Everything posted by ரஞ்சித்
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
வீட்டிலிருந்து கொண்டுவந்த தேங்காய்கள், அரிசி மற்றும் சில மரக்கறிகள் ஓரிரு வாரத்திலேயே தீர்ந்துவிட்டது. மீண்டும் போகலாம் என்று முடிவெடுத்தோம். அந்நாட்களில் வேறு சிலரும் கோண்டாவில் பகுதிகளில் தமது வீடுகளைப் பார்க்கப் போய்வருவது தெரிந்தது. ஆகவே, நாம் இரண்டாவது தடவையாகவும் எமது வீடு நோக்கிப் பயணமானோம். இம்முறை கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்ததைப்போலத் தெரிந்தது. ஆனால் இந்திய ராணுவத்தின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்தது. பலாலி வீதியின் ஓரத்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள். போய்வருவோர் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எம்மையும் அவர்கள் சோதித்தார்கள். எதற்காக வீடுகளுக்குச் செல்கிறோம் என்று கேட்கப்பட்டது. இன்னமும் சேதப்படாமல் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்று கூறினோம், அனுமதித்தார்கள். இம்முறை நாம் வீட்டை அடைந்தபோது பக்கத்து வீட்டில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அவ்வீட்டில் ஒருவரான பழனியண்ணாவும் இன்னுமொருவரும் நின்றிருந்தார்கள். வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளுக்கு முன்னைய நாளில் அவரைக் கண்டதற்கு இன்றுதான் அவரைக் காண்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழத் தொடங்கினார். எதற்காக அழுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் என்று நான் வினவியபோது அவர் . நடந்ததை விபரித்தார். அவர் விபரிக்க விபரிக்க அன்றிரவு நடந்த அகோரம் எனக்கு வெளிச்சமாகியது. எமது வீடுகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த நாளன்று பக்கத்து வீட்டில் எவருமே இல்லையென்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஏனென்றால், தாம் நல்லூருக்குப் போகப் போவதாக பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றதனால், அவர்கள் அங்கு இல்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனாலும் அன்றிரவு எமது வீட்டைக் கடந்து சென்ற இந்திய இராணுவம் பாமா அக்கா வீட்டினுள் நுழைந்தபோது கேட்ட அழுகுரல்களும் அதனைத் தொடர்ந்து கேட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் எனக்கு அங்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லிற்று. ஆனால் அங்கிருந்தோர் யார், எத்தனைபேர், அவர்களுக்கு என்ன நடந்ததது என்பதுபற்றி பழனியண்ணை சொல்லும்வரை எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் என்னுடன் பேசிவிட்டுச் சென்ற பாமா அக்காவின் குடும்பம் நல்லூருக்குப் போக ஆயத்தமாகியிருக்கிறது. ஆனால் செல்வீச்சுக் கடுமையாக நடக்க ஆரம்பித்ததையடுத்து, நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும் நல்லூருக்குச் செல்லலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் நள்ளிரவுவரை செல்த்தாக்குதல் குறையவில்லை. அதன்பின்னர் துப்பாக்கிச் சண்டைகள் ஆர்ம்பமாகிவிட்டிருந்தமையினால் அவர்கள் நல்லூருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். பாமா அக்காவின் வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் பேபி அக்காவின் வீட்டினரும் அன்றிரவு பாமா அக்காவின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களது வீட்டருகில் வந்தபோது, பாமா அக்காவின் வீட்டிற்கு முன்னால் அமைந்திருக்கும் புகையிலைகளுக்கு புகைபோடும் குடிலுக்குள் பாமா அக்கா, பேபியக்கா, குலம் அண்ணா, மற்றும் பேபியக்காவின் இரு சகோதரர்கள், பேபியக்காவின் தகப்பனார் என்று ஏழுபேர் அடைக்கலம் புகுந்திருக்க ஏனையோர் அனைவரும் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். முதலில் வீட்டினுள் நுழைந்த இராணுவம் சமயலறைப் புகைப்போக்கியின் கீழ் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களை யன்னலூடாகப் பார்த்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்போதே "ஐய்யோ, சுடாதேயுங்கோ" என்ற அழுகுரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் புகையிலைக் குடில்ப் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய இந்தியப் பேய்கள் உள்ளிருப்போரை வெளியே வரும்படி அழைத்திருக்கின்றன. தம்மை அவர்கள் கொல்லம்மாட்டார்கள் என்று நம்பிய குலம் அண்ணை முதலில் வெளியே வர அவரை வெட்டிச் சாய்த்தது இந்திய ராணுவம். அப்போதுதான், "ஐயோ, பிள்ளைகளை வெட்டாதேயுங்கோ" என்று பேபியக்காவின் தாயார் அலறியிருக்கிறார். குலம் அண்ணை கொல்லப்பட்டதைக் கண்ட ஏனையோர் தொடர்ந்தும் குடிலுக்குல் ஒளிந்திருக்க, அவர்கள்மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதோடு கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருக்கிறது இந்தியாவின் சாத்தான்படை. உள்ளிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு குடிலுடன் எரிக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டினுள் இன்னமும் பதுங்கியிருந்தோருக்கு வெளியே நடக்கும் அகோரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் எம்மை இழுத்துச் சென்றது போல அவர்களின் வீட்டினுள் மீதமாயிருந்தோரையும் இந்திய இராணுவம் இழுத்துச் சென்று துரத்திவிட்டிருக்கிறது. ஆகவே