Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. என்ன "வெள்ளிடைமலை" உங்களுக்குத் தெரிந்தது? "தமிழேண்டா!" என்று கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் ஆதரிக்கா விட்டால், பல்வேறு முத்திரைகளை இங்கே குத்துவார்கள்: மதம் உள்ளே வரும் (பெயர் ஜஸ்ரின் என்பதால்!), படிப்பு வரும், பிறகு "மாற்று இயக்கத்தில் இருந்தவர் போல" என்றும் ஊகம் பரப்புவர். எதுவும் செய்ய முடியா விட்டால் "முற்றுப் புள்ளி" போட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான்😎!
  2. என்னுடைய அனுபவம் இது. இது முஸ்லிம் தரப்பிற்கு நற்சான்றிதழாக மாறி விடும் என்பதற்காக நான் பகிராமல் மௌனமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை. உங்கள் போன்றோர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு விடயம், இந்த சட்டத்தரணி போன்றோர் வெளியே வந்து பேசி, வரவேற்பைப் பெறுவதற்கு பிரதான தூண்டிகளாக இருப்பது உங்கள் போன்ற பிழையைப் பிழை என்று ஏற்றுக் கொள்ளாமல் கடைந்தெடுத்த இனக்குரோதத்தோடு விடயங்களை அணுகும் ஆட்கள் தான். நீங்கள் பேசும் வரை, இவர் போன்றவர்களும் பேசுவார்கள், அவை அக்குரணை நியூசில் வரும், இங்கேயும் பகிரப் படும்!
  3. ஒரு குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதன் ஆபத்தை வெளிக்காட்டிய அண்மைய உதாரணம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரான்சில், தன் பாலியல் வக்கிரத்திற்காக தன் மனைவியை மயக்க நிலையில் வைத்து பல ஆண்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்ய அனுமதித்த சைக்கோ கணவன் கேசில், கணவனின் விருப்பப் படி வந்து வல்லுறவில் ஈடுபட்ட ஐம்பது ஆண்களுக்கும் தண்டனை விதித்தார்கள். அவர்களுள் பலர் மேன் முறையீடு செய்யத் தயாராகினர். இறுதியில் பெரும்பாலானோர் பின்வாங்கி விட ஒரேயொருவர் மட்டும் "நான் வழி தவறிய பலியாடு, இங்கே நான் தான் பாதிக்கப் பட்டவன்" என்று துணிந்து மேன் முறையீடு செய்தார். "நீ செய்த வேலைக்கு, உனக்குக் கிடைத்த 9 வருடம் காணாதே? என்று 10 வருடம் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்😂. Man who appealed Pelicot rape conviction handed longer ja...A French court increases by a year the jail term of the only man who challenged his conviction for raping Gisèle Pelicot.என் சந்தேகம், இந்த "வழி தவறிய ஆட்டுக்கு" நண்பர் கடஞ்சா போலவே ஒரு வக்கீல் அட்வைஸ் கொடுத்திருப்பார்!
  4. அதிஷ்டக் காரக் கணவன் நீங்கள்! இப்படியான அதிர்ஷ்டம் எல்லாக் கணவர் மாருக்கும் கிடைக்காது! அதுவும் ஈழத்தமிழ் பெண்களின் கணவர் மாருக்கு "வாய்ப்பேயில்லை😂!"
  5. முதலில் தலைவர்கள் வேறு மக்கள் வேறு என்பதை நீங்கள் உங்கள் பக்திப் பரவசத்தை இறக்கி வைத்து விட்டுப் புரிந்து கொள்ள முனைய வேண்டும்! பிரபாகரன் பின்னால் எல்லாத் தமிழரும் நிற்கவில்லை (நிச்சயமாக இந்த முஸ்லிம்கள் வெளியேற்ற விடயத்தில் நிற்கவில்லை). அஷ்ரப்பின் பின்னால் எல்லா இலங்கை முஸ்லிம்களும் நிற்கவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் மக்கள், அவர்கள் வலி இருக்கும் வரை பேசுவர். பேசாதே என்று சொல்லும் உரிமை முஸ்லிம்கள் வெளியேற்றத்தையே வெள்ளையடிக்க முயலும் எந்த தமிழருக்கும் இல்லை. எந்த ஒப்பந்தங்களை நான் மெச்சியிருக்கிறேன்? தமிழர்களுக்கு வாய்ப்புகள் வந்தன, மெச்சக் கூடியதாக ஒரு ஒப்பந்தமும் வரவில்லை. ஆனால், "புலிகளும், மக்களும் அழிதல்" என்ற தீர்வை விட, இது வரை வந்த எந்த ஓட்டை ஒப்பந்தமும் திறம் தானே? இதைப் புரிந்து கொள்ள எத்தனை நியூரோன்கள் ஒருவருக்குத் தேவை?
