Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம் நமது சிறப்பு நிருபர் ஜூன் 01, 2025 07:10 PM மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 40 போர் விமானங்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போர் நடந்து கொண்டு உள்ளது. இதனிடையே, இன்று ரஷ்யாவில் இரண்டு பாலம் இடிந்து விழுந்தது. அதில் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதற்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இருக்கலாம் என ரஷ்யா சந்தேகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 40போர் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது உறுதிப்படும் பட்சத்தில், ரஷ்யா தாக்குதலை துவக்கிய பிறகு, அந்நாட்டின் முக்கிய ராணுவ தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் முக்கியமானதாக இது இருக்கும். https://www.dinamalar.com/news/world-tamil-news/40-russian-aircraft-downed-in-ukraines-massive-drone-attack-on-air-base-report/3945552
  2. பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் adminJune 1, 2025 யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன. https://globaltamilnews.net/2025/216200/
  3. யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன் adminJune 1, 2025 யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் உறுதியுரையை எடுத்துக் கொண்டார். யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்கும் நிகழ்வு, நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள். இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட (விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ். மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையை எடுத்துக்கொண்டுள்ளார். “யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனைத் தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/216194/
  4. மாதுரி டிக்‌ஷிற்றின் பாட்டை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறளவிற்கு வசீக்கு வயசாகிவிட்டதா?😱 நம்ம பாட்டு இதூ!
  5. நாளைக்கு பும்ராவின் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் பறக்குது! மும்பை இந்தியன்ஸ் வெல்லுது. எனக்கு மூண்டு புள்ளிகள் கொடுக்குது😃 பிரீத்தி தலையில் கைவைக்கிறா!
  6. நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா?
  7. தமிழரசு – முன்னணித் தலைவர்கள் சந்திப்பு; இணக்கப்பாடு எதுவுமே வரவில்லை: சுமந்திரன் தெரிவிப்பு May 31, 2025 1:15 pm வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை இரண்டு மணிநேரம் நடைபெற்ற பேச்சுகளில் கொள்கை ரீதியான இணக்கப்பாடு எதுவும் உடன்பாடாக எட்டப்படவில்லை. ஆனால், இந்த விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிச் செயற்படுவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்தார். ”வடக்கு, கிழக்கிலே இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியினரின் நிலைப்பாடும் ஏறத்தாழ ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அல்லது அதனை உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இணங்கியிருக்கின்றோம்.” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார். யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று (நேற்று) மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நீண்ட பேச்சு இடம்பெற்றது. இந்தப் பேச்சு தற்போது முடிந்திருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிர்வாகங்களை அமைப்பது சம்பந்தமான பேச்சு. அது உருவாகுவதற்கக் காரணம் தேர்தல் முடிந்த கையோடு நாங்கள் எங்களுடைய நிலைப்பாடு ஒன்றை வெளிப்படையாகச் சொல்லியிருந்தோம். அதாவது ஒவ்வொரு சபைகளிலும் எந்தக் கட்சிக்கு அதிகூடிய உறுப்பினர்கள் இருக்கின்றனரோ அந்தக் கட்சி அந்தச் சபையிலே நிர்வாகங்களை அமைப்பதற்கு மற்றக் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். இந்தப் பொதுவான கோட்பாட்டை நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனும் இரண்டு சுற்றுப் பேச்சுகளின்போது பேசியிருக்கின்றோம். பொதுவாக அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள். ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க மற்றுமொரு கட்சி ஆதரவளிக்கின்றபோது அந்தச் சபையிலே மற்றக் கட்சிக்குக் கணிசமான ஆசனங்கள் இருந்தால் அவர்களுக்குப் பிரதி தவிசாளர் பதவி கொடுக்கப்படும் என நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். அப்படியெனில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலே 35 இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அமைக்கும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வவுனியா மாநகர சபையில் மட்டும்தான் அவர்களின் பிரதிநிதி ஒருவர்மேயராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இதனால் ஓர் நல்லெண்ண சமிக்கையாக மேலும் நான்கு சபைகளில் தங்களுக்குத் தவிசாளர் பதவிகளை வழங்க முடியுமா என்று அவர்கள் கேட்டிருந்தார்கள். நாங்கள் அது சம்பந்தமாக ஆராய்கின்றோம், எமது