Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7383
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. உக்ரெய்ன் போர் ஆரம்ப்பித்ததிலிருந்து தவறி விழுந்து இறந்தவர்களில் பலர் ரஸ்யாவின் Gazprom எரிவாயு நிறுவனத்தில் அதியுயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது எரிவாயு நிறுவனங்களில் முதன்மை முதலீட்டாளர்கள். அடுத்ததாக தற்கொலை செய்ய விரும்பும் Gazprom நபர்கள் வழக்கம்போல் யன்னலால் பாய்ந்து ஜனநாயகவாதி புதின் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் வேறு விதமாக யோசிக்கவும்.
  2. நல்ல முடிவுதான். போதைப்பொருள் விற்பவரையும் பள்ளிவாசல் நிராகரிக்குமா ? உலகில் 90 வீதமான ஒப்பியம் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில்தான் பயிரிடப்படுகிறதாம்.
  3. மேலுள்ள இரண்டு கடலட்டைப் பண்ணை எதிர்ப்புச் செய்திகளும் கடந்த நன்கு மாதங்களுக்கு உட்பட்டது. என்ன நடக்கிறது ? அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அறிவுரையின்கீழ் போராட்டம் நடத்துகிறார்களா ?
  4. இப்ப தற்கொலை செய்வதற்கும் ஆள் வைத்துச் செய்கிறார்களாம். 😎
  5. தமிழரின் இன்றைய அரசியல் நிலை தொடர்பான கருத்துக்கள் தவறான தலைப்பில் உள்ளதால் ‘ஈழத் தமிழரின் அபிலாசைகள்’ என்ற தனியான திரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  6. செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை! என்ற தலைப்பிலிருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.
  7. 'திருவெண்ணாமலைத் தீபம் தமிழீழ வரைபடம் போல தெரிந்தது' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.
  8. கிரிப்டோ சந்தையில் FTX Trading செய்த குளறுபடிகளால் பாரிய மாற்றங்கள். இந்த வருட ஆரம்பத்தில் Bitcoin இன் பெறுமதி ஆண்டு முடிவில் 100 000 டொலர்களை எட்டும் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெறுமதி ஆண்டு முடிவில் 10 000 டொலர்களை அடைந்து விடுமோ என்று சந்தேகிக்கின்றனர்.
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சசிவர்ணம்.
  10. வீட்டு விலையில் பணவீக்க்கத்த்தின் ஆதிக்கமும் உண்டு. கீழுள்ள படத்தில் பிரான்சின் வீட்டு விலையும் (சிவப்பு) வட்டி வீதமும் (பச்சை)
  11. நேற்று 1620 இல் இருந்த தங்கம் இன்று 1660 ற்கு ஏறியுள்ளது. EURUSD மிகவும் இறங்கிக் காணப்பட்டதால் நேற்று முந்தினம் வாங்கி நட்டமடைந்தேன். நேற்று வாங்கியிருந்தால் இன்று அதிக இலாபம் அடைந்திருக்கலாம். EURUSD இதவிட கீழ் செல்ல முடியாது, சர்வதேச வர்த்தக சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நாளை சற்று விலை குறைந்தால் வாங்க உத்தேசித்துள்ளேன்.
  12. நல்லது ரஞ்சித். இக் கட்டுரை குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மொழி பெயர்ப்பதற்கான காப்புரிமை எவ்வாறானது என்று தெரியவில்லை. கட்டுரை ஆசிரியரின் தொடர்பு இருக்குமானால் அனுமதி கேட்டுப் பார்க்கலாம்.
  13. EURUSD இல் முதலிட்டிருந்தேன். ஈரோ டொலரை விட விலை குறைந்திருந்து ஏறத் தொடங்கியபோது வாங்கியது. நேற்று திடீர் வீழ்ச்சியில் Stop loss ஆகியது. அதன் முன் palladium போன்றவற்றில் ஏற்பட்ட நடடங்களினால் கையிருப்பு 70 டொலர்களாகியது. அதனை நேற்று தங்கத்தில் முதலிட்டேன். விலை இன்னும் குறைந்து கொண்டே செல்கிறது.
