Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இது ஒரு கரும்பறவை! Game of Thrones இல் சித்துவேலைகள் செய்தமாதிரி நாளைக்கு CSK வெல்ல வாலாயம் செய்து விட்டுள்ளேன்🤪
  2. GMT நேரப்படி நாளை வெள்ளி 25 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நந்தன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 42வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராட் கோலியும் டேவ்தட் படிக்கலும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புயல்வேகத்தில் 49 ஓட்டங்களை எடுத்து சவாலான வெற்றி இலக்கை அடையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 18 ஓவர்கள் முடிவில் வெற்றிபெற 18 ஓட்டங்களே தேவைப்பட்டிருந்தது. எனினும் 19வது ஓவரில் ஜொஷ் ஹேஸல்வூட் இரு விக்கெட்டுகளையும், 20 ஓவரில் யஷ் தயால் ஒரு விக்கெட்டையும், இன்னொரு விக்கெட்டை ரண் அவுட் மூலமாகவும் அதிக ஓட்டங்களைக் கொடுக்காது எடுத்ததனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪
  4. தோழர் ஷோபாசக்தியை சகதி என்று @goshan_che தான் சொன்னார். தோழர் ஷோபாசக்தியின் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்கின்றார் என்பதை நான் ஆராய்வதில்லை. அவரின் எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும் பல திறப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அவர் எனக்குப் பிடித்த கதைசொல்லி. புஷ்பராணி அக்காவின் “அகாலம்” புத்தகம் மூலமாகவே அவரைத் தெரியும். போராட்டம் முளைவிட்ட காலத்தில் ஓர்மத்துடன் செயற்பட்டவர் சிறைவாசத்திற்குப் பின்னர் ஒதுங்கிவிட்டார்.
  5. பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? April 22, 2025 — கருணாகரன் — “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாளிகளும் (பெருந்தலைகளும்) கால்மேல் கால் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்குப் பதிலாக சிறு எலிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து வீரம் பேசுகிறது NPP. இதனால்தான் “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியைப் பிடித்து வீரம் பேசுகிறது NPP” பகடி செய்கிறார்கள் மக்கள். அநுர குமாரதிசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று, NPP அரசாங்கம் ஆட்சியமைத்தபோது மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பிருந்தது. NPP ஒரு மாற்றுச் சக்தி என்ற வகையில் மாற்று ஆட்சியொன்றை வழங்கப்போகிறது. நாட்டில் நிச்சயமாக மாற்றம் நிகழப்போகிறது என. இரண்டாவது, நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளிய, ஊழல் செய்த முன்னாள் ஆட்சியாளர்களின் மீது, அவர்களுடைய தவறான செயல்களின் மீது NPP நடவடிக்கை எடுக்கும் என. NPP ஆட்சியில் ஆறுமாதங்கள் கடந்த விட்டது. மக்கள் எதிர்பார்த்ததைப்போல அல்லது NPP கூறியதைப்போல இவை இரண்டுமே நடக்கவில்லை. பதிலாக மக்களைத் திசைதிருப்பும் விதமாக அல்லது மக்களுக்கு ஏதோ செய்திருப்பதாகக் காட்டுவதற்காக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன, மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ, பிள்ளையான், வியாழேந்திரன் என எலிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அண்மைய கைது பல வகையான அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று இன்னும் சரியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் வெளியே வந்துள்ள செய்திகள் இரண்டு விதமாக உள்ளன. 1. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் பிள்ளையானுக்குத் தொடர்பிருந்ததான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக. இது அவர்கைது செய்யப்பட்டபோது வெளியான செய்தி. 2. 2019 ஏப்ரல் 21 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத்தாக்குதல்களோடு பிள்ளையானுக்குத் தொடர்புள்ளதாகவும் அதைப்பற்றிய விசாரணைகளை நடத்த வேண்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பிந்திய செய்தி. இப்போது பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் பிள்ளையான் தரப்பிலிருந்து மேலும் சிலர் கைதாகக் கூடும். இதை விட “பிள்ளையான் மிகப் பெரிய குற்றவாளி. அவர் இலகுவில் தப்ப முடியாது. அவரைத் தேசப்பற்றாளர் என்று கம்மன்பில சொல்வது வெட்கக் கேடானது” என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அரசாங்கத் தரப்பிலிருந்து பிள்ளையானைப் பற்றி வருகின்ற சேதிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. பிள்ளையானின் இந்தக் கைது NPP அரசாங்கத்தின் அரசியல் ரீதியான நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. காரணம், 1. வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் செல்வாக்குள்ள தரப்புகளை இலக்கு வைக்கும் NPP அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கை இது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஏனென்றால், பிள்ளையான் கிழக்கு மாகாணத்தை (கிழக்குப் பிராந்தியத்தை) பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கட்சியின் தலைவர். கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். 2020 இல் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர். இராஜாங்க அமைச்சராக இருந்தவர். 