Everything posted by Justin
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
பாம்புக் கடி வைத்தியம் பற்றிப் பேசும் போது இந்த தொடர்பு பட்ட செய்தி கண்ணில் பட்டது. சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் பாம்புக் கடி மரணங்கள் அதிகம். அங்கே காணப்படும் மாம்பா போன்ற கொடிய விசப் பாம்புகளும், வைத்திய வசதிகள் இன்மையும் பிரதான காரணங்கள். அண்மையில், இந்தப் பகுதியில் காணப்படும் 18 விசப் பாம்புகளுள், 17 இற்கெதிராக வேலை செய்யக் கூடிய வகையில் ஒற்றை விச முறிப்பு மருந்தைப் (Polyvalent antivenom) பரீட்சித்திருக்கிறார்கள். வழமையாக குதிரைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாம்பினத்தின் விசத்தை ஏற்றி, குதிரையில் நோயெதிர்ப்பை உண்டாக்கி, அதன் பின்னர் அதன் இரத்தத்தில் இருந்து அந்தப் பாம்பினத்திற்கெதிரான விசமுறிப்பு மருந்து எடுக்கப் படுவதே வழமை. இந்த ஆய்வாளர்களோ, அல்பகா (Alpaca), லாமா (Lama) ஆகிய ஒட்டக விலங்குகளில் 18 பாம்புகளின் விசத்தைப் படிப்படியாக ஏற்றி, அவற்றின் இரத்தத்தில் இருந்து 17 பாம்புகளுக்கெதிரான விச முறிப்பு மருந்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். https://www.nature.com/articles/d41586-025-03541-3 இலங்கையிலும் இந்தியாவிலும் பயன்படும் விச முறிப்பு மருந்துகள் நாகம், முத்திரைப் புடையன், சுருட்டை விரியன், கண்டங் கருவளை ஆகிய 4 பாம்புகளுக்கெதிராகவும் வேலை செய்யக் கூடியவை . இவை இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகள்.
-
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற நம் இன பா.உக்கள் ஊழலே அற்றவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! உண்மை தான் போலிருக்கு😂!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
பாதிக்கப் பட்டவன் வலியை நினைவுகூர்கிறான், அதையொட்டி "ஏன் இன்னும் நினைவு கூருகினம்? இவர்களை வெளியேற்றியதில் இருந்த நன்மைகளையும்😂 பார்க்க வேண்டாமா?" என்று லக்ஸ்மன் எழுதுவது வெறும் கருத்தாக, பாராட்டுக்குரிய கருத்தாக உங்களுக்குத் தெரிகிறது. பலருக்கு அப்படியில்லை, முக்கியமாக தலை விறைத்தவர்கள் பலருக்கு அப்படியில்லை!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
நீங்கள் ஒப்புக் கொள்வது போல அதில் தவறில்லையென்றால் லக்ஸ்மன் ஏன் எழுதுகிறார்? இதே கருத்தைச் சொல்லும் நான் எப்படி தலை விறைத்தவனாகத் தெரிகிறேன்? ஒன்று "வலியை வெளிப்படுத்துவது தவறில்லை" என்ற உங்கள் கருத்து நடிப்பாக இருக்க வேண்டும், அல்லது இங்கே பெயின்ற் வாளி காவுவோரை கண்டிக்கும் ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்க வேண்டும். உங்களுக்கே வெளிச்சம்😂!
-
சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்
இலங்கையின் வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரவலாகக் காணப்படும் "நாள்பட்ட சிறுநீரக வியாதி-CKD" பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். கீழே இது பற்றி அமெரிக்க பல்கலையொன்றின் ஆய்வு இருக்கிறது. Think Global HealthThe Mysterious Kidney Illness Rising Among Sri Lankan Far...Are pesticides in drinking water to blame for kidney disease among young farmers? சுருக்கமாக, கல்சியமும், மக்னீசியமும் உயர்வாக இருக்கும் தண்ணீரில், கிளைபொசேற் , பராகுவாட் போன்ற களை கொல்லிகள் நீண்டகாலம் தங்கி நிற்பதால் நாள்பட்ட சிறுநீரக வியாதி உருவாகலாம் என ஊகிக்கிறார்கள். எளிமையான வழிகளாக, வரட்சிப் பிரதேசங்களில் வாழ்வோர் நீரிழப்பைக் குறைப்பதும், சுத்திகரித்த தண்ணீரைக் குடிப்பதும் சிறுநீரக நலனுக்கு உதவலாம்!