குடிலுக்குள் தஞ்சமடைந்திருந்தோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே குடும்பங்களின் ஏனையோர் நினைத்திருந்திருக்கின்றனர். சில வாரங்களின் பின்னர் பாமா அக்கா எமது குடும்பத்துடன் நல்லூர்க் கோயிலில் காணப்பட்டதாக அவரது குடும்பத்திடம் யாரோ கூறிவிட அவர்கள் எம்மை பல வாரங்களாகத் தேடியிருக்கிறார்கள். எம்முடன் பாமா அக்கா இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் வேறோடு அறுத்துவிட்ட சம்பவம் நாம் இரண்டாவது தடவையாக வீடுகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு நடந்தது. பாமா அக்காவின் மாமனாரான பழனியண்ணாவும் அவரது உறவினர் ஒருவரும் எம்மைப்போலவே தமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கின்றனர். முதலில் வீட்டினுள் சென்று அழிவுகளை நோட்டம்விட்டு விட்டு, பின்னர் புகையிலைக் குடிலுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடுந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உள்ளே பாதி எரிந்த நிலையில் ஏழு சடலங்களை அவர்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்தது யாரென்பது ஓரளவிற்குத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு. அங்கு கிடந்த ஏழு சடலங்களுல் ஒன்று பாமா அக்காவினுடையது. அவர் அணிந்திருந்த மோதிரமும், அவர் தலையில் குத்தியிருந்த இரும்பிலான கிளிப்பும் அவரை அடையாளம் காட்டின. அங்கிருந்த மற்றைய பெண்ணின் சடலம் பேபி அக்காவுடையது. பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவரது ஆடைமூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார் பழனியண்ணை. அவர்களைத் தவிர மீதமாயிருந்த நால்வரும் குலம் அண்ணை, பேபியக்காவின் தந்தை மற்று பேபியக்காவின் இரு சகோதரர்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பாமா அக்கா உயிருடன், எம்முடன் இருக்கிறார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அன்று காலையுடன் அற்றுப்போனபோதே அவரை துக்கம் ஆட்கொண்டது. அதனாலேயே என்னைக் கண்டவுடன் அவர் அழத் தொடங்கினார். அன்று அவரும் அவரது உறவினரும் எமது ஒழுங்கையினுள் காணப்பட்ட சடலங்கள் அல்லது எலும்புக் கூடுகளை ஒரு குவியலாகப் போட்டு எரித்தார்கள். அவர்களது உறவினர்கள் ஏழுபேருடையவை தவிர்ந்த இன்னும் இருபது மனித எச்சங்களை அவர்கள் ஒழுங்கையின் அருகிலிருந்து தூக்கிவந்தார்கள். உடைந்த தளபாடங்கள், மரங்கள் , சருகுகள் கொண்டு நாம் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளைச் செய்தோம். எமது ஒழுங்கையில் மட்டுமே கொல்லப்பட்ட எம்மக்களின் எண்ணிக்கை 27.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்டமிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கோண்டாவில்ச் சந்தியில் இருந்து வலதுபுறம் திரும்பி, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் சனநடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்பகுதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடித்த அடையாளங்கள் தெரிந்தன. ஆனாலும் சில வீடுகளில் மக்கள் இருந்தார்கள். எம்மைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்குள் அழைத்துச் சென்று உண்ண உணவும் நீரும் கொடுத்தார்கள். எமக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்தது. முடிந்தவரையில் அவர்களிடம் கூறிவிட்டு எம் வழியே நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எம்மைப்போன்றே வெளியேற்றப்பட்ட இன்னும் பலர். எல்லோரது பயணமும் நல்லூர்க் கோயிலை நோக்கியெ அமைந்திருந்தது. நல்லூர்க் கோயிலை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிந்தது. மேலும் பலருக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடிணமானதாகப் பட்டதனால், உறவினர்கள் வீடுகள் இருந்தால் அங்கே செல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். தகப்பனாரின் சகோதரர் ஒருவர் கொய்யாத்தோட்டத்தில் வசித்து வந்தார். ஆகவே அங்கே போகலாம் என்று எண்ணி தொடர்ந்து நடந்தோம். நாம் கொய்யத்தோட்டத்தை அடைந்தபோது கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி அவர்கள் ஓரளவிற்கு ஏற்கனவே அறிந்து இருந்தமையினால் எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். சில நாட்கள் அங்கு தங்கலாம், பின்னர் நிலைமையினை அவதானித்து முடிவெடுக்கலாம் என்று தங்கினோம். ஒருவாரம் தங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். அங்கும் செல்த்தாக்குதல்கள் கடுமையாக நடத்தப்படத் தொடங்கின. இடைவிடாது பெய்த மழையினால் கொய்யத்தோட்டம், குருநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போட்டுவிட, மக்கள் தஞ்சம் அடைவதற்குத் தன்னும் இடமின்றி அங்கலாய்த்தபடி இருந்தார்கள். இடைவிடாத மழையினூடே செல்த்தாக்குதல்கள் உச்சம் பெறத் தொடங்கின. யாழ்நகர் நோக்கி மிகக் கடுமையான செல்த்தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியது. கொய்யத்தோட்டம், சுண்டுக்குளி, ஈச்சமொட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக செல்கள் வந்து விழத் தொடங்கின. பல மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மதியமளவில் சற்று ஓய்வுக்கு வரும். அந்த ஓய்வு வேளையினைப் பாவித்து வீதிகளில் இறந்தும் காயப்பட்டும் கிடந்தவர்களை ஊர்மக்கள் எடுத்து