Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. “இந்திய மீனவர்களை தடுப்போம்” "இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (29) அன்று பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குத்துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதேவேளை, நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்களை-தடுப்போம்/71-356457
  2. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்! adminApril 30, 2025 யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். புதைகுழியை அகழ்வதற்கான நிதி மத்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ஆய்வுப் பணிகளை முன்னெடுத்த, மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவ இதுதொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஆதலால், அவர் எதிர்வரும் 3ஆம் திகதியளவில் அங்கு ஆரம்பகட்ட கள ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். சிந்துப்பாத்தி மயானத்தில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட 40 சிதிலங்களில் இரண்டு சிதிலங்கள் விலங்குகளின் என்புகள், ஏனைய அனைத்தும் மனித என்புத் தொகுதிகளுடன் தொடர்புடையவை என்ற விடயம் ஏற்கனவே நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214852/
  3. இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் adminApril 29, 2025 இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமானி, முதுமாணி மற்றும் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர முடியும். ஒவ்வொரு கற்கை நெறிகளுக்குமான தகைமைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான விபரங்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமாணிக் கற்கைநெறி ஒன்றுக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் சித்தியடைந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தகமை பெற்றவர்களாகவும், யோக சாஸ்திரத்தில் கலைமாணி மற்றும் யோகாவில் விஞ்ஞானமாணி ஆகிய பட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு பாடத்துறையில் தகமை பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் முதுமாணிக் கற்கைநெறி ஒன்றுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மத்திய மருத்துவப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய – அவ்வத் துறைகளில் இளமாணிப் பட்டத்தைக் கொண்டவர்களாகவும், கலாநிதிப் பட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மத்திய மருத்துவப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய – அவ்வத் துறைகளில் இளமாணி, முதுமாணித் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் காலம் முழுவதற்குமான கற்கைநெறிக் கட்டணம் மற்றும் மாதாந்த மாணவர் உதவித் தொகை, தங்குமிடத்துக்கான உதவுதொகை மற்றும் வருடாந்த மானியம் என்பன வழங்கப்படும் என்றும், ஆர்வமுடையவர்கள் www.a2ascholarships.iccr.gov.in என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர் சந்தீப் சௌதாரி அறிவித்துள்ளார். மேலதிக விவரங்களை 011-2421605, 011-2422788, 011-2422789 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது eduwing.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக இந்தியத் தூதரகத்தின் கல்விப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். https://globaltamilnews.net/2025/214844/
  4. முப்படைகளுக்கு முழு சுதந்திரம் என்கிறார் மோடி! adminApril 30, 2025 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29.04.25) மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய் கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், இராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் இராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தகவல் வெளியாக்கியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://globaltamilnews.net/2025/214856/
  5. 62 வது போட்டியின் கணிப்புக்களை வெளியிடும்போது புரியும்😜
  6. GMT நேரப்படி நாளை புதன் 30 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் 21 பேருக்கு முட்டைகள் கிடைக்க வாய்ப்பு அதிகமா அல்லது முதல் இருவருக்கும் மாத்திரம் முட்டைகள் கிடைக்குமா?
  7. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 48வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அரைச் சதம் அடிக்கவில்லை எனினும் அவர்களின் வேகமான கமியோ ஆட்டங்களினால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஃபவ் டுபிளெஸிஸ் 62 ஓட்டங்களையும் பின்னர் வந்த அக்ஷர் பட்டேலும் விப்ராஜ் நிகமும் வேகமாக அடித்தாடினாலும், பிற வீரர்கள் கைகொடுக்காததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  8. முடிவுகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன!