  6. என் தற்போதைய ஆசை: கடஞ்சாவின் எழுத்துக்களைப் வாசித்து "நான் கள்வன் அல்ல, ஒரு வழி தவறிய ஆடு!" என்று நினைத்து சஞ்ஜீவும் ஆரணியும் பிரிட்டனுக்கு மீள வர வேண்டும்😂! பிரிட்டனின் நீதித்துறை தன் கடமையை செய்ய உதவியமைக்காக கடஞ்சாவுக்கு ஒரு OBE கொடுக்கும் பக்கிங்ஹாம்!
  7. நீங்கள் ஒவ்வாமை அல்ல! பாதிக்கப் பட்டவன் (victim) தான் வலி இல்லாமல் போய் விட்டதா என்று உறுதி செய்ய வேண்டுமேயொழிய, பாதிப்பைக் கொடுத்தவர்களின் தரப்பு (perpetrator) அல்ல. இதை சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் நாம் சொல்லிக் கொண்டு, "வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் வலி முடிவுக்கு வந்தது"😎 என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?
  8. உண்மையாகவா😂? தமிழ் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக நிலை வலதுசாரித்தனத்தாலும், மத - இன வாதங்களாலும் பாதிக்கப் பட்ட பிரிப்பரசியல் செய்யும் ஏனைய இந்திய மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு மேலாக இருக்கிறது - இதற்கான ஆதாரங்களும், தரவுகளும் நீங்கள் "கண்களை" திறந்து பார்த்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். சீமான் போன்ற வலதுசாரித் தமிழர்களின் சமூகவலை ஊடகங்களின் வர்ணங்களில் கண் மங்கிப் போனால் "திராவிடம் எதுவும் சாதிக்கவில்லை" என்ற புரிதல் மட்டும் தான் எஞ்சும்!
  9. எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.
  10. கேட்கிறேன் என்று குறை நினைக்கப் படாது, இந்தக் காட்சியை எழுத யாழ் களத்தில் நடக்கும் சில பரிமாற்றங்கள் உங்களுக்கு ஊக்கம் தந்திருக்குமோ😂?
  11. 🤣 இப்படியாக இருந்து பேசி நாமும் பல வலிகளை மறக்கலாம் போல இருக்கு! கருணாநிதி, சோனியா காந்தி, ஏன் கோத்தா ரீமோடு கூட இருந்து பேசி வலியைக் கடந்து விடலாம் போல! மேலே வசி சொல்லியிருப்பதைப் போல, ஒரு தரப்பு தங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றிப் பேசினாலே கோபம் கொள்கிறவர்களும், "அவங்கள் நகை போடுவதில்லையே?" என குர் ஆன் வரையில் தேடிப் போய் நியாயம் கற்பிப்போரும் வலியை மறைய விடப் போவதில்லை!
  12. வெளியேற்றப் பட்ட முஸ்லிம் குடும்பங்கள் "ஒரு தொகைப் பணம் எடுத்துச் செல்லலாம். வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல முடியாது" என்ற நிபந்தனை இருந்ததாக அறிந்திருக்கிறேன். மீறி தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்றவர்களிடம் அவை பலவந்தமாகப் பறிக்கப் பட்டதாக செவிவழிச் செய்திகள் கேள்விப் பட்டேன். எவ்வளவு பரவலாக இது நடந்தது என அறியேன் (இவையெல்லாம் செய்திகளாக அந்த நாட்களில் உதயனில், ஈழநாட்டில் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும், எனவே பதிவுகள் இல்லை). யாழ் நகர நவீன சந்தையில் பான்சி (Fancy) கடைகள் என நாம் அழைக்கும் வீட்டு அலங்கரிப்புப் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள் பல முஸ்லிகளுக்குச் சொந்தமாக இருந்தன. அவற்றின் திறப்புகள் பலவற்றை "நாம் பத்திரமாக பாதுகாக்கிறோம்" என்று கூட்டம் வைத்து உறுதி கொடுத்து புலிகளின் அரசியல் துறையினர் வாங்கிக் கொண்டனர். சில உரிமையாளர்கள், தங்கள் கடைத் திறப்புகளைப் புலிகளிடம் கொடுக்காமல் அயல் கடைகளின் உரிமையாளர்களான தமிழர்களிடம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்குள் இந்தத் திறப்புகளையும் புலிகள் தமிழ்க் கடைக் காரர்களிடமிருந்து வாங்கிக் கொண்டனர். திறப்புகள் இல்லாத கடைகளை