Everything posted by இணையவன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி வசீ. ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂 forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣 நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
விளக்கத்துக்கு நன்றி வசி. நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன். இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது. தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுவி அண்ணா !
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
@பகிடி, உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த வருடம் Bit coin 20k வரை செல்லும் என்று கூறுகின்றனர். Ethereum இன் ஏற்ற இறக்கம் Bit coin இனை ஒத்ததாக இருந்தாலும் சில வேளைகளில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நிலாமதி அக்கா!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
பயணிக்கத் தூண்டும் படங்கள். நன்றி.
-
இலைச் சருகுகள்.
கதையின் ஆரம்பத்தில் நல்லதொரு கருவைத் தொட்டு வேறு விதமாக அவசரமாக முடித்துள்ளீர்கள். ஒருவேளை கதையின் ஆரம்பத்தை வாசித்ததும் வேறு திசையில் என் சிந்தனை இருந்திருக்கலாம். - பிள்ளைகளை வளர்த்து ஆளா சொத்துக்களைக் கொடுப்பது - திட்டமிடப்படாத வாழ்க்கை - மருமக்கள் பிள்ளைகளைச் சார்ந்து வாழவேண்டிய நிலை இவைற்றை எனது வாழ்க்கையில் தவிர்க்க நினைக்கிறேன்.
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
படங்களும் வர்ணனையும் அருமை.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
மனம்தான் (மூளை) சில உபாதைகளுக்குக் காரணம். அதை நம்பவைக்கத்தான் ஊரில் மிளகாய் சுற்றிப் போடுவார்கள். குளிர் நாடுகளில் மூட்டைப் பூச்சி வாழ முடியாது என்று நினைக்கிறேன். இங்கு Acariens என்ற சிறு பூச்சி உண்டு. இதை அழிப்பதற்கு வாரத்தில் ஒரு தடவை 10 நிமிடங்களுக்கு யன்னல்களைத் திறந்து வீட்டுக்குள் குளிர் வரவிடுவோம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். முதலாவது பகுதி மட்டுமே இன்று வாசித்துள்ளேன். ஆரம்பம் நன்றாக உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான், பாஞ்ச் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
முத்தான வார்த்தைகளால் ஊர் நிலமையைச் சொல்லியுள்ளீர்கள். கவிதைக்கு வாழ்த்துகள் சுவி அண்ணா.
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
தமிழில் மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து எழுதுங்கள் ராஜவன்னியன். இதே காலப் பகுதியில் இண்டெல் நுண்செயலிக்குப் போட்டியாக Motorola வின் நுண்செயலிகளும் இருந்தன. குறைந்த வேகத்திலேயே அதிக கட்டளைகளை நிறைவேற்றும். Amiga மற்றும் Apple கணணிகளில் இதனைப் பாவித்தனர். இண்டெல் 8பிட் வகை நுண்செயலி வந்தபோதே Motorola 16பிட் ற்கு மாறியிருந்தது. பின்னர் காலப்போக்கில் விண்டோஸ் பரவலினால் கைவிடப்பட்டது.
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
மென்மையான கிண்டலும் நகைச்சுவௌயும் கலந்து எழுதும் புத்தனின் ஆக்கம் அருமை. வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி. தனிக்காட்டு ராஜாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சுவி அண்ணா, உதயகுமார், கிருபன், புங்கையூரான், பாஞ், ராசவன்னியன், உடையார், பெருமாள், தமிழ்சிறி, யாயினி, நுணாவிலான், நிலாமதி அக்கா, சசி வர்ணம், நந்தன், ஏராளன், ஜெகா துரை, ஈழபிரியன். 🙂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். 🙂
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் பிரபா, இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள். நன்றி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் குறிப்பிட்டது போன்று நீண்டகால அடிப்படையில் பிட் கொயின் நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன். இந்தச் சடுதியான ஏற்ற இறக்கங்களைத் தாண்டி சீரான நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது தற்போதுள்ளது போன்று குறுகிய காலத்தில் முதலீடு செய்து விற்று பெரும்தொகையை இலாபமாக ஈட்டக்கூடிய நிலை இருக்குமா என்பது சந்தேகம். இந்த சீரற்ற நிலை காரணமாகத்தான் உள்ளூர் பணமாக மிட் கொயினை சல்வடோர் நாடு பயன்படுத்துவதை இரத்து செய்யுமாறு இன்று IMF கேட்டுள்ளது.