க கேட்கிறீங்க. அதனால உங்களுக்கு கொடுக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கு. இந்த பணத்தை தண்ணியடிக்க பயன்படுத்த மாட்டேன் என நீங்க ஒரு உறுதி கொடுத்தீங்கன்னா நான் என்னிடமுள்ள மீதி 100 ரூபாயையையும் தருகிறேன்,” என என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன். எனது வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிரித்தபடியே அமைதியாக நின்றிருந்த மு.க.முத்து, ‘நிச்சயமாக இந்த பணத்தில் தண்ணியடிக்க மாட்டேன். சாப்பாடு தான் வாங்குவேன்,” எனக் கூறினார். அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு முதலமைச்சரின் மகன் என்னிடம் கையேந்தும் நிலையை நினைத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் என்னிடம் மீதம் இருந்த 100 ரூபாயையும் அவரிடம் கொடுத்தேன். அதை, அவர் சிரித்த முகத்துடன் தனது இருகைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தடைந்த நான், இச் செய்தியை எனது அலுவலகத்தில் இருந்த மோடத்தில் அடித்து, திருச்சி அலுவலகத்துக்கு அனுப்பினேன். ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சென்னை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தியாளர் டி.என். கோபாலனிடமிருந்து எனக்கு ஃபோன். “இர்ஷாத், மு.க.முத்து பற்றிய உன்னோட செய்தியை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு. அனேகமா ‘ஆல் எடிஷன்ல’ முதல் பக்க செய்தியா போடலாம் என நினைச்சிருக்கேன்,” எனக் கூறிவிட்டு, “மு.க.முத்துவின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எதுவும் இருந்தால், அதை உடனடியாக அனுப்பு,” என்றார் டிஎன்ஜி. என்னிடம் தற்போது மு.க.முத்துவின் புகைப்படம் எதுவும் இல்லை எனக் கூறிய நான், அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு, உடனடியாக நண்பர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டு மு.க.முத்துவை புகைப்படம் எடுத்து அதை திருச்சி அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்புமாறு கூறினேன். ஆனால், தற்போது இருட்டி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் படம் எடுக்க முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறினார். அத்தகவலை நான் அலுவலகத்தில் தெரிவித்து விட்டேன். இந்நிலையில், அதற்கடுத்த ஒருமணிநேரம் கழித்து, மீண்டும் சென்னை அலுவலகத்திலிருந்து டி.என்.கோபாலனிடமிருந்து ஃபோன். “ஐ ஆம் வெரி ஸாரிப்பா. உன்னோட செய்தி ரெசிடென்ட் எடிட்டருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சமயத்தில இப்படி ஒரு செய்தியை போட்டா கலைஞர் கோவிச்சுக்குவார் என நம்ம சேர்மன் (மனோஜ்குமார்) சொந்தாலியா ரொம்ப ஃபீல் பண்றார். அதனால் உன்னோட இச்செய்தியை நம்ம பத்திரிகையில் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார்,” எனக் கூறிய டிஎன்ஜி, “என்ன செய்வது? சில சமயம் இப்படியெல்லாமும் நடக்கும். இதுக்காக வருத்தபடாதீங்க. மனசை தளரவிடாதீங்க,” என ஆறுதல் கூறினார். அதைக் கேட்டு எனக்கு வருத்தம் ஏற்பட்டது. டிஎன்ஜி கூறியபடி, நான் ஆர்வமுடன் அனுப்பியிருந்த அச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. கட்டுரையாளர்; இர்ஷாத் அகமது மூத்த பத்திரிகையாளர் குறிப்பு; கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் ஒரே மகன் மு.கமுத்து. பிறக்கும் போதே தாயை பறிகொடுத்தவர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க முத்து தந்தையின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய செய்தி ஊடகங்களில் வந்தது. அப்போது கைத்தாங்கலாக இருவர் அவரை அழைத்து வந்தனர். பிறகு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் உயர்தர சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. சமீபத்தில் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரன் என்ற சினிமா தயாரிப்பாளருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. இத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவியும் முன்னின்று நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://aramonline.in/21889/mk-muthu-liquor-karunanithi-mgr/
-
தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை!
தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை! வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வாழ்க்கைமுறையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அத்துடன் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அவசியம். விளையாட்டுக்கழகங்கள் சமூக உறவை மேம்படுத்த உரிய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமங்களில் சமூக உருவாக்கங்களை ஏற்படுத்தி வந்த சனசமூகநிலையங்கள் தொடர்ந்து இயங்க உரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எமது சமூகத்தில் நல்ல மனிதர்கள் உருவாவதை உறுதி செய்யும். தனியார் பிரத்தியேக வகுப்புகளை, குறைந்தது தரம் 10க்கு உட்பட்டவர்களுக்காவது, வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் நிறுத்தி, நல்ல ஒரு ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்க உரிய வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயத்தில், எமது ஒத்துழைப்பையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். என தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/article/தனியார்_பிரத்தியேக_வகுப்புக்கள்_தொடர்பில்_சர்வ_மத_பேரவையின்_கோரிக்கை!
-
9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு
9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு July 18, 2025 11:03 am எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://oruvan.com/opportunity-to-visit-the-9-arch-bridge-at-night/
-
காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி
காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 18 JUL, 2025 | 08:02 AM முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது. உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார். இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார். பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம். 21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது. தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார். https://www.virakesari.lk/article/220272
-
காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு
காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்-என்றார். இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்ததலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன், வல்லைப் பாலம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்றார். இதையடுத்து, வல்லைப் பாலத்தில் போதியளவு மின்விளக்குகள் இல்லை என்ற விடயத்தை இளங்குமரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர், 'கடந்த காலங்களில் வல்லைப் பாலத்தில் போதியளவு மின் விளக்குகள் பூட்டப்பட்டன. எனினும், அவை காலப்போக்கில் திருடப்பட்டுவிட்டன. உடனடித் தேவை கருதி சில சோலர் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார். https://newuthayan.com/article/காவுவாங்கும்_வல்லைப்பாலம்;_தவிசாளர்_நிரோஷ்_சுட்டிக்காட்டு
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி! ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள குறித்த ஆலயத்துக்கு கடந்த ஆறுமாத காலத்துக்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. விசேட தினங்களில் மாத்திரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு' என உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு. அந்தப்பாதை ஊடாக மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆலயத்துக்குச் செல்வதற்காக அந்தப் பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலேயே குறித்த பிரத்தியேகப் பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/பலாலி_இராஜ_இராஜேஸ்வரி_அம்மன்_கோயிலுக்கு_பிரத்தியேக_பாதையூடாக_சென்று_வழிபட_அனுமதி!
-
யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!
யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூட்டுப்பாய்ச்சல் யாழ் மாவட்டச் செயலர் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அவை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் குவிந்தபடி உள்ளன என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவரான வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. அப்போது ஒருகட்டத்தில், யாழ். மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மணல் கடத்தலின்போது கைப்பற்றப்பட்ட வாகனத்தை விடுவிக்க யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் பணித்ததாக நான் அறிந்தேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார். இதனை மறுதலித்த மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் இவ்வாறு கதைக்கக் கூடாது. நான் அவ்வாறு எதுவிதமான செயலிலும் ஈடுபடவில்லை' - என்றார். இதனையடுத்து ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன், 'இங்குள்ள பலர் பக்கச்சார்பாக நடக்கின்றனர். இதனால் பல பிரதேச செயலாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் பழிவாங்கப்படுகின்றனர். அந்தப் பழிவாங்கலால் திட்டமிட்ட இடமாற்றங்களுக்கும் உட்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார். அதனை ஆமோதித்த அர்ச்சுனா எம்.பி. "யாழ்.மாவட்டச் செயலரின் பழிவாங்கலால் தாம் பாதிக்கப்பட்டுள்ளனரென எட்டு பிரதேச செயலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்" - என்றார். அதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி எம்.பி.க்களான பவானந்தராஜா, இளங்குமரன் ஆகியோர் மாவட்டச்செயலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அத்துடன், பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்து, வடக்கு ஆளுநர் தலைமையில் குழு அமைத்து இடமாற்றங்களை தீர்மானிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. எனினும் முடிவேதுமின்றி கூட்டம் அவசர அவசரமாக முடிவுறுத்தப்பட்டது. https://newuthayan.com/article/யாழ்._மாவட்டச்_செயலர்_தன்னிச்சைச்_செயற்பாடு!
