Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5643
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. எங்கே, யார் இணைத்துள்ளார்கள் ஆதாரம் உங்கள் கூற்றுக்கு? கபிதான் இணைத்த சட்டமூலத்தை தவிர எந்த இணைப்பும் என் கண்ணுக்குத் தெரியவில்லை! நான் குழம்பியிருப்பதாலோ😂?
  2. சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂? அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை. எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள். சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!
  3. இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்: 1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர். 2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள். இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது. எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!
  4. தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?" நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்! இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!
  5. புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்? என்ன "சிரிக்க சிறக்க" பகுதியில் எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்களா? உங்கள் குழப்பமான அலம்பல் உங்களுக்கே புரிகிறதா😂? இப்படிப் பட்ட தீவிர தேசியர்கள் "அப்பன் குதிருக்குள்" இல்லை என்று புலிகளைக் காட்டிக் கொடுக்கும் முழுமையான கூழ்முட்டை கேசுகள்! இப்படிப் பட்டோருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அமரர் விவேக் கொமெடி பார்த்த அளவு சிரிப்பு வரும்😂!
  6. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை, 1930 இல் இருந்து 2014/2015 இற்கு முன்னேறியிருக்கிறியள், மகிழ்ச்சி😂! ஆனால், அதுவும் தவறு தான். நீங்களே இணைத்த றொய்ற்றர்ஸ் கட்டுரையின் வரைபை உங்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை, இந்த இலட்ணத்தில் மற்றவனுக்கு ஆங்கில மொழி புரியவில்லை என்ற நக்கல் வேற! இதைத் தான் சொல்வது: தெரியாதவனும் தேடாதவனும் தெனாவெட்டாகத் திரிய, விளங்கிக் கொண்டவன் வெட்கி நிற்க வேண்டிய கலிகாலமெண்டு😎!
  7. கூர்ந்து படிக்க பிபிசியை விட அதிகமாகவோ வித்தியாசமாகவோ எதுவும் இல்லை. 1930 இல் இருந்த பெருநிறுவன நன்கொடையை மோடி ரீமின் வங்கி தேர்தல் பத்திரத்தோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதெனத் தெரியவில்லை. காங்கிரசை, பிஜேபியை விட மோசமாகக் காட்ட வேண்டிய அவசரம் என நினைக்கிறேன். இனியாவது கருத்துகளை சும்மா எழுதாமல், செய்தியையொட்டி எழுதுங்கள் - வாசகர்கள், பதிலிறுப்போரின் நேரம் மிச்சமாகும்!
  8. உங்களுக்குச் சுட்டு விட்ட அந்தக் கேள்வியின் பிரதான பாதியை வசதியாக மறந்து விட்டீர்களே😎? ஆமி கொன்ற தமிழ் மக்களெல்லாம் கோத்தா சொன்னது போல, உங்கள் நூதன சிந்தனையில் நீங்கள் கண்டு பிடித்தது போல, "சீருடை அணியாத புலிகள்" என்றால் பிறகேன் இனவழிப்பு, போர்க்குற்றம் என்று முறைப்பட்டுத் திரிகிறோம் என்கிறீர்கள்😂?
  9. இது லூப் ஹோலா? நலனுக்காக அரசியல் நன்கொடை எல்லா இடத்திலும் இருப்பதல்லவா? அந்த நேரம் பிஜேபி இருந்திருந்தால் காங்கிரசை விட அதிகம் கறந்திருப்பர் கார்ப்பரேட்டுகளிடம் என்பதை ஊகிக்க முடியாத அப்பாவி கோவிந்தனாக இருக்கிறீர்களே?
  10. என்ன பெரும்ஸ் பிரித்தல், பின்னக் கணக்கும் அப்படி இப்பிடியா😂? பிஜேபி 58%, காங்கிரஸ் 10% சரி தானே? தோராயமாக சரி தானே?
  11. இது வட்சப் அவியலாக இருக்கலாமென ஊகிக்கிறேன்😂? முதல் அலை விமானங்கள், அமெரிக்க றேடாரில் பதிவாகின, அமெரிக்காவின் பி17 தான் வருகிறதென உயர் அதிகாரி உதாசீனம் செய்யச் சொன்னார். இரண்டாம் அலை விமானங்கள் வந்த போது றேடார் இருக்கவில்லை. மேற்கு எதிர்ப்பு, இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வுகள் நியாயமாக இருக்கலாம், ஆனால் தகவல்கள் சிறிதாக இருந்தாலும் சும்மா "பொங்கல் வைச்சு" உங்களை நீங்களே முட்டாளாகக் காட்டிக் கொள்ளக் கூடதென்பது என் அபிப்பிராயம்!