கட்சியில் அரசியல் குழுவில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். சில வேளைகளிலே அப்படியான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நாங்கள் அந்த விடயத்தைச் சொல்லியுள்ளோம். இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தானாக ஓர் அறிவிப்பை விடுத்திருந்தார். அதாவது நாங்கள் சொன்ன அதே நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருந்தார். எந்தச் சபையில் எந்தக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றதோ அங்கே அந்தக் கட்சி ஆட்சி அமைக்கத் தாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று அவர் அறிவித்திருந்தார். இணக்கப்பாட்டோடு சேர்ந்து இயங்குவதாக இருந்தால் கொள்கை அளவிலே முழுமையாக ஏற்பட வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். நிர்வாகங்கள் அமைப்பதிலே அவர்களுடைய நிலைப்பாடும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலைப்பாடும் (ஏற்கனவே எனச் சொல்கின்றபோது இந்தத் தடவை மட்டுமல்ல 2018 இலும் நாங்கள் இதே நிலைப்பாட்டையே அறிவித்திருந்தோம்) ஒரே மாதிரியான நிலைப்பாடாக இருந்த காரணத்தினால்தான் எங்களுடைய கட்சியில் தலைவர் அவர்களோடு இது தொடர்பில் பேச வேண்டும் என்று அழைத்தபோது அவர்கள் உடனடியாக அதற்கு இணங்கி எங்களோடு பேசுவதற்கு வந்திருக்கின்றார்கள். அப்படியாக எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் பேச வந்தமைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். எமது கட்சியின் தலைவர் கூட்ட ஆரம்பத்திலேயே இதனை அவர்களுக்குத் தெரிவித்தார். நாங்கள் பேசியபோது அவர்கள் தங்களது தனிப்பட்ட நிலைப்பாடாக அதனை அறிவித்ததாகச் சொன்னார்கள். அது எங்களுக்குத் தெரியும். கடந்த புதன்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருடன் இடம்பெற்ற பேச்சின்போதும் அதையே தாங்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னார்கள். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் எங்களுக்கு அதையேதான் அறவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற சபைகளில் நிர்வாகங்கள் அமைப்பதில் எங்களுடைய நிலைப்பாடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் நிலைப்பாடும் ஏறத்தாள ஒரே நிலைப்பாடாக இருக்கின்ற காரணத்தால் அந்த அடிப்படையிலேயேதான் சபைகள் அமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அல்லது உறுதியாகச் சொல்லலாம். இதை ஓர் இணக்கப்பாடாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆகையினாலே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் இணங்கியிருக்கின்றோம்.” – என்றார். https://oruvan.com/tamil-nadu-government-front-leaders-meet-no-agreement-reached-sumanthiran-reports/
  8. மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா? 30 May 2025, 7:00 AM திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கினார். சிறிய ஊர்களையும் கிராமங்களையும் சேர்ந்த பலர் எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். இவர் மட்டும் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம். சல்மா எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. படிக்கவைக்க அவர் குடும்பத்துக்குப் பண வசதி இல்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊரில், அவர் சார்ந்த தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் பெண்கள் படிப்பது என்பது இயல்பான ஒன்றல்ல. பெண்கள் வயதுக்கு வரும்வரை படிக்கவைப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு படிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத சங்கதிகள். ரொக்கையா பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட சல்மாவுக்கும் 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால் அதுவரை படித்திருந்தாலும் குறைந்தது 10ஆம் வகுப்பு தேறியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமாதான் சல்மாவின் கல்வியை முடக்கிப்போட்டது என்று சொன்னால் நம்புவீர்களா? 8ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளித் தோழிகளுடன் உள்ளூர்த் திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார். அவர் படம் பார்த்த விஷயம் குடும்பத்திற்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் முகம் சிவந்த அவர் குடும்பம் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டது. இலக்கிய வாசனை என்றாலும் சல்மா தளரவில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல் ஹமீதின் (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) உதவியால் நிறைய புத்தகங்களைப் படித்தார். அந்த நூல்கள் அவருடைய சிந்தனையின் வாசல்களை அகலமாகத் திறந்தன. உலகை அறிய வழி வகுத்தன. இந்த உலகில் தான் யார், தன்னுடைய இடம் எது, ஏன் சிலருக்கு மட்டும் சில விஷயங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்த கேள்விகள் முளைத்தன. இந்தக் கேள்விகளை முன்வைத்து அவர் எழுதத் தொடங்கினார். இப்படித்தான் ராஜாத்தி என்னும் சிறுமி, சல்மா என்னும் கவிஞராகப் பரிணமித்தார். சல்மாவின் படைப்புலகம் சல்மாவின் கவிதைகள் பெண்களின் அக உலகையும் தனிமையையும் பாடுபொருளாகக் கொண்டவை. பெண்கள்மீதான அடக்குமுறைகள் எவ்வளவு நுட்பமான தளங்களில் செயலாற்றுகின்றன என்பதை அவர் கவிதைகள் கூர்மையாகவும் ஆரவாரமற்ற தொனியிலும் கூறுகின்றன. அவருடைய சமூகமும் குடும்பமும் அவர் எழுதிய இந்தக் கவிதைகளை ரசிக்கவில்லை. என்றாலும் அவர் எழுத்தின் மூலம்தான் விடுதலை என்பதை உணர்ந்தவராகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறரது கட்டுப்பாடுகள் தன் எழுத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியே இலக்கிய உலகில் இவருக்கென்று ஓர் இடத்தை உறுதிசெய்தது. 