Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7383
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. தங்கம் பற்றிய எதிர்வு கூற முடியாமல் உள்ளதால் இப்போது தங்கத்தில் முதலிடுவதைக் குறைத்துள்ளேன். நேற்று விற்கும் வர்த்தகத்தில் 100 டொலர் முதலிட்டு 5 டொலர் இலாபத்துடன் மூடிவிட்டேன்.
  2. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களிலிருந்து தங்கள் எரிவாயு தாங்கிகளை நிரப்பத் தொடங்குவார்கள். நவம்பர் மாத இறுதியில் எரிவாயு வாங்குவதைப் பெருமளவு குறைப்பார்கள். இதன்படி ஒரு மாதத்திற்கு முன்னர் ஜேர்மனியின் உள்நாட்டு தாங்கிகள் 95 வீதம் நிரப்பப்பட்டு விட்டது. ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயுவின் சந்தை உச்ச அளவில் இருந்துள்ளது. ஒரு MWh எரிவாயு 340 ஈரோவுக்குப் போனது. இப்போது இதன் விலை 70 ஈரோக்கள் மட்டுமே. உக்ரெயின் போரினால் ஏற்பட்ட நெருக்கடியால் அதிக விலை கொடுத்து தாங்கிகளை நிரப்ப வேண்டி வந்தது. இதனைப் பயன்படுத்தியே ரஸ்யா வழமைக்கு அதிகமான இலாபம் ஈட்டியது. ரஸ்யாவின் போர்ச் செலவின் பெரும் பகுதியை இந்த இலாபம் ஈடு செய்தது. இவ்வாறு கொள்ளை இலாபம் இனிமேலும் அடையாமல் இருக்கவே வருடம் முழுவதும் ஓரளவு சீரான முறையில் விலை இருகவேண்டும் என்பதற்காக எரிவாயுவின் அதிகபட்ச சந்தை விலையை மட்டுப்படுத்துகிறார்கள். இன்னும் 6 மாதத்தில் ரஸ்யா எரிவாயுப் போரில் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் மாற்றீடுகளை உருவாக்கி வருகின்றன.
  3. எனது வர்த்தகத்தின் இன்றைய நிலை. NATGAZ நேற்றுவரை கிடைத்த இலாபம் இன்றைய 5.5 வீத வீழ்ச்சியுடன் இழக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நிச்சயமாக மீண்டும் உயரும். Weight Watchers நேற்று ஏதோ காரணத்துக்காக பாரிய சரிவைச் சந்தித்தது. இதன் கடந்தகால தரவுகளைப் பார்த்துவிட்டு மலிவாக இருந்ததால் வாங்கியது. ஒரே நாளில் நல்ல இலாபம் தந்துள்ளது. COTTON தொடர்ந்தும் சரிந்தவாறு உள்ளது, பொறுத்துப் பார்க்கலாம். UK100 என்னுடைய கணிப்புத் தவறு. திங்கள் பார்த்துவிட்டு விற்க வேண்டும்.
  4. முதலாவது கேள்விக்கு மட்டுமான பதில். பங்குவர்த்தகத்துக்கு பெரிய கணணித் திரையே உகந்தது. நீங்கள் முதலிட்ட OIL இல் அழுத்தினால் இப்படி வரும் (மன்னிக்கவும் பிரெஞ்சில் உள்ளது). 1. எண்ணை வர்த்தகத்தின் தற்போதைய விலை 2. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு இன்றைய விலை ஏற்ற இறக்க வீதம் 3. வர்த்தகச் சந்தை மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்ற விபரம். திறக்கும் மூடும் நேரங்களை இதனை அழுத்தி அறியலாம். 4. நீங்கள் முதலீடு செய்த தொகையும் வாங்கப்பட்ட பங்கு எண்ணிக்கைகளும் 5. வாங்கியபோது ஒரு பங்கின் விலையும் வாங்கப்பட்ட திகதியும் 6. தற்போது OIL வர்த்தகம் மூலம் உங்களுக்குக் கிடைத்துள்ள இலாபம் (அல்லது நட்டம்) 7. SL - உங்களது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக நீங்கள் தீர்மானிக்கும் எல்லை. 99 டொலர்களுக்கு மேல் நட்டம் ஏற்பட்டால் வர்த்தகம் தானாகவே மூடிக் கொள்ளும். இதன்மூலம் நீங்கள் முதலிட்ட தொகையில் 101 டொலரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பங்கு வாங்கிய பின்னரும் இதனை மாற்றிக் கொள்ளலாம். 