Everything posted by கிருபன்
- IMG_0888.jpeg
-
இலங்கையில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண்
இலங்கையில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு துணை நிற்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, பெங்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பின்னர் திங்களன்று கொழும்பில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 46 கிலோ (101 பவுண்டுகள்) கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு போதைப் பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் குறித்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுடன் தனது குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் குறித்த பெண் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்லோட் மே லீ, TUI-யின் முன்னாள் கேபின் குழு உறுப்பினராக பணியாற்றிய நிலையில், பின்னர் அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=325208
-
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன்
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த மையவாத அரசாங்கங்கள் ஆட்சியில் ஆரம்பத்தில் இசைவதும், அரியாசனத்தில் அமர்ந்த பின்னர் ஏமாற்றுக்கதைகளைக் கூறுவதும், நேரடியாகவே மறுதலிப்பதும் தொடர்ந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் னர், தமிழின அபிலாசைகளை நிராகரித்தது மட்டுமன்றி, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலையும் ஒருங்கே நிராகரிக்கும் போக்கே நீடிப்பதோடு மட்டுமன்றி, மனித உரிமை மீறல்கள் நடைபெறவே இல்லையென்று முழுமையாக நிராகரிக்கும் தீவிரமான போக்கும் காணப்பட்டது. இந்நிலையில், சிங்கள, பௌத்த தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் தேசிய அரசியல் ஆதிக்கம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளைப் புரிந்து பின்னரான காலத்தில் சிங்கள, பௌத்த மையவாத ஆட்சியாளர்களுக்கு முண்டு அதன்பின்னர் தாங்கள் தனித்துவமானவர்கள் இடதுசாரித்து கொள்கைவாதிகள் என்று பிரகடனப்படுத்திச் செயற்பட்ட ‘ஜே.வி.பி.’ தேசிய மக்கள் சக்தி என்ற பரிநாமத்துடன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தது. ஜே.வி.பி.ஆரம்பிக்கப்பட்டு ஆறுதசாப்த போராட்டத்தின் பின்னர் தான் அத்தரப்பினருக்கு மக்கள் ஆணை கிடைத்தது. மக்கள் ஆணையைப் பெறும் வரையில், சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம், உள்ளிட்ட சொல்லாடல்களை கவர்ச்சிகரமாக வெளிப்படுத்தியது ஜே.வி.பி. ‘அரகலய’ மக்கள் எழுச்சியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றப்பாட்டில் நாடாளவிய ரீதியில் உள்ள பல்லின மக்களையும் ஆரத்தழுவும் அளவுக்கு அத்தரப்பினர் நடந்து கொண்டபோதும் பதவிக்கு வந்து முதலிரண்டு மாதத்திலேயே தமிழினத்தின் நீதிகோரல் போரட் டத்தினை முழுமையாக நிராகரித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 59ஆவது மனித உரிமைகள் பேர வையில் வாய்மூலமாக வலியுறுத்தப்பட்ட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களை உடனடியாகவே நிராகரித்தார் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க. அத்தோடு நின்றுவிடாது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை, ஐ.நாவின் அனைத்து பரிந்துரைகள், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதோடு தேசிய பொறிமுறையில் உள்நாட்டில் விடயங்கள் கையாளப்படும் என்று தீர்மானம் எடுத்து அது வெளிவிவகார அமைச்சின் ஊடாக பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், தமிழினப் படுகொலை நினைவகம் கனடாவின் பிரம்டன் மாநகரில் மேயர் பற்ரிக் பிரவுனின் ஒத்துழைப்பு டன் தற்போது நிறுவப்பட்டு கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழினம் தன்நிலத்தை இழந்து, மாற்றான் தேசத்தில் மாடாய் உழைத்து தனது நினைவுகளை ஆற்றுப்படுத்துவதற்காக நினைவகத்தை திறந்து மன நிம்மதி அடைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியில் உள்ள ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கமோ, அந்த நினைவகம், இலங்கையில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கின்றது என்று கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷை அழைத்து கடுந்தொனியில் சாடுமளவிற்கே நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடானது, தமிழினத்தின் வலிகளை நாட்டுக்கு வெளியில் கூட வெளிப்படுத்துவதற்கு விரும்பவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிங்கள,பௌத்த மையவாத தேசிய கட்சி களை மையப்படுத்திய அரசுகளை விடவும் ஒருபடி மேலேயே ஆட்சியில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் பேசிய இடதுசாரித்துவ தோழ மையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடைமைகளை, உறவுகளை கண்ணுக்கு முன்னால் இழந்த உறவுகள் தங்களது வலிகளை வடுக்களாகச் சுமந்துகொண்டு எஞ்சிய தமது வாழ்க்கை காலத்தில் நீதிக்காக குரல்கொடுத்து எதிர்பார்ப்புடன் இருக்கையில் அந்த எதிர் பார்ப்புக்கள் அனைத்தும் கானல் நீராகவே போகும் என்பதை ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கத்தினர் ஆட்சிப்பீடமேறி ஆறுமாத காலத்துக்குள்ளேயே வெளிப்படுத்தி விட்டனர். ஆக, பொறுப்புக்கூறல் என்பது அநுரவும் அவரது தோழர்களாலும் ஒருபோதும் செய்யப் படாதவொரு விடயமாகவே இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண் டியது தவிர்க்க இயலாதவொன்றாகிறது. நிலைமைகள் இப்படியிருக்க, கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையானது, பொறுப்புக்கூறலை நிராகரித்து, அரசியல் உரிமைகளை ஏற்க மறுக் கின்ற ஜே.வி.பியின் அடிப்படை ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆம், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர் தல் முடிவுகள் ஆளும் கட்சியாக இருக்கும் ஜே.வி.பிக்கு பலத்த அடியை வழங்கியிருக்கின்றது. அந்தப் பின்னணியில் அநுரகுமார வெளிப் படுத்தியிருக்கும் கருத்துக்கள் ஜனநாயக அடிப் படைகளை பெயர்த்திருக்கின்றன. ஜனநாயகவாதிகள் என்று தங்களை வெளிப்படுத்தி வந்த அநுரவினதும் தோழர் களினதும் உண்மையான முகத்தை வெளிப் படுத்தியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற சாயம் வெளுத்திருக்கிறது. அநுரகுமார தனது உரையில் என்னி டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மாற்றுவதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். ஏன் இவ்வாறு கூறினார் என்று பார்க்கின்ற போது, 339 உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெற் றிருப்பது, 152 சபைகளில் மாத்திரமே. அங்கு ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. முதல் நாளிலேயே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் 115 உள்ளுராட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்படுகிறது. தொங்கு நிலையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. அதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இதில் கொழும்பு மாநகர சபை பிரதானமானது. யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்டவற் றில் இரண்டாவது இடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அங்கும் சுயேச்சைக்குழு அங்கத்தவர்களை வளைத்துப்போட்டு ஆட்சி அமைக்கவே முயற்சிக் கிறது. அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கில் தமிழர் கள் செறிவாகவுள்ள ஏதாவது ஒரு சபையில் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில் தான், எதிரணிகளை அநுரகுமார எச்சரிக்கும் வகையில் தனது உரையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது ஜனநாயக முறைமைக்குள் பிறள்வானதொரு அரசியல் செயற்பாடாகும். தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், தாங்கள் கூடுதலாக ஆசனங்களை பெற்ற 267 உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பது தான் வாதமாக இருக்கின்றது. அவ்வாறான இடங்களில் தாங்கள் ஆட்சி அமைப்பதை வேறு தரப்புகள் தடுக்கக் கூடாது – குழப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. அதனை வெளிப்படையாகவும் கூறுகின்றது. ஆனால் அந்தத் தொனி அதிகாரத்தின் அடிப்படையிலானது. உலகில் உள்ள ஜனநாயக வழக்கத்தில் அவ்வாறானதொரு போக்கு எங்குமில்லை. எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக ஆட்சி அமைக்கின்ற வழக்கம், எல்லா நாடுகளிலும் உள்ளது. அதிக ஆசனங்களை பெற்ற கட்சிக்கு மாத்திரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்று அர்த்தம் கற்பிக்க முடியாது. அதிக வாக்குகளை பெற்று விட்டதால், அல்லது அதிக ஆசனங்களைப் பெற்று விட்டதால், தேசிய மக்கள் சக்தி தான் மக்கள் ஆணை பெற்ற கட்சி என்று கருத முடியாது. ஏனைய கட்சிகளுக்கும் வாக்குகள் அளிக் கப்பட்டிருக்கின்றன. அந்த கட்சிகளும் உறுப் பினர்களை பெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றை மக்கள் ஆணையில்லாத கட்சிகளாக அடை யாளப்படுத்த முனைகின்றனர் அநுரவும் அவரது சகாக்களும். பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரமும் தன்னிடம் இருக்கிறது என்று அப்போது கூறியிருந்தார். இப்போது அநுரகுமார திசாநாயக்க உள்ளு ராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை, எதிர்க்கட்சிகள் பறிக்கின்ற நிலை ஏற்பட்டால், தன்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, அதை கொண்டு சட்டத்தை மாற்றுவேன். நிறைவேற்று அதிகாரமும் தனக்கு துணையாகவுள்ளது என்று எச்சரித்துள்ளார். அதுமட்டுமன்றி, வடக்கில் தமிழ்க் கட்சிக ளுக்கே மக்களாணை வழங்கப் பட்டுள்ளது என்பதை ஏற்க மறுக்கிறார் அநுர. தங்களுக்கு வடக்கில், இரண்டாவது அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால், மக்கள் தங்களை நிராகரிக்கவில்லை என்றும் கணித பெறுமானங் களை ஒப்பிட்டு பார்க்காது கருத்துக்களை வெளிப் படுத்துகிறார். அவரது வெளிப்படுத்தலும், தர்க்கமும் சிறுபிள்ளைத் தனமானது. ஆதிகார மோகத்தின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் 4,503,930 இலட்சம் வாக்குகள் தான் கிடைத்திருக்கின்றன. அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 43.26 சதவீதம் மாத்திரமே. அப்படியானால் எஞ்சிய 57 சதவீத வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கே அளிக்கப்பட்டி ருக்கின்றன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் அந்த கட்சியை நிராகரித்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு மாத்தி ரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்று அநுரகுமரவால் எவ்வாறு உரிமை கோர முடியும்? அடிப்படைகளற்ற நிலையில் அவரது தர்க்கமானது வெறுமனே அதிகாரத்தை மையப்படுத்தியது. அந்த அதிகாரத்துக்காக, தன்னிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்ற பெரும்பான்மை அதிகாரத்தையும் பயன்படுத்து வதற்கு துணிவது அதிகார மோகத்தின் அதியுச்சம். ஆகவே, அநுரவும் அவரது சகோதரர்களும் இப் போது கிராமிய அதிகாரத்தையும் தமதாக்கி ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பையும் தமக் குள் வைத்திருக்கவே முனைகின்றனர். தனிக்கட்சியாக, அதிகாரக்குவிப்பைச் செய்யவே விளைகின்றனர். அதற்காக ஜனநாக அடிப்படைகளை மறுதலிக்கின்றனர். பகிரங்க மாகவே மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.இவையெல்லாம் அவர்களின் சுயத்தை அம்பலப் படுத்தி நிற்கிறது. இதற்கு மேல் அவர்களிடத்தில் எதனை எதிர்பார்க்க முடியும்? https://www.ilakku.org/வலிசுமந்த-மாதத்தில்-அம்ப/
-
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: Rajeeban 19 May, 2025 | 10:26 AM ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம். உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக தப்பியோடிவந்தனர். நாங்கள் இழக்கப்பட்ட உயிர்களை சிதறடிக்கப்பட்ட குடும்பங்களை,நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சமூகங்களை நினைவுகூருகின்றோம். இந்த வலியின் சுமையையும் அன்புக்குரியவர்களின் நினைவுகளையும் தொடர்ந்து சுமக்கும் பிரம்டன் மற்றும் கனடா தமிழ் சமூகத்துடன் உறுதியாக இணைந்திருக்கின்;றோம். பிரம்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் இருப்பிடம் என்பதால் இந்த வருடம் பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது.இது ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் கடந்த காலத்தை நினைவூட்டுவதாகவும்,உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான அழைப்பாகவும் விளங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் நீதிக்காகவும் நினைவுகூரலிற்காகவும்,ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.இன்றும் எப்போதும். https://www.virakesari.lk/article/215122
-
தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு போர் வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், திங்கட்கிழமை (19) தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கேட்டுக்கொள்கிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுவதாகவும், அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்யும் ஒரு பெரிய தவறு என்றும் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஒரு கட்சியாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒரு கட்சியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அரச தலைவராகவும், பிரதமராக ஹரிணி அமரசூரியவை தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார். அரச தலைவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தனி விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது, அந்தக் கோரிக்கை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், SLPP, ஒரு தேசிய கடமையாக, மே 20 அன்று மாலை 5.00 மணிக்கு போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் ஒரு போர்வீரர் நினைவேந்தலை நடத்த முடிவு செய்துள்ளது. என்றார். படைத் தளபதி என்ற முறையில் ஜனாதிபதியின் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்று அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் செனரத் கோஹோன (ஓய்வு) தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்த 16ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தேசிய போர்வீரர் தினம், வெற்றி நாள் என்றும் அழைக்கப்படுகிறது, இது நாளை மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள தேசிய போர்வீரர் நினைவுச்சின்னத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை அட்மிரல் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள்; மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளையும் வழிநடத்திய விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-தனி-விழாவுக்கு-அனுமதி-மறுப்பு/175-357592