2024 தேர்தலில் அவர் வெற்றியீட்ட முடியவில்லை என்றாலும் கிழக்கின் வலுவான அரசியற் சக்தியாக பிள்ளையான் இருக்கிறார். குறிப்பாக வரவுள்ள உள்ளுராட்சித் தேர்தலையொட்டி கிழக்கிற்கான ஒரு வலுமிக்க அரசியற் கூட்டணியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனையும் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனையும் இணைத்து உருவாக்கியிருக்கிறார். இதெல்லாம் அரசாங்கத்தின் ‘இலங்கையர்களாக ஒன்றிணைவோம்‘ என்ற பொது அடையாளத்தின் கீழ் அனைத்துத் தரப்பினரையும் கரைக்கும் திட்டத்துக்கு பொருந்தாத, பிராந்திய அடையாளத்தை வலுவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் என்பதால், பிள்ளையான் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 2. பிள்ளையானின் கைது, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அதற்கான விசாரணைகள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியற் சக்திகளுக்கு உள்ளுர விடுக்கப்பட்டதொரு எச்சரிக்கையாகும். குறிப்பாக வடக்கிலுள்ள முன்னாள் ஆயுதம் தாங்கிய தரப்புகளுக்கு. தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவற்றுக்கு அப்பால் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில், பலவிதமான குற்றச் செயல்களோடு (குற்றப்பின்னணிகளோடு) சம்மந்தப்பட்டவை. ஆகவே அவற்றையும் குறிவைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் உள்ளுர உணர்த்துகிறது. ஏனென்றால் 18 ஆண்டுகளுக்கு முன் காணாமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்தின் விடயத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றால், அதையும் விடப் பாரதூரமான கொலைகள், கடத்தல்கள், குற்றச்சாட்டுகளோடு சம்மந்தப்பட்ட ஏனைய அரசியற் தரப்பினர்களும் (முன்னாள் இயக்கத்தினரும்) தப்ப முடியாது என்றுதானே அர்த்தமாகும். 3. இவ்வாறு உள்ளுர அச்சத்தை உண்டாக்குவதன் மூலம் அவை அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை விடுத்து, இரகசிய உடன்படிக்கைகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும். அல்லது தணிவு நிலையில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கும். இது பிராந்திய அரசியலின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்வதற்கான ஓர் உபாயமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஆட்சிலிருந்த ஐ. தே. க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பெரமுன போன்றவையெல்லாம் போட்டிக்கு இனவாதத்தை வளர்க்கும் அரசியல் உபாயத்தைக் கொண்டவை. இதற்காக அவை தமிழ் மக்களைச் சீண்டும் விதமாக அல்லது தமிழ் மக்களுக்கு நேரடிப் பாதிப்பை உண்டாக்கும் விதமாக அரசியலை முன்னெடுத்தவை. இவ்வாறு செய்வதன் மூலமாக தமிழ் மக்களை தமிழ்த்தேசியத்தின் பக்கமாகத் திரள வைப்பதும் அதற்கு எதிராக சிங்களத் தேசியவாத்தை வலுப்படுத்தி, அதனுடைய பக்கமாக சிங்கள மக்களை அணி திரள வைப்பதுமே அந்தக் கட்சிகளின் அரசியல் உபாயமாக – உத்தியாக இருந்தது. இனவாதத்துக்கு இனவாதம் – போட்டியான இனவாதத்தை வளர்த்துக் கொள்வது. அதாவது உனக்கு நான். எனக்கு நீ என்ற விதமாக. இந்த அடிப்படையில்தான் கடந்த காலத்தில் நாய்களின் தலையை வெட்டி தமிழ் வேட்பாளர்களின் வீடுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டதும் தமிழ்ப்பகுதிகளில் கிறிஸ் பூதத்தை நடமாட விட்டதும் கூட நடந்தது. ஏனைய சிங்களக் கட்சிகளுக்கு இனவாதம் ஒரு முதலீடு மட்டுமல்ல, அதற்குப் பிராந்திய அரசியலும் தேவையாக இருந்தது. பிராந்திய அரசியல்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாத அரசியலுக்கான முதலீடாகும். ஆனால், NPP யின் அணுகுமுறையோ வேறாக இருக்கிறது. அது, எதிர்முனையைப் பலப்படுத்துவதை விடப் பலவீனப்படுத்தவே விரும்புகிறது. அதனுடைய நோக்கம் பிராந்திய அரசியலை இல்லாதொழிப்பதாகும். அதனால்தான் அது ஏனைய பிரதேசங்களையும் விட வடக்குக் கிழக்கை மையப்படுத்தித் தன்னுடைய வலுவைக் கூடுதலாகச் செலவழிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் இலங்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிராந்திய அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, முழு இலங்கையை மையப்படுத்திய அரசியலொன்றை ஸ்தாபிப்பதுமாகும். இதற்கு முன்பு இதற்கான அரைகுறை முயற்சிகளை ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை மேற்கொண்டிருந்தாலும் அவற்றுக்குள் நிறையத் தடுமாற்றங்கள் இருந்தன. One Nation One country, ஏக்க ராஜ்ஜிய போன்ற பிரகடனங்கோடு இதற்கான முயற்சிகளை அவை எடுத்தாலும் பிராந்திய அரசியலை முடக்கும் எண்ணம் அவற்றுக்கிருக்கவில்லை. ஏனென்றால், அவற்றினால் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அவற்றின் ஏஜென்டுகள் பிராந்தியத்திலிருந்தாலும் அவற்றினால் பிராந்தியத்திச் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அந்த ஏஜென்டுகளை அவை பலப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. இதனால் மொத்தில் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பெரமுன வைப் பற்றி எதிர்மறைச் சித்திரமே தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடம் இருந்தது. NPP இதில் ஒரு மாறுதலான பாத்திரத்தை உருவாக்கியது; வகிக்கிறது. அது சத்தமில்லாமல் அல்லது எதிர்பாராத விதமாக வடக்குக்கிழக்கு மலையகப் பிராந்தியத்தில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதனால், பிராந்திய அரசியலை இல்லாதொழிக்கும் அதனுடைய (சிங்கள மேலாதிக்க மனோநிலையினுடைய) அடிப்படையில் செயற்பட அதற்கு வசதிப்பட்டுள்ளது. ஆனால், இது எவ்வளவுக்குச் சாத்தியம் என்பது கேள்வியே. ஏனென்றால் இது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது. பிராந்திய