Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,875
 • Joined

 • Last visited

 • Days Won

  52

Everything posted by ரஞ்சித்

 1. பிரபாகரன் ஒரு மனநோய் பிடித்த சர்வாதிகாரி, ஒரு துரோகி - கருணா தெரிவிப்பு செய்தி :கல்ப் நியூஸ் பத்திரிக்கை திகதி : ஐப்பசி 8, 2004 தனது பரம வைரியான புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு மதம்பிடித்த சர்வாதிகாரியென்றும், துரோகியென்றும் கருணா தெரிவித்திருக்கிறார். சுமார் ஒருவாரத்திற்கு முன்னர் புலிகளின் பிஸ்ட்டல் குழுவினரால் தனது சகோதரரான ரெஜி கொல்லப்பட்டத்தை உறுதிப்படுத்திய கருணா, தனது சகோதரர் பிரபாகரனின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராகவும், அவரது ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி வீரமரணம் எய்தியிருப்பதாக கூறினார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியொன்றிற்குப் பேட்டியளித்த கருணா, தான் இன்னமும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாகவும், தனது சகோதரரின் மரணத்தினையடுத்து தனது ஆதரவாளர்கள் எவரும் துவண்டுபோய், பிரபாகரனுக்கெதிரான தமது எழுச்சிமிகு போராட்டத்தைக் கைவிடக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கு சவாலாக மற்றிவிடுவார்கள் என்கிற காரணத்தினால் கருணா குழுமீதான தமது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்திவருவதாகத் தெரிகிறது. "பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கெதிராகவும், பாஸிச வெறிக்கெதிராகவும் போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதனாலேயே நாம் பலத்துடனும், தீரத்துடனும் போராடி வருகிறோம். எனது சகோதரரின் இழப்பினையடுத்து நாம் பின்வாங்கிவிடப்போவதில்லை" என்று அவர் கூறினார். "நான் எனது மக்களிடம் பிரபாகரனின் பயங்கரவாதப் படைகளுக்கெதிராகப் போராட ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபாகரனினால் செய்யப்பட்டுவரும் பாரிய படுகொலைகளையும், மனிதவினத்திற்கெதிரான குற்றங்களையும் தடுத்தி நிறுத்திட தமிழ் இளைஞர்கள் என்னுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன்" என்றும் அவர் மேலும் கூறினார். "நிச்சயமாக பிரபாகரனினால் எமது மக்களுக்கு தேவையான தீர்வினைப் பெற்றுத்தரமுடியாது என்பது எனக்குத் தெரியும். அவரைப்பொறுத்தவரை அவரது பெயரும் புகழும் மக்களின் நலனைக் காட்டிலும் முக்கியமானது. அவர் தன்னை ஒரு பெரிய தலைவராகவும், தேசியத் தலைவராகவும் பிரகடனப்படுத்தியிருப்பதோடு, தன்னை தமிழர்கள் எல்லோரும் தமிழினத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற தலைவராகப் போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தனது இனத்திலேயே பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலைசெய்துவரும் ஒரு பயங்கரவாதி தன்னை எப்படி அவ்வினத்தின் தேசியத் தலைவர் என்று உரிமை கோரமுடியும்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசியாக பல்லாண்டுகள் இருந்துவந்த கருணா, புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிலும் ராணுவத் தளபதி என்கிற என்கிற ஸ்தானத்துடனேயே பங்குகொண்டிருந்தார். ஆனால், கடந்த பங்குனி மாதம் கிழக்கு மாகாணப் போராளிகள் புலிகளால் சமமாக மதிக்கப்படுவதில்லையெனும் குற்றச்சாட்டை முன்வைத்து பிரபாகரனின் தலைமைத்துவத்தை ஏற்கமறுத்து கருணா செயற்பட ஆரம்பித்ததையடுத்து அவரும் அவரது சகபாடிகளும் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். கருணா மேலும் கூறும்போது, "தமிழினத்தில் பல அரசியல்த் தலைவர்களையும், கல்விமான்களையும் கொன்றிருக்கும் பிரபாகரன் அவ்வினத்தின் தலைவர் என்று தன்னை எப்படி அழைத்துக்கொள்ளமுடியும்" என்றும் வினவினார். https://gulfnews.com/world/asia/karuna-calls-prabhakaran-a-mad-dictator-and-a-traitor-1.334990
 2. கோஷான், இங்கே எழுதியதை "ஞானசூனியம் மீனெடுங்கோ - கடலட்டையெடுங்கோ" என்ற பெயரில ஒருத்தர் சீனாவைப் புகழ்ந்து பண்ணிசைத்துக்கொண்டிருக்கிற திரியில எல்லோ எழுதியிருக்க வேணும்?
 3. சுய தண்டனை அவளை நான் இறுதியாகப் பார்த்து ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கலாம். எனது நினைவுகளில் நான் அவள் குறித்து பதித்து வைத்திருந்த கோலங்களையெல்லாம் கண்ணீர்கொண்டு அழித்து முழுவதுமாகத் துடைத்து வைத்திருந்தாள். வசீகரமான புன்னகை, கவிதைபாடும் கண்கள், மழலைகளின் மொழிபேசும் அவளது இனிமையான குரல் என்று எல்லாமுமே அவளிடமிருந்து முற்றாக மறைந்துபோயிருக்க என் முன்னே அவள் நின்றிருந்தாள். கண்கள் தொலைவில் இல்லாதவொன்றை வெறித்துப் பார்த்திருக்க எனது பேச்சைக் கேட்பதுபோல் ஏப்போதாவது ஓறிருமுரை தலையை மெதுவாக அசைப்பதுடன் எனது சம்பாஷணையில் அவளது பங்களிப்பு முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆறு வருடங்களுக்கு முன்னர் அவளிடமிருந்த ஆசைகள், நம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த வண்ணக்கனவுகள், எவ்விடயம்பற்றிப் பேசினாலும் எழும் உவகை என்று நான் பார்த்த அவளின் இலக்கணங்களை என்னால் நினைத்துப்பார்ப்பதைத் தவிர, இப்போது காண இயலவில்லை. எனக்குத் தொடர்ந்து பேசப் பிடிக்கவில்லை. அவளைப் பேசவைக்கவேண்டும் என்று