-
சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் சில கருத்துகள் மற்றும் பதிவுகளை சில சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பதிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. நீதி நிர்வாகத்தில் நீதித்துறை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கையும், நீதித்துறையின் கடமைகள், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறை நடத்தையை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டம் தெளிவான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. சில நபர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நீதித்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும், எந்த உண்மைத்தன்மையும் அடிப்படை ஆதாரங்களும் இன்றி சில விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் மற்றும் உட்பட்ட விடயங்களைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் நீதித்துறை அமைப்புக்கும் செயல்முறைக்கும் நெறிமுறையற்றவை என்றும், இதனூடாக நீதிமன்ற நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சூழல் உருவாகும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எந்தவொரு அறிக்கைகள் அல்லது கருத்துகளை வெளியிடும்போது, விசாரணை செயன்முறைக்கு பாதகமான அல்லது தேவையற்ற பொது அழுத்தத்திற்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு நடத்தையிலிருந்தும் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நீதித்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சட்டங்களால் அனுமதிக்கப்படும் போது தவிர, பொது குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாகவோ அல்லது வேறு விதமாகவோ பதிலளிக்க முடியாது. எனவே, மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு, நீதித்துறை அதிகாரிகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பொறுப்பான கலந்துரையாடல், உரிய செயல்முறைக்கு மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.samakalam.com/சமூக-ஊடக-பதிவுகள்-குறித்/
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
மே 18- முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தமிழகம் முழுவதும் தவெக இன்று மாலை நினைவேந்தல் 18 May 2025, 11:10 AM 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது 1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் அனுசரிக்க இருக்கிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மே 18-ந் தேதி அனுசரிக்கப்படும்; தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் கடைபிடிக்கப்படும்; அனைத்து மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/may-18-mullivaikkal-remembrance-day-tamils-across-tamil-nadu-to-hold-evening-tribute-today/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை திங்கள் 19 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 61) திங்கள் 19 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவி செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வாத்தியார் சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தாலும், நெஹால் வதேராவினதும், ஷஷாங் சிங்கினதும் அதிரடியான அரைச் சதங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர், ப்ராப்சிம்ரன் சிங், அஸ்மத்துலா ஒமார்சாய் ஆகியோரினது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெய்வாலினது 50 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷியினது 40 ஓட்டங்களும் கைகொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்களின் துருவ் ஜுரேலின் அதிரடியான 53 ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாக அடித்தாட முடியாத நிலையாலும், இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்ததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலின் அதிரடியான சதத்தின் (ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள்) உதவியுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனினது மின்னல்வேகத்தில் எடுத்த சதத்தாலும் (ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள்), அணித்தலைவர் சுப்மன் கில்லினது புயல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 93 ஓட்டங்களுடனும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்களை எதுவித விக்கெட் இழப்புமின்றி எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக வீரர் டி.நடராஜனின் பந்துவீச்சு பந்துவீசும் இயந்திரத்தில் இருந்து வருவது போல இருந்ததால், அவர் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களைக் கொடுத்தார். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 6 பேருக்கும், "முடிவில்லை" எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0887.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு அனுப்பினா! Jaipur: Punjab Kings co-owner Preity Zinta watches the Indian Premier League (IPL) match against Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on Sunday, May 18, 2025. (Photo: IANS/Ravishankar Vyas)
-
நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச
நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச May 18, 2025 2:12 pm ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளார். எவ்வாறாயினும், அவர், நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://oruvan.com/basil-rajapaksa-returns-to-the-country/
-
கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு May 18, 2025 3:18 pm கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையிலும் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். மோதலின் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தனர். எவ்வாறாயினும், மற்றொரு குழு கூட்டத்தை சீர்குலைக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவை கலைக்க முயற்சி செய்யப்பட்டது. எவ்வாறாயினும், பொலிஸ் பாதுகாப்புடன் நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/mullivaikkal-remembrance-day-event-under-heavy-police-security-in-colombo-wellawatte/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரட்டையர்கள் ஜோடி முதல் போட்டியில் புள்ளிகளை எடுத்துவிட்டார்கள்! ஆனால் இரண்டாவது போட்டியில் புள்ளிகள் எடுக்க வாய்ப்பில்லை!
-
பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். adminMay 18, 2025 ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை. ஒரு தேசம் என்பது அப்படித்தான் இருக்கும். தேசங்கள் எப்பொழுதும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் இருப்பதில்லை. வெசாக் பந்தல்களைப் பார்க்க போனவர்கள் எல்லாருமே படையினரின் நண்பர்களும் அல்ல. பொழுது போக்காகப் போனவர்களும் உண்டு. விடுப்புப் பார்க்கப் போனவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் பலர் பின்னர் கஞ்சி வாங்கிக் குடித்திருப்பார்கள். முள்ளிவாய்க்காலுக்கும் போயிருப்பார்கள். ஒரு தேசம் என்றால் அப்படித்தான். எல்லாத் தரப்புக்களும் இருப்பார்கள். யார் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தான் இங்கே முக்கியம். நாடு மே 18ஐ நினைவுகூரும் என்பதுதான் இங்கு முக்கியம். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான தயாரிப்புகளை கடந்த வாரம் முழுவதும் செய்து வருகிறார்கள். கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் செய்கிறார்கள். நீதி கிடைக்காத அல்லது நீதியை நோக்கி மெதுமெதுவாக ஊர்ந்து போகின்ற 16ஆவது ஆண்டு இது. அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்பு செய்தவர்களுக்கு எதிராக தடைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் கனடாவில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கிறது. தாயகத்துக்கு வெளியே அதிக தொகை ஈழத் தமிழர்கள் வாழ்வது கனடாவில்தான். சில வாரங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் இனஅழிப்பு செய்தவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது. இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில், தாயகத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருபுறம் கஞ்சி காய்ச்சுகிறார்கள்;இன்னொருபுறம் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மே 18 முடிந்த இரண்டு வாரங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் உள்ள மொத்தம் 56 சபைகளில் ஆறு சபைகளில் மட்டும்தான் நிச்சயமான அறுதிப் பெரும்பான்மை உண்டு. எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடிக்கப்பட முடியாத பெரும்பான்மை. ஏனைய பெரும்பாலான எல்லாச் சபைகளிலுமே தொங்கு நிலைதான். மொத்தம் 36 சபைகளில் வீடு முன்னிலை வகிக்கின்றது. மூன்று சபைகளில் சைக்கிள் முன்னிலையில் நிற்கின்றது. ஒரு சபையில் சங்கு. ஒரு சபையில் வீணை. ஒரு சபையில் காரைநகரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. அதாவது நினைவு கூரும் மாதம் ஒன்றில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு வழங்கிய ஆணை என்பது பெருமளவுக்கு தொங்கு சபைகள்தான். அந்த மக்கள் ஆணைக்குள் மறைமுகமாக ஒரு செய்தி உண்டு. ஒன்றுபடுங்கள் என்பதுதான் அது. ஒன்றுபடாவிட்டால் பெரும்பாலான சபைகளை நிர்வகிக்க முடியாது. மேலும்,உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கு மட்டுமல்ல. அதற்குமப்பால் அடுத்து வர இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கும் அதுமிக அவசியமானது. ஏனென்றால் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளின் படி,தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கின்றது. அது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் வளர்ச்சியைப் பெறவில்லைத்தான். ஆனால் 6 மாதங்களில் ஒரு தென்னிலங்கைக் கட்சி பெற்ற வளர்ச்சி என்பது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி போன்றது. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி ஏதோ ஓர் ஒருங்கிணைப்புக்குப் போகத் தவறினால் தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக உழைக்கும். தேசிய மக்கள் சக்தி மட்டுமல்லை தமிழ் வாக்காளர்களும் நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டினால்தான் ஆர்வத்தோடு,உற்சாகமாக வாக்களிக்க வருவார்கள். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வந்து விட்டன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைவதற்குக் காரணம் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டமை மட்டுமல்ல. தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சோர்வு அல்லது தளர்வு ஏற்பட்டதும் ஒரு காரணம். யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் நடந்த ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கு வாக்களிப்பில் கலந்துகொள்ள ஆர்வமின்றிக் காணப்பட்ட முதியவர்களை வாக்களிப்பு நிலையங்களை நோக்கிச் செல்லுமாறு தூண்டுவதற்கு சில கட்சிசாரா பெண் செயற்பாட்டாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் முயற்சித்த பொழுது, ஒரு கட்டத்தில் முதியவர்கள் சொன்னார்களாம், “எங்களுக்கு வாக்களிப்பில் ஆர்வம் இல்லை. இவர்கள் ஒற்றுமைப்படட்டும் நாங்கள் உற்சாகமாகப் போய் வாக்களித்து விட்டு வருவோம். நீங்கள் எவ்வளவுதான் தூண்டினாலும் நாங்கள் வாக்களிக்க வரவே மாட்டோம்” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம். இப்படி எத்தனை கிராமங்களில் வாக்காளர்கள் சோர்ந்து போய்,ஆர்வமின்றி வாக்களிக்க வராமல் இருந்திருப்பார்கள்? தமிழ்த் தேசிய வாக்களிப்புப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை வாக்களிப்பு அலை ஒன்று தோன்றும் போதுதான் அதிக ஆசனங்கள் கிடைக்கும். வாக்களிப்பு அலை என்பது பெரும்பாலும் ஒரு தமிழ்த் தேசிய அலைதான். அதைத் தூண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் படைப்புத்திறனோடு சிந்திக்க வேண்டும். ஐக்கியப்பட்டுச் சிந்திக்க வேண்டும். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மே18இன் பின் இரண்டே வாரங்களில் அமைக்கப்படவிருக்கும் உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நிர்வாகத்தை அமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாடி வருகின்றன. வவுனியாவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியோடு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அது போல எல்லாச் சபைகளிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஐக்கியப்படலாம். அல்லது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்குப் போகலாம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை ஒரு கொள்கை விடயத்தைத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறது. தீர்வு விடயத்தில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி “எக்கிய ராஜ்ய”வைக் கைவிட வேண்டும் என்று அந்தக் கூட்டு கேட்கின்றது. இறுதித் தீர்வு என்று வரும்பொழுது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது தொடர்பான சமரசங்களுக்கும் இடமிருக்கக் கூடாது. ஆனால் ஒரு தீர்வை நோக்கிய யாப்புருவாக்க முயற்சிகள் இப்போதைக்குத் தொடங்குமா? எப்பொழுது தொடங்கும் என்று தெரியாத ஒரு யாப்புருவாக்க முயற்சியை நோக்கி ஐக்கிய முயற்சிகளை ஒத்திவைப்பதா? அல்லது உடனடிக்கு உருவாக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளை நோக்கிச் சிந்திப்பதா? அது போல மாகாண சபைத் தேர்தல்களை நோக்கிச் சிந்திப்பதா? எது சரி? இரண்டுமே சரி. தீர்வு முயற்சிகளை நோக்கி நீண்ட கால நோக்கில் கொள்கைத் தெளிவோடு இருக்க வேண்டும். அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்பதும் தமிழ்த் தேசியக் கொள்கையின் ஒரு பகுதிதான். பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வரக்கூடிய மாகாண சபை தேர்தலில் என்பிபி புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும். அதை நோக்கித் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாட வேண்டும். பொது எதிரிக்கு எதிரான தேசிய ஐக்கியத்தைப் பற்றி ஆழமாக உரையாட வேண்டும். இல்லையென்றால்,அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்றால், உள்ளூராட்சி சபை தேர்தல்களில் விழுந்தது போல வாக்குகள் விழுமாக இருந்தால், அல்லது வாக்குகள் விழாமல் போனால், அது என்.