வந்தார்கள். கொய்யத்தோட்டத்திலிருந்து ஈச்சமொட்டை செல்லும் வழியில் கொல்லப்பட்ட சுமார் 8 பொதுமக்களின் உடல்களை மாட்டு வண்டியில் கிடத்தி தென்னை ஓலைகளால் போர்த்திக்கொண்டு வந்தார்கள். மழை நீரில் முற்றாக நனைந்திருந்த உடல்களில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மட்டு வண்டிகளில் உடல்கள் நாம் தங்கியிருந்த வீட்டின் முன்னால் எடுத்துச் செல்வதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். பழைய பூங்கா வீதியிலிருந்து பாசையூர் நோக்கிச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் ஓரத்தில் சரிந்துகிடக்க அதில் பயணம் செய்தவர் உடல் கடுமையாகச் சேதமாக்கப்பட்டு மழிநீரில் நனைந்தபடி இருந்தது. இப்படியே அப்பகுதியெங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் நாமிருந்த வீட்டுப் பகுதியின் சுற்றத்திலும் செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கவே கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்த்து ராசா ஆலயத்தில் அகதிமுகாம் ஒன்றினை அமைத்திருக்கிறார்கள், அங்கு சென்றால் தப்பித்துக்கொள்ளலாம் என்று யாரோ சொல்லவே, இருள் சூழ்ந்திருந்த பொழுதொன்றில் அங்கு சென்று அடைக்கலமானோம். ஆனால் அங்கு நாமிருந்த சில மணிநேரத்திலேயே மிகக் கொடூரமான செல்த்தாக்குதலை இந்திய ராணுவம் அப்பகுதி மீது நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடியிருந்த கூட்டம் ஒப்பாரி வைக்குமாற்போல் கூக்குரலிட்டு அழத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்கிற எம்மை ஆட்கொண்டது. இனி இங்கே இருந்தால் நிச்சயம் கொல்லப்படுவோம், வேறு எங்காவது சென்றாக வேண்டும் என்று பலர் பேசத் தொடங்கினர். புதிதாக அப்பகுதிக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூறத்தொடங்கிய கதைகளைக் கேட்டபோது இந்திய ராணுவம் மிகப்பெரும் படுகொலை ஒன்றினை நடத்தவே யாழ்நகர் நோக்கி முன்னேறி வருவது என்று பலர் பேசத் தொடங்கினர்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் மதியம் 12 மணியிருக்கலாம். இந்திய இராணுவம் கோண்டாவில்ச் சந்தி நோக்கி முன்னகர ஆரம்பித்தது. முருகேசுவின் தேநீர்க் கடையினை அடுத்துவரும் தோட்டவெளியினை அவர்களது தாங்கி அண்மித்தவேளை புலிகள் தாக்கத் தொடங்கினார்கள். கடுமையான தாக்குதலையடுத்து இந்திய ராணுவத்தின் தாங்கி பின்னால் வர ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் பொதுமக்களை இரு வரிசைகளில் வீதியின் இருமருங்கிலும் நிற்கும்படி கட்டளையிட்டான் இந்திய படைப்பிரிவின் தளபதிபோன்று காட்சியளித்த ஒருவன். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சுமார் 50 இல் இருந்து 60 வரையான பொதுமக்களை அவர்கள் வீதியின் இருபுறமும் வரிசையாக நிற்கக் கூறிவிட்டு எமக்குப் பின்னால் அவர்களின் தாங்கி நின்று கொண்டது. தாங்கியின் மேல் அமர்ந்திருந்தவன் எம்மை கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கும்படி சத்தமிட்டான். வேறு வழியின்றி நடக்கத் தொடங்கினோம். புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே எம்மை மனிதக் கேடயங்களாக இந்திய இராணுவம் பாவிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டோம். ஆனாலும் வேறு வழியில்லை. முன்னால்ப் போனால் சண்டையில் அகப்பட்டு மடிவோம், போகமாட்டோம் என்று மறுத்தால் பின்னாலிருந்து இந்திய இராணுவம் எம்மைச் சுட்டுக் கொல்லும். ஆகவே வேறு வழியின்றி கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வமாஸ் பகுதி கடந்து, மதகடி வரும்வரை நடந்திருப்போம். நில்லுங்கள் என்று பின்னாலிருந்து கட்டளை வந்தது. தாங்கியும் எமக்குப் பின்னால் நின்றிருக்க, அதனைச் சூழ இந்திய இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தின் பின்னர் எம்மை மீளவும் நடக்கச் சொன்னார்கள். ஆனால் எம்மைப் பின் தொடர்ந்து இம்முறை அவர்கள் வரவில்லை. வாமாஸ் பகுதியுடன் தாங்கி நின்றுவிட்டது. இந்தியத் தாங்கி நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்தில் இருந்த வீடுகளின் மதில்களுக்கிடையே புலி வீரர்கள் நின்றிருந்தார்கள். கைகளில் ஆர் பி ஜி. முகத்தில் அச்சமில்லை. வீதியில் நின்ற இந்தியத் தாங்கியே அவ்வீரனது இலக்கு என்பது தெரிந்தது. தன்பக்கம் திரும்பிப் பார்க்காது தொடர்ந்து நடக்குமாறு அவர் கைகளால் சைகை செய்தார். நாம் அப்படியே செய்தோம். அவரைப்போலவே இன்னும் சில புலி வீரர்கள் அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்தார்கள். நாம் கோண்டாவில்ச் சந்தியை அடைந்தபோது அங்கிருந்த புலிகளின் ஒரு அணியினர் எமக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். தவறாது இந்திய இராணுவத்தின் விபரங்கள் குறித்தும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட விடயங்களைக் கூறிவிட்டு, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கண்களில் கொலை வெறி கொப்பளிக்க அவர்கள் அப்பகுதியெங்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தம்பியின் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, "வீட்டிற்குள் போ, நீங்கள மறைத்துவைத்திருக்கும் ஆயுதங்களை எங்களுக்குக் காட்டு" என்று அதட்டினான். தகப்பானரையும், சிற்றன்னையையும் என்னையும் தலையில் கைகளை வைத்தபடி முழங்காலில் இருக்கவைத்துவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்கள் சில இராணுவத்தினர். முதல் நாள் எமது வீட்டிற்கு அருகில் வீழ்ந்து வெடித்த செல்களின் துகள்கள், சில வெற்று ரவைக்கூடுகள் என்று சிலவற்றை அலுமாரியினுள் ஒளித்து வைத்திருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அடக் கடவுளே, அவற்றைக் காணப்போகிறார்கள், அவைதான் ஆயுதங்கள் என்று கூறிக்கொண்டே எம்மைத் தாக்கப்போகிறார்கள் என்று அச்சப்படத் தொடங்கினேன்.