1990களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை அதிகம் பங்குபெறாமல் இருந்த பிரிவுகளிலிருந்து பலரும் எழுதத் தொடங்கினார்கள். தலித்துகள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவாக இருந்தது. இந்தப் புதிய எழுத்துக்களில் சல்மாவின் பங்களிப்பு கணிசமானது. பெண்களின் அக உலகையும் வெளியில் தெரியாத விதங்களில் அவர்கள் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கான புழங்குவெளி குறுக்கப்படுவதையும் சல்மா வலுவான கவிதை மொழியில் வெளிப்படுத்தினார். பல பெண்களுக்கு உத்வேகமூட்டும் கவிதைகளாக அவை அமைந்தன. தமிழில் பெண் கவிதைகளின் புதிய அலையை உருவாக்கியதில் சல்மாவின் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறிமுகம் 1995இல் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலும் அவர் தந்த ஊக்கமும் சல்மாவின் இலக்கியப் பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. சல்மாவின் நூல்களை வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகமும் அவருடைய எழுத்து தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இரண்டாம் சாமங்களின் கதை என்னும் நாவலை 2003இல் எழுதினார். தமிழ்நாட்டின் சிறு நகரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகைச் சித்தரித்த அந்த நாவல், தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. இதையடுத்து மனாமியங்கள், அடைக்கும் தாழ் என இன்றைய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நாவல்களையும் முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையை உணர்த்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். உலகமே வீடு சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. சிற்றூரில் பிறந்து பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையில் வாழ்ந்துவந்த சல்மா, தன் எழுத்தின் மூலம் உலகம் சுற்றும் படைப்பாளியாக மாறினார். வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து உலகமே என் வீடு என்ற நிலைக்கு அவர் வாழ்க்கை விரிவடைந்தது. 2002இல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2006இல் ஃப்ராங்க்பர்ட் புத்தக விழா, 2009இல் லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010இல் பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். 2007இல் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. 2007இல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) தமிழ் விழா, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார். அரசியல் பணிகள் எழுத்துப் பயணத்துடன் அரசியலிலும் ஈடுபட்ட சல்மா, தன் கணவர் அப்துல் மாலிக் சார்ந்திருந்த திமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2004இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா அதில் போட்டியிட்டுத் தேர்தலில் வென்றார். தொகுதியில் சிறப்பான பணிகளைச் செய்ததால் பரவலாக அவர் கவனிக்கப்பட்டார். 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி நகரில் பிச்சை எடுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் கிராமத்தில் பெண் முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘தந்தை பெரியார் விருது’ சல்மாவுக்கு வழங்கப்பட்டது. இவருடைய அசாத்தியமான பயணத்தைச் சித்தரிக்கும் விதமாக ‘சல்மா’ என்னும் ஆவணப்படம் 2013இல் எடுக்கப்பட்டது. இது சல்மாவின் தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது. இப்படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார். இப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. தன் சமூகம் தனக்கு முன் கட்டியெழுப்பியிருந்த தடைகளையும், அதனால் விளைந்த பிரச்சனைகளையும் அவர் தாண்டி வந்த விதம் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் தன்னம்பிகையை அளிக்கின்றன. அரசியலை அதிகாரத்துக்கான வாகனமாக எண்ணாமல் மக்கள் தொண்டுக்கான வாய்ப்பாகப் பார்த்து இவர் செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவே திமுக தலைமை அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியிருக்கிறது. சல்மாவின் நூல்கள் கவிதைத் தொகுப்புகள் 🔷ஒரு மாலையும் இன்னொரு மாலையும் 🔷பச்சை தேவதை 🔷 தானுமானவள் நாவல்கள் 🔷இரண்டாம் ஜாமங்களின் கதை 🔷மனாமியங்கள் 🔷அடைக்கும் தாழ் சிறுகதைத் தொகுப்புகள் 🔷 சாபம் 🔷பால்யம் அபுனைவு 🔷 கனவு வெளிப் பயணம் தொகுப்பு: மின்னம்பலம் ஆசிரியர் குழு https://minnambalam.com/who-is-salma-and-what-her-background/#google_vignette
