Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர் July 17, 2025 11:31 am பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது. தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. 2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார். எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார். ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/
  2. இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல் July 17, 2025 இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. https://www.ilakku.org/இலங்கையில்-பிறப்பு-விகித/
  3. சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு! Vhg ஜூலை 17, 2025 சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் (20-07-2025)ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது
  4. இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை General17 July 2025 இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்று நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சனை, இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/410389/sri-lanka-india-fishing-rights-agreement-to-be-discussed
  5. கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmd6q258e019lqp4kloaq3nlw
  6. மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு! மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது. எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் - என்றார். https://newuthayan.com/article/மன்னாரில்_காற்றாலை_திட்டம்_உடனடியாக_நிறுத்தவேண்டும்_-_அருட்தந்தை_மக்காஸ்_எச்சரிப்பு!
  7. முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்! யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வின் போது, முதல்வர் இருக்கத்தக்கதாக, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது. விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்றவகையில் தலையிட்டுக் கருத்துகளை வெளியிட்டபடி கொண்டிருந்தார். ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தையும் அவர் வழங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. https://newuthayan.com/article/முதல்வரின்_விடயத்தில்_மூக்கை_நுழைத்த_துணைமுதல்வர்;_நேற்றைய_அமர்வில்_கடும்_நேரவிரயம்!
  8. சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம் சாவகச்சேரி நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றபோதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள், இடைநடுவில் கைவிடும் திட்டம் போலல்லாமல் சிறப்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர். https://newuthayan.com/article/சாவகச்சேரியில்_நாய்கள்_காப்பகம்;_நகரசபையில்_தீர்மானம்
  9. நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை! தேசியத் தலைவரின் நிலை தொடர்பில் முன்னாள் போராளி பஷீர் காக்கா அறிக்கை எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி பஷீர் காக்கா(மு.மனோகர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- 2009ஆம் ஆண்டின் பின்னர் தாயகத்திலும் உலகப்பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நிற்கின்ற வினா, எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது. பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் கள நிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் பங்களித்தோம் என்ற உணர்வினைப் பெற்றனர். தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண்தூவி வீர வணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில் துவாரகாவின் பெயராலும் மோசடி செய்யும் ஈனப்பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்துலகப் பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த கே.பி. மற்றும் அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதி ராம், பிராந்திய அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்குத் தெரியப்படுத்தினர். அந்த நாள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியென்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும். உத்தியோகபூர்வமாகத் தலைவரால் நியமிக்கப்பட்ட இந்த மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்யமுனையமாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏற்கனவே நடந்து முடிந்ததே வரலாறு, இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை. பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியலல்ல. நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். வேறு எந்த சக்திகளின் முடிவுகளையும் அமுலாக்கும் விதமாக வரலாற்றை மாற்றியமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் - என்றுள்ளது. https://newuthayan.com/article/நடந்து_முடிந்ததே_வரலாறு_தணிக்கைக்கு_இடமில்லை!
  10. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதனாயகனின் பங்கேற்புடன் இன்று( 17) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இன்றையதினமும் குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதினிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/யாழ்._மாவட்ட_ஒருங்கிணைப்பு_குழு_கூட்டம்!
  11. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி July 16, 2025 10:32 am அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார். இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார். ” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்று அவர் குறிப்பிட்டார். https://oruvan.com/we-gave-in-to-threats-russia-responds-to-trump/
