Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 09:31 AM செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ள யேமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் 21 பிரஜைகளை கைதுசெய்துள்ளனர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஸ்ய பிரஜையொருவருக்கு காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரே வாரத்தில் இரண்டு வர்த்தக கப்பல்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219630
  2. இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:35 AM காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார் ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார்.சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும்அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/219647
  3. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு 10 JUL, 2025 | 10:30 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது . சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதித்திட்டம். அரசின் ஒரு பகுதியினர் இந்த சம்பவத்துடன் இருந்துள்ளனர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் நாங்களும் அரசாங்கமும் ஒரு நிலைப்பாட்டிலே இருக்கிறாேம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த அரசுக்குள் இருந்தவர்களை கண்டுபிடிப்பதாக தேர்தல் காலத்தில் நாங்களும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். ஜனாதிபதியும் வாக்குறுதியளித்திருந்தார். என்றாலும் மக்கள் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் பொறுப்பை இந்த அரசாங்கத்துக்கு வழங்கினார்கள். ஆனால் அரசாங்கம் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தபோதும் அதனை மேற்கொள்ளவில்லை. ஆனால் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, அரசினால் அரசாங்கத்தை விசாரணை மேற்கொள்ளும் கடினமான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு அரசு சம்பந்தப்படிருப்பதை அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே தெரியும்.அதனை தெரிந்துகொண்டே ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார். அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் அரசுக்குள் விசாரணை மேற்கொண்டு, சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு, இவர்கள் இந்த தாக்குதலுக்கு சம்பந்தம் என தெரிவித்தார். அரசு சஹ்ரானுக்கு உதவி செய்தார்கள் என்பது ஜனாதிபதிக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்வதற்கு பதிலாக விசாரணை செய்த்வந்த அதிகாரிகள் 700பேர் வரையானவர்களை இடமாற்றினார். ஷானி அபேசேகரவை சிறையில் அடைத்தார். ரவி செனவிரத்னவை வீட்டுக்கு அனுப்பினார். இவ்வாறு செய்துவிட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்தார். அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த அரசாங்கத்தை தோற்கடித்து, இந்த அரசாங்கத்துக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். அதனால் ஜனாதிபதி கர்தினாலுக்கு முன்னால் சென்று தினறாமல் எடுத்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை தேர்தல் மேடையில் ஏற்றி, தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியுமானவர்கள் எங்களுடன் இருப்பதாகவே பிரசாரம் செய்தார்கள். தற்போது அரசில் இருந்த ஒருசிலரை விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார். அதேபோன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனையும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால். மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர. அதனால் சாராவை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தற்போது கேளுங்கள். சாரா உயிருடன்தான் இருக்கிறார். சாரா மரணித்துள்ளார் என் தெரிவிப்பதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்து வந்தது. அதற்காக மூன்று தடவை டீ,என்.ஏ. பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு பரிசோதனைகளிலும் சாரா உயிரோடு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் சாரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொய் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு சென்றவர்தான் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன. அவருடன் யார் சென்றார் என்பதை விக்ரமரத்னவிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதாவது இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரா இனத்தவர்களின் மத நிகழ்வொன்று பம்பலப்பிட்டியவில் இடம்பெற்றது.அங்கு ஒருவர் சென்று படம் பிடித்தார். அதன்போது அவரை அங்கிருந்த பொலிஸார் கைது பம்பலப்பிடிய பொலிஸுக்கு கொண்டு சென்று விிசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது, சஹ்ரானின் குழுவில் இருந்த பொடி சஹ்ரான் என்ற ஒருவர். அவர்தான் சொனிக் சொனிக் உடன் செயற்பட்டு. ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு மின்னஞ்சல் அனுப்பியவர். இவர் தற்போது நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே பாேரா இனத்தவர்களின் விாழவுக்கு சென்று அங்கு படம்பிடித்துள்ளார். அவர் கடந்த மாதம் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இந்த மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்படுகிறார்.எப்படி அவ்வாறு செய்ய முடியும். ஆனால் கையடக்க தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான படம் ஒன்றை வைத்திருந்த குற்றத்துக்காக மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைல் என்ற இளைஞ்சன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு் கடந்த 9 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். குறித்த இளைஞன் விமான பயிற்சியை முடித்து, கடந்த ஜனவரி மாதம் அவரின் பட்டமளிப்பு விழா இருந்தது அதற்கும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. குறித்த இளைஞன் தற்போது போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுடனே சிறையில் வைக்கப்பட்டிருக்கிறான். மிகவும் வசதிகுறைந்த குடும்பத்தைச்சேர்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிரான படம் கையடக்க தொலைபேசியில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கு எமது நாட்டில் இருக்கும் பொலிஸார் இஸ்ரேலின் மொசாடா என கேட்கிறேன். பொடி சஹ்ரானை எந்த பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கிறார்கள். ,இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலையமைப்பு அரசுக்குள் இன்னும் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. அதேபோன்று அபூ ஹிந் யார்? இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வுடன் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை அறிமுகப்படுத்தியது அபூஹிந் என்றாகும். யார் அந்த அபூ ஹிந் என்பதை தற்போது அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219639
  4. முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி By SRI July 10, 2025 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் தமிழ்பேசும் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையாவது நியமித்தல், வன்னியிலுள்ள பிரதேசசெயலகங்களில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக்குழுக்களைச் செயற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளே நடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2025/07/3.html
  5. முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்? 10 July 2025 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, புதுக்குடியிருப்பு காவல்துறையினர் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து பதுங்கு குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://hirunews.lk/tm/409717/ltte-gold-in-mullaitivu
  6. அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822
  7. நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர். அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின. இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். https://globaltamilnews.net/2025/217721/
  8. செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது. குறித்த பகுதியிலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217712/