மக்கள் சிங்கள மக்களையும் விட வேறுவிதமான – பிரத்தியேகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பவர்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் சிங்கள மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் விட வித்தியாசமானது. இதற்கு பிராந்திய சக்திகளை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது, அச்சமூட்டுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியாது. எதிர்பார்க்கும் விளைவுகளை எட்டவும் முடியாது. அதற்குள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரின் தலைகள்தான் உருளும். பலியாக்கப்படும். இது இதுவரையிலும் சிங்களத் தரப்புடன் ஒத்துழைத்த அல்லது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த அரசியலுக்கு வழங்கப்படும் தண்டனையாகவும் உள்ளது. அப்படியென்றால் இன்னொரு நிலையில் இது பிராந்திய அரசியலைப் பலப்படுத்துவதாகவும் அமையும். https://arangamnews.com/?p=11970
  6. வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு ! ShanaApril 24, 2025 வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, தெரிவித்தார். இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். "அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும். இது ஒரு அரிய சந்தர்ப்பம். வெற்றுக் கண்களால் இவ்வளவு நெருக்கமாக அணுகுவதைக் காண்பதும் அரிது. கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இது தெரியும்." என்றார். https://www.battinews.com/2025/04/blog-post_100.html
  7. ‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர் இலங்கை சில மாத இடைவெளிக்குள் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் என்ற இரு பெரும் தேர்தல் களங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றாவது தேர்தலாக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் தேர்தலில் இம்முறை தென்பகுதியை விடவும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் வழக்கத்திற்கு மாறாக ஆட்சியிலுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களை முற்றாகவே கைப்பற்றிவிடும் நோக்கில் அடித்தாடத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகள் அதனைத் தடுத்தாடும் வியூகங்களை அமைத்து பிரசாரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன.ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 48,498 வாக்குகள், கிழக்கு மாகாணத்தில் 197,689 வாக்குகள் என மொத்தம் 246,187 வாக்குகளைப்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியானதுடன் நடத்திய பாராளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் 5 பாராளுமன்ற ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் 7 பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றிக்கொண்டது. இந்நிலையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வடக்கு,கிழக்கை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமான தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்திற்கான சூறாவளி பிரசாரப் பயணத்தை முடித்து 17ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கான பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்கிற்கான பிரசாரப் பயணத்தை முடித்து கிழக்கு மாகாணத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.இவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்கள் பலரும் என்றுமில்லாத வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியிலும் திக்கித்திணறி உரையாற்றி தமிழ் மக்களையும் அவர்களின் வாக்குகளையும் கவர முற்படுகின்றனர். இவ்வாறு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையப்படுத்தி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-என்.பி.பி. புயல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள நிலையில், இந்த அனுர அரசுப் புயல் இனப் பிரச்சினை என்ற இலங்கையின் நீண்டகால கருவைக் கலைத்து விடுவதுடன், தமிழ்த் தேசிய அரசியலையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்று விடும் என்ற அச்சம் தமிழ்த் தேசிய வாதிகளிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. இவ்வாறாக வடக்கு, கிழக்கில் மையம் கொண்டுள்ள அனுர அரசு புயல், மிரட்டியும் அபிவிருத்தி ஆசைகாட்டியும் தமிழர்களின் உள்ளூராட்சி சபைகளைக் கபளீகரம் செய்து விடத் துடிக்கின்றமைதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழர் உரிமை சார் விடயங்களுக்கும். இனப் பிரச்சினை தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாட்டுக்கும் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுகின்றோம் என்ற ரீதியில் செய்த வரலாற்றுத் தவறான தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததன் விளைவுகளை தற்போது தமிழினம்தான் அனுபவிக்கின்ற நிலையில், உள்ளூராட்சி சபைகளும் பறிபோய்விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் முதல் தடவையாக சிங்கள ஜனாதிபதியையும் சிங்கள கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கு, கிழக்கில் தெரிவு செய்துள்ளனர். எனவே, தற்போது நாட்டில் இனப் பிரச்சினை என எதுவும் கிடையாது என அனுரகுமார அரசு சர்வதேச மட்டத்தில் தீவிர பிரசாரங்களில் இறங்கியுள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு 5 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததனால் வடக்கு, மாகாணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து தமிழ்மக்கள் தொடர்பில் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டிக்கொள்வதுடன், கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்குமென மிரட்டுவதுடன் தமது வாக்கு வங்கிக்கு சவாலாக.