Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 63வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமாரின் ஆட்டமிழக்காது எடுத்த 73 ஓட்டங்களுடனும், நமன் டீரின் 8 பந்துகளில் புயல்வேகத்தில் எடுத்த 24 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விரைவிலேயே ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பியதால் 18.2 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜஸ்பிரிற் பும்ராவும், மிச்சல் சன்ரெனரும் தலா 3 விக்கெட்டுகளை மிகக் குறைந்த ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தியிருந்தனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அடுத்த கட்ட play-off ஆட்டங்களுக்குத் தெரிவாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: போட்டியின் ஆரம்ப நாட்களில் பல நாட்கள் முதல்வராக இருந்த @suvy ஐயா 20வது இடத்திற்கு வீழ்ந்துள்ளார்!
  2. தமிழ்க் கட்சிகள் இனவாதம் பேசிவருகின்றன: அமைச்சர் சந்திரசேகர் சாடல் May 21, 2025 தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” கொடிய யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்றன. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வித மாற்றமும் கடந்த காலங்களில் தொடர்ந்தன. கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இந்நிலைமை படிப்படியாக மாறிவருகின்றது. தமிழ் மக்களுக்கு நம்பகமான அரசாங்கம் உருவாகியுள்ளது. அவ்வாறான அரசாங்கத்துடன் தமிழ் மக்கள் கைகோர்த்துவருகின்றனர். யாழ். மாவட்டத்தில் எமக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினர்கள்கூட இருக்கவில்லை. இன்று 81 உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். யாழ். உட்பட வடக்கில் வாழும் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக எம்மை மக்கள் உயர்த்தியே வைத்துள்ளனர். தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்காக தமிழ்க் கட்சிகளிடம் உள்ள திட்டங்கள் என்ன? எவ்வித திட்டங்களும் இல்லை. காவாளித்தனமான செயற்பாடுகளே கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது முன்னெடுக்கப்பட்டது. கடுமையாக இனவாதம் பேசப்பட்டது. பணம் பறிமாற்றப்பட்டது. மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டன. மிகவும் கேவலமான முறையில் நடந்தே வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் உண்மையான அபிலாஷைகள் வெளிப்படவில்லை.” – என்றார். https://www.ilakku.org/தமிழ்க்-கட்சிகள்-இனவாதம்/
  3. ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை?சீமான் கடும் கண்டனம் Vhg மே 21, 2025 ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ வேறு நாட்டிற்கு செல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு எனவும், இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது எனவும், இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும், சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்திய நாட்டில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை அல்லது தற்காலிக குடியுரிமை என்று ஏதாவது ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் இறுதி நம்பிக்கையாய் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும்,இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். https://www.battinatham.com/2025/05/blog-post_655.html
  4. ஆசியாவில் கொரோனாஅலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை 21 May, 2025 | 10:47 AM சென்னை: ஆசியாவில் மீண்டும் புதியகொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில்கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழகத்தில் 34 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக சுகாதார நிறுவனத்தால் கடந்த 2020-ம் ஆண்டு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனாலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் பெருந்தொற்றில் இருந்து மீண்டு தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் மூலமாக கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா நேபாளம் வங்கதேசம் இந்தோனேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாபரவல் மிக குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விரீயம் இழந்த ஓமைக்கரான் வகை வைரஸின் உட்பிரிவுகளான ஜெஎன்1 எக்சி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும் புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வியட்நாம் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது. ஆனாலும் பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுவடன் சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்களும் குறிப்பாக காய்ச்சல் நுரையீரல் சார்ந்த இணைநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215297
  5. காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு தலையீடு செய்யுங்கள் - அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, சுவிட்ஸர்லாந்து இராஜதந்திரிகளிடம் தமிழ்த்தேசிய பேரவை வேண்டுகோள் Published By: VISHNU 21 MAY, 2025 | 02:32 AM (நா.தனுஜா) வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (20) இடம்பெற்றது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரேனோவுடன் மு.ப 9.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்திலும், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குடன் பி.ப 1.30 மணிக்கு அமெரிக்கத் தூதரகத்திலும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற்றுடன் பி.ப 3.00 மணிக்கு சுவிட்ஸர்லாந்து தூதரகத்திலும் நடைபெற்ற இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசியப்பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் உறுப்பினர் நடராஜர் காண்டீபன், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது முதலாவதாக வடமாகாணத்தில் உள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் தற்போது அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருப்பது ஏமாற்றுவேலை எனச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதனை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வெறுமனே 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பான உரித்தை நிரூபிப்பதில் தமிழ்மக்கள் முகங்கொடுத்திருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் பற்றியும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதேபோன்று காணி உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உரிமைளயாளர்களிடம் இல்லாத