Everything posted by கிருபன்
-
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!
அரசியல் அலசல் பகுதியில் இணைப்பதுதான் சரியென்று நினைக்கின்றேன். ஆனால் அதிகம் இணைத்தால் பார்வையாளர்கள் சுருங்கிவிடுகின்றார்கள்! இனிமேல் கவனம் எடுக்கின்றேன்😊
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை June 28, 2025 2:35 pm “சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு ‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம். அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது. இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும். அதற்காக போர் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும். யாழில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குதான் சரி இல்லை. ஆவா என்ற பாதாள குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித்தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்கு சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம். சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” -என்றார் பொன்சேகா. https://oruvan.com/land-acquisition-in-the-north-fonseka-warns/
-
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்! -சாவித்திரி கண்ணன் குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்; கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள் காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்லை. அப்படி எண்ணாததாலேயே இன்று நாமெல்லாம் அவர்களை இன்று நம் முன்னோடிகளாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், அரசியலில் வாரிசை அதிகாரப்படுத்த நினைத்தவர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படாமல், அவமானம் கொள்ளாமல் இருந்ததில்லை. இந்திராகாந்தி; சஞ்சய்காந்தியை தன் வாரிசாக கொண்டு வந்தார். காங்கிரசின் கொள்கை, கோட்பாடு, லட்சியங்கள் பற்றி ஏதும் அறியாத சஞ்சய்காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களை அவமானப்படுத்தினார். அரசாங்க அதிகாரிகளை இஷ்டம் போல ஆட்டுவித்தார். குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தக் கூறி நிர்பந்தித்ததில் கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஆபரேஷன்கள் செய்யப்பட்டு நாடு அல்லோகலப்பட்டது. இந்திராகாந்தி தன் மகனி கட்டுபடுத்த முடியாமல் திணறினார். இறுதியில் விமான சாகஸத்தில் சஞ்சய்காந்தி மர்ம மரணம் அடைந்தார். கருணாநிதி; தமிழ்நாட்டில் கருணாநிதி முதன்முதலாக தன் மகன் மு.க முத்துவை அரசியல் வாரிசாக்க நினைத்து முதலில் மக்கள் செல்வாக்கை பெற அவரை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் நடிக்க வைத்தார். மு.க.முத்து அரசியல் மேடைகளில் பிரச்சார பாடகராக வளம் வந்தார். ஆயினும் அவரால் அரசியலை உள்வாங்க முடியவில்லை. ஆனால், குடிப்பழக்கம் அவரை உள்வாங்கி வீணாகிப் போனார். அடுத்ததாக மு.க.ஸ்டாலினை வாரிசாக்க படிபடியாய் தயாராக்கினார். எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ,அமைச்சர், துணை முதல்வர் என தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார். ஆனபோதிலும், பொது நலன் சார்ந்த நாட்டம், தீமையை எதிர்க்கும் போர்குணம் ஏதுமற்றவராகவே ஸ்டாலின் உருவானார். மகனுக்கு போட்டியாக இருப்பவர்களாகக் கருதியவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரையிலும் தன் மகனிடம் பொறுப்பை நம்பி ஒப்படைக்க முடியாதவராகவே கருணாநிதி இருந்தார். இதனால் அப்பாவிற்கும் – பிள்ளைக்கும் பல உள் மோதல்கள் நடந்தன. எனினும், அதிகாரத்தை கடைசி வரை தன்னிடமே வைத்திருந்ததால் மற்றவர்கள் அனுதாபப்படக் கூடிய நிலைமை உருவாகாமல் தப்பித்துக் கொண்டார். மு.க.ஸ்டாலின்; வாரிசு அரசியலால் அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் சுயசிந்தனையோ, ஆளுமைப் பண்போ இல்லாத ஒரு பொம்மை முதலமைச்சர் என்று பெயர் எடுத்துள்ளார். அதிகாரிகளின் விருப்பப்படி ஆட்சி நிர்வாகம் கொண்டு செலுத்தப்படுகிறது. அரசியலில் தலைமைப் பண்பு இல்லாத காரணத்தால் மத்திய பாஜகவிடம் மறைமுகமாக மண்டியிட்டு அவர்களின் மக்கள் விரோத கல்வி கொள்கை, தொழிலாளர் கொள்கை, சுற்றுச் சூழல் கொள்கை, விவசாயக் கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் காலத்தில் தான் பாஜக என்ற இந்துத்துவ மதவெறிக் கட்சி தமிழகத்தில் காலூன்றும் வலிமை பெற்றது. சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த தன் மகன் உதயநிதியை இளைஞர் அணித் தலைவராக்கினார். எம்.எல்.ஏ ஆக்கினார்.பிறகு அமைச்சர் ஆக்கிய ஸ்டாலின். அவசரகதியில் துணை முதல்வராகவும் ஆக்கிவிட்டார். நிர்வாகத்தின் அரிச்சுவடி கூட அறிய முடியாதவாராகவே இன்று வரை அதிகாரத்தில் வளைய வருகிறார் உதயநிதி. உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதற்காக கல்வித் துறை அமைச்சராக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கல்வித் துறை சீரழிந்து கொண்டுள்ளது. இவர்களின் நண்பர் வகையறாக்களான சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன், ரித்தீஸ் ஆகியோர் பெரும் கோடீஸ்வரர்களாகி அமலாக்கத் துறையால் தேடப்பட்டனர். பெரியார், அண்ணா, ,திராவிடக இயக்கத்தின் பகுத்தறிவு, சுய மரியாதை, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவைக் குறித்த அடிப்படை புரிதல்களின்றி தீடீரென்று உச்சத்திற்கு உயர்த்தப்பட்ட உதயநிதி, கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் அறவே இல்லாதவராக உள்ளார். இது வரையிலான தமிழக ஆட்சிகளிலேயே மிக மோசமான நிர்வாகத்தை கொண்ட நிர்வாகமாக ஸ்டாலின் – உதயநிதி நிர்வாகம் உள்ளது. டாக்டர் ராமதாஸ்; மிக முற்போக்கானவராகவும், நேர்மையானவராகவும் தோற்றம் காட்டியவர் ராமதாஸ். வன்னிய குல அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் சேர்ந்து இவரை முன்னிறுத்தி தலைவராக்கினார்கள். முதலில், ’தேர்தல் பாதை, திருடர் பாதை’என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி, ’’நானும், என் குடும்பமும் அரசியலில் ஒரு போதும் அதிகார பதவிக்கு வரமாட்டோம்’’ என்றார். பிறகு, தான் இது போலக் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறி தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கினார். மகன் ஊழல் முறைகேடுகளில் திளைத்து கோடிக்கோடியாய் பொதுப் பணத்தை சுருட்டியதை பார்த்து புளகாங்கிதம் அடைந்து கட்சியின் தலைவர் பொறுப்பையும் தாரை வார்த்தார். கட்சித் தலைமை பொறுப்பை தந்தவுடன் மகன் அன்புமணி, தந்தையை ’சற்று ஒதுங்கி நில்லுங்கள்’ என கட்டளை இட்டார். மகனுக்கு நிர்வாகம் போதாது. உழைக்கும் பண்பும் இல்லை. கட்சியினரை அரவணைத்து செல்லும் பக்குவமும் இல்லை என்ற யதார்த்தங்களை அறிந்தும், மிகப் பெரிய பொறுப்பை தந்தார். இது கட்சியை குடும்ப சொத்தாக கருதியதால் ஏற்பட்ட மனநிலையாகும். இப்படி சில வருடங்கள் கடந்த நிலையில் மகன் அப்பனிடமே தன் தில்லாலங்கடி வேலைகளை செய்து திடுக்கிடச் செய்தார். குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட அனுசரித்து அரவணைத்து போக முடியாத அளவுக்கு மூர்க்கமான மகனால், தானே பாதிக்கப்பட்டார் ராமதாஸ். நிறுவனரான அப்பாவிற்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ ராமதாஸுக்கு அதிகாரமில்லை என தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், அன்புமணி. தந்தை ராமதாஸுக்கு வயதானதால், எப்படியும் மகனிடம் மட்டுமே அதிகரத்தை தந்துவிட்டுச் செல்பவராகவும் இருப்பதால், தங்களின் எதிர்காலம் கருதி கட்சி நிர்வாகிகளில் 80 சதவிகிதமனோர் மகன் அன்புமணி பக்கம் சென்றுவிட்டனர். மருமகள் பிடியில் மகன் சென்றுவிட்ட நிலையில், தனி பெரும் தலைவராக வலம் வந்த ராமதாஸ், தற்போது கையறு நிலையில் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டார். பாவம், இன்னும் என்னென்ன அவமானங்களை மகனிடம் பெற உள்ளாரோ..? இதனால், இந்தக் கட்சியும் மக்களிடம் மிகவும் செல்வாக்கு இழந்துவிட்டது. வைகோ; வாரிசு அரசியலுக்கு சவால் விட்டதால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவரான வைகோ, பெரும் தொண்டர்கள் பலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு சிறப்பாக குரல் கொடுத்தார். அறிவும், ஆற்றலும், சலிக்காத உழைப்பும், போராட்ட குணமும் நிறைந்தவரான வைகோ, காலப் போக்கில் கட்சிக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்காமல் தளபதிகள் பலரை பறிகொடுத்தார். தனது வயது மூப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக தளர்வுற்ற வைகோ, கட்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக தன் மகனை உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். ஆரம்பம் தொடங்கி கொள்கை பற்றுள்ளவராக மகனை கட்சிக்குள் கொண்டு வந்து பயிற்சி தந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவரை பெரிய வியாபாரியாக்கி தான் அழகு பார்த்திருந்தார். அதனால் வைகோ மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததை எதிர்த்து பல கொள்கைப் பற்றாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். மகன் துரை வைகோவோ, கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அப்பாவை கலந்து ஆலோசித்து செயல்படுவதில்லை. கம்பெனி உரிமையாளராக ஊழியர்களை வேலை வாங்கி பழக்கப்பட்ட மகன் துரை வையாபுரி கட்சிக்குள்ளும் மூத்த நிர்வாகிகளை அவ்விதமே நடத்த தலைபட்டு பிரச்சினைகள் வெடித்தன. தற்போது இருக்கும் திமுக கூட்டணிக்குள் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் துரைவைகோ. அப்பாவின் கட்டளையை மீறி,சமீபத்திய பொதுக் குழுவில் திமுகவிற்கு எதிராக முன்னணி நிர்வாகிகளை காரசாரமாக பேசவைத்துவிட்டார் துரைவைகோ. இதனால் மிகவும் அதிருப்தியுற்ற ஸ்டாலின், இது நாள் வரை மதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருபவர்களை ஊக்கப்படுத்தி கட்சியில் இணைக்காமல் தவிர்த்து வந்த நிலையை மாற்றி, மதிமுக அதிருப்தியாளர்களை அள்ளி கட்சிக்குள் இணைக்க மும்முரமாக செயல்பட கட்சியினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மிக பலவீனமாக இருக்கும் மதிமுக இன்னும் பலவீனப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், துரைவைகோ பாஜக தரப்பில் கூட்டணி காண பேச்சுவார்த்தையை மறைமுகமாக செய்து வருவதை எண்ணி அதிர்ச்சி அடைந்தாலும் ஏதும், செய்ய இயலாதவராக கையறு நிலையில் உள்ளார், அப்பா வைகோ. கடைசி காலத்தில் தன் மகனின் கட்சியை கரைத்து பாஜகவில் ஐக்கியமாக்கிவிடுவார்களே அந்தப் பாவிகள்… என மனம் பதறினாலும் அவரால் என்ன செய்ய இயலும்? மேற்படி மூன்று கட்சிகளும் குடும்ப அரசியலால் பலம் இழந்துள்ளதும், தேக்க நிலையில் திணறுவதும், எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உழல்வதும் தெளிவு. கொள்கை வழிப் பயணிப்போர், குடும்ப வாரிசு அரசியல் எனும் படுபாதாள சகதிக்குள் சிக்குவதில்லை. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21988/failure-of-succession-politics/
-
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்! 27 Jun 2025, 5:02 PM சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது. சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய நிபந்தனைகள் விவரம்! ஓவர் பிரேக் 60 வினாடிகள்! ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு அணி ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும். எச்சில் தடவினாலும்… பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. கிரீஸை தொடாமல் ரன் ஓடினால்… வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும். DRS முறையீடு! Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும். No Ball கேட்ச்! No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும். ஒரு ODI இன்னிங்ஸில் புதிய பந்துகள்… ஒரு ODI இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்களுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஃபீல்டிங் அணி மீதமுள்ள ஓவர்களுக்கு பந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். பவுண்டரி கேட்சுகள் பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது. டி20 பவர்பிளே மாற்றம்! பிரத்யேகமாக டி20 ஆட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே விக்கெட் கேட்டால்… சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார். எல்பிடபிள்யூ ஆ? அல்லது ரன் அவுட் ஆ? ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது. மாற்று வீரருக்கு பேட்டிங், பவுலிங் செய்யலாம்! அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார். https://minnambalam.com/icc-set-new-rules-in-cricket/#google_vignette
-
ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து!
ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து! 28 Jun 2025, 8:00 AM 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள். மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது” என்று தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, “தமிழின் கலைப் பெருமை. இந்தியாவின் சினிமா பாரம்பரியம். உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் கமல்ஹாசன். ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார். https://minnambalam.com/kamal-haasan-invited-to-join-oscars-committee/#google_vignette
-
பிரிவினையை உருவாக்குபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஸ்டாலின் விமர்சனம்!
பிரிவினையை உருவாக்குபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஸ்டாலின் விமர்சனம்! 28 Jun 2025, 11:18 AM ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில், மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், “திமுக அரசின் திட்டங்களும் சாதனைகளும்! அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவையும் பாசத்தையும் சீரழிக்கலாமா என எதிரிகளும் ஏடுகளும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் 75 ஆண்டுகால இயக்கத்தின் வளர்ச்சி காட்டுகிறது. ‘மக்களிடம் செல்’ என்று அண்ணா அறிவுறுத்திய வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் மொழி – இன – சமுதாய முன்னேற்றத்திற்கான இயக்கமாகக் கட்சியை வளர்த்தெடுத்தார். அண்ணாவும் கலைஞரும் வகுத்த பாதையில் நம் பயணம் தொடர்கிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் தொண்டர்கள் முடங்கிக் கிடக்காமல், ‘ஒன்றிணைவோம் வா’ என்று களப்பணியாற்றிய நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தார்கள். அதனால்தான் கட்சியின் மீதான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன். 68 ஆயிரம் டிஜிட்டல் வீரர்கள்! தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார். இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். மாநிலக் கட்சியான திமுக இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள். திமுகவின் பாதை தெளிவானது! இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன். தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் – அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/stalin-criticize-there-is-no-space-for-religious-diversity/
-
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது June 26, 2025 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும் உளநல ஆலோசகர் மற்றும் உளச்சமூகப்பணியாளர் நிலவனுடன் இன்றைய சந்திப்பை மேற்கொள்கின்றேன். அமுதன் :- இன்று இனப்படுகொலை என்று பேசப்படும் இந்த வார்த்தையின் விளக்கத்தை தருவீர்களா அத்தோடு இலங்கையில் இனப் படுகொலையானது எவ்விதம் நடந்தேறியது? நிலவன்:- ரஃபேல் லெம்கின்னின் கூற்றுப்படி, ‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல. அதன் மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகக் கொல்லும் போது மட்டுமே இப்படி அர்த்தம் கொள்ள முடியும். மாறாக இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது’. ‘இத்தகைய செயற்பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்’ என இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சாசனம் மேலும் தெளிவு படுத்துகிறது. ஆகவே இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொது அடையாளத்தையும் அவர்களை முழுமையாகவோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகிறது. உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இன அழிப்பினை அரங்கேற்றி இருக்கின்றன. இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனம் இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை பின்வருமாறு வரையறை செய்கின்றது: ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது. ஒரு இனத்திற்கு அல்லது குழுமத்திற்கு வலிந்தும் திட்டுமிட்டும் பாரிய உடல் – உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது. இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காத வகையில் (இன விருத்தியைத் தடுக்கும் வகையில்) கொடுமைகளைப் புரிதல். பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்தல். இன அழிப்பு நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை என்பதை எடுத்துரைக்கும் சட்ட அடிப்படையிலான விளக்கங்களாக மேற்கூறப்பட்டவை உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாதச் சிங்களத் தலைமைகள் பாரிய எண்ணிக்கையில் நிகழ்த்திய படுகொலைகளை மட்டும் குறிப்பதல்ல இனப்படுகொலை. திட்டமிடப்பட்ட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்காக கட்டமைக்கப்பட்ட வகையில்தமிழர்களின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குரிய மூலோபாயத் திட்டங்களை வகுத்து, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது. கல்லறைகள், நூலகங்கள், சுவடிக்காப்பகங்கள், மற்றும் இன அழிப்பின் பௌதீக சாட்சியங்கள் உட்பட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படு கொலைதான். ஈழத்தில் தமிழின அழிப்பு என்பது காலனித்துவக் காலம் (1948 வரை): இலங்கை ஒற்றையலகு அரசாகப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப் பட்டு, சிங்களப் பெரும்பான்மையின் ஆட்சி நிறுவப்படுகிறது. இலங்கையில் இனவாதத்தின் தொடக்கம். தமிழ் மக்களின் வாழ்வில் பல ஆண்டுகளாக மாறி மாறி பதவிக்கு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து இன்றுவரை நடாத்தப்பட்டே வருகின்றது. 1956, 1958, 1961, 1974, 1979, 1981, ஜுலை 1983,1989,1990, 1995, 1997, 2000, 2009 என தமிழர்களுக்கு எதிராக வெடித்த இனக்கலவரங்கள் மற்றும் இன அழிப்பு போர் கலகத்தில் ஈடுப்பட்டிருந்த சிங்களவர்களுக்கு வெளிப்படையாக தமிழர்களை சித்திரவதை, பழிவாங்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது. இலங்கைத் தீவில் 2006 மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பின் கொடுரயுத்தம் உக்கிரமடைந்து தமிழர் என்ற இனம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஒரு சிறிதும் இன்றி முற்றிலுமாக துடைத்தழிப்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்பட்டு 2008 -2009 மே மாதம் வரை நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொன்றழித்து, பாரிய இனப் படுகொலையை அரங்கேற்றின. வேதியல் ஆயுதங்கள் (Chemical Weapons), நச்சுக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (Cluster bombs) என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து நாசகார ஆயுதங்களையும் பேரினவாத அரசு போரில் பயன் படுத்தியுள்ளது. இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல் இணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து பெற்ற புள்ளி விபரங்களில் இருந்து பெறப்பட்டதையும் ஆதாரங்களுடன் நிறுவித்திருந்தார்.மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் இந்த கூற்று, போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவாதங்களுக்கு உட்பட்டது. அமுதன் :- இலங்கையில் இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் எவ்வாறு மேற்கொண்டது என்பதை விளங்கப் படுத்தவும் ? நிலவன்:- சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் மீதான அழிப்பினை மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்துள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தாயகப் பிரதேசங்களை அபகரித்து சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதன் மூலம், தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கத்தை வேரூன்றச் செய்வதே பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கம். தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட குடியேற்றம் கருவியாய் கைக் கொள்ளப்பட்டது. 1949 இல் மலையகத் தமிழர் குடியுரிமைப் பறிப்பிலிருந்து இன்றைய முட்கம்பி வேலி வதைமுகாம்கள் வரை தொடர்கின்றது பௌத்த – சிங்கள இன மேலாதிக்கத்தின் தமிழின அழிப்பு. 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ (Sinhala Only) சட்டம் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமையைப் பறித்தது. மொழியுரிமை பறிப்பு என்பது இனத்துவ அடையாளம், சமூக பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் சூட்சும் கொண்டதாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக் கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலை ஆகும். 1970இல் கல்வித் தரப்படுத்தல் சட்டமாக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப் பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழக உள்நுழைவுக்கு தெரிவாக முடியுமென்ற பாரபட்ச நிபந்தனை கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. 1972 ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்பட்டது. 1981 இல் நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பென்பது, தமிழ்க் கல்விச் சமூகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட இன அழிப்பு நோக்கம் கொண்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளை அடுத்து தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் – கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும், வடக்கில் – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் அடுத்தடுத்து எண்ணிலடங்காத படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. 1985 இல் திருகோணமலையில் ‘நிலாவெளிப் படுகொலைகள்’, அதே ஆண்டு ‘கந்தளாய்ப் படுகொலை’, 1990 இல் ‘திரியாய்ப் படுகொலை’, 1987 இலும் 1991 இலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மட்டக்களப்பு ‘கொக்கட்டிச்சோலைப் படுகொலை’, 1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை, அதே ஆண்டு நடந்தேறிய ‘வந்தாறுமூலைப் படுகொலை’, ‘சத்துருக்கொண்டான் படுகொலை’, 1990 இல் அம்பாறையில் ‘வீரமுனைப் படுகொலை’ இவ்வாறு படுகொலைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோரமான முறையில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. இப்படியே இன்னும் இந்தப் பட்டியல் நீண்டு செல்லுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை. வடக்கும் கிழக்கும் இணைந்த தொடர்ச்சியுடைய நிலப்பரப்பைக் கொண்ட தமிழர் தாயகம் கோட்பாட்டை உடைப்பதும், வடக்கு – கிழக்கு மக்கள் தம்மை ஒரு தேசமாக (Nation) அடையாளப்படுத்துவதை முறியடிப்பதுமே சிங்களத்தின் மூலோபாயம். நிர்வாகம் மற்றும் நில அமைவிடம் ஆகிய இரு நிலைகளிலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிப்பதே இனவாதத்தின் இலக்கு ஒரு இனத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் சட்ட ஏற்பாடுகளே . சிறிலங்கா அரசு, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாரிய மனிதப் பேரவலங்களையும், சமூகச் சிதைவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவம் எனலாம். அமுதன் :-ஈழதேசத்தில் சிங்களப் பேரினவாதம் மேற் கொண்ட இனவழிப்பு பற்றிய விபரங்களை பதிவு செய்ய முடியுமா? நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையானது. முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் எனப் பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மை இடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும். நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு கால கட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இனச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பை தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப் படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம் தமிழர்களை திட்டமிட்டு பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன் புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய் வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதைகளையும் வன்கொடுமைகளையும் அந்நேரத்தில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள். அமுதன் :- இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்ட அங்கீகாரம் தமிழர்களை வஞ்சிக்கும் வகையில் எவ்வாறு செயற்படுகிறது? நிலவன்:- பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற பெயரில் தமிழர்களைக் கைது செய்வது இலங்கை அரசின் சட்ட அங்கீகாரம் கொண்ட நடைமுறையாகும். இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிபதியின் முன் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 1979-ல் கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, கைது செய்யப்படும் எந்த நபரையும் மூன்று மாதத்திற்கு நீதிபதியிடமும் தெரிவிக்காமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகும் அமைச்சரின் பரிந்துரைப்படி, காவலில் வைத்திருப்பதை புதுப்பிக்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. சட்ட சரத்துக்கள் மூலம் மனித வதைகளைச் செய்ய பயங்கரவாதத் தடைச் சட்டம் இடமளிக்கின்றது. நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படாமலும், சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமலும் அவர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார்கள். ஒரே ஒருவர் மீது மட்டுமே குறிப்பிட்ட குற்றம் செய்ததாக வழக்கு போடப்பட்டு, மற்ற யாவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரணைக் கைதிகளாகவே சித்திரவதை செய்திருக்கின்றனர். ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறைகளைக் கடந்து தமிழர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்கி கொலைகளையும் செய்யும் துணிவினைக் கொடுத்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக நடைபெறும் கொடுமைகள் சாட்சிகளற்று இரகசியமான முறையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. கடத்தல்கள், தடுப்புகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இந்த மீறல்கள் எவ்வளவு முறையான மற்றும் பரவலானவை என்பதை நிரூபிக்கின்றன. இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவங்கள் தானே . சித்திரவதைகளையும், ஆட்கடத்தல்களையும் உண்மையில் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரச படைக் கட்டமைப்பில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு, அரசியல் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். அமுதன் :- இலங்கையில் நடந்தேறிய தமிழினச் சித்திரவதைகளை சில தரவுகளின் ஊடாக குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையோடு .முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றிகொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பானது திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும். நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இன சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பைத் தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப்படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம் தமிழர் மீதான திட்டமிட்ட பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்குமூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதையும் வன்கொடுமைகளையும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள். அமுதன் :- இலங்கை ஆட்சியாளர்களாகிய அரசியல் வாதிகளின் கபடமுகமான செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கிறது…? நிலவன்:- இலங்கை இராணுவத்தரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை புரிந்தது என்று புகைப்பட ஆதாரங்கள் வெளிவருகின்றன. ஆனால் நீதி கிடைக்குமா? தமிழர்களை 77 ஆண்டுகளாக ஒடுக்கிய சிங்கள-பௌத்த வன்முறையின் அதே கட்ட மைப்புகளினால் தான் இன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சர்வதேசத்திடம் ஒரு முகம், தமிழ் மக்களிடம் ஒரு முகம், இராணுவத்திடம் ஒரு முகம் என்று பல்வேறு முகங்களை இலங்கையின் ஆட்சியாளர்கள் நன்றாகவே கடைப்பிடித்து வருகின்றார்கள். இலங்கை அரசு ஒருபோதும் வன்முறையற்றதாக இருந்தது இல்லை. இனப்படுகொலை, மற்றும் இன அழிப்பு உச்ச கட்டத்தை அடைந்த போர் வரை தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழிப்பதன் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டு செயற் படுத்தப்பட்டது. 2009 இல் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை வேண்டுமென்றே மறைக்கும்செயல். ஆனால் இது ஒரு சம்பவம் அல்ல – இது பல தசாப்தங்களாக அரசால் மேற் கொள்ளப்பட்ட இன அழிப்புகளின் உச்சக்கட்டமாகும். தமிழர்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமாக சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் இலங்கை அரசு தனது முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தி பொதுமக்களைப் படுகொலை செய்தது. பாதுகாப்பு வலையங்கள் கொலைக் களங்களாக மாறியது. 165,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர். பொதுமக்களுக்கான “பாது காப்பு வலையங்கள்” என்று அழைக்கப் பட்ட வலையங்களுக்குள் மக்கள் கூட்டமாக அழைத்துச் செல்லப் பட்டனர், ஆனால் அதன் மீது இலங்கை இராணுவம் இடை விடாமல் குண்டுகளை வீசியது. மருத்துவமனைகள் மீது ஷெல் வீசப்பட்டன, பெண்கள் பாலியல் வன் கொடுமை செய்யப் பட்டனர், சரணடைந்த தமிழர்கள் நேரடியாகச் சுட்டுக் கொல்லப் பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் பாரிய கிடங்குக்குள்… இசைப்பிரியா தொடங்கி முக்கிய தளபதிகளை நிர்வாணமாக்கி கொலை செய்த காட்சிகள் தற்போதும் சமூகவலைத்தளங்களின் உலாவருகின்றன. இலங்கையின் இராணுவ முப்படையினரும் அரசு மற்றும் சர்வதேச சமூகத்தால் பாதுகாக்கப்பட்ட இனவழிப்பு குற்றவாளிகள். 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் முழு உயர் கட்டளை மையங்களும் தமிழ் இனவழிப்புக் குற்றவாளிகளால் ஆனது, அவர்கள் பொறுப்புக் கூறப்பட வேண்டும். உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டனர். புகைப்பட ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் அதற்கு சான்றாகும். சாவடைந்தவர்களை பாலியல் வன்புணர்வு செய்யுது தமிழ் பெண்களை இழிவுபடுத்தவும் அவர்களின் அடையாளத்தை அழிக்கவும் இராணுவம் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதை அவை உறுதிப் படுத்துகின்றன. இலங்கை அரசு எப்படியும் திட்டமிட்ட அழிப்புக் குற்றத்தை ஒப்பு கொள்ளாது. மழுப்பும் நடவடிக்கையையே கையாண்டு கொண்டே காலப்பயணத்தில் மறக்கடிக்க வைக்கும் திசை திருப்பும் செயலிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது. தமிழ் இனப்படு கொலையை மறுக்க, சிதைக்க மற்றும் நிராகரிக்க மேற்கொள்ளப்படும் இலங்கையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பொறுப்புக் கூறலைத் தவிர்ப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தற்போதைய அடக்குமுறை நிலையைப் பேணுவதற்கும் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக் கையாகும். சர்வதே நாடுகள் இலங்கையை ஒரு இனப்படுகொலை நாடாக அல்லாமல் ஒரு கூட்டாளியாகக் கருதி வருகிறது. இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கவும் அவர்களின் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவும் காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவும் மனிதப் புதைகுழிகள் குறித்து சுயாதீன விசாரணைகளை அனுமதிக்கவும் இலங்கை அரசிற்கும் இராணுவத்திற்கும அழுத்தம் கொடுக்காது சித்திரவதை முகாம்களை கொத்தடிமை மையங்களாகவும் சிங்கள அரசு நடத்தலாம் என்பதற்குச் சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கின்றது. ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும். இதையெல்லாம் சர்வதேச சமூகம் செய்யதவறுமாயின் இத்தகைய மனித உரிமை மீறல்களை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும் விதமாகவே சர்வதேசத்தின் செயல்பாடுகள் அமையும் நிலமையாகக் காட்டும். அமுதன் :- இலங்கையில் சித்திரவதைகள் இதுவரை காலமும் எவ்வாறு அரங்கேறின என்பதன் உண்மைத் தன்மை என்ன ? நிலவன்:- கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகளின்போது சித்திர வதைக்கு உள்ளாகின்றனர். விசாரணைகளின்போது நிர்வாணமாக்குதல், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் தாக்குதல், தடி,தடித்த வயர் போன்றவற்றால் அடித்தல், சூடான இரும்புக்கம்பி, எரியும் சிகரட்டால் சுடுதல், மின் அழுத்தியால் சுடுதல், சிகரெட்டுகள், சூடாக்கப்பட்ட உருக்குக் கம்பியால் உடல்களில் சூடு வைத்தல். விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல்களில் கட்டித் தூக்குதல், மூட்டுக்கள் வலிக்குமாறு கைகளைப் பின்புறமாகக் கட்டி தூக்குதல்,தலைகீழாகக் கட்டித்தொங்க வைத்து அடித்தல், பெற்றோல் நிறம்பிய பொலித்தீன் பையால் தலையை மூடி மூச்சுத் திணறவைத்தல், தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணறவைத்தல் போன்ற சித்திர வதைகள் பிரபலியமானவை. பெண் சந்தேக நபர்களுக்கு பாலியல் வதைக் கூட்டு வன்புணர்வு என்பனவும் ஆண்களுக்கு பாலியல் வதைகள் பாலுறுப்புக்களில் புண்விளைவித்தல் விபரிப்பதற்கு முடியாத அளவுக்கு இடம் பெற்றுள்ளது. நெகிழிப் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைப்பது, பூட்சுக் காலினால் மிதிப்பது, சிகரெட்டினால் உடலின் அனைத்து இடங்களிலும் சூடு வைப்பது, கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவது மற்றும் இரும்புக் கம்பிகளை பிறப்புறுப்பில் திணிப்பது, , ஆண்குறிகளில் உலோக வயர்கள் திணித்தல் , பல சமயங்களில் ஐஸ்கட்டிகள், மதுபான போத்தல் முகப்புக்களை மல வாசல் துவாரத்தினுள் புகுத்ததல் . ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் வாய்வழி வன்புணர்ச்சி, அந்தரங்க உறுப்புகளைச் சிதைப்பது என நினைத்துப் பார்க்கவே அச்சம் தரும் வகையில் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். இதைவிடக் குறடுகளைப் பயன்படுத்தி கால்நகங்களைப் பிடுங்குதல், நகத்தின் சதைக்கு இடையில் ஊசிகள் புகுத்தல் யோனி துவாரத்தில் மிளாகாய்த்தூள் தடவுதல் , மூச்சுத் திணறித்துடிக்கும் அளவுக்கு நீரில் அமிழ்த்தல் . மின்சார வயர்களை உடல் மீது வைத்துக் குறிப்பிட்ட நபர் மரணிக்கும் அளவு மின்சாரத்தை அவர்களது உடலில் பாய்ச்சுதல் , பட்டினிபோடுதல், சிகிச்சையளிக்காமல் தவிக்கவிடுதல், இருட்டறையில் போடுதல் போன்றவைகளும் இவற்றுள் அடங்கும். மிகவும் பயங்கரமான பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆண், பெண் என்ற வேறுப்பாடு இன்றி நடந்துள்ளது. மலவாசலிலும் யோனியிலும், ஆண்குறியிலும் செய்யப்பட்ட சித்திரவதைகள் மரணவலியுடையது என வார்த்தைகளினால் சொல்ல முடியாத சித்திரவதைக்கு உள்ளாகிய பலர் குறிபிட்டார்கள் என்பது உண்மையின் சான்றே. அமுதன் :- தடுப்பு முகாம்களின் பரவலாக்கமும் பாதிப்பும் கைதானவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை விளைவித்தன? நிலவன்:- இலங்கையில் தடுப்பு முகாம்கள் வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி, இலங்கை முழுவதிலும் உள்ள அத்தனை இராணுவ முகாம்களும், ஏதோ ஒரு காலகட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் முகாம்களாகவே இருந்தன. ஒவ்வொரு இராணுவ முகாமிலும் பின்புறமாக ஒரு இடத்தில் விசாரணைக் கூடம் இருக்கும். கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைத்திருக்கும் இடங்களிலும் இருக்கும். இது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. 25இற்கும் மேற்பட்ட தடைமுகாம்களும் 10 இரகசிய முகாம்களும், பூசா, போஹம்பர, வெலிக்கட, 04ம் மாடி, 06ம் மாடி, மிகுந்தலை இராணுவ முகாம் போன்ற இடங்களிலும் அச்சுவேலி – அச்செழு இராணுவ முகாம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஜோசப் இராணுவ முகாம், வவுனியா குறிசுட்ட குளத்திற்கு அருகில் இருந்த ஒரு இராணுவ தளம், அருகில் இருந்த இன்னொரு கடற்படைத்தளம், தற்காலிக தடுப்பு நிலையங்களாகத் தொழிற்பட்ட புனர்வாழ்வு நிலையங்களான – செட்டிக்குளம் முகாம், வவுனியாவில் ஒரு முன்னைய தொழில் நுட்பக் கல்லூரி, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, பம்பைமடுக் கல்லூரி, வவுனியா பூந்தோட்ட முகாம், முன்னைய கல்வி நிறுவனம் , வவுனியா இராம நாதன் (மெனிக்பாம்) இரும்பைக் குளம் மகளிர் கல்லூரி, திருகோணமலை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, புதுக்கடை பொலிஸ் நிலையம், கொழும்பு, கல்முனை, கடவத்தை, பொலிஸ் நிலையம், கொழும்பு குற்றவியல் புலனாய்வு திணைக்கள நிலையம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம், பூசா தடுப்புமுகாம் (காலி). அடங்கலாக 48 சித்திரவதை முகாம்கள் அமைந்திருந்தன. இதுபோன்று இன்னும் பல இடங்கயில் இரகசியமாக இருந்துள்ளது. வெலிக்கடயில் மாத்திரம் 1000- 1500மேற்பட்ட போராளிகள் அடைக்கப் பட்டிருந்தார்கள். விசரனையில் இருந்து தரம் பிரிக்கப் பட்டவர்கள் பொலனறுவை, திருகோணமலை இரகசிய தடுப்புமுகாம், மிகுந்தலை, யோசப் முகாமிற்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, இராணுவத்தினரின் தமிழ் ஆயுத ஒட்டுக் குழுக்களும் தமிழ் ஆயுத அரசியல் கட்சிகளில் உள்ள ஒருசிலரும் பயன்படுத்தப் பட்டார்கள். ஈ.பி.டி.பி கருணா, பிள்ளையான் குழுவில் உள்ளவர்களும் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் பணியிலும் விசாரணைகளையும் சித்திரவதை செய்வதிலும் ஈடுபட்டடார்கள். வட்டுவாகல் பாலம், ஓமந்தை, தாண்டிக்குளம், மெனிக்பாம், இடம் பெயந்த மக்கள் தங்கவைக்கப்பட்ட பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம் உட்பட ஏனைய தடுப்பு முகாம்களிலும் இராணுவத்திற்கு ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்ட இவ்வியக்கங்கள் தலையாட்டிகளாகக்கூட காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் செயற்பட்டார்கள். அமுதன் :- இலங்கையில் நடந்தேறிய படுகொலைகள் சித்திரவதைகள் சம்பந்தமான சில தடயசான்று பகிரும் விடயங்களைப் பகிர முடியுமா? நிலவன்:- சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஜோசப்முகாமின் தளபதியாகத் தற்போது மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின் தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ஐந்தாவதுP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல் கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார். இதன்போதே பல போராளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார். பின்னர் கட்டளைத்தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க, ரணசிங்க ஆராய்ச்சிகே, கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது பலருக்குத் தெரியாத விடையமாக உள்ளது. இலங்கை இராணுவம், இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வுப் பிரிவு, தேசியப் புலனாய்வு பணியகம், குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), அரசுடன் இணைந்த தழிழர்களைப் படுகொலை செய்த மக்கள் ஜனநாயகக் கட்சி Eelam People’s Democratic Party (EPDP), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் The People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), ( 2004 காலப்பகுதியில் கருணா குழு பிள்ளையான் குழு, அரசாங்க முகவர்களும் இணைந்து செய்த சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத் தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை அரங்கேற்றினார்கள். அமுதன் :- சித்திரவதை முகாம்களில் பாதிக்கப் பட்டவரின் வார்த்தைகள் எவ்வாறானதாக இருந்தது? நிலவன்:- இலங்கையில் உள்ள முகாமிலிருந்து சித்திர வதைக்கு ஆளான போராளிகள் சொற்களால் வடிக்க முடியாத கொடூரங்களை அனுபவித்துள்ளார்கள். பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களாக போராளிகள் காணப் படுகின்றார்கள். சித்திரவதை முகாம்களில் இருந்த பலர் மன நோய்களிளால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். வதை முகாம்களில் இருந்து தப்பியுள்ளவர்களில் பலர் இன்று வடக்கு கிழக்கில் உள்ள மனநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் ஒவ்வொன்றும் சட்டத்திற்கு புறம்பானது, மனித உரிமைகளை கேள்விக்கு உட் படுத்துவதாகும். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வது, இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ள முன்பே தயாரிக்கப்பட்ட சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த குற்ற வாக்குமூலங்கள், மற்றும் சில கோப்புகள் அவர்கள் கைவசம் இருந்திருக்கின்றன. விசாரணை மேற் கொள்கிறேன் எனும் பெயரில் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள். ஒவ்வொரு நாளும் இவர்களிடம் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து, உண்மையைச் சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவர்களின் மீது பாலியல் ரீதியான வன்புணர்வுகளை செய்து, மரணத்தை விட வேதனையான இழிசெயல்களை இலங்கையின் விசாரணை அதிகார வெறியர்கள் நிகழ்த்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட தகவல்களையோ, அல்லது குற்ற வாக்குமூலத்தையோ பெறுவதற்காகச் சித்திரவதைப் படுத்தப்பட்ட கைதிகளின் நிலை கொடூரமாக இருந்தது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களிலும் வெள்ளைத் தாள்களிலும் சித்திரவதை செய்து கையொப்பமும் வாங்கியுள்ளனர். போராளிகளை வைத்து புலிகளுக்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், போராளிகளிடமிருந்து பல பெய்யான தகவல்களை தாங்களே வழங்கி அத் தகவல்களைப் போராளிகளிடம் இருந்து பெறுவது போன்று காணொளிப் பதிவுகளைப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வோர் நாளும் தமது விசாரணையின் போது போதிய தகவல்களை வழங்காதோரை அல்லது தாங்கள் சொல்லும் விடயங்களைச் செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகமான சித்திரவதைகளைச் செய்து கொலை செய்வதும் இந்த முகாம் அதிகாரிகளின் பொறுப்பாக இருந்துள்ளது. அமுதன் :- இலங்கையின் தீவிரவாதத் தடுப்புச் சட்டமும் பாலியல் கொடுமைகளும் எவ்வாறு இணைந்து காணப்பட்டது…? நீங்கள் சந்தித்த பாலியல் சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட துணைநாடிகள் தொடர்பில் கூற முடியுமா ? நிலவன்:- சுற்றிவளைப்புகளிலும், தேடுதல்களிலும், கொல்லப்பட்டவர்கள் போக, பிடித்துச் செல்லப் பட்டவர்களில் பல ஆயிரம் பேர் மீண்டு வரவேயில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் மீண்டு வந்தனர் என்பதில் சந்தேகமில்லை.மீண்டு வந்தவர்களும், மீளவராதவர்களும், இராணுவ முகாம்களில் விசாரணை என்ற பெயரில், சித்திரவதை செய்யப்பட்டனர். இராணுவ விசாரணை என்பது சித்திரவதையோடு இணைந்த ஒன்றுதான். இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு முகாம்களின் பின்னாலும் சித்திரவதைகள் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கும். சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தித் தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்தக் கொடுமைகள் அனைத்தும் நிரூபிக்கின்றன. சம்பவம் 1 சித்திரவதைக்கு உட்படுத்த பட்டவரின் பெயரை மற்றும் அவர் வாழ்விடத்தை குறிப்பிடுவது தொழில் நிலைக்குப் பொருத்தமற்றது இருப்பினும் சில பாதிக்கப்பட்டவர்களின் வயது பால் சம்பவங்கள் போன்றவற்றை குறிப்பிடுகின்றேன். ஒரு தமிழ் இளைஞன் 23வயது நிறைந்தவன் இலங்கை விசேட புலனாய்வு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு 25 நாள் ரகசிய தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் விடுதலை செய்யப் பட்டான். இராணுவ ரகசிய முகாமில் இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் “ உப தமிழ் கொட்டியா (நீ தமிழ் புலி ) , தமிழ் பள்ளா ( தமிழ் நாய்” , “தமிழ் பறையர்”, இன்னும் சிங்கள மொழியில் வழமையில் உள்ள துர்வசனங்களை அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மூடிய அறை கதவினைத் திறக்கும் போது சற்று வெளிச்சம் உள்தெரியும். அறை முழுவதும் இரத்த வடையாகவே இருந்தது. அதே நேரம் பெற்ரோல் மணம் மூக்கை அரித்துக் கொண்டிருந்தது சுவர்கள் முழுவதும் இரத்தக் கறைகள் சிதறிக் கிடந்தன. அடிப்பதற்கான உலோகக்கம்பிகள், எசிலோன் பைப்புகள் பொல்லுகள், நீரில் அமிழ்த்தி சித்திரவதை செய்வதற்கான தண்ணீர் நிறைத்த பீப்பாய்கள், என எல்லாமே இருந்தன. கைகளைப் பின்புறாமாக கட்டினார்கள். கண்கள் கட்டப் பட்டேன். ஆடையை அவிழ்த்து ஒட்டுத் துணியும் இல்லாமல் என்னை அம்மணம் ஆக்கினார்கள். சிங்கள அதிகார வெறியர்கள் என்மீது சிறுநீரைக் கழித்தார்கள். தொங்கவிடும் கம்பத்தில் தலை கீழாகத் தொங்க விடப்படும் போது அவர்கள் சொல்வதை செய்ய மறுக்கும் போதும் தலைப் பகுதியை அந்த தண்ணீர் பீப்பாக்கள் உள்ளே விட்டார்கள். தலை கீழாகத் தொங்க விடப்பட்டு ஒருவர் பின் ஒருவராக என் வாயினில் அவர்களின் ஆணுறுப்பைத் திணித்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை. தாகம் எடுக்க தண்ணீர் கேட்டபோது அவர்களின் சிறுநீரை என்னை வலுக் கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள். உணவுகள் தரையில் கொட்டப்பட்டு நாய் போல நக்கிச் சாப்பிட சொன்னார்கள். தரையில் இருந்த இரத்தக்கறைகள் இருந்த இடத்தினையும் நக்க வைத்தார்கள். இப்படி மனரீதியாகப் பலவீனப்பட்டு அவர்கள் சற்தேகத்தின் பேரில் என்மேல் சுமத்தும் பெய்யான குற்றச் சாட்டால் வாழ்க்கை வெறுத்துப்போய் வலிய சித்திரவதைகளை விட அவற்றை ஏற்றுக் கொள்லாம் என்னும் மன நிலைக்கு தள்ளி இருந்தார்கள். கடவுளிடம் மரணத்தைக் கெஞ்சிக் கேட்கிற அளவு அங்கு கொடுரமான சித்திரவதைகள் நடந்தது என அவன் கூறினான். அந்த செயலுக்குப் பின் இனித்தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக நாளந்தம் சித்திரவதைகளின் பின்னர் ஏற்பட்ட மனவடு நோயில் பாதிக்கப்பட்ட ஒருவனாக உளவள நிலையத்திற்கு வந்தான். “உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும். சம்பவம் 2 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் சந்தேகத்தின் பேரில் கைது செய்து 35 நாட்கள் வதை முகாமில் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி 25 வயது இளைஞன் கூறுகையில். புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக இந்த வெறியர்கள் சந்தேகித்தார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஒரு இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய்கள் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்கள் சொல்வதைச் செய்ய சிங்கள அதிகார வெறியர்கள் ஆண் பாலுறுப்புகளை கடுமையாக தாக்கினார்கள். பிடித்து நசுக்கினார்கள். கம்புகளை கொண்டு ஆண்குறிகளைத் தாக்கினார்கள். ஓரினச்சேர்கைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தினார்கள். ஒருவர் பின் ஒருவராக அவன் வாயினில் அவர்களின் ஆணுறுப்பை திணித்துள்ளனர். வாய்மூலமான பாலுறவுக்கு உட்படுத்திக் கொண்டே இருந்திருந்தார்கள். விசாரணைகளின் போது நிர்வாணமாகவே வைக்கப்பட்டேன். அவர்கள் கூட்டாக பல முறை செய்த வன் கொடுமைகளை வார்த்தைகளினால் சொல்லமுடியாது. கொடுமை என்ன வென்றால் வாய் மற்றும் மலவாசல் வழிய அவர்கள் உறவு கொண்டார்கள். தாங்க முடியாமல் நகர்ந்ததால் சிகரெட்டால் வெறித்தனமாகப் பின் முதுகில் சூடு வைத்தார்கள். மலவாசல் வழியாக பெரிய இரும்புக் கம்பி மற்றும் போத்தலைச் செருகினார்கள். பின்புறத்திலிருந்து இரத்தம் வழிந்து. அது கொடுமையான வலியை ஏற்படுத்தியது. மயங்கி விழுந்து கண் விழித்த போது உட்காரக்கூட முடியாத அளவிற்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கொட்டியது. சிங்கள அதிகார மிருகங்கள் மயக்க நிலையில் ஓரினச் சேர்க்கை வன்புணர்ச்சி செய்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை. நிர்வாணமான உடல்களைப் படம் பிடித்து, ஒளிப்பதிவு செய்தார்கள். அந்த செயலுக்குப் பின் இனி, தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக அந்த இளைஞன் உளவளத் துணைக்கு வந்திருந்தான். இது ஒரு வகையில் உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதைகளாக மட்டும்தானே இருக்க முடியும். சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே பயங்கதவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்த கொடுமைகள் அனைத்தும் நிரூபிக்கின்றன. கொடூர சித்திர வதையினால் பல மரணமான சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளன. சம்பவம் 3 வதை முகாமில் 3வருடங்கள் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி 24 வயது இளைஞன் கூறுகையில். 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் அன்று வட்டுவாகலில் பாலம் நோக்கி இராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் ஊன்று கோல் உதவியுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு சென்று கொண்டிருக்கும் போது இராணுவத்தின் துப்பாக்கி ரவைகளுக்கு மக்கள் இரையாகிக் கொண்டிருந்தார்கள். வட்டுவாகல் பாலம் நோக்கிச் செல்லும் வழிகளில் ஓரே பிணங்களும், மணங்களும் இலையானின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரின் தோட்டாக்களும் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தன. சன நெரிசலில் குழந்தைகள் முதியவர்கள் என்னைப் போன்று இயலாதவர்கள் என்று பலரும் இருந்தனர். என்னால் கையில் ஊன்று கோல் ஊன்றிச் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. காரணம் எனது உள்ளங் கைகள் காயமாகி விட்டன. வலிக்கு மேல் வலிகளைப் பொறுத்து கொண்டு வட்டுவாகல் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். மீண்டும் சில காட்சிகள் அப்பாலத்துக்கு அருகாமையில் இராணுவத்தினரின் கண்ணி வெடியில் சிலர் சிக்கித் தங்கள் அவயங்களையும் உயிரையும் இழந்து பரிதாபநிலையை அடைந்தனர். இராணுவத்தினரால் சந்தேகிக்கப் படுபவர்கள் மீதான சித்திரவதைகள் அங்கிருந்தே அரங்கேறத் தொடங்கின. பாலத்தினூடாகச் செல்லும் போது பிணங்கள் மிதந்தன. தாகம் நேர்ந்தது பிணங்கள் மிதந்த தண்ணீரையும் அருந்தினோம். நாங்கள் இராணுவத்தினரால் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டோம். அங்கு இரு நாட்கள் தங்க வைக்கப்பட்டோம். பசி தாகம் எம்மை ஆட்கொண்டது. குப்பைத் தொட்டியில் சாப்பாடு போடுவது போல் இராணுவத்தினர் சாப்பாடு தண்ணீர் போன்றவற்றைகக் கொண்டு வந்து எறிவார்கள். அதில் கூடுதலான பகுதி தரையில் விழுந்து யாருக்கும் உதவாமலே போனது. மலசலகூட வசதிகள் இருக்க வில்லை, பல தொற்று நோய்கள் பரவின. ஆண், பெண் என்று இல்லாமல் அனைவரும் வெளியே கழிவுகளைக் கழிக்க வேண்டிய ஒரு நிலைக்கு உள்ளாகினோம். இனவெறி பிடித்த சிங்களப் படையினர் வெள்ளைக்கொடியோடு வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் அவர்களுடன் வந்த போராளிகளையும் எல்லோரது கண் முன்னிலையிலும் அழைத்து சென்று அடித்தும், சித்திரவதை செய்தும், சுட்டுக் கொள்ளப் பட்டார்கள். பெண் போராளிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 20ம் நாள் அன்று இராணுவத்தின் தனியான வெள்ளை வேன் மற்றும் பஸ்களின் மூலம் போராளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஏற்றப்பட்டனர். என்னையும் அத்துடன் சிலரையும் பஸ்சில் ஏற்றி ஓமந்தைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் ஓமந்தையில் தடுத்து வைத்தனர். அங்கு போராளிகள் வேறு மக்கள் வேறு உதவியாளர்கள் வேறு என்று பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு பஸ்ஸில் என்னுடன் 60ற்குமேல் போராளிகள் ஏற்றப்பட்டு ஓமந்தை மத்திய கல்லூரியின் தடுப்புக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு எங்களைத் தரையில் இருக்க வைத்து எங்களுடைய விசாரணை ஆரம்ப கட்டமாகவே அங்கிருந்து தொடங்கியது. பின்னர் எங்களுடைய தனிப்பட்ட அறிக்கைகள் எல்லாம் முடிந்தவுடன் பாடசாலையின் வகுப்பறை ஒன்றில் 20-25 பேர் வரையில் அடைக்கப்பட்டோம். அந்த நேரம் எங்களுக்குச் சரியான உடைகள் கூட இருக்கவில்லை. குளித்து விட்டு அதே உடையைக் கழுவி உலர வைத்த பின் அணிந்தோம். அடிக்கடி விசாரணைகள், மிரட்டல்கள், சித்திரவதைகள், என்று நாளுக்கு நாள் அனுபவித்தோம். விசாரணையின் போது நீர் ஒரு போராளியா ? எங்கு ஆயுதங்கள் இருக்கின்றதன என்று எல்லாம் கேட்கப்பட்டு நாங்கள் மறுக்கின்ற வேளையில் தடியடி, உடலை அம்மணப் படுத்தல், மிளகாய் சாக்கில் தலையை விட்டுத் தண்ணீரை ஊற்றுதல், உதைத்தல், எச்சில் துப்புதல், அறைதல் போன்ற செயற்பாடுகள் இன்னும் சொல்ல முடியாத உடல் உள பாலியல் ரீதியான சித்திரவதைகளையும் அரங்கேற்றினார்கள். பலரின் பால் நிலை உறுப்புக்களையும் சேதப் படுத்தினார்கள். இவ்வாறான சித்திர வதைகளுக்கு எவரும் விதிவிலக்கல்ல. அனைவரும் அங்கே நரக வாயிலைக் கண்டோம். பின்னர் கை அடையாளங்கள் எடுக்கப்பட்டு போராளிகள் என்று முத்திரை குத்தப் பட்டோம். எவ்வாறாவது வெளியில் போக வேண்டும் எனும் நோக்கம் எம்முள் இருந்தது. அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், பெரும்பாலும் ஊர் அடங்கிப் போன பின்னர், இரவு அங்கு விசாரணைகள் தொடங்கும், நள்ளிரவு தாண்டியும் அந்த விசாரணைகள் தொடரும். இது தான் வடக்கு கிழக்கில் இருந்த இராணுவ முகாம்களில் நாளாந்தம் நடந்தது. இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டவர்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள், எவ்வாறு விசாரணை செய்யப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப் பட்டனர். அமுதன் :- புனர்வாழ்வு, தடுப்பு முகாம்களில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலதை ஆதாரப் படுத்த முடியுமா தங்களால்? நிலவன்:- விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்ற ஆண் மற்றும் பெண்கள் சட்டத்துக்கு முரணாக சிறிய சுதந்திரம் கூட இன்றி தடுத்து வைக்கப் பட்டார்கள். எனினும் இந்த செயற்பாடுகளை புனர்வாழ்வு என்ற பெயரில் அரசாங்கம் மறைத்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகளை இராணுவப் பேச்சாளர் 2010ஆம் ஆண்டு பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார். அவர்களில் பெரும் பாலானவர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் ஆகையால் அவர்களைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓரிரு தினத்திலேயே… இராணுவப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதைச் சிறை முகாம்களை அமைத்து அங்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு கடுமையான சித்திரவதைகளைச் செய்துவரும் சிங்களக் காடைய ராணுவத்தினர் 2011-03-22 அன்று ஒரு போராளியின் மரணத்துக்கு காரணமாகவோ அல்லது இந்த கொலையையே திட்டமிட்டு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற போராளியே தான் சிகிச்சை பெற்று வந்திருந்த அறையில் 22.03.2009 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை மர்மமான முறையில் மரணித்திருந்தார். வெலிக்கந்தை சிறை முகாமில் ஒரு போராளி மர்மமான முறையில் மரணம்?