பிடிவாதமாக சம்பாஷணைக்குள் இழுக்க முயன்றேன். "சரி, நானே உப்பிடிக் கதைச்சுக்கொண்டிருந்தால் சரிவராது, நீங்களும் கதையுங்கோ" என்றேன். மொத்த வேதனைகளையும் சலிப்பான சிரிப்புடன் கொட்டிவிட எத்தனித்த அவளின் இதழ்களிலிருந்து நீண்ட பெருமூச்சோடு வார்த்தைகள் வந்து விழத் தொடங்கின. "நான் என்ன தவறு செய்தேன் இன்று எனது வாழ்க்கை இப்படிப் போவதற்கு. என்பாட்டில் கிடைத்த வாழ்க்கையை ஏதோ என்னால் முடிந்தவரை இழுத்துக்கொண்டு போயிருப்பேனே? இன்று இருந்ததையும் இழந்து, பேசுவதற்குக் கூட எவருமில்லாமல், தனிமையில் வேதனைகளை மட்டுமே இரைமீட்டு வருகிறேனே? கடவுள் எதற்காக என்னைப்போன்றவர்களைப் படைக்கவேண்டும்? " என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்தாள். என்னிடம் பதில் இல்லை. அவளது இவ்விதமான வேதனை கலந்த பேச்சுக்களுக்களை நான் கேட்பது இதுவே முதல்த்தடவையும் அல்ல. பலமுறை கேட்டிருக்கிறேன். கேட்கும் ஒவ்வொரு பொழுதும் அதே வேதனையும், பச்சாத்தாபமும், இயலாமையினால் என்மீதான வெறுப்பும் என்னிடம் வரும். அவளின் கேள்விகளுக்கு பெரும்பாலும் மெளனமே எனது பதிலாக இருக்கும். அவளின் அழுகைகளுக்கு நானும் காரணம் என்றாகியபின் அவற்றுக்கான தீர்வாக நான் நிச்சயமாக இருக்கமுடியாதென்பதும் அல்லது அந்த தீர்வுக்கான முயற்சிகளை என்னால் எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லையென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவே மெளனத்தினையே நான் பதிலாக அவளுக்கு சில வருடங்களாக வழங்கி வருகிறேன். இதில் வேதனை என்னவென்றால், எனது பாவங்களுக்காகவும் அவள் பச்சாத்தாபம் தேடுவாள், அவ்வப்போது. கொரோணா நோய்த்தொற்று வந்தபின்னர் அவளின் வாழ்வு இன்னும் அவலமானது. வீட்டில் உணர்வற்ற சொந்தங்கள், உதவியில்லாத இயந்தரத்தனாமன வாழ்க்கை. உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ, சொல்லியழவோ எவருமற்ற சூழல், காலை எழுந்தால் சாமம் வரை உறங்கமறுக்கும் மனது, உடலாலும் மனதாலும் சுமக்கமுடியாத பழுவான வேதனைகள் என்று அவள் உடைந்துகொண்டிருக்கிறாள். அவளுடன் மகிழ்வாக உரையாடிய நாட்களை என்னால் இப்போது எண்ணிக்கூடப் பார்க்கமுடிவதில்லை. அவை மனதிலிருந்து மறைந்து, வெகு தொலைவில் மங்கலாக நிழலாடிக்கொண்டிருக்க, அவள்தொடர்பான எனது ஆரம்ப கால நினைவுகள் அருகிச் சென்றுவிட்டன. இப்போது என் முன்னால் இருப்பது அவளின் முடியா வேதனைகளும், அவல வாழ்வின் சலிப்புக்களும், வாழ்வினை முடித்துக்கொள்ளவேண்டும் என்று அவள் கூறும் நியாயப்படுத்தமுடியா காரணங்களும் மட்டும்தான். அவளை மீண்டும் அவளின் இனிமையான நாட்களுக்கு இழுத்துவரும் முயற்சியில் நான் சிறுகச் சிறுகத் தோற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. நான் சொல்வதைக் கேட்கும் கட்டத்தினை அவள் சில காலத்திற்கு முன்னமே கடந்துசென்றுவிட்டாள் என்பது எனக்குத் தெரியும். அவளை வாழவைக்க நான் கூறும் காரணங்களும், நியாயங்களும் அவளுக்கு இப்போது சலிப்பையும், ஆத்திரத்தையும் தவிர வேறு எதையுமே தருவதில்லையென்று என்னால் உணரமுடிகிறது. எமது சம்பாஷணைகளில் அவளின் அவலங்களின் தொகுப்பினை நான் திசைமாற்றி சம்பந்தமில்லா பேச எத்தனித்த ஒவ்வொரு தருணத்திலும் அவளை அவளது அவலங்களே மீண்டும் மீண்டும் இழுத்துவந்து என்முன் நிறுத்தின. இன்று அவளுக்குத் தெரிவிதெல்லாம் அவளின் வேதனைகளும் ஏமாற்றங்களும், வாழ்வினை முடித்துக்கொள்ளும் முடிவற்ற சிந்தனைகளும்தான். அவளது வேதனைகள் தனலாக வந்துவிழும்போது சிலவேளைகளில் நான் ஆத்திரப்பட்டேன். அவலது வேதனையின் விசும்பல்கள் என்மீதான குற்றச்சாட்டுக்களாக எனக்குத் தெரிய சினங்கொண்டு பதிலளித்திருக்கிறேன். ஆனால், என்னைவிட்டால் அவளின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ள அவளுக்கு யாரிருக்கிறார் என்கிற சிறு எண்ணம்கூட இல்லாமல் ஆத்திரப்பட்டது வேதனையளிக்கிறது. ஆனால் எனக்கு இப்போதைக்கு வேறு வழிகளும் தெரியவில்லை. அவள் தானாக வெட்டிக்கொண்டிருக்கும் இந்தக் குழிக்குள்ளிருந்து அவளை எப்படியாவது இழுத்துவரவேண்டும். அவளது அவலங்களுக்குக் காரணம் என்று தன்னைத்தானே நிந்திக்கும் அவளது எண்ணத்தை எப்பாடுபட்டாவது மாற்றிவிடவேண்டும். உலகில் தன்னைப்போன்ற துர்ப்பாக்கியசாலி எவரும் இல்லையெனும் அவளின் எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடவேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் எவருமே தன்னை நேசிப்பதில்லையென்றும், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லையென்றும் அவள் எண்ணுவதை தடுத்திடவேண்டும். தனக்கென்று உலகில் எவருமேயில்லை என்று தனக்குள் உள்முடங்கும் அவளின் மனதை மீண்டும் வெளியே எடுத்துத் துளிர்விக்க வேண்டும். இவை அனைத்துமே பேசுவதற்கும், எண்ணுவதற்கும் எனக்குச் சுலபமாகத் தெரியலாம். அவளின் பிடிவாதமும், வைராக்கியமும் நான் அறியாததல்ல. என் முன்னே அவள் மலைபோல குவித்துவைத்திருக்கும் அவளின் வேதனைகளை என் வாழ்நாளில் துடைத்தழித்திட என்னால் முடியாதென்பெது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், அந்த மலையினைக் கடக்கும் நம்பிக்கையினை அவளுக்குக் கொடுக்கலாமா என்பதை எனது இறுதி முயற்சியாக எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் ! முற்றும்.