  9. GMT நேரப்படி நாளை செவ்வாய் 29 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் நுணாவிலான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  10. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 47வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுப்மன் கில்லும், ஜொஸ் பட்லரும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்ஸர்கள், 7 நாலுகள் என 35 பந்துகளில் புயல்வேகத்தில் அடித்த கன்னிச் சதத்துடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேகமாக அடித்தாடி ஆட்டமிழக்காமல் எடுத்த 70 ஓட்டங்களுடனும் சவாலான வெற்றி இலக்கை இலகுவாக 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. சூர்யவன்ஷி இரண்டாவது வேகமான ஐபிஎல் சதத்தை எடுத்து சாதனை புரிந்துள்ளார். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்த வேகமான சதம் இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. அணு ஆயுத போர் மூளுமா? April 28, 2025 6:00 am ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகல் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையே எந்நேரமும் யுத்தம் மூளக் கூடுமென்ற அச்சமான நிலைமை நிலவுகின்றது. இரு நாடுகளும் தத்தமது எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன. இதேவேளை காஷ்மீர் பஹல்காம் பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் 7 வீடுகள் குண்டுவைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுக்கு நெருக்கமானவர்களாக இருந்த 200 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய_பாகிஸ்தான் எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிப்பதாக அறிவித்துவிட்டது. பாகிஸ்தானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே எந்த வேளையிலும் போர் மூளக் கூடுமென்ற பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூபா 20 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வீடுவீடாக பயங்கரவாதிகளை தேடி கண்டறியும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் மும்முரமாக தீவிரப்படுத்தி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுஇவ்விதமிருக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கருத்துத் தெரிவிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், பாடசாலைகள், -கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், ஒட்டுமொத்த தேசத்தின் இரத்தமும் கொதிக்கிறது” என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். “இந்த பயங்கரவாதத் தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது. இது அவரது கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது. எனினும் இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். அப்படி நடந்தால், இரு நாடுகளின் முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் மூண்டால், இரு நாடுகளின் நிர்வாக தலைநகரங்கள் கடுமையாகப் பாதிப்படையும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவிடம் இப்போதைக்கு 160- தொடக்கம் 170 வரை அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்தியா மீது முதலில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால், இந்தியா மொத்தமாக பாதிக்கப்பட்டு விடாது. மீண்டும் பதிலடியாக சக்தி வாய்ந்த தாக்குதலை திருப்பிக் கொடுக்கும். எனவே, பாகிஸ்தான் இந்த விடயத்தில் நிதானமாகவே நடந்து கொள்ளுமென்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் அணு ஆயுதத் திறன் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். அணு ஆயுதங்களை சுமந்து செல்ல தேவையான ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கின்றன. குறிப்பாக அக்னி வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 700 கி.மீ முதல் அதிகபட்சமாக 5000 கி.மீ வரை தாக்கக்கூடியவையாகும். எனவே கன்னியாகுமரியில் இருந்து இந்த ஏவுகணையை அனுப்பினாலும் அது பாகிஸ்தானை துல்லியமாக தாக்கும் என்று போரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல பிரித்வி எனும் மற்றொரு வகை ஏவுகணைகளும் இந்தியாடம் இருக்கின்றன. இவை குறைந்த தூர இலக்குகளை தாக்கும். இது தவிர நீர்மூழ்கி கப்பலிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் K-15, K-4 வகையான ஏவுகணைகளும் இந்தியாவிடம் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா ‘No First Use’ எனும் கொள்கையை பின்பற்றி வருகிறது. அதாவது ‘ஆயுதங்களை நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்பதுதான் இந்தியாவின் கொள்கையாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் வசமும் 165- தொடக்கம் 170 