Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இரண்டு வாட்டி காவ்யா மேடம் கட்டிப் புடிப்பாங்க🤪
  2. MATCH DELAYED BY RAIN 55th Match (N), Hyderabad, May 05, 2025, Indian Premier League DC (20 ov) 133/7 SRH
  3. GMT நேரப்படி நாளை திங்கள் 05 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  4. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் ராமனுல்லா குர்பாஸ், அன்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் ஆகியோரின் கமியோ ஆட்டங்களினாலும், அண்ட்ரே ரஸல்ஸின் அதிரடிப் புயல்வேக 25 பந்துகளில் அடித்த 57 ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி 5 விக்கெட்டுகளை 71 ஓட்டங்களில் இழந்திருந்தது. எனினும் மோயின் அலியின் மூன்றாவது ஓவரில் ரியான் பராக் 5 சிக்ஸர்களை அடித்தபோது ஆட்டம் திசைமாறியது. ரியான் பராக் புயல்வேகத்தில் 95 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரொன் ஹெட்மயர், ஷிவம் டுபேயின் அதிரடி ஆட்டங்களால் வெற்றிக்கோட்டுக்கு அண்மித்து, இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ராப்சிம்ரன் சிங்கின் மின்னல்வேக 91 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங் போன்றோரின் கமியோ ஓட்டங்களுடனுன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால் வெற்றி வாய்ப்பு கடினமாக இருந்தது. ஆயுஷ் படோனியும், அப்துல் சமட்டும் முறையே 74 ஓட்டங்களையும், 45 ஓட்டங்களையும் விளாசியும் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  5. இலகுவாக வெல்லவேண்டிய மட்ச்.. இப்படி ரண் அவுட்டில் வெல்லவேண்டியதாகப் போச்சு! ரிங்கு சிங் நொண்டுவதைப் பார்த்தால் அவர் இனி விளையாடமாட்டார் போலிருக்கு
  6. KKR வெற்றி! ஹார்ட் அற்றாக் வராத குறை!
  7. இரண்டு ஓவர்கள் உள்ளன. KKR வெல்லுமா? KKR 206/4 RR (18/20 ov, T:207) 174/7 RR need 33 runs in 12 balls. CRR: 9.66 • RRR: 16.50 • Last 5 ov (RR): 40/2 (8.00)
  8. KKR 206/4 RR (13/20 ov, T:207) 134/5 RR need 73 runs in 42 balls. CRR: 10.30 • RRR: 10.42 • Last 5 ov (RR): 62/0 (12.40)
  9. பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை.. இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி.. நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு.. சரி நான் சொல்ல வந்த விசயம்.. புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.. 🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள். முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான். (ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்) மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள். 🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள். 🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள். இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்.. இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்.. 🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்) 🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்.. 🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்.. இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது.. ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.. இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔 https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr
  10. டூரிஸ்ட் பேமிலி: விமர்சனம்! 3 May 2025, 1:08 PM சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எப்பூடி..!? மிக மெலிதான திரைக்கதை கொண்ட படங்களுக்குத் தமிழ்நாட்டு ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? திரையுலகக் கலைஞர்களை வாட்டி வதைக்கிற கேள்விகளுள் இதுவும் ஒன்று. அதனாலேயே, மிக லேசான கதையைக் கொண்ட ரொமான்ஸ், காமெடி, ட்ராமா வகைமை திரைப்படங்களை எடுக்கப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். அவற்றின் மீது கவனத்தைக் குவிக்கிற வகையில் ‘வித்தியாசங்களை’ப் புகுத்தக் கஷ்டப்படுகின்றனர். ‘நல்லதா ஒரு பின்னணி கிடைச்சா அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல’ என்கிற பதிலோடு, மிகச்சிலர் மட்டும் அந்த ‘ரிஸ்க்’கை ‘ரஸ்க்’ சாப்பிடுவது போலக் கையாண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு. புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக சசிகுமார் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்களோடு மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எவ்வாறு இருக்கிறது? பிழைப்பு தேடி..! இலங்கையின் வல்வெட்டித் துறையில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சட்டவிரோதமாகப் படகில் வருகிறது ஒரு குடும்பம். தர்மதாஸ் (சசிகுமார்) எனும் நபர், அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), நிதுஷன் (மிதுன் ஜெய்சங்கர்), முள்ளி (கமலேஷ்) என்று நான்கு பேர் வந்திறங்கியதுமே, கடலோரப் பாதுகாப்புக்காக ரோந்து வரும் போலீசார் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல வந்த வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) போலீசாரை பார்த்ததும் ஒரு படகில் மறைந்து கொள்கிறார். அவரையும் பிடிக்கின்றனர். ஐவரையும் கைது செய்து வேனில் அழைத்துச் செல்கிறார் கான்ஸ்டபிள் பைரவன் (ரமேஷ் திலக்). செல்லும் வழியில், சிறுவன் முள்ளி கையில் இருக்கிற நாய்க்குட்டியைப் பார்க்கிறார். ‘எப்படியும் எங்களை ஜெயில்ல போட்டுடுவீங்க. இதுக்காவது நல்ல சாப்பாடு கிடைக்கட்டும். நீங்க எடுத்துகிட்டு போய் வளர்த்துடுங்க’ என்று பைரவனிடம் சொல்கிறார் முள்ளி. கூடவே, ‘எனது பெயர் ஆகாஷ்’ என்கிறார். அது பைரவனின் மகன் பெயர். முள்ளி சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பும் பைரவன், கொஞ்சமாக ‘மெல்ட்’ ஆகிறார். அவர்களை பாதி வழியில் இறக்கிவிட்டு சக போலீசாரோடு சென்றுவிடுகிறார். ஆனால், பைரவனோடு இருப்பவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. என்னதான் முள்ளி பொய் சொல்லித் தப்பிக்க வைத்தாலும், அதனை தர்மதாஸால் ஏற்க முடிவதில்லை. அவரிடத்தில் இருக்கிற உண்மையும் நேர்மையும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை அடுத்தடுத்து நடக்கிற விஷயங்கள் நிரூபிக்கின்றன. சென்னைக்குப் பயணிக்கும் அவர்கள், அங்கு ஒரு வீட்டில் தங்க முடிவெடுக்கின்றனர். இறங்கிய இடத்தில், சாலையில் மயங்கிக் கிடக்கிற ஒரு இளைஞரைப் பார்த்ததும் ஓடிச் செல்கிறார் தர்மதாஸ். அவரது நிலை கண்டு பதறி, உடனே ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்குமாறு கூறுகிறார். அவரது உறவினரும் வேண்டாவெறுப்பாக அதனைச் செய்கிறார். கேசவநகர் காலனியில் தர்மதாஸ் குடும்பத்தினரைக் குடி வைக்கிறார். ’இந்த ஊர் பாஷை பழகற வரைக்கும் யார்கிட்டயும் வாய் திறக்காதீங்க’ என்பது வசந்தியின் சகோதரர் அக்குடும்பத்தினருக்குத் தரும் அறிவுரை. ஆனால், அவர்களால் அதனைப் பின்பற்ற முடிவதில்லை. அதனால் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன? அதன் தொடர்ச்சியாக, தர்மதாஸ் குடும்பத்தின் என்ன மாற்றங்கள் உருவாகின்றன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்தக் கதையின் தொடக்கத்தில், ஒரு குப்பை தொட்டியில் இருந்த குண்டு வெடித்து ஊடகங்களில் ‘பரபரப்புத் தீ’ பற்றிக் கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கும். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குக் கிளம்புகையில், அந்த இடத்தில்தான் தர்மதாஸ் குப்பையைக் கொட்டியிருப்பார். அதன் தொடர்ச்சியாக, அவர் மீது போலீசாரின் ‘சந்தேகப்பார்வை’ விழுவது இத்திரைக்கதையின் ஊடே ‘கிளைக்கதையாக’ச் சொல்லப்பட்டிருக்கும். இப்படிச் சில முடிச்சுகள் ஆங்காங்கே இருப்பதுதான், ஒரு மெல்லிய நீரோடை போன்று நகர்கிற திரைக்கதையில் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாகின்றன. படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. கலக்கும் ‘காஸ்ட்டிங்’! சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் என்று நான்கு பேரையும் ஒரு குடும்பமாகத் திரையில் காட்டிய விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந். ‘அவர்கள் நால்வரும் ஒரு குடும்பம்தானோ’ என்று எண்ணுகிற அளவுக்கு, அவர்களிடையேயான ‘கெமிஸ்ட்ரி’ திரையில் தெரிகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி. சசிகுமார் – சிம்ரன் ஜோடி ‘அட்ராசிட்டி’ என்று சொல்கிற அளவுக்குப் பெரியளவில் காட்சிகள் இல்லை. ஆனாலும், அப்பாத்திரங்களின் அன்னியோன்யத்தை, கருத்து வேறுபாடுகளை, உணர்வுக் கொந்தளிப்புகளைக் காட்டுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அவை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியிருக்கின்றன. இப்படத்தில் இருவருமே நடுத்தர வயது மனிதர்களாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மிதுன், கமலேஷ் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றன. ‘விளையாட்டுப் பையன்’ என்றளவில் கமலேஷுக்கு ‘மைலேஜ்’ ஏற்றப்பட்டிருப்பதற்கு இணையாக, ‘கொஞ்சம் பக்குவமான இளைஞன்’ எனும் பிம்பத்திற்குப் பொருத்தமான காட்சிகள் மிதுனுக்குத் தரப்பட்டிருக்கின்றன. அதிலும், தான் காதலிக்குக் கல்யாணம் என்ற உண்மையைத் தாங்க முடியாமல் பிதற்றுகிறபோது அக்குடும்பம் அவரைத் தேற்றுவதாக ஒரு ‘காட்சி’ வருகிறது. ’கமர்ஷியல் படம்னா இப்படியும் இருக்கும்’ என்பதற்கான உதாரணமாக, அக்காட்சி கைத்தட்டல்களை அள்ளுகிறது. இந்த படத்தில் யோகிபாபு, பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, ரமேஷ் திலக், யோகலட்சுமி உட்படச் சுமார் ஒன்றரை டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். குடியிருப்புவாசிகளாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர். அவர்களுக்கும் இத்திரைக்கதையில் வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. விசாரணை மேற்கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரியாக வருபவரும் கூட, ‘யார் இவர்’ என்று கேட்கிற அளவுக்குத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆதலால், சந்தேகமேயிலாமல் இப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் ‘காஸ்ட்டிங்’ மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் அஜித் கோஷி தவிர்த்து, மற்றனைவரையும் வேறெந்தப் படங்களிலும் இது போன்ற பாத்திரங்களில் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு ‘அது’ அமைந்திருக்கிறது. ஒரு ஐரோப்பிய படம் பார்த்தது போன்ற உணர்வைத் தனது ‘பளிச்’ பிரேம்களால் ஏற்படுத்தியிருக்கிரார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். கதாபாத்திரங்களுக்கும் காட்சிப் பின்னணிக்கும் ஏற்ற கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் கலை இயக்குனர் ராஜ்கமல். சிரிப்பதற்கு இடம் தந்து காட்சிகளைச் சரியான வேகத்தோடு நகரும் வகையில் நறுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன். படத்தில் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, நிறக்கலவை என்று பல அம்சங்கள், இயக்குனரின் கதை சொல்லலைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. ஷான் ரோல்டனின் இசையமைப்பில் பாடல்கள் முதன்முறையாகக் கேட்கிறபோதே மனதோடு ஒட்டிவிடுகின்றன. பின்னணி இசையானது காட்சிகளின் தன்மையை மேலுயர்த்துகிற வகையில் அமைந்திருக்கின்றன. இப்படி ‘டூரிஸ்ட் பேமிலி’யில் இடம்பெற்ற நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட்டு, இயக்குனர் அபிஷன் ஜீவிந் விரும்பிய உலகைப் படைத்திருக்கின்றனர். கடினமான பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்கள். சோகத்தில் உழல வேண்டிய அவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வேறொரு திசையில் இருக்கிறது. அவர்களால் அவர்களது வாழ்வு மட்டுமல்லாமல், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் நல்மாற்றங்களுக்கு