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
வலி இருப்பவன் நினைவுகூர்வதில், மீட்டுப் பார்ப்பதில் தவறில்லை - இதைத் தான் மீள மீள பலர் இங்கே சொல்லி வருகிறார்கள். தான், அல்லது தன் கட்சி எரிக்காத யாழ் நூலகத்திற்காக, சந்திரிக்கா மன்னிப்புக் கேட்டார் என நினைக்கிறேன். நாம் வலியை மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லையல்லவா? எனவே, அவர்களைப் பொறுத்த வரை ஒரு பாரிய சமூக அவலத்தை முஸ்லிம்களும் நினைவு கூர்வர். நியாயத்தைப் புரிந்து கொள்ளும் தமிழ் தரப்பினர் அவர்களைப் புரிந்து கொள்வர். பெயின்ற் வாளியோடு அலையும் லக்ஸ்மன் தரவழிகளும் தொடர்ந்து எழுதிக் கைதட்டு வாங்குவர்! இது ஒரு வட்டம்!
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
இவரையெல்லாம் "கள்ள மௌனத்தோடு மொள்ளக் கடந்து" போய் விடுவீனம் எங்கள் பட்டாசு உறுப்பினர்கள்😂! ஆனால் சுமந்திரன் அல்லது சாணக்கியன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே மூத்திரம், சீ ஆத்திரம் வந்து வெடித்துத் தள்ளி விடுவார்கள்😎!
-
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !
😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
இது American Pit Bull Terrier வகை நாய். சரியான போசணை, பராமரிப்பு இல்லாமல் இப்படியான தோற்றம் காட்டுகிறது. ஆனால் இந்த வகை நாய்க் குட்டிகளின் விலை இங்கே 500 முதல் 2000 டொலர்கள் வரை இருக்கும்.
-
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது
தியா, நிகே ஆகியோர் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் இருந்து, ஆங்கிலத்தில் எங்கள் கதைகளை எழுதுபவர் வி.வி. கணேஷானந்தன். 2023 இல் வெளிவந்த "Brotherless Night" என்ற நாவல் ஜூலைக் கலவரம், சகோதரப் படுகொலைகள், ராஜினி திராணகம கொலை, ஆனந்தராஜா மாஸ்ரர் கொலை ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு அருமையான நாவல். தற்போது ஆமை வேகத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனையோரும் வாசிக்க வேண்டிய ஒரு அரிய நாவல். https://www.amazon.com/Brotherless-Night-Novel-V-Ganeshananthan/dp/0812997158
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
இலங்கையில் கட்டு வரியனை கண்டங் கருவளை என்பார்கள். முத்திரைப் புடையன் , கண்ணாடி விரியன் இரண்டும் Russel's viper எனப்படும் மூர்க்கமான புடையன் பாம்பின் தமிழ் பெயர்கள். கட்டுரையில் இருக்கும் கட்டு வரியன் இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கின்ற வகை (common krait - Bungarus caeruleus). இதை விட இலங்கைக்கே உரித்தான கட்டு வரியன் பாம்பினம் Ceylon krait (Bungarus ceylonicus) இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. பெரிதாக வித்தியாசம் சாதாரண மக்களால் இந்திய இலங்கை கட்டு விரியன்களிடையே காண முடியாது. தமிழில் இரண்டும் கண்டங் கருவளை என அழைக்கப் படும். ஆனால், சிங்களத்தில் இந்தியக் கட்டு விரியனை "தெல் கரவலா" என்றும், இலங்கையின் கட்டு விரியனை "முது கரவலா" என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் இந்தியக் கட்டு வரியனுக்கெதிரான விஷ முறிப்பு மருந்து, இந்திய, இலங்கை கட்டு வரியன் பாம்புகள் இரண்டிற்கெதிராகவும் வேலை செய்யும் என்பது ஆறுதலான செய்தி!