எண்ணிக்கை வரையான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஷாஹீன், கவுரி மற்றும் நாசர் என்கின்ற பெயரில் பாகிஸ்தான் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்திருக்கிறது. இவை சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும் இவற்றால் நீண்ட தூரத்திற்கு போக முடியாது. குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரத்தில் மட்டுமே இந்த ஏவுகணைகள் பயணிக்கும். ஆனால், பாகிஸ்தான் ‘நாங்கள் முதலில் தாக்க மாட்டோம்’ என்கின்ற கொள்கையை பின்பற்றவில்லையென்று இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிற்குப் பதிலாக ‘தேவைக்கேற்ப பயன்படுத்துவோம்’ என்கின்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. இரு நாடுகளும் அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பேஷாவர் போன்ற நகரங்கள் தாக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எப்படி இருப்பினும் அணு ஆயுத தாக்குதல் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மீது நடத்தப்பட்டாலும், அது காற்றில் பக்கத்து நகரங்களுக்கும் பரவும். எனவே அணு ஆயுதம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலைமை இவ்வாறிருக்கையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே (வயது 45) பயங்கரவாதிகளால் நேற்றுமுன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கடும் கொந்தளிப்பில் உள்ள சூழலில் தற்போது சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போருக்குத் தயார் நிலையில் பாகிஸ்தான்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானவை அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என அவர் கூறியுள்ளார். இந்தியா_- பாகிஸ்தான் இடையே கடந்த 1960- ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக பாகிஸ்தானில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதேசமயம், இந்துக்களின் பிரதானமான புனித யாத்திரைகளில் ஒன்றான அமர்நாத் யாத்திரையிலும் பஹல்காம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவனோடு தொடர்புபடுத்தப்படும் அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பயணம் இந்து மதத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரையில், அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பல பாதைகளில் ஒன்று பஹல்காம் வழியாகச் செல்கிறது. 32 கி.மீ தூர அமர்நாத் யாத்திரையை நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாகவோ செல்லத் தொடங்கும் முன்னர் பக்தர்கள் பலர் பஹல்காமில் முகாமிட்டுச் செல்கின்றனர். அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் பைசரனில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம், ஜூலை 3 ஆம் திகதி அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. இந்த யாத்திரைக்காக, இந்தப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகின்ற காலப்பகுதி இதுதான். சுற்றுலாத்துறையின் முதுகெலும்பை இந்தத் தாக்குதல் உடைத்துவிட்டது. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் இந்த விதத்தில் குறிவைக்கப்படுவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு முன்பும் கூட ஜம்மு காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2000ஆம் ஆண்டில் நுவான் முகாமில் நடைபெற்ற தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டில், குல்காம் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். இங்கு சுற்றிப் பார்க்க வந்தவர்கள் இப்போது ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறியுள்ளனர். இத்தகைய கொடூரமான சம்பவத்துக்குப் பிறகு பைசரனின் இந்த அழகான பள்ளத்தாக்கு எப்போது சுற்றுலாப் பயணிகளால் மீண்டும் நிரம்பி வழியும் என்பது தெரியவில்லை.இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம் என்பதே யுத்த ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக உள்ளது. பாகிஸ்தானின் மிகப் பிரபலமான பத்திரிகையாளரும், ஆய்வாளருமான நஜம் சேத்தி பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சியான சமா தொலைக்காட்சியில் பேசும்போது, “இரண்டு விஷயங்களை வைத்து இந்தியா போரை ஆரம்பித்து விட்டது என்று பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும். ஒன்று நீரை நிறுத்துவது, இன்னொன்று கராச்சி துறைமுகத்தை மறிப்பது. இந்த இரண்டையும் பாகிஸ்தான் போர்ச் செயல்பாடுகள் என்றுதான் கருதும். அப்படி ஒரு சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூட நமக்கு உரிமை இருக்கிறது. இதில் பாகிஸ்தானின் எண்ணம் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் பாகிஸ்தானுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை” என்று