8. Leverage - இங்கு X5 என்று இருப்பது முதலிட்ட தொகை 5 மடங்கு போன்று கணிக்கப்படும். அதாவது இலாபம் 1000 டொலர் முதலிடப்பட்டது போன்று இருக்கும். இழப்பும் மிக ஆழமாக இருக்கும். உதாரணமாக Forex வர்த்தகத்தில் X30 ஆக முதலிட்டிருந்தால் வர்த்தகம் 3.3 வீதம் வீழ்ச்சியடைந்தால் மொத்த முதலீட்டையும் இழந்துவிடுவீர்கள். கவனமாகக் கையாள வேண்டும். ஒரு தடவை முதலிட்டால் மாற்றம் செய்ய முடியாது. 9. TP - நட்டம் வரும்போது தானாக மூடப்படுவது போன்று இலாப எல்லையையும் தீர்மானிக்கலாம். இந்த எல்லையை எட்டும்போது வர்த்தகம் தானாக மூடிக் கொண்டு முதலும் இலாபமும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றலாம். உங்கள் வர்த்தகத்துக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாளி. சில நிமிடங்களில்கூட உங்கள் முதலில் பெரும் பகுதியை இழக்கலாம். அப்படி ஏற்பட்டால் எந்த மாற்றீடும் கிடையாது. யாரும் உதவிக்கு வரப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.🙂
  5. அணு உலைகளில் உள்ள பிரச்சனை இதுதான், கழிவுகளை என்ன செய்வது. விபத்து ஏற்பட்டுச் சில நாட்களில் கதிரேற்றம் பெற்ற பல மில்லியன் லீற்றற்ர் நீர் ஏற்கனவே கடலில் கலந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
  6. அடுத்து இரண்டாவது முயற்சி, அநேகமானவர்கள் முதலிடும் முறை - இதுவும் Virtuel Trading இல்தான். நீண்டகால முதலீடு - இது சில நாட்களாக அல்லது வாரங்களாக இருக்கலாம். Leverage குறைவானதாகவும் Stop Loss அதிகமானதாகவும் முதலிட்டுக் சுமாரான இலாபம் அடைவது. எங்கு முதலிடுகிறோம் என்பதே முக்கியமானது. உதாரணமாக நான் தெரிவு செய்த சில வர்த்தகங்கள் . Natgaz, Oil, Nasdaq100, ... Natgaz இன் விலை குளிர் காலம் ஆரம்பிப்பதற்கு முன் 9.7 டொலர் வரை போனது. அப்போது ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் தாங்கிகளை நிரப்பத் தொடங்கும். இப்போது இதன் விலை 3.2 டொலர் போகிறது. காரணம் ஐரோப்பாவில் எரிவாயு சேமிப்பு 85 வீதத்துக்கு மேல் போய்விட்டது, வாங்குவதற்கு ஆளில்லை. குளிர்காலத்தில் அதீத எரிவாயுப் பாவனையால் மறுபடி இன்னும் சில வாரங்களில் வாங்க ஆரம்பிப்பார்கள். இதே நாளில் சென்ற வருட விலையுடன் ஒப்பிட்டாலே 4 டொலர்களை அண்மிக்கும். பெற்றோலியமும் இப்போது 75 டொலரில் உள்ளது. இது இனிமேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது சென்ற வாரம் முதலிட்டபோது இருந்த நிலை : இது நேற்றைய நிலை : UK100 தவிர ஏனையவை வாங்கும் வர்த்தகம். Cotton நான் எடுத்த தவறான முடிவுபோல் தெரிகிறது. இன்னும் சில நாட்கள் விட்டுப் பார்க்கலாம்.
  7. ஆம். வசி கூறியதுபோல் வாங்கும் போது உள்ள விலைக்கும் அதே கணம் விற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளிதான் கமிசன். ஒவ்வொரு சந்தையைப் பொறுத்து இந்தத் தொகை வேறுபடும். உதாரணமாக Palladium 100 டொலருக்கு (X10) ற்கு வாங்கினால் அதன் விற்பனை விலை 96.5 ஆக இருக்கும். தங்கத்தில் இந்த இடைவெளி மிகச் சிறிது. மற்றும்படி பிரான்சில் பங்குச் சந்தையில் 1 டொலர் இலாபம் வந்தாலும் 1 மில்லியன் டொலர் இலாபம் வந்தாலும் 30 வீதம் வரி கட்ட வேண்டும். 😬 பங்குச்சந்தை இலாபத்தில் வரி கட்டுவதில் குறுக்கு வழியில் எதுவும் செய்ய முடியாது. ஒரே ஒரு வழி உண்டு, அது ஒரு வித வைப்புத் திட்டத்தில் முதலிடுவது, 17 வீதம் வரி.
