Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்
  2. குழுநிலைப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் முதலாவது இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி play-off போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படும் எனக் கணிக்கவில்லை! 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தில் வரும் என நான்கு பேர் கணித்துள்ளனர். மற்றைய அணிகளின் நிலைகளை ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! ஒருவரும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிற்கும் எனக் கணிக்கவில்லை!
  3. குழுநிலைப் போட்டிகளின் நிறைவின் பின்னர் அணிகளின் நிலைகள்: பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி இடத்தையும் பிடித்துள்ளன!
  4. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  5. இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா May 27, 2025 9:58 am நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வாரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி, தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சிறப்பு வேண்டுகோளையும் விடுத்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கொண்ட 31,145 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நுளம்பு லார்வாக்கள் உள்ள 6077 வளாகங்களும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. கூடுதலாக, 3916 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், 1470 வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு, இந்த நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட மொத்த வளாகங்களின் எண்ணிக்கை 128,824 என்றும், அவற்றில் 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரச நிறுவனங்கள், 5025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள், 514 மத இடங்கள் மற்றும் 1100 பிற இடங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கையில் சிக்குன்குனியா வைரஸின் பரவல் 16 ஆண்டுகளில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/chikungunya-has-become-a-threat-in-sri-lanka/
  6. இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான் kugenMay 27, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) தெரிவித்தார். நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விடயங்கள் மற்றும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 37 ஆசனங்களை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்பதை நாங்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதி, கிழக்கு மாகாணத்தைத் தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினோம். அந்த நோக்கத்தின் முதற்கட்டமாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் நாங்கள் போட்டியிட்டு அதனூடாக தற்போது 37 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். இத்தேர்தலில் இலங்கைத் தமிழ அரசுக்கட்சி கூடுதலாக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேச முன்வருவார்களாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பான விடயங்கள் எமது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஜெயம் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளுராட்சி மன்ற ஆட்சி அதிகாரங்கள் தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடும் தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் முன்வருவார்களாக இருந்தால் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயார். இதில் கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே தமது கொள்கைகளை வகுக்கின்றன. அந்த அடிப்படையில் நாங்களும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித் தமிழ் கட்சி, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையும். அதே போன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் வகுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை வகுத்ததிலே நானும் ஒருவன். எனவே இங்கு கொள்கை ரீதியில் முரண்பாடுகள் வருவதற்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அதை அவர்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய அச்சம் இருக்கின்றது. அவர்கள் வடக்கு கிழக்கிலே பாரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு வருகின்றார்கள். பதவிப் போட்டிகள், பொறாமைகள், ஆசைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் தற்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் இதில் அவர்கள் தான் முடிவை எடுக்க வேண்டும். இதிலே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு முஸ்லீம்களுடன் சேர்ந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்தோ ஆட்சியமைப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு இனத்துவேசம் பிடித்த அரசாங்கம் என்பதை அனைவரும் தற்போது அறிந்திருக்கின்றார்கள். இதனை நான் ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருக்கின்றேன். தற்போது அவர்கள் அவர்களின் முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள். இதே போன்றே கிழக்கு மாகாண சபையிலும் தமிழர்களாகச் சேர்ந்து நாங்கள் போட்டியிட வேண்டும். இது தொடர்பான அழைப்பை நாங்கள் அனைத்து தரப்பினருக்கு விட்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்கள் உள்நுலைந்ததன் பிற்பாடு இந்தக் கட்சியை வளர்த்தவர்களையெல்லாம் அவர்கள் வெளியிலே விட்டுவிட்டார்கள். பொதுவாகப் போராட்ட களங்களிலே நின்ற செல்வம் அடைக்கலநாதன், ஜனா, சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்ற உறுப்பினர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டார்கள். எனவே அவர்களையெல்லாம் நாங்கள் அழைக்க வேண்டும். ஒற்றுமையாக நின்று போட்டியிட வேண்டும். ஏனெனில் தற்போது ஒரு செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா அவர்களை நிறுத்துவதற்கு தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் முஸ்லீம்கள் இதில் தீவிரமாக இருக்கின்றார்கள். கடந்த முறை உங்களுக்கு தெரியும் 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரஸ்ஸிடம் ஆட்சியை ஒப்படைத்து கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்குப் பாரிய துரோகம் இளைத்தவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த நிலைமை வராமல் நாங்கள் அனைவருடனும் பேசி கிழக்கு மாகாணத்தைத் தனித் தமிழர் ஒருவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். https://www.battinews.com/2025/05/blog-post_173.html
  7. மன்னாரில் இந்திய - இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு Published By: VISHNU 27 MAY, 2025 | 04:27 AM இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பீ.சரத் , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215774
  8. வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் - சுமந்திரன் Published By: VISHNU 27 MAY, 2025 | 04:41 AM (நா.தனுஜா) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர். அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பதாக மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் எனவும், அன்றேல் வட, கிழக்கு மாகாணங்களில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் வகையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது கூற்றின்படி 28 ஆம் திகதிக்கு இன்னமும் ஒரு தினமே எஞ்சியிருக்கும் நிலையில், போராட்டத்துக்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளவா என வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இவ்வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் முற்றாக நீக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும். அதனைவிடுத்து வேறு எத்தகைய தீர்வுகளை வழங்கினாலும் நாம் நிச்சயமாக மக்கள் போராட்டத்தை நடாத்துவோம். அதற்கமைய இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் அறிவிக்கப்படுகின்றதா எனப் பார்ப்போம். அவ்வாறு அறிவிக்கப்படாதவிடத்து, மக்கள் போராட்டத்துக்கான ஆயத்தங்களை மேற்கொள்வோம்' என சுமந்திரன் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/215777
  9. பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம் 27 MAY, 2025 | 06:35 AM லிவர்பூலில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் அணிவகுப்பு நிகழ்வின் மீது நபர் ஒரு காரால் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது காரால் மோதிய 53 வயது பிரிட்டிஸ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/215780
  10. குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை செவ்வாய் 27 மே GMT நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் பின்னர் குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்த கட்ட Play-Off போட்டிகளில் விளையாடவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 70) செவ்வாய் 27 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குழுநிலைகளில் முதலாவதாக வருமா?