நான் நினைத்தவாறே நாம் ஒளித்துவைத்திருந்த செல்த் துகள்களையும், வெற்று ரவைக் கூடுகளையும் அவர்கள் கண்டார்கள். நான் நினைத்தவாறே அவற்றை எங்கிருந்து எடுத்துவந்தீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்கள். வீட்டினருகில் வீழ்ந்தவற்றைத்தான் எடுத்துவைத்தோம் என்று நாம் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. மறுபடியும் தாக்கத் தொடங்கினார்கள். தமது ஆத்திரம் அடங்கியதும் வரிசையில் எம்மை நிற்கவைத்து, அப்பகுதியில் தாம் கண்டுபிடித்து இழுத்துவந்த இன்னும் சிலரையும் எம்முடன் சேர்ந்து பலாலி வீதி நோக்கி நடக்கச் சொன்னார்கள். ஒழுங்கை வழியே நடந்துகொண்டு இருபுறமும் பார்க்கத் தொடங்கினேன். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இரத்தக் காயங்களுடன் தெரிந்த கால்கள் இரண்டு, உடலைக் காணவில்லை. சில மீட்டர்கள் தூரத்தில் உயிரற்றுக் கிடந்த வயோதிபர் ஒருவரது உடல். முகம் முழுதும் இரத்தத்தினால் தோய்ந்திருக்க கடுமையாகக் காயங்களுக்கு அவர் உள்ளாகியிருக்கிறார் என்று தெரிந்தது. பலாலி வீதியை அடைந்த போது அப்பகுதியெங்கும் அன்றிரவு முழுவதும் காந்தியின் பேய்கள் ஆடியிருந்த நரவேட்டை தெளிவாகத் தெரிந்தது. பலாலி வீதியினை அப்பேய்களது தாங்கிகள் உழுது வைத்திருக்க, தெருவோரக் கடைகள் இடிந்துபோய் தரைமட்டமாகியிருக்க அப்பகுதியே சுடுகாடுபோலக் காட்சியளித்தது. பலாலி வீதியின் ஓரத்தின் அமைந்திருந்த சைக்கிள் திருத்தும் கிளியண்ணையின் கடையின் முன்னால் ஏற்கனவே சிலரை இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து எம்மையும் சுவரைப் பார்த்தபடி நிற்குமாறு பணித்தார்கள். கோண்டாவில் டிப்போ அருகில் இந்திய ராணுவத்தின் முன்னரங்கு அமைந்திருக்க, அப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்கள் தொலைவில், வாமாஸ் பகுதியில் புலிகளின் நிலைகள் அமைந்திருந்தன. பலாலி வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த தாங்கியிலிருந்து 50 கலிபர் துப்பாக்கியினால் புலிகளின் நிலைகள் நோக்கித் தொடர்ச்சியாகத் தாக்கிக்கொண்டிருந்தது இந்திய ராணுவம். நாம் நிற்கவைக்கப்பட்ட கடையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலேயே தாங்கி நிலையெடுத்திருந்தது. இடையிடையே இந்தியத் தாங்கியை நோக்கி புலிகளும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். தாங்கியில் பட்டுத் தெறித்த சன்னங்கள் எமக்கருகிலும் வந்து வீழ்ந்தன. இவ்வாறான ஒரு தாக்குதலில் புலிகள் ஆர் பி ஜி உந்துகணையினால் தாக்கியிருக்கவேண்டும், தாங்கி தப்பித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இந்திய ராணுவம் நாம் நிற்கவைக்கப்பட்டிருந்த கடையினை நோக்கி தாங்கியின் பீரங்கியினால் தாக்கியது. கடையின் மேற்பகுதிச் சீமேந்துக் கூரை இடிந்து எம்மீது வீழ்ந்தது. அங்கே நின்றிருந்த பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. தம்பியின் நெற்றியில் சீமேந்து கிழித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எம்மைக் கொல்லப்போகிறார்கள் என்று எண்ணி அலறத் தொடங்கினோம். ஆனால் அவர்களோ எம்மைப் பார்த்துச் சிரித்து எக்காளமிட்டார்கள். காயப்பட்டு கீழே குருதி சொட்டக் கிடந்த பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. எம்மை நோக்கித் தாக்குதல் நடத்தியதே அவர்கள் தான் என்கிறபோது எம்மைக் காப்பாற்ற வேண்டிய தேவையென்ன அவர்களுக்கு? தம்பியின் நெற்றியில் இருந்து வழிந்துகொண்டிருந்த குருதியைக் கட்டுப்படுத்த தனது சட்டையின் கைப்பகுதியைக் கிழித்து தகப்பனார் கட்டுப்போட்டார். இரத்தம் ஓடுவது குறைந்தபோதிலும், முழுதுமாக நிற்கவில்லை. அவன் களைத்துப் போய் மயங்கிவிட்டான். அவனது உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதென்று ஒருகணம் நாம் அச்சப்பட்டோம். அவனைப்போலவே இன்னும் சிலரும் இரத்தவெள்ளத்தில் கீழே மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஒருசிலர் இறந்தும் இருக்கலாம். ஆனால் யாரும் யாரையும் காப்பற்றும் நிலையில் இருக்கவில்லை. தமது உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அருகில் இருப்பவர் பற்றி எவரும் அதிகம் சிந்திக்கவில்லை. சில மணித்துளிகள் அப்படியே கழிந்துவிட அப்பகுதியெங்கும் இருந்து அங்கு இழுத்துவரப்பட்ட இன்னும் 30 முதல் 40 வரையான பொதுமக்களும் எம்முடன் இணைந்துகொண்டார்கள். உரும்பிராய் தெற்கு, அன்னுங்கை, டிப்போவிற்குப் பின்புறமாக அமைந்திருந்த குடியிருப்புக்கள் என்று பல பகுதிகளில் இந்திய இராணுவத்திடம் மாட்டுப்பட்ட பொதுமக்கள் அவர்கள். ஆண்களை நிற்கவைத்துவிட்டு பெண்களையும் சிறுவர்களையும் அப்போது இருக்கவைத்தது இந்திய இராணுவம். எமக்குள் நாம் பேசத் தொடங்கினோம். அன்று காலை முழுவதும் தாம் கண்ட அகோரங்களை சிலர் வர்ணிக்கத் தொடங்கினார்கள். இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு கத்திகளால் தமது உறவினர்களை வெட்டிக் கொன்றதாகவும், வயது வேறுபாடின்றி சுட்டுப் படுகொலை செய்ததாகவும் அவர்கள் பேசினார்கள். பாமா அக்கா வீட்டில் , "ஐயோ எங்களை வெட்டாதையுங்கோ " என்று யாரோ மன்றாடி அழுதது நினைவிற்கு வந்தது. வீதிகளில் கொல்லப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை நாய்கள் இழுத்துச் சென்று உண்டதைத் தாம் கண்டதாக ஒரு பெண்மணி கூறினார். இப்படிப் பலர் தமது அனுபவங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுதுவரை எமது அயல் வீட்டில் அன்றிரவு நடத்தப்பட்ட அகோரத்தை நாம் அறிந்திருக்கவில்லை. சுமார் 3 மாத காலத்தின் பின்னரே அப்படுகொலை குறித்த மொத்தமும் எமக்குத் தெரியவந்தது. அதுகுறித்து பின்வரும் பகுதியில் எழுதுகிறேன்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தபடி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
பிச்சைக்காரன் புண்ணைப்போல இன்றளவும் இதனைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீளவும் அங்கு குடியேறுவதை இன்று தடுப்பது யார்? புலிகளா அல்லது தமிழர்களா? தாம் தமது சொந்த இடங்களில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்குமிடத்து அவற்றைக் காட்டி மீளவும் அங்கு வாழ்வதில் உள்ள சிக்கல் என்ன? இதனை யார் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெருமளவு முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், வவுனியாவிலும் தற்போது வாழ்ந்து வரும்போது மீதமிருப்போர் மீளவும் தமது பகுதிகளில் வந்து வாழ்வதைத் தடுப்பது யார்? அல்லது புலிகள் மீது ஏதோ ஒரு விடயம் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டே ஆகவேண்டும் எனும் காரணத்திற்காக இப்பிரச்சினை இன்றுவரை எழுப்பப்பட்டு வருகிறதா? ஆம், புலிகள் வெளியேற்றினார்கள், தவறுதான், இன்று அவர்கள் இல்லை, தாராளமாகவே வந்து வாழலாமே? அதை விடுத்து அதே பல்லவியை ஆளுக்கொருவராக இன்றுவரை ஏன் மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள், வந்து வாழுங்கள், எவர் உங்களைத் தடுப்பது?
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு
எதாவது கொடுக்கல் வாங்கலில பிரச்சனையாயிருக்கும், விடுங்கோ. உவர் தொடங்குற கட்சி கருணாவுக்கு எதிரானதே ஒழிய மக்களுக்கானது அல்ல. ஆகவே தமிழர்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதுசரி 2024 வரை கருணா நல்லவராக இருந்தவரா, இப்ப இவர் பிரிஞ்சு வாறதுக்கு?
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
பார்த்திருக்கலாம், ஆனால் தற்போது நினைவில் இல்லை.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ஆம், அவரேதான். கொழும்பு பல்கலையில் மருத்துவம் கற்று இன்று அவுஸ்த்திரேலியா மெல்பேர்னில் தனியார் மருத்துவ நிலையமொன்றினை நடத்தி வருகிறார். எப்போதாவது தொலைபேசியில் பேசுவோம். ஆனால் அதே நட்பு இன்னமும் தொடர்கிறது.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்டதுபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது. ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரியே நடத்தப்பட்டது. ரணிலுக்கும் தலைவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இடைக்கால நிர்வாக சபை, சமாதானத்திற்கான யுத்த நிறுத்தம் என்று அனைத்தையும் சந்திரிக்காவோடும் தெற்கின் தீவிர இனவாதிகளுடனும் சேர்ந்து எதிர்த்ததே இதே அநுரவின் கட்சிதான். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிரித்துப் போட்டதே அநுரவின் கட்சிதான். மகிந்தவின் போர்முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வந்து, தெற்கின் இனவாதத் தீயினை அணையாது வளர்த்து, தனது ஆதரவாளர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு உதவி புரிந்து, தமிழர்களின் விடுதலை நம்பிக்கையினை நிரந்தரமாகவே அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டதும் அதே அநுரவின் கட்சிதான். போர்க்குற்றங்கள் நடக்கவில்லை, இனக்கொலை என்றே ஒன்று இல்லை, கொல்லப்பட்டதெல்லாம் பயங்கரவாதிகள் என்று இன்றும் நியாயம் கற்பிப்பதும், எமது இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணை என்பதை ஏற்கமாட்டோம், வடக்குக் கிழக்கும் இணைய முடியாது, இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே, இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றும் கூறுவதும் அநுரவின் கட்சிதான். அவரது அரசு இன்று செய்வது ஊழல்வாதிகளை மக்கள் முன் காட்டி, அரசியலில் தமது எதிரிகளை பலவீனப்படுத்துவதும் , தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை உறுதிசெய்துகொள்வதும்தான். அநுரவிற்குக் காவடி தூக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவர் முன்வைக்கவிருக்கும் தமிழருக்கான தீர்வு என்னவென்பதை அவரிடம் எப்போது கேட்கப் போகிறார்கள்? வடக்குக் கிழக்கு இணைப்பு எனும் பேச்சிற்கே இடமில்லை என்று அவர் அடிமடியில் கை வைத்திருக்கும் நிலையில் அவரைத் தமிழர்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? தெற்கின் ஊழல்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் என்ன? அல்லது தெற்கினை தூய்மைப்படுத்திவிட்ட உடனேயே தமிழருக்கான தீர்வைத் தரப்போகிறேன் என்று அநுர எங்காவது சொன்னாரா? இரத்திணச் சுருக்கம்!
