Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5724
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!
  2. ம்..இண்டைக்குத் தான் சுய ஆக்கங்கள் பக்கம் வந்து வாசிக்க ஆரம்பித்தால்..இப்படி ஒரு வயதுக்கு வந்தோருக்கான கதை போகிறது. இன்னும் முடிக்கவில்லை, மெதுவாகத் தொடர்கிறேன். மயில், பாம்பு எல்லாம் சதிராடுது😅..!
  3. ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது. முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.
  4. இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன். இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம். மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.
  5. பொது அறிவித்தல், மாநில அரசு அறிவித்தல்களில் தமிழைப் புறக்கணித்த உதாரணங்களைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல் போக, தனியார் தயாரிப்பான மிளகாய் பொடி லேபலில் தான் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது, எனவே இதை தன் தீவிர ஆதரவாளர்களுக்கு தமிழுணர்வின் வெளிப்படுத்தலாகக் காட்டுகிறார். இது போன்ற பிரச்சாரங்களை "உணர்வுக்குத் தீனி போடும் அரசியல்- red meat politics" என்பர். செய்தியின் தலைப்பு, எடப்பாடியோடு டீல் போட பேச்சு நடப்பதாக. மிளகாய்ப் பொடி லேபலை ஒரு பக்கம் வைத்து விட்டு, எடப்பாடியின் அதிமுக இருந்த காலத்தில் தமிழ் மொழிக்கு என்ன நடந்தது, திமுக இருந்த காலத்தில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால், மொழியை வியாபாரமாக்கியோர் யார் என்ற தெளிவு வரலாம்!
  6. நிச்சயமாக உத்தரவாதம் இல்லை. ஆனால், வயது குறைந்த பாவனையாளருக்கு யார் விற்கிறார்கள் என்று பார்த்தால் சட்ட விரோத விற்பனையாளர்கள் தான். இவர்களுக்கு இலாபம் இல்லாமல் அரசே சட்டத்திற்குட்படுத்தி பிசினசை எடுத்துக் கொண்டால், இவர்கள் வேறு எதையாவது விற்கப் போய் விடுவார்கள், எனவே பள்ளிகளுக்குள் கஞ்சா வருவது குறையலாம். இதை உறுதி செய்யும் தரவுகள் இன்னும் அமெரிக்காவில் இல்லை, ஆனால் தியரிப் படி இது சாத்தியம். கஞ்சாவை தினசரி எடுத்துக் கொண்டால் நிச்சயம் மூளையின் செல்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில், மூளையில் இருக்கும் உயிரியல் பாதைகளைத் தான் கஞ்சாவில் இருக்கும் cannabinoids பதார்த்தம் பாவித்து உச்சம் தருகிறது. வித்தியாசம் என்னவெனில், ஏனைய தீவிர போதைவஸ்துக்களான opioids போல overdose மரணங்கள் கஞ்சாவினால் நிகழ்வதில்லை, அடிமைப் படுத்தும் இயலுமையும் குறைவு. மற்றபடி எந்த போதையும் (அல்கஹோல், கஞ்சா, இணையம்..) வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது உண்மை!
  7. இப்பெயர்களில் குழப்பம் இருக்கிறது: எலி என்பது Order Rodentia என்ற குடும்பத்தைக் குறிக்கிறது. சுண்டெலி தான் நாம் காணும் மிகச் சிறிய எலி (mouse , Mus musculus). இதற்கு மூஞ்சூறு என்றும் இலங்கையில் பெயர் இருக்கிறது. ஆனால், பெருச்சாளி என்றால் rat என்று தான் நினைக்கிறேன். வெள்ளெலியை mole என்பார்கள்.
