-
Posts
6191 -
Joined
-
Last visited
-
Days Won
70
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
Justin replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ட்ரம்ப் உலக அரங்கிலும், உள்நாட்டிலும் விசர்க் கூத்தாடிய போது ஆபத்பாந்தவனாக வந்து நம்பிக்கை தந்த பைடன் இப்படி சராசரி அரசியல் வாதியாக அரங்கிலிருந்து நீங்குகிறார். 4 வருடத்தில் அல்ல, இரண்டு வருடங்களில் வரும் இடைத்தேர்தலில் கூட நீலக் கட்சி சோபிக்காத வகையில் இந்தச் செயல்கள் விளைவைக் காட்டும். -
நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர். இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர். இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள். யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன்.
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந்தால் நமக்கென்ன? இப்போது இருப்போரை விட அவர்கள் மோசமானவர்களா நாம் எதையும் இழப்பதற்கு?" என்று கேட்ட ரஞ்சித்தே இன்று ஜேவிபி யின் ஆபத்துகளைப் பற்றித் தேர்வு செய்த கட்டுரைகளை இணைப்பது காலம் எவ்வளவு மாறி விட்டதெனக் காட்டுகிறது. ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து. வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear!
-
இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!
-
ஆம், சிறு நீரக செயலிழப்பு, இரத்த அழுத்த மாற்றம் என்பன இதைத் தான் காட்டுகின்றன. இந்த இடத்தில் கட்டுப் பாடற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) தாயகத்தில் பாவிக்கப் படுவதையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால், சாதாரணமாக இது போன்ற நோய்களில் பயன்படுத்தப் படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தி (antibiotic resistance) உருவாகி, அந்த மருந்துகள் வேலை செய்யாமல் போகும் நிலை இருக்கிறது.
-
மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்: 1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு. 2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை. 3. CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே, CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை. இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம். தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம். இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.
-
தன்னைப் பற்றி இன்னொருவர் செய்த ஆய்வை அப்படியே அர்ச்சுனா தன் முகநூலில் பதிந்திருக்கிறார். அர்ச்சுனா அவர்களின் பிரச்சினை, நான் அறிந்த வரையில், அவரது கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினை. இந்த சவால்களோடு அவர் க.பொ.த உயரதரம் உயிரியல் பிரிவில் சித்தி பெற்று, மருத்துவ பீடம் சென்று அங்கேயும் பல பின்னடைவுகளுடன் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவராக வெளிவந்தமை, அவரது தனிப்பட்ட சாதனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் காட்டிய அதே கட்டுப் பாட்டையும் ஒர்மத்தையும் பொது வாழ்க்கையில் காட்ட இயலாமல் தடுமாறுகிறார் என நினைக்கிறேன். இந்த தடுமாற்றத்திற்கான ஒரு பிரதான காரணி, இவரது தனிப்பட்ட சவால்களை அறியாமல் இவரைக் காட்சிப் பொருளாக்கி விட்டிருக்கும் யூ ரியூபர்களும், அதன் சந்தாதாரர்களும். தன்னுடைய வட்டத்தைக் குறுக்கிக் கொண்டு பொது வாழ்க்கையில் சில கட்டுப் பாடுகளைப் பேண வேண்டும் என்று புரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!