உள்ளாவதை, ‘ஓவர் மெலோட்ராமா’வாக இல்லாமல் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. ’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மிதுனிடம் யோகலட்சுமி தனது காதலை சூசகமாக வெளிப்படுத்துவது, சசிகுமார் பாத்திரத்தினால் உண்டான மாற்றங்களை இயக்குனர் அபிஷன் பாத்திரம் விவரிப்பது என்று ‘டூரிஸ்ட் பேமிலி’யில் ரசிக்கத்தக்க காட்சிகள் கணிசமாக உள்ளன. அவை இப்படத்தைக் காண வந்ததை அர்த்தமுள்ளதாக்குகின்றன. அவற்றைத் தாண்டி, இலங்கை போர் தொடர்பான விஷயங்களை இதே கதையில் இடம்பெறச் செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்கள் மனதைத் தொடுகிற திரையனுபவத்தை, இப்படம் மூலம் தந்திருக்கலாமே என்பது போன்ற ஆதங்கங்கள் சிலருக்கு எழலாம். அதற்கு மாறாக, இயக்குனரின் பார்வை அமைந்திருப்பது நிச்சயம் தவறு அல்ல. அது மட்டுமல்லாமல், எவரையும் குறைத்துச் சொல்வது போன்ற சித்தரிப்பை இதில் அவர் கையாளவில்லை. ஆதலால், அது போன்ற குறைகளும் லாஜிக் மீறல்களும் கூடப் புறக்கணிக்கத்தக்கதாகவே இருக்கின்றன. பின்பாதியில் ஓரிடத்தில் ‘கணவன் மனைவி தாம்பத்திய உறவு’ பற்றி ‘கமெண்ட்’ அடிப்பது தவிர, இப்படத்தில் ‘ஆபாசமான’ விஷயங்கள் என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட ‘அந்த’ வசனங்கள் கூட, இன்றைய மொபைல் உலகில் சர்வசாதாரணமானதுதான். ஆகையால், குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கிற, ரசிக்கிற வகையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ இருக்கிறது. இப்படிப்பட்ட கதை சொல்லலோடு ‘கமர்ஷியல் படங்கள்’ உருவாக்கப்படுவது நமது ரசனையின் கிளைகளை மேலும் விரிவடையச் செய்யும். ‘கமர்ஷியல் படங்கள்’ என்ற போர்வையில் ரத்தத்தையும் சத்தத்தையும் தியேட்டரில் வாரியிறைத்து அடுத்த தலைமுறையின் மூளையை ‘மடத்தனத்தால்’ நிரப்புவதற்கு, இது எவ்வளவோ தேவலை..! https://minnambalam.com/tourist-family-movie-review-2025-sasikumar-simran/
  11. தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு May 3, 2025 தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயரை வைப்போம் என கடற்றொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனை கடற்றொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என்ற ஒன்றை வெளியிட்டு மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட சகலரும் அமைதியையே விரும்பியதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். https://www.ilakku.org/தேசிய-தலைவரின்-பெயரை-பயன/
  12. தோல்விக்கு நானே பொறுப்பு - மஹேந்திர சிங் தோனி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால் நான் அதனை செய்யத் தவறிவிட்டேன். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். பந்துவீச்சில் இன்று சுதப்பி விட்டோம். ”என இதன்போது மஹேந்திர சிங் தோனி குறிப்பிட்டார். https://www.hirunews.lk/tamil/404566/தோல்விக்கு-நானே-பொறுப்பு-மஹேந்திர-சிங்-தோனி
  13. டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகைப்படம் வெள்ளை மாளிகை ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது. புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மேலும் அது 7 ஆம் திகதி கார்டினல்களின் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்த புகைப்படத்தை உருவாக்கி, அவர் போப் பதவிக்கு பொருத்தமானவர் என்பதைக் குறிப்பிட்டு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. போப்பாண்டவருக்கு ஏற்பட்ட அவமானத்தை சித்தரிக்கும் புகைப்படத்தை உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், டொனால்ட் டிரம்ப் போப் ஆக விரும்புவதாக வெளியிட்ட பொது அறிக்கையின் அடிப்படையில், டிரம்ப் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ.எஃப்.பி) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டிரம்ப்-பாப்பரசர்-நாலாபுறமும்-எதிர்ப்பு/50-356644
