Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான். ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான். செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?
  2. நீங்கள் குறிப்பிடும் இரு கன்னியாஸ்த்திரிகளில் கரவெட்டியைச் சேர்ந்தவர்தான் எனது அன்ரா. அவரது இயற்பெயர் செல்வராணி. கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் கிறிஸ்ற்றபெல். யாழ்ப்பாணத்தில் 10 வருடங்களும், மட்டக்களப்பில் 15 வருடங்களும் பத்தாம் ஆண்டுவரை கணித ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் யாழ்ப்பாணக் கன்னியர் மடத்தின் மாகாணத் தலைவியாக 3 வருடங்கள் பணியாற்றியவர். அதன்பின்னர் வன்னியில்த்தான் அவரது காலம் கழிந்தது. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் என்று இரு சமூகநலன் அமைப்புக்களை ஆரம்பித்து வைத்தார் என்று அறிந்துகொண்டேன். பெரும்பாலும் உளநலம் தொடர்பாகவே அவரது பணிகள் அமைந்திருந்தன. இதனால் இயக்கத்தின் மருத்துவப் பிரிவினரோடு அவருக்குத் தொடர்புகள் இருந்தன என்றும் கேள்விப்பட்டேன்.
  3. அப்படியா? கூறுங்கள்.
  4. கிழக்கினை வெளிக்கவைக்கிறோம் என்கிற போர்வையில் இருண்ட பேய் யுகத்தை கட்டவிழ்த்த பிரதேசவாத மிருகங்கள் சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரவீந்திரநாத்தைக் கொழும்பில் இருந்து கடத்திச் சென்று படுகொலை செய்த காரணத்திற்காக பிள்ளையான் என்றழைக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மனித குலத்திற்கெதிரான பாதகன் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது நடக்கிறது. இவனது வாக்குமூலங்களுக்கு அமைவாக இவனுடன் சொந்த இனத்தின்மேலேயே இரத்தக் குளியல் நடத்திய இன்னும் பல பாதகர்கள் இப்போது வரிசையாக அரசினால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இனியபாரதி, செழியன் என்று ஆரம்பித்து பல கோடரிக் காம்புகள் தேடித் தேடிக் கைதுசெய்யப்பட்டு வருகின்றன. இவர்களின் கைதுகளையடுத்து இவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் மனிதவடிவில் நடமாடிய இப்பிரதேசவாத மிருகங்களின் செயற்பாடுகள் குறித்துப் பலரும் தமது அச்சம் தவிர்த்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கிழக்கின் மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசித்துவருபவரும், பிள்ளையான் எனும் இரத்தவெறிபிடித்த பிரதேசவாதியினால் இலக்குவைக்கப்பட்டுத் தப்பி வாழ்பவருமான திரு துரைரட்ணம் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்விகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்று வெளிவந்திருக்கின்றன. பத்திரிக்கையாளர் நடேசன் உட்பட பலரை வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொன்று தனது இச்சை தீர்த்த இம்மிருகங்கள் அக்காலத்தில் கிழக்கில் ஆடிய இரத்தக் குளியல் குறித்த சதிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
  5. அண்மைக்காலத்தில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் கிளின்ரனும் ஒபாமாவும் குறிப்பிடத் தக்கவர்கள். பொஸ்னியர்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பை முடிவிற்குக் கொண்டுவந்ததில் கிளின்ரனின் பங்கு குறிப்பிடத் தக்கது. அவ்வாறே ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் நடந்துவந்த போர்களை நிறுத்தவேண்டும் என்று நடவடிக்கைகளில் இறங்கியதுடன், 2001 இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலினை நடத்தி, மூவாயிரம் அமெரிக்கர்களைப் பலியெடுத்த சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதியான பின்லாடனைத் தேடி, வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினை ஒபாமா பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன் ஈரானின் முல்லாக்களுடன் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட்டு, பொருளாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்திருந்தார். ஈழத்தமிழர் படுகொலையில் ஒபாமாவோ அல்லது ஹிலரியோ எதனையும் செய்யவில்லை என்பது உண்மையே. இறுதிநேரத்தில் அமெரிக்கர்கள் செய்யமுயன்றதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று தடுத்துவிட்டதென்பதை அன்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர மேனன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
  6. இலங்கையில் பிள்ளையானுடன் இணைந்து, பலநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த இனியபாரதி எனும் நபருக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சாதாரணக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகூடிய கெளரவங்களான தேசமான்ய, தேசாபிமான என்கிற விருதுகளைக் கொடுத்து மகிழ்ந்தபோது, உலகில் நடக்கும் போர்களை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, ரஸ்ஸிய உக்ரேன் போரில் உக்ரேனியர்களைப் பலவீனப்படுத்தி, ரஸ்ஸியாவின் சர்வாதிகாரிக்குக் கொம்பு சீவி, பலஸ்த்தீனத்தில் இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலினை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இனக்கொலையினை நடத்தும் நெத்தன்யாகுவே நோபல் பரிசை சிபாரிசு செய்வதொன்றும் புதினமில்லை.