அல்லது கொலையா? என்ற சந்தேகம் இன்றுவரை நிலவுகின்றது. வவுனியா 4ம் கட்டை தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வந்த இந்தப் பயிற்சி முகாமில் 2009 ஆம் ஆண்டு மே இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலர் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு மாதம் வரை இருந்து பின்னர் சுகவீனம் காரணமாக புலிகளினால் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த இளைஞர் ஓமந்தை முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாமில் பல மாதங்களாக இருந்து வந்த இளைஞர் ஒருவர் 21.04.2011 திங்கட்கிழமை அன்று காலையில் தற்கொலை செய்து கொண்டார். கிளிநொச்சி மாவட்டம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசீர்வாதம் நியூஸ்டன் என்ற இவ்விளைஞர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துத்தார்கள். ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை, என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவரது இரண்டு சகோதரிகள் தமது கணவன்மாரை இழந்திருந்தனர். இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப் பட்டது. தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பத் தலைவர். மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது40) என்ற குடும்பத் தலைவர். 12.11.2014 இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆயுததாரிகள் அவரை அழைத்து சென்று சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து படையினரிடம் சரணடைந்த இவர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப் பட்டார். அன்று முதல் உயிரிழக்கும் வரை சுயதொழில் ஈடுபட்டு வந்தார். வடக்கில் நீண்டகாலமாக வன்முறைச் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டமையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வன்மையாகக் கண்டித்திருந்தார். இச்சம்பவமானது கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதையே எடுத்துக்காட்டியுள்ளது. இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப்போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் இடம்பெற்று வருகின்றன. 2015ம் ஆண்டுக்கானவரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி தனது உரையின் போது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதாக கூறினார். ஆனால், அதன் பின்னர் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஏனைய போராளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாது போயுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறன. இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றானர். புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்தும் படைத் தரப்பினரால் கண்காணிக்கப்பட்டே வருகின்றார்கள். அமுதன் :- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விடயத்தில் அரசு மற்றும் ஐ.நாவின் செயற்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நிலவன்:- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் எனக் கூறும் எண்ணிகையில் பல குழப்பங்கள் காணப்படுகிறது. சமூகத்தில் இணைக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற 12195 மேற்பட்டவர்கள் எனக் கூறுகின்றது அவர்கள் பெயர் விபரங்களை அரசு வெளியிட வேண்டும். அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதென்பது இலகுவானதொரு காரியமல்ல. இதனை உரிய முறையில் கையாள வேண்டும். வெறும் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் போதுமானதொன்றாகக் கூற முடியாது. இதற்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவும் வேண்டும். அவர்களுக்கு சிறப்பான உளவியல் மருத்துவம் சார்ந்த மருத்துவ பரிசோதனையும், அவர்களின் உளவியல் நிலைமைக்கு ஏற்ற வகையிலான உளவியல் மருத்துவமும் அவசியம். இதனைச் செய்யத் தவறினால் சமூகம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் ஏற்படலாம் என்பதில் எதுவித அய்யமுமில்லை. அரசப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தங்களுக்கு விஷ ஊசி அல்லது ரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டது எனப் போராளிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போராளிகள் குறித்த ஒரு வெளிப்படையான செயற்பாடு இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாகக் கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அமுதன் :- அன்று தொடங்கி இன்றுவரை… போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச செயற்பாடுகள் தமி இனப் பரப்பில் எவ்வாறு காணப்படுகிறது? நிலவன்:- சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தமிழர்கள் முன்னெடுத்த அரசியல் அகிம்சை ஆயுதம் தாங்கிய போர் வரலாற்றில் தனித்துவமானது . இதற்குச் சிங்கள அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனப் பெயர் சூட்டி, ஓர் இனத்தையே கருவறுப்பதுதான் சிங்களத்தின் திட்டமாக 2009 முள்ளிவாய்க்கால் அரசப் படு கொலைகளுக்குப் பின்னர் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனம் கொண்டது. போரின் போது மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை யுத்தத்தில் பாதிப்பேரை மொத்தமாகக் கொன்றும், மீதிப்பேரை சிறுகச் சிறுகக் கொல்லும் சிங்கள இனப் பயங்கர வாதத்தின் கோரப்பசி இன்னமும் அடங்க வில்லை. இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமில் இருந்த சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளைக் கூறிட வார்த்தைகள் இல்லை. சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளைத் தடுப்பு முகாம்களில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களினாலும் உடல் உளப் பாலியல் என மிகக் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தார்கள். அறிவியலின் பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி இன்று சித்திரவதையை உடலியல் சார்பிலிருந்து உளவியலுக்கு நகர்தியுள்ளது. இதற்காக மருத்துவ ரீதியில் இரசாயன கலப்புக்களை உடலினுள் செலுத்தி சித்திரவதை செய்யும் முறைமையினை காட்டலாம். போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என்ற பெயரில் பல சித்திரவதை முகாம்கள் நிறுவப்பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.. போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகளில் இதுவரை 250ற்கு மேல் பலர் புற்றுநோய்க் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். இராணுவ புலனாய்வு பிரிவினரால் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். .சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். உளவியல் பாதிப்புக்கும் உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகள் கொண்ட நடைமுறைக்கும். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். இறுதி முச்சுவரை விடுதலைக்கான தியாகம் என்ற கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டிருந்தார்கள். அந்த கொள்கைக்காகத் தமது உயிர்களையே ஆயுதமாக்குவதற்கு பக்குவப் படுத்தப் பட்டவரகள். யுத்தத் ஆயுத மௌனிப்பின் போது அங்கேயே செத்திருக்கலாம் ஏன் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் அல்லது இராணுவத்தின் தடுப்புக்குள் சென்றோம் என்று தாழ்வுச்சிக்கல் சார்ந்த மன உணர்வுகளில் ஆழ்ந்து ஆற்றாத் பெருந் துயருடன் வாழ்கிறார்கள்.இந்த ஊசி மருந்து விடயம் என்பது மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லதொரு விவகாரமாகும். அவர்களுக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உளவியல் பாதிப்பினை இன்றும் ஏற்படுத்தி உள்ளது. அமுதன் :- புனர்வாழ்வு பெற்ற பலரின் இன்றைய வாழ்வின் மனநிலையினை உங்கள் பார்வையில் குறிப்பிட முடியுமா? நிலவன்:- இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. நான்காம்கட்ட ஈழப்போரி சரணடைந்தவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் சிறையிலேயே இருக்கின்றனர் சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், ஆனால் அந்த சித்திரவதையின் பின்னர் உயிர் தப்பிப் பிழைத்தவர்களை மனரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. தடுப்பு முகாம்களில் எந்தக் காரணமும் இல்லாமல் பலரை நீண்ட காலமாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதை. பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், காவல்கள், விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட போரளிகளில் பலர் மர்மமான முறையில் சாவடைகின்றார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சாவுகளை தமிழ் அரசியல் குழுக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆய்வுகள், போன்றன மேற்கொள்ள வேண்டும். பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும் தமிழர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் சிங்கள பவுத்த பேரின வாதத்தோடு தமிழர்கள் இனியும் இணைந்து வாழ முடியாது என்பதை சர்வதேச சமூகம் இனியாவது ஒத்துக் கொண்டு, தமிழர்களுக்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்வதற்கு தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். அமுதன் :- பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் நிவர்த்தி செய்ய வேண்டிய சில வாழ்வியல் நிலைப் பாடுகள் பற்றி கூறுங்கள்? நிலவன்:- இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ குறித்து உளவளம் பாதிக்கப்பட்டு உளக் காயங்களுக்கு உள்ளானோர் உரிய சிகிச்சை பராமரிப்பின்றி சமூகத்தில் வாழ்கின்றார்கள். உளப்பாதிப்பு பற்றிய அரச கட்டுமானங்களின் தேவைகள் மதிப்பீடு உணரப்பட்டு சமூக நிறுவன உருவாக்கங்கள் போதியளவு நடைபெறவில்லை. உள வளத்துணையுடன் கூடிய சமூக பொருளாதர பராமரிப்பு என்பன போதிய அளவில் மேற் கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு . உளக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற அறிவு சமூகத்தில் இல்லை. இலங்கையில் நடந்த இந்த சித்திரவதைகள் எல்லாம் சட்ட ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்தவிதமான நீதி, நியாயங்களும் கிடைக்காமலேயே போய்விட்டது. அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும் தொடர்ந்து தமிழராய் ஒன்றிணைந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும் நன்றி நிலவன்… நன்றி அமுதன்… https://www.uyirpu.com/?p=19620
-
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப் June 28, 2025 1:01 pm இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார். எவ்வாறாயினும் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் குறித்து ட்ரம்ப் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. https://oruvan.com/ceasefire-between-israel-and-hamas-within-a-week-trump/
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது, ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? குழந்தையை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார். ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள். திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை. மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது. இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றஞ்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும். எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரைக்கும் விற்பனையாகிறது. சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு சுசித்ரா கூறினார். https://akkinikkunchu.com/?p=330504
-
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்!
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்ப்! கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கு வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூறி அந்நாட்டை ட்ரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=330637
-
போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு!
போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு! adminJune 28, 2025 பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/217444/
-
வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை June 27, 2025 3:50 pm தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் என்பன ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரிப்பது எனவும் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தில் இதனைச் செயற்படுத்துவது என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://oruvan.com/action-to-control-stray-dogs-in-the-northern-province/
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் June 27, 2025 8:59 am முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபர்கள் முகாம்களை நடத்தி வந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் பிரிவின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/
-
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு June 27, 2025 இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார். இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார். தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார். நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/un-high-commissioner-for-human-rights-expresses-support-for-sri-lankas-efforts/
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம் 27 JUN, 2025 | 10:42 AM (எம்.நியூட்டன்) எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து நெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் நீதியுடன் நியாயமாக நடக்க வேண்டும் அவர்கள் இடுகின்ற தலைப்புகள் சொந்த வாழ்க்கையில் ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதால் நியாயமாக தலைப்பிட்டு செய்தியை வெளியிடுங்கள். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் இது பொதுவானது. செம்மணி அணையா விளக்கு போராட்டம் தொடர்பில் இளைஞர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் முதன் முதலில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களை பங்கேற்க அழைத்தது நான். அதன் அடிப்படையில் போராட்டத்திலும் பங்கேற்றோம். அதன்போது வேலன் சுவாமி விமர்சித்தார். அதில் என்னை பேச அழைத்தார்கள். நான் திருப்பி ஏதாவது பேசி இருந்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் குழம்பிவிடும் என்பதால் அதனை நான் செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்துக்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி மக்களோடு மக்களாக நாங்கள் நின்று இருந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக நாங்கள் வெளியேறினோம். நான் வெளியேறி வீதியில் சென்று வாகனத்தில் ஏற முற்பட்டபோது சில குரல்கள் எனக்கு எதிராக எழுந்தது. அதனை நான் அசட்டை செய்யவில்லை. பின்னால் சில பேர் சத்தமிட்டனர். அந்த காணொளியை நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது. எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம். அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள். காணொளியை பார்த்தால் தெரியும். நான் சலனம் இல்லாமல் நடந்து சென்றேன். நான் ஓடவில்லை. தமிழ் அரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான் அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை. ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும். எனது பாட்டில் நான் வெளியேறி சென்றேன். இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை. நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று இருந்தோம். உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம். வீதியில் சென்றால் நாய்கள் குலைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன் அவ்வாறே அதுவும் நடந்தது. அது பரவாயில்லை. ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது. காணாமல் போன விடயம் தொடர்பாக நான் பல விடயங்களை செய்திருக்கிறேன். அதை நான் ஒன்றும் சொன்னதில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விடயங்களை நான் கையாண்டு இருக்கிறேன். கிரிசாந்தியின் கொலை நடந்த சமயத்தில் ரஜிணி என்ற பெண் பிள்ளையை ராணுவம் கொலை செய்து மலக்குளியில் போட்ட விடயத்தை மிகவும் கடுமையான ராணுவ தளபதி என்று சொல்லக்கூடிய ஜானக பெரேராவோடு முரண்பட்டு நின்று சடலத்தை மலக்குழியில் இருந்து எடுத்து இரண்டு ராணுவத்தினரை சேவை இடைநிறுத்தம் செய்து வைத்தேன். தயவுசெய்து அந்த காலத்தில் பத்திரிகைகளை பார்த்தால் தெரியும். அவ்வாறு பல விடயங்களை செய்து இருக்கிறேன் இதனை பிதற்றிக் கொண்டு நான் திரிவதில்லை. அந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கும் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குழுவாக வந்து அந்த இடத்தில் புனித தன்மையும் புனித நோக்கத்தை சிதைக்கிற காழ்ப்புணர்ச்சியான செயல் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இவர்கள் இவ்வாறு அசிங்கமாக அவமானமாக செயல்பட்டால் இனிமேல் இவ்வாறான போராட்டங்களில் மக்களை பங்கு வைக்காமல் வைப்பதற்கான நோக்கம் உண்டா என்ற சந்தேகம் உண்டு. எனக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சிக்கும் அவர்களுடன் முரண்பாடு உண்டு. அதை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/218597
-
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
செம்மணி போராட்டத்திற்குள் புகுந்த விசமிகள் General27 June 2025 செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/408516/foreigners-who-entered-the-chemmani-struggle#google_vignette
-
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ முருகானந்தன் தவம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார் தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கட்சிகளின் தாய் கட்சி என போற்றப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஆட்சியை, மேயர், பிரதி மேயர், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை தாங்களே கைப்பற்ற வேண்டுமென்ற அதிகார ஆசையினால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் புறக்கணித்து,அவர்களின் சில நிபந்தனைகளை நிராகரித்து விட்டு பேரினவாதிகளினதும் துரோகிகளினதும் ஆதரவோடு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றது. பேரினவாதக் கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கன் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழினத் துரோகி என இவர்களினாலேயே குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றே வடக்கின் சபைகளைக் கைப்பற்றி தமிழரசுக் கட்சி கட்சி மிகப்பெரும் காட்டிக்கொடுப்பையும் துரோகத் தனத்தையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் செய்துள்ளது. வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க நாம் ஆதரவளிப்போம். அதேவேளை, இரண்டாவது இடத்தில் நாம் இருந்தால் எமக்குப் பிரதி மேயர், அல்லது பிரதி தவிசாளர் பதவி தரவேண்டும் என்ற நிபந்தனையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்திருந்தது. அத்துடன், ஒரு சில சபைகளில் தமக்கு பிரதி தவிசாளர் பதவி வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் (சங்கு) கோரியிருந்தது. ஆனால், யாழ். மாநகரசபையை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் எந்தவொரு ஆதரவுமின்றி, முழுமையாகக் கைப்பற்றத் தமிழரசு திட்டமிட்டது. அதனால் அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினுடனும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு ஆதரவு கோரியது. யாழ். மாநகரசபையில் மொத்தமாக 45 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில், 2025 மே 6இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1,0370, வாக்குகள் பெற்று 13, ஆசனங்களையும் தமிழ்த் தேசிய பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 9,124 வாக்குகள் பெற்று, 12, ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி, 7,702, வாக்குகள் பெற்று 10 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, 3,567 வாக்குகள் பெற்று 4, ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, 3,076, வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி, 587 வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி, 464, வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்கும் கட்சி 23 ஆசனங்களை பெறவேண்டும். தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக நிறுத்திய மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளைப் பெற்று யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஈ.பி.டி.பியின் 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 1 ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 ஆசனம் என்பவற்றை பெற்றே 19 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 23 ஆசனங்கள் தேவையென்பதனால், யாழ். மாநகரசபையில் சிறுபான்மை ஆதரவுடனேயே தமிழரசு ஆட்சியமைத்துள்ளது. அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறுத்திய மேயர் வேட்பாளர் -தமிழ் மக்கள் பேரவை-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது. தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மேயர் பதவியைப் பெற கஜேந்திரகுமார் விரும்பியிருந்தால் தேசிய மக்கள் சக்தியின் 10 ஆசனங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களைப் பெற்று 26 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், அவர் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அதனைச் செய்யவில்லை. ஆனால், ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருந்தால் தமிழரசு நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் கோரியிருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிரிகளே தவிர, பேரினவாதக் கட்சிகளோ துரோகிக் கட்சிகளோ எதிரிகள் கிடையாது. தமிழரசின் தலைமைகள் எப்போதும் பேரினவாத கட்சிகளின் தலைவர்கள், எஜமானர்களின் விசுவாசிகளாக, அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். அதன் இறுதி உதாரணமாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகத் தமிழ் தேசியக் கட்சிகள் அரியநேத்திரனை நிறுத்தியபோது, அவரை தோற்கடிக்க முழு மூச்சாக இந்த தலைவர்கள் சிலர் செயற்பட்டதுடன், அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதெனவும் கூறியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே பகிரங்கமாகவே ஆதரித்திருந்தார்கள். இவ்வாறாக யாழ். மாநகரசபையை எதிரிகளோடும் துரோகிகளோடும் சேர்ந்து கைப்பற்றிய தமிழரசு இங்கு தமக்குப் போட்டியாக வேட்பாளரை நிறுத்திய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சகுனித்தனமாக அக்கட்சியின் இரு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பெற்று வாக்களிப்பில் பங்கேற்க விடாது செய்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சதி செய்தது. சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. வாக்குகள் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2,959 வாக்குகளையும் தமிழரசுத் தரப்பு 2,594 வாக்குகளையும் பெற்றன. இதன்படியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகித்தது. இச்சபையில், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (சங்கு) இரு ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்து ஓரணியாகி தமது ஆசனங்களின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரித்தது. இதேவேளை, தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியிடம் ஆட்சியைக் கைப்பற்ற ஆதரவைக் கோரியிருந்தது. இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம் 8 ஆசனங்களும் தமிழரசு, ஈ.பி.டி.பி. வசம் 7 ஆசனங்களும் இருந்தன. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தால் முன்னிலை வகித்த நிலையில்தான் இவர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்ற அதிகார ஆசை மற்றும் பழிவாங்கும் வெறியில் அவசர அவசரமாக 11ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் வழக்குப் போடப்பட்டது. 13ஆம் திகதி மாலை சபை கூடவிருந்த நிலையில், அன்று காலை அந்த உறுப்பினருக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.தமிழரசு - ஈ.பி.டி.பி தரப்புக்கும் ஆசனங்கள் 7ஆக இருந்தன. இதற்கிடையில் ஏற்கனவே, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பின் மற்றொரு பெண் உறுப்பினரை சபைக்குப் போகக்கூடாது என்று தமிழரசின் எடுபிடிகள் தொலைபேசி மூலம் பலதடவைகள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் உண்டு. அவரையும் சபைக்கு வரவிடாமல் தடுத்து தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்பு 7:6 என்ற ஆசனங்கள் அடிப்படையில் சபையைக் கைப்பற்றுவதே சதித் திட்டமாகவிருந்தது. ஆனாலும், அந்த பெண் உறுப்பினர் சபைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை -தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கும் தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்புக்குமிடையில் தவிசாளர் - உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இரு தரப்புகளும் தலா 7 வாக்குகளைப் பெற்று சமனிலை பெற்றன. இதனால் திருவுளச்சீட்டு (குலுக்கல் முறை) முறை மூலம் இரு பதவிகளுக்கும் தெரிவு இடம்பெற்றது. இரு தடவைகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வெற்றி கிடைத்தது. இதற்கமைய தமிழரசின் சதியை, சகுனித்தனத்தை அதிர்ஷ்டத்தின் மூலம் முறியடித்து சாவகச்சேரி நகர சபையைத் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடு-அனுரவோடு-வீடு-வீணையோடு/91-359994
-
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்!
