Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World) நாவல் BookDay25/03/2025 கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’! தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–6 அ. குமரேசன் இந்தியாவில் 1967ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட நாவல். இங்கிலாந்து நாட்டவரான அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley) (1894 – 1963) எழுதிய ‘பிரேவ் நியூ வொர்ல்ட்’ (Brave New World). மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கோழைத்தனமாக இருக்கும் ஒரு முட்டாள்தனமான அரசு பற்றி “துணிச்சலான புதிய உலகம்” என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறும் இந்த நாவல் அதற்கு முன் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பல மாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டது. பிற்காலத்தில் உலகின் சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று, அரசியல் விமர்சனப் படைப்பு, இயற்கையான உறவுகளை உயர்த்திப் பிடிக்கும் சித்தரிப்பு, உழைப்பாளிகள் எந்திரமாக்கப்படுவதை எதிர்க்கும் வெளிப்பாடு என்ற பாராட்டுகளைப் பெற்றது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் இந்த நாவல் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுரண்டலையும் போலியான கட்டுப்பாடுகளையும் நாவல் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. ஆனால் அதை மறைத்து, பாலியல் உறவுகள் பற்றிப் பேசுகிறது என்றும், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறது என்றும், சிறு வயதினர் படிக்க ஏற்றதல்ல என்றும் கரித்துக் கொட்டிப் புத்தகத்தைப் புதைத்துவிட முயன்றனர். அதுவோ புதைத்த மண்ணைப் பிளந்து முளைத்ததுடன், சிறந்த இலக்கியப் படைப்பாகவும் அடையாளம் பெற்றுவிட்டது. உலகச் சந்தை ஆக்கிரமிப்புக் கார்ப்பரேட்டுகளின் முன்னோடியான ஹென்றி ஃபோர்டு, தனது தொழிற்சாலைகளில் புகுத்திய நடைமுறைகளை இந்த நாவலின் மூலம் எள்ளலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஹக்ஸ்லே. ‘கி.பி.’ என்று சொல்லப்படுவது போல, ‘ஃபோ.பி.’ (ஃபோர்டுக்குப் பின்) என்ற எதிர்காலத்தையும், அவர் ஒரு கடவுள் போல வழிபடப்படும் சூழலையும் கற்பனையாக உருவாக்கி அதில் கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறார் எழுத்தாளர். இந்தியாவின் சோமபானம் போன்ற மயக்கம் தரும் ஒரு திரவம் பற்றியும், அதை விடவும் போதையான சாதியப் பாகுபாடு பற்றியும் கூட இந்த நாவல் தொட்டுக் காட்டுகிறது. இந்த எழுத்தாக்கம் குறித்து இணையத்தின் தரவுத் தளங்கள் தெரிவிக்கும் தகவல்கள் சுவையானவை. அப்படியோர் உலக அரசு! நாவல் ஃபோ.பி. 632ஆம் (2540ஆம்) ஆண்டில், ‘உலக அரசு’ என்ற ஆட்சியின் கீழ் லண்டன் நகரில் தொடங்குகிறது. கடுமையான சட்டதிட்டங்களைத் திணித்து, மக்களுக்கு இயல்பாக நேசித்து, உறவு கொண்டு, குடும்பம் நடத்துகிற உரிமையைக் கூட மறுக்கிற அரசு அது. செயற்கையான கருப்பைகளில் உருவாக்கப்பட்டு, பிறந்தபின் சிறு வயதிலிருந்தே இப்படியிப்படித்தான் வாழ வேண்டும் என்று முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட திட்டத்தின்படி குடிமக்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவுத் திறன், உழைப்புத் திறன் என்ற அடிப்படைகளில் அல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்ற ஐந்து சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அல்ஃபா மிக உயர்ந்த சாதி, மற்றவை அடுத்தடுத்த படிகளில் (வர்ணாஸ்ரம வகைப்பாடு போல) வைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயம் வறுமை, துன்பம் என எந்தப் புகாரும் இல்லாமல் இருக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சிகரமான மனநிலையிலேயே இருக்கச் செய்வதற்காக ‘சோமா’ என்ற பானத்தைப் பருகுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கருப்பைத் தொழிற்சாலைப் பணியாளரான லெனினா பீட்டா சாதியைச் சேர்ந்தவள், பாலியலாக ஈர்க்கக் கூடியவள். அல்ஃபா சாதிக்காரனான பர்னார்ட் மார்க்ஸ், அந்தச் சாதிக்காரர்களின் உயரத்திற்கு வளராதவன், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவன். கல்வியறிவின் காரணமாகக் குடிமக்களை அமைதியாக வைத்திருக்க சோமா குடிக்கச் செய்வது உள்ளிட்ட உலக அரசின் வழிமுறைகளை எதிர்க்கிறான்.பர்னார்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுகிறான். அவனை ஐஸ்லாந்து நாட்டிற்குக் கடத்த அவனுடைய நிறுவனத்தின் இயக்குநர் திட்டமிடுகிறான். பர்னார்ட்டின் ஒரே நண்பன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வாட்சன், அதே சாதியைச் சேர்ந்தவன், நல்ல எழுத்தாளர். ஆனால், வலிகளை உணராத சமுதாயத்தில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியாத நிலைமை. சுற்றுலா செல்லும் பர்னார்ட், லெனினா இருவரும் காட்டுமிராண்டிகள் தனிப்பகுதி என்று ஒதுக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் இயற்கையாகப் பிறந்து வளரும் மக்களை முதல் முறையாகக் காண்கிறார்கள். அந்த மக்கள் காதல், இளமைத் துடிப்பு, நோய், முதுமை, தனி மொழி என்று வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களிடம் முரட்டுத்தனமான மதச் சடங்குகளும் ஊறிப் போயிருக்கின்றன. சுற்றிவரும்போது இருவரும் நடுத்தர வயது லிண்டா, அவளுடைய மகன் ஜான் இருவரையும் சந்திக்கிறார்கள். உலக அரசின் பகுதியில் பிறந்து வளர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சுற்றுலாவின்போது, உடன்வந்தவர்களால் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டவள் அவள். சுற்றுலாக் குழுவோடு வந்த ஒருவனால் கருவுற்று, ஜானைப் பெற்றெடுத்தவள். அவளைக் கர்ப்பமாக்கியவன் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் இயக்குநர்தான் என்று பர்னார்ட் கண்டுபிடிக்கிறான். ஜான் பல ஆண்டுகளாக கிராமத்திலேயேதான் வாழ்கிறான் என்றாலும் ஊர் மக்கள் அவனை ஏற்கவில்லை. தனிமையில் வளர்ந்த அவனுக்குக் கிடைத்த இரண்டு புத்தகங்களே வழிகாட்டிகள். ஒரு புத்தகம்‘அறிவியல் கையேடு’, இன்னொன்று ‘வில்லியம் ஷேக்ஸ்பியர் படைப்புகள்’. எப்போதும் அந்தப் புத்தகங்களில் படித்தவற்றை மேற்கோள் காட்டிப் பேசுவான். லிண்டா, தான் பிறந்த ஊருக்குத் திரும்ப விரும்புகிறாள். அவள் எப்போதும் புகழ்ந்து பேசும் புதிய உலகத்தைக் காண ஜான் ஆசைப்படுகிறான். பர்னார்ட், தான் நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, இருவரையும் லண்டனுக்கு அழைத்துச் செல்கிறான். லண்டனில், லிண்டாவைத் தாயாக்கிய நிறுவன இயக்குநரை ஜான் சந்திக்கிறான். “அப்பா” என்று அழைக்கிறான். செயற்கைக் கருத்தரிப்பு மட்டுமே நடைமுறையில் உள்ள ஊரில் அவன் இப்படி அழைப்பதைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். இந்த அவமானத்தால் இயக்குநர் பதவி விலகுகிறான். புதிய ஊரில் பண்டைக்கால மனிதனாக ஜான் புகழ் பெறுகிறான். அவனுடைய பாதுகாவலனாக பர்னார்ட் முன்னிலை பெறுகிறான் என்றாலும், படிப்பார்வம் கொண்ட ஜானுக்கு எழுத்தாளரான ஹெல்ம்ஹோல்ட்ஸ் மீது மட்டுமே அன்பும் மரியாதையும் இருப்பதைக் கண்டு பொறாமைப்படவும் செய்கிறான். லிண்டா மறுபடி சோமா பானத்தில் மூழ்குகிறாள். ஜான், லெனினா இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவளைப் பிடித்திருந்தாலும், தன்னிச்சையான பாலியல் வாழ்க்கையை ஜான் ஏற்க மறுக்கிறான். லெனினா அவனைக் கவர முயலும்போது, அவன் அவளைக் தாக்குகிறான். லிண்டா மரண படுக்கையில் கிடக்கும் தகவல் வருகிறது. தாயைப் பார்க்க ஜான் மருத்துவமனைக்குச் செல்கிறான். செயற்கையான அந்த இலட்சிய உலகத்தில், மரணம் பொருட்படுத்தத் தேவையில்லாத நிகழ்வாகக் கற்பிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். இறப்பவர்களின் வலிகளும் அவர்களைச் சார்ந்தோரின் உணர்வுகளும் அலட்சியப்படுத்தப்படுவது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தில் ஒருவரை அடித்துவிடுகிறான். அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகிறான். அடித்தட்டு மக்களுக்கு சோமா விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முயல்கிறான். ஏற்கெனவே அதன் மயக்கத்தில் கிடக்கப் பழக்கப்படுத்தப்பட்டவர்கான அவர்கள் கலவரம் செய்கிறார்கள். காவல்துறையினர் மக்கள் மீது ‘சோமா’ நுரை பீய்ச்சி அமைதிப்படுத்துகிறார்கள். பர்னார்ட், ஹெல்ம்ஹோல்ட்ஸ், ஜான் மூவரும் முஸ்தபா மோண்ட் என்ற உயரதிகாரியின் முன் நிறுத்தப்படுகிறார்கள். சமூகச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக அவர்களை நாடுகடத்தித் தீவுகளுக்கு அனுப்ப இருப்பதை மோண்ட் தெரிவிக்கிறார். பர்னார்ட் மேலும் ஒரு வாய்ப்பளிக்கக் கோருகிறான். ஆனால் ஹெல்ம்ஹோல்ட்ஸ் தீவு வாழ்க்கையில் தனிமனிதச் சுதந்திரத்துடன் இருக்கலாம், பலவகை மனிதர்களைப் பார்க்கலாம், புதிது புதிதாக எழுதலாம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த முடிவை ஏற்கிறான். நாடுகடத்தல் உனக்கு ஒரு பரிசுதான் என்று அதிகாரியும் கூறுகிறார். ஜானிடம் மோண்ட் தற்போதைய சமுதாயம் உருவானதன் பின்னணிகளைக் கூறுகிறார். சாதிப் பிரிவினைகள் தேவை என்று வாதிடுகிறார். அந்த வாதங்களை ஏற்க மறுக்கும் ஜான், மகிச்சியின்றி வாழும் உரிமையைக் கோருகிறான் என்று மோண்ட் அறிவிக்கிறார். தன்னையும் ஏதாவது ஒரு தீவுக்கு அனுப்ப வேண்டுமென்ற அவனுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. நாகரிக சமூகத்தின் ஒரே மாதிரியான வாழ்க்கையில் வெறுத்துப் போனவனாக ஜான் ஒரு குன்றின் கைவிடப்பட்ட கலங்கரை விளக்குக் கோபுரத்தில் நுழைந்து தனியாக வாழ்கிறான். நாகரிகம் எனப்படுவதிலிருந்து தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ள தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்கிறான். அந்தக் காணொளிப் பதிவு எங்கும் பரவ, அதை வேடிக்கை பார்க்க ஏராளமானவர்கள் கூடுகிறார்கள். ஊடகவியலாளர்களும் குவிகிறார்கள். ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து லெனினா இறங்கி வருகிறாள். தனது நேசத்துக்கும் கோபத்துக்கும் ஆளானவளை அவன் சவுக்கால் அடிக்கிறான், மறுபடியும் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறான். மக்கள் சோமா பருகி வெறியாட்டம் போடுகிறார்கள். மறுநாள், அந்த வெறியாட்டத்தில் கலந்துகொண்ட குற்றவுணர்வுடன் எழுகிறான் ஜான். மக்கள் அவனைப் பார்க்க வருகிறார்கள். அவனுடைய உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அரவணைத்த அங்கீகாரம் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு கண்டு உண்மையான மகிழ்ச்சி வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியாத சுரண்டல் வர்க்க அரசுகள் சாதி–மதப் பிரிவினைகளையும் சடங்குச் சம்பிரதாயங்களையும் போதை மயக்கங்களையும் பயன்படுத்திப் போலியான கொண்டாட்டத்தில் வைத்திருப்பதைக் கூண்டில் நிறுத்துகிற “துணிச்சலான புதிய நாவல்” இது. உலகெங்கும் இருக்கிற இலக்கியவாதிகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குரல்கொடுத்திராவிட்டால் இந்த நாவலை ஆளில்லாத் தீவுக்குக் கடத்தியிருப்பார்கள். அல்டஸ் லியோனார்ட் ஹக்ஸ்லே எழுதிய ‘டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்’ (நுண்ணுணர்வின் வாசல்கள்), ‘ஐலாண்ட்’ (தீவு) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நாவல்களையும் வழங்கியிருக்கிறார். துணிச்சலான புதிய உலகத்தைப் பகடி செய்யும் இந்த நாவல் எந்த அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதோ அதே அமெரிக்காவின் ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஐந்தாவது இடத்தை அளித்தது. ‘தி அப்சர்வர்’ பத்திரிகை வெளியிட்ட, அனைத்துக் காலங்களிலும் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இது 53வது இடத்தைப் பெற்றது. நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது, இரண்டு முறை திரைப்படங்களாகவும் வந்திருக்கிறது. நாவலாசிரியர் ஹக்ஸ்லே பற்றி ஒரு கூடுதல் தகவல்: சிறு வயதில் பார்வைத் திறனைப் பெரிதும் இழந்துவிட்டார். புத்தக வாசிப்புதான் அவருக்கு ஒரு துணையாக அமைந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஓரளவுக்குப் பார்வை மீண்டது. உலகத்தையும் நிகழ்வுகளையும் உற்றுப் பார்க்கிற மாற்றுத் திறனைச் செழுமையாக வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகில் நடைபோட்டார். அறிவியல் வளர்ச்சியின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் பற்றிய எச்சரிக்கை இரண்டும் அவரது எழுத்துகளில் வெளிப்படுகின்றன என்று திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். https://bookday.in/books-beyond-obstacles-aldous-huxley-brave-new-world-novel-oriented-article-written-by-a-kumaresan/#google_vignette