  9. சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா? July 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது நினைவஞ்சலி குறிப்பு ஒன்று வெளியானதாகவோ நாம் அறியவில்லை. சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை. சம்பந்தன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால், சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக விளங்கினார். அவரது மறைவு தமிழ் அரசியல் சமுதாயத்தில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்ட அவரை நினைவு கூருவதற்கு தமிழர்கள் தவறியதை தமிழ் அரசியல் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியிருக்கிறது. சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு அவர் எவ்வாறு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது நினைவு தினத்தில் கூட நினைவுகூருவது குறித்து எவரும் அக்கறைப்படவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு அவரது மரபு ஒதுக்கி விடப்படக்கூடியதா? போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் சம்பந்தன் தலைமையில் பொதுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான பொறுப்பை முற்று முழுதாகச் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியாது. விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாக பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக வெற்றிகொண்டாடிய சிங்கள அரசியல் சமுதாயம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதில் அக்கறையற்ற மனோபாவத்தைக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே சம்பந்தன் தமிழர் அரசியலின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இலங்கை தமிழர்களின் பலம்பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் தவறியதனாலேயே இன்று தமிழ் அரசியல் சக்திகள் பல்வேறு கூறுகளாகிக் கிடக்கின்றன என்பதே அவர் மீதான முக்கியமான குற்றச் சாட்டு. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை போருக்கு பின்னரான உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் இயக்கமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும் மூப்பையும் பயன்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்திருக்க முடியும் என்று பரவலான அபிப்பிராயம் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முன்னைய காலத்தைப் போலன்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கட்சி உறுப்பினர்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு விபரீதமான போக்கு வளரத்தொடங்கிய ஒரு காலப்பகுதியிலேயே சம்பந்தன் தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்தது. இன்று இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைவரும் தனது கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறமுடியாது. அண்மைய தேர்தல்களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் கட்சிகள் எதிர்நோக்குகின்ற நெருக்கடி இதை தெளிவாக வெளிக்காட்டுகின்ற பிந்திய உதாரணமாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்ட பின்புலத்தில், அவர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்சிமீதான விசுவாசம் என்பது பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது. ஒரு கட்சிக்கு நிலையான வாக்குவங்கி ஒன்று இனிமேலும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் சஞ்சலமானதாகிவிட்டது. தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்யும் தமிழரசு கட்சியின் பாரம்பரியமான நடைமுறையை பேணிக் காக்கக்கூடியதாக தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கூட வழிக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு ஒரு கையறு நிலையிலேயே இறுதிக் காலத்தில் சம்பந்தன் இருந்தார். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சிக்குள் நிலவும் அருவருக்கத்தக்க உட்பூசல் தமிழர் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான தமிழ் மக்களின் நிலையை உணர்ந்தவராக சம்பந்தன் வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையைக் காட்டுவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக் கொடுப்பைச் செய்யாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையாகவே இருக்க முடியும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதேவேளை, நிரந்தரத்தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைக்க வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது வலியுறுத்த சம்பந்தன் தவறியதில்லை. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும் அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர் தவறியதில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது இறுதிவரையான அவரது நிலைப்பாடாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் நெருக்குதலை பிரயோகிக்க வேண்டும் என்பதும் அவரது இடையறாத வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை காண்பது சாத்தியமில்லை என்பதும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் சம்பந்தனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கியதை அவருக்குரிய ஒரு ‘தனித்துவமாக’ கூறலாம். ஆனால், தனது தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியாதவராகவே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார். பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும் அரசாங்க தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் மற்றைய எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்யாத வகையில் சம்பந்தன் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது வந்தது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக் காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார். சமாதான உடன்படிக்கைக்கையை தொடர்ந்து மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் தீர்வை நோக்கிய அந்த செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலமாக 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையமுடியாது என்பதை அரசாங்கங்களே ஏற்றுக் கொண்டிருந்தன என்பதை நிரூபிப்பதே சம்பந்தனின் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய உறவை அவர் கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினையில் சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் அவரிடம் இருந்தது. சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் அரசியல் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஜூலை தொடக்கம் 1983 ஜூலை வரையும் பிறகு சம்பந்தன் 2015 டெப்டெம்பர் தொடக்கம் 2019 அக்டோபர் வரையும் அந்த பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்கு பிறகு உள்நாட்டுப்போர் மூண்ட அதேவேளை, போர் முடிவுக்கு வந்தததன் பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தார். தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்ததும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் செயலிழந்த பிறகு அந்த பதவியை சம்பந்தன் வகித்ததும் இருவருக்கும் இடையிலான வேறுபாடாகும். ஒரு எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் சிறிசேன — ரணில் அரசாங்கத்தை ஆதரித்த ஒருவராகவே சம்பந்தன் நடந்து கொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரையும் செயன்முறையை முன்னெடுத்த காரணத்தால் அதற்கு ஒத்துழைத்து இனப்பிரச்சினைக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றை காணும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிங்கள தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர். ஆனால், முன்னைய தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த கவலைக்குரிய அனுபவமே சம்பந்தனுக்கும் கிடைத்தது. எது எவ்வாறிருந்தாலும், சம்பந்தனின் மறைவு தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது. சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. https://arangamnews.com/?p=12144
  10. புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் ‘அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று எழுதினேன். கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்… இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ, நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது. ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன். செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது. என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும். “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது? ‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். ‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு? ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். நிச்சயமாக அப்படியில்லை. இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும். இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்.. புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான். https://arangamnews.com/?p=12141
  11. காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்! July 7, 2025 வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு எனும் பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் சுமார் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. அந்த வகையில் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பித்தக்கது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் சுமார் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/காணி-அபகரிப்புகளூடாக-நடை/