-
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..! July 16, 2025 — அழகு குணசீலன் — இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிரசவமான, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் மீள்வருகை தமிழ்த்தேசிய அரசியலிலும், ஊடகங்களிலும் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் வரதர் இந்திய படைகளுடன் கப்பலேறிய பின்னர் இதற்கு முன்னரும் சில தடவைகள் இலங்கை வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு முக்கியத்துவத்தை தமிழ்த்தேசிய அரசியலும், ஊடகங்களும் அவருக்கு வழங்கவில்லை. அப்படியானால் இப்போது மட்டும் ஏன்? இதன் பின்னணி என்ன? திடீரென்று கடந்த சில தினங்களாக மாகாணசபை தேர்தல் ‘மந்திரம் ‘ கொழும்பு அரசியலிலும், தமிழ்த்தேசிய அரசியலிலும் சற்று சத்தமாக ஓதப்படுகிறது. வரதராஜப்பெருமாளின் மீள் வருகை ஒரு தற்செயல் நிகழ்வல்ல. காலக்கணக்கு பார்த்து நகர்த்தப்படுகின்ற ஒரு காய்நகர்வு. இலங்கையின் இன்றைய தேசிய, பூகோள அரசியல் சூழலில் இந்த அனைத்து தமிழ்த்தரப்பு அரசியலும் புதுடெல்கியின் நிகழ்சி நிரலின் அடிப்படையில் இயக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் வலுக்கிறது. 1. 2023 இல் அன்றைய யாழ்ப்பாண தமிழரசு எம்.பி. சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்பித்த தனிநபர் பிரேரணை கிடப்பில் கிடக்கின்ற நிலையில் தற்போது, இ.சாணக்கியன் எம்.பி. இந்த தனிநபர் பிரேரணையை தனது பெயரில் மீண்டும் சமர்ப்பித்துள்ளார். 2. என்.பி.பி. அரசாங்க பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை சபைகள் அமைச்சர், மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். 3. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இலங்கை வந்து அவரின் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். சகா சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்திருக்கிறார். 4. தமிழ்த்தேசிய கட்சிகள் பலவும் மாகாணசபை தேர்தலை விரைவில் நடாத்தவேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை கோரியுள்ளன. 5. செம்மணி தோண்டப்படுகிறது, புலிகளின் குருக்கள் மடம் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை கோரியிருக்கிறது. புலிகளின் மற்றைய கொலைகளும் பேசப்படுகின்றன. 6. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த உறவு கிழக்குமாகாண சபையை இணைந்து கைப்பற்றுவதற்கான நகர்வு என்று கூறப்படுகிறது. 7. செப்டம்பரில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சர்வதேச விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன மீண்டும் பேசப்படும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வடக்குக்கு சென்ற எல்லா பிரதான வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு தீர்வை ‘பிடி கொடுக்காமல்’ விற்பனை செய்தனர். அநுரகுமார திசாநாயக்க தாங்கள் மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அது இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்றாலும் அரசியல் அமைப்பு மாற்றம் செய்யப்படும்வரை இருக்கின்ற மாகாணசபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு அவை இயங்க வழிசமைக்கப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது அநுரவின் அமைச்சர் புதிய புரளியை கிளப்பி எல்லை நிர்ணயம் பற்றி பூச்சுற்றுகிறார். வரதராஜப்பெருமாளின் வருகையும், தமிழ்த்தேசிய கட்சிகளின் நகர்வும், ஜெனிவாவில் இலங்கைக்கு இந்திய அணியின் ஆதரவு தேவைப்படுவதும் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை முன்னெடுப்பதற்கான சரியான காலம் என்பதை இந்தியா கணக்கு பார்த்து வரதராஜப்பெருமாளுக்கு ஊடாக காயை நகர்த்துகிறது. ஒரு வகையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் மாகாணசபை தேர்தலுக்கான ஒரு திகதியை அல்லது வாக்குறுதியை அநுர அரசிடம் இருந்து பெறுவதற்கு இது பொருத்தமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அநுர அரசாங்கம் இந்த அழுத்தத்தை சீன அணியைக் கொண்டு எவ்வாறு சமாளிக்கப்போகிது என்பதும் மற்றொரு கேள்வியாகும். கொழும்பை இந்தியப் பக்கம் தள்ளுவதா? சீனப் பக்கம் தள்ளுவதா? என்பதை தீர்மானிக்கும் பந்து அமெரிக்காவிடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் இருக்கிறது. அதேவேளை கொழும்பு வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் “மூன்றாவது” தரப்புக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி சகா விஜயஹேரத்துடன் கை குலுயிருக்கிறார். ” ….இறுதித் தீர்வுக்கான முயற்சி ஒரு புறம் நடக்கட்டும்.