பி.பிக்கு அனுகூலமாக முடியலாம். என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைக்குமாக இருந்தால் தீர்வு விடயத்தில் அவர்கள் தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொருட்படுத்தப் போவதில்லை. எனவே, என்பிபிக்கு மக்கள் ஆணை கிடைக்கக்கூடாது என்பதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை தடுப்பதற்கு அவசியமான உத்திகளில் ஒன்றுதான்.இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக கட்சிகள் சிந்திக்க வேண்டும். தேர்தல்களை நோக்கி அதாவது உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது என்ற அடிப்படையில் ஐக்கியத்தைப்பற்றி பேச முடியாது என்ற நிலைப்பாடு சரி. அதேசமயம் தேர்தல்களின் மூலம் தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணை பெறுவதைத் தடுக்கவும் வேண்டும் என்பதும் மிக முக்கியம். எனவே ஐக்கியத்திற்காக உழைக்கும் போது இறுதித் தீர்வு தொடர்பாக தெளிவான திட்டவட்டமான கொள்கைகளை முன்வைத்து உடன்படிக்கைகளை எழுதலாம். எது வேண்டாம் என்று கேட்பதற்குப் பதிலாக இதுதான் வேண்டும்;இது அல்லாத வேறு எந்தத் தீர்வை நோக்கியும் போக முடியாது;அந்தத் தீர்வு வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும்;உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால், அது ஒற்றையாட்சிப் பண்புடையது என்று உச்சநீதிமன்றம் பொருள் கோட முடியாததாகவும் இருக்க வேண்டும் என்பதனை எழுத்தில் போட்டால், அதை மீறும் கட்சியை மக்கள் முன் அம்பலப்படுத்தலாம். இப்போதுள்ள கட்சி நிலவரங்களின்படி, உள்ளூராட்சி சபை நிர்வாகத்தை நோக்கியோ அல்லது மாகாண சபைத் தேர்தல்களை நோக்கியோ முழுமையான தமிழ் ஐக்கியத்துக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல,ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை நோக்கி அதிகம் சாய்வதாகத் தெரிகிறது. சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்தவர்களுக்கு எதிராக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் ஒரு கட்சி, அதே சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்த கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறது. அதுதான் தேர்தல் அரசியல். இதன்மூலம் தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் அவர்கள் சிந்திக்கக் கூடும். எதுவாயினும், இன அழிப்பை நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில்,தியாகிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் ஒரு காலகட்டத்தில்,உயிரைக் கொடுத்தவர்களின் ஆத்மாக்களை மகிழ்விக்க கூடிய ஒரு முடிவை எடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது மாகாண சபைத் தேர்தலில் என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைப்பதைத் தடுப்பதற்காவது ஏதாவது செய்ய வேண்டும். https://globaltamilnews.net/2025/215612/
-
மே 18 இனவழிப்பு நாள் - சுடரேந்திய தொடரோட்டம்
ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது. இந்த யுத்தம் முடிந்த பின், 16 வருடங்களின் பின்னும், இந்த நாடு வளர்ச்சிப்பாதையில் போகாமலும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் குரல்களை அசட்டை செய்தும் கொண்டிருக்கின்றதென்றால், நிச்சயம் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டங்களினால்தான் அந்த நாடு உருப்படாது போனது என்று மனச்சாட்சியுள்ள எந்த இலங்கையரும் இனியும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். மாறவேண்டியதும்/மாற்றவேண்டியதும் இந்த அரசு/அரசாங்கங்கள் கொண்டிருக்கின்ற சிந்தனைகளையும், அவர்களினூடு ஏதோ ஒருவகையில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதத்தையுந்தான். போர் முடிந்து வருகின்ற தேர்தல்களில் பெரும்பான்மை ஆட்சியமைக்கின்ற ஒவ்வொரு சிங்களக் கட்சிக்கும் இனப்பிரச்சினையை எளிதாகத் தீர்க்கின்ற தீர்ப்புக்கள் மக்களால் அளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அரசமைக்கும் அவர்கள் கோருவதோ இதையெல்லாம் மறந்து 'இலங்கையர்கள்' என்ற ஒற்றைக்குடைக்குள் வந்தால் எல்லாமே மறக்கப்பட்டு நாடு சுபீட்சம் அடைந்துவிடும் என்பதாகும். இன்றைய ஜேவிபி கூட்டு அரசின் ஜனாதிபதியான அநுரவே அடிக்கடி தமது கொல்லப்பட்ட தோழர்களை, தமது இயக்கம்/கட்சி எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை நினைவுபடுத்தித்தான் பேசிக் கொண்டு இருக்கின்றார். கடந்தகால அரசுக்களால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு மட்டுமில்லை, உங்கள் தோழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் பொதுமன்றில் கொண்டுவருவதற்கு இதைவிட வேறொரு அரிய தருணம் எதுவுமில்லை என்று நீங்கள் அறிவீர்கள். மேலும் நீங்கள் இன்று ஏறிநிற்கும் ஜனாதிபதி என்ற அரியாசனம் கூட, கொல்லப்பட்ட உங்கள் தோழர்களின் புதைகுழிகளின் மேல்தான் இருக்கின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எது நடக்கின்றதோ/ இல்லையோ நாம் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை தொடந்து நினைவுபடுத்தியபடி இருப்போமாக. அது சுடரேந்திய தொடரோட்டம்! **" (படம்: நன்றி இணையம்) இளங்கோ டிசெ https://www.facebook.com/share/p/18nQv9Ccnr/?mibextid=wwXIfr
- IMG_0886.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று ஞாயிறு 18 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) ஞாயிறு 18 மே 10:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 21 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் இரண்டு பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 60) ஞாயிறு 18 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 15 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் இரட்டையர்கள் ஜோடி "முடிவில்லை" எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் கந்தப்பு நுணாவிலான் அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே "முடிவில்லை" நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தாயகத்தை மீட்கும் கனவுடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், அவர்களை முன்னின்று தலைமைதாங்கி தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஆகுதியாக்கிய தலைவருக்கும் வீரவணக்கங்கள். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி விபரங்கள் காலையில்தான் பதியமுடியும்!
-
போக்காளி (நாவல்)