  8. கஞ்சாவை மேற்கு நாடுகள் சட்ட பூர்வமாக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன: 1. கஞ்சாவில் இருக்கும் பதார்த்தங்கள் (THC etc.) அடிமைப் படுத்தும் வீரியம் (addiction) ஏனைய போதை வஸ்துக்களை விட மிகக் குறைவு. 2. கஞ்சாவினால் ஏற்படும் நீண்டகால உடலாரோக்கியப் பாதிப்பும் ஏனைய போதைகளோடு ஒப்பிடும் போது குறைவு. 3. சட்டங்களை மீறி இலகுவாக கஞ்சா விளைவிக்கப் பட்டு, தாராளமாகப் புளங்குகின்றது street drug வடிவில். இது கறுப்புச் சந்தை, வயது குறைந்தோர் கூட இதனால் நுகர வாய்ப்பிருக்கிறது. 4. இதையே அரச கட்டுப் பாட்டில் கொண்டு வந்து நுகர அனுமதித்தால், வயது குறைந்தோர் நுகராமல் கட்டுப் படுத்துவது இலகுவாக இருக்கும் (கறுப்புச் சந்தையின் மவுசு குறைந்தால்) 5. இவ்வளவு உப்புச் சப்பற்ற கஞ்சாவைக் கட்டுப் படுத்தும் முயற்சி, நிதி என்பன ஏனைய போதை வஸ்துக்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தலாம்! overdose மரணங்களைத் தடுக்கலாம்!
  9. இதில் இருப்பவை எல்லாம் எலி அல்லவே? நியூ யோர்க்கில் பெருச்சாளி எனப்படும் rat தான் பிரபலம். ரயில் வண்டிக்குள் மாட்டுப் பட்டு ஓடித் திரிவது அணில் (squirrel), வாலைக் கவனியுங்கள்😂, அடர்த்தியான ரோமத்தோடு இருக்கிறது. சும்மா பல வீடியோக்களை ஒன்றாக்கி காசு பார்த்திருக்கிறார்கள், அல்லது அரசியல் வீடியோவோ தெரியாது! எலி வீட்டுக்குள் வராமல் இருக்க இரு இலகு வழிகள்: 1. வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தமாக, உணவுப் பருக்கைகள் இல்லாமல் இருக்க வேண்டும். 2. வீட்டினுள் எலி நுழையக் கூடிய ஓட்டைகள் எல்லாம் அடைக்கப் பட வேண்டும். இவை இரண்டும் செய்தால், எலிக்கு ஒரு வீட்டில் எந்த பிசினசும் இருக்காது😂!
  10. மிளகாய்த்தூள் என்று இரண்டாம் வரியில் இருப்பது தான் பிரச்சினையாமா? 😂
  11. இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ? "அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள்.
  12. எல்லாம் பிஞ்சுக் குழந்தைகள். என்ன ஒரு மிருகத் தனமோ தெரியவில்லை! என்ன தான் நண்பர் வட்டத்தில் இருப்பவராக இருந்தாலும் வீட்டுக்குள் வசிக்க விடும் போது மிக அவதானம் தேவை எனக் காட்டும் ஒரு சோக உதாரணம் இது!
  13. சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை. உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள் இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?
  14. இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎? நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?
  15. அமெரிக்க ஜனாதிபதியை ஒலிம்பிக்கில் ஓடி பதக்கம் வெல்ல அல்லது திருக்குறள் மனனப் போட்டியில் வெல்ல அனுப்புவதானால் இவையெல்லாம் "முக்கிய பிரச்சினைகள்" தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்😂. ஆனால் இவையல்லவே அமெரிக்க அதிபரின் பணி? சக்கர நாற்காலியில் இருந்த றூஸ்வெல்ட், தீராத கீழ் முதுகு நோவில் இருந்த கெனடி, தொடர்ந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டவரான லிங்கன், இவர்களெல்லாம் அமெரிக்காவின் முக்கியமான காலகட்டங்களில் வெற்றிகரமாக நாட்டை வழி நடத்தியிருக்கிறார்கள். ஏனெனில், அதற்கேற்ப அமெரிக்க தலைமையும், அரச கட்டமைப்புகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகளையும், நிறுவனங்களையும், சட்டங்களையும் சிதைக்க முனையும் ட்ரம்பினால் தான் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பாதிப்புகள் இருக்கும். பைடனின் மறதியாலும், தடக்கி விழுகையாலும் நாட்டிற்கும், உலகிற்கும் பாதிப்புகள் இல்லை!