அது சமஷ்டியா? அல்லது அதற்கும் மேலானதா? எல்லாத் தமிழ்த்தரப்பும் செயற்படட்டும். ஆனால் அதற்கிடையில் இருக்கின்ற மாகாணசபை முறைமையை முழு அளவில் நடைமுறைப்படுத்தச் செய்வதற்கான ஒரு சமாந்தர முயற்சியே இது……”. வரதராஜப் பெருமாளின் வருகைக்கான காரணத்தையும், அதன் பின்னணியையும் தெளிவாக விளங்கிக்கொள்ள அரசியல் அகராதி எதுவும் மேலதிகமாகத் தேவையில்லை. உண்மையில் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாகாணசபைக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இல்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் படிப்படியாக கொழும்பால் மீளப்பெறப்பட்டு விட்டன. இன்னும் காலம் கடத்தினால் “கோவணத்தையும்” இழந்த கதைதான் என்பதை வரதர் சொல்லாமல் சொல்லியுள்ளார். முதலில் இருக்கின்ற அடித்தளம் காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மேல் கட்டி எழுப்புவதெல்லாம் பிறகு பார்க்கலாம் என்பது வரதர் வாதம். சரிதான். ஈழப்பிரகடனம் செய்து அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாகவும், சுயவிமர்சனமாகவும், குற்ற உணர்வாகவும் இவை இருக்கமுடியும். ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் சகா சுரேஷ்பிரேமச்சந்திரனைச் சந்தித்தபோது வரதருக்கு சுரேஷ் அளித்த பதில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததாக இருப்பது அரசியல் வேடிக்கை. “….. ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எப். இன் வேலைத்திட்டத்திற்குள் இந்த விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருப்பதாக..” சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு போடு போட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டு திண்ணையில் படுத்து தூங்கியபோது சமஷ்டிக்கு வேட்டியை மடித்துக்கட்டியவர், சிவாஜிலிங்கம் அணியில் இன்னும் தீவிரமாக பேசியவர் இப்போது ‘வேலைத்திட்டம் ‘ பற்றி வரதருக்கு வகுப்பெடுத்துள்ளார். கதிரைகளுக்காக சேர்வதும், பிரிவதும் அறிக்கை விடுவதுமாக 2009 க்கு பின்னர் அரசியல் செய்த ஈ.பி.ஆர்.எல்.எப். அதற்கு முன்னர் புலிகளின் அரசியலையே நியாயப்படுத்தியது, கோரிக்கையாக்கியது. இப்போது வேலைத்திட்டமாம்…வேலைத்திட்டம். தமிழ்த்தேசிய பாராளுமன்ற சக்திகளை ஒன்றிணைப்பதில் தனக்கு இருக்கக்கூடிய பெரிய தடை தமிழரசும், தமிழ்க் காங்கிரஸும் என்பதை வரதர் அடையாளம் கண்டுள்ளார். அதனால்தான் தான் அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்ற முன் நிபந்தனையை தனக்கு தானே அவர் விதித்துள்ளார். இதன் மூலம் தமிழ்த்தேசிய ‘கதிரைகள் ‘ தன் மீது அலர்ட்டாக மாட்டார்கள் என்று வரதர் நம்புகிறார். ஆனால் வரதராஜப் பெருமாளின் இந்த முயற்சிக்கு அவரின் கடந்த கால அரசியல் ஒரு தடையாக அமையாது என்று அடித்துச்சொல்ல முடியாது. இது அவரின் முயற்சி மீதான மிகப்பெரிய பலவீனமாகவும், நம்பிக்கையீனமாகவும் அமையும். சிங்கள பௌத்த பேரினவாதத்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் குறுந்தமிழ்த்தேசிய தீவிர வாதத்தாலும் அவர் மிக விரைவாக ‘இந்திய கைக்கூலியாக’ அடையாளப்படுத்தப்பட அதிககாலம் பிடிக்காது. அது மட்டுமின்றி வரதரின் பயணத்தில் குறுக்கே கட்டை போடக்கூடியவர்கள் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும். ‘ஒரு நாடு இரு தேசம்’ கஜேந்திரகுமார் மாகாணசபை தேர்தல் நடந்தால் போட்டியிடுவோம் ஆனால் இப்போதைக்கு அவசியமில்லை என்று நழுவலாம். சுமந்திரன் பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களுக்கு இதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கவில்லை. எனவே அதிகாரப்பகிர்வு வடிவத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்று சட்டவாதம் செய்யலாம். இவர்கள் இருவரது அணுகுமுறையும் ஒனறில் ஒன்று தங்கியிருக்கும் சதுரங்கம் என்பதால் வரதருக்கு பெரும் சவாலாக அமைய வாய்ப்புண்டு. வழிக்கு கொண்டு வரவேண்டியது இந்தியாவின் பொறுப்பு. “இருப்பதை பலப்படுத்தும்” என்ற முக்கிய இலக்கில் அதிகாரப்பரகிர்வை நோக்கி நகர்வதே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இன்றிருக்கின்ற ஒரேவழி. வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பன எல்லாம் வெறும் மண்குதிரைகள் . ஆனால் கஜேந்திரகுமார் குமார் இந்த மண்குதிரையில் ஏறினால் அதற்கு போட்டியாக சுமந்திரனும் ஏறமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களின் கடந்த கால கதிரை அரசியல் இதையே தமிழ்த்தேசிய அரசியில் மீதப்படுத்தி இருக்கிறது. இறுதியாக ஒரு விடயம். இது சமூக ஊடகங்களில் வெளியானது. இதைப்பதிவிட்டவர் வரதர் – சுரேஷ் சந்திப்பில் பங்குபற்றிய நடராஜா கமலாகரன். “அன்று தோழர் நாபாவோடு தோழர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசையும் அது திறம்படச் செயற்பட்டதையும் நான் அதில் உறுப்பினராக இருந்து மக்கள் பணிபுரிந்ததையும் மறந்திடவும் கூடுமோ?” நாபாவை துணைக்கழைப்பது உங்கள் கதிரை அரசியலால் அவரை அவமதிப்பது. ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். மாகாணசபை ஆட்சியில் உங்கள் “மக்கள் பணி”யை வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் ஒன்றும் ஞாபகமறதி நோயாளர்கள் அல்ல. இவ்வாறான புனைவுகளின் மூலம் மக்களோடு விளையாடாதும், வரதரின் முயற்சிக்கு குறுக்கே நீங்களே தடையைப் போடாமல் சும்மா இருப்பதே சுகம். நீங்கள் நினைப்பது போன்று தமிழ், முஸ்லீம் மக்கள் உங்களை எப்படி மறந்திட முடியும்? மாகாணசபை வரதர் ஆட்சியின் வண்டவாளங்களையும், அந்த அடாவடித்தன அரசியல் பயணித்த தண்டவாளங்களையும் மக்கள் மறக்க அவர்கள் நீங்கள் கப்பலேறிய பின்னரும், 2009 பின்னரும் பிறந்தவர்கள் அல்ல. மாகாணசபை சபை மூலமாக அதிகாரப்பகிர்வு அடிப்படை கட்டமைப்பை தக்க வைக்க அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். புலிகளுக்கு பின்னால் போன அனைவரும் செய்ய வேண்டிய பிராயச்சித்தம். https://arangamnews.com/?p=12163
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை July 16, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கங்களுக்கு அக்கறை இருப்பதாக நம்புவதற்கு காரணம் இல்லை. இது விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு எதையும் காணவும் முடியவில்லை. பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கப்படுவதைப் போன்று பொருளாதாரத்துடன் சம்பந்தப்படாத குற்றங்கள் விடயத்தில் நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடனான ஊடாட்டங்களைப் பொறுத்தவரையிலும் கூட முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே அணுகுமுறைகளையே இன்றைய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது. ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக அவ்வப்போது உறுதியளிக்கின்ற அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அவருக்கு சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கியது. அவரும் கூட பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திடம் ஒப்பீட்டளவில் நேர்மறையான அணுகுமுறையை அடையாளம் கண்டதைப் போன்று சில கருத்துக்களை வெளியிட்டார். தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய வொல்கர் டேர்க் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளுவதற்கு சர்வதேச தராதரங்களுடன் கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றே உகந்தது என்று கூறினார். அவரது இந்த கருத்து அரசாங்கத்துக்கு பெரும் திருப்தியைக் கொடுத்திருக்கும் என்கின்ற அதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்பில் இதுவரையில் கசப்பான அனுபவங்களைக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது கடுமையான ஏமாற்றமாகவே இருந்தது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையில் நிச்சயமாக பிரதிபலிக்கும். மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளும் மைய நாடுகள் எத்தகைய புதிய தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றன என்பதே தற்போது சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒரு பொறிமுறையை அமைப்பதற்கு வழிவகுத்த (தற்போது நடைமுறையில் இருக்கும்) 51/1 தீர்மானத்தை மேலும் நீடிப்பதே பயனுடையதாக இருக்கும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் பலர் கருதுகிறார்கள். புதியதொரு தீர்மானம் சிலவேளைகளில் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை இல்லாமல் செய்துவிடவும் கூடும் என்ற நியாயமான அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.. யாழ்ப்பாணம் செம்மணியில் தற்போது தொடர்ச்சியாக தோண்டியெடுக்கப்பட்டுவரும் மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கில் கோரிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி மக்கள் போராட்டத்துக்கு வடக்கு – கிழக்கு சமூக இயக்கம் என்ற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவது வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்திருந்தால் இதேபோன்ற ஒத்துழைப்பு கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ தெரியவில்லை. . ஆனால், கொழும்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது செம்மணி விவகாரத்தில் சர்வதேச ஈடுபாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து சந்தேகம் எழுகிறது. ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய விரிவான கடிதம் ஒன்றில் செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் வெளிக்காட்டுவதாக சுட்டிக்காட்டி, அவை தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். அதேவேளை, செம்மணி புதைகுழி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேர்மையுடன் நடந்து கொள்ளப் போவதில்லை என்று கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். அந்த புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அவருடன் சேர்ந்து நின்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு ஊக்கம் கொடுத்ததை அவர் காரணமாகவும் சுட்டிக்காட்டினார். செம்மணியில் தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் போர்கால அட்டூழியங்கள் தொடர்பில் மீண்டும் சர்வதேச மட்டத்தில் கூடுதல் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக பதவிக்குவந்த பின்னரான சூழ்நிவையில் சர்வதேச புவிசார் அரசியலிலும் உலகளாவிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிலும் ஏற்பட்டிருக்கும் விபரீதமான மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கை பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. இது இவ்வாறிருக்க, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கடந்த வாரம் தெரிவித்த ஒரு கருத்து கவனத்துக்குரியதாக இருக்கிறது. கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் 50 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தன்னைத் தானே விசாரணைக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது என்றும் அது மிகவும் சவால்மிக்க பணி என்றும் கூறினார். அந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கச் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். “ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கார்டினல் ரஞ்சித் அடிக்கடி விடுகின்ற வேண்டுகோளை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுக்கும். பல சந்தர்ப்பங்களில் அமைதியான முறையில் அந்த வேண்டுகோளை விடுக்கும் கார்டினல் சில சந்தர்ப்பங்களில் குண்டுத் தாக்குதல்களைப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார். ஆனால் நாம் அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிப்போம். நீதியான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு குடிமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய தலைவர்களே இன்று இலங்கைக்கு தேவைப்படுகிறார்கள்” என்றும் ஜனாதிபதி தனதுரையில் மேலும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பேசிய கார்டினல் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அவற்றின் பின்னணியில் இருந்த சதியைக் கண்டறியுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே மூன்று அரசாங்கங்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும், எந்த பயனும் இல்லாத நிலையில், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக கார்டினல் எச்சரிக்கை விடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஜெனீவாவுக்கு சென்று முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடமும் அவர் முறைப்பாடு செய்தார். அண்மையில் இலங்கை வந்திருந்த வொல்கர் டேர்க்கும் கார்டினலைச் சந்தித்துப் பேசினார். இப்போது அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என்று நம்புகிறாரோ இல்லையோ வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு வழியில்லை. அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியது தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை நடத்திய கட்டமைப்பைச் சேர்ந்தோர் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இயங்குகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேவேளை அரசாங்கம் தன்னைத்தானே விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டதன் அர்த்தம் சவால்மிக்க நிலைவரத்துக்கு மத்தியிலும், உண்மை கண்டறியப்படும் என்பதேயாகும் என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் கூறினார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் ஏன் தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளாகின்றன? உண்மையைக் கண்டறிவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதுடன் எவரையாவது பாதுகாக்க வேண்டிய தேவையும் கூட இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், தற்போதைய அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? 