  14. ஜனாதிபதி அனுரவுக்கு வியட்நாமில் அமோக வரவேற்பு வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் சென்றடைந்தார். அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம் (Trinh Thi Tam),வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm), ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும், திங்கட்கிழமை (05) ஈடுபட உள்ளார். ஹோ சி மிங் நகரில், மே 06 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார். இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொண்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-அனுரவுக்கு-வியட்நாமில்-அமோக-வரவேற்பு/175-356662
  15. மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில் ஒரு முகப்பை நிறுவுகிறார்கள். அல்லது தமது சுவரொட்டிகள் பதாகைகள் மூலம் அப்படியொரு வாசலை உருவாக்குகிறார்கள். அது தேசிய மக்கள் சக்தியின் வாசல் என்ற ஓர் உணர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த முகப்பில் வாசலைத் தவிர ஏனைய எல்லாப் பரப்புகளையும் சுவரொட்டிகளால் நிரப்புகிறார்கள். தமிழ்க் கட்சிகள் இந்த அளவுக்குக் காசைக்கொட்டிப் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை. பெரிய கூட்டங்களை நடத்துவதற்குச் சத்தியற்றவைகளாக தமிழ்க் கட்சிகள் காணப்படுகின்றன. குறுகிய கால இடைவெளிகளுக்குள் வந்த,வருகின்ற மூன்று தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளிடம் பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நிதி இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி பெயராவிட்டால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. இது தமிழரசியலின் அடிப்படைப் பலவீனம் ஒன்றைக் காட்டுகின்றது. எந்தவோர் அரசியல் நடவடிக்கைக்கும் நிதித் திட்டமிடல் வேண்டும். நிதியை எப்படிச் சேகரிப்பது? எவ்வளவு காலத்துக்குள் சேகரிப்பது? போன்றவை தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இருக்க வேண்டும். போதிய நிதி இருந்தால்தான் கட்சி நடத்தலாம்; அரசியல் செய்யலாம். முழு நேரச் செயற்பாட்டாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அரை நேரச் செயல்பாட்டாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதுவும் இன அழிப்புக்கு எதிரான அரசியலைச் செய்ய முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது. காற்றைக் குடித்துக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ்க் கட்சிகளிடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழ் கோப்பரேட்கள் சிலர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பெருங்கூட்டங்களை நடத்தக்கூடிய அளவு நிதி பெயரவில்லை என்று தெரிகிறது. ஒப்பீட்டு ரீதியாக தமிழ்க் கட்சிகளின் நிதி ரீதியான பலவீனங்களை பிரச்சாரக் களம் உணர்த்துகின்றது. அதே சமயம் ஆளுங்கட்சியான என்பிபி அரச பலத்தோடும் வளத்தோடும் அதிகளவு நிதியைக் கொட்டி ஒரு பிரச்சாரப் போரை நடாத்துகின்றது. அரச பிரதானிகள் அந்தப் பிரச்சார மேடைகளில் தோன்றுகிறார்கள். குறிப்பாக அனுர கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரோடு கைகளைக் குலுக்கி கொள்வதற்காக தமிழ் ஆண்களும் பெண்களும் முண்டியடிக்கிறார்கள். சில சமயங்களில் குழந்தைகளும் அனுரவோடு செல்ஃபி எடுப்பதற்கு அழுகிறார்கள். இது கைபேசிகளின் காலம். மனிதர்களிடம் இயல்பாக உள்ள தன்மோகமானது செல்ஃபி யுகத்தில் ஒரு நோயாக மாறி வருகிறது. அறிவிற்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளியானது யூரியுப்பர்களின் காலத்தில் மேலும் ஆழமானதாகி வருகிறது. பிரபல்யமானவரோடு படம் எடுப்பது; கைகுலுக்குவது; செல்ஃபி எடுப்பது; பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டுக் கொள்வது. என்பிபி எந்தளவுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷனில் கவனமாக இருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்த மே தின கூட்டத்தில், அனுர பேசும் போது,”லங்கா தீப” ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷண எடுத்த ஒளிப்படம் தொடர்பான சர்ச்சை ஒரு சான்று. அந்த ஒளிப்படம் அனுரவை மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு தலைவராக முன் நிறுத்தவில்லை. மாறாக எதையோ கண்டு மிரண்டு, நம்பிக்கையிழந்து, கையறு நிலையில் தன்னை காப்பாறுமாறு பிராத்தித்திக்கின்ற ஒருவராகத்தான் அந்த படம் அவரை முன்னிறுத்துகிறது.