Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உலகின் மிகவும் வயதான நபர் காலமானார் Published By: Digital Desk 3 02 May, 2025 | 10:27 AM உலகின் மிகவும் வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ், தமது 116 ஆவது வயதில் காலமானார். இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிறந்துள்ளார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாகியுள்ளார். இனா கனபரோ உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (30) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் எப்போதும் தனது பிறந்தநாளை தனக்கு பிரியமான ஸ்போர்ட் கிளப் இன்டர்நேஷனல் - போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணி அரங்கத்தின் வடிவத்தில் செய்யப்படட்ட கேக்குடன் கொண்டாடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இனா கனபரோ மறைவுக்குப் பின்னர் உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், பிரித்தானியாவைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது. கேட்டர்ஹாம் எட்டு பிள்ளைகளில் இரண்டாவது இளையவராக 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஹாம்ப்ஷயரில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்துள்ளார். Brazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records Brazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records https://www.virakesari.lk/article/213461
  2. ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் குழுவும் வருவார்கள் செல்வார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-வியட்நாம்-பயணத்தின்-போது-பல-ஒப்பந்தங்கள்/175-356595
  3. யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களைக் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, வலிவடக்கு, வசாவிளான் பகுதியில் உள்ள 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் உள்ள 15 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கற்கோவளம் பகுதியிலுள்ள 5.7 ஏக்கர் காணிகளும் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.வெடிபொருட்கள் அபாயம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் குறித்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/யாழில்-இராணுவ-கட்டுப்பாட/
  4. நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார். adminMay 2, 2025 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். https://globaltamilnews.net/2025/214928/
  5. ஐந்து பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குப் போகும் என்றும் ஒருவர் சம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்றும் கணித்திருந்தார்கள்!
  6. GMT நேரப்படி நாளை வெள்ளி 02 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 13 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவைப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிலாமதி சுவி பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  7. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 50வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன் (61 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (53 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்), ஹார்டிக் பாண்டியா (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்) மின்னல் வேகத்தில் ஓட்டங்களை எடுத்தமையால் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறி விரைந்து ஆட்டமிழந்தனர். பின்னணி வீரரான ஜொஃவ்ரா ஆர்சர் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குச் செல்லும் தகுதியை இழந்து வெளியேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடரின் ஆரம்பத்தில் பல நாட்கள் முதலாவது இடத்தில் நின்ற @suvy ஐயா பத்தாவது நிலைக்கும் கீழே இறங்கியுள்ளார்!
  8. பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம் May 1, 2025 8:53 am பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார். அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன. பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அவிருத்திட்டங்களை செய்திருந்தேன். அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார். இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளுராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம். எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது. ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன. ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு? தேர்தல் காலத்தில் மேய்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது, இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும். தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள், இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது. தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான், இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள். இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும். பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அப்போது நிரபராதி என வெளிய வந்தவர். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும். நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள். வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள். அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள். இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள். கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/it-is-cruel-that-pillayan-is-in-prison-karuna-anger/
  9. பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை ! 01 May, 2025 | 08:46 AM பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது. பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது. இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். இந்தியா - பாகிஸ்தானிடையே நேரடி விமான சேவைகள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213381