  16. உப ஜனாதிபதிக்காக நடுநிலை வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. ஏனெனில் உப ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் படி பெரிய பலம் கிடையாது. நிக்கி ஹேலிக்கு இன்னொரு வாய்ப்பு ஜனாதிபதி வேட்பாளராக வர இருக்கிறது, எனவே அதனாலும் அவர் ட்ரம்ப் அழைத்தாலும் போகப் போவதில்லை. இது என் ஊகம்!
  17. மேலே கருத்துக்களைப் பார்க்கையில் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போடும் அப்பாவிக் கோழிகள்"என்ற கோசானின் வாக்கியம் நினைவில் வருகிறது. ட்ரம்ப் வரக்கூடும். வந்தால், முன்னரை விட தீவிரமாக ஐரோப்பிய அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்களிப்பை வெட்டிக் கொள்வார். இதன் ஒரு அங்கமாக நேட்டோவில் அமெரிக்கப் பங்களிப்புக் குறைக்கப் படும். நேட்டோ இராணுவ ரீதியில் பலவீனமானால், அதனை பலப் படுத்தக் கூடிய ஒரு தலைமை நாடு இன்னும் ஐரோப்பாக் கண்டத்தில் இல்லை. புரின் உக்ரைனைத் தாண்டி பால்ரிக் நாடுகளையும் தட்டிப் பார்க்கக் கூடும். போலந்து, ஜேர்மனி கூட ஆக்கிரமிக்கப் படா விட்டாலும், மறைமுக அச்சுறுத்தல்களோடு போராட வேண்டிய நிலை வரலாம். ஆனால், இதெல்லாம் எங்கள் தமிழ் குடியேறிகளுக்குக் கவலை தரும் விடயங்களேயல்ல! ஆக மிஞ்சிப் போனால், இருக்கவே இருக்கிறது அமெரிக்கனின் Ramstein airbase தளமும், C-17 Globe Master உம்! ஒரு ஷொப்பிங் பையோடு போய் வரிசையில் நின்றால் ஏறிப் பறந்து இங்கால வந்து விடலாம்😂! பிறகு இங்க இருந்து "அமெரிக்க, ஏகாதிபத்திய, சுரண்டல் வாத..." என்று பொங்கி, உண்டு, உறங்கிக் கழிக்க வேண்டியது தான்!
  18. நல்ல விடயம். நிக்கி ஹேலி தேர்வாகியிருந்தால் நடுவில் இருக்கும் independent வாக்காளர்கள் பைடனை விட்டு நிக்கிக்கு அதிபர் தேர்தலில் வாக்களித்திருப்பர். ட்ரம்ப் பக்கம் இத்தகைய இளம் வாக்காளர்கள் வருவது கடினம். பைடன் அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.
  19. தவறான தகவல் புத்தன். இது தனியார் மருத்துவ மனை அல்ல. தொண்டு (charity) அடிப்படையில் இயங்கும் மிசனரி மருத்துவமனை. பணம் இருப்போர் போனால் நன்கொடை கொடுக்க வலியுறுத்துவர். பணம் இல்லாத நோயாளிகளிடம் பணம் அறவிடப் படுவதில்லை. இது அமெரிக்க மிஷன். கத்தோலிக்க திருச்சபையும் இதே போன்ற ஒரு மருத்துவ மனையை திருச்சிலுவை மருத்துவ மனை என்ற பெயரில் கொழும்புத் துறையில் நடத்தி வருகிறது. நன்கொடை கொடுக்கலாம், ஆனால் நோயாளிகளிடம் வலியுறுத்தி கட்டணம் வசூலிப்பதில்லை.