அந்தப் படத்தை வெளியில் வரவிடாமல் என்பிபிக்காரர்கள் தடுத்திருக்கிறார்கள். அதாவது அனுரவின் எந்தப் படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் என்பிபி கவனமாக இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளிலும் அப்படித்தான். வல்வெட்டித் துறையில் அனுரவை அணைக்கும் மூதாட்டி; கிட்டு பூங்காவில், வவுனியாவில் அனுரவை நோக்கிக் கைகுலுக்க அந்தரப்படும் ஆண்கள்,பெண்கள் போன்ற படங்களும், காணொளிகளும்; அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பும் நோக்க முடியவை. அனுர எளிதாக அணுகப்படக்கூடிய, தொட்டுப் பழகக்கூடிய, எளிமையான ஒருவராகக் காணப்படுகிறார். எனவே அவரோடு கை குலுக்கிப் படம் எடுப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் ஆர்வமாகக் காணப்படுகிறார்கள். பாவம் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களோடு கைகுலுக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ ஆட்கள் இல்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதை டிஜிட்டல் ரோமோஷன் செய்வதற்கு அவர்களிடம் காசு இல்லை. எனினும் ஒரு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே கூட்டில் நிற்கின்றன. என்பிபியை, அல்லது ஜேவிபியை அம்பலப்படுத்துவது, எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான்கு தமிழ்த்தேசியத் தரப்புகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன. எனைய பெரும்பாலான விடயங்களில் தங்களுக்கு இடையே முட்டி மோதுகின்றன. அங்கே போட்டித் தவிர்ப்பிற்கான புரிந்துணர்வு இல்லை. “நாங்கள்தான் பெரிய கட்சி, மற்றவை உதிரிக் கட்சிகள்” என்று கூறும் சுமந்திரன் “நாங்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்”என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் உள்ளூரில் ஏனைய கட்சிகளுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடக்கின்றது. ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றி மறைமுகமாக சுமந்திரனையும் பலப்படுத்தி விடுவோமா என்ற பயம் பல வேட்பாளர்களிடம் உண்டு. அண்மையில் ஒரு பெண் வேட்பாளர் அவ்வாறு கேட்டதாக சிறீதரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுமந்திரனின் “எக்கிய ராஜ்ய”வை வைத்து அவரைத் தாக்குகிறது. தங்களுடையது மட்டும்தான் கொள்கைக் கூட்டு என்று கூறுகின்றது. யாழ். மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் மணிவண்ணன் போட்டிக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். ஒரு பிரதான போட்டியாளர் அவ்வாறு அகற்றப்பட்டிருப்பது ஏனைய கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அங்கே அரசாங்கத்தின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ,நீக்கலான மேல்வாய்ப் பல்லோடு, குழந்தைத்தனமான முகத்தோடு காணப்படுகிறார். நகரத் திட்டமிடல் தொடர்பில் தனக்குள்ள பாண்டித்தியத்தை நிரூபிக்கும் அறிக்கைகளை விடுகிறார். மணிவண்ணன் இல்லாத போட்டிக் களம் தனக்குச் சாதகமானது என்று நம்பி என்பிபி உழைகின்றது. அர்ஜுனாவுக்கும் மூன்று என்பிபிக்காரர்களுக்கும் வாக்களித்த மக்கள் இனி யாருக்கெல்லாம் வாக்களிக்கப் போகிறார்களோ? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபிக்கும் அர்ஜுனாவுக்கும் கிடைத்த எதிர்பாராத வெற்றி என்பது தமிழ் ஐக்கியமின்மையினதும் தமிழ்த் தேசிய இயலாமைகளினதும் விளைவு. அந்த ஐக்கியமின்மை இப்பொழுதும் உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு புதிய ஐக்கிய முயற்சி.