  12. இலங்கையில் Starlink சேவைகள் வெற்றியடையுமா? ச.சேகர் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலொன் மஸ்க் முன்னெடுக்கும் செய்மதி ஊடான இணைச் சேவைகளை வழங்கும் Starlink இலங்கையிலும் கடந்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை தொடர்பில் கடந்த ஒரு வருடங்களாகவே பரவலாக பேசப்பட்டு வந்த போதிலும், பல்வேறு இழுபறி நிலைகளால், அறிமுகம் தாமதமடைந்து, கடந்த வாரம் முதல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இணையச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், தொழினுட்ப நிபுணர்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், உள்நாட்டில் ஏற்கனவே இயங்கும் இணையச் சேவை வழங்குனர்களின் சேவைகளுக்கு இந்த Starlink அறிமுகம் சவாலாக அமையும் என எதிர்வுகூரப்படுகிறது. ஆனாலும், இந்த Starlink சேவை எவ்வாறு இயங்குகிறது, அதற்கான கட்டணங்கள் என்பவற்றை எடுத்துக் கொண்டால், ஏற்கனவே இலங்கையில் பாவனையிலுள்ள இணையச் சேவைகள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொலைபேசி கம்பி வடங்களினூடாக கடத்தப்படுகின்றன. இவை தொடர்பில் பாவனையாளர்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றமை மறுப்பதற்கில்லை. விசேடமாக, வாடகைக்கு வீடு தேடுவோர் கூட, புதிய வீடொன்றை பார்க்கச் செல்லும் போது, மின், நீர் போன்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிவதுடன், தமது தொலைபேசிகளில் வலையமைப்பு சமிக்ஞைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் பரிசோதித்து வீட்டை வாடகைக்கு பெறுகின்றனர். அவ்வாறு மக்களின் வாழ்வில் கையடக்க தொலைபேசி மற்றும் இணையப் பாவனை என்பது மிகவும் இன்றியமையாத அங்கமாக அமைந்துள்ளது. இவ்வாறான சூழலில், இலங்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் ஒரு காலகட்டத்தில் 5 முதல் 7 ஆக அமைந்திருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைகள் மற்றும் புறத்தாக்கங்களினால் இந்த சேவைகள் தற்போது மூன்று பிரதான நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் இதர பிரதான நிறுவனங்களுடன் தமது சேவைகளை ஒன்றிணைத்துள்ளன. சில நிறுவனங்கள் தமது சேவைகளை முழுமையாக இடைநிறுத்தியுள்ளன. இவ்வாறான சூழலில், ஏற்கனவே சந்தையில் காணப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களும் பல பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அவற்றின் புதிய முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விசேடமாக நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததன் பின்னர், இந்நிறுவனங்களின் விரிவாக்க செயற்பாடுகள் பெரும்பாலும் தடைப்பட்டுள்ளன. அல்லது மிகவும் மந்த கதியில் நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனங்கள் கையகப்படுத்தல் செயற்பாடுகளில் அதிகளவு தொகையை செலவிட நேரிட்டதாலும், தாம் கையகப்படுத்திய வலையமைப்புடன் தமது பிரதான வலையமைப்பை இணைக்கும் செயற்பாடுகளில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாலும், அதன் வலையமைப்பு விரிவாக்கம் அல்லது மேம்பாடு என்பதை அதிகளவு அவதானிக்க முடியவில்லை. 5G வலையமைப்பு சேவையும் சில நகரங்களில் இன்னமும் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளதை காண முடிகிறது. இன்னமும் 4G சேவைகள் மாத்திரமே பிரதானமாக வழங்கப்படுகின்றன. கம்பி வட இணையச் சேவைகளில் ஃபைபர் சேவைகள் விஸ்தரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. இவை ஒப்பீட்டளவில் வேகமான, தங்கியிருக்கக்கூடிய இணைய வசதிகளை வழங்கினாலும், பயணம் செய்கையில் இந்த இணைப்பை தம்முடன் கொண்டு செல்ல முடியாமை பாவனையாளர்களுக்கு பெரும் அசௌகரியமாக அமைந்துள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் இந்த Starlink அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையச் சேவை வேகமான வலையமைப்பை கொண்டிருக்கும் என பலராலும் தெரிவிக்கப்பட்டாலும், ஆரம்பத்தில் இந்த சேவைக்கு இணைந்து கொள்வதற்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த சேவையை உபயோகிப்பதற்கான செய்மதி அலைவரிசையை பெறும் சாதனங்களை நிறுவுவதற்கு இந்தத் தொகை அறவிடப்படுகிறது. அத்துடன், மாதாந்த வாடகைத் தொகை ஆகக் குறைந்தது 12,000 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே சந்தையில் காணப்படும் நிலையான இணையச் சேவைக்கான மாதாந்தக் கட்டணம் சுமார் 1,500 ரூபாய் முதல் அமைந்துள்ளது. எனவே, பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கூட Starlink இணைய வசதியை மக்கள் பயன்படுத்தலாம். அங்கு சமிக்ஞைகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது எனக் கூறப்பட்டாலும், இந்த இணையச் சேவையை ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை ஆரம்பத்தில் செலுத்தி, பின்னர் மாதாந்தம் 12,000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு பெற்றுக் கொள்வதற்கு, பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காண்பிப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இலங்கை சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில், கிராமப் பகுதிகளின் அனுபவத்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் சமூகமளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அல்லது வெளி உலகுடன் அவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசதியை வழங்க இந்த Starlink சேவை உதவியாக அமையலாம். அதற்கும், இந்தளவு தொகையை முதலீடு செய்வதில் சாதாரணமாக குறிப்பிடத்தக்களவு வருமானத்தைப் பெறும் வியாபாரங்கள் அல்லது ஹோட்டல்கள் அக்கறை செலுத்தும். எவ்வாறாயினும், மேலே தெரிவிக்கப்பட்ட 12,000 ரூபாய் மாதாந்த கட்டணம் என்பது இல்லங்களில் பாவனைக்கான குறைந்த தொகையாகும். வர்த்தகங்களுக்காக அறவிடும் கட்டணம் இதனை விட உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் செய்மதிகளினூடாக இந்த இணையச் சேவை இணைக்கப்பட்டுள்ளதால், மேக மூட்டங்கள், மழையுடனான வானிலைகளின் போது இந்தச் சேவையில் தடங்கல்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நகரப் பகுதிகளிலும் இந்த சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் போது வலையமைப்பு நெரிசல் ஏற்பட்டு இணைப்பின் வேகம் குறைவடையலாம். மேலும், உள்நாட்டில் இந்த சேவையை வழங்குவதற்காக அல்லது இந்த சேவையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிவிப்பதற்கு, மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டில் வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்று இதுவரையில் அமைக்கப்படவில்லை. உள்நாட்டில் சேவை விநியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. நேரடியாக Starlink இணையத்தளத்தினூடாக இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது. இதுவும் இந்தச் சேவைக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. சாதாரணமாக இணைய இணைப்பு சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றுக்கு நாளொன்றில் பல நூற்றுக் கணக்கான அழைப்புகள், கோரிக்கைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வருகின்றமை வழமை. இந்த Starlink இணைய சேவையில் மற்றுமொரு பிரதான பின்னடைவாக அதன் பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடலாம். செய்மதிகளினூடாக வழங்கப்படும் இந்த சேவை, பல மூன்றாம் தரப்பு தொடர்புகளையும் கொண்டுள்ளது. எனவே, இந்த சேவைகளின் பாதுகாப்பு தன்மை தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதும், ஈரானில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலும், இந்த Starlink செய்மதிச் சேவையை பயன்படுத்தி அந்நாட்டிலிருந்து தகவல்கள் பரிமாறப்பட்டமை தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்தன. எனவே, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டுக்கு இணையச் சேவை என்பது முக்கியமானதாக அமைந்திருந்தாலும், Starlink போன்ற பல பாதக அம்சங்களைக் கொண்ட இணைப்புகளுக்கு மக்கள் செல்வார்களாக என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கையில்-Starlink-சேவைகள்-வெற்றியடையுமா/47-360590
  13. செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் ? adminJuly 7, 2025 செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து மண் அகழ்ந்து புதைகுழிக்கு அருகில் மண் மேடு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை அப்பகுதிகளில் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , மண் அகலும் பணிகள் நிறுத்தப்பட்டு , அவ்விடத்தில் புதைகுழி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழிகளுக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் , யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் மண்டையோடு ஒன்றும் , ஆடையை ஒத்த துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 47 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 44 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/217643/