  2. பெரும்படை என்னும் குலதெய்வம் தி. செல்வமனோகரன் September 10, 2024 | Ezhuna ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, உயிரியம், மனா எனப் பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கியது. குறித்த இனக்குழு தன்னை, தன்னினத்தைக் காத்த வீரனை, உயிரியை, இயற்கையை தன் தெய்வமாக – என்றென்றும் தம்மைக் காக்கும் தெய்வமாக நம்பி வழிபடத் தொடங்கியது. அதுவே குலதெய்வ வழிபாடாயிற்று. இது பரம்பரை, சாதி, நிலம் எனப் பல தளங்களில் கட்டமைக்கப்பட்டது. ஆரம்ப காலத் தமிழர்களின் திணைக்கடவுள்கள், பிற்காலச் சாதியக் கடவுள்கள் என்பன இதற்குத் தக்க சான்றாகின்றன. குறித்த தெய்வம் ஆண்பாற் பெயரையோ, பெண்பாற் பெயரையோ கொண்டிருக்கும். திணை, பால், எண், இடம் கொண்டிராத பெயரையுடைய தெய்வம் அரிது. அவ்வாறான பெயரை உடைய தெய்வமே ‘பெரும்படை’ என்பதாகும். ஈழத்துப் புலத்தில் அதிகம் பேசப்படாத தெய்வங்களில் ஒன்றாக பெரும்படையும் காணப்படுகின்றது. பெரும்படை இயற்கைநெறி வாழ்வில் தமக்காக, இனக்குழுவிற்காக, உயிர் நீத்த வீரர்களை, வீர வணக்கம் செய்யும் முறை காணப்பட்டது. இந்த வீர வணக்க முறையானது சடங்கு, நினைவுச் சின்னம் எனும் இரு அடிப்படைகளை உடையது. போரில் இறந்த வீரர்களை வணங்குதல் என்ற அடிப்படையில்: “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண் றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே” எனும் இலக்கணத்தைத் தொல்காப்பிய புறத்திணையியல் எடுத்துரைக்கின்றது. காட்சி – போரில் இறந்த வீரருக்கு, நடுதற்கு ஏற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்; கால்கோள் – அக்கல்லைக் கொண்டு வருதலும் நாட்குறித்தலும்; நீர்ப்படை – அக்கல்லை நீராட்டுதல்; நடுதல் – உரிய இடத்தில் நடுதல்; பெரும்படை – கல்லில் வீரனது பீடு பொறித்தலும் மடை கொடுத்தலும்; வாழ்த்தல் – வணங்குதல் என்றாயிற்று. இங்கு ‘பெரும்படை’ என்பது யாருக்காகக் கல் நடப்படுகின்றதோ அதில் அவரது பெருமைகளை எழுதலும் ‘மடை’ கொடுத்தலும் என விளக்கப்படுகின்றது. பெரும்படை என்பது பொதுவில் ‘பெரியபடை’ என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. பேரரசுகளின் படை பெரும்படை எனப்பட்டது. அது பெரியதொரு கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே பல்வகைமையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் பெரும்படை சாஸ்த்தா, ‘ஸ்ரீ பெரும் படை சாஸ்தா’ எனும் சொல் முறைகள் காணப்படுகின்றன. தூத்துக்குடி இருவப்புரத்தில் பூர்ணா, புக்ஷ்கலவுடன் பெரும்படை சாஸ்தாவின் கோவில் உள்ளது. இதேபோல தமிழகத்து சாயர்புரம், அருணாபேரி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்படை சாஸ்தா கோயில் காணப்படுகின்றன. சாஸ்தா ‘ஐயனார்’ ஆவார். தமிழகத்தில் தூத்துக்குடி இருவப்புர பெரும்படை சாஸ்தாவே ஆதிக்கோயில்; இராஜராஜசோழன் காலத்தில் ‘வலங்கை மகா சேனை’ என்ற பெரும்படை இருந்துள்ளது. அப்படை இவ்விருவப்புரத்தில் தங்கி இருந்த காலத்தில் தம்மோடு கொண்டு வந்த சாஸ்தாவை இவ்விடத்தில் பிரதிக்ஷ்டை செய்து வணங்கியுள்ளது. பெரும்படை வீரர்களால் வைத்து வழிபடப்பட்டது என்ற அடிப்படையில் இது ‘பெரும்படை சாஸ்தா’ என அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. இங்கே பெரும்படை எனும் ஒரு தெய்வம் தனித்து இல்லை. இவ்வாறான ஒரு கருத்தாடல் யாழ்ப்பாணத்து வேலணையிலும் உண்டு. வேலணைத் துறையூரில் இருக்கும் இலந்தைவனம் ஹரிஹர புத்திர ஐயனார் பெரும்படையோடு கந்தவனக் கடவை சென்று தங்கி வருவதான நம்பிக்கை காணப்படுகின்றது. அதனால் வேலணை கிழக்கு அரசபுரம் ஐயனார் ‘பெரும்படை ஐயனார்’ எனப்படுகின்றார். அதேவேளை ‘பெரும்படை’ தனித்தெய்வமாக ஈழத்தில் வழிபடப்படுகின்றது. ஈழத்துப் பெரும்படை தெய்வம் ஈழத்தின் வடபுலத்தில் இரு மாவட்டங்களாகவும் தேர்தல் மாவட்டமாக ஒன்றாகவும் காணப்படுவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களாகும். தென்மராட்சிக்கும் கிளிநொச்சிக்குமான உறவு நீர், தரை எனும் இருவழிகளாலும் ஆனது. கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கச்சாய், கெற்பலி என்பன குடாநாட்டின் கடல் நீரேரியில் வடக்குத் தெற்குக் கரையோரக் கிராமங்கள். அக்கடல் நீரேரி பரந்தன் வரை நீள்கிறது. அது போலவே கேரதீவுப் பாதையில் இணைக்கப்பட்ட கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கேரதீவு, வெட்டக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, ஆலங்கேணி, சாமிப்புலம், குஞ்சுப்பரந்தன் பழைய சுட்டதீவு, புதிய சுட்டதீவு எனும் கரையோரக் கிராமங்களில் பெரும்படை தனித்தெய்வமாக வழிபடப்படுகிறது. கேரதீவு, பரம்பராய் ஆகிய கிராமங்களில் ஐயனாரோடு இணைத்துத் தனித்தெய்வமாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். எழுநாவில் வெளிவந்த ‘சேவகர்’ தெய்வம் பற்றிய கட்டுரையை வாசித்து விட்டு சாவகச்சேரியைச் சேர்ந்த மார்க்கண்டு அவர்கள் ‘பெரும்படை’ தெய்வம் பற்றி எமக்குக் கூறினார். அதன்வழி மாணவ நண்பர்கள் திரு S. தாரங்கன், செல்வி S. தாட்சாயினி ஆகியோரின் உதவியோடு கள ஆய்வில் ஈடுபட்டோம். யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட இக்கிராமங்களுக்குச் சென்று நேரடியாக ஆலயங்களைத் தரிசித்தபோது சில பொது அம்சங்களை அவதானிக்க முடிந்தது. 1. பெரும்படைத் தெய்வத்தின் இக்கோயில்கள் யாவும் கடற்கரையை மிக அண்மித்தே அமைந்துள்ளன. 2. இவை யாவும் கடலால் உட்கொள்ளப்பட்ட விவசாய – நெல் உற்பத்தி நிலங்கள்; வற்றுகடல்கள். 3. இக்கோயில்களுள் சில பெருங்கோயிற் பண்பாட்டியலுடன் கட்டப்பட்டாலும் ‘பூசாரி’களே பூசை செய்கின்றனர். 4. பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்யப்படுகின்றது என்ற ஒற்றை வரியைத் தவிர வரலாறு எதுவும் அறியப்படாத கோயில்கள். 5. முக்குவர் சமூகத்தவர்களின் குலதெய்வக் கோயில்களாகவே இவை காணப்படுகின்றன. 6. எந்தக் கோயிலிலும் காலங்காலமாக உயிர்ப்பலி, மட்சப் படையல் எதுவுமில்லை. இது சேவகர் வழிபாட்டை ஒத்துள்ளது. 7. பெரும்படைத் தெய்வம் உருவமற்றது; அரூப வழிபாடும் கல் வைத்து வழிபடும் முறையுமே பெருவழக்ககாக உள்ளது. கோயிலாக்கண்டி, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, குஞ்சுப்பரந்தன் புதிய சுட்டதீவு, பழைய சுட்டதீவு, ஆலங்கேணி, கெற்பலி ஆகிய இடங்களில் ஒவ்வொரு கோயில்களும் ஞானிமடத்துக்கு அப்பால் நாகதேவன் துறையை அண்மித்து தெருவின் இருபுறமும் இருகோயில்கள் உள்ளன. அதே போல கச்சாயில் மணற்பிட்டி சடவத்தியில் ஒரு கோயிலும் கச்சாய் துறைமுகத்தில் இருந்து 2 Km படகுப் பயணத்தில் அமைந்துள்ள சாளம்பன் தீவில் ஒரு கோயிலும் உள்ளது. இவை தவிர தனங்கிளப்பில் இருந்த பெரும்படை ‘அம்மன்’ கோயிலாக மாறிவிட்டது. சங்குப்பிட்டி, பரமன்கிராய் எனுமிடங்களில் உள்ள ஐயனார் கோயில்களின் பரிவார தெய்வமாக பெரும்படை உள்ளமை குறிப்பிடத்தக்கது. வெட்டுக்காடு பெரும்படையும் பரமன்கிராய் ஐயனாரும் பரமன்கிராய், வில்லடி மேற்கு ஐயனார் கோயில் பூசாரியான சதாசிவம் சிவகுருநாதன் பெரும்படை, ஐயனார் தெய்வங்களின் வருகைக்கான ஐதீகக் கதையை கீழ் வருமாறு கூறினார்: “பேய்க்கப்பல் ஒன்று கடல் வழியாக இந்தப் பிராந்தியத்தை நோக்கி வந்தது. கௌதாரி முனையின் ஏழாத்துப்பிரிவில் மடை வைத்து தம்மைக் காக்குமாறு மக்கள் வேண்டினர். கொழும்புத்துறையிலிருந்து கடல் வாய்க்கால் வழி ஏழாத்துப் பிரிவுக்குப் பாதை இருந்தது. அப்போது எறியப்பட்ட இடம்புரிச்சங்கு, வலம்புரிச்சங்குகள் விழுந்த இடங்களே முறையே வில்லடி மேற்கு, வெட்டுக்காடு ஆகியனவாகும். தெங்குறுப்பிட்டி சுடலையில் உள்ள பாலைமரத்தில் அச்சங்கு தெரிவதாகக் கூறி பலர் அதனை எடுக்க கோடாரியுடன் சென்று பார்த்த போது அதனைக் காணவில்லை. இப்படி பலர் பல தடவை ஏமாந்துள்ளனர்.” மேற்படிக் கதையை வெட்டுக்காடு தெங்குறுப்பிட்டி பெரும்படை ஆலயப் பூசாரி கார்த்திகேசு பஞ்சாட்சரம் இவ்வாறு கூறினார்: “கொள்ளை (நோய்)க் கப்பல் ஒன்று இப்பிராந்தியத்துக்கு வந்தது. அக்கொள்ளை நோயிலிருந்து தப்ப இரு சங்குகள் எறியப்பட்டன. ஒன்று தெங்குறுப்பிட்டியில் விழுந்து பெரும்படையாகவும் மற்றையது வில்லடியில் விழுந்து ஐயனாராகவும் நின்று அருள் பாலிக்கின்றன. அத்தெய்வங்களால் கொள்ளை நோய்க் கப்பல் உடைக்கப்பட்டது. அந்த இடம் இன்றும் ‘கப்பல் உடைந்த வாய்க்கால்’ எனப்படுகின்றது. கொள்ளிவாய்ப் பேய்கள் காலை இழுத்து இழுத்துச் சென்றதால் அந்த வாய்க்கால் ஏற்பட்டது என்றும் கதை உண்டு.” இவ்விருவரது கருத்துப்படியும் சங்கு விழுந்த இடங்களில் ஐயனாரும் (வலம்புரிச்சங்கு) பெரும்படை தெய்வமும் (இடம்புரிச் சங்கு) உருவாயின. தமிழகப்புலத்தில் சோழர் காலத்தில் சாதியை வலங்கை, இடங்கை எனப் பகுத்துரைத்துள்ளனர். அரசின் வலங்கை வருபவர், இடங்கை வருபவர் என இச்சாதிகள் சுட்டப்படுகின்றன. இச்சாதிகளை சார்ந்த வீரர்கள் வலங்கை வீரர், வலங்கைப்படை, இடங்கை வீரர், இடங்கைப் படை என அழைக்கப்பட்டனர். வலங்கைச் சாதியினருள் (வலம்புரிச்சங்கு) ஒருவரான வேளாளரினால் ஐயனாரும் இடங்கைச் சாதியினரான (இடம்புரிச்சங்கு) முக்குவரர்களால் பெரும்படைத் தெய்வமும் இன்று வரை ஆதரிக்கப்பட்டு வருவதையும், பெரும்படைத் தெய்வம் பற்றிய கதையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டாளர்கள் இக் கதையையே சிறிது சிறிது வித்தியாசத்தில் கூறுவதையும் அவதானிக்க முடிந்தது. முக்குவர்களின் காவல் தெய்வமாக, குலதெய்வமாக பெரும்படை இன்றும் நின்று நிலைக்கின்றது. ஐயனாருக்கும் பெரும்படைக்கும் இடையிலான வழிபாட்டு உறவு இவ்விரு கோயில்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டமெடுத்தல், முத்தரிசி பெறல், பவனி பாடல் என்பன ஒன்றாகவே நடைபெற்றுள்ளன. இவ்விரு இனக் குழுக்களும் இணைந்தே இக் கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளனர். ஐயனார் கோயிலில் கொடிமரம் நடுதல், பலியிடல் நடைபெற்றன. ஐயனார் கொடிமரம் சாய்த்தலின் பின் பெரும்படையில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. ஐயனாருக்கு பெரும்படைப் பூசாரியும் பெரும்படைக் கோயிலுக்கு ஐயனார் பூசகரும் சென்று இணைந்து பூசை செய்துள்ளமை சாதி கடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரப்படுத்துகின்றன. ஆயினும் இச்செயல்முறைகள் இன்று குறைவடைந்து வருகின்றன. பவனி வரும் போது ‘21’ பாடல்கள் பாடப்பட்டதாகவும் அவ்வேடுகள் தொலைந்து விட்டதாகவும் ஐயனார் கோயில் பூசாரி தெரிவித்தார். இதையொத்த கதையையே யுத்தத்தால் ஏற்பட்ட பெயர்வுகளால் சுவடிகள் தொலைந்தன என கறுக்காய்தீவு பெரும்படைக் கலையாடி பொன்னம்பலம் மயில்வாகனமும் தெரிவித்தார். ஆயினும் ஐயனார் கோயில் பூசாரி தனது ஞாபகத்தில் இருந்த ஐயனார் பாடல்கள் பத்தை எழுதி வைத்துள்ளார். வெட்டுக்காடு பெரும்படை பூசாரி கா. பஞ்சாட்சரம் அப் பத்துப் பாடல்களோடு பெரும்படை பற்றிய நான்கு பாடல்களையும் இணைத்துப் பதிப்பித்துள்ளார். அப்பாடல்களில் “தர்மனே செங்கண்மால் தரு பெரும்படையே” என்றே ஈற்றடிகள் ஆண்பால் கொண்டவையாய் அமைந்துள்ளன. ஆனால் இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கோயிலாக்கண்டியைச் சேர்ந்த விஜிகரன் தனது வீட்டுக்கருகில் இருந்த வயோதிப மாது ‘பெரும்படைக் கிழவா’ என்று பெருங்குரலில் தெய்வத்தை அழைத்து வணங்குவதாக தெரிவித்தார். பெரும்படைத் தெய்வம் பற்றிய கதை பெரும்படைத் தெய்வம் இரண்டு வகை உடையது. ஒன்று, வெற்றிப் பெரும்படை; மற்றயது, வீரப் பெரும்படை. இராமாயணத்தில் ‘இராவணரோடு இருந்தவள்’ என்று மக்கள் பேசியதால் சீதையை வனத்தில் விடுவித்தான் இராமன். இதனை “வண்ணாரின் மொழி கேட்டு, வனம் விடுத்த சீதை தனை” என நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடுவார். கர்ப்பமுற்றிருந்த சீதை வனத்தில் ‘லவன்’ எனும் ஆண்மகவைப் பெற்றிருக்கின்றாள். ஒருநாள் அக்குழந்தையை விசுவாமித்திர முனியின் பொறுப்பில் விட்டுவிட்டு நீரெடுக்கக் குளத்துக்குச் செல்கிறாள். செல்லும் வழியில் குரங்கு தன் மகவை நெஞ்சோடு அணைத்தபடி தான் செல்லுமிடமெங்கும் கொண்டு செல்வதைக் கண்டு, “இக்குரங்குக்கு இருக்கும் பாசம் தனக்கு லவன் மீது இல்லாமல் போய்விட்டதே” என எண்ணித் துயருற்று ஓடிப்போய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குளத்துக்குச் சென்றாள். இதனையறியாத விசுவாமித்திரர் குழந்தையைக் காணாது பதறி, செய்வதறியாது திகைத்து, பின் தேறி, தருப்பைப் புல் ஒன்றை எடுத்துத் தன் தவ வலிமையால் லவன் போல் ஒரு குழந்தையை உருவாக்கினார். இதையறிந்த சீதை மகிழ்வோடு அக்குழந்தைக்கு ‘குசன்’ எனப் பெயரிட்டு வளர்த்தாள் என்றும் கூறப்படுகின்றது. அதில் சீதையின் மகனான லவனே வெற்றிப் பெரும்படை; அம்மூர்த்தமே மூலஸ்தானத்தினுள் (சாளம்பன் தீவு, ஆலங்கேணி சாமிப்புலம்) இருக்கிறது. வெற்றிப் பெரும்படை பரிவார மூர்த்தியாக வெளியில் இருக்கிறது. வெற்றியீட்டியவன் தலைவனாகி அரசுக் கட்டிலில் ஏறுவதும் துணை நின்றவன் வீரனாகி காவற்கு நிற்பதும் மனிதகுல வரலாறு முழுவதும் இடம்பெறும் விடயம் தான். வழிபாட்டு