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்! கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் கூறியுள்ளது. எனவே, விண்ணப்பதார் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://www.samakalam.com/குழந்தை-பெற்றுக்கொள்ளும/
-
கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கெஹெலிய வழக்கின் சாட்சியாளராக ரணில், டக்ளஸ் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்! adminJune 26, 2025 தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, ரொஷான் ரணசிங்க ஆகியோர் அடங்குவர். மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவும் சாட்சிகளாக உள்ளனர். அரசு தரப்பு இவ்வழக்கு தொடர்பாக சுமார் 300 வழக்குப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரணைக்கு நியமிக்குமாறு சட்டமா அதிபர் முன்னர் தலைமை நீதிபதியிடம் கோரியிருந்தார். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன, அமலி ரணவீர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி நியமித்துள்ளார். சட்டமா அதிபர் அந்த நீதிபதிகள் அமர்வு முன் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பித்துள்ளார். மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டோப்சிமேப் எனப்படும் மருந்து அல்லாத பொருட்களின் 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கியதன் ஊடாக அரச நிதியில் 1.444 பில்லியன் ரூபாயை மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்தப் பணத்தை குற்றவியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் 13 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்திரகுப்தாவுக்கு விளக்கமறியல். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த பின்னர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா கைது செய்யப்பட்டார் https://globaltamilnews.net/2025/217386/
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா? adminJune 26, 2025 யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது. அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது சமீபத்திய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறுகிறார். அரசுப் பணியில் இருந்து முதலில் பதவி விலகாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாக ஹேரத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரியா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர். அவர் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் அமர அல்லது வாக்களிக்க தகுதியற்றவர். அரசியலமைப்பின் 66(இ) பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினரின் இருக்கை காலியாகிவிட்டதாக வாதிட்டார். நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை பாராளுமன்ற உறுப்பினர் செயல்படுவதைத் தடுக்க இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன , எம்.பி. ராமநாதன் இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். அரசியலமைப்பின் பிரகாரம், பொது அதிகாரிகள் மீதான ஒழுங்கு அதிகாரம் பொது சேவை ஆணையத்திடம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மீது மேற்பார்வை செய்யும் அதிகாரம் பொது சேவை ஆணையம் உள்ளது. இது ஒரு தெளிவான மோதலுக்கு வழிவகுக்கிறதுஇ ஏனெனில் இடைநீக்கத்திற்கு உள்ளான எம்.பி. ராமநாதன் இப்போது தனது சொந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைப்பின் மேற்பார்வையில் உள்ளார். எம்.பி. ராமநாதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளுக்காக 2025 ஜூலை 2, வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரருக்காக வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சார்பாக சேனானி தயாரத்ன, நிஷாதி விக்ரமசிங்க ஆகியோர் ஆஜரானார்கள். https://globaltamilnews.net/2025/217393/
-
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை - காணாமல் போனவர்களும் செம்மணியும்
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை காணாமல் போனவர்களும் செம்மணியும் Jun 26, 2025 - 12:57 0 355 "அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா " சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான். புதைக்கப்பட்ட இடம் செம்மணி! இதை சொன்னது வேறு யாருமல்ல சோமரத்ன ! சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி . 1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுகிறது. அந்தக் காலத்தில் குறுகிய காலப்பகுதியில் யாழ்பாணத்தில் அண்ணளவாக 600 பேர் காணாமல் போகிறார்கள். அப்போது அரியாலையில் இருந்த இராணுவ முகாமில் கடமையில் இருந்தவர்தான் சோமரத்ன. செம்மணியில் உள்ள இராணுவ காவலரணில் சோமரத்ன தலைமையில் இருந்த குழு கிருசாந்தியை ரேப் பண்ணி கொலை செய்தது உறுதியான போது சோமரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் போது சோமரத்ன , தான் கிருசாந்தியை கொலை செய்யவில்லை , மேலதிகாரிகள் கொலை செய்த பின் உடலை புதைத்தது மட்டுமே நான் என்கிறார் சோமரத்ன. அத்தோடு மட்டும் நிறுத்தவில்லை சோமரத்ன ! என்னால் மேலதிகாரிகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொலை செய்து புதைத்த இடத்தை செம்மணியில் அடையாளம் காட்ட முடியும் என்று நீதிமன்றில் நீதிபதிகள் முன்பே சொல்கிறார். 1997 - 1998 காலம். சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலம். சோமரத்ன இப்படி ஒரு பெரிய குண்டை நீதிமன்றின் முன் தூக்கி போட்டது ஜுலை 1998 ஆனாலும் அது பெரிய அதிர்வலைகளை நீதிமன்றில் ஏற்படுத்தவில்லை. மாறாக அப்போது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை உருவாக்கி இருந்த கிருசாந்தி கொலைவழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்குவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள். சோமரத்ன சொன்ன 600 பேர் புதைக்கப்பட்ட செம்மணி அமைதியாக உறங்கிய படி இருந்தது. சோமரத்னவிடம் வாக்குமூலம் பெறவேண்டும் செம்மணியில் அகழ்வு நடக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பலமான அழுத்தம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஒரு வருடகாலம் ஓடியது. அந்தக்காலம் பகுதியில் விசாரணைக்காக மூன்று நீதிபதிகள் வெவ்வேறு காலங்களில் நியமிக்கப்பட்டார்கள். மூன்று நீதிபதிகளும் அச்சுறுத்தல் என்று அந்த விசாரணையை மேற்கொள்வதில் இருந்து விலகி விட்டார்கள். கடைசியாக மன்னாரில் வேலை செய்த ஒரு நீதிபதி வழக்கை பொறுப்பெடுத்தார் யாழ்ப்பாண நீதிமன்றம் கூடியது. சோமரத்ன கொழும்பு சிறையில் இருந்து யாழ்பாணம் அழைத்து வரப்பட்டார். கொழும்பில் இருந்து 40 ஊடகவியலாளர்களும் விசேட விமானம் மூலம் யாழை அடைந்தனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஜுன் மாதம் 1999 சோமரத்ன நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகிறார் . அங்கே சோமரத்ன ஒரு மணிநேர வாக்குமூலத்தை நீதிபதி முன் சொல்கிறார். சோமரத்ன சொன்ன வாக்குமூலம் முழுவதுமாக கீழே, " நான் அரியாலையில் உள்ள முகாமில் வேலை செய்துகொண்டு இருந்தேன். அப்போது எனது கடமை ஊரில் உள்ள ஆட்களின் விபரத்தையும் அட்ரசையும பதிவு செய்வதும் , முகாமுக்கு கொண்டு வரப்படும் தமிழர்களின் விபரங்களை பதிவு செய்வதுமாகும். ஒருநாள் கப்டன் லலித் ஹேவாவும், அதிகாரி விஜயவர்த்தனவும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் லிஸ்டை தந்து அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க உதவி கேட்டனர். எனக்குப் பழக்கமான இடம் என்பதால் வீடுகளை காட்டினேன். அங்கே ஒரு படையணி சென்று பல இளைஞர்களை பிடித்து வந்தது. அந்த இளைஞர்கள் ஒரு முகமூடி போட்ட ஆட்காட்டி முன் நிறுத்தப்பட்டு புலிகளா என்று கேட்கப்பட்டனர். ஆட்காட்டி புலி என்று சொன்ன இளைஞர்கள் கிட்டத்தட்ட 50 பேரை மேஜர் வீரக்கொடியும், குணசேகரவும் வேறாக முகாமுக்கு அழைத்துப் போனார்கள். சிலரை பாடசாலை ஒன்றில் அடைத்து வைத்தார்கள் . இதற்கான கட்டளையை கொடுத்தது இராணுவ அதிகாரிகளான லலித் ஹேவா , விஜேவர்த்தன மற்றும் துடுகல. ஒரு நாள் செல்வரத்னம் என்ற கல்வித்திணைக்கள அதிகாரியை காணவில்லை என அவருடைய மனைவி தேடி வந்தாள். அப்போது செல்வரத்னம் எங்கே எனக்குத் தெரியாது. பிறகு சித்ரவதை செய்யும் இடத்துக்கு சென்றபோது சித்திரவதைக்கு உள்ளாகிக்கொண்டிருந்த 25 பேரில் ஒருவராக செல்வரத்னம் இருந்தார். செல்வரத்னத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தனர். செல்வரத்னம் தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்னை விடுங்கள் என்று கெஞ்சினார். அவரை விடச் சொல்லி லலித் ஹேவாவிடம் சொன்னேன். ஆனால் அடுத்தநாள் செல்வரத்னம் உட்பட 10 பேரின் பிணத்தைக் தான் கண்டேன். அடுத்த நாள் உதயகுமார் என்ற நபரை பிடித்து வந்தனர். அவரது குடும்பம் அவரைத் தேடிவந்து கெஞ்சியது. அவரை விடச் சொல்லி மேலதிகாரி விஜேவர்த்தனவிடம் சொன்னேன். ஆனால் உதயகுமார் அன்றிரவு வேறு முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரை விடச் சொல்லி மேலிடத்தில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனாலும் உதயகுமார் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்க பட முடியாத நிலையில் இருந்ததால் அன்றிரவு கொலை செய்யப்பட்டார். அங்கே சித்ரவதை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களைக் கூட என்னால் அடையாளம் காட்ட முடியும். ஒருநாள் கப்டன் லலித் ஹேவா ஒரு மண்வெட்டி எடுத்து வரச் சொன்னார். நான் மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நின்றாள். பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தார். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைத்தோம். என்னால் செம்மணியில் உடல்கள் புதைக்கப்பட்ட 10 இடங்களைக் காட்ட முடியும். என்னோடு கிருசாந்தி வழக்கத்தில் தண்டனை பெற்றவர்களால் மேலும் ஆறு இடங்களைக் காட்ட முடியும் . ஒரு கராஜில் வேலை செய்த இரு இளைஞர்களை கொலை செய்தது புதைத்தது தெரியும் அந்த இடத்தையும் என்னால் காட்ட முடியும். கிருசாந்தியை நான் கொலை செய்யவில்லை. மேலதிகாரிகள் கொலை செய்தபின் உடலை புதைத்தது மட்டுமே நான். இராணுவத்துக்கு எதிராக நான் இந்த கருத்துக்களை சொல்லக்கூடாது என்று எனக்கும், என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். இலங்கை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காது விட்டால் நான் சர்வதேச நீதிமன்றுக்கு செல்வேன்." இதுவே யாழ் நீதிவான் நீதிமன்றில் சோமரத்ன கூறிய முழுமையான வாக்கு மூலம். வாக்கு மூலம் முடிந்ததும் சோமரத்ன செம்மணி க்கு அழைத்நுச்செல்லப்படார். அங்கே அவர் மனித பீதைகுழிகளை அடையாளம் காட்டினார். அன்று நேரமாகி விட்டதால் புதைகுழிகளை தோண்டுவது அடுத்த நாளுக்குப் பிற்போடப்பட்டது. 17 June 1999 நான்கு மணிநேரம் தோண்டிய பின் முதலாவது உடலின் பாகங்கள் கிடைத்தது. முழங்கால் பகுதி எழும்பும் அதைச்சுற்றி இருந்த ட்ரவுசரின் பகுதியும் முதலாவதாக கிடைத்தது. அன்று பின்னேரம் இரண்டு முழுமையான எழும்புக்கூடுகள் கிடைத்தன. படம் : செம்மணி அகழ்வு 1999 இரண்டு எழும்புக்கூடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இரண்டு எழும்பு கூடுகளுக்கும் இடையே தண்டவாளங்களுக்கிடையே இருக்கும தடி இருந்தது. ஒரு எழும்புக்கூட்டின்.கை பின்னால் கட்டப்படு இருந்தது. மற்ற எழும்பு கூட்டின். கண்கள் கட்டப்பட்ட துணி காணப்பட்டது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண அடுத்தநாள் யாழ் பொலிஸ் நிலையத்தில் 300 பேர் கூடினார்கள். அந்த இரு எழும்புக்கூடுகளும் சுப்பையா ரவி கராஜில் வேலை செய்த ராசையா சதீஸ்குமார் மகேந்திரன் பாபு என்ற இளைஞர்கள் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அரியாலை முகாமில் 19/8/1996 அன்று கைது செய்யப்பட்டவர்கள். உடலை கராஜ் உரியையாளரும், கொலையான வரின் மனைவியும் அடையாளம் காட்டினார்கள். அதன்பிறகு செம்மணி புதைகுழி தோண்டப்படுவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது . எதையையோ மூடிமறைக்க அரசு முனைந்தாதா? படம் : செம்மணி புதைகுழிகள் இருந்த இடத்திற்கான வரைபடம் 1999 அதன்பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டு மெத்தனமாக 6 புதைகுழி தோண்டப்பட்டது. ஒவ்வொரு புதைகுழியிலும் 1 தொடக்கம் ஆறு உடல்களுகான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 15 உடல்களில் பத்து உடல்களின் எச்சங்கள் கண்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தது. அதன்பின் அரசாங்கம் சோமரத்ன சொன்னபடி மேலதிக புதைகுழிகள் அங்கே இல்லை என்று அறிவித்து புதைகுழி தோண்டுவதை நிறுத்தியது. படம் : செம்மணி தோண்டப்பட ஆயத்தம் 1999 சோமரத்ன 20 இராணுவ அதிகாரிகளை இந்த படுகொலைகளுக்கு காரணமாக சொல்லியிருந்த போதும் 2000 ஆம் ஆண்டு வெறுமனே 7 பேர் மீது மட்டும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது . பிறகு ஏழு பேருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு CID சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக அறிவித்தது. இந்த தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு நீதிமன்றம் 2006 அறிவித்தது. 2007 யில் கிருசாந்தி விடயத்தை பேசுபொருளாக்கி அரசுக்கு அழுத்தம் ஏற்பட காரணமாக இருந்த S.T. ஞானநாதன் என்பவர் அரியாலை இராணுவ முகாமுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும் அதற்கு பிறகு அந்த வழக்குக்கு என்ன நடந்தது என்று தகவலை அறிய முடியவில்லை. சோமரத்ன சொன்னது போல் அங்கே புதைகுழிகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் மூடி மறைத்தது. அப்படியே கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு கடந்தபின் , 13 பிப்ரவர் 2025 அரியாலை சிந்தபதி மயானத்திற்கான கட்டுமான வேலைக்காக தோண்டியபோது மனித உடல்களின் எச்சங்கள் தென்பட்டது. விடயம் நீதி மன்றுக்கு போக நீதிமன்றம் அதை மனித புதைகுழி என அடையாளப்படுத்தி அதை சட்ட ரீதியாக தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இதுவரை 19 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் மூன்று ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என சந்தேகிக்கப்படுகிறது. இப்போதைய கேள்வி : சோமரத்ன வெளிக்காட்டிய 20 பேரும் யார்? 2000 ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட ஏழு இரானுவத்தினரூக்கு எதிரான வழக்குக்கு என்ன நடந்தது ? இத்தனை காலமாக இது பற்றி எந்த தமிழ்தலைவராவது கேள்வி எழுப்பி உள்ளனரா ? https://tjsnews.online/Chemmani-mass-grave?fbclid=IwQ0xDSwLJ-otleHRuA2FlbQIxMQABHjwnZ5lJNOZl9EZ_-iiOYfK7CuyCb-Vc8lMPw3RxJcJMfamZql8mMD9V1gBe_aem_lhyvrtVjQaUBxYQnBn1h_g
-
கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும்
கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும் சொர்ணவேல் ஜூன் 22, 2025 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா (கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.எம். சௌந்தரராஜன் பி. சுசீலா, பாசமலர், 1961) முகவுரை: மெலோடிராமாவின் மேதை ஏ. பீம்சிங் தமிழ் சினிமாவின் புனித உணர்ச்சிகள் பெரும்பாலும் பெருமழை வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில், ஏ. பீம்சிங் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட துயரார்ந்த தாக்கத்துடன் ஒலிக்கிறது. அவர் வெறும் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, மனித உணர்ச்சிகளின் கட்டிடக் கலைஞர், ஒரு தலைமுறையினரின் மற்றும் அதற்கப்பாலும் உள்ளவர்களின் இதயங்களைத் தொட்ட கதைகளைத் திறம்பட பின்னியவர். அவரது திரைப்படங்கள், சொல்லப்படாத தியாகங்களின் அமைதியான வேதனையிலிருந்து குடும்ப மறு இணைவுகளின் உணர்ச்சிபூர்வமான விடுதலை வரை, பல்வேறு உணர்வுகளுக்கான செல்லுலாய்ட் சாலைகளாக இருந்தன, அவை கூட்டு மனசாட்சியில் அழியாத முத்திரையைப் பதித்தன. அவரது குடும்பத்தை மையமாக கொண்ட திரைப்படங்களின் நீடித்த ஆற்றல், தமிழ் பண்பாட்டின் மீதான அவரது ஆழ்ந்த புரிதலுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவர் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், துக்கங்கள் மற்றும் தார்மீக சங்கடங்களைப் பிரதிபலிக்கும் கதைகளை, மெலோடிராமாவின் ஆற்றல்வாய்ந்த லென்ஸ் மூலம் விரிவாக்கிக் காட்டினார். அக்டோபர் 15, 1924 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் பிறந்த ஏ. பீம்சிங், 1940களின் பிற்பகுதியில் புகழ்பெற்ற கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்களின் கீழ் ஒரு உதவி எடிட்டராக இருந்து பின்னர் தானாகவே ஒரு புகழ்பெற்ற இயக்குநராக உருவான ஒரு சினிமா பயணத்தைத் தொடங்கினார். அவரது இயக்கத்தின் களம் பரந்திருந்தது, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பரவியிருந்தது. 1949 முதல் ஜனவரி 16, 1978 அன்று சென்னையில் அவர் இறக்கும் வரை அவரது வளமான வாழ்க்கை, இந்திய சினிமாவின் “பொற்காலம்” என்று பெரும்பாலும் கொண்டாடப்படும் ஒரு காலகட்டத்துடன் ஒத்திசைந்தது, இது அவர் சிறந்து விளங்கிய பிரமாண்டமான, உணர்ச்சிவெழுச்சி மிகுந்த கதைகளுக்கு குறிப்பாக வளமான காலமாக இருந்தது. பீம்சிங் இந்த பல்வேறு மொழி நிலப்பரப்புகளில் திரைப்படங்களை இயக்கி குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் காட்டினாலும், அவரது கலை ஆன்மா தமிழ் சினிமாவில் அதன் மிக ஆழமான வெளிப்பாட்டையும் நீடித்த பாரம்பரியத்தையும் கண்டது. அவரது மிக முக்கியமான பங்களிப்புகள், குறிப்பாக, மிகவும் கொண்டாடப்பட்ட ‘ப’ வரிசைத் திரைப்படங்கள், தமிழ் கலாச்சார உணர்வுகள் மற்றும் சினிமா மரபுகளில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. சிவாஜி கணேசன், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களுடனான முக்கிய ஒத்துழைப்புகளால் வகைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவில் அவரது விரிவான பணி, அவரது அடையாளத்தின் அடித்தளத்தை உருவாக்கியது. இந்த தமிழ் வெற்றிப் படங்களில் பலவற்றை இந்தியில் வெற்றிகரமாக ரீமேக் செய்யும் திறன் அவரது சினிமா கதைசொல்லலின் பரந்த புரிதலைக் காட்டியது, ஆனாலும் அவரது கதைகளின் தமிழ் இதயமே வலிமையாக துடித்தது, திரைப்பட வரலாற்றில் அவரது தனித்துவமான இடத்தை அது உறுதி செய்தது. மெலோட்ராமா வகைமையின் கட்டமைப்பு மெலோட்ராமா: இசையும் கண்ணீரும் “மிகை நாடகம்” என்று பொதுவாக அறியப்படும் ஒரு கலை வடிவம், மெலோட்ராமா. ஆனால் அதன் பெயரின் வேர்ச் சொற்களைத் தேடிச் சென்றால், அது நம்மை இசையின் மென்மைக்கும் நாடகத்தின் கம்பீரத்திற்கும் அழைத்துச் செல்கிறது. கிரேக்க மொழியில் “மெலோஸ்” எனும் இன்னிசையும், பிரெஞ்சு மொழியில் “டிராம்” எனும் நாடகமும் கைகோத்து உருவானதே “இசை நாடகம்”. இதுவே அதன் பிறப்பின் பொருள். உணர்ச்சிகளின் பேரலைகள் கரையை உடைத்து வெளிப்படுவது இதன் இயல்பாக இருந்தாலும், இதன் ஆன்மாவோ இசையால் ஆனது. எனவே, “மிகை நாடகம்” என்பது அதன் குணத்தை விவரித்தாலும், “இசை நாடகம்” என்பதே அதன் வேருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இந்தியத் திரையின் இதயத் துடிப்பு இந்தியத் திரையுலகில், குறிப்பாக 1940 முதல் 1970 வரையிலான ஸ்டுடியோக்களின் பொற்காலத்தில், மெலோட்ராமா ஒரு பெரும் சக்தியாகவே தழைத்தோங்கியது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மனித மனங்களின் ஆழமான உணர்ச்சிப் போராட்டங்களையும் தன் கதைக் கருவாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது. இந்த உணர்ச்சிமிகு நாடகப் பாணியின் மணிமகுடமாக, ஏ. பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் 1959-ல் வெளிவந்த “பாகப்பிரிவினை” திரைப்படம் இன்றும் சாட்சியாய் நிற்கிறது. அது மெலோட்ரமாவின் இலக்கணங்களையும், அதன் கதை மரபுகளையும் தன் ஒவ்வொரு காட்சியிலும் சுமந்து நிற்கும் காலத்தால் அழியாத