கூறியிருக்கிறார். “இந்தியா கராச்சி துறைமுகத்தை மறித்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் மறிக்கப்படும். இதுமட்டும் நடந்தால் இந்தியா போரைத் தொடங்கி விட்டதாகத்தான் நாம் நினைக்க வேண்டும். போர் வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் போர் மூண்டால், எந்த நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் தோற்றுப்போய் இந்திய இராணுவம் முன்னேறி பாகிஸ்தானுக்குள் வரலாம். அப்படி ஒரு சூழலில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். இரண்டாவது சூழல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியையாவது இந்தியா ஆக்கிரமிக்கலாம். அப்போதும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதேபோல், அணு ஆயுதத்தை நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று நமக்கு எந்தக் கொள்கையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுதரப்பில், “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது. ஆனால் வருங்காலத்தில் நிலைமையைப் பொறுத்து இந்தக் கொள்கை மாறலாம்” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னர் ஒரு தடவை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2025/04/28/featured/126221/அணு-ஆயுத-போர்-மூளுமா/
  12. இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்; காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம் - போர் நிறுத்த பேச்சில் தொடர்ந்தும் இழுபறி damithApril 28, 2025 இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன. காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘காசாவில் எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானதாக அமையவுள்ளன. குண்டுகள் மற்றும் ரவைகளால் கொல்லப்படாதவர்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றனர்’ என்று ஐ.நாவின் மனிதாபிமான நிறுவன தலைவர் ஜொனதன் விட்டோல் எச்சரித்துள்ளார். காசா நகரில் நேற்று முன்தினம் (26) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ‘மனிதாபிமான உதவியாளர்களாக உதவிகள் மறுக்கப்படுவதை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது. மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதற்கு எந்த நியாயமும் கூற முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் உலக உணவுத் திட்டத்தின் கையிருப்புகள் தீர்ந்து வருவதை உறுதி செய்த விட்டோல் அர்த்தபூர்வமான உணவு விநியோகங்கள் எதுவும் தற்போது இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிவிப்பில், காசா பகுதியில் விநியோகிப்பதற்கு ‘சரிட்டி கிட்சன்’ அமைப்புக்கு கடைசி விநியோகங்களை வழங்கியதாகவும், அந்த உணவுகள் சில நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்தது. மாவு மற்றும் சமையல் எரிவாயு தீர்ந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடனான காசாவில் உள்ள 25 பேக்கரிகளும் மூடப்பட்டதோடு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவுப் பொதிகளும் தீர்ந்துள்ளன. பஞ்சம் அச்சுறுத்தல் நிலையை தாண்டி உண்மையாகி வருவதாக காசா ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமது குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளன’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் 50 குழந்தைகள் உட்பட 52 பேர் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்திருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி பட்டினி நிலையை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காசா பகுதியை முழுமையாக முடக்கிய நிலையிலேயே இஸ்ரேல் அங்கு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா நகரின் செய்தூன் பகுதியில் இஸ்ரேல் நேற்று காலை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு சிறுமிகள் உட்பட பலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மறுபுறம் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய காசாவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பத்து பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதில் அல் மகாசி அகதி முகாமுக்கு வடக்காக பொதுமக்கள் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் சவைதா சிறு நகரில் இஸ்ரேலிய படை மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல்களில் மேலும் நால்வர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51,495 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,524 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு மாத போர் நிறுத்தத்தின் பின்னர் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்தே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. மீண்டும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக கெய்ரோவில் உள்ள மத்தியஸ்தர்களை சந்தித்த ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவில் இஸ்ரேலுடன் பல ஆண்டு போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டிருந்தபோதும் ஆயுதங்களை களைவதை நிராகரித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கத்தை வெளியிடும் வகையில் மத்தியஸ்தர்கள் இடையே அந்த அமைப்பு நம்பிக்கையை வளர்த்து வருவதாக இந்த பேச்சுவார்த்தை தொடர்பான நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘போர் நிறுத்தம் ஒன்று அல்லது அதன் காலம் பற்றிய திட்டத்தை நாம் நிராகரிக்கவில்லை என்பதோடு பேச்சுவார்த்தை கட்டமைப்புக்குள் அதனை விவாதிக்க நாம் தயாராக உள்ளோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்த தீவிரமான முன்மொழிவுக்கும் நாம் தாயாராக உள்ளோம்’ என்று ஹமாஸ் தலைமைக்கான ஊடக ஆலோசகர் தாஹிர் அல் நொனோ குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் ஹமாஸ் தனது அயுதங்களை களைய வேண்டும் என்ற இஸ்ரேலின் பிரதான கோரிக்கையை நொனோ நிராகரித்துள்ளார். காசாவை இராணுவமற்ற பகுதியாக மாற்ற இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. ‘ஆயுத போராட்டம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்பதோடு ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எமது கைகளில் ஆயுதம் தொடர்ந்து இருக்கும்’ என்று நொனோ குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இஸ்ரேலின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஷர்ரன் ஹஸ்கல் குறிப்பிட்டார். ‘ஹமாஸ் எஞ்சியுள்ள 59 பணயக்கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நாளைக்கே முடிவுக்கு வரும்’ என்று ஹஸ்கல் கடந்த வாரம் ஜெரூசலத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார். https://www.thinakaran.lk/2025/04/28/world/126214/இஸ்ரேலின்-தொடரும்-தாக்க-5/
  13. காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி வழியாக நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்! 28 Apr, 2025 | 10:45 AM புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்குதிரும்பி சென்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாஇ பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் . நேற்றுடன் முடிவடைந்தன.மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா - அட்டாரி சோதனைச் சாவடி வழியாகபாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்குதிரும்பி சென்றனர்அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்தியாவுக்கு வந்திருந்த பல்வேறு பாகிஸ்தானியர்கள் உறவினர்களின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்ததாக தெரிவித்தனர். சரிதா என்பவரின் குடும்பம் ஏப்ரல் 29-ம் தேதியில் நடக்க இருக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். ஆனால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினர். இதுகுறித்து சரிதா கூறுகையில் "நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்துள்ளோம். அவர்கள் (அட்டாரியிலுள்ள அதிகாரிகள்) எங்களின் தாயாரை எங்களுடன் அனுப்ப மறுக்கிறார்கள். என் பெற்றோர் 1991ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்." என்றார். சரிதா அவரின் தந்தை சகோதரர் பாகிஸ்தானியர்கள் அவரது தாயார் இந்தியர். ஜெய்சால்மரைச் சேர்ந்த ஒருவர் தனது தாய் மாமா அவரது மனைவி குழந்தைகள் 36 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்தனர். இப்போது அவசரமாக திரும்புகின்றனர் என்றார். அவர் கூறுகையில் "எனது மாமா குடும்பத்தினர் 45 நாட்கள் விசாவில் பாகிஸ்தானின் அமர்கோட்டில் இருந்து ஏப்.15ம் தேதி கிளம்பி இந்தியா வந்தனர். நிலைமை இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லா உறவினர்களையும் பார்க்காமல் நாடு திரும்புகின்றனர்" என்றார். பெஷாவரைச் சேர்ந்த ஜனாம் ராஜ் (70) கூறுகையில் "எனது உறவினர்களைச் சந்திப்பதற்காக 45 நாட்கள் விசாவில் இந்தியா வந்தேன். மூன்று வாரங்களுக்கு முன்பு முதல்முறையாக இந்தியா வந்தேன். ஆனால் நிலை இப்போது எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்" என்று வேதனை தெரிவித்தார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தின் புனேரைச் சேர்ந்த குர்பக்ஸ் சிங் ஏப்.15ம் தேதி இந்தியா வந்துள்ளார். அவர் கூறுகையில் "எனது உறவினர்கள் உட்பட எனது பெரிய குடும்பத்தின் பாதிபேர் இந்தியாவில் வசிக்கின்றனர். பஹல்காமில் நடந்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் (பயங்கரவாதிகள்) மனிதத்தைக் கொன்றனர் ஆனால் அதன் சுமையை யார் தாங்கவேண்டியது இருக்கிறது என்று பாருங்கள். பல பாகிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இங்கே வந்திருக்கிறார்கள் இப்போது அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது" என்றார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வந்த நிலையில்இ ஏப்.22 பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு மிகவும் தீவிரமடைந்தது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு விசா ரத்து வர்த்தகம் நிறுத்தம் என பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதில் ஒன்று ஏப். 27ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் ஒன்றாகும். காலக்கெடுவுக்குள் வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது புதிய குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/213118
  14. இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி! மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம். இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது. எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள். பாராளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஷ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சி செய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும், மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்தனர். அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் எப்படியான முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறது தான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்க் கட்சி. அதில் மாற்றம் இல்லை. தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ் மக்களின் ஆணையும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசிய பிரச்சனையை தாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள். வட- கிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள். அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை. அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும். எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான முதலாவது சந்தர்ப்பம் இந்த உள்ளூராட்சி தேர்தல். இதில் தான் அதனை புறந்தள்ள முடியும். எமக்கு ஒற்றை ஆட்சியிலே இணக்கமில்லை. முறையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும். என்ற கோரிக்கைகளின் உறுதியான மக்கள் தீர்ப்பு தேர்தல்களில் இருந்தே வருகின்றது. எனவே, கடந்த தேர்தல் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை களையக்கூடிய முதலாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. உள்ளூரின் ஆட்சியை கூட நாங்கள் தக்கவைக்க முடியாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்று பரப்புரை செய்யக்கூடும். எனவே நாட்டுக்கும் உலகுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இது. அதனை நாம் நழுவ விடக்கூடாது. எங்களுக்கு தேவை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. அதை சொல்லுவது எப்படி. வாக்குகளை சிதறடித்துவிட்டு சொல்ல முடியாது. எனவே அதனை ஒருமுகப்படுத்தி சமஸ்டி என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் தமிழரசுகட்சிக்கு அந்த வாக்குகளை கொடுத்தால் எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு உறுதி இருக்கும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற கனமான செய்தி சொல்லப்படும். அது கேட்கப்படும். அதுவே பலமானதாக இருக்கும் என்றார். https://www.samakalam.com/இனப்பரம்பலை-மாற்றியமைக்/
  15. கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதியாக மாற்றினாலும் கேட்கமுடியாது! adminApril 28, 2025 கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.04.25) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் எமது தமிழ் இனத்திற்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானது.இந்த தேர்தலானது எங்களுடைய தமிழ் இனத்திற்கும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மானப் பிரச்சினையாக உள்ளது. உலகமெல்லாம் எங்களுடைய தமிழ் மக்கள் என்று சொன்னால் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் தமிழ் மக்கள் என்று சொன்னால் கல்வியிலே சிறந்து கல்விமான்களாக விளங்குபவர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நாடு முழுவதும் மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் யாழ்ப்பாணத்திற்கு என்ன நடந்தது என்று கேள்வி தான் இருக்கிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த விடயத்தை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.மக்கள் இந்த தேர்தலில் அனைவரும் ஒரு அணியாக நின்று இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த மாற்றத்தை நாம் காட்ட முடியும். என்னைப் பொறுத்தவரையில் சிறிய கட்சிகள், சுயேட்சை குழுக்கள், யாழ்ப்பாணத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் அது வீணாக போன வாக்குகளாகவே நான் கருதுவேன். கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது. கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றுவது ஒரு சிறிய உதாரணம். சாதாரண விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்தால் அந்த கட்சியின் சார்பிலே தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தங்களது கருத்து தெரிவிக்க முடியாத நிலை இருக்கிறது. அதே கட்சியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும் உறுப்பினர்களும் தெரிவாகியிருந்தால் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா சபைகளின் தவிசாளர்களும் பின்னர் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறான நிலைமை வந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதண்டு விடுங்கள் என சொல்லுவார்கள். இது இதண்டும் விடயம் அல்ல. இது மக்களின் பிரச்சினை. இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் இந்த உள்ளாட்சி சபைகள் இருக்குமாக இருந்தால் நாம் அதற்கு எதிர்ப்பினை காட்ட முடியும். நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளாக நாங்கள் எழுந்து பேசினால் எங்களை பார்த்து சொல்வார்கள். நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல. நாமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்களே சொல்வோம் என எமக்கு கூறுவார்கள். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை கேட்டு அதை சொன்னால் கூட பரவாயில்லை. அவர்களின் கருத்தை கூட கேட்பதில்லை. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களை தனக்கு தெரியாது என அனுர அரசாங்கத்தின் அமைச்சர் சொல்கிறார். இதுதான் அவர்களின் கட்சியினுடைய நிலைமை. 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நாடாளுமன்றத்திலேயே இதுதான் நிலைமை என்றால் 9 ஆயிரம் வரையான பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கின்ற உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை நினைத்துப் பாருங்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலிவடக்கில் காணிகளை விடுவிப்பதாக மக்கள் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அந்த விடுவிக்கப்பட காணிகளை என்ன தேவைக்காக பயன்படுத்தப் போகின்றது என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். அதன் காணி பயன்பாட்டை பற்றி தீர்மானிக்க உள்ளூர் அதிகார சபைகள் முக்கியமானது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்திருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். உண்மையாக இருக்கலாம். நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசுவதை நான் காணுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தின் 30 நாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்ற போது நான் ஒரு நாளும் அவர்கள் பேசுவதை காணவில்லை. ஏன் செய்தியில் கூட அவர்கள் பேசியதை காணவில்லை. மட்டக்களப்பில் எங்கள் கட்சியிலிருந்து வேண்டாம் என்று சொல்லி வெளியில் விடப்பட்ட ஒருவர் இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர். இது தான் அவர்களது நிலைமை. ஜனாதிபதிக்கு இவை பற்றி தெரியாது. ஜனாதிபதிக்கு இன்றைய பொய்கள் என்று சொல்லி ஒரு பட்டியல் வழங்கப்படும். அதை அவர் வாசிப்பர். ஜனாதிபதி சொல்கின்ற பொய்களை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது. ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்து இருந்தால் ஜனாதிபதி இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்திருக்கமாட்டார். நாட்டில் நிதியில்லை. அபிவிருத்தி செய்வதற்கு நிதி இல்லை. நிதி இல்லாத நாட்டை வைத்துக் கொண்டு மன்னாரிலிருந்து புத்தளத்துக்கு 90 கிலோமீட்டர் வீதி அமைக்க போகிறாராம், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க போகிறாராம்,வடக்கில் தொழில்பேட்டைகள் அமைக்க போகிறார்களாம். இதுக்கெல்லாம் எங்கிருந்து நீதி வரப்போகிறது. குறைந்தது வரவு செலவு திட்டத்தில் இதனை ஆய்வு செய்வதற்காவது நிதியை ஒதுக்கி இருக்கலாமே. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தீவகப் பகுதிகளை சுற்றி திரிகிறார். அவருக்கு தெரியும் தீவக மக்களிடம் குடிநீர் தருகிறோம் என்று சொன்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று. தீவகத்திற்கு குடிநீரை கொண்டு செல்வதற்கு எந்த திட்டமும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. ஏனைய தமிழ் கட்சிகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் சைக்கிள் கட்சியின் தலைவர் மட்டக்களப்பில் மண்டூருக்கு சென்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மண்டூர் என்பது எனது பாட்டனாரின் பிறந்த ஊர். இந்த ஊரில் சைக்கிள் கட்சி கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதை நான் வியப்பாக பார்த்தேன்.வேட்பாளர் கூட்டத்தில் அவர் பேசிய படம் மாத்திரமே கிடைத்தது. மக்களின் படங்களை காணவில்லை. அது தொடர்பில் விசாரித்து பார்த்தபோது பெரிய அளவில் அங்கு மக்கள் கூடவில்லை என அறிந்தேன். வெளியில் இருந்து இதனை பார்ப்பவர்கள் இதனை எப்படி யோசிப்பார்கள். மட்டக்களப்பை பொறுத்தவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11 உள்ளூராட்சி சபைகளில் 9 உள்ளூராட்சி சபைகளை வெல்லக் கூடிய நிலைமையில் இருக்கிறது. ஏனைய இரண்டு உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை பெற்றவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமே சைக்கிள் கட்சி கடந்து பாராளுமன்றத் தேர்தலில் ஆயிரத்து 250 வாக்குகளையே ஒட்டுமொத்தமாக எடுத்தார்கள். மட்டக்களப்பில் ஒரு வட்டாரத்தை கூட வெல்ல முடியாத நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என சொல்லுகிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு பாடம் புகட்டலாம் என்று சொல்லலாமே. பிள்ளையான் அணிக்கு பாடம் புகட்டலாமென சொல்லலாமே. வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டலாம் என்று சொல்லலாமே. தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கின்ற நிலையில், எங்கள் கட்சியினுடைய மூத்த உறுப்பினர்களின் அன்பு கட்டளை மீறி நாங்களும் ஏனைய தமிழ் கட்சிகளை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும். யாழ் மாவட்டத்திலிருந்து எச்சரிக்கையாக சொல்கிறேன். தயவுசெய்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு பாடம் புகட்டுவதை விட்டுவிட்டு உங்களுடைய அரசியலை முன்னெடுங்கள். உங்கள் கட்சியின் கொள்கையை சொல்லுங்கள். மக்கள் வாக்களிக்கட்டும். தமிழ் அரசுக் கட்சியையும் சுமந்திரனையும் விட்டால் அவர்களுக்கு அரசியலை கொண்டு செல்ல முடியாது. பொது எதிரியாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியை பார்க்கின்றோம். எமது மண்ணில் சிங்கள தரப்புகள் ஆட்சி செய்யக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு பாடம் புகட்டுவோம் என்று சொல்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். மே 7ம் திகதி எனக்கு தொலைபேசி எடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வென்றுவிட்டது என்ற தகவலை சொல்லுங்கள் – என்றார். https://globaltamilnews.net/2025/214769/
  16. GMT நேரப்படி நாளை திங்கள் 28 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  17. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன், சூர்யகுமார் யாதவின் அதிரடிப் புயல்வேக அரைச் சதங்களுடனும், நமன் டீர், கோர்பின் பொஷ் ஆகியோரின் கமியோ விளாசல்களுடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், கேஎல் ராஹுல் வேகமாக அடித்தாடத் திணறியதாலும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் விராட் கோலியின் நிதானமான அரைச் சதமும், க்ருனல் பாண்டியாவில் அதிரடியான அரைச் சதமும் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  18. கனடாவின் வான்கூவர் திருவிழாவில் கோர விபத்து : பலர் உயிரிழப்பு Canada Accident World By Raghav 4 hours ago கனடாவில் (Canada)நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் (Lapu Lapu Day street festival) பங்கேற்ற மக்கள் மீது கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26.04.2025) இரவு 8.00 மணியளவில் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணை இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கருப்பு நிற எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது. மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. https://ibctamil.com/article/lapu-festival-vancouver-car-accident-1745744961
  19. MI 215/7 LSG (9.1/20 ov, T:216) 89/3 LSG need 127 runs in 65 balls. CRR: 9.70 • RRR: 11.72 • Last 5 ov (RR): 60/2 (12.00) இன்று மும்பை வெல்லும்! எனக்கும் 2 புள்ளிகள் கிட்டும்!😁
  20. 5th Match (D/N), Wankhede, April 27, 2025, Indian Premier League MI 215/7 LSG (0.1/20 ov, T:216) 0/0 LSG need 216 runs in 119 balls.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.