  7. நீங்கள் மாவீரர்களைக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், அரசியலைத் தொழிலாகச் செய்து வயது முதிர்மையினால் மரணிப்பவர்களுக்கும், தமது இளம் வயதில், தமது வாழ்க்கையினை, தனது மக்களின் விடிவிற்காக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்கும் இடையில் பாரிய‌ வேறுபாடு இருக்கிறது.
  8. இந்தக் கட்டுரையின் தரவுகளில் பல தவறுகள் இருக்கின்றன. முதலாவது கிருசாந்தி குமாரசாமி கைதுசெய்யப்பட்ட இடம், கால, வயது என்பன முற்றிலும் தவறானவை. இரண்டாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருக்கள்மடத்தில் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் என்பது ஒருபோதும் நடக்கவில்லை. ஆனால், ஜூலை 1990 இற்குப் பின்னர் முஸ்லீம்கள் மீது பல தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கின்றனர் என்பது உண்மையே. இலங்கை அரசுக்குச் சார்பாக எழுதும் முஸ்லீம் எழுத்தாளர் (எஸ் எம் எம் பஸீர்) ஒருவரால் பதியப்பட்ட முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் எனும் பட்டிய‌லில் இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. Catalogue of LTTE atrocities on the Muslims in the East in 1990. • On 23 July 1990 5 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others injured. • On 29 of June 1990 the LTTE killed 6 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi . • On 2 July 1990 14 farmers were shot and hacked to death at Akkaraipatttu. • On the 3rd July 1990, (on the eve of Eid- Ul- Fithr) UL Dawood , the member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school , Eravur, Al Haj M.L.A Gafoor .J.P and Quazi and his father in law U.L.Ali Mohamed were kidnapped and killed by the armed LTTE cadres. • On 7 July 1990, !7 Muslims were killed at Puthur , a border Muslim village in Polonnaruwa • On the 14th July 1990 , 69 Muslims who were on their way back from Hai pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam in the Battiucaloa District.. • On 19th July 1990 , Muslim passengers were abducted and killed at Ampilanthurai in the Batticaloa District. • On the 3 August 1990, 140 Worshippers at Kattankudy Meeraniya and Hussainiya mosques were murdered and sixty six were injured. • On 11th August 1990 (Early morning of 12th August 1990) 127 Muslims were massacred at Eravur. • On 12 August 1990 four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE. • 1n August 1990 eight Muslims were shot to death at Akkraipattu. Town.
  9. தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.
  10. சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
  11. மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா? இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்? ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்? உக்ரேன் மீதான‌ ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆத‌ரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
  12. அருண் சித்தார்த்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இங்கு நடந்தது என்னவென்பதை புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் தமிழர்களின் அவலங்கள் குறித்தும், அவர்களின் இழப்புக்கள் குறித்தும் பேசப்படும்போதெல்லாம் அருண் சித்தார்த் தவறாது புலிகள் செய்த கொடுமைகள் என்று போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்குக் கிழக்கின் வேறு ஒரு பகுதியிலுமோ நடத்துவார். இப்போராட்டங்களின் ஒற்றை நோக்கம் எமது மக்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்துவதும், மலிடனப்படுத்துவதும் மட்டுமே. தமிழர்களின் எந்தப் பிரச்சினை குறித்தும் அவர் பேசுவதில்லை. தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கின்றதென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று இன்றுவரை விடாப்பிடியாக இருப்பவர். இவர் குறித்து முன்னர் சிரச தொலைக்காட்சியில் வந்த நேர்காணல் ஒன்றுபற்றி எழுதியிருந்தேன். அதில் இவரது உண்மையான சுயரூபம் வெளித்தெரிந்திருந்தது. இப்போது செம்மணியில் இடம்பெற்றும் மனிதப் புதைகுழி குறித்த செய்திகள் இவரை அலைக்கழிக்கின்றன. செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்படுவதால் ஆத்திரப்பட்டு நிற்கும் சிங்களப் பேரினவாதத்தை மகிழ்விக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்த்தான் தனது மனைவி என்று அடையாளப்படுத்தும் ஒரு பெண்ணை அழைத்துவந்து துணுக்காயில் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்ததென்றும் அங்கு 4,000 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். செம்மணியில் 400 தமிழர்களைச் சிங்கள இராணுவத்தினர் புதைத்தனர் என்றால், துணுக்காயில் அதைப்போல பத்துமடங்கு தமிழர்களை புலிகள் கொன்று புதைத்தனர் என்று காட்டுவது அவருக்குத் தேவையாக இருக்கிறது. ஆகவேதான் சிங்கள மக்கள் மட்டுமே பார்க்கும் ஒரு இனவாதச் சிங்கள யூடியூப்பரைக் கூட்டிவந்து 4,000 தமிழர்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டி மகிழ்கிறார். இவரையும், இவரைப் பின்னால் நின்று இயக்கும் இனவாதிகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆகவே அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
  13. 1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன. இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன. அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன். கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
  14. நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.