முறைகள் பொதுவாகப் பெரும்படைக்கான பூசை வழிபாடு சனிக்கிழமைகளிலேயே நடைபெறுகின்றது. ஊர் வழக்கில் ‘சனியும் புதனும் சாத்திரத்திற்குரிய நாள்’ என்பர். ஆயினும் தத்தம் வசதிக்கேற்ப வெள்ளி, ஞாயிறு தினங்களிலும் விளக்கு வைப்பர். நித்தியா பூசையும் உண்டு. ஆனால் படகுப் பாதையை மட்டும் கொண்டுள்ள கச்சாய், சாளம்பன் தீவு பெரும்படைத் தெய்வத்துக்கு பௌர்ணமி நாளிலேயே பூசை இடம் பெற்று வருகிறது. பெரும்பாலான கோயில்களில் பங்குனி உத்திரம், வைகாசிப் பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அது ‘வேள்வி’ என அழைக்கப்படுகிறது. வெட்டுக்காடு, தெங்குறுப்பிட்டி பெரும்படை கோயிலிலும் ஐயனார் கோயிலிலும் இணைந்த வழிபாட்டு முறை உள்ளது. முன்னைய காலத்தில் பொங்கலுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ‘நாள் காசு’ எடுத்தல் நிகழ்வு இடம்பெறும். ஐயனார்க்கு பெரும்படை கோயில் சார்ந்தவர்களும், பெரும்படைக்கு ஐயனார் கோயில் சார்ந்தவர்களும் நாள்காசு பெறுவர் என்றும் பின்பு சந்தையில் அவற்றைப் பரிமாற்றம் செய்து ‘வளந்துப்’ பொருட்களை வாங்குவர் என்றும் ஐயனார் கோயிலின் பூசாரி கூறினார். சமூக ஒற்றுமையைப் புலப்படுத்தும் இச்செயற்பாடு இன்று அருகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த ஆலயங்களுக்கான வாழைக்குலை முதலியன படகுவழி நாகதேவன் துறைக்கு வந்து பின் வண்டிலில் கொண்டு வந்ததை அறிய முடிகின்றது. அக்கால வணிக, போக்குவரத்து விடயங்கள் இதன் வழி ஆவணப்படுத்தப்படுகின்றன. ஐயனாரில் திருக்கொண்டல் மரம் கொடிமரமாக நாட்டியபின் ஒவ்வொரு வீட்டிலும் பந்தலிடப்படும். இரு ஆலயப் பூசகர்களும் வேறுசிலரும் ‘பவனி படித்தபடி’ (ஆலயப்பாடல்கள்) வருவர். அதன் போது பறை, உடுக்கு, சங்கு, சல்லாரி போன்றவை இசைக்கப்படும். ஒவ்வொரு வீட்டாரும் அரிசி, பண்டம் இடுவர். இச்செயல்முறை ‘முத்தரசி’ தண்டல் எனப்படும். இத்தண்டல் பெரும்பாலான பெரும்படைக் கோயில்களில் நிகழ்ந்துள்ளன. இன்று இக்கூட்டு வழிபாட்டுமுறை அருகிவிட்டது. ஒரு முழு இரவு பவனி வந்தபின் காலையில் அன்னதானம் வழங்கப்படும். இரவு பொங்கல், படையல் இடம்பெறும். பெரும்படைக்கான மடையில் பொங்கலில் பல்வேறு வகையான பலகாரங்கள் குவித்து வைக்கப்படும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நிறைவாக வைக்கப்படும். பெரும்படைத் தெய்வத்துக்கு நீத்துப்பூசணிக்காய் வெட்டுதலே பலியிடலாகக் கருதப்படுகின்றது. மடை வைப்பும் பூசையும் நடைபெறும் போது கலையாடல் நடைபெறும். பெரும்படைத் தெய்வத்தோடு குறைந்தது பத்து வரையான வேறு தெய்வங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குத் தனித்தனிப் பந்தல்கள் போடப்பட்டிருக்கும். பல்வேறு சாதிகளின் குலதெய்வங்களுக்கு அங்கு இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதும், மடைபரவி வணங்குவதும் ஏற்றத்தாழ்வற்ற சமூக ஒழுங்கை, தொழில்சார் பாகுபாட்டை மட்டும் காட்டுவதாக அமைகிறது. ஐயனாரோடு இரு மனைவியர் (பூரண, புட்கல), கண்ணகி, நாக தம்பிரான், முருகன், பிள்ளையார், நாச்சிமார், முத்துவைரவர், வைரவர், முன்னோடி, குறிப்பன், மாரி, காத்தவராயன், கன்னிமார், முனியப்பர், விறுமர் போன்ற இன்னும் பல தெய்வங்களை பரிவாரங்களாகக் கொண்ட தெய்வமே பெரும்படை. இதனால் இவ்வாலய வழிபாடுகளின் போது பல தெய்வமாடிகள் தெய்வங்கள் ஏறிக் கலையாடுவர். குறி சொல்லுதலும் உண்டு. நோய்நீக்கம், துன்பநீக்கம் போன்றவற்றிக்காக – சுகவாழ்வுக்காக பக்தர்களுக்கு தெய்வமாடிகள் ‘திருநீறு போட்டு’ ஆசீர்வதிப்பார். வளந்து எடுத்தல், மடைபரவுதல் என்பதில் ஆலயத்திக்கு ஆலயம் வேறுபாடு உண்டு. உதாரணமாக கறுக்காய்த்தீவில் மார்கழி மாதம் வழந்தெடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. வளந்துப் பானையை கறுக்காய் தீவு மேற்கெல்லை பூவரச மரக்கொப்பில் கட்டி வைப்பர். கிழக்கெல்லை கந்தசாமி கோவில் பூவரசு மரத்தில் மற்றையதைக் கட்டி வைப்பார். அது மூடியால் மூடி நீர்புகா வண்ணம் கட்டப்பட்டிருக்கும். பின்பு பங்குனி மாதம் அதனை எடுத்துப் பொங்கிப் படைப்பர். கடல்கோள் அதிகம் வாய்ப்புள்ள அத்தீவில் உயரமான மரத்தில் வளந்துக்கான முத்தரசியைக் கட்டி வைத்தல் ‘உணவுப் பஞ்சத்தில் இருந்து காக்கும்’ நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இதே போல கோயிலாக்கண்டியின் வளந்தெடுக்கும் முறையும் தனித்துவமானதாகும். பெரும்படை ஆலயங்களில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் வழுந்துப் பானை வைக்கப்படும். நீண்ட வெள்ளைத் துணியின் மேல் அவை வைக்கப்பட்டு கற்பூரம் ஏற்றல் நடைபெறுகின்றது. பூசை செய்யப்பட்டு பொங்கல் அடுப்பு வைக்கப்பட்டு பொங்கல் நடைபெறும். இவ் விழாக்களுக்கான கொடி கட்டல் நடைபெற்ற காலங்களில் தெய்வங்கள் பண்டங்களுக்கு காவல் காக்கும் என்பதால் பெண்கள், சிறுவர்கள் மாலைப்பொழுதின் பின் ஆலயச் சூழலுக்குச் செல்வதில்லை. தற்போது இந் நம்பிக்கைகள் குறைந்துவிட்டன. பெரும்படைக்கு பலியிடல் இல்லை எனினும் காத்தவராயருக்கு சாராயப் படையலும் முனி, அண்ணமார், விறுமர் போன்ற தெய்வங்களுக்கு ஆலங்கேணி சாமிப்புல பெரும்படைக் கோயிலிற்குப் புறம்பாகத் தனிமண்டபம் அமைத்து (மறைவாக) பலியிடல் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அக்கோயிலில் கார்த்திகை, தை மாதங்களில் கடல் நீரேரியில் மூன்று கிலோமீற்றர் சென்று மடைபரவுதல் நடைபெறுகின்றது. இது ‘தண்ணீரில் பல காவல் மடைபரவுதல்’ எனப்படுகின்றது. ஆயினும் “கன்னாவும் ஆடு தின்னாப்பாலையும் சிக்கி நிக்கும் இடத்தில் மடை பரவுக” எனக் கனவில் தெய்வம் கூறியதாகவும் தற்போது அவ்விடத்திலேயே மடையிடுவதாகவும் ஆலயத் தலைவர் பொன்னையா கந்தையா எமக்குரைத்தார். இத்தெய்வத்துக்கு காவடி எடுத்தல் முதலான நேர்த்திகளும் செய்யப்படுகின்றன. நீர்ச்சோறு வழங்கும் முறை பொருளாதார மற்றும் காலநிலை சார்ந்ததாக அமைந்துள்ளது. பெரும்படைக்கு மந்திரமோதி பூசை செய்யும் மரபும் சில கோயில்களில் உள்ளன. கோயிலாக்கண்டி கோயில் வரலாற்றில் தற்போது உள்ள கோயிலுக்கும், சமாதிக்கும் இடையில் இருந்த ஆலமரத்தினடியில் லிங்கத்தை ஒத்த கல்லிருந்தது. அதனை எடுத்து வழிபடுமாறு தெய்வம் உரைத்ததாகக் கூறப்படுகிறது. இது நடுகல்லாகவோ கந்துவாகவோ இருந்திருக்கலாம். நல்லதம்பி அவர்கள் அதனை எடுத்து ஆதரித்ததாகவும் அவரது கன்னிமார்த் தெய்வம் நாக்கில் கீறி மந்திரம் உபதேசித்ததாகவும் அதிலிருந்து மந்திர வழிபாடு நிகழ்ந்து வருவதாகவும் அவ்வாலயப் பூசகர் கனகரத்தினம் துரைநாதன் கூறினார். ஆயினும் அம்மந்திரத்தை எமக்குரைக்க மறுத்துவிட்டார். அற்புதங்கள் வெட்டுக்காடு பெரும்படைத் தெய்வம் தொடர்பான பேய்க்கப்பல் அல்லது கொள்ளை நோய்க் கப்பல் விரட்டல் கதை அற்புதமாக பல ஆலயங்களிலும் சொல்லப்படுகிறது. அது தவிர ஆலங்கேணி சாமிப்புலத்தில் மட்டும் நிகழ்ந்த வழிபாட்டால் அந்த ஊர் மட்டும் கடல் புகாது தப்பியதால், தற்போது கட்டுக்கரையிலிருந்து குடமுருட்டி வரை பொங்கல் நடைபெற்ற பின்பு இறுதியாக பெரும்படைப் பொங்கல் ஆனியில் நடைபெற்று வருகின்றது. வெட்டுக்காட்டில் யுத்தகாலத்தில் இராணுவம் இரவு நேரத்தில் சென்ற வெளிச்சத்தைச் சுட்டதாகவும் அடுத்த நாள் சுட்ட இராணுவ வீரர் திடீரென மரணமடைந்ததாகவும் அதன் பின் அந்த முகாம் வீரர்கள் இன்றுவரை ஆலயத்தில் வழிபடுதலும் நேர்த்தி வைத்தலும் செய்வதாக ஆலயப் பூசாரி தெரிவித்தார். அதேபோல நிசாப்புயல் காலத்தில் கறுக்காய்த்தீவு பெரும்படைக்கு வைத்த நேர்த்தியால் உப்பு நீர் ஊருக்குள் புகவில்லை என்றும் அயல் ஊர் அனைத்தும் உப்புநீர்க் காடாயிற்று என்றும் பூசாரி கூறினார். கடற் தொழிலாளர் வருவாய் பெரும்படையின் (சாமிப்புலம்) அருளினால் நிகழ்வதாகவும், வைத்த மடையில் குறை இருந்தால் ‘கஞ்சல் கசாளங்களே’ அகப்படும் என்றும், குறை நீக்க மீள மடை செய்யின் மீன்பிடி சிறக்கும் என்றும் ஆலயத் தலைவர் கூறினார். பொதுவில் “பெரும்படைத் தெய்வத்துக்கு மடை வைத்து அண்டாது” என்ற கருத்தும் சொல்லப்படுகின்றது. சில அவதானிப்புகள் • முக்குகர் குலத்தெய்வமாக கடல் நீரேரியை அண்மித்து கடலோரத்தில் உள்ள இத்தெய்வ வழிபாடு, இராமனின் நண்பனான குகன் வம்சத்தவரால் இராமனின் பிள்ளைகளான லவ (வெற்றிப்பெரும்படை), குச (வீரப்பெரும்படை) ஆகியோர் வழிபடப்படுவதாக அமைகிறது. • கொள்ளை நோய் நீக்கம், பகைவிரட்டல் எனும் வீரச் செயல்களோடு தொழில் விருத்திக்குமான வழிபாடாக உள்ளது. • பிட்டி, இடுகயிறு என்பன முக்குகரின் அடையாளங்கள் என ‘வலங்கை, இடங்கை சாதியர் வரலாறு’ எனும் நூலில் கூறப்படுகின்றது. பெரும்படைக் கோயில்களும் தெங்குறுப்பிட்டி, கச்சாய், மணற்பிட்டி, சாணம்பன் தீவு எனும் பிட்டி போன்ற இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. • நெய்தலும், மருதமும் இணைந்த வாழ்புலத்தின் வழிபாடாகவே இது அமைந்துள்ளது. • குறிப்பாக கடல் கொண்ட வயல் நிலங்களை அண்மித்ததாக ‘தப்புத்தண்ணிக்’ கடலோரக் கோயில்களாக அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. • தமக்கேயான தனித்துவமான கதைகளையும் பரிவார அல்லது இணைத் தெய்வங்களையும் கொண்டவையாக இவ்வாலயங்கள் காணப்படுகின்றன. • மரபு மணம் மாறாதவையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. • பெரும்படைத் தெய்வம் உடனுறை பிள்ளையார் கோயிலாக சில கோயில்கள், (கச்சாய் மணற்பிட்டி சடவத்தி கோயில், ஆலங்கேணி சாமிப்புலக் கோயில்) மாறி வருகின்றன. • இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுதல் பெரும்படையின் வரலாற்று உரையாடலின் தேய்வையும் மேனிலையாக்கத்தையும் காட்டுகின்றது. • பல சாதிகளும் இணைந்ததான வழிபாட்டுமுறை சிதைந்து வருதலும் பௌதிகக் கட்டுமானமே முதன்மை பெறுதலும் இடம்பெற்று வருகின்றது. முடிவுரை ஐயனாரின் பரிகாரத்தின் தலைவன் என்று பெரும்படை பற்றிக் கூறப்படுகிறது. எல்லா இடங்களிலும் ‘வெற்றி’ மூலவிடத்திலும், ‘வீரம்’ வெளிப்புறத்திலும் தெய்வமாக்கப்பட்டுள்ளது. வெற்றியை வீரமே தக்க வைப்பதாக இதனைக் கொள்ளலாம். அரூபக் கடவுளாக, பால் வேற்றுமை அற்ற தெய்வமாகக் காணப்பட்ட பெரும்படை இன்று ‘அம்மன்’ ஆக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் மாறி வருகின்றன. சாதிய ஒற்றுமை குறைவடைந்துவிட்டது. ஆயினும் பழமையான பூசாரி வழி வழிபாடு அவ்வண்ணமே காணப்படுகிறது. ஆகமமயப்படாத சுய வழிபாட்டு முறை சிறப்பாக இடம்பெறுகின்றது. ஈழத்தில் மட்டக்களப்பிலேயே முக்குவர்கள் அதிகம் இருப்பினும் அங்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் நவாலி, தொல்புரம், காரைநகர் உள்ளிட்ட வேறு இடங்களிலோ இத்தெய்வ வழிபாடு இல்லை. கடல் நீரேரியைச் சுற்றியே காணப்படும் ‘நிலவியல்’ தெய்வம் இது எனலாம். பெரும்படைக் கோயில்களில் படையாகப் பல தெய்வங்கள் சூழ இருப்பதும் பெரும்படை எனும் சொல் பால், திணை வேறுபாடு இல்லாத ஒன்றாக இருப்பதும் இதனை ஒரு கூட்டு வழிபாடாகக் கொள்ள வைக்கிறது. பல் தெய்வங்கள் ஒருங்கே ஓரிடத்தில் வழிபடப்படுகின்ற – பல சாதி மக்கள் ஒருங்கே திரள்கின்ற இடமாக இது இருப்பது ஒரு ‘திரட்சி’ வழிபாடாக இதனைக் கருத இடமளிக்கின்றது. யாழ்ப்பாணச் சாதியத்தை முக்குவர் நோக்கு நிலையில், தம்மை மூலத்தில் வைத்து, ஏனைய சாதிகளையும் தெய்வங்களையும் ‘அடுக்குப்’ பண்ணுகின்றதான முறையில் இக்கோயில்களின் அமைப்புமுறை இருப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகின்றது. https://www.ezhunaonline.com/a-family-deity-called-perumpada/
  3. 500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை May 3, 2025 11:36 am 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். https://oruvan.com/action-to-induct-500-tamil-police-officers-into-service/