  12. உறவே, தென்பகுதியிலோ வடக்கு கிழக்கிலோ 50 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது தான் ஒரிஜினல் சட்டம். இதை யாரும் மறுக்கவில்லையே? ஆனால், உங்கள் முதல் கருத்து இந்த காணி சீர் திருத்தம் மூலம் தமிழர்கள் காணி சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்பட்டது என்றல்லவா சொன்னீர்கள்? அதைத் தான் ஆதாரமில்லாத கருத்து என்கிறோம். உங்கள் உறவினரின் தென்னங்காணி சிங்களவர்களுக்கு வழங்கப் பட்டதா? இல்லையல்லவா? அது மட்டுமா? 50 ஏக்கருக்கு கூடிய காணி வைத்திருந்தோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் மைனர்களாக இருந்தாலும் ஒரு விலைக்கு விற்கலாம், அல்லது அரசு எடுத்த காணியை அந்தக் குடும்பத்தினர் யாராவது மீள ஒரு நியாய விலை கொடுத்து வாங்கலாம் இப்படியெல்லாம் பல வழிகளில் பரம்பரைச் சொத்து துண்டாடப் படாமல் ஒட்டைகள் விட்டுத் தான் சீர் திருத்தம் நடந்தது. இதெல்லாம் நடந்து 30 வருடங்கள் கடந்த பின்னர் மத்திய மாகாணத்தில் யானைக்கும், கால்நடைகளுக்கும் வைத்தியம் பார்க்க பல வளவுகாரர்களின் எஸ்ரேற்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களது காணிகள் 50 ஏக்கருக்கு மேலாக அப்படியே அவர்களிடம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனவே, காணிச் சீர்த்திருத்தம் தெற்கிலேயே நடைமுறையாகவில்லை, வடக்கு கிழக்கிலும் நடைமுறையாகவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இதனோடு சம்பந்தமில்லாமல் ஆக்கிரமிப்பு மூலம் தமிழர் காணிகள் பறிபோயின.
  13. எப்படி வசி தரவுகள் கூட ஒருவரின் சுயமுடிவில் தான் சரியா பிழையா என்று தீர்மானிக்கப் பட முடியும் என்கிறீர்கள்? தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது! இவை தரவுகள்-data. இதை விட ஏதாவது தரவுகள் இருக்கின்றனவா, உங்கள் கருத்திற்கு பலம் சேர்க்க? அபிப்பிராயங்களுக்கும் (opinion), தரவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?
  14. இப்படிப் பட்ட வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன் கந்தையர்😎. இந்த புதிய பார்வையின் படி பார்த்தால் முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முன்னரோ இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன்றது என்று எங்கும் முறையிட முடியாது என்கிறீர்கள்? புலிகளுக்கு சாப்பாடு போட்டவன், நகை/காசு கொடுத்தவன், ஆஸ்பத்திரியில் நின்று காயப்பட்டவனைப் பார்த்தவன், வாயால் புலிகளை மெச்சியவன், எழுதியவன் எல்லாரும் சீருடை போடாத புலி வீரர்கள், அவர்களைக் கொன்றதை எப்படி சிங்களவன் அப்பாவிகளைக் கொன்றான் என்பதாம்? (தென்பகுதியில், இப்படி புலிகளின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த பலர் காணாமல் போயிருக்கின்றனர், அதே நேரம் இன்னும் பலர் கைதாகி, சிறை சென்று தண்டனை அனுபவித்து மீண்டும் வெளியே வந்து வாழ்கின்றனர் - அப்ப சிங்களவரின் சிஸ்ரம் புலிகளின் சிஸ்ரத்தை விட டீசன்ட் என்கிறீர்கள்! அப்படியா?)
  15. தாழப் பறந்து ரேடாரில் இருந்து தப்புவதெல்லாம் இஸ்ரேல் 60 களில் பயன்படுத்திய நுட்பம், அதை புலிகள் பின்பற்றினர், இப்ப உக்ரைன் பின்பற்றுகிறது. இது "தமிழ் தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் தோற்றுவாய்" என்ற உருட்டல் போல அல்லவா இருக்கிறது?
  16. அரசியல் தலையீடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். திரு. இந்திரகுமார் பதவிக்கு வந்த பின் டக்ளசை வந்து சந்திக்கும் படி அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அறிந்தேன். அவர் சில நாட்கள் தள்ளிப் போட்டார், இறுதியில் போய் சந்தித்தாரா என அறியேன். மறு பக்கம் பிரதி அதிபராக இருந்த திருமதி செல்வகுணாளன், புலத்தில் இருக்கும் பழையமாணவர் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெளிநாட்டுக் காசு பாடசாலைக்கு வர முயற்சிகள் செய்து வருபவர் (எல்லாக் காசும் பாடசாலைக்குத் தான் போகிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி😎!) இந்தப் பின்னணியில் குறுகின காலத்தில் திரு.இந்திரகுமாரை அகற்றி, இவருக்கு பதவியுயர்வு வந்திருக்கிறது. (நான் மத்திய கல்லூரிப் பழைய மாணவன் என்பதால் இந்த வசந்தி/துலாபாரம்/பின் கதையெல்லாம் எனக்கு வந்து விடும் உடனே!)