  9. எழுத்தாளர் ஜெயமோகனின் ஆனந்தவிகடன் பேட்டி jeyamohanMay 31, 2025 எது உங்களை தொடர்ந்து எழுதவைக்குது? அந்த தூண்டுதல் என்னன்னு சொல்ல முடியுமா? அடிப்படையிலே அந்தத் தூண்டுதல் ஒண்ணுதான். ஆனா ஒவ்வொரு வயசிலேயும் அதை வேற வேறயா புரிஞ்சுக்கறோம்.சின்னப்பையனா இருந்தப்ப நான் என்னை இந்த உலகுக்கு நிரூபிக்கணும்கிறதுக்காக எழுதினேன். அப்றம் புகழ், அடையாளம் எல்லாத்துக்காகவும் எழுதினேன். இந்த வயசிலே ஒரே காரணத்துக்காகத்தான், செயலிலே உள்ள இன்பத்துக்காகவும் நிறைவுக்காகவும். உண்மையிலே இதுதான் அடிப்படையான காரணம். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே செயல்வடிவா இருக்கு. செயலற்றிருக்குதுன்னு நமக்கு தோணுற கல்லு, மலை எல்லாமே செயல்வடிவாத்தான் இருக்கு. செயலிலேதான் நம்மோட நிறைவு இருக்கமுடியும். நமக்குன்னு ஒரு செயல் இருக்கு. நம்ம மனசு முழுசா குவிஞ்சு நம்ம ஆற்றல் முழுசா வெளிப்படுற இடம் எதுவோ அதுதான் நம்மோட செயல். அது எனக்கு இலக்கியம், தத்துவம் ரெண்டும்தான். இப்ப நான் எழுதுறது அதனாலே மட்டும்தான். மனித அறிவுங்கிறது ஒரு பெரிய பிரவாகம். நான் ஒரு துளியை அதிலே சேர்க்கிறேன். அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு தோணுது. அதைச் செய்றப்ப எனக்கு நிறைவு வர்ரது அதனாலேதான். எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடலைன்னு பலபேர் சொல்றாங்க. எழுத்தாளனை ஏன் சமூகம் கொண்டாடணும்? ஒரு சமூகம் எதை, யாரை முன்னுதாரணமா கொண்டிருக்குங்கிறதுதான் அந்த சமூகம் எப்படிப்பட்டதுங்கிறதுக்கான ஆதாரம். இப்ப நாம யாரை கொண்டாடுறோம்? சினிமாநடிகர்களையும் அரசியல்வாதிகளையும்தான் இல்லையா? அந்த சினிமாநடிகர்கள் வெறும் பிம்பங்கள். அரசியல்வாதிகள் ஊழல், குற்றம் ,சாதிவெறி, மதவெறி வழியா அதிகாரத்தை அடையறவங்க. அப்ப அவங்களை முன்னுதாரணமா நம்ம குழந்தைகள் முன்னாடி நிறுத்துறோம். நம்ம குழந்தைங்க ரீல்ஸ்லே மூழ்கி கிடக்கிறாங்கன்னா அதுக்கு இதான் காரணம். பள்ளிக்கூட பையன் அரிவாள் எடுத்து இன்னொரு பையனை வெட்டுறான்னா இதான் காரணம். இந்தச் சென்னையிலே அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. சினிமாக்காரங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு சிலை இருக்கா? இலக்கியமேதை புதுமைப்பித்தனுக்கு ஒரு ஞாபகச்சின்னம் உண்டா? அறிவை வழிபடுற ஒரு சமூகம் அவங்களைத்தானே கொண்டாடும். அவங்களைத்தானே தன்னோட பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டும்? உலகநாடுகள் முழுக்க அந்த ஊர் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும்தான் சிலைவைச்சு கொண்டாடுறாங்க. நாம அப்டி செய்றதில்லையே. நீங்க களையை விதைக்கிறீங்க, பயிர் விளையணும்னு எதிர்பார்க்கிறீங்க. சமகாலத்திலே எழுத்தாளனை கொண்டாடணும்னா அவனை போற்றிப் புகழணும்னு அர்த்தம் இல்லை. அவன் முக்கியமானவன்னு உணரணும்னு அர்த்தம். அவனோட எழுத்துக்களைப் படிக்கிறது அவன் புத்தகங்களை வாங்கி ஆதரிக்கிறதுதான் அவனைக் கொண்டாடுறது. அவன் எழுத்தை நம்பிக்கையோட செய்யணும். எழுத்துக்கான ஆதரவு கொஞ்சமாவது சமூகத்திலே இருக்கணும். கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரிச்சதனாலேதான் கம்பராமாயணம் உண்டாச்சு. கடந்த காலத்திலே மன்னர்கள் ஆதரிச்சாங்க. இப்ப மன்னர்கள் இல்லை. இப்ப மக்கள்தான் மன்னர்கள். அதைத்தான் இலக்கியவாதியை கொண்டாடுறதுன்னு சொல்றோம். அப்டி கொண்டாடுறப்ப நாம கொண்டாடுறது இலக்கியத்தையும் அறிவையும்தான். அதை நம்ம பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டுறோம். அப்பதான் அவங்களிலே இருந்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உருவாகி வருவாங்க. என் அம்மா எனக்கு வைக்கம் முகமது பஷீரைத்தான் உதாரணமாச் சுட்டிக்காட்டினாங்க. அவரை மாதிரி ஆகணும்னுதான் நான் எழுத்தாளன் ஆனேன். இன்னிக்கு என் புத்தகம் அமெரிக்காவிலே புகழ்பெற்ற பதிப்பகங்களாலே வெளியிடப்படுது. அந்த மேடையிலே நின்னுட்டு நான் தமிழிலக்கியம் பத்தி பேசறேன். அவங்க தமிழ்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. அங்க நம்ம மொழியையும் பண்பாட்டையும் கொண்டுபோயி நிறுத்துறேன். தொடக்கம் என் அம்மா வைக்கம் முகமது பஷீரை கொண்டாடினதுதான். இன்னிக்கு எழுத்தையும் எழுத்தாளரையும் கொண்டாடுங்க, நாளைக்கு உங்க பிள்ளைங்க உலக அரங்கிலே போயி நிப்பாங்க. ஆனா இதை இங்க உள்ள அரசியல்வாதிங்களும் அவங்களோட அடிவருடிக் கும்பலும் ஒத்துக்க மாட்டாங்க. ஜனங்க இலக்கியவாதியையோ அறிவாளியையோ கொண்டாட ஆரம்பிச்சா அவங்களோட அதிகாரம் அழிய ஆரம்பிச்சிரும்னு பயப்படுவாங்க. இலக்கியவாதியை எல்லாம் கொண்டாடவேண்டாம்னு சொல்லுவாங்க. சரி, யாரைக் கொண்டாடணும்னு கேட்டா எங்களைக் கொண்டாடுங்கன்னு சொல்லுவாங்க… அவங்க கிட்டதான் அதிகாரம் பணம் எல்லாம் இருக்கு. அதனாலே தெருத்தெருவா சிலைவைச்சு, மண்டபம் கட்டி, மேடைபோட்டு பேசி அவங்களே அவங்களை கொண்டாடிக்கிடுவாங்க. வேற மாதிரி சிந்திக்கவே ஜனங்களை விடமாட்டாங்க. கொஞ்சபேராவது இவங்க உருவாக்குற இந்த மாயையிலே இருந்து வெளிவரணும். அதிகாரத்தை கொண்டாடுறதை விட்டுட்டு அறிவை கொண்டாடணும். அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டே வர்ர இந்தச் சூழலை எப்டி