  4. இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழரின் காணிகளுக்கும் ஆபத்து; வடக்கில் அரசு ஆக்கிரமிக்கப் போகும் 5940 ஏக்கர் காணிகள் புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது.இதற்கமைய வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை அரசு ஆக்கிரமிக்கப்போகின்றது.இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத்தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஜனாதிபதி சட்டத்தரணி இது தொடர்பில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கும் அவசர கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளைக்கபளீகரம் செய்யும் விதத்தில்அரசு விடுத்துள்ள வர்த்தமானிஅறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம்28ஆம் திகதி வரை காலக் கெடு விதித்திருக்கும் சுமந்திரன்,அரசு இந்த விடயத்தில் வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் 28 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப்போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த அரசு வர்த்தமானி யூடாக எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை வெற்றிலைக்கேணியில் உள்ள பொது மண்டபத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்து அவசர கோரிக்கை விடுத்து ,அரசியும் எச்சரித்துள்ள சுமந்திரன் மேலும் கூறுகையில், ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதிகளாக இருக்கும் போது அவர்களது காணிகளை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது இந்த காணி நிர்ணய கட்டளைச் சட்டம் என்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1931 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதிலே யாரும் பயன்படுத்தாத தரிசு நிலக் காணிகள் அரச காணிகள் என சொல்லப்பட்டுள்ளது. யாராவது காணிகளை உபயோகித்து விட்டு கைவிட்டிருந்தால் இந்த சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பூர்வாங்க அறிவித்தல் பிரசுரிக்கலாம். அந்த பூர்வாங்க அறிவித்தால் பிரசுரித்து மூன்று மாத காலத்தில் காணி உரிமை உள்ளவர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முன்வைக்காது விட்டால் அக்காணி அரச காணியாக பிரகடனப் படுத்தப்படும். இதுதான் கணி காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விடயம். உறுதி உண்டு என்று கோரிக்கை விடுத்தால் அந்த ஆவணங்களை சோதித்துப் பார்த்து உறுதி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அக் காணி விடுவிக்கப்படும். இவ்வாறான நிலையில் இங்குள்ளவர்கள் தாங்கள் பாவிக்கும் காணி தொடர்பான கோரிக்கைகளை எழுத்து மூலமாக முன்வைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப் பிரதேசத்திலே பலகாலம் பாரிய இடம் பெயர்வு நடந்தது.இதனால் காணி உறுதிகள் இல்லாமல் போயிருக்கலாம். காணி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்படாது இருந்திருக்கலாம். காணி உறுதி உரிமையாளர் பல காலத்துக்கு முன்னால் இறந்திருக்கலாம். இவ்வாறாக நீண்ட இடைவெளி இருக்கின்ற நிலையிலே இதில் உரிமை இருப்பது ,உறுதி இருப்பது என்று என்று சொல்வது சற்று கடினமாக இருக்கும். உங்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்து என்ன இருக்கின்றது என்ன இன்னும் வேண்டும் என்ற நிலைமையை அவதானிக்க வேண்டும். எவ்வளவு பேரிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதை கொண்டுதான் அரசுடன் பேசலாம். இவ்வாறான ஒரு நிலையில் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம். உங்களுக்கு இங்கே காணி இருக்குமானால் தயவு செய்து இங்கு வந்து அல்லது சட்டபூர்வ அற்ரோனிக் தத்துவக்காரரை நியமித்து காணி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.அப்படி காணியில் அக்கறை இல்லையென்றால் இங்கு காணி இல்லாத எமது மக்களுக்கு இனாமாக அதனை எழுதிக் கொடுங்கள்.தயவு செய்து உங்களின் காணிகள் அரச காணிகளாக போவதை அனுமதிக்க வேண்டாம். இந்தியாவிலே தற்போது ஒரு இலட்சத்தை அண்மித்த எமது மக்கள் இருக்கிறார்கள். சர்வதேச சட்டத்தில் அவர்கள் அகதி என்றே இருக்கின்றார்கள். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதியாக இருக்கின்ற போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. மார்ச் 28ஆம் திகதியிடப்பட்டஇந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டுதினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு வாபஸ் பெற காலக்கெடு – மே 28வரை – வழங்குகின்றோம். அந்தத்திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசுவாபஸ் பெறாது விட்டால் ஏனையதமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மக்களை இணைத்துக்கொண்டுஅந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம் “இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல.ஒட்டுமொத்த முழுத் தமிழினமும் தமிழ்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்ற போராட்டம். தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய ஒரு தேவை வந்துள்ளது.தமிழினத்தின் கருத்தை இந்தப்போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம்முன் வைப்போம் என்றார். https://akkinikkunchu.com/?p=323150
  5. அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல் அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர். இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் , விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=323161
  6. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ் 03 May, 2025 | 09:42 AM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார். யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மைக் வோல்ட்ஸ் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக மைக் வோல்ட்ஸ் நியமிகப்படவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மைக் வோல்ட்ஸ் வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்புக்கு தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மாா்க்கோ ரூபியோ தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213564
  7. வடக்கு காணி சுவீகரிப்பின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி - ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த் எச்சரிக்கை Published By: Vishnu 02 May, 2025 | 09:38 PM உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிட்டப்பட்டு இருக்கின்றமை தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக உரிமை கோரப்படாத காணிக்ளை சவீகரிப்பதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றோம். இவ்வாறான விடயங்கள் தொடர்பாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இவ்வாறான விடயங்களில் அரசியல் தலைமைகள் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையில் இருக்கின்ற அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்கள், ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றமையை கடந்த காலங்களில் நாம் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக சொல்ல வேண்டுமாக இருந்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வனவளத் திணைக்களம், வனஜீராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினால் கையகப்படு்த்தப்பட்டுள்ள எமது மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விசாய நிலங்களை விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தென்னிலங்கையின் உயர் அதிகாரிகளினால், சுற்று நிருபங்கள், சட்டங்கள் போன்றவற்றின் பெயரால், தொடர்ச்சியாக சாக்குப் போக்குகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனால் துறைசார் அமைச்சர்களுடன் கலந்துரையாடி, அமைச்சரவைக்கு இணைந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கொள்கையளவு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1985 ஆம் ஆண்டிற்கு பின்னர் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியினாலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அங்கே இருக்கக்கூடிய அரச உயரதிகாரிகள் அதிகாரிகள் காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அலுவலக நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்காமல் திட்டமிட்ட காலதாமதத்தினை மேற்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஆயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கும் அதுமாத்திரமல்லால், விடுவிக்க தீர்மானித்த காணிகளுக்கு பதிலாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற அரச காணிகளை சுவீகரிப்பதற்கான தயார்ப்படுத்தல்களையும் முன்னடுத்திருந்தனர். இந்த விடயத்தினை அறிந்து கொண்ட எமது செயலாளர் நாயகம், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அதனை தடுத்து நிறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே தற்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. துரதிஸ்டவசமாக இவ்வாறான விடயங்களை எமது மக்கள் நலன்சார்ந்து - எமது மக்களின் இருப்பினை பாதுகாத்து வலுப்படுத்தும் நோக்கில் கையாளக்கூடியவர்கள் யாரும் தற்போதைய ஆளுந்தரப்பில் இல்லாத சூழ் நிலையே காணப்படுகின்றது. மாற்றத்தினை எதிர்பார்த்து எமது மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள்கூட ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த காணி அபகரிக்கரிப்பு தொடர்பான செய்தியை வெளியே கொண்டு வந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனின் முகப் புத்தக பதிவு அமைந்திருந்தததை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதேபோன்று ஊடக விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வர்த்தமாணியின் உண்மை தன்மையை நிரூபிக்குமாறு சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்திருக்கின்றார். இவற்றை பாரக்கும்போது, எமது மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் எமது மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. ஆக, அரசியல் அபிலாசைகளுக்கா போராடிய இனம், இந்த மண்ணிலே இப்போது ஒரு ஆபத்தான சூழலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்த இடத்திலே எமது பிரதேசங்களில் இருக்கின்ற எமது அரச அதிகாரிகளிடம் உரிமையுடன் விநயமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம். தயவு செய்து, உங்களுடைய தொழிசார் கடமைகள், தொழில்சார் கடப்பாடுகள், பதவி உயர்வுகள் போன்றவற்றுக்கு அப்பால், சமூக சிந்தனையோடு உங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். நீங்களும் இந்த மண்ணிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளும் இந்த மண்ணிலேதான் வாழ வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். இந்த மண்ணிலே எமது தனித்துவங்களும் அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டாலதான் எதிர்காலத்திலும் நாம் கௌரமாக வாழ முடியும். எனவே, எமது இருப்பினையும் அடையாளங்களையும் பாதிக்கும் வகையிலான சுற்றுநிரூபங்கள் அறிவுறுத்தல்கள் போன்றவை உங்களுக்கு கிடைக்குமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அல்லது எமது மக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டு வருவதன் மூலம், எமது மக்களை பாதுகாப்பதற்கான உங்களின் தார்மீக கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். இறுதியாக மக்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம். இந்த அரசாங்கத்தின் காலப் பகுதியிலும் எமது மக்களின் தாயகக் சிந்தாந்ததை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகின்றது ன்பதை இந்த காணி அபகரிப்பு வெளிப்படுத்தி இருக்கின்றது. இந்தச் சூழலில் நடைபறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுமாக இருந்தால், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றவர்களும், தற்போதைய 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் போன்று, கையாலாகாதவர்களாக, தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து ஓடுகினாறவர்களாகவே இருப்பார்கள். உள்ளூராட்சி சபைகளின் சம்மத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்குகளை அளிக்க வேணடும்" என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/213553
  8. சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை ; நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன் - சிறிதரன் 03 May, 2025 | 09:21 AM சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் வரைக்கும் தான் எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழர்கள் தம்மை தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்றால் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ வேண்டும் என்றால் எம் மிதாக அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பால் இரு பிரச்சினைகள் உள்ளது.ஒன்று ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம்.தமிழர்கள் மீது இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் போர்க் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்கள்.அவர்களுக்கு உணவு அனுப்பாமல் கொல்லப்பட்டுள்ளார்கள். நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இருந்த போது 70 ஆயிரம் பேருக்கு தான் உணவும் அனுப்பப்பட்டது.குழந்தைகள் குண்டுத்தாக்குதல்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் ஆவணப்படுத்தி ஜெனிவாவுக்கு, ஏனைய உலக நாடுகளுக்கும் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை மன்னார் மறைமாவட்டத்தின் மறைந்த ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள். எந்த அரசியல் கட்சிகளும் அதனை வழங்கவில்லை. நாங்கள் சாட்சியம் அளிக்கவில்லை.அதை வழங்கியது ஒரு மத தலைவர். அவர் அரசியல்வாதி இல்லை. தமிழ் தேசிய இனத்தை நேசித்ததால் தமிழ் இனம் பற்றி அவர்சிந்தித்தமையினால் இந்த இனத்திற்காக இந்த இனத்திற்கு எதிராக இடம்பெற்ற அநியாயத்தை உலகம் வரை கொண்டு சென்ற ஒரு உண்ணதமான இறை தூதர் தான் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள். அவர் வழங்கிய ஆவனத்தை இன்று அழிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இலங்கைக்கு இந்த ஆவணம் ஒரு பாரிய தலையிடி என்றார். https://www.virakesari.lk/article/213561