காவியம். மெலோட்ரமாவின் கதைப் பின்னல், ஒரு பிரவாகம் போன்றது. அதன் பாதையை பீட்டர் புரூக்ஸ், லிண்டா வில்லியம்ஸ், இரா பாஸ்கர் போன்ற திரைத்துறை மேதைகள் அழகாக விளக்குகின்றனர். மிகை நாடகப் பாங்கும் புனிதத்திற்குப் பிந்தைய உலகமும்: பீட்டர் புரூக்ஸ் பார்வை பிரபல இலக்கியத் திறனாய்வாளர் பீட்டர் புரூக்ஸ், தனது “தி மெலோடிராமேடிக் இமேஜினேஷன்” (The Melodramatic Imagination) என்ற நூலில், மிகை நாடகப் பாங்கு எனப்படும் சித்தரிப்பு முறைக்கும், சமூகம் சமய நம்பிக்கைகளிலிருந்து விலகிச் சென்றதற்கும் உள்ள ஆழமான தொடர்பை விளக்குகிறார். புரூக்ஸின் கூற்றுப்படி, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அறிவொளிக் காலத்திற்குப் பிறகு, மேற்கத்திய சமூகங்களில் சமயம் மற்றும் கடவுளின் மையப்பங்கு குறையத் தொடங்கியது. இந்தச் சூழலை அவர் “புனிதத்திற்குப் பிந்தைய உலகம்” (post-sacral world) என்று குறிப்பிடுகிறார். அதாவது, எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மதம் இல்லாத ஒரு காலகட்டம். இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு கலை வடிவமாகவே இந்த மிகை நாடகப் பாங்கு உருவானது. முன்பு மதம் போதித்த நீதி, நேர்மை, பாவம், புண்ணியம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு புதிய தளம் தேவைப்பட்டது. இந்த மிகை நாடகப் பாங்கிலான நாடகங்களும், புதினங்களும் இந்த தேவையைப் பூர்த்தி செய்தன. அவை மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், திடீர் திருப்பங்கள், மற்றும் தீய சக்திக்கு எதிராகப் போராடும் அப்பாவி கதைமாந்தர்கள் மூலம் நீதியை நிலைநாட்டின. புரூக்ஸ் இதை “ஒழுக்கத்தின் மறைபொருள்” (moral occult) என்று விவரிக்கிறார். அதாவது, புனித நூல்களுக்குப் பதிலாக, அன்றாட வாழ்வில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான நாடகத் தருணங்களில் இருந்தே நல்லது கெட்டதுக்கான அர்த்தங்கள் தேடப்பட்டன. மிகை நாடகப் பாங்கு, தனது உச்சகட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம், இந்த மறைந்திருக்கும் ஒழுக்க விதிகளைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைத்தது. சுருக்கமாகச் சொன்னால், பீட்டர் புரூக்ஸின் பார்வையில், இந்த மிகை நாடகப் பாங்கு என்பது வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பான கலை வடிவம் மட்டுமல்ல, அது சமயம் தன் பிடியை இழந்த ஒரு உலகில், ஒழுக்கத்தையும் நீதியையும் கண்டடைய மனித சமூகம் மேற்கொண்ட ஒரு முக்கியமான முயற்சியாகும். கட்டமைப்பு: தொடக்கம், நடுப்பகுதி, முடிவு மெலோட்ராமா தொடக்கத்தில் நிலவும் ஒரு அமைதிப் பூங்காவில் ஆரம்பிக்கிறது. பின்னர், எதிர்பாராத ஒரு புயல் போல சிக்கல்களும் பிரிவுகளும் அந்த அமைதியைச் சிதைக்கின்றன. இறுதியாக, அந்தப் புயல் ஓய்ந்து, நீதி நிலைநாட்டப்பட்டு, உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்து, வாழ்க்கை தன் ஒழுங்கிற்குத் திரும்புவதில் கதை முற்றுப்பெறுகிறது. இந்த அமைதி – சிதைவு – மீட்சி எனும் பயணமே, மெலோட்ரமாவின் அழியா வசியமாகும். ஆரம்பம்: ஒரு அமைதி நிலை மெலோட்ராமா கதை பெரும்பாலும் ஒரு குடும்பம் அல்லது நெருங்கிய சமூகத்திற்குள் மையப்படுத்தப்பட்ட ஆரம்ப அமைதி, மகிழ்ச்சி அல்லது ஸ்திரத்தன்மையை நிறுவுவதன் மூலம் தொடங்குகிறது. “பாகப்பிரிவினை”யில், இந்த ஆரம்ப கட்டம் ஒரு கூட்டு குடும்பத்தின் இணக்கமான சகவாழ்வின் மூலம் தெளிவாக சித்தரிக்கப்படுகிறது, இது இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களைக் கொண்டது, அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டில் திருப்தியுடன் வசிக்கின்றனர். இந்த பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு ஆற்றல் மிகுந்த குறியீடு படத்தின் ஆரம்பத்தில் வழங்கப்படுகிறது: ஒரு பாரம்பரிய பண்டிகை உணவான பொங்கலை ஒன்று சேர்ந்து அவரவர் குடும்ப பானைகளில் சமைக்க கூடுகிறது. இந்த செயல் அவர்களின் கூட்டு அடையாளம் மற்றும் பரஸ்பர சார்புநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல மெலோட்ராமாக்களில், ஒரு குடும்ப புகைப்படம் அடிக்கடி இதேபோன்ற குறியீட்டு செயல்பாட்டைச் செய்கிறது, இங்கு தமிழ் பண்பாடு அடையாளமான பொங்கல் மைய குடும்பத்தின் ஆரம்ப மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. இடைப்பகுதி: முறிவு மற்றும் பிரிவினை இந்த நிறுவப்பட்ட அமைதி ஒரு குறிப்பிட்ட தூண்டுதல் நிகழ்வு அல்லது பெரும்பாலும், ஒரு புதிய, சீர்குலைக்கும் கதாபாத்திரத்தின் வருகையால் தவிர்க்க முடியாமல் சீர்குலைக்கப்படுகிறது. இந்த ஊடுருவல் மோதல்கள், தவறான புரிதல்கள் மற்றும் இறுதியில், குடும்ப அலகிற்குள் ஒரு பிளவு அல்லது முறிவுக்கு வழிவகுக்கிறது. “பாகப்பிரிவினை”யில், இந்த முறிவுக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் மைத்துனர் சிங்காரம் காரணகர்த்தாவாக அமைகிறார். அவரது இருப்பு குடும்ப அமைதியை சிதைத்து, பிரிவினையின் விதைகளை நயவஞ்சகமாக விதைக்கிறது. விளைவுகள் கடுமையாக உள்ளன: மூதாதையர் வீடு பிரிக்கப்படுகிறது, இது சகோதரர்களுக்கு இடையில் திறந்திருக்கும் உணர்ச்சிப் பிளவின் உடல் வெளிப்பாடாகும். இப்போது பிரிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களும் தனித்தனி பானைகளில் பொங்கல் சமைக்கும் உருக்கமான காட்சி, பொதுவாக படத்தின் இடைவேளைக்கு அருகில், பிரிவின் ஆழத்தையும் அவர்களின் முந்தைய ஒற்றுமையின் இழப்பையும் கூர்மையாக குறிக்கிறது. இறுதி: மறு இணைப்பு மற்றும் தீர்வு ஒரு மெலோட்ரமாவின் முடிவு பொதுவாக இந்த மோதல்களைத் தீர்ப்பது மற்றும் குடும்பம் அல்லது சமூகத்திற்கான ஸ்திரத்தன்மைக்குத் திரும்புவதை உள்ளடக்கியது. இந்தத் தீர்மானம் பெரும்பாலும் முறிவின் போது அச்சுறுத்தப்பட்ட சமூக அல்லது குடும்ப விழுமியங்களை வலுப்படுத்துகிறது. “பாகப்பிரிவினை”யில், சிங்காரத்தின் தீய எண்ணங்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது, இது கிராமத்திலிருந்து அவரை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கிறது. அவர்களின் பிரிவின் கடுமையான சின்னமாக நின்றிருந்த சுற்றுச்சுவர் இடிக்கப்படுகிறது. குடும்ப நல்லிணக்கத்தின் மறுசீரமைப்பு மீண்டும் ஒன்றுசேர்ந்து தங்கள் பானைகளில் பொங்கல் சமைக்கும் கூட்டுச் செயலால் குறிக்கப்படுகிறது, இது கதையை முழு வட்டத்திற்கு கொண்டுவருகிறது. இந்த மறு இணைப்பு சில நேரங்களில் மெலோட்ராமாக்களில் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒரு குழு புகைப்படத்திற்காக கூடுவதன் மூலம் சுட்டப்படுகிறது, இது அவர்களின் புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமையைக் குறிக்கிறது. இவ்வாறு, “பாகப்பிரிவினை”யில், உணவு, குறிப்பாக பொங்கல் தயாரித்தல் மற்றும் பகிர்தல், குடும்ப ஒற்றுமை, வலிமிகுந்த பிரிவினை மற்றும் இறுதியில், மகிழ்ச்சியான நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியமான தருணங்களைக் குறிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த மற்றும் தொடர்ச்சியான குறியீடாக செயல்படுகிறது. மேற்பரப்பிற்கு அப்பால்: மெலோட்ரமாவில் ஆழமான கதைகள் சிறந்த மற்றும் நீடித்த மெலோட்ராமாக்கள் பெரும்பாலும் மேற்பரப்பில் எளிதில் புலப்படும் கதைக்களத்திற்கு அடியில் மற்றொரு, ஆழமான கதை அல்லது ஒரு இணையான கருப்பொருள் பிரச்சினையைக் கொண்டுள்ளன. “பாகப்பிரிவினை” இந்த சிறப்பியல்பு அர்த்த அடுக்குகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேற்பரப்பு கதை: குடும்ப உணர்ச்சி கொந்தளிப்பு படத்தின் முதன்மை, வெளிப்படையான கதை ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவிக்கும் உணர்ச்சி உச்சங்களையும் தாழ்வுகளையும் மையமாகக் கொண்டுள்ளது. இரண்டு சகோதரர்களின் குடும்பங்களுக்கு இடையில் எழும் கருத்து வேறுபாடு, அவர்களின் அடுத்தடுத்த பிரிவினை, இந்த பிரிவினால் ஏற்படும் ஆழ்ந்த துக்கம் மற்றும் சிரமங்கள் மற்றும் அவர்களின் இறுதி, உணர்ச்சிகரமான மறு இணைப்பு ஆகியவற்றை விவரிக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களின் தொடர் மூலம் கதையாடல் நகர்கிறது. இந்த மேற்பரப்பு கதை குடும்ப பிணைப்புகள் மற்றும் மோதல்களின் தொடர்புடைய சித்தரிப்பு மூலம் பார்வையாளர்களை ஈடுபடுத்துகிறது. ஆழமான கதை: கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் நவீனத்துவத்தின் மோதல் மேற்பரப்புக் கதைக்கு அடியில், “பாகப்பிரிவினை” ஒரு ஆழமான கருப்பொருளை ஆராய்கிறது: அது பாரம்பரிய கிராமப்புற விழுமியங்களுக்கும் நவீன தொழில்மயமாக்கலின் ஊடுருவலுக்கும் இடையிலான பதற்றம். கூட்டுக் குடும்பம் ஒரு பாரம்பரியத்தின் சின்னம்: படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கூட்டுக் குடும்பம், வெறும் உறவுகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது ஒத்துழைப்பு, பகிர்தல் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய விவசாய வாழ்க்கை முறையின் அடையாளமாகும். அவர்கள் ஒன்றாகப் பொங்கல் கொண்டாடுவது இந்த ஒற்றுமையின் தெளிவான குறியீடாக அமைகிறது. சிங்காரம் நவீன சுயநலத்தின் பிரதிநிதி: சிங்காரம் கதாபாத்திரம் வெளிப்புற சக்திகளின் தூண்டுதலால் ஏற்படும் எதிர்மறை மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது பேராசையும் சூழ்ச்சியும் தனிநபர்வாதம் மற்றும் சுயநலம் போன்ற நவீனத்துவத்தின் கூறுகளாகப் பார்க்கப்படலாம். கிராமத்தின் கூட்டு மனப்பான்மையை சீர்குலைத்து, தனிப்பட்ட லாபத்திற்காக குடும்பத்தைப் பிரிக்க அவர் முயற்சிப்பது, பாரம்பரிய சமூக அமைப்பின் மீது நவீனத்துவத்தின் தாக்கத்தைச் சுட்டுகிறது. பிரிவினை ஒரு சமூகச் சிதைவு: குடும்பத்தின் பிரிவினை என்பது வெறும் உணர்ச்சிகரமான நிகழ்வு மட்டுமல்ல. இது பாரம்பரிய கிராம சமூகத்தின் சிதைவையும் குறிக்கிறது. இரு குடும்பங்களுக்கு இடையில் கட்டப்பட்ட சுவர், தனிமனிதர்களிடையே மட்டுமல்ல, சமூகத்திற்குள்ளும் எழும் பிரிவினைகளின் குறியீடாகவும் இருக்கிறது. மீண்டும் இணைதல் பாரம்பரியத்தின் வெற்றி: இறுதியில், குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்து, அந்தச் சுவரை இடிப்பது, சுயநல நவீனத்துவத்தின் மீதான பாரம்பரிய சமூக விழுமியங்களின் வெற்றியைக் குறிக்கிறது. அவர்கள் மீண்டும் ஒன்றாகப் பொங்கல் சமைப்பது, கூட்டு வாழ்க்கை முறை மற்றும் விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது கிராமப்புற சமூகத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சிக்கு அடிப்படையானது என்பதை படம் உணர்த்துகிறது. இவ்வாறு, “பாகப்பிரிவினை” திரைப்படம் ஒரு குடும்பத்தின் கதையைக் கூறுவது போல் தோன்றினாலும், அது 1950-களின் இறுதியில் இந்தியா எதிர்கொண்ட ஒரு பரந்த சமூக மாற்றத்தை ஆழமாக விவாதிக்கிறது. கிராமப்புற விவசாய சமூகங்கள் நவீனமயமாக்கலின் சவால்களை எதிர்கொண்டபோது ஏற்பட்ட பதட்டங்களையும், பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இப்படம் திறம்பட சித்தரிக்கிறது. இந்த ஆழமான கருப்பொருள் அடுக்குதான் “பாகப்பிரிவினை”யை ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் திரைப்படமாக நிலைநிறுத்துகிறது. கீழடுக்கிலுள்ள ஆழ்நிலைக் கருப்பொருள்: சிங்காரம் வழியாக நவீனத்துவத்தின் ஊடுருவல் இந்த கூட்டுக்குடும்ப பிளவின் மேற்பரப்பு கதைக்கு அடியில், “பாகப்பிரிவினை” நவீனத்துவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளில் அதன் பன்முக விளைவுகள் என்ற ஆழ்ந்த மற்றும் பெரும்பாலும் அமைதியற்ற கருப்பொருளைக் கையாள்கிறது. சிங்காரத்தின் கதாபாத்திரம் இந்த ஆக்கிரமிப்பு நவீனத்துவத்தின் ஒரு முக்கிய பிரதிநிதியாக வெளிப்படுகிறது. பரபரப்பான நவீன நகரமான சிங்கப்பூரிலிருந்து அவரது வருகை, பாரம்பரிய கிராம வாழ்க்கையின் நிறுவப்பட்ட தாளகதிகளுக்குள் ஒரு புதிய, மற்றும் சில வழிகளில் அன்னிய, கலாச்சாரத்தின் தலையீட்டைக் குறிக்கிறது. சிங்காரத்தின் மேற்கத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான கண்மூடித்தனமான பாராட்டு மற்றும் (பெரிய பொருள்சார்ந்த பலன்களை அளிக்காத) இட்லிகளை உழைப்புடன் தயாரிப்பது போன்ற பாரம்பரிய தமிழ் பழக்கவழக்கங்களை கேலி செய்வது, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் ஒரு நுட்பமான ஆனால் தொடர்ச்சியான மோதலை உருவாக்குகிறது. அவரது செயல்களும் அணுகுமுறைகளும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குடும்பத்தின் பழமைவாதக் கொள்கைகளையும் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த ஆழ்ந்த மதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த கீழடுக்கு கதை சிங்காரத்தின் கொடிய திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டு கிராமத்திலிருந்து அவமானகரமாக வெளியேற்றப்படுவதன் மூலம் முடிவுக்கு வருகிறது. இவ்வாறு, எம்.எஸ். சொலைமலையின் திறமையான எழுத்திலும், ஏ. பீம்சிங்கின் உணர்திறன் மிக்க இயக்கத்திலும், மேற்பரப்பு மற்றும் அடித்தள கதைகள் இறுதி காட்சியில் திருப்திகரமாக ஒன்றிணைகின்றன. இந்த ஒன்றிணைவின் மூலம், பாரம்பரிய குடும்ப அமைப்பு வெளிப்புற ஆற்றல்களால் முன்வைக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது மற்றும் அதன் பின்னடைவின் மூலம் ஒன்று சேர்ந்து வாழ்வதின் நீடித்த முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ‘தங்கத்திலே ஒரு குறை,’ ‘தேரோடும் எங்கள்,’ ‘தலையாம்பூ முடிச்சு,’ மற்றும் ‘ஏன் பிறந்தாய் மகனே’ போன்ற உருக்கமான பாடல்களால் படத்தின் மெலோஸ் அல்லது இசை கூறு கணிசமாக வளப்படுத்தப்படுகிறது, இது வெற்றிகரமான மெலோட்ரமாவின் உணர்ச்சி தாக்கம் மற்றும் கருப்பொருள் ஆழத்தை பெருக்குகிறது. மெலோட்ரமாவின் சிறப்பியல்பு கூறுகள்: தற்செயல் நிகழ்வுகள் மற்றும் “டியூஸ் எக்ஸ் மகினா”/இயந்திரத்திலிருந்து உருப்பெறும் தெய்வீக தலையீடு மெலோட்ரமாவின் ஒரு முக்கிய மற்றும் பெரும்பாலும் விவாதிக்கப்படும் அம்சம், முக்கியமான கதை திருப்பங்களை இயக்க அல்லது தீர்க்க முடியாததாகத் தோன்றும் சிக்கல்களைத் தீர்க்க எதிர்பாராத தற்செயல் நிகழ்வுகளை நம்பியிருப்பது. சில சமயங்களில், இந்த தற்செயல் நிகழ்வுகள் “தெய்வீக தலையீட்டை”க் குறிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன, இது தவறுகளை சரிசெய்யும் அல்லது மறு இணைவுகளை எளிதாக்கும் ஒரு “டியூஸ் எக்ஸ் மகினா” – வணிக சினிமா திரைக்கதையாடல் எனும் இயந்திரத்திலிருந்து சிக்கல் தீர்த்து வைக்க திடீரென்று உதிக்கும் ஆபத்பாந்தவன். நவீனத்துவம் போன்ற ஆற்றல்களின் இருவேறுபட்ட சித்தரிப்பு நவீனத்துவம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற புதிய சமூக ஆற்றல்கள் பெரும்பாலும் மெலோட்ராமாக்களில் குறிப்பிடத்தக்க இருவேறுபட்ட தன்மையுடன் சித்தரிக்கப்படுகின்றன. இந்த ஆற்றல்கள் பெரும்பாலும் நன்மை பயக்கும் முன்னேற்றம் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன், நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் இணைத்தே கொண்டுவரும் இரட்டைத் திறனைக் கொண்டிருப்பதாகக் காட்டப்படுகின்றன. “பாகப்பிரிவினை”யில், நவீனத்துவத்தின் மற்றொரு ஆற்றல்வாய்ந்த சின்னமான மின்சாரம், துல்லியமாக இந்த வகையான இருவேறுபட்ட தன்மையுடன் கையாளப்படுகிறது. புகழ்பெற்ற சிவாஜி கணேசன் சித்தரித்த கண்ணையன் கதாபாத்திரம், ஆரம்பத்தில் மின்சார அதிர்ச்சியால் தனது இடது கை மற்றும் கால்களின் செயல்பாட்டை இழக்கிறது, இது அவரை ஊனமுற்றவராகவும் மற்றவர்களை சார்ந்தவராகவும் ஆக்கும் ஒரு விபத்து. இந்த சம்பவம் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியமான ஆபத்துகள் மற்றும் அழிவு ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், படத்தின் உச்சக்கட்டத்தில் ஒரு வியத்தகு திருப்பத்தில், கண்ணையன் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு, மிகவும் தற்செயலான மின்சார அதிர்ச்சியின் மூலம் அதே கையில் பாயும் மின்சாரத்தினால் மீண்டும் தனது இடது பக்கத்தில் இழந்த உணர்வுகளை பெறுகிறார். இந்த நிகழ்வு ஒரு உன்னதமான “டியூஸ் எக்ஸ் மகினா” ஆக செயல்படுகிறது. இங்கே, அவரை முடக்கிய மின்சாரத்தின் அதே ஆற்றல் அவரது மறுசீரமைப்பின் முகவராகவும் மாறுகிறது, இது நவீன ஆற்றல்களின் முரண்பாடான மற்றும் சிக்கலான தன்மையை முன்வைக்கிறது. மேலும், இந்த அதிசய மீட்பு ஒரு தீவிர நெருக்கடியின் போது நிகழ்கிறது: அவர் தனது குழந்தையை ஒரு முரட்டு யானையிடமிருந்து காப்பாற்றி அந்த சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கும்போதே சிங்காரத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறார். இந்த சம்பவங்களின் சங்கமம் மெலோட்ராமாவின் உச்சக்கட்ட உணர்வுகளுக்கு நிகழ்வுகளின் கோர்வையான சர்க்கஸை காத்திரமான வெளியாக கட்டமைக்கிறது, இது உந்தப்பட்ட உணர்வுகளுடன் சாத்தியமற்ற ஆனால் கருப்பொருள் ரீதியாக குறிப்பிடத்தக்க தீர்வுகளை இணைக்கிறது. இவ்வாறு, “பாகப்பிரிவினை” அதன் மேற்பரப்பில் ஒரு உணர்ச்சிகரமான குடும்பக் கதையை திறமையாகக் சொல்லிச்செல்கிறது, அதே நேரத்தில் நவீனத்துவத்தின் வருகை மற்றும் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் சமூக கட்டமைப்புகளில் அதன் சிக்கலான தாக்கம் போன்ற ஆழ்ந்த சமூகப் பிரச்சினைகளை கூடவே ஆராய்கிறது. அதன் தெளிவான மற்றும் அழுத்தமான கதை அமைப்பு, அதன் உணர்ச்சிகரமான காட்சிகள், குறியீடுகளின் வளமான பயன்பாடு, தற்செயல் நிகழ்வுகளின் மூலோபாய சித்தரிப்பு மற்றும் சமூக மாற்றத்தின் ஆழமான பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம், “பாகப்பிரிவினை” சினிமாவின் நிலப்பரப்பில் மெலோட்ரமாவின் ஆற்றல் மற்றும் சிக்கலான தன்மைக்கு ஒரு வளமான, என்றும் எதிரொலிக்கும் மற்றும் நீடித்த உதாரணமாக உள்ளது. செவ்வியல் உணர்ச்சிப் பெருங்கதைகளின் மேற்பரப்பு மற்றும் அடித்தளக் கதைகள் பாகப்பிரிவினையில் நாம் பார்த்த மாதிரி உணர்ச்சிப் பெருங்கதை (Melodrama) என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமல்ல; அது சமூகத்தின் சிக்கலான முரண்களையும், வரலாற்று மாற்றங்களையும், மனித உறவுகளின் ஆழத்தையும் ஆராயும் ஆற்றல்மிக்க ஒரு கலை வடிவமாகும். சிறந்த உணர்ச்சிப் பெருங்கதைகள், காணாளர்களை உடனடியாக ஈர்க்கும் ஒரு “மேற்பரப்புக் கதைக்கு” அடியில், ஒரு ஆழமான சமூக அல்லது மெய்யியல் சார்ந்த “அடித்தளக் கதையை” கொண்டிருக்கும். இந்த இரு அடுக்குகளும் இணையும்போது, அந்தப் படைப்பு காலத்தால் அழியாத ஒன்றாக மாறுகிறது. நவீனத்துவம் போன்ற ஆற்றல்களின் இருமுகச் சித்திரம் பாகப்பிரிவினை எடுத்துரைப்பது போலவே உணர்ச்சிப் பெருங்கதைகளின் உலகில், நவீனத்துவம் போன்ற புதிய ஆற்றல்கள் ஒற்றை முகம் கொள்வதில்லை. அவை, அமுதமும் நஞ்சும் கலந்ததொரு கலவையாகவே சித்தரிக்கப்படுகின்றன; ஒருபுறம் முன்னேற்றத்தின் பேரொளியைப் பாய்ச்சுகையில், மறுபுறம் பாரம்பரியத்தின் ஆணிவேர்களை அரிக்கும் காடியாகவும் (acid) அவை உருவெடுக்கின்றன. இந்தக் கோட்பாடுகளை, வெவ்வேறு பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட சிறந்த திரைப்படங்களின் மூலம் நாம் ஆராயலாம். கான் வித் தி விண்ட் (1939): ஒரு யுகத்தின் வீழ்ச்சி மேற்பரப்புக் கதை: அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் காதலும், அவரது வாழ்வுப் போராட்டமுமே படத்தின் மையம். தன் காதலன் ஆஷ்லியை அடைய முடியாத விரக்தியிலும், போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு மத்தியிலும், ஸ்கார்லெட் தன் குடும்பத்தையும், நிலத்தையும் காப்பாற்றப் போராடுகிறாள். இந்தக் கொந்தளிப்பான பயணத்தில் அவளுக்குத் துணையாகவும், அவளைச் சவால் செய்பவராகவும் ரெட்ட் பட்லர் வருகிறார். ரெட்ட் பட்லர், போலித்தனமற்ற நடப்பியல்வாதியாகவும், சமூக விதிகளைப் பற்றிக் கவலைப்படாத புரட்சியாளனாகவும், அதே சமயம் ஸ்கார்லெட்டின் மீது தீராத காதல் கொண்டவராகவும் வலம் வருகிறார். அடித்தளக் கதை: இந்தத் திரைப்படம், ஒரு யுகத்தின் முடிவையும், ஒரு புதிய