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
விஜையின் அரசியல் வரவு நாம் தமிழர் கட்சியினரை வெகுவாகக் கலவரப்பட வைத்திருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. விஜையின் கூட்டங்களுக்குக் கூடியவர்களை அணில்க் குஞ்சுகள் என்று அழைக்கும் அளவிற்கு நாம் தமிழர் கட்சியினர் இறங்கியிருந்தனர். கரூர்வரை கடுமையாக விமர்சித்துவந்த நா த க வினர், கரூரின் பின்னர் தி முக வினர் செய்யவேண்டியதை தாமே செய்யத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணுமளவிற்கு மிகவும் வெளிப்படையாகவே தமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கரூர் மரணங்களை வைத்து விஜையை அரசியலில் இருந்து அகற்ற தி மு க நினைக்கிறதோ இல்லையோ, நா த க நிச்சயமாக முயன்று வருகிறது. எமது இனக்கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த காங்கிரஸ் / தி மு க கூட்டணியினை வீழ்த்த விஜை தனியாகவோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வருவதை முழுவதுமாக வரவேற்கிறேன். சீமான் செய்யவேண்டிய ஒரு விடயம், ஆனால் அவரால் ஒருபோதுமே அதனைச் செய்ய முடியாது, விஜையினால் அது சாத்தியப்படுமானால் நிச்சயம் வரவேற்பேன். கொலைகார காங்கிரஸ் / தி மு க கூட்டணி அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.
-
"காஸாவில் உள்நாட்டுப் போருக்கான சிறந்த சூழல்" - 7,000 வீரர்களுக்கு ஹமாஸ் அவசர அழைப்பு
இஸ்ரேலுடனான போரின்போது இஸ்ரேலுக்கு உதவினார்கள் என்கிற காரணத்திற்காக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்த்தீனர்களை ஹமாஸ் கைதுசெய்திருக்கிறது. இவர்களுள் பலர் மக்கள் முன்பாக மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மேலும் இன்று ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்பானது இஸ்ரேலினால் வளர்க்கப்பட்டு வரும் சமூக விரோத அமைப்பென்று ஹமாஸும், ஹமாஸிற்குச் சார்பான அல் ஜஸீரா போன்ற செய்தி அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றுள் உண்மை இருக்கலாம். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவ்வினத்தின் போரிடும் வலுவை முற்றாக அழித்து, அடிமைப்படுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கைவந்த கலை. எமது சரித்திரமே அதற்குச் சாட்சி.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளுக்கு இனி வேலை இருக்காது போலத் தெரிகிறது. இவ்வளவு நாளும் என்ன வேலை பார்த்தார்கள் என்று கேட்டுத் தொலைக்க வேண்டாம். சுமன், கஜன், சிறி, வைத்தியர் எல்லாரும்தான். ஒரு பிரயோஜனமும் இல்லையே? அநுர செய்கிற விடயங்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், எதிர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. கட்சியில் இருந்து விலக்குகிறவர்கள் விலக்கி, நீக்குபவர்கள் நீக்கி, மீதியாய் இருப்பவர்கள் தாமும் எப்போது கடையை மூடுகிறோம் என்று ஒரு முடிவிற்கு வருவதற்குள், அநுர மீண்டும் ஒருமுறை வென்றிருப்பார். சீமான், அவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பேசுவதைக் கேட்கலாம். அதற்கப்பால் எதுவுமில்லை என்னைப்பொறுத்தவரை. தமிழ்நாட்டு மக்களுக்கு அவரை ஆட்சியில் ஏற்ற இதுவரை மனம் வரவில்லை. அது அவர்களுக்குத்தான் தெரியும். எமது பிரச்சினையில்லை.
-
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்
காசாவிற்கான் விடிவு காலம் அண்மிப்பதாகவே தெரிகிறது. ஹமாசின் பயங்கவரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அதற்குப் பதிலடி வழங்குகிறேன், பணையக் கைதிகளை மீட்கப்போகிறேன் என்கிற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்பு சர்வதேசத்தில் கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்து வருகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு 600 பாரவூர்திகள் என்று கணக்கிடப்பட்டிருக்கையில் வெறும் 80 பாரவூர்திகளையே இஸ்ரேலிய அரசு அனுமதித்து வருகிறது. அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் பாரவூர்திகளை சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களும் அவ்வபோது மறித்து வருகிறார்கள். ஆக, மிகவும் திட்டமிட்ட வகையில் பட்டிணிச்சாவொன்று இஸ்ரேலினால் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு பத்திற்கும் மேலான பலஸ்த்தீனர்கள், குறிப்பாகக் குழந்தைகள் பட்டினியினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அவலங்களே சர்வதேசத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. இதன் ஒரு அங்கமே பலஸ்த்தீனத் தேசத்தினை அங்கீகரிப்பது எனும் முடிவு. இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அழிவுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அவலங்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச அங்கீகாரமோ அல்லது யுத்த நிறுத்தமோ இல்லாது எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளும், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளும், நிவாரணப் பொருட்களும் இந்தியாவின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டது. பலஸ்த்தீனத்திற்கான விடிவென்பது எமக்கான விடிவையும் தேடித்தரலாம். ஆகவே பலஸ்த்தீனத்திற்கான விடிவிற்காய் நாம் ஆதரவு கொடுப்பது எமக்கு நாமே உதவுவதாக அமையும் என்பது எனது எண்ணம்.