  9. நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயுடன் சங்கமம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (02) திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நல்லை ஆதீன குரு முதல்வர் கடந்த வியாழக்கிழமை பரிபூரணமடைந்தார். சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன. அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றது. https://newuthayan.com/article/நல்லை_ஆதீனத்தின்_திருவுடல்_தீயுடன்_சங்கமம்
  10. எல்லாம் வெல்லுறம்.. கப்பைத் தூக்கிறம்💪
  11. GMT நேரப்படி நாளை சனி 03 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 08 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 15 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  12. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் புயல்வேகத் துடுப்பாட்டத்தினால் எதிரணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். சாய் சுதர்சன் 48 ஓட்டங்களையும், சுப்மன் கில் 76 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 64 ஓட்டங்களையும் எடுத்து வலுவான நிலைக்குச் செல்ல உதவியதால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களில் அபிஷேக் ஷர்மா மாத்திரம் மின்னல் வேகத்தில் 74 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  13. பைத்தியர் அர்ச்சுனா இவருக்கு ரகசியமாக ஊசி போட்டிருக்கின்றார்!😆
  14. 57-0. 4.2 overs! 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
  15. தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை! தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. அதன்படி, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். அவர்களை எப்போது, எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்நிய நாட்டவர்கள் உரிய பயண, அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக, பல்வேறு மாநிலங்களில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஏராளமான பங்ளாதேஷ் குடிமக்கள் போலி ஆதார், வாக்காளர் அட்டைகளைப் பெற்று நீண்ட ஆண்டு காலமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. https://www.thaarakam.com/news/795086fa-e007-44c6-9d05-18f45f411474
  16. கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! May 1, 2025 — கருணாகரன் — இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள். இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால், அப்படித் தேர்தலுக்குப் பின்னரும் வரக்கூடியவர்கள் யார்? வெற்றியீட்டிய தரப்புகளிலிருந்து சிலவேளை யாரும் வரலாம். தோல்வியைச் சந்தித்த தரப்புகள் தமக்கு என்ன வேலை என்ற கணக்கில் ஒதுங்கிக் கொள்ளும். அதுவே வழமை. அவர்களெல்லாம் பிறகு, இன்னொரு தேர்தலின் போதுதான் மீண்டும் மக்களிடம் வருவார்கள். இதுதான் நமது சூழலிலுள்ள அரசியலின் நிலைமை. தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அப்பால் சென்றே பெரும்பாலான பரப்புரைகளும் நடக்கின்றன. ஒரு வேட்பாளர் செலவழிக்க வேண்டிய நிதியின் வரையெல்லை குறிக்கப்பட்டாலும் அதற்குள் நின்று யாரும் தமது பரப்புரையை முன்னெடுப்பதைக் காண முடியவில்லை. நிதி மட்டுமல்ல, தேர்தற் பரப்புரைக்கென வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் கடந்துதான் பலரும் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். ஆட்களை வளைத்துப் போடுவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய முயற்சிக்கின்றன சில தரப்புகள். அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லை வரையில் செல்கிறார்கள். இப்போதே பலருக்கு உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றன. தேர்தலில் வெற்றியீட்டினால் ஒப்பந்த வேலைகளை வழங்குவது தொடக்கம் அபிவிருத்திப் பணிகளுக்கான கொள்வனவில் சலுகை, முன்னுரிமை, வாய்ப்பளித்தல் என இந்த உத்தரவாதங்களின் பட்டியல் நீள்கிறது. இதொரு புறமென்றால், பரப்புரைகளின்போது ஒவ்வொரு தரப்பும் (கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும்) ஒவ்வொரு வேட்பாளரும் வழங்குகின்ற வாக்குறுதிகளும் முன்வைக்கின்ற திட்டங்களும் திகைப்பை உண்டாக்கும் விதமாகவே உள்ளன. அத்தனையும் பெருந்திட்டங்கள். மகத்தான திட்டங்கள். ஊர்களைச் சொர்க்கபுரியாக்கும் மாபெரும் ஐடியாக்கள்… பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்ற நாட்டில், இப்படியான பெருந்திட்டங்களுக்கு (இவர்களுடைய பார்வையில் இதெல்லாம் மகத்தான திட்டங்கள்) எப்படி நிதியைத் திரட்டுவது? எங்கேயிருந்து அதைப் பெறுவது? ஒன்றில், அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். அதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பாலான சபைகளில் வெற்றியீட்டி, அவற்றைக் கைப்பற்றினாலும் கூட அதனால் சபைகளுக்குத் தேவையான நிதியை முழுமையான அளவில் ஒதுக்க முடியாது. அதிகம் ஏன், கிராமங்களிலுள்ள வீதிகளை முழுமையாகப் புனரமைப்புச் செய்வதற்கே அரசாங்கத்திடம் போதிய நிதிவளம் இல்லை. இதுதான் உண்மை. ‘வைத்துக் கொண்டு வஞ்சம் செய்வதாக’ யாரும் கருதத் தேவையில்லை. நாட்டில் (கஜானாவில்) பணமில்லை. வருவாய் குறைவு. அதுதான் உண்மை நிலவரம். அப்படியென்றால், சபைகள்தான் நிதியைத் திரட்ட வேண்டும். அதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். தவிர, எல்லாச் சபைகளும் நிதியைப் பெருக்க்க் கூடிய – பெறக்கூடிய நிலையில் இல்லை. நகர்சார்ந்த சபைகளுக்கும் சுற்றுலாப் பிரதேசத்தையொட்டிய சபைகளுக்கும் நிதியைச் சேகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவும் எவ்வளவு நிதியைத் திரட்ட முடியும் என்பது கேள்விக்குரியது. ஏனைய பல சபைகளுக்கு வரி அறவீட்டிற் கிடைக்கின்ற நிதியே குறைவு. குறிப்பாக கிராமங்களை மையப்படுத்திய பிரதேச சபைகளால் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு நிதியைப் பெருக்கவோ பெறவோ முடியாது. ஆகவே அங்கெல்லாம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியே ஆதாரமாகும். அதை வைத்துக் கொண்டுதான் எதையும் செய்ய முடியும். முன்பு வெளிநாட்டு உதவிகள் அல்லது வெளிநாட்டு கொடை நிறுவனங்கள் –தொண்டு நிறுவனங்கள் – நிதி நிறுவனங்கள் அளிக்கின்ற நிதியைக் கொண்டே சில, பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை எந்தளவுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதைச் செய்ய வேண்டியது (அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது) அரசாங்கத்தின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. இதுதான் உண்மையும் யதார்த்தமுமாகும். இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் இதை உய்த்துணர முடியவில்லை என்றால், அதைச் செய்ய வேண்டியது (மக்களுக்கு இந்த நிலைமையை விளக்க வேண்டிய பொறுப்பு) ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இளைய தலைமுறையினருமாகும். அவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், தாம் வெற்றியீட்டுவதற்கான வாக்குகளைச் சேகரிப்பதற்காக அரசியற் தரப்புகள் மக்களுக்கு அளிக்கின்ற பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றுத்திட்டங்களும் என்ற மோசடிக்கு இவர்களும் உடந்தை என்றே அர்த்தமாகும். ஆகவே தேர்தற் பரப்புகளை உன்னிப்பாக, ஊன்றிக் கவனித்து, அங்கே முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும். அவை தொடர்பான விவாதங்களை முன்வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இவ்வாறான பணிகளைச் செய்யத் தவறியதன் அல்லது அதில் போதிய அளவுக்குச் செயற்படாததன் விளைவுகளே, பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் பிழையான (தவறான) தரப்புகளை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வீணடிக்கப்பட்டன – பாழாக்கப்பட்டன. மக்கள் எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக தவறான அரசியல் விளைவுகள் உருவாகின. நாடு மோசமான நிலையை (அழிவை) எட்டியது. இந்தப் படிப்பினைகளிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம். அந்தக் கற்றுக் கொள்ளல் என்பது மீளவும் தவறுகள் நிகழாமல், தவறான தரப்புகளை தேர்வு செய்தல் நிகழாமல் தடுப்பதாக அமைய வேண்டும். அது நாட்டுக்கு, எதிர்காலத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய நன்மையாகும். நாட்டுக்கு நாம் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய முடியாது போகலாம். குறைந்த பட்சம் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவாவது வேண்டும். இந்த நாடு தவறுகளால், பிழைகளால், குற்றங்களால், மோசடிகளால், சூறையாடல்களால் பின்தள்ளப்பட்டது. இதைச் செய்த தரப்புகளை ஆதரித்ததன் விளைவே இதுவாகும். ஆகவே, இனியாவது இதை – இந்தத் தவறுகளைச் செய்யாமல் தடுத்துக் கொள்வோம். என்பதால், தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் தகுதி நிலை தொடக்கம், அவர்களும் அவர்களுடைய தரப்புகளும் முன்வைக்கும் வாக்குறுதிகள் வரையில் அனைத்தையும் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. பல வேட்பாளர்களும் தகுதி குறைந்தவர்களாக – பொருத்தப்பாடற்றவர்களாகவே – உள்ளனர். 1. உள்ளுராட்சி மன்று என்றால் என்ன, அதனுடைய அதிகாரம் என்ன என்று தெரியாதவர்களாக இருப்போர். 2. உள்ளுராட்சி சபைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த விடயத்தையும் வேலைத்திட்டங்களையும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் குறைந்தவர்கள். 3. கடந்த காலத்தில் சபைகளில் இருந்து ஊழல் செய்தவர்கள், முறைகேடான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள், தவறான தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள், சபையின் நிதியைப் பாழாக்கியவர்கள், பிழையான திட்டங்களை உருவாக்கியவர்கள். 4. சமூக அக்கறை, பிரதேசம் மீதான பற்று, அரசியல் உணர்வு, பொதுப்பணி ஆற்றிய அனுபவம் எதுவுமே இல்லாமல், கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேவைக்காக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்போர். 5. தெரிந்தவர், உறவினர், குறித்த சாதி, சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வேட்பாளர்களாக்கப்பட்டோர். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு உள்ளுராட்சிகளை வளப்படுத்த முடியும்? ஆனால், இவ்வாறானவர்களால்தான் வேட்பாளர் பட்டியலே நிரம்பிப்போயுள்ளது. ஆகவே மக்களும் மக்களை வழிப்படுத்தக் கூடிய பொறுப்புகளில் உள்ளோரும் கட்சி அபிமானம், தலைமைத்துவ விசுவாசம் என்பதற்கு அப்பால் அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும். எதன்பொருட்டும் தவறுகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இனம், மதம், சாதி, கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையான நியாயத்தை முன்னிறுத்த முயற்சிக்கும். அதற்கெல்லாம் இடமளித்து ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை விளைவிக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை இல்லாதொழிக்க முற்பட வேண்டும். அப்பொழுதுதான் தவறான தரப்புகளை நீக்கம் செய்யலாம். அளிக்கப்படும் நம்பிக்கையும் முன்வைக்கப்படும் திட்டங்களும் உண்மையானவையாக – யதார்த்தமானவையாக – நடைமுறைக்குச் சாத்தியமானவையாக இருக்க வேண்டும். அரசியலிலும் சரி, தனி வாழ்க்கையிலும் சரி நம்பிக்கை அளித்தலுக்கு (Giving hope) நிகரானது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும் (Fulfilling hope). அரசியலில் இது இன்னும் கூடுதல் அழுத்தத்துக்குரியது. ஏனென்றால், அரசியலில் அளிக்கப்படும் நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அளிக்கப்படுவது. அவர்களுடைய நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அளிக்கப்படுவது. அதை நிறைவேற்றவில்லை – காப்பாற்றவில்லை என்றால், அது அந்த நம்பிக்கையை ஏற்றுச் செயற்பட்ட – ஆதரவளித்த மக்களுக்கு அளிக்கப்படும் துரோகமாகும்; குற்றமாகும். அந்தக் குற்றத்துக்குரிய தண்டனையை நீதிமன்றங்கள் வழங்காது விடலாம். மக்கள் வழங்குவார்கள். வரலாறு வழங்கும். அதுதான் அரசியல் விதியாகும். வரலாறு முழுவதும் இப்படித்தான் நடந்துள்ளது. வரலாற்றிற்கு வெளியே எதுவுமே இல்லை. அப்படி ஒன்று புதிதாக அமையுமானால், அதுவும் வரலாற்றுடன் இணைந்து கொள்ளும். https://arangamnews.com/?p=11990