இடையூறாக இருப்போரை கைது செய்வது, கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டுவதுமென இரு வியூகங்களில் களம் இறங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு வியூகங்களில் முதலாவது வியூகம் தற்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. பலவருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்படுகின்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணம் சென்று, தான் தமிழ் மொழியில் பேச விரும்புவதாகக்கூறித் திக்கித்திணறி ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேசுகின்றார். தையிட்டி சட்டவிரோத விகாரை நிலைமைகளை ஆராயவென அமைச்சர்கள் விஜயம் செய்கின்றனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி 30 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரால் மீளக்கையளிக்கப்படுகின்றது. தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் வடக்கிற்குச் சென்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இந்த இரு இரு வியூகங்களில் இரண்டாவது வியூகம் தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில்தான் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் கட்சியின் கையில் இருந்தால்தான் நிதி வழங்கப்படும் என்று மட்டக்களப்பில் வைத்தே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாகக் கூறி தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் சட்ட விதிமுறை மீறல். அடுத்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் கட்சிகளின் தலைவர்களுமான தமிழ் வாக்குகளை ஓரளவுக்கு கவரக்கூடிய வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரின் கைது. இதில் வியாழேந்திரன் பிணையில் வெளிவந்துள்ள நிலையில், பிள்ளையான் தொடர்ந்தும் சிறையில் உள்ளார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசையும் ஜனாதிபதியையும் அதிகம் விமர்சிக்கும் தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் எம்.பியும் எவ்வேளையிலும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைதாகலாம் என தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவ்வாறாக அபிவிருத்தியைக் காட்டியோ, அச்சுறுத்தியோ வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிவிட அனுரகுமார அரசு தீயாய் வேலை செய்து வரும் நிலையில், தமிழர் தாயகம் முற்று முழுதாக பேரினவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் நிலைமையும் இல்லாமல் இல்லை. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையில் ஏற்பட்ட பிணக்குகள், பிளவுகள் சீர்செய்யப்படாது பிரிவினைகள் தொடர்வதனால் தமிழர்களும் கடந்த தவறை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மையம் கொண்டுள்ள ‘அனுர புயல்’ தமிழர் பிரதேச உள்ளூராட்சி சபைகளை அள்ளிச் செல்லுமா? தமிழ்த் தேசிய அரசியலையும், தமிழர் உரிமைக் கோஷங்களையும் தூக்கிச் சுழற்றி அடிக்குமா? இனப் பிரச்சினை என்ற விடயத்தைக் காணாமல் போகச் செய்யுமா? என்ற கேள்விகளுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொருவரும் தமிழனாகவும், தன்மானத் தமிழனாகவும் தடம்மாறாத் தமிழனாகவும் தமிழ்த் தேசிய இனமாகவும் பதிலளிக்க, வாக்களிக்க வேண்டிய தீர்க்கமான தேர்தலாக எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் பிளவுண்டு கிடந்தாலும், இந்த ஜே .வி.பி.-என்.பி.பி. அரசை எதிர்ப்பதிலும் வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் அரசின் கைகளுக்குச் சென்று விடாது தடுப்பதிலும் ஓரணியாகத் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. அவ்வாறு சென்று விட்டால் தமிழர் தற்போது கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும் என்பதை ‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ் இளையோருக்குப் புரிய வைக்க படாதபாடுபடுகின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றம்-என்ற-மாயவலைக்குள்-சிக்கியுள்ளனர்/91-356089
  8. புதிய மனிதனாக மாறிய இளைஞன் adminApril 24, 2025 யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , இளைஞர்களின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/214644/
  9. யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு adminApril 23, 2025 தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்றையதினம் புதன்கிழமை யாழ் ஊடக மையத்தில் மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது. அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது. அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும் என தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் M.S.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214635/