-
மெர்வின் சில்வா டாக்டரா? 😂
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Justin replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
நோ நோ, கலவரமெல்லாம் வராது! யாழ் கள மெம்பர்ஸ் அனைவரும் இல்லா விட்டாலும், ஓரிருவர் "மிகவும் டீசண்டானவர்கள்"! உங்கள் தனிபட்ட விபரங்களான மனைவிகள்/ கணவர்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் ஆகியவற்றை வெளிப்படுத்தாமல் கருத்தாடினால் டீசண்டான உறுப்பினர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்😎! -
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
Justin replied to rajen ammaan002's topic in யாழ் அரிச்சுவடி
இதிலென்ன ஆச்சரியம்? ஒரு அவதாரில் வந்து வைக்கும் அவியலுக்கு யாரும் ஆதாரம் கேட்டால், மாற்று அவதாரில் வந்து ஆதாரம் கேட்டவரைத் திட்டி விட்டு, மீண்டும் ஒரிஜினல் அவதாரில் வந்து திட்டலுக்குப் பச்சை குத்துவது..இப்படி பல "மானஸ்தன்கள்" உலா வந்த/வரும் இடம் இது😎! -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Justin replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இதென்ன ரசோ சார்?🤣 நீண்ட விடுமுறை வரும் வாரத்தில் இப்படி "புரின் புரியன்மாரையும்" தமிழ் தேசிய தீகக்கும் dragon களையும் ஒரே நேரத்தில் கோபப் படுத்தி? றிஸ்க் எடுப்பது உங்களுக்கு றஸ்க் சாப்பிடுவது போலுள்ளதோ😎? -
உங்களைப் பொறுத்த வரையில் சினேகபூர்வமான ஒருவர் தவறிழைக்கும் போது வெள்ளைப் பெயின்ற் அடிப்பது ஒற்றுமையைக் கூட்டும் என்கிறீர்கள்? 😂 அப்படியானால் பல வருடங்களாக பெண் வெறுப்பு, சாதி சமய வெறுப்பு, பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் -இப்படியான வாதங்களை இங்கே கருத்துக்களாக எழுதி வரும் உங்கள் "சினேக பூர்வமான" உறவுகளுக்கு நீங்கள் "கவர்" கொடுத்ததால் தமிழர் ஒற்றுமை கூடியிருக்கிறது என்கிறீர்களா? என்ன ஆதாரம் இருக்கிறது இந்த ஒற்றுமை பலமானதாக நீங்கள் கருதியமைக்கு? இங்கே சில உண்மைகளை சீனி தடவாமல் எழுதும் ஐலண்டையும், கபிதானையும் நீங்கள் போட்டுத் தாக்குகிற தீவிரத்தில், ஒரு வீதத்தையாவது இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? இதைச் செய்யாமல் "எல்லாரும் குறையுடயோர் தான் " என்று நீங்கள் பேசும் சுடலைத் தத்துவத்தை ஏன் கொல்லப் பட்ட, தற்போதும் அச்சுறுத்தப் படும் சில தமிழ் அரசியல் வாதிகள் விடயத்தில் உங்களால் பிரயோகிக்க முடியவில்லை? இவையெல்லாம் பதில் தேடும் கேள்விகள் அல்ல. தமிழர் ஒற்றுமையில் உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும் கேள்விகள். எனவே ஒற்றுமையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்கள் பணியைக் கவனியுங்கள்!
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
Justin replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறார் அர்ச்சுனா😂. கஜேந்திரன் ரீம் போல 6 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, கையொப்பமிட்டு, பதவியேற்று விட்டு, வெளியே வந்து "இரு தேசம்" என்று தமிழ் பகுதிகளில் மட்டும் முழங்காமல் வெள்ளந்தியாக இருக்க முயன்றிருக்கிறார்! -
கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்?
Justin replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