  17. உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் Veeragathy Thanabalasingham on April 29, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும். ஆளும் தேசிய மக்கள் சக்தி மிகுந்த உத்வேகத்துடன் அதன் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தங்களுக்குப் பெற்றுத் தந்ததைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றியைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்கத் தலைவர்களும் நாட்டு மக்களைக் கேட்கிறார்கள். தென்னிலங்கை எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தைய இரு தேசியத் தேர்தல்களிலும் அடைந்த தோல்வி, உள்முரண்பாடுகள் மற்றும் கட்சிக் கட்டமைப்புகளின் குறைபாடுகள் காரணமாக அவற்றின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களை தலைமைதாங்கி முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததில் இருந்து அந்தக் கட்சியின் இன்றைய பரிதாபமான நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க மீணடும் ஜனாதிபதியாக ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தனியொரு உறுப்பினராக இருந்துகொண்டு ஜனாதிபதியாக வந்த சூழ்நிலையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் போன்று ஒருவிதமான மருட்சிக்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறைபாடுகளைப் பற்றி பேசுவதைத் தவிர, தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு முன்னால் சென்று கூறுவதற்கு உருப்படியாக எதுவும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற மற்றைய எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசாமல் விடுவதே நல்லது. எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு குழப்பமான நிலையில் இருப்பது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும், நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் அள்ளிவீசிய எண்ணற்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றமும் விரக்தியும் உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அதன் அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலில் முன்னெடுக்கின்ற பிரசாரங்களை நோக்கும்போது அதில் முன்னைய அரசாங்கங்கள் நடந்துகொண்ட முறையில் இருந்து எந்த விதமான வேறுபாட்டையும் காணமுடியாமல் இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது; மேலும் நான்கு இலட்சம் குடும்பங்களைச் சேர்த்து அஸ்வேசும சமூக நலன்புரித்திட்டம் விரிவாக்கப்படும் என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்திருக்கிறார்; ஏற்கனவே ஊழியர்களால் நிரம்பி வழியும் அரசாங்க சேவைக்கு மேலும் 35 ஆயிரம் பேரைச் சேர்க்கப்போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்கள் தேர்தல் காலங்களில் மேற்கொண்ட இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தாங்கள் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்ததை ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் சுலபமாக மறந்து விட்டார்கள் போலும். எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றைய அரசியல் கட்சிகளின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது குறித்து அரசாங்கத் தலைவர்கள் அதுவும் குறிப்பாக ஜனாதிபதி திசாநாயக்க விடுத்திருக்கும் அச்சுறுத்தல் மிகவும் பாரதூரமான ஒரு சட்டமீறலாகும். தேசிய மக்கள் சக்தியின் நிருவாகத்தில் இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான நிதித் தேவைகள் தாமதிக்கப்படும் அல்லது அந்தச் சபைகளினால் முன்வைக்கப்படும் நிதிக் கோரிக்கைகள் ஒன்றுக்கு பத்து தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறிய ஜனாதிபதி திசாநாயக்க ஆளும் கட்சியின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளின் நிதிக் கோரிக்கைகளை அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு உள்ளூராட்சித் தேர்தல் ஒழுங்கு விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருக்கும் எதிரணி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பு சிவில் அமைப்புக்களும் இதுவரையில் எட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவ்வாறு ஜனாதிபதி பேசியதாக சுட்டிக் காட்டியிருக்கின்றன. ஆனால், அவற்றின் முறைப்பாடு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியான நடவடிக்கையை எடுப்பதில் உண்மையான அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. இதனிடையே, முன்னைய இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் இருக்கும் நிலையில் ஜனாதிபதி திசாநாயக்க தற்போது தேர்தல் பிரசாரங்களில் மேலும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி திசாநாயக்க பொருளாதார இடர்பாடுகளைத் தணிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முழு நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பாக, இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பொதுமக்களின் காணிகள் திருப்பி கையளிக்கப்படுவதுடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். அவரின் கடந்த ஏழு மாதகால ஆட்சியில் அந்த வாக்குறுதிகளுக்கு நேர்ந்திருக்கும் கதி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். தையிட்டி விகாரை பிரச்சினை இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் தையிட்டி பௌத்த விகாரை பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் கூறிய யோசனை அந்தப் பிரச்சினையை அவர் ஒழுங்கான முறையில் கையாளுவதற்கு அவர் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது. தையிட்டி விகாரை பிரச்சினையைப் பயன்படுத்தி வடக்கிலும் தெற்கிலும் முன்னெடுக்கப்படும் இனவாத அரசியலை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட்டால், அந்த விகாரையின் பௌத்த மதகுரு அந்தப் பகுதி காணிகளின் உரிமையாளர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்று வடக்கிற்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த திசாநாயக்க கூறினார். மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அந்த விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் நிலைப்பாட்டையும் அதே விகாரையை அகற்றக்கூடாது என்று தென்னிலங்கையில் குரலெழுப்பும் கடும்போக்கு தேசியவாத சக்திகளின் நிலைப்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜனாதிபதி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இரு நிலைப்பாடுகளையும் சமாந்தரமான இனவாதம் என்று அவர் அடையாளப்படுத்துவது உண்மையில் தவறு. தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று அண்மைக் காலங்களில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினார்கள். அவ்வாறாக விகாரையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு விபரீதமான முயற்சியினாலும் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடிய எந்த ஆற்றலும் இல்லாத தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்களை வட பகுதி மக்களே வெறுத்தார்கள். அது வேறு விடயம். ஆனால், கடந்தகால ஆட்சியாளர்களைப் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஆட்சியாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளின் கலாச்சார தனித்துவத்தையும் குடிப்பரம்பலையும் மாற்றியமைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் தன்னை வேறுபட்டவராகக் காட்டிக்கொள்ள முன்வந்திருக்க வேண்டும். தையிட்டி விகாரை தங்களது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டு அதேவேளை முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுவிட்ட அந்த விகாரையை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறியிருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் வருத்தத்தை தெரிவிப்பதுடன் அவர்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளோ அல்லது வேறு மதத்தலங்களோ நிருமாணிக்கப்படுவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி கூறியிருந்தால் அவர் உரத்துப் பேசும் புதிய அரசியல் கலாசாரத்துக்கு ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யக்கூடிய அரசியல் துணிச்சல் அவரிடம் இருக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்ததைப் போன்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய சாத்தியம் பெரும்பாலும் இருக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஏழு மாதகாலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளை வடக்கில் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு இனிமேல் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கத் தலைவர்கள் செய்துவரும் பிரகடனங்கள் மாத்திரம் நாட்டில் இனவாதத்தை ஒழித்துவிடப்போவதில்லை. கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இனவாத அரசியல் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டியது முக்கியமானதாகும். இனவாதத்தின் கைதிகளாக இருக்கும் நிலையில் இருந்து ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் விடுபட வேண்டும். அத்தடன், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் வாக்களித்தார்கள் என்ற மருட்சியில் இருந்தும் அதன் தலைவர்கள் விடுபட வேண்டும். இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் அவற்றின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதற்கு பெரும் போராட்டத்தை நடத்தும் ஒரு களமாக உள்ளூராட்சி தேர்தல்கள் மாறியிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு யானையைப் பார்த்த குருடர்கள் போன்று தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொரு காரணத்தைக் கூறினாலும் கூட, உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருடகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சமகால நிலைவரம் வேண்டி நிற்பதற்கு இசைவாக அடுத்த கட்டத்துக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் நகர்த்துவதற்கு தவறியதே அந்த மக்களின் அதிருப்திக்குப் பிரதான காரணமாகும். தங்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்பதை சில தமிழ்த் தலைவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள். இன்று சகல தமிழ்க் கட்சிகளுமே தேசிய மக்கள் சக்தியை ‘பொது அரசியல் எதிரியாகக்’ கருதி அதற்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டு ஓரணியில் நிற்பதற்கு அவற்றின் தலைவர்கள் தயாராக இல்லை. தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதி செய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கே தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஒருபோதுமே நேர்மறையான கொள்கையையோ அல்லது அணுகுமுறையையோ கடைப்பிடிக்காத ஒரு தேசிய (தென்னிலங்கை) கட்சிக்கு வாக்களிப்பதில் இருந்து தமிழ் மக்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல் தலைவர்களின் தோல்வியை அல்லவா அம்பலப்படுத்துகிறது? தமிழ்க்கட்சிகள் அல்லது கூட்டணிகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதுவதற்கான ஒரு ஆளுமைப் போட்டிக் களமாகவும் அவர்கள் இந்தத் தேர்தலை நோக்குகிறார்கள் என்பதை பிரசாரங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கின்ற அதேவேளை தங்களது கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்றும் மறுபுறத்தில் அவர்கள் கூறுகிறார்கள். சகல சமூகங்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சமத்துவமாக நோக்குவதே தங்களது கொள்கை என்று கூறுகின்ற ஜே.வி.