Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8707
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான். அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா? இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது.
  2. இடைக்கால நிர்வாக சபையினை வழங்குவதை எதிர்த்து இன்னுமொரு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி திங்கட்கிழமை, 11 ஆவணி 2003 புலிகளுக்கு வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவதை எதிர்த்தும், அந்நிய நாட்டுப்படைகளை இலங்கைக்குள் அமைதிகாக்கும் முயற்சிகளுக்காக வரவைக்கும் யோசனைகளை எதிர்த்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை செவ்வாயன்று நடத்த தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமாகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கொழும்பில் கூறினார். சுமார் 50,000 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். …………………………………………………………………………………………………… புலிகளுக்கு வடக்குக் கிழக்கினை தாரை வார்த்து நாட்டைக் காடிக் கொடுப்பதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது புதன்கிழமை, 20 ஆவணி, 2003 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ரணிலின் துரோகத்தை எதிர்த்து வடக்குக் கிழக்கு உட்பட, நாடளாவிய ரீதியில் பிரச்சாரப் போர் ஒன்றினை ஆரம்பிக்கவிருப்பதாக அதன் பிரச்சாரச் செயலாளர் விமர் வீரவன்ச கூறியுள்ளார். இதன்படி மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரச்சாரப் போர் காலியில் ஆரம்பிக்கும் என்றும், அதன் இறுதிப் பேரணி கொழும்பு லிப்ட்டன் சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். "இலங்கையை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் வடக்குக் கிழக்கைப் புலிகளுக்கும், தெற்கை வெளிநாடுகளுக்கும் ரணில் அரசு கொடுக்கவிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். ரணிலின் தவறான ஆலோசனைகளால் இலங்கை இராணுவம் போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்துவது இராணுவத்திற்குக் கடிணமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பங்காளிகளான வடக்குக் கிழக்கு சிங்களவர்கள் அமைப்பு சந்திரிக்காவுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் இந்தியாவை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குள் அழைக்கவேண்டும் என்றும், இந்திய கடற்படையின் உதவியுடன் புலிகளின் கடற்போக்குவரத்தை தடுத்து, இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.மேலும், வடக்குக் கிழக்கை உடனடியாகப் பிரிப்பதும், பொலீஸ் புலநாய்வாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டு வருவதைத் தடுப்பதும் உடனடித் தேவை என்றும் அவ்வமைப்புக் கூறியிருக்கிறது. ………………………………………………………………………………………… சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரி காலியில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி ஞாயிற்றுக்கிழமை, 24 ஆவணி 2003 பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரியும், புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் இலங்கையின் இறையாண்மையினையும், ஆட்புல ஒருமைப்பாட்டினையும் காத்திடக் கோரியும் காலியில் இருந்து கொழும்புவரை நான்கு நாட்கள் பாத யாத்திரையினை அதி தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடத்துகிறது. ஆட்சியில் இருக்கும் ரணிலின் அரசு கவிழ்க்கப்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது. ………………………………………………………………….. எனது கட்சியான மக்கள் கூட்டணி தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு ஆதரவு தருகிறது, ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக இருப்பதால் அவர்களுடன் பொது இணக்கப்பட்டிற்கு வர முடியவில்லை - சந்திரிக்கா செவ்வாய்க்கிழமை, 2 புரட்டதி 2003 சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி சந்திரிக்க, தனது கட்சி தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயாராக இருந்தபோதும், மக்கள் விடுதலை முன்னணி அதனைக் கடுமையாக எதிர்த்து வருவதால் அவர்களுடன் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவது கடிணமாகியிருக்கிறது என்று கூறினார். "ரணிலின் அரசைக் கவிழ்ப்பதில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து செயற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், புலிகளால் சீர்கெட்டுப்போயுள்ள பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்செய்து நாட்டைப் பாதுக்காக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்று அவர் மேலும் கூறினார். …………………………………………………………………………………. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து நின்றதனால் அக்கட்சிக்கும், சந்திரிக்காவின் கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன‌ சனிக்கிழமை, 6 புரட்டாதி 2003 ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்காக சந்திரிக்காவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நடத்திவந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. இதற்கான முக்கிய காரணமாக தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறும் அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியோ அதிகாரப் பகிர்வென்கிற பேச்சிற்கே இடமில்லை, ஒற்றையாட்சியின் கீழ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே தீர்வு அமையவேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதுகுறித்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "சர்வதேச அழுத்தத்திற்குப் பயந்தே சந்திரிக்கா அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறார். ஆனால் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் நாடு பாரிய அழிவை எதிர்நோக்கும்" என்று கூறினார். மேலும், தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு எனும் சுதந்திரக் கட்சியின் தலைமையின் முடிவினை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக எதிர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். ………………………………………………………………………………….. சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி இரண்டாவது பாதயாத்திரைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி வியாழ‌க்கிழமை, 11 புரட்டாதி 2003 ரணில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் காத்திடக் கோரி சிங்களத் தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இரண்டாவது - ஐந்து நாள் பாத யாத்திரைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. ரணில் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுக்களால் இலங்கையின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிக்கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதால் இப்பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நோர்வே அனுசரணையாளர்கள் உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபெறும் இந்த ஆர்ப்பட்ட பாத யாத்திரையில் சந்திரிக்காவின் கட்சியைச் சேர்ந்த 20 பா.உ க்களும் பங்கேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அநுர பண்டாரநாயக்க உட்பட பல சந்திரிக்காவின் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது, இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்படக் கூடாது, பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவை உதவிக்கு அழைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட கண்டியில் இருந்து கொழும்புவரையான இரண்டாவது ஐந்து நாள் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
  3. வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான முழு பிரச்சார யுத்தத்தினை முன்னெடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 29, ஆடி 2003 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக சபையொன்றினை உருவாக்கும் முயற்சிகளுக்கெதிராக முற்றான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கிறது. இடைக்கால நிர்வாக சபைக்கான அனுமதியென்பது நாட்டைத் துண்டாடுவதற்கான அனுமதியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆவணி 6 ஆம் திகதியிலிருந்து நாடுதழுவிய ரீதியில் இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடும் நடவடிக்கைகளில் மக்கள் விடுதலை முன்னணி இறங்கியிருக்கிறது. ஏனைய எதிர்க்கட்சிகள் சிங்கள மக்களை இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக அணிதிரட்டத் தவறியமையினாலேயே தமது கட்சி இதனைச் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை இயங்குமிடத்து, அது முழு நாட்டையும் சுக்குநூறாக உடைத்துவிடும் என்று அவர் சிங்கள மக்களை எச்சரித்தார். இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியினரும் இடைக்கால நிர்வாக சபையினை எதிர்த்து சிங்கள மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அக்கட்சி சார்பாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மைத்திரிபால சிறிசேன, மூன்று மாதங்களுக்குள் முழு நாட்டிலும் இக்கருத்தரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9529
  4. யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களை நாட்டிற்குத் திரும்பிப் போ என்று மிரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ஆதவாளர்கள் செவ்வாய்க்கிழமை, 15 ஆடி, 2003 திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் கூடிய மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அவர்களை நாட்டிற்குத் திரும்ப் போ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்காணிப்பாளர்களின் அலுவலகத்திற்கு பொலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். திருகோணமலை துறைமுக வீதி வழியே ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் கண்காணிப்பாளர்களின் அலுவலகத்தை அடைந்தது "புலிகளுக்கு உதவுகிறீர்கள், நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கோஷமிட்டனர். அதேவேளை திருகோணமலை நகரில் பேச்சுவார்த்தைகளைக் கண்டித்து பூரண கடையடைப்பைச் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டிருந்தபோதும் பல கடைகள் திறந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9437