உடைத்துத் திறந்தனர். அந்தப் பொருட்களுக்கு என்ன ஆனது? யாழ் அரச ஆஸ்பத்திருக்குப் பின் வீதியில், நியூ மாஸ்ரர் ரியூசன் கொட்டிலுக்கு அருகில் "எழிலகம்" என்ற பெரிய கடையொன்றைத் திறந்தனர். அங்கே வைத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமிருந்து எடுக்கப் பட்ட வீட்டு அழகு சாதனப் பொருட்கள் விற்கப் பட்டன. விற்ற பணத்தை யார் எடுத்துக் கொண்டார்கள் என்பதை ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். தனிப்பட நான் அறிந்த சில கதைகள் கொடுமையானவை. அந்தக் காலங்களில் ஊரில் துணி லெங்த் எடுத்து ரெய்லரிடம் போய்த் தான் உடைகள் தைப்போம் - கடையில் புத்தாடை வாங்குவதை விட அது தான் மலிவானது. எனக்கும் என் அண்ணருக்கும் உடைகள் தைக்கும் ரெய்லர்கள் இரட்டையர்களான முஸ்லிம் இளைஞர்கள். நவீன சந்தைக்கு வெளியே இருந்த, ஒரு கடை என்று சொல்ல முடியாத ஒரு hole in the wall இல் இரண்டு காலால் இயக்கும் தையல் இயந்திரங்களை வைத்துத் தான் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள் தங்கள் தையல் இயந்திரங்களை தம்மோடு எடுத்துச் செல்ல புலிகள் அனுமதிக்கவில்லை என அண்ணர் சொன்னார். எப்படி இருந்திருக்கும் அவர்களுக்கு என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
  13. முதலில் எதை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவோடு ஒப்பிட முடியாது, இரு வியாபாரங்களை ஒப்பிட முடியாது, இப்ப "வீட்டுக் கடனை வியாபாரக் கடனோடு ஒப்பிட முடியாது" என்றும் சொல்லியாகி விட்டது😂! என் கேள்வி: இந்தக் கள்ள எண்ணை வியாபாரியை சாதாரண வீட்டுக் கடன் பெறுபவர்களோடு முதலில் ஒப்பீடு செய்த "ஒப்பிலா மணி" இப்ப எங்க போய் விட்டார்😎?
  14. ஒரு தொழில் முனைவர் இலாபம் பார்க்கும் பேராசையில் "தன்னிடம் எவ்வளவு இருக்கிறது?" என்றே எண்ணிப் பார்க்காமல் பல்வேறு தொழில் முயற்சிகளைக் கடன் வாங்கி ஆரம்பித்திருக்கிறார். இப்படியாக பல தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அவற்றிடையே பணத்தை கட்டுப் பாடுகளின்றி மீள் சுழற்சி (rolling) செய்வது பல நாடுகளில் வியாபார விதிகளை மீறும் ஒரு செயல் (இப்படியாக தன்னுடய இரண்டு கம்பனிகளிடையே பணத்தை சுழற்சி செய்து, அதில் ஒரு கம்பனியில் முதல் போட்டவர்களுக்கு போலி இலாபம் காட்டிய முன்னாள் தொழில் முனைவர் சாண்ட் பாங்க்மான், தற்போது நியூயோர்க் சிறையில் வசிக்கிறார் -அந்தளவுக்கு இது அமெரிக்க சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றம்!). இப்படியான போலி இலாபம், இல்லாத செல்வத்தை இருப்பதாகத் தோற்றம் காட்டி வங்கிகளிடம் கடன் பெற்ற இந்த தொழில் முனைவர், இலாபத்திற்கும் வரி கட்டவில்லை, தன் தொழிற்சாலைகளில் பலவற்றை தொடர்ந்து செயல்படுத்தவும் முடியவில்லை. இதன் பொறுப்பை கடன் கொடுத்தவர்களிடம் சுமத்தி விடுவது மோசடி செய்த தொழில் முனைவரைக் காப்பாற்றும் முயற்சியா அல்லது வாசகர்களை "இதெல்லாம் சகஜம், எனவே நீங்களும் செய்யலாம் பிசினஸ்!"😎 என்று தவறான பாதையில் ஊக்குவிக்கும் நா.மு ஸ்ரைல் அட்வைசா என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவர் தனது வீட்டை சமகாலத்தில் தன் கையிலிருக்கும் செல்வத்தை மட்டும் வைத்துத் தான் வாங்க முடியும் என்றால், எங்கள் ஊரில் இருப்பது போல பரம்பரையாக சொத்து வைத்திருப்பவர்கள் போலத் தான் மேற்கு நாடுகளிலும் ஒரு நிலை உருவாகும். எனவே தான் மேற்கு நாடுகளில், வீட்டுக் கடன் (mortgage), கடன் வாங்குபவரின் நம்பகத்தன்மையை பல வழிகளில் உறுதி செய்து, அதற்கும் மேலதிகமாக அந்த கடனுக்கு