 4. தேரருக்கு கருணாவின் பலம் தெரியவில்லை. கருணாவினால் சிங்கள இனம் அடைந்த நண்மைகள் பற்றித் தெரிந்திருந்தால், கருணாவைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கனவிலும் இவர் நினைத்திருக்க மாட்டார். இலங்கையினை பூரண பெளத்த சிங்கள நாடாக மாற்றுவதற்குக் கருணா செய்த உதவி அளப்பரியது. இது சாதாரண சிங்களவர் கொண்டு அரசியல்வாதிகள், ராணுவத்தினர்வரை நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். மகிந்தவுக்கு அடுத்த ஸ்த்தானத்தில் வைத்துக் கருணா இன்றுவரை பல சிங்கள இனவாதிகளாலும், கல்விமான்களாலும் போற்றப்பட்டு வருகிறார். கருணா செய்த அந்த ஒற்றை உதவியின்மூலம், அவர் செய்த அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டன. தமிழரின் ரத்தம் கொண்டு கருணா தனது சிங்களத்திற்கெதிரான பாவங்களை நிரந்தரமாகவே கழுவிக்கொண்டார். கருணா இன்று எவராலும் நெருங்கமுடியாத , இலங்கையின் மிகவும் செல்வாக்குள்ள ஒரு மனிதர். இலங்கையின் நீதித்துறையோ, காவல்த்துறையோ கருணாவையோ அல்லது அவருடன் சேர்ந்துநின்று சிங்களத்திற்குத் தொண்டாற்றிய பிள்ளையான் போன்றோரையோ ஒருநாளும் தொடக் கூட முடியாது. நவீன இலங்கையில் சிங்கள பெளத்தத்தின் வரலாற்றினை எழுதியவர்களில் கருணா மிக முக்கியமானவர் என்பதை இவரைத்தவிர அனைத்துச் சிங்களவர்களும் உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
 5. இந்தாளின் அளப்பறை தாங்கமுடியவில்லை. சீனாவை தேவதூதர்கள் ரேஞ்சுக்கு தூக்கிவைச்சுக் கொண்டாடுகிறார். - தனது சிறுபான்மையின முஸ்லீம்களை நடத்தும் விதம் - சீனாவிலும், ஹாங்காங்கிலும் ஜனநாயகவாதிகளை அடக்கும் விதம் - இனக்கொலையாளிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் நண்பனாக இருந்து மக்களைக் கொல்ல உதவும் விதம் - தீபெத்து, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச்ம், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் விதம் - உலகின் வறிய நாடுகளை கடன்கள் மூலம் கட்டிப் போட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் விதம் - 1987 ஆம் ஆண்டின் தியனன்மின் சதுக்க மாணவர் படுகொலை நடத்தப்பட்ட விதம் இப்படிப் பல இருக்க, இந்தச் சீனச் செம்புதுக்கிக்கு அவர்கள் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள். முடிந்தவர்கள் இதனையும் படித்துப் பாருங்கள், செம்புதூக்கி உட்பட ! https://taiwantoday.tw/news.php?unit=4&post=6782
 6. தலிபான்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகள் இல்லையென்று நிறுவுவது கடிணமானது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களின் அடிப்படைவாதிகள் தான் என்றே இதுவரை நிரூபித்து வருகின்றன. மற்றைய மதங்களையும், அவற்றின் புராதனச் சின்னங்களை அழிப்பதையும் மத அடிப்படைவாதம் என்றே கருதப்படவேண்டும். அத்துடன், தனது மக்களையே மிகவும் பிற்போக்குத்தனமான வாழ்வுக்குள் இழுத்துவைத்துக்கொண்டும், பெண்களை மிகவும் இழிவாக நடத்திக்கொண்டும் வரும் ஒரு அமைப்பு நிச்சயமாக அடிப்படைவாதிகளேயன்றி வேறில்லை. இன்னொரு விடயம். இன்றுவரை தலிபான்களுக்கும் முஜஹிதீன்களுக்கும், ஐஸிச்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை உணராமல் எம்மில் பலர் எழுதுவதைப் பார்க்கமுடிகிறது. தலிபான்களை அமெரிக்கர்கள் உருவாக்கவில்லை. அவர்களை உருவாக்கியது பாக்கிஸ்த்தானிய ராணுவ அரசு. சோவியத் ஆக்கிரமிப்பின்போது அதற்கெதிராகப் போராடியவர்கள் முஜஹிதீன்கள். இவர்களுக்கே அமெரிக்கா உதவியது. முஜஹிதீன்கள்கூட அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. கொடுங்கோலன் நஜிபுள்ளாவின் அரசுக்கெதிரான மக்களின் எதிர்ப்புப் படையே முஜஹிதீன்கள். ரஷ்ஷியா ஆப்கானிஸ்த்தானுக்குள் சென்றவுடம், அமெரிக்கா அவர்களுக்கு ஆப்படிக்க முஜஹிதீன்களுக்கு பாக்கிஸ்த்தான் மூலம் உதவியது. ரஷ்ஷியர்கள் வெளியேறியபின்னர் முஜஹிதீன்கள் தமக்குள் பிரிந்து அடிபட்டு, நாட்டை துண்டு துண்டாக ஆட்சிசெய்தபோது பாக்கிஸ்த்தானிய ராணுவத்தால் பாக்கிஸ்த்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகளில் இருந்து இஸ்லாமிய மதரஸாக்களில் பயிற்றப்பட்டவர்களே தலிபான்கள். சில முன்னாள் முஜஹிதீன்களையும் சேர்த்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிப்படைவாத அமைப்பு ஆப்கானுக்குள் நுழைது தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்த முஜஹிதீன்களை வீழ்த்தி நாட்டினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. ஐஸிஸ்கள், முன்னாள் ஈராக்கிய ராணுவ வீரர்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத மதகுருக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டது. இதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை. ஆனால், இது உருவாகும்போது அமெரிக்கா எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்ததென்பது உண்மை. அதேபோல அமெரிக்காவினால் ஈராக்கியப் படைகளுக்குக் கொடுக்கப்பட்ட பல கனரக ஆயுதங்கள் மோதல்களின்போது ஐஸிஸ்களினால் கைப்பற்றப்பட்டன என்பதும் உண்மை.
 7. புலிகள் 1990 இல் கூறியது ஒரு புறம் இருக்கட்டும். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முஸ்லீம்கள் என்னும் சமூகம் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எனும் தமிழ் இனத்திற்குள் அடங்கும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது நீங்கள் தனியான இனம் என்று கருதுகிறீர்களா? புலிகள் கூறியவாறு நீங்களும் தமிழினத்தில் ஒரு அங்கம்தான் என்றால் எதற்காக தனியான முஸ்லீம் அலகு, வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ்பேசும் அரபிக்கள் என்று இன்றுவரை அரசியல் செய்கிறீர்கள்? அல்லது எதற்காக இலங்கை அரசாங்கங்கள், ராணுவ பொலீஸ் பிரிவுகளில் சேர்ந்து தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை இயங்கிவருகிறீர்கள்? நீங்கள் தமிழினத்தின் ஒரு பகுதியென்றால் இன்று நீங்கள் செய்துவருவது தமிழினத்திற்கான அநீதி இல்லையா? இடத்திற்கு இடம், சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் என்று மாறி மாறிப் பேசுகிறீர்களே? இப்படி மாறி மாறிக் கதைப்பதைத்தான் "நியாயத்தைக் கதைப்போம்" என்று கூறுகிறீர்களோ?