போக்காளி (நாவல்) sudumanal எனது வாசிப்பு ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு). இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது. புலம்பெயர்ந்தபின் இவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுக்கின்றன. மேற்குலகுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழிவழி, கலாச்சாரவழி என ஆதரவுத் தளம் ஏதும் கிடைக்கவில்லை. ஓர் அந்நியமாதல் நிலவியது. ஆனால் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் உத்தரவாதம் கிடைத்தது. அந்நியர்களாக, இந்த நாடுகளுக்கு புதியவர்களாக, காலநிலைக்கு புதியவர்களாக, பழக்க வழக்கங்களுக்கு புதியவர்களாக, முன்னுதாரணம் ஏதுமற்ற வாழ்வியலுள் புகுபவர்களாக வாழ்வு தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து நிறவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய புதிய பிரச்சினை சேர்ந்துகொள்கிறது. ஆனாலும் காலனிய மனோபாவத்துக்குப் பலியான மனநிலையில் நிறவாதத்தின் அரசியலை அதன் நுண் களங்களை புரிய முடியாதவர்களாகவும், அதுகுறித்த அறிவு விளக்கம் அற்றவர்களாகவும் கணிசமானோர் இருந்தனர், இருக்கின்றனர். மேற்கூறிய காரணிகளின் திரட்சி தோற்றுவித்த உள நசிவுகளை சுமந்து கொண்டு வாழும் நிலை அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பின்னணியில் வாழ்வு அவர்கள் எண்ணியபடி இல்லாமல், ஊகித்தறியமுடியாத திருப்பங்களுடன் நகர்கிறது. புதிய புதிய பிரச்சினைகளையும் கலாச்சார ஒழுங்கமைவுகளையும் எதிர்கொண்டு அவர்கள் தனியர்களாய், பின் இணையர்களாய், பின் பிள்ளைகளோடு குடும்பங்களாய் ஆகின்றனர். இந்த வளர்ச்சி நெடுகிலுமே முன்னுதாரணமற்றதும் அவை குறித்த அனுபவமோ அறிவோ அற்றதுமான நிலை வாழ்வின் இறுதிவரை துரத்திக் கொணர்ந்து முதுமைக்குள் தள்ளி வீழ்த்திவிடும் வரையான கதையை போக்காளி நாவல் விபரிக்கிறது. சுமார் 30 வருட அகதி வாழ்வின் இந்தக் கதையை வாசிக்கும்போது அதேவகை அனுபவங்களை தரிசித்த அல்லது தரிசித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளின் பொதுத் தன்மையை இன்னொரு நாட்டில் இருக்கும் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன். வாசிப்பின்போது பழைய ‘நான்’ உடன் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பொருளாதார ரீதியில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளத்தில், இன்னும் சொன்னால் வறுமைக் கோட்டின் மேலும் கீழுமாய் இயங்கும் ஒரு பொருளாதாரத்தில், வாழ்க்கை நடத்தும் நிலையில்தான் புகலிட வாழ்வு நகர்கிறது. ஒரு சுவிஸ் பிராங் அல்லது நோர்வேஜிய குரோணர் ஒரு இலங்கை ரூபாவுக்கு சமமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யுத்தம் இந்த எல்லைவரை வந்திருக்கவே இடமில்லை. அதைவிட இந்த அகதியர்களது குடும்பங்கள் இலங்கையில் என்ன நிலையில் இருந்திருப்பார்கள். இலங்கைக்கு எடுத்த எடுப்பிலெல்லாம் போய் வர பணவசதி இருக்குமா. சுருங்கச் சொன்னால் இந்த பணப் பரிவர்த்தனை (கரன்சி) மாற்றம் இல்லையெனின், போராட்ட வரலாறு இந்தப் பிரமாண்டத்தை அடைந்திருக்காது. அதேநேரம் இந்தப் பேரழிவையும் சாத்தியப்படுத்தியிருக்காது என்றுகூட யோசிக்க வைக்கிறது. இந்த நாவலின் நாயகன் குணா. நாவலாசிரியர் நவமகன் 1988 இலிருந்து தொடங்கி 2019 வரையான தனது புகலிட வாழ்வு அனுபவங்களை கட்டிச் சுமந்து நாவலில் ஏற்றியிருக்கிறார் என நினைக்கிறேன். புலம்பெயர்வது என்பது உடல் சார்ந்த -பௌதீக ரீதியிலான- பிரதேச மாற்றம் மட்டுமல்ல. உளம் சார்ந்த ‘நான்’ இனதும் மாற்றமும் போராட்டமும் ஆகிறது. ‘நான்’ என்பதே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே புலப்பெயர்வு என்பது அந்த ‘நான்’ இனைப் பிரிந்து -ஒரு வீட்டை கட்டுவது போல்- வாழ்வை கட்டுதலல்ல. அந்த ‘நான்’ இன் இடப்பெயர்வானது ஒரு தொலைதூரத்தில் எல்லாவழியிலும் அந்நியத்தை உணர்ந்தபடியும், புதிய புதிய சிக்கல்களை எதிர்கொண்ட படியும் எப்படி நகர்கிறது என்பதை ஆசரியர் நவமகன் குணாவினூடாகவும் அவரது மனைவி ஆதிரா ஊடாகவும் சொல்கிறார். எனவே அவர் விட்டுவந்த போராட்ட பூமியின் எண்ணங்களோடு அவரது பழைய ‘நான்’ இங்கும் வருகிறது. அந்த பழைய எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தபடி நகரும் ‘நான்’ க்கு இப்போ நேரடி சாட்சிகளோ அனுபவங்களோ கிடையாது. அந்தப் எண்ணப் பசிக்கு விடுதலைப் புலிகள் குறித்த மாயைகளும் உண்மைகளும் பிரச்சாரங்களும் தீனியாகின்றன. இந்த நான் அல்லது நான்களின் திரட்சியாக இந்த நாவல் சொல்வனமாகிறது. புகலிடத்தாரை போராட்டம் பாதிக்கிறது. போராட்டத்தை புகலிடத்தார் பாதிக்கின்றனர். அதன் அடிப்படையில் இரு வரலாறும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன இந் நாவலில். நாவலின் அத்தியாயங்களே ஆண்டுகளால்தான் குறிக்கப்படுகின்றன. 1988 இலிருந்து 2009 வரையான விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தாக்குதல்களை, தனிநபர் கொலைகளை, வெற்றியை தோல்வியை, அவைகள் குணாவிடமும் அவனது நண்பர்களிடமும் ஏற்படுத்துகிற உற்சாகத்தை சோர்வை, குருட்டு நம்பிக்கைகளை, விசுவாசத்தை, நியாயப்படுத்தல்களை, மொக்குத்தனங்களை, மனிதாபிமானத்தை, சாகசங்களை, கொலைகளை கொண்டாடுவதை, அரசியற்ற சிந்தனை முறையை என பெரும் வெளியை இந் நாவல் பூராவும் காண முடியும். இந்த வழியிலேயே எழுச்சியும் வீழ்ச்சியுமான எண்ணங்கள் அவர்களது ‘நான்’களை கட்டமைத்தபடியே செல்கிறது. வெவ்வேறு இயக்கங்களுடன் சம்பந்தப்பட்ட மாறுபட்ட பாத்திரங்களினூடாக இக் கதைகளை சொல்லி நகர்த்துகிறார் நவமகன், தனது போக்காளி நாவலில்!. இந்தப் பொதுப் போக்கின் ஒரு வகைமாதிரியாக குணாவின் பாத்திரம் வருகிறது. மேற்குலக புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை ஆதரித்த பலரினதும் ஒரு வகைமாதிரியான பொதுமகன் குணா. இதற்கு வெளியில் சிந்திக்கிற அரசியல் புரிதல் கொண்ட அழுத்தமான ஒரு பாத்திரம் விஸ்வா. விஸ்வாவும் குணாவின் நண்பனாக இருக்கிறான். அவனது தாக்கமும் குணாவின் மனிதநேய பண்புகளும் அவனது ‘நான்’ இனை பாதித்தபடியே இருக்கிறது. ஆனாலும் குணாவின் உணர்ச்சிவகை நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் அவனை சூழ்ந்தபடி நகர்வதுதான் அவனது வாழ்வு என்றாகிறது. 2009 பேரிடியாய் தாக்கிய தோல்வியை ஒப்புக்கொள்வது என்பதை அவனது ‘நான்’ ஏற்க மறுத்து அவனை சிப்பிலியாட்டுகிறது. அந்த உளவியல் சிதைவு குடும்பத்தை சமாந்தரமாகவே பாதிக்கிறது. அவன் முன்னரைப் போல் இல்லை. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவதும், எரிஞ்சுவிழுவதும், ஒரு கட்டத்தில் (முதன்முறையாகவும் கடைசிமுறையாகவும்) தனது மனைவி மீது வன்முறை பிரயோகிக்குமளவுக்கு போவதும், எப்போதுமான பதைபதைப்பும் என மாறிக்கொண்டிருந்தான். அது குடும்பத்தை பாதிக்கத் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் பிறந்து, அதன் கலாச்சாரத்துள் வாழுகிற, அந்த கல்விமுறையுள் வாழ்க்கையை தொடங்குகிற தனது பிள்ளைகளை எதிர்கொள்வது சிக்கலாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவனவாகவும்கூட அமைந்துவிடுகிறது. எமது கலாச்சார மனத்தையும் பிள்ளைவளர்ப்பு முறைமையையும் தலைக்குள் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை புரிந்துகொள்வது, அவர்களுடனான முரண்பாடுகளை தீர்ப்பது சிக்கலாக இருக்கிறது. பாலியல் ரீதியிலான, ஏன் காதல் குறித்தான மதிப்பீடுகளையெல்லாம் பிள்ளைகளில் ஏற்றிப் பார்த்து பதட்டப்படுகிற நிலை இருக்கிறது. கல்யாண விடயத்தில் சாதியை தாண்டி செயற்பட முடியாமல் அவதிப்படுகிறான். பிள்ளைகளோ இந்தப் புதிரை அவிழ்க்க முடியாதவர்களாக, அதேநேரம் பெற்றோர் மீதான அன்பை இழந்துவிடாதபடி இருக்கப் போராடும் மனமுள்ளவர்களாக இரண்டு கலாச்சார மனங்களுக்கு இடையில் நசிபவர்களாக அந்தரிக்கிறார்கள். இவற்றை அற்புதமாக நாவல் விபரிக்கிறது. இந்த புது அனுபவங்களை பெறாமல் புகலிட வாழ்வு அமைந்திருக்க வாய்ப்பே இல்லை. கள்ள விசாவில் ஜேர்மன் வந்து, பின் பிரான்ஸ் க்கு போய், அங்கிருந்து ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின் டென்மார்க் ஊடாக நோர்வேயை சென்றடைகிற அகதிவழிப் பயணம் என்பது ஆபத்தான வழி கொண்டது. புகையிரத கழிவறையின் கூரைக்குள் மறைந்தபடி முடங்கிக் கிடந்து எல்லை கடப்பது, விமானத்தின் சக்கரத்தை அணைத்தபடி எல்லை கடப்பது, பவுசர்களுக்குள் ஒரு சிறு துவாரக் காற்றை பகிர்ந்து கும்பலாய் எல்லை கடப்பது, பாரவூர்தியின் கொன்ரைனருக்குள் குறுகியிருந்து எல்லை கடப்பது என்பது போன்ற பயங்கரமான சாகசமான பயணங்களை மேற்கொண்டு அகதிகள் வருவது நிகழ்கிறது. இந்தவகைப் பயணங்களில் இறந்துபோனவர்கள் கணிசமானோர். இதையெல்லாம் தாண்டி வந்து இறங்கி தஞ்சக் கோரிக்கையை கேட்டபின்னும் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இதை மேவிய இன்னொரு அச்சம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நாவலின் நாயகன் குணா புகையிரத கழிவறைக் கூரைக்குள் ஒளித்து பயணித்த அனுபவத்தை இந்த நாவல் பதட்டத்துடன் வாசிக்க வைக்கிறது. தனியாக தொடங்கும் குணாவின் அகதிப் பயணம் பின் திருமணத்தோடு அவனைப் பிணைக்கிறது. பின் வாழ்வு குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளோடு ஏற்படும் இடைவெளி தலைமுறை இடைவெளி என்ற எல்லையைத் தாண்டி நகர்கிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருப்பது உலகப் பொதுமையானது. ஆனால் ஒரு அகதிக்கு இதனுடன் சேர்ந்து புதிய மொழி, புதிய கலாச்சாரம், முற்றாக வேறான சமூகம், பழக்கவழக்கங்கள், ஒழுங்குகள் என மேலதிக தடைகள் வருகின்றன. இவை இந்த சமூகத்துடன் மட்டுமல்ல, பிள்ளைகளுடனும் இணைவாக்கம் அடையவோ அவர்களை புரிந்துகொள்ளவோகூட விடாமல் படுத்துகிற கொடுமையை இந் நாவல் பரந்த அறிவுடன் சொல்லிச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி அடையாத, அதன் சமூகப் பெறுமதியை அறியாத சிந்தனையுடன் இலங்கையிலிருந்து வந்த ஓர் அகதியானவர் -வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற- முதலாளித்துவ சிந்தனை முறைக்குள் தன்னை பொருத்திக் கொள்வதில் சந்திக்க வேண்டியிருக்கிற இடர்ப்பாடுகள் உளநசிவுகள் இன்னொரு புறமாக திக்குமுக்காட வைக்கிறது. தாம் புலம்பெயர்ந்து வந்தபோது தமது தாய் தந்தையர் சகோதரம் நண்பர்கள் என்போரின் விம்பங்களை நினைவுச் சட்டகத்துள் தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். தனது குடும்ப நிலையை அந்த மனோரம்யமான மனநிலையை (சென்ரிமென்ரை) காவி வருகிறார்கள். தான் வாழ்ந்த சமூகத்தின் அசைவியக்கத்தை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எதையும் மாறா நிலையில் கற்பனை செய்துகொண்டு, அதனதன் இயங்கியலையும் இற்றைப்படுத்தல்களையும் கண்டுகொள்ள முடியாதவர்களாக மாறா எண்ணங்களுடன் வாழ்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு காலம் கழித்துச் சென்றுவிட்டு வந்து “அங்கை இப்பிடி மாறிப் போய்ச்சு அப்பிடி மாறிப் போய்ச்சு… நாங்களெல்லாம் முந்தி…” என ஒப்பீட்டு கதையாடல்களை தொடங்கி விடுகின்றனர். தாம் நாட்டைவிட்டு வெளியேறியபோது காவி வந்த கலாச்சார மதிப்பீடுகளை கட்டிக் காக்கும் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதை கொண்டாட்டங்களில் பிரமாண்டத்தினூடாகக் கட்டிக் காக்க கலாச்சார மனம் வழிகாட்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் வளர்ந்து, தமது கலாச்சார மதிப்பீடுகளை அச்சுறுத்துவதுபோல பிரமை கொள்கிறார்கள். இந் நாவலில் விஸ்வா தவிர நாவலின் நாயகனான குணா உட்பட மற்றைய எல்லோரும் இதை பிரதிபலிக்கிறார்கள். இதை நேர்த்தியாக நாவலில் பல இடங்களிலும் காண முடியும். ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நூலை வாசிக்கிறபோது புலம்பெயர் வாழ்வின் கதை என்றளவில் நாவல் தரும் அழகியலை மேவி, விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் கதையாடல்கள் ஓர் ஆவணம் போல எழுகிறதான உணர்வு எனக்குப் பட்டது. அது செய்திகளாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தகவல்களின் மிகுதி காரணமாக இருக்கலாம். இந்த புலம்பெயர் வாழ்வில் நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் எனக்கு வாசிப்பு அனுபவம் இந்த பார்வையைக் கொடுக்கிறதாகவும்கூட இருக்கலாம். இதைத் தாண்டிய மாறுபட்ட வாசிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். மேற்குலகின் ஐரோப்பிய மையவாதமும், வெள்ளை மேலாதிக்க பெருமிதமும் சேர்ந்து -காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியம் வரையாக- நிறுவி வைத்திருக்கும் நிறவாதம் நாம் கடக்க முடியாத ஒன்று. அதுகுறித்த அனுபவங்கள் எனது வாசிப்பில் தவறிப் போயிருந்தது. நாட்டுக்கு நாடு இதன் அளவும் தாக்கமும் வேறுபட்டு இருக்கிறபோதும், ஐரோப்பிய மக்களின் பொது மனநிலையில் அதன் வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுவது இன்றும்கூட நாம் காணும் அனுபவம். நாவலில் நான் அதை தரிசிக்கவில்லை. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த எதிரம்சங்கள் நிராகரிப்பதில்லை. அந்த அச்சம் தேவையற்றது. நாவலின் உள்ளடக்க இயங்குதலையும், அது கொண்டலைக்கிற மனதையும் தாண்டி நாவல் இப்படியோர் முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பட்டது. அந்த முடிவை ஒரு குறியீடாய்க் காணவும் முடியவில்லை. இது எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த கருத்து மட்டுமே. மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த அகதி வாழ்வினை அதன் தடங்களை ஒரு பெரும் விரிந்த பார்வையில் விரிந்த பரப்பில் முன்வைக்கிறது போக்காளி. நாவல்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. வரலாற்றின் வேர்களினூடாக பயணிக்கும் ஆற்றல் கொண்டது. அந்தக் காலகட்டத்தின் ஒரு சமூகத்தை, அதன் மாற்றங்களை, அழிவுகளை, உருவாக்கங்களை, நிலைப்படுத்தலை என பலதையும் அது வரலாற்றினுள் சேர்த்துவிடுகிறது. மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்த மூத்த தலைமுறையின் வாழ்வுப் பயணத்தை மிக விரிவாகவும், பல தளங்களுக்குள் உள் நுழைந்தும் சித்தரிக்கும் நாவல் போக்காளி. நவமகனின் பெரும் உழைப்பும், கடந்த காலத்தோடு மீண்டும் வாழ்ந்து எழுதலும் இன்றி இந் நாவல் 680 பக்கங்களில் விருட்சமாகி இருக்க வாய்ப்பில்லை. புகலிட இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தேடிக்கொண்ட படைப்பு இது. வாழ்தல் என்பது புறத்தால் மட்டுமன்றி, அகத்தாலும் மேற்கொள்ளும் பயணம் என்பதை புரியாமல் அல்லது சக மனிதர்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல், புகலிடத்தாரை வெறும் காசு மரங்களாகப் பார்ப்போர் முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவுமொன்று!. ravindran.pa 09052025 போக்காளி (நாவல்) நவமகன் (ஆசிரியர்), நோர்வே. கருப்புப் பிரதிகள் (வெளியீடு) 680 பக்கங்கள் https://sudumanal.com/2025/05/09/போக்காளி-நாவல்/#more-7140