2019 ஏப்ரில் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் இரு நீதிமன்ற வழக்குகள் உட்பட ஏழு உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆறு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது நியமித்த இரு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற நாட்களில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முதலில் 2019 ஏப்ரில் 22 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி விஜித மலலகொட தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த குழு அதன் அறிக்கையை சிறிசேனவிடம் 2019 ஜூன் 10 ஆம் திகதி கையளித்தது. இரண்டாவதாக, குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதத்துக்கு பிறகு 2019 மே 22 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலமாக அன்றைய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. மூன்றாவதாக, ஜனாதிபதி சிறிசேன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி நீதியரசர் சில்வாவினால் கையளிக்கப்பட்டது. நான்காவதாக, மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களாக இருந்த ஜனாதிபதி சிறிசேன உட்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 12 அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதி சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுச்சேவை தலைவர் நிலாந்த ஜெயவர்தன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று 2023 ஜனவரி 13 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்தாவதாக, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் அரச புலனாய்வு சேவை இருந்ததாக கூறும் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அதையடுத்து கிளம்பிய சர்ச்சை காரணமாக அந்த வீடியோவில் வெளியான தகவல்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்தார். ஆறாவதாக, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய புலனாய்வு அம்சங்களை ஆராய்வதற்கு 2024 ஜூனில் ஜனாதிபதி விக்கிரசிங்க முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். முன்னைய ஐந்து விசாரணைக் குழுக்களுமே புலனாய்வு அமைப்புக்களின் குறைபாடுகளையும் தவறுகளையும் விசாரணை செய்ததுடன் புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் விக்கிரமசிங்க எதற்காக இன்னொரு விசாரணைக் குழுவை நியமித்தார் என்று அந்த நேரத்தில் கேள்வி எழுந்தது. உள்நாட்டு விசாரணைகள் சகலவற்றையும் தவிர, ஜனாதிபதி விக்கிரமசிங்க பேர்லினில் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு 2023 அக்டோபரில் அளித்த நேர்காணலில் ஆறு வெளிநாடுகளின் விசாரணையாளர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் கூறினார். மேலும், குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பெரிய ஒரு சதித்திட்டம் இருந்தது என்று அன்றைய சட்டமா அதிபர் டப்புல டி.லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இவ்வாறாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு என்று ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. இவற்றில் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே மிகவும் முக்கியமானது. ஆனால், அதில் கூறப்பட்டவற்றின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கமும் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவிக்கிறதே தவிர முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்கத்தயாராக இல்லை. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் ஆறாவது வருட நினைவுதினமான கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதியளவில் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கூறினார். அவரது அறிவிப்பு நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இறுதியில் எல்லாம் புஷ்வாணமாகவே போனது. முன்னர் மறைத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அன்றைய தினம் திசநாயக்க அறிவித்தார்.அந்தளவில் அந்த விவகாரம் தற்போது நிற்கிறது. இப்போது அவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் முன்னிலையில் அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியிருக்கிறார். குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு தனது அரசாங்கத்துக்கும் ஓரளவு பொறுப்பு இருக்கிறது என்பதா அவரது அந்தக் கூற்றின் அர்த்தம்? சூத்திரதாரிகள் என்றைக்காவது சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று நம்பவது (இதுகாலவரையான நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ) கஷ்டமாக இருக்கிறது. (ஈழநாடு) https://arangamnews.com/?p=12156
-