-
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
The World Socialist Web Site won the right to send its own correspondent to the scene of the excavation of mass graves of victims of Sri Lankan military butchery under the Peoples Alliance regime of President Chandrika Kumaratunga. Priyadarshana Maddawatta of the WSWS was one among 40 journalists taken to Jaffna on Wednesday, June 16 by an air force plane. The trip was organised by the Sri Lankan Department of Information. This is an eyewitness account by Maddawatta. The day before we went to Jaffna, June 15, Somaratna Rajapaksa, who served in the North of Sri Lanka as a corporal in the army during 1995-96, when over 600 disappearances of Tamils took place, was flown to Jaffna under tight security. Rajapaksa claimed he could show the locations where the bodies of the disappeared were buried in mass graves Rajapaksa, 27 years old, disclosed the existence of mass graves in Chemmani from the dock of the Colombo High Court. He made the revelation after he was convicted and sentenced to death, along with four other members of the Sri Lankan army, for the rape and murder of a Tamil schoolgirl, Krishanthi Kumaraswamy. It was a case of multiple murder. When her mother learned that Krishanthi had been arrested at the army checkpoint on her way home from school, she rushed to the nearby army camp in search of her daughter. Krishanthi's mother, brother and a neighbour were murdered by the army the same evening. After the conviction, Rajapaksa said from the dock: “We did not kill anyone. We only buried bodies. We can show you where 300 to 400 bodies have been buried.” The area he described was Chemmani where he had served. Rajapaksa's statement in the High Court was made nearly a year ago in July 1998. But the People's Alliance (PA) regime, offering different reasons at different times, postponed an inquiry into the matter. Three magistrates appointed to conduct the inquiry refused to undertake responsibility, one after the other. This was due to “external pressure,” as they called it. This time a magistrate had to be flown from Mannar, about 150 miles south of Jaffna, which is now under virtual military rule, to supervise the excavations. In the week before his departure to Jaffna to point out the mass graves, Rajapaksa's family received continuous death threats, according to a complaint made by his wife to the police in the area. Obviously the military hierarchy, defended by the PA regime, did not want Rajapaksa to fulfil the commitment he made a year ago. Army corporal reveals torture and killings I saw Rajapaksa for the first time at the magistrate's court of Jaffna. His spat out furious denunciations of the army hierarchy, naming the personnel without restraint and accusing them in detail of the crimes they committed. He spent about an hour giving evidence in front of the magistrate, prior to his trip to show the mass graves. Although some signs of strain were visible on him, he confidently said: “I can show you how people were arrested in Ariyalai, tortured and buried.” Rajapaksa began his evidence by attesting: “I was at the Ariyalai army camp looking after civil administration. My job was to register family names and addresses and the names of the youths brought to the camp as suspected terrorists. We prepared two lists for this purpose. “Once I was given a list of names, whom Captain Lalith Hewa and Lieutenant Wijesiriwardena said were Tiger suspects. I was ordered to show the places where these people lived. I showed them the places, as I know the area very well. Thereafter a group of soldiers conducted cordon and search operations in those areas and arrested some youths. “Major Weerakkody and Major Gunasekara brought those people before two informants who were wearing masks, and the informants were asked to point out who the Tiger members were. The ones they identified were separated from the others. “Then these people, about 50 of them, were brought to a camp. Some were kept in a school building. The orders were given by Captain Lalith Hewa, Lieutenant. Wijesiriwardena and Lieutenant Thudugala. “One day they arrested the civil servant Selvaratnam, who worked at the educational department, and brought him to the camp. The next day his wife came and asked me if I had seen Selvaratnam. Although I did not know where Selvaratnam was held at the time, when I later went to the building which was used to torture people, Selvaratnam was among 25 others who were tortured there. Selvaratnam's legs were tied. He pleaded with me, saying he didn't have any Tiger connections. I asked Captain Hewa to release him. He agreed. But that same night he was killed. The next morning I saw 10 dead bodies there. “The next day another man, one Udayakumar, was arrested and brought to the camp. Later his family came and pleaded with me for his release. I went to Captain Jayawardena and asked him to release Udayakumar. That afternoon he was transferred to another camp. When I went there, the officers in charge of that camp got a radio message to release Udayakumar. By that time he was hanging from his feet inside the camp and his body was cut with razor blades. They could not release him in that condition. He was killed later by a bullet. I know the weapons they used to torture people, and I think even now I can show them to you in that building. “One day I was asked to bring a mammoty [type of spade] by Captain Lalith Hewa. When I took it to him he was with a woman who had no clothes on. This woman and her husband were brought to the camp earlier that day. Lalith Hewa had raped the woman and later attacked her and her husband with the mammoty I brought to him. Both of them died. Lalith Hewa tried to bury them there himself but he couldn't do it. Then the bodies were brought to Chemmani. I can show you where the bodies were buried. “I can show you 10 places in Chemmani where bodies are buried. The other four convicted with me can show another six places. Although I was accused of murdering Krishanthi Kumaraswamy, I did not do it. I was asked to bury her body. But at that time I didn't know that it was Krishanthi's body that I buried. “I know of two workers who worked as mechanics in a garage who were taken to the main camp and killed. I can show you the place where they were buried. “I offered to reveal these things because I am falsely convicted of the murder of Krishanthi Kumuraswamy. I did not kill her. My family and I have received several letters threatening that all of us will be destroyed if I did not withdraw the statement I made at the High Court trial. Those in the army, who committed these crimes, try to escape by accusing me of guilt. I make these statements not to betray my country or to discredit the army. I do this because of the injustice done to me. If the justice is not done to me by the judicial system of this country, I am prepared even to go before an international court to get the justice done,” Rajapaksa concluded. By the time the recording of Rajapaksa's evidence at the magistrate court was over it was late afternoon. What parents had to say When I came out of the magistrate's court, I saw more than a hundred people crying and weeping, about 150 yards away from the building, at the entrance of the pathway leading towards the courthouse. Armed soldiers were preventing them from reaching the court. I ran towards them to speak to them despite warnings not to do it. The Chairman of the Organisation of the Parents of the Disappeared, Paramanadan Selvarajah, explained to me in English what the mothers were crying about. “These mothers cannot bear the sorrow for