  10. யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து! யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. யுக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தது. குறித்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்படத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், யுக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையிலேயே, அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரென யுக்ரைன் நேற்று அறிவித்தது. இதனையடுத்து அமெரிக்காவும், யுக்ரைனும் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அத்துடன், இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.hirunews.lk/tamil/404313/யுக்ரைனுடனான-கனிம-வள-ஒப்பந்தத்தில்-அமெரிக்கா-கைச்சாத்து
  11. இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மே தினம் வழிகோலட்டும் என்று மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். மே தினததிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு இலங்கையில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்கும் இலங்கை தமிழ் தேசிய இன மக்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உழைப்பாளர்தின வாழ்த்துகள். இலங்கையைப் பொறுத்தவரையில் உழைக்கும் வர்க்கத்தின் காவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனதா விமுக்தி பெரமுண என்றழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கான இன்னோரன்ன சலுகைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதுடன் நாட்டில் தங்களது ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிப்பீடமேறி அரையாண்டு கடந்த பின்னரும் தோட்டத் தொழிலாளர்கள் எந்த நிவாரணமுற்ற ஏதிலிகளாகவே இன்னமும் இருக்கின்றனர். அதனைப் போலவே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள தோழர்களுக்கும் எதுவித ஊதிய உயர்வோ பணிப்பாதுகாப்புத் திட்டங்களோ கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில்தான் இலங்கையில் முதலாவதாக ஆட்சிப்பீடமேறிய இடதுசாரி மார்க்சிய லெனினியவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது. இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள்கூட இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் வடக்கு-கிழக்கிற்கு வரும்பொழுது ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்கிறார்கள். தாங்கள் இனவாதம் மதவாதம் சாதிவாதம் என்பனவற்றிற்கு எதிராக இருப்பதாகவும் ஏதோ தமிழ் மக்கள் தான் அவற்றை உயர்த்திப்பிடிப்பதாகவும் ஒரு பிரமையை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு அடுத்ததாக 1971ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போதும் 1988-89 ஜேவிபியின் கிளர்ச்சியின் போதும் தமிழ் மக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைத்து இனவாதிகளாக நடந்துகொண்டவர்களே ஜேவிபி தரப்பினர். சிங்கள மக்கள் மத்திதியில் இனவாதத் தீயை உருவாக்கி பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கி நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்றொழித்து ஏதிலிகளாக்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்த முழுப்பங்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அவர்களது கூட்டத்தையுமே சாரும். தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தேர்தல் வெற்றிகளுக்காக தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுபட்ட சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் இனவாதத்தைத் தூண்டி வளர்த்தவர்கள் சிங்கள ஆளும் தரப்பினர். அதில் இன்றுள்ளவர்களும் அடக்கம். சிங்கள ஆளும் வர்க்கத்தின் இனவாத செயற்பாடுகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாகவும் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை வைப்பதானது எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதமாகாது. அதற்காக குரல்கொடுப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ இனவாத செயற்பாடாக அமைய மாட்டாது. எனவே, சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத் தீயிலிருந்து சிங்கள மக்களை மீட்டெடுப்பதற்கு ஜேவிபி அவர்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்பதுடன் அதற்கு முன்பாக தாங்கள் விட்ட தவறுகளுக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரி தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். தேர்தலில் வெல்வதற்காக மட்டும் தங்களை இன, மத, சாதி பேதமற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முனைவது வெற்று ஆரவாரக் கூச்சலாக இருக்குமே தவிர அதில் எந்தவொரு ஆக்கபூர்வமான பொருளும் இருக்காது. தமிழ் மக்களின் ஆதரவுடன் மூன்றிலரண்டு பெரும்பான்மையுடன் வென்று வந்திருக்கின்றவர்கள் இப்பொழுதாவது தங்களை சுயவிமர்சனம் செய்து திருத்திக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் அவர்கள் திருந்த மாட்டார்கள். நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்தவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்தினரே. எனவே அவர்கள் தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் முன்வைக்க வேண்டும். அதற்கு தாங்கள் இதுவரை காலமும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தூண்டிவிட்ட இனவாதக் கருத்துகளுக்கு மன்னிப்பு கோருவதுடன் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குத் தாங்களே காரணம் என்பதை மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொண்டு இனி ஒருபோதும் அத்தகைய தவறுகள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை அளித்து இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சிங்கள தலைமைகளின் தலையாய கடமையாகும். இந்த மே தினம் என்பது உழைக்கும் வர்க்கம் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதுடன் ஜேவிபி போன்றோர் தம்மை சுயவிமர்சனம் செய்து சீர்திருத்திக்கொள்ளவும் உகந்ததாக இருக்கட்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் https://adaderanatamil.lk/news/cma4vtisj0063o230qqnnjgkz