  11. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 69வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 57 ஓட்டங்களுடனுன் ரியான் ரிக்கெல்ரன், ஹார்டிக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யாவின் புயல்வேகத்தில் எடுத்த 62 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸின் அதிரடிவேகத்தில் எடுத்த 73 ஓட்டங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயரின் கமியோ ஆட்டத்துடனும் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  12. புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை May 25, 2025 4:43 pm புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு குற்றச் செயல் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. அதிபரின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது. கடற்படை சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான சோங்ஜினில் புதிய போர்க்கப்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விழாவின் போது, 5,000 தொன் எடையுள்ள நாசகாரக் கப்பலின் அடிப்பகுதியின் சில பகுதிகள் சரிந்து விழுந்ததால், கப்பல் சமநிலையை இழந்தது. இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடுப்பு காவலில் உள்ளவர்களில் கப்பலை கட்டிய வடக்கு சோங்ஜின் கப்பல் கட்டும் தளத்தின் தலைமைப் பொறியாளரும் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கப்பலானது ஏவுகணை சோதனை, அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புக்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/failure-to-introduce-new-warship-north-korean-presidents-drastic-action/
  13. அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு May 26, 2025 2:57 pm இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்கு வருக! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க, பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகளுக்கான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பொது இடங்களில் பிகினி அணிய தடை செய்வது போன்ற எந்த ஒழுங்குமுறை அல்லது அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உறுதிப்படுத்தினார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செய்தி ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து வந்ததாகவும், அது எந்தவொரு முறையான சமூகம் அல்லது பொலிஸ் அறிக்கையை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://oruvan.com/police-deny-bikini-ban-in-arugam-bay/
  14. உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடி கட்சிக்குள் சஜித்துக்கு எதிராக போர்க் கொடி!; தொகுதி அமைப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக இராஜினாமா உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வரும் நிலையில் கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவபொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ள தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, இறத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அசோக செபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட ஆகியோர் தங்கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்து, இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக நெருக்கடிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன, மேலும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் நியமனம் தொடர்பான சிக்கல் நிலைமையை அந்த நெருக்கடிகள் இந்த பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதேவேளை அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய தலைமை தேவையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேணிக் கொண்டு கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்தை குடிமக்கள் எதிர்பார்க்கும் ஒரு திட்டமாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்றும் இலங்கையை வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்ல, தனது கட்சியின் வேலைத்திட்டத்தை, அதற்கான திறன், அறிவு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு புதிய தலைமையிடம் ஒப்படைப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமாகி வரும் நிலையில், கட்சித் தலைமை எடுத்த முடிவுகளால் பல தொகுதி அமைப்பாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளமையால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் விலகியிருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய போது இந்த இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார். https://akkinikkunchu.com/?p=326136