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு â தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பின் கேந்திர மையமாகவுள்ள வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விமான படை முகாம் 1985 ஆம் ஆண்டு 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றல், மூடப்பட்ட வீதிகளை திறத்தல் காணி விடுவிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நகைகளை மீள ஒப்படைத்தல் என்பன தற்போது கண்காட்சி போன்று இடம்பெறுகின்றன. 2024.03.23 ஆம் திகதியன்று எஸ்.ஞானசம்பந்தன் என்பவர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அக்கடிதத்தில் வவுனியா விமான படை முகாம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒருபகுதி தனது தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது. ஆகவே இந்த காணியை விடுவித்து தனக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரியிருந்தார். இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் இந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விமானப் படையிடம் அறிக்கை கோரினார் .2024.07.04 ஆம் திகதியன்று விமானப் படை இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் ‘1985 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக இந்த காணி விமான படைக்கு கையளிக்கப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 1997.12.12 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட இந்த காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள எஸ்.ஞானசம்பந்தன் என்பவரின் தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரம் என்பவர் 2 இலட்சம் ரூபா நஷ் ஈட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் எஸ்.ஞானசம்பந்தர் என்பவர் இந்த முயற்சியை கைவிட்டு விட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது காணியை விடுவிக்குமாறு 2024.12.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இந்த கடிதத்தை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கடிதம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்பு கடிதம் ஒன்றை எழுதி, குறித்த காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விமானப்படைக்கு ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?இந்த ஆலோசனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே வழங்கியுள்ளார். இந்த விமானப் படை முகாமை அகற்றி இவ்விடத்தில் ஆரம்ப குடியிருப்பாளர்களை மீண்டும் அந்த காணியில் குடிமயர்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் அறிவித்தாரா?இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன.1985 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே இந்த முகாமுக்கான காணிகள் பெறப்பட்டன. எனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார். https://akkinikkunchu.com/?p=333108
-
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்! சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன. ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது. சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வார இறுதியில் ட்ரூஸ் போராளிகளுக்கும் உள்ளூர் பெடோயின் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதனால் மோதலை அடக்க சிரிய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து அரசாங்க ஆதரவுப் படைகளும் மோதலில் இணைந்துள்ளன. இது பெரும்பாலும் சுவைடாவில் வசிக்கும் ட்ரூஸ் சமூகத்திற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (SOHR) தெரிவித்துள்ளது. புதன்கிழமை சுவைடா தேசிய மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் உள்ள பெரிய ட்ரூஸ் மக்கள்தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரூஸ் சமூகங்களின் சுய-அறிவிக்கப்பட்ட பாதுகாவலராக இஸ்ரேல் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மே மாதத்தில், சுவைதாவில் நடந்த வன்முறைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது. சிரிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல் மூலமாக சிரியாவின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியும் இருந்தது. ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளைப் பிரிவைப் பின்பற்றும் ஒரு அரபு சிறுபான்மைக் குழுவாகும். பெரும்பாலான ட்ரூஸ் இனத்தவர்கள் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் வாழ்கின்றனர். சிரியாவில் 700,000 ட்ரூஸ் இனத்தவர்களும், லெபனானில் 300,000 பேரும், இஸ்ரேலில் 140,000 பேரும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=333131