  14. இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது இந்தியா; அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி 06 JUL, 2025 | 11:28 PM (நெவில் அன்தனி) பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 336 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இந்தியா சமப்படுத்தியுள்ளது. அந்நிய மண்ணில் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் 318 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே இதற்கு முன்னர் அந்நிய மண்ணில் ஓட்டங்கள் ரீதியாக இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ் தீப் முதல் தடவையாக 10 விக்கெட் குவியலை டெஸ்ட் போட்டி ஒன்றில் பதிவுசெய்தார். சேத்தன் ஷர்மாவுக்குப் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் பதவுசெய்த இரண்டாவது 10 விக்கெட் குவியல் இதுவாகும். இதே மைதானத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் சேத்தன் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிராக 188 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். ஆகாஷ் தீப் 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். மேலும் இந்திய அணியின் தலைவராக ஷுப்மான் கில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தியாவின் இந்த வெற்றியில் ஆகாஷின் 10 விக்கெட் குவியல், மொஹமத் சிராஜ் முதல் இன்னிங்ஸில் பதிவுசெய்த 6 விக்கெட் குவியல், ஷுப்மான் கில் முதல் இன்னிங்ஸில் குவித்த இரட்டைச் சதம் (268) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற சதம் (161), ரவிந்த்ர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், யஷஸ்வி ஜய்ஸ்வால் முதல் இன்னிங்ஸிலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸிலும் பெற்ற அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட நினைத்துப்பார்க்க முடியாது 608 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது. ஜெமி ஸ்மித் 88 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 587 (ஷுப்மான் கில் 269, ரவிந்த்ர ஜடேஜா 89, யஷஸ்வி ஜய்ஸ்வால் 87, வொஷிங்டன் சுந்தர் 42, ஷொயெப் பஷிர் 167 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 81 - 2 விக்., ஜொஷ் டங் (119 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 407 (ஜெமி ஸ்மித் 184 ஆ.இ., ஹெரி ப்றூக் 158, மொஹமத் சிராஜ் 70 - 6 விக்., ஆகாஷ் தீன் 88 - 4 விக்.) இந்தியா 2ஆவது இன்: 426 - 6 விக். டிக்ளயார்ட் (ஷுப்மான் கில் 161, ரவிந்த்ர ஜடேஜா 69, ரிஷாப் பான்ட் 65, கே.எல். ராகுல் 55, ஜொஷ் டங் 93 - 2 விக்., ஷொயெப் பஷிர் 119 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 608 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 271 (ஜெமி ஸ்மித்து 89, ப்றைடன் கார்ஸ் 38, பென் ஸ்டோக்ஸ் 33, பென் டக்கெட் 25, ஆகாஷ் தீப் 99 - 6 விக்.) ஆட்டநாயகன்: ஷுப்மான் கில். https://www.virakesari.lk/article/219344
  15. புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன் இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம். புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் கனெக்சை நோக்கி கேட்டார். கனக்ஸ் திரும்பிக் கேட்டார் “நான் துப்பியதால் உனக்கு என்ன வந்தது? நான் யாருடைய முகத்திலும் துப்பவில்லை. நிலத்தில் தானே துப்பினேன்? ” என்று. அன்பு மாஸ்டர் விடவில்லை. “நீ துப்பிய நிலம் பொது நிலம். சுற்றி வர மீன்கள், மரக்கறிகள் விற்கப்படும் இடம். உன்னுடைய துப்பலில் மொய்க்கும் இலையான் இங்குள்ள சாப்பாட்டுப் பொருட்களின் மீதும் மொய்க்கும். எவ்வளவு அசுத்தம்? எவ்வளவு ஆரோக்கியக் கெடுதி?… என்று கூறி கனெக்ஸை சண்டைக்கு இழுத்தார். இப்படி இரண்டு பேரும் வாக்குவாதப்பட சந்தைக்கு வந்தவர்கள், சந்தை வியாபாரிகள் என்று அனைவரும் இந்த இரண்டு பேர்களையும் சூழ்ந்து விட்டார்கள். இருவருமே ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புவதில் இருக்கக்கூடிய சுகாதாரக் கேடான விடயங்களை தர்கபூர்வமாக உரையாடத் தொடங்கினார்கள். சூழ்ந்திருந்த மக்கள் இரண்டு பேரையும் விலக்குப் பிடிக்க முயற்சித்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலில் மக்களும் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் தெரிந்தது அது ஒரு நாடகம் என்று. சந்தைக்குள் சுகாதார விழிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கனெக்சும் அன்பு மாஸ்டரும் இணைந்து தயாரித்த – நவீன நாடகம் -கட்புலனாகா அரங்கு அது. அன்பு மாஸ்டர் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். போர்க் காலத்திலேயே இறந்து விட்டார். கனெக்ஸ் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார். நாலாங் கட்ட ஈழப்போரில் உயிர் நீத்தார். இருவரும் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் எதற்காக நாடகமாடினார்களோ அந்த விடயம் இப்பொழுதும், கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரும் உண்டு. அதுதான் சந்தைக்குள் சுகாதாரச் சீர்கேடுகள். யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மரக்கறிச் சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதற்குப் பின்புறம் உள்ள சிறிய பாதை சில சமயங்களில் கழிப்பறையாகவும் குப்பைக் கூடையாகவும் காணப்படும்.தமது வீட்டுக் கழிவுகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வீதியில் கொண்டு வந்து போடுகிறார்கள். இத்தனைக்கும் அந்த வீதி வளைவில் ஒரு பாடசாலை உண்டு. சில சமயங்களில் அந்த வேலியோடு நின்று சிறுநீர் கழிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தை வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள். இது சந்தைக்கு வெளியே. சந்தைக்கு உள்ளே போனால், அங்கே மரக்கறிகள் பரப்பப்பட்டிருக்கும் அதே தளத்தில்தான் வியாபாரிகள் தமது கால்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.அதாவது விற்கப்படும் பொருட்களை வைப்பதற்கு உயரமான ஏற்பாடு இல்லை.அதனால் வியாபாரிகள் மரக்கறிகளை பரப்பி வைத்திருக்கும் அதே இடத்தில் சிலசமயம் செருப்புக் கால்களோடு இருப்பார்கள். அதே செருப்போடுதான் அவர்கள் கழிப்பறைக்கும் போகிறார்கள். அது மட்டுமல்ல,சந்தையின் மூலை முடுக்குகளில் வெற்றிலைத் துப்பல்களைக் காணலாம்.துப்புவது யார் என்றால் வியாபாரிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும்தான். சந்தைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் அவ்வாறு துப்புவது குறைவு. பொதுச் சுகாதாரச் சட்டத்தின்படி பொது இடங்களில் துப்புவது சட்ட விரோதமானது. ஆனால் அதை சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. ஏனென்றால் அது ஒரு பண்பாடு. அவ்வாறு துப்பாமல் விடுவதனை ஒரு பண்பாடாக மாற்ற வேண்டும். யார் மாற்றுவது ? யாழ் நகரப் பகுதியை அண்டியுள்ள சந்தைகளில் கல்வியங்காட்டுச் சந்தை தொடர்பாக முறைப்பாடுகள் அதிகம். அந்த சந்தைக்கு ஒரு சாதிப் பெயர் வேறு வைத்திருக்கிறார்கள். அங்கு வாங்கிய மீனில் ரசாயன வாடை வீசுவதாக திருப்பிக் கொடுத்தவர்கள் உண்டு. பொதுச் சுகாதாரப் பரிசோதர்களிடம் முறைப்பாடு செய்தவர்களும் உண்டு. ஒரு முறை அவ்வாறு முறைப்பாடு செய்த போது பிஎச்ஐ சொன்னார் அந்த ரசாயனத்தை சோதிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் இங்கு யாழ்ப்பாணத்தில் இல்லை. அதனால் அந்த மீனை அனுராதபுரத்துக்கு அனுப்பி எடுக்க வேண்டும். அதுவரை அந்த மீனைக் கெடாமல் வைத்திருக்கவும் வேண்டும் என்று. கல்வியங்காட்டுச் சந்தையில் வாங்கிய மீனில் ஃபோமலின் வாடை வீசியதாக முறைப்பாடுகள் உண்டு. ஓர் ஆசிரியர் சொன்னார், அவர் வாங்கிய மீனில் அவ்வாறு ஃபோமலின் வாடை வீசியதாகவும்,எனவே அந்த மீனைக் கொண்டு போய் குறிப்பிட்ட வியாபாரியிடம் கொடுத்து “நீ ஏமாற்றி விட்டாய்” என்று ஆத்திரப்பட்ட பொழுது,அந்த வியாபாரி சொன்னாராம் இந்த மீனைத்தான் கூலர் வியாபாரிகள் நூற்றுக்கணக்கான கிலோக்கள் வாங்குகிறார்கள். நீங்கள் ஒரு கிலோ வாங்கி விட்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று. இதை இவ்வாறு எழுதுவதன் பொருள் யாழ்ப்பாணத்தின் ஏனைய சந்தைகளில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதல்ல.மேலும் கல்வியங்காட்டுச் சந்தையில் உள்ள எல்லாருமே ரசாயனம் கலந்து மீனை விற்கிறார்கள் என்ற பொருளிலும் அல்ல. இப்படித்தான் இருக்கிறது பொதுச் சந்தைகளில் சுகாதாரம். இப்பொழுது புதிய உள்ளூராட்சி சபைகள் வந்துவிட்டன. மேற்சொன்ன விடயங்களில் உள்ளூராட்சி சபைகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன ? குப்பை ஒரு தீராப் பிரச்சனை. சந்தைச் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல பெரும்பாலான வீதிகளில் குப்பை ஒரு பிரச்சினை. குப்பை அள்ளும் வாகனம் வராத நாட்களில் மதில்களில் குப்பைப் பைகள் தொங்கும். ஏனெனில்,கீழே வைத்தால் கட்டாக்காலி நாய்கள் பைகளைக் குதறி விடும். சில மறைவான வீதித் திருப்பங்களை அந்த ஊர் மக்களே தற்காலிக குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள். அங்கு குப்பை கொட்டவேண்டாம் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டிருக்கும். அல்லது அந்த மதிலுக்கு அல்லது வேலிக்குச் சொந்தமான வீட்டுக்காரர்கள் அவ்வாறான அறிவிப்புககளை ஒட்டியிருப்பார்கள்.எனினும், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு குப்பைகள் கொட்டப்படும். இதனால் வெறுப்படைந்த வீட்டுக்காரர்கள் தமது வீட்டு மதிற் சுவரில் அல்லது வேலியில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் அவர்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அந்த வாசகங்கள் வருமாறு…”இங்கே குப்பை போடுகிறவன் உன்னுடைய பெண்டாட்டியையும் கொண்டு வந்து போடு” என்று ஒரு வாசகம். ”இங்கே குப்பை போடுகிறவன் ஒரு மன நோயாளி” இது இரண்டாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டினால் உன்னைப் பேய் பிடிக்கும்” இது மூன்றாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டுகிறவன் ஒழுங்காகப் பிறக்காதவன்”…..