மதிப்பிடுறீங்க? நான் திரும்பத் திரும்பச் சொல்றதுதான், அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டு வருதுன்னு சொல்றது ஒரு அப்பட்டமான பொய். அது ஒரு மாயை. நேத்தைக்கு என்னென்ன அறமதிப்பீடுகள் இருந்திச்சோ அதைவிட இன்னிக்கு பல மடங்கு அறமதிப்பீடு வளர்ந்திருக்கு. இன்னும் வளரும். இதான் வரலாற்றை பாக்கத்தெரிஞ்சவன் உறுதியாச் சொல்லும் உண்மை. நேத்து இருந்த அற மதிப்பீடு என்ன? தீண்டாமை, சாதிவெறி, ஈவிரக்கம் இல்லாத உழைப்புச் சுரண்டல் இதெல்லாம்தானே? அந்திவரை வேலை செஞ்சுட்டு கூலிக்கு நடையாநடந்த காலம்தான் அறம் வாழ்ந்த காலமா? பண்ணையடிமை முறை, பட்டினி இதெல்லாம் அறமா? நேத்து அறம் வாழ்ந்ததுன்னு சொல்றவன் யார்? உயர்சாதிக்காரன், பரம்பரையா உக்காந்து தின்னவன் சொல்லலாம். இப்பதான் உழைக்கிறவங்களுக்கு முறையா ஊதியம் இருக்கு. அவனும் பட்டினி இல்லாம வாழ முடியுது. அவன் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகுது, படிச்சு முன்னேற வாய்ப்பிருக்கு. அவன் சொல்ல மாட்டான். இப்பதான் மனுஷன் எல்லாமே சமம்ங்கிற சிந்தனை வந்திருக்கு. பெண்களுக்கு உரிமைகள் வந்திருக்கு. குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாதுங்கிற எண்ணமே ஒரு தலைமுறையாத்தான் வந்திருக்கு. நம்ம அம்மாக்கள் அப்பாக்களுக்கு அடிமையா வாழ்ந்தாங்க. இன்னிக்குள்ள பெண்கள் சுதந்திரமா இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் அ.மாதவையா முதல் பாரதி, புதுமைப்பித்தன் வரையிலான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் நம்ம சிந்தனையை மாற்றினதுதான். அறமதிப்பீடுகள் வளர்ந்திருக்குன்னா அதுக்குக் காரணம் மார்க்ஸ் முதல் காந்தி வரையிலான சிந்தனையாளர்கள்தான். திருவள்ளுவர் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள்தான். அவங்களோட பங்களிப்பாலேதான் நாம் இன்னிக்கு வாழுறோம். அதை கொஞ்சம்கூட உணராம என்னமோ நேத்து எல்லாமே சரியா இருந்ததுன்னு சொல்றது நன்றிகெட்டத்தனம். ஆமா, அறமதிப்பீடுகள் இன்னும் வளரணும். இன்னும் நெறைய மாறணும். அதுக்காகத்தான் இன்னிக்கு எழுதிக்கிட்ருக்கோம். எழுதிக்கிட்டேதான் இருப்போம். தொடர்ச்சியா நெறைய எழுதுறீங்க. தரமாகவும் எழுதறீங்க. எப்டி இது சாத்தியமாகிறது? செய்க தவம்னு பாரதி சொன்னான். எது உங்க செயலோ அதை முழுமூச்சா செய்றதுதான் தவம். எனக்கு எழுத்து தவம்தான். முன்னாடி ஒருமுறை சொன்னேன். புத்தருக்கு தியானம் எதுவோ அதுதான் எனக்கு இலக்கியம்னு. எனக்கு கவனக்கலைவு கெடையாது. நேரவிரயம் கெடையாது. நான் நெறைய எழுதுறேன், உண்மை. ஆனா உலக இலக்கியத்திலே மாஸ்டர்ஸ்னு நாம சொல்ற அத்தனைபேரும் என்னைவிட எழுதினவங்கதான். 51 வயசிலே செத்துப்போன பிரெஞ்சு எழுத்தாளர் பால்ஸாக் என்னைவிட அரைப்பங்கு ஜாஸ்தியா எழுதியிருக்கார். கொஞ்சம் இலக்கிய ரசனையும், கொஞ்சம் உலக இலக்கிய அறிமுகமும் உள்ள யாருக்கும் தெரியுறது ஒண்ணு உண்டு- நான் தமிழிலே எழுதினாலும் இன்னிக்கு உலக அளவிலே எழுதிட்டிருக்கிற முக்கியமான இலக்கியவாதிகளிலே ஒருவன். ஏன் நெறைய எழுதுறாங்க பெரிய இலக்கியவாதிகள்? ஏன்னா அவங்க மத்தவங்களை சந்தோஷப்படுத்த எழுதுறதில்லை. சொந்த வாழ்க்கைச்சிக்கல்களை மட்டும் எழுதுறதுமில்லை. அவங்களுக்குச் சில அடிப்படையான தத்துவக் கேள்விகள் இருக்கு. அதை ஒருபக்கம் சரித்திரத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் மனிதசிந்தனையோட பாரம்பரியத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் நம்ம பண்பாட்டிலே வைச்சுப் பார்க்கிறேன். அப்ப அது விரிஞ்சுகிட்டே போகும். அதனாலே எழுதித்தீராது. எழுத்தோட தரம் கூடிட்டே தான் போகும். சலிப்பில்லாத மொழி, திடமான ஒரு ஸ்டைல் இவ்ளவு சிறப்பா எப்டி வசப்பட்டுது? மொழிநடை அல்லது ஸ்டைல்னா என்ன? நம்ம மனசுக்குள்ள ஒரு உரையாடல் ஓடிட்டே இருக்கு இல்லை? நம்ம கைரேகை போல ஒவ்வொருவருக்கும் அது ஒரு மாதிரி. நம்ம நடை அந்த மனமொழியா ஆயிட்டுதுன்னா அதான் நம்ம ஸ்டைல். ஆனால் அதை அடையறது ரொம்ப கஷ்டம். ஏன்னா நாம பேசுற, எழுதுற மொழி வெளியே இருந்து வர்ரது. அது பொதுவான மொழியாத்தான் இருக்கும். அந்த பொதுமொழிய நம்ம மொழியா மாத்தணும்னா நமக்குள்ள நாம போய்ட்டே இருக்கணும். கூடவே எழுதுற மொழிய பயிற்சி பண்ணிட்டே இருக்கணும். ஆனா அந்த அகமொழி கூட ஒரே மாதிரி ஆயிட வாய்ப்பிருக்கு. அப்ப நம்ம அகமொழியை நாம மாத்தணும். அதுக்கு தொடர்ச்சியா வாசிக்கணும். தொடர்ச்சியா வேற வேற அறிவுக்களங்களுக்குள்ள போய்ட்டே இருக்கணும். விஷ்ணுபுரம் எழுதுறப்ப நான் ஆலயக்கலை மரபுக்குள்ள மூழ்கி கிடந்தேன். கொற்றவை எழுதுறப்ப பழந்தமிழ் இலக்கியத்திலே வாழ்ந்தேன். பின் தொடரும் நிழலின் குரல் எழுதுறப்ப ரஷ்ய இலக்கியத்திலே இருந்தேன். இப்ப வரலாற்றுக்கு முன்னாடி இருக்கிற குகைஓவியங்களிலேயும் கற்காலத்து சின்னங்களிலேயும் வாழ்ந்திட்டிருக்கேன். அதுக்கேற்ப மொழி மாறிடுது. அதான் அது சலிக்காமலேயே இருக்கு. நல்ல எழுத்தை எழுதணும்னா எழுத்தாளனா முழுமூச்சா வாழணும். அதுதான் ரகசியம். போதிய கருத்துச் சுதந்திரம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா? இந்தியாவைச் சுத்தி இருக்கிற மத்த நாடுகளோட ஒப்பிட்டுப்பாத்தோம்னா கண்டிப்பா முழுமையான கருத்துச் சுதந்திரம் இருக்கு. இங்க எழுத்தாளனை ஜெயிலுக்கு