காப்புறுதியும் எடுத்து வங்கிகள் கடன் வழங்கும். ஒரு குறிப்பிட்ட தொகையினர் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும், காப்புறுதி நிறுவனம் வங்கியின் இழப்பை ஈடு செய்யும். பெருந்தொகையினர் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறின், வங்கியின் இழப்பை காப்புறுதிக் கம்பனியால் ஒரே நேரத்தில் ஈடு செய்ய இயலாது - இது தான் 2008 இல் அமெரிக்காவில் நடந்தது (மேலதிக விளக்கம் தேவையானோர் "The Big Short" என்ற திரைப்படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்). எனவே வீட்டுக் கடன் என்பது செய்தியில் இருப்பவர் போன்ற மொள்ளமாறி பிசினஸ் ஆட்களின் விளையாட்டுக்குரிய ஒரு சிஸ்ரம் அல்ல! நேர்மையாக உழைத்து, வரி கட்டி, தங்கள் குடும்பத்தையும் ஒரு நிலையான இடத்தில் வாழ ஆசைப்படும் சாதாரண மக்களுக்குரிய ஒரு முறைமை தான் வீட்டுக் கடன்!
  15. அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?
  16. உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும். 7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம். இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!
  17. 🤣 அருமையாகக் "கற்பனைக் கதை எழுதியிருக்கிறார் பா. ரவீந்திரன்! இப்படியாக சாவேஸ் அமெரிக்க எண்ணைக் கம்பெனிகளை கையகப் படுத்திய போது வெளிநாட்டு மூலதனம் 1.2 பில்லியன்களில் இருந்து இருந்து 200 மில்லியன்களாகச் சடுதியாக வீழ்ந்தது! அதே நேரம் நாட்டை விட்டு சில மாதங்களில் 20 மில்லியன் பணம் வெளியேறியது - அந்தப் பணத்தில் பெரும்பாகம் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் "ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்"😎 பக்கம் தான் போனது என்கிறார்கள். உச்ச நீதிமன்றமும், நாட்டின் பாராளுமன்றமும் சாவேசினால் இடை நிறுத்தப் பட்டன (எனவே, அவரது செயல்களை வெனிசுவெலா சட்டங்களால் தடுக்க முடியவில்லை!) வெனிசுவெலா மக்களுக்கு என்ன ஆனது? மக்கள் செல்வந்தர்களாகவில்லை, ஏழைகளானார்கள். பெருமளவினர் ஸ்பெயின், அமெரிக்கா, கனடா என்று புலம் பெயர்ந்தார்கள். பொருளாதாரம் பெரும் அடி வாங்கியது, இன்னும் எழ முடியவில்லை! அமெரிக்கா மீது காண்டு இருக்கலாம், ஆனால் நடந்தவற்றை கற்பனையினால் மாற்றி எழுதி வாசகர்களை முட்டாள்களாக்கக் கூடாது!
  18. செய்வினை, செயற்பாட்டு வினை எல்லாம் தாறுமாறாக ஓடுகிறது😂!
  19. இஷாரா யாழ்ப்பாணமூடாகத் தப்பிச் சென்ற விவகாரத்தில் சுமந்திரனுக்குத் தொடர்பிருப்பதாகச் சுட்டும் செய்திகள், தகவல்கள் எவையும் எங்கள் யாழ் கள சுமந்திரன் லவ்வர்சுக்குக் கிடைக்கவில்லையோ😎? Just a thought!
  20. நேரடியாக மரதன் (~26 மைல்கள்) போட்டிக்குப் போக முன்னர் அரை- மரதன் (~13 மைல்கள்) முயற்சி செய்து பின்னர் மரதன் முயற்சி செய்யலாம். புதிதாக அரை மரதன் ஓடும் ஒருவர் 2 மணி நேரங்களுக்குள் 13 மைல்களை ஓடி முடித்தாலே ஒரு சாதனை தான்! இப்படி இரண்டு மணி நேரங்களுக்குள் ஓடி முடிக்க, ஒரு மைல் தூரத்தை சராசரியாக ~9 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி எடுத்தால் இது சாத்தியம். ஆனால், எங்கள் இதயம் பற்றிய புரிதல், அது இல்லா விட்டால் ஒரு மருத்துவப் பரிசோதனை என்பன அவசியம் (கட்டுரையில் இருப்பது போல). அண்ணளவாக ஒருவரின் அதியுச்ச இதயத் துடிப்பை 220 இல் இருந்து அவரது வயதைக் கணிப்பதால் கணிக்கலாம் (Eg: 220-40=180 bpm). அந்த அதியுச்ச இதயத் துடிப்பினை நெருங்காதவாறு ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி பயிற்சி தான்.