🤣😂 தமிழரசு இவர்களை விட்டு வெளியே போனதா? தமிழரசு எப்போது ரெலோவின் தலைமையின் கீழ் இருந்தது? 90 களுக்கு ஒத்த நிலையை வாக்காளர்கள் தந்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள்: "கப்பம்" , ரெலோ வென்ற பின்னர் "கட்சி நன்கொடை" ஆனது போல தற்போது செய்ய முடியாவிட்டாலும், வாகன இறக்குமதி பெர்மிற்றை வைத்தாவது உழைக்கலாம் அல்லவா? ஏன் குறைப் படுகிறார் செல்வம் பா.உ? -
இதைப் புற்று நோய்கள் போலப் பாருங்கள். எல்லா வகைப் புற்று நோய்களையும் வெட்டி, கதிர்வீசி அழிக்க முடியாது. ஆனால், அனேகமாக எல்லா வகைப் புற்று நோய்களையும் கண்டறிந்து "இது இருக்கிறது" என்று கண்டு, தண்டோரா போட்டு அறிவிக்கலாம். அப்படி அறிவிப்பதே இந்த "கேன்சர்" வியாதி இருப்போர் கருத்துரைக்காமல், ஒளிந்து மறைந்திருக்கச் செய்தால், அதுவும் வெற்றி தான். அவர்களை மாற்றுவது நோக்கமல்ல, ஆனால் சமூகத்தில் இத்தகைய குரல்கள் ஒலிக்கவோ, பெருப்பிக்கப் படவோ, செவிமடுக்கப் படவோ கூடாது என்பது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குக் கூட தடையாக இருப்பது "சக பக்தியாளன்" 😎என்பதால் கேன்சர்களுக்கு வெள்ளையடிக்கும் யாழ் கள உறுப்பினர்கள். புகைக் குண்டெறியும் றௌடிகள் முதல் போலித் துவாரகாவை முன்னிறுத்தி பிசினஸ் செய்பவன் வரை "அவிங்க நல்லவங்க" என்று ஊக்குவிக்கும் போக்கு, எங்களுக்கு இரட்டை ஆப்புச் செருகும்: ஆப்பு 1, கேன்சர்கள் துணிந்து வளரும். ஆப்பு 2, "இது தான் உங்கட தமிழ் தேசியமா?" என்று மக்கள் NPP போன்ற கட்சிகளை நாடுவர். பிறகு இதே ஆட்கள் வந்து "ஐயோ தமிழ் தேசியம் தாயகத்தில் இல்லையே" என்று ஒப்பாரியும் வைப்பர்😂.
-
யாழ் களத்தில் வலம் வருவோரிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் வைரவன்😂. பெரும்பாலானோர் தங்கள் வாசலில் நெருப்பு வரும் வரை "நமக்கேன் வம்பு?" என்று பேசாமல் இருப்போர். இன்னும் சிலர் உண்மையிலேயே "தொனிச் செவிடர்கள்", அவர்களுக்கு வெளிப்படையாக எழுதினால் ஒழிய இந்த உள் துவேஷம் (implicit bias) எல்லாம் கேட்காத அதிர்வெண்ணில் சஞ்சரிப்பவர்கள். மூன்றாவது தரப்பினர் தான் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்: அவர்கள் தொனிச்செவிடரும் அல்ல, பேசா மடந்தைகளும் அல்ல. "நம்மோடு சேர்ந்து விக்கிரகத்தைச் சுமக்கிறானே?" என்ற பாசத்தில் பெயின்ற் வாளியோடு வந்து வெள்ளையடித்து விட்டுக் கடந்து போய் விடுவர்😎. இந்த மூன்றாம் தரப்பின் சொல்லும் செயலும் தான் "தமிழ் தேசியம்" என்று இவர்கள் பெயரிட்டு அழைக்கும் முட்டாள் தனத்திற்கு, கடந்த தேர்தலில் தாயகத்தில் பிடரியில் அடிவிழக் காரணம். அடுத்து வரும் உள்ளூராட்சி, (நடந்தால்) மாகாண சபைத் தேர்தல்களில் முகத்திலேயே தாயக வாக்காளர்கள் அறைந்தாலும் கூட இவையள் திருந்தாயினம். ஏனெனில் விக்கிரகம் சுமத்தல் என்பது இவர்களுக்கு புலத்தில் வியாபார வாய்ப்பு!
-
கவிதை நன்று! இது உதித்தது இலங்கைத் தேர்தல் முடிவின் விரக்தியாலா அல்லது அமெரிக்கத் தேர்தல் முடிவின் சலிப்பினாலா?😂
-
ஓம், பாபத் என்று தான் நினைவு. மிருகவைத்திய பீடத்தில் இரண்டாம் ஆண்டிலேயே இறந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, யானை ஆகியவற்றை சிரேஷ்ட அணி வெட்டி மேய்ந்து பிரேத பரிசோதனை செய்யும் போது, சுற்றி நின்று பார்க்க வைப்பார்கள். இந்த விலங்குகளின் குடலைத் திறக்கும் போது உள்ளே வகை வகையாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இருக்கும். இதைப் பார்த்த பின்னர் எப்படி பாபத் சாப்பிட மனம் வரும்?😂 பெரும்பாலும் பொறியியல் பீட நண்பர்கள் உண்ணும் போது ஒன்றும் பேசாமல் அந்த "குட்டிப் பிளாஸ்ரிக் கப்பில்" ரீயை உறிஞ்சிக் கொண்டிருப்பது தான்!