  5. சமாதான முயற்சிகளுக்கெதிரான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் புதன்கிழமை, 25 ஆனி 2003 ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பேச்சுக்களுக்கெதிராக தொடர்ச்சியான போராட்டங்களை தீவிர இனவாத மாக்ஸிஸ்ட்டுக்களான மக்கள் விடுதலை முன்னணியினர் நாடெங்கிலும் நடத்தி வருகின்றனர். இதன் இன்னொரு கட்டமாக கொழும்பில் இன்று அக்கட்சி சுமார் 5000 ஆதரவாளர்களை இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ரணில் அரசைச் சாடியும், புலிகளை எதிர்த்தும் சுலோகங்களை பாடியதுடன் பதாதைகளையும் காவி வந்தனர். இன்று தமிழர்களால் "தலைவர்" என்று கொண்டாடப்படும் அதே இனவாதியான மக்கள் முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரச்சார மேடையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் மூன்றாவது பலமான கட்சியென்பதுடன், நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ச‌மாதானப் பேச்சுக்களுக்கெதிரான சிங்கள மக்களின் உணர்வினை கிளப்பி வருகின்றது. அத்துடன் தமிழர்களுக்கான தனிநாடொன்றினை உருவாக்கவே ரணில் அரசாங்கம் முயல்வதாகவும் அது திட்டமிட்ட பரப்புரை நடவடிக்கையொன்றினையும் நடத்திவருகின்றது. யுத்தத்தினால் அழிக்கப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கினை புணருத்தானம் செய்வதற்காக புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபைக் கட்டமைப்புக் கோரிக்கை என்பது சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு தனிநாட்டைத் தாரைவார்க்கும் கைங்கரியமே என்று அக்கட்சி கூறுகிறது. ஆகவே இன்றைய பேரணி வடக்குக் கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக சபையினை புலிகளிடம் வழங்காதே எனும் கோஷத்தினை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட்டது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9293
  6. புலிகளின் ஆயுதக் கப்பலை முல்லைத்தீவுக் கடலில் அழிக்க உத்தரவிட்டது நானே, ரணில் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது எப்படித் தவறாகும் ? சந்திரிக்கா திங்கள், 23, ஆனி, 2003 "இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டுவந்த கப்பலை அழிக்க உத்தரவிட்டேன்" என்று சந்திரிக்கா தனது கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். "புலிகள் இன்னொரு போருக்குத் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிந்திருந்தேன். எனது தளபதிகளுடனான அண்மைய கலந்தாலோசனைகளின்போது இது உண்மையென்று எனக்கு நிரூபணமானது. சமாதானப் பேச்சுக்கள் எனும் போர்வையினூடாக பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஆயுதங்களைக் கொண்டுவந்து குவிப்பதை ரணில் அரசு ஊக்குவிக்கிறது. இது இப்படியே நடந்துகொண்டுவருவதை என்னால் அனுமதிக்க முடியாது. ஆகவேதான் முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் கப்பல் வரும்போது எனது கடற்படையினை அனுப்பி அழிக்கச் செய்தேன்" என்று அவர் மேலும் கூறினார். "ரணிலின் அரசு புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியினருடன் கூட்டுச் சேர்வது எப்படித் தவறாக முடியும்?" என்றும் அவர் வினவினார். முல்லைத்தீவிற்கு அருகே நடுக்கடலில் அழிக்கப்பட்ட புலிகளின் கப்பல் குறித்து ரணில் அரசின் பாதுகாப்புச் செயலாளர் திலக் மாறப்பன கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படை தெரிவிக்கும் தகவல்களுக்கும் புலிகளின் தகவல்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் புலிகளின் கப்பலை முதன்முதலாக காலை 3:15 மணிக்கு கடற்படை கண்டுவிட்டதென்றும், தாக்குதல் 5 மணிக்கு நடத்தப்பட்டபோதும், காலை 7 மணிவரை தனக்கோ அல்லது கடற்படைத் தளபதிக்கோ இத்தாக்குதல் குறித்து, தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரோ, ஜனாதிபதி சந்திர்க்காவோ தெரிவிக்கவில்லையென்றும் அவர் கூறியிருந்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9273
  7. புலிகளுக்கு இடைக்கால நிர்வாக சபையினை வழங்காதே ‍- கொழும்பில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் 10,000 ஆதரவாளர்கள் வெள்ளி, 06 ஆனி 2003 தீவிர சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கொழும்பில் கூடிய 10,000 இற்கும் அதுஇகமான அக்கட்சியின் ஆதரவாளர்கள், தமிழர்களுக்கான இடைக்கால நிர்வாக சபையினை ரணிலின் அரசு வழங்கக் கூடாதென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பதாதைகளையும், ரணில் அரசைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் காவி வந்தனர். இப்பேரெணியில் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9147