-
எனது சகோதரர் காணாமல்போனதற்கும் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது - பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ்
எனது சகோதரர் காணாமல்போனதற்கும் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ் தமிழ் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார் தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது, கேள்வி- உங்கள் சகோதரர் பற்றியும் அவர் எவ்வாறானவர் என்பது பற்றியும் தெரிவிக்க முடியுமா? பதில்- எனது சகோதாரர் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலி,அவர் அமைதியானவர் சிந்திப்பவர்,யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அவர் கல்வி பயின்றார்,கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக பெயர் பெற்றார்,காலப்போக்கில் அவர் ஒரு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கி பேராசிரியராகவும் பின்னர் கிழக்கு பல்கலைகழக துணைவேந்தராகவும் மாறினார். மக்கள் எப்போதும் அவரை போற்றினார்கள் அவர் மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்தினார். ஈழப்போராட்டத்தை பொறுத்தவரை அவர் ஆயுதபோராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்வில்லை,ஆனால் தனது வழியில் அதற்கு பங்களிப்பு செய்தார். விவசாயத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதால் தனது அனுபவத்தை விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.குறிப்பாக மட்டக்களப்பில் விவசாயம் மீன்பிடித்துறைகளை வளர்ப்பதற்கு உதவினார். அவரது பணி காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் பல முறை தொடர்பு கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா,பிள்ளையான் இருந்தவேளை அவர்களுடன் தொடர்பிலிருந்தார். கேள்வி- 2006ம் ஆண்டு உங்கள் சகோதரர் கடத்தப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க முடியுமா? பதில்- அவ்வேளை கிழக்குபல்கலைகழகத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டன,ஊழல்கள் காணப்பட்டன அதற்கு காரணமானவர்களை எச்சரித்த எனது சகோதரர் அவற்றை நிறுத்துமாறு உத்தரவிட்டார். இது இயல்பாகவே பதற்றத்தை உருவாக்கியது.எனது சகோதரர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன பின்னர் அவை அச்சுறுத்தல்களாக மாறின. கருணா,பிள்ளையான் அவர்களுடன் தொடர்புபட்டவர்களிடமிருந்து அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.அவரது குடும்பத்தின் பாதுகாப்பு அவரின் கரிசனைக்குரிய விடயமாக மாறியது. ஆனால் இத்தனைக்கு அப்பாலும் அவர் மட்டக்களப்பில் தங்கியிருந்து தனது பணியை தொடர முயன்றார்,ஆனால் இறுதியில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியது.அவர் பாதுகாப்பிற்காக கொழும்பிற்கு செல்ல தீர்மானித்தார். நான் அவரை லண்டனிற்கு வருமாறு மன்றாடிக்கேட்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார். அவரின் இறுதி தொலைபேசி உரையாடல் எனக்கு நினைவில் இருக்கின்றது, 2006 டிசம்பர் 15ம் திகதி இறுதிநிர்வாக கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியது அதுவே இறுதிதடவை. கேள்வி- அதிகாரிகள் அவ்வேளை எவ்வாறு செயற்பட்டனர்?இந்த விடயத்தை தீவிரமாக எடுத்தனரா? பதில்-அதிகாரிகள் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்திருந்தால்,அவருக்கு என்ன நடந்தது என்பது தற்போது எங்களிற்கு தெரியவந்திருக்கும்.அவர்கள் அதனை புறக்கணித்தனர் என்பதற்கு அப்பால் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டிருந்தனர். எனது சகோதரர் பதவி விலகியவேளை பாதுகாப்பு கோரி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதினார்.இறுதி கூட்டமன்றும் விசேடமாக பாதுகாப்பை கோரினார், ஆனால் அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. மாறாக அவர்கள் அந்த இறுதி கூட்டத்தில் அவர் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என வற்புறுத்தினார்கள். தனது நிலையை நிரூபிப்பதற்கான மின்னஞ்சல் கடிதம் அவரிடமிருந்தது.ஆனால் அவர்கள் அவரை கைவிட்டனர்.அவர் காணாமல்போனதில் அவர்களிற்கு தொடர்புள்ளது. கேள்வி- பிள்ளையான் சமீபத்தில் விசாரணை செய்யப்பட்டமைகுறித்து உங்கள் கருத்து என்ன?உங்கள் சகோதரர் காணாமல்போனமைக்கும் இதற்கும் தொடர்பிருக்குமா? பதில்- எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன் இது குறித்து எனது மனதி;ல் எந்த சந்தேகமும் இல்லை,பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊழல்களிற்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கும் பத்திரிகை செய்திகளை நான் வாசித்துள்ளேன், எனது சகோதரர் இந்த ஊழல்களை எதிர்த்தார். எனது சகோதரர் ஒருபோதும் ஊர்க்கதைகளை கதைத்தவர் இல்லை அரசியலில் ஈடுபட்டவர் இல்லை, அவர் சரியானதைதான் செய்தார், அப்படித்தான் வாழ்ந்தார். கேள்வி – பிள்ளையானிற்கு எதிரான விசாரணை அரசியல் நோக்கங்களை கொண்டதா அல்லது உண்மையானதா? உங்களின் கருத்து என்ன? பதில் – முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை.ஆனால் அரசாங்கத்தின் விசாரணைகள் நீதிதொடர்பானவை அல்ல.இது அரசியல் தொடர்பானது.பல அரசாங்கங்கள் வந்து சென்றிருக்கின்றன,இவர்களில்எவரும் நீதியை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. கேள்வி – இலங்கையில் நீதி என்பது தெரிவு செய்யப்பட்டதாக , அல்லது தாமதிக்கப்பட்டதாக விளங்குகின்றது குறிப்பாக தமிழர் விடயத்தில் என்ற கருத்து குறித்து நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்? பதில்- இலங்கையில் தமிழர்களிற்கு நீதி என்பது இல்லை.நாங்கள் பல வருடங்களாக இதனை தெரிவித்துவருகின்றோம்.முக்கியமான விடயம் நாங்கள் மக்களாக ஐக்கியப்படவில்லை.இந்த நிலை மாறும்வரை நாங்கள் துன்பங்களை அனுபவிப்போம். உண்மையான மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் பிரபாகரன் போன்று இன்னுமொரு தலைவர் உருவாகவேண்டும். https://akkinikkunchu.com/?p=324976
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/405595/10-இலட்சம்-பாலஸ்தீனியர்களை-நிரந்தரமாக-லிபியாவில்-குடியமர்த்த-ட்ரம்ப்-திட்டம்
-
விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை
விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை கிழக்கு உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை இன்று (17) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் ஏற்பாட்டிலும் தொழிலதிபர் மு.செல்வராசாவின் முயற்சியினாலும் சுவாமி விபுலானந்தருக்கு முதலாவது கற்சிலையாக இதுதிறந்துவைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் யாழ். மற்றும் யாழ் நூல் என்பனவும் திறந்து வைக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் நினைவுக்கல் படிகமும் திறந்துவைக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmas8nypa00jtqpbshlx3eryf
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய 55வது ஐபில் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது! முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!