  20. உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!! உங்கள் முதல் கருத்து மேலே👆 உங்களோடான உரையாடல்கள் எல்லாம் சிறு பிள்ளையோடு பேசுவது போன்ற சிவிங்க நீட்டல்களாக மாறுவது என் தவறோ உங்கள் இயல்போ என்று புரியவில்லை😂. இதற்கு ஆதாரம் எங்கே? அமெரிக்கா கோட்டை விடவில்லையென்று எங்கே யார் சொன்னார்கள்? 2022 இல் ரேடாரில் ஜப்பானிய விமானங்களைக் கண்ட இராணுவ சிப்பாய் இறக்கும் வரை இதைப் பற்றிய பேச்சும் செய்திகளும் அமெரிக்காவில் தொடர்ந்து வந்திருக்கின்றன. எனவே, இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இப்ப நீங்கள் உங்கள் செய்தி மூலத்தைத் தாருங்கள். மீசையைப் பற்றி பிறகு யோசிப்பம்😎.
  21. இது போன்ற ஆய்வு முடிவுகள் இனத்தூய்மை ("பச்சைத் தமிழன்", "சிங்கள ரத்தம்") என்ற கற்பனைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்போருக்கு கிச்சு கிச்சு மூட்டும்😎! எனவே, அதிகம் இவை பற்றிப் பேச வேண்டும். மறுவளமாக, கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆசியாவின் மேற்கில் இருந்து மத்தி வரையான பகுதியில் மக்கள் சமூகங்களிடையே நிகழ்ந்த கலப்பை (genetic admixture) இது போன்ற ஆய்வுகள் மீள மீள நிரூபிக்கின்றன. இந்தக் கலப்பிற்கு ஆதாரமான இன்னொரு சுவாரசியமான விடயம் இங்கே பகிரத் தக்கது. பசுப்பால் உட்பட, பால்களில் இருக்கும் பிரதான வெல்லம் லக்ரோசு. இந்த லக்ரோசை சமிக்கச் செய்யும் லக்ரேசு என்ற நொதியம்,மனிதன் உட்பட்ட பாலூட்டிகளில் பால் மறந்த பின்னர் செயல்படாமல் போய் விடும். ஆதிமனிதர்களில், வளர்ந்தவர்களில் லக்ரேசு இருக்கவில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், கடந்த 5000 வருடங்கள் முன்பு, சில மனித மூதாதைகள் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிக் கால்நடை மேய்த்த சமூகங்களை "மேய்ச்சல் காரர்கள்-Pastoralists" என்று அழைப்பர். இந்த மேய்ச்சல் காரர்கள் மாட்டுப் பாலை உட்கொள்ள ஆரம்பித்த போது, அவர்களில் லக்ரேசு நொதியம் வளர்ந்தவர்களிலும் தொழிற்பட ஆரம்பித்தது. இது ஒரு கூர்ப்பியல் இசைவாக்கம். ஆனால், இப்படி வளர்ந்த மனிதர்களில் பாலைச் சமிக்கச் செய்யும் இயலுமை உலகம் பூராவும் சீராக பரவிக் காணப்படவில்லை. மேலே இணைத்திருக்கும் படத்தில் காட்டப் பட்டிருப்பது போல, இந்தியா, இலங்கை, கிழக்காசியா ஆகிய பகுதிகளில் லக்ரேசு நொதியம் வேலை செய்யும் (Lactase persistence) மனிதர்களின் வீதம் மிகக் குறைவு - இதனால் 60 முதல் 78% ஆன இலங்கை இந்தியர்களில் லக்ரோசு ஒத்துவராமை (Lactose intolerance) என்ற நிலை இருக்கிறது. இந்த எடுகோளின் படி பார்த்தால், பசுப்பால் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் தென்னாசியாவில் வேரூன்றி வளர்ந்த மண்ணின் மைந்தனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பசுப்பால் உங்களுக்கு ஒத்து வந்தால், மேற்காசியாவின் மேய்ச்சல் காரர்களின் வழியில் வந்த வந்தேறியாக நீங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்! (இந்தக் கடைசிப் பந்தி என்னுடைய வியாக்கியானம் மட்டுமே, ஆனால் கூர்ப்பு மாற்றங்கள் சிக்கலானவை என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்) படமூலம் நன்றியுடன்: https://ojs.lib.uwo.ca/index.php/wurjhns/article/download/5208/4353/9276