  8. இடைக்கால நிர்வாக சபை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிக்கா கூட்டணி வெள்ளி, 30 வைகாசி 2003 டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு புலிகளின் பிரசன்னத்துடனோ அல்லது இன்றியோ நடைபெறுதல் அவசியம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறியிருக்கிறது. மேலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளூடாக எட்டப்பட்ட அரசியல்த் தீர்வு அமுல்ப்படுத்தப்பட்டால் அன்றி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படல் கூடாதென்றும், அப்படி உருவாக்கப்படும் சபை கூட சில நிபந்தனைகளுடன் தான் உருவாக்கப்பட முடியும் என்றும் அது கூறியிருக்கிறது. ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருங்கிய சகாவான மங்கள சமரவீர இதுகுறித்துப் பேசும்போது, இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுதலில் தமக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். முதலாவது புலிகள் அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட வேண்டும். மேலும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்குத் தடையாக இருக்கும் புலிகளின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை இரண்டிற்குமான புலிகளின் அரசியல்த்துறையின் எழுத்துமூல உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவது குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்கள், இடைக்கால நிர்வாக சபை ஆகியவற்றிற்கெதிரான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சந்திரிக்கா கட்சியினரின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பணித்துபோயுள்ள ரணில் அரசாங்கம்,நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இடைக்கால நிர்வாக சபையின் உருவாக்கத்தினை அனுமதிக்காது என்பதை புலிகளிடம் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9091
  9. இடைக்கால நிர்வாகத்தினை முறியடித்தே தீருவோம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை திங்கள், 26 வைகாசி 2003 புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்தை ரணில் அரசு வழங்க முற்படுமானால் அதனை முறியடித்தே தீருவோம் என்று தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்திருக்கிறது. செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பிற்கெதிராகச் சென்று புலிகளின் கோரிக்கையினை ரணில் அரசு நிறைவேற்றுமானால், அதனைத் தடுத்து நிறுத்த தனது கட்சி அனைத்து வழிகளிலும் போராடும் என்று கூறினார். வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவது, நாட்டைப் பிரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன் சிங்கள மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் நலன்களுக்கும் விரோதமானதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா, புலிகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக்கொடுக்கும் ரணில் அரசின் முடிவை முறியடித்து விடுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9072
  10. அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களை முறியடித்து, இந்தியாவின் ஸ்த்திரத்தனமையினைக் காப்பதற்காக யுத்த நிறுத்தம் முறியடிக்கப்பட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 8, வைகாசி 2003 அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைக் காக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவுமென்று உருவாக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது. நடந்துவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி, புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருகின்றன. தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதை முற்றாக எதிர்த்துவரும் இக்கட்சி, இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே என்றும் கூறிவருகிறது. மேலும் தமது கட்சியின் கீழ் உருவாக்கப்படும் சோசலிஸ் அரசே இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்றும் அது கூறுகிறது. சரித்திர ரீதியில் தீவிர இந்திய எதிர்ப்புவாதக் கட்சியாக அறியப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் திடீர் இந்திய விசுவாசம், அது இந்தியாவினால் களமிறக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ரணில் அரசின் முக்கியஸ்த்தர்கள் கூறுகிறார்கள். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி, நாட்டில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்குவதன் மூலம், சந்திரிக்காவினூடாக‌ பேச்சுக்களை நிறுத்தி, உடனடியான போரிற்குள் இலங்கையைத் தள்ள இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியூடாக முயல்வதாகவும் கருதப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8942
  11. கடற்புலிகளுக்கான சுதந்திர கடல்வழிப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது கண்காணிப்புக்குழு ‍ கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 6 வைகாசி 2003 கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டிருப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றின் கடற்படை தனது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கோருவது அந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்று கூறியிருப்பதோடு இவ்வாறு செய்வது கடற்புலிகளின் தங்குதடையின்றிய கடல் வழிப் போக்குவரத்திற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு வசதிகள் செய்துகொடுத்திருப்பதாகவும் கூறுகிறது. இதேவேளை அரசால் உயர் பாதுகாப்பு வலய ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் தனது பரிந்துரைகளுடன் கொழும்பை வந்தடைந்திருக்கிறார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8931