  10. பஹல்காம் தாக்குதல் காஷ்மீரில் அமைதி ததும்புகிறது, அங்கு வருடத்திற்கு ரெண்டு கோடிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் பெருமுதலீடுகளைச் செய்யவிருக்கிறார்கள் எனும் செய்திகளைக் கேட்டபோது ஏதோ ஒன்று இடறலாகத் தோன்றியது. ஒரு மாநிலத்தின் எல்லா சிக்கல்களையும் சில ஆண்டுகளில் ஒழித்து சொர்க்க பூமியாக்க முடியாது. எந்த ஊரும் அதன் வரலாற்றின் தொடர்ச்சியிலே நின்றுகொண்டிருக்கிறது. வரலாறு எதையும் மறக்கவோ முழுக்க மாறவோ போவதில்லை. ஆனாலும் சற்று சபலம் ஏற்பட்டது, என் மாணவர் ஒருவர் காஷ்மீருக்கு சுற்றுலா வரும்படி கேட்டபோது. அங்கு அவரது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று கூறியபோதும், அங்கு கிடைக்கும் இளஞ்சிவப்பு தேநீரை எனக்குப் பரிசளித்தபோதும். நல்லவேளை நான் என் விவாகரத்து செட்டில்மண்டின்போது ஏற்பட்ட கடனில் இருந்து மீளவில்லை. கடன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நான் பஞ்சப்பரதேசியாக இருப்பதனால் இம்மாதிரிப் பயணங்கள் செல்வதில்லை. இல்லாவிட்டால் காஷ்மீருக்குப் போய் ஒருவேளை சிக்கியிருப்பேன் எனத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த அற்புதமான இயற்கைப் பேரெழிலின் தொட்டிலைக் காண்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம், ஏன் வணிக நோக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தினார்கள் என்பதெல்லாம் வேறுவிசயம். அனேகமாக எல்லா தாக்குதல்களின் பின்னாலும் இப்படியான அரசியல் பொருளாதாரக் கணக்குகள் உள்ளன. இத்தனை பேர்கள் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாதிகளின் படத்தை அரசு வெளியிட்டிருக்கிறது. எதற்கு விருது கொடுப்பதற்கா? இவ்வளவு வேகமாக துல்லியமாக விவரத்தைத் தோண்டியெடுக்க முடியுமெனில் இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள்? பெஹல்கம் அருகிலுள்ள மலைப்பகுதியில் தீவிரவாதிகள் திரிவதாக கடந்த வாரம் செய்தி வந்துள்ளது. ஆனாலும் அங்கு பயணிகள் பாதுகாப்பற்றுத் திரிய அனுமதித்திருக்கிறது அரசும், காவல்துறையும், ராணுவமும். ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும் நாம் இதைச் சொல்லலாம். அதனால் எந்த பயனும் இருக்காது என நினைக்கிறேன். மக்கள் இம்மாதிரி பகுத்தறிந்து அரசைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் உணர்ச்சிகரமாகவே முடிவெடுப்பார்கள். அதனாலே நான் இந்த மயிர்பிளக்கும் விவாதங்களிலோ, வளர்ச்சிக் கதையாடலுக்காகவும், அரசியல் நோக்கத்துக்காகவும் அப்பட்டமான பாதுகாப்புப் பிரச்சினைகளை அரசு காணாமல் விடுவதன், நடந்தபின் பெரிய டிராமா போடுவதன் அபத்தத்தைப் பற்றிப் பேசுவதில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இந்தத் தாக்குதல் மிகப்பெரிய வடுவை இந்திய சமூகத்தில் ஏற்படுத்தும் - இஸ்லாமியர் அல்லாதோரை அடையாளம் கண்டு குறிவைத்துச் சுட்டிருக்கும் செய்தி வெறுப்பரசிலை வளர்க்க உதவும். அதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப்போல தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் எல்லைதாண்டி வருகிறார்கள், எப்போதெல்லாம் பாதுகாப்புப் படைகள் விலக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவர்கள் திட்டமிட்டுத் தாக்குவார்கள். மேலும் இது ஒரு வெளியுறவுத் துறை பிரச்சினை - பாகிஸ்தானின் பொருளாதாரம் உருக்குலைந்து வருகிறது. அங்கு நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தனியாருக்கு தாரை வார்ப்பதால் பாதிக்கப்படும் மக்கள் போராடுகிறார்கள். அங்குள்ள ராணுவத்துக்கும் அரசுக்கும் இம்மாதிரி தாக்குதல்கள் மக்களைத் திசைதிருப்பும் காய்நகர்த்தல்கள். இதையெல்லாம் இரும்பு, உருக்கு, பித்தளைக் கரம் வைத்தெல்லாம் தடுக்க இயலாது. உஷாராக இருக்க மட்டுமே இயலும். பாகிஸ்தானில் தாக்குதல் தொடுக்காமல் அங்கு நேரடியாக பெரும் முதலீடுகளைச் செய்து அந்த அரசு, சமூகத்தின் நன்மதிப்பை வளர்த்து, பொருளாதார ரீதியாகவும் (சீனா இலங்கைக்குச் செய்வதைப்போல) நம்மைச் சார்ந்து இருக்கும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தினால் அவர்களுடைய ராணுவமும் நம் சொல்லுக்குக் கட்டுப்படும், இயல்பாகவே எல்லை தாண்டிய பயங்கரவாதம் அருகும். இதை நாம் கடந்த இரு பத்தாண்டுகளாக செய்திருக்க வேண்டும். இவர்கள் அரசியலின்பொருட்டு நேர்மாறாகவே செயல்படுகிறார்கள். கொல்லப்பட்ட 26 பேர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். பலரும் தேனிலவு கொண்டாடவும் சில நாட்கள் மகிழ்ந்திருக்கவும் சென்றவர்கள். குழந்தைகள் முன்னால் அப்பாவைக் கொல்வது கொடூரமானது. என்னமாதிரி மனிதர்கள் இவர்கள்! ரொம்ப பழமையான தீவிரவாதிகள் போதும் - ஆண்களைக் கொன்றாலே குடும்பம் நிலைகுலையும், நாடு தத்தளிக்கும் என நம்பி ஆண்களை மட்டுமே தேர்ந்து சுட்டிருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது - இன்றைய இந்திய சமூகம் ஆணின் உயிரைப் பெரிதாக மதிப்பதில்லை (ராணுவ வீர்கள் விதிவிலக்கு). அப்பெண்களும் 'விதவைகளாகப்' போவதில்லை. இது ஒரு பேரிழப்பு, அதிர்ச்சிதான் என்றாலும் படித்த அறிவுள்ள அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள், சொந்தமாய் சம்பாதிது வாழ்வார்கள். அந்தக் குழந்தைகளைத்தாம் இது ஆயுள் முழுக்கவும் பாதிக்கும். அவர்களை பயமிக்கவர்களாகவோ வன்முறையாளர்களாகவோ மனச்சிக்கல் கொண்டவர்களகவோ மாற்றும். இது ஒரு கொடுங்கனவாக நீடிக்கும். இம்மாதிரித் தாக்குதல் நூறு கலவரங்களுக்குச் சமமானது. அது மக்களின் மனத்தில் நீங்காமல் நிலைத்திருக்கும். நமது புறநானூற்றுப் பாடல்களைப் பாருங்கள். பண்பாட்டு மனம் முழுக்க பிணங்களும் ரத்த ஆறுமே நிறைந்திருக்கிறது. எதிரியின் ரத்தத்தைக் கொண்டாடிப் பாடுவதும் நம் ரத்ததுக்காக காலங்காலமாய் இரங்குவதுமே சமூக உளவியல், இலக்கியம், பண்பாடு. இது உருவாக்கும் வெறுப்பரசியலைத்தான், ஆழமான சமூகப் பிளவைத்தான் நாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது. தீவிரவாதிகளைக் கொன்றாலும் அது முடிவுறாது. அதற்கு இச்செய்திகளை நற்செய்திகளால் நிரப்ப வேண்டும். அதற்கு ஊடகங்களும், மத அமைப்புகளும், ஆளுமைகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த அமைதியற்ற காலம் முடிவுக்கு வரவேண்டும். https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_23.html