  22. உண்மையில், இணையத் தளங்களில் தரவுகளின் தரக்கட்டுப்பாட்டைப் பேண வழிகள், முன்மாதிரிகள் இருக்கின்றன. அப்படிப் பேணினால், வருமானம் குறையும் என்ற காரணம் தான், கூகிள் போன்ற தளங்கள் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். ஒரு உதாரணம்: விஞ்ஞானத் துறையில், தரவு மூலங்களாக விளங்கும் விஞ்ஞான சஞ்சிகைகளை (scientific journals) தரப்படுத்தியிருக்கிறார்கள். Impact factor, acceptance rate போன்ற குறிகாட்டிகள் மூலம் ஒரு விஞ்ஞானச் சஞ்சிகையின் நம்பகத் தன்மையை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக் கூடிய நிலை இருக்கிறது. இதே போல கூகிள் தகவல் மூலங்களை தரப்படுத்தலாம், பெரிய கடினமான பணியல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்தில், தற்காலிகமாக கோவிட்டைப் பற்றிய தேடல் விளவுகளை கூகிள் போன்ற தளங்கள் தரப்படுத்தியது நிகழ்ந்தது. தேடற்பொறியின் algorithm ஏனைய விடயங்களில் இத்தகைய தரப்படுத்தலை செய்தால், பெரும் இலாபமீட்ட முடியாது என்பதால் ஏனைய விடயங்களில் உதாசீனமாக இருக்கிறார்கள். உதாரணமாக மேலே, நாசிப் படைகளில் ஆரியரல்லாத மக்களும் இருந்தனர் என்பது எவ்வளவு பாரதூரமானதெனப் பாருங்கள். இதை விட சிறு சிறு விடயங்கள் கூட கூகிள் போன்ற தளங்களில் தரவுப் பிழைகளாக இருக்கின்றன. என்னுடைய நண்பர்கள் பலர், படித்து பெரிய வேலைகளில் இருப்போர், நாசிகள் "6 மில்லியன் யூதர்களை மட்டும் தான் கொன்றனர்" என இன்னும் நம்புகின்றனர் அப்பாவிகளாக. ஓரினச் சேர்க்கையாளர்கள், நாசி எதிர்ப்பு கிறிஸ்தவர்கள், விசேட தேவையுடைய ஜேர்மனியர்கள், றோமாக்கள் என மேலதிக 4 மில்லியன் பேரையும் நாசிகள் கொன்றார்கள் என்பது பலருக்குத் தெரியாது.
  23. "Garbage in, Garbage out" 😂 உயிரியல் மருத்துவ ஆய்வுலகில் நவீன அணுகுமுறைகளும் உபகரணங்களும் வந்து விட்டன. ஆனால் ஆய்வு முடிவுகளின் தரத்தை , தனி மனிதனின் சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகரிப்பது போல இந்த நவீன கருவிகள் பெரிதாக அதிகரிப்பதில்லை. இதன் காரணம், ஒரு உபகரணம் என்ன தான் நவீனமாக இருந்தாலும் "குப்பையைப் போட்டால் குப்பை தான் விளைவாக வரும்- garbage in, garbage out" கூகிள் உட்பட்ட இணையத் தரவுத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் போலித்தரவுகளைச் சுத்தம் செய்யாமல், அந்தப் போலித் தரவுகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை இயங்க வைத்தால் அது போலியாகத் தான் இருக்கும். இதை Artificial Intelligence என்பதை விட Artificial Ignorance என அழைக்கலாம்!