  8. ஆம் நஸ்டாக் 100. 4 விற்றல் வர்த்தகம் (Vente என்று உள்ளவை). மேலும் சில நாட்கள் Virtuel Trading செய்து பார்த்தேன். இதே போன்று நல்ல இலாபம் கிடைத்தது. ஆனால் பாதகங்களும் உண்டு. ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளபோது மட்டுமே இந்த வர்த்தகம் சாத்தியம். கனவயீனமாக முடிவுகள் எடுக்கப்படாவிடின் ஏற்படும் ஒரு நட்டம் அன்று முழுவதும் கிடைத்த இலாபத்தை விட அதிகமாக இருக்கும். அதிக நேரம் மினக்கட வேண்டும். முழு நேர வேலையாகச் செய்ய வேண்டி வரும்.
  9. இங்கு எழுதியவர்கள் யாரும் சாமியார்கள் பணத்தில் மிதப்பவர்கள் என்பதை மறுதலிக்கவில்லை. அது மட்டுமல்லாது மோசமான அரசியல்வாதிகளிடமும் தொடர்புள்ளவர்கள். சாமியார்கள் செய்யும் சில சமுக சேவைகள் வெறும் கண்துடைப்புகள். அவர்களிடமுள்ள பலத்தோடு ஒப்பிடும்போது மிகச் சிறியவை. சாமியார் ஒருவரை நம்புபவர் இன்னொரு சாமியை நம்புவது குறைவு. அதேபோல் இரு சாமியார்கள் ஒன்றுசேர்ந்து சமுகநலத் திட்டங்களை முன்னெடுப்பதும் மிக அரிது. ஏன் ஒரு சாமி இன்னொரு சாமியாருடன் சேர்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனது உறவினர்கள் நம்பும் சாமியார் பற்றி ஆதாரங்களுடன் அவர்களுக்கு விளக்கியபோதும் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவாறு அவர்களது நம்பிக்கை வேரூன்றியுள்ளது. சாமியாரை நம்புவதும் நம்பாததும் அவரவர் சொந்த முடிவு என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது ? சாமியாரை நம்புவதால் எனது மனதில் இன்பம் உண்டாகிறது என்பதால் அவர் செய்யும் காரியங்களை நான் பொருட்படுத்தாமல் போவது சரியா ? போதை வஸ்து போலவே இதுவும். அப்பாவிகளை மயக்கி வரி கட்டாத பணத்தையும் கருப்புப் பணத்தையும் முடக்குவது தனது நாட்டுக்குச் செய்யும் தேச துரோகம். எனது சொந்த மன நிம்மதிக்காக நான் இதை எப்படி அனுமதிப்பது எப்படி நியாயமாகும் ?
  10. அப்படியானால் இன்னொரு கட்சி இல் பெயரைப் புதிய கட்சியாகப் பதியலாம். ஆனால் ஏதாவது ஒரு சட்ட நுணுக்கத்தால் சட்டம் தெரிந்தவர்களால் அக் கட்சியை இறுதி நேரத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முடக்கச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
  11. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல காலமாக சட்ட ரீதியாக பதியப்படாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக இழுத்தடிப்புச் செய்து வந்ததாக ஞாபகம். சரியா ?
  12. முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம். இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ? ஆக்கபூர்வ்வமாக விவாதிப்போம். *** இணையத்தில் தேடியபோது கிடைத்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைக்கிறேன். https://vimarisanam.com/2016/03/31/சாமியார்களும்-சுஜாதா-சா/ ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து – —— கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள். படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது மாஸ் ஹிப்னாடிஸமா? பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது. இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன். என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் – மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity – நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான். முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். —— நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன். இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம். ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம் இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு. அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின் மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள். ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர். ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ, ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று நினைத்தார். பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை – மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில் கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள் இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில் அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன. ( தமிழ்நாட்டில், திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் “குடில்” ஆற்றும் அரும் பணிகள் பற்றி அண்மையில் இந்த இடுகையில் ஒரு நண்பர் விவரித்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்…) இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும் பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன. இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்…. —— ஆனால், தங்களது பேச்சாற்றல், பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை, பெரிய அளவில் அடியார் கூட்டம் – இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட் நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர். இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம், மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.