  15. அணுவாயுதம் என்பது தன்மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அணுவாயுதத்தைப் பாவிப்போம் என்று அச்சுருத்துவதனூடாக அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பாவிக்கும் ஒரு கருவியாகத்தான் இதுவரையில் அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் பார்க்கின்றன. ஆனால் வடகொரியாவோ ஈரானோ அவ்வாறல்ல. அவை அணுவாயுதத்தை உருவாக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இருக்கும் காரணங்கள் வேறு. கிம்மைப் பொறுத்தவரை தனது சர்வாதிகாரத்தனமான ஆட்சியை, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையினை ஒரு நாடோ அல்லது கூட்டாக சில நாடுகளோ தன்மீது எடுக்கலாம், ஆகவே தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அணுவாயுதத்தை வைத்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால் ஈரான் அப்படியல்ல. ஈரானின் அணுவாயுதத்தின் முதன்மை நோக்கம் இஸ்ரேலை அழிப்பது, பின்னர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தன்மீது நடக்கலாம் என்று அஞ்சும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பது.
  16. வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?
  17. வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள். அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.
  18. ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன. ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன். இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது. ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.
  19. மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம். இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய‌ புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம். சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள். அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது. இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக‌ நிற்கிறார்கள்.
  20. மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது. அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.
  21. ஒருகணம் உங்களின் இக்கருத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். என்னைப்பற்றி என்னைவிட அதிக ஆளமாக நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள், இல்லாவிட்டால் "நிச்சயமாக" என்று சொல்வீர்களா, என்ன? சரி, அதை விடலாம். உங்களின் கூற்றிற்கே வரலாம். "முஸ்லீம்களில் உள்ள இனவாதிகளானவர்கள்" ‍ இவ்வாறு உங்களால் அடையாளப்படுத்தப்படுவோர் யார்? இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு இக்கூற்றிற்கான பதிலை எனக்குத் தெரிந்த வகையில் தர முயல்கிறேன். ஏனென்றால் முஸ்லீம்கள் என்று ஒரு இனம் இல்லை. இஸ்லாம் என்பது அவர்களின் மதம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் மற்றைய மதத்தோரை ஏற்றுக்கொண்டு, சகித்துக்கொண்டு, சமாதானமாக வாழ முயல்வோர் என்று ஒரு பகுதியினர் இருக்கிறார்களா? அப்படியிருந்தால் அவர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்கமுடியாது. சரி, மத அடிப்படைவாதிகளாக இருப்போர் மீது இன்னொரு பகுதியினர் (உங்களின் "நிச்சயமான" கருத்தின்படி, என்னால் முண்டுகொடுக்கப்படும் "வெள்ளையினத்தவர்") தாக்குதல் நடத்தினால் அது எவ்வாறு தவறாக இருக்கமுடியும்? அடிப்படைவாதிகளால் உலகிற்குக் கிடைக்கும் நண்மைகள் என்னவென்பதை இங்கே பட்டியலிட்டீர்கள் என்றால் நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறென்று ஏற்றுக்கொள்கிறேன். தலிபான்களோ, அல்கயிடாவோ, ஐஸிஸோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்போ எவரால்த் தாக்கப்பட்டபோதும் நான் ஆதரவளித்தேன், இனியும் செய்வேன். ஏனென்றால் அவர்களால் இந்த உலகிற்கு கிடைக்கப்போகும் நண்மையென்று எதுவும் இல்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட மத அடிப்படைவாதிகள் ஏனையவர்களைக் கொல்லுமுன்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பது எனது அசைக்கமுடியாத் நம்பிக்கை. இறுதியாக, உங்களின் சிந்தனைக்கு ஒன்றை விட்டுச் செல்கிறேன். சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசாக இருந்த செச்சென்னியாவை, அம்மாநிலத்தின் பெரும்பான்மையினத்தவர்களான முஸ்லீம்கள் சுதந்திர பிரதேசமாக அறிவித்தபோது உங்களின் நாயகனான புட்டின் அவர்கள் இருமுறை மிகக்கொடூரமான போர்களை அங்கே கட்டவிழ்த்து விட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், தலைநகர் குரொஸ்னி எரித்துச் சாம்பலாக்கப்பட்டும், அம்மக்களின் விடுதலைப்போராட்டத்தை"இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்" என்று கூறியே புட்டின் அழித்தார். உங்களிடம் நான் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், செச்சென்னியர்களான முஸ்லீம்கள் மீது புட்டின் நடத்திய போரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதுதான். முடிந்தால் பதிலளியுங்கள். பின்னர் தொடர்ந்து பேசலாம்.