 8. அண்ணை, தமிழர்கள் வேறு மதம் என்பதால்த்தான் கிறீஸ்த்தவ மேற்குலகு கண்டும் காணாமல் இருந்தது என்று நீங்களே கூறிவிட்டு, இறுதியில் இந்துவான இந்தியாவே கைவிட்டது என்கிறீர்கள்? அப்படியானால் நடந்த இனவழிப்பிற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? உலக மதங்களில் இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையற்ற மதம். கடவுளை நிந்தனை செய்தால் கொலையென்பதை இன்றுவரை செய்துவரும் மதம். மற்றைய மதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவினரைத் தவிர மத நிந்தனைக்காக மற்றையவர்களை கொல்லும் தன்மை கிடையாது. இங்கு நடந்ததாகக் கூறப்படும் மத நிந்தனையும், அதற்கான எதிர்வினையும் தேவையற்றவை. இரண்டுமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. நியாயத்தைக் கதைப்போம் என்பவர் தனது இயற்பெயரில் வந்து பின்னர் தனது புதுப்பெயருடன் எழுதுகிறார். மதம் என்பது அவரைப்பொறுத்தவரையில் எந்தளவிற்கு முக்கியமானதென்பது இத்திரியின்மூலம் வெளிப்படுவதுடன் அவரது அடையாளத்தையும் காட்டிவிட்டது. சோழன் சொல்லவிழைந்ததும் இதைத்தான் என்று நினைக்கிறேன்.
 9. அண்ணை, எரித்ரியா முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இல்லை. 56 வீதமானவர்கள் கிறீஸ்த்தவர்கள், 40 வீதத்திற்கும் குறைவானவர்களே முஸ்லீம்கள். ஆனால், அவர்கள் கிறீஸ்த்தவர்கள் என்றோ முஸ்லீம்கள் என்றோ வேறுபட்டு அடிபட்டது கிடையாது. எதியோப்பிய ஆக்கிரமிப்பிற்கெதிராக ஒன்றாகத்தான் எதிர்கொண்டு போரிட்டு வென்றார்கள். புலிகளுக்கும் எரித்ரியர்களுக்கும் தொடர்பு வந்தமைக்கான காரணம் மதம் அல்ல. புலிகளின் போராட்டத்தை அவர்கள் தார்மீக ரீதியில் ஆதரித்தார்கள். அதனாலேயே இறுதியுத்த காலத்தில் புலிகளின் ஆயுதங்கள் அங்கு செல்வதென்று ஏற்பாடாகியது. எரித்ரியர்களை முஸ்லீம்கள் என்று நீங்கள் பார்க்கவியலாது. எரித்ரிய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எதிரிக்கெதிராகப் போராடினார்கள். புலிகளில் பெண்போராளிகள் உருவானதுகூட எரித்ரிய விடுதலைப் போராட்டத்தினைப் பின்பற்றியே என்று நான் நினைக்கிறேன். பெண்களைச் சமமாக குணவியல்பு முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளில் இல்லை.
 10. ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இப்புறாக்களுக்கான உரிமைப்பாடும், இப்புறாக்கள் தாமாகவே சென்றனவா அல்லது களவாடப்பட்டனவா என்கிற சர்ச்சையும் கிளம்பியதையடுத்து ஒரு வீட்டிலிருந்து 6 நபர்கள் மற்றைய வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 3 பேரைத் தாக்கிவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால், தாக்கப்பட்ட மூவரும் வடக்கில் இயங்கிவரும் அரச துணைராணுவக் குழுவான ஈ பி டி பி யின் உறுப்பினர்கள் என்பதும், அதிலொருவர் அத்துணை ராணுவக்குழுவின் இணைச் செயலாளர்களில் ஒருவரான "சொர்ணா அக்கா" என்று மக்களால் அச்சப்பட்டு அழைக்கப்படும் லலிதா என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து, முதலாவது வீட்டில் வசித்துவந்த 20 வயது இளைஞரை, பிரச்சினையைச் சுமூகமாக பேசித் தீர்க்கலாம் வா என்று அழைத்த லலிதாவும் அவரது துணைராணுவக் குழுவின் ஆதரவாளர்களும் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டால் உன்னை விட்டுவிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதன்படி அவர்களுடன் பேசச் சென்ற 20 வயது சுகந்தன் எனும் இளைஞரை கடுமையாகத் தாக்கத் தொடங்கிய லலிதாவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே தாம் கரைத்துவைத்திருந்த மிளகாய்த்தூள் நீரை அவரின் கண்களில் ஊற்றிச் சித்திரவதை செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் சுகந்தன் தலை முடியையும் சவரம் செய்திருக்கிறார். தொடர்ந்தும் துணைராணுவக் குழு பெண்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை காப்பற்ற துணியாது பலரும் திகைத்துப்போய் நிற்க இத்தாக்குதல் தொடர்ந்திருக்கிறது. துணைராணுவக் குழுவினரின் அதிகாரமும், குற்றங்களில் இருந்து விலக்களிப்பும் தமக்கு பாதுகாப்புத் தரும் என்கிற ஆணவத்தில் இந்தப் பெண்கள் குழு மிகவும் வெளிப்படையாகவே இத்தாக்குதலினை நடத்தியிருப்பதுடன், தாம் தாக்குவதையும் பெருமையாக ஒளிப்படமும் எடுத்திருக்கிறது. தமிழக சினிமாவான தூள் படத்தில் அரசியல் ரெளடியாக வந்து கொலைகளை நடத்தும் படிப்பறிவற்ற காட்டுமிராண்டிப் பெண் சொர்ணா அக்காவைப் போன்று ஈ பி டி பி துணைராணுவக்குழுவின் பெண்கள் பிரிவும் செயற்பட்டுவருவதனையடுத்து இவர்களை "சொர்ணா அக்காக்கள்" என்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அழைக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நீதித்துறையினதும், காவல்த்துறையினதும் ஆதரவினைப் பெற்றுக்கொண்டு அட்டூழியங்களில் ஈடுபட்டுவரும் இந்தத் துணைராணுவக் குழுவின் பெண்கள் பிரிவு தமது தாக்குதலை பெருமையுடன் சமூகவலைத் தளங்களிலும் பிரச்சாரப்படுத்தியிருக்கிறது. தன்மீது நடத்தப்பட்ட அநாகரீகமான தாக்குதலினையடுத்து மனமுடைந்துபோன சுகந்தன் எனும் அந்த இளைஞர் தனது பிறந்த தினமான ஆடி 27 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால், அவர் கொரோணாவினால் உயிரிழந்தார் என்று வைத்திய அறிக்கையினைத் தயாரித்த துணைராணுவக் குழு, அவசர அவசரமாக அவரின் உடலினை தகனமும் செய்திருக்கிறது. சுகந்தனின் இறப்பினால் ஆத்திரமடைந்திருக்கும் அவரது உறவினர்களும் நண்பர்களும், அவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென்றும், அவர்கள் வெளிப்படையாகவே தரவேற்றியிருக்கும் ஒளிப்படங்கள் சாட்சியமாக இருக்கும்பொழுதும், அவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர். பலர் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது பலராலும் பல கோணங்களில்பதிவுசெய்யப்பட்டபோதும், ஒருவர்கூட இந்த துணைராணுவக் குழு பெண்கள் பிரிவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முன்வரவில்லையென்றும், தற்போது சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுவந்த இந்த ஒளிப்படங்களை பொலீஸார் அகற்றி, சாட்சிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சுகந்தனின் நண்பர்கள், உறவுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களையடுத்து வேறு வழியின்றி அந்த 6 சொர்ணா அக்காக்களையும் கைதுசெய்த பொலீஸார், டக்கிளஸின் தலையீட்டினையடுத்து உடனடியாகவே விடுதலைசெய்திருப்பதாகவும் தெரியவருகிறது. https://www.colombotelegraph.com/index.php/the-epdps-sorna-accahs-precipitate-a-suicide/