  12. உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 11:02 AM இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும். நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது - பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும். இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். . நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது - அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/220109
  13. பிரான்ஸ் தலைநகரில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு- 16 JUL, 2025 | 11:16 AM பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான பொன்டியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பொன்டியின் மேயர் ஸ்டீபன் ஹேர்வே கலந்துகொண்டு நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். தமிழ்மக்களின் இலட்சியத்திற்கு அன்டன் பாலசிங்கம் ஆற்றிய சேவைக்காக அவரின் சிலையை அமைப்பதற்கு பொன்டி நகர பேரவை அனுமதி வழங்கியுள்ளது.பொன்டியில் உள்ள மாநகர பூங்காவில் இந்த சிலைஉருவாகவுள்ளது. https://www.virakesari.lk/article/220111
  14. விஜேவீர படுகொலை: தொரதெனிய கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாப தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக தொரதெனிய ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, தனது பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க தடை உத்தரவைக் கோரினார். நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்தது. அந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (15) வழங்கப்பட்டது, வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பின்வரும் கருத்துக்களை இந்திரானந்த தெரிவித்தார். "ரோஹண விஜேவீர கொலை தொடர்பாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவனா என் மீது தொடுத்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கு மின்னணு ஊடக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இந்த உண்மைகளை நாங்கள் சுமார் முப்பது ஆண்டுகளாக நாட்டிற்கு வெளிப்படுத்தி வருகிறோம் என்றும், இது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் எழுத்துப்பூர்வமாகக் காட்டியுள்ளோம். மேலும், சிறையில் இருந்து சட்டமா அதிபருக்கு 1996 நவம்பரில், அனுப்பப்பட்ட மனு மூலம் இந்த உண்மைகளை விரிவாக வெளிப்படுத்தினேன், மேலும் நான் ஒரு புகைப்படக் கலைஞராக நாடு முழுவதும் உள்ள சித்திரவதை அறைகளுக்குச் சென்று கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன் என்றும் எழுத்துப்பூர்வமாகக் காட்டியுள்ளோம். அத்தகையவர்கள் என் கண்களுக்கு முன்பாகக் கொல்லப்படுவதை நான் கண்டேன், அனைத்தும் வெளிப்பட்டுவிட்டன. இப்போது இது "வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட பிறகு, ரோஹண விஜேவீர கொலையில் தொடர்புடைய அனைத்து கொலையாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன். குறிப்பாக இப்போது அவர் தலைமையிலான கட்சியின் தற்போதைய தலைவர் ஆட்சியில் இருக்கிறார். அப்படியானால், அதை மேலும் தொடர விடாமல், தங்கள் தலைவரை உயிருடன் கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது." என்றார் https://www.tamilmirror.lk/செய்திகள்/விஜேவீர-படுகொலை-தொரதெனிய-கோரிக்கையை-நிராகரித்தது-நீதிமன்றம்/175-361171
  15. காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் அறிக்கை வெளியானது - செம்மணிக்கு ஓர் திருப்புமுனையாகலாம்! யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று நம்பப்படுகின்றது. வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர், 1996 - 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்.பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால் வலிந்து கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிகின்றது. அவர்களின் முழுப் பெயர், விபரம், விலாசங்கள் உள்ளிட்ட பதிவுகளுடன் இந்த அறிக்கை உள்ளதால், அவர்களது உறவினர்களின் மரபணுக்களை இப்போது செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் மரபணுக்களோடு ஒப்பிடுவதன் மூலம், அந்த மனித எச்சங்களுக்கு உரியவர்களை அடையாளம் காணக்கூடிய வாய்ப்புக் கிட்டலாம் என்று நம்பப்படுகின்றது. 1996 - 97 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளே இப்போது செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து அகழ்ந்து மீட்கப்படுகின்றன எனக் கருதப்படும் நிலையில், அவற்றை அடையாளம் காண்பதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த விசாரணை அறிக்கை விபரம் அமையும் என்று கருதப்படுகின்றது. இந்த விசாரணை அறிக்கையின் ஒரு பிரதியைத் தம் கைவசம் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடச் செய்யும் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் எனவும் தெரிகின்றது. சுமார் 210 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை பலர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் சுருக்க விபரங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்ட_281_நபர்களின்_அறிக்கை_வெளியானது_-_செம்மணிக்கு_ஓர்_திருப்புமுனையாகலாம்!
  16. செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது! adminJuly 16, 2025 செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி , மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து , தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார் நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217901/