-
"சுமந்திரன் லவ்வர்சின்" தவிப்பைப் பார்க்கையில் பல பாடல்களை சிற்றுவேஷன் பாடலாகக் கொடுக்கலாம்..ஆனாலும் "இல்லையென்று சொன்ன பின்பும் இன்றியமையாது.."😂
-
பல்கலை மட்ட ஜேவிபி அடிப்படையில் உசார் மடையர்கள் தான். உடனே கை வைத்து விடுவார்கள். பின்னர் கை நீட்டியவன் மீது பல்கலை ஒழுக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று வேளையும் கன்ரீன் உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து வகுப்பிற்குப் போகாமல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். மறந்தும் கூட "உண்ணாவிரதம்" போன்ற சுய ஒறுத்தல் போராட்டங்களில் ஈடு பட மாட்டார்கள்😂.
-
சரியான முடிவு. பத்தாயிரக் கணக்கான மக்களைக் கொன்று விட்டு ஒருவரை சும்மா உலக வலம் வர அனுமதித்தால், இன்னும் இன்னும் அரச கொலைகாரர்கள் உருவாக வழியேற்பட்டு விடும். இந்த தலைமை வழக்கறிஞர் கான் அவர்களை பாலியல் குற்றத்தில் மாட்ட வைக்க முயற்சித்தார்கள். அது பலித்தாலும் கூட விடயம் இப்போது கைது ஆணையாக உருவாகி விட்டது. இந்த விவகாரத்தில், பன்னாடைத் தனமான பைடனின் கருத்திற்கும், பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் கருத்திற்குமிடையேயான வேறு பாடு குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவும் பிரிட்டனும், மனித உரிமை விடயங்களில் தலைமையேற்கும் நிலை அடுத்த 4 வருடங்களுக்கு நல்ல சகுனம்!
-
🤣 சரி. உங்களுக்கு வாரம் முழுக்க விரதம் இருக்க வைக்கும் இன்னொரு விசயத்தையும் நினைவு படுத்தி விடுவம். மத்திய நூலகத்திற்கு அருகில், கூட்டுறவுக் கடைக்கு முன்னால் இருக்கும் WUS கன்ரீன் நினைவிருக்கிறதா? காலா காலமாக முஸ்லிம் முதலாளிகளால் நடத்தப் பட்ட இந்த கன்ரீனில் மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். "குடல் கறி" என்று ஒன்று விற்பார்கள். பிளேட்டில் குடல் கறியைப் போட்டதும், அதில் இருக்கும் எண்ணை தனியாகப் பிரிந்து பிளேட்டில் நிற்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த என் வகுப்புத் தோழர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை!
-
இந்த பாராளுமன்றக் "கன்ரீன்" என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும். மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
Justin replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
"புரின் சொல்வதை நம்புங்கள்" என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால், "புரின் புரியன்மாருக்கே" உரிய மிகையுணர்திறன் காரணமாக, உடனே என் சட்டைக் கொலரைப் பிடித்து விட்டீர்கள்😎. (👇உங்களுக்கான பதில் அல்ல) புரின் சொன்னாலும், பைடன் சொன்னாலும், "பேராண்டி" சொன்னாலும், றொக்கற் பௌதீகவியல் ஒன்று தான்: ஏவுகணைகளின் பறப்புப் பாதையைப் பொறுத்து இரண்டு வகை: ஒன்று நேராகப் பறக்கும் cruise missile, மற்றது வளைவுப் பாதையில் மேலெழுந்து பின் கீழ் நோக்கி வரும் ballistic missile. நவீன கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் எல்லாமே ballistic தான். ஆனால், ballistic missile எல்லாம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் அல்ல. ஏன்? ஏவுகணை செல்லும் தூரத்தை (range) வைத்துத் தான் அது கண்டம் விட்டுக் கண்டம் பாயுமா என்று வகைப் படுத்துவர். இந்த தூரத்தைப் பொறுத்த வரையில், இது கண்டம் பாயும் ஏவுகணை அல்ல. https://armscontrolcenter.org/wp-content/uploads/2017/04/Ballistic-vs.-Cruise-Missiles-Fact-Sheet.pdf