  11. உங்களை மேலேயும் கீழேயும் தூக்கிப்போடுவது நீங்கள்தான்! தெரிவுகள் அப்படி!😜
  12. GMT நேரப்படி நாளை வியாழன் 24 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 16 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஏராளன் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  13. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 41வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பப் போனதால் 13 ஓட்டங்களிலேயே 4 விக்கெட்டுகள் பறிபோயிருந்தது. பின்னர் ஹென்றிக் க்ளாஸனின் 71 ஓட்டங்களுடனும் அபிநவ் மனோகரின் 43 ஓட்டங்களுடன் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே எடுத்தது. ட்ரென்ட் போல்ற் 26 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இலகுவான வெற்றி இலக்கை வேகமாக அடையும் நோக்கில் வேகமாக அடித்தாடினர். ரோஹித் ஷர்மாவின் 70 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 40 ஓட்டங்களுடனும் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதிப் படியில் நின்ற @நிலாமதி அக்கா மேலே முன்னேற @Ahasthiyan இறங்குமுகத்தில் கீழே வந்துள்ளார். கூடவே @Eppothum Thamizhan உம் நிற்கின்றார்!
  14. ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க் April 23, 2025 11:51 am அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் மஸ்க் ஒரு அரசியல் அங்கமாக மாறியதால் விற்பனை சரிந்ததாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாகன வருவாயில் டெஸ்லா நிறுவனம் 20 வீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் லாபம் 70 வீதத்திற்கும் அதிகமான சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு உலகம் முழுவதும் டெஸ்லாவுக்கு எதிர்ப்புகள் மற்றும் புறக்கணிப்புகளைத் தூண்டியுள்ளது. ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில் மஸ்க்கின் பங்கு குறித்த கூக்குரலுக்கு மத்தியில் நிறுவனத்தின் அண்மைய நட்டம், நிறுவத்தின் மீதான கவனத்தை குறைத்துள்ளதை மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். கூட்டாட்சி செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசாங்க பணியாளர்களைக் குறைப்பதற்கும் ட்ரம்பின் அரசாங்கத் துறை (டோஜ்) முயற்சியையும் அவர் மஸ்க் வழிநடத்துகிறார். அடுத்த மாதம் முதல் “டோஜுக்கு ஒதுக்கப்படும் நேரம்” கணிசமாகக் குறையும்” என்றும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/musk-to-reduce-doge-role-after-tesla-profits-plunge/
  15. காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே ஆலோசனை! April 23, 2025 ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இன்று (ஏப்.23) காலை சவுதியில் இருந்து புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் அப்பா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை வழியாக இராணுவத்தினர் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.ilakku.org/காஷ்மீரில்-சுற்றுலா-பயணி/
  16. பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி Vhg ஏப்ரல் 22, 2025 கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது. அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பல பொது மக்கள் படு கொலை தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை செய்யப்பட்டு மறைமுகமாக புதைக்கப்பட்டு மனித உடல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக சரியான விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் பல உண்மைகள் கண்டறியப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இவரரை போன்றி பலர் , பிள்ளையானுக்கு உறுதுணையாக இருந்த பலர் இன்னும் சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர்களையும் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைதானமை குறிப்பிடதக்கது. https://www.battinatham.com/2025/04/blog-post_413.html
  17. ஊர்மனையை அண்மித்த இராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வாய்ப்பு! தலைமன்னார் - ஊர்மனை பகுதியை அண்மித்துள்ள இராமர் பாலத்தின் 6 மணல் திட்டுகளை எதிர்வரும் மே மாதம் 15 திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றலாப் பணியகத்தின் தலைவர், மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கடற்படையினர், கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இராமர் பாலத்தினை பார்வையிடுவதற்கான படகுப் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் அது தொடர்பிலான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் முன்னதாகவே பாதுகாப்பு அமைச்சு அனுமதியினை வழங்கியிருந்தது. எனினும், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாகச் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.hirunews.lk/tamil/403575/ஊர்மனையை-அண்மித்த-இராமர்-பாலத்தின்-மணல்-திட்டுகளை-சுற்றுலாப்-பயணிகள்-பார்வையிட-வாய்ப்பு