-
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!😱
"ஒப்பற்ற தமிழினம்" தானாக எப்பவும் சீரழிவுகளைத் தேடுவதில்லை! வேறு யாராவது தான் திட்டமிட்டு தமிழினத்திற்குள் விசச்செடிகளைப் பரப்புகிறார்கள். மற்றும்படி தமிழினம் 100% நல்லவர்களால் நிறைந்தது😎! இப்படியான "பொறுப்பை எடுத்துக் கொள்ளாத" சிந்தனையே உண்மையான விஷம்!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
தவறான தகவல். மஸ்க் தேர்தலுக்கு முதல் நாள் நான் மேலே குறிப்பிட்ட அன்ட்றூ கூமோவை ஆதரித்திருந்தார்👇. https://www.foxbusiness.com/politics/musk-slams-mamdani-charismatic-swindler-warns-policies-would-hurt-quality-life-nyc Business InsiderElon Musk backs Cuomo against Zohran Mamdani in NYC mayor...Musk encouraged NYC voters to back former Gov. Andrew Cuomo over Zohran Mamdani the day before the city's mayoral election.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எல்லா வர்த்தக, கடன் பித்தலாட்டங்களும் ஒன்று அல்ல! ஆனால் எல்லா வர்த்தக, கடன், வியாபார பித்தலாட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தானே? தனி நபரின் அறமில்லாத தன்மை. பொலிஸ் கண்காணிக்காத வீதியில் வேகக் கட்டுப்பாடில்லாமல் வாகனம் ஓடுவதற்கும், கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் கண்காணிக்காமல் விடும் இடத்தில் சுருட்டுவதற்கும் ஒரே அடிப்படை அறமில்லாத மன அமைப்புத் தானே ஐயா? இதைப் புரிந்து கொள்ள ஏன் தலைமுடியை இப்படி நார் நாராகப் பிரித்தெடுக்கிறீர்கள் என விளங்கவில்லை😂! இதே வேலையைத் தான் ராஜ் ராஜரட்ணம் பற்றிய கேசிலும் எங்கள் தமிழ் சமூகத்தில் சிலர் செய்வதைப் பார்த்தோம். அவர் சட்ட விரோதமான insider trading இனைச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்ததும், "எல்லோரும் செய்தார்கள், என்னை மட்டும் பிடித்தார்கள்" என்று "சமனற்ற நீதி" புத்தகத்தில் எழுத சிலர் "அதானே?" என்று அவரை தியாகி ரேஞ்சில் உயர்த்தினர். என்னைப் பொறுத்தவரை, இது போன்ற வெள்ளைக் கொலர் குற்றங்களை வெள்ளையடிப்பதும், சாதாரணமயப்படுத்துவதும் எங்கள் சமூகத்தை குட்டிச் சுவராக்க உதவும் செயல்கள் என நினைக்கிறேன்.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
நான் வந்து படங்களுக்கிடையில் இருக்கும் செய்தியை வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன்😇!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
ரசோவின் பதிலோடு உடன்படுகிறேன், அதற்கு மேலதிகமாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்: 1. "நியூயோர்க் நகரில் ஒரு கழுதையை நீலக் கட்சி நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்" என ஒரு ஜோக் இருக்கிறது. அது உண்மை என்றாலும், இந்த தேர்தலில் கூமோ (Andrew Cuomo) என்ற முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுனரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். லிபரல், நீலக் கட்சிக் காரரான அவர் போட்டியிடக் காரணமே, மம்தானியின் சோசலிஸ்ட் கொள்கை, முஸ்லிம் மத அடையாளம், இஸ்ரேல் எதிர்ப்பு என்பன நீலக்கட்சியின் வாக்குகளை மம்தானி பக்கமிருந்து தன் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை தான். அப்படியிருந்தும் 9% வித்தியாசத்தில் மம்தானிக்கு வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவர் மீது சுமத்தப் பட்ட முத்திரைகள் வேலை செய்யவில்லை எனக் காட்டுகிறது. இன்னொரு ஜோக்கும் நடந்தது. தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ட்ரம்ப் "மம்தானியை விட கூமோவை நான் ஆதரிக்கிறேன்!" என்று ஒரு "பாரிய பாறாங்கல்லை" கூமோவின் கழுத்தில் கட்டி விட்டார்😂 - அன்றே கூமோவின் வெற்றி வாய்ப்பு பூச்சியமாகி விட்டது! 