  22. இங்கு கேள்வி கேட்கிறீர்களா அல்லது எழுந்தமானமாக நீங்களே சிலவற்றைக் கற்பனை செய்துகொண்டு பின்னர் அவற்றினை நான் நினைப்பதாக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் இவற்றினைக் கேள்வியாக எடுத்துக்கொண்டு பதிலளிக்க முயல்கிறேன். வெள்ளையினம் கும்பலாக இன்னொரு இனத்தை அடித்தல் எனும் கூற்று. இங்கு வெள்ளையென்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இஸ்ரேலியர்களையும் அமெரிக்கர்களையுமா? அமெரிக்கர்கள் வெள்ளையர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் யூதர்கள் வெள்ளையர்களா? அவர்களின் தோலின் நிறத்தை வைத்துச் சொல்கிறீர்கள் போலும். உண்மையென்னவென்றால் யூதர்களில் கறுப்பினத்தவர்களும், எம்மைப்போன்ற நிறமுடையவர்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் வெள்ளையினத்தவர்கள் கும்பலாக அடிக்கிறார்களே என்று கேட்கமாட்டீர்கள். அது சரி, ஈரானியர்களும் வெள்ளையினத்தவர்கள் தானே, தோலின் நிறத்தின் அடிப்படையில் பார்த்தால். சரி, அதை விடலாம், ரஸ்ஸியர்களும், உக்ரேனியர்களும் தோலின் நிறத்தால் ஒருவரையொருவர் ஒத்தவர்கள். ஆனால் நீங்களோ ரஸ்ஸியர்களை ஆதரிக்கிறீர்கள். பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாது மிகுந்த சினம் கொண்டு வெகுண்டெழும் நீங்கள், உக்ரேனியர்கள் மீதான ரஸ்ஸியர்களின் ஆக்கிரமிப்பை இன்றுவரை சரியென்று வாதாடுவதுதான் புதிராக இருக்கிறது. சரி, இந்தப் புரிதலில் உங்களுக்கு இருக்கும் கோளாற்றினை நீங்களே சரிசெய்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில் அதனை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். உக்ரேன் எனும் சிறிய நாட்டினை ஆக்கிரமித்து அழித்துவரும் ரஸ்ஸியாவை நீங்கள் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரிக்கும்போது, இஸ்ரேலினை அழிப்பதே எமது ஒரே இலட்சியம் என்று கூவிக்கொண்டு இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் தனது அடிப்படைவாத முகவர்களான ஹமாஸ், ஜிஹாத், ஹூத்தீக்கள், ஹிஸ்புள்ளா , சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் அடிப்படைவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதம் கொடுத்து, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை கொடுத்து போசித்துவரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும்போது மட்டும் நான் மனச்சாட்சியுடன் நடக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே இது அபத்தமாகத் தெரியவில்லையா? முல்லாக்களின் அதிகாரம் நிச்சயமாகப் பிடுங்கப்பட்டு, அவர்களின் காட்டாட்சி அழிக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 1979 இல் இஸ்லாமியப் புரட்சி என்கிற பெயரில் முல்லாக்கள் ஆரம்பித்து இன்றுவரை செய்துவருவது இஸ்லாமிய அடிப்படைவாதக் காட்டாட்சிதான். இங்கே மக்களின் கருத்துக்களோ, உரிமைகளோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இன்றுவரை முல்லாக்களுக்கு எதிராகப் பேசுவோர், எழுதுவோர், பிரச்சாரம் செய்வோர் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டே வருகிறார்கள். நீங்கள் வேண்டுமென்றே மறைக்க முனைந்தாலும் ஈரானில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உலகம் அறியாதது அல்ல. தலைகளை மூடி ஹிஜாப் அணியமாட்டோம் என்று போராடிய பல பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் நீங்கள் அறியாமல் இருக்கலாம். முல்லாக்கள் தமது அதிகாரத்தைக் கைவிட்டு, வெளிப்படையான தேர்தல் ஒன்றிற்குச் செல்லட்டும், அப்போது பார்க்கலாம் மக்கள் எம்மாதிரியான‌ ஆட்சியினை விரும்புகிறார்கள் என்று. சர்வாதிகரத்தனமான அடிப்படைவாதிகளின் கீழ் மக்கள் வேறு வழியின்றி வாழ்வதை, மக்கள் விரும்பித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதும், ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று கூறுவோரை, உனது வேலையைப் பார் என்று கூறுவதும் முல்லாக்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஈரானிய முல்லாக்களும், தலிபான்களும், அல்கயிடாவும், ஐஸிஸ்களும் ஒரே மாதிரியானவர்கள். மத அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டு ஏனைய மதத்தவர்களை, சிறுபான்மையினங்களை அழிப்பவர்கள். அல்கயிடாக்களின் கையிலோ அல்லது ஐஸிஸ்களின் கையிலோ அணுவாயுதம் ஒன்று கிட்டுமாயின் அவர்கள் என்ன செய்ய விரும்புவார்களோ அதையே ஈரானின் முல்லாக்களும் செய்வார்கள். ஆகவேதான் அவர்களின் கைகளில் அணுவாயுதம் இருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.