என்று ஒரு வாசகம். இவைபோல பல்வேறு விகாரமான விபரீதமான அறிவிப்புகளைப் பார்க்க முடியும். ஒரு வீட்டுக்கார் தன்னுடைய வீட்டு வெளி மதிற் சுவரில் சுவாமிப் படங்களை ஒட்டி விட்டார். ஆனால் சுவாமிப் படங்களுக்குக் கீழேயும் குப்பைகள் கொட்டப்பட்டன. குப்பைகளைக் கொட்டுபவர்கள் யார் என்று பார்த்தால் அதில் படித்தவர்கள் உண்டு,விவரம் தெரிந்தவர்கள் உண்டு. யாரும் பார்க்காத ஒரு நேரத்தில், யாரும் பார்க்காத விதமாக அவர்கள் குப்பையை அந்த இடத்தில் தட்டி விட்டுப் போவார்கள். அங்கே கமரா பொருத்தினாலும் அதை மீறிக் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் கமரா பொருத்துவதற்கும் காசு வேண்டுமே? இவ்வாறான குப்பை கொட்டும் ஒரு சுகாதாரச் சூழலில் அல்லது தன்னுடைய குப்பையை மற்றவர்களுடைய முற்றத்தில் கொட்டும் ஒரு சீரழிந்த கலாச்சாரச் சூழலில், புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரதேச சபைகள் சந்தைச் சுகாதாரத்தையும் சந்தையில் விற்கப்படும் உணவுகளின் நுகர்வுத் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு புதிய வினைத்திறன் மிக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.சந்தைகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் இருந்துதான் ஒரு உள்ளூராட்சி சபையின் வெற்றிகள் அனைத்தும் தொடங்குகின்றன. சந்தைகளைச் சுத்தமாகப் பேணும் ஒர் உள்ளூராட்சி சபை தன் எல்லைக்குட்பட்ட கிராமங்களையும் சுத்தமாகப் பேணும். எனவே சந்தைச் சுகாதாரம் எனப்படுவது ஒரு குறிகாட்டி. புதிய உள்ளூராட்சி சபைகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா? உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்ட உடனடுத்த நாட்களிலேயே குப்பைகளைப் பிரித்தெடுத்து எரிக்கும் இடங்களில் முரண்பாடுகள் எழுந்தன. இணுவில்,கல்லுண்டாய் வெளி ஆகிய இடங்களில் குப்பைகள் ஏரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து முறைப்பாடுகள் எழுந்தன. குப்பைகளை எரிப்பதற்குப் பதிலாக அவற்றை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் புதிய நவீன சிந்தனைகள் தேவை.உதாரணமாக ஸ்வீடன் நாடானது குப்பைகளை மீள் சுழற்சி செய்வதில் வெற்றியடைந்த நாடாகப் பார்க்கப்படுகிறது. அங்கே ஒரு கட்டத்தில் மீள் சுழற்சி செய்வதற்கு உள்ளூர்க் குப்பைகள் போதிய அளவு இருக்கவில்லை.அதனால் மீள் சுழற்சி மையங்கள் தொடர்ந்தும் இயங்குவதற்காக குப்பைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தில் நவீனமான, வினைத்திறன் மிக்க முடிவுகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நான் உரையாடிய பொழுது ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்னிடம் கேட்டார்,”அரசியலில் குப்பை கொட்டும் இந்தக் கட்சிகளிடம் பிரதேசசபைகளில் குப்பைகளை அகற்றுங்கள் என்று கேட்பது பொருத்தமானதா” என்று? பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதனை புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் விதத்தில் உள்ளூராட்சிப் பிரதேசங்களை சுத்தமானவைகளாகவும் சுகாதாரமானவைகளாகவும் பசுமைப் பூங்காக்களாகவும் மாற்ற முன் வர வேண்டும்.அன்னை தெரேசா கூறுவார்… “தொண்டு செய்வது என்பது வீட்டிலிருந்து தொடங்குகின்றது”என்று. அப்படித்தான் சுத்தமும் சுகாதாரமும் உள்ளூராட்சி சபைகளிலிருந்து தொடங்கட்டும். https://www.nillanthan.com/7506/
  16. தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! 4 Jul 2025, 4:17 PM தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு காவல் நிலைய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1. பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்: வாழ்வாதாரங்களாக விளங்கும் விவசாய நிலங்கள், மக்கள் வாழும் வீடுகள், இயற்கை நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருடக் கணக்கில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு என்பது உலகறிந்த உண்மை. ஆனால், பா.ஜ.க.வின் மறைமுக உறவுக்காரர்களான கபட நாடகத் தி.மு.க.வும் விவசாயிகளுக்கு எதிரானதுதான் என்பதைப் பரந்தூர் விமான நிலைய விவகாரம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகமாடிக்கொண்டே விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்து தருவதில் இருந்து, இதோ இப்போது விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது வரை வந்துவிட்டது மாநில அரசு. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு ஆகும். விவசாயிகள் பக்கம் அவர்களின் தோழனாகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் சமரசமின்றி நிற்கும். இந்த விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் தி.மு.க. அரசின் இரட்டை வேடப் போக்கை, தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. தீர்மானம் 2. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாதச் சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை: ஒன்றிய அளவில், மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, அவர்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய, பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. கொள்கைவழி நடப்பதில் உறுதியாக இருக்கும் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். எனவே, சுயநல அரசியல் லாபங்களுக்காகப் பா.ஜ.க.வுடன் கூடிக் குழைந்து கூட்டணியில் சேர, நம் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ இல்லை. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் இச்செயற்குழு வாயிலாக உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்மானம் 3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்! மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட மேல்மாவில் 11 கிராமங்கள் மற்றும் 2800 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து மேற்கொள்ள முயலும் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாய நிலங்களைப் பாழாக்கும் கெடுநோக்குக் கொண்ட இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசே தவறான தகவல்களை வெளியிடுவது, கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மக்களைப் பங்கேற்க விடாமல் தடுத்தது, ஜனநாயக் வழியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறையை ஏவியது, எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவியது போன்ற அக்கிரமங்களை இங்குதான் காண்கிறோம். முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிய விவசாயிகளைக்கூட இதுவரை முதலமைச்சர் சந்திக்கவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, விவசாயிகளை எந்த அளவிற்குத் தவறாகச் சித்திரித்து, அவர்களின் போராட்டத்திற்குக் காது கொடுக்காமல் ஒன்றிய அரசு இருந்ததோ, அதே பாணியை, பா.ஜ.க.வைப் பின்பற்றும் இங்குள்ள மாநில அரசும் செய்து வருகிறது. போராடும் மக்களை, விவரம் தெரியாமல் போராடுகிறார்கள், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க, தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்’ என்று முதலமைச்சரின் செய்திக் குறிப்பு, அவர்களைக் குற்றவாளியாகச் சித்திரித்தது. எனவே, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்திற்கு எதிரான அரசு அதிகார மீறலின் உச்சபட்சமாக இருக்கும் மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 4. நெல் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. காலநிலை மாற்றம், மோசமான சூழலியல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சவால்களை எல்லாம் கடந்து விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால், அந்த நெல்லை உரிய விதத்தில் கொள்முதல் செய்யவோ, கொள்முதல் செய்யப்பட்டவற்றை முறையான தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கவோ இதுவரை நல்ல கட்டமைப்பை வெற்று விளம்பர மாடல் திமுக அரசு ஏற்படுத்தவில்லை. சிறிய மழை வந்தாலும் பெரும் பாதிப்புகளுக்கு நெல் மூட்டைகள் இலக்காவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கிடையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer’s Federation of India Private Limited) என்ற பெயரில் தனியாரை நெல் கொள்முதலுக்குப் புகுத்துவது, அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் தீர்மானிக்கும்படி கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற மோசமான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மோசடி செய்யும் தனியார் நிறுவனங்களை நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்தச் செயற்குழு வற்புறுத்துகிறது. தீர்மானம் 5. பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை தர்மபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கண்டுள்ள கூடுதல் விளைச்சலின் விளைவாக, தமிழ்நாட்டில் சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் நம் விவசாயிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள், மிகச் சொற்ப விலைக்குக் கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளன. அண்டை மாநிலங்கள் நம் மாம்பழக் கொள்முதலுக்குத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், நம் விவசாயிகளின் வாழ்வைக் காக்க வேண்டிய பொறுப்பு, நமது அரசுக்கே உள்ளது. ‘மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பன போன்றவற்றை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. விற்பனைக் காலத்தை