  17. சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் July 12, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்பாட்டுத்தன்மை போன்ற சூழமைவுகளோ தென்படவில்லை. குறைந்தபட்சம், தமிழர்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரு ஆளுமையைக் கூடத் தமிழர்கள் கண்டடைவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை. நேர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட தலைமைத்துவத்துக்குரியவர்கள்இருந்தாலும் அவர்களை ஏற்று முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்ச் சூழல் தயாராக இல்லை. அதற்காக சம்பந்தன் தனிப்பெருந்தலைவராக இருந்த 2009 – 2024 வரையான 15 ஆண்டுகளில் ஏதோ பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்று இங்கே கூறவரவில்லை. அந்தப் பதினைந்து ஆண்டுகளிலும் சம்பந்தன் மீது கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் அவர் பொறுப்புச் சொல்ல வேண்டியவராகவும் இருந்தார். ஆனால், அவர் எதற்கும் பொறுப்புச் சொன்னதுமில்லை. பொறுப்பை ஏற்றதுமில்லை. தன்னுடைய முதற் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களைப் போலவே அவரும் எந்தப் பொறுப்பையும் ஏற்காத மிக மோசமான தலைவராகவே மறைந்தார். அதனால்தான் அவருடைய மரணத்தை மக்கள் தங்களுடைய இழப்பாகக் கருத மறுத்தனர். அவர் மறைந்த பின்னான கடந்த ஓராண்டிலும் சம்பந்தனை மக்களும் ஊடகங்களும் அரசியற்கட்சிகளும் நினைவுகூரவேண்டும் என்று கருதவில்லை. தமிழரசுக் கட்சி உட்பட. இதில் தமிழரசுக் கட்சி பெருந்தவறை இழைத்துள்ளது. 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த பிறகு, இயங்கு நிலையையும் மக்களிடம் புழங்கு நிலையையும் இழந்திருந்த தமிழரசுக் கட்சியை மீள்நிலைப்படுத்தியவர் சம்பந்தன். அதற்காக அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த ஏனையோருடன் ஒரு நிழற்போரைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஜனநாயக விரோதப்போக்கைக் கையில் எடுத்து, சர்வாதிகாரத் தனத்தோடு செயற்பட்டார். இதனால் ஏற்பட்ட கண்டனங்கள் அனைத்தையும் ஏற்றவர் சம்பந்தன். இப்படித் தன்னைப் பலியிட்டு (அதனால் அவர் பெற்றவையும் அதிகம்) தமிழரசுக் கட்சியைத் தலைமைக்கும் முதன்மை அரங்குக்கும் கொண்டு வந்தவர். சம்பந்தனை தமிழரசுக் கட்சி எளிதில் மறந்து விட்டது. இவ்வளவுக்கும் அதற்கு இப்பொழுதும் 10 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்துமென்ன, தங்களுடைய நேற்றைய தலைவரை நினைவு கூர முடியாதவர்களாகவே ஆகி விட்டனர். ஆனால், இந்தப் பத்தியாளர் உட்பட ஒரு சிலர் (யதீந்திரா, வி.தனபாலசிங்கம்) மட்டுமே சம்பந்தனைக் குறித்தும் அவருக்குப் பிந்திய அரசியலைக் குறித்தும் சிந்திப்பவர்களாக உள்ளனர். இவ்வளவுக்கும் இவர்கள் அப்போதும் சம்பந்தனுடைய தலைமையையும் அரசியலையும் விமர்சன பூர்வமாக அணுகி வந்தவர்கள். அவர்களால்தான் இப்போதும் சம்பந்தனையும் சம்பந்தனுக்குப் பின்னான சூழலையும் அப்படி நிதானமாகப் பார்க்க முடிகிறது. சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்த்தேசியவாத அரசியலுக்குள்ளும் அதற்கு வெளியிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் கண்டனங்களும் இப்போது சில கேள்விகளை எழுப்புகின்றன. சில விடயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. 1. “சம்பந்தன், ஜனநாயக விரோதமாகத் தன்னுடைய தலைமைத்துவத்தை நடத்துகிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்கும் தமிழரசுக் கட்சி ஏகபோகமாக நடப்பதற்கும் சம்பந்தனுடைய ஜனநாயக விரோதப்போக்குத்தான் காரணம்” என்று கூறப்பட்டது. அப்படியென்றால், சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு, கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்துவதற்கான ஜனநாயக அடிப்படையிலான முயற்சிகள் நடந்திருக்கவேண்டுமே! அப்படி நடக்கவேயில்லை. பதிலாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணி எனப் புதிய அணி ஒன்றே உருவாகியது. அதுவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி – தமிழ்த்தேசியப் பேரவை என்ற அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸோடு போய்க் கரைந்துள்ளது. மறுவளமாகத் தமிழரசுக்கட்சியோ, சம்பந்தனுக்குப் பிறகுதான் தனித்துப்போய் மேலும் சிதையத் தொடங்கியிருக்கிறது. இங்கே சம்பந்தனுக்குப் பிந்திய நிலை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, நிலைபெறவில்லை. 2. சம்மந்தன், தன்னுடைய தலைமைத்துவக் காலத்தில் மென்னிலையிலான தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுத்திருந்தார். அதுதீவிர நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ்த்தேசியவாதிகளை எரிச்சலடைய வைத்தது. பதிலாக வெளியுலகமும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் யதார்த்தவாதிகளும் சம்பந்தனுடைய அந்த நிலைப்பாட்டை வரவேற்றனர். தன் மீதான தன்னுடைய சமூகத்தின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டே சம்பந்தன் மென்னிலைத் தேசியவாதத்தை முன்னிறுத்தித் தீர்வைக் கோரினார். அதனால் நியாயமான – யதார்த்தமான ஒரு தலைவராக வெளியுலகத்தினால் பார்க்கப்பட்டார். அதற்கேற்ப சம்பந்தனால் தீர்வைப் பெறமுடியாத போதும் அவருடைய நியாயமான கோரிக்கைகளும் நிலைப்பாடும் மதிக்கப்பட்டன. இப்பொழுது மென்னிலைத் தமிழ்த்தேசியவாதம் என்பதே இல்லை என்றாகி விட்டது. பதிலாகத் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதமே எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இது தீர்வுக்கான சாத்தியங்களைக் குறைத்திருக்கிறது. இதற்கான மாற்று வழியாக எதை – யாரை முன்னிறுத்துவது? 3. சம்பந்தனுடைய மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டியது சிங்களத்தரப்பும் வெளியுலகமுமாகும். அதை அவை செய்யத்தவறின. சம்பந்தனுடைய காலத்தில் அவருடைய நிலைப்பாட்டை ஏற்றுத் தீர்வைக் கண்டிருந்தால் இன்றைய தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதம் மீள் எழுச்சியடைந்திருக்காது. இப்போதுள்ள நிலையில் சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றோர் கூட தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆக, சம்பந்தனைப் பலப்படுத்தத்தவறியதன் விளைவை சிங்களத் தரப்பும் வெளியுலகமும் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாகச் சிங்களத் தரப்பு, மிகவாய்ப்பான சூழலை இழந்து மிக நெருக்கடியான சூழலுக்குள் புகுந்துள்ளது. 4. சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலம் போருக்குப் பிந்தியது. 