 11. மக்களுக்கு சிறிய ஒரு நண்மையாவது கிடைக்குமென்றால் அதை நான் தவறென்று நினைக்கவில்லை. ஆனால் நான் சொல்ல வந்தது, டக்கிளஸும் கருணாவும் செய்யும் அரசியலைத்தான். அதாவது போரின்பின்னரான சிங்கள ஆக்கிரமிப்புத் திட்டத்தினை தமிழர் தாயகத்தில் சிங்களம் இவர்கள் மூலமாகத்தான் முன்னெடுக்கிறது என்பதையே சொல்லவந்தேன். வடக்கில் மக்களுக்கு சிங்கள அரசின் முகவர்கள் மூலம் உதவிகள்சில கிடைக்கிறதென்பதும், கிழக்கில் அதே முகவர்களினால் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் ஒரே திட்டத்தினால் நடத்தப்படுபவைதான். நீங்கள் கூறும் அரசியல்த் தீர்வென்பது ஒருநாளும் கிடைக்கப்போவதில்லை. அதனை எவருமே தரப்போவதுமில்லை. சிங்களம் செய்வதெல்லாம் தமிழர்களை தொடர்ச்சியாக தம்மிடம் கையேந்தி நிற்கும் நிலையினை உருவாக்குவதுதான். இதன் ஒரு அங்கம்தான் இந்த சிறு உதவிகள். இவை ஒருநாளுமே மக்களின் அன்றாடத் தேவைகளை முற்றாகப் பூர்த்திசெய்யப்போவதில்லை. யானைப்பசிக்குச் சோளப்பொறிபோல சில பிச்சைகளை போட்டுக்கொண்டு எம்மை தம்மில் முற்றாகத் தங்கியிருக்கும் நிலைக்கு மாற்றுகிறார்கள். வடக்கில் எமது நிலங்களும் கடல்வலமும் அபகரிக்கப்படுவதும், கிழக்கில் மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதும் இந்த சிறிய "உதவிகள்" ஊடாக மறைக்கப்பட்டுவிடும். மக்களுக்கு சிறிய ஒரூதவியினைக் காட்டிக்கொண்டு பின்னால் அவர்கள் அறியாமலேயே அவர்களின் தாயகம் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தச் சிறிய உதவிகள் மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்யப்போவதில்லை. மாகாண சபைகளை முடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது முகவர்கள் மூலம் பிச்சைபோடும் ஒரு ஆக்கிரமிப்பு அரசு மக்களின் நலனிலும் இருப்பிலும் அக்கறை கொள்ளும் என்பதை நான் நம்பவில்லை நிழலி.
 12. நீங்கள் பிள்ளையானை வைச்சு காமெடீ கீமெடி ஒண்டும் பண்ணேல்லைத்தானே?
 13. சீனத் தூதரகத்திடமிருந்து எவ்வளவு காசு வாங்கினார் என்பதையும் அடுத்த புனைவுட இணைத்துவிடுங்கள் கிருபன்.
 14. அதுக்கு மக்களின் வெற்றி, அபிவிருத்தி, விடியல் எண்டு நிறைய அவியல் வைச்சிருக்கிறாங்கள்.
 15. அண்ணை வடக்கில டக்கிளஸக் கொண்டும், கிழக்கில கருணாவைக் கொண்டும் தமிழரின்ர இருப்பை வேதறுக்கிறது எண்டது மகிந்த சகோதரர்களின்ர போஸ்ட் வோர் அஜெண்டா. கருணாவும் டக்கிளஸும் இது தெரிஞ்சும் தங்கட வயிறும் பொக்கெட்டும் நிறைஞ்சால் காணும் எண்டு செய்யிறாங்கள்.
 16. பரராஜசிங்கத்தை ஆலயத்திற்குள்ளேயே வைத்துச் சுட்டது போல, சம்பந்தரையும் எங்காவது வைச்சுப்போடுவாங்கள் என்று நினைக்கிறேன். கடத்துவதும் கொல்வதும் அவர்களது தொழில் அல்லவா?
 17. அத்துடன், வடக்கிலிருந்து கிழக்கினை முற்றாக பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை கருணாவையும் அவரது ஆதரவாளர்களையும் முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுவருகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அனுசரணையுடன் இணைக்கப்பட்ட இம்மாகாணங்களை பிரிக்கும் முன்னர் இந்தியாவின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வடக்கிலிருந்து கிழக்கினை நிரந்தரமாகப் பிரிப்பதன் மூலம் கருணாவுக்கான அரசியல் பலத்தினை கிழக்கு மக்களிடையே அதிகரிக்கலாம் என்று கருதும் அரசு, இப்பிரிப்பினூடாக அதாவுள்ளாவுக்கு ஆதரவான முஸ்லீம் ஆயுதக் குழுக்களையும் தமது நடவடிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கிறது. கிழக்கு மாகாணம் முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தனது பிணாமிகளான கருணா, டக்கிளஸ், வரதர் அணி, முஸ்லீம் அமைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் தனது சிங்கள பெளத்த அரச அதிகாரத்தை கிழக்கில் முற்றாக நிறுவிவிடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது. கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஒரு அங்கமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் அடங்கும். வடக்கில் மாகாணசபை சிறப்பாக இயங்காத போதும், கிழக்கில் அதன் செயற்பாடு சிறப்பானதாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகவே, கிழக்கு தனித்து இயங்கவேண்டும் என்கிற கோஷத்தை கருணா போன்றவர்களைப் பாவித்து அரசு முன்வைக்கக் கூடும். பின்னர் வடக்கிலும் டக்கிளஸை முன்னிறுத்தி, மாகாணசபையினைக் கைப்பற்றுவதன் மூலம் தனது அதிகாரத்தை அங்கும் பரவலாக்கும் கைங்கரியத்தில் அரசு இறங்குவதற்கான சாத்தியமும் இருக்கிறது. அரசின் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பரராஜசிங்கம் போன்றவர்கள் எப்போதுமே ஒரு தடைக்கல்லாகவே இருந்துவந்துள்ளனர். புலிகளின் தீவிர ஆதரவாளராக அவர் இருந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழரின் பூர்வீக தாயகம் எனும் கோட்பாட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததுடன், அதற்காகத் தொடர்ச்சியான பரப்புரைகளையும் அவர் முன்னெடுத்து வந்திருந்தார். இதனாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்று அரசும் அரசுக்குச் சார்பான கருணா குழுவும் முடிவெடுத்தன. முற்றும் https://sangam.org/taraki/articles/2006/01-02_Real_Reasons_Behind_Murder_in_the_Cathedral.php?print=sangam
 18. பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டமைக்கான ரெண்டாவது காரணம் மிகவும் பொதுவானது. ஆனால் இந்த அநியாயப் படுகொலையின் விளைவாக உருவாகியிருப்பது மிகவும் ஆபத்தான, விரும்பத் தகாத சூழ்நிலையென்றால் அது மிகையில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, அதிலும் குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அரசியல் ராணுவ அரங்கில் செயற்பட்டு வந்த சக்திகளின் கூட்டு முயற்சியாக இப்படுகொலை பார்க்கப்படவேண்டியதாகிறது. கடந்த சில வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் தமது ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. ராணுவத்தினருக்கான சம்பளம் பற்றிய கவர்ச்சியான விளம்பரங்களோ அல்லது நாட்டைக் காக்கும் பணியென்கிற அறைகூவல்களோ சிங்கள இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் பெருமளவில் இணையும் விருப்பினை இதுவரை ஏற்படுத்தவில்லை. குறைந்தது அரசாங்கம் போரை உடனேயே ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தளவு எண்ணிக்கையில் கூட அவர்கள் இணைய முன்வரவில்லை. வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல் தலைநகர் கொழும்பு கூட போர்க்களமாக மாறலாம் என்கிற நிலையில், ராணுவப் பற்றாக்குறை என்பது அரசைப்பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகவே உருப்பெற்றிருக்கிறது. இதனால், தனக்குச் சாதகமான பிரதேசங்களில் ராணுவப் பிரசன்னத்தினை அதிகரித்து அப்பகுதிகளைப் பலப்படுத்தும் அதேவேளை, கண்மூடித்தனமாக பெருமளவு நிலப்பரப்பினை தனது உண்மையான கட்டுப்பாடின் கீழ் இல்லாமல் வெறுமனே காவல் செய்வதை அது தவிர்க்கவே விரும்புகிறது. இதன் ஒருபகுதியாகவே கிழக்கில் புலிகளுக்கு எதிராக இயங்கிவரும் கருணா குழுவினரின்மூலம், போராட்டம் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே கடந்த இரு வருடங்களாக முடக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பார்க்கிறது. ஆனால், இந்த சாதகமான சூழ்நிலையென்பது வடக்கில் புலிகளின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளாலும், தேர்தல் புறக்கணிப்புக்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இதனாலேயே, திருகோணமலையுட்பட கிழக்கு மாகாணத்திற்குள் தமது அரசியல் ராணுவச் செயற்பாடுகளை விரிவாக்குவதுடன், வடக்கு நோக்கிய தமது ராணுவ நடவடிக்கைகளை தற்போதைக்கு ஓரத்தில் போட்டுவிடலாம் என்று அரசாங்கம் நினைப்பதுபோலத் தெரிகிறது. இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தனது