  12. மூதூரில் புலிகளின் நடவடிக்கைகளால் நாடு பிளவுடபப்போகிறது என்று கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி வெள்ளி, 25 சித்திரை 2003 மூதூரில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் நாடுபிளவுபடப்போவதாகவும், ரணில் அரசாங்கமும் நோர்வே நடுநிலையாளர்களும் புலிகளின் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரான அஞ்சான் உம்மா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியும், தீவிரவாத சிங்கள பிக்குகள் அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8852
  13. கடற்புலிகள் உத்தியோகபூர்வ அமைப்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டதை கண்டித்த மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய்க்கிழமை, 22 சித்திரை 2003 புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கையரச கடற்படைக்குச் சமனாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இதுகுறித்த விவாதம் ஒன்றிற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறது. சமாதான ஊக்குவிப்பாளர்கள் என்கிற முகமூடிக்குள் ஒளிந்துநின்று கொண்டு நோர்வே அரசாங்கமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயற்பாடு வருகிறார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். மேலும் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல் மீதும், இலங்கை இராணுவத்திற்கான வழங்கற் கப்பல் மீதும் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அவர் கண்டித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பிராந்தியத்திற்குள் செயற்பட்டுவரும் கடற்புலிகள் ஒரு நிழல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ படையணி என்று கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதனை ரணில் அரசு இதுவரை ஏன் மறுதலிக்கவில்லை என்றும் அவர் கேள்வி கேட்டார். மேலும் புலிகள் ஏழாம் கட்டப் பேச்சுக்களில் பங்குபற்றுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும், யுத்தம் ஒன்றிற்குத் தயாராகி வருகிறார்கள் என்பதை தான் அனுமானிப்பதாகவும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8831
  14. மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா ! தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம். கருணாவை எதிர்த்து நின்ற சிவராம் கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார். அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை. புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது. சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது. இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது. அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.
  15. சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் இருந்து போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி வெள்ளிக்கிழமை, 21 மாசிமாதம் 2003 புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி தீவிரவாத சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நிலத்தில் இருந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னால் அலரி மாளிகை நோக்கிச் செல்ல எத்தனித்த இக்கும்பலினை பொலீஸார் அதிரடியாகக் கலைத்துப் போட்டமையினையும் கண்டித்தும் இவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தநிறுத்தத்தை இரத்துச் செய், பொலீஸ் அடாவடித்தனத்தை நிறுத்து போன்ற பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் அமர்ந்திருந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்திருப்பதாக அவர்கள் கோஷமிட்டனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8394
  16. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இன்னொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி வியாழக்கிழமை, 20 மாசி மாதம் 2003 வியாழன் அன்று பிற்பகல் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டதனால் கொழும்பு நகரில் அமளி ஏற்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் பேரணியை முன்னின்று வழிநடத்திச் சென்றனர். "நாட்டைக் காட்டிக்கொடுத்த ரணில் - பிரபா - நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடம்" என்ற பதாதைகளை அவர்கள் தாங்கிச் சென்றனர். சுமார் 50,000 தீவிர சிங்கள இடதுசாரிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலநூற்றுக்கணக்கான தீவிரவாத பெள்த்த பிக்குகளும் கலந்துகொண்டனர். பாலிய‌கொடவில் ஆரம்பித்த இப்பேரணி பிரதமரில் வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் அலரி மாளிகை நோக்கிச் சென்றது. ஆனால் பேரணியை எதிர்பார்த்து ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் குழுமியிருந்த விசேட அதிரடிப்படையினர் பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகைத் தாக்குதலிலும், நீர்த்தாரைத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒருவருடத்தை அண்மித்திருக்கும் நிலையில் அதனை எதிர்க்கும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆர்ப்பட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் பேசிய விமல் வீரவன்ச, புலிகளுக்கு ரணில் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தாம் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாக சூளுரைத்திருந்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8390