நிலையில், அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அக்காணிகளை சுவீகரிப்பதை நோக்காகக்கொண்டே அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்ததாக கடந்த ஆட்சியின்போது குருந்தூர் மலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிக்கு அப்பால், விகாரையை நிர்மாணிப்பதற்கு மேலும் 325 ஏக்கர் காணி தேவைப்படுவதாக அதனுடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் அக்காணிகள் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், அண்மையில் அக்காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட பௌத்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அதற்கு முரணாக செயற்படுவது பற்றி விசனம் வெளியிடப்பட்டது. அதேவேளை தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்தும், குச்சவெளியில் 32 சைவ தொல்பொருள் அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்தும் இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், தொல்பொருள் அடையாளங்கள் அவ்வாறே தொடர்ந்து பேணப்படவேண்டுமே தவிர, அவற்றை பௌத்தமயப்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/215285
  6. அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம் யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம். எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த உணவகம் அகற்றப்படவேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்களில் பரந்துபட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் - என்றார். https://newuthayan.com/article/அசைவ_உணவகத்தை_உடனடியாக_மூடுங்கள்!__நல்லூரில்_நேற்றுப்_போராட்டம்
  7. GMT நேரப்படி நாளை புதன் 21 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 63) புதன் 21 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 21 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த Playoff கட்டத்திற்கு போவதோடு 21 யாழ் களப் போட்டியாளர்களுக்கும் புள்ளிகள் பெற்றுத் தருமா அல்லது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்று Playoff கட்டத்திற்கு போகும் வாய்ப்பை தக்கவைப்பதோடு யாழ்களப் போட்டியாளர்கள் இருவருக்கு புள்ளிகளைப் பெற்றுத் தருமா?
  8. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 62வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயுஷ் மாத்ரே புயல்வேகத்தில் 43 ஓட்டங்களை எடுத்தாலும் பிற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஆடவந்த டெவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக 42 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 39 ஓட்டங்களையும் எடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்களை எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெஸ்வாலும் வைபவ் சூர்யவன்ஷியும் மின்னல் வேகத்தில் ஆடி முறையே 36 ஓட்டங்களையும், 57 ஓட்டங்களையும் எடுத்து அடித்தளம் போட்டுக் கொடுத்ததால் பின்னர் ஆடவந்து சஞ்சு சாம்சனின் 41 ஓட்டங்களுடனும் துருவ் ஜுரேலின் மரண அடியான 12 பந்துகளில் 31 ஓட்டங்களுடனும் 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் இருக்கும் இரட்டையர்கள் ஜோடி @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் வெள்ளி திசை என்பதால் புள்ளிகள் அள்ளிக் கொட்டுகின்றன.
  9. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல் PrashahiniMay 20, 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடனான 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் எனது 2 மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல், உக்ரைனும் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில், வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும். புதினுடனான அழைப்புக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதிஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன். போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன், இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்முறை தொடங்கட்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://www.thinakaran.lk/2025/05/20/breaking-news/130235/ரஷ்யா-உக்ரைன்-போர்-நிறுத/
  10. உயிரைமாய்த்த பாடசாலை மாணவி கற்ற பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் Digital News Team 20 மே, 2025 கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி மாணவி விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318163
  11. இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது-திருமாவளவன் 20 May, 2025 | 10:48 AM புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு எல்லாம் இடம் கொடுப்பதற்கு இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது. புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது. புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்று அவர் கூறினார். உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? - இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது. உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்து குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215195
  12. அனுரகுமார ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: Rajeeban 20 May, 2025 | 11:15 AM அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வார இறுதியில் இலங்கையில் தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டு போரின் போது கொல்லப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கு கடந்த 16 வருடங்களாக செய்வதை போல ஒன்று திரண்டாhர்கள். அவர்கள் நீதிக்கான வேண்டுகோளையும் விடுத்தார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுக்கள் பாதுகாப்பு படையினர் யுத்த குற்றங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான பெருமளவு ஆதாரங்களை வைத்திருக்கின்ற போதிலும்இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுக்க தவறிவிட்டனர். அதேவேளை தமிழ் செயற்பாட்டாளர்களும்பாதிக்கப்பட்ட சமூகத்தினரும்இஒடுக்குமுறை உட்பட ஏனைய மீறல்களை தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போரில் இரு தரப்பும் பெருமளவு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகளை நெருங்கிய பாதுகாப்பு படையினர் 2009 மே 18ம் திகதி அவர்களை தோற்கடித்ததை தொடர்ந்துபடையினர் கொலைகள்பாலியல் வன்முறைசரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகளை பலவந்தமாக காணாமலாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். புலிகளால் யுத்தசூன்ய வலயத்தில் சிக்கிக்கொண்ட மக்கள் மீது படையினர் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். படையினர் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர். அனுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீடுகளிற்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்களின் தோல்வியடைந்த முயற்சிகளை திசநாயக்க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது ஆதரிக்கின்றது. ஆனால் இவை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லைஇஇந்த நிறுவனங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் பலர் நிராகரித்துள்ளனர்.