அனைத்துச் சக்திகளையும் அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. இதற்காக கருணாவையும், அவரது ஆதரவாளர்களையும் தனது ராணுவத்தினருடன் சேர்த்து கிழக்கு மாகாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் அது தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியிருப்பது தெரிகிறது. இந்த நடவடிக்கைகளில் மட்டக்களப்பு வாவியின் மேற்கில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அடங்கும் என்பதும் தெரியவருகிறது. தற்போதைய நிலவரத்தின்படி மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவே நிலைகொண்டிருக்கிறது. சில பிரதேசங்களில் ராணுவத்தினரின் பிரசன்னமே காணக் கிடைப்பதில்லையெனும் அளவிற்கு ராணுவத்தினரின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. இதேபோல திருகோணமலை - மணலாறு பகுதியினை 22 ஆவது டிவிஷன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ விசேட படைகளின் 53 ஆவது டிவிஷன் அடங்கலாக 6 டிவிஷன்கள் நிலைவைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கினை முற்றாக மீட்கும் நடவடிக்கையில் வடக்கில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. வடக்கில் புலிகளுக்கெதிரான ராணுவத்தினரின் நடவடிக்கைகள் மந்தகரமான நிலையினை அடைந்திருக்கும் நிலையில், இவர்களை கிழக்கில் நகர்த்துவதன் மூலம் கிழக்கை முற்றாக மீட்கலாம் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது. இப்படியான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் வெறுமனே ராணுவத்தினரால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக புலிகளுக்கெதிரான போரில் குறிப்பிடத் தக்களவு வெற்றிகளைப் பெற்றிராத ராணுவத்தைக் கொண்டு, கிழக்கினை முற்றாக மீட்கலாம் என்று அரசு நம்புவதாகத் தெரியவில்லை. அதனால், ஆப்கானிஸ்த்தான் ஈராக் ஆகிய நாடுகளில் பிரதேசங்களை மீட்க அந்நாடுகளில் பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்கியது போல, கிழக்கில் தனது பொம்மை அரசொன்றை உருவாக்கி, அதன் உதவியுடன் கிழக்கினை மீட்கலாம் என்று அரசு கருதுவது தெரிகிறது. இதனாலேயே கருணாவையும் அவரது ஆதரவாளர்கலையும் முன்னிறுத்தி கிழக்கின் தலைவர்கள் என்று காட்டியும், மக்கள் ஆதரவுகொண்ட, செல்வாக்குள்ள, புலிகளுக்குச் சார்பான தலைவர்களைக் களையெடுத்தும், கிழக்கில் புலிகளின் பிரசன்னத்தை சிறிது சிறிதாக அழிக்க கங்கணம் கட்டியிருக்கிறது. இந்த களையெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை தமது உறுப்பினர்கள் கொல்லப்படப்போவது இதுவே முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்காது என்பது வெளிப்படை.
 19. புலிகளாலும் தமிழ் மக்களாலும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை முயற்சிகள் சித்திரை 2003 இல் புலிகள் பேச்சுவார்த்திகளிலிருந்து வெளியேறியதன் பின்னர், அரசுக்கெதிரான பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அரசாங்கத்தின் தூதுவரலாயங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கெதிராகவும் புலிகளுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை சர்வதேசத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும், புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகள் மூலமும் புலிகளும் மக்களும் மழுங்கடித்து வந்தனர். புலிகளின் பரப்புரையின் வெற்றியாக இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் போராட்ட அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட சட்டரீதியான அழுத்தங்களை புலிகள் தொடர்பில் தளர்த்தவும் சர்வதேசம் தலைப்பட்டிருந்தது. புலிகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும், சர்வதேச ராஜதந்திரிகளைச் சந்தித்து தமது பக்க நியாயங்களைக் கூறவும் அனுமதியளிக்கப்படும்வரை தமது பிரச்சார உத்திகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. புலிகளின் இந்த வெற்றிகரமான சர்வதேச பரப்புரைகளை முறியடிக்க அரசாங்கம் இருவகையான நகர்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்தது. 1. கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்குப் புலிகள் பயணிப்பதற்கான பயண ஒழுங்குகளில் தடைகளை ஏற்படுத்துவது. இதன்மூலம் கொழும்பினூடாக வெளிநாடு செல்லும் புலிகளைத் தடுப்பது. 2. புலிகளை சர்வதேசத்தில் வேண்டப்படாதவர்கள் எனும் நிலையினை உருவாக்கும் வகையில் தனது பிரச்சார உத்திகளை புதிப்பித்தல். இதில் முதலவாது இலக்கினை அடைய கிளிநொச்சிக்கும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான உலங்குவானூர்தி வசதியினை அரசு மறுக்கத் தொடங்கியது. சர்வதேச மத்தியஸ்த்தர்களின் அழுத்தத்தினால் வேண்டாவெறுப்பாக சில நேரங்களில் இந்த பயண ஒழுங்குகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், அண்மையில் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சில மோதல்களையடுத்து புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை அணி வெளிநாடு செல்லும் பயண ஒழுங்குகளை அடியோடு துண்டித்துக்கொண்ட அரசு, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கூடாக புலிகளின் போராளிகள் பயணிப்பதையும் தடுத்து விட்டது. இரண்டாவது இலக்கினை அடைய சர்வதேசத்தில், குறிப்பாக மேற்குலகில் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் அந்நாடுகளில் புலிகளோ அல்லது தமிழர்களோ அரசுக்கெதிராகவும், தமது பக்க நியாயத்தினை முன்வைத்தும் செய்யும் பரப்புரைகளை தடுத்து நிறுத்துவது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாளிலிருந்தே இதற்கான முஸ்த்தீபுகளை அரசு எடுத்து வந்தாலும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையோடு இது முனைப்புப் பெற்றது. இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ஜயந்த தனபால அவர்களின் கடுமையான பிரச்சாரத்தினாலும், அழுத்தத்தினாலும் புலிகளின் சர்வதேச பயணங்களுக்குத் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது. அதேபோல இலங்கைக்குள்ளும் நோர்வேயின் சமாதானக் குழுவினர் தவிர்ந்த ஏனைய சர்வதேச ராஜதந்திரிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கையரசாங்கம் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சிக்குப் போக எத்தனித்த வெளிநாட்டவர்கள் அனைவரும் அரச அனுமதியுடனேயே செல்லமுடியும் எனும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே புலிகளைத் தனிமைப்படுத்த உதவியிருந்தன. அரசாங்கமும், சர்வதேச சமூகமும் புலிகள் மீதான தடைகளை மாறி மாறி விதித்துக்கொண்டு வந்த வேளையில், இத்தடைகளினால் கட்டுப்படாத பரராஜசிங்கம் போன்றவர்கள் புலிகளின் தலைவர்களால் செல்லமுடியாது போன சர்வதேச மேடைகளுக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமது பக்க நியாயங்கள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். கனடா நாட்டிற்கு அவர் செல்ல எடுத்த முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஏனைய மேற்குலக நாடுகளுக்குச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டே வந்தார். பரராஜசிங்கம் போன்றவர்கள், சுயமாக