எதிர்பார்த்து, இன்று பெரும் துயரில் இருக்கும் நம் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீட்டை முன்னின்று வழங்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 6. மலைக்கோட்டை மாநகரில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்: தமிழ்நாட்டின் மத்திய மாநகரான திருச்சி, மணல் கொள்ளையாலும், அது தொடர்பான முறைகேடுகளாலும் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றுப்படுகை முழுவதும் இடைவிடாது நடக்கும் மணல் கொள்ளையால், அந்த ஆற்றுப் படுகையில் தீவிர மணல் அரிப்பு ஏற்பட்டு, நீர் வளத்திற்கும் சூழலியல் கேட்டிற்கும் காரணமாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே, கொள்ளிடம் ஆற்றுப் படுகையிலிருந்த முக்கியப் பாலங்கள் பாதிப்புக்குள்ளாகி, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. இப்பகுதியில் நடக்கும் தொடர்ச்சியான இயற்கைவளச் சுரண்டலை அரசும் உள்ளூர் நிர்வாகமும், தங்கள் ஆதாயத்திற்காகத் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. மேலும், மணல் கொள்ளைக்கு எதிராக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பான அரசு அதிகாரிகள் கொலை மிரட்டலுக்கும் கொலை முயற்சிக்கும் ஆளாகும் போக்கு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே கண்டித்து வருகின்றன. எனவே, திருச்சி மண்டலத்தின் வளத்தையும் வரலாற்றுச் செழிப்பையும், குறுகிய நலனுக்காக அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசை இந்தச் செயற்குழு கண்டிப்பதோடு, அனைத்து முறைகேடுகளையும் உடனே தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. தீர்மானம் 7. என்.எல்.சி.-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்தப்படும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மும்முடிச்சோழகன் கிராமத்தினர் 2002ஆம் ஆண்டு தங்கள் நிலத்தைக் கொடுத்தபோதிலும், அதற்கு இழப்பீடும் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரத்துக்கும் எந்த உதவியும் செய்யப்படவில்லை. 2007ஆம் ஆண்டு வளையமாதேவி, கரிவெட்டி, காத்தளை ஆகிய கிராமங்களில் குடியிருந்தவர்களுக்குப் பரிவுத் தொகை (Ex-Gratia Pay- ments) வழங்கியது போலவே, நிலத்தை வழங்கிய மும்முடிச்சோழகன் கிராமத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கரிவெட்டி கிராமத்தில் இன்னமும் இழப்பீடும் வேலையும் வழங்கப்படாமல் இருப்போருக்கு, உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் இழப்பீடாகக் கொடுக்கப்பட்ட மாற்று நிலத்துக்கான பட்டா வழங்கப்படாமல் இருப்போருக்கு காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க வேண்டும் எனவும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 8. விசைத்தறித் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக் கோரித் தீர்மானம்: கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறித் தொழிலாளர்கள் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 33 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஊதியம் மறுவரையறை செய்யப்பட்ட போதிலும் அந்த ஊதியம் வழங்கப்படவில்லை. சமீபத்திய போராட்டத்தின் விளைவாகச் சோமனூர் ரகங்களுக்கு 15% ஊதிய உயர்வும் மற்ற ரகங்களுக்கு 10% ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாகச் சுமார் 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊதிய உயர்வுக் கோரிக்கையில் தீர்வு காணப்பட வேண்டும். வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு நடைமுறையில் வருவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நெசவாளர்களின் கோரிக்கைகளையும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் காலம் தாழ்த்தாமல் தீர்க்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்க வேண்டும்: திண்டுக்கல் மாவட்டம், மல்லிகை உற்பத்தியில் உயர்ந்து விளங்குகிறது. தினமும் ஐந்து டன் மல்லிகைப் பூக்கள் திண்டுக்கல் பூச் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் மல்லிகைப் பூக்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வசதி எதுவும் இம்மாவட்டத்தில் இல்லை. எனவே, மல்லிகைப் பூக்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும், வாசனைத் திரவிய ஆலை ஒன்றை நிறுவிடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 10. கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்: தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, கதிரியக்கத் தன்மை கொண்ட, அணுசக்திக்குத் தேவையான அரிய கனிமம் உள்ளிட்டவற்றை எடுத்து ஏற்றுமதி செய்தனர். பல லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த இந்தக் கொள்ளை குறித்து ஊடகங்கள் அம்பலப்படுத்தின. கனிமவளக் கொள்ளை குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடக கவனத்தை ஈர்த்து, விவாதத்துக்கு உள்ளான போதும், நீதிமன்ற கவனத்துக்கு வந்த பின்னரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் கனிம வளக் கொள்ளைப் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் மெத்தனமாகச் செயல்படும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 11. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு: அரசு எந்திரத்தின் அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைக் கைவிட்டனர். அப்போது, ஆட்சிக்கு வருவதற்காக, ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு மனசாட்சி இல்லாமல் அவர்களைக் கைகழுவி விட்டது. முன்பு ஆட்சியில் இருந்தோருக்கும் இப்போது ஆட்சியில் இருப்போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள்தான். ஆட்சித் தலைமையின் குடும்ப நலனை மட்டுமே முக்கியமாகக் கருதும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்குத் தமிழக மக்களின் குடும்ப நலன்களோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நலன்களோ முக்கியமில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை, லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன் சார்ந்த போராட்டமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கிறது. சமீபத்தில் நம் வெற்றித் தலைவரைச் சந்தித்த ஆசிரியர் சங்கத்தினரிடம் நம் வெற்றித் தலைவர் கூறியது போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குத் த.வெ.க. தனது முழு ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறது என்பதைக் கழகத்தின் செயற்குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தீர்மானம் 12. மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்று ஏற்பட்ட காலங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து, உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் மக்களைக் காப்பதே தங்களின் தலையாய பணி என அர்ப்பணிப்போடு சேவையாற்றினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல அனைத்துக் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டது போலவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளார். இந்தியாவிலேயே ஊதியத்திற்காக மருத்துவர்களைத் தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்து, அப்பணியிடங்களுக்குப் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. உயிர் காக்கும் உன்னத சேவை புரியும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 13. மீனவர்களின் நீண்ட காலத் துயர் முடிவுக்கு வர வேண்டும்: தமிழக மீனவர்களின் வாழ்வும் தொழிலும் போராட்டத்திலேயே தொடர்வதற்கு எப்போது விடிவு பிறக்கும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இராமநாதபுரம் மீனவர்களின் 54 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகு உரிமையாளருக்கு 1.20 கோடி அபராதமும், மற்றொரு படகோட்டிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இதர 12 மீனவர்களுக்குத் தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, நம் மீனவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் இலங்கை அரசு, தற்போது எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தமிழக மீனவர்களைச் சிறை வைக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரம் எப்படிக் குற்றமாகும் என்ற நம் மீனவர்களின் கேள்வி நியாயமானது. மோசமான விதிகளைக் கையாண்டு வரும் இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திட, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, எங்கள் தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியபடி, இடைக்காலத் தீர்வாக, இழந்த நம் கச்சத்தீவைக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 14. இருமொழிக் கொள்கை தீர்மானம் : பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது. ஆங்கிலத்தைப் பேசுவோர் அவமானப்படுவார்கள் என்று ஒன்றிய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் கூறியது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீது மறைமுகமாக ஏவப்படும் அஸ்திரம். உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையே இனிவரும் நூற்றாண்டுகளிலும் தொடரும். அதை ஒன்றிய பா.ஜ.