  13. ஆதாரமற்ற ஆக்கபூர்வமற்ற கருத்தாடல்களால் ‘ ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு – குடும்பத்தினர் சந்தேகம்’ என்ற திரி பூட்டப்படுகிறது
  14. கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது. https://www.donneesmondiales.com/europe/norvege/inflation.php https://www.donneesmondiales.com/europe/danemark/inflation.php ஜேர்மனியும் ஐரோப்பாவுடன் இணையாவிட்டால் இந்த நிலைதான் இருந்திருக்கும். சுவிஸ் மட்டும் விதிவிலக்கு. அதற்கு வேறு காரணங்கள் உண்டு. வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது. ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம்.
  15. ஊக்கமளித்தவர்களுக்கும் கருத்துப் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. ஜிஸ்ரின், இரண்டு வரிகளில் சுருக்கமாக அழகாகக் கூறியுள்ளீர்கள். விளங்க நினைப்பவன், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என்று வந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோன்று நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்குச் சரிவராது. முதல்வன், இது எமது சமுகத்துக்கு அவசியமாக இருந்தாலும் பேசாப் பொருள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது. குமாரசாமி, இந்தச் சந்ததி விடயத்தில் நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கட்டுரையில் இரண்டாவது பகுதியில் எனது முடிவு பற்றி எழுதுவேன். பல அனுபவம் உள்ள உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். தமிழ்சிறி, இந்த ஜிம் வாக்கிங் எல்லாம் பலர் வாயால் சொல்லக் கேட்டுள்ளேன். நீங்கள் செயலில் காட்ட முன்கூட்டியே எனது வாழ்த்துகள். நிலாமதி அக்கா, நிச்சயமாக, ஏனையவர்களுக்குச் சுமையாக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் உறவுகளுடன் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்களையும் மதிப்போம். விசுகு அண்ணா, நீங்களும் சமூக, குடும்பச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவர். உங்கள் அனுபவமும் எமக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதில் எழுதுவது பொருத்தமாக இல்லாவிட்டால் தாராளமாகத் தனித் திரியில் எழுதுங்கள். ஈழபிரியன் அண்ணா, யாரையும் குறை கூறும் அளவில் இல்லை. நீங்களும் தோட்டம் பேரப் பிள்ளைகள் என்று சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறீர்கள். எமது சமூகத்தில் உள்ள பொதுவான குறைபாடு பற்றி விவாதிப்பது பயனுள்ளது. ஓய்வில் இருக்கும் உங்களது கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு அனுபவமும் தனித்துவமானது. உங்களுக்குப் பின் உள்ளோர் தவிர்க்க வேண்டிய கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை எழுதுங்கள். ராசவன்னியன் அண்ணா, நாடற்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் அங்கும் இங்கும் இல்லாத இடைப்பட்ட வாழ்க்கை என்ற நிலையிலிருந்து எழுத ஆரம்பித்ததால்தால் தலைப்பை அப்படி எழுதியுள்ளேன். உங்கள் கருத்து மிகவும் வரவேற்கப்படுகிறது. நன்றாகத் திட்டமிட்டுள்ளீர்கள். அத்துடன் ஓய்வூதியத்தின் பின்னரும் உங்கள் அனுபவங்களை முதலீடாக்குகிறீர்கள். பாராட்டுகள்.