பியின் தலைவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பது வரலாறு. அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கின் தமிழ்ப் பகுதிகளில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினால், தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாகத் தீர்வொனறைக் காண்பதற்கு தமிழ் மக்கள் நடத்திவந்த நீண்டகாலப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை ஏற்கெனவே ஒரு தடவை சுட்டிக்காட்டியிருந்தோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை அதிகாரப்பரவலாக்கத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முயற்சித்தார்களே தவிர, அந்த மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதிலோ அல்லது அதற்கான உகந்த சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு தென்னிலங்கை பெரும்பானமையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதிலோ அக்கறை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தங்களது பல தசாப்தகாலப் போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டை மலினப்படுத்தக்கூடிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தக்கூடாது. அதேவேளை, கற்பனாவாத சுலோகங்களில் தங்கியிருக்கும் பழையபோக்கை மாற்றி, சமகால நிலைவரத்துக்கு ஏற்ற முறையில் தமிழ்க் கட்சிகள் தங்களை தகவமைத்துக் கொள்வதில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்பது முக்கியமான ஒரு கேள்வி. தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து எதுவும் பேசுவதில்லை. சொந்த மண்ணைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டாம் என்று எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாக நாம் அறியவில்லை. அவர்களில் பலர் தங்களது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வசதியாக குடியமர்த்திவிட்டே தீவிரமாக தமிழ்த் தேசியவாதம் பேசுகிறார்கள். இலங்கையில் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாகாணமாக விளங்கும் வட மாகாணம் மிகவும் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டதாக இருக்கிறது. வடக்கில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 131 பேர்தான் வாழ்கிறார்கள் என்று 2021 குடிசன மதிப்பீடு கூறுகிறது. மக்கள் இல்லாத மண்ணில் செய்யக்கூடிய அரசியலின் இலட்சணம் எத்தகையதாக இருக்கப் போகிறது? சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது சந்ததிகளுக்கும் நல்ல எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற வலுவான நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நடைமுறைச் சாத்தியமான -விவேகமான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். அதைச் செய்யத்தவறினால், ஏற்படக்கூடிய ஆபத்து தெளிவாகத் தெரிகிறது. போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப்பகுதியில் நிலைவரங்கள் பெருமளவுக்கு மாறிவிட்டன என்பதை தமிழ்க் கட்சிகள் உணராத பட்சத்தில், உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமல்ல, சகல தென்னிலங்கை கட்சிகளையும் நிராகரித்து தமிழ்க்கட்சிகளை மீண்டும் ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து எழுகின்ற சந்தேகம் நியாயமானதே. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12054
  18. ரெட்ரோ : விமர்சனம்! 1 May 2025, 8:37 PM வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!? ’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே. சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’? காதலே அடிநாதம்! பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது. அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றனர். நட்பு பாராட்டியிருக்கின்றனர். அப்போது முதல் இறுக்கமான முகத்துடன் சிரிப்பு என்றால் என்னவென்று தெரியாதவராக இருக்கிறார் பாரி. அவரிடத்தில் மாற்றங்களைப் புகுத்தி தன் வழியில் ‘சாந்தமானவராக’ மாற்றத் துடிக்கிறார் ருக்மிணி. அதற்கேற்பச் சில மாற்றங்கள் பாரியிடத்தில் தெரிகின்றன. ஆனால், ‘பாரி – ருக்மிணி’ திருமண விழாவுக்கு டாடி (ஜோஜு ஜார்ஜ்) வந்தபிறகு அந்த நிலைமை தலைகீழாகிறது. பாரி ‘டாடி’ என்றழைக்கும் அந்த நபர் (ஜோஜு ஜார்ஜ்) ஒரு கேங்க்ஸ்டர். ஒருமுறை டெல்லியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் (பிரகாஷ்ராஜ்) சொல்லும் வேலையை, பாரியைக் கொண்டு முடிக்க நினைக்கிறார். பாரி ‘வேண்டாம்’ என்று மறுக்கிறபோதும், வலுக்கட்டாயமாக அதனைச் செய்து வைக்கிறார். டாடி சொன்னபடி ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் கப்பல் வழியே ‘கோல்டு பிஷ்’ எனப்படுகிற சில பொருட்களை இறக்குவதுதான் திட்டம். ஆனால், அதனைச் செய்யாமல் ஏமாற்றுகிறார் பாரி. அதற்கான பலன், பாரியின் திருமண விழாவின்போது எதிரொலிக்கிறது. விழாவில் இருக்கும்போது, ‘எங்க கோல்டு பிஷ்ஷை மறைச்சு வச்சிருக்க’ என்கிறார் டாடி. ‘சொல்ல முடியாது’ என்று பாரி சொன்னதும், ருக்மிணியைக் கொல்லச் செல்கிறார். பதிலுக்கு அவரைப் பாரி தாக்க, அங்கே ரத்தக்களரி ஆகிறது. பாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பாரி சிறிதளவும் மாறவில்லை என்றுணரும் ருக்மிணி, கண் காணாத இடத்திற்குத் தன் தந்தையோடு இடம்பெயர்கிறார். சிறையில் இருக்கும்போதும் அவரிடம் ‘கோல்டு பிஷ் எங்கே’ என்று காவலர்கள் மூலமாகக் குடைச்சல் கொடுக்கிறார் டாடி. எத்தனை துயர்கள் வந்தாலும், ‘வாய் திறக்க மாட்டேன்’ என்று வீம்பு பிடிக்கிறார் பாரி. அதன்பிறகு என்னவானது? சிறையில் இருந்து வெளியே வந்தாரா பாரி? தனது காதலியைக் கண்டாரா? மிக முக்கியமாக, வன்முறை பாதையில் இருந்து அவரால் விலக முடிந்ததா என்று சொல்கிறது ‘ரெட்ரோ’வின் மீதி. இந்தக் கதையில், அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவுக்கு பாரி செல்வதாக ஒரு கிளைக்கதை உண்டு. அங்கு அவர் ஏன் செல்கிறார்? அவரது காதல் அதற்குக் காரணமானது எப்படி என்று திரைக்கதையில் சொல்லியிருக்கிற விதம் அருமை. மற்றபடி இதர விஷயங்கள் அனைத்தும் செயற்கைச் சாயம் பூசிக்கொண்ட சின்னக்குழந்தைகள் ‘செல்ஃபி’க்கு போஸ் கொடுத்தது போலிருக்கின்றன. ’ரெட்ரோ’வில் பாரி – ருக்மிணி காதலே அடிநாதம். அதனை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இன்னும் பல விஷயங்களை திரைக்கதையில் இழுத்துப் போட்டிருப்பதுதான் நம்மை ‘ஆவ்..வ்.’ என்று ‘பீல்’ பண்ண வைக்கிறது. திருப்தி கிடைக்கிறதா? சூர்யாவைப் பொறுத்தவரை, விதவிதமான கெட்டப்களில் வருவதற்கான வாய்ப்புகளைத் தந்திருக்கிறது ‘ரெட்ரோ’ திரைக்கதை. அதனை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு, தொண்ணூறுகளில் வந்த ‘சத்யா’, ‘கலைஞன்’, ‘வெற்றிவிழா’ கமலைப் பார்ப்பது போலிருக்கிறது. என்ன, அதற்கேற்ற காட்சிகள்தான் அமையவில்லை. நாயகி பூஜா ஹெக்டே அழகாகத் தெரிவதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவரைத் தொடர்ந்தாற்போல வசனம் பேச வைத்து அழகு பார்க்க இயக்குனர் விரும்பவில்லை போலும். இதில் சுவாசிகாவும் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போகிறார். இது போக, இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் எனப் பலர் உண்டு. அவர்களில் வில்லனாக வருகிற விது கொஞ்சமாய் கவனம் பெறுகிறார். சுஜித் ஷங்கர் தனது வித்தியாசமான ‘தமிழ்’ உச்சரிப்பால் ஈர்க்கிறார். சிங்கம்புலி, தமிழ், பிரேம்சங்கர், ரெம்யா சுரேஷ், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றோர் நிலைமை ரொம்பவே மோசம். அவர்கள் வந்து போகின்றனர் என்பதே ‘க்ளோஸ் அப்’களில் சில ஷாட்களில் காட்டப்படுகிறபோதுதான் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகம்மது, கலை இயக்குனர்கள் ஜாக்கி மற்றும் மாயபாண்டி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விரும்பிய உலகைக் கட்டமைக்க உதவியிருக்கின்றனர். அவர்களது பங்களிப்பு, ஒரு ‘கிளாஸான’ கிளாசிக் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. ’கனிமா’ பாடல் வழியே திரையில் தலைகாட்டியிருக்கும் சந்தோஷ் நாராயணன், பின்னணி இசையில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். இதர பாடல்களும் கூட ‘ஓகே’ ரகம். தனது முந்தைய படங்கள் கவனம் பெற்றதற்கு, ‘ரெட்ரோ’ உணர்வைத் தந்த திரைக்கதைகளே காரணம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவற்றில் இருந்து பெற்ற ஊக்கத்தின் வழியே ‘ரெட்ரோ’ கதையையும் காட்சியமைப்பையும் உருவாக்கியிருக்கிறார். என்ன, இப்படத்தில் மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையனுபவங்களைக் கலந்து கட்டியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் சிலரை ‘ஜெர்க்’ ஆக்க வைக்கும். ’ரெட்ரோ’ பார்த்தபிறகு திருப்தி கிடைக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், ‘எஃப்டிஎஃப்எஸ்’ பார்க்கிற ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன; ஆனால், அவை பின்னாட்களில் கூட்டம் குறைவாக இருக்கிறபோது திரையரங்குகளுக்கு வருகிறர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது என்பதே உண்மை. அதனைப் புரிந்துகொண்டால், இந்த படத்தில் எந்த காட்சிகள் கொண்டாடப்படும் என்பதற்கான பதில் தெரிந்து போகும். அந்த வகையில் ஆங்காங்கே நம்மை ஈர்க்கிற ‘ரெட்ரோ’, ஒரு முழுமையான ‘கமர்ஷியல் படமாக’ அமையவில்லை. அதற்குக் காரணம், ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் தாக்கத்தில் காட்சிகளை, அவற்றின் பிணைப்பை இதிலும் உருவாக்க முயன்றிருப்பதே. அதேநேரத்தில், சூர்யாவை ஸ்டைலிஷாக, ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் ஆக இப்படம் காட்டியிருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். ‘கனிமா’ பாடலில் ஓரிடத்தில் ‘அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல’ பாடலில் வருவது போன்று ஒரு ‘குத்தாட்டம்’ போட்டிருக்கிறார். அந்த டான்ஸ் நமக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’டை தரும். இப்படிச் சில விஷயங்கள் நம்மை கொக்கி போட்டு திரையினுள் இழுக்கின்றன. ஆனால், ஒரு திரைப்படமாக நோக்கினால் ‘ரெட்ரோ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமல்ல’ என்பதே என் கருத்து. ‘வித்தியாசமானதா’ என்றால், ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் கலந்துகட்டிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘புதுவிதமாக இருக்கிறதா’ என்றால் அதற்கும் அதே பதில்தான். சரி, ‘ரெட்ரோவில் சூர்யா – கா.சு. கூட்டணி வசீகரிக்கிறதா’ என்றால், அதற்கும் அதே பதில்தான். https://minnambalam.com/suriya-retro-movie-review-may-1-2/
  19. உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம் May 2, 2025 11:09 am ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின. இவ்வாறு சூதுகவ்விய இரு துருவ, ஒரு துருவ காலத்தைத் தாண்டி பல்துருவ உலக ஒழுங்குக்குள் பயணிக்கப்போகின்ற தற்காலமும் எதிர்காலமும் ஈழத்தமிழர் தேசத்துக்குத் தர்ம வெற்றியை ஈட்டித் தர வேண்டுமானால் சிங்கள இடதுசாரிகளில் தங்கியிராத ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமும் பலமும் வாய்ந்த சமவுடைமை மக்கள் இயக்கம் வடக்கு கிழக்கில் கட்டியெழுப்பப்படவேண்டும். இதுவரை காலமும் இலங்கைத் தீவுக்குள் வளர்வதும் தேய்வதுமாயிருந்த மார்க்சிய, கம்யூனிச, சமவுடைமைப் போக்குகள் தென் இலங்கைப் பேரினவாதத்துக்குப் பலிக்கடா ஆக்கப்பட்டது வரலாறு. இதற்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் வரலாறே சாட்சி. பேரினவாதச் சிந்தனை முன்போல இலங்கைத் தீவில் தற்போது இல்லை என்ற வாதத்தைப் போலித்தனமாகப் பலர் முன்வைத்துவருகிறார்கள். பலர் அதை நம்பியும் வருகிறார்கள். இதற்கான சூழலை இலங்கைத் தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிக்கல் உருவாக்கி விட்டது என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் தாமாகவே நம்புவதும் அல்லது அவர்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதம் இறுதியில் ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுவதற்கும் ஏமாற்றப்படுவதற்குமே வழி கோலும். 2022 இல் டைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2022 இல் இடம்பெற்ற காலிமுகத் திடல் போராட்டத்துடன் அமைப்பு மாற்றம் (System Change) என்ற கோசத்தில் தென்னிலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பேரினவாதத்துக்குத் தேவையான புதிய உலக ஒழுங்கைக் கையாளும் அரச கட்டுக்கோப்பு (Body Politic) உருவாக்கப்பட்டுள்ளமையே அன்றி வேறொன்றுமல்ல. புவிசார் அரசியல் (Geopolitics) என்ற சொல்லை 1916 இல் அறிமுகப்படுத்திய சுவீடன் நாட்டு அரசறிவியலாளரும் புவியியலாளருமான யுகான் ருடோல்ப் செல்லேன் என்ற அறிஞர் உயிரியல் அரசியல் (Biopolitics) என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தியவர். புவிசார் அரசியலைக் கையாள்வதற்கு வேண்டிய உயிரியல் அரசியலை சிங்கள தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. காலத்துக்கேற்ப உலக அரசியலைக் கையாளும் நோக்கோடு தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் அது தீவுக்குள் அமைப்பு மாற்றம் ஊழல் எதிர்ப்பு போன்ற வேறு விதமான வெளிப்படுத்தல்களை அவ்வப்போது சூழலுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும். தென் இலங்கைப் பேரினவாதத்தின் உயிரியல் அரசியலையும் புவிசார் அரசியலையும் அரச கட்டுக்கோப்பையும் ஒரு சேர விளங்கிக்கொள்ளும் தன்மை ஈழத்தமிழர் தேசத்தினருக்கு அவசியம் தேவையானது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தென் இலங்கையுடன் ஈழத்தமிழர்கள் சேர்ந்து பயணிக்க முடியும் என்ற செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையக் கூடிய சாத்தியங்கள் உண்டு. தமிழர்கள் தென் இலங்கையுடன் சேர்ந்து வாழ முடியும் என்ற செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட உத்திகளின் தொடர்ச்சிதான் இது. புதிதல்ல. ஆனாலும் தென் இலங்கைப் பேரினவாத சக்திகள் போலிச் சோஷலிசத்தை மார்க்சியவாதிகள் போல உள்வைத்து, தாராண்மைவாத மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போர்த்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அரச கட்டுக்கோப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தான் தற்போது அனுரகுமார ஜனாதிபதி ஆகியுள்ளதற்கான விஞ்ஞான விளக்கம். அவ்வப்போது உண்மையான முற்போக்குவாதிகளாகத் தென்பட்ட சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களில் பெருமளவினர் பேரினவாதத்துக்குப் பலியாகிவந்துள்ள வரலாறு தருகின்ற படிப்பினை என்னவென்றால், தென்னிலங்கை இடதுசாரியத்திலும் முற்போக்குத் தனத்திலும் தங்கியிராத தனித்துவத்தோடு ஈழத்தமிழருக்கான புரட்சிகர மக்கள் இயக்கம் ஜனநாயக வழியில் கட்டமைக்கப்படவேண்டும் என்பதாகும். அ.நிக்ஸன்– https://oruvan.com/colombos-strategy-for-manipulating-the-world-political-order-the-need-for-a-peoples-movement/