  17. புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார் என்று கூறி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் மக்கள் விடுதலை முன்னணியும், சுதந்திரக் கட்சியும் செவ்வாய்க்கிழமை, 18 மாசி மாதம் 2003 பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சுதந்திரக் கட்சியின் உறுப்பினல் நிமால் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை மக்கள் விடுதலை முன்னண்னியின் விமல் வீரவன்சவினால் ஆமோதிக்கப்பட்டது. "வடக்குக் கிழக்கில் புலிகளைச் சுதந்திரமாக உலாவ விட்டு, அவர்கள் தமக்கு விரும்பியவற்றையெல்லாம் செய்ய அனுமதித்திருப்பதன் ஊடாக பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பன நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறிவிட்டார்" என்றும், "யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வரும் புலிகளைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார்" என்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டினார். இதன்போது பேசிய விமல் வீரவன்ச, "கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் காட்டிலும் தற்போது அதிகமான சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது, வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது" என்று கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8376
  18. புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதன் மூலமே நாட்டிற்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர முடியும், மாறாக சர்வதேச அங்கீகாரத்தை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அல்ல - ‍ மக்கள் விடுதலை முன்னணி வெள்ளிக்கிழமை, 31 தை மாதம் 2003 ஒஸ்லோ உதவி வழங்கும் நாடுகளின் உச்சி மாநாட்டின்போது பிரதமர் ரணில் முன்வைத்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் வியாழனன்று விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "தற்போது நடந்துவரும் பேச்சுக்களைப் பயன்படுத்தி எமது நாட்டில் தமக்கென்று கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கி அதனைத் தாம் நிர்வகித்து வருவதாக சர்வதேசத்திற்கு புலிகள் இயக்கம் காட்டி வருகிறது. ஆகவே, இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானம் ஒன்று உருவாவதற்கு புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்படுவது அவசியமாகும். பல நாடுகளின் தலைநகரங்களிலும் நடந்துவரும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தைப் புலிகள் பெற்று வருகின்றனர் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் அவர்கள‌து பிரிவினைவாதக் கொள்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நிலைமையும் உருவாகி வருகிறது. நோர்வேயின் அரசாங்கத்தால் புலிகளுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்ட தொலைத்தொடபுச் சாதனங்களைக் கொண்டு அளவெட்டியில் விமானப்படையின் ஆளில்லா விமானத்தை அவர்களால் கீழே கொண்டுவர முடிந்திருக்கிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஊடாக ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு சர்வதேச மேடையொன்றினை விரித்துக் கொடுத்திருப்பதுடன், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தையும், நியாப்பாட்டினையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்று அவர் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8261
  19. வடக்குக் கிழக்கில் புலிகளின் நீதிமன்றங்களையோ, காவல் நிலையங்களையோ நிறுவுவதை அனுமதியோம் என்று கூறி பாராளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்பிய மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய்க்கிழமை, 26 கார்த்திகை 2002 நீதித்துறை, சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான நிதியொதுக்கீட்டு விவாத‌த்தின்போது சபையில் கடுமையான குழப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அதனுடைய கூட்டாளி இனவாதக் கட்சிகளும் ஈடுபட்டதனால் சபை நடவடடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நந்தன குணதிலக்க பேசும்போது நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உறுப்பினர்களின் முன்னால் வாக்களிப்பிற்கு விடப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டில் புலிகளின் நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும் நிறுவப்படுவதற்கு சிங்களவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பினைக் காணமுடியும் என்றும் அறைகூவல் விடுத்தார். வடக்குக் கிழக்கில் புலிகளின் "தமிழீழ நீதிமன்றங்கள்" நிறுவப்படுவதை தமது கட்சி முழுமையாக எதிர்க்கும் என்றும், இதற்காக அரசு நடத்தும் நிதி ஒதுக்கீட்டினையும் தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். புலிகளின் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யும் நோக்கத்தின் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கெடுப்பினை நாம் ஆதரித்தால், தமிழ் ஈழ நீதிமன்றங்களையும், காவல் நிலையங்களையும் எமது நாட்டில் நாமே ஆதரிப்பதாக‌ இருக்கும் என்று அதன் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார்.