  24. https://arangamnews.com/?p=10517 சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா? — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் அதிகாரப் போட்டிகள் சந்திக்கு வந்தது மட்டுமல்ல, அதை நீதிமன்றம் வரையில் கொண்டு வந்து விட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வழக்குக்கு எதிர்வரும் 2024 மார்ச் 05 இல் அடுத்த கட்ட விசாரணை என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது. இன்னொரு வழக்கு மார்ச் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சிக்கு இதெல்லாம் கசப்பான அனுபவம்தான். சோதனைதான். உள்ளே நெடுங்காலமாகச் சீழ்ப்பிடித்துக் குமைந்து கொண்டிருந்த விசயங்கள் இப்பொழுது வெளியே வந்துள்ளன. சீழ்ப்பிடித்திருந்தால் அது என்றாவது வெளியே வந்துதான் தீரும். குறுகிய நோக்கங்களும் பதவி ஆசையும் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. இது முடிவுக்கு வருவது கடினம். அப்படி இந்தத் துயர நிலை முடிவுக்கு வர வேண்டுமானால் கட்சியின் அரசியல் சிந்தனையும் செயற்பாடும் (உள்ளடக்கம்) மாற்றமடைய வேண்டும். அவ்வாறே அரசியற் பண்பாடும் உருவாக வேண்டும். இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை. தற்போதைய சிக்கல்களுக்கு யாப்பு மீறல், ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். தலைவர், செயலாளர் தெரிவுக்குப் பிறகு எழுந்திருந்த சர்ச்சையின்போது இதைச் சுமந்திரன் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அது கூட மென்மையாகத்தான். ஏனென்றால் யாப்புக்கு முரணான முறையிலேயே தலைவர் தெரிவு நடந்தது. இருந்தும் அதில் சுமந்திரனும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற காரணத்தினால் யாப்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்தார் சுமந்திரன். அப்படி விமர்சித்தால் அதில் தன்னுடைய தவறுகளும் உட்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். பதிலாக நடந்த தெரிவுகளை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால், யாப்பை மீறி எவரும் எதையும் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். அந்த அழுத்தம் இப்பொழுது வேலை செய்கிறது. முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின் போது தலைவர் தெரிவு உள்பட அனைத்துத் தெரிவுகளையும் மறுபடி நடத்துவதற்கு சிறிதரன் உள்பட முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வரை பொறுப்பானவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முக்கியமாக யாப்பு மீறல்களைப் பகிரங்கமாக ஏற்றுள்ளனர். இனி யாப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் நடந்தவை அனைத்தும் தவறு என்று பொருள். இந்தத் தவறுகளைச் சிறிதரன் – மாவை தரப்பு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. கட்சிக்குள்ளே இதைச் சுட்டிக்காட்டியபோது அதற்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்ப்படுத்தியிருந்தால் இப்படியான தோல்வி நிலை ஏற்பட்டிருக்காது. இப்பொழுது சிறிதரன் கொண்டாடிய வெற்றி வடியத் தொடங்கி விட்டது. பதிலாக இதில் முதற்கட்டமாக சுமந்திரன் வெற்றியடைந்துள்ளார். அதாவது நீதி மன்றத்தீர்ப்புக்கு முன்னரே சுமந்திரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களும் வலியுறுத்துவதற்கு விரும்பிய விடயங்களும் நிறைவேறியுள்ளன. எல்லாவற்றுக்கும் நாம் யாப்பைப் பின்பற்றத் தேவையில்லை என்ற முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மாவையின் ஆலோசனையைத் தொடர்ந்த சிறிதரன் தரப்பும் தலைகுனிந்துள்ளன. இப்பொழுது யாப்புப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் தமிழரசுக் கட்சியினருக்கும் அதன் அனுதாபிகளுக்கும் கொஞ்சமாவது நிகழ்ந்திருக்கும் என நம்பலாம். ஆகவே இனிமேல் அவர்கள் இதைக்குறித்து கொஞ்சமாவது எச்சரிக்கையோடு நடந்து கொள்வர். இல்லையென்றால் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பொறுப்பற்ற