2. வேர்ஜினியா மாநிலம் எப்போதும் சிவப்பு நீலம் என மாறிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். அங்கே நீலக் கட்சியின் பெண் ஆளுனரும், மாநில சட்டமா அதிபராக ஒரு ஆபிரிக்க அமெரிக்கரும் வென்றிருக்கிறார்கள். எனவே, இது நியூயோர்க்கை விட முக்கியமான ஒரு அமிலப் பரிசோதனை முடிவு எனலாம். 3. நியூஜெர்சி- இது நான் வசிக்கும் மாநிலம். இதுவும் பல ஆண்டுகளாக நீல மாநிலம், ஆனால் சிவப்புக் கட்சியினர் ஆளுனர்களாக இருந்திருக்கின்றனர் - 2018 வரையில் இது சாத்தியமாக இருந்தது. போன வருடம் அதிபர் தேர்தலில், நியூஜேர்சி மாநிலத்தை வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் கமலா ட்ரம்பை வென்றார் . அப்போதே நியூஜேர்சி சிவப்புக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ என அச்சம் வெளிப்பட்டது. ஆனால், இந்த ஆளுனர் தேர்தலில், ஷெரில் 15% வித்தியாசத்தில் சிவப்புக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் விசிறியை வென்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசம் தான் முக்கியமானது. நியூயோர்க் போலவே லண்டனும் ஒரு உலக ரீதியில் முக்கியமான நகரம் - சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவினதும் உலகினதும் பொருளாதார தலை நகரம் என்ற வகையில் ஒரு சோசலிஸ்ட் வென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்று என நினைக்கிறேன். அச்சமின்றி, யூதர்களின் நிறுவனங்கள் ஆளும் நியூயோர்க் நகரிலேயே இஸ்ரேல் எதிர்ப்பை வெளிக்காட்டிய படி மம்தானி வென்றிருக்கிறார் என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தீவிர இஸ்ரேலியர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் ஒரு விடயம்!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
நல்ல முடிவைத் தந்த நியூ யோர்க் தேர்தல்👍. இவர் திட்டமிடும் எல்லா விடயங்களையும் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால், பலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பிற்கு ஒரு தலைமைக் குரலாக இருத்தல், குடியேறிகளை வரவேற்கும் போக்கு, என்பன காரணமாக என் போன்ற குடியேறிகளின் முழுமையான ஆதரவு மம்தானிக்கு! பி.கு: ட்ரம்பின் சிவப்புக் கட்சிக் காரர்களுக்கு செம அடி நேற்று, நியூ ஜேர்சியில் எப்போதும் போல நீலக் கட்சியின் பெண் ஆளுனர் 15% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி (கமலா நியூஜேர்சியில் அதிபர் தேர்தலை வென்றது ட்ரம்பை விட 6% வாக்குகளால் தான், எனவே இது சாதனை!) வேர்ஜினியா மாநில ஆளுனர் பதவி சிவப்புக் கட்சியிடம் இருந்து நீலக் கட்சியிடம் - இன்னொரு பெண் ஆளுனரிடம்- சென்று விட்டது. பென்சில்வேனியாவின் உச்ச நீதி மன்றத்தின் லிபரல் நீதிபதிகள் மூவர் சிவப்புக் கட்சியினரின் பிரச்சாரத்தையும் மீறி வென்றிருக்கின்றனர் -ட்ரம்ப் வந்து தேர்தல் மோசடி வழக்குப் போடும் போது குட்டி அனுப்பி விடுவார்கள்!
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
https://noolaham.net/project/169/16872/16872.pdf தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
இதே போல செங்கை ஆழியானின் இன்னொரு கதை "யானை". வன்னிக்கும் கிழக்கிற்குமிடையேயான அடர் காடுகளின் புவியியலை விபரிக்கும் கதை. ஊரில் செங்கை ஆழியானின் புத்தகத்தை நூலகத்திலிருந்து கொண்டு வந்தால் ஒரு நாளில் வாசித்து முடிந்து விடும்😂! சிறியவை ஆனால், சுவாரசியமானவை!