2009 – 2024 வரையான 15 ஆண்டுகள். இந்தக்காலத்தில் அவர் போரினால் மிகச் சிதைவடைந்திருந்த தமிழ்ச்சமூகத்தையும் தமிழ்ப்பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்திப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குத்தலைமை வகித்திருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவர் அதைச்செய்யவே இல்லை. மட்டுமல்ல, பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று சந்திக்கவுமில்லை. வயது முதிர்வு காரணமாக அவரால் களத்துக்கு – மக்களிடம் – செல்லமுடியவில்லை என்று யாரும் சொல்லக் கூடும். அவர் தலைமை வகித்த கூட்டமைப்பையோ, அவர் தலைமையிலான மாகாணசபை நிர்வாகத்தையோ, தமிழரசுக்கட்சியையோ கூட அதற்காக அவர் வழிப்படுத்தவில்லை. பதிலாகத் தன்னுடைய தலைமையைச் சர்வாதிகாரத் தன்மையோடு வைத்துக்கொண்டு, எத்தகைய கூச்சமுமின்றித் தனக்கான வசதிகளைக் கொழும்பில் பெருக்கினார். இதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகச்செயலாகும். அதாவது இவர்கள் தலைமையேற்ற அரசியலினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிர்க்கத்தியாக இருக்கும்போது, அந்த மக்களின் பிரதிநிதி – தலைவர் – வசதி, வாய்ப்புகளைப் பெருக்கி வாழ்ந்தார் என்பது நேரெதிரான செயற்பாடாகும். போதாக்குறைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தனைச் சந்தித்தபோதெல்லாம் அவர்களை எடுத்தெறிந்தே நடந்து கொண்டார். கூடவே, போராளிகளையும்அவமதித்தார். 5. “சம்பந்தன் கிழக்கைச் சேர்ந்தவர். கிழக்கின் யதார்த்தத்தையும் உள்ளக்கிடக்கையையும் புரியக்கூடியவர். ஆனால், வடக்குச்சிந்தனையையே (தமிழ்த்தேசியவாதத்தையே) பிரதிபலித்தார். அதற்குத்தலைமை தாங்கினார். அதற்கே விசுவாசமாக இருந்தார்” என்ற குற்றச்சாட்டு, கிழக்கில் உள்ள கணிசமான தரப்பினரிடத்தில் உண்டு. கிழக்கையும் வடக்கையும் சமனிலைப்படுத்தக் கூடிய – கிழக்கின் நியாயங்களையும் நிலைப்பாட்டையும் யதார்த்த நிலையையும் வடக்கு புரிந்து கொண்டு செயற்படவேண்டும் என்ற கடப்பாட்டைஏற்கக் கூடிய நிலையைச் சம்பந்தன் உருவாக்கினாரா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். இது கிழக்கிற்கு சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் தவறாக அமைகிறது. இதைச்சம்பந்தனுக்குப் பின்னர் உள்ள – அல்லது வரக்கூடிய தலைவர்கள் புரிந்துகொண்டு செயற்படுவார்களா? 6. போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, சாத்தியப்படுத்தக் கூடியதாக இருந்த 13 ஆவது திருத்தத்தையும் அதனோடிணைந்த மாகாணசபையையும் கூட நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தன் ஈடுபடவில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் அவருக்குத் தயக்கங்களிருந்தன. அந்தத் தயக்கங்களுக்குக் காரணம், ஒரு ‘கிழக்கான்’ (திருகோணமலையான்), தமிழர்களின் கனவை, அந்தக் கனவுக்காக அளிக்கப்பட்ட உச்ச தியாகங்களை எல்லாம் சில்லறையாக்கி விட்டான்’என்ற பழி தன்னைச் சேரும் என்று அஞ்சினார். அதனால்தான் அவர் கிடைக்காத தீர்வைப் பற்றி, அடைய முடியாத இலக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சம்பந்தன் தமிழர்களுக்குத் துரோகமிழைத்ததாக வரலாறு தன்னைப் பழிக்கக் கூடாது என்று முட்டாள்தனமாக நம்பினார். மக்களுக்கு வெற்றியை அளிக்கும்போதே ஒரு தலைவராக வரலாற்றில் பரிமளிக்க முடியும் என்பதை உணரத் தவறினார். உணர்ந்தாலும் துணியத் தவறினார். இந்தக் குறைபாடு ஏனைய தமிழ்த்தேசியவாதிகளிடத்திலும் உண்டு. இவ்வளவுக்கும் யதார்த்தத்தையும் உண்மையான நிலவரத்தையும் அறிந்திருந்தார் சம்பந்தன். ஆனாலும் அதை ஏற்று, தன்னுடைய தலைமைத்துவத்தில் சரியான– பொருத்தமான அரசியலை முன்னெடுக்க அவர் துணியவில்லை. அப்படித் துணிந்திருந்தால் அவர் வெற்றிகரமான ஒரு தலைவராக வரலாற்றில் நிலைபெற்றிருக்கக் கூடும். சம்பந்தனைப்போலவே யதார்த்தம் என்னவென்றும் உண்மை என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை மறுதலித்து, கற்பனையில் குதிரையை ஓட்டவே விரும்புகிறார்கள். சம்பந்தனுக்கிருந்த தயக்கங்களும் அச்சமும் துணிவின்மையுமே ஏனையோரிடத்திலும் உள்ளது. அதிகம் ஏன், சம்பந்தன் இருந்த காலத்தில் சம்பந்தனுடைய நிலைப்பாட்டுடன் ஒத்ததாக – மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசிய சுமந்திரன் கூட இப்பொழுது தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேச விளைகிறார். முன்சொன்னதைப்போல சந்திரகுமார் போன்றவர்கள் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் சாயத் தொடங்கி விட்டனர். யதார்த்தம், நடைமுறைச் சாத்தியம் என்பதையெல்லாம் விட்டு, தமிழ் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. மக்களுடைய தேவைகளுக்கான கேள்வி, அவர்களுடைய கொள்திறன் போன்றவற்றுக்கு அப்பாலான திசையில் தமிழ் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே போருக்குப் பிந்திய தமிழரின் அரசியல் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியல் (Post-war Tamil politics or Post-war Tamil nationalist politics) என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய நல்விளைவுகள் எதையும் உருவாக்க முடியாத பலவீனத்தை– வீழ்ச்சியையே கொண்டுள்ளது. ஆனால், எப்போதும் சில வாய்ப்புகள் இருந்தன. அவற்றின் தன்மையும் அளவு வேறுபாடுகளும் மாறுபடலாமே தவிர, சாதகமான நிலைமைகளும் சாத்தியப்பாடுகளும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. இங்கே அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால், தனிநாடோ(தமிழீழமோ) பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டியோ இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியமுமில்லை என்பதைப் பற்றி பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதைத் துணிந்து சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை. அப்படிச்சொன்னால் தாம் வரலாற்றுத் துரோகியாகி விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். இதனால் பொய்யாகப் போலியாக நடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இதை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம். அப்படியாராவது மறுத்தால், தாம்வலியுறுத்துகின்ற – நம்புகின்ற அந்தத் தீர்வு வடிவத்தை எட்டுவதற்கான வழிமுறை – பொறிமுறை – கால நிர்ணயம் அல்லது கால எல்லை என்னவென்று அவர்கள் விளக்கவேண்டும். இங்கே அடிப்படையான தவறு, தாம் நம்பும் உண்மையை மக்களுக்கு முன்வைக்கக் கூடியதிறனும் துணிவும் இல்லாமையே ஆகும். அதற்கிணையானது, சர்வதேச சமூகத்தையும்(இந்தியா – சீனா உட்பட) சிங்கள, முஸ்லிம் சமூகங்களையும் அரசியலையும் கையாள முடியாத – கையாளும் திறனற்ற – அரசியல் தலைமையாகும். இந்தப் பலவீனங்கள்தான் தமிழ் மக்களுடைய அரசியல் தோல்வியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. எனவே சம்பந்தனுடைய காலம், அதற்குப் பின்னான காலம் என்ற ஒன்றைப் பகுத்துப் பார்க்கமுடியாது. போருக்குப் பிந்திய தமிழ்ச் சூழல் என்பது போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியை விட மேலும் பலவீனமானது, தோல்விகரமானதாகவே உள்ளது. உலகெங்கும் போருக்குப் பிந்தியசூழலும் அரசியலும் மாற்றத்தைக்கண்டதாக – கொண்டதாகவே – இருந்துள்ளது. படிப்பினைகளும் மீள்நிலையும் அதனுடைய ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால், இலங்கைத்தமிழருக்கோ எதையும் கற்றுக்கொள்ளாத – கற்றுக் கொள்ளமுடியாத, எதையும் பெற இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது. இதுதான் தமிழ்ப் புத்திஜீவித்தனமும் அதிதீவிரவாத மோகத்தின் கதியுமாகும். https://arangamnews.com/?p=12154
  18. பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு July 13, 2025 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பமாகியது. தொடர்ந்து அகவத்தின் நிர்வாகிகளினால், தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வின் தேவையும், அதன் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டு, நிகழ்வு ஏற்பாடுகள் பற்றியும் அதில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த உறவுகளின் பல்வேறு கரிசனை மிக்க ஆக்கபூர்வமான கேள்விகளுக்கும் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது. இந்த மக்கள் கலந்துரையாடலில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர் ,தேசிய செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து தேசியத்தலைவரின் வீரவணக்க நிகழ்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தனர் . ஆகவே, எதிர்வரும் 02/08/2025 அன்று தமிழர்களின் அடையாளமாகவும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களது வீரவணக்க நிகழ்வு விற்சர்லாந்து நாட்டில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்த வரலாற்று கடமை நிறைந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றுகூடுமாறு, உரிமையோடு அழைக்கிறார்கள் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர். குறிப்பு:- வீரவணக்க நிகழ்வு ஐரோப்பா தழுவிய நிகழ்வாக சுவிற்சர்லாந்திலும், அவுஸ்திரேலியாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அந் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ்மக்கள் இவ் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் கடமையுணர்வை வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். https://www.uyirpu.com/?p=19637
  19. பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி July 15, 2025 11:27 am ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/ragging-peak-nine-southeastern-university-students-admitted-to-hospital/
  20. புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக அவர் செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கின்ற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராகவும் அவர் செயற்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராகவும் அவர் புகழ் பெற்றிருந்தார். இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரால் அவர் மதிப்பளிப்பளிக்கப்பட்டார். புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து, மறைந்த கலைஞர் சங்கநாதனுடன் இணைந்து சத்தியா குரல் வழங்கியிருந்தார். விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் அவர் குரல் வழங்கியும் இருந்தார். மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியைப் புலிகளின் குரல் வானொலியில் அவர் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்திருந்தார். அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் நேற்று அவர் காலமானார். அவரின் இறுதிக்கிரியை நிகழ்வு கிளிநொச்சி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. https://oruvan.com/voice-of-the-tigers-radio-announcer-dies/
  21. செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன் July 15, 2025 செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இரண் டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் நாள் அகழ்வுப் பணியின் போது ஒரு குழந்தையின் அல்லது சிறுவரின் மண்டையோடு உள்ளிட்ட சிதைவடைந்த எலும்பு கூட்டுத் தொகுதியோடு இன்னும் இருவரது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பமாகி முதல் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவருடையது என சந்தேகிக்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ஏனைய இரண்டும் அடுத்து நாட்க ளில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இதேவேளை இவ்வாறு இரண்டாம் கட்ட அகழ்வின்போது முதல் நாளில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுவரின் எலும்புத் தொகுதி தொடர்பிலும் இங்கு தொடர்ந்தும் வெளிவரும் உறவுகளின் எலும்புக்கூடுகள் தொடர்பிலும், ஆடைகள்,பாடசாலைப் புத்தகப் பை. காலணி,வளையல்கள்,பொம்மைகள் என்பன தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையும்,சோகமும் ஏற்பட்டிருந்தது. இந்நிலை யில் இவ்விடயம் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் மனிதாபிமானம் கொண்டவர்களினதும் பார்வையினை யும் அங்கு திருப்பியதோடு, தொடர்ந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கவனத்தைத் திருப்பி இவ்விவகாரம் பெருமளவில் பேசுபொருளாக மாறியது. இந்த அகழ்வுப் பணிகளானது யாழ் நீதி மன்றத்தின் BR 433 PC 2025 எனும் வழக்கிற்கு அமைவாக கௌரவ.