  15. முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன் May 26, 2025 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று நிறைவடைந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டிருக் கின்றது. குறித்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரச அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றை யாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன் களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்கு முறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்பட வில்லை. இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட, கனத்த காற்றுச் சுமந்து வரும் எம்மவர்களின் நினைவுகளின் மீதும், நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம் என்றுரைத்து ஐந்து முக்கிய விடயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், • சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் சிங்கள- பௌத்த மயமாக்கலைத் தடுக்கவும், தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ் வியலாக்கவும் • ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி, அரச பொறுப்பையும், மேற்குலக நாடுக ளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி, குற்றவாளிகளை குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தவும், • தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒரு போதும் பாரதீனப் படுத்த சுயநிர்ணய அடிப் படையிலும், தமிழர்க ளின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும், • கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும், • தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக் கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம் என்று அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. இரத்தினச்சுருக்கான தமிழின விடுதலையை வெளிப்படுத்தி நிற்கும் பிரகடனம். பொறுப்புக்கூறலும், அரசியலுரிமைகளும் வெவ் வேறாக கையாள முடியாதவை என்பதை அழுத்திக் கூறியிருக்கின்ற பிரகடனம். வரவேற்கத்தக்கது. ஆனால் பிரகடன இலக்குகளை அடைவதற்கு என்ன வழி என்பது கேள்விக்குரியது. 2009இல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 16வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது வரையில் ஒட்டுமொத்த சர்வதேசமும் மௌனம் சாதித்தே வருகின்றது. ஆனால் ஆட்சிப்பீடத்தில் மாறி மாறி இருக்கும் சிங்கள, பௌத்த மையவாத அரசுகள் தொடர்ச்சியாக ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில்’ ஈடுபட்டு வருகின்றன. இனவழிப்பு, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகக் கொடூரமான மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை வரைமுறையற்ற வகையில் தமிழி னத்தின் மீது திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் பொறுப்புச் சொல்வதற்கும் தயாராக இல்லை. பல்லினங்களைக் கொண்ட தீவை, சிங்கள, பௌத்த தீவாக மட்டும் பிரகடனப்படுத்தும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன் படுத்தி, வக்கிரமான வழிமுறைகளிலேயே கொடிய போரை அரச கட்டமைப்பு முன்னெடுத்தது என்பது பரகசியமான விடயம். தென்னிலங்கை தேசிய கட்சிகள் தான் அவ்வாறு நடந்து கொள்கின்றன என்றால் ஆட்சிப்பீடத்தில்; அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை மிகக்குறுகிய காலத்திலேயே வெளிப் படுத்திவிட்டது. தாயக கோட்பாட்டை உடைப்பதற்கும், தமினத்தின் மீது உக்கிரமான போர் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் ராஜபக்ஷக்களுக்கு முட்டுக்கொடுத்த தரப்புத் தான் ஜே.வி.பி. அதன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்திருக்கும் அத்தரப்பு ‘முறைமை மாற்றத்தை’ மையப்படுத்தி ஆட்சிப் பீடம் ஏறியதால் முற்போக்காக செயற்படும், பாரபட்சமின்றி செயற்படும் போன்ற எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தது. ஆனால் ஆட்சிப்பீடத்திலேறி ஆறுமாதங்களுக்குள் அனைத்தையும் அநுர அரசாங்கமே சிதைத்துக்கொண்டுள்ளது. தன்னுடைய உண்மையான முகத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தி யிருக்கின்றது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ணீரால் தோய்ந்திருக்கையில் அதற்கு மறுநாள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள போர் வீரர்களுக்கான நினைவிடத்தில் ‘போர் வெற்றி விழாவும், நினைவேந்தல் நிகழ்வும்’ ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்விற்கான உத்தியோக பூர்வ மான அறிவிப்பைச் செய்தவர் பாதுகாப்புச் செயலாளர் ஏயர் வைஷ்மார்ஷல் சம்பந் தூயகொந்தா. அந்த அறிவிப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையிலேயே குறித்த நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போர் நிறைவடைந்து கடந்த 16ஆண்டுக ளில் பதவியில் உள்ள ஜனாதிபதிகளே போர் வெற்றி விழாவுக்கு தலைமையேற்பது வழக்கம். ஆனால் அநுர ஆரம்பத்தில் அதற்கு தயாராக இருந்திருக்காதபோதும் பின்னர் சிங்கள பொளத்த மையவாத ஆட்சியின் தூண்களாக இருக்கும் பௌத்த தேரர்களும், பாதுகாப்புத்துறையும் ராஜபக்ஷக்களின் திட்டமிடலும் அநுரவை இறுகப் பிடித்து நிலைப்பாட்டை மாற்றியுள்ளன. ஈற்றில் ஜனாதிபதி அநுரதான் குறித்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். இராணுவத்தை பாதுகாத்து