உலகின் பிறப்பையும் பதிவு செய்கிறது. பண்ணையார் முறை, பிரபுத்துவ வாழ்க்கை முறை அடங்கிய “பழைய தெற்கு” (Old South) போரினால் முற்றிலுமாக அழிகிறது. ஸ்கார்லெட், அந்த அழிவிலிருந்து மீண்டு வரும் புதிய, தன்னலம் மிக்க முதலாளித்துவப் பெண்ணின் குறியீடு. இறுதியில், ரெட்ட் பட்லர் ஸ்கார்லெட்டை விட்டு விலகும் கணம், படத்தின் மிக ஆழமான தருணமாகும். பல ஆண்டுகளாகத் தன் காதலைப் புறக்கணித்த ஸ்கார்லெட்டாலும், தங்கள் மகளின் மரணத்தாலும் அவரது உணர்வுகள் முற்றிலுமாக வற்றிப்போயிருந்தன. எனவே, அவர் சொல்லும் “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அன்பே, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” (Frankly, my dear, I don’t give a damn) என்ற வரி, கோபத்தின் வெளிப்பாடல்ல; அது உணர்வுகள் வற்றிப்போன ஒரு மனிதனின் வெறுமையின் குரல். இந்தத் தனிப்பட்ட சோர்வு, ஒரு பரந்த குறியீட்டு அர்த்தத்தையும் பெறுகிறது. போரில் தோற்று, தன் இலட்சியங்கள் அனைத்தையும் இழந்த “பழைய தெற்கு” என்ற யுகத்தின் ஒட்டுமொத்த சோர்வையும், நம்பிக்கையின்மையையும் இது குறிக்கிறது. இவ்வாறு, அந்த ஒற்றை வரி, ஒரு உறவின் முடிவையும் ஒரு யுகத்தின் முடிவையும் ஒருசேர அறிவிக்கிறது. டைட்டானிக் (1997): வர்க்கப் போராட்டத்தின் உருவகம் மேற்பரப்புக் கதை: இது ஒரு உன்னதமான முக்கோணக் காதல் போராட்டம். கதையின் நாயகி ரோஸ், தன் வருங்காலக் கணவரான கால் ஹோக்லிக்கும், கப்பலில் சந்திக்கும் ஏழை ஓவியனான ஜாக் டாசனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார். கால், செல்வம் மற்றும் சமூகத் தகுதி என்ற தங்கக் கூண்டையும், ஜாக், உண்மையான காதல் மற்றும் விடுதலையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ரோஸ் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதே கதையின் உணர்ச்சிப்பூர்வமான மையம். அடித்தளக் கதை: இந்தக் காதல் கதைக்கு அடியில், எட்வர்டியன் காலத்தின் கடுமையான வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய ஆழமான சமூகத் திறனாய்வு அமைந்துள்ளது. டைட்டானிக் கப்பலே அந்த சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகச் செயல்படுகிறது. முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பு எனப் பிரிக்கப்பட்டிருக்கும் அதன் அமைப்பு, வர்க்கப் பேதத்தின் குறியீடு. கப்பல் மூழ்கும்போது, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு கூட வர்க்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்புப் பயணிகள் இரும்புக் கதவுகளால் பூட்டப்படுகிறார்கள். எனவே, ரோஸ் ஜாக்கை தேர்ந்தெடுப்பது ஒரு காதல் முடிவு மட்டுமல்ல; அது தன்னை ஒடுக்கிய உயர் வர்க்கத்தையும், அதன் போலியான விழுமியங்களையும் முழுமையாக நிராகரிக்கும் ஒரு புரட்சிகரச் செயல். இறுதியில், ஜாக் இறந்தாலும், அவள் கால்வர்ட் (Calvert) என்பவரைத் திருமணம் செய்து, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்வது, அவள் பெற்ற விடுதலையின் சான்றாக அமைகிறது. தேவதாஸ் (2002): நவீனத்துவத்தின் பெருந்துயர் மேற்பரப்புக் கதை: ஜமீன்தார் வீட்டுப் பிள்ளையான தேவதாஸ், தன் இளமைக்காலத் தோழி பார்வதியைக் காதலிக்கிறான். வர்க்க பேதம் மற்றும் குடும்ப கவுரவம் காரணமாக இவர்களது காதல் நிராகரிக்கப்பட, தேவதாஸ் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். குடிக்கு அடிமையாகி, அன்பான நடன மங்கை சந்திரமுகியிடம் அடைக்கலம் தேடி, இறுதியில் தன் காதலியின் வீட்டு வாசலில் உயிரை விடுகிறான். அடித்தளக் கதை: பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல் தேவதாஸின் கதை, ஒரு காதல் தோல்வி என்பதை விட, நவீனத்துவம் ஏற்படுத்திய ஆழமான உளவியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புகளின் பெருந்துயரமாகும். அவன் இரண்டு உலகங்களுக்கு இடையில் சிக்கி அழிக்கப்பட்ட ஒரு பாத்திரம். பாரம்பரிய உலகில் ஒரு நவீன மனிதன்: தேவதாஸ், மேற்கத்தியக் கல்வி கற்க அனுப்பப்படுகிறான். சரத்சந்திரரின் மூல நாவலில் கல்கத்தாவிற்கும், சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படத்தில் லண்டனுக்கும் அவன் செல்வதாகக் காட்டப்படுவது, அவனுக்கும் அவனது பாரம்பரியச் சூழலுக்கும் இடையேயான தூரத்தையும், பண்பாட்டுப் பிளவையும் இன்னும் அதிகப்படுத்திக் காட்டுகிறது. அவன் தனிமனிதவாதம் மற்றும் காதல் திருமணம் போன்ற நவீன சிந்தனைகளுடன் திரும்புகிறான். நவீன நாயகனின் செயலற்ற நிலை: அவனிடம், குடும்பத்தை எதிர்க்கும் நவீன ஆசை இருக்கிறது, ஆனால் பாரம்பரியத்தின் வேர்களை முழுமையாக அறுத்துக்கொள்ளும் துணிவு இல்லை. இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் அவன் தவிக்கும் செயலற்ற நிலையே, அவனது வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகிறது. சுய அழிவு ஒரு நவீன எதிர்ப்பு: காதலை இழந்த பிறகு, தேவதாஸ் நவீனத்தின் மையமான நகரத்திற்குத் தப்பி ஓடுகிறான். அங்கே, அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்வது, ஒரு வகையான நவீன எதிர்ப்பாக மாறுகிறது. அவனது குடிப்பழக்கம், அவன் மாற்ற முடியாத ஒரு சமூக அமைப்பின் மீதான அவனது கோபத்தையும், கையாலாகாத்தனத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கிளர்ச்சியாகும். அவனது சுய அழிவு, உள்நோக்கி செலுத்தப்பட்ட ஒரு வன்முறையாகிறது. மேற்கண்ட ஆய்வுகளிலிருந்து, உணர்ச்சிப் பெருங்கதை என்பது கண்ணீரும், கவலையும் நிறைந்த ஒரு மேலோட்டமான கலை வடிவம் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. அது, குடும்ப உறவுகள், வர்க்கப் போராட்டம், வரலாற்று மாற்றங்கள், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இடையிலான மோதல் போன்ற ஆழமான கருப்பொருள்களை ஆராயும் ஆற்றல்மிக்க ஒரு ஊடகமாகும். மேற்பரப்புக் கதையின் உணர்ச்சிப் பெருக்கின் வழியே காணாளர்களை ஈர்த்து, அடித்தளக் கதையின் சமூகத் திறனாய்வின் மூலம் அவர்களைச் சிந்திக்க வைப்பதே, இந்தத் திரைப்படங்களின் காலத்தால் அழியாத வெற்றிக்குக் காரணம். அதத்கைய உணர்ச்சிப் பெருங்கதையின் மாஸ்டராக பீம்சிங் அவர்கள் இருந்தார்கள். உணர்ச்சியின் ‘ப’ கீதம்: பீம்சிங் குடும்ப மெலோடிராமா ஏ. பீம்சிங்கின் சினிமா உலகம் பெரும்பாலும் “குடும்பம் மற்றும் உறவுகளின்” சிக்கலான இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் சமூக மாற்றத்தை அவரது கதைகள் பெரும்பாலும் பிரதிபலித்தன, அங்கு பாரம்பரிய கூட்டுக் குடும்ப அமைப்பு நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் மதிப்புகளின் அழுத்தங்களுடன் போராடியது. பீம்சிங்கிற்கு வணிக ரீதியாக வெற்றிகரமான சூத்திரமாக மாறிய இந்த “குடும்பக் கதைகள்”, இந்த அலகுகளின் வலிமிகுந்த சிதைவு, குடும்பத்திற்குள் மாறுபட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து எழும் மோதல்கள், சமூக அந்தஸ்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளுக்கும் ஊடுருவும் வெளிப்புற தாக்கங்களுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத மோதல், சில சமயங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்ட மேற்கத்திய விழுமியங்கள், ஆகியவற்றை தொடர்ந்து ஆராய்ந்தன. ஆழ்ந்த தியாகத்தின் கருப்பொருள்கள், உடன்பிறந்தோரின் அன்பின் பிரிக்க முடியாத பிணைப்புகள், குழந்தைகளின் கடமையின் சுமை, மற்றும் தவறான புரிதல்கள் அல்லது தீய நோக்கங்களின் சோகமான விளைவுகள் ஆகியவை பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலித்த தொடர்ச்சியான மையக்கருத்துகளாக இருந்தன. இந்த குடும்ப மெலோடிராமாக்கள், வெறும் கண்ணீரை வரவழைக்கும் பொழுதுபோக்கைத் தாண்டி, சமூக விமர்சனத்திற்கான ஆற்றல்வாய்ந்த ஊடகங்களாக அடிக்கடி செயல்பட்டன. பீம்சிங்கின் திரைப்படங்கள், புதிதாக சுதந்திரம் அடைந்த ஒரு தேசத்தின் அபிலாஷைகளுடன் ஈடுபட்டன, குடும்பத்தின் நுண் உலகத்தைப் பயன்படுத்தி பரந்த சமூக பதட்டங்களை ஆராய்ந்தன. உதாரணமாக, அவரது பாகப்பிரிவினை (1959) ஒரு ‘வெளிநாட்டிலிருந்து திரும்பிய’ கதாபாத்திரத்தின் செல்வாக்கின் கீழ் ஒரு குடும்பத்தின் பிரிவினையை சித்தரித்தது, இது பாரம்பரிய இந்திய குடும்ப அமைப்புகளுக்கு மேற்கத்திய மதிப்புகளின் அச்சுறுத்தலைக் குறிக்கிறது. இதேபோல், பாவ மன்னிப்பு (1961) “தேசியவாத மதச்சார்பின்மையை” தைரியமாக ஆதரித்தது மற்றும் மதப் பிரிவுகளை கேள்விக்குள்ளாக்கியது, பீம்சிங்கின் மெலோடிராமாக்கள் குறிப்பிடத்தக்க சமூக-கலாச்சார கேள்விகளை அதீத உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டின் மூலம் கையாள முடியும் என்பதைக் காட்டியது. பீம்சிங்கின் தமிழ் இயக்கப் பணிகளின் ஒரு தனித்துவமான கையொப்பம் “ப” வரிசை ––– தமிழ் எழுத்தான ‘ப’ வில் தொடங்கும் தலைப்புகளைக் கொண்ட பதினான்கு திரைப்படங்களின் குறிப்பிடத்தக்க தொடர்ச்சி. இந்தத் தொடர், பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கொண்டிருந்தது மற்றும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை மேதைமையாலும் கண்ணதாசனின் பாடல் ஆழத்தாலும் செறிவூட்டப்பட்டது, ஒரு தமிழின கொண்டாட்ட நிகழ்வாக மாறியது. சிவாஜி கணேசன் இந்த தலைப்பு வசீகரம் பீம்சிங்கின் சொந்தப் பெயர் தமிழில் ‘ப’ வில் தொடங்குவதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் பின்னர் “உணர்ச்சிபூர்வமான காரணங்களுக்காக” நீடித்திருக்கலாம் என்றும் நினைத்தாலும், அதன் தாக்கம் மிகவும் மூலோபாயமாக இருந்தது. இந்த நிலையான பெயரிடல், சிவாஜி கணேசன் போன்ற ஒரு நட்சத்திரத்தின் தொடர்ச்சியான இருப்பு மற்றும் ஒரு நம்பகமான படைப்புக் குழுவுடன் இணைந்து, முறைசாரா ஆனால் ஆற்றல்வாய்ந்த பிராண்டிங் பொறிமுறையாக திறம்பட செயல்பட்டது. இது உணர்ச்சி ரீதியாக செழிப்பான, குடும்பத்தை மையமாகக் கொண்ட மெலோடிராமாக்களுக்கான பார்வையாளர் எதிர்பார்ப்புகளை வளர்த்தது, அவற்றின் வணிக வெற்றிக்கு கணிசமாக பங்களித்தது மற்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் பீம்சிங்கின் தனித்துவமான இயக்குநர் என்கிற அடையாளத்தை உறுதிப்படுத்தியது. மெலோடிராமா வகைமையின் மரபுகளுக்கு இணங்க, அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் “வியத்தகு சூழ்நிலைகள்” மற்றும் “தீவிரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம்” ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கதைசொல்லல் பொதுவாக குடும்ப நல்லிணக்கத்தின் ஆரம்ப சித்தரிப்புடன் வெளிப்படும், இது பின்னர் ஒரு வெளிப்புற விரோத ஆற்றல்யால் அல்லது ஒரு உள் கதாபாத்திரக் குறைபாட்டால் சீர்குலைக்கப்பட்டு, தீவிரமடையும் உணர்ச்சி கொந்தளிப்புக்கு வழிவகுக்கும். பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, மற்றும் பார் மகளே பார் போன்ற திரைப்படங்களின் கதைகள் அனைத்தும் மோதலால் சிதைந்த அழகிய தொடக்கங்களின் இந்த முறையை விளக்குகின்றன; அதைத் தொடர்ந்து ஒரு சோகமான அல்லது உறுதிப்படுத்தும் உச்சக்கட்ட தீர்வை நோக்கிய தீவிர உணர்ச்சி பயணங்கள். பீம்சிங் உணர்ச்சிகரமான உச்சக்கட்டங்களை உருவாக்க கனதியான முரண்பாட்டை திறம்பட பயன்படுத்தி, மேலும் பாடல்களை வெறும் இடைச்செருகல்களாக மட்டுமல்லாமல், அவை மூலம் கதாபாத்திரங்களின் உள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி கதையை முன்னோக்கி நகர்த்துவதை தனது மூலோபாயமாக கொண்டிருந்தார். இந்த உணர்ச்சிமிகு கதைகளுக்குள், ஒரு தெளிவான தார்மீக கட்டமைப்பு பெரும்பாலும் புலப்பட்டது. நல்லொழுக்கம், தியாகம் மற்றும் அசைக்க முடியாத குடும்ப விசுவாசம் ஆகியவை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டன, இந்த உறுதிப்படுத்தல் சோகமான முடிவுகளின் மூலம் வந்தாலும் கூட. கதாபாத்திரங்கள் அனுபவித்த துன்பங்கள் தார்மீக பாடங்களைக் கற்பிக்க அல்லது நிலவும் சமூக விழுமியங்களை வலுப்படுத்த பயன்பட்டன, படிக்காத மேதையில் நன்மையின் இறுதி வெற்றி அல்லது பாசமலர்இல் உள்ள துயரமான ஆயினும் விரும்பிச் செய்யும் தியாகங்கள் போன்றவை, உணர்ச்சிபூர்வமான காட்சியமைப்புக்கு தூண்டுகையாக அமைந்தன. ‘ப’ வரிசை படங்கள்: கண்ணீர், இசை மற்றும் வெற்றிகளின் தொடர்ச்சி ஏ. பீம்சிங்கின் ‘ப’ வரிசை தமிழ் சினிமாவில் ஒரு மகத்தான தொகுப்பாக நிற்கிறது, ஒவ்வொரு திரைப்படமும் மெலோடிராமாவின் ஒரு பிரமாண்டமான சிம்பொனியில் ஒரு தனித்துவமான ஆனால் இணக்கமான இசைக் குறிப்பாகும். இந்தத் திரைப்படங்கள், பெரும்பாலும் பீம்சிங், அவரது கூட்டாளிகளான திருமலை-மஹாலிங்கம், ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ், சோலைமலை போன்ற எழுத்தாளர்கள், சிவாஜி கணேசன், இசை இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவிஞர் கண்ணதாசன் மற்றும் பின்னணி பாடலுக்கு பெயர் போன டிஎம்எஸ், சுசீலா, பிபிஎஸ் ஆகியோரின் கூட்டு மேதைமையிலிருந்து பிறந்தவை. பதி பக்தி (1958): ஒரு சூத்திரத்தின் தோற்றம் பதி பக்தி மூலம், பீம்சிங் தனது தனித்துவமான பாணியின் அடித்தளங்களை அமைக்கத் தொடங்கினார். 1936 ஆம் ஆண்டின் முந்தைய அதே பெயரிலான திரைப்படம் குடிப்பழக்கம் போன்ற சமூகத் தீமைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், பீம்சிங்கின் 1958 ஆம் ஆண்டு பதிப்பு, வலிமையான சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரியைக் கொண்டு, “கணவனிடம் பக்தி” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட உள்ளார்ந்த உணர்ச்சி நாடகத்தை அரங்கேற்றியது. இப்படம் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ் ஆகியோருடைய பீம்சிங்குடனான ஆரம்பகால ஒத்துழைப்பைக் குறித்தது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களுடன் சேர்ந்து இப்படம் தொடரவிருக்கும் குடும்பக் காவியங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைத்தது, திருமண மற்றும் குடும்பப் பிணைப்புகளுக்குள் உள்ள உணர்ச்சிகரமான சிக்கல்களை ஆராய்ந்தது. “வீடு நோக்கி வந்த என்னை,”இரை போடும் மனிதருக்கே,” மற்றும் “இந்த திண்ணை பேச்சு வீரனிடம்” போன்ற பாடல்கள் உணர்வெழுச்சி உந்துதலுக்கு உதாரணங்கள். பாகப்பிரிவினை (1959): குடும்ப தகராறுகளின் முன்மாதிரி பாகப்பிரிவினை குடும்ப மெலோடிராமாவிற்கான பீம்சிங்கின் காத்திரமான கதையாடல். இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான ஆழ்ந்த அன்பு மற்றும் எம்.ஆர். ராதாவால் மறக்கமுடியாத வில்லனாக சித்தரிக்கப்பட்ட “சிங்கப்பூர் சிங்காரம்” என்பவரால் தூண்டப்பட்ட அவர்களின் குடும்பதிற்குள்ளான சிக்கல் மற்றும் கட்டாயப் பிரிவின் சோகமான நிகழ்வுகளைச் சுற்றி கதை சுழன்றது. குடும்ப சொத்துக்களின் பிரிவினை “கூட்டுக் குடும்பங்களின் இறுதித் தோல்வி” என்று சித்தரிக்கப்பட்டது, குடும்ப ஒற்றுமையை மதிக்கும் ஒரு சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருப்பொருள். இப்படம் கதாபாத்திர முன்மாதிரிகளை திறமையாகப் பயன்படுத்தியது: அர்ப்பணிப்புள்ள சகோதரர்கள், சூழ்ச்சி செய்யும் வில்லன், மற்றும் ஊனமுற்ற ஆனால் அறமுள்ள நாயகன் (சிவாஜி கணேசன்); அவரது அதிசயமான மீட்பு குடும்பத்தின் மறு இணைவுக்கு வழிவகுக்கிறது. கண்ணதாசன், ஏ. மருதகாசி மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களுடன் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, அதன் தாக்கத்திற்கு ஒத்திசைவாக இருந்தது. “தாழையாம் பூ முடிச்சி” அதன் குறைந்தபட்ச இசைக்கருவிகளுக்காகக் போற்றப்பட்டது, அதே நேரத்தில் கண்ணதாசனின் துயரமான தாலாட்டு “ஏன் பிறந்தாய் மகனே” உணர்ச்சிகரமான ஆழத்தின் அடுக்குகளைச் சேர்த்தது. படத்தின் விமர்சன மற்றும் வணிக வெற்றி, தேசிய திரைப்பட விருது (சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) உட்பட, அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது மற்றும் இயக்குநரின் வெற்றி சூத்திரத்தை உறுதிப்படுத்தியது. படிக்காத மேதை (1960): எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கம் 1953 ஆம் ஆண்டு ஆஷாபூர்ணாதேவியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட, பெங்காலி திரைப்படமான ஜோக் பியோக்கின், மறுவுருவாக்கமான படிக்காத மேதை, உண்மையான நல்லொழுக்கமும் ஞானமும் நல்ல விழுமியங்களைக் கொண்ட குணத்தை சார்ந்த்தே அன்றி முறையான கல்வியைச் சார்ந்தது அல்ல என்ற கருப்பொருளை ஆதரித்தது. சிவாஜி கணேசன், ரங்கன் என்ற படிக்காத, அப்பாவி அனாதையாக அற்புதமான நடிப்பை வழங்கினார், அவரது அசைக்க முடியாத விசுவாசமும் உள்ளார்ந்த நற்குணமும் அவரை வளர்த்த பணக்கார குடும்பத்திற்கு ஒரு தார்மீக திசைகாட்டியாக மாற்றுகிறது, குறிப்பாக அவர்கள் வசதியிழந்து துரதிர்ஷ்டங்களை எதிர்கொள்ளும்போது. எழுத்தறிவை விட குணமே முக்கியம் என்று இப்படம் கூறியது, கணிசமான சமூக அதிர்வுகளை ஏற்படுத்தியது, குறிப்பாக நடுத்தர வர்க பார்வையாளர்களிடம். இப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்தார், கண்ணதாசன் இரண்டு பாடல்களுக்கு வரிகளை வழங்கினார்; “ஒரே ஒரு ஊரிலே” குறிப்பாக அதன் நினைவுகூரலுக்காக தனித்து நிற்கின்றது. படிக்காத மேதை ஒரு திரைக்கதை போக்கை உருவாக்கியது, பின்னர் வந்த பல திரைப்படங்களில் உன்னதமான, படிக்காத வேலைக்காரனை மையமாகக் கொண்டு, இறுதியில் குடும்பத்தைக் காப்பாற்றுபவராக அவரை சித்தரிப்பதைக் காணலாம். பாவ மன்னிப்பு (1961): நல்லிணக்கத்திற்கான ஒரு மெலோடிரமாடிக் வேண்டுகோள் பாவ மன்னிப்பில் பீம்சிங் தனது மதச்சார்பற்ற அடையாளத்தை இன்னும் உருவாக்கி வரும் ஒரு பதிநான்கு வருட இளம் தேசத்தில் மத சகிப்புத்தன்மை மற்றும் வகுப்புவாத நல்லிணக்கம் என்ற முக்கியமான கருப்பொருளை மையப்படுத்த மெலோடிராமாவின் சாத்தியங்களை திறமையாகப் பயன்படுத்தினார். வெவ்வேறு மதங்களில் வளர்க்கப்பட்டு இறுதியில் மீண்டும் இணைந்த பிரிக்கப்பட்ட உடன்பிறப்புகளின் சிக்கலான கதை தேசிய ஒற்றுமைக்கான ஒரு ஆற்றல்வாய்ந்த உருவகமாக செயல்பட்டது. (மன்மோஹன் தேசாயின் அமர் அகபர் ஆன்டெனி (1977) க்கு பல வருட முன்பே அத்தகைய உடன்பிறப்புகள் பிரிந்து இணையும் சூத்திரத்தை பெரிய அளவில் மைய நீரோட்ட சினிமாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்களில் ஒருவர் பீம்சிங்.) ஒரு இந்து வைர வியாபாரி (ஜெமினி கணேசன்), ஒரு முஸ்லிம் கிராம மருத்துவர் (சிவாஜி கணேசன்), மற்றும் ஒரு கிறிஸ்தவ நல்லெண்ணம் கொண்டவர் (தேவிகா) ஆகியோரைக் கொண்ட படத்தின் கதை, முக்கிய மதங்களை குறியீடாக பிரதிநிதித்துவப்படுத்தியது, வரலாற்றாசிரியர்கள் “காந்திய “மதச்சார்பின்மை” என்று விவரித்ததை ஆதரித்தது. கண்ணதாசனின் வரிகள் குறிப்பிடத்தக்கவை: “வந்த நாள் முதல்” போன்ற பாடல்கள் மதங்களின் உருவாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கின, மேலும் அவரது வரிகள் திரைக்கதையின் தூண்டுகையை ஆழப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டன. பிரபலமான ஈத் திருவிழா பாடலான “எல்லோரும் கொண்டாடுவோம்” உட்பட விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, படத்தின் உட்பொருளை மேலும் பெருக்கியது. பாவ மன்னிப்பு குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்றது, இதில் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதும் அடங்கும், இந்த கௌரவம் தமிழ் திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்தது. பாவமன்னிப்பிலும் மற்றும் பல “ப” வரிசைப் படங்களிலும் பீம்சிங்கின் மதச்சார்பற்ற வெளிக்கான ஏக்கத்தை புத்தரின் படங்கள்/சிலைகள் மூலம் காணலாம். பீம்சிங்கின் கலைப் பார்வையில் புத்தர் ஒரு தற்செயலான அலங்காரமல்ல, அது அவரது ஆன்மாவின் ஆழமான ஒரு பிரதிபலிப்பு. அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே, ‘புத்தா பிக்சர்ஸ்’, ஒரு அமைதியான பிரகடனமாக ஒலித்தது. அவரது படங்கள் தொடங்குவதற்கு முன், திரையில் தோன்றும் புத்தரின் சாந்தமான திருவுருவம், மற்றும் புத்தருடன் சேர்ந்தே ஒலிக்கும் “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சர்ணம் கச்சாமி,” வரவிருக்கும் மெலோடிராமாவுக்கு ஒரு நல்லாசியை வழங்குவது