  16. வயோதிப வாழ்க்கை என்பது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதல்ல. எமக்கு ஏற்றவாறான வாழ்கை முறையை ஒருங்கமைத்து வாழ முடியும். ஏறத்தாள மொத்த வாழ்வில் மூன்றில் ஒரு காலப் பகுதியை இது அடக்குகிறது. சிலர் ஏற்கனவே திட்டமிட்டும் சிலர் காலப்போக்கில் எடுத்த முடிவாலும் இன்னும் சிலர் சில நிர்ப்பந்தங்களுக்காகவும் தமது வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். எனக்குத் தெரிந்த மூன்று வித்தியாசமான நபர்களின் சிறு உதாரணங்களைத் தருகிறேன். இவர் ஐரோப்பியர். ஓரளவு வசதியானவர். என்ன செய்வதென்று தெரியாமல் ஓய்வூதியத்தில் சில வருடங்களைக் கழித்து விட்டார். ஒரு நாள் வீட்டில் உடைந்துபோன மரக் கதிரை ஒன்றைத் திருத்த முயன்றார். நுட்பமான வேலைகள் எதையும் முன்னர் செய்திருக்கவில்லை. எப்படித் திருத்துவது என்று எதுவுமே தெரியாமல் பல முயற்சிக்குப் பின் ஒருவாறு திருத்திவிட்டார். அன்றிலிருந்து அதில் ஆர்வம் ஏற்பட, தனது உறவினர் வீடுகளில் பழுதான தளபாடங்களைத் திருத்த வெளிக்கிட்டார். சிறிது சிறிதாக உபகரணங்களையும் வாங்கி தனது பிள்ளைகளின் வீடுகளுக்குத் தேவையான தளபாடங்களைப் புதிதாகச் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டார். செய்து முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வாராயினும் யாரும் அழுத்தம் தராதபடியால் மெதுவாகச் செய்வார். வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகள் இவரது ஆக்கங்களைக் காட்டிப் பெருமைப் படுவார்கள். இவரும் ஐரோப்பியப் பெண். ஒரு பெண் பிள்ளை திருமணமாகிச் சென்றுவிட, கணவனும் இறந்துவிட, பரிஸ் புறநகர் அடுக்குமாடி வீடொன்றில் தனிமைப் பட்டார். சில வருடங்களின் பின் திடீரென ஒரு முடிவைத் தானாகவே எடுத்தார். தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு கிராமத்தில் சிறு வீடு ஒன்றை வாங்கிக் குடியேறினார். அக் கிராமமோ அங்கிருப்பவர்களோ அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் அல்ல. அங்கு சென்றது கிராம மக்களோடு பழக ஆரம்பித்தார். தினமும் கிராமத்தைச் சுற்றி வந்து அவர்களோடு பேசுவார். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தமிழ் மூதாட்டி. 80 வயதாகிறது. தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலை செய்வதுதான் இவரது முழுநேர வாழ்க்கை. முதுகு வலியால் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டே சமையல் செய்வார். எப்போதும் பேரப் பிள்ளைகள் சாப்பிட்டார்களா பாடசாலைக்கு நேரத்துக்கு வெளிக்கிட்டார்களா என்பதே சிந்தனை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இவர் வாழ்வது ஏனையவர்களுக்காகவே. - முதலாமவர் பெருமையோடு வாழ்கிறார். - இரண்டாமவர் தனது மகிழ்ச்சியைத் தேடிவிட்டார். - மூன்றாமவர் ஏனையவர்களுக்காக மட்டும் வாழ்கிறார். மூன்றாவது உதாரணத்தில் விருப்பம்போல் முதுமைக் காலத்தை நிர்ணயிப்பதில் புற காரணிகள் தடையாக இருந்துள்ளன. எமது தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் முக்கியமானவை: வாழ்க்கைத் துணை எடுக்கப்படும் முடிவிற்குக் கணவன் மனைவி இருவருடைய ஒத்துழைப்பும் விருப்பமும் அவசியம். அப்படி இல்லாவிடினும் அது ஒருவரைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. உங்கள் துணையுடன் எதிர்காலம் பற்றிக் கலந்தாலோசியுங்கள். அவருக்கும் புதிய யோசனைகள் ஆர்வங்கள் இருக்கலாம். உடல் ஆரோக்கியம் நோய்கள் வராமல் முற்பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. நல் உணவு, உடற்பயிற்சி, போதிய நித்திரை ஆகியன உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். பல தமிழர்களைப்போல் யூடியூப் மருத்துவத்தை நம்பாமல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் நல்ல மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். குடும்ப உறவுகள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பது இனிமையானது. ஆனால் அதுவே முட்டுக்கட்டையாகவும் இருக்க வாய்ப்புண்டு. வசதியான நாடுகளில் முதியவர்களின் உதவி இல்லாமலே அவர்களால் வாழ முடியும். இருப்பிடம், பொருளாதாரம் போன்றவை இங்கு பெரிய பிரச்சனை இல்லை. வசதியாக வாழ வேண்டுமானால் உழைக்கும்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். இதுவரை - - சோர்வாக இருந்தாலும் தினமும் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து வேலைக்கும் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் - வேலையில் தரப்படும் அழுத்தங்களை யோசித்துக் நிம்மதியற்ற தூக்கம் - பிள்ளைகளின் படிப்பு, மாலைநேர வகுப்பு, விளையாட்டு எல்லாவற்றையும் நினைத்துக் குழப்பம் - வீட்டுக் கடன், வருமானவரி, போகுவரத்து, சேமிப்புத் திட்டம், காப்புறுதி என்றெல்லாம் ஏகப்பட்ட சிந்தனைகள் இத்தனை காலமும் இன்னும் பல பிரச்சனைகளைத் தாங்கிவிட்டோம். முதுமையில் இவையெல்லாம் ஓய்ந்து சீராக வந்துவிடும். இனிமேல் எமக்குப் பிடித்த வழியில் அமைதியாக மகிழ்சியாகப் பயணிப்போம்.