உரையாற்றினார். குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கான காணாமலாக்கப் பட்டவர்களின் அன்புக்குரிய உறவுகளுக்கு பதிலளிப்பைத் தவிர்த்து வடக்கு மக்களின் பிரச்சினையும், ஊழியத்துக்காக படைகளில் சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பங்கள் போரின் பின்னர் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளையும் சமநிலைப் படுத்த முயன்று தோற்றுப்போனார். எனினும் அநுரகுமாரவும் ‘சிங்கள,தேசிய பௌத்த மையத்துக்குள்’ ஊறித்திழைத்துப் போனார் என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இந்த நிலைமை தான் ராஜபகஷக்கள் மீண்டும் அரங்கிற்கு வருகை தருவதற்கு வித்திட்டிருக்கின்றது. மஹிந்த,கோட்டா, நாமல் உள்ளிட்ட தரப்புக்கள் போர் வெற்றிவிழாவுக்கு மறுநாள் தேசிய வீரர்களுக்காக தமது அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம் என்ற பெயரில் செயற்பாட்டு அரசியல் தளத்துக்கு வந்திருக்கின்றார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கையில், தற்போது முள்ளிவாய்க்கால் மக்கள் பெரு வெள்ளத்துக்குள் பிரகடனம் செய்தாகிவிட்ட நிலையில் அடுத்தகட்டம் சம்பந்தமாக கடந்த காலங்கள் போலல்லாது முக்கிய சில தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை தமிழினத்துக்கே ஏற்பட்டுள்ளது. அதில் முதலாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கு நிரந்தமான தூபியொன்றை அமைப்பதாகும். இது தமிழினத்தின் அடையாளமாக பிரகடனப் படுத்தப்படல் வேண்டும். இரண்டாவது, போரின் போதான அவலங் களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் தாங்கிய கலையகமொன்றை நினைவுத்தூபிக்கு அருகில் நிர்மாணித்தலாகும். இந்த இரு செயற்பாடுகளும் பரம்பரை ரீதியான பாய்ச்சலுக்கும், பாதிக்கப் பட்ட எதிர்கால சந்ததியின் மீட்சிக்கும் உதவுவதாக இருக்கும். மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்களை முன்னின்று முன்னெடுக் கும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு(வடக்கு-கிழக்கு) செயற்பாட்டு ரீதி யான விரிவாக்கத்தையும் எதிர்கால பாதைவழி வரைபடத்தையும் தயாரிக்க வேண்டியுள்ளது. வெறுமனே முல்லைத்தீவுக்குள் குறித்த கட்டமைப்பை முடங்குவதும், வரையறுத்துச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடயமாகும். ஏனென்றால், தாயக தேசமெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே நினைவேந்தலின் பங்குதாரர்கள்.அதுமட்டுமன்றி குறித்த கட்டமைப்பு பிரகடனத்தினை தனியாக இறுதி செய்ய முடியாது. மாவட்ட அடிப்படையில் ஏகமனதான ஏற்றுக்கொள்ளலுடன் பிரகடனம் இறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு இறுதி செய்யப்படுவதன் ஊடாகவே செய்யப்படுகின்ற பிரகடனம் அடுத்த நினைவேந்தலுக்குள் எவ்வளவ தூரம் நடைமுறை ரீதியான அடைவு மட்டத்தினைக் கண்டிருக்கின்றது என்பதை அளவிட முடியும். அது இலக்கு நோக்கி மக்களை கூட்டாக அணிதிரட்டுவதற்கு வழிசமைப் பதாக இருக்கும். நான்காவதாக, தாயகத்தில் தெருவுக்குதெரு குழுக்களாகவும், அணிகளாவும் பிரிந்து நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளிலே முதலாம், இரண்டாம் போரில் மரணித்தவர்களுக்கான அஞ்சலிகள் ஓரிடத்தில் தான் நடைபெறுகின்றன. அவ்வளவு ஏன் போர் வெற்றியைக் கொண்டாடும் சிங்கள தேசத்துக்குள் ஆயிரம் முரண்பாடுகள் கொண்ட அரசியல், சிவில் அமைப்புக்கள் காணப்பட்டாலும் அவை மே 19இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலேயே கூடுகின்றார்கள். அஞ்சலித்து போர் வெற்றியை முன்னெடுக்கின்றார்கள். ஆகவே, பாதிக்கப்பட்ட உறவுகள் அரசியல், மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து நின்று நிகழ்வுகளை முன்னெடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டு அனைவரும் அணிதிரண்டவொரு பாரிய நிகழ்வாக மே-18முன்னெடுப்பதற்குரிய ஏகமனதான அங்கீகாரம் அவசியமாக உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த விடயத்தில் அரசியல், சிவில் தரப்புக்ககளின் கூட்டிணைவு தான் மக்களை ஓரிடத்தில் ஓரணியாக திரளச் செய்யும் என்ற ஆகக்குறைந்த புரிதல் அவசியமாகும். இதில் தீட்டுப்பார்த்துக்கொண்டிருப்பது வீணான செயலாகும். ஐந்தாவதாக, புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வீதிக்குவீதி, அமைப்புக்களின் பலத்தைக் காண் பிப்பதற்காக முன்னெடுக்க கூடாது. உண்மையான உணர்வெழுச்சியுடன் ஒரு நாட்டில் பிரதான இடமொன்றில் முன்னெடுக்கும் வகையில் அணிதிரள வேண்டும். அவ்வாறு அணி திரள்வதன் ஊடாகவே தாயகத்தில் காணப்படும் உள்ளக பிரிவுகளுக்கு முடிவு கட்ட முடியும். ஆறாவதாக, ஒட்டுமொத்த தரப்பினரும் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து பிரகடனத்துக்காக உரத்துக் குரலெழுப்பும் போது தான் அந்த ஒலியின் அதிர்வு சில செவிப்பறைகளை அடையயும் என்ற புரிதல் அவசியமானது. இதில் தனிப்பட்ட அடைவு மட்டங்களை தாண்டி, இனரீதியான அடைவே மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆகவே, சிறு முரண்பாடுகளை சில்ல றைக் கதைகளாக கூறுவதைத் தவிர்த்து முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் ஓரணியாக ஒருங்கி ணைந்து திரள்வதே தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் காத்திரமான செயற்பாடாக இருக்கும். அந்தத் திரட்சி பல செய்திகளை ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக் கும். அவ்விதமான செயற்பாடுகள் தான் பிரகடனங்களை நடைமுறையில் சாத்தியமாக்கும். இல்லாது விட்டால்முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆண்டுதோறும் ஏட்டுச்சுரக்காயாகவே இருக்கும்.