  17. ஆம். இச்சட்டத்தின் நோக்கம், காலனித்துவ காலத்தில் வெளிநாட்டினரிடம் அல்லது வெளிநாட்டினரின் நிழலில் வாழ்ந்த பணக்காரர்களிடம் தேங்கி விட்ட காணிகளை மீள சுதேசமயப் படுத்துதல் என்பது தான். இந்த 1972 சட்டத்திற்கு, 1975 இல் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட்ட போது, பெருந்தோட்டக் (plantation) காணிகள் பலவற்றின் உரிமை காலனித்துவ கம்பனிகளிடமிருந்து அரச கூட்டுத் தாபனங்களிடம் மாறின. எனவே, இது அந்தக் காலப் பகுதியின் இடதுசாரி, சுதேசவாத அரசின் கொள்கையேயொழிய, இதனால் தமிழர்கள் பாதிக்கப் பட்ட பதிவுகளைக் காணவில்லை. 1977 இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த போது, மீண்டும் தனியார் உரிமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் காணிச்சட்டங்களை ஐதாக்கினர்.
  18. இது ஒரு நிர்வாகப் பதவி. பெண், ஆண், இடைப்பாலினர் ஆகிய எவரும் தகுதி இருந்தால் வழங்கப் பட வேண்டிய பதவி. இதில் "கலாச்சார விழுமியம் காக்க" அவர் பெண்கள் பாடசாலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். அதென்னப்பா ஆண்கள் பாடசாலையின் "கலாச்சார விழுமியம்" 😂?
  19. சுவாரசியமான கட்டுரை. ஆனால் நரமாமிசம் உண்ணும் பழக்கம் வழக்கொழிந்தமைக்கான ஒரு முக்கியமான காரணத்தைத் தவற விட்டிருக்கிறார்கள். Prions எனப் படும் புரத மூலக் கூறுகளால் ஏற்படும் நோய்கள் நரமாமிசம் உண்பதால் உருவாகும் தீமைகளில் முக்கியமானது. பபுவா நியுகினி, இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கிறது. அங்கே வாழும் பழங்குடியினர் நரமாமிசம் சாப்பிடுவதை நவீன காலத்திலும் ஒரு சடங்காகச் செய்து வந்தனர். அவர்களிடையே குணப் படுத்த இயலாத CJD (Kuru) எனப் படும் ஒரு மூளை நோய் தீவிரமாகப் பரவ இந்த நரமாமிசம் காரணமாக இருக்கிறது. இது போன்ற நோய்களால், முன்னோர் விழிப்படைந்து நரமாமிசம் உண்பதைக் கை விட்டிருக்கலாம்.
  20. எனக்கும் புதிதாகத் தான் இருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். ஆனால், இந்தத் திரியில் பல தவறான தகவல்களைப் பரப்பித் தான் இந்தக் கொலைகளை மிகப் பிரயத்தனப் பட்டு நியாயப் படுத்த வேண்டியிருக்கிற நிலையை அவதானிக்கிறேன். உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார். ஆனால் இப்ப புதுக் கதை என்னவென்றால் யோகேஸ்வரன் "1000 பேரைக் தந்தால் ஈழம் எடுத்துத் தாறன்" என்றி விட்டு, பின்னர் அரசோடு சேர்ந்தியங்கமையால் சுடப் பட்டார். இப்படிப் பல திரித்த கதைகள், அவற்றை நம்பவும் ஆட்கள் 😂 ! நல்ல வேளையாக எங்களிடம் இப்ப ஆயுத தாரிகள் இல்லை. இருந்திருந்தால், என்னையும் உங்களையும் கூட "வேள்விக்கு" கொண்டு போக ஆட்கள் வந்திருப்பர்!
  21. செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும். மேலதிக தகவல் பி.பி.சி யில்: இது வரை 160 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதில் 57% பி.ஜே.பிக்கு, வெறும் 10% தான் எதிர் கட்சியான காங்கிரசுக்கு போயிருக்கிறது. பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!
  22. வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்? பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!). காரண காரியத் (cause and effect) தொடர்பை கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!
  23. இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅? புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?
  24. சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
  25. 2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால் அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது: காசு வாங்கிக் கொண்டு அரச வேலை எடுத்துக் கொடுத்தல் பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்). வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார். இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.