அனுப்புறதில்லை. புத்தகங்களை தடை பண்றதில்லை. தணிக்கை இல்லை. ஆனா சில்லறை அரசியல்வாதிகள் உருவாக்குற நெருக்கடி இருக்கு. இப்ப நான் கம்யூனிச சிந்தாந்தத்த அல்லது திராவிட இயக்கச் சிந்தனையை விமர்சிச்சா உடனே என்னை சங்கின்னு சொல்லி முத்திரையடிப்பாங்க. சங்கிகளையும் கூடவே விமர்சிக்கிறேன். அவங்க என்னை தேசத்துரோகின்னும் விலைபோனவன்னும் சொல்லுவாங்க. ’எங்ககூட நின்னு நாங்க சொல்றத அப்டியே எழுது, இல்லாட்டி நீ எங்க எதிரியோட ஆளு’ இதான் நம்ம அரசியல்வாதிங்களோட அணுகுமுறை. அவங்க உருவாக்குற காழ்ப்புங்கிறது இங்க பெரிய பிரச்சினைதான். அவங்களுக்கு பெரிய ஆள்பலமும் பணபலமும் உண்டு. அதனாலே அவதூறு பண்றது ஈஸி. அதான் அவங்களோட ஆயுதம். அதைவைச்சு பயமுறுத்துறாங்க. ஆனா நான் வாசகர்களை நம்பறேன். அவங்க எப்டியும் எங்கிட்ட வந்து சேந்திருவாங்கன்னு நினைக்கிறேன். தொண்ணூறு பேர் அரசியல் பிரச்சாரங்களை நம்பலாம், பத்துபேர் புத்தகங்களை வாங்கி வாசிச்சு நம்மகிட்ட வருவாங்க… அதான் நடந்திட்டிருக்கு. அறுபது வயதுக்குமேல் டால்ஸ்டாய் , தாகூர் மாதிரியானவங்க உச்சகட்ட படைப்புகளைக் குடுத்திருக்காங்க… உங்களோட புதிய படைப்பு என்ன? உண்மையிலே பாத்தா ஐம்பதை ஒட்டின வயசிலேதான் பெரிய படைப்புகளை மாஸ்டர்ஸ் எழுதியிருக்காங்க. என்னோட ஐம்பது வயசிலேதான் நான் வெண்முரசு எழுதறேன். மகாபாரதததை ஒட்டி எழுதின 26 நாவல்கள் வரிசையா… உலகிலேயே பெரிய இலக்கியப்படைப்பு அதுதான். ஆனா அதை எழுதி முடிச்சதுமே ஒருநாளைக்கு ஒரு கதை வீதம் 136 கதைகளை எழுதினேன். 13 தொகுதிகளா வந்திருக்கு. அப்றம் சின்ன நாவல்கள் அஞ்சு எழுதினேன். இப்ப கடல் நாவல் வெளிவரப்போகுது. கடல் சினிமாவுக்காக நான் ஒரு நாவல் வடிவத்தைத்தான் எழுதி மணி ரத்னத்துக்கு குடுத்தேன். பெரிய நாவல், அறுநூறு பக்கம் வரும். அந்த நாவல் புத்தகமா இப்பதான் வரப்போகுது. இன்னொரு நாவல் எழுதிட்டிருக்கேன். காவியம்னு பேரு. இந்தியாவிலே உள்ள காவியமரபோட உண்மையான ஆழம் என்னன்னு ஆராயற ஒரு நாவல். நாவல் நடக்குற இடம் பிரதிஷ்டானபுரின்னு ஒரு பழைய நகரம். இப்ப அதோட பேரு பைத்தான். அங்கே போயி தங்கி எழுத ஆரம்பிச்சேன்… தமிழ் இலக்கியம் உலக அளவிலே மதிக்க்கப்படுதா? தமிழ் இலக்கியத்துக்கு இன்னிக்கு இந்திய அளவிலேயாவது இருக்கிற இடம் என்ன? என்னோட அறம்ங்கிற புத்தகம் பிரியம்வதா ராம்குமார் மொழிபெயர்ப்பிலே இங்கிலீஷ்லே வந்தது. Stories of the true ன்னு புத்தகத்தோட பேரு. மிகப்பெரிய அளவிலே வரவேற்பு கிடைச்ச புத்தகம் அது. அமெரிக்காவிலே உள்ள American Literary Tranlaters Assocoation ங்கிற அமைப்பு உலக அளவிலே ஆங்கிலத்திலே செய்யப்படுற இலக்கிய மொழிபெயர்ப்புக்கு விருது குடுக்குது. நாற்பது உலகமொழிகளிலே இருந்து இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஆறு புத்தகங்களிலே ஒண்ணா என்னோட புத்தகம் இருந்தது. ஆனா அந்த விருது வியட்நாம் நாவலுக்குப் போச்சு. அந்த விருதுவிழாவுக்கு பிரியம்வதா போயிருந்தாங்க. அங்க உள்ளவங்க தமிழ்ங்கிற மொழியைப்பத்தியே கேள்விப்பட்டிருக்கலை. ஆனா வியட்நாம் மொழியிலே இருந்து நூத்துக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலே வந்திருக்கு. அந்த புத்தகங்களை வாசிச்சு வாசிச்சு அந்தக் கலாச்சாரம் அங்க உள்ள வாசகர்களுக்குத் தெரிஞ்சிருந்தது. அதனாலே அந்த நாவலை அவங்க கூடுதலா ரசிச்ச்சாங்க. வியட்நாம் கூட அமெரிக்கா போர் புரிஞ்சதனாலே வியட்நாம் பத்தி தெரிஞ்சிருக்குன்னு வைச்சுக்கலாம். அந்தவகையான அறிமுகம் தமிழுக்கு இல்லை. தமிழிலே இருந்து இலக்கியங்கள் அமெரிக்காவிலே சர்வதேசப்பதிப்பா வர்ரது அனேகமா கிடையாது. சின்ன பதிப்பகங்கள் போட்ட புத்தகங்களே ஒண்ணுரெண்டுதான் அங்க வந்திருக்கு. ALTA விருதுக்குப் பிறகு என்னோட அறம் கதைகளோட மொழியாக்கமான Stories of the true ங்கிற சிறுகதைத் தொகுப்பும் வெள்ளையானை நாவலோட மொழியாக்கமான The white elephant ங்கிற புத்தகமும் அமெரிககவோட முக்கியமான பதிப்பகமான FSG நிறுவன வெளியீடா சர்வதேசப்பதிப்பா வருது. ஏழாம் உலகம் நாவலோட மொழிபெயர்ப்பு The Abyss ங்கிற பேரிலே Transit பதிப்பகம் வழியா அமெரிக்காவிலே சர்வதேசப் பதிப்பா வெளிவருது. இது தமிழுக்கு பெரிய தொடக்கம். ஆனா இந்த புத்தகங்களுக்கு நாம அங்க ஒரு வாசிப்பை உருவாக்கி எடுக்கணும். இயல்பா அவங்களாலே நம்ம இலக்கியத்தை வாசிக்க முடியாது. ஏன்னா நம்ம கலாச்சாரமே அவங்களுக்குத் தெரியாது. நம்ம நாட்டை அவங்க மேப்பிலேதான் பாக்கணும். அதிலே தமிழ்நாடுன்னு தனியா ஒரு ஏரியா இருக்குன்னு எடுத்துச் சொல்லணும். அதனாலே இங்கேருந்து நெறைய புத்தகங்கள் அங்க போகணும். அவங்க நெறைய வாசிக்க வாய்ப்பு இருக்கணும். அப்டிபோகணும்னா இந்த புத்தகங்கள் நெறைய விக்கணும். நான் எப்பவுமே தமிழோட நல்ல படைப்புகளை எல்லாம் தொடர்ச்சியா எல்லா மேடைகளிலேயும் முன்வைக்கிறவன். துருக்கி, கொரியா, ஜப்பான் படைப்புகள் அமெரிக்காவிலே நூற்றுக்கணக்கிலே வருது. நோபல் பிரைஸ் கூட வாங்குது. ஏன்னா அமெரிக்காவிலே வாழுற புலம்பெயர்ந்த துருக்கி, கொரியா, ஜப்பான் மக்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்குறாங்க. அதிலேயே ஒரு அடிப்படையான விற்பனை அமைஞ்சிருது. அதனாலே பதிப்பகங்கள் நம்பி புத்தகங்களை போடுறாங்க. தமிழ் ஜனங்களும் அதேபோல