• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    5,686
  • Joined

  • Last visited

  • Days Won

    35

ரஞ்சித் last won the day on January 10 2019

ரஞ்சித் had the most liked content!

Community Reputation

1,544 நட்சத்திரம்

About ரஞ்சித்

  • Rank
    Advanced Member
  • Birthday 12/05/1973

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    anton_devaranjith@yahoo.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    Sydney
  • Interests
    Politics, music, sports.

Recent Profile Visitors

8,864 profile views
  1. பாலியல்த் தொழிலாளியும் ஒரு ஆசா பாசங்கள் உள்ள ஒரு பெண்தான் என்று உணரும்போது அவளுக்காக செய்வது அபத்தமாகத் தெரியாது என்பது எனது தாழ்மையான கருத்து.
  2. எந்தப் பாலியல் தொழிலாளியும் பிறக்கும்போதே அப்படிப் பிறப்பதில்லை . அவளது சமூகமும் பொருளாதார சமூகக் காரணங்களுமே அவளை இங்கே இழுத்து வருகின்றன. அவளும் யாரோ சிலரது மகள், பிள்ளை, சகோதரி...இறுதியாக ஒரு பெண்குழந்தையின் தாய். அவளது ஆத்மா சாந்தியடையட்டும். நன்றி சாத்திரி!
  3. பாடப்பட்டதோ சிங்கள பெளத்த நாடொன்றின் தேசிய கீதம். இதற்கும் தமிழினத்திற்கும் உள்ள தொடர்பென்ன? நடைபெற்றது யாருக்கான சுதந்திர தினம்? சிங்கள பெளத்த நாட்டிற்கான சுதந்திர தினமே அதுவன்றி, தமிழர்களுக்குச் சுதந்திரதினம் இன்னும் அமையவில்லை என்பது எமக்கேன் தெரியாமல்ப் போனது? அவன், தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடி, தனது மொழியில் தனது தேசிய கீதத்தைப் பாடுகிறான். இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. நடைபெற்ற நிகழ்விற்கோ அல்லது பாடப்பட்ட தேசியகீதத்திற்குமோ எம்முடன் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் தமிழில் அவனது தேசிய கீதத்தைப் பாடுவதால் கிடைக்கப்போவது என்ன? அப்படி நான் தமிழில் பாடுவதால் மட்டும் நாடோ அல்லது கிடைத்த சுதந்திரமோ எனதாகிவிடுமா? இல்லையே! பிறகேன் நாங்கள் இதுபற்றிக் குத்திமுறிவான்? இன்னும் சொல்லப்போனால், அவன் சரியாகத்தான் இதைச் செய்திருக்கிறான். நடப்பவற்றிற்கும், பாடப்பட்டதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பதை அவனே ஏற்றுக்கொண்டபின், நாம் மட்டும் தமிழிலும் பாடுங்கள் என்று இரைஞ்சுவது நல்லதல்ல. என்னைப்பொறுத்தவரை எனது தாய்மொழியில் என்னை ஆக்கிரமித்து நிற்பவனின் தேசிய கீதத்தைப் பாடுவதை முற்றாக வெறுக்கிறேன். அவனது தேசிய கீதத்தை என தாய்மொழியில் பாடுவதைக் காட்டிலும் எனது உதடுகளும் நாவும் அழுகிப் போனால்க் கூடப் பரவாயில்லை.
  4. தமிழரின் அவலங்களுக்கான தீர்வை இந்தியாவிடம் தமிழர்கள் எதிர்பார்ப்பதென்பது மிகவும் அப்பாவித்தனமான, கேலியான ஒரு விடயம். எனென்றால், தமிழரின் இன்றைய அவல நிலைக்கும், அரசியலில் அநாதைகளாக அவர்கள் இருப்பதற்கும் ஒரே காரணம் இந்தியாதான். அப்படியிருக்க, தம்மை இந்த இழிநிலைக்குக் கொண்டுவந்து சேர்த்து, சிங்களவர்களிடம் அடிமைகளாக்கி வைத்துவிட்டு, நழுவிக்கொண்ட இந்தியாவிடமே எமக்கு தீர்வைத் தரச் சொல்லி இலங்கையை வற்புறுத்துங்கள் என்று கேட்பது உண்மையிலேயே ஒரு கேலியான விடயம் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லாதுவிட்டால்க் கூட , இந்தியா இலங்கையில் தலையிட்டிருக்கும் என்று கூறும் பத்தியாளர், இந்தியா இலங்கையில் தலையிடுவது தமிழரின் நலனுக்காக இல்லாமல், தனது பிராந்திய நலனுக்காக மட்டும்தான் என்று கூறிக்கொண்டே, இந்தியாவிடம் தமிழர்கள் தீர்வுபற்றிக் கேட்பது சரியானதுதான் என்றும் கூறுகிறார். இந்தியா தமிழருக்கு ஒரு தீர்வைத் தரவேண்டிய தேவை என்ன? தமிழருக்கு ஒரு தீர்வைத் தருவதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ளப்போவது என்ன? தமிழகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே இந்தியா தமிழருக்கு ஒரு தீர்வைத் தரவிரும்புகிறதென்றால், 2009 இல் இனக்கொலை நடந்துகொண்டிருந்தபோது தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பளித்ததா? இல்லையே? பிறகு இந்தியா எதற்காகத் தமிழருக்குத் தீர்வினைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? தமிழருக்குச் சார்பான தீர்வொன்றினை சிங்களத்தை வற்புறுத்தித் தரவைத்து, அதன் விளைவாக இலங்கையைத் தன்னிடமிருந்து விலகிப் போகச் செய்து சீனாவின் காலடியில் வீழ்த்துவதைக் காட்டிலும், சிங்களவருடன் சமரசமாகப் போய், தமிழர்களுக்கான தீர்வு பற்றிய யோசனைகளையே தூக்கியெறிந்து, தனது பிராந்திய நலனைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றாகிறபோது இந்தியா தமிழருக்குத் தீர்வொன்றினைத் தரவேண்டிய தேவையென்ன? இந்தியாவையும், சர்வதேச சக்திகளையும் பொறுத்தவரை தமிழரின் அவலம் என்பது என்றோ மூடிவைக்கப்பட்ட ஒரு அத்தியாயம். அதுபற்றி இவர்கள் எவருமே இனிமேல் பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ போவதில்லை. தமிழரின் அவலங்களைக்கொண்டே தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்ட இந்த சக்திகள், எம்மை விட்டு விலகிச் சென்று பல காலமாயிற்று. நாம் மட்டும் இப்போதும் அவர்கள் எமக்கொரு தீர்வைத் தருவார்கள் என்று நம்பிக் காத்திருக்கிறோம்.
  5. இவர் மகிந்த மற்றும் கோத்தாபயவின் நெருங்கிய நண்பராச்சே? இவரை இப்போது எதற்காக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லையே? அடுத்ததாக, இவரை புதிதாக ஒரு பதவியில் அண்மையில்த்தான் மைத்திரிபால அமர்த்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல், முன்னால் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை அமுல்ப்படுத்தவேண்டுமென்று மைத்திரியிடம் கோரிக்கை வைத்தவர்களின் இவர் முதன்மையானவர். அதற்கமைய, கோத்தாவின் அரசும் முன்னாள் ராணுவ புல்நாய்வுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்த மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை முன்வைத்திருக்கிறது. சிலவேளை இவரை எல்லா வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக நீதிமன்றிற்கு அழைத்திருக்கலாம்.
  6. சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் முயன்றவேளை, திமிறிய சேவல், அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 55 வயது வெங்கடேஷ்வர ராவோ மீது பாய்ந்ததில், அச்சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவரின் அடிவயிற்றைக் கிழித்திருக்கிறது. காயம் காரணமாக ஏற்பட்ட ரத்தப் பெருக்கினை அடுத்து அவர் அந்தவிடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். அதிகளவான மக்களைக் கவரும் இந்த சண்டைகளில் பெருமளவு பணம் ஈடுபடுத்தப்படுவதுடன், சூதும் இடம்பெற்று வருகிறது. https://www.9news.com.au/world/india-man-killed-by-blade-wielding-rooster-during-cockfight/a7e2baa9-aa3b-443a-ac03-c7860eb7b4cb
  7. இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.
  8. குமாரசாமி, நீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே? ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் !!!) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன். இல்லை, நான் அவற்றினை இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கிறேன்.
  9. ஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா? சரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்? காளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள். தமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா ? அந்த மிருகத்திற்கு இது தெரியுமா? ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று!!!!! சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே !
  10. ஒரு போர்க்குற்றவாளியினாலும், அவனது கொலைகாரத் தோழர்களாலும் ஆளப்படும் நாட்டில் கொலையாளிகள் என்று சிங்களத்தாலேயே நிரூபிக்கப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இறுதிப்போரில் தாம் எந்தப் பொதுமகனையும் கொல்லவில்லை என்று மறுக்கப்படுகிறது. சிங்களப் பேய்களின் ஆட்சியில் தமிழர் படப்போகும் பாடு மிகவும் பரிதாபமானது.
  11. எனக்கே தெரியாத காரணங்களுக்காக கனடா என்னைக் கவர்ந்து வைத்திருக்கிறது. ஆகவே, அங்கே எதுநடந்தாலும் அது என்னைப் பாதிக்கிறது. அப்பாவிகள் அநியாயமாகக் கொல்லப்பட்டமைக்காக எனது அனுதாபங்கள்.
  12. இந்தப் பயணிகள் விமானம் ஈரானின் தலைநகரிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஈரானின் ரஷ்ஷியத் தயாரிப்பு தோர் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. தாம் அமெரிக்கத் துருப்புக்களின்மேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியவேளை அமெரிக்க விமானங்கள் தம்மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் சாத்தியமிருப்பதால், தமது தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஆக்டிவாக ஈரான் வைத்திருக்கிறது. பயணிகள் விமானம் எது, போர்விமானம் எது என்று கண்டறியும் தொழிநுட்பம் ரஷ்ஷிய தோர் ஏவுகணைக்கு இருப்பினும்கூட, நேற்று அதனை இயக்கிய ராணுவ வல்லுனரின் அசட்டையினால் தமது தலைநகரிலிருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தை தானே சுட்டு வீழ்த்தியிருக்கிறது ஈரான். விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சில மணிநேரத்தில், அதனது தகவல் அடக்க கறுப்புப் பெட்டியை அமெரிக்காவிடமோ அல்லது விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடமோ கொடுக்கப்போவதில்லை என்று ஈரான் தடாலடியாக அறிவித்தபோதே இதில் தவறு நடந்திருக்கிறதென்று தெளிவாகியிருந்தது. அவ்வாறே, தனது செய்திச் சேவையில் இயந்திரக் கோளாறினால் விமானம் வீழ்ந்ததாக முதலில் தலைப்பிட்ட உக்ரேனின் அரசு, பின்னர் அத்தலைப்பினை திருத்தி சந்தேகமான முறையில் விமானம் வீழ்ந்திருக்கிறதென்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கேற்றாற்போல், பத்திரிகையாளரின் கேள்வியொன்றிற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இது சந்தேகத்திற்கிடமான நிகழ்வு, விமானம் இயந்திரக் கோளாறினால் வீழ்ந்ததென்பதை நாம் நம்பவில்லை என்று விமானம் வீழ்ந்த சிலமணி நேரங்களிலேயே கூறியிருந்தார். ஆக, ஈரான் தனது ராணுவ வீரப் பிரதாபங்களைக் காட்டுவதாக நினைத்து வெற்று ஏவுகணைகளை ஈராக் முழுதும் வீசியிருப்பதுடன், ஒரு பயணிகள் விமானத்தையும் சுட்டு வீழ்த்தி அப்பாவிகள் 176 பேரையும் கொன்றிருக்கிறது.
  13. ரதி, இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான் களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும். இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது. உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.
  14. இங்கே இருவிடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும். முதலாவது, சிட்னியில் இடம்பெற்ற புதுவருட வான வேடிக்கை. இது பலராலும் விவாதிக்கப்பட்ட ஒருவிடயம். நாடே காட்டுத்தீயில் அமிழ்ந்திருக்கும் நிலையில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும், ஏலவே இருக்கும் வெப்பமான காலநிலையை அதிகரிக்கும் வண்ணமும், முற்றான நெருப்புத் தடுத்தல் (complete fire ban) நிலையிலும், இக்கேளிக்கை நிகழ்வுக்குச் செலவாகும் சுமார் ஆறு மில்லியன் டாலர்களை தன்னார்வத் தீயணைப்பு படை வீரர்களுக்கு வழங்கக்கூடிய நிலையிருந்தும் எதற்காக இக்கேளிக்கை நிகழ்வினை நடத்த வேண்டும் என்று பலரும் கேள்வி கேட்டிருந்தனர். ஆனால், இந்த கேளிக்கை நிகழ்வு இடம்பெறும் இடம் கடலில் அல்லது நீர் நிலையொன்றிற்கு மிக அருகில் இருப்பதால் இந்நிகழ்வினால் ஏற்படக்கூடிய