  23. இந்த வினாவினுள் இரு கேள்விகளை அடக்கியிருக்கிறீர்கள். ஆகவே ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன். முதலாவது இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றிய கேள்வி. ஆம், நிச்சயமாக. ஹிட்லரின் காலத்தின் ஆறு மில்லியன் சொந்தங்களை இழந்து, 1967 முதல் இன்றுவரை தன்னைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கும் மத்தியில் தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொண்டு இன்னொரு இனவழிப்பினை எப்படியாவது தடுத்தே தீருவதென்று தீர்க்கமாக அல்லது உங்களின் புரிதலில் சண்டித்தனமாக நிற்கும் இஸ்ரேலினை என்னால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். இரண்டாவது கேள்வி, பலஸ்த்தீன மக்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் அழிக்கப்படவேண்டுமா என்பது. நிச்சயமாக இல்லை. அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் என்ன, கிறீஸ்த்தவர்களாக இருந்தாலென்ன அல்லது யூதர்களாக இருந்தாலென்ன, அவர்கள் அழிக்கப்படக் கூடாது. பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவருவது இனக்கொலைதான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்களுடன் இரு தேசங்களுக்கான இணக்கப்பாட்டினை இஸ்ரேல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கென்று இன்றிருக்கும் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் தனது குடியேற்றங்களை அகற்றிக்கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக நடத்திவரும் ஆக்கிரமிப்பினை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு அமெரிக்கா விரும்புகிறதோ இல்லையோ, ஏனைய நாடுகள் இது தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது. யுத்தக் குற்றங்களிலும், இனக்கொலையிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், தளபதிகள் என்போரது பெயர்கள் வெளிக்கொணரப்பட்டு, பயணத்தடைகள் விதிக்கப்படுதல் அவசியமானது. இதுவே அவர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை ஓரளவிற்காவது தடுத்து நிறுத்தும். பலஸ்த்தீன முஸ்லீமும் காத்தான்குடி முஸ்லீமும் ஒன்றென்று நான் கருதுவதாக எதை வைத்துக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே? இக்கேள்வியின் அர்த்தம் என்ன? விளக்கமாக கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை விளக்குவது இலகுவாக இருக்கும்.
  24. கட்டாரில் அமைந்திருக்கும் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் ஆனால் அதனை தாம் குறுக்கிட்டு முறியடித்துவிட்டதாகவும் கட்டார் அரசு கூறியிருக்கிறது. மேலும் இத்தளத்தில் பாதுகாப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் அனைத்தையும் ஆனி 19 ஆம் திகதியே அமெரிக்கா அப்புறப்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று கட்டாரிய அரசு கூறுகிறது. ஈரானின் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் விமானங்கள் ஏதுமற்ற வெற்று படைத்தளமும், ஓடுபாதையும் காணப்படுகின்றன. ஈரான் தாக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் துருப்புக்கள் தற்காப்பு நிலையெடுத்திருந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியிருக்கிறது. தனது அணுவாயுத நிலைகள் மீது கொட்டப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமனான ஏவுகணைகளை தான் ஏவியதாக ஈரான் கூறியிருக்கிறது. ஆக, முல்லாக்கள் அடிவாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.