இந்த புத்தகங்களை வாங்கினா ஒரு பெரிய திருப்பம் உண்டாகும். ரெண்டு காரணத்துக்காக இந்த புத்தகங்களை அவங்க வாங்கணும். ஒண்ணு, அங்க பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு நம்ம பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறிமுகம்பண்ண இதான் வழி. இன்னொண்ணு, தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே அறியப்பட்டாத்தான் தமிழர்களுக்குப் பெருமை. ஆனா ஒண்ணு, தரமான இலக்கியத்தை அங்க கொண்டுபோகணும். இங்க உள்ள வெகுஜன ரசனைக்கான எழுத்தை அங்க கொண்டுபோனா மதிக்க மாட்டாங்க. என்னோட கதைகளோட எந்த நல்ல மொழிபெயர்ப்பை குடுத்தாலும் உலகத்திலே உள்ள நல்ல இலக்கிய இதழ்களிலே வெளியாயிடுது… நல்ல பதிப்பகங்கள் பிரசுரிக்குது… ஏன்னா அதிலே அந்த தரம் உண்டு. அந்த வகையான படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம்தான் நமக்கு பெருமை… தமிழ்விக்கின்னு ஒரு பெரிய கனவை முன்னெடுக்கிறீங்க…அடுத்த கனவு என்ன? தமிழ்மொழிக்கு ஒரு பண்பாட்டுக் கலைக்களஞ்சியம் வேணும்னுதான் தமிழ் விக்கியை ஆரம்பிச்சோம். 2022லே வாஷிங்டனிலே வெளியீட்டுவிழா நடந்தது. இன்னிக்கு பத்தாயிரம் பதிவுகளோட மிகப்பெரிய ஒரு இணையக் கலைக்களஞ்சியமா வளந்திட்டிருக்கு… தமிழ்விக்கி சார்பிலே பெரியசாமித்தூரன் நினைவா தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய விருதை ஆண்டுதோறும் குடுக்கறோம். ஏற்கனவே மூத்த எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2010 முதல் குடுத்திட்டிருக்கோம்… இனி ஒரு பெரிய கனவு 2026லே அமெரிக்காவிலே நவீனத் தமிழிலக்கியத்துக்காக ஒரு மாநாடு….இங்கேருந்து ஒரு ஐம்பது எழுத்தாளர்களை அங்கே கொண்டுபோயி அறிமுகம் பண்ணணும். நாம எழுதுறத அந்த ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்றது நோக்கம். இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற கவனத்தை தமிழ் இலக்கியம் மேலே திருப்பணும்னு நினைக்கிறேன்… வாழ்க்கையோட பொருள் என்னன்னு நினைக்கிறீங்க? நம்ம வாழ்க்கைக்கு பொருள் உண்டு, ஆனா அதை நாம அறிய முடியாது. ஏன்னா பிரபஞ்சத்துக்கு பொருள் உண்டுன்னா, இயற்கைக்கு பொருள் உண்டுன்னா, இங்க உள்ள மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருள் உண்டுன்னா அந்தப் பொருள்தான் நம்ம வாழ்க்கைக்கும் இருக்கு. எல்லாம் ஒட்டுமொத்தமா ஒண்ணுதான். நம்மாலே பிரபஞ்சத்தை அறியவே முடியாது. அதனாலே வாழ்க்கையோட பொருள் என்னான்னு கேக்கிறது பயன் இல்லாத வேலை. நம்ம வாழ்க்கைக்கு நாம பொருளை குடுத்துக்கலாம். நமக்குள்ள என்ன ஆற்றல் இருக்குன்னு நாம உணரமுடியும். நாம செய்யவேண்டிய செயல் என்னன்னு தெரிஞ்சுகிட முடியும். அதைத் தெரிஞ்சு முழுமூச்சா அதைச்செய்றதுதான் நிறைவும் மகிழ்ச்சியும். அதுதான் நாம நம்ம வாழ்க்கைக்கு அளிக்கிற அர்த்தம். என் வாழ்க்கைக்கு அப்டி ஒரு அர்த்தத்தை என்னோட 26 வயசிலே நான் தான் குடுத்தேன். நாப்பதாண்டுகளா அதுதான் என்னோட வாழ்க்கை. நன்றி ஆனந்தவிகடன் பேட்டி நா.கதிர்வேலன் https://www.jeyamohan.in/215942/
  10. வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி May 31, 2025 10:50 am “பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது. வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும். முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார். https://oruvan.com/have-we-lost-the-north-sarath-weerasekara-questions/
  11. இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmbbikebv016rqpbsob2cvcxs
  12. தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/தடை-செய்யப்பட்ட-அமைப்புகள்-வர்த்தமானி-வெளியீடு/175-358299
  13. முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் adminMay 30, 2025 முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும். சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும். முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது. வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்களைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216142/
  14. இன்றைய இரண்டாவது Play-off Eliminator போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மாவினது புயல்வேக 81 ஓட்டங்களுடனும், ஜொனி பெயிர்ஸ்ரோவின் மின்னல்வேக 47 ஓட்டங்களுடனும் சிறந்த தொடக்த்தினாலும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களை எடுத்திருந்தாலும், அணித் தலைவர் சுப்மன் கில் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியதாலும், பின்னர் ஆடவந்தவர்களில் வாஷிங்டன் சுந்தரின் மின்னல்வேக 48 ஓட்டங்களைத் தவிர மற்றையோர் நிலைத்து ஆடமுடியாததாலும், சவாலான வெற்றி இலக்காக இருந்ததாலும், இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டி Qualifier 2 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. குஜராத் டைட்டன் அணி ஐபிஎல் 2025 இலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. யாழ்களப் போட்டியாளார்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் @நந்தன் உம், @புலவர் ஐயாவும் உறுதியாக நிலையெடுத்துள்ளனர்!