தீயினை இலகுவாக அணைத்துவிடமுடியும் என்றும், இந்நிகழ்வினால் அன்றிரவு மட்டும் நியு சவுத் வேல்ஸ் அரசிற்கு வரவிருக்கும் சுமார் 130 மில்லியன் வருவாயில் ஒரு பகுதியை தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கி உதவிடமுடியும் என்றும், வருடம்தோறும் நடைபெறும் இந்த முக்கிய கேளிக்கை நிகழ்வினை தடையின்றித் தொடர்வதன் மூலம் சுற்றியெரியும் தீயினால் சோர்வடைந்திருக்கும் மக்களுக்கு ஓர் தற்காலிக ஆறுதலை வழங்கமுடியும் என்கிற காரணங்களை முன்வைத்தே நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்ததாக ஆஸி பிரதமருக்கு தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த வரவேற்பு. ஸ்கொட் மொறிஸன் அரசு பதவியேற்றது முதல் பல்வேறான செலவீனங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்திவருகிறது. அதிலொன்றுதான் Rural Fire Services எனப்படும் நாட்டுப்புற தீயணைப்பு சேவைகளுக்கான வருடாந்த நிதியொதுக்கலில் இவர்கள் செய்த நிதிக்குறைப்பு. கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னர், இலையுதிர் காலத்தில் செய்யப்படும் ஆயத்தப்படுத்தல் நடவடிக்கையான Back burning ( காய்ந்துபோயிருக்கும் புற்களை சருகுகளை கட்டுப்பாடான வகையில் எரித்துவிடுவதன் மூலம் கோடைகாலத்தில் தீ பரவுவதைத் தடுக்கும் முறை இது) செய்வதற்கு நிதி போதாமையினால் தாம் ஆயத்த நடவடிக்கைகளை செய்ய முடியவில்லை என்று நியுசவுத் வேல்ஸ் மாநில RFS கமிஷனர் வெளிப்படையாகவே மத்திய அரசை விமர்சித்துவருகிறார். மேலும் உலக வெப்பமாதல் நிகழ்வினை ஒரு முற்றான அபத்தம் என்றும், அதற்காக தாம் நடவடிக்கை எதையுமே செய்யப்போவதில்லையென்றும் தொடர்ந்தும் விடாப்பிடியாக ஸ்கொட் மொறிஸன் அரசு கூறிவருவதும் மக்கள் இவர்மீது கொதிப்படைய மற்றொரு காரணம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவுஸ்த்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீ பற்றியெரிந்துகொண்டிருந்த நிலையில் ஸ்கொட் மொறிஸன் அவரது குடும்பத்துடன் ஹவாய் நாட்டிற்கு உல்லாசப் பயணம் ஒன்றினை மேற்கொண்டு சென்றது. மக்கள் தீயினால் அல்லற்பட்டு உயிர்களையும் உடமைகளையும் இழந்துகொண்டிருந்த நிலையில், நாட்டின் தலைவர் இவையெல்லாவற்றையும் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் தனதும் தன் குடும்பத்தினதும் உல்லாச விடுமுறை பற்றியே சிந்தித்துச் செயற்பட்ட விதம் அவரது ஆதரவாளர்கள் உற்பட பலரையும் சினம்கொள்ள வைத்திருந்தது. நாடு அவசரகால நிலைமையில் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தேவையான தலைமையைக் கொடுக்கால், தீயிலிருந்து தான் மட்டும் தப்பித்தால்ப் போதுமென்று ஹவாய்க் குளிரில் உல்லாசம் அனுபவித்ததை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆகவே, இவருக்கெதிரான விமர்சனத்தை வெறும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் கருத்தென்று ஒதுக்கிவிடுவது சரியல்ல. குறிப்பு : ஸ்கொட் மொறிசன் பதவியில் இருக்கும் லிபரல் கொன்ஸர்வேட்டிவ் கட்சியினர் பழமைவாதிகள் என்பதுடன், அகதிகளுக்கு எதிரான கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடிப்பபவர்கள். குறிப்பாக இலங்கை அகதிகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசிற்கு ரோந்துக் கப்பல்கள் மற்றும் பண உதவி என்று பல உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருபவர்கள். உலக வெப்பமாதலை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இக்கட்சி , தனக்கு முன்னிருந்த தொழிற்கட்சி கொண்டுவந்திருந்த உலக வெப்பமாதலைத் தடுக்கும் சிறப்புத் திடங்களையும் குப்பையில் தூக்கிக் கடாசியிருந்தது. முதலாளிகளின் கட்சியென்று பெயர்பெற்ற இக்கட்சி புதிய வரிகள், சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கல்களில் வெட்டு போன்றவற்றின் மூலம் திறைசேரியை நிரப்ப முயன்று வருகிறது.