ஆனால் அது தமிழரசுக் கட்சியைப் பிரதியீடு செய்யும் வளர்ச்சியை இன்னும் பெறவில்லை. இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் தாயக அளவில், ஒப்பீட்டளவில் அதிக வெற்றி வாய்ப்புக்கள் தெரிகின்றன. முன்னணி முன்னரை விட முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட பலமுனைப் போட்டிக்குள் நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகளில் யார் வென்றாலும் அது தேசிய மக்கள் சக்திக்குத் தோல்விதான். அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியத் தரப்பு தோற்றாலும் அந்த வாக்குகள் ஏனைய மூன்று தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கு போகுமாக இருந்தால் அதுவும் பாதுகாப்பானதே. அப்பொழுது மீன் கரைந்தாலும் சட்டிக்குள் இருக்கும்.மாறாக தமிழ்த் தேசியப் தரப்பிலிருந்து என்பிபிக்குத் திரும்பும் வாக்கு ஒவ்வொன்றும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் வாக்குத்தான். https://www.nillanthan.com/7354/
  16. காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை adminMay 4, 2025 சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.அதற்கமைய மாவட்ட செயலர் நிலமைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். https://globaltamilnews.net/2025/214992/
  17. ஏதாவது டிஜிரல் ரேடியோவில் இருக்கும். கிரிக்கெட்டில் பிபிசி ரேடியோ கொமென்ரரியைத் தவிர வேறு ஏதும் கேட்டுப் பழக்கமில்லை. டெஸ்ட் மட்ச் கொமென்ரரியளை ரேடியோவில் கேட்பதில் உள்ள த்ரில்லிங் நேரே பார்ப்பதில்கூட வராது! ரிச்சி பேர்னாட், ஜெஃப்ரி போய்கொட்டின் கொமென்ரரி எப்போதும் பிடிக்கும்!
  18. நாளை ஞாயிறு 04 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ அல்வாயன் சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  19. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 52வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜாகப் பெதலினதும் விராட் கோலியினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து மரண அடி கொடுத்து 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்த ரொமாரியோ ஷெப்பேர்ட்டினது ஆட்டத்துடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17 வயதேயான வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புயல்வேக 94 ஓட்டங்களுடனும், கூட இணைப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்த ரவீந்திரா ஜடேயாவினது பங்களிப்புடனும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். எனினும் ஆயுஷ் மாத்ரே 16.2 ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் டெவால்ட் ப்ரெவிஸும் ஆட்டமிழக்க போட்டி திசை மாறியது. 18வது ஓவரை சுயாஷ் ஷர்மா இறுக்கமாகப் போட்டு ஆறு ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்தார். இறுதி ஓவரில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்த பந்து ஷிவம் டுபேயால் சிக்ஸருக்குப் போனதும், அது உயரம் காரணமாக நோபோல் ஆனதும் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திசை மாற்றியது. மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் யஷ் தயாலின் இறுக்கமான பந்துவீச்சால் மூன்று ஓட்டங்களே எடுக்கமுடிந்தது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டே இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  20. இந்த மட்ச் நடக்கும்போது கேம்பிரிட்ஜுக்குப் போய் முடியும்போது மோட்டர்வேயில் வந்துகொண்டிருந்தேன். ஃபோனை கோல்டரில் போட்டுவிட்டு கிரிக் இன்ஃபோவைத்தான் பார்த்துக்கொண்டு காரை ஓட்டினேன்.. கடைசி நான்கு ஓவர்கள் திக்திக்கென்று போய்க்கொண்டிருந்தது! ஒரு மாதிரி RCB வென்றதால் இரண்டு புள்ளிகள் கிடைத்தது.😀
  21. ஆயுஷ் மாத்ரே CSK க்கு வெற்றிக்கனியைக் கொடுக்கப் போகின்றார் போல இருக்கு!
  22. ஜடேஜா பிடிச்ச கட்சை பத்திரானா தட்டிவிட்டார்! CSK பரிதாபங்கள்😩

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.