  15. GT 148/2 in 13 overs இரு தமிழர்கள் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறுவார்களா?
  16. எனது வாக்கும் குஜராத்திற்கே! யாழ்களப் போட்டியில் முன்னுக்கு நிற்பவர்கள் மேலே ஏறக்கூடாது என்ற நண்டுக்குணம்தான்🦀. வேறு ஒன்றுமில்லை!
  17. சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர் May 30, 2025 11:47 am கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே நேற்று அன்று பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரை மணல் அகழ்வது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. https://oruvan.com/illegal-sand-mining-minister-chandrashekhar-visits-and-inspects/
  18. கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும் May 30, 2025 11:36 am இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது. இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில் ”இனப்படுகொலை” யாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் ”இனப்படுகொலை”என்பதனை நிராகரித்து ”போர் வெற்றிக் கொண்டாட்டம்” என்ற பெயரில் வெற்றிநாளாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான் இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது ”தமிழ் இனப்படுகொலை” என்பதனை கனடா ஏனைய உலக நாடுகளுக்கு உரத்துக் கூறியுள்ளது. இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் இறுதிக்கட்ட யுத்த தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, ”தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்தும் ”தமிழினப் படுகொலை”நடந்தது என்பதனை சர்வதேச மயப்படுத்தியுள்ளது. கனடாவின் இந்த துணிச்சலான,மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கின்ற, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்ற,அநீதிகளை சமரசமின்றி எதிர்க்கின்ற,நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ,உண்மையை உரத்துக்கூறுகின்ற உயரிய அரசியலும் உயர்ந்த குணமும்தான் இன்று இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளதுடன் இவர்களை நெருப்பில் விழுந்த புழுக்களாக துடிக்கவும் துள்ளவும் வைத்துள்ளது. தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்து,இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது. 2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது. கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்காவுசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.பிரம்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது எனவும் கனடிய தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் தொனியில் கண்டனம் தெரிவித்தார். அதேவேளை இலங்கையிலுள்ள பிரதான தமிழ் தேசியக் கட்சிகள்,அமைப்புக்கள்,புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்கள் கனடா அரசுக்கும் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணுக்கும் கனேடிய தூதுவருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான இ லங்கைத் தமிழரசுக்கட்சி கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தது. கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்ததுடன் தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றையும் கையளித்துள்ளார். மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே கனேடிய ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ”தமிழின படுகொலை நினைவுத்தூபி”போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி மூலம் அச்சுறுத்தியுள்ளார். பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் , வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் இந்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. இது கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவினால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் கனடா அசரவில்லை. பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இது தொடர்பில் கூறுகையில் .நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்கக் கூடாது.இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் மேலும், தமிழர் படுகொலை நினைவுத்தூபி என் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. எனவே இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பினால்தான் கனடாவிலுள்ள சிங்களவர்கள் இந்த நினைவுத்தூபி தொடர்பில் சிங்கக்கொடியை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு அடுத்த அடியாக கனடாவின் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்டனில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் ராஜபக்ஸக்கள் சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்தான் கனடாவின் அடுத்த நினைவுத்தூபி அறிவிப்பு இலங்கை அரசுக்கும் சிங்களபேரினவாதிகளுக்கும் கடும் சினத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கே.பாலா https://oruvan.com/canadas-memorial-and-the-screaming-sri-lankan-government/
  19. சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன் Vhg மே 30, 2025 சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார். ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் அஸ்வினுக்கு சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அஸ்வின் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வரும் பல்வேறு கழக மட்டப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். https://www.battinatham.com/2025/05/blog-post_888.html
  20. உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவு கூர்ந்து மரக்கன்றுகள் நடுகை யாழ்ப்பாணம் - மண்டைதீவில் கடற்படையினரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வேலுசுமன கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் இன்று (29) காலை இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன் இவ்வாறு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmb99dzvp014iqpbs9xde6d2x
  21. சீன, போலந்து அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்! adminMay 30, 2025 இலங்கைக்கு சென்றுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அமைச்சர், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடனான இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சவாலான காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், வர்த்தகம் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் போது இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சீனா அரப்பணிப்புடன் செயற்படுவதாக சீன வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கடந்த சீன விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது சீன வர்த்தக அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். மேலும், சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. போலந்துக்கு இலங்கை முக்கியமான நாடு – போலந்து வெளிவிவகார அமைச்சர்! இலங்கைக்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், போலந்து குடியரசின் வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radoslaw Sikorski) இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், எதிர்வரும் காலங்களில் உலக அளவில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி முறைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குள் செயலாற்றும்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரந்த ஒத்துழைப்புடன் செயலாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் GSP+ நிவாரணத்தை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள முன்னேற்றகரமான நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வரவேற்றார். இதன்போது கருத்து தெரிவித்த, போலந்து வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி , தனது சுற்றுப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்தை போலவே இலங்கை மீது போலந்து கொண்டிருக்கும் சிறப்பு அவதானத்தை காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார். இலங்கை – போலந்து வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் போலந்துக்கு இடையில் 50 வருட இராஜதந்திர தொடர்புகள் மற்றும் 30 வருட அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை இங்கு நினைவுகூர்ந்த போலந்து வௌிவிவகார அமைச்சர் புதிய அரசாங்கத்தோடு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயலாற்றுவதே போலந்து அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கார்மென் மொரெனோ(Carmen Moreno) உள்ளிட்ட தூதுக்குழுவினரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2025/216133/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.