  17. பெரும்பன்மை என்பது 100 வீதம் இருக்கவேண்டியதில்லை 🙃 73 வீதம் என்பது ஏனைய வயதுக்காரரோடு ஒப்பிடும்போது மிகப் பெரிய பெரும்பான்மை.
  18. ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. எம்மில் பலருக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்வதென்ற திட்டம் எதுவும் இல்லை. வாரத்தில் 5-6 நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்யும்போது உடல் தசைகளும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டு வீட்டினுள் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. வாழ்க்கையில் எப்போது ஒரு குறிக்கோள் வேண்டும். ஓய்வூதியத்திற்கு முன்னரே நாம் வலுவாக இருக்கும்போது இது பற்றி சிந்தித்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். ஓய்வு என்பதை சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம். எனது வயதான உறவினர் ஒருவர் எப்போது வீட்டில் இருந்தவாறே கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பார். எல்லா வருத்தங்களும் உண்டு உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இன்னொருவர் 73 வயதாகிறது, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர். எந்த மருந்தும் பாவிப்பதில்லை, ஆரோக்கியமாக உள்ளார். ஒரு வயதிற்கு பின்னர் எமது மூளையும் உடலும் சரியாக இயங்காது. அப்போதுதான் வீட்டுக்குள் முடங்க வேண்டும். அதுவரை நன்றாக வாழ வேண்டும். நான் இங்கு எழுதப்போகும் திட்டம் எல்லோருக்கும் சரிவராது. இங்கு முதுமையோடு வாழ்வதற்கு ஏராளமான வழிகள் பொழுதுபோக்குகள் உள்ளன. சாத்தியமானதைப் பின்பற்றலாம். யாழ் உறவுகள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பெற இருப்பவர்களும் விரும்பினால் தங்கள் அனுபவங்களை அல்லது திட்டங்களைப் பகிர்ந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்.
  19. முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. வெளிநாடு போய்வந்தவர்களின் புழுகல்கள் மூலமாக கனவுகளை வளர்த்துக் கொண்டேனே தவிர யதார்த்தமான நிலமையைச் சிறிதளவேனும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத நிலமை. பட்டப்படிப்பில்லாமல் எங்கோ எப்படியோ நுளைந்து சுமாராக முன்னேறியிருந்தாலும் தற்போதைய வாழ்க்கையைக் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் படிப்பில் நேரடியாகத் தலையிடுவதில்லை. படிப்பு என்பது முதலில் எமது அறிவை வளர்த்துக் கொள்ளவே, வேலை இரண்டாம் பட்சம் என்றே கருதுகிறேன். அவர்கள் பிற்காலத்தில் ஓரளவு வசதியாக வாழக்கூடிய வகையில் சொத்து சேர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே ! நான் குறைந்தது 5 வருடங்களாவது திட்டமிட்டு செயற்படுவது வழக்கம். ஆனாலும் பல தடவைகள் இலக்குகள் மாறி வேறு விதமாக அமைந்து விடுகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நான் எதிர்பார்த்த/எதிர்பாராத விதமாக வாழ்க்கை நகர்ந்தாலும் அன்று முதல் என்னுள் மாறாமல் இருப்பது நான் தமிழன் என்ற பெருமை மட்டுமே. நான் மேலே குறிப்பிட்டதுபோல் எனது உழைப்பில் தேடிய சொத்தினை (அது சிறிதாக இருந்தாலும்) எனது பிள்ளைகள் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் ஓரளவு தமிழ் பேசுவார்கள். எழுத்துக்கூட்டி வாசிக்கவும் முடியும். இலங்கையில் எமது உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். மற்றப்படி எமது பழக்கவழக்களோடு ஒன்றியிருந்தாலும் அவர்களின் தமிழ் கலாச்சாரம் என்பது பொலிவூட், சாமத்தியவீடு போன்ற கொண்டாட்டங்களுடனேயே மட்டுப்படுகிறது. இதையெல்லாம் நியாயப்படுத்தி அவர்களைத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. பிரெஞ்சுக்காரர்கள். சில பெற்றோரைப்போல் தமிழர்களுக்குள் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப் பட்டாலும் கூட அடுத்த சந்ததி என்னவாகும் என்பது நிச்சயமில்லை. 