நீதிபதி திரு.ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கட்டளைக்கு அமைவாக அவரது மேற்பார்வையுடன் தொல்லியல் துறை பேராசிரி யர் திரு.ராஜ் சோமதேவா அவர்களுடைய தலைமையில் அவர்களின் குழுவினர், தொல்லியல்துறை மாணவர்கள், மற்றும் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் போலீசார், யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் சோகோ (Sogo) போலீசார் (seen of crime officers ) யாழ் குற்றத் தடுப்பு பொலீஸ் பிரிவினர் என பலரது பிரசன்னத்துடனும் கண்காணிப்புடனும் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர்கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இரு பிரிவுகளாக Site 01 Site 02 என வகைப்படுத்தப்பட்டு இந்த அகழ்வு பணிகள் நடந்திருந்தது. மனிதப் பேரவலத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற செம்மணி சிந்துபாத்தி மயான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது தொடர்ந்தும் பல உறவுகளுடைய எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவற்றில் பல குழந்தைகள், சிறுவர்களுடையதும், தாயும் பிள்ளையுமாகவும், குடும்பமாகவும் ஈவு இரக்கமற்றுக் கொன்று கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் பலத்த சந்தேகத்தின் வெளிப்பாடாகவே பலரது எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அங்கே கண் டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த இடத்தில் இடம்பெறுகின்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் பார்க்கிறபோது இங்கு மீட்கப்படுகின்ற இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உரிய முறைப்படி அடக்கம் செய் யப்படாதது போன்றும் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டது போன்றுமே காணப்படுகிறது, இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி அளவு ஆழத்திலே இருந்து தான் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இவைகளைப் பார்க்கின்றபோது இங்கு நிச்சயமாக ஒரு மனிதப் பேரவலம் இடம்பெற்றிருக்கிறது எனும் சந்தேகத்தை வலுக் கச் செய்கிறது.தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கின்ற எமது உறவுகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழ்ந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டு அவைகள் நீதிமன்றக் கட்டு காவ லில் வைக்கப்படுவதோடு அங்கு கிடைக்கப் பெறுகின்ற ஏனைய சான்றுப் பொருட்களும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்படுகி றது. இதேவேளை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகளின் போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டது போன்று ஏற்பட்டு விடலாம் எனும் கணிப்பின் அடிப்படையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்காமல் வழிந்து ஓடும் வகையிலே JCB இயந்திரம் மூலம் கான் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அவ்வாறு JCB இயந்திரம் மூலமாக கான் வெட்டுகின்ற போது அகழப்பட்ட பகுதிகளிலும் கூட சில மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதனால் அந்த கான் வெட்டும் பணி நிறுத்தப்பட்டதோடு அந்த இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது. 26.06.2025 முதல் 10.07.2025 வரையான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான 15 நாட்கள் முடிவில் இதுவரை 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன, இவைகளில் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர் கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து 63 முழுமையான மண்டையோடுகள் சகிதமான எலும்பு கூட்டுத் தொகுதிகளும், பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சற்றலைட் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு முழுமையான மண்டையோடு சகிதமான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாகவே இந்த 65 எலும்புக்க்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் மூலமாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அத்து டன் அங்கு பெறப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்களும் நீதிமன்றக் கட்டுக்காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பேராசிரியர் திரு.ராஜ் சோமதேவா அவர்களினால் யாழ் நீதிமன்றில் இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கௌரவ நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மனித என்பு எச்சம் 25 மற்றும் பாடசாலைப் புத்தகப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட வேறு பல சான்றுப் பொருட்களுடனும் எடுக்கப்பட்ட என்புகள் தொடர்பான மனித என்பு ஆய்வு தொடர்பிலான அறிக்கைகளையும் சட்ட வைத்தியர் திரு. பிரணவன் செல்லையா அவர்களினால் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யுமா றும் கட்டளை ஒன்று உள்ளது. இதேவேளை அகழ்வுப் பிரதேசம் இலக்கம் இரண்டில் ஒரு இடத்தில் ஒரு பொலித்தின் பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சில என்புக் குவியல்களும் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது. அதில் சிறிய மற்றும் பெரிய எலும்புகளும் காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றும் சட்டத்தரணிகளால் நீதவா னின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த என்புகளும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகளும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கௌரவ நீதவான் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி திரு செ.