சர்வதேச நாடுகளுக்குச் சென்று, தமிழரின் நியாயங்களையும், சிங்கள அரசின் அக்கிரமங்களையுன் தொடர்ச்சியாக வெளிக்கொன்டுவருவது, புலிகள் மீதான தடையின் வீரியத்தை வெகுவாகப் பாதித்துவிடும் என்று அஞ்சிய அரசாங்கம் பரராஜசிங்கத்தைக் கொல்வதன் மூலம் தமிழருக்குச் சார்பான பரப்புரைகளை நிறுத்துவதுடன், பரராஜசிங்கம் போன்ற ஏனையவர்களுக்கும் ஒரு பாடத்தினைப் புகட்ட நினைத்தது. இதனாலேயே பரராஜசிங்கம் ஆலய ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளையில் அரச ஆதரவு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 20. ஆலயப் படுகொலை நடத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் ஆக்கம் : தி நோத் ஈஸ்டேன் மந்த்லி நிருபர், தை 2006 ஆங்கிலத்திலும் தமிழிலும் திரு பரராஜசிங்கத்திற்கு இருந்த புலமையின் நிமித்தம், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விஜயம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் சந்திப்புக்களிலும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தவிர்க்கப்படமுடியாதவராகக் கலந்துகொண்டுவந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் தீவிர விசுவாசியாக அவர் அறியப்பட்டு வந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தார். இவ்விரண்டு காரணங்களில் இரண்டாவதான "வடக்கும் கிழக்கும் இணைந்திருத்தல்" எனும் காரணத்திற்காகவே அவரது எதிரிகள் அவரைக் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்ததாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் ஆராதனையின்பொழுது மட்டக்களப்பு மரியன்னை பேராலயத்தில் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யாரென்பது பற்றி ஆரம்பத்தில் பல குழப்பங்கள் நிலவின. இவற்றிற்கும் மேலாக, இலங்கையரச பத்திரிக்கைகள் பரராஜசிங்கத்தின் கொலையினை புலிகளே மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டன. அண்மையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கேட்டுக்கொண்ட நிலையில், பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு வாக்காளர்களை வாக்களிப்பில் பங்குகொள்ளக் கேட்டிருந்தார் என்னும் பொய்யினை தமது செய்திக்கான ஆதாரமாக அவை வெளியிட்டன. ஆனால், பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை பரராஜசிங்கத்தைக் கொன்றவர்கள் ஒன்றில் கருணா குழுவினர் அல்லது ராணுவத்தினராக இருக்கலாம் என்று நம்புகின்றனர். சிலவேளை இப்படுகொலை இவ்விரு பிரிவினரையும் கொண்ட ஒரு குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரராஜசிங்கம் அவர்கள், கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியவர். கிழக்கு மக்களை "வடக்கு எதேச்சாதிகாரத்திற்கு" எதிராக தான் ஒன்றுதிரட்டுவதாக கருணா கூறிவந்த நிலையில், பரராஜசிங்கமோ தொடர்ந்தும் புலிகளின் தலைமைக்கு தனது விசுவாசத்தினையும் காட்டி வந்தார். பரராஜசிங்கத்தின் படுகொலையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய சில தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதைவிடவும் இன்னும் இரு காரணங்களுக்காக கருணாவும், அவரை இயக்குவிக்கும் அரசாங்கமும் பரராஜசிங்கம் கொல்லப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கருதப்படுகிறது. 2004 சித்திரை பொதுதேர்தல்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம்பெற்று வருவதாகக் கணிக்கப்பட்டதுடன், புலிகளினால் சமாதானப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பல்வேறுபட்ட அரசியல் தலங்கலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி புலிகளால் களமிறக்கப்படும் சாத்தியம் தோன்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக்கூடிய செயற்பாடுகளாக பாராளுமன்றத்தில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்திய அரசியல் முன்னெடுப்புக்கள். இலங்கையின் தெற்கை மையமாகக் கொண்டியங்கும் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகள், இலங்கையினுள்ளும், வெளியேயும் தமிழ் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகளை வெளிக்கொண்டுவருதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஆக, இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேச மயப்படுத்துதலில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். கூட்டமைப்பின் மிக மூத்த உறுப்பினராக அவர் இருந்தாலும்கூட, கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, புலிகளின் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக அவர் இருந்தமையினால் அவர் மற்றைய உறுப்பினர்களைக் காட்டிலும் தனித்தன்மையுடையவராக விளங்கினார். மட்டக்களப்பை மையப்படுத்திய கருணாவின் ஆதரவாளர்களால் கூறப்பட்டு வந்த "வடக்கின் மேலாதிக்கத்திற்கு எதிராக செயற்படுதல்" எனும் வாதத்தினை பரராஜசிங்கம் பல அரசியல் தளங்களில் கடுமையாக விமர்சித்து வலுவற்றதாக்கி வந்தார். பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னர் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசும் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் புலிகளை முடக்கி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் எனும் பட்டத்தையும், சர்வதேசத் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட புலிகளும், தமிழ் மக்களும் இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கத் தலைப்பட்டனர். பேச்சுவார்த்தைக் காலத்தினைப் பாவித்து தம்மை சர்வதேசத்தில் தனிமைப்படுத்த சிங்களம் எடுத்துவந்த முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே சர்வதேசத்திற்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினர். புலிகளினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அயராத இந்த முயற்சியினாலேயே சர்வதேசத்தில் சிங்கள அரசாங்கம் செய்துவந்த தமிழருக்கெதிரான பலமான பரப்புரைகளின் முனை மழுங்கடிக்கப்பட்டு, இருபக்க நியாயங்களையும் சர்வதேசம் செவிமடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த மீறல்கள், வடக்குக் கிழக்கின் ராணுவப் பிரசன்னம் , உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து விலகப்போவதில்லை என்கிற அரசின் பிடிவாதம், அரசியல் ரீதியிலான அழுத்தங்கள், சுனாமி நிவாரணத்தில் பாகுபாடு என்று பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயங்களை புலிகளும் கூட்டமைப்பும் முன்வைத்து வந்தன. இவ்வாறான தொடர்ச்சியான பரப்புரைகளினூடாக தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என்கிற நிலைப்பாடும் சர்வதேசத்தில் மெது மெதுவாக உருப்பெறத் தொடங்கியிருந்தது. பரராஜசிங்கம் அவர்களின் இரு மொழிப்புலமையும், சரளமான பேச்சும் அவரை பல சர்வதேச ராஜதந்திரிகள் சந்தித்துக் கலந்தாலோசிக்கவும், சர்வதேச தூதரக அதிகாரிகள் சந்திக்கவும் ஏதுவாக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் புலிகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்துகொண்டு தமிழர் தரப்பின் நியாயங்களையும், அரச பிரச்சாரத்திற்கெதிரான பதிலையும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்தார்.