தனமாக, எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டிருக்கும் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா நீதிமன்றப்படியேறியே இதைப் படிக்க வேண்டிய நிலை வந்தது வரலாற்றின் சோகம். தமிழரசுக் கட்சிக்குள் துலக்கமாக இரண்டு தரப்புகள் (இரு அணிகள்) அதற்குள் உண்டென்று வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. ஒன்று சிவஞானம் சிறிதரன் – மாவை தரப்பு. அடுத்தது ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு. இது கட்சியின் விசுவாசிகளுக்கு கவலையளிப்பதே. ஆனால், இந்தக் கவலையைப் பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. இந்தக் கவலை யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகங்களுக்கும் ஊடகப் பொறுப்பாளிகளுக்கும் உண்டு. அவர்களும் தங்களால் முடிந்தளவுக்குப் பாறைகளை உடைக்க முயற்சித்தனர். அதுவும் உரிய பயனைத் தரவில்லை. சம்மட்டிகள் உடைந்ததுதான் மிச்சம். இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த இரண்டு அணியும் ஒன்றிணையச் சாத்தியமுண்டா? அப்படியென்றால் அது எப்படியாக – எந்த அடிப்படையில் – அமையும்? அப்படி ஒன்றிணைய முடியவில்லையென்றால் அடுத்த கட்டம் என்ன? சுமந்திரன் தனியொரு தரப்பாகவும் சிறிதரன் தனியொரு தரப்பாகவும் இனியும் ஒரு கட்சிக்குள் நீடிக்க முடியாத நிலையில் சுமந்திரன் தனித்துச் செல்வாரா? அப்படியாயின் அவரை ஆதரித்தோரின் நிலை என்ன? அல்லது அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தலைவர் தெரிவில் யாருக்கு வெற்றி வாய்ப்புண்டு? அதில் சுமந்திரன் வெற்றியடைந்தால் சிறிதரன் தரப்பின் கதியென்ன? சிறிதரன் வெற்றியடைந்தால் சுமந்திரனின் நிலை என்ன? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்துள்ளன. வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் அதற்கு வெளியே இரு அணிகளையும் இணைத்துச் சமரசம் செய்வதற்கு சில மதத்தலைவர்களும்(?) ஊடகப் பொறுப்பாளிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். அது எந்தளவுக்குச் சாத்தியங்களை உண்டாக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த முரண்பாடு தனியே யாப்பு மீறல், ஜனநாயக விரோதம், பதவிப் போட்டி என்பதற்கு அப்பால், அரசியல் நோக்கின் அடிப்படையிலானதுமாகும். சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறை வேறு. சிறிதரன் தரப்பின் அரசியல் நிலைப்பாடும் அணுகுமுறையும் வேறு. அதுவே இங்கே அடிப்படையான முரண்பாடாகும். ஆகவே இதைச் சமரசத்துக்குட்படுத்துவது எளிதானதல்ல. தற்போது சில விட்டுக் கொடுப்புகள், நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசத்தை எட்டினாலும் எதிர்காலத்தில், அது உடைந்தே தீரும். அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள், ஆட் தேர்வுகள் போன்றவற்றில் நிச்சயமாக மீண்டும் முரண்பாடுகள் எழுந்தே தீரும். அவற்றை எளிதாகத் தீர்த்து விட முடியாது. ஏனென்றால் இந்தப் பிரச்சினை (முரண்பாடு) எழுந்தபோது சிறிதரன் தன்னுடைய வழமையான பாணியில் (அவருடைய விசேட குணவியல்பின்படி) சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்லாமல் வழக்கை எதிர்கொள்ளவே தீர்மானித்தார். அதாவது சவாலை எதிர்கொள்ள முடிவெடுத்தார். என்பதால்தான் “தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்” எனத் தன்னுடைய முகப்புத்தகத்தில் சிறிதரன் பதிவிட வேண்டியிருந்ததும். மேலும் இதற்காகவே அவர் கொடிகாமத்தில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய மாநாடு என்ற வகையில் தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டித் தன்னுடைய பலத்தைக் காட்ட முயற்சித்தார். இதில் கடும்போக்காளர்கள் ஒன்று திரண்டனர். இவர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் முஸ்டியை உயர்த்திக் காட்டினார்கள். சுமந்திரன் தோற்றுப் பின்னடைவதாக ஒரு தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்பட்டது. இது