Everything posted by சண்டமாருதன்
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.
-
ஈழத்தமிழர் அரசியல்
உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள் எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். என்னுமொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை பதிகின்றேன்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும். உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும்.
- 147 replies
-
-
- 2
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.
- 147 replies
-
-
-
- 7
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை தமிழ் தேசீய இனமாக கருதி அவர்கள் மீது ஒடுக்குமுறையை செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். . பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து. கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
தமிழ்நாட்டுக்கு சொந்தமாக ரயில்கள், கப்பல்கள், விமானங்கள் வேண்டும்..!
அப்படி வந்தால் நல்லாத்தான் இருக்கும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இணைப்பிற்கு நன்றிகள்.இவரது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் நிறைய இருக்கின்றது.
-
சமூகவலைத்தளங்களும் சாதீய காணொளிகளும்
“எல்லா சாதியும் சொந்தம் தான்... இனி இப்படி பண்ண மாட்டேன்... படிக்க ஆசைப்படுறேன்!” - முத்து
-
கல்லும் கதை சொல்லும் - தா. பாண்டியன்
- சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview
- ஓலைச் சுவடிகள் - டாக்டர். சுபாஷினி
- தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி !
போராட்ட காலத்தில் சில நிகழ்வுகள் போராட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும் என்ற கருத்துண்டு அவற்றில் சில பூநகரி முகாம் கைப்பற்றப்பட்டிருந்தால் , ஆனையிறவு கைப்பற்றப் பட்டிருந்தால், ஆனையிறவுக்கு உதவிக்கு வந்த படைகளை கப்பலில் இருந்து இறங்க முன்ன தாக்கியிருந்தால் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றது. அவற்றுக்கு ஒத்ததே அன்ரனியும், இவரே கருணா இடத்தில் இருக்கவேண்டியவர் மட்டுமல்லாமல் இவரே கிழக்கு முழுவதுக்குமான தளபதியாக இருக்க வேண்டியவர். இருந்திருந்தால் போரட்ட காலத்தில் போராட்டத்தின் போக்கு மாறியிருக்கும். வடக்கில் பால்ராஜ் கிழக்கில் அன்ரனி இருவரும் போராளிகளின் அதிக உயிரிழப்பால் ஏற்படும் தாக்குதல் வெற்றி எதிர்காலத் தோல்வி என்று கருதியவர்கள். உயிரழப்பை தவிர்ப்பதற்காய் பல தாக்குதல்களை தவிர்த்தவர்கள் . இதனால் பல பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தார்கள். போராளிகளின் அதிக அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தவர்கள். வீரவணக்கம்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இணைப்பிற்கு நன்றி கதை ,, கவிதை தரும் உணர்வை விட அதிகமாக இந்த படம் உணர்வைத் தருகின்றது. எத்தனை நாள் இப்படி வாங்கியிருப்பம் !!- தெற்கே ஒரு நாகரீகம்!
- 'கம் செப்டெம்பர்' - நினைவிருக்கிறதா..?
இணைப்பிற்கு நன்றிகள். இரண்டுமே நன்றாக இருக்கின்றது.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
உலக நடப்புகளை அறிய உலக உலாவின் தரத்திற்கு ஒரு சஞ்சிகையை தமிழில் இன்றும் காணமுடிவதில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேலே உ;ள்ள காணொளியில் கண்ட சில பின்னூட்டம்- பழைய புகைப் படங்கள்.
Yes, 200 years ago, Madras told a very different story. The last week of April 1815 saw temperatures dipping below the freezing point. A city that now knows only three seasons - "hot, hotter and hell" - once also knew what it felt like to blow winter smoke in the dead of the night. https://www.indiatimes.com/news/india/200-years-ago-madras-enjoyed-the-occasional-snowfall-had-a-temperature-of-3-degree-celsius-254178.html- அட..உண்மையை சொல்றேனுங்க..!
உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பில்லாமல் வியாபாத்துக்கு மறுபெயர் ஏமாற்றுதல் என்றாகிவிட்டது. எந்த உணவுப்பொருளில் என்ன ரசாயனம் உள்ளது என்பதை பிரித்தறிய முடியாத நிலை.- தாயின் நம்பிக்கை..
இணைப்பிற்கு நன்றி சொற்பொழிவில் சொல்வதுபோல் நம்பிக்கை என்பது ஒரு சக்தி. சாவின் விழிம்பில் இச் சக்தியின் வீரியம் தெரியவரும். வாழ்க்கையில் சாவுக்கு அருகாமையில் தானோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ சென்று வரும் அனுபவம் என்பது நூறு புத்தகங்கள் தருவதை விட அதிகமான பக்குவத்தை தரும்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
மெர்சல் கேரளாவில்- இறையாண்மை என்பது யாதெனில்...?