பிரணவன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறப் பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான இரண்டாம் கட்டத்திற்கு மொத் தமாக 45 நாட்கள் தீர்மானிக்கப்பட்டு அந்த தீர் மானத்திற்கு அமைவாக நீதி அமைச்சினால் நிதி தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நீதி அமைச்சால் கூறப்பட்ட நிதி முழுவதும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கணக்காய்வுப் பகுதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45 நாளில் முதல் கட்டமாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகள் காலை 07.30 முதல் இரவு சுமார் பத்து மணி வரையும் நீடிக்கும் வகையிலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. இறுதி நாளில் (10.07.2025) பேராசிரியர் ராஜ் சோ மதேவா மற்றும் அவரது குழுவினர் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர் யாழ் வைத்திய பீட மாணவர்கள் மற்றும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பணியாளர்களும்,நீதிபதி, சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காவல் துறையினர் பணியாளர்கள் அதிகாரிகள் தொல்லியல் துறையினர் பல்கலைக் கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெற்றிருந்தது. இப்பணியில் ஈடுபட்ட இவர்களுக்கான ஓய்வும் தேவை என்ற அடிப்படையில் பத்தாம் திகதி (10.07.2025) முதல் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு எதிர் வருகின்ற 21 ஆம் திகதி (21.07.2025) முதல் மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகும் என்பதோடு அதுவரையும் இந்த இடம் வழமை போன்று பாதுகாக்கப்பட்ட இடமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஏற்கனவே அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற இரண்டு சிசிடிவி கேமராக்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதோடு மீண்டும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. https://www.ilakku.org/செம்மணியின்-இரண்டாம்-கட்/
  22. காதுகளால் வாகனத்தை இழுத்த திருச்செல்வம் ஜூலை 14, 2025 பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது - 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார். உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/கதகளல-வகனதத-இழதத-தரசசலவம/175-361038
  23. ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம் 15 JUL, 2025 | 10:16 AM புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர். அப்போது அந்த ஜோடியை டிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. https://www.virakesari.lk/article/220022
  24. திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை! Published By: VISHNU 15 JUL, 2025 | 02:33 AM திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு எதிர்வரும் 15.07.2025 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை திங்கட்கிழமை (14.07.2025) வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராகவும் குறித்த நபர் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபனது ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வழக்கு முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்தமையும், தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமையும் பல்வேறுபட்ட தரப்புகளாக கண்டிக்கப்பட்ட நிலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும். தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள அரசாங்கம் தங்களுடைய முன்னாள் போராளிகளை நினைவேந்தும் உரிமையினை நிலை நிறுத்தி உள்ள நிலையில், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மாத்திரம் மறுக்கப்பட்டு வருவது சமூக செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/220015
  25. செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு லக்ஸ்மன் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல். அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவதற்கான முயற்சிகளை நகர்த்தி வருகின்றனர். இருந்தாலும், 16 வருடங்களை எட்டிவிட்டபோதிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முடியாததாக சர்வதேச சமூகம் இருந்து வருகிறது. ஒவ்வொரு அமர்விலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கம் நகர்ந்து வருகிறது. இது தமிழர்கள் தங்களது எந்த முயற்சியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளமுடியாத நிலையையே ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வருடத்திலும் இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், ஏற்கெனவே இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் வலுப்பெறும் என்றெல்லாம் நம்பியிருப்பது மாத்திரமே தமிழர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. 2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் போராட்டத்தைப் புதைத்ததுடன் ராஜபக்‌ஷ கூட்டணி இலங்கையின் ஏகாதிபத்தியவாதிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், அதற்குள்ளிருந்த மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து அவரை ஜனாதிபதியாக்கி ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, சந்திரிகா பண்காரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெரும் கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியது. இது மகிந்த ராஜபக்‌ஷ கூட்டணிக்கு பெரும் அடியாகவே அமைந்தது. இந்தச் சூழ்நிலையையும் தமக்குச் சாதகமானதாக்க முடிந்த மகிந்த அணி மைத்திரியை தமது வலைக்குள் கொண்டுவந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்றிருந்த வேளையில், மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கிக் கொண்டது. இந்த பதவி மாற்றத்தினை தவறு என்று நீதிமன்றம் சென்று