  20. “ஆடைகளை களைந்து அவமானப்படுத்தினார்கள்” – சரித்தின் மரணத்திற்கு நீதி கோரும் தாய் May 2, 2025 9:21 am தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் தில்ஷனின் குடும்பத்தினர் நீதிக்காக உணர்ச்சிபூர்வமான கோரிக்கை விடுத்துள்ளனர். தமது மகன் கடுமையான பகிடிவதைக்கு ஆளானதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 26 ஆம் திகதி தனது மஹாபொல உதவித்தொகை தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, தனது மகன் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் சரித்தின் தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “அவர்கள் தனது மகனை துன்புறுத்தினர், அடித்தார்கள், தள்ளினார்கள்… மகன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, என்னைப் பார்க்கக்கூட இல்லை. பின்னர் அவர்கள் மகனின் ஆடைகளைக் களையச் செய்ததை கண்டுபிடித்தோம். எனினும், தனது மகன் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக அவர் எழுதியிருந்தார், ” என்று தாய் கண்ணீருடன் கூறினார். “என் மகனுக்கு நடந்தது வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக்கூடாது என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். தயவுசெய்து அவருக்கு நீதி வழங்குங்கள்,” என்று தாயார் மேலும் தெரிவித்திருந்தார். ஏப்ரல் 28 ஆம் திகதி வீடு திரும்பிய பின்னர், சரித் தன் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும், அவர் பல்பகலைக்கழகத்தில் அனுபவித்த சம்பவத்தை விளக்கியதாகவும் சரித்தின் அத்தை சுட்டிக்காட்டியிருந்தார். “அவர்கள் எவ்வளவு மோசமாக நடத்தினார்கள்,அவரை எப்படிக் கட்டிப்போட்டார்கள், ஷார்ட்ஸ் அணியச் செய்தார்கள், ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று மற்றவர்கள் முன்னிலையில் அடித்தார்கள் என்று சரித் என்னிடம் கூறினார் என்று அத்தை கூறியுள்ளார். இதனிடையே, சரித்தின் தந்தை, தனது மகன் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படித்த காலத்தில் ராகிங் செய்யப்பட்டதாக வெளிப்படுத்தினார். “தனது மகன் தொழில்நுட்ப பொறியியல் படித்து, லக்சபானா மின் நிலையத்தில் பணிபுரிய ஆசைப்பட்டான், பெருமையுடன் சீருடையில் வீட்டிற்கு வருவார் என்று நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தோம். அதற்கு பதிலாக, நாங்கள் அவரை இப்படி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார். இதேவேளை, சரித்தின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என சக மாணவர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாகவும், பகிடிவதை உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. இலங்கையில் பகிடிவதை ஒரு குற்றவியல் குற்றமாகவே உள்ளது, மேலும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், ஏப்ரல் 29ஆம் திகதி கம்பளையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. https://oruvan.com/they-stripped-me-of-my-clothes-and-humiliated-me-mother-demands-justice-for-charith-dilshan-death/
  21. மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள் Vhg மே 02, 2025 அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.' என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு, சமூக ஊடகங்களிலும் அதிகம் பரவி வருகிறது. https://www.battinatham.com/2025/05/blog-post_2.html
  22. விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம் ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஒரு இதயத்தை உடைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், விக்டோரியா ரோஷ்சினா என்ற பெண் பத்திரிகையாளர், ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். இப்போது அந்த பத்திரிகையாளரின் மரணம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இறப்பதற்கு முன், 27 வயதான விக்டோரியா ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்டார். CBS அறிக்கையின்படி, விக்டோரியாவின் உடல் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது, தடயவியல் அறிக்கைகள் கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சையின் அதிர்ச்சியூட்டும் அறிகுறிகளைக் கண்டறிந்தன. அவரது உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் அவரது கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மூளை, கண்கள் மற்றும் காற்றுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்ட கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. விக்டோரியா ரோஷ்சினா உக்ரேனிய செய்தித்தாள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுடன் தொடர்புடையவர். அவர் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தரைவழி அறிக்கையிடலைச் செய்து வந்தார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் ஆசிரியர் செவ்கில் முசேவா, விக்டோரியாவை ஒரு போராளிப் பத்திரிகையாளராகக் கருதினார். மற்றவர்கள் சென்றடைய முடியாத இடத்தில் ஒரு பத்திரிகையாளர் இருக்க வேண்டும் என்று விக்டோரியா கூறுவார் என்று அவர் கூறினார். அவரது கொலை உக்ரேனிய மற்றும் சர்வதேச பத்திரிகைத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்தக் கொலையை நேரடிப் போர்க்குற்றம் என்று கூறி, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியது. உக்ரைனிய வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ரோஷ்சினா ரஷ்ய காவலில் இறந்தார். இதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது. ஒருபுறம் கார்கிவ் மற்றும் டினிப்ரோ மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், மறுபுறம் தரைவழி செய்தி வெளியிடுவது பத்திரிகையாளர்களுக்கு ஒரு சவாலான வேலையாக மாறியுள்ளது. ஆனாலும், உண்மையை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்துக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். விக்டோரியாவின் மரணம் இந்த சவாலுக்கு உதாரணமாக உள்ளது. https://thinakkural.lk/article/317483
  23. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம் Digital News Team 1 மே, 2025 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317469
  24. காசாவில் கடும் தாக்குதலுடன் முடக்கம்; போசணை குறைபாடு 80% உச்சம் - போரை நிறுத்த நெதன்யாகு அரசுக்கு இராணுவத்தில் இருந்து அழுத்தம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேல் ரிசர்வ் படையினரும் அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர். காசாவில் இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வருகிறது. இந்த முற்றுகை 60 நாட்களை கடந்திருக்கும் சூழலில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் போசணை குறைபாடு தொடர்பாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 80 வீதம் அதிகரித்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வயது வரையான குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களில் 92 வீதமானவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச போசணை கிடைப்பதில்லை என்றும் காசா மக்கள் தொகையில் 65 வீதமானவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. காசாவுக்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகள் செல்வது அனுமதிக்கப்படாத சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு அங்கு எஞ்சியுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் தொண்டு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் செல்வதை தடுத்து வருகின்றபோதும் அவைகளை வழங்குவதற்கு தயாரான நிலையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா எல்லையில் உதவிகளுடன் 3,000 டிரக் வண்டிகள் காத்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. முற்றுகைக்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது நடத்தும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (01) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக கான் யூனிஸின் கிழக்கு பகுதியில் தமது பயிர் நிலத்திற்கு செல்லும் மூவர் இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக பார்த்தவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் இவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் இளம் பெண் ஒருவர் தனது காயத்தினால் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸின் தெற்காக அல் மனாரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய செல் தாக்குதல் ஒன்றில் மற்றொருவர் கொல்லப்பட்டிருப்பதோடு டெயிர் அல் பலாஹ் நகரின் கிழக்காக வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு இவ்வாறாக கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் குறைந்தது 2,308 பேர் கொல்லப்பட்டு மேலும் 5,973 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 595 சிறுவர்கள் மற்றும் 308 பெண்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான பலஸ்தீன நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,400ஐ தாண்டியுள்ளது. கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த முயற்சிகளும் முன்னேற்றம் காணாத நிலையில், இஸ்ரேல் போரை தொடர்வதில் உறுதியாக உள்ளது. எவ்வாறாயினும் அண்மைய வாரங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் கையொப்பம் இட்ட கடிதங்களில் போரை நிறுத்தி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பிரதமர் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘இஸ்ரேல் மோசமான நிலைக்கு சென்றுவருவதாகவே எம்மால் முடிவுக்கு வர முடிகிறது’ என்று இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் முன்னாள் தலைவர் டன்னி யடோம் குறிப்பிட்டுள்ளார். ‘நெதன்யாகுவுக்கு அதிக தொந்தரவு தருவது அவரது சொந்த நலன்கள் என்பது எமக்கு தெரியும். முன்னுரிமை அடிப்படையில் பார்த்தால் பணயக்கைதிகள் அன்றி அவரது நலன்கள் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மையை தக்கவைப்பதே முதலிடத்தில் உள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டியதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட முதல் கட்ட போர் நிறுத்தத்தில் 30க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்து 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு இவர்களில் 24 பேர் தொடருந்தும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் இராணுவத்தின் அனைத்து தரப்புகளிடம் இருந்தும் கடிதங்கள் வருவதோடு இவ்வாறு 12,000க்கும் அதிகமான கடிதங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. போர் ஆரம்பித்த தொடக்கத்தில் அதில் பங்கேற்க இஸ்ரேல் இராணுவ ரிசர்வ் படைகள் ஆர்வம் காட்டியபோதும் அவர்களில் பங்கேற்பு தற்போது 50–60 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ ஜெரூசலத்தின் அருகாமை பகுதி உட்பட பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. தீயை கட்டுப்பாடுத்த 155 தீயணைப்பு படைப் பிரிவுகள் செயற்பட்டு வருவதாக ‘தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த காட்டுத் தீ ஜெரூசலம் நகரை நெருங்கி இருக்கும் நிலையில் ‘நாடு அவசர நிலை’ ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தத் தீ கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவு மோசமடைந்திருப்பதாக தீயணைப்புப் படை தலைவர் எயால் கஸ்பி தெரிவித்துள்ளார். தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக இஸ்ரேலிய தீ மற்றும் மீட்பு சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது. https://www.thinakaran.lk/2025/05/02/breaking-news/127256/காசாவில்-கடும்-தாக்குதலு/#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.