  12. ‘சாட்சிகளை அழிக்கும்’ படுகொலைகள் இடம்பெறுகின்றனவா? முருகானந்தம் தவம் இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது முதல், நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் வெறுமனே பாதாள உலகக் குழுக்களுடனும் போதைவஸ்து வர்த்தகத்துடனும் மட்டும் தொடர்புபடுத்தி கடந்து போக அரசு முயற்சிப்பதாகவே தெரிகின்றது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் படுகொலைகளும் இவற்றுக்கு அப்பால் அரசியல் மற்றும் சாட்சியங்கள் அழிப்புகளுடன் தொடர்புபட்டுள்ளமையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 25 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஏனைய சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் கூறப்பட்டாலும் இந்தப் படுகொலைகளில் சிலவற்றின் பின்னணியில் அரசியல் உள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியமாகவுள்ளது. இவ்வாறான படுகொலைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு நெருக்கமாக இருந்த அருண விதாகனகே மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்துடன் நெருக்கமான டேன் பிரியசாத் ஆகியோரின் படுகொலைகள் அரசியல் படுகொலைகளாகவும் சாட்சியம் அழிப்பு கொலைகளாகவும் இருக்கலாம் என்ற சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. அருண விதாகனகே,டேன் பிரியசாத் ஆகியோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள், விசாரணைகள், குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவர்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்குமிடையில் தொடர்புகள் இருக்கலாம். அதனால் அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளினால் இக்கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பாதுகாப்புத் தரப்புக்களினால் தெரிவிக்கப்படுகின்றபோதும், இவர்கள் இருவரும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட சில தினங்களிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளமை தான் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ‘மித்தெனிய கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண விதான கமகே கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் அருண விதான கமகேயுடன் அவரது 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மஹிந்த ராஜபக்‌ஷவின் விசுவாசியான இவர், பல்வேறு கொலைகள், குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். அருண விதான கமகே ‘அரகலய' ஆர்ப்பாட்டத்தில் மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குமுள்ளானவர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில், இவர் கொல்லப்படுவதற்கு ஓரிரு சில தினங்களுக்கு முன்னர், சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், ராஜபக்‌ஷக்களின் பல இரகசியங்களை அறிந்து வைத்துள்ளதால் தான் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என கூறியிருந்தார். அதேபோன்றே அவர் ஓரிரு தினங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டார். அடுத்ததவரான டேன் பிரியசாத் படுகொலையும் இதே பின்னணியைக் கொண்டதாகவே இருக்கின்றது. இவரும் ராஜபக்‌ஷக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். ‘அரகலய' போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். 2017ஆம் ஆண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமானவர். 2018ஆம் ஆண்டின் திகன இனக் கலவரத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர், முள்ளிவாய்க்கால் படுகொலைகள், யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர். இவர் ஒரு மிக மோசமான இனவாதி. ‘நவ சிங்கள தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளரான இவரை, மஹிந்த ராஜபக்‌ஷவின் மொட்டுக் கட்சியினர் சமூக செயற்பாட்டாளர் என அழைப்பதுடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது கட்சி வேட்பாளராகவும் நிறுத்தியுள்ள நிலையிலேயே கடந்த 22ஆம் திகதி மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டுத்திட்ட வளாகத்தில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் சுட்டுக்கொல்லப்பட்ட அருண விதான கமகே, டேன் பிரியசாத்திற்கு இந்தத் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும் என்பதால் இவர்கள் ‘ஒப்பந்த கொலைகாரர்கள்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்படும் அருண விதான கமகே, டேன் பிரியசாத் ஆகியோர் ராஜபக்‌ஷக்களிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்காவே பல குற்றங்களிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்விருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப் பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் எவ்வேளையிலும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலிலேயே இருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரினது படுகொலைகளில் இருபக்க குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ராஜபக்‌ஷக்களுக்கு நெருக்கமான இவர்கள் பல்வேறு கொலைகள், குற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால், இவர்கள் கைதானால் ராஜபக்‌ஷக்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள், இரகசியங்கள் வெளியாகும் என்ற அச்சத்தால் இவ்விருவரும் ‘ஒப்பந்த கொலைகாரர்கள்' மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ராஜபக்‌ஷக்களின் இரகசியங்கள் தெரிந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது ஒரு பக்க குற்றச்சாட்டு. இவர்கள் இருவரும் ஜே.வி.பியின் பின்னணியில் இடம்பெற்ற ‘அரகலய' போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அருண விதானகமகே ‘அரகலய' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவரைச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர். டேன் பிரியசாத் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்று வந்த ‘அரகலய' போராட்டத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களில் மிக முக்கியமானவர். ஆக, தற்போது ஜே.