 21. எம்மை இந்த அவலத்திற்குள் இழுத்துவந்து வீழ்த்தியதே இந்தியாதான் என்கிறபோது, இந்தியா எவ்வாறு எமது வாழ்வினை மீட்டுத்தரும் என்று இலக்கு நினைக்கிறது?
 22. கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது. தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் , இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது. தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும். முற்றும் https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719 சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.
 23. தொழிநுட்பம் குன்றிய செய்மதியூடான ஒளிப்படங்கள் தரையில் பயணிக்கும் வாகனங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும் என்றால், இன்றிருக்கும் அதி தெளிவுகொண்ட செய்மதிகளினால் எடுக்கப்படும் படங்களின் தெளிவுபற்றி நாம் சந்தேகப்படத் தேவையில்லை. பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பு உளவுத்துறைகளில் செய்மதியூடான ஒளிப்படங்களின் பாவனையென்பது பாரிய பங்கினைச் செலுத்திவருகிறது என்றால் அது மிகையில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிவரும் வருடாந்த செலவீனத்தில் 43 பில்லியன் டாலர்களை அதிதொழிநுட்ப செய்மதி உளவுக்காக ஒதுக்கியிருப்பதுடன், இதற்கென்று தனியான படையமைப்பினையும் இயக்கிவருகிறது. ஆனால், இதிலுள்ள பலவீனம் என்னவென்றால், எதிரிகள்கூட இந்த தொழிநுட்பத்தினை பாவிக்கமுடியும் என்பதுதான். இதற்காக பலநாடுகள் எதிரிகளின் செய்மதிகளைக் குருடாக்குவதற்காக லேசர் கதிர்களை பாய்ச்சிவருகிறார்கள். மிக அண்மையில் சீனா பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளை அழிக்கும் ஏவுகனையொன்றினை வெற்றிகரமாக ஏவியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ்ச்செல்வனின் படுகொலையினை நாம் நோக்கினால், தமிழ்ச்செல்வன் உபயோகிக்கும் அவரது கைத்தடியினை துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் எந்தவொரு செய்மதியும், அவரை இலக்காக்கியிருக்கலாம் என்பது திண்ணம். அதுமட்டுமல்லாமல் தமிழ்ச்செல்வன் வழமையாக ஏனைய அதிகாரிகளைச் சந்திக்கும் அவரது வாசஸ்த்தலத்தின் அமைவிடம் கூட பரம ரகசியம் கிடையாது. தமிழ்ச்செல்வன் பாவித்துவந்த அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தினை அமெரிக்க செய்மதியூடான புலநாய்வுத்துறையோ, அல்லது பிரித்தானிய புலநாய்வுத்துறையின் செய்மதிப் பிரிவோ அல்லது இந்தியாவினால் அண்மையில் உருவாக்கப்பட்ட செய்மதி உளவுப்பிரிவான ஐ ஆர் எஸ் பிரிவோ தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கலாம் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. இவற்றிற்கு மேலாக தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்படும் தருணத்திற்குச் சற்று முன்னர் செய்மதியூடான தொலைத்தொடர்பிற்காக அவர் பாவிக்கும் தொலைபேசியினை உபயோகப்படுத்தியிருந்தால் அதுகூட நிச்சயமாக அவரை இலக்காக மாற்ற உதவியிருக்கலாம். ஆனால், இந்த உயர் தொழிநுட்பங்கள் எல்லாம், செல்வனின் இருப்பிடத்தை அவதானிக்கவும், அவர் அருகில் இருக்கும்போது இலக்குவைக்கவுமே உதவக்கூடியவை என்பதும் தெளிவானவது. அதற்குமேல் இவற்றால் கிடைக்கக் கூடிய பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. குறிப்பிட்ட ஒரு மனிதரின் இருப்பிடம், அவர் அப்பகுதிக்கு வரும் நேரம் என்பன அவ்விடத்தினை மிகவும் துல்லியமாக அறிந்துவைத்திருக்கும் ஒருவரினால் மட்டுமே அடையாளம் காட்டமுடியும் . இங்கிருந்துதான் கருணாவின் பங்களிப்பு இப்படுகொலையில் உள்நுழைந்திருக்கிறது. பிரித்தானியாவிற்கு போலியான கடவுச் சீட்டுடன் சென்றிறங்கிய கருணாவை வெறுமனே தடுத்துவைத்து, அவரின் மனிதவுரிமைகளை விசாரிக்க விரும்பாத பிரித்தானிய அரசு, கருணாவை பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திவைத்திருந்த 9 மாதகாலப் பகுதியில் புலிகளின் உள்வீட்டு ரகசியங்களை நிச்சயமாக அறிந்திருக்கும் என்பது திண்ணம். இந்த 9 மாத காலப்பகுதியில் நான் எல்லோரும் நினைத்திருந்த "பிரித்தானியாவின் கைதி"என்பதைவிடவும் "பிரித்தானிய உளவுத்துறையின் செயற்ப்பாட்டாளர் கருணா" என்பதே அவருக்குப் பொருத்தமான பெயராக இருந்திருக்கும். அவருக்கு வழங்கப்பட்ட உடனடிப் பணியாக புலிகளின் பிரமுகர்களின் முக்கிய வாசஸ்த்தலங்கள், கூடும் இடங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றினைப் பட்டியலிடுதல் அமைந்திருக்கிறது. இவ்வாறு கருணாவிடமிருந்து பெறப்பட்ட மிக முக்கியமான புலிகள் பற்றீய ரகசியத் தகவல்கள் பிரித்தானிய அரசினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியது. பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு, கருணாவைப் பாவித்து பிரித்தானியா இலங்கைக்கு உதவியதென்பதை புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.