க. மட்டுமன்றி, வேறு எவராலும் மாற்ற இயலாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகத்தின் இச்செயற்குழு உறுதிபடத் தெளிவுபடுத்துகிறது. தீர்மானம் 15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாகச் சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைக்க முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்: தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Spe- cial Intensive Revision) நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஜனநாயகத்திற்கு எதிராக, சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைத்து, தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இந்தச் சந்தேகம் உண்மையெனில், இந்த நடவடிக்கையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் 18 வயது நிறைவடைந்த, தகுதி உள்ள நபர் எவராக இருந்தாலும், வாக்களிக்கும் முழுமையான உரிமையை அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்: 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார். இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17, 2025) உத்தரவிட்டுள்ளது. கீழடி ஆய்வு முடிவுகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலம் காலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். வைகை நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. கீழடியின் பெருமையை மறைக்க, உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இச்செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடகத் தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்: ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் அனைவரும் சமம். ஆனால், தற்போதைய ஆளும் கட்சியான கபட நாடகத் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரியாகப் பார்ப்பதுதான் வழக்கம். அதிலும் மாபெரும் மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவும் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்றாலே பயமும் மிரட்சியும்தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் பொதுக்கூட்டமோ, மக்கள் சந்திப்போ, பொது நிகழ்வோ, பொது வெளியிலும் தனியரங்குகளிலும் தனியார் இடங்களிலும் நடத்த அனுமதி தராமல், இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இந்த அதிகாரத் திமிரின் உச்சமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிளைக் கழகம் முதற்கொண்டு மாவட்டக் கழகம் வரை இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர் தோழர்களையும் மகளிர் அணியினரையும் காவல் துறையை ஏவித் தாக்கவும் பொய்வழக்குப் போட்டு மிரட்டவும் செய்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், கபட நாடகத் தி.மு.க.விற்குத் தோல்வியைப் பரிசளிப்பது உறுதி என்பதை உணர்ந்ததால்தான் இவ்வாறு செய்கின்றனர். எங்களுடைய வெற்றித் தலைவர் ஏற்கெனவே தெரிவித்தது போல வேண்டுமானாலும் தடுக்கலாம், ஆனால் இயற்கையையும் மாபெரும் மக்கள் புரட்சியையும் எள்ளளவும் தடுக்க இயலாது. இதை ஜனநாயகத்திற்கு எதிரான போக்குடன் அதிகார மமதையில் ஆட்டம் போடும் தி.மு.க. அரசுக்கு நினைவூட்டுவதோடு, த.வெ.க.வை ஒடுக்க முயலும் தி.மு.க.வைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தீர்மானம் 18. தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம்: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்காய்வு (Caste Survey) நடத்த வேண்டியதில்லை என்றும் சொல்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏமாற்று வேலையன்றி வேறென்ன? அனைத்துச் சமுதாய மக்களின் சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல் குறித்த தெளிவான பார்வை இல்லாத கணக்கெடுப்பை எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கவே ஏற்காது. இட ஒதுக்கீட்டுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீராய்வு என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்திலும் அநீதி இழைக்க முயல்கிறது. இது மட்டுமல்லாமல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று திட்டமிடுவதன் மூலம் ஜனநாயகமே கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கான பதிலடியைத் தென்னிந்திய மக்கள், குறிப்பாக, தமிழக மக்கள், வருகிற 2026 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாகத் தருவார்கள் என்பதையும் எச்சரிக்கையாகத் த.வெ.க.வின் இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 19.காவல் துறை கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத் தேவையான மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்: கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறை விசாரணையின் போது 24 பேர் உயிரிழந்திருப்பதாக, பெரும் அதிருப்தியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய மக்கள் விரோதத் திமுக ஆட்சியில், காவல் நிலையத்தில் பலர் மரணம் அடைவதைப் பார்க்கும் போது, அதிகாரத் திமிர் கொண்ட ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அண்மையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி சகோதரர் அஜித்குமார் அவர்கள், தமிழ்நாடு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக நேர்மையற்ற முறையில் சாரி கேட்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக, காவல் துறை விசாரணையில் மரணம் அடைந்த 24 பேருக்காகவும் இவர் இதைப் போல சாரி கேட்பாரா? இவரது பொறுப்பற்ற, நிர்வாகத் திறனற்ற (Irresponsible and Inability Administration) தன்மைக்கு அப்பாவி மக்களும் இளைஞர்களும் பலியாகி வருகின்றனர். இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர் இருக்கக் கூடிய இண்டியா கூட்டணிக் கட்சிகள், ஒன்றிய அரசையும் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. ஆனால் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல் துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுகிறார். தன் கீழ் இயங்கும் துறை மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைக்கு வழக்கை மாற்றுகிறாரே, இது அவருக்குப் பெருத்த அவமானம் இல்லையா? தி.மு.க. பேசி வரும் மாநில சுயாட்சி முழக்கம் எங்கே போனது? மாநில சுயாட்சியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாத தமிழ்நாடு உள்துறை அமைச்சர், தன்னை நம்பி வாக்களித்த மக்களைப் படுகுழியில் தள்ளி வருகிறார். இதற்கு அவர்களிடையே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கத் திறனற்று, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் உள்துறை அமைச்சர், தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பொது மன்னிப்புக் கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 20.பெரியார், அண்ணா ஆகியோரை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலுக்குக் கண்டனம்: தமிழ்நாடு எப்போதும் மதச்சார்பற்ற பூமி. சமூக நல்லிணக்கம் போற்றும் மண். சகோதரத்துவம் பேணும் மாநிலம். இங்கு விஷத்தையோ விஷமத்தையோ விதைத்தால் அந்த முயற்சி துளியளவுகூடத் துளிர்க்காது. எங்கள் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார், மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தவாதி. சமூக நீதிக் காவலர். இட ஒதுக்கீட்டுக்கான பாதையைச் சமைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது எனச் சமூக நலன்சார்ந்த பல்வேறு இலக்குகளுக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரைக் கடவுள் மறுப்புக் கொள்கை என்ற ஒற்றை வளையத்துக்குள் மட்டும் அடைக்கும் வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் இந்த மண்ணில் வெற்றி பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பெரியாரோடு நிற்காமல், கனிவின் திருவுருவான பேரறிஞர் அண்ணாவையும் அவதூறு செய்யும் முயற்சியை மதுரை நிகழ்ச்சியில் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அரும்பெரும் மனிதர், தலைவர் அறிஞர் அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்தைச் சமூக நல்லிணக்கத்திற்காக இம்மண்ணிலே ஓங்கி ஒலிக்கச் செய்தவர் அண்ணா என்பதைத் தமிழகம் அறியும். இன்றளவும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைக் களங்கப்படுத்தும் முயற்சிக்குத் துரும்பளவு பலன்கூடக் கிடைக்காது. தமிழ்நாடு சமூக நீதிக்கும் சகோதரத்துவத்திற்கும் பெயர்பெற்ற சமத்துவ பூமி. இங்கே பிளவுவாத அரசியலைப் பா.ஜ.க எந்த வடிவத்தில், எந்த வேடத்தில் செய்தாலும் தமிழக மக்கள் அதை முறியடிப்பர். பா.ஜ.க.வின் இந்தப் பிளவுவாத அரசியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. https://minnambalam.com/tvk-state-executive-committee-meeting-resolution/
  17. விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை July 5, 2025 9:01 am இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதியில் எரியூட்டப்பட்டு சாம்பல் நீரில் கரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத நிலை நீதிமன்றங்களில் இருப்பதாகவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார். இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாகவும், இதற்கு ஒரு அமைப்புசாரா அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்களும் ஐயங்களும் நீக்கப்பட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://oruvan.com/a-fair-trial-is-also-needed-for-those-abducted-by-the-ltte/