  21. எல்லாம் சரி! இந்த வரிகள் மட்டும் வயிற்றில் புளி கரைக்கிறது! டொனால்டு 2030 வரை இருப்பார் என நினைக்கும் போது, நாம் அதற்கு முதலே போய் விட வேண்டுமென்று தோன்றுகிறது!
  22. இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.
  23. பொண்ட் மாஸ்ரர், ஆரியகுளத்தடிக்கு அண்மையில் என நினைக்கிறேன், பொண்ட் இன்ஸ்ரிரியூற் என்ற ரியூசன் சென்ரர் (உள்ளூர் மாணவர்களின் பாசையில் "கொட்டில்" என்பார்கள்😂) ஒன்றை பல காலமாக நடத்தி வந்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்றுதான் இவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியும். "பொண்டர்" என அழைக்கப் படும் இவர், தான் தனியாக அல்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்த பல ஆசிரியர்களின் உதவியோடு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு, மாணவர்களிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு பரீட்சை வைத்து, அதை மேலும் சில ஆசிரியர்களின் உதவியோடு திருத்தி பெறுபேறுகளை வெளியிடுவார். "பொண்டர் அச்சிடும் கேள்விகள் பரீட்சையிலும் வருகின்றன" என்ற ஆச்சரியம் கொண்டோர், தாமாக கடந்த கால வினாத்தாள்களைக் (past papers) கண்கொண்டும் பார்க்காத மாணவர்களாக இருந்திருக்கின்றனர் என்று அர்த்தம். ஏனெனில், இலங்கையில் இவரது காலத்தில் இரசாயனவியல் போன்ற விஞ்ஞானப் பாடங்களுக்காக பரீட்சை வினாக்களைத் தயாரிப்போர் தெற்கில் இருக்கும் குறிப்பிட்ட சில பேராசிரியர்களாகத் தான் இருந்தனர் - இவர்களின் பெயர்கள் கூட யாழ்ப்பாண மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும். கேள்விகளை இந்தப் பேராசிரியர்கள் மீள் சுழற்சி செய்வதும் அடிக்கடி நடக்கிற விடயம். ஆனால், இந்தத் தகவல்கள் கிடைக்காத ஒரு மாணவர் குழுவினரிடம் இருந்து, இந்த மாதிரிப் பரீட்சைகள் மூலம் பணம் சேர்க்கும் ஒரு முறையை பொண்டர் செய்து வந்தார். அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொட்டில் அமைத்துக் காசு பார்த்தவர்கள் இப்படி செய்ய முடியாமைக்கு, மாணவர்களின் சுயமான தேடலுல், பயிற்சியும் காரணமாக இருந்தன. கடைசியாக பொண்ட் மாஸ்ரர் பற்றி நான் அறிந்தது 1999 இல் என்று நினைவு. தன் மாதிரிப் பரீட்சை முயற்சியை வடக்கிலிருந்து மத்திய மாகாணத்தின் கண்டி வரை விஸ்தரித்து, அதற்கு உதவ பேராதனையில் என் அறை நண்பனாக இருந்த ஒருவரை நாடியிருந்தார். அந்த அறை நண்பருக்கு உதவியாக நான் கண்டியில் ஒரு மண்டபத்தில் நடந்த மாதிரிப் பரீட்சையில் உதவி செய்திருந்தேன். அந்த வேளையில் தான், பொண்டர் தீவிரமான நோயினால் பாதிக்கப் பட்டு, மீண்டிருப்பதாக அறிந்தேன். புற்று நோயா, அல்லது பக்க வாதமா என்பது இப்போது நினைவில் இல்லை.
  24. The quiet couple from Weybridge behind £1.7bn Prax PetroleumThere is nothing remarkable about Horizon Business Village, a collection of squat redbrick offices off a roundabout in Weybridge, Surrey. Yet it is home to an2017 இலேயே எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டிருக்கிறதே? அதன் பிறகா இவர்களை றோல் மொடல்களாகச் சித்தரித்தார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.