80-90 களில் வந்தவர்களே இன்று வெள்ளைக்காரப் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நிலையில் எனது உழைப்பினை எனது பிள்ளைகளுக்குப் பின் வெள்ளைக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். இக் கருத்தினை வைத்து என்னை இனவெறியனாகக் கருத வேண்டாம். தொடர்ந்து படியுங்கள். *** முதுமையும் தாழ்வும் மனித நாகரிகம் தோன்றிய முற் பகுதிகளில் மக்கள் வீடு கட்டுவதும் விவசாயம் செய்வதுமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்கான காரணம் பெற்ற அனுபவத்தினை இலகுவாக அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாததாக இருக்கலாம். இலகுவான எழுத்து வடிவங்கள் தோன்றியபோது மனித வளர்ச்சி வேகமடைய ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகள் இடைவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளும் முடிவுகளும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணணி, தொலைத்தொடர்பு வருகைக்குப் பின் வயது வித்தியாசமின்றி எல்லோராலும எல்லாத் தகவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் அலசி ஆராயக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் 70 வயதானவரை விட 20 வயதான ஒருவருக்கு அதிகமான தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் குறைந்து போகின்றது. சென்ற வருட ஆரம்பத்தில் (2022) நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பலர் வேலையை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நான் விளிம்பில் தப்பிப் பிழைத்திருந்தேன். இந்த வயதில் இதுபோன்ற வேலை தேடி எடுப்பது கடினம். வருட முடிவில் எல்லோருக்கும் தமது வேலைகளில் ஜனவரி முதல் தகமைகளை மேம்படுத்த முயல வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளனர். அதாவது புதிய தகமைகளைப் படிக்க வேண்டும். நான் மீண்டும் படிக்கும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து ஏதாவது படித்து ஒரு சான்றிதளாவது பெற முயற்சிக்க வேண்டும். ஆரம்ப வாழ்வு முதல் தகமைகளையும் அனுபவங்களையும் கடும் முயற்சியில் பெற்றுக் கொள்கிறோம். ஆரம்பப் படிப்பில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்படிப்பு உருவாக்குகிறது. மேற்படிப்பின் எல்லை தொழிலை நோக்கி உள்ளது. தொழிலிலும் தொடர்ந்து இறுதிவரை முன்னேற வேண்டும். எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளுக்கும் அனுபவங்களுக்கும் ஓய்வூதியத்தை எட்டியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னால் மீதி வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. என்னைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. ஏன் இந்த நிலமை ? வாழ்நாள் முழுவதும் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களை என்ன செய்வது ? *** எனது தேசியம் 2006 இலும் பின்னர் 2012 இலும் இலங்கை சென்றிருந்தேன். 2012இல் கொழுப்பிலிருந்து யாழ் நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். கிளிநொச்சிப் பகுதியை A9 ஊடாக வாகனத்தில் கடந்து சென்றபோது எனது மனதில் ஏற்பட்ட சோகம் கோபம் இயலாமை ஏமாற்றம் தோல்வி எல்லாமே கலந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. அதன்பின் இலங்கையில் எனக்குடனான தொடர்பு அங்குள்ள உறவினர்கள் மட்டுமே என்று தோன்றியது. நான் பிறந்த நாட்டில் எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் பிரான்ஸ் எனக்குத் தந்துள்ளது. இனிமேல் பிரான்ஸ்தான் எனது நாடு என்று முடிவு செய்திருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. என்னைப்பொறுத்தவரை எமக்கான தீர்வு என்றாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதை விட இனி எதுவுமே கிடைக்காது என்ற சிந்தனையிலிருந்து பாதையை வகுப்பது புத்திசாலித்தனம். பிரான்ஸ் தேர்தலின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் வேட்பாளர்களின் கலந்துரையாடலின் ஒரு பகுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில் வேட்பாளரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ‘பிரெஞ்சுக்காரன்(ரி) என்றால் என்ன?’ என்பதே அக் கேள்வி. அவரது இவ்வாறு பதிலளித்திருந்தார். பிரெஞ்சுக்காரன் என்பவன் : தன்னை உருவாக்கிக் கொள்வான் (கல்வி, அறிவு) எதிர்காலத்தை நோக்கி நகரத் தலைப்படுவான் (திட்டமிடல், உழைப்பு) சொத்துக்களை உருவாக்குவான் இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா. இந்த வரைவிளக்கம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அடுத்த 9-13 வருடங்களில் ஓய்வுபெற்றபின்னான வாழ்க்கைக்கு இப்போது அத்திவாரமிடப் போகிறேன். மீதி இரண்டாம் பகுதியில் தொடரும்.