வி.பியே தேசிய மக்கள் சக்தியாக ஆட்சியில் இருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை கொன்றவரும் போராட்டத்தின் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒரு அரசியல் பழிவாங்கல் படுகொலை என்பது மற்றைய பக்க குற்றச்சாட்டு. பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் என பலரும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர். அரசியல்வாதிகளும் தமது அரசியல் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்தியிருந்ததுடன், சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படாதும் பாதுகாத்து வந்தனர். எனினும்,தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு எவருக்கும் அஞ்சாது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தமது கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினால் இதுபோன்ற ‘சாட்சிகளை அழிக்கும்' படுகொலைகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாட்சிகளை-அழிக்கும்-படுகொலைகள்-இடம்பெறுகின்றனவா/91-356525
  13. நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு – வைத்தியர்கள் எச்சரிக்கை! இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். “டெங்குவால் 6 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5,018 பேர் பதிவாகியுள்ளனர்.” கடந்த சில வாரங்களாக, தினசரி அடிப்படையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதைக் அவதானிக்கின்றோம். தற்போதைய வானிலை நிலவரத்தாலும், தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாலும், எதிர்காலத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல், டெங்குவை பரப்பும் நுளம்புகளால் பரவும் மற்றொரு வைரஸான சிக்குன்குனியா நோய் மேல் மாகாணத்தை மையமாக கொண்டு பிற மாவட்டங்களிலும் அதிகளவில் பதிவாகியுள்ளது. “எதிர்காலத்தில் நுளம்புகள் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சுகாதார பணிப்பாளரால் மே மாதத்தை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார்” “வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” “நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் எந்தவொரு வீடு அல்லது நிறுவனத்திற்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என்றார். https://www.samakalam.com/நாட்டில்-தீவிரமாக-பரவும-2/
  14. சிறீதரன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பிய தமிழரசுக் கட்சி! இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான திரைமறைவுத் திட்டமிடல்களும் மேற்கொள்ளபடுவதாக உட்கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றி தமிழரசுக் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை நீதிமன்ற வழக்குகளின் மூலம் ஆரம்பித்த சுமந்திரன், அதன் உள்ளக நடவடிக்கையாக ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருக்கு இரண்டு விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், தம்பிப்பிள்ளை கோபாலபிள்ளை, மாமாங்கம் ஜீவரெத்தினம், பிள்ளையானகுட்டி நீதிதேவன், மார்க்கண்டு நடராசா, மனோகரன் மதன், தம்பிப்பிள்ளை தியாகராசா, லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாஷ், பழனித்தம்பி குணசேகரம், குமாரசிங்கம் இளங்கீரன், கண்ணப்பன் கோகுலறஞ்சன், சுப்பிரமணியம் தேவராசா, மாணிக்கம் உதயகுமார், செல்லையா நகுலேஸ்வரன் ஆகிய 16 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் துரைராசா தனராஜ், வேலாயுதம் மோகன், சங்கரதாஸ் தயானந்தராசா, காளிராசா கோகுலராஜ், வேலாயுதம் வேல்மாறன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம், நாகேஸ்வரன் ஜெயகாந்தன், தம்பு முருகதாஸ் ஆகிய 8 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், கிருஸ்ணன் வீரவாகுதேவர், சண்முகராஜா ஜீவராஜா, அருணாசலம் வேழமாலிகிதன், ஜோன் தனராஜ், கிருஸ்ணவேணி விக்ரர்மான் ஆகிய ஆறுபேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், ஜீவராசா மற்றும் வீரவாகுதேவர் ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணிக்கவாசகர் இளம்பிறையன், மதினி நெல்சன் உள்ளிட்ட பலருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுமந்திரனால் விளக்கம் கோரப்பட்டுள்ள அனைவருமே சிறீதரனின் ஆதரவாளர்கள் என்பதுடன், அந்த அடிப்படையை வைத்தே அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/சிறீதரன்-உள்ளிட்ட-35-பேருக/
  15. ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி adminApril 30, 2025 இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர். https://globaltamilnews.net/2025/214871/
  16. யாழ் களப் போட்டியாளர்கள் பலருக்கு பல தடவைகள் முட்டைகள் பரிமாறிய CSK அவுட்!
  17. GMT நேரப்படி நாளை வியாழன் 01 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் ஏராளன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வார்கள்?
  18. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 49வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சாம் கரனின் புயல்வேக ஆட்டத்தில் எடுத்த 88 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 32 ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களின் மின்னல் அடியில், குறிப்பாக ப்ராப்சிம்ரனினதும், ஷ்ரேயஸ் ஐயரினதும் அரைச் சதங்களுடனும் மூன்று விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைய 12 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை!):
  19. கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் வெற்றி Vhg ஏப்ரல் 29, 2025 கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். கனடா பாராளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. https://www.battinatham.com/2025/04/blog-post_101.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.