the loss of their beloved sons and daughters. We all know that our loved ones are no more. We know that they won't come back to us. “We know that our children were not LTTE members. They were victims of this cruel war. They were taken away from us by the army before our own eyes. If the army did not bury them somewhere, where on earth are they now? We want to know what happened to them and tell the world about their fate.” By this time the soldiers rushed to me and again told me to get back to the bus, as it was being delayed waiting for me. The other journalists joined the chorus of soldiers. Those journalist colleagues were not interested in listening to these weeping people. They were interested only in capturing their sorrowful faces in their camera lenses. Then along with Rajapaksa, handcuffed to a prison officer, the journalists were taken in buses to Chemmani. The convoy stopped at the entrance to the salterate in Chemmani, which belongs to the government salt corporation, and Rajapaksa pointed out several places where he said bodies lay buried. It was clear that he was very well familiar with the site. But that day there was not much time to continue extensive diggings. The diggings were postponed till the next day. A larger crowd was at the Chemmani site waiting for the excavators to arrive. I was able to speak to some of them while the excavation was going on. I had to use the English to converse with these Tamil people. But those among them who understood English helped me record interviews in Tamil so that I could get them translated into Sinhala and English after getting back to Colombo. The father of one disappeared youth told me: “My son is Prabhakaran. When he was arrested, he was 23 years old. My son worked in a textile shop in Jaffna. When he was returning home from his work on his motor cycle, he had been arrested at the Chemmani army checkpoint. One of our family friends who had seen this informed me about the arrest on the same day. Without delay, on my bicycle, I rushed to the Ariyalai army camp. I saw the motor cycle of my son parked there. I inquired of the soldiers about my son. They said they never saw him. I pointed out to the motor cycle. They did not respond to that but insisted they did not have him in the camp. I also saw Rajapaksa inside the camp at that time.” (At this stage he broke down weeping.) Then I spoke to the Rector of St. Patrick College, Jaffna, Rev. N. Bernard, who is also the chairman of the Society for Justice and Peace in the peninsula. He said: “It is quite clear that violation of law has taken place here. The army has not acted responsibly, after they took over Jaffna from the LTTE. They have killed many innocent people, accusing them of LTTE connections. They could have allowed the law to take its course.” I pointed out to Rev. Bernard what the Major General in charge of Jaffna administration had said earlier in the day at the press conference held at Palaly airport. “He said that the people of Jaffna now have returned to normal life under the protection of the military. Is this true?” I asked. Rev. Bernard replied: “Before 1996, Jaffna was under LTTE control. What the Major calls the normal life for people in Jaffna may be the life under the horrors of war. Even today people live in great fear. Without an army permit, people cannot move about. They are in fear because they know that they could be arrested by the army at any time, accused of being an LTTE member or a supporter.” Then I spoke to the secretary of the Association for Peace and Friendship, Subramaniam Paramanadan. I inquired about the living conditions of the people of Jaffna. His reply was: “About 800,000 people lived in Jaffna before 1997. Now the population is less than 500,000. Social conditions here have deteriorated enormously. About two years ago, Dr. Selvarajah of Jaffna University published a research report on children of this region. In it he pointed out that one of every five children born in Jaffna dies before the age of five. According to a Red Cross report, over 58 percent of Jaffna's children suffer from malnutrition. Children born are underweight. These are the harsh realities of this war. “We supervise the rehabilitation programs conducted by the government. But we see this work is done by the regime having one foot firmly placed on the military and the war.” Everyday life in Jaffna I also asked an ordinary citizen about how people carry on with their daily lives. He said: “We receive a small ration from the government. Even for a family of five, this is not enough to have two meals a day for more than four days in a week. Most people starve. The prices of essential goods are at unreachable levels for most poor people. The prices go up daily. At least Rs. 7500 is needed as minimum monthly expenses of a family. But most workers cannot earn even half of that amount. “Because of the army permit system, people cannot move into other areas to get work. We are asked at the army checkpoints where we are going, whom we are going to meet, and so on. This prohibits us going in search of work,” he said. The next day, Thursday, June 17, after three hours digging started, forensic experts discovered earth that was different in colour and moisture from that of the surface bed of dry sand about three feet deep. Digging deeper, an hour later the excavators came upon the first sign of a human body, a knee covered with shreds of a trouser. And by Thursday afternoon there were clear answers. Two bodies had been uncovered at a depth of four feet. The two bodies were lying one on top of the other, with a wooden railway sleeper sandwiched between them. One skeleton had a rag that had been used as a blindfold, with the knot at the back of the head still intact. The hands of the other skeleton were tied. On Friday, June 18 morning, about 300 weeping relations gathered at the Jaffna police station to identify the bodies. It did not take long to identify those who had been murdered and buried. The skeletons were of those two men who worked as mechanics at Suppiah Ravi's garage. One was 29-year-old Rasiah Sathiskumar, the other 23 year-old Mahendran Babu. They had been arrested by the Sri Lankan military at Ariyalai on August 19, 1996. The two skeletons were identified by the garage owner Ravi and also by Shanthini, Sathiskumar's wife. This was clear corroborative evidence of what Rajapaksa had said at the magistrate's court. The excavations were abruptly suspended after the second day of digging until July 15. The nervousness of the PA regime about the revelations is quite evident. The policy of “war for peace” ties the regime more and more to the bootlaces of the military. Eyewitness account from Sri Lanka: Tamil mass graves excavated in Chemmani - World Socialist Web Site
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
இது மிகவும் அவசியமானது.
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?
ரஜீவின் மரணம் தொடர்பான இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிர்த்து இந்தியாவிலிருந்து எவருமே படம் ஒன்றினை எடுக்கமுடியும் என்று யாராவது நம்புகிறீர்களா? இன்றுவரை இந்தியாவும் அதன் ஊடகங்களும் கூறிவரும் ரஜீவின் மரணம் தொடர்பான கதைகளுக்கும் இப்படத்திற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? அல்லது இது எவ்விதத்தில் வேறுபடப் போகின்றது? இந்திய அரசின் தணிக்கைக் குழுவினைத் தாண்டி ஏதாவது உண்மைகளோ, ரஜீவின் மரணத்திற்கான உண்மையான காரணமோ, அல்லது ரஜீவ் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட படுகொலைகளோ இப்படத்தில் காட்டப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்றால், இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தினை நாம் கொண்டாடி மகிழவேண்டிய தேவை என்ன?