இவை மூன்றுமே சாதியம் மதவாதம் போன்றவற்றால் சிதைக்கப்பட்டு இறையாண்மை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பலவீனத்திலேயே இந்திய என்ற தேசம் நிலைத்திருக்கின்றது. இறையாண்மை ஒருவன் ஒரு குடும்பம் ஒரு சமூகம் என்ற உறவாடலோடு தொடர்புபட்டு ஐக்கியப்பட்ட உழைப்பு பாதுகாப்பு போன்றவற்றுடன் சம்மந்தப்படுகின்றது. உணர்வோடும் தொடர்புபட்டது. மொழி சமூக உறவு வலுக்கும் நிலை. அதே நேரம் இரண்டு இனங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை வரையறுப்பதிலும் இறையாண்மை தொடர்புபடுகின்றது. இவை எப்படி பலவீனப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர்ந்து கொள்ளலாம். இந்த மூன்று கூறுகளும் நவீன தொழில்நுட்ப உலகில் பலமடைகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் தொடர்பாடல் கருவிகள் போன்றன புதியதொரு பரிணாமத்தில் இணைக்கின்றது. இவை ஒரு குறிப்பிட்டளவு தான் நிகழ்கின்றது. இவற்றை செம்மைப்படுத்த வேண்டியது தற்போதைய கடமையாகின்றது. நாம் பல சதிகளால் பிரிந்திருக்க ஆரம்பித்தோம் . தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியால் வேறு ஒருதளத்தில்இணைகின்றோம். இவற்றிலும் தனித் தனி தீவுகளக இணைந்தால் பலவீனம் தொடரவே வாய்புள்ளது.- சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..
உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அரபு நாடும் தமிழ்நாடும் ஈழமும் ஒன்றல்ல. தண்டனை கொடுப்பவர்கள் யோக்கியமாக முதல் இருக்கவேண்டுமே !! பொதுவான அரச இயந்திரமே பிரச்சனைக்குரியதாக இருக்கும் போது அதில் இருந்து தண்டனை வழங்குவது தீர்வாக அமையாது. குறிப்பாக சாதிய மத முரண்பாடுகள் உள்ள சமூகத்தில் இறுக்கமான தண்டனைகள் குற்றத்திற்கான தண்டனையாக மட்டும் புரிந்துகெள்ளப்பட மாட்டது. அவைகள் விரைவில் வேறு எல்லைகளை தொட்டுவிடும். புதிய பிரச்சனைகளைள கிளப்பி விடும். ஈழத்தில் போராட்டம் பின்னடைவில் இந்த அம்சமும் பெரும் பங்கு வகிக்கின்றது. உதாரணமாக காவல் துறையின் தண்டனை சார் நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டால் அவர் தலித் அல்லது வேறு சாதி சார்ந்தவராக அணுகப்படலாம் அல்லது இந்து பிஜபி அல்லது இஸ்லாமியராக அணுகப்படலாம். வேறு மாநிலத்தவராக அணுகப்படலாம் திமுக அதிமுக வாக அணுகப்படலாம். பிரச்சனைகள் வேறு திசைகளுக்குச் செல்லும். மேலும் காவல் துறையே குடிசைகளை கொழுத்துகின்றது பெண்களை தாக்குகின்றது பெண்கள் மீது அத்துமீறல்களை செய்கின்றது. அவர்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அதிகார சக்திகளின் கட்சிகளின் அடியாட்களாக பார்க்கப் படுகின்றார்கள். அவர்கள் மாணவர் என்ற சக்தியின் மீது அதிக தண்டனையை பிரயோகித்து அவர்களை ஒழுக்கப்படுத்துவது நடமுறைக்கு சாத்தியம் இல்லை. அதற்குரிய அரசியல் தளமும் இல்லை என்பதே கசப்பான உண்மை.- சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..
ஏற்கனவே மது விலக்குப் போராட்டத்தில் கவல்துறை இவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரணமாக பஸ் ரயில்களில் தொங்கிக்கொண்டு போகின்றவர்களை கத்தி கொண்டு போகும் நிலைக்கு நகர்த்தியது என்னவென்பதை ஆராய்வதே சிறந்தது. தயவு தாட்சன்யமில்லாமல் ஒடுக்க முற்பட்டால் இது என்னும் வேற லெவலுக்கு போகும் தவிர இதை தணிக்க முடியாது. காவல்துறையும் பொறுக்கித்தனம் செய்கின்றது அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பொறுக்கித்தனம் செய்கின்றது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உருவாகும் எதிர்வினைகள். உணர்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டியவை. எக்காலத்திலும் இளைஞர்களின் துடிப்பை சரியான வழிக்கு திசை திருப்பவேண்டுமே தவிர அதை ஒடுக்கி முடக்குவது அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு சமம்.- சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..
https://www.youtube.com/watch?v=UVNXzzj_0fc https://www.youtube.com/watch?v=R5-x-rCFxmg இளம் கன்று பயமறியாது என்பது போல் இது எல்லா நாட்டிலும் வளமை. சூழ்நிலைக்கு ஏற்ப அட்டகாசம் வேறுபடும். காரில் ரேஸ் ஓடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். கண்ணாடி பஸ்தரிப்பிடங்களை உடைப்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். வயதும் ஆர்வமும் கேர்மோன்களும் என தன்னை ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமானவானா சமூகத்திற்கு காட்டவும் பிறரின் கவனத்தை தன்பக்கம் இழுக்கவும் செய்வார்கள். பெண்களின் கவர்ச்சி உடைகளும் மேக்கப்புகளும் இவ்வாறானது தான். இந்த உந்து சக்தியை சிலர் விளையாட்டின் பக்கம் திருப்புவார்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு சார்ந்து திருப்புவார்கள். சரியான வழிநடத்தல் தான் காரணம். இருந்தும் இந்த மாணவர்கள் தமது சக்தியை அவ்வப்போது சமூக நீதிக்கான போராட்டங்களின் பக்கம் திருப்புகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் அட்டகாசங்களை பெரிதுபடுத்த முடியாது... - சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.