மேற்கண்ட விடயங்களை அடைந்து தமிழினம் தனது அபிலாஷைகளை தொட்டுப்பார்ப்பதற்குரிய நகர்வுகளைச் செய்வதற்கான பொருத்தமான தருணம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த தருணத்தினை புரிந்தறிந்து நகர்வது இனவிடுதலைப் பயணித்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். அதுவே முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சியான திரட்சியின் அறுவடையாக இருக்கும். https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-பேரெ/
  16. கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு! May 26, 2025 மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். https://www.ilakku.org/கிழக்கு-மாகாண-சபையை-கைப்/
  17. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் மற்றும் ஆசிரியர் மீது மாணவியின் சகோதரன், காதலன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தை கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, கடந்த 23 ஆம் திகதி மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களது இரு மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்ததையடுத்து பாடுகாயமடைந்த இருவரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்தனர். இந்த அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9 மணிக்கு ஒன்று திரண்டனர். இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். https://adaderanatamil.lk/news/cmb4o0ct800x6qpbsl6byapbd
  18. தமிழர் பூர்வீகங்களை அழித்தலும் ஆக்கிரமிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும் தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது. உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் எனும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையானது, உகந்தை முருகன் ஆலய முன் வாயிலின் முன்பாகக் செல்லும் போது கடற்கரையில் இடது புறமாகக் காணப்படும் குன்றில் கடற்படை முகாம் முன்பாகவுள்ள குன்றில் கடற்படையின் தொடர்பு கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உகந்தை முருகன் ஆலய புராதன வரலாறு கொண்ட புண்ணிய பூமியாகும். இங்கு எவ்வாறு இவர்கள் புத்தர் சிலை நிறுவலாம் எனும் கேள்வியோடு உகந்தைமலையில் 25 அடி முருகன் சிலை நிறுவும் பணியைத் தடுத்த வன இலாகாவினரும் அரசும் ஏன் இதைத் தடுக்கவில்லை எனும் கேள்விக்குப் பதில் தர வேண்டும். அத்தோடு உகந்தை முருகன் ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவும் வன இலாகா, மற்றும் படையினர் புதிய பல நிபந்தனைகளையும் விதித்து ஆலய சூழலைச் சுருக்கியுள்ளனர், பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர், வள்ளிமலை போன்ற இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர், இது தவிர சந்நியாசி மலையும் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது. இந்த சிலை விவகாரமும் எமது ஒற்றுமையின்மை, இனம், மதம் என்ற எண்ணமும், பற்றும் அற்றவர்களினால் அங்கு ஏற்பட்ட நிர்வாகமின்மை இடைவெளியில் ஏற்பட்ட நிலைகள்தான் இவை. அத்தோடு இந்த இடத்தில் சிலை வைப்பதற்கான ஆயத்தமாக மலையில் பீடம் அமைத்தபோது கடந்த 2024 ல் நான் நேரில் சென்று அவதானித்ததோடு, இதுபற்றி உரியவர்கள் சிலரோடு பேசினேன் அத்துடன் இது உகந்தை ஆலய சூழலில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது புத்தர் சிலை அத்துடன் இன்னும் ஒரு சிலைக்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது இதன் பின்னணியில் சிங்களவர்கள் பலரைக் குடியேற்றும் திட்டம் மற்றும் வன இலாகாவின் செயற்பாடுகள் மற்றும் மலையில் நிறுவப்படவிருந்த 25 அடி முருகன் சிலையை நிறுவாமல் தடுத்தது அதன் பின்னர் தற்போது புத்தர் சிலை வைத்தது அதற்கு உடந்தையாக இருந்த படைகள், அதிகாரிகள் உள்ளிட்ட பல விடயங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும். இந்த சிலை உடனடியாக அகற்றப்படுவதோடு இந்த அரசு எமது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmb4nso3300x5qpbsdgft6686

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.