  14. எண்ணை, எரிவாயு ஆகியவற்றின் வர்த்தகம் சுவாரசியமானது. கடந்த பல நாட்களாக அவதானித்து வருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் தற்போது விலை வீழ்ச்சியில் உள்ளன. நேற்று ஒன்றுசேர்ந்த பல்வேறு காரணிகளால் எரிவாயுவின் விலை 6 வீதம் குறைந்தது. இது மிகப் பெரிய வீழ்ச்சி. அதோடு சேர்ந்து எண்ணையும் விலை குறைந்தது. இன்னும் விலை குறையும் என்கிறார்கள்.
  15. 1711 இல் வாங்கியுள்ளேன். Stop loss 1103. பார்க்கலாம்.
  16. இரண்டு வாரங்களுக்கு முன் சிறு பங்குகளாகக் கவனமெடுத்து வாங்கி கணிசமான அளவு இலாபம் கிடைத்தது. மொத்த இருப்பு 100 டொலரைத் தாண்டியதும் palladium வெள்ளி செப்பு ஆகியவற்றில் மாறி மாறி குறுகிய கால முதலீடுகள் செய்து அதிக இலாபம் ஈட்டியிருந்தேன். பெற்றோலியத்தின் விலை அடிக்கடி கூடிக் குறைவதால் அதில் இலகுவக இலாபம் அடையலாம் போல் தோன்றியது. மொத்தக் கையிருப்பு 220 டொலர்களாக உயர்ந்தது. கடந்த செவ்வாய் பெற்றோலியத்தில் இரு பிரிவாக 200 டொலர்களை முதலீரு செய்திருந்தேன். அன்று திடீரெனெ ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் 100 டொலர்களைச் சில மணி நேரங்களில் இழந்துவிட்டேன் (Stop loss 50%). நேற்று தவறான தருணத்தில் தங்கத்தில் முதலிட்டு நட்டத்துடன் வெளியேறி வெள்ளியில் முதலிட்டேன். அதுவும் ஏறுகிற மாதிரித் தெரியவில்லை. உங்களது தங்க முதலீட்டில் 1699 Stop loss மிகக் குறுகியதாகத் தெரிகிறது. தற்காலிகமான சிறு தாழ்வு ஏற்பட்டால் மூடப்பட்டு விடும் அல்லவா ? ஒருவேளை எனது இழப்புகளுக்கு தவறான Stop loss காரணமாக இருக்கலாம். Stop loss - Take profit இரண்டையும் எவ்வாறு கணிப்பிடுகிறிர்கள் ? நான் முதல் நாள் அதிகபட்சமாக இருந்த அளவை Take profit ஆக எடுத்துக் கொள்கிறேன்.
  17. சிறப்பான முடிவு. நான் வாங்கவில்லை. ஏற்கனவே வெள்ளி வாங்கியுள்ளதால் கையிருப்பு எதுவும் இல்லை. வெள்ளியிலிருந்து உடனே வெளியேறுவதானால் நட்டம் ஏற்படும்.
  18. இன்றும் 1740 - 1730 ற்கு உள்ளேயே தடுமாறுவதால் தற்போது முதலிடுவதாக இல்லை. நேற்று palladium திடீரென 6 வீதத்தை இழந்திருந்தது. என்னிடமுள்ள மொத்த இருப்பையும் திரட்டி நேற்று இரவு முதலிட்டுள்ளேன். இதில் பிரச்சனை என்னவென்றால் தங்கத்தைப் போல் அல்லாது வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பாரிய இடைவெளி உண்டு. வாங்கியவுடனேயே சுமார் 7 வீதத்தினை முதலீடு இழந்துவிடும். இந்த இழப்பையும் இலாபத்தில் உள்ளடக்க வேண்டியுள்ளதால் மிகப்பெரிய விலை ஏற்றம் வந்தால்தான் விற்க முடியும். எரிவாயுவின் விலை நேற்று 7 வீதத்துக்கும் மேல் கூடியது. முதலிட்டவர்கள் அதிக இலாபம் அடைந்திருப்பார்கள். இன்று தங்கம் 1730 இனை விடக் குறைந்தால் சிறு இலாபத்துடன் palladium இனை விற்று தங்கத்தில் முதலிடலம் என்று எண்ணியுள்ளேன்.
  19. குமாரசாமி புத்தன் ஆகியோருக்கு பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துகள்.
  20. தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன்!
  22. பரந்தூரில் இருந்து சென்னை வர 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இது மிக அதிகம். பரந்தூரிலிருந்து சென்னைக்கு அதிவேக வாகனப் பாதை அல்லது நேரடி அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டால் நல்லது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.