  20. முன்னர் ஐரோப்பாவை விட்டு வெளியேற நினைத்த நாடுகள் பிரெக்ஸிட்டின் பின்னர் மௌனமாக உள்ளன என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.🙂 பிரான்சின் தேசியவாதக் கட்சி இப்போது ஐரோப்பாவுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. உங்களது கருத்துக் கணிப்பை எங்கிருந்து எடுத்தீர்கள் ? இதையெல்லாம் ஆராயாமல் ஆதாயம் இல்லாமல் குரோஷியாவை ஏன் ஈயூ உள்ளே எடுத்திருக்கும் ?
  21. இதற்கு முன் குரோஷிய மக்களுக்கு ஷெங்கன் விசா மறுக்கப்படவில்லையே. இதற்கு முன்னரே குரோஷிய மக்கள் ஐரோப்பா முழுவதும் உள்ளனர். ஷெங்கன் எல்லைக்குள் ஒரு நாடு வருவதன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் பரிவர்த்தனை இருக்கும். ஐரோப்பாவில் குற்றம் செய்துவிட்டு இலகுவாக கொரோஷியாவில் ஒழிந்து கொள்ள முடியாது.
  22. எனது முதலீட்டினை இழந்ததாலும் நேரம் இன்மையாலும் சில நாட்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இறங்கியுள்ளேன். ஆனால் முதலீடு இல்லாமல் Virtuel Trading இல். இதில் பெரிய தொகை முதலீடாகத் தரப்பட்டதால் பல்வேறு விதமான வர்த்தகங்களை முயன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக விற்கும் வர்த்தகம் (Sell) பல்வேறு முதலீடுகளில் முயன்று பார்க்க முடிந்தது. இன்று Nasdaq இல் குறுகிய trading வர்த்தகம் ஒன்றை முயற்சி செய்தேன். இதற்காக அதிக நேரம் தேவைப்படும். நான் நேரம் கிடைக்கும்போது மட்டும் முதலீட்டினைச் செய்துள்ளேன். இன்று நான் வர்த்தகம் செய்த நேரத்த்தில் பங்குகளின் நிலை கீழ்கண்டவாறு உள்ளது. ஆரம்பப் புள்ளியும் முடிவுப் புள்ளியும் ஏறத்தாள ஒன்றாக இருப்பதை அம்புக்குறியில் காட்டியுள்ளேன். ஆரம்பத்தில் முதலிட்டால் முடிவில் இலபமும் நட்டமும் இல்லாமல் இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில மணி நேரம் வரைபு ஒரு நிலையான எல்லைக்குள் நிற்கிறது. படத்தில் வட்டமிக்குக் காட்டிய பகுதியை அடுத்த படத்தில் பெருப்பித்துள்ளேன். இவ் வரைபில் சிவப்பு அம்புக்குறி காட்டியுள்ள உயரமானது 200$ முதலீட்டில் 5 டொலர்களுக்குச் (13 அலகுகள்) சமமானது. உதாரணமாக 10850 இலிருந்து 10863 ற்கு நகருதல். குறிப்பிட்ட வலையத்தினுள் விலை வலையத்தின் கீழ்மட்டத்திற்கு வரும்போது வாங்கும் வர்த்தகமும் (buy) வலையத்தின் உச்சிக்குச் செல்லும்போது விற்கும் வர்த்தகமும் (sell) செய்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் TP யின் அளவு 5$ தான். SL முக்கியமில்லை, அல்லது இதில் எனக்குச் சரியான அனுபவம் இல்லை. 200 டொலர் (+200$) முதலீட்டில் இன்றைய வர்த்தக விபரம் இதோ. விற்கும் வர்த்தகங்களை மஞ்சள் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இதில் முதலாவதாக உள்ள வர்த்தகத்தின் நேரத்தைக் கவனியுங்கள். அது நான் ஆரம்பத்தில் இட்ட முதலீடு இறுதியில் 5 டொலர் இலாபத்தில் முடிந்துள்ளது. இது முதலாவது படத்தில் காட்டிய தொடக்க - முடிவு அம்புக்குறிக்கு இணையாகும். 🙂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.