-
Posts
7383 -
Joined
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by இணையவன்
-
ஓடத் தொடங்கினால் 7 கிலோ மீற்றர்கள் பெரிய தூரம் இல்லை. 🙂 ஆபத்து எதுவுமில்லை. ஓட்டத்தின்போது சில விதிகளைக் கடைப்ப்பிடித்தால் போதுமானது. முக்கியமானது, திடீரென வேகமாக ஓடக் கூடாது. நன்றி கிருபன். 25 கிலோமீற்றர்கள் நடப்பது என்பது மிகக் கடினமானது என்பதை ஒத்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவான ஓட்டத்தோடு நடந்து பாருங்கள். காலப் போக்கில் இலகுவாக இருக்கும். சிலர், குறிப்பாக மிக வயதானோர் மரதன் போட்டியில் பங்கு பற்றி ஓட்டமும் நடையுமாக 5 - 6 மணித்தியாலத்தில் 42 கிலோமீற்றர்களைக் கடக்கின்றனர்.
-
நன்றி சசி. நீங்கள் லீக் தரத்தில் விளையாட்டுகளில் ஈடுபடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி. மூச்சு இரைத்துக் களைப்படைவது பற்றி மேலே விளக்கியுள்ளேன். உணவுக் கட்டுப் பாடுகள் பெரிதாக எதுவும் இல்லை. முன்னர் keto diet செய்திருந்தேன். இப்போது low carb செய்கிறேன். தவிர்க்க வேண்டியவை சோறு மா சீனி மட்டுமே. ஏனையவற்றைத் தாராளமாகச் சாப்பிடுகிறேன். உடற்பயிற்சியும் செய்வதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஐஸ்கிறீம் கேக் போன்றவற்றைச் சாப்பிடத் தயங்குவதில்லை. பியர் பற்றி ஜஸ்ரின் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 😀 மிக்க நன்றி துல்பன்.
-
நன்றி ஜஸ்ரின், நீங்களும் ஓடுகிறீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாரத்தில் 25 மைல்கள் ஓடும் நீங்கள் நிச்சயமாக மரதன் ஓட வேண்டியவர். பயிற்சியின்போது கால் வலிகள் ஏற்படுவது சாதாரணம். என்ன விதமான வலி என்பது தெரியவில்லை. ஓட முடியாது என்று உணர்ந்தால் நிறுத்தி ஓய்வு எடுக்கத் தயங்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மரதன் ஓடுவதற்கு வயது கால எல்லை தடையில்லை. விரைவில் நீங்களும் மரதன் ஓட வாழ்த்துகள். நன்ற்றி ஏராளன். அவதார் படத்தைப் பார்த்து என்னைவிட வயதானவர் என்று நினைத்திருந்தேன்.
-
நன்றி சுவி அண்ணா. எப்போதும் தொடர்ச்சியான உங்கள் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
-
நன்றி நிழலி. நடக்கும்போது 5ஆவது கிலோ மீற்றரில் 5 நிமிடங்கள் உங்களால் முடிந்த அளவு மெதுவாக ஓடிப் பாருங்கள். கால்களுக்குப் பிரச்சனை வரும் என்பது தவறான அபிப்பிராயம். எதுவும் அளவுக்கு மீறினாக் கூடாது. மேலே குறிப்பிட்டபடி ஓட்டம் எலும்புகளுக்கும் நார்களுக்கும் புத்துயிர் அளித்து உறுதியாக்கும். இதைத் தவிர உங்கள் இதயம் உறுதியாகும். 50 வயதின்பின் வாழ்க்கையின் இன்னொரு பகுதி ஆரம்பமாகிறது. அனுபவிக்க வேண்டும். 🙂
-
பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம். மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன். ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். 🙂 திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.
-
ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள் 🙂
- 130 replies
-
- 20
-
நந்தன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
இது கீழடி காலப்பகுதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் இருப்பவை தமிழ் எழுத்துக்கள்.
-
தனிமடல் அனுப்பியுள்ளேன், பாருங்கள்.
-
வணக்கம் நிலாமதி அக்கா. https://yarl.com/forum3/profile/5124-நிலாமதி/ ஏற்கனவே உள்ள உங்களது கணக்கினூடாக உள்நுழைவதில் பிரச்சனையா ?