போலிருந்தது. பீம்சிங்கின் புத்தர், மதங்களைக் கடந்து மனிதநேயத்தை அரவணைக்கும் ஒரு கருணையின் வடிவம்; அது அமைதியையும், உள்ளொளியையும் தேடும் ஒரு ஆன்மீகப் பயணம். ஒரு இளம் தேசத்தின் மத நல்லிணக்கக் கனவுகளுக்கு, அவர் புத்தரை ஒரு மென்மையான குறியீடாக முன்வைத்தார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, பீம்சிங் ஏற்றிவைத்த அந்த மெல்லிய தீபம், பா. ரஞ்சித் போன்ற படைப்பாளிகளின் கைகளில் ஒரு புரட்சிப் பெருநெருப்பாக உருமாறியது. பீம்சிங் விதைத்த அந்த அமைதியான ஆன்மீகத் தேடல், ரஞ்சித்தின் படைப்புகளில் ஒரு சமூக விடுதலைக்கான அரசியல் ஆயுதமாக மறுபிறவி எடுத்தது. ரஞ்சித்தின் புத்தர், சாதியக் கட்டுமானங்களை உடைத்தெறிந்த ஒரு வரலாற்று நாயகர்; அது பாபாசாஹேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமத்துவத்தின் தத்துவ முகம். இவ்வாறாக, தமிழ் சினிமாவில் புத்தரின் பயணம் ஒரு ஆழமான பரிணாமத்தைக் காண்கிறது. பீம்சிங்கின் உலகப் பொதுவான மனிதநேயத்தின் மென்குரலில் இருந்து, ரஞ்சித்தின் சமூக நீதிக்கான ஓங்கி ஒலிக்கும் மனிதத்தின்குரலாக அது உருவெடுத்துள்ளது. ஒரே குறியீடு, ஒரு மக்களின் மனசாட்சியின் வளர்ச்சியை எவ்வாறு உள்வாங்கிப் பிரதிபலிக்கிறது என்பதற்கு இதுவே ஒரு மகத்தான சாட்சியமாகும். பாசமலர் (1961): உடன்பிறந்தோரின் அன்பின் அமரத்துவம் பெரும்பாலும் ஒரு வரலாற்று சாதனை மற்றும் பெரும் காப்பியங்களைப் போல கண்ணீரை பின் தொடர்ந்த படம் என்று பாராட்டப்படும் பாசமலர், உடன்பிறந்தவர்கள் சார்ந்த மெலோடிராமாவின் பீம்சிங்கின் மைல்கற்களில் உச்சக்கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. இப்படம் ஒரு மூத்த சகோதரன், ராஜசேகர் (சிவாஜி கணேசன்), மற்றும் அவரது இளைய சகோதரி, ராதா (சாவித்திரி) ஆகியோருக்கு இடையிலான தீவிர உணர்வெழுச்சியினால் உந்தப்பட்ட மற்றும் இறுதியில் சோகமான பிணைப்பை சித்தரிக்கிறது, அவர்களின் வாழ்க்கை தவறான புரிதல்கள் மற்றும் ஒரு பேராசை கொண்ட உறவினரின் சூழ்ச்சிகளால் சிதைக்கப்படுகிறது. இரு உடன்பிறப்புகளும் கைகோர்த்து, ஒருவர் மற்றவருக்காக வாழ்ந்து அவர்களின் துயரமான மரணங்களில் முடியும் கதை, தமிழ் சினிமாவில் சகோதரன்-சகோதரி தியாகத்தின் ஒரு நிகரில்லா எடுத்துக்காட்டாக மாறியது. சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரியின் நடிப்பு பாசமலரில் அதன் சிகரத்தை எட்டியது. படத்தின் தொன்ம நிலைக்கு அவை பெரிதும் பங்களித்தது. கண்ணதாசனின் உணர்ச்சிகரமான வரிகளுடன் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, என்றும் பிரபலமான திருமணப் பாடலான “வாராயென் தோழி வாராயோ” மற்றும் “மலர்களைப் போல்” ஆகியவை இன்றும் எதோ ஒரு தமிழ்பேசும் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களே. பாசமலர் தேசிய திரைப்பட விருதை வென்றது மட்டுமல்லாமல் சகோதரன்-சகோதரி உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ஒரு திரைக்கதை மாதிரியையும்/அச்சையும் அமைத்தது, அதன் செல்வாக்கு தொடர்ந்து வரும் சகோதர-சகோதரி பாசத்தில் தோய்ந்த தமிழ் மட்டும் இந்திய சினிமாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. (பாசமலருக்கு பின் வெளிவந்த எல்லாம் உனக்காக [1961] என்ற படம் ஓடாததற்கு காரணம் அதில் நடித்திருந்த சிவாஜி-சாவித்திரியை ஜோடியாக தமிழக மக்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். பாசமலரின் அண்ணன் – தங்கையின் தாக்கம் தமிழ் மனதில் ஏதோ ஒரு வகையில் இன்றளவும் உள்ளது என்று சொல்லலாம்.) பாலும் பழமும்: காதலும் அர்ப்பணிப்பும் கூடுதலாக 1961 ஆம் ஆண்டில், ‘பாலும் பழமும்’ தமிழ் சினிமாவின் மணிமகுடத்தில் மற்றொரு வைரமாக ஜொலித்தது. சிவாஜி கணேசனும் சரோஜா தேவியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், ஒரு மருத்துவர், அவரது அர்ப்பணிப்புள்ள மனைவி, அவரது அதிர்ச்சிகரமான பார்வையிழப்பு மற்றும் அவரது தன்னலமற்ற தியாகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகும். இது மென்மையான உணர்ச்சிகளையும் தியாகத்தின் உன்னதத்தையும் ஆராய்ந்தது. நோய், அணையாத காதல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய கருப்பொருள்கள் நெஞ்சை உருக்கும் அழகுடன் சித்தரிக்கப்பட்டன. “மெல்லிசை மன்னர்கள்” விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்து, கவிஞர் கண்ணதாசனின் ஆழமான வரிகளுடன் கூடிய பாடல்கள் இந்தப் படத்திற்கு மேலும் மெருகூட்டின. குறிப்பாக, டி. எம். சௌந்தரராஜன் குரலில் ஒலித்த “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” என்ற பாடல் தனிமையின் வலியையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியது. ஒளிப்பதிவாளர் விட்டல் ராவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் பாடலின் காட்சி அமைப்பும் கவித்துவமாக இருந்தன. “பாலும் பழமும்,” “இந்த நாடகம்,” “காதல் சிறகை,” மற்றும் “நான் பேச நினைப்பதெல்லாம்” போன்ற பிற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. கர்நாடக ராகங்கள் மற்றும் பாரம்பரிய இசை கலந்து உருவான பாடல்கள், படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்தன. இன்றும் விரும்பி பாடப்படும்/கேட்கப்படும் தத்துவார்த்தப் பாடல் “போனால் போகட்டும் போடா”, அத்தகைய அழகியலுக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பக/பழைய காட்சிகளை, சிவாஜி கணேசன் பல்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு கோணங்களில் உதட்டசைத்து பாடிக் கொண்டே உணர்ச்சிவசமாக நடந்து வரும் காட்சிகளுனூடாக செருகி தொகுக்கப்பட்டது. பீம்சிங்கின் சகபயணியான திருமலை அவர்களின் அடுக்கி இணைத்து தொகுக்கும் (மோன்டாஜ்) நிபுணத்துவமும் இதில் வெளிப்பட்டது. பார்த்தால் பசி தீரும் (1962): சிக்கலான உணர்ச்சி பிரமைகளின் அடுக்குகள் பார்த்தால் பசி தீரும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், சிக்கலான உணர்ச்சிகரமான கதை முடிச்சுகளுடன் பல நட்சத்திரங்களைக் கொண்ட கதையாடலை கையாளும் பீம்சிங்கின் திறமையைக் வெளிப்படுத்தியது. இப்படம் ஆழ்ந்த தியாகம், நீடித்த நட்பு, காதல் முக்கோணங்கள் மற்றும் போரினால் ஏற்படும் பிரிவினைகள், தவறான அடையாளங்கள் மற்றும் சோகமான தேர்வுகளுக்கு வழிவகுக்கும் கருப்பொருள்களை ஆராய்ந்தது. இப்படத்தின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் தொடக்க பெயர் அட்டவணை; அவை முக்கிய நடிகர்களை தனித்தனியாக பெயரிடவில்லை, ஆனால் “உங்கள் அபிமான நட்சத்திரங்கள்” என்ற கூட்டு மரியாதையுடன் அவர்களை அறிவித்தன, இது அப்படத்தின் மகத்தான நட்சத்திர/மல்டி ஸ்டாரர் ஆற்றலுக்குக்கு ஒரு சான்றாகும் ––– சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, மற்றும் பி. சரோஜா தேவி ––– மற்றும் நட்சத்திரங்களாக அவர்களின் திரை ஆளுமைகளின் நுட்பமான சமநிலைக்கும். கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையுடன் ஒத்திசைந்து, “அன்று ஊமைப் பெண்ணல்லோ”, “கொடி அசைந்ததும்”, மற்றும் உணர்ச்சிகரமான தலைப்புப் பாடல் போன்ற மறக்கமுடியாத பாடல்களை அளித்தன. படித்தால் மட்டும் போதுமா (1962): கல்வி, விழுமியங்கள் மற்றும் இலக்கிய வேர்கள் உள்ளார்ந்த நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து, படித்தால் மட்டும் போதுமா (கல்வி மட்டும் போதுமா?) என்ற கேள்வியின் மூலம் மனிதமற்ற முறையான கல்வியின் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. பெங்காலி எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் இரண்டு உறவினர்களுக்கு (சிவாஜி கணேசன் மற்றும் கே. பாலாஜி) இடையிலான ஆழமான நட்பை சித்தரித்தது, அவர்கள் இருவரும் ஒரே பெண்ணுடன் (சாவித்திரி) காதல் வயப்படும்போது அவர்களின் ஆழமான நட்பு சோதிக்கப்படுகிறது, இது வஞ்சனை மற்றும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு பெங்காலி இலக்கியப் படைப்பிலிருந்து இந்தத் தழுவல், பரந்த இந்திய கதை மரபுகளுடன் பீம்சிங்கின் ஈடுபாட்டைக் காட்டியது, இது பீம்சிங் அவர்களது ஜெயகாந்தனின் பிற்காலத் தழுவல்களுக்கு ஒரு முன்னோடியாகும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் “அண்ணன் காட்டிய வழியம்மா” மற்றும் பிருந்தாவனி ராகத்தை அடிப்படையாகக் கொண்ட “பொன் ஒன்று கண்டேன்” போன்ற பாடல்கள் இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. YMCA நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்ட “பொன் ஒன்று கண்டேன்” போன்ற பாடல்களின் படமாக்கம் பெரிதும் போற்றப்பட்டன. மெலோடிராமாக்களின் காட்சி உருவாக்கத்தைப் பற்றிய உரைகளாக அவை இருக்கின்றன. பார் மகளே பார் (1963): அடையாளத்தின் நெகிழ்வுத்தன்மை பார் மகளே பார் பெற்றால்தான் பிள்ளையா என்ற மேடை நாடகத்திலிருந்து அதன் சாரத்தை எடுத்துக்கொண்டது, அதுவே இந்தித் திரைப்படமான பர்வரிஷ் (1958) இன் தழுவலாகும். இது தழுவல் வரலாற்றுக்கு பிரபலமான இந்திய சினிமாவில் பீம்சிங்கின் செறிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிறக்கும்போதே குழந்தைகள் மாற்றப்பட்ட மெலோடிராம உருவகத்தை மையமாகக் கொண்ட படத்தின் கதை, தவறான அடையாளம், குடும்ப கௌரவத்தின் சுமை மற்றும் கதாபாத்திரங்கள் இரத்த உறவுகளுக்கும் வளர்ப்புக்கும் இடையிலான கேள்விகளுடன் போராடும்போது ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு ஆகியவற்றை ஆராய ஒரு வளமான கதைக்களத்தை உருவாக்கியது. இறுதி நல்லிணக்கம் வம்சாவளியாக வரும் ரத்தபந்தத்தை விட விழுமியங்களை அடிப்படியாகக் கொண்ட குணத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, மற்றும் எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்திருந்தனர், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையும் கண்ணதாசனின் பாடல்களும், குறிப்பாக, “அவள் பறந்து போனாளே,” மிகவும் பிரசித்தியானவை. பழனி (1965): கிராமிய வண்ணத்துடன் மெலோடிராமா 1962 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பூதானாவின் ரீமேக்கான பழனி, “ஒரு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தின் சோதனைக்குரிய வாழ்க்கையை” சித்தரித்தது. மெலோடிராம வகைமைக்குள் செயல்படும் அதே வேளையில், கிராமப்புற வாழ்க்கையின் அதன் அவதானிப்பு மற்றும் கலைத் திரைப்பட சாயல் (பூதானா ஒரு குறிப்பிடத்தக்க கன்னடத் திரைப்படம்) யதார்த்தத்தை முன்னிறுத்தி, பகட்டான, பாணி அணுகுமுறையை பின்னுக்குத் தள்ளியது. விமர்சகர்கள் இந்த அன்றாட இருப்பை சித்தரிப்பதில் அதன் “மெதுவான வேகத்தை” குறிப்பிட்டனர், இது மெலோடிராமாவின் வழக்கமான துரித வேகத்திற்கும் மற்றும் வியத்தகு தாளகதிக்கும் ஒரு சுவாரஸ்யமான எதிர்மறை அழகியலாகும். திருமலை அவர்களின் பிற்காலத்தைய (வணிக சினிமாவிற்குள்) வித்தியாசமான திரைக்கதைகளை எதிர்பார்த்த படம் என்று பழனியைச் சொல்லலாம். சிவாஜி கணேசன் மற்றும் தேவிகா நடித்த இப்படம் ஒரு விமர்சன வெற்றியாக அமைந்து, தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. பாடலாசிரியர் கண்ணதாசன் தனிப்பட்ட துயரத்தில் இருந்த காலத்தில் எழுதியதாகக் கூறப்படும் “அண்ணன் என்னடா” பாடலின் வரிகள், பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான வாழ்வை எவ்வாறு செறிவூட்டின என்பதற்கு உதாரணமாகும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் டிஎம்எஸ் அவர்களின் உறுதுணையுடன். ஒளியும் உணர்வும்: பீம்சிங் – விட்டல் ராவ் கூட்டணியின் ரசவாதம் ஏ. பீம்சிங்கின் உணர்ச்சிமிகு காவியங்களின் உயிர்நாடி, அவர் கரங்கள் கோத்த கலைஞர்களின் காட்சி நேர்த்தியால் மெருகேறியது. அவர்களுள், ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ் முதன்மையானவர். படத்தொகுப்பிலும் வல்லவரான பீம்சிங்கின் இயக்கத்தில், ‘பாகப்பிரிவினை’, ‘பாசமலர்’ போன்ற காலத்தால் அழியாக் காவியங்கள் உயிர்பெற்றன; அவரே அவற்றின் நேர்த்தியான தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விட்டல் ராவின் விழிகள் வழி விரிந்த காட்சிகள், ‘பதி பக்தி’, ‘பாகப்பிரிவினை’, ‘பாசமலர்’ தொடங்கி, பிற்காலத்திய படைப்புகளான ‘பழனி’, ‘சாந்தி’, மற்றும் இந்தி மறு ஆக்கமான ‘ராக்கி’ வரை, பீம்சிங்கின் திரைப்பயணத்தில் ஒரு தனித்துவமான, நிலையான அழகியல் முத்திரையைப் பதித்தன. ஜெயகாந்தனின் எழுத்தோவியமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற பீம்சிங்கின் நுட்பமான இலக்கியப் படைப்புகளின் திரையாக்கத்திலும் விட்டல் ராவின் பங்களிப்பு தொடர்ந்தது; அங்கு அவரின் ஒளிப்பதிவு, கதையின் ஆன்மாவைப் படம் பிடித்து, பெரும் பாராட்டை ஈட்டியது. இவர்களின் நீண்டகாலக் கூட்டணி, பீம்சிங்கின் உணர்ச்சிப் பிரவாகங்களை வெள்ளித்திரையில் கலைநயத்துடன் வடித்ததுடன், இருவருக்குமிடையிலான ஆழமான புரிதலையும், கலைநேர்த்தியையும் பிரகடனப்படுத்தியது. விட்டல் ராவின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள, அக்காலத்திய தமிழ் சினிமாவின் காட்சிமொழிக்கு அவர் மெருகூட்டிய விதமும், மெலோடிராமாவின் மரபுகளை அவர் கையாண்ட செவ்வியல் ஒளிப்பதிவு நுட்பங்களும் ஒரு திறவுகோலாக இருக்கின்றன. உணர்ச்சிமிகு திரைக்காவியங்களில், ஒளிப்பதிவு என்பது வெறும் பதிவுக் கருவி மட்டுமல்ல; அதுவே உணர்வுகளை வடிக்கும் ஓர் அழகியல் தூரிகை. ஒளிக்கலவை, விளக்குகளின் ஜாலம், கேமராக் கோணங்கள், அதன் அசைவுகள் யாவும் கதைமாந்தரின் மனநிலையைப் பிரதிபலிக்கும், அவர்களின் அகவுலகை வெளிச்சமிட்டுக் காட்டும், உணர்ச்சித் தீவிரத்தை உச்சத்திற்குக் கொண்டுசெல்லும். கதாபாத்திரங்களின் கம்பீரத்தை உயர்த்திக் காட்ட தாழ்ந்த கோணக் காட்சிகளும், அவர்களின் கையறுநிலையையும், மன அழுத்தத்தையும் உணர்த்த உயர்ந்த கோணக் காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் கலைத்திறனுக்குச் சான்றுகளாகும். குறிப்பாக, அவரது அண்மைக்காட்சிகள் (குளோஸ்-அப்) நடிகர்களின் முகபாவனைகளில் மின்னலெனத் தோன்றி மறையும் நுட்பமான உணர்வலைகளையும், நெஞ்சை உருக்கும் வேதனையையும் அள்ளிப் பருகி, பார்வையாளர்களைக் கதாபாத்திரங்களின் உளவியல் புயலுக்குள் ஈர்த்து, அவர்களின் உணர்வுக் குமுறல்களுடன் ஒன்றிடச் செய்தது. கதை நகர்விலும், உணர்ச்சி வெளிப்பாட்டிலும் பாடல் காட்சிகள் முக்கியப் பங்காற்றின. உதாரணமாக, ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில், ஸ்டுடியோ அரங்கிற்குள்ளேயே சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரை அண்மைக்காட்சிகளில் ஒளியூட்டிப் படமாக்கிய விட்டல் ராவின் திறமை, இந்திய சினிமா பாடல் படமாக்கலில் ஒரு பொன்னெழுத்து. விட்டல் ராவின் அண்மைக்காட்சி அழகியல், உணர்வுகளின் ஆழத்தை அள்ளியெடுப்பதில் நிகரற்றது. பீம்சிங்கின் திரைப்படங்களுக்கே உரிய உணர்ச்சிமயமான உலகை உருவாக்குவதில் விட்டல் ராவின் ஒளிப்பதிவு கருவியாக விளங்கியபோதும், அது தேவையற்ற காட்சி ஆரவாரங்களில் சிக்கிக்கொள்ளவில்லை. மாறாக, பீறிடும் உணர்ச்சிகளை மிக நுட்பமாகவும், அதே சமயம் வலிமையாகவும் காட்சிப்படுத்தி, அவற்றை யதார்த்தத்தின் சாயலோடு கதைக்குள் இழையவிட்டதே அவரின் தனிச்சிறப்பு. ராவின் கேமரா, பார்வையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல்பட்டது. குறிப்பாக, சிவாஜி கணேசன் போன்ற நடிப்புலக மேதைகளின் உணர்ச்சிமிகு காட்சிகளில், அவர்களின் முகபாவனைகளில் முழு கவனம் செலுத்தி, பீம்சிங்கின் மெலோடிராமாக்களுக்கு உயிர் கொடுத்தது. நெருக்கமான குடும்பச் சூழல்களையும், அக உணர்வுகளையும் ஒளியூட்டுவதில் ராவின் தேர்ச்சி, கதாபாத்திரங்களின் பிரம்மாண்டமான உடல்மொழிகளையும், சின்னஞ்சிறு உணர்வு மாற்றங்களையும் ஒருங்கே சட்டகத்திற்குள் அடக்கி, உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தவும் கேமராவின் இயக்கங்களை நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, பரவலான பாராட்டைப் பெற்றது. ஜெயகாந்தனின் உளவியல் யதார்த்தவாதப் படைப்புகளின் திரையாக்கத்தில் அவர் ஆற்றியப் பணி, அவரின் பன்முகத்தன்மையையும், கதையின் தன்மைக்கேற்ப – அது பிரம்மாண்டமான குடும்ப காவியமோ அல்லது ஆழமான கதாபாத்திர ஆய்வோ – தனது காட்சிப் பாணியை மாற்றியமைக்கும் அவரின் அசாத்தியத் திறனையும் பறைசாற்றியது. பீம்சிங் – விட்டல் ராவ் கூட்டணியில் உருவான காட்சிமொழி, மனித உணர்வுகளின் நுட்பமான அலைகளை, காலத்தால் அழியாத திரை ஓவியங்களாகச் செதுக்கியதில் தமிழ் சினிமாவின் நிகரற்ற அழகியல் தனித்துவம்/பாய்ச்சல். இந்தித் திரையில் பீம்சிங்கின் பயணம்: “மதராஸி பிக்சர்” எனும் தெற்கத்திய குடும்பப் படங்களின் தாக்கம் ஏ. பீம்சிங்கின் இயக்கத் திறமை தமிழ் திரையுலகின் எல்லைகளைக் கடந்து, இந்தித் திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தது. தனது வெற்றிப் படைப்புகளையே இந்தியில் மறு ஆக்கம் செய்து, அங்கும் அவர் வாகை சூடினார். தங்கள் பிராந்திய உணர்வுக் காவியங்களை அகில இந்திய ரசிகர்களுக்காகத் திறம்பட மறுபடைப்பு செய்த தென்னிந்திய இயக்குநர்களின் வரிசையில், பீம்சிங் ஒரு அதிமுக்கிய ஆளுமையாக விளங்கினார். அவரது இந்திப் படங்கள், அவரின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், கருப்பொருளையும் பரந்த தேசிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ததோடு, இந்திய சினிமாவிற்குள் கதைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் துடிப்பான கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் ஒரு பாலமாக அமைந்தன. அவரின் புகழ்பெற்ற இந்தி மறு ஆக்கங்களில் சில: ‘மெயின் சுப் ரஹூங்கி’ (1962) – இது விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘களத்தூர் கண்ணம்மா’ (1960) வின் தழுவல்; ‘ராக்கி’ (1962) – இது காலத்தால் அழியாத கண்ணீர்க் காவியமான ‘பாசமலர்’ (1961) இன் மறு உருவாக்கம்; மற்றும் ‘காந்தான்’ (1965) – இது பெரும் வெற்றி பெற்ற குடும்ப சித்திரமான ‘பாகப்பிரிவினை’ (1959) இன் இந்தி வடிவம். மேலும், ‘படிக்காத மேதை’ (1960) யின் மறு ஆக்கமான ‘மெஹர்பான்’ (1967) (இதற்காக பீம்சிங் பிலிம்பேர் சிறந்த இயக்குநர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்) மற்றும் ‘சாந்தி’ (1965) யின் மறு ஆக்கமான ‘கௌரி’ (1968) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. கே. சங்கரின் தமிழ் திரைப்படமான ‘ஆலயமணி’யின் இந்தி மறு ஆக்கமான ‘ஆத்மி’ (1968) ஐயும் அவர் இயக்கினார். கலைப்படைப்புகளை, குறிப்பாக மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மறு ஆக்கம் செய்வது என்பது, தனித்துவமான சவால்களை உள்ளடக்கிய ஒரு நுட்பமான கலை. பீம்சிங்கின் பல இந்தி மறு ஆக்கங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, முன்னணி நடிகர்களுக்கு விருதுகளையும் பெற்றுத் தந்தன என்றாலும், தமிழ் மூலங்களுடன் ஒப்பிடுகையில், அவை சற்றே வலிமை குறைந்ததாகவோ அல்லது “நீர்த்துப் போனதாகவோ” அமைந்திருந்ததாக சில விமர்சகர்களும், ரசிகர்களும் கருதினர். உதாரணமாக, ‘மெயின் சுப் ரஹூங்கி’, மீனாகுமாரியின் தேர்ந்த நடிப்பும், சித்ரகுப்தின் இனிய இசையும் இருந்தபோதிலும், மூலமான ‘களத்தூர் கண்ணம்மா’வின் உயிர்ப்பும், முன்னணி ஜோடியின் (ஜெமினி கணேசன் – சாவித்திரியின்) ஈர்ப்பும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனின் தாக்கமும் இதில் சற்றே குறைந்திருந்ததாகக் கூறப்பட்டது. எனினும், பீம்சிங்கை இந்தி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் இப்படம் ஒரு முக்கியப் பங்காற்றியது. ‘பாசமலர்’ எனும் கண்ணீர் காவியத்தின் இந்தி வடிவமான ‘ராக்கி’, விறுவிறுப்பான கதை ஓட்டத்தைக் கொண்டிருந்தாலும், உணர்வுபூர்வமான நடிப்பில் மூலத்தை எட்டவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. வட இந்திய கலாச்சார உணர்வுகளோடு இயைந்து போகும் வண்ணம், உடன்பிறப்புப் பாசத்தின் திருவிழாவான ரக்ஷா பந்தன் அன்று படத்தின் உச்சக்கட்டம் அமைக்கப்பட்டிருந்தது ஒரு புத்திசாலித்தனமான உத்தி. அசோக் குமார்-வஹிதா ரஹ்மான் பாசமிகு உடன்பிறப்புகளாக பாராட்டும் படியான