நிரூபித்துக் கொண்ட ரணில் தரப்பு மகிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியை இல்லாமல் செய்தது, அதன்பின்னர் உருவாக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சித் தேர்தலில் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன்படி, கோட்டாபய ராஜபக்‌ஷ பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதியானார். பாராளுமன்றம் பெரும்பான்மைபலத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆட்சி நடவடிக்கைக் காலம் கொவிட் பெருந்தொற்றுக் காலமாக இருந்தது. அக்காலத்தில் அவர் மேற்கொண்ட முடிவுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவந்தது. அதன் காரணமாக ‘அரகலய’ போராட்டம் வெடித்து கோட்டாபய - ராஜபக்‌ஷ அரசாங்கம் இல்லாமல் செய்யப்பட்டது. நாட்டுக்குள் இருக்கும் போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார். கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி தனது பதவி விலகலை நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே அறிவித்தார். நாட்டுக்கு வெளியே சென்று பதவி விலகலை அறிவித்த பின்னர், பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர்கள், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை ரணில் ஆட்சிக்கு வந்ததும் கைது செய்தார், நடவடிக்கை எடுத்தார். அவ்வாறான செயற்பாடுகள் தவறு என்ற விமர்சனங்களை நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் உருவாக்கிக் கொண்டார். இருந்தாலும் அவற்றினை அவர் சமாளித்தும் கொண்டார். ஆட்சியை நடத்துதல், சட்டங்களை உருவாக்குதல், தேர்தல்களை நடத்தாது காலம் கடத்துதல் என நகர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர்தான் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. இந்த ஒழுங்கில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு யுத்தத்தினை முள்ளிவாய்க்காலில் புதைத்து மௌனிக்கச் செய்ததன். பின்னர் தமிழ்த் தரப்பு போர்க்குற்ற, இன அழிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை, நல்லாட்சி என்ற பெயரில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இணை அனுசரணை வழங்கியது, ஆனால், கோட்டாபய ஜனாதிபதியானதும் அதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் காலத்தைத் தாமதப்படுத்த இராஜதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில்தான் கால இழுத்தடிப்பு நடைபெறுகிறது. அரசாங்கம் என்று பொதுவில் பார்த்தாலும் அரசாங்கங்களின் மாற்றத்தினை தமக்குச் சாதகமாக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களுக்கான காலத்தை மனித உரிமைப் பேரவையில் கோரும் என்பதே நிச்சயமானது. இந்த நிச்சயத்தின் அடிப்படையைக் கொண்டுதான் செப்டெம்பருக்காக தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை தொடர்பான விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப்புது தீர்மானங்கள் ஏற்படுத்தப்படுவதும். இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதும் காலங்கடத்துவதும் நடைபெறுகிறதே தவிர இற்றைவரை இத்தீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இவ்வாறான சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தலுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தது. அதேபோன்று, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காரணம் காட்ட முயற்சிக்கிறது. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசின் கோரிக்கை சாதகமாகவே பரிசீலிக்கப்படும் என்பதற்கு அண்மையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கை இதற்கு ஒரு சாட்சியாகும். இதில் முக்கியம் என்னவென்றால், தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதுதான். நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையை முன்வைக்காத அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறை என்ற கண்துடைப்பில்தான் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருக்கிறதா? என்றும் இந்த இடத்தில் சந்தேகிக்கத் தோன்றுகிறது. அந்த வகையில்தான், கண்துடைப்புகளாலேயே காலத்தை நகர்த்தும் அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கொள்ளப்பட வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது. உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை என வெளிப்பேச்சுக்கு நகரும் இலங்கை அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இந்த 2025 செப்டெம்பர் அமர்வினை தமிழர் தரப்பு பயன்படுத்துவது கட்டாயமானது. இலங்கை அரசாங்கம் கூறிவருகின்ற உள்ளகப் பொறிமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது கவனிக்கப்படாததாக இருந்து வருகிறது. அதேநேரம், இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற சர்வதேச பொறிமுறையை விடுத்து, இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக நெறிமுறைகள் ஊடாகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துப்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்ரர் ரார்க் கருத்து வெளியிட்டமையானது, வெறுமனே ஒதுக்கி விடக்கூடியதொன்றல்ல. அத்துடன், இதுவே செப்டெம்பர் அமர்விலும் பிரதிபலிக்கும் என்பது தமிழர் தரப்புக்கு நினைவில் இருத்தல் வேண்டும். இதனை அடியொட்டியே வருகிற செப்டெம்பர் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான நகர்வுகள் அமைதல் வேண்டும். பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் வழங்கப்பட்டமை முதல் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிவருகின்ற பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படாது என்பதுவே உறுதியானது. அதனைக் கடந்து, சர்வதேச நீதிப்பொறி முறையே பொருத்தப்பாடானது என்பதாக அந்த நிலைப்பாடு இருக்க வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செப்டெம்பர்-அமர்வில்-தமிழர்-நிலைப்பாடு/91-361055

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.