கத்திக்குக் கத்தி. சவாலுக்குச் சவால் என்ற மாதிரியானது. ஆனால், அரசியலில் இத்தகைய அணுகுமுறை பயன்தராது. அதன் பயனையே இப்பொழுது அவர்கள் அறுவடை செய்கிறார்கள். ஏற்கனவே சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பின் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. கிளிநொச்சி உட்பட பல இடங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இயங்க விடாமல் அவற்றுக்கு முட்டுக்கை இட்டார் சிறிதரன். இறுதியில் தமிழரசுக் கட்சியே அந்த நிலைக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் எதையும் பட்டறிந்து கொள்வதாக இல்லை. வழக்கு முடிவுகளுக்குப் பிறகு புதிய தெரிவின் மூலம் எல்லாவற்றையும் சீர் செய்து விடலாம் என்று சிறிதரனோ மாவையோ ஏன் அந்தத் தரப்பிலுள்ள ஏனையோரே கருதலாம். அதொன்றும் அப்படி எளிதானதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இது கட்சிக்குள் நிலவுகின்ற வேறுபாடுகளின் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு, அணுகுமுறை, ஜனநாயக விழுமியத்தின் மீதான கரிசனை எனப் பல அடிப்படைகளுடன் தொடர்புடையது. சுமந்திரனோ மென்போக்கைக் கடைப்பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பவர். அதற்கமைய சிங்கள, முஸ்லிம், மலையத் தரப்புகளோடு உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவர். சர்வதேச சமூகத்துடனும் அவர் கொண்டுள்ள உறவு இந்த அடிப்படையிலானதே. குறிப்பாக வெளியுலகத்தின் உளநிலையை (அரசியலை) புரிந்து கொண்டு அவற்றோடு உறவை ஏற்படுத்தியிருப்பவர். இதனை தலைவர் தெரிவின் பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியுப் நேர்காணலில் சுமந்திரனே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிதரன் இதற்கு மாறாக தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருடைய அரசியல் யுத்தத்துக்கு முந்தியது. 1970 களில் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரகடனப்படுத்திய சொல்லரசியல். அதற்கு எந்தச் செயற்பாட்டு வடிவமும் கிடையாது. எந்த அணுமுறையும் இல்லை. சமூகத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்கும் பேச்சே அதனுடைய அடிப்படை. இதற்கு ஏனைய சமூகங்களோடு ஊடாட வேண்டிய அவசியமில்லை. என்பதால்தான் அவர் தலைவர் தெரிவை அடுத்து கிளிநொச்சிக்குச் சென்று துயிலும் இல்லத்தில் தன்னை வெளிப்படுத்தியது. மட்டுமல்ல, யாப்பு, ஜனநாயக விழுமியம், அரசியற் பண்பாடு, புத்தாக்க உணர்வு என எதையும் பொருட்படுத்தாமல் அணிப் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது. இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதன் நிமித்தமாகப் பரிகாரம் (மாற்றங்களை) செய்தால்தான் தமிழரசுக் கட்சி மீளுயிர்ப்படையும். இல்லையெனில் அது தன்னுடைய வழியை ஒடுக்கிக் கொள்ளும். அந்த வழியை வரலாற்றுக் காடு மூடிவிடும். கடந்த வாரங்களில் இருந்ததைப்போன்று இப்போதைய நிலை இல்லை. கட்சியில் போட்டியற்ற விதமாகத் தெரிவுகளை மேற்கொள்ளும் முடிவொன்று ஏற்படுமானால் ஓரளவுக்குச் சுமுக நிலை ஏற்படும். அப்படியென்றால் மறுபடியும் யார் தலைவர் என்ற கேள்வி எழும். சுமந்திரன் மறுபடியும் தலைமைத்துவத்தைக் கோருவாரா என்று தெரியவில்லை. ஆனால், சிறிதரன் தலைமைக்கான குறியை விட்டுவிடப்போவதில்லை. அவ்வாறே செயலாளர் குறித்த தேர்வும். அவற்றில் எத்தகைய உடன்பாடுகள் எட்டப்படப்போகின்றன என்பது கேள்வியே. குகதாசனும் எளிதில் விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கட்சியின் நலனைக் குறித்து எல்லோரும் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்றால் சிறிதரன் – சுமந்திரன் அணிகளுக்கு அப்பாலான ஒரு தலைமையையே தேர்வு செய்ய வேண்டும். அது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஆகவே வழக்குத் தீர்ப்புக் கிடைத்தாலும் நடைமுறையில் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையே தொடர்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.