நடிப்பை வழங்கியிருந்தாலும், தமிழ் மூலத்தில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் வெளிப்படுத்திய உணர்ச்சிப் பிணைப்பின் ஆழத்தையும், தீவிரத்தையும் பிரதிபலிப்பது சவாலாகவே இருந்தது. ‘ராக்கி’ திரைப்படத்திற்கு ரவி அளித்த இசை இனிமையாக இருப்பினும், அவரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அது நிலைபெறவில்லை. ‘பாகப்பிரிவினை’யின் மறு ஆக்கமான ‘காந்தான்’, கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. சிலர், இப்படம் அதீத மெலோடிராமாவாகவும், வழக்கமான காட்சிகளின் கோர்வையாகவும், வழமையான திரைக்கதை மற்றும் “செயற்கையான வசனங்களால்” பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கருதினர். எனினும், நூதனின் இயல்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், சுனில் தத் தனது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார். மறுபுறம், கூட்டுக் குடும்பத்தின் நுட்பமான உறவுச் சிக்கல்களைத் திறம்படச் சித்தரித்த நல்ல குடும்பச் சித்திரம் என சில ரசிகர்கள் கொண்டாடினர். இத்தகைய மாறுபட்ட கருத்துக்கள், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பின்னணியில் வேரூன்றிய உணர்ச்சிக் காவியங்களை வேற்று மொழிக்கு மாற்றுவதில் உள்ள உள்ளார்ந்த சவால்களைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தமிழ் பண்பாட்டுச் சூழலில் ஆழமாகப் பதிந்த சிவாஜி கணேசன் போன்ற ஒரு நடிப்பு ஆளுமையின் ஈர்ப்பையும், அவரின் தனித்துவமான நடிப்புப் பாணியையும், அல்லது மூலப்படங்களுக்கு உயிர் கொடுத்த குறிப்பிட்ட உணர்வுக் குறியீடுகளையும், சமூக-பண்பாட்டு நுணுக்கங்களையும் பிறிதொரு மொழி, பண்பாட்டுச் சூழலில் அப்படியே கொண்டுவருவது என்பது இயலாத காரியம். ‘ராக்கி’யில் ரக்ஷா பந்தன் திருவிழாவை மையப்படுத்தியது போன்ற “அகில இந்திய” ரசனைக்கேற்ற மாற்றங்கள், சில சமயங்களில் மூலப்படத்தின் ஆன்மாவை அறியாமலேயே மாற்றிவிடுவதும் உண்டு. ஆயினும், பீம்சிங்கின் கதைக் கருக்கள், மொழிகளைக் கடந்து வணிக வெற்றியைப் பெறும் அளவிற்கு உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருந்தது, அவரின் கதைசொல்லல் ஆற்றலுக்குச் சிறந்த சான்று. இந்தித் திரையுலகிற்காகத் தன் கதைகளை வெற்றிகரமாக மறு ஆக்கம் செய்ததிலும், மூலப்படங்களின் தீவிரத்தை அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் உணர்ச்சி அடர்த்தி சற்றே குறைந்ததாக உணர்ந்தபோதிலும், வணிக வெற்றியை ஈட்டியதிலும் அடங்கியிருந்தது அவரின் தனித்திறன். இந்த கலாச்சார சமரசப் பயணத்தில் அவர் ஒரு தேர்ந்த வழிகாட்டியாகவே விளங்கினார். ‘காந்தான்’, ‘ராக்கி’ போன்ற படங்களின் வெற்றி, உணர்ச்சிமிகு நாடகங்களை தேசிய அளவில் அரங்கேற்றவல்ல ஒரு சிறந்த இயக்குநராக அவரின் புகழை நிலைநிறுத்தியதுடன், இந்திய சினிமாவில் பிராந்தியங்களுக்கிடையேயான கதைப் பரிமாற்றத்திற்கும் அவர் ஆற்றியப் பங்களிப்பை நல்லுதாரணமாக்கியது. ஏ. பீம்சிங்கின் சில முக்கிய இந்தி மறு ஆக்கங்களும் தமிழ் மூலங்களும் – ஒரு ஒப்பீடு: இந்தித் திரைப்படம் (வெளியான ஆண்டு) தமிழ் மூலம் (வெளியான ஆண்டு) சில குறிப்புகள் மெயின் சுப் ரஹூங்கி (1962) களத்தூர் கண்ணம்மா (1960) மீனா குமாரி; கமல் ஹாசன் (குழந்தை நட்சத்திரமாக தமிழில்); மூலத்தின் உணர்வு ஆழம் இந்தியில் சற்றே குறைவு என ஒரு பார்வை. ராக்கி (1962) பாசமலர் (1961) அசோக் குமார், வஹீதா ரஹ்மான். ரக்ஷா பந்தன் மையக்கரு. சிவாஜி-சாவித்திரி ஜோடியின் தீவிரத்தை எட்டுவதில் சவால். காந்தான் (1965) பாகப்பிரிவினை (1959) சுனில் தத், நூதன். கூட்டுக் குடும்பச் சித்திரம். நூதனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சுனில் தத்திற்கு பிலிம்பேர் விருது. மெஹர்பான் (1967) படிக்காத மேதை (1960) அசோக் குமாருக்கு பிலிம்பேர் விருது. பீம்சிங்கிற்கு சிறந்த இயக்குநர் பரிந்துரை. கௌரி (1968) சாந்தி (1965) சுனில் தத், நூதன் ஜோடி மக்களை கவர்ந்தது. ஆத்மி (1968) ஆலயமணி (1962) (கே. சங்கர்) திலீப் குமார், வஹீதா ரஹ்மான். பீம்சிங் இயக்கிய கே. சங்கரின் படத்தின் மறு ஆக்கம். இலக்கியத் தழுவல்கள்: ஜெயகாந்தன் படைப்புகளில் பீம்சிங்கின் ஈடுபாடு தன் திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில், புகழின் உச்சியில் இருந்த ஏ. பீம்சிங் அவர்கள், தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் ஆளுமையான ஜெயகாந்தனின் படைப்புகளுக்குத் தன் திரைக் கவனத்தைத் திருப்பினார். இது, அவரது கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி எனலாம். மனித உறவுகளின் சிக்கல்களையும், சமூக அவலங்களையும் கூர்மையாகவும், யதார்த்தமாகவும், உளவியல் ஆழத்துடனும் அலசிய ஜெயகாந்தனின் கதைகள், பீம்சிங்கின் பிரம்மாண்டமான குடும்பப் பாங்கான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை அளித்தன. சவாலான தனிப்பட்ட மற்றும் சமூகச் சூழல்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அகவுலகை ஆராயும், ஆழமான பாத்திரப் படைப்புகளை நோக்கிய ஒரு திருப்பமாக இது அமைந்தது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1977): இலக்கிய நயம், நுட்பம், சர்ச்சை ஜெயகாந்தனின் விருது பெற்ற நாவலான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (முதலில் 1970-இல் ‘தினமணி’யில் தொடராக வெளிவந்தது), அவரது புயலைக் கிளப்பிய ‘அக்னிப்பிரவேசம்’ (விகடன், 1968) சிறுகதையின் விரிவான வடிவமாகும். ஜெயகாந்தனே திரைக்கதை எழுத, வழக்கமான வணிக சினிமாவின் அம்சங்களைத் தவிர்த்து, பீம்சிங்கின் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இப்படம் அவரது கலைவாழ்வில் ஒரு தனித்துவமான முயற்சியாக அமைந்தது. பழமைவாத பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கங்காவின் (லட்சுமி) வாழ்வில் ஒரு பாலியல் வன்முறை ஏற்படுத்தும் பேரதிர்ச்சியையும், அதன் தொடர்ச்சியாக அவள் எதிர்கொள்ளும் சமூகத்தின் தீர்ப்புகளையும், தனிப்பட்ட உளவியல் போராட்டங்களையும், இறுதியில் தன்னைத் தாக்கியவனுடனேயே (ஸ்ரீகாந்த்) அவள் கொள்ளும் சிக்கலான, மரபு மீறிய உறவையும் இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்தது. நாவலின் உயிரோட்டமான, உணர்வுப்பூர்வமான திரைவடிவத்திற்காக இப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. கங்காவாக வாழ்ந்த லட்சுமியின் மகத்தான நடிப்பு, அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவின் பங்களிப்பும் படத்தின் தாக்கத்திற்குக் காரணமாகப் போற்றப்பட்டது. “திருமணம், பாலியல் மற்றும் பெண்களை சமூகம் நடத்திய விதம் குறித்த கடுமையான விமர்சனத்தை” முன்வைத்ததன் மூலம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இருப்பினும், நாவலின் உரையாடல்களை அப்படியே பயன்படுத்தியதில், காட்சிபூர்வமான கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் குறைந்திருந்ததாக தமிழ் சினிமாவின் நிகரற்ற, எனது பெருமதிப்பிற்குரிய வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் அவர்கள் தனது கருத்தை முன்வைத்தார். ஆயினும் சர்ச்சைக்குரிய கருப்பொருட்களை நேர்மையுடனும், உளவியல் ஆழத்துடனும் கையாண்ட பீம்சிங்கின் திறனை இந்த இலக்கிய மெலோடிராமா வெளிப்படுத்தியது. அவரது புகழ்பெற்ற ‘ப’ வரிசைப் படங்களின் சூத்திரங்களிலிருந்து விலகி, ஒரு புதிய பாதையை இது அமைத்தது. லட்சுமிக்குக் கிடைத்த தேசிய விருது, பீம்சிங்கின் இந்தத் துணிச்சலான கலைத்துவத் தேர்வை மேலும் உறுதிப்படுத்தியது. ஆசான் பாஸ்கரன் அவர்கள் கூறியபடி இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும்போது, ஆழ்ந்த உள்ளடக்கத்தை திரைக்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் இது உணர்த்தியது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ (1978): நவீன உறவுகளின் மென்மையான அலசல் ஜெயகாந்தனுடனான தனது வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்து, பீம்சிங் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற படத்தை இயக்கினார். இது ஜெயகாந்தனின் அதே பெயரிலான 1971 ஆம் ஆண்டு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. மீண்டும் ஸ்ரீகாந்த், லட்சுமி இணைய, ஜெயகாந்தனே திரைக்கதை அமைக்க, இப்படம் ஒரு நவீன திருமண உறவின் நுட்பமான சிக்கல்களை ஆராய்ந்தது. நடிகையான கல்யாணிக்கும், எழுத்தாளரான ரங்கசாமிக்குமிடையிலான உறவை மையமாகக் கொண்ட கதை, வாழ்க்கை, கலை, மனிதப் பிணைப்புகள் குறித்த அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் ஏற்படும் சவால்களையும், காதல், அகங்காரம் மற்றும் இறுதியில் ஏற்படும் புரிதலையும் அழகாகச் சித்தரித்தது. ஜனவரி 1978-இல் பீம்சிங்கின் மறைவிற்குப் பிறகு இப்படம் வெளியானது. முந்தைய படத்தைப் போல் பரவலான மக்கள் வரவேற்பைப் பெறத் தவறியபோதும், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. லட்சுமி தனது சிறந்த நடிப்பிற்காக மீண்டும் கௌரவிக்கப்பட்டு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார். வெளிப்புற வில்லத்தனங்களோ, பெரும் சோக நிகழ்வுகளோ இன்றி, அறிவுசார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான முரண்பாடுகளிலிருந்து எழும் மோதல்களை மையமாகக் கொண்ட, நுட்பமான, உளவியல் ரீதியான மெலோடிராமாவை நோக்கி பீம்சிங் நகர்ந்ததை இப்படம் காட்டியது. வயது வந்தோருக்கான உறவுகளின் ஆழமான இயக்கவியலில் கவனம் செலுத்தியது ஜெயகாந்தனின் இலக்கியப் பாணியின் சிறப்பம்சமாகும். பரவலான மக்கள் வரவேற்பைப் பெறத் தவறியபோதும், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது, ஒருவேளை தனது காலத்தை முந்திய படைப்பாகவோ அல்லது தேர்ந்த ரசிகர்களுக்கான படமாகவோ இது இருந்திருக்கலாம் என்பதையே உணர்த்தியது. ‘கங்கை எங்கே போகிறாள்?’ – ஒரு விடைதெரியா புதிர் ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளில், ‘கங்கை எங்கே போகிறாள்?’ (1978) என்ற நாவலும் இடம்பெறுகிறது. இது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையின் தொடர்ச்சியாக, அதன் நாயகி கங்காவின் மறுவாழ்வு நோக்கிய பயணத்தையும், அவள் ஒரு பொறுப்புள்ள வாழ்க்கையைத் தேடுவதையும் விவரிக்கிறது. முதல் நாவலின் திரைப்படத் தழுவலின் மகத்தான வெற்றியையும், தாக்கத்தையும் கருத்தில் கொள்ளும்போது, இதன் தொடர்ச்சியும் படமாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால், ஏ. பீம்சிங் ‘கங்கை எங்கே போகிறாள்?’ நாவலைத் தழுவி படம் இயக்கியதாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்குப் பிறகு, பீம்சிங் ‘கங்கை எங்கே போகிறாள்?’ படத்தை இயக்கினார் என்பதே வெறும் யூகம்தான். அத்தகைய ஒரு தழுவல் உருவாகாததற்கு, விதியின் கசப்பான விளையாட்டே காரணமாக இருக்கலாம். ஏ. பீம்சிங் ஜனவரி 1978-இல் காலமானார். ‘கங்கை எங்கே போகிறாள்?’ நாவலோ, டிசம்பர் 1978-இல் தான் முதன்முதலில் வெளியானது. இந்தக் கால இடைவெளி, பீம்சிங் அதன் திரைப்பட ஆக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. திரைவடிவம் பெறாத இந்தத் தொடர்கதை, பீம்சிங்கின் ஜெயகாந்தனுடனான வெற்றிகரமான கூட்டணியின் வரலாற்றில், ‘நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?’ என்ற ஒரு புதிரான கேள்வியாகவும், அவரது வாழ்வின் இறுதி, கலை வளம் மிக்க காலகட்டத்திற்கு ஒரு (தீவிர ரசிகர்களின்) எதிர்பார்ப்பு மிகுந்த அடிக்குறிப்பாகவும் நிலைத்துவிட்டது. முடிவுரை: தொடரும் ஏ. பீம்சிங்கின் கதைசொல்லல் லயம் ஏ. பீம்சிங்கின் திரையுலகப் பயணம், தமிழ் சினிமாவின் தீராத பக்கங்களில் ஒரு சிறந்த படைப்பாளியாக மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான மெலோடிராமாக்களின் நிகரற்ற வித்தகராகவும், மனித வாழ்வின் ஆழமான உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்ட ஒரு திரை மேதையாகவும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளின் சித்திரங்களில் அவருக்கிருந்த ஆளுமை, குறிப்பாகப் புகழ்பெற்ற ‘ப’ வரிசைப் படங்கள், ஒரு தனித்துவமான, காலத்தால் அழியாத முத்திரையைப் பதித்தன. பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகத்தான நடிப்பை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட இந்தப் படங்கள், அடங்கிய சோகத்திலிருந்து ஆவேச அழுகை வரை, மனித உணர்வுகளின் முழு வீச்சையும் வெளிப்படுத்தின. இசை மேதைகள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் கவியரசர் கண்ணதாசனின் கவித்துவமான வரிகளுடனான அவரது அற்புதமான கூட்டணி, அவரது படங்களின் உணர்வுபூர்வமான தாக்கத்தை பன்மடங்கு பெருக்கியது; அந்தக் கால தமிழ் மெலோடிராமாக்களின் இதயத் துடிப்பாகவே அந்த இசை அமைந்தது. வர்த்தக சினிமாவின் வரையறைகளுக்குள் இயங்கினாலும், பீம்சிங் தனக்கென ஒரு தனித்துவமான கருப்பொருள் மற்றும் பாணிக் கையொப்பத்தை வளர்த்தெடுத்தார். இது, தமிழ் சினிமாவில் மெலோடிராமாவின் சிற்பியாக அவரைக் கருத வழிவகுத்தது. குடும்பத்தின் புனிதமும் போராட்டங்களும், எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் அறநெறிச் சிக்கல்கள், மனித உறவுகளின் இன்ப துன்பங்கள் போன்ற கருப்பொருட்களில் அவர் காட்டிய தொடர்ச்சியான ஈடுபாடு, தனது வழக்கமான வெற்றிக் கூட்டணியுடன் (சிவாஜி கணேசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ், கூட்டாளிகளான திருமலை-மஹாலிங்கம்) இணைந்து, “இது பீம்சிங் படம்” என்று அடையாளம் காணக்கூடிய ஒரு தனித்துவத்தை உருவாக்கியது. தனது பல படங்களின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் படத்தொகுப்புப் பணிகளில் அவர் காட்டிய தீவிர ஈடுபாடு, ஒரு படைப்பாளியாக அவர் தன் திரைப்படைப்புகள் மீது கொண்டிருந்த முழுமையான ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. எண்ணற்ற வெற்றிப் படங்களில் வெளிப்பட்ட இந்தத் தெளிவான பார்வை, அவருக்கென ஒரு தனித்துவமான, செல்வாக்குமிக்க இடத்தைப் பெற்றுத் தந்தது. ஏ. பீம்சிங்கின் கலைப்பயணத்தின் தாக்கம் இன்றும் ஆழமாகவே உணரப்படுகிறது. அவரது திரைப்படங்கள் கடந்த காலத்தின் நினைவூட்டல்கள் மட்டுமல்ல; அவை இன்றும் நினைவுகூரப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன, தொடர்ந்து மறுபார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன. ‘பாசமலர்’ போன்ற காவியங்கள் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்று, பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் நம் விழியோரங்களில் ஈரத்தைக் கொண்டு வருகின்றன. அவர் தன் படங்களில் திறம்படக் கையாண்ட குடும்பப் பிணைப்புகளின் பிரிக்க முடியாத வலிமை, தியாகத்தின் மேன்மை, அன்பின் என்றும் வற்றாத ஆற்றல், அறம் சார்ந்த தேர்வுகளின் சிக்கல்கள் போன்ற உலகப் பொதுவான கருப்பொருட்கள், தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் இதயங்களோடு உரையாடும் ஆற்றலை இன்றும் கொண்டுள்ளன. நிறுவப்பட்ட மரபுகளுக்குள் இயங்கினாலும், கதைசொல்லலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்த அவரது இயக்கம், தென்னிந்திய மெலோடிராமா திரைப்படங்களுக்கு ஒரு அளவுகோலை அமைத்தது. ஏ. பீம்சிங்கின் பாரம்பரியம், ஆழமான உணர்வுபூர்வமான நேர்மையின் வெளிப்பாடு. மெலோடிராமாவின் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கும், பகட்டான சித்தரிப்புகளுக்கும் மத்தியிலும், அவரது படங்கள் மனித இயல்பைப் பற்றிய உண்மையான புரிதலிலும், தனது பாத்திரங்களின் போராட்டங்கள் மற்றும் ஏக்கங்களுக்கான ஆழ்ந்த பச்சாதாபத்திலும் வேரூன்றியிருந்தன. இந்த உணர்வுபூர்வமான நேர்மை, நட்சத்திரங்களின் உயிரோட்டமான நடிப்பாலும், உள்ளத்தை உருக்கும் இசையாலும் மெருகூட்டப்பட்டு, ரசிகர்களுடன் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியது. அவரது திரைக்குரலின் லயம் மிகுந்த தாளம் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; அவர் சிந்த வைத்த கண்ணீருக்கும், அவர் லாவகமாகத் தொட்ட இதயங்களுக்கும் ஒரு காலத்தால் அழியாத சாட்சியாக. அவரது படைப்புகள் தமிழ் சினிமாவின் வளமான கலை மரபின் மைய பகுதியாகத் திகழ்கின்றன; சினிமா தன் இதயத்தை வெளிப்படையாகப் பேசத் துணிந்த ஒரு காலத்தின் இனிய நினைவூட்டலாக. (இந்தக் கட்டுரையில் உள்ள படங்களை வழங்கிய நிகரில்லாத நிழற்பட மேதை அமரர் டில்லி பகதூர் [அமரர் திருமலை அவர்களின் புதல்வர்], மற்றும் ஸ்டில்ஸ் ஞானம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். போலவே, அமரர் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் [அமரர் பீம்சிங் அவர்களின் புதல்வர்] அவர்களுக்கும் இக்கட்டுரையிலிருக்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு எனது இதயபூர்வ நன்றிகள்.) [ சொர்ணவேல் ஈஸ்வரன் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மற்றும் இதழியல் துறைகளில் பேராசிரியராக உள்ளார்.] குறிப்புகள் பாஸ்கரன், தியோடர். ஆசிரியருடனான தொலைபேசி உரையாடல்கள். ஏப்ரல்-அக்டோபர் 2024. பாஸ்கர், இரா, ‘உணர்ச்சி, அகவயத்தன்மை, மற்றும் ஆசையின் வரம்புகள்: பம்பாய் சினிமாவில் மெலோடிராமா மற்றும் நவீனத்துவம், 1940கள்–’50கள்’, கிறிஸ்டின் கிலெட்ஹில் (பதி.), போருக்குப் பிந்தைய சினிமாவில் பாலினம் வகையை சந்திக்கிறது (சாம்பெய்ன், IL, 2012; ஆன்லைன் பதிப்பு, இல்லினாய்ஸ் ஸ்காலர்ஷிப் ஆன்லைன், 20 ஏப்ரல் 2017), https://doi.org/10.5406/illinois/9780252036613.003.0012, அணுகப்பட்டது 14 மே 2025. புரூக்ஸ், பீட்டர். தி மெலோடிராமேடிக் இமேஜினேஷன்: பால்சாக், ஹென்றி ஜேம்ஸ், மெலோடிராமா, அண்ட் தி மோட் ஆஃப் எக்ஸஸ். யேல் யுனிவர்சிட்டி பிரஸ், 1976. கணேசன், சிவாஜி. ஒரு நடிகரின் சுயசரிதை. டி.எஸ். நாராயண சுவாமி (பதி.). சென்னை: சிவாஜி பிரபு அறக்கட்டளை, 2002. கை, ராண்டார். “கடந்த காலத்திலிருந்து ஒரு (நினைவுச்)சிதறல்.” Thehindu.com. [பீம்சிங்கின் திரைப்படங்கள் குறித்த கை அவர்களின் கட்டுரைகள்.] சுந்தரம். பி. என். எனது நேர்காணல்கள். 2007. சென்னை. விகடன், குமுதம், கல்கி, பேசுபடம், குண்டூசி, பிலிம்பேர் மற்றும் சமூக ஊடகங்களிலிலிருந்து பெறப்பட்ட தமிழ் சினிமா விமர்சனங்கள். https://solvanam.com/2025/06/22/கண்ணீரும்-இசையும்-கலந்த/
-
ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி
ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி Vhg ஜூன் 26, 2025 மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (25-06-2025) இரவு யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு தொடர்பாக மேலும் குறிப்பிட்ட சாணக்கியன், “ ஈரான் - இஸ்ரேல், பாகிஸ்தான் - இந்தியா, ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் . அரசியல் கைதிகளின் விடுதலை மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ”மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி இந்த சந்திப்பு குறித்து சிறீதரன் தெரிவிக்கையில், ”செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினேன். இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம்” என தெரிவித்தார். https://www.battinatham.com/2025/06/blog-post_993.html
-
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்
முக்கிய அணுசக்தி நிலையங்கள் சேதம் - ஒப்புக்கொண்ட ஈரான் General26 June 2025 அமெரிக்கா, சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால், தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது. 'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது. இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/408380/iran-admits-damage-to-key-nuclear-facilities#google_vignette
-
ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை
வோல்கர் டர்க் - தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் பாராநாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/வோல்கர்-டர்க்-தமிழ்-எம்-பிக்கள்-சந்திப்பு/175-359947