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
"நடந்தாய் வாழி வழுக்கியாறு" செங்கை ஆழியான் 1984 இல் எழுதி வெளியிட்ட, வழுக்கியாற்றின் தடத்தினூடாக மாடு தேடிப் பயணிக்கும் கதை👇! https://noolaham.net/project/176/17527/17527.pdf
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
சமுதாய மருத்துவ நிபுணர் (தற்போது புதிதாக "குடித்தொகையியல் ஆய்வாளர்") தகுதியில் இருக்கும் முரளி வல்லிபுரநாதனும் "ஊகங்களை" வைத்துத் தான் தமிழர் குடித்தொகையைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறதா😂? "தமிழர் குடித்தொகை பிறப்பு வீதம் காரணமாக வளர்ந்திருக்கிறதா?" என்று திடமாகக் கண்டறிய தமிழர் பகுதிகளில் இருக்கும் பிறப்புகளின் எண்ணிக்கையை கடந்த 10 வருடங்களுக்குப் பின்னோக்கிப் பார்த்து ஒரு அறிக்கை தயாரிக்க முடியாதா? இதை விட்டு விட்டு இதைப் போன்ற தரவுகளை சந்தேகத்திற்குள்ளாக்கும் வேலைகளை ஒரு நிபுணரே செய்தால், ஏனையோர் எப்படி நடந்து கொள்வர்? பிகு: அண்ணளவான பிறப்பு இறப்பு வீதங்கள் 2020 ஆண்டுக்குரியவை இலங்கையின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப் பட்டிருக்கின்றன. https://www.statistics.gov.lk/Resource/en/Population/Vital_Statistics/CrudeBirthRatesCrudeDeathRatesProvinceDistrictSex2019-2022.pdf அதன் படி பார்த்தால், தேசிய மட்ட பிறப்பு இறப்பு வீதங்களில் காணப்படும் மாற்றங்கள் (national trend) தான் தமிழ் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இது இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு போக்கு, தமிழர்களுக்கென்று தனியான சனத்தொகை வளர்ச்சிக் குறைபாடெதுவும் இல்லை!
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ? ஆர்வமுள்ள வாசகர்களுக்காக: தன் வருமானத்திற்கு மீறிய மாதாந்தக் கட்டணத்தைக் கொண்ட வீட்டுக் கடன்களை நிரந்தரமாகத் தொழில் இல்லாத பலர் எடுக்க மேல் வியாபாரி போன்ற ஊழல் நிறுவனங்கள் அனுமதித்தன. அந்த றிஸ்க் கொண்ட sub-prime கடன்களை, ஏனைய நம்பிக்கையான கடன்களோடு சேர்த்து மொத்தமாக காப்புறுதி செய்தனர். இந்தக் றிஸ்க் கொண்ட கடன்களை ஊழல் வழிகளில் பெற்றவர்கள் கட்ட முடியாமல் (default) வீட்டுச் சாவியை தங்கள் தபால் பெட்டியில் போட்டு விட்டு தலை மறைவாயினர். காப்புறுதி நிறுவனம், ஒரே சமயத்தில் நிகழ்ந்த எல்லா இழப்புகளையும் ஈடு செய்ய இயலாமல் வங்குரோத்தானது. ஒபாமா பதவிக்கு வந்தவுடன் "Troubled Asset Recovery Program" என்ற முறையை சட்டமாக்கி மக்களின் வரிப்பணத்தை வைத்து இந்த $700 billion ஓட்டையை அடைக்க வேண்டியிருந்தது. மக்கெயின் பதவிக்கு வந்திருந்தால் அதையும் செய்யாமல் இன்னும் மக்களை அல்லாட விட்டிருப்பார்.
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு 2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎
-
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…
மன்னார் காற்றாலைத் திட்டத்தைப் பற்றி இது வரை நான் கண்ட கட்டுரைகளில் எல்லாத் தரவுகளையும், சட்ட ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஒரேயொரு கட்டுரை இது மட்டும் தான். இரண்டாம் தடவையும் வாசிக்க வேண்டும், முழுவதையும் விளங்கிக் கொள்ள. இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு யாராவது இலங்கையில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு கோரியாவது ஏதாவது வழக்குப் போட்டிருக்கிறார்களா இது வரை? தேர்தல் நேரம் மட்டும் வெளிப் பட்டு வரும் "ஜனாதிபதி சட்டத்தரணிகள்" எவராவது ஒரு சூழல் பாதுகாப்பு சட்டத் தரணியோடு இணைந்து இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொன்டு போக முடியாதா? இலங்கையில், இந்த விடயங்களில் eminent domain என்ற அரசுக்கான விசேட உரிமை சட்டத்தில் இருக்கிறதா?