-
மாற்றப்பட்டுள்ளது 🙂
-
குமாரசாமி, புத்தன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பகிர்விற்கு நன்றி பிரபா. Acai விலை அதிகமாக இருப்பதால் போலியான உணவுகளும் உலாவுவதாகச் சொல்லப்படுகிறது. இதிலுள்ள Antioxidants தொடர்பான சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. Acai, Blueberry போன்றவை எங்கள் ஊர் நாவற்பழ வடிவில் இருப்பதால் அதிலும் அதிக Antioxidants இருக்கலாம் என்று தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். நாவற்பழம் Super Food வரிசையில் வராவிட்டாலும் இதன் தரவுகள் யாருக்காவது பயனுள்ளதாக இருக்கலாமென்பதால் இணைக்கிறேன். Jambul Fruit - Nutritional value per 100 g Thiamine (B1) (2%) 0.019 mg Riboflavin (B2) (1%) 0.009 mg Niacin (B3) (2%) 0.245 mg Vitamin B6 (3%) 0.038 mg Vitamin C (14%) 11.85 mg Trace metals Calcium (1%) 11.65 mg Iron (11%) 1.41 mg Magnesium (10%) 35 mg Phosphorus (2%) 15.6 mg Potassium (1%) 55 mg Sodium (2%) 26.2 mg மேலும் தகவல்களுக்கு : https://www.netmeds.com/health-library/post/jamun-medicinal-uses-therapeutic-benefits-for-skin-diabetes-and-supplements
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
இணையவன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்போது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இந்தக் கட்டடமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வளவு பணத்தினை பிரதியுபகாரமின்றி கட்டிக் கொடுக்க மாட்டார்கள். அந்த ஒப்பந்தம் என்ன ? இந்தக் கட்டம் மூலம் சரியான வருமானம் இல்லாவிட்டால் இதனைப் பராமரிப்பது மிகக் கடினம். இலத்திரனியல் கருவிகள், குளிரூட்டல், பாதுகாப்பு, சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான பாரிய செலவை இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் நிவர்த்தி செய்ய முடியுமா ? அதற்கான திட்டங்கள் எவை ? இலாபமற்ற பொதுநல திட்டமாக இருந்தால் வெகுதூரம் செல்ல முடியாது. -
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
இணையவன் replied to வாலி's topic in இனிய பொழுது
ஏன் என்று தெரியாது. இள வயதில் இந்தப் பாடலைச் சுத்திச் சுத்திப் பல தடவைகள் கேட்பேன். 😍 -
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி அண்ணா ! புரட்சிக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
கீழடியிலுள்ள பிராமி எழுத்துக்களின் காலம் சரியாகக் கணிக்கப்பட வேண்டும். வடக்கில் உள்ள அசோக பிராமி எழுத்து ஆதாரங்கள் தென்னிந்திய பிராமியை விடத் தொன்மையானதாக இதுவரை கூறப்படுகின்றது. குறிப்பாக ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி வடக்கிலிருந்தே தெற்கிற்குப் பரவியுள்ளது. கீழடி எழுத்துக்கள் அசோக காலத்தைவிடத் தொன்மையானதாக நிரூபிக்கப்பட்டால் இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியை மாற்றவேண்டி வரும். இதேபோல் இலங்கையிலுள்ள பிராமி எழுத்துக்கள் நேரடியாகத் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாக நிறுவினால் சிங்கள வரலாற்றுப் புனைவுகளும் ஆட்டம் காணும்.
-
உங்கள் வேண்டுகோளுக்கிணங்க உங்களது பெயர் (balakumar2) 'நன்னிச் சோழன்' என்று மாற்றப்பட்டுள்ளது.
-
இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது. இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும். சூப்பர் உணவு என்றால் என்ன ? ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும். பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. Antioxidant என்றால் என்ன ? ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம். இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது. எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும். அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும். Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும். இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள் vitamin C beta-carotene vitamin A selenium vitamin E zinc flavonoids copper இன்னும் பல. ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும். சூப்பர் உணவுகள் எவை ? Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம். பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள். இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம். பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும். இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம். ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன். *** நெல்லிக்காய் பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும். 100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது. ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது. அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். 2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla) மஞ்சள் இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு. இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம். மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது. உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை. மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம். ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது. மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
-
மூச்சு எப்படி விட வேண்டும் என்று தெரியாது. எனக்கு ஆஸ்மா இருந்தபடியால் ஓடும்போது அதிமாக சத்தத்துடன் மூச்சு வாங்கும். 😀 இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும். வயதைப் பொறுத்து ஒருவரது அதிகப்படியான இதயத் துடிப்பு வேறுபடும். பெண்களுக்கு BPM = 226 - வயது ஆண்களுக்கு BPM = 220 - வயது (உதாரணமாக உங்களுக்கு 40 வயதென்று வைத்துக் கொண்டால் : 220 - 40 = 180 BPM) மன்னிக்கவும் உடையார். அப்படியானால் தயங்காமல் ஓடுங்கள்.
-
நன்றி புத்தன். ஓடுங்கள். 'கலா' காலத்திலிருந்து நவீன காலத்துக்கு உங்கள் கற்பனைகள் வளரட்டும். 😀
-
இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது. *** எனது உணவு காலை எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது 10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் + கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர் மதிய உணவு ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள் 4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் + கோப்பி அல்லது தேனீர் இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம் இரவுச் சாப்பாடு மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள் உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும். விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀
-
வாதவூரன், பாஞ், புலவர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.