  18. எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் எங்களது உறவு இருக்க மாட்டாது செய்திகள் ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி இங்கு களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ளனர். அவர்களுடைய சிந்தனை என்னவென்றால் தாங்கள் சபைகளை கைப்பற்ற வேண்டும். வடக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெற வேண்டும் என்பது அவர்களது நோக்கம். பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் எவவாறு அதிக ஆசனங்களைப் பெற்றோமோ அதேபோல் சபைகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். வவுனியாவில் ஜேவிபி சார்பாக இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் வைத்தியர். மற்றவர் ஆசிரியர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்கள் இருக்கின்ற போது உபாலி என்பவரை தேசியப் பட்டியலில் நியமனம் செய்து பிரதி அமைச்சராக்கி அபிவிருத்திக் குழுவின் தலைவராக போட்டுள்ளார்கள். இந்த ஜேவிபியின் சிந்தனை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். தமிழர்கள் படித்தவர்களாக வென்றுள்ளார்கள். வன்னி மண்ணிலே வெற்றி பெற்ற அந்த தமிழர்களுக்கு பதவிகள் வழங்காது ஒரு சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த உபாலிக்கு கொடுத்திருக்கின்றது என்றால் இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். பிரதேச சபை, மாநகர சபை என்பவற்றை பிடித்து அடுத்த மாகாண சபையை பிடிக்கும் நிலை வரும். பிமல் ரத்நாயக்க ஜனாதிபதியின் பேச்சை விமர்சிக்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதை இல்லை எனக் கூறுகின்றார். ஆகவே, ஒட்டுமொத்தமாக எல்லா சபைகளையும் பிடித்து விட்டால் தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அருகதை இல்லை என சொல்லி விடுவார்கள். அதனை இப்பவே ஆரம்பித்து விட்டார்கள். தையிட்டி புத்தர் கோவில் பிரச்சனை தீர்கப்பட வேண்டும் எனில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாதாம். அதன் அர்த்தம் என்ன. வன்னி மண்ணில் விலை கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ணில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி உரையை விமர்சிக்க கூடாது எனக் கூறுவதற்கு பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோகியதை இருக்கிறது. வடக்கில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டால் நீங்கள் எதுவும் பேச முடியுமா! ஜனாதிபதி தனது உரைகளில் சபைகைளை கைப்பற்றக் கூடிய கதைகளை சொல்லுகின்ற போது அதை விமர்சிக்கின்ற தமிழ் தலைவர்களை வாய் மூட வேண்டும் என கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் இலங்கையர் என்று சொன்னார்கள். அந்த சிந்தனை இப்போது எங்கே? தமிழர்கள் எதற்கு போராடினார்கள். எங்களது உரிமை, மண், தேசம் பாதுக்கப்படும் எனப் போராடினார்கள். அப்படிப்பட்ட தமிழ் தரப்பை பார்த்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எமது வன்னி பிரதேசம் எத்தனையோ சிங்கள ஆட்சியாளர்களை ஆட வைத்தது. மறந்து விட வேண்டாம். அந்த வழி வந்த தமிழர்கள் உங்களுக்கும் சவாலாக மாறுவார்கள். ஆகவே பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை என்பவற்றை நாம் கைப்பற்றி ஆக வேண்டும். எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெற முடியாது. ஆனால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள். சங்கு சின்னம் ஜனாதிபதி தேர்தலில் பொது சின்னமாக மாற்றம் பெறுகின்ற போது யாருமே சங்கு சின்னத் ஆதரிக்கவில்லை. இதில் இருக்கின்ற கட்சிகள் மட்டும் தான் அதனை ஆதரித்தன. தமிழரசுக் கட்சி பெரும்பான்மை தலைவர்களை ஆதரித்தார்கள். மக்களை வாக்களிக்க வேண்டாம் அமைதி காணுங்கள் என்றும் கூறியவர்கள் இருக்கிறார்கள். சங்கு சின்னத்தில் பொது வேட்பாளரை உருவாக்கி நாம் தான் செயற்பட்டோம் எனக் கூறுகின்றோம். ஆகவே ஒற்றுமையை கருதி எங்களுடைய ஆட்சி அமைக்கின்ற விதம் தமிழ் தரப்புடன் தான் இருக்கும். அற்ப சொற்றபத்திற்காக கண்டவர்களின் காலில் விழும் நிலை இல்லை என்பதை கூறுகின்றேன். அடுத்த மாகாண சபை தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். எமது மக்கள் அதை தான் விரும்புகிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் தமிழ் கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்படும். மாற்றம் வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் சிங்கள தலைவர்களுக்கு ஒற்றுமை இல்லாத தமிழ கட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பற்காக எங்களது மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் எமது மக்கள் எங்களோடு நிற்பார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரே அணியாக நிற்போம். ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் என்ன செய்தோம் என எங்களை பார்த்து கூக்கிரல் இடுகிறார்கள். நான் கேட்கின்றேன். ஒரு பிரதி அமைச்சரை எங்களிடம் தாருங்கள். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். உபாலி எதற்கு? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை பெற வேண்டும் என விரும்புகின்றோம். நாங்கள் முதுகெலும்பு உள்ளதால் அரசாங்கத்துடன் இணையவில்லை. முதுகெலும்பு இருந்தால் நீங்கள் அமைச்சு பதவி கேளுங்கள். ஆனால், அரசாங்கத்துடன வால் பிடிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பதவி பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வளமான கிராமங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு வால்பிடிக்காது இருப்பதால் எமது மக்களின் தமிழ் கிராமங்கள் பலவற்றின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆகவே, அபிவிருத்தி தேவை. கொண்டு செல்வதற்கான அடித்தளம் இந்த சபைகள் ஊடாக வரும். அதற்காக அந்த சபைகளை தமிழர் தரப்பு கைப்பற்ற வேண்டும். தமிழ் கட்சிகளை விமர்சிக்காதீர்கள். சபைகளை கைப்பற்ற முயற்சி செய்யுங்கள் எனத் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9th2a0t000do230838iokfx