  18. உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது kugenJuly 4, 2025 வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக வனவிலங்கு குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மேற்படி சந்தேகநபர், பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக பதிவு இருப்பது முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஷீஹான் மாலை இரவு 7 மணியளவில் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்தார். அவர் சோதனை செய்த பிறகு, அதிகாரிகள் அவரை எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி மேலும் சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் அதிகாரிகள் அவரது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார். அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தினர். https://www.battinews.com/2025/07/blog-post_15.html
  19. நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து! Published By: VISHNU 05 JUL, 2025 | 12:03 AM தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறப்பதனை கண்டுபிடித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உப நகரபிதா ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/219211
  20. தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 4 ஆரம்பிக்கப்பட்ட "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: "தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன். இதனை ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம். தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது. தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளம் கல்வி அமைச்சிலிருந்தே உருவாகிறது. இருப்பினும், நம்மில் பலரும், அதே போன்று நமது நாடும் பல சந்தர்ப்பங்களில் நினைக்காத, கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதியே இந்த தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் இடமாகவே தொழிற்கல்வி இருந்து வருகின்றது. இருப்பினும், பாடசாலைப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால் செல்லக்கூடிய ஒரு மாற்று இடமாகவே தற்போதும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது என்பதையும், அல்லது மற்ற தேர்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவை கைகூடவில்லை என்றால் இறுதியில் வந்து விழும் இடமாகவே இது கருதப்பட்டு வருகின்றது. இது மிகவும் தவறானதாகும். தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான, புத்திசாலித்தனமான, நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும். தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும். அதனாலேயே நாம் 2026 இல் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதியக் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கு சிறப்பான இடத்தை ஒதுக்கி இருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும். பாடசாலைக் கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க, அந்த மனித வளத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம்," என்றும், அதற்கு அமைய இந்த நாட்டின் தொழிற்கல்வியை உயரிய இடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்கள்: "அரசின் கொள்கையான 'வளமான நாடு – அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த, முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும். இளைஞர்களின், யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள், யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும், நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன. ஆகையினால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) முன்னெடுக்கப்படுகின்றது. 160,000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இது இங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்," எனத் தெரிவித்தார். இந்த விழாவில் உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள்: "தொழிற்பயிற்சி அளிக்கும் அரச நிறுவனங்களில் பல்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை நாடெங்கும் உள்ள மாணவர்கள் கற்று வருகின்றனர். சில சமயங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் கல்வி பயிலுகிறார்கள். சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர் பற்றாக்குறையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு எமது கல்வி முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என நாம் கருதுகின்றோம். தொழிலாளர் அமைச்சின் நிர்வாகத்திலேயே இந்த பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களையும் பலப்படுத்தி பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்," எனத் தெரிவித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmcpq4o4o00ruqp4k819pm7k3
  21. அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1
  22. வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்! தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் “வெள்ளை ஈ” இன் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த வெள்ளை ஈயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம். அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேசசெயலர் பிரிவுகளில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த ஐந்து பிரதேச செயல பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவ கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம். இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணி பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பள கொடுப்பனவு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இந்த பணியினை தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது. மக்களும் எங்களுடன் கை கோர்த்தால் மாத்திரமே இந்த பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களை தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம். அடுத்த வீட்டில் அல்லது அடுத்த பிரதேசத்தில் தானே வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளது, எமது பகுதியில் இல்லை தானே என்று எண்ணாதீர்கள். அது உங்களது பகுதியிலோ அல்லது உங்களது வீட்டிலோ உள்ள தென்னைகளையும் பாதிக்கலாம். எனவே இதனை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/வெள்ளை_ஈ_தாக்கத்திலிருந்து_தென்னைகளை_பாதுகாக்க_2_வார_வேலைத்திட்டம்!
  23. காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 11:00 AM காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை" என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது. https://www.virakesari.lk/article/219155
  24. செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 08:28 AM செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார். செம்மணியில் ஒரு புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார் ஜூலை 1998 இல் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அவரைத் தேடி வந்த மேலும் நான்கு பேரின் கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். அவரது விசாரணையின் போது செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.என அவர் தெரிவித்துள்ளார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் 4வது நாளின் போது, குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று யுனிசெஃப் விநியோகித்த வகையைச் சேர்ந்த தனித்துவமான நீல நிறப் பள்ளிப் பையுடன் புதைக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்ததுஎன அவர் தெரிவித்துள்ளார் இதுவரை, அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அரசு நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மனித உரிமை ஆர்வலர்கள் சாட்சியங்களை சிதைத்து இந்த எலும்புக்கூடுகள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1 இன் படி, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்க, ஒருங்கிணைக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது. 1998 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் சாட்சியத்தை பல செய்தி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதிலிருந்து, செம்மணியில் ஒரு பெரிய புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. இருப்பினும், இப்போதுதான் அது தோண்டப்படுகிறது. இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார் . இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம், 46/1 தீர்மானத்தின் கட்டளைக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார் .. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 இன் இணை அனுசரணையாளராகவும், இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும், ஐக்கிய இராச்சியம் இந்த பிரச்சினையில் முன்னிலை வகிக்க வேண்டும். செம்மணி படுகொலையின் குற்றவாளிகள் மற்றும் அதைப் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ளபடி, இது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/219147

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.