அவர்கள் அவற்றை தோல்வியடைந்த ஒரு வாக்குறுதியாகவே பார்க்கின்றனர். இதற்கிடையில் தமிழர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் எதிர்கால வழக்குகளில் பயன்படுத்த சர்வதேச குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவ வேண்டும் என்றும் ஆணைவழங்கியது.. அந்த ஆணைகள் செப்டம்பரில் புதுப்பிக்கப்பட உள்ளன. இலங்கையில் முன்னேற்றம் இல்லாததால் சர்வதேச குற்றங்களைச் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு புதுப்பித்தல் மிக முக்கியமானது. திசாநாயக்க அரசாங்கம் மனித உரிமை பேரவையின் தலையீட்டை "பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும்" என்று எதிர்த்துள்ளது. மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் செயல்படுவதாக பாசாங்கு செய்வதற்குப் பதிலாக பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் மற்றும் இறுதியில் நீதியை வழங்குவதற்காக பாடுபட வேண்டும். https://www.virakesari.lk/article/215199
  13. ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி Sports20 May 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அபிஷேக் ஷர்மா தெரிவுசெய்யப்பட்டார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/sports/404963/lucknow-super-giants-knocked-out-of-ipl
  14. சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் - மஹிந்த ராஜபக்ஷ தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். தான் இந்த நினைவு நிகழ்வில் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பங்கேற்றதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம். எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது. அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம். ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி இதன்போது எழுப்பியிருந்தார். மஹிந்த - தேசிய பாதுகாப்பு? அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டைப் பாதுகாக்க வேண்டும்..." https://adaderanatamil.lk/news/cmaw396m600niqpbs6q7tg9nq
  15. வடக்கு கடல் வழியான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் adminMay 20, 2025 வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமார, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், கடல் வழியான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://globaltamilnews.net/2025/215700/
  16. தாளையடியிலிருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் adminMay 19, 2025 வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் காலை 8.30க்கு சமய நிகழ்வுடன் ஆரம்பானது. நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்திதுறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர் மதிவாணன்,கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் இராகவன்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் விநியோக செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர். யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/215682/
  17. அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்! 19 May 2025, 7:24 PM உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட சுபாஷ்கரை, விரைவாக இலங்கைக்கு நாடு கடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது சுபாஷ்கரன் தரப்பில், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது; ஆகையால் சுபாஷ்கரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர், உலக நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குடியேறுவதற்கு இந்தியா தர்ம சத்திரம் (Dharamshala) கிடையாது; 140 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா ஏற்கனவே திணறிக் கொண்டு இருக்கிறது; இந்தியாவில் குடியேறுவதற்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாடுகளை அணுகலாம் என்றும் தெரிவித்து சுபாஷ்கரனின் மனுவை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். https://minnambalam.com/india-is-not-a-dharamshala-to-grant-asylum-to-all-supreme-court-in-eelam-refugee-case/#google_vignette
  18. தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை May 19, 2025 2:08 pm “தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும். அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறிதரன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார். இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம். அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன். நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்பதை இதுவரை ஏற்கவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sumanthiran-is-a-powerful-figure-in-the-ilankai-tamil-arasu-kachchi/
  19. நாளைக்கு இரட்டையர் ஜோடியை சவட்டுறம்😃
  20. GMT நேரப்படி நாளை செவ்வாய் 20 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) செவ்வாய் 20 மே 2:00 pm GMT டெல்லி - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 20 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  21. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 61வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்சல் மார்ஷினதும், எய்டன் மார்க்கத்தினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து அதிரடியாக 45 ஓட்டங்கள் எடுத்த நிகொலஸ் பூரனினது ஆட்டத்துடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மாவினது மரண அடியான 20 பந்துகளில் எடுத்த 59 ஓட்டங்கள் இலக்கை துரத்துவதை இலகுவாக்கியது. ஹென்றிக் க்ளாஸன், இஷான் கிஷான், கமிந்து மெண்டில் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடன் 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.