  20. சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி சனிக்கிழமை, 9 கார்த்திகை 2002 "அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் நோர்வே எமது நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புவது முட்டாள்த்தனமாகும். உலகத்தினை அடக்குமுறைக்குள் கொண்டுவந்து அதனை ஆளவே அமெரிக்கா முயல்கிறது. ஈராக், கியூபா, அப்கானிஸ்த்தான், எதியோப்பியா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகள் மீது பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது அமெரிக்காவே" என்று இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான தனது இன்னொரு ஆர்ப்பாட்டமொன்றில் கூறியிருக்கிறது. மேலும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்துவது ஏன் அவசியமானது என்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் தெற்கின் பல கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று சாதாரண சிங்கள மக்களை உணர்வூட்டி வருகின்றனர். தனது செயற்பாட்டாளர்களை பேரணிகளில் திரட்டி, பின்னர் அவர்களை சிங்கள மக்களிடையே பிரச்சாரத்திற்கு அனுப்பிவைக்கும் இக்கட்சியின் தலைமை "நோர்வேஜியன் துரோகிகள்" என்று சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நோர்வே நாட்டையும், "துரோகிகளின் அரசாங்கம்" என்று ரணில், பீரிஸ், மொரகொட மற்றும் ஹக்கீம் ஆகியோரையும் குற்றஞ்சாட்டி வருகின்றது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7791
  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம் புதன்கிழமை, 9 ஐப்பசி 2024 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. "மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான். சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. "சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன.
  22. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம் புதன்கிழமை, 9 ஐப்பசி 2024 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. "மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான். சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. "சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன.
  23. சமாதானப் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று கோரி கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி புதன்கிழமை, 8 தைமாதம், 2003 விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் காட்டும் வகையில் தீவிர இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பின் முக்கிய சந்தியொன்றில் சுமார் 25,000 ஆதரவாளர்களைக் கூட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வைத் தேடுவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நாட்டைப் பிளவுபடுத்து மேற்குலக ஏகதிபத்தியவாதிகளின் சதி என்று பேரணியில் பேசிய அனைத்து முக்கியஸ்த்தர்களும் குறிப்பிட்டார்கள். மாகாண நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் செந்நிறத்தில் ஆடையணிந்து கொழும்பு நகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தீவிரவாத இடதுசாரிகள் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நகர் மையத்தில் இருக்கும் லிப்டன் சதுக்கம் நோக்கிப் பேரணியாகச் சென்றார்கள். "புலிகளுக்கும் யானைகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் சதியைத் தோற்கடிப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆவேசமாகப் பேசினார். இப்பேரணிக்கு "ஜன பலய" (மக்கள் பலம்) என்று ஜே வி பி பெயரிட்டிருந்தது. பேரணியில் பேசிய அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வேறு கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். நோர்வே நாட்டவர்கள் இலங்கை விடயத்தில் தேவையில்லாது தலையிட்டு வருகிறார்கள் என்று அவர் கண்டித்தார். நோர்வே நாட்டுத் தூதுவர் ஜொன் வெஸ்ட்போர்க் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பினையடுத்து ரணில் அரசாங்கம் அதிர்ந்த்துபோய் அச்சத்தில் உறைந்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8123
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.