  19. உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை - மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்தியப்பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்களில் அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தரின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காகவே எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு கூறப்பட்ட அதே காரணங்களுக்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேறு தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, நீதிமன்றத்தின் அந்தக் கட்டளையைக் காரணமாகக் காட்டி, எமது வேட்புமனுக்களையும் ஏற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரினோம். எனினும், 'நீதிமன்றக் கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள்' என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். குறித்த வழக்கு நேற்றுத் திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காலதாமதம் எனக் காரணம்கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபனை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு. நீதிமன்றக் கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனக்கூறி, எம்மை வழக்குத் தொடருமாறு அறிவுறுத்திய பின்னர், நாம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில் காலதாமதம் என கூறியுள்ளார்கள். இதனூடாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி, அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவுள்ளது. இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக, ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு, ஜே.பி.வியின் காட்டாட்சியை எடுத்துக்காட்டுகின்றது – என்றார். https://newuthayan.com/article/உள்ளூராட்சித்_தேர்தலில்_ஜனநாயகப்_படுகொலை_-_மணிவண்ணன்_குற்றச்சாட்டு
  20. பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் – மேலும் இருவா் கைது adminApril 22, 2025 தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பில் மட்டும் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது எனத் தொிவித்துள்ளாா். . பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனத் தொிவித்த அவா் சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் எனவும் அவை தொடர்பில் விசாரிக்கப்படுவதுடன் அது தொடா்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா் . சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்து வருகிறது எனவும் உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவா் தொிவித்துள்ளாா். . சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ , பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/2025/214589/
  21. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி பயணத்தில் இருந்து பாதியில் திரும்பும் மோடி 22 Apr 2025, 11:54 PM ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தனது சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்றிரவே இந்தியா திரும்புகிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் எண்ணிக்கையை இதுவரை அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சவுதி அரேபியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மோடி. இதையடுத்து அமித் ஷா இன்று மாலையே காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் சென்றார். அங்கே பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளோடு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு ஜெட்டாவில் சவுதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில், விருந்தை ரத்து செய்துவிட்டு, தனது சவுதி அரேபிய பயணத்தையும் பாதியில் முடித்துக் கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, சவுதி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானை சந்திக்க அவர் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் காஷ்மீர் தாக்குதலையடுத்து பிரதமர் இன்றிரவே இந்தியாவுக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை வருவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி டெல்லி திரும்பிய பிறகு ஏப்ரல் 23 புதன் காலை, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலையும் விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது” என்று கூறினார் ஓமர். https://minnambalam.com